stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது இப்படியானவர்களின் மனநிலை பற்றிய சரியான அலசலாகவே எனக்கும் படுகிறது. எம்ஜிஆர் படம், கம்பன் கழக ஜெயராஜ், திண்டுகல் லியோனி, சாலமன் பாப்பையா வகையில் இதையும் ரசிக குஞ்சு மனநிலையில், அணுகுகிறார்கள். கூடவே இப்போ ஏ ஐ கூட இருப்பதால் - காசுக்காக அடியான் தரவழிகள் பொய்யாக தெரிந்து கொண்டே வீடியோக்களை போட்டதும் இவர்கள் அதை அப்படியே கவ்வுகிறார்கள். இவர்கள் எவருக்கும் நான் யாழுக்கு வெளியே எந்த எதிர்வினையும் செய்வதில்லை. அடிக்கடி சிலர் என்னை அங்க வா, இங்க வா என கூப்பிடுவதும் உண்டு. நான் யாழை விட்டு அரங்குவதில்லை😂. ஏன் எண்டால் எலோன் மஸ்க் போன்றோருக்கும் அடியானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவரும் பொய்யை காசாக்கும் ஆட்கள்தான். அந்த சகதியில் போய் நாம் தரவு போராட்டம் நடத்தினால் கும்பலாக ஜோம்பிகள் போல வந்து கடித்து குதறி விடுவார்கள். இந்த ஜோம்பிகளை யூடிப்பில் கேள்வி கேட்கும் @ரஞ்சித் மிகவும் பொறுமை, தைரியசாலி. என்னால் முடியாது. ஆனால் அடியானுக்கு ரஞ்சித் சொன்னது உண்மை என தெரியும். ஆகவே அவரோடு வாதிக்காமல் கொமெண்டை நீக்கி விட்டார். கொமெண்டை வைத்திருந்தால் ஜோம்பிகள் விழித்து கொண்டால் அவர் சோத்தில் மண் விழும் என்ற பயம். இந்த அப்பட்டமான பேச்சுரிமை மீறல், பொய் உரைத்தலை யூடியூப் எதுவும் செய்யவில்லை. இதுவே யாழ்களத்தில் எண்டால் உறுப்பினரே தோய்த்து தொங்க விட்டிருப்பார்கள். நிர்வாகம் செய்ய வேண்டியதை செய்திருக்கும். யாழில் கூட பலர் இப்போ இந்த மாதிரி பொய்களை, அரை பொய்களை, பிரச்சாரத்தை இணைக்க முடியாது என்பதால் தாம் எழுதுவதில்லை என கூறுவதை கண்டுள்ளேன். அவர்களுக்கு ஒரு ஆங்கில சொல்லாடல்தான் என் பதில். Good riddance to bad rubbish ! உங்கள் குப்பையை மஸ்கின், மார்க்கின் குப்பை தொட்டிகளில் போய் போதுமானளவு கொட்டி கொள்ளுங்கள்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இல்லை. சரி. இல்லை. இது. ஒரு. பகல். கொள்ளை. ஆனால். அவர். தன்னுடைய. நாட்டில். செய்வதை. நான். வெளிநாட்டவன். எப்படி. தடுக்கலாம். ? தமிழ் நாட்டு மக்கள் விரும்பி. கொடுத்தால். கொடுக்கதை. என்று. கூற. நான். யார். ? இல்ல. கொடுங்கள். என்றும். கூற. எனக்கு. உரிமையில்லை. ஆனால். இலங்கைத்தமிழனை. ஏமாற்றதை. நிதி. கோரதை. என்று. நான். கூறலாம். நிச்சயம்.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
நான்தான் உலக வல்லரசு என கொக்கரித்த, மற்றைய நாடுகளை அச்சுறுத்திய அமெரிக்காவின் முகத்திரை கிழிந்தது. ட்ரம்ப் சொல்லுவார், தனது திட்டம் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் என்று, எவ்வளவு காலம் தான் உயிரோடு இருப்பேனோ தெரியாது என்றும் சொன்னார். இன்று இரானியர்களையும் அவர்களது போர்த்திறமைகளையும் போற்றுகிறார். நெதன்யாகுவோ, எங்களின் இலக்குகளை அடையும் வரை போர் செய்வோம் என்றவர், விழுந்தவன் மீசையில மண் ஒட்ட வில்லையாம். ஈரானின் அச்சுறுத்தலுக்குரிய காரணிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்தது வெளியேறுகிறோம் என்கிறார். நெதென்யாகுவும் ட்ரம்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஈரானை அழிக்க ஒன்றுபட்டு புறப்பட்டவர்கள், வேறுபட்டு நிற்கிறார்கள். இந்தப்போரினால் ட்ரம்ப் உலக நாடுகளாலும் சொந்த மக்களாலும் கைவிடப்படுகிறார். நெதன்யாகுவின் பேராசை, பயம், அவரின் நாட்டுக்கும் அழிவை கொடுத்துள்ளது. ஈரான் இதை, சும்மா விடப்போவதில்லை. இனிமேற்தான் அது தனது பழிவாங்கலை தொடங்கும். அதை தாங்க ட்ரம்பும் நெதன்யாகுவும் தயாராக இருக்க வேண்டும். இனி அமெரிக்கா தலைக்கனம் காட்ட முடியாது. முட்டாள் ட்ரம்பால் அமெரிக்காவை எந்த நாடும் மதிக்காது, இனிமேல் நட்பு நாடுகளை நம்பி வலிச்சண்டைக்கு போகாது அமெரிக்கா. உண்மையிலேயே நட்பு நாடுகள் எடுத்த முடிவே சரியானது. நட்பு நாடுகள் எந்தச்சந்தர்ப்பத்தில் உதவி புரியும், சும்மா எதேச்சாதிகாரமாய் பிடிக்கும் சண்டைகளுக்கு எங்கள் வீரர்களை நாங்கள் இழக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இது கூட தெரியாத ட்ரம்ப், சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்படாதவர் உலக தலைவராம், அவர் எப்படி மற்றவர்களின் உதவியை மட்டும் எதிர்பார்க்கலாம்?
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
இதை சொன்னது பிரெஞ் நாட்டில் ஒரு இளவரசி. Qu’ils mangent de la brioche ஜோன் ஜேக்ஸ் ருசோ வின் புத்தகம் ஒன்றில் இப்படி ஒரு இளவரசி சொன்னதாக சொல்லபட்டுள்ளது. அதை மேரி அண்டெர்னைட் சொன்னார் என பிற்காலத்தில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. ஆனால் ருசோ இதை எழுதிய சமயம் மேரிக்கு 9 வயது. ஆகவே அவர் சொல்லி இருக்க வாய்பில்லை. சொல்லி இருந்தாலும் அது சிறுபிள்ளையின் பேச்சு. கருத்தாளருக்கும் தரவுகளுக்கும் உள்ள இடைவெளி எனக்குத்தெரியும். வாசகர் நன்மைக்காக எழுதியுள்ளேன். 👆😂 அடிச்சுத்தான் விடுறம் கொஞ்சம் ரியாலிட்டியோடு ஒத்து போகும் வண்ணம் - இந்தியாப்ப இல்லாவிடில் கிரிபத் சாப்பிடுங்கள் என சிரிமா சொன்னார் எண்டாவது அடிச்சு விட்டிருக்கலாம்😂.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அப்படி என்றால் இது திமுக, அதிமுகவுக்கும் பொருந்தும். முடிவு: ஒன்றில் சகல கட்சிகளும் சாதி பார்த்து சீட் கொடுக்கிறன அல்லது எந்த கட்சியிம் சாதி பார்த்து சீட் கொடுப்பதில்லை. அப்போ தமிழ் நாட்டில் கட்சிக்கு என நிதி திரட்டி அதில் அவர் தனிப்பட்டு சொத்து சுகம் காண்பதை நீங்கள் சரி என்கிறீர்களா?
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இவர்கள் உக்ரேனை வைத்து.... ரஷ்யாவுக்கு நொட்டினத்துக்கு, சீனனும், ரஷ்யனும்... ஈரானை வைத்து இஸ்ரேலுக்கும், அமெரிக்கனுக்கும் நொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 😂 ஒன்று எடுத்தால்... இரண்டு இலவசம் என்ற மாதிரி, துபாய், கட்டார், சவூதி அரேபியாவுக்கு இலவச சாத்துப்படியும் கிடைக்குது. 🤣 போதாக் குறைக்கு 5000 அமெரிக்க ராணுவத்தினர் வரும் செய்தியை கசிய விட்டுள்ளார்கள். 😂 ஈரானும்... பின்னுக்கு உள்ள மறை கரங்களும் இப்பவே போட்டுத்தள்ள ரெடியாகி இருப்பார்கள். 🤣 இதெல்லாம் தேவையா கோபால்.
- Today
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
சீனா 😎..... புதைகுழிக்குள் காலை வைத்துவிட்டார்கள், எப்படி எடுக்க போகின்றார்கள்☹️, கப்பலில் வரும் 5000 அமெரிக்க பாடை வீரர்களுக்கு முதலே 😭...
-
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது ; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கவிதரன்!
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது ; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கவிதரன்! 20 Mar, 2026 | 03:47 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு துறைசார்ந்த விரிவுரைகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு சிங்கள மாணவர்களை உள்ளடக்கி சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஒரு பாரதூரமான விடயமாக காணப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழர்களுடைய ஒரு மரபுரிமை சின்னம். தமிழர்களின் போராட்டத்தின் ஒரு அடையாள சின்னம். தமிழர்களின் பண்பாட்டு ஒரு காவலரண். இப்படியான பல்கலைக்கழகத்தில் மேற்குறித்த மோசமான செயற்பாடுகளிடமிருந்து. மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மாணவர்கள் மீது காட்டுகின்ற மாற்றம் இதுதானா? முன்னைய அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241475
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
இச்செய்தியை யாழ்கள ஆய்வாளர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய விரைவில் ஆஜர் ஆகின்றார்கள், கவலைப்படவேண்டாம் சகோதரா😁😁
-
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்! 20 Mar, 2026 | 03:16 PM எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழு எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்பாணம் வருகை தருவதாகவும் யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சி களின் தலைவர் களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/241470
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ,கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பிபிசி 20 மார்ச் 2026, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரான் உடனான போரில் அமெரிக்கா "திட்டமிட்டபடியும்", "இலக்கின் மீதும்" சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை வழங்கவில்லை. நேற்று செய்தியாளர்கள் வலியுறுத்திக் கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை." எனத் தெரிவித்தார். அமெரிக்கா தற்போது 7,000 இரானிய இலக்குகளைத் தாக்கியதாகக் கூறும் அவர், "படைகளுக்கு தாங்கள் எதை தாக்குகிறோம், ஏன் தாக்குகிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இருக்கிறது." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம் பூமிக்கு அடியில் இரானின் ஆயுதங்கள் பீட் ஹெக்செத் கூற்றுப்படி அமெரிக்கப் படைகளால் மட்டுமே 7,000 இரானிய இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன. குறிப்பிடத்தக்க விமானப்படை மற்றும் கடற்படை இல்லாத நிலையில், இந்த ஏவுகணைகளையும் டிரோன்களையும்தான் இரான் தன்னால் இயன்ற வழிகளில் பாதுகாக்க முயல்கிறது. இரானின் நிலப்பரப்பு மற்றும் பல தசாப்த கால திட்டமிடல் காரணமாக, இந்த ஆயுதங்களின் இருப்பு பூமிக்கு அடியில் ஆழமாக அல்லது உண்மையில் மலைகளின் பக்கவாட்டில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வது கடினம், எனவேதான் இந்த வாரம் பயன்படுத்தப்பட்ட 5,000 பவுண்ட் (2,270 கிலோ) எடை கொண்ட ஜிபியு-72 மேம்பட்ட ஆழமாக ஊடுருவி செல்லும் குண்டு உட்பட பல்வேறு வகையான பங்கர்-பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும் உற்பத்தி அழிக்கப்பட்டாலும் தொடரும் தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், "இரானின் முழு பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திறன், அந்த ஏவுகணைகளின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கும் ஒவ்வொரு நிறுவனமும், செயல்பாட்டு ரீதியாக வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. இரான் முழுவதும் உள்ள கட்டடங்கள், வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திக் கூடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன," என்றார். இந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் நிறுத்தப்பட்டாலும், எஞ்சியிருப்பவை இன்னும் ஏவப்படுவது தெளிவாகத் தெரிகிறது. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,பங்கர்-பஸ்டர் குண்டு எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் தகவல்கள் மற்றும் விமானங்கள் மூலம், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களை "தேடிக் கண்டுபிடித்து அழிப்பதிலும் கவனம் செலுத்தும். 1991-ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில், இஸ்ரேலை அச்சுறுத்திக் கொண்டிருந்த சதாம் உசைனின் ஸ்கட் ஏவுகணைகளை அழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையின் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் மற்றும் எஃப்-16 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தப் பணிகள் 'ஸ்கட் ஹண்டிங்' என்று அழைக்கப்பட்டன. அதே உத்திகள் இன்றும் இரானில் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல் 2021-இல் பரிசோதிக்கப்பட்ட குண்டு 2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட ஜிபியு-72 குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது. ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86n3l35e1o
-
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை - நேரலை
ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமைக்கான காரணம் - ஜனாதிபதி Mar 20, 2026 - 11:46 AM UPDATE - ஏப்ரலில் 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட கேள்விக் கோரலின் அடிப்படையில், ஏப்ரல் 6 அல்லது 7ஆம் திகதிகளில் டீசல் கப்பலும், ஏப்ரல் 16 அல்லது 17ஆம் திகதிகளில் பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையும் என ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் ஏப்ரல் 12 அல்லது 13ஆம் திகதிகளில் மசகு எண்ணெய் கப்பலும், ஏப்ரல் 10 அல்லது 11ஆம் திகதிகளில் விமானங்களுக்கான ஜெட் ஏ-1 (Jet A-1) எரிபொருள் கப்பலும் நாட்டை வந்தடையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரேரணையை முன்வைத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதிக்கான கேள்வி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைமையைப் பேணுவதன் மூலமே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, எவ்வித அழுத்தங்கள் மத்தியிலும் இந்த நடுநிலைமை நழுவிப்போக இடமளிக்க மாட்டோம். ஆனால், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை நான் அறிவேன். நாம் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்றும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்பது போன்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஈரானிய கப்பல்கள் குறித்த பிரச்சினை. குறிப்பாக, 2026 பிப்ரவரி 26 ஆம் திகதி எம்மிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக இலங்கைக்கு வர விரும்புவதாகவும் எம்மிடம் கோரப்பட்டது. மார்ச் மாதத்தின் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் அந்த அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே நாள் மாலை ஐக்கிய அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன்வைத்தது. தமது நாட்டிற்கு அருகில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரினார்கள். எமது மேசை மீது இரண்டு ஆவணங்கள் இருந்தன. ஒன்று ஈரான் விடுத்த கோரிக்கை - மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தமது கடற்படைக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. மறுபுறம் ஐக்கிய அமெரிக்கா விடுத்த கோரிக்கை - தமது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் எமது மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தது. நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? நாம் மிகத் தெளிவான ஒரு முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் குறித்த சமிக்ஞைகள் ஏற்கனவே தோன்றியிருந்தன. நாம் அந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை. நான் இங்கே கேட்கிறேன், ஏன் ஈரானிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கவில்லை என வினவப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? எமது ஒட்டுமொத்த நடுநிலைமையும் நழுவிப்போயிருக்கும். நாம் ஒரு தரப்பிற்குச் சார்பாகச் செயற்பட்டிருப்போம். இல்லையெனில் நாம் மற்றைய தரப்பிற்கும் இடமளிக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் உள்ள அந்தப் போர் மோதலானது மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை. அத்தகைய அழுத்தங்கள் மத்தியிலும் அந்த நடுநிலைமை கொள்கையை பாதுகாத்துள்ளோம். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்சமயம் பாராளுமன்றத்திற்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தி வருகின்றார். சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகைத் தந்த அவர், ஈரான் கப்பல் நாட்டிற்குள் உடனடியாக அனுமதிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் இதன்போது தௌிவுப்படுத்தியுள்ளார். அத்துடன் தற்போது நிலவி வரும் போர்ச்சூழலில் இலங்கை நடுநிலை வகிப்பது குறித்தும் அவர் தமது உரையில் குறிப்பிடுகின்றார். https://adaderanatamil.lk/news/cmmyi714o000c356pe2qqi7ed
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம்
இலங்கையில் புதிப்பிக்கத்தக்க சக்திவள மேம்பாட்டுக்கு நோர்வே ஆதரவு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 12:23 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கையில் புதிப்பிக்கத்தக்க சக்திவளங்களை மேம்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. கடந்த புதன்கிழமை (18) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நோர்வே தூதவர் ஸ்டர்ல் ஹரால்ட் பெடர்சன் இவ்வாறு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலின் போது காற்று, கடல் மற்றும் சூரியசக்தி உள்ளிட்ட புதிப்பிக்கத்தக்க சக்திவளங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு திட்ட முன்மொழிவு நீர்பாசனத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. மேலும், விவசாயத் துறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, விவசாய கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்யும் வாய்ப்புகள் குறித்து நோர்வே ஆர்வம் காட்டியுள்ளது. அத்துடன், அத்தகைய வளங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு எரிவாயு உற்பத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட விருப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பகல் நேரங்களில் உற்பத்தியாகும் கூடுதல் சூரிய ஆற்றலை மின்பகுப்பாய்வு முறையின் மூலம் ஹைட்ரஜனாக மாற்றி, அதை எதிர்கால எரிபொருளாக பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புதிப்பிக்கத்தக்க சக்திவளங்கள் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிவதில் நோர்வே அரசாங்கம் அதீத ஈடுபாடு கொண்டுள்ளதாக பெடர்சன் தெரிவித்துள்ளதோடு புதிப்பிக்கத்தக்க சக்திவள மேம்படுத்தலுக்கான பல்தரப்பட்ட ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/241452
-
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் Mar 20, 2026 - 12:50 PM தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றனர். அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன. ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் வளைகுடா நாடுகள் ஈரானின் கோபத்திற்கு இலக்குகளாக மாறியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதான தமது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார். எனினும் தமது இழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmyki9ck000d356p5viigs0g
-
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை - நேரலை
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை - நேரலை Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 12:14 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகிறன்றார். https://www.virakesari.lk/article/241451
-
சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?
சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சென்னையில் சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "இந்த மாதிரி திருமணம் செய்வதை என்னால் ஊக்குவிக்க முடியாது, இதை நான் பதிவு செய்யமாட்டேன்," என திருமணத்தை பதிவு செய்ய சென்றபோது விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத் கூறியதாக தெரிவிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன். சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவு நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி, "ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை" எனக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? பதிவு மறுக்க சொல்லப்பட்ட காரணம் என்ன? செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உஷா ஆகிய இருவருக்கும் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அதனை பதிவு செய்ய அந்த பகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 23-ஆம் தேதி நேரில் சென்றனர். உரிய ஆவணங்களோடு அணுகிய போதும் அவர்களது திருமணத்தை ஏற்க சார்பதிவாளர் மறுத்ததாக வேல்முருகன் குற்றம் சாட்டுகிறார். திருமணம் மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டபோது இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம் என எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். "அதில் திருமணம் நடைபெற்ற இடத்தின் முகவரியில் குழப்பம் மற்றும் திருமணத்தை தலைமையேற்றவரின் கையொப்பம் இல்லை என்று குறிப்பிடப்பட்டது," என்கிறார் வேல்முருகன். இந்தப் பதிவு மறுக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. 'ஆவணங்களைக் காட்டிய பிறகு ஏற்கவில்லை' படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன். "ஒவ்வொரு முறையும் சீர்திருத்தத் திருமணங்களைப் பதிவு செய்யும்போது போராட வேண்டியுள்ளது" என்கிறார் திருமணத்தை முன்னின்று நடத்திய வேல்முருகன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத் திருமணத்தின் பதிவு முறைகளை மட்டுப்படுத்தும் வகையில் சார் பதிவாளரின் அணுகுமுறை உள்ளது." என குற்றம் சாட்டினார். "திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்தது குறித்து கேள்வி எழுப்பிய போது 'இது போன்ற திருமணங்களை நான் ஊக்குவிப்பது இல்லை' எனப் பதிலளித்தார். மறுப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கேட்ட போது 'திருமணம் நடந்த இடம் எங்கள் எல்லைக்குள் இல்லை' என்று கூறினார்" என வேல் முருகன் தெரிவித்தார். 2025-ஆம் ஆண்டில் தங்களது கட்சி அலுவலகத்தில் 6 சீர்திருத்த திருமணங்கள் நடத்தப்பட்டு இதே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிடுகிறார் வேல்முருகன். மேலும், "விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஆவணங்களையும், எங்கள் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலிகிராமம் பகுதி விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்டது என்பதற்கான ஆவணங்களையும் காட்டிய பிறகும் அதனை அவர் ஏற்கவில்லை" என்றார். திருமணத்தை பதிய மறுத்தது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்து 20 நாட்கள் ஆனதாக குறிப்பிடும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கிறார். மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சீர்திருத்த திருமணம் நிராகரிக்கப்பட்டதற்கு "கட்சி அலுவலக முகவரி முக்கிய காரணம்" என்று கூறியது குறித்து விளக்கம் பெற விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத்-ஐ பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "இந்த விவகாரம் பற்றி எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் அந்த திருமணத்தை பதிவு செய்ய மாவட்ட பதிவாளர் அனுமதி கொடுத்துவிட்டார்" என்று அவர் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான தகவல் தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்கிறார் வேல்முருகன். இருப்பினும், தொடக்க நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரவீந்திரநாத் பதிலளிக்கவில்லை. "திருமண பதிவில் தவறு ஏற்பட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது நாங்கள் தான்" என்கிறார் பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த புகாரில் களத்திற்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டு நிலையை தெரிந்துகொண்டோம். அதில் கோடம்பாக்கம், விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகங்கள் அருகருகே இருப்பதும், மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் அமைவிடம் 'சாலிகிராமம்' என்று குறிப்பிடப்படாமல் இருப்பதும் தான் பிரச்னைக்கு காரணம் என்பதை தெரிந்துகொண்டோம்." என்றார். "இனி வரும் காலங்களில் அந்த அலுவலகத்தில் இருந்து வரும் அனைத்து திருமணங்களையும் பரிசீலித்து பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார் அவர். மேலும், "இந்த திருமண பதிவில் சம்மந்தப்பட்ட இணையர் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் திருமணம் நடத்தப்பட்ட இடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற இறுதி வாய்ப்பில் அவர்கள் இருந்தனர், ஆனால் அதற்குரிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டியது எங்கள் கடமை, அதில் தவறு ஏற்பட்டால் அந்தப் பதிவை மேற்கொண்ட சார் பதிவாளர் பின்னாளில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்" என்று அவர் கூறினார். சார் பதிவாளரின் அணுகுமுறை குறித்த வேல்முருகனின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பதிவாளர் சுடரொளி, "பெற்றோர் இல்லாமல் நடத்தப்படும் திருமணங்களில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் சிறிய அளவிலும் பிரச்னை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சார் பதிவாளர் சொன்னதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டிருப்பார்கள்" எனத் தெரிவித்தார். ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அவர் விளக்கமளித்தார். சீர்திருத்த திருமணத்தை சார் பதிவாளரால் நிராகரிக்க முடியுமா? படக்குறிப்பு,முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார். "நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதை எவராலும் தடுக்க முடியாது" என்கிறார் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீர்திருத்தத் திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகத்தை நாடுவோர், இந்து திருமணச்சட்டப்படி உள்ள படிவத்தில் பிரிவு 7 (அ) எனக் குறிப்பிட்டு உரிய ஆவணங்களை மட்டும் வழங்கினால் போதுமானது" என்றார். மேலும், "கட்டாய திருமணம், கடத்தல் திருமணம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் திருமணங்களின் போது ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள் யாரேனும் ஒருவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் வழங்கும் அறிவுரைகளைக் காரணம் காட்டி சில சார் பதிவாளர்கள் திருமணங்களைப் பதிவு செய்ய தடை விதிக்கிறார்கள், இது தவறான அணுகுமுறை." என்று தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட வழக்கில் மணமக்களின் பெற்றோர் குறித்து சார்பதிவாளர் எதுவும் குறிப்பிட்டதாக புகார் இல்லை. "ஒரு சீர்திருத்த திருமணம் பதிவு செய்வது மறுக்கப்பட்டால், அந்த சார் பதிவாளர் மீது மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். அதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் பதிவுத்துறை துணை தலைவர் அல்லது தலைவரை அணுகலாம், அவர் செய்தது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார். சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? சீர்திருத்த திருமணம் அல்லது சுயமரியாதை திருமணம் என்பது மதம் மற்றும் சாதி சடங்குகளைக் கடந்து மணமக்கள் மற்றும் சாட்சியங்களை மட்டும் வைத்து எளிய முறையில் நடத்தப்படுகிறது. 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச்சட்டம், 1967-இல் தமிழ்நாடு அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதில் பிரிவு 7 (அ) சேர்க்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி தம்பதிகள் மாலை மாற்றிக்கொள்வது, உறுதி மொழி ஏற்பது, தாலி கட்டிக்கொள்வது என மூன்று வழிமுறைகளில் ஒன்றோ அல்லது மூன்றையும் பின்பற்றி சீர்திருத்த திருமணம் செய்துக்கொள்ளலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுயமரியாதை திருமணம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? "சுயமரியாதை திருமணத்தைப் பதிவு செய்ய பதிவுத்துறையை நாடும்போது சிலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு சாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இரமேசு பெரியார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "கொள்கையால் ஈர்க்கப்படுபவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மட்டுமே சீர்திருத்த திருமணத்தை நோக்கிச் செல்கின்றனர், ஆனால் பெற்றோர் வரவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி பல இடங்களில் பதிவு மறுக்கப்படுகிறது" என்றார். "தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் விதி 7-இல் சார் பதிவாளர் மனநிறைவு அடையாவிட்டால் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போலி திருமணங்களை தடுப்பதற்காக வழங்கப்பட்ட அதிகாரங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்" என்கிறார் வழக்கறிஞர் இரமேசு பெரியார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cje42kk8y2no
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
நாங்கள் நம்பீட்டம். 😁 இஸ்ரேலின் கதையை நம்பாதவன்… இரத்தம் கக்கி சாவான். 😂
-
முவாய் தாய் உலக சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு 3 தங்கம்
முவாய் தாய் உலக சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு 3 தங்கம்: நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! 20 Mar, 2026 | 04:04 PM தாய்லாந்தில் நடைபெற்ற 7ஆவது 'முவாய் தாய்' உலக சம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 5 வெற்றிக் கிண்ணங்களைச் (சம்பியன் பட்டிகள்) சுவீகரித்த இலங்கை வீரர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை நாடு திரும்பினர்.Geographic Reference தாய்லாந்து முவாய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, அந்நாட்டின் பட்டாயா நகரில் கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 11 வயதுடைய செஹாஸ் அகிசா, 10-11 வயதுப் பிரிவில் உலகச் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இந்தப் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் தேசியச் சம்பியனாகவும், கடந்த ஆண்டின் சிறந்த வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், 14-15 வயதுப் பிரிவில் போட்டியிட்ட டில்லன் ஜூலியன் தனது பிரிவில் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்தார். மேலும், தினெல் ஷமிக்க, இயன் அனுஹாஸ் மற்றும் இசுரு அமில ஆகியோரும் தமது திறமைகளை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிப் பதக்கங்களுடன் இன்று காலை நாடு திரும்பிய இந்த ஐவரையும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை முவாய் தாய் சங்க அதிகாரிகள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். https://www.virakesari.lk/article/241464
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளார் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 02:59 PM ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241466
-
மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது
மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது Mar 20, 2026 - 06:40 AM ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் முன்மொழிவோம். நிறுவனங்கள் நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழி முறைகளை நோக்கி நகர்வதற்கு உதவும் முதலீடுகள் மூலம், தொழில்துறைக்கு நிதி உதவியை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்னிருந்த நிலையை விட, தற்போது ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையானது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmy7a7ei0001356p6zcrngn1
-
பயணிகளை இடைநடுவில் இறக்கிய தனியார் பேருந்துக்கு மூன்று நாள் சேவைத் தடை
உங்கள் சேவை நாட்டிற்கு தேவை.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
உண்மையில் இது எனக்கு கொஞ்சமும் விளங்கி கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கின்றது. பொய்கள் போலிகளை கேட்டு சந்தோசபடுவது ஏன் என்பது விளங்கி கொள்ள முடியாதது தான். இது பற்றி நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டது இவர்கள் இராமன் பெரியவனா இராவணன் பெரியவனா சீதையா இப்படியான கற்பனைகளை கேட்பதில் அலாதியான விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர். இப்போது இவர்களுக்கு ரஷ்யா ஈரான் வட கொரியா. மேற்குலக நாடுகளில் இவர்கள் மிகவும் வசதியான சுதந்திரமான பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொண்டு இப்படியான யுரியுப்புகளை கேட்டு சந்தேசபடுகின்றார்கள். இப்படியான தமிழ்யுரியுப்பர்கள் காட்டில் பண மழை. கவனித்தீர்களா தமிழ் அடியான் யுரியுப்பர் இவர்களை சந்தோசபடுத்துவதற்காக பொய் செய்தி தயாரிக்கின்றார் அதை ரஞ்சித் அண்ணா சுட்டிகாட்டி எழுதிய கருத்தையே தமிழ் அடியான் நீக்கிவிட்டார்.
-
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
மொக்கு அமெரிவுக்கு தெரியவில்லை, இஸ்ரேலின் உள் திட்டம், அமெரிக்காவும் அழியவேண்டும், மதிக்கிழக்கில் அமேரிக்கா எந்த செல்வாக்கும் செலுத்த முடியாத அளவுக்கு என்பது அறப்படித்த அமெரிக்கா. உலகத்தில் மூலை முடுக்கில் நடப்பதை அறிய திறன்களும் , வசதிகளும் இருந்தும், இஸ்ரயேலின் உல் திட்டத்தை உணராமல், இஸ்ரேல் ஆக்கிய கூல் பானைக்குள் விழுந்து விட்டது.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
@goshan_che நான் வடகொரியாவுக்கு ஒன்று ரஷ்யாவுக்கு ஒன்று விண்ணப்பம் அனுப்பி வைக்கட்டுமா