Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா? Photo, Anura Kumara Dissanayake fb page வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது. ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட வேண்டும்; மக்கள் பங்கேற்பின் மூலம் இணக்கப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். அத்துடன், காலாவதியான அடக்குமுறை நடவடிக்கைகளை விட, பரஸ்பர செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் பலவந்தமான நடவடிக்கைகள் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் அதேவேளை, மக்கள் இணக்கப்பாடும் பொறுப்புக்கூறலும் மாத்திரமே ஸ்திரத்தன்மையை பெற்றுத்தரும். 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA – 1979) நீக்குவதாக உறுதியளித்தது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் “A Thriving Nation, A Beautiful Life” என்ற ஆங்கிலப் பிரதியின் 129ஆம் பக்கத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துதல்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த குறிப்பிட்ட வாக்குறுதியை சிங்களப் பிரதியில் காண முடியவில்லை. இது தேசிய மக்கள் சக்தியும் அதன் சட்டக் குழுவும் விளக்கமளிக்க வேண்டிய ஒரு முரண்பாடாகும். இருப்பினும், இரண்டு பிரதிகளுமே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி குறிப்பிடுகின்றன. கடந்த 45 ஆண்டுகளாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பல இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. இது பொதுமக்களின் எதிர்ப்பு, அரசியல் இடையூறுகள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை ‘அறிவிக்கப்படாத பயங்கரவாதச் செயல்களாக்க்’ கருதுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமலேயே, முந்தைய அரசாங்கங்கள் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பரந்த பயங்கரவாத எதிர்ப்பு விதிகள் சிவில் சமூகத்தின் கண்காணிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, அதிகாரப்பூர்வ ஊழலுக்கு வழிவகுக்கின்றன என்பதை அங்கீகரித்து, சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி (JVP), தனது ஆரம்பகால கொள்கை பிரகடனத்தின் ‘அரசின் கட்டமைப்பு’ எனும் 14ஆவது பிரிவின் கீழ், அடக்குமுறை சட்டங்களை முழுமையாக ஒழிப்பதாக உறுதியளித்தது. இந்த அருவருப்பான சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அபாயகரமான சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எளிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு முற்போக்கான அரசாங்கம், போர் மற்றும் ஆயுத மோதல்களின் வடுக்களைக் கையாண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவே ஒரே வழியாகும். வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குதல் “தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தற்போது தனது தேர்தல் நேர்மை குறித்த ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்கிறது. NPP அளித்த பொருளாதார வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியால் இயற்றப்பட்ட சட்டங்கள், எதிர்கால அரசாங்கங்களை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைக் கட்டமைப்பிற்குள் பிணைத்துள்ளமை இதற்கு ஒரு காரணமாகும் (கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக NPP அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற போதிலும்). மேலும், பல்வேறு அரசியல் அபிலாஷைகள் மற்றும் ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் சில வாக்குறுதிகளின் முன்னுரிமைகள் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழல்களால் அல்லது வேறு காரணங்களால், நீண்ட காத்திருப்போ அல்லது பெரும் வளங்களோ தேவைப்படாத சில முக்கியமான விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியது போல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) தொடர்வதற்கோ அல்லது அதற்குப் பதிலாக வேறொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கோ எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து ஆட்சிக்கு வந்த பின்னர், அரச அடக்குமுறையின் தொடர்ச்சியான கருவியாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வேறு வடிவத்தில் வைத்திருப்பதற்குத் தேவையான புதிதாக எதையாவது NPP கண்டறிந்துள்ளதா? எதுவாக இருந்தாலும், இது தேர்தல் வாக்குறுதி அல்ல. PTA வை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்பதே தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்த தெளிவான புரிதலாகும். பயங்கரவாதத் தாக்குதல்களைக் கையாளுவதற்குப் பதிலாக, சமூக – பொருளாதார அல்லது தேசிய ரீதியான குறைகளுக்குத் தீர்வு தேடுபவர்களுக்கு எதிராக பாரிய அளவில் அரச பயங்கரவாதத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இச்சட்டம் பங்களிப்பு செய்துள்ளதாக இதனை ஒழிப்பதற்காகக் குரல் கொடுத்தவர்கள் நம்பியிருந்தனர். காரணம் எதுவாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தான் ஒரு காலத்தில் எதிர்ப்புத் தெரிவித்த, முந்தைய அனைத்து அரசாங்கங்களின் பாதையையே பின்பற்றி, தற்போது தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது போல் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்குப் பதிலாக, சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளைப் பின்பற்றி, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சட்டக் கட்டமைப்பைப் பரிந்துரைக்க அரசாங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இருக்கும் நிலையில், அரசாங்கம் இந்தச் சட்டத்தை நேரடியாக ரத்து செய்திருக்க வேண்டும். சர்வதேச சூழல் சர்வதேச அளவில், பயங்கரவாதத்திலிருந்து அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், பெரும்பாலும் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு, அதே உரிமைகளை மீறுவதோடு அவற்றைச் சீர்குலைக்கவும் செய்கின்றன. காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை இதற்குச் சிறந்த சமகால உதாரணமாகும். பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு, தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் மற்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். ஆனால், நெதன்யாகுவின் பயங்கரவாதப் பிரச்சாரங்களை ஆதரிப்பவர்கள் எவ்வித விளைவுகளையும் எதிர்கொள்வதில்லை. ஆஸ்திரேலியாவில், ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது யூதர்கள் மீது நடாத்தப்பட்ட போண்டி பீச் (Bondi Beach) தாக்குதலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் மற்றும் மறைமுக சியோனிச சக்திகளின் அழுத்தத்தினால், சியோனிசம் மற்றும் நெதன்யாகுவின் பயங்கரவாத ஆட்சியை விமர்சிப்பவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அடக்குமுறை நடவடிக்கைகளை விட ஆலோசனை மற்றும் உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவது, அமைதியான முறையில் மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய தூணாகக் கருதப்படுகிறது. இதுவே நிலையான உறுதிப்பாட்டை வளர்ப்பதோடு, அடிப்படை சமூக – பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. அடக்குமுறைச் சட்டங்களை இயற்றுவதும் செயல்படுத்துவதும், இன்னும் கடுமையான சட்டங்களுக்கான தேவையையே உருவாக்குகின்றன. இது இறுதியில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போன்ற வெடிப்புச் சூழல்களுக்கே வழிவகுக்கின்றன. ஏனெனில், இத்தகைய சட்டங்கள் எப்போதும் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாடு ஆகிய நோக்கங்களுடனேயே உருவாக்கப்படுகின்றன. சமூகச் சுமைகளைக் களைவதும், வடுக்களைக் குணப்படுத்துவதும், பாலங்களை உருவாக்குவதுமே முற்போக்கான சமூகங்களுக்கான சிறந்த மாற்றாக எப்போதும் இருந்து வந்துள்ளன. அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA) இந்தச் சூழலில்தான், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமான ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை’ (PSTA) நாம் பரிசீலிக்க வேண்டும். தற்போது பரிசீலனையில் உள்ள மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள இந்த PSTA, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாக முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், PTA-வில் உள்ள மிகவும் கவலைக்குரிய அம்சங்களையும், முந்தைய அரசாங்கங்கள் 2018 இல் வர்த்தமானியில் வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) மற்றும் 2023 மார்ச் மற்றும் செப்டெம்பரில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) ஆகியவற்றின் கீழ் கொண்டுவர விரும்பிய விதிகளையும் இது அப்படியே கொண்டுள்ளது. CTA மற்றும் ATA ஆகிய இரண்டு சட்டமூலங்களுமே பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானதுடன், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய PSTA சட்டமூலமானது தேசிய மக்கள் சக்தி (NPP) மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதிபலிக்கவில்லை. பரந்த வரைவிலக்கணம் ஒரு பயங்கரவாதச் சூழலை உருவாக்குதல், பொதுமக்களை அச்சுறுத்துதல், இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்குமாறு வற்புறுத்துதல் அல்லது போரை பிரசாரம் செய்தல் அல்லது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை மீறுதல் போன்ற நோக்கங்களுடன் திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களைப் ‘பயங்கரவாதக் குற்றம்’ என PSTA சட்டமூலம் வரைவிலக்கணப்படுத்துகிறது. முன்னரைப் போலவே, இந்த வரைவிலக்கணம் இப்போதும் ஆபத்தான முறையில் மிகப்பரந்ததாகவே உள்ளது. தற்போதைய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கமும், நியாயமான பொது மக்கள் போராட்டங்கள், சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகளைப் ‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்த இதைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, ‘அரசாங்கத்தை வற்புறுத்தும்’ நோக்கம் ஒரு பயங்கரவாதக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பயங்கரவாதமாகக் கருதப்படாது என்று ஒரு விலக்கு நிபந்தனை இருந்தபோதிலும், இந்த அரசாங்கமோ அல்லது எதிர்கால அரசாங்கங்களோ பொதுப் போராட்டங்களைப் பயங்கரவாதச் செயல்களாக முத்திரை குத்தக்கூடிய அபாயம் இன்னும் நீடிக்கவே செய்கிறது. விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைத்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதன் மூலம், பொலிஸ் மா அதிபர் எவரையும் தடுத்து வைக்க முடியும். ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு, பின்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு வரை இதை நீடிக்க முடியும். இது நீதித்துறை மேற்பார்வை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இத்தகைய உத்தரவு அமுலில் இருக்கும்போது, ஒரு நீதவானால் பிணை வழங்கவோ அல்லது சந்தேக நபரை விடுதலை செய்யவோ முடியாது. மேலும், ‘நியாயமான சந்தேகத்தின்’ அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் பொருட்களைக் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு இந்த சட்டமூலம் அதிகாரத்தை வழங்குகிறது. 1971 மற்றும் 1988-89 காலப்பகுதிகளில் இத்தகைய சட்டம் இருந்திருந்தால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும். நீதித்துறை மேற்பார்வை, மனிதாபிமான முறையிலான தடுப்புக்காவல் நிபந்தனைகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுதல், தனிமனித ரகசியங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் வந்து பார்ப்பதற்கான உரிமைகள் போன்ற சில ஏற்பாடுகள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகின்றன. ஆனால் யதார்த்தத்தில், இத்தகைய பாதுகாப்புகளைப் பெற்றுக்கொள்வது கடினமானதாகும். அதிகார துஷ்பிரயோகம் குறித்து மீளாய்வு செய்ய உயர் நீதிமன்றத்தை நாடுவது என்பது எளிதான அல்லது மலிவான காரியம் அல்ல. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி அதிகாரங்கள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தாமல், வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை உத்தரவுகள் மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவொரு இடத்தையும் “தடைசெய்யப்பட்ட பகுதி” என அறிவிக்க முடியும். அவ்வாறான இடத்தில் புகைப்படம் எடுப்பது அல்லது காணொளி எடுப்பது கூட மூன்று வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக மாறும். ‘வழக்குத் தொடர்வதைத் தள்ளிவைத்தல்’ எனும் விதியின் கீழ், ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் ‘புனர்வாழ்வு’ அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கும் ஏற்பாடுகள் ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன; இது அடக்குமுறையை நுட்பமான முறையில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு சந்தேக நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்று ஒப்புக்கொண்டு, அவரை ஒரு ‘புனர்வாழ்வு’ திட்டத்திற்கு அனுப்ப சட்டமா அதிபரால் முடியும். கடுமையான தண்டனைகளும் கண்காணிப்பும் அரசாங்கம் வரைவிலக்கணப்படுத்துவது போன்ற ஒரு “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புகளைப் பேணுதல் அல்லது அரசாங்கம் அர்த்தப்படுத்துவது போன்ற “பயங்கரவாதப் பிரசுரங்களைப் பரப்புதல்” ஆகியவற்றுக்காக, ஒரு நபருக்கு மேல் நீதிமன்ற விசாரணையின் பின்னர் இருபது ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் 15 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நேரடி அல்லது மறைமுக நோக்கத்துடன் ‘கவனக்குறைவாக’ ஒரு அறிக்கையை விநியோகிப்பது உட்பட, எந்தவொரு பிரசுரத்தையும் விநியோகிப்பது, விற்பனை செய்வது அல்லது வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் சுதந்திரத்திற்கும் தனிமனித இரகசியத்திற்கும் (Privacy) கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. 11ஆவது சரத்து சில விதிவிலக்குகளை வழங்கிய போதிலும், கைதுகளை மேற்கொள்ளும் போது பொலிஸார் இத்தகைய விதிவிலக்குகளைப் புறக்கணிக்கும் விதத்தைக் கருத்தில் கொண்டால், இது நடைமுறையில் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியும். இந்தச் சட்டமூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. Encrypted செய்யப்பட்ட டிஜிட்டல் தொடர்புகள் உட்பட எந்தவொரு தொடர்பாடலையும் இடையில் மறித்து அதன் குறியீடுகளை நீக்க (Decryption) முடியும். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பலவீனமான தன்மையை நன்கு அறிந்த நிலையில், கைது செய்யப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்து அறிவிப்பதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தை எவ்வாறு தடுக்க முடியும் என்பது ஒரு நியாயமான கேள்வியாகவே உள்ளது. சிவில் நடவடிக்கைகளைக் குற்றமாக்குதல் கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்திருந்தால், தற்போது ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினரால் ஏப்ரல் அல்லது நவம்பர் மாதங்களில் நினைவுகூரப்படும் “வீரர்களை” கொண்டாடும் எவரும் இந்த ஏற்பாடுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். பரந்த வரைவிலக்கணங்கள் மூலம் தற்செயலாகவே சட்டபூர்வமான சிவில் நடவடிக்கைகள், ஊடகவியல் மற்றும் பொதுக் கலந்துரையாடல்கள் குற்றமாக்கப்படலாம் என்பதே பிரதான கவலையாக உள்ளது. புதிய சட்டமூலத்தின் கீழ், போராட்டத்தில் ஈடுபடும் நபர்களின் புகைப்படத்தைப் பிரசுரிக்கும் ஒருவர் கூட பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படலாம். 78ஆவது சரத்தானது மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணமாக உள்ளது. அதன்படி, “நம்பகமான தகவல்” என்பது ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சாதாரண செயற்பாடுகளைக் கூடக் குறிக்கலாம். அத்தகைய நடவடிக்கைகள் பாரிய குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படலாம். கட்டாயத் தகவல் வழங்கலும் நாட்டின் எல்லைக்கு அப்பாலான விரிவாக்கமும் சட்டமூலத்தின் 15ஆவது சரத்தானது, பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் அளிப்பதைக் கட்டாயமாக்குகிறது; இதனை மீறுபவர்கள் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். நீதியை எதிர்பார்க்கும் மக்கள் மீது, குறிப்பாகப் பெரும்பான்மையினத்தைச் சேராத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்த ஏற்பாடுகள் கொடூரமான முறையில் பயன்படுத்தப்படுமா? தகவல் பெறுபவர்களைக் கூட அரசாங்கத்தின் உளவாளிகளாக மாறும்படி இது வற்புறுத்தக்கூடும். அதுமட்டுமன்றி, இந்தச் சட்டமூலமானது இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைகிறது. பிரிவு 2(c)-இன் படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்பது தெளிவாகிறது. தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புலம்பெயர் சமூகங்களுக்கு எதிராக PSTA ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, வெளிநாட்டில் இருந்து சமூக ஊடகங்களில் இலங்கையின் நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது கூட சட்டவிரோதமான செயலாக மாறக்கூடும். முடிவுரை மக்களை அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களைத் துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி துல்லியமாக வரையறுக்கத் தவறியதன் மூலம், PTA, CTA மற்றும் ATA ஆகியவற்றில் இருந்த அதே சிக்கல்களையும் குறைபாடுகளையும் PSTA-வும் கொண்டுள்ளது. இதில் உள்ள விதிவிலக்கு சரத்துகள், ஏனைய வரையறைகளுடன் (அரசாங்கத்தை வற்புறுத்துதல் போன்றவை) முரண்படுவதோடு, நடைமுறைச் செயல்பாட்டின் போது அவை வலுவிழந்து போகும் அபாயத்தையும் கொண்டுள்ளன. இந்தச் சட்டமூலத்தின் தலைப்பு அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதன் நோக்கம் அரசாங்கத்தையும் அதன் மூலம் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியையும் பாதுகாப்பதாகும். சிவிலியன்களுக்கு எதிரான வன்முறைகளைப் பிரயோகித்தல் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு இதில் இல்லை. பல ஏற்பாடுகள் இந்த நோக்கங்களைச் சிதைக்கின்றன. அந்த ஏற்பாடுகள் நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலில் இருந்து சுதந்திரம் பெறுதல் உள்ளிட்ட அரசியலமைப்பிலும் சர்வதேச மனித உரிமை ஆவணங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது. PTA சட்டத்தைப் போலவே, PSTA சட்டமும் ஜனாதிபதி, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு போதிய ஆதாரங்கள் இன்றி நபர்களைத் தடுத்து வைக்கவும், தெளிவற்ற முறையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட பேச்சுகளைக் குற்றமாக்கவும், முறையான நீதித்துறை மேற்பார்வையின்றி கூட்டங்கள் மற்றும் அமைப்புகளைத் தன்னிச்சையாகத் தடை செய்யவும் விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. இது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துகிறது; அத்துடன், பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமையைக் கட்டுப்படுத்துவதோடு, பிடியாணை இன்றி எவரையும் நிறுத்தவும், விசாரணை செய்யவும், சோதனையிடவும் மற்றும் கைதுசெய்யவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அனுமதி அளிக்கிறது. மேலும், எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாத நபர்கள் மீது ‘சுயவிருப்பின் பேரில்’ மேற்கொள்ளப்படும் ‘புனர்வாழ்வை’ திணிக்க சட்டமா அதிபருக்கு இது அதிகாரம் அளிக்கிறது. இந்தத் திட்டமிடப்பட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், NPP அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்வதாக வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளது அல்லது அது வழிதவறிச் சென்றுள்ளது. முன்னைய PTA சட்டத்தைப் போலவே, இந்தப் புதிய சட்டமூலமும் சிவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம். NPP கட்சியானது, எதிர்க்கட்சியில் இருந்த பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரச அடக்குமுறையின் ஒரு தொடர்ச்சியான கருவியாக வேறு வடிவில் வைத்திருப்பதை நியாயப்படுத்தும் வகையில் புதிதாக எதனையாவது கண்டறிந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தமக்குக் கிடைத்த தேர்தல் ஆதரவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் PTA சட்டத்தைத் திருத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஒரு குழுவை நியமிப்பதற்குப் பதிலாக, அதனை முழுமையாக ரத்துச் செய்திருக்க வேண்டும். மக்கள் விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்த்தனர். காலம் கடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக NPP கொண்டுள்ள அர்ப்பணிப்பு இப்போது சோதனைக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தமது பாதையிலிருந்து வழிதவறிச் சென்றுள்ளனரா என்பதற்கான விடை, அவர்கள் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளின் மூலமே தீர்மானிக்கப்படும். லயனல் போபகே https://maatram.org/articles/12519
  3. சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன் December 31, 2025 2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில் பதிவாகியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது அதிகாரத்தை பேரனர்த்த நிவாரணங்களை பயன்படுத்தியேனும் அடிமட்டம் வரை கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் மூன்றாந்தர அரசியல் கலாசாரம் அரங்கேறிவருகின்ற அதே வேளை, தமிழ் மக்களின் நீண்டகால அபிலா ஷைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் இவ்வருடம் முழுவதும் கனவுகளாக நாட்கள் கடந்தோடும் காலமாகவே தான் அமைந்துள்ளன. அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில், மே 6, 2025 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 43.26சதவீதமான வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 339 உள்ளுரா ட்சி சபைகளில் 265 சபைகளைக் கைப்பற்றி தனது பலத்தை நிலைநிறுத்தியது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் நிலவிய பிளவுகளுக்கு மத்தியிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன. குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 35 சபைகளைக் கைப்பற்றி தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது பங்கிற்கு வெற்றி களைத் தக்க வைத்துக்கொண்டது. இருப்பினும் ஆட்சியமைப்பதில் தமிழர சுக் கட்சி யின் விட்டுக்கொடுக்காத தன்மையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஜன நாயக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டிணைவு பத்து உள்ளுராட்சி மன்றங்கள் வரையில் தமதாக்கிக் கொண்டன. இந்தக் கூட்டிணைவ கொள்கை அடிப்படையில் அமை வதாகவே காண்பிக்கப்பட்டு உடன்பாடும் செய்யப்பட்டது. குறித்த கொள்கைக் கூட்டில் சந்திரகுமார் தலைமையிலான சமவத்துக் கட்சியும் இணைந்து கொண்டிருந்தது. எனினும் சொற்ப காலத்தில் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியானது 13ஆவது திருத் தச்சட்டத்தினை வலியுறுத்தி செயற்பாடுகளை ஆரம்பித்தமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன் னணி முரண்பட்டது. ஈற்றில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழரசுக்கட்சியுடன் மீண்டும் கைகோர்க்கும் நிலையை அடைந்துள்ளது. இதற் குப் பின்னால் சுமந்திரனின் முதலமைச்சர் கனவும் காணப்படுகின்றது என்பது தனிக்கதை. அதேநேரம், மலையக அரசியலில், பாரம் பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான பின்ன டைவைச் சந்தித்த நிலையில், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஓரளவு தம்மை தக்க வைக்கும் நிலைக்குச் சென் றிருந்தன. குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 1,700 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளம், ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் கிடைத்த சமூக நீதியாகவும், அரசாங்கத்தின் முக்கிய தீர்மானத்தின் பிராகரம் எடுக்கப்பட்ட செயற் பாடாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் கறுப்பு அத்தி யாயமாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, குழந்தைகள் உள்ளிட்ட 240 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை சர்வதேச அளவில் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், போர்க்கால மீறல்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் உலக அரங்கிற்கு கொண்டு வந்திருந்ததோடு பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் வெகுவாகவே வலியுறுத்தியுள் ளது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 6, 2025 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் 60ஃ1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இத்தீர்மானம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் சர்வதேச பொறிமுறையை 2027வரை நீட்டித்துள்ளது. அரசாங்கம் இந்தத் தீர்மானத்தினை ‘வெளிநாட்டுத் தலையீடு’ என்று ஆரம்பத்தில் விமர்சித்தாலும், சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிய வேண்டிய கட்டாயத்தில், நவம்பர் மாதம் வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப் பாட்டிலிருந்த சுமார் 5,000 ஏக்கர் பொதுமக்களின் காணி விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் 2025ஆம் ஆண்டு ‘அனைத்து நாடுகளுடனும் நட்பு’ என்ற கொள்கையின் கீழ் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயங்களைக் கண்டது. குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான காலப்பகுதியிலர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் முக்கியமானது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே மன்னார் முதல் தமிழ்நாடு வரையிலான கடல்வழி மின்சார இணைப்பு, திருகோணமலை எரிசக்தி மையம் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க ‘UPI’ பணப்பரிமாற்ற முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. அத்துடன் மலையகத்தில் மேலும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மே மாதம் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மியும், ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும் மற்றும் நவம்பர் மாதம் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவும் இலங்கைக்கு வருகை தந்து, நாட்டின் மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025இல் சீனா (ஜனவரி), வியட்நாம் (மே), ஜேர்மனி (ஜூன்) மற்றும் ஜப்பான் (செப்டெம்பர்) நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார். செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக் கமளித்தார். ஆனால் குறித்த சந்தித்து உத்தியோக பூர்வ இருதரப்பு சந்திப்பாக நடைபெற்றிருக்க வில்லை. பொருளாதார ரீதியாக, செப்டெம்பரில் ஜப்பான் மற்றும் சீனாவின் நிதியுதவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ் சாலைப் பணிகள் (கடவத்தை – மீரிகம) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு கெடுபிடிகள், கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் போன்றவை நிர்வாக ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக ‘மிஸ்டர் கிளீன்’ என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுப் பயண மொன்றுக்காக பயன்படுத்திய நிதி தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது கொழும்பு வாழ் மேல்தட்டு வர்க்கத்துக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆண்டின் இறுதியில், நவம்பர் 28 அன்று இலங்கையின் கிழக்குக் கரையைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா’ சூறாவளி ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை உள்நட்டில் உருவாக்கியுள்ளது. இச்சூறாவளியால் நாடு முழுவதும் சுமார் 640க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1.6மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கிராமங் களையே துடைத்தெறிந்திருக்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியாவின் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். புயலின் பாதிப்புகள் தணியாத நிலையில், டிசம்பர் 23, 2025 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாரிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாக வெளிப்படையில் காணப்படுகின்றது. ஆனால் இதற்கான பின்னணியைப் பார்க்கின்றபோது இந்தியா இலங்கையில் எந்த வொரு தரப்பினரையும் காலூன்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை அப்பட்ட மாகவே வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆகவே குறித்த விடயத்தில் தீவிரமான கவனம் அவசியமானின்றது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2025 ஆம் ஆண்டு என்பது இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டு ஊழல் ஒழிப்பு கெடுபிடிகளுக்கும், சர்வதேச இராஜதந்திர விட்டுக்கொடுப்புகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண முயற்சித்த ஆண்டாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் முன் னேற்றங்கள் ஏற்படுவது போன்று தென்பட்டாலும் நிலையான அரசியல் தீர்வு மற்றும் நீதிக்கான பயணம் இன்னமும் நீண்டதாகவே உள்ளது. பொருளாதார மீட்சி மற்றும் பேரிடர் மேலாண்மையில் சர்வதேச ஆதரவுடன் இலங்கை நடைபோட்டாலும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான பெரும் சவால்களாக எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்விதமான சூழலில் புதிய ஆண்டை முகங்கொடுப்பது மிகவும் அவதானத்துக்கு உட்பட்டதாகும். https://www.ilakku.org/சோதனைகளும்-வேதனைகளும்-நி/
  4. கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது 31 December 2025 கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு கடும் இழுபறிக்கு மத்தியில் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் முடிவில், இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2 வாக்குகள் வித்தியாசத்தில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 22 ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு தோல்வியடைந்திருந்தது. அதன்போது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் பாதீடு முன்வைக்கப்பட்டு மறு வாக்கெடுப்பு இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்திக்கு சபையில் தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், ஏனைய சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் கொழும்பு மாநகர சபையின் ஆளுமையை ஆளும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/438471/colombo-municipal-council-budget-passed
  5. இந்தியாவுடனான ரி20 தொடரில் முழுமையாகத் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது இலங்கை Published By: Vishnu 31 Dec, 2025 | 03:46 AM (நெவில் அன்தனி) திருவனந்தபுரம் கிறீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) இரவு மின்னொளியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 15 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. இதற்கு அமைய 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5 - 0 என முழுமையாகக் கைப்பற்றி 2025ஆம் ஆண்டை வெற்றியுடன் நிறைவுசெய்தது. அதேவேளை, இலங்கை வெறுங்கையுடன் நாடு திரும்பவுள்ளது. இன்றைய போட்டிக்கான இரண்டு அணிகளிலும் தலா இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தியாவின் ஆரம்ப வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனாவுக்குப் பதிலாக தமிழகத்தின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை 17 வயதுடைய குணாளன் கமளினி அறிமுக வீராங்கனையாக அணியில் இடம்பெற்றார். அத்துடன் ரெணுகா சிங்குக்கு பதிலாக சகலதுறை வீராங்கனை ஸ்னேஹ் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் காவியா காவிந்தி, சுழல்பந்துவீச்சாளர் மல்ஷா ஷெஹானி ஆகியோருக்குப் பதிலாக இனோக்கா ரணவீர, மல்கி மதாரா ஆகிய இருவரும் மீள இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்கள் இருவரும் நான்காவது போட்டியில் விளையாடவில்லை. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் குவித்த அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அத்துடன் இந்தத் தொடரில் இந்தியாவின் மூன்றுக்கு மேற்பட்ட விக்கெட்களை இலங்கை கைப்பற்றியது. இதுவே முதல் தடவையாகும். கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச் சதங்கள் குவித்த ஷபாலி வர்மா இந்தப் போட்டியில் 5 ஓட்டங்களையே பெற்றார். அறிமுக வீராங்கனை கமலினி 12 ஓட்டங்களையும் ஹார்லீன் டியோல் 13 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 5 ஓட்டங்களையும் தீப்தி ஷர்மா 7 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழக்க 11ஆவது ஓவரில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. எனினும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், ஆமன்ஜோத் கோர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினர். ஆனால் அவர்கள் இருவரும் 4 ஓட்டங்கள் இடைவெளியில் களம் விட்டு வெளியேறினர். (142 - 7 விக்.) ஆமன்ஜோத் கோர் 21 ஓட்டங்களையும் ஹாமன்ப்ரீத் கோர் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 68 ஓட்டங்களையும் பெற்றனர். மல்கி மந்தாரா வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 19 ஓட்டங்கள் குவிக்கப்பட, இந்தியா பலமான நிலையை அடைந்தது. 18ஆவது ஓவரில் 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஹாமன்ப்ரீத் கோரின் விக்கெட்டைக் கைப்பற்றிய கவிஷா டில்ஹாரியை பொருட்படுத்தாமல் கடைசி ஓவரில் மல்கி மந்தாராவை பந்துவீச அழைத்தது பெருந்தவறு என்பதை புரிந்துகொள்ள சமரி அத்தபத்தவுக்கு வெகு நேரம் சென்றிருக்காது. டில்ஹாரிக்கு 2 ஓவர்களும் அனுபவசாலியான சமரி அத்தபத்தவுக்கு ஒரு ஓவரும் மீதம் இருந்தன. கடைசி ஓவரில் 19 ஓட்டங்களை விளாசிய அருந்ததி ரெட்டி 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஸ்நேக் ராணா ஆட்டம் இழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரஷ்மிக்கா செவ்வந்தி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 176 ஓட்டங்கள் என்ற சற்று சிரமமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இலங்கையின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. அணித் தலைவி சமரி அத்தபத்து வெறும் 5 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்களுடன் 2ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இந் நிலையில் ஹசினி பெரேராவும் இமேஷா துலானியும் 2ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். இமேஷா துலானி தனது 6ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்தார். அவர் 8 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார். ஹசினி பெரேரா தனது 89ஆவது போட்டியில் கன்னி அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரைவிட 19 வயதான ரஷ்மிக்கா செவ்வந்தி மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். அவர் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இந்திய பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 6 பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகி: ஹாமன்ப்ரீத் கோர் தொடர் நாயகி: ஷபாலி வர்மா https://www.virakesari.lk/article/234799
  6. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா - அரசாங்கம் 31 Dec, 2025 | 11:22 AM (எம்.மனோசித்ரா) தித்வா புயலால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். அத்தோடு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேத மதிப்பீடு இன்றி 5 இலட்சம் ரூபா வழங்கப்படுவதோடு, சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் வரை அதிகரிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், இதுவரையில் 6090 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். முதலாவது முறைமை சேதமடைந்த வீடு அமைந்துள்ள காணியில் அபாயமின்றி தொடர்ந்தும் வாழ முடியுமெனில் அவ்வாறானவர்களுக்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். இந்த கொடுப்பனவு குறித்த வீட்டின் பெறுமதி மதிப்பீடு இன்றி வழங்கப்படும். இரண்டாவது முறைமையின் கீழ் வீடு முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை, அந்த வீட்டில் மீண்டும் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டால் காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி முதலிரு வாரங்கள் நிறைவடைய முன்னர் இந்த இழப்பீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக 25 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் சேத மதிப்பீடுகள் இன்றி 5 இலட்சம் வழங்கப்படும். அதன் பின்னர் சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும். அரச அதிகாரிகளால் சேத மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படும் போது, அது குறித்து திருப்தியடையாதவர்கள் பிரதேச செயலாளர்கள் அல்லது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியும். உலக வங்கியின் ஆரம்ப கட்ட மதிப்பாய்வுகளுக்கமைய 4.1 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 000 ரூபா ஆரம்பகட்ட கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய 450 225 வீட்டு அலகுகள் அடையாளங் காணப்பட்டன. அவற்றில் இதுவரையில் 393 669 வீட்டு அலகுகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. கண்டி, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும் 80 - 90 சதவீதம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றார். https://www.virakesari.lk/article/234816
  7. Today
  8. பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,KPNO/NOIRLab படக்குறிப்பு,அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது. கட்டுரை தகவல் பல்லப் கோஷ் பிபிசி 30 டிசம்பர் 2025 இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது. பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவு (பிக் கிரஞ்ச்) என்று அழைக்கப்படும் நிகழ்வுடன் முடிவுக்கு வரலாம் என்று தென்கொரிய குழுவின் ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், ஒரு தலைமுறையின் மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக நம்புகின்றனர். பிற வானியலாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் இந்த விமர்சகர்களால் தென்கொரிய குழுவின் வாதங்களை முழுமையாக நிராகரிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,NASA/ESA இருண்ட ஆற்றல் என்றால் என்ன? சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்புடன் (பிக் பேங்) தொடங்கிய பிரபஞ்சத்தின் விரிவாக்கம், ஈர்ப்பு விசையினால் படிப்படியாக வேகம் குறையும் என்று வானியலாளர்கள் முன்பு நினைத்தார்கள். பின்னர் 1998-ஆம் ஆண்டில், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை துரிதப்படுத்தும் ஒரு விசையாக இருண்ட ஆற்றலுக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 'சூப்பர்நோவாக்கள்' எனப்படும் மிகவும் பிரகாசமான வெடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வுகள், தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் வேகம் குறைவதற்குப் பதிலாக, உண்மையில் ஒன்றைவிட்டு ஒன்று அதிவேகமாக விலகிச் செல்வதைக் காட்டின. பிரபஞ்சம் தொடர்ந்து வேகமாக விரிவடைவதால், நட்சத்திரங்கள் மிகவும் தூரமாகப் பிரிந்து போகும் அப்போது ஒருநாள் இரவு வானில் கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத நிலை கூட வரலாம் என்றும், இன்னும் அதிர்ச்சியூட்டும் விதமாக, இறுதியில் அணுக்களையே சிதைத்துவிடும் பெருங் கிழிசல் (பிக் ரிப்) ஏற்படலாம் என்றும் சில கோட்பாடுகள் தெரிவித்தன இந்த விவாதம் மார்ச் மாதம் அரிசோனா பாலைவனத்தில் ஒரு தொலைநோக்கியில் இருக்கும் 'டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட்' (DESI- டெசி) என்ற உபகரணத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளுடன் தொடங்கியது. இருண்ட ஆற்றல் பற்றி மேலும் அறிய டெசி உருவாக்கப்பட்டது. இது மில்லியன் கணக்கான நட்சத்திர மண்டலங்கள் எவ்வாறு வேகமடைகின்றன என்பதை மிக நுணுக்கமாகக் கண்காணித்தது, ஆனால் அது வழங்கிய முடிவுகள் வானியலாளர்கள் எதிர்பார்க்காததாக இருந்தது. 'விசித்திரமானது' நட்சத்திர மண்டலம் வேகமடைதல் காலப்போக்கில் மாறியுள்ளதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. இது வழக்கமான புரிதலுக்கு உட்பட்டது அல்ல என்று டெசி திட்டத்தில் ஈடுபட்டுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பேராசிரியர் ஓஃபர் லஹவ் கூறுகிறார். "இப்போது இந்த மாறும் இருண்ட ஆற்றல் ஏறி இறங்குவதால், நமக்கு ஒரு புதிய வழிமுறை தேவைப்படுகிறது. இது முழு இயற்பியலையுமே உலுக்கக்கூடும்," என்று அவர் கூறுகிறார். பின்னர் நவம்பர் மாதம், 'ராயல் அஸ்ட்ரோனோமிகல் சொசைட்டி' (ஆர்ஏஎஸ்), தென்கொரிய குழுவின் ஆராய்ச்சியை வெளியிட்டது. இது இருண்ட ஆற்றலின் விசித்திரத்தன்மை நாம் நினைத்ததைவிட விசித்திரமானது என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது. யோன்செய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யங் வூக் லீ மற்றும் அவரது குழுவினர், 27 ஆண்டுகளுக்கு முன்பு இருண்ட ஆற்றலை முதலில் வெளிப்படுத்திய அதே வகை சூப்பர்நோவா தரவுகளை மீண்டும் ஆய்வு செய்தனர். இந்த நட்சத்திர வெடிப்புகளை ஒரு நிலையான பிரகாசம் கொண்டவையாக கருதுவதற்குப் பதிலாக, அவை உருவான நட்சத்திர மண்டலத்தின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்த சூப்பர்நோவாக்கள் உண்மையில் எவ்வளவு பிரகாசமாக இருந்தன என்பதை அவர்கள் கணக்கிட்டனர். இந்தச் சரிசெய்தல், இருண்ட ஆற்றல் காலப்போக்கில் மாறியது மட்டுமல்லாமல், அதிர்ச்சியூட்டும் விதமாக அதன் வேகம் குறைந்து வருவதையும் காட்டியது. "பிரபஞ்சத்தின் விதி மாறும்," என்று பேராசிரியர் லீ பிபிசி நியூஸிடம் வெளிப்படையாகக் கூறுகிறார். "இருண்ட ஆற்றல் நிலையானது அல்ல மற்றும் அது பலவீனமடைந்து வருகிறது என்றால், இது நவீன அண்டவியலின் முழு கருத்தோட்டத்தையும் மாற்றிவிடும்." பேராசிரியர் லீயின் முடிவுகள் தெரிவிப்பது போல, நட்சத்திர மண்டலங்களை ஒன்றைவிட்டு ஒன்று தள்ளும் விசையான இருண்ட ஆற்றல் பலவீனமடைந்தால், ஈர்ப்பு விசை நட்சத்திர மண்டலங்களை மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும் சாத்தியம் உள்ளது. "ஒரு 'பெருங் கிழிசல்' உடன் முடிவடைவதற்குப் பதிலாக, ஒரு 'பெருஞ் சிதைவு' இப்போது சாத்தியமாகிறது. எந்த முடிவு வெற்றி பெறும் என்பது இருண்ட ஆற்றலின் உண்மையான தன்மையைப் பொறுத்தது, அதற்கான பதில் நமக்கு இன்னும் தெரியவில்லை," என்கிறார் பேராசிரியர் லீ. பேராசிரியர் லீயின் பணி சக நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு ஆர்ஏஎஸ்-இன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வாதங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் எஃப்ஸ்டதியு போன்ற மூத்த வானியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. "இது சூப்பர்நோவாக்களின் குழப்பமான விவரங்களை மட்டுமே பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். வயதுடனான தொடர்பு அவ்வளவு நெருக்கமானது அல்ல, எனவே 'சரிசெய்தல்' முறையைப் பயன்படுத்துவது ஆபத்தானது. இது எனக்குப் பலவீனமாகத் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார். டார்க் எனர்ஜி பெரிதாக மாறாமல் இருப்பதுடன், பிரபஞ்சம் இன்னும் வேகமாக விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக உள்ளது. ஆனால் பேராசிரியர் லீ இத்தகைய விமர்சனங்களை வலுவாக எதிர்க்கிறார். "எங்கள் தரவு 300 நட்சத்திர மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தற்செயலான நிகழ்வாக இருப்பதற்கு டிரில்லியனில் ஒரு பங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களது ஆராய்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன்." பட மூலாதாரம்,Marilyn Sargent/Berkeley Lab படக்குறிப்பு,இந்த தொலைநோக்கிக்குள் இருக்கும் ஒரு கருவி ஒரே நேரத்தில் 5,000 நட்சத்திர மண்டலங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும். தென்கொரிய முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு குழுக்கள் சில சூப்பர்நோவாக்களின் பிரகாசத்தை மீண்டும் மதிப்பீடு செய்தன. மொத்த பரபரப்பையும் தொடங்கிய டெசி முடிவுகளுக்கு அடிப்படையாக இருந்த முந்தைய ஆய்வு ஒன்றினை அவர்கள் மீண்டும் பரிசீலித்தனர். இருண்ட ஆற்றல் மாறிக்கொண்டிருக்கிறது என்ற வாதம் மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருந்ததால், மார்ச் மாத முடிவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். இரண்டு குழுக்களும் அசல் குறிப்புகளிலிருந்து சற்றே பின்வாங்கினாலும், விரிவான ஆய்வுக்குப் பிறகும் அந்தக் குறிப்புகள் முழுமையாக மறைந்துவிடவில்லை. இது தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் சிறந்த விளக்கம் எது என்பதில் வானியலாளர்கள் வேறுபடுகின்றனர். இது ஒரு மோசமான விஷயம் அல்ல என்கிறார் ஆர்ஏஎஸ்-ன் துணை இயக்குநர் பேராசிரியர் ராபர்ட் மாஸ்ஸி. "பிரபஞ்சம் எப்படி முடியப் போகிறது மற்றும் அது எப்படித் தொடங்கியது என்பதைப் புரிந்து கொள்ள யார் தான் விரும்ப மாட்டார்கள்? மனிதர்கள் எப்போதுமே மத ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ இதில் ஆர்வம் காட்டியுள்ளனர்," என்று அவர் கூறுகிறார். "இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில் விஷயங்கள் இப்படித்தான் முடிவடையும் என்று சிந்திக்க முடிவது அசாதாரணமானது அல்லவா?" - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl9lz099d6o
  9. ”தையிட்டி போராட்டம் நில அபகரிப்புக்கு எதிரானதே – பௌத்தத்திற்க எதிரானது அல்ல” யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கடுமானத்தை மக்கள் ஒரு போதும் வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பவில்லை சட்டத்துக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடத்தை உரியவர்கள் அகற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எம்மைப் பொறுத்தவரையில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரை விகாரையல்ல தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் அடாத்தாக கட்டப்பட்ட சட்ட விரோத கட்டிடம் . இதற்கு எதிராக இரண்டு வருடங்கள் கடந்தும் ஜனநாயக நீதியாக மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வர நிலையில் அதனை மக்கள் அடாத்தாக அகற்ற வேண்டும் என கருதியது இல்லை. இலங்கை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடங்களை எவ்வாறு அகற்றுகிறீர்களோ அவ்வாறே இந்த சட்ட விரோத திஸ்ஸ விகாரை கட்டிடத்தையும் அகற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. வலி வடக்கில் #இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில் இந்த சட்ட விரோத விகாரக் கட்டிடம் அமைந்துள்ள பகுதிகளை சூழ்ந்து தமிழ் மக்களின் பாரம்பரியமாக காணப்பட்ட நான்கு #கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஒரு இந்து ஆலயமும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதில் 2013 ஆம் ஆண்டு மயிலிட்டி பிள்ளையார் ஆலயம் உயர் பாதுகாப்பு நிலையத்தில் இருந்த போது உரிய அனுமதிகளை பெற்று பாதுகாப்பு தரப்பினர் அப்பகுதி மக்களை ஒரு நாள் வழிபட அனுமதித்தார்கள்.அங்கு வழிபாட்டை நடத்தியவர்கள் தாங்கள் சென்றபோது ஆலயம் முழுமையாக இருந்ததாகவும் தாங்கள் வழிபாடுகளை மேற்கொண்டோம் என தெரிவித்த நிலையில் தற்போது குறித்த ஆலயம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளது . சட்டரீதியாக மக்கள் வழிபட்ட ஆலயங்களை அழிக்க முடியுமென்றால் சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டடத்தை அகற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. நாங்கள் மதங்களை மதிக்கிறோம் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல விடுதலைப் புலிகள் கூட தமது கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது நயினாதீவு விகாரை மற்றும் யாழ் நாக விகாரைகளை அகற்ற நினைக்கவில்லை பாதுகாத்தார்கள். இன்று #யாழ்ப்பாணத்தில் விகாராதிபதிகள் என்ன கூறுகிறார்கள் அண்மையில் #நயினாதீவு நாக விகாராதிபதி கூறினார் தையிட்டியில் புத்தபெருமான் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து விகாரை கட்ட யாருக்கும் கூறவில்லை. தையிட்டி திஸ் விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்க வேண்டும் என கூறுகிறார். அதேபோல் யாழ்ப்பாணம் நாக விகாரதிபதி தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகளை அந்த மக்களுக்கே மீணடும் வழங்க வேண்டும் எனக் கூறுகிறார். இதிலிருந்து என்ன வழங்குகிறது குறித்த விகாரை சட்டவிரோதமாக அடாத்தாக காணப்படுகின்றமை தெளிவாக பௌத்த துறவிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பௌத்த மதத்தை இழிவு படுத்தவில்லை யாழிலிருந்து பௌத்த மதத்தை அகற்ற வேண்டுமென கூறவில்லை சட்ட நீதியாக எமது மக்களின் காணி உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாறு கோருகிறோம். ஆகவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டிடத்தை அகற்றுவதற்காக போராடும் நாங்கள் இனவாதிகளோ மதவாதிகளோ கிடையாது தமிழ் இனத்தின் இருப்புக்காகவும் இன விடுதலைக்காகவும் போராடுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார் https://www.samakalam.com/தையிட்டி-போராட்டம்-நில-அ/
  10. செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம் யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. செம்மணி வளைவு அதன் போது யாழ்ப்பாணத்தின் நுளைவு வாசலாக இருக்கின்ற செம்மணி வளைவு பகுதியில் எமது சமய காலசாரங்களை பிரதிபலிக்கின்ற நல்லூரான் செம்மணி வளைவு, சிவலிங்கம். மற்றும் கோவில்கள் ஆகியன காணப்படுவதன் அடிப்படையில் அச் சூழலில் அசைவ உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் போன்ற அச்சூழலுக்கு பொருத்தமில்லாத வியாபார நிலையங்களினை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் அமைப்பற்குரிய அனுமதியினை நல்லூர் பிரதேச சபை வழங்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/controversial-decision-nallur-pradeshiya-sabha-1767161372
  11. குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர் - தவிசாளர் சுட்டிக்காட்டு! 31 Dec, 2025 | 11:08 AM காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டினார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். காரைநகர் பகுதியில் கரையோர பகுதிகளுக்கே அதிகளவான நீர் தேவை உள்ளது. ஆனால் அங்கே பிரதான குழாய்கள் பொருத்தப்படவில்லை என தவிசாளர் சுட்டிக்காட்டினார். உரிய அதிகாரி அதற்கு பதிலளிக்கையில், நீர்த்தாங்கி வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. குழாய் இணைப்புகளை முடித்த பின்னர் மார்ச் முதல் வாரத்தில் குடிநீரை வழங்குவோம். அத்துடன் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக நாங்கள் பிரதேச செயலகத்திடம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்துள்ளோம். அண்ணளவாக 3700 குடும்பங்கள் இங்கே இருந்தாலும் 500 குடும்பங்கள் அளவிலேயே இங்கே விண்ணப்பங்களை மேற்கொண்டுள்ளார்கள். அத்துடன் காரைநகர் பிரதேச மக்கள் 38 வீத மானியத்தில், 13 ஆயிரத்து 875 ரூபாவை செலுத்தி மக்கள் இநாத இணைப்பினை பெற்றுக் கொள்ள முடியும். பெப்ரவரி மாதத்தில் நடமாடும் சேவையை இங்கே மேற்கொண்டு, இணைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான வேலையை செய்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/234818
  12. ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில் Dec 30, 2025 - 11:05 PM சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (31) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இதே குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரைத் தேடிக் கைது செய்வதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjsvbkx103beo29n1jsw22ox
  13. காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தற்போது உரையாடியபோது 55 குடும்பங்களுக்கு(புதிதாக திருமணமானவர்கள், பழைய வீட்டுத்திட்ட நிதிப்பற்றாக்குறையால் கட்டமுடியாதவர்கள்) புதிதாக மலசல கூடம் அமைக்க வேண்டும் என்ற தகவலை தெரியப்படுத்தினார். மேலும் 12 குடும்பங்களிற்கு மலசலகூடம் திருத்தவேலை செய்யவேண்டும் எனவும் கூறினார். முதலில் 5 குடும்பங்களின் விபரங்களை கோரியுள்ளேன்.
  14. நல்லது அண்ணா. சில தகவல்களைப் பகிர்கிறேன், செய்யமுடியுமா எனப்பாருங்கள். நன்றி அண்ணா, தனி மனிதர்களால் எடுக்கப்படும் கூட்டு முயற்சி இது. அடம்பன் கொடியும்.... நல்லது அண்ணா. 1) காரைநகரில் வீட்டுத்திட்டம் ஒன்றுக்கு மலசல கூடம் கட்டித்தருமாறு எமது அமைப்பிடம் பிரதேச செயலகம் ஊடாக வாய்மொழியாக கேட்டுள்ளார்கள். வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 2) பொன்னாலையில் 3 பேர் எழுந்து நடமாடமுடியாத சகோதரர்களின் கொமட் உடைந்துவிட்டது, மலசலகூடக் குழி(பிற்) மூடப்பட்ட பிளாற் உடைந்துள்ளது, பாத்றூம் பிளாற் உடைந்துவிட்டது. புனரமைத்து தருமாறு அவசர வாய்மொழி வேண்டுகோள் வந்துள்ளது. வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 3) அராலியிலும் மலசலகூடம் அமைத்து தருமாறு கேட்டவர்கள். போதிய விபரம் கிடைக்கவில்லை. முழு விபரம் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன். மேலும் சில விபரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.
  15. நீன்ட காலத்துக்குப் பின் யாழில் நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள்.
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  17. நான் எழுதுவது ஒரு அனாதையான இனத்துக்கு மீட்பார் என்று சொல்லி பின்கதவால் வந்த வல்லூறு ஒன்றின் கதை . உங்களை போன்றவர்களுக்கு கிரிகெட் விளையாட்டாய் நக்கலாய் போய் விட்டது அந்த மக்களின் மவுன வலி. இந்த சுமத்திர வல்லூறு வடகிழக்கு தமிழருக்கு கடந்த 14 வருடங்களில் ஒன்றையும் கிழித்து போடவில்லை இனியும் கிழிப்பார் என்று பள்ளிக்கூடம் போனவர்கள் நம்ப மாட்டார்கள் .
  18. உறவுகளே, இந்தியக் கடற்படையின் அதிரடிப்படையால் (MARCOS) குருநகர் துறைமுகம்(?) தாக்கப்பட்டது, ஒக்டோபர் 21,1987. இதன் போது என்னமாதிரியான அழிவுகள் ஏற்பட்டன? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? ஏதேனும் படகுகள் தாக்கப்பட்டதா? உண்மையில் அங்கு துறைமுகம் என்று சொல்லுமளவிற்கு கட்டுமானங்கள் ஏதேனும் இருந்ததா? இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன? வரலாற்றை ஆவணப்படுத்த உதவி செய்யுங்கள். நன்றி
  19. பொது சனம் ஒராள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார், மன்னாரில். ( இரண்டாவது மறுமொழிப் பெட்டியில் தெளிவாக உள்ளது)
  20. என்னுடைய ஞாபகத்தின்படி இந்திய இராணுவ வருகைக்கு சில (மாதங்கள்) காலங்களுக்கு முன்னமே ஊர் பெரியவர்கள், பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையிம் உள்ளடக்கி இப்படியான பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. இலங்கை இராணுவ திடீர் படை இறக்கம், உளவாளிகள் ஊடுருவல், கிராம மட்டங்களில் நடக்கும் சிறிய சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அவதானித்து இயக்க பொறுப்பாளருடன் உரையாடி ஆலோசிப்பது அவர்களுக்கான ஒத்துழைப்பை , உதவிகளை வழங்குவது போன்ற செயல் பாடுகள் நடந்தன. நாவட்குழியில் நானும் நண்பர்களும், ஊர் பெரிசுகளும் சேர்ந்து இரவு நேர ஊர் காவல், நோட்டமிடல், சென்ரி, உணவு வழங்கள் போன்ற செயல்பாடுகளில் இருந்து இருக்கிறோம் . இது தவிர, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் அரசியல் செயல்பாடுகளாகவும் பிரஜைகள் குழு என்று ஒன்றும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இவர்கள் பலரை ராணுவ துணை குழுக்கள் கொலை செய்த்ததாகவும் செய்திகள் வாசித்த ஞாபகம் இருக்கிறது.
  21. அநீதி இழைக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உறுதுணையாக இருப்பதில் தப்பில்லை. காவி அணிந்தவரெல்லாம் முற்றும் துறந்த துறவிகள் என்ற காலம் மலையேறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. யாருடைய சங்கி மங்கி செயல்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியதில்லை.
  22. ஏன் சிறியர், டக்கிலஸை கைது செய்து கொண்டு போகும்போது கையில் ஒரு கோப்புடன் போகிறாரே, அதில் என்ன இருக்கும்? தான் கொலை செய்தவர்களின் பெயர்ப்பட்டியலா, தன்னால் இன்னும் கொல்லப்பட வேண்டிய நபர்களின் பெயரா, அல்லது வழக்கு நடத்தப்போகும் சட்டத்தரணி தான் என நினைத்துக்கொண்டாரா? ஒரு வெட்கமேயில்லாமல் போகிறார். எல்லா கூட்டங்களிலும் வலிய புகுந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும், கருத்து சொல்லும் இந்த மனிதன், தன்னைப்பற்றி இப்படியொரு காணொளி வெளிவருமென எதிர்பார்த்திருப்பாரா? அறிவாளியாக இருந்திருந்தால் இதெல்லாம் செய்திருப்பாரா? மக்களை ஏமாற்றி, அழைத்து வந்து சிங்களத்திற்கு காணொளி அனுப்பி கப்பம் பெற்றவர், இனி அடிக்கடி வருவார் பாவம். தெற்கிலிருந்து, அரச தலைவர்களின் காவல் நா* என்று கருத்தெழுதுகிறார்களாம் இவரைப்பற்றி. தெற்கு மக்களும் இவரின் சாதனைகளை பற்றி அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சிறையில் இவரது உயிருக்கு ஆபத்தென்றால், அது இவரின் எஜமானரின் ஏவல் பிராணிகளாற்தான் வரும்.
  23. இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் 'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில் பட்டம் பெற்றுள்ளார். உயரிய விருது உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்துள்ளார். இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசத்தின் சிறுவன் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார். பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகினறார். இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம். கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது" என உருக்கமாக தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
  24. எந்த பக்கம் எண்டாலும் சுமனின் ஆட்கள் தானே வெளியில் எடுத்து விடுவது யாழ்ப்பாணத்தை போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.