Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. இன்னொன்று கவனித்தீர்களா இவர் கொழும்பிலோ சிங்கல இடங்களிலோ வாங்கிங் போனதாக ஒரு காணொளி வந்தது இல்லை யாரும் அனுப்பியதும் இல்லை அல்லது சிங்கள மக்கள் அவர் வாங்கிங் போனாலும் அதை கணக்கில் எடுப்பதில்லை. நீங்களும் நிறைய வாங்கிங் போவதாக சொன்னீர்கள் 😂
  3. "Rebuilding Sri Lanka" திட்டத்திற்கு நன்கொடை அளிக்க எளிய வழி! Jan 19, 2026 - 02:16 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் "Rebuilding Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்திற்கு பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோரை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதும், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையான செயன்முறையை உருவாக்குவதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். கடந்த 13ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின்லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவின் போது www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையதளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் நிதி ரீதியாக மட்டுமன்றி பொருட்கள், நிலம் மற்றும் ஏனைய வளங்களையும் இந்த இணையதளத்தின் ஊடாக வழங்க முடியும். நன்கொடையாளர்கள் தாங்கள் வழங்கும் பங்களிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படையான முறையில் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு கிடைக்கும் நிதி நன்கொடைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும். அத்துடன் மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள், குறிப்பிட்ட நிதியுதவியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பொதுமக்கள் இந்த இணையதளத்தின் வாயிலாக உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் தளம், சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, www.rebuildingsrilanka.gov.lk இணையதளமானது இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும். https://adaderanatamil.lk/news/cmkkx8ou4044jo29niof7y7uf
  4. சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 03:48 PM சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாக அந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து வந்துள்ளது. சீன மக்கள் தொகை கடந்த ஆண்டிலும் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் 79.2 இலட்சம் குழந்தைகள் பிறந்தன. 1.131 கோடி இறப்புகள் பதிவாகி இருந்தன. இதனால், 33.9 இலட்சம் பேர் மக்கள் தொகையில் குறைந்துள்ளனர். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என முதல் இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த நிலைமையில் சீனா உள்ளது. எனினும், 2025-ம் ஆண்டில் சீன பொருளாதாரம் வருடாந்திர இலக்கான 5 சதவீத வளர்ச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள், உள்நாட்டில் குறைவான நுகர்வு என்ற சூழலிலும், ஏற்றுமதியால் சீனா இந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டது. இதன்படி, 3 வயதுக்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு மத்தியில் தெரிவித்தது. கடந்த 2024-ம் ஆண்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு காதல் கல்வி பற்றி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. திருமணம், காதல், குடும்பம் மற்றும் குழந்தை பிறப்பு பற்றி நேர்மறையான விசயங்களை கற்று தரும்படியும் அறிவுறுத்தி இருந்தது. இதுதவிர, திருமணம் செய்து கொள்ளுங்கள். கையில் பணம் பெற்று கொள்ளுங்கள் என ஊக்க தொகைகளையும் அறிவித்தது. எனினும், அரசின் பல்வேறு திட்டங்களும் பெரிய அளவில் பலன் பெற்று தரவில்லை. https://www.virakesari.lk/article/236433
  5. Today
  6. அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் பூரணப்படுத்த அரைகுறையாக இருப்பது அவசரம் என்பதால் முன்னுரிமை அளித்தோம். அதேபோல பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளுக்கான மலசலகூடப் புனரமைப்பும் அவசரம் என்றபடியால் செய்கிறோம். இவர்கள் இருவரதும் குடும்பநிலை கருதியே இவ்வுதவி செய்யப்படுகிறது. அடுத்ததாக புதிதாக மலசலகூடம் கட்டிக் கொடுக்கலாம் அண்ணை.
  7. ஓம் அண்ணா. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் பிள்ளைகளின் மலசலகூட பிளேற் வெடித்துள்ளதாலும் தண்ணீர் கொள்கலன் வைத்துள்ள பிளாற் வெடித்துள்ளபடியாலும் பாதுகாப்பிற்காக தண்ணீர் கொள்கலனை தனியாக வைத்து தரும்படி கேட்கிறார்கள். பாகிஸ்தான் பைப்பில் தாங்கி செய்ய கூட காசு கேட்கிறார்கள். + வடிவில் 10 / 12 அடிக்கு கொங்கிறீற் கல் அடுக்கி மேலே பிளாற் வைத்து தண்ணீர் கொள்கலனை வைப்பதற்கு தொழிநுட்ப உத்தியோகத்தர் கூறினார். செலவு விபரம் அறிந்து சொல்கிறேன். இன்று காலை கொமட், பூட்டுவதற்கான சில பொருட்கள், கொண்டுவரும் கூலி எல்லாம் சேர்த்து 44500 ரூபா வங்கியில் இருந்து செலுத்திவிட்டேன். இருப்பு 300395.67-44525=ரூ 255,870.67 சதம் இன்று 19/01/2026 44525 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா சம்பத் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். தற்போதைய வங்கி மீதி.
  8. யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது https://athavannews.com/2026/1460463
  9. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்! கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2025 நவம்பர் நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வாக்குறுதிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. அதே நேரத்தில் ஒன்பது வாக்குறுதிகளில் எந்த முன்னேற்றமும் பதிவு செய்யப்படவில்லை. ஒரு வாக்குறுதி தோல்வியுற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. “அனுர மீட்டர்”, ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட 30 முக்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது. இந்த மதிப்பீட்டில் 2026 தேசிய பட்ஜெட் வரையிலான முன்னேற்றங்கள் அடங்கும். டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டது. கண்காணிக்கப்பட்ட வாக்குறுதிகள், அவற்றின் உயர் மட்ட பொது நலன் மற்றும் தேசிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவை பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை Manthri.lk பராமரிக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கண்காணித்த “மைத்ரி மீட்டர்” மற்றும் “கோட்டா மீட்டர்” போன்ற முந்தைய உறுதிமொழி கண்காணிப்பு திட்டங்களை அனுர மீட்டர் பின்பற்றுகிறது. தற்போது கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில், ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பும் மேலதிக வாக்குறுதிகளை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கும் இந்த தளம் அழைப்பு விடுத்துள்ளது. Manthri.lk என்பது இலங்கையின் ஒரே நாடாளுமன்ற கண்காணிப்பு தளமாகும், மேலும் இது நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1460479
  10. ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து. 21 பேர் உயிரிழப்பு. தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. குறித்த விபத்தில் சுமார் 73 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் ஸ்பெயினின் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1460418
  11. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  12. வணக்கம் கல்யாணசுந்தரம். வருக. 🙏 உங்களை அன்புடன் வரவேற்பதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். 🙂
  13. அனைவருக்கும் இனிய வணக்கம் , யாழ் அரிச்சுவடி பகுதியில் அறிமுகம் ஆகிறேன் . தமிழ்நாடு சென்னையிலிருந்து இனி பயனுள்ள கவிதைகளை படைப்பதில் மகிழ்கிறேன் .
  14. உண்மைதான். பைத்தியர், ஒத்தை ரோசா, பார்சிறி, 3xஅனுரகாவடிகள் என எம்மக்கள் தெரிவு அபாராம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாக்கு வங்கியை குறிவைத்துல்ளனர். பைத்தியர் - protest vote அனுரகாவடிகள் - அனுர சின்ன காவடிகள் +protest vote ஒத்தை ரோசா - இன்னும் தமிழீழ கனவில் இருக்கும் ஒத்தை ரோட்டு வாக்குவங்கி சிறி - இவர் கிட்டதட்ட தமிழ்நாட்டு பாணி. எந்த கொள்கையும் இவருக்கு வாக்கு போட காரணம் அல்ல. மாறாக கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் யாழ் எதிர்ப்புவாதம், ஊழல் கசிவு, அரசவேலை என தனக்கான இடத்தை தக்க வைக்கிறார். கட்சியில் ஏனையவை இவர் அளவுக்கு ஊழல் இல்லை எனிலும் - அவர்களின் சுத்து மாத்து வெளிச்ச அளவு இவருக்கு வெளிக்கவில்லை😂. ஆனால் ஒற்றுமைக்காக என்ன விலையும் கொடுக்க முடியுமா? சுமன், சிறி, கஜன், பைத்தியர்… இந்த தலைமுறையின் அத்தனை அழுக்குகளும் அரசியலில் இருந்து கழுவபடவேண்டியவர்கள். அப்போதுதான் ஒற்றுமை சாத்தியமாகும்.
  15. மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா! பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை! written by admin January 18, 2026 மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா – பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை காலை நடை பெற்றது. வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட நிகழ்வு தொடர்ந்து இடம் பெற்றது. மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/226770/
  16. நண்பருடன்(இலங்கை) தொலைபேசியில் உரையாடினேன். நான்:- என்னப்பா அனுராவுடன் செல்பி எடுக்க போட்டியாமே? நண்பர்:-ஒம் ஓம் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் அடிபட்டு செல்பி எடுக்கினம். நான்:-சனம் செல்பி எடுக்க அனுரா காணிகளை எடுக்க போகிறாரே நண்பர்:- இப்ப சனம் அனரா வந்து தோளில் கையைப் போட்டவுடன் காணி போனாலும் பரவாயில்லை எப்படியும் செல்பி எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
  17. 🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்டி பார் அண்ட் ரெஸ்டாரன்ட்’ (Liberty Bar and Restaurant) குழுமம் நிதி நெருக்கடியால் நிர்வாகிகளிடம் (Administrators) ஒப்படைக்கப்பட்டது. வாடிக்கையாளர் வருகை குறைவு, அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இம்முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மூடப்பட்டவற்றில் மின்னார், எடின்பர்க், ரீடிங், ஸ்டீவனேஜ் மற்றும் காவென்ட்ரி உள்ளிட்ட 16 நகரங்களில் உள்ள கிளைகள் இதில் அடங்கும். Tag Words: #TGIFridaysUK #RestaurantClosures #UKHighStreet #HospitalityNews #JobLosses #Administration #RetailCrisis #UKNews2026 https://globaltamilnews.net/2026/226780/
  18. யாழ்பாண தமிழ் வெகுசனங்களிடம் எங்கள் தெய்வம் அநுரகுமார திசாநாயக்க சாதரணமாக வீதியில் நடந்து போகின்றதே என்று வாக்கிங் போவதை சொல்லி பெருமைபடுகின்ற மாற்றம் தான் வந்திருக்கின்றது அய்யா
  19. என்ன வாத்தியார் திருப்பதிக்கே லட்டா? போன தேர்தலிலேயே அவரை தூக்கி எறிய ஆயத்தம். ஆனால் மனிசன் 25000-30000 வாக்குகளை இறுக அணைத்தபடி உள்ளாரே?
  20. சரி பிழைக்கு அப்பால்…. புலம்பெயர் புஸ்வாணங்கள் என்ன குத்தி முறிந்தாலும்…. தமிழரசு கட்சியின் அதிகாரம் மிக்க குழுக்கள் எல்லாமும் சுமனிடமே என்பதுதான் உண்மை. கட்சியில் ஆதரவு இல்லை எனில் எப்போதோ சுமனை தூக்கி கடாசி இருப்பார்கள். சும்மா புலம்பாமல் - முடிந்தால் சுமனை கட்சியால் வெளியேற்ற பாருங்கள். பார் விவகாரம் வெளிவரக்கூடாது என்பதால் பார் சிறி அனுரவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்த விவகாரத்தில் அவரே கட்சியை விட்டு தூக்கி அடிக்கப்படக்கூடும். இதுதான் கட்சி தலைவர் என சொல்லி கொள்ளும் “செயலற்ற தலைவர்” பார் சிறியின் தலைமைதுவ இலட்சணம்😂. ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திறமையும் இல்லாத ஈழத்து மிக்சர் மாமா தான் பார் சிறி.
  21. எந்த ஆதாரமோ, முகாந்திரமோ இல்லாத கூற்று. தம்பரின் கருத்து அப்படியே ஒப்புவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்து நேட்டோவின் அங்கம். அதை சீனா தொட்டால் அமேரிக்கா உட்பட முழு நேட்டோவையும் தொட்டதுக்கு சமன். அப்படியும் சீனா கிரீன்லாந்த்தை தொடுமாயின் - அது அமெரிக்காவிடம் இருந்தாலும் தொடும். தம்பர் முதல் டேர்மில் நேட்டோவை உடைக்க பார்த்தார். நேட்டோ தலைவர்கள் சரி நாமும் 3% ஜிடிபியை பாதுகாப்புக்கு செலவழிக்கிறோம் என்றதும் - அவரால் அதை சாட்டி நேட்டோவை உடைக்க முடியவில்லை. இப்போ கிரீன்லாந்தை ஆக்கிரமித்து அதன் மூலம் நேட்டோவை உடைக்க முயல்கிறார். பாதுகாப்பு கனிம வளம் டிரம்பின் குடும்பத்துக்கு பணம் இவை எவையும் அல்ல கிரீன்லாந்தை கேட்க காரணம். ஒரே காரணம் நேட்டோவில் இருந்தும் பயனில்லை எனும் நிலைக்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி, அதன் மூலம் நேட்டோவை உடைப்பது மட்டுமே. கனடாவை மாநிலம் ஆக்குவோம் என்ற கதையும் இந்த நோக்கிலேயே. இதன் பின்னால் இருப்பது முழுக்க, முழுக்க புட்டின் தம்பருக்கு கொடுத்துள்ள ஏவல். இதுவரை ரஸ்யா எதிர்ப்பு, உக்ரேன் பாதுகாப்பு என இருந்த நேட்டோ, ஈயூ நாடுகளை - கிரீன்லாந்தின் பாதுகாப்பு, நேட்டோவின் எதிர்காலம் என யோசிக்க வைத்துள்ளார் புட்டின், தம்பர் வாயிலாக. கார்னி ஒரு படி மேலே போய் சீனாவை கட்டியணைத்தே விட்டார்.
  22. Yesterday
  23. புரிந்து கொண்டேன் அண்ணா. எனது பதில் ஓம்.
  24. அடிடா புடிடா எண்டு போன ஜேர்மன் வீரர்கள்.....போன அதே வேகத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கினமாம்... அமெரிக்கா இல்லை என்றால் ஜேர்மனிக்கு முதுகெலும்பு இல்லாத பீலிங் எப்பவும் இருக்கும்.
  25. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வெனிசுலாவின் ஆட்சி முறையை எதிர்த்து பொருளாதார தடைகளை விதித்தவர்களில் ஐரோப்பியர்களும் அடங்குவர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தல டொனால்ட் ரம்ப் அவர்கள்.
  26. அன்று தலைவர் போட்டு வாறன் பிள்ளையள் என்று சொன்னதும்..... இன்று. அனுர போட்டு வாறன் என்று சொல்வதும் நம்மவர்களின் ஒற்றுமையின் சிகர சொப்பனம். https://youtu.be/f8unFNmNYzw?si=yeTSgHnult2bSgMR

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.