Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. எமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை. இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது. பெண் பிள்ளைகள் சார்ந்த மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கால சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது அதன் விளைவுகள் அவர்களது அன்றாட வாழ்வில், மனதளவில், உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவர்களது எதிர்காலம் சார்ந்த எத்தனிப்புக்களை நாசமாக்கக்கூடியது என்பதை பெற்றோர்கள் அறிந்துள்ள போதும் அதற்கான மருந்தான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள எமது தமிழ் பெற்றோர்கள் மறுக்கின்றனர். 28 நாட்களில் ஒழுங்காக வரவழைக்ககூடிய மாத்திரைகளை உடலுறவுக்கான பாதுகாப்பு மாத்திரைகள் என்று புரிந்து கொண்டு அதனை திருமணமாகாத கன்னிப் பெண்கள் பாவிப்பது அப்பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மை சார்ந்ததாக அல்லது அவர்களை சந்தேகிப்பதாக அல்லது தாமே அவர்களுக்கு பிழையான வழியை திறந்து விடுவதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்களாவது இதை உணர இப்பதிவால் முடிந்தால்..... நன்றி.
  3. விக்கெட்டுகளின் எண்ணிக்கை சமமாக இருந்தாலும், economy, strike rate இல் பும்ரா முன்னணியில் நிற்பதால் பும்ராதான் சிறந்த பந்துவீச்சாளர். அத்துடன் பும்ரா எட்டு மட்ச்களிலும், வருண் ஒன்பது மட்சுகளிலும் விளையாடியிருந்தனர். குறைந்த மட்சுகளில் பும்ரா விளையாடி ஒரே எண்ணிக்கையான விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இன்னோர் காரணம்.
  4. Today
  5. மத பயங்கரவாதத்தை sponsor பண்ணி உலகிற்கு பரப்பிய மோசமான நாடு ஈரான். ஹமாஸின் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்கும் லெபனான் நாசமானதிற்கும் இதுவோ காரணம். முல்லாக்களின் கொடுங்கோல் மத ஆட்சி ஒழிந்து ஈரானிய மக்களும் மேற்குலகில் வாழ்கின்ற ஈரானியர்கள் தமிழர்கள் போன்று சுதந்திர வாழ்க்கையை வாழவேண்டும். ஈரானியர்கள் மகிழ்ச்சியை நேரிலே பார்க்கின்றோமே. புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற சில தமிழர்களுக்கு என்ன பிரச்சனையாம்
  6. வீதியோரம் ( சாம்பலில் பூத்த மலர்கள் ) அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல் கலைந்து பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான். சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர். அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது. ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம். சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப் போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......! மலர் .......1.🌻
  7. வழமைபோல் போட்டியை மிகவும் திறம்பட திட்டமிட்டு செயற்படுத்திய @கிருபன் கிருபன் ஜீ அவர்கட்கு நன்றி! கிருபன் ஜீ அவர்கட்கு உதவியாளராக பணியாற்றிய @செம்பாட்டான் அவர்கட்கு நன்றி! முதலாவதாக வந்து முதல்வர் கதிரையை கைப்பற்றிய நியூபலன்ஸ், கதிரையை நீண்டநாட்கள் ஆக்கிரமித்து பின்னர் முடிவில் இரண்டாவதாக வந்த கண் தப்புவிற்கு பாராட்டுக்கள்! போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்! உலக கோப்பை போட்டி பற்றிய தகவல்களை அவ்வப்போது வழங்கியவர்கள், உரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்! @கிருபன் ஜீ யிடம் ஒரு வினா. பூம்ரா, வருண் ஆகிய இருவரும் மொத்தம் 14 விக்கெற்றுகளை கைப்பற்றினார்கள். வருணை தெரிவு செய்தவர்களுக்கு ஏன் புள்ளிகள் வழங்கப்படவில்லை? தென் ஆபிரிக்கா இறுதி போட்டியில் கலந்து கிந்தியாவை தோற்கடிக்க முடியாமல் போனது துரதிஸ்டம். நியூசிலாந்து இறுதி போட்டியில் முதலில் துடுப்பாடாதது தோல்விக்கான காரணமோ தெரியவில்லை. ஏதாவதொரு போட்டியில் மிகக்குறைந்த எண்ணிக்கையை பெறும் அணி எது என கேட்கப்பட்ட வினாவிற்கு இலங்கை என சரியான பதிலை கொடுத்த @நந்தன் இற்கு பாராட்டுக்கள்! நான் இலங்கையை சொறி லங்கா என விளிப்பது இல்லை. ஆனால், இந்த போட்டியில் அதன் விளையாட்டு சொறி லங்கா எனும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டது.
  8. தணிக்கைகள்/பிரச்சார போர்/ஊடக போர்/உளவியல் யுத்தம் இவைகளை தாண்டி உண்மை செய்திகள் வெளிவருகின்றதா என்பது சந்தேகம். அப்படியாக உண்மை செய்திகளை வெளிவிடும் ஊடகம் ஏதும் உள்ளதாகவும் தெரியவில்லை. அவரவர் அங்குமிங்குமாக பார்க்கும், கேட்கும், வாசிக்கும் செய்திகளை அளவுகோலிட்டு, ஆய்வு செய்து தத்தமது அறிவுக்கேற்ற வகையில் கிரகிக்க வேண்டியதுதான்.
  9. 🤣 இன்னொரு திரியில் இதே "தரவுகளின் அடிப்படையிலான தேடலையும், அபிப்பிராயத்தையும்" உங்களிடம் தேடினேன்! உங்களிடம் அப்படியானதொரு நடு நிலையான தரவுகள் தேடி முடிவெடுக்கும் தன்மையைக் காணவில்லை! ஆனாலும், ஏனையோரிடம் இதை எதிர்பார்க்கிறீர்கள்😂! நினைவூட்டலுக்கு: அணுசக்தி நீர்மூழ்கிகள் ஒன்றைக் கூட வைத்திருக்காத ஈரான் 60% யுரேனியத்தை "அணுசக்திப் பிறப்பாக்கிக்காக சேகரிக்கிறது" என்று நீங்கள் காரணம் எடுத்துக் கொடுத்திருந்தீர்கள்!
  10. முல்லாக்களுக்கு முன் நிற்க முடியாது (என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது?)- 5 பேர் மட்டும் தான் இரான் அணிக்கு ஆள் எண்ணிக்கைக்கு சென்று இருந்தால்.
  11. "மூன்று கவிதைகள் / 29" 'புகைப்படக் கவிதை' பார் போற்றும் பழம்பெரும் மொழி வேர் ஊன்றிப் பரவிய இனம் சீர் கொண்ட செம்மொழித் தமிழ் நேர் நின்று உலகை ஆளும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [10வது உலகத் தமிழ் மாநாடு, சிகாகோ/ ஜூலை 4 முதல் 6, 2019 இல் நான் ] ............................................................ 'பெண் என்னும் பெருஞ்சக்தி' காலம் கடந்தும் நிலைக்கும் பேரறிவே ஞாலம் போற்றும் நற்பண்பின் பிறப்பிடமே ஆயிரம் தடைகள் உடைக்கும் அலைகடலே ஆற்றல் மிக்க வரலாற்றின் ஆணிவேரே அன்பால் உலகை ஆளும் அன்னையே அறிவால் திசைகள் மாற்றும் ஆளுமையே உயிரைத் தாங்கும் ஒப்பற்ற உயர்மணியே பெண் என்னும் பெருஞ்சக்தி நீமட்டுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'மின்னலாய் ஒரு பின்னல்' [காலநிலை, கிரகங்கள், கோரங்கள், அவதி] மாறிடும் காலநிலை மாற்றங்கள் உண்டாக்க கோரங்கள் அமைதியைக் குலைக்க கிரகங்கள் விதியைக் கோலங்களாக்க முடிவில்லா அவதி மனிதனைக் கவ்வுது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2083 ["மூன்று கவிதைகள் / 29" https://www.facebook.com/groups/978753388866632/posts/34221410470840829/?
  12. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 128 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" கண்ணகி (இலங்கையில் பத்தினி தேவி என அழைக்கப்படுகிறார்) நீதித்துறையின் ஒரு முக்கிய பாகமாகவும் அன்று இலங்கையில் விளங்கினார். ஒரு பழி சுமத்தப்பட்ட நபர் (defendant) நீதிமன்றத்தில் ‘ஹல்லம்பா’ [Hallamba] எனப்படும் ஒரு விசேடமான சத்தியப் பொருள் மீது சத்தியம் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. அங்கே அந்த சத்தியத்தில், அவர்கள் உண்மை மட்டுமே பேசுவதாக தெரிவிக்க வேண்டும். இந்த ஹல்லம்பா மீது சத்தியம் செய்யும் பழக்கம் சிங்கள கிராமப்புற மக்களால் மிகவும் பயமுறுத்தும் ஒரு சத்தியமாகக் கருதப்பட்டது. தவறாக சத்தியம் செய்தால் தெய்வீக தண்டனை ஏற்படும் என அவர்கள் நம்பினர். இங்கே ஹல்லம்பா [Hallamba] என்பது பத்தினித் தேவியின் (கண்ணகி) புனிதமாகக் கருதப்படும் ஒரு பொருள் அல்லது அவள் அணிந்திருந்த, உடல் அணிகலன்களில் ஒன்றான அவளின் காற்சலங்கை [anklet] ஆகும். இது வழிபாடுகளிலும், சத்தியச் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதன்மீது தவறாக சத்தியம் செய்வது பத்தினி தேவியின் கோபத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் நம்பினார்கள். மேலதிக விவரங்களுக்கு 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' என்ற நூலின், பக்கம் 21 முதல் 22 பார்க்கவும். மேலும் 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' இன் பக்கம் 22 இலிருந்து ஒரு சிறிய மேற்கோள் கிழே தரப்பட்டுள்ளது: "கஜபாகு இந்தியாவிலிருந்து பத்தினி தேவியின் பொற்சிலம்பு கொண்டு வந்தார். அதன் நகல்களே இப்போது பத்தினி வழிபாட்டின் பிரதான சின்னங்களாக பயன்படுகின்றன. நீதிமன்றங்களில் சத்தியம் செய்யும்போது இந்த ஹல்லம்பா அல்லது காற்சலங்கை மீது சத்தியம் செய்யப்படுவது அவ்வப்போது காணப்படுகிறது. இந்த சத்தியத்தை விட சிங்கள கிராமவாசிகள் அதிகமாக பயப்படுவது வேறு ஒன்றும் இல்லை." என்கிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது இலங்கை மன்னன் கஜபாகுவும் அங்கிருந்ததாக சிலப்பதிகாரம் பாடுகிறது. மணிமேகலை காவியமும் அதை உறுதி செய்கிறது. ஆனால் செங்குட்டுவனின் காலகட்டத்தை மதிப்பிட உதவிய இலங்கையின் தீபவம்சம் (கிபி 4ம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கிபி 5ம் நூற்றாண்டு) இரண்டிலும் கஜபாகு மன்னன் தென்னிந்தியா போனது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ஏன்? அது தான் எனக்குப் புரியவில்லை? ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பினான். மேலும் இலங்கையில் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் கூட எங்கும் தகுதியான துறவிகள் இல்லாததால், புதிய துறவிகளை உத்தியோகமாக அமர்த்தி சமயப்பணியில் ஈடுபடவைக்க, அவர்களுக்கு புத்த குரு பதவியளிப்பு செய்ய, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்து வர டச்சுக்காரர்களுடன் ஏற்பாடு செய்தார். எனவே இதற்காக, பல முறை, தூதர் குழுக்கள் அனுப்பப்பட்டது, அதில் கடைசியாக 1745-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது ஆகும். இந்த தூதர் குழு சியாமில் இருக்கும்போது, ஸ்ரீ விஜய ராஜசிங்கம் இறந்துவிட்டார். அவரது இடத்தில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கம் என்ற மன்னர் வந்தார். இதனால், சியாம் மன்னன், புதிய மன்னரிடமிருந்து உறுதிப்படுத்தல் வேண்டுமென்று கேட்டார். இதனால் சில தாமதம் ஏற்பட்டது. சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர். மேலும் இவர்கள் சியாமிலிருந்து வந்ததால், இவை சியாம் நிக்காயங்கள் [Siam Nikayas] என அழைக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர். அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்புதான், பெரகரா விழாவில் பல் நினைவுச்சின்னம் முக்கியத்துவம் பெற்றது. கஜபாகுவின் காலத்திலோ அல்லது அவரது ஆட்சிக்குப் பிறகு சிறிது காலத்திலோ இலங்கையில், பத்தினி வழிபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடைய, ஒரு கெலியா, தோடன் கெலியா, பொல் கெலியா மற்றும் மல் கெலியா [An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya] என, நான்கு மத விளையாட்டுகள் தோன்றின. இங்கு ஒரு-கெலியா என்பது "கொம்பு - இழுக்கும் விளையாட்டு; "தோடன் - கெலியா என்பது "தோடம்பழம் / ஆரஞ்சு. (அடிக்கும்) விளையாட்டு;" பொல் - கெலியா என்பது "தேங்காய் (உடைத்தல்) விளையாட்டு;" மற்றும் மல் - கெலியா என்பது "பூ விளையாட்டு ஆகும். இது விடயமாக, ''Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981", என்ற நூலின் 631 ஆம் பக்கத்தைப் பார்க்கவும். Part: 128 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Goddess Pattini became a part of the judicial system in Lanka, defendants had to take oath on Hallamba to profess that they tell only the truth. No oath is more dreaded by the Sinhalese peasants than that on the Hallamba. The Sinhalese followed the tradition of the festival started by the king Kajavahu in honour of Pattini, Kannaki, until 1775 A. D. See the pages 21 to 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' for detail. A small quote from the page 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' is: ‘Gaja Bahu brought from India the golden halamba or anklet of the goddess, copies of which are the symbols of her worship, and oaths are not infrequently taken on them in courts of justice. No oath is more dreaded by the Sinhalese peasant’. The Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha, wanted to revive the almost extinct Buddhism in Lanka, and made arrangement with the Dutch to bring monks from Siam (Thailand) to perform the ordination on novice monks as there were no qualified monks to perform the ordination anywhere in Lanka. There were many missions sent Siam, and the last one was in the year 1745 A. D. While the mission was in Siam, the king Sri Vijaya Rajasimha died, and a new King Kirty Sri Rajasimha succeeded to the throne. The king of Siam required re-affirmation from the new king. There was delay, and the monks were sent from Siam in 1753. The monks came and established the Malwatta and Ascriya chapters in Kandy. These monks came from Siam, and that is why these two chapters are known as Siam Nikkayas. Till that time the prominent position was accorded to the Goddess Pattini in the Perahera procession. The intolerant monks who came from Siam objected to the king that the Dalada shall be in the forefront of the festival. The tooth relic became prominent in the Perahera festival thereafter, only about two hundred and seventy years ago. There are four religious games, all intimately connected with the worship of Pattini, established in Lanka by the time of Gajabahu or shortly after his rule, called An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya. See page 631 of Reference 'Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981. Thereafter the AES had done 3 reprints, the last being 1999.' நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 129 தொடரும் / Will follow துளி/DROP: 2084 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128 https://www.facebook.com/groups/978753388866632/posts/34221694934145716/?
  13. இரு வேறு நபர்கள். இலண்டன் டாக்டர் அமரர் சத்யமூர்த்தி புலிகளுகாக செயற்பட்டவர். வயது மூத்தவர். Tamil Heritage -வெண்புறாவின் நிபுனர் சத்தியமூர்த்தி 03.09.1951 – 27.02.20...மனிதநேய வெளிப்பாடுகளில் வெண்புறாவின் நிபுனர் சத்தியமூர்த்தி 03.09.1951 - 27.02.2013 இன்று நினைவு நாள். சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வயதில் குறைந்தவர். முள்ளிவாய்க்காலில் அரும்பணி செய்து, உலகிற்கு உண்மையை சொன்னவர். பின்னாளில் ஆமியின் கைக்கு போய், இப்போ, அரசியல் சர்ச்சைகளில் சிக்குபவர், அதிகாரத்தில் இருப்பவர்.
  14. 🤣................. உங்களையும், நிலாமதி அக்காவையும் ஆப்கான் குரூப்பில் சேர்த்து இருக்க வேண்டும் என்று பிற்பாடு தோன்றியது.....................🤣.
  15. இங்கே முல்லாக்களுக்கு என்ன டப்பாங்குத்து ஆடி முட்டு கொடுத்தாலும்😂…. அதை எல்லாம் உடைக்க ஒரு படம் போதும்…. அவுசில் அடைக்கலம் கிடைத்த மறு நொடியே ஹிஜாபை தூக்கி முல்லாக்கள் மூஞ்சியில் வீசிய ஈரானிய சகோதரிகள். ஈரான் கறுப்பா, வெழுப்பா என்பது கூட தெரியாமல்…கார்ள்சன் போன்ற பொக்ஸ் நியூசே துரத்தி விட்ட பைத்தியங்களை எல்லாம் வல்லுனர் என்பதெல்லாம் அடுத்த லெவல் டப்பாங்குத்து. புலம்பெயர் தேசம் எங்கும் ஈரானியர்கள், இஸ்ரேல் கொடி தூக்கி ஆர்பரிக்கிறார்கள். அரபிகள் கூட ஆதரிக்கிறார்கள். தெற்காசிய வழிவந்த “Temu” முஸ்லிம்களும் 😂, மேற்கு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட சிலருமே முல்லாக்களை ஆதரிக்கிறனர்😂.
  16. ரஸ்ய சார்பு கட்டுரைகளை மட்டும் தேடி, தேடி கூகிள் டிரான்சிலேட் பண்ணி ஒட்டினால் - உண்மையான புரிதல் ஏற்படுமா வசி😂
  17. இரண்டு அடுக்கு தலைவர்களை அழித்துவிட்டோம், விரைவில் யுத்தம் முடிவிற்கு வரும் - ட்ரம்ப்.
  18. கடவுள் என்ற கருத்தியலை விட விடவா ஒரு பெரிய மூடநம்பிக்கை இருந்து விட போகிறது? அமெரிக்காவின் in god we trust மகுட வாக்கியம் தொட்டு, அதிகப்படியான நாடுகளின் அடிப்படையே கூறுகளில் ஒன்றே இறை நம்பிக்கைதான். ஆனால் இந்து திருமணத்தை சட்டத்தில் ஏற்க கட்டாயாம் பத்து பொருத்தம் பார்க்க வேண்டும் என்பது அல்ல. ஒரு இந்து திருமணத்துக்குரிய அடிப்படைகளை (தாலி, கோவிலில், ஐயர் முன், அக்னி சாட்சி) பூர்த்தி செய்தால் போதும். இவை நம்பிக்கை இல்லாத ஒருவர் செய்தாலும் ஏற்கப்படும். இங்கே முக்கியமாவது சடங்கே, நம்பிக்கை அல்ல.
  19. ‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” - இஸ்ரேல் பிரதமர் ஜெருசலேம்: ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘ஈரானின் தற்போதைய அரசியல் தலைமையின் எதிர்காலம் அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது. தற்போதைய ஆட்சியை, அடக்குமுறை ஆட்சி என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய அமைப்புக்கு எதிராக எழுந்து நிற்கும் அவர்களின் மனநிலையைப் பொறுத்தே ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது இருக்கும். ஈரானிய மக்கள் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கு உதவுவதே இஸ்ரேலின் நோக்கம். இறுதியில் இது அவர்களிடமே இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் அவர்களின் சக்தியை பலவீனப்படுத்தி வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம். ஈரானிய மக்களுடன் சேர்ந்து நாம் வெற்றி பெற்றால், அவர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை அளிக்க முடியும். நாம் மாற்றத்தை உருவாக்குவோம். இஸ்ரேலின் சர்வதேச நிலைப்பாட்டிலும் நாம் பெரிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார். ‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” - இஸ்ரேல் பிரதமர்
  20. ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை கட்டுப்படுத்தலாம் - புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் 10 Mar, 2026 | 04:45 PM (எம்.நியூட்டன்) ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை கட்டுப்படுத்தலாம் பணியகத்தின் செயற்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவுள்ளோம் என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (10) ஆளுநர் அலுவலகத்தில் நைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளுநர் சுட்டிக்காட்டிய விடயங்களுடன் நான் முழுமையாக இணங்குகின்றேன். ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாகவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். மணல் மாபியாக்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். அண்மையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் - பூநகரி வீதியில் கடல்நீரேரிக்கு அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதைக் கண்ணுற்றோம். நாம் அங்கு நேரடியாகச் சென்றபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள். வடக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு மாவட்டக் குழுக்களின் ஊடாக அனுமதிகளை வழங்குவதன் மூலம் மணல், கிரவல் விநியோகம் மற்றும் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அத்துடன், எதிர்காலத்தில் எமது பணியகத்தின் செயற்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவுள்ளோம். 2027ஆம் ஆண்டிலிருந்து அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/240643
  21. லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த பெய்ரூட் நகரில் அமைந்துள்ள விடுதி வேட்டையன் பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸை கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு (ஹெச்.ஆர்.டபிள்யூ) வைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த வாரம் 3-ம் தேதி அன்று இஸ்ரேல் தரப்பு லெபனான் மீது நடத்திய தாக்குதலில் வெடி மருந்துகளில் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி இருந்ததாக ஹெச்.ஆர்.டபிள்யூ தெரிவித்துள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், போர் குற்றம் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதை புவியியல் சார்ந்த படங்கள் மூலம் சரிபார்த்து உறுதி செய்துள்ளதாக ஹெச்.ஆர்.டபிள்யூ தெரிவித்துள்ளது. காற்றில் வெள்ளை பாஸ்பரஸ் படிமங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள யோஹ்மோர் நகரில் நடந்துள்ளது. இதில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதை அணைக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் ஈடுபட்டதாகவும் ஹெச்.ஆர்.டபிள்யூ கூறியுள்ளது. ஆக்ஸிஜனுடன் வெள்ளை பாஸ்பரஸ் தொடர்பு கொள்ளும்போது தீ பற்றும் என தகவல். இது போர் களத்தில் புகைத்திரை மற்றும் இருள் கொண்ட வானை ஒளிரச் செய்யவும் பயன்படுத்தப்படும் என தகவல். இதனால் பயங்கரமான தீக்காயங்கள், சுவாசக்கோளாறு, உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இது நச்சுத்தன்மை மிகுந்தது என தகவல். “குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது சட்ட விரோதமானது. இது பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வகை தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், இஸ்ரேலுக்கு வெள்ளை பாஸ்பரஸ் கலந்த வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்துக்கு விநியோகிக்கும் அரசுகள் அதைக் கைவிட வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் இந்த தாக்குதல் கூடாது என இஸ்ரேலுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்று லெபனானை சேர்ந்த ஹெச்.ஆர்.டபிள்யூ ஆய்வாளர் ராம்ஸி கைஸ் கூறியுள்ளார். கடந்த 2024-ல் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும் அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் மேற்கொண்டது. தற்போது இது போராக மேற்கு ஆசியாவில் தொடர்கிறது. இந்த சூழலில் லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள லித்தானி ஆற்றின் தெற்கு பகுதியில் வசித்து வரும் மக்கள் இடம் பெயர்ந்து செல்லுமாறு தொடர்ச்சியாக இஸ்ரேல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி இஸ்ரேலின் வட திசை எல்லை பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
  22. மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 10 Mar, 2026 | 04:53 PM மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் . இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , 'மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், சாதாரண மக்கள் தங்களின் நாளாந்தத் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக அகழப்படும் மணலையே அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றி வருகின்றனர். மேலும், அரச நிறுவனங்கள் ஊடாக மணல் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தால் அதற்குக் காலதாமதம் ஏற்படுகின்றது. ஆனால், தனிநபர்களுக்குப் பணியகத்தால் உடனடியாக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றார். இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், 'சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுற்றிவளைப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும், பொலிஸாரால் மாத்திரம் இதனை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்த முடியாது. மாவட்டக் குழுக்களின் ஊடாகப் பொது அமைப்புகளுக்கு அனுமதிகளை வழங்குவது மிகவும் காத்திரமான செயன்முறையாக அமையும்,' என்றார். இதன்பின்னர் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர்களால் பல்வேறு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மணல் அகழ்வு, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய மூன்று வகையான அனுமதிப்பத்திரங்களும் ஒரே நபர்களுக்கோ அல்லது ஒரே குடும்பத்துக்கோ வழங்கப்படுகின்றமையும், அனுமதிகள் வழங்கப்படுவது தொடர்பில் தமக்கு எவ்வித முன்னறிவிப்புகளும் செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 5 குளங்களில் மணலைக் கழுவி எடுத்து, அதனை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக விநியோகிப்பதற்கான பொறிமுறையொன்று முன்மொழியப்பட்டது. இதன்மூலம், யாழ்ப்பாணத்தில் ஒரு டிப்பர் மணலை சுமார் 60,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. 'தூய இலங்கை' செயலணியின் வடக்கு மாகாண இணைப்பாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளருமான சு.கபிலன் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உண்மையான மணல் தேவையைக் கணிப்பிடுவது அவசியம் எனவும், அதன் ஊடாகவே விநியோகத்தையும் விலையையும் சீராகப் பேண முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.Geographic Reference பொதுமக்களின் சிறிய தேவைகளுக்கான மணலை, சிமெந்து விற்பனை போன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் அதனை எடுத்துச் செல்லும்போது பொலிஸாரால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் தலைமையிலான விசேட மாவட்ட மட்டக் குழுவில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளீர்த்தல். மணல் மற்றும் கிரவல் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களைக் கள ஆய்வு செய்து அடையாளப்படுத்துதல். விநியோகப் பணிகளைப் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் ஊடாக மாத்திரம் முன்னெடுத்தல். இந்தப் புதிய பொறிமுறையின் தொடர் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, மாகாண மட்டத்திலான மீளாய்வுக் கூட்டங்களை ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடத்துதல் எனத் தீர்மானிக்கப்பட்டது. இவ்விசேட கூட்டத்தில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், ஐந்து மாவட்டங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், நீர்ப்பாசன மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவளத் திணைக்களம், நிலஅளவைத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240638
  23. குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு 10 Mar, 2026 | 02:20 PM குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (9) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரகள் தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பாரியதொரு திருப்புமுனையையும் ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் அடைந்திருக்கிறோம். இந்த வழக்கு, விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வுப்பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும் ஒரு தடையாக இருந்தது. இந்நிலையில், தற்போது காலநிலை சீராக உள்ளதால் அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணத்தை செலவழிக்கின்ற அதிகாரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகள், அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 30ஆம் திகதி முதற்கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்கிற செய்தியினை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். 30ஆம் திகதி குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கையாக, இந்த புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக, களுவாஞ்சிக்குடியின் பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்ததன் பின்னர் மார்ச் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலற்றவர்களின் குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. முடிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீதிமன்றங்கள் நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என சட்டத்தரணி றாஸீ முஹம்மத் முஹம்மத் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/240627
  24. விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது! 10 Mar, 2026 | 05:16 PM கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குப் பெருந்தொகையான 'குஷ்' போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதியினர் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கனடாவின் அல்பர்ட்டா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கணவன் மற்றும் 29 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 பொதிகளில் அடைக்கப்பட்டு இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கோடி ரூபா பெறுமதியான 32 கிலோகிராம் 159 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 32 கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் கனடாவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என்பதும், அவரது மனைவி தொழில் தேடும் நிலையில் உள்ளவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (10) காலை 10.45 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யூ.எல்-403 (UL-403) என்ற விமானத்தின் ஊடாக இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/240647
  25. எந்த உணர்ச்சியும் அற்ற புவிஅமைப்பு பட அமெரிக்கா அமெரிக்கா தள அழிவு ஆய்வு. ஈரான் பொதுவாக இராணுவ இலக்குகள் மீது தாக்குதல். (அனால், விவிலிய பிரளயக் கிருமிகளின் நோக்கம் சமூகத்தை அழிப்பது, அததையே இரானுக்கு செய்கின்றன) இது வரையில் இரானின் பெரும்பகுதி கவனம் அமெரிக்கா தளங்களை அழிப்பது. ஏனெனில், இவற்றை அழிப்பது ஏவுகணை பாதையில் தடைகளை அகற்றுவது. அனால், பொதுவாக இந்த தளங்கள் தொலை தூர பார்வை உள்ள கண்கள், கேட்கும் செவிகள் மற்றும் தாக்குதலை நெறிப்படுத்தும் நிலைகள். உ.ம். இஸ்ரேல் இல் நேற்றும், இரானில் எண்ணை குதம் தாக்கப்பட்டதுக்கு பதிலாக, ஹைபா எண்ணை சுத்திகரிப்பு நிலை (ரத்த தடையும் இல்லாமல் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது. இதில் சொல்ல வந்தது : 1) இரான் இதை தனியாக, எந்த வித செய்மதி வழிநடத்தல் உதவி இன்றி செய்தது என்பதை நம்பமுடியாது. இஸ்ரேல் கூட இதை செய்ய முடியாது (இஸ்ரேல் செய்வது நிலைக்கு கிட்டவாக இருந்து தாக்குவது, அததற்கு உளவு கச்சிதமாக இருப்பது ). (ஆனால், இரானிடம் inertial navigation இருக்கிறது என்பதும்.) ஆனல், இதில் அந்த துல்லியமே முக்கியமானது. ஆகவே, இரான் ஒன்றில் சீன, அல்லது ருசிஷ்ய இடம் உதவி பெற்று இருக்க வேண்டும். அந்த ஆய்வாளர் சொல்லுவது, சீன என்று. சிலவ்வேலைகளில், சீன, ருசியா தனித்தனியாக உதவி இருக்கலாம். ஏனெனில், பாரிய கட்டமானத்தில், சில குக்குறிப்பிட பகுதிகளே தாக்கி அழிக்கப்பட்டு இருப்பது. அதாவது அந்த ரேடார் மாற்றம் இலத்திரனியல் யுத்த கட்டுமானங்கள் / வசதிகள் இருந்த பகுதி. 2) இவ்வளவு யுத்த வசதி / கட்டுமானங்களை வைத்து கொண்டு, அதை அமெரக்கா / இஸ்ரேல் பாவிக்க, அரபி நாடுகள் தாம் யுத்தத்தில் ஈடுபடவில்லை என்பது. (இதற்கு , அதாவது இஸ்ரேல் உடன் இவளவு நெருக்கத்தக்கு காரணம் இருக்கிறது) 3) இது அமெரிக்காவ்வுக்கு எச்சரிக்கையாக, தணிக்காவிட்டால், வேறு இலக்குகளும் குறிவைக்கப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது என்பதை சொல்லாமல் விடப்பட்டு உள்ளது
  26. இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமனம் Published By: Vishnu 09 Mar, 2026 | 07:42 PM தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டனை இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும். முன்னதாக அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணி (2008–2011) மற்றும் தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணி (2011–2013) ஆகிய அணிகளின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சியில் இந்தியா ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2011 பட்டத்தை வென்றதுடன், தென்னாபிரிக்கா 2013ஆம் ஆண்டு அனைத்து வடிவங்களிலும் உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்றது. 1993 முதல் 2004 வரை நீண்ட அவரது விளையாட்டு வாழ்க்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்கள் பெற்றுள்ளார். இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் கீழ், 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெறவுள்ளஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 போட்டிக்கான இலங்கை அணியின் தயாரிப்பை வழிநடத்துவது அவரது முக்கியப் பொறுப்பாக இருக்கும். இந்த நியமனம், தேசிய உயர் செயல்திறன் மையத்தின் அமைப்பை புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240572

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.