Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Today
  2. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, யேர்மனியின் Saarland மாநிலத்தில் உள்ள Voelklingen நகரில், 34 வயதான பொலிஸ் அதிகாரி சைமன் போர், 19 வயதான அஹ்மத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எட்டு நாட்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 01.04.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்ப்பில், அஹ்மத் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பபைத் தந்திருக்கின்றது. விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அஹ்மத் தனது செயல்களை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பவத்தின் விவரங்களின்படி, ஒரு பெற்றோல் நிலைய கொள்ளைக்குப் பிறகு, அவரைத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரிகளை அஹ்மத் கத்தியால் தாக்கியிருக்கின்றார். பின்னர், ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறித்து சைமன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் சைமனின் குண்டு துளைக்காத கவசம் தாக்குதலைத் தடுத்தது. ஆனால் அவர் கீழே விழுந்தபோது, அவரை நெருங்கி வந்து, கவசம் பாதுகாக்காத பகுதிகளை நோக்கி, முகம் உட்பட மூன்று தடவைகள் அஹ்மத் சுட்டிருக்கின்றார். இதனால் சைமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அஹ்மத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அஹ்மத் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, மாய நம்பிக்கைகள் (delusions) மற்றும் உண்மை உணர்வை இழக்கும் நிலை போன்ற அறிகுறிகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில், தனது செயலின் தவறை முழுமையாக உணர முடியாத மனநிலையிலேயே அவர் இருந்தார் என்று மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளித்தனர். யேர்மனியச் சட்டப்படி, ஒருவர் குற்றம் செய்தாலும், அந்த நேரத்தில் மனநிலை காரணமாக தனது செயலின் தவறுகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால், அவரை நேரடியாக குற்றவாளியாக அறிவிக்க முடியாது. இந்த அடிப்படையில், மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளை கருத்தில் எடுத்து, அஹ்மத் சமூகத்திற்கு இன்னும் ஆபத்தானவர் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவரை சிறைக்கு அனுப்பாமல், தடயவியல் மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டிருக்கின்றது. இது தண்டனை இல்லை மாறாக, சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும் என தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பொலிஸ் தரப்பு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. படம்-இன்ஸ்டாகிராம்
  3. இந்த வான் ஓடத்தில் டிரம்ப் ஐயாவையும், நெத்தென்யாகு ஐயாவையும் ஏற்றி இருக்கலாமே.
  4. GMOA முடிவுக்கு எதிராக சுகாதார அமைச்சர் கடும் நடவடிக்கை Apr 2, 2026 - 10:06 PM அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அது வெறும் அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இன்று (02) ஊடகங்களுக்கு கூறியுள்ளார். பயிற்சி முடித்த 453 புதிய வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதைத் தடுத்து, அவர்களை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பிணைக் கைதிகளாகப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த வைத்தியர்கள் நியமனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் சனிக்கிழமை (4) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. இந்த கால எல்லை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தினார். வைத்தியர்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் யாராவது அச்சுறுத்தல் விடுத்தால், அது குறித்து உடனடியாக சுகாதார அமைச்சுக்குத் தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் நடத்தப்படும். குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்காத வைத்தியர்களின் வைத்தியசாலை சேவை மற்றும் சம்பளம் அன்றோடு நிறுத்தப்படும். அவர்கள் மீண்டும் அரச சேவையில் இணைய வேண்டுமானால், அடுத்த 1,300 பேர் கொண்ட குழுவுடனேயே இணைய முடியும். அப்போது அவர்கள் சிரேஷ்டத்துவத்தை இழந்து பட்டியலின் இறுதிக்கே தள்ளப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்தார். 453 புதிய வைத்தியர்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்களைப் அச்சுறுத்தி, தவறான தகவல்களை வழங்கி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் இந்தச் செயல் மனிதாபிமானமற்றது. எவருக்கும் அஞ்சாமல் சுயாதீனமாக முடிவெடுத்து அரச சேவையில் இணையுங்கள் என அமைச்சர் இளம் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhp0vcw000h356pizftwmr3
  5. அமெரிக்க பிரஜைகளுக்கு ஈரான் ஜனாதிபதியின் திறந்த கடிதம்! 02 Apr, 2026 | 03:25 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் விளைவாக, வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஈரான் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்காவிட்டால் அந்த நாட்டை “கற்கால நிலைக்கு கொண்டு செல்வோம்” என எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அமெரிக்க மக்களுக்காக ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கிடையே மோதல்கள் இருந்தாலும், பொதுமக்கள் மீது ஈரானுக்கு எந்தவித எதிர்மறை அணுகுமுறையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “ஈரானை அச்சுறுத்தலாக சித்தரிப்பது வரலாற்று உண்மைகளுடனோ தற்போதைய நிலவரங்களுடனோ பொருந்துவதில்லை. இது சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தவறான சித்தரிப்பு” என்று கூறியுள்ளார். மேலும், எதிரி இல்லாதபோது அதை உருவாக்கி அழுத்தம் செலுத்துவது, இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மற்றும் ஆயுத தொழில்துறையை தக்க வைத்துக்கொள்வது போன்ற நோக்கங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகளின் மக்களுடன் ஈரான் மக்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும், ஈரான் எப்போதும் அமைதியையும் மரியாதையையும் விரும்பும் நாடாகவே இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நாட்டின் மீது அமெரிக்கா சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் இராணுவத்தை திரட்டியுள்ளது என்றும், அந்தத் தளங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளன என்றும் ஜனாதிபதி பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். “இத்தகைய சூழ்நிலையில் எந்த நாடும் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தாமல் இருக்காது. ஈரான் மேற்கொள்வது அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே” என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கான பிரதிநிதியாக செயல்படுகிறது என்றும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து உலக கவனத்தைத் திருப்புவதற்காக ஈரான் அச்சுறுத்தலை உருவாக்குகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையில், அசோசியேட் பிரஸ், வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புதிய ஆட்சி தலைவர் சமாதான ஒப்பந்தம் கோரியதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் “அடிப்படையற்றது” என மறுத்துள்ளது. மேலும், இந்த போர் அமெரிக்க மக்களின் நலனுக்காக உண்மையில் நடைபெறுகிறதா என்ற கேள்வியையும் பெசெஷ்கியான் எழுப்பியுள்ளார். “தவறான தகவல் இயந்திரங்களை தாண்டி உண்மையைப் பாருங்கள்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார். போரின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த மோதலை எதிர்த்து வருகின்றனர் என்பதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த போர், உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்து வருகிறது. https://www.virakesari.lk/article/242567
  6. உலக வங்கி - இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து Apr 2, 2026 - 08:16 PM உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை இன்று (2) ஆரம்பித்து வைத்தன. இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர காலத்தில் 7% பொருளாதார வளர்ச்சியை எட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது பங்களிக்கவுள்ளது. தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரத்தன்மை, பலப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை மற்றும் வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீது எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நடுத்தர காலத்தில் 7% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே எமது இலக்காகும். உலக வங்கி கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக எம்முடன் பயணித்துள்ளது இந்த புதிய ஒப்பந்தம் அந்த உறவை மேலும் வலுப்படுத்தும், என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையினூடாக வேலைவாய்ப்பு உருவாக்கம் இந்த புதிய கூட்டாண்மையின் மையமாக தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காணப்படுகிறது. அடுத்த தசாப்தத்தில் சுமார் 10 இலட்சம் இளைஞர்கள் வேலைச் சந்தையில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தகுதியான வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய தனியார் முதலீடுகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நேரடி மற்றும் திரட்டப்பட்ட முதலீடுகள் சர்வதேச நிதி நிறுவனம் (IFC) வழங்கவுள்ளது. அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலர் வரையிலான குறைந்த வட்டி கடன் வசதியை உலக வங்கி வழங்கவுள்ளது. அரச ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலராக உயர்த்த இந்த கூட்டாண்மை ஊடாக திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் 2030க்குள் இலங்கையின் மின்சாரத் தேவையில் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறுதல். இதன் மூலம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மூலோபாயத் திட்டம் 2026-2030 க்கு ஆதரவளித்தல் மற்றும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரத்யேக முதலீடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். 2025 நவம்பரில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, எதிர்கால அனர்த்தங்களின் போது விரைவாக மீண்டெழவும், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை பலப்படுத்தவும் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கட்டமைப்பின் கீழ் முதல் முக்கிய திட்டமாக REVIVE (Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் டொலர் முதலீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா மற்றும் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் இத்திட்டம் யாழ்ப்பாணம், பாசிக்குடா, திருகோணமலை மற்றும் அருகம்பே ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டது. இத்திட்டம் 2031 ஆம் ஆண்டளவில் 3,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையுடன் பணியாற்றி வருவதுடன், தற்போது கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 1.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 13 செயற்திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhl4ftv000d356pdjisor27
  7. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் - விஜய் பிரச்சாரம் 02 Apr, 2026 | 03:36 PM ''நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்'' என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். விஜய் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய மார்ச் 30ஆம் திகதி அன்று சென்னை பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மாநில நிர்வாகிகளுடன் இணைந்து கட்சியின் தலைவரான விஜய் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் திகதியான இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், '' தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வேறு. நான் வேறல்ல. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அத்துடன் பிரச்சாரத்தில் திரண்டு இருந்த மக்களை பார்த்து, கேஸ் புக் செய்தால் புக் ஆகிறதா? சிலிண்டர் வீட்டிற்கு வருகிறதா? சிலிண்டர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்சனை? எத்தனை உணவகங்கள் மூடப்பட்டுள்ளன?.. மத்திய அரசோ மாநில அரசோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால்.. இதனை தவிர்த்து இருக்கலாம். முதல்வர் ஸ்டாலினை கேட்டால்.. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பார்கள். ஆனால் அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் .. உடனடியாக புதுடெல்லிக்கு செல்வார். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான். அதன் பிறகு, திமுக கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு இதெல்லாம் சொன்னீர்களே....! செய்தீர்களா..? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். இது சாதாரண தேர்தல் அல்ல. ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். நான் பல வலிகளை தாங்கிக் கொண்டு தான் உங்களுக்காக இங்கு வந்து இருக்கிறேன்.'' என்றார். முன்னதாக திருச்சி மரக்கடை பகுதிக்கு வந்த விஜய், அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார்.‌ https://www.virakesari.lk/article/242569
  8. 50 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு பயணம் ; நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது Published By: Digital Desk 3 02 Apr, 2026 | 09:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை (ஏப் 02) அதிகாலை 4:05 மணிக்கு விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன் , விக்டர் குளோவர் ,கிறிஸ்டினா கோச் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பயணித்துள்ளனர். இந்த பயணம் 10 நாட்கள் நீடிக்கும். நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவதே இதன் நோக்கமாகும். மனிதர்கள் இதுவரை விண்வெளியில் பயணம் செய்யாத தூரமான 406,000 கிலோ மீற்றர் வரை இந்த விண்கலம் செல்லவுள்ளது. 1970-இல் அப்பல்லோ 13 விண்கலம் சென்ற 399,117 கிலோ மீற்றர் என்ற சாதனையை முறியடித்து, விண்வெளியில் மிக நீண்ட தூரம் பயணித்த மனிதர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறவுள்ளனர். 1972-க்குப் பின்னர் மீண்டும் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நோக்கில் இந்த 'ஆர்டெமிஸ்' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டில் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் மனிதர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது. சீனா 2030-ஆம் ஆண்டளவில் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அமெரிக்கா இச்சாதனையைப் படைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. நாசாவின் மிக சக்திவாய்ந்த ஸ்பேஸ் லொன்ச் சிஸ்டம் (Space Launch System) ரொக்கெட் மூலம் 'ஓரியன்' (Orion) விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தைத் தாமாகவே இயக்கி அதன் கட்டுப்பாட்டுத் திறனைச் சோதிக்கவுள்ளனர். படங்கள் ; Artemis II by NASA HQ PHOTO https://www.virakesari.lk/article/242528
  9. ஜனாதிபதியை சந்தித்த IMF தூதுக்குழு Apr 2, 2026 - 07:27 PM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (2) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முடிவுகள் குறித்து ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியுள்ளனர். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் விதம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைச் சீராக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது நன்மதிப்பைத் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியு உட்பட அதன் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhjerop000b356pcxy07uve
  10. மூன்று தலைமுறையாய் ஏழைகள்… பாவங்கள்😂
  11. கம்பேக் கொடுத்த நடராஜன் ; பேட்டிங்கில் கலக்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர் - லக்னௌ தோல்வியை உறுதி செய்த இருவர் பட மூலாதாரம்,Delhi Capitals/Instagram கட்டுரை தகவல் நிதீஷ் பிபிசி தமிழுக்காக 2 ஏப்ரல் 2026, 02:47 GMT வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தொட்டாலே சிக்ஸ் பறக்கும் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம், பவுலர்கள் பந்துபோடவே யோசிக்கும் மும்பை வான்கடே மைதானம், முன்னொரு காலத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்து இன்று 'ஸ்பின்னா... அப்படின்னா?' என கேட்கும் சென்னை சேப்பாக்கம் என கிரவுண்டுகள் எல்லாம் பேட்ஸ்மேன்களின் பேட்டையாக மாறிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஐ.பி.எல்லில்...! பதிலுக்கு பவுலர்கள் காத்திருப்பது ஒரே ஒரு கிரவுண்டில் ஆடத்தான். லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான ஏகானா ஸ்டேடியத்தில். நீளமான ஸ்ட்ரெயிட் பவுண்டரி, ஸ்பின்னர்களுக்கும் ஸ்லோ பால் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமான பிட்ச் என பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமான சூழலே நிலவியதால் மற்ற மைதானங்களை போல இங்கே சிக்ஸ் மழை பொழிந்ததில்லை. அந்தவகையில் பேட்டுக்கும் பாலுக்கும் இடையில் சமநிலையை தக்கவைத்திருந்த மிகச்சில மைதானங்களில் ஒன்று ஏகானா. ஆனால் ஐ.பி.எல்லின் பிசினஸ் மாடல், அடிக்கப்படும் சிக்ஸர்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்பதால் இந்த மைதானத்திலும் சமீபத்தில் பிட்ச்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதுவரை 7.5-ஆக இருந்த ரன்ரேட் ஒன்பதாக மாறியது. அதனால் நேற்றும் ஹை ஸ்கோரிங் மேட்ச்சை எதிர்பார்த்தே வந்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் நடந்ததோ வேறு. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை இங்கு ஆடப்பட்டிருக்கும் 22 ஐபிஎல் போட்டிகளில் ஒன்பதில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறது என்பதே அவரின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கக்கூடும். டெல்லி அணியில் கடந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆகிப் நபிக்கு இடமில்லை. லக்னௌவில் ஆஸ்தான பவுலரான ஆவேஷ் கானும் வெளியே இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த சீசனில் லக்னௌவுக்கு ஓப்பனிங் ஆடி ரன்களைக் குவித்த மார்ஷும், மார்க்ரமுமே ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ஷுடன் ஓப்பனிங் இறங்கியது கேப்டன் ரிஷப் பன்ட். முன்னாள் வீரரான அஸ்வின் உள்பட சிலர், 'பன்ட் ஓப்பனிங் ஆடுவதே அவருக்கு நல்லது' என தொடருக்கு முன்பாக கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், பன்ட்டின் ஓப்பனிங் ரெக்கார்ட் சொல்லிக்கொள்ளும்படியெல்லாம் இல்லை. இந்திய அணிக்காக சர்வதேச டி20யில் ஐந்து போட்டிகளில் ஓப்பனிங் ஆடி அவர் எடுத்திருப்பது வெறும் 71 ரன்களே. ஐ.பி.எல்லிலும் ஐந்து போட்டிகளில் ஓப்பனிங் இறங்கி 125 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். போக, இந்திய டி20 அணியில் வெயிட்டிங் லிஸ்டிலேயே கில், சாய் சுதர்ஷன், ஜெய்ஸ்வால் என எக்கச்சக்க ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பன்ட் ஓப்பனிங் இறங்கி சாதித்தாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகமே. பின் ஏன் இந்த பரீட்சார்த்த முயற்சி என்பது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு மட்டுமே வெளிச்சம். முதல் பந்திலிருந்தே அடிப்பது பன்ட்டின் ஆட்டமுறை இல்லை. சில பந்துகள் களத்தையும், பவுலர்களையும் அவதானித்தபின்பே ஆடுவார். ஆனால் இந்தமுறை அதற்கு வாய்ப்பே இல்லாதபடி ஒரு தற்செயல் ரன் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார். 9 பந்துகளில் ஏழு ரன்கள். அடுத்துவந்த மார்க்ரமும் சீக்கிரமே அவுட்டாகிவிட மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார் மார்ஷ். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 48/2. பிட்ச் இருந்த நிலைமைக்கு இது ஒரு நல்ல ஸ்கோர் தான். இப்படியே போனால் 170 எனும் சவாலான இலக்கை லக்னோ நிர்ணயித்துவிடும் என்கிற நிலைமைதான் இருந்தது அப்போது. பட மூலாதாரம்,Getty Images கம்பேக் கொடுத்த யார்க்கர் கிங்! வேகப்பந்து வீச்சாளர்களின் பிரதான ஆயுதம் யார்க்கர்கள். காலுக்கு மிக அருகில் குத்தி எகிறும் பந்துகள் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அசந்தாலும் ஸ்டம்ப்களை தகர்த்துவிடும். அதேசமயம் போடுவதற்கு மிகச்சிரமமான பந்தும் யார்க்கர்களே. முக்கால்வாசி நேரம் அவை ஃபுல் டாஸ் பால்களாக பேட்ஸ்மேன்கள் தூக்கி அடிக்க ஏதுவாக மிதந்துபோய் பேட்டில் படும். பும்ரா போன்ற ஒருசிலருக்கே இந்த யார்க்கர் ஆயுதம் முறையாக பயன்பட்டிருக்கிறது. இதே யார்க்கர்களில் இன்னொருவகை வைட் யார்க்கர்கள். துல்லியமாக வைட் லைனுக்கு அருகில் இறங்கும் பந்துகள். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் இந்தவகை பந்தை டீப் கவர் மீதோ, லாங் ஆஃப் மீதோ மட்டும்தான் அடிக்கமுடியும். அதே சமயம் அது சிக்ஸராக மாறுவதற்கு அசாத்திய பலத்தை இரு கைகளின் வழியேயும் பிரயோகிக்க வேண்டியதிருக்கும். பெரும்பாலான நேரங்களில் பலம் போதாமல் கேட்ச்சாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. தோனி போன்ற கேப்டன்கள் தங்களின் டெத் ஓவர் பவுலர்களிடம் எதிர்பார்ப்பது பந்து இந்த வைட் யார்க்கர்களைத் தான். சிஎஸ்கேவின் பிராவோ ஸ்லோ வைட் யார்க்கர்கள் போடுவதில் கைதேர்ந்தவர். இந்த இரண்டு யார்க்கர் ஆயுதங்களையும் ஐ.பி.எல்லில் சரியாக பயன்படுத்திய மற்றுமொரு வீரர் உண்டு. தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன். இந்தத் திறமையே அவரை டெத் ஓவர் பவுலராக, மூன்று ஃபார்மட்களிலும் ஆடக்கூடிய வீரராக இந்திய அணி வரை இழுத்துச் சென்றது. ஆனால், தொடர் காயங்கள் காரணமாக அவரால் இந்திய அணியில் தன் இடத்தை தக்கவைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஐ.பி.எல்லிலும் அவர் ஆடியது இரண்டே போட்டிகளில்தான். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரிலும் ஆறு போட்டிகளில் ஆடி 8 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். எனவே இந்த முறை ப்ளேயிங் லெவனில் அவர் ஆடுவதே சந்தேகம் என்றெல்லாம் கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், டெல்லி அணி நிர்வாகம் அவர் மேல் நம்பிக்கை வைத்து முதல் போட்டியிலேயே வாய்ப்பு கொடுத்தது. 'இந்த வாய்ப்புக்கு தான் தகுதியானவர் என்பதை தன் முதல் ஓவரிலேயே நிரூபித்தார் நடராஜன். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே அவர் போட்ட லென்த் பாலில் டக் அவுட்டாகி வெளியேறினார் ஆயுஷ் படோனி. இன்னொரு முனையில் இருந்து குல்தீப்பும் தன் பங்குக்கு தாக்க, விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தன. நேற்றைய போட்டியில் லக்னௌ அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஒரே வீரர் அப்துல் சமத் மட்டுமே. கடைசியில் அவரை வீழ்த்தவும் நடராஜனே வரவேண்டியதாக இருந்தது. ஸ்லாட்டில் சீறியபடி வந்த பந்தை சிக்ஸர் அடிக்க நினைத்து விக்கெட்டை பறிகொடுத்தார் சமத். லக்னௌ அணிக்கு அவரின் பங்களிப்பு 25 பந்துகளில் 36 ரன்கள். அதே ஓவரில் ஷமியின் விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்த 141 ரன்களுக்கு மொத்தமாகவே ஆட்டமிழந்தது லக்னௌ அணி. நான்கு ஓவர்கள் போட்டு 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார் நடராஜன். அவருக்கு மிகத் தேவையாய் இருந்த கம்பேக் இது. ”பயமறியா இளங்கன்று” பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சமீர் ரிஸ்வி (கோப்புப்படம்) 142 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது டெல்லி அணி. முதல் பந்தில் விக்கெட் எடுக்கும் சம்பிரதாயத்தை காலங்காலமாக பின்பற்றி வருகிறார் ஷமி. நேற்றைய ஆட்டத்தில் அதனால் பாதிக்கப்பட்டது ராகுல். டீப் பாயின்ட்டில் தூக்கியடித்து டக் அவுட்டானார் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரம். மறுபக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருக்கும் மொஹ்சின் கான், தன் முதல் ஓவரிலேயே நிதிஷ் ராணாவை அவுட்டாக்கி விக்கெட் மெய்டன் எடுத்தார். ஒரே போட்டியில் நிகழ்ந்த இரண்டாவது கம்பேக் இது. அதுமட்டுமல்லாமல், பிரின்ஸ் யாதவும் தன் பங்கிற்கு ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் எடுக்க டெல்லி அணியின் ஸ்கோர் ஐந்து ஓவர்களில் 30/4. திரைப்படங்களில் வருவதைப்போல ஒரு ஹீரோ வந்துதான் டெல்லி அணியை காப்பாற்ற வேண்டிய நிலைமை. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... ஆனால், விக்கெட்கள் அடுத்தடுத்து பறிபோன நிலையிலும், நூறு ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியதிருந்தபோதும் மில்லருக்கு முன்பாக நேற்று சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கியது அணி நிர்வாகம். நார்க்கியா மின்னல் வேகத்தில் வீசிய ஷார்ட் பாலை அசராமல் டீப் தேர்ட் திசையில் தூக்கி சிக்ஸ் அடித்து தன் வரவை அறிவித்தார். சமீர் ரிஸ்வி. உள்ளூர் போட்டிகளில் உத்தரப் பிரதேசத்துக்காக ஆடிவரும் அதிரடி ஆட்டக்காரர். 2023 ஏலத்தின்போது சமீர் ரிஸ்வியை குறிவைத்து மற்ற அணிகளோடு சண்டை போட்டு 8.40 கோடிக்கு அவரை வாங்கியது சென்னை அணி. சென்னை அணிக்காக அந்த சீசனில் ஐந்து போட்டிகளில் ஆடியிருந்தாலும் அவரால் 51 ரன்களே எடுக்க முடிந்தது. கடந்த சீசனில் டெல்லி அணிக்காகவும் நான்கே போட்டிகளில்தான் ஆடியிருந்தார். மில்லர், ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா என இந்த சீசனில் டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் அதிரடிக்கு பஞ்சமே இல்லையென்பதால் இவர் இந்த சீசனில் களமிறங்குவதே சந்தேகம் என்பதுதான் நிலைமையாக இருந்தது. ஆனால் நேற்று டெல்லி அணிக்கு இக்கட்டான நேரத்தில் இவர் கைகொடுத்தார். ஷபாஸ் அகமதின் ஒரே ஓவரில் லெக் சைடில் மூன்று பவுண்டரிகள், மார்க்ரமின் பந்தை விலகி நின்று லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ், ஸ்கொயர் கட் ஆடி ஒரு பவுண்டரி என 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போது வெற்றிக்கு தேவையாக இருந்தது 35 ரன்கள் மட்டுமே. அதன்பின்னும் வேகம் குறையாமல் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விரட்டி 17.1 ஓவர்களிலேயே டெல்லி அணியை வெற்றிக்கோட்டைத் தாண்டி இழுத்துப்போனார். 47 பந்துகளில் 70 ரன்கள். ஆட்டத்தின் எந்தவொரு இடத்திலும் ஸ்கோர் போர்ட் கொடுக்கும் அழுத்தத்தை அவரும் எடுத்துக்கொள்ளவில்லை. ரசிகர்களுக்கும் கடத்தவில்லை. 22 வயதுக்கு அவர் நேற்று களத்தில் வெளிக்காட்டியது அசாதாரண முதிர்ச்சி. ஆட்டநாயகனும் அவரே. முறையே பவுலிங்கில் ஒருவர், பேட்டிங்கில் ஒருவர் என இரு கம்பேக்கின் வழியே இரண்டு புள்ளிகளை சம்பாதித்திருக்கிறது டெல்லி. ஆனால் அந்த அணியின் பலம் என சொல்லப்பட்ட பேட்டிங் கிட்டத்தட்ட தோல்வியின் முனையை தொட்டுவிட்டு திரும்பியிருக்கிறது. மறுபக்கம் லக்னௌவுக்கு பேட்டிங்கும் கைவரவில்லை. பவுலிங்கிலும் பவர்ப்ளேயைத் தவிர வேறு எந்தக்கட்டத்திலும் தாக்கத்தை உண்டாக்க முடியவில்லை. இரு அணிகளும் தங்கள் பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்ள நேற்றைய போட்டி உதவியிருக்கிறது. அவற்றைக் களைவதன் மூலம் மட்டுமே இந்த இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wqg94k0lzo
  12. ஈரான் போர்: “இது எங்கள் போர் அல்ல” – பிரிட்டிஷ் பிரதமர் Published By: Vishnu 02 Apr, 2026 | 05:46 AM ஈரானுக்கு எதிரான போர் தனது போர் அல்ல என்றும், அதில் தான் சிறிதும் ஈடுபடப் போவதில்லை என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகிறார். 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ஒரு பதிவு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார். ஈரான் போருக்கு பங்களிக்காத நாடுகள் தாங்களாகவே போரிட்டு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா இனி அந்த நாடுகளுக்கு ஆதரவளிக்காது என்றும் அமெரிக்க அதிபர் அந்தப் பதிவை வெளியிட்டிருந்தார். அதன்படி, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில், தனக்கு ஐரோப்பாவுடன் ஒரு வலுவான உறவு தேவை என்று பிரிட்டிஷ் பிரதமர் கூறுகிறார். ஈரானுக்கு எதிரான போரில் ஐரோப்பிய நாடுகள் சேராததால், அந்நாடுகளுடனான நேட்டோ இராணுவக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் கூறியிருந்த அறிக்கை குறித்தும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். உலகம் கண்ட ஒரே திறமையான இராணுவக் கூட்டணி நேட்டோ தான் என்றும், பிரிட்டன் அதற்கு முழுமையாக உறுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். "என் மீதும் மற்றவர்கள் மீதும் வரும் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், எந்தக் குரல்கள் எழுந்தாலும், பிரிட்டனின் தேசிய நலனுக்காகவே நான் முடிவெடுப்பேன். இது நமது போர் அல்ல என்று நான் கூறுகிறேன். நாம் அதில் ஈடுபடப் போவதில்லை," என்றார் அவர். https://www.virakesari.lk/article/242522
  13. மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கினால் கடும் நடவடிக்கை - கல்வி அமைச்சு எச்சரிக்கை 02 Apr, 2026 | 04:37 PM பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது. 2016 ஏப்ரல் 29ஆம் திகதியிட்ட 12/2016 இலக்கச் சுற்றறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகள், விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள சுற்றறிக்கையை செயற்படுத்தும்போது, வழக்கு எண் 461/2012 (FR) தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் 17வது பத்திக்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த மாணவரும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டிய கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளின் பொறுப்பை அந்தத் தீர்ப்பு தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, அனைத்து மட்டங்களிலும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்றும் இதை மீறும் எவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளில் ஒழுக்கமானது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் வன்முறையற்ற முறைகளின் மூலம் பேணப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்றும் மாணவர் ஒழுக்கத்தை கையாளும்போது உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/242575
  14. நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி - நாமல் Apr 2, 2026 - 05:56 PM நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஜனாதிபதி ஒரு மோசடியாகக் கருதவில்லை என்றால், ஜனாதிபதியும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். இந்த அரசாங்கத்தின் கொள்கையும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையைப் போன்றதே. ஒரு நபர் மற்றவரின் பையைத் திருடிவிட்டு இதோ திருடன், இதோ திருடன் என்று கூச்சலிட்டபடி ஓடுவார். கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த திருடனைப் பிடிக்க திருடனுக்குப் பின்னால் ஓடுவார்கள். ஆனால் இறுதியில் பார்த்தால், யார் மற்றவரை திருடன் என்று சொன்னாரோ அவரே உண்மையாக திருடியிருப்பார். இந்த அரசாங்கமும் அப்படித்தான். இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி மோசடி செய்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றையும், அவரது நடத்தையையும், அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது, இந்த நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி இருப்பது தெளிவாகிறது. ஏனெனில், சம்பந்தப்பட்ட நபர் தற்போதைய ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்திலேயே அமைச்சிற்கு கொண்டு வரப்பட்டார். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவர் மீது பின்னர் ஒரு மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நிகரான ஒரு மோசடியே தற்போதைய நிலக்கரி கொள்வனவிலும் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்தபோது அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை, தற்போது அமைச்சரவை அமைச்சராக்கி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, தொடர்ந்தும் அவரைப் பாதுகாக்கிறார்கள் என்றால் - இது ஜனாதிபதிக்கு ஒரு மோசடியாகத் தெரியவில்லை என்றால் - இந்த மோசடியின் பின்னணியில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களே இருக்கிறார் என்பது மிகத் தெளிவாவதாக அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhg40vw0008356p3wx8eo45
  15. '26 ரன்களுக்கு 4 விக்கெட்' - இக்கட்டான சூழலில் டெல்லி அணிக்கு கைகொடுத்த இருவர் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படபடம் 1 ஏப்ரல் 2026 வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 142 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், பதும நிசரங்கா முறையே 0, 1 என்ற ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். நிதிஷ் ராணாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சமீர் ரஸ்வி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். அடுத்து வந்த கேப்டன் அக்ஸர் படேலும் டக் ஆவுட் ஆக, டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிக இக்கட்டான சூழலில் இருந்தது. அடுத்து களம் இறங்கிய ஸ்டுப்ஸ், சமீர் ரஸ்வியுடன் கைகோர்க்க அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. இருவரும் சேர்ந்து 76 பந்துகளுக்கு 119 ரன்களை குவித்தனர். இறுதி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் சமீர் ரஸ்வி 70 ரன்களையும், ஸ்டுப்ஸ் 39 ரன்களையும் எடுத்தனர். 17.1 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. லக்னௌ ஆட்டம் எப்படி? டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. லக்னௌ அணி சார்பில் மிட்சல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். எய்டன் மார்கரமிற்கு முன்பாக ரிஷப் பண்ட் களமிறங்கியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் அதிரடியாக பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை தொடங்கினாலும் அந்த அதிரடி நிலைக்கவில்லை. ரிஷப் பண்ட 9 ரன்களில் துர்திருஷ்டவசமாக ரன் அவுட் ஆக அதன் பின்னர் களமிறங்கிய எய்டன் மார்கரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கில் மாற்றம் செய்து பந்துவீச வந்தார். அக்சர் பந்துவீச்சில் எய்டன் மார்கரம் 11 ரன்களின் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 48 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவதாக களமிறங்கிய் ஆயுஷ் பதோனி 0 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்டரான நிகோலஸ் பூரனும் 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து லுங்கி நிகிடியின் அற்புதமான ஸ்லோயர் பந்தில் போல்டானார். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form ஒருபுறம் நிலைத்து ஆடிவந்த மிட்சல், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். பவுண்டரிகள் அவ்வப்போது கிடைத்துவந்தாலும் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன்ரேட் பெரிதளவில் உயரவில்லை. முகுல் சௌத்ரி 14 ரன்களில் ஆட்டமிழக்க ஷாபாஸ் அகமது இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார். அப்துல் சமாதும் ஷாபாஸ் அகமதும் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில் சமாத் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களி 29 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். 16 ஓவர் முடிவில் 121 ரன்கள் எடுத்திருந்த லக்னௌ அணி கடைசி 5 ஓவர்களி படிப்படியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி அணி சார்பில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதன் 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டையும் எடுத்தனர். லக்னௌ அணி சார்பில் அதிகபட்சமாக அப்துல் சமாத் மற்றும் மிட்சல் மார்ஷ் முறையே 36 மற்றும் 35 ரன்கள் எடுத்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c203n23xg1ko
  16. பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட பஸ் நடத்துநர் ; 2,500 ரூபா தண்டப்பணம் விதிப்பு 02 Apr, 2026 | 02:32 PM யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் பயணி ஒருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பயணியிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் யாழ்ப்பாண பஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பஸ் நடத்துநர் குறித்த பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அதிகார சபையால் 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், மீண்டும் இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு எழுத்துமூலமான உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தின்போது தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்படுவது தொடர்பிலோ அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு தலைவர் சூ.விமலேஸ்வரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான முறைப்பாடுகளை 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242561
  17. கொழும்புக்கு நீர் வழங்கும் கலட்டுவாவையில் இன்னும் 20 நாட்களுக்கே நீர்! Published By: Digital Desk 1 02 Apr, 2026 | 02:56 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பிரதானமாக நீர் விநியோகம் செய்யும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் 20 நாட்களுக்கும், லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்குமான நீர் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளது. எதிர்வரும் 2-3 வாரங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கலட்டுவாவ நீரின் ஆயுட்காலத்தை 30 அல்லது 40 நாட்களுக்கு நீட்டிப்பதற்காக, உற்பத்தித் திறனைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்குத் தடையின்றி நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியுள்ளதால், ஏனைய பகுதிகளில் நீர் விநியோகக் கோளாறுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நீர் நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களை நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/242559
  18. பிள்ளையான் விளக்கமறியலில் Apr 2, 2026 - 04:26 PM தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhd0bu40004356p8rl2x805
  19. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்… தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை புறப்பட்டு, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனத்தில் ‘ரோட் ஷோ’ (Road Show) ஊடாக வந்த விஜய், முற்பகல் 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தார். எனினும், அவர் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யாமல், சிறிது நேரம் தனது வாகனத்திலேயே (Caravan) காத்திருந்தார். நண்பகல் 12 மணியளவில் ‘நல்ல நேரம்’ என்பதால், அதுவரை காத்திருந்து அதன் பின்னரே அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அவர் பெரம்பூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பிரசாரங்கள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று மீண்டும் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று காலை திருச்சியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://athavannews.com/2026/1470821
  20. 3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி. 23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன, மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன, ஓவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றியாளராக மாறும் அணி உலக கோப்பை போட்டிற்குள் நுழையும். 4 முறை சம்பியனான இத்தாலி அணி இறுதிப்போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கி 15வது நிமிடத்திலேயே இத்தாலி அணியின் மொய்ஸ் கீன் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க பொஸ்னியா அணியும் முயற்சிகளை மேற்கொண்டது. இத்தாலி வீரர் பஸ்டொனி 41வது நிமிடத்தில் பொஸ்னியா வீரரை கோல் அடிக்க விடாமல் தடுத்தமைக்காக விதிமீறலில் ஈடுபட்டமைக்காக நடுவரால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி நிறைவடைந்த இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் போட்டியின் 79வது நிமிடத்தில் பொஸ்னியா அணியின் ஹரிஸ் டபக்கோவிக் முக்கியமான கோல் ஒன்றினை பதிவு செய்து போட்டியை சமப்படுத்தினார். இதனால் இத்தாலி அணி அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில் வெற்றிக்கோலினை பதிவு செய்ய இரு அணிகளும் மும்முரமாக மோதிக்கொண்டனர். போட்டி நேரம் நிறைவுக்கு வந்தும் இரு அணியும் கோலினை பதிவு செய்ய முடியாததால் நடுவரால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 30 நிமிடங்கள் மேலதிகமாக கிடைத்த நிலையில் மீண்டும் போட்டி சூடு பிடிக்க தொடங்கியது. இருந்தும் அதிலும் இரு அணிகளும் கோலினை பதிவு செய்யாத நிலையில் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி பெனால்ட்டி சூட் முறைக்கு மாற்றப்பட்டது. இதன்போது முதல் கோலினை இத்தாலி வீரர் தவறவிட பொஸ்னியா கிடைத்த வாய்ப்புக்களை சரியாக கோலாக மாற்றியது. மீண்டும் 3வது வாய்ப்பில் இத்தாலி அணி மீண்டும் தவற விட பொஸ்னியா அணி 4 கோல்களையும் சரியாக அடித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு உலக கிண்ண போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தியது. எதிர்பாரத தோல்வியை சந்தித்த இத்தாலி அணி இம்முறை உலக கிண்ண தொடருக்கு தகுதிப்பெறாமல் சோகத்துடன் வெளியேறியது. தோல்வியின் பின் கருத்துத் தெரிவித்த இத்தாலி அணியின் பயிற்சியாளர் ஜெனாரோ கத்தூசோ (Gennaro Gattuso), “எனது வீரர்கள் இத்தகையதொரு வலியை அனுபவிக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவர்களின் உழைப்பைக் கண்டு நான் பெருமையடைகிறேன். ஆனால் இந்தத் தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது” என உருக்கமாகத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470793
  21. இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம் Apr 2, 2026 - 04:26 PM இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் (02) அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட் படையணியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhcsl080003356psgcofpfg
  22. அருமை … எழுத்தே ஆயுதமாய்…🖋️ சொல்லே கேடயமாய்….🛡️ வாழ்க யாழ்…வெல்க தமிழ்
  23. tonSodpres19 fhàashi06gltf:9155f1l2t9 1L2el3cmg3 i5i926lmrt · பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!” அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க முனுசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல முனுசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்… … லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் முனுசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…😂" Voir la traduction.....!
  24. அததெரண கருத்துப்படம்.
  25. சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 8 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] கலினி அந்த மட்குடத்தைப் புதைத்து, சிவா அந்தக் கல்லைத் தொட்டுச் சென்ற பிறகு பல நூற்றாண்டுகள் உருண்டோடின. காலம் மாறியது; இப்போது இந்த நிலத்திற்குப் புதியவர்கள் வந்தனர். அவர்கள் கைகளில் வாள்கள் ஏந்தி வரவில்லை, மாறாகக் காலணிகள் அணிந்து, கைகளில் குறிப்பேடுகளுடன் வந்த ஐரோப்பிய காலனித்துவவாதிகள் அவர்கள். அவர்கள் போர்வீரர்கள் அல்ல; நில அளவையாளர்கள், மதபோதகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். அவர்கள் பாசி படிந்த இடிந்த கட்டிடங்களை அளந்தார்கள், நில வரைபடங்களைத் தயாரித்தார்கள். அகலம், நீளம், வடிவம் என அனைத்தையும் துல்லியமாகப் பதிவு செய்தார்கள். ஆனால், அந்த நிலத்தோடு பிணைந்திருந்த மக்களின் வலிகளையும், அவர்களின் ரகசிய நினைவுகளையும் அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை. எல்லைக் கல்லின் அருகே மண்டியிட்ட ஒரு ஆய்வாளர், "இது மிகவும் சுவாரஸ்யமானது" என்றார். மற்றொருவர், "இது பழைய வரலாற்று நூல்களை உறுதிப்படுத்துகிறது" என்றார். ஆனால் அவர்கள் ஒரு கேள்வியை மட்டும் கேட்க மறந்துவிட்டார்கள்: "எந்த நூல்கள்? அவற்றை யார் எழுதியது? யாருக்காக எழுதப்பட்டது?" புதைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு தந்திரம் இருந்தது. தங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார்கள். புதிய வரலாற்றுச் சட்டகத்திற்குப் பொருந்தாத தகவல்களை "பிழையானவை" என்றும், "மூடநம்பிக்கைகள்" என்றும் முத்திரை குத்தித் தள்ளுபடி செய்தனர். ஐரோப்பிய அறிஞர்கள் இந்த நாட்டின் சிக்கலான வரலாற்றை எளிமைப்படுத்த முயன்றார்கள். அவர்கள் விரும்பிய "ஒழுங்கிற்காக", பல்லாயிரம் ஆண்டு வரலாற்றை ஒரு நேர்க்கோட்டில் அடக்கினார்கள். வாய்மொழிக் கதைகளை விடவும், ஏற்கனவே அதிகாரத்தால் எழுதப்பட்ட நூல்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளித்தனர். கிராமங்களை விட மடங்களையும், உழைக்கும் விவசாயிகளை விட மன்னர்களையுமே வரலாற்றின் நாயகர்களாகச் சித்தரித்தனர். வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): காலனித்துவத் தாக்கம் (18-19ஆம் நூற்றாண்டு): பிரிட்டிஷ் ஆட்சியின் போது (குறிப்பாக ஜார்ஜ் டேர்னர் - George Turnour போன்றவர்கள்), 'மகாவம்சம்' போன்ற பாலி மொழி நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இதுவே இலங்கையின் அதிகாரப்பூர்வ வரலாறாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. வாய்மொழி வரலாறு புறக்கணிப்பு: ஐரோப்பியர்கள் "ஆவணப்படுத்தப்பட்ட" வரலாற்றையே நம்பினர். இதனால், தமிழ் மற்றும் எலு மொழிகளில் மக்களிடையே புழங்கிய நாட்டுப்புறப் பாடல்கள், குலவரிசைக் கதைகள் "ஆதாரமற்றவை" எனக் கருதப்பட்டு வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டன. தொல்லியல் அணுகுமுறை: ஐரோப்பிய ஆய்வாளர்கள் பிரம்மாண்டமான ஸ்தூபிகளையும், மடங்களையும் ஆய்வு செய்த அளவிற்கு, சாமானிய மக்கள் வாழ்ந்த இடங்களையோ அல்லது அவர்களின் சிறிய வழிபாட்டுத் தலங்களையோ முக்கியமாகக் கருதவில்லை. இனத்துவ அடையாளம்: சிக்கலாகப் பிணைந்திருந்த பல இன, மொழி அடையாளங்களை ஐரோப்பியர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக "சிங்களவர்", "தமிழர்" எனத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தினர். இது பண்டைய காலத்தில் நிலவிய மொழி மற்றும் கலாச்சாரக் கலப்பை மறைக்கக் காரணமாகியது. ஐரோப்பிய ஆய்வாளர்கள் எழுதினார்கள்: "நாகரிகமடைந்த ஒரு மக்கள் கூட்டம் இங்கு வந்து முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது." மற்றொன்று, "மேம்பட்ட கலாசாரம் பழமையான மக்களைப் பண்படுத்தியது" என்றது. அவர்களின் வரலாற்றுப் பதிவுகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டன: கலினி காப்பாற்ற முயன்ற ஊர்ப் பெயர்கள் வெறும் "எழுத்துப் பிழைகளாக" முத்திரை குத்தப்பட்டன. சிவா கண்டெடுத்த கல்வெட்டுகள் "முதிர்ச்சியடையாத ஆரம்பகால முயற்சி" எனக் குறைத்து மதிப்பிடப்பட்டன. பூர்வகுடி மக்கள் மெல்ல மெல்ல "இணைந்தார்கள்" அல்லது "அமைதியாக மறைந்தார்கள்" என மேலோட்டமாக எழுதப்பட்டது. இப்படித்தான், பலதரப்பட்ட உண்மைகள் அடங்கிய வரலாறு பாடப்புத்தகங்களில் ஒரு நிலையான, கடினமான வடிவத்தைப் பெற்றது. காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற புத்தகங்களே எஞ்சின. புதிய ஆட்சியாளர்கள் அந்தப் புத்தகங்களையே ஆதாரமாகக் கொண்டனர். இப்போது வரலாறு என்பது உண்மையை அறிவதற்கான தேடல் அல்ல; மாறாக, அதிகாரம் மற்றும் உரிமையைக் கோருவதற்கான கருவியானது. மேடை உரைகளில் நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டன; கல்வெட்டுகள் தங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. புராதனமான சான்றுகள் இப்போது நீதிமன்றங்களில் உரிமைகளைத் தீர்மானிக்கும் ஆதாரங்களாக மாறின. கேள்விகள் திசைமாறின: "முதலில் வந்தவர் யார்?" "இந்த மண்ணின் மூலக்குடி யார்?" "உண்மையான வாரிசு யார்?" ஒவ்வொரு சொல்லும் அரசியலின் கூர்மையான ஆயுதமாக மாறியது. பல நூற்றாண்டுகளாகப் பிணைந்து வாழ்ந்த மக்கள், ஒருவரை ஒருவர் அந்நியர்களாகப் பார்க்கக் கற்றுக்கொண்டனர். வெவ்வேறு மொழி பேசுபவர்களிடையே மலர்ந்த காதல் "துரோகமாகப்" பார்க்கப்பட்டது. மக்கள் இணைந்து வழிபட்ட புனித இடங்கள் இப்போது போர்க்களங்களாக மாறின. பல்லாயிரம் அடுக்குகளைக் கொண்ட, உயிருள்ள ஓட்டமாக இருந்த வரலாறு, இப்போது ஒருவரை ஒருவர் வெட்டப் பயன்படும் கூர்மையான கத்தியாக மாறியது. வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): புனரமைக்கப்பட்ட வரலாறு (Reconstructed History): 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட வரலாற்றையே 20-ஆம் நூற்றாண்டுத் தலைவர்கள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தினர். இது "வரலாற்றுப் புனைவு" (Historical Fiction) உண்மையாக நம்பப்படக் காரணமாகியது. மொழிக் கலப்பு மறைப்பு: கல்வெட்டுகளில் காணப்படும் பிராகிருதம், தமிழ், எலு ஆகிய மொழிகளின் பிணைப்பு, காலப்போக்கில் "சிங்களம்" அல்லது "தமிழ்" எனத் தனித்தனி துருவங்களாகப் பிரிக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் 'பருமக' (Parumaka) போன்ற பெயர்கள் தமிழின் 'பெருமகன்' என்பதோடு தொடர்புள்ளவை என்பதைப் போன்ற உண்மைகள் பாடப்புத்தகங்களில் தவிர்க்கப்பட்டன. அடையாள அரசியல்: 1948-க்குப் பிந்தைய காலகட்டத்தில், காலனித்துவ வரலாற்று வரைவியலால் (Colonial Historiography) உருவாக்கப்பட்ட "ஆரிய-திராவிட" இனக் கோட்பாடுகள், இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பிளவை ஆழப்படுத்தின. புனிதத் தலங்கள்: கதிர்காமம் போன்ற பல இடங்கள் இரு சமூகத்தவர்களாலும் இணைந்து வழிபடப்பட்ட வரலாறு மறைந்து, அவை உரிமைப் போராட்டக் களங்களாக மாற்றப்பட்டன. ஒரே நிலம்—ஆனால் ஆளுக்கொரு கதை. ஒரே கல்—ஆனால் ஆளுக்கொரு உரிமை. கடந்த காலம் என்பது இப்போது ஒரு போர் ஆயுதமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், வரலாற்றுக்கு ஒரு பலவீனம் உண்டு; அது மனித மனதின் ஆழமான தேடலையும் ஏக்கத்தையும் ஒருபோதும் முழுமையாக அழித்துவிட முடியாது. இன்றைய நவீன யாழ்ப்பாணத்தில், தொல்பொருள் ஆய்வு மாணவி ஒருத்தி, அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு கல்லின் தூசியைத் துடைத்தாள். அதில் ஒரு பழைய ஊர் பெயர் தென்பட்டது. அந்தப் பெயர் இன்றைய அதிகாரப்பூர்வ வரைபடங்கள் எதிலுமே இல்லை. அதே சமயம் கொழும்பில், ஒரு இளைஞன் பழைய கல்வெட்டுகளை வாசிக்கும்போது, அவனுக்குள் ஒரு புரியாத உணர்வு ஏற்பட்டது. அந்தப் பழைய எழுத்துக்கள் மௌனமாக இருந்தாலும், அவனிடம் ஏதோ ரகசியத்தைப் பேசுவது போல் அவனுக்குத் தோன்றியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வரலாற்று மாநாட்டில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து வாதிட்டனர்—காலக் கணக்கீடு (Dates), எழுத்து வடிவம் (Script) மற்றும் அவற்றின் அர்த்தங்கள் குறித்து கடும் விவாதங்கள் நடந்தன. ஆனால் மெதுவாக—பல நூற்றாண்டுகளுக்கு முன் கலினியும் சிவாவும் உணர்ந்ததைப் போலவே—இவர்களும் மற்றவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினர். வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல, அந்த எழுத்துக்களுக்குப் பின்னால் இருக்கும் மௌனத்தையும் அவர்கள் உணரக் கற்றுக் கொண்டனர். ஒரு மாலை வேளையில், அந்தப் பழைய எல்லைக் கல்லின் முன்னே நின்றபோது, அந்தப் பெண் மெதுவாகக் கேட்டாள்: "காதல், வரலாற்றைத் தாண்டி உயிர்வாழுமா?" அதற்கு அந்த இளைஞன் அமைதியாகப் பதிலளித்தான்: "இல்லை, காதல் இருப்பதால்தான் வரலாறே உயிர்வாழுகிறது." அந்தக் கல் எதுவும் பேசவில்லை. ஆனால், அது எல்லாவற்றையும் தன் மௌனத்தில் நினைவில் வைத்திருந்தது. வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): நவீன தொல்லியல் (Modern Archaeology): இன்று யாழ்ப்பாணம் (கந்தரோடை) மற்றும் கொழும்பு (அனுராதபுரம் சார்ந்த ஆய்வுகள்) ஆகிய இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகள், இலங்கையின் வரலாறு என்பது தனித்தனி தீவுகள் அல்ல, அவை ஒன்றோடொன்று பிணைந்தவை என்பதை நிரூபித்து வருகின்றன. பரிணாம வளர்ச்சி: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. வரை, பிராமி எழுத்துக்கள் படிப்படியாக வட்டெழுத்தாகவும், பின்னர் தமிழ் மற்றும் சிங்கள எழுத்துக்களாகவும் பிரிந்தன. இந்தத் தொடக்கக்கால எழுத்துக்களில் (Early Brahmi) இரண்டு மொழி வேர்களும் கலந்தே காணப்படுகின்றன. மறைக்கப்பட்ட ஊர்ப்பெயர்கள்: இலங்கையின் இடப்பெய ஆய்வு (Place-name studies) படி, பல சிங்கள ஊர்ப்பெயர்களுக்குப் பின்னால் தமிழ்/எலு மொழி வேர்களும், பல தமிழ் ஊர்ப்பெயர்களுக்குப் பின்னால் பழைய குலப் பெயர்களும் மறைந்து கிடக்கின்றன. பண்பாட்டுப் பிணைப்பு: வரலாறு அரசியலாக்கப்பட்டாலும், மக்களின் அன்றாட வழிபாடுகள், உணவு முறைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இன்றும் அந்தப் பழைய எலு-தமிழ் கலப்பு உயிருடன் இருக்கிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 9 தொடரும் துளி/DROP: 2129 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/34670688385913033/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.