Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html ”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா Read more at: https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html ஒருவாரத்துக்குமேலாக செய்திகள் வந்த நிலையில் கொள்கை எதிரீயடன் கூட்டணி இல்லை என்று ஏன் ஒரு மறுப்பு அறிக்கையை விடவில்லை?பாஜக எவ்வளவு பேரம் பேசினாலும் கடைசியில் எடப்பாடிதான் முடிவெடுப்பார். இது சட்ட மன்றத் தேர்தல்.பாஜக அளவுக்கு மீறி அழுத்தம் கொடுத்தால் போங்கடா வெளியே என்று சொல்லி விடுவார். இந்தத் தேர்தலில் எடப்பாடிதான் கூட்டணித்தலைவர் வெற்றியோ தோல்வியோ அவர் எடுக்கிறதுதான் முடிவு. விஜை தனித்து நின்றால் விஜை வெல்லலாம். ஆனால் நாதகவின் வாக்கு வீதம் விஜையால்பாதிக்கப்படாது.
  3. நான் விஜை 9-11% எடுப்பார் என நினைக்கும் போது, நான் ஏன் அவர் 15% எடுப்பார் என பந்தயம் கட்ட வேண்டும்😂.
  4. பௌத்த ரவுடிகளுக்கு சளைத்தவர்களல்லர் இவர்கள். நாட்டை கொழுத்துவதென்றே சன்னதமாடுகிறார்கள்! இவருக்கு புத்தி பேதலித்து விட்டதா, நாட்டில் வன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் கூட்டத்துடன் ஏதும் டீல் போட்டுவிட்டார்களா? உதயன் கம்மன்பில கூறுகிறார், சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட தாக்குதலாளிகள் முந்நூறுபேர் இன்னும் இருக்கிறார்களாம், இதனடிப்படையில் முஸ்லிம்களை வைத்து இன்னொரு தாக்குதலை நடத்தி மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்கிறாரா? கம்மன்பில நடுங்குவதும், கூறும் ஆரூடத்தை வைத்து பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளைவேர் இவர்போல்தான் தோன்றுகிறது. இல்லையேல் இவர் ஏன் பதறுகிறார்? குற்றவாளிகளுக்குப்பின்னால் ஓடுகிறார், கதைகளை கூறுகிறார், அடுத்த கைதின் இலக்கு யாரென துல்லியமாக கூறுகிறார், விசாரணை செய்வோரை குற்றம் சுமத்துகிறார், உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்துவேன் என்கிறார். அதை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தார்? இவரும் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர். தன வாயாலேயே மாட்டிக்கொள்கிறார் என்பது அவருக்கு புரியவில்லை. "முட்டாள்கள் தங்கள் வாயாலேயே மாட்டிக்கொள்வர்."
  5. நீங்கள் இதை படித்தது எங்கே? நீங்கள் வழமையா திமுக சொம்பு என திட்டும் ஊடகங்களில்தானே? அவை ஏன் இப்படி ஒரு புரளியை கிளப்பி இருக்க கூடாது? அது அப்படித்தான்😂 ஏன்னு தெரில…ஆனா அடிக்கணும் மட்டும் தெரிது😂 (கேள்விக்கான விளக்கம் உங்களுகே பலதடவை பத்தி பத்கியாக எழுதியாயிற்று). விழுந்து விழுந்து ஆதரிக்கவில்லை. திமுக, அதிமுக, பிஜேபி நயினார் அணி, பிஜேபி சீமான் அணி இவற்றிற்கு மாற்று என்பதால் ஆதரித்தேன். ஆனால் கரூரில் தலைதெறிக்க ஓடியதோடு அதை விட்டு விட்டேன். ஏன் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். இதே கேள்விக்கு இதே விளக்கத்தை போன கிழமையும் கொடுத்தேனே😂
  6. விஜை கட்சி துவங்கிய நேரம் விழுந்து விழுந்து ஆதரிச்சவராச்சே! இப்ப எதுக்கு நோட்டா?நிங்க தைரியசாலிஆச்சே விஜைக்குத்தான் கபாடுவேன் என்று துணிந்து சொல்ல வேண்டியதுதானே. விஜை தனித்து 15 வீதம் எடுப்பார் என்று பந்தயம் கட்டுங்கள் நானும் பந்தயம் கட்டுகிறேன்.
  7. தாமரையைத் தொட்டால் குலநாசம் என்றால் தாமரையுடன் எதற்குப் பேச்சுவார்ததை நடத்தினார்?மாவட்டச்செயலாளர்களிடம் கூட்ணிக்குப் போலாமா? என்று கருத்துக்கேட்டது யாரோடு கூட்டணிக்குப் போவதற்காகாக? திமுகவுடனா? பேரம்படியவில்லை என்றதும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று தனித்து விடப';பட்டிருக்கிறார். அவர்தனித்து நிற்கவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணிவைக்க முதலே விஜை அதிமுகவுடன் பேச்சுவார்ததை நடத்தினார்.தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றார். அவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க எடப்பாடி ஒன்றும் தெரியாத பாப்பாவா? ஒருத்தர் கட்சியைத் தொடங்குவாராம். பத்திரிகையாளரைச் சந்திக்க மாட்டாராம். 2 வருடத்தில் 4 கூட்டம் போடுவாராம். 7 மணிக்கூட்டத்திற்கு 7 மணிக்குத்தான் சென்னையில் இருந்து வெளிக்கிடுவாராம்.மக்கள் அவருக்காக சாப்பாடு தண்ணி இல்லாமல் காத்துக்கிடந்து சாகவேணுமாம்.மாஸ் காட்டிறம் என்று சொல்லி மக்களைச் சாகடிப்பாராம்.போராட்டம் எதுவும் செய்ய மாட்டராம்.மக்கனள பனையூருக்கு வந்து சந்திக்கச் சொல்லுவாராம்.முதல் தேர்தலிலேயே முதல்வர்பதவியைத் தூக்கிக் கொடுக்க வேணுமாம்.தமிழ்நாட்டு மக்களை இவர் என்ன மாதிரி நினைத்துக்கொண்டு இருக்கிறார்? இன்னும்ஒருத்தன் அகன்த்து னைத்து மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்வானாம்>மழை வெயில் பாராமல் தொண்டைத்தண்ணிவத்த மணிக்கணக்காகப் பேசுவானாம். எந்த ஊடகவியலாளர் எந்த விடயம் பற்றிக் கேள்விகேட்டாலும் பதில்சொல்லுவானாம்.மக்கள் போராட்டத்தில் சிறை செல்லுவானாம்.மக்களோடு மக்களாக இருந்து உணவுண்ணுவானாம். அனால் அரசியலில் வெற்றி பெறக்கூடாதாம் இது என்ன மாதிரியான சிந்தனை?
  8. மக்கள்தான் அரசை தேர்கிறார்கள் இல்லையா? 2010 களில் இங்கே பூர்வாக செயில் வாயு அகழ்வு கூட நடந்தது. Fracking என்பார்கள். ஆனால் மக்கள் பெருமெடுப்பில் எதிர்க்க, அரசியல் கட்சிகளுக் எதிர்க - வழக்கு, வம்பு என ஆகி. அப்படியே திட்டம் கைவிடப்பட்டது. யூகேயில் இது ஒரு பிரச்சபை எதுக்கு கோர்ட்டுக்கு போவார்கள். ஹீத்துறோவில் 3 வதாக ஒரு ரன் வே கட்ட 35 வருடமாக அரசு முக்குது, அதை சுத்தி உள்ள சில பத்தாயிரம் மக்கள் சேர்ந்து தடுக்கிறார்கள். இங்கிலாந்தில் உற்பத்தி துறை படுத்து பலகாலம்😂. 1980 களில் இருந்து சேவை பொருளாதாரம்தான். அதீத எரிபொருள்விலை உள்ளதையிம் கெடுக்கும் என நினைக்கிறேன். அவுஸ் - சின்ன மக்கள் தொகை ஆனால் வளம் பெரிது. கனிமம், கால்நடை இப்படி பல. அன்றும் இன்றும் யூகேயின் ஒரே பெரிய வளம் மனிதவளம்தான். 130 போனால் 10x இல் short பணனலாமா என யோசிக்கிறேன்.
  9. கையிருப்பு பிரச்சினை பற்றி பேசுகிறார்களா தெரியவில்லை, ஆனால் பெட்ரோல் $3 வரை செல்லும் என எதிர்பார்க்கிறார்கள், மசகு எண்ணெய் $ 130 ஒரு பீப்பாய். ஆனால் உற்பத்தித்துறையில் இங்கிலாந்து 9% சரிவு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள் அதே நேரம் அவுஸ்ரேலியா 5% சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதென கூறுகிறார்கள், உற்பத்தித்துறை இங்கிலாந்து போல பெரிதாக அவுஸ்ரேலியாவில் இல்லை என நினைக்கிறேன்.
  10. இரஸ்சிய எரிபொருள் தடை விலக்கல், ஈரான் எரிபொருள் அனுமதி எரிபொருள் விலையினை குறைப்பதற்காக, எரிபொருள் விலை அதிகரிப்பால் உள்ளூரில் ட்ரம்பிற்கு நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இருக்கும்.
  11. இப்போதைக்கு எவருக்கும் export ban போடும் தேவையில்லை. ஆனால் ஒரு விடயத்தை கவனிக்கவும். அவுஸ் தன் நாட்டின் அவசரகால எண்ணை இருப்பில் கொஞ்சத்தை நேற்று வெளிவிட்டது. உள்ளூர் மார்கெட்டுக்கு. இலங்கை ஒருநாள் லீவு விடுகிறது. ஆனால் நோர்வே? யூகே? விலை கூடுகிறது ஆனால் பற்றாகுஐ இல்லை. ஏன் என்றால் ஐரோப்பாவின் எண்ணையை சந்தை விலை ஒன்றே என்றாலும் கூட யாரும் அவுசுக்கு காவ மாட்டார்கள். அதுவும் ராட்சத டாங்கர்கள் மத்திய தரைகடல், சுயஸ் கால்வாயை தாண்ட முடியாது. ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை சுத்தி வரவேண்டும். ஐரோப்பா அமெரிக்காவில் விலை கூடினாலும் கையிருப்பு பிரச்ச்னை வராமைக்கும், ஆசியா, அவுசில் கையிருப்பு பிரச்சனை வரவும் இதுவே காரணம்.
  12. Today
  13. நாம், நம் கனவுகள்! jeyamohanMarch 18, 2026 வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்கு எதிராக கடுமையான எதிர்வினையை நான் முன்வைத்தேன். அது ஒரு முகநூல் பூசலாக முடிந்துவிடக்கூடாது, அது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டும் என எண்ணினேன். என் நூல்கள் உருவாக்கிய இந்திய அறிமுகம் அதை கொண்டுசெல்ல உதவியது.எனக்கு வைரமுத்து மேல் எந்த விரோதமும் இல்லை. அவரை வைத்து நம் கவிதையை இந்தியா மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் கவலை. இந்திய மொழிகளிலேயே நவீனக் கவிதை அழகியல்செறிவு கொண்டிருக்கும் மொழி தமிழ்தான். அடுத்தபடியாகத்தான் மணிப்புரி மொழியைச் சொல்வேன். மலையாளம், கன்னடம் எல்லாம் கூட பிறகுதான். அபி, தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன் என நம்மிடம் இன்று வாழும் பெருங்கவிஞர்கள் இழிவாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. நம் இலக்கியம் இவ்விருதை வைத்து மதிப்பிடக்கூடாதென்றால் பிறமொழிகளுக்கு நம் எதிர்ப்பு சென்றடையவேண்டும். அது நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுக்க எங்கள் எதிர்ப்பு சென்றடைந்துள்ளது. ஞானபீடத்தின் ஐம்பதாண்டுக்கால வரலாற்றில் இப்படி இதற்குமுன் நிகழ்ந்ததில்லை. இன்று முழுக்க நேற்றைய காணொலிக்கான வசைகள். எண்ணிக்கையை மட்டுமே பார்த்தேன். நண்பர்கள் அழித்துக்கொண்டே இருந்தனர். வசைகள் ஆயிரம் தாண்டியிருக்கும். ஆனால் அவை நம்மை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் எதையேனும் எப்போதேனும் வாசிப்பவர்கள் ஒரு சதவீதம்கூட இல்லை என நாமறிவோம். ஆனால் அத்தனைபேருக்கும் தரப்புகள் உள்ளன. காழ்ப்புகளும் கசப்புகளும் உள்ளன. சாதி,மத, அரசியல் பற்றுகள் உள்ளன. இலக்கியம் அல்லது அறிவுச்செயல்பாடு பற்றி மிகமிக அடிப்படையான விஷயங்களே இங்கே எவருக்கும் தெரிவதில்லை. எந்த வகை அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்களும் இங்கே ஒருவகை அன்னியர், ஒருவகை தலைமறைவு மனிதர்தான். இந்த விவாதத்திலேயே முக்கால்பங்கு வசையாளர்கள் திகைப்புடன் ‘யார் நீ?’ என்று என்னைக் கேட்கிறார்கள். என் பெயர்கூட அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் எது சரி, என்ன செய்யப்படவேண்டும் என்று முடிவுசெய்து பேசுகிறார்கள். இதுதான் நம் சூழல். இதனுடன் மோதுவது வீண்வேலை. இவர்கள் மேல் கசப்பை உருவாக்கிக்கொள்வதிலும் பொருளில்லை- எல்லாச் சூழலிலும் எல்லா படைப்பாளிகளும் எதிர்கொள்வது இந்த பொதுவான மூர்க்கத்தையே. ஆனால் நாம் அவர்களுக்காகவும்தான் எழுதுகிறோம். ஆகவே எதிர்ப்பு கசப்பாக ஆகிவிடாமலிருக்கவேண்டும் என நாமே நம்மிடம் சொல்லிக்கொள்ளவேண்டும். இந்த வைரமுத்து இன்னும் மூன்றுமாதகாலம் அதிகபட்சம் பேசப்படுவார். அதன் பின் அவருடைய சினிமாப்பாடல் ரசிகர்களின் உலகுக்குள் செல்வார். அவர் நமக்கொரு பேசுபொருளே அல்ல. அவர் பெற்ற இந்த விருதும்கூட. எதிர்ப்பை முடிந்த அளவு தீவிரமாக முன்வைத்துவிட்டேன். ஆனால் எதிர்ப்பு என் வழி அல்ல. எதிர்க்கவேண்டிய இடத்தில் கடுமையாக, கறாராக, அச்சமில்லாமல், தயக்கமில்லாமல் எதிர்ப்பை தெரிவிப்பேன். ஆனால் அந்த எதிர்ப்பு மனநிலையை அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில்லை. அது என் ஆற்றலைக் குறைத்துவிடும். என் ஆற்றல் என் கனவுகளிலேயே. ஆகவே இந்த எதிர்ப்பு முடிந்தது. முன்னரும் இப்படியே. தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகள் பெரும்பாலானவர்கள் எந்த ஏற்புமின்றி இருக்கும் நிலை பற்றிய என் தொடர் ஆதங்கம் இயல் விருது உருவாவதற்கு ஒரு காரணம். ஆனால் அந்த விருது பல்கலையுடன் இணைக்கப்பட்டு, நடுவர்களாக பேராசிரியர்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் அதை தங்களுக்கே மாறிமாறிக்கொடுத்துக்கொண்டார்கள். அந்த நிலைக்கு எதிராக என் கடும் எதிர்ப்பை நான் பதிவுசெய்தேன்- அவ்விருதை நிறுவிய அ.முத்துலிங்கம் என் பெருமதிப்புக்குரிய பெரும்படைப்பாளி என்ற போதிலும். அதையொட்டி உருவான கனவே விஷ்ணுபுரம் விருது. இன்று அது எந்த இடத்தில் உள்ளது என எவரும் அறிவார்கள். தமிழ் விக்கிபீடியாவில் இருந்த நசிவுக்கும்பலுடன் போராடி, தோற்றபின், என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். உருவானதே தமிழ் விக்கி. இன்று தமிழ்விக்கியின் பங்களிப்பென்ன என்று எவருக்கும் தெரியும். விக்கிபீடியாவே இன்று மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளமைக்கு தமிழ்விக்கியே காரணம். அதைப்போன்ற ஒரு சூழல் இது. நம்மை இழிவுசெய்த ஞானபீடத்திடம் இனி நமக்கு பூசல் இல்லை. நமக்கான விருதை நாம் உருவாக்குவோம். தமிழகத்தில் இருந்து அந்த விருதுக்காக உலகமே இங்கு வரட்டும். மிகப்பெரும் கனவு. கனவுகள் மலைப்பூட்டுபவைதான். ஆனால் ஒவ்வொரு சிறுபடியாக ஒவ்வொரு நாளும் காலெடுத்து வைத்தால் எய்திவிடமுடியும். இணைந்து செல்வோம். https://www.jeyamohan.in/230261/
  14. மக்களுக்கு அதனை தடுக்கும் உரிமை இல்லை, நில உரிமையாளர்களால் கூட எதுவும் செய்ய முடியாது, அவ்வாறான சட்டங்களை மாற்ற ஒரு அரசியல் தலைவர் முயன்றால் MI6, CIA போன்ற வேறுநாட்டு தலையீடுகளால் ஆட்சி பறிபோகும் நிலை உருவாகும். இங்கிலாந்து செய்யலாம் ஆனால் அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் செய்யும் அளவிற்கு தைரியமானவர்கள் அல்ல.
  15. தேசியமயமாகல் என்றால் தனியார் நிறுவனத்தை அரசு எடுப்பது. இது அது அல்ல. தனியாருக்கு சந்தை விலையை கொடுத்தபடி வழங்கலை உள்நாட்டில் மட்டும் செய்ய உத்தரவிடுவது. நீங்கள் export ban என கேள்விபட்டதில்லையா?
  16. மசகு எண்ணெயினை குறிப்பிடவில்லை, எரிவாயுவை கூட உள்நாட்டு தேவைக்கேற்ப விற்பார்களா என்பது சந்தேகமே. தேசிய வளங்கலை தேசிய மயப்படுத்துவது ஒரு கடுமையான பிரச்சினை 70 களில் விட்லமின் ஆட்சியினை MI6 மற்றும் CIA முடிவிற்கு கொண்டுவந்தார்கள், 2007 இல் ஆட்சிக்கு வந்த ராட்டின் ஆட்சியினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சுரங்க நிறுவனங்களின் மீதான அதிகரித்த வரி காரணமாக இருந்த்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் இங்கிலாந்து தனது நலனிற்காக தேசிய வளங்கலில் கட்டுப்பாடினை செலுத்த முடியுமா என தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில் யாரும் இந்த பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது.
  17. அந்த நாடுகள் பதில் சொல்லமுதல் ஆளை 72 கன்னிகளிடம் அனுப்பி விட்டோம் என்கிறது இஸ்ரேல். ஏன்னா நீங்க பாகிஸ்தானே காறி துப்பும் அளவுக்கு மோசமான ஆட்கள் 😂. தாக்குதலை கண்டித்த துருக்கிக்கும், முதல்நாள் காமேனி படத்துக்கு ஜனாதிபதி தூதரகம் போய் அஞ்சலி செலுத்த அடுத்த நாள் அசர்பைஜானுக்கும் மிசைல் அனுப்பும் போதே… அரபுநாடுகளுக்கு தெரியும் … அமெரிக்கா இல்லை எண்டால் தம்மை எல்லாம் ஈரான் விழுங்கி ஏப்பம் விடும் என்பது.
  18. என்ன இப்படி கேட்டுட்டேள் நியாயம்வாழ். இலக்கியம்னா அது ஒரு நூல் லோ இல்லியோ😂. பிகு பவுடர் டப்பா அவரின் காமாந்திர சுரண்டல் காரணமாக எந்த விருதுக்குமான தகமையை இழக்கிறார். ஆனால்…இந்த நூலிபான்கள் கிடந்து புலம்புவது ஒரு நான்-நூலுக்கு விருது கிடைத்ததை பொறுக்க முடியாமலே. தாம் எழுதுவதும் அதை போல எழுதுவதுமே மட்டுமே இலக்கியம் என எண்ணும் இந்த சுந்தர ரா, ஜெய கா, பு மோ க்களை விட நெருப்பு போல எளிய பாடல்களில் இலக்கியம் படைத்தவன் பட்டுகோட்டை. ஆனால் இந்த நூலிபான்களுக்கு தம்மை தவிர வேறு எவர் எழுதினாலும் அது இலக்கியம் அல்ல.
  19. அது கந்தையா அண்ணை சொன்ன பிச்சை எடுக்க வைப்போம் என்ற நிலை வந்தால் என்னாகும் என்பதற்கான பதில். ஹோர்மூஸ்சை திறக்க வைக்க, அமெரிக்கா கார்க் தீவை முடக்கினாலே (ஈரானின் எண்ணை ஏற்றுமதியில் 90%) போதும். இது சீனாவை பலமாக தாக்கும். ஆனால் சீனா உடனே போர்கப்பலை அனுப்பாது. சீனா தலையிட்டு, உனக்கு பாதி, எனக்கு பாதி என ஒரு ஒப்பந்தம் போட்டு நீரிணை மீள திறக்கப்ப்டலாம். ஆனால் இதை ஏன அமெரிக்கா கையில் எடுக்கவில்லை என்பதுதான் தெரியவில்லை. ஆட்சி விழும், முழுவதுமாக நாமே எடுக்கலாம் என்ற ஐடியாவா? அல்லது புட்டின் ஆடர் படி எஅடக்கிறாதா? தெரியவில்லை.
  20. பிகு யூகேயின் எரி சக்தி விலை அதிகம் என்பது தொடர்பாக குறித்த ஆலை அதிபர் கொடுத்த பேட்டியை இன்று ரேடியோவில் கேட்டேன். நியாயமான பயம்தான். 50 - 100 ஆண்டுக்கு தேவைக்கும் ஷேய்ல் எரிவாயு வடக்கு இங்கிலாந்தில் உள்ளது. ஆனால் வாயுவை அகழ தடை. அவுஸ் நிலக்கரியை இன்னும் அகழ்ந்து சீனாவுக்கு விற்கிறது. மக்களும் அதற்கு ஓக்கே. ஆனால் இங்கே இதை மககள் கடுமையாக எதிர்கிறனர். அணு உலைக்கும் எதிர்ப்பு. இத்தான் அந்த நபர் குறிப்பிட்டார். அவுஸ், பிரித்தானிய மக்கள் முற்போக்கு, பிற்போக்குதனம் வேறுபாடானது. ஒரு உதாரணம் உலக வெப்ப மயமாதல். பிரித்தானியாவில் காபன், அணு எரிப்புக்கு பலத்த எதிர்ப்பு. அவுசில் நாங்கள் எரிக்கமாட்டோம் ஆனல் 91 பில்லியன் யூ எஸ் டொலருக்கு ஏனைய நாடுகளுக்கு விற்போம் என்ற நிலைப்பாடு. அதே போல் குடிவரவு. அவுஸ் ஒரு இலங்கை போராளிகள், குடும்பம் தப்பி வந்த படகை நடுக்கடலில் மறித்து இலங்கையிடமே கையளித்தது. கிறிஸ்மஸ் தீவில் இன்னும் தடுத்து வைக்கிறது. யூகே, வேறு எந்த ஐரோப்பிய நாடும் இப்படி செய்ய முடியாது. கப்பலை அனுப்பி யூகே மீட்டு உள்ளே கொண்டு வருகிறது நாளுக்கு 1000 பேரை. இவற்றில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் ஒரே இனகுழுவாக இருப்பினும் மிக வேறுபட்ட values ஒரு நாடுகளிலும்.
  21. அவுசின் எரிசக்தி ஏற்றுமதி சீனாவுக்கான நிலக்கரியே. மசகு எண்ணை உற்பத்தி மிக குறைவு. அப்படி எடுக்கும் மசகு எண்ணையும் கிரேட் குறைவானது. மசகு பொருட்களில் அவுஸ் மிகை இறக்குமதியாளர். நீங்கள் சந்தை விலையையும் கையிருப்பையும் குழப்பி கொள்கிறீர்கள். பிரித்தானியா ஒரு எமர்ஜென்சி சட்டம் மூலம், சந்தை விலையை தருகிறோம் ஆனால் முதலில் எமக்குத்தான் விநியோகம் செய்ய வேண்டும் என இங்கே எண்ணை அள்ளும் நிறுவனங்களை கட்டுப்படுத்தலாம். இன்னும் அதற்காகன தேவை வரவில்லை. ஆனால் நாட்டின் எரிசக்திக்கு ஆபத்து என்றால் இதை ஒரு மணத்தியாலத்தில் செய்யலாம். எமர்ஜென்சி எனும் போது anti competition சட்டங்களும் பெரிய தாக்கத்தை கொடாது. இதே வகையில் சீனா உரம் ஏற்றுமதி செய்வதை ஆகஸ்டு மாதம் வரை மட்டுப்படுத்தி உள்ளது.
  22. அமெரிக்கா தரைப்படையினை அனுப்புவதுதான் அடுத்த திட்டமாக இருக்கும், ஏனெனில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அமெரிக்க திட்டத்தில் எந்த வித சாதகமான சூழ் நிலை மாற்றமும் ஏற்பட்வில்லை, ஒரு ஆட்சி மாற்றத்தினை நிகழ்த்துவதற்கு ஒரு தரை வழி தாக்குதல் அவசியமாகிறது. ஆனால் அது அமெரிக்கா விரும்பும் முடிவு எட்ட உதவுமா என்றால் அதுவும் சந்தேகமே. உண்மை! ஒரு தடவை நெல்சன் மண்டேலா கூறியிருந்தார், உலகத்திலேயே சொல்லமுடியாதவளவு அட்டூழியங்கள் செய்த நாடென்றால் அது அமெரிக்காதான் என. ஈரான் அமெரிக்கா செய்வதற்கு பதிலுக்கு பதிலாக செய்வதால் பொறுமையாக உள்ளது என கூறமுடியாது, உலக எரிபொருளில் ஏற்படுத்தும் சிறிய தடங்கலும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும், அது உள்ளூர் அமெரிக்கர்களின் வாழ்விலும் பிரதிபலிக்கும், தற்போதய உலகில் யார் எரிபொருளில் கட்டுப்பாட்டினை பேணுகிறார்களோ அவர்களே உலகை கட்டுப்படுத்த முடியும், காசா போல ஒரு சூழ் நிலையினை உருவாக்க முயன்றால் அமெரிக்க பெற்றோடொலருக்கான முடிவுரையாக இருக்கலாம் என கருதுகிறேன். மத்திய கிழக்கு நாடுகள் தமது பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்த போரிற்கு பின்னரான காலத்தில் மீழ் பரிசீலனை செய்யவேண்டும் என கருத்துக்கள் வெளியாகும் நிலையில் அவ்வாறான ஒரு சிக்கலை தானாகவே உருவாக்க விரும்பாது என கருதுகிறேன்.
  23. நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று சொல்லியிருந்தார், நேட்டோ நாடுகளின் மீது மிக கடுமையான வரிகளை விதித்திருந்தார், நேட்டோநாட்டின் கிரீன்லாந்தை அபகரிக்கும் முயற்சியிலிறங்கி ஏறக்குறைய நேட்டோ அமெரிக்கா நேரடி ராணுவ மோதல் நிலையை உருவாக்கினார், உக்ரேனுக்கு இனி அமெரிக்கா உதவாது வீண் செலவு என்றிருந்தார், கனடா அமெரிக்காவின் ஒரு மாநிலமாக்கப்படும் என்றார், கடுமையான வரிகளை கனடாமீது விதித்து சீனா இந்தியா பக்கம் அவர்களை ஓட வைக்கும் அளவிற்கு செயல்பட்டார், சீனா ரஷ்யாமீது ஏற்றுமதிவரி கச்சாய் எண்ணெய் விற்க தடை என்று பொருளாதார ரீதியாக மிக கடுமையான அழுத்தம் கொடுத்தார், ஈரான்மீதான போரில் எந்த நாடுகளையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக போர் தொடுத்தார், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் , ஈரானின் கப்பற்படை விமானப்படை, ஏவுகணை தளங்கள் 90% அழிந்துவிட்டன, போரின் முடிவை அமெரிக்கா தீர்மானிக்கும் என்றார். இப்போ எல்லோரும் வாங்கோ அமெரிக்காவை காப்பாத்துங்கோ என்ற நிலையை நேரே சொல்லாமல் ஹோர்முஸ் நீரிணையைக்கு பின்னால் ஒழிந்து நின்றுகொண்டு அழுகிறார். இப்படி பல ...றார்............என்றுபோய் ...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற நிலமை ஆச்சு. நேட்டோ நாடுகள் இந்த போரில் அமெரிக்கா சறுக்கினால் டிரம்பின்மீது அமெரிக்க மக்களின் கோபம் திரும்பி கோட்டபாய ஓடினமாதிரி ட்ரம்பும் ஓடும் நிலை கண்டிப்பாக வரும் என்ற கணிப்பில் இந்த போரில் டிரம்பின் தோல்விக்காக காத்திருப்பதை போலவே நடந்து கொள்கின்றன, ஈராக் ஆப்கான் உட்பட பல போர்களில் அமெரிக்காவுடன் ஆரத்தழுவி போருக்கு போன நேட்டோநாடுகள் இப்போ தூர நின்று வேடிக்கை பார்ப்பது அமெரிக்காமீதுள்ள கோபத்திலோ அமெரிக்க வீழ்ச்சியை ரசிக்கும் போக்கிலோ அல்ல மாறாக டிரம்பின் வீழ்ச்சி செய்திக்காக காத்திருப்பதாகவே உலகின் பார்வையில் தெரிகிறது. ட்ரம்ப் அடிக்கடி எல்லோரையும் முட்டாள்கள் என்று திட்டுவார் இப்போ அவர் தேடிய முட்டாள் அவர் வசமே உள்ளதை முற்றுமுழுதாக உணர்ந்துவிட்டார் வெக்கத்தில் வெளியே சொல்லாமல் மீண்டும் வாய் வீரத்தில் டாக்டர் பட்டம் எடுத்தே ஆவேன் என்று நிக்கிறார். வெறும் பணபலமும் படை பலமும் இருந்துவிட்டால் எங்கும் எதையும் வென்றுவிடலாம் என்று நினைக்கும் உலகிற்கு , அது சாத்தியமில்லை அதனையும் மீறிய புத்திசாலித்தனம் எனும் மூன்றாவதாக ஒன்று இருக்கிறது என்று ஞாபகபடுத்த உலகிற்கு இறைவன் அனுப்பிய நினைவு பரிசு அண்ணன் ட்ரம்ப் சோணமுத்தன்.
  24. கோர்முஸ் மூடப்பட்டதால், ஆசிய நாடுகளுக்கு அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் சாதாரண வாடிக்கைக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாது என நினைக்கிறேன், சந்தை பொருளாதாரத்தில் அது ஒட்டு மொத்த உலகத்திலும் உள்ள சாதாரண வாடிக்கைக்கும் ஒரே அளவில் பாதிக்கிறது என நினைக்கிறேன், எரிபொருள் விலை மசகு எண்ணெய் ஒரு பரலுக்கு $100 எனில் அது அவுஸ்ரேலியாவிலும் அதே விலை ஏற்றம், இங்கிலாந்திலும் அதே விலை ஏற்றம் இருக்கும்(கேள்வி நிரம்பலடிப்படையில்). ஐரோப்பிய நாடுகள் மார்ச் 1, 2026 தீர்மானத்தினடைப்படையில் 2027 இல் முற்று முழுதாக இரஸ்ஸிய எரிபொருள் விலகல் முடிவினை எடுத்துள்ளார்கள். இரஸ்சிய போரின் பின்னர் எரிவாயு விலை 78 பென்ஸாக அதிகரித்திருந்த நிலையில் தற்போதய ஈரான் போரினால் 171 பென்ஸ் அதிகரித்துள்ளது என கூறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள உற்பத்திதுறை நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு செல்வது அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்க எரிபொருள் விலையினை விட இரண்டு மடங்காக உள்ளதாக கூறப்படுகிறது. குறித்த கட்டுரையில் கடந்த 10 நாளில் 3 பில்லியன் இழப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய மக்கள் தமது வரிப்பணத்தில் இழக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஒரு உருக்கு ஆலை நிர்வாகிக்கு வழங்கப்பட்ட ஆலொசனையின் பிரகாரம் தற்போதுள்ள விலையில் 2027 இற்கான எரிவாயுவினை வாங்கினால் 2027 தற்போதய விலை அரைவாசியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது (அடுத்த ஆண்டில் விலை இரட்டிப்பாகும்) இங்கிலாந்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய உற்பத்தித்துறை குறைவான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவுஸ்ரேலியா 3 ஆவது பெரிய எரிசக்தி ஏற்றுமதி நாடாகவிருந்தாலும் உள்நாட்டு உற்பத்தித்துறைக்கு அது எந்தளவிலும் உதவி செய்யவில்லை என்றே கருதுகிறேன், இதே நிலையே இங்கிலாந்திலும் என கருதுகிறேன். இந்த யுத்தங்கள் நிறுத்தப்படாவிட்டால் நிலமை கடினமாக மாறிவிடும்.
  25. எனக்கும் கிளீநொச்சிவரை போய்வந்த அனுபவம் இருக்கு.....சந்தோசமான கஸ்ட காலம்..நினைவில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.