stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? - நிலாந்தன்
வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தார்கள். நல்லூரில் அவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் பொதுவாக அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக அர்ஜுனா என்று சுட்டிப்பாகக் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும் என்று ஒருபகுதி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் தாங்கள் அர்ஜுனாவை மட்டும் அவ்வாறு குற்றம் சாட்டவில்லை என்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் வேறு அரசியல்வாதிகளும் அவ்வாறு வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்திருக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றார்கள். அதில் உண்மை உண்டு. வெறுப்புப் பேச்சு அர்ஜுனாவில் இருந்து தொடங்கவில்லை. அவருக்கு முன்னரே அது இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்கள் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் நோய் வாய்ப்படும்போது, தமிழ்த் தேசிய அரசியலில் பகை முரண்பாடு எது? நேசமுரண்பாடு எது? என்பதை பிரித்தறியத் தேவையான முதிர்ச்சியும் பண்பாடும் குறையும்போது வெறுப்பர்கள் வேட்டைப் பற்கள் துருத்திக் கொண்டு தெரிய மேலெழுகிறார்கள். நல்லூரில் நடந்த அந்தப் போராட்டத்தின் பின் ஏறக்குறைய அதே காலப்பகுதியில், வெவ்வேறு அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இணைந்து அர்ஜுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒரு முறைப்பாட்டை செய்து இருக்கிறார்கள். அண்மையில் அர்ஜுனா கிளிநொச்சி மக்களுக்கு எதிராகவும் மலையக மக்களுக்கு எதிராகவும் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளின் கீழ் அர்ஜுனா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது வேறு. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக அல்லது நபர்களுக்கு எதிராக அல்லது அமைப்புகளுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்களை சட்ட ரீதியாகக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று அவர்கள் கருத்துவதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியப் பரப்பில், கட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அதே கட்சிக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தொடங்கி இப்பொழுது வெறுப்பைக் கக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறதா? உள்நாட்டு நீதி போதாது என்று கூறி அனைத்துலக விசாரணையைக் கோரி நிற்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்கு போடும் நிலைமை அதிகரித்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்த அன்னையர்கள் சில ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட போது போலீசுக்குப் போய் முறைப்பாடு செய்தார்கள். பின்னர் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் நிலைமை வந்தது. அது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தன் சொந்தக் கட்சிக்காரருக்கு எதிராகவே வழக்குப் போடும் ஒரு நிலையை அடைந்து விட்டது. இப்பொழுது வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் போகிறது? அதேசமயம் வெறுப்புப் பேச்சுக்கு எதிராகவும் அரசியல் அவதூறுகளுக்கு எதிராகவும் மேற்கண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதே காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ஜுனாவும் கஜேந்திரனும் மோதியிருக்கிறார்கள். அது ஒரு தரக்குறைவான, அருவருப்பான மோதல். மோதலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனா, கஜேந்திரனை நோக்கித் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு சபையில் அமர்ந்திருந்த ஒரு பகுதியினர் கைதட்டுகிறார்கள். அவ்வாறு கைதட்டியவர்கள் அரசாங்கக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கூறினார். தமிழ் அரசியல்வாதிகள் எதை ரசிக்கிறார்கள் ? எதற்குக் கைதட்டுகிறார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் அதிகமாக மினக்கெடும் தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் அல்லது அதிகளவு தொகையினர் எதை ரசிக்கிறார்கள்? எதை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்? மேற்கண்ட வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளோடு சம்பந்தப்பட்ட காணொளிகளோடு ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் காணொளிதான் அதிகமாகப் பகிரப்பட்டது; அதிகமாக பார்க்கப்பட்டது. வெறுப்புப் பேச்சு மற்றும் அரசியல் அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விடவும் வெறுப்பு பேச்சுகளையும் ஒருவர் மற்றவரை கீழ்மைப்படுத்தும் அருவருப்பான மோதல்களையும் ரசிக்கும் அளவுக்கு தமிழ்ப் பொதுப் புத்தி விகாரமடைந்து வருகிறதா? கடந்த பெப்ரவரி மாதம் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் ஒரு மருத்துவர் முகநூலில் ஒரு குறிப்புப் போட்டிருந்தார். அக்குறிப்பில் அவர் கனடாவில் வசிக்கும் தமிழ் அரசியல் விமர்சகர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய விடயத்தை ஆங்கிலத்திலும் தமிழில் மொழிபெயர்த்தும் பகிர்ந்திருந்தார். மேற்படி கனடாவில் வசிக்கும் அரசியல் விமர்சகர் அர்ஜுனாவை ஏன் தான் ஆதரிக்கிறார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் அளித்திருந்தார்… “ராமநாதன் அர்ஜூனா எம்.பி.யை நான் மதிக்கிறேன். காரணங்கள்: 1) அவர் தமிழ்த் தேசியவாதத்தை நகைச்சுவைப் பொருளாக்கினார், 2) அவர் நாடாளுமன்றத்தை சாதாரணமான அவையாக்கினார், 3) மருத்துவத் தொழிலை வேறு எந்தத் தொழிலையும் போல சாதாரண தொழிலாக எளிமைப்படுத்தினார் – யாழ்ப்பாணத்தில் அது உயர்ந்த தொழில் என நினைக்கும் இடத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனை, 4) அவர் அரசியலை சாதாரண மனிதனின் நிலையில் அணுகினார். வக்கீல்களுக்கு மட்டும் பாராளமன்றம் என்பதை நாளை ஒரு விவசாயியால் பாராளுமன்றத்தில் பேசமுடியும் என்பதை உறுதிபடுத்தினார்…..” மேற்கண்ட முகநூல் குறிப்பின் மீது பலரும் பலவிதமாக பதில்வினை ஆற்றியிருந்தார்கள். அதைத் தனியாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் மேற்படி முகநூல் குறிப்பு எழுதிய அந்த மருத்துவர், சில நாட்கள் கழித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பில், ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தான் வழமையாக எழுதும் பதிவுகளை நுகர்பவர்களின் எண்ணிக்கை 500 ஐக் கடப்பதில்லை என்றும் ஆனால் அர்ஜுனாவைப் பற்றிய தன்னுடைய பதிவை நுகர்ந்தவர்கள் 35,000க்கும் அதிகம் என்று. அதாவது வழமையை விட 70 மடங்கு அதிகம். இது எதைக் காட்டுகிறது? ஒன்றில் அவருடைய குறிப்பை சமூக வலைத்தளப் பரப்பில் யாரோ காசு கொடுத்துத் திட்டமிட்டுப் பரவலாக்குகிறார்கள். அல்லது அதுபோன்ற குறிப்புகளை ரசிப்பவர்களின் அல்லது நுகர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று பொருள். இது தமிழ்க் கூட்டு உளவியல் தொடர்பான, தமிழ்ப் பொதுப் புத்தி தொடர்பான ஒரு பண்பாட்டுப் பிரச்சினை. இதனை சட்டரீதியாக மட்டும் அணுக முடியாது தீர்க்கவும் முடியாது. இதற்கு ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. சீரழிந்து வரும் தமிழ்த் தேசிய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சும் விதத்தில் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. அது ஒரு கூட்டு முயற்சி. அது ஒரு கூட்டு உழைப்பு. அது ஒரு கூட்டுச் சிகிச்சை. ஒரு சமூகத்தில் கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் அரசியல் தளத்தில்தான் சாத்தியம். அதாவது அரசியல் தலைமைதான் இதுபோன்ற கூட்டு முயற்சிகளில் வெவ்வேறு தரப்புகளைய ஒரு மையத்தில் ஒன்றிணைக்க முடியும். ஆனால் துயரம் என்னவென்றால், தமிழில் அதே அரசியல் தரப்புகள்தான் இந்தச் சீரழிந்த பண்பாட்டை உற்பத்தி செய்கின்றன, ஊக்குவிக்கின்றன, காசு கொடுத்து வளர்த்து விடுகின்றன. அவர்கள் பெற்றெடுத்த ஒன்றை,அவர்களே காசு கொடுத்து, அணி திரட்டி வளர்த்துவிட்ட குருட்டு விசுவாசத்தை, அழிப்பதற்கு அவர்களாக முன்வருவார்களா? ஆனால் அப்படி ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படவில்லையென்றால் தமிழ்ச் சமூகம் அவிழ்த்துவிட்ட பாக்கு முட்டைபோல சிதறிப் போய்விடும். அதன் பின் தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. https://www.nillanthan.com/8222/
-
இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை?
இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை? ஞாயிறு, 29 மார்ச் 2026 05:22 AM இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல காரணிகள் ஒன்றாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான நீர்மின் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒரு அலகு டீசல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசாங்கத்திற்கு சுமார் 90 ரூபா செலவாகிறது. மாலை நேர உச்சப்பயன்பாட்டு நேரத்தில் நிலவும் 150 மெகாவாட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினசரி 36 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன. நுரைச்சோலை மின்நிலையத்தில் நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. நாடு தழுவிய ரீதியில் பாரிய மின் முறிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகிய கால சுழற்சி முறையிலான மின்வெட்டுக்களே ஒரே தீர்வு என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை இந்த மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் இது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை. இது ஒரு இறுதி முயற்சியாகவே எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் 21 வீதம் சூரிய சக்தி, 14 வீதம் நீர்மின்மற்றும் 26 வீதம் அனல் மின் என மின்சாரம் பெறப்படுகிறது. இருப்பினும், இலங்கையிடம் போதிய மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் 1,500 மெகாவாட் சூரிய சக்தியைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் இரவு வேளையில் நீர்மின்சாரத்தின் தேவை 42 சதவீதமாக உயர்கிறது. 2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஈடு செய்ய இலங்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுவரை, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/55910
-
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம் 29 Mar, 2026 | 01:08 PM (நா.தனுஜா) இரு கட்சிகளினதும் சார்பில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்குமென இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிலிருந்து அறுவரும் என மொத்தமாக 9 பேரடங்கிய இணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைக்குரிய பொதுவான விடயங்கள் தொடர்பில் ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயலாற்றும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தொடர் சந்திப்புக்களை நடாத்திவருகின்றன. அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று சனிக்கிழமை மு.ப 10.00 - பி.ப 12.30 மணி வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரட்ணலிங்கம், ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், வேந்தன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு இணைக்குழுவை நியமிப்பதற்கு ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் துரைராஜசிங்கம் ஆகிய மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், வேந்தன், சந்திரகுமார் மற்றும் இரட்ணலிங்கம் ஆகிய அறுவரும் என மொத்தமாக ஒன்பது பேர் அங்கம் வகிக்கும் இக்குழுவுக்கு தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படுவர். அதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதுடன், அதில் இரு கட்சிகளும் ஒருமித்துச் செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் நடாத்தப்படவேண்டிய மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து தாமதப்படுத்தி, 'பிரஜாசக்தி' எனும் முறையற்ற செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துவருவது பற்றியும், இத்தகைய பின்னணியில் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் நாட்டின் சமகால அரசியல் மற்றும் பூகோள அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/242220
-
யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம்
யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம் adminMarch 29, 2026 சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன. அவையாவன, சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், இரவு நேரங்களில் மணல் கொண்டு செல்வதற்கு முற்றாகத் தடை விதிப்பதற்கும், பகல் நேரங்களில் மாத்திரம் மணல் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு வருவதற்கான அனுமதியை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய பொறிமுறையூடாக நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், காவல்துறையினரும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளும் இணைந்து விசேட வீதிச்சோதனைகளை மேற்கொள்வதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்று மணலை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது. குளத்து மணலைக் கழுவி உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விநியோகிப்பதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு மணலைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது மணல் மாபியாக்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வடக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களில் செயற்பாட்டு நிலையிலுள்ளவை தொடர்பான விவரங்களைப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் வழங்கவேண்டும் என்றும், எதிர்காலத்தில் காவல்துறையினர், மாவட்டச் செயலாளர்கள், ஆளுநர் செயலகம் இணைந்த குழுவில் அதனை இற்றைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் ஊடாக மணல் அகழப்படும் இடங்கள் காவல்துறையினருக்குத் தெரியவருவதுடன், அகழப்படும் மணல் கொண்டு செல்லும் பாதைகளை அறியமுடிவதன் மூலம் ஏனைய மார்க்கங்களில் செல்லும் மணல் வாகனங்களைப் பிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், மணல் விநியோக வாகனத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும்போது எவ்வளவு மணி நேரத்துள் அதனை விநியோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பது குறித்தும் ஆராயப்பட்டது. கனரக வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாகப் பாடசாலை நேரங்களில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகத் தண்டப்பணங்களை விதிப்பதை நடைமுறைப்படுத்தவும் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. எதிர்காலத்தில் கனியவளங்கள் தேவைப்படுபவர்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிப்பதற்கும், அதன் ஊடாகத் தேவைப்படும் மணலின் அளவு கணிக்கப்பட்டு ஒரு நாளில் எவ்வளவு மணல் விநியோகம், எந்த மார்க்கம் ஊடாக நடைபெறும் என்ற விவரங்கள் துல்லியப்படுத்தப்படுவதன் ஊடாக மணல் மாபியாக்களைக் கட்டுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் புத்திக சிறிவர்தன, யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிக் காவல்துறை மா அதிபர் மாறப்பன, யாழ். பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஜெயமஹா, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடபிராந்திய முகாமையாளர் டி.மயூரன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் நேரடியாகப் பங்கேற்றனர். மேலும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களின் பிரதி காவல்துறைமா அதிபர்கள் நிகழ்நிலை காணொளி ஊடாக கலந்து கொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2026/231208/
-
ஈரானில் சிவில் உடமைகளுக்கு பாரிய சேதம்: 93,000க்கும் அதிகமான இடங்கள் பாதிப்பு என ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை!
ஈரானில் சிவில் உடமைகளுக்கு பாரிய சேதம்: 93,000க்கும் அதிகமான இடங்கள் பாதிப்பு என ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை! 28 Mar, 2026 | 06:05 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் சிவில் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்த அறிக்கையொன்றை ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது. தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வாரங்களுக்குள் 93,000க்கும் அதிகமான சிவில் இடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 71,547 வீடுகளும், 20,779 வர்த்தக நிலையங்களும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. தெஹ்ரான் நகரில் மாத்திரம் 31,562 வீடுகள் மற்றும் வர்த்தக அலகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 600 பாடசாலைகளும், 295 சுகாதார நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. யுத்த சூழ்நிலை காரணமாக 46 ஆம்புலன்ஸ் வண்டிகள், 48 அவசர விபத்து சேவை வாகனங்கள் மற்றும் 3 நிவாரண சேவை ஹெலிகொப்டர்கள் சேதமடைந்துள்ள அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242170
-
'நெடுந்தாரகை' படகுச் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!
'நெடுந்தாரகை' படகுச் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! Mar 28, 2026 - 11:09 PM யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள 'நெடுந்தாரகை' படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, இன்றைய தினம் 'நெடுந்தாரகை' படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் குறித்த படகு நாளை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. மேலும், 'நெடுந்தாரகை' படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmnalnz2r0001356polzyrie7
-
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஓம்கார் கரம்பேல்கர் பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது. மக்கள் பெரும்பாலும், இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும் பிரச்னை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இது இளம் வயதினர் மத்தியிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது. சிறுநீர் கழித்த பிறகு, சில துளிகள் வெளியேறித் தங்கள் உள்ளாடைகளை நனைப்பதையோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவதையோ பல ஆண்கள் கவனிக்கின்றனர். இது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் இதைப் பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள். "சிறுநீர் கழித்த பின் சொட்டுதல்" என்ற பிரச்னை பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. பொதுவாக, கூச்சம், மற்றவர்கள் கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சம், "இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும்" என்ற தவறான நம்பிக்கை அல்லது "இதுவொரு தீவிரமான பிரச்னை இல்லை" என்ற எண்ணம் ஆகியவை அதற்குக் காரணமாக அமைகின்றன. உண்மையில், பி.எம்.டி என்பது வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. பகல் நேரங்களில் சிறு துளி சிறுநீர் வெளியேறுவது, குறிப்பாகப் பணியிடத்திலோ அல்லது பயணம் செய்யும்போதோ, அதை அனுபவிப்பவருக்கு உள்ளாடை நனைந்த உணர்வையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவர்கள் அடிக்கடி தங்கள் ஆடைகளைச் சரிபார்த்துக் கொண்டே இருக்க நேரிடலாம். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும், தன்னம்பிக்கையைப் பாதிக்கவும் கூடும். நிபுணர்களின் கூற்றுப்படி, பி.எம்.டி என்பது ஒரு தீவிரமான நோய் அல்ல. முறையான உடற்பயிற்சிகள், எளிய நுட்பங்கள், சிறுநீர் கழிப்பதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் பி.எம்.டி-யை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, பி.எம்.டி ஏன் ஏற்படுகிறது, எத்தகைய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும், எத்தகைய தீர்வுகள் உண்மையில் பலனளிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி என்றால் என்ன? சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் (PMD) என்பது ஒரு நபர் சிறுநீர் கழித்து முடித்த பிறகும் சிறுநீர் கசிவதைக் குறிக்கிறது. இந்தப் பிரச்னையின் முக்கிய அறிகுறி, கழிவறையைவிட்டு வெளியேறிய சில விநாடிகள் அல்லது சில நிமிடங்களுக்குப் பிறகு, சில துளிகள் சிறுநீர் திடீரென வெளியேறுவதாகும். பொதுவாக, சிறுநீர் வெளியேறும் குழாயின் (urethra) கீழ் பகுதியில், சிறிதளவு சிறுநீர் தேங்கி நிற்பதாலேயே இது நிகழ்கிறது. கிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அகில் கான், இது குறித்து பிபிசி மராத்திக்கு விரிவாக விளக்கினார். "சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் என்பது 'சிறுநீர் அடங்காமை' என்ற வழக்கமான வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை. மாறாக, இது 'சிறுநீர் வெளியேற்றச் செயல்பாட்டுக் குறைபாடு' (voiding dysfunction) என்ற தனி வகையின் கீழ் வருகிறது. இதில் சிறுநீர் கழித்த பிறகும் சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் புறக்குழாயிலேயே தங்கிவிட்டுப் பின்னர் கசிந்து வெளியேறுகிறது," என்று அவர் விவரித்தார். இந்தப் பிரச்னை சங்கடப்படுத்தக் கூடியதாகவோ அல்லது கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ தோன்றினாலும், இதுவொரு தீவிரமான பாதிப்பு இல்லை எனவும், சரியான உடற்பயிற்சிகள் மற்றும் எளிய வழிமுறைகளின் மூலம் இதை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Getty Images இடுப்புத் தளம் என்றால் என்ன? இடுப்புத் தளம் (Pelvic floor) என்பது, வயிற்றின் அடிப்பகுதியில் (கீழ் வயிறு) அமைந்துள்ள, வலிமையான அதேநேரம் நெகிழ்வுத்தன்மை கொண்ட தசைகள், திசுக்கள், தசைநார்கள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பாகும். இந்த அமைப்பானது, ஒரு தொட்டிலைப் போல அல்லது எடையைத் தாங்கும் பொருளைப் போலச் செயல்படுகிறது. இது இடுப்புப் பகுதியில் உள்ள முக்கியமான உறுப்புகளான சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய், குடல், ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பி போன்றவற்றைத் தாங்கிப் பிடித்து, அவற்றுக்கு ஆதரவளிக்கிறது. ஒருவர் நிற்கும்போதோ, நடக்கும்போதோ அல்லது அசைந்து இயங்கும்போதோ, இந்த உறுப்புகளின் எடையைச் சுமப்பதற்கும் அவற்றை அவற்றுக்குரிய சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கும் இந்தத் தசைகள் உதவுகின்றன. படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக பிபிசியுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் உறுப்புகளுக்கு ஆதரவளிப்பது இடுப்புத் தளத்தின் மற்றுமொரு முக்கியமான பணி. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, உதாரணமாக, ஆழமான மூச்சுவிடும்போது, இருமும்போது, தும்மும்போது, கனமான பொருட்களைத் தூக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடுப்புத் தளத் தசைகள் அந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு உறுப்புகள் நிலையாக இருக்க உதவுகின்றன. சுருக்கமாகக் கூறுவதெனில், உடல் சமநிலை, உடலின் மையப்பகுதியுடைய வலிமை, சிறுநீர், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடுப்புத் தளம் மிகவும் இன்றியமையாதது. அன்றாட ஆரோக்கியத்தில் இது மிக முக்கியப் பங்காற்றினாலும், பலரும் இந்த அமைப்பின் மீது போதிய கவனம் செலுத்துவதில்லை. பி.எம்.டி யாருக்கு ஏற்படுகிறது? இது பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையதா? பி.எம்.டி ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணம், இடுப்புத் தளத் தசைகள் பலவீனமாக இருப்பது அல்லது சரியாகச் செயல்படாமல் இருப்பதாகும். இந்தத் தசைகள் சிறுநீரின் கடைசி சில துளிகளை வெளியே தள்ள உதவுகின்றன. அவை பலவீனமாக இருந்தால், சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் பாதையில் தங்கி, பின்னர் வெளியே கசியும். இந்தப் பிரச்னை வயது முதிர்ச்சியால் மட்டுமே ஏற்படுவதாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால் அது இளம் ஆண்களுக்கும் ஏற்படலாம். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக எடையுடன் இருப்பது, தவறான சிறுநீர் கழிக்கும் பழக்கங்களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி எப்போதும் பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையது என்ற பொதுவானதொரு தவறான புரிதலும் உள்ளது. சில நேரங்களில் பிராஸ்டேட் சுரப்பி வீக்கமடைவது இந்தப் பிரச்னைக்குக் காரணமாக அமையலாம். ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பிராஸ்டேட் நோய் இருப்பதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், பி.எம்.டி உடலில் ஏற்படும் எந்தவொரு சேதம் அல்லது கட்டமைப்புப் பிரச்னையாலும் ஏற்படுவதில்லை. இதுவொரு "செயல்பாட்டு" பிரச்னையாகும். அதாவது, இது தசைகள் செயல்படும் விதத்துடன் தொடர்புடையது. பி.எம்.டி-யுடன் வேறு அறிகுறிகளும் இருந்தால், அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு, பலவீனமான சிறுநீர் ஓட்டம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி கழிவறைக்குச் செல்லுதல், சிறுநீரில் ரத்தம், அடிவயிற்றில் அதாவது இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவர்கள் சிறுநீர்ப் பாதை தொற்று, சிறுநீர்க் குழாய் சுருக்கம், அல்லது பிராஸ்டேட் அழற்சி போன்ற பிற நிலைகள் குறித்தும் பரிசோதிக்கலாம். பட மூலாதாரம்,Getty Images கண்டறியும் வழிமுறையும் எளிய தீர்வும் ஒருவருக்கு சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளதா என்பதைக் கண்டறிய, மருத்துவர்கள் பொதுவாக முதலில் அந்த நபரின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டு, ஓர் எளிய உடல் பரிசோதனையைச் செய்வார்கள். சில நேரங்களில், அவர்கள் யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் எவ்வாறு பாய்கிறது என்பதைச் சரிபார்க்க) அல்லது சிறுநீர் பகுப்பாய்வு (சிறுநீரில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனச் சரிபார்க்க) போன்ற சோதனைகளைப் பரிந்துரைக்கலாம். சிகிச்சையின் மிக முக்கியமான பகுதி, இடுப்புத் தளப் பயிற்சிகளைச் சரியாகச் செய்வதாகும். "இந்த நோயறிதல் மருத்துவரீதியாக, அறிகுறிகளின் வரலாறு மற்றும் உடல் பரிசோதனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சில நேரங்களில், சிறுநீர் பகுப்பாய்வு அல்லது யூரோஃப்ளோமெட்ரி போன்ற சோதனைகள் அறிவுறுத்தப்படலாம். சிறுநீர் கழிப்பதை நிறுத்திய பிறகும் தொடர்ந்து சிறுநீர் வடிதல் போன்ற சில விஷயங்களை அந்த நபரே கவனிக்கக்கூடும். இருப்பினும், தீவிரமான காரணம் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய ஒரு முறையான மருத்துவப் பரிசோதனை அவசியம்," என்று தெரிவித்தார் மருத்துவர் அகில் கான். மேலும் அவர், "பி.எம்.டி-ஐ நிர்வகிப்பதில் இடுப்புத் தளத்திற்கான உடற்பயிற்சிகள் மிக முக்கியமானவை. 'சிறுநீர்க் குழாய் மில்கிங்' என்பது சிறுநீர் கழித்த பிறகு விதைப்பையின் பின்புறத்தில் மென்மையான அழுத்தத்தைக் கொடுப்பதாகும். இது மீதமுள்ள சிறுநீரை வெளியேற்ற உதவுகிறது. கெகல் பயிற்சிகளைத் தவறாகவோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ செய்வது பொதுவாக நடக்கும் ஒரு தவறு. அதற்குச் சரியான வழிகாட்டுதல் அவசியம். தொற்று அல்லது பிராஸ்டேட் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்னை இல்லாவிட்டால், இதற்கு மருந்து தேவையில்லை," என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி-யுடன் காணப்படும் தீவிர பிரச்னைகளின் அறிகுறிகள் ஒருவருக்கு பி.எம்.டி-யுடன் மற்ற அறிகுறிகளும் இருந்தால், அதுவொரு தீவிரமான உடல்நலப் பிரச்னையாக இருக்கலாம். சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் அல்லது கால்களுக்கு இடையில் வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் அல்லது அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் ஆகியவை எச்சரிக்கைக்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவை சிறுநீர் பாதையில் அடைப்பு, தொற்று அல்லது சுருக்கம் போன்ற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டலாம். கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஷ்யாம் வர்மா இதுகுறித்து விரிவாக விளக்கினார். "பி.எம்.டி-யுடன் சிறுநீரில் ரத்தம், வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அது வெறும் பி.எம்.டி பிரச்னையாக மட்டுமே இருக்காது. வேறு சிக்கலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே அது கவனிக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். பி.எம்.டி மற்ற சிறுநீர் பிரச்னைகளுடன் சேர்ந்து ஏற்படலாம். உதாரணமாக, அதீத சிறுநீர்ப்பை செயல்பாட்டில், ஒருவருக்கு ஏற்கெனவே அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு இருக்கும். அதனால் சிறுநீர் கழித்த பிறகு சொட்டு சொட்டாக வெளியேறுவது இன்னும் மோசமாக உணரப்படும். சிறுநீர்க்குழாய் குறுகினால் (சிறுநீர்க்குழாய் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது), சிறுநீரின் கடைசிப் பகுதி சரியாக வெளியேறாமல் போகலாம். பிராஸ்டேட்டிடிஸ் நோயில், இடுப்புத் தசைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி சிறுநீர் சொட்டுசொட்டாக வெளியேறுவதை அதிகரிக்கலாம். "சிறுநீர்க் குழாய் முழுமையாகக் காலியாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால், சிறுநீர்ப் பையின் அதிக உணர்திறன், சுருக்கங்கள், பிராஸ்டேடிடிஸ் நோயால் ஏற்படும் அழற்சி ஆகிய அனைத்தும் சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியேறுவதற்கு காரணமாகலாம்," என்று கூறுகிறார் மருத்துவர் வர்மா. பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி பிரச்னை எவ்வாறு கண்டறியப்படுகிறது? மருத்துவர்கள் முதலில் இதுகுறித்து விரிவான கேள்விகளைக் கேட்பதன் மூலம் பரிசோதனையைத் தொடங்குகின்றனர். சிறுநீர் வடிதல் எப்போது நிகழ்கிறது, எவ்வளவு சிறுநீர் கசிகிறது, சிறுநீர் கழிக்கும்போது ஏதேனும் எரிச்சல் அல்லது வலி உள்ளதா, இது அன்றாட வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பன போன்ற கேள்விகளை அவர்கள் கேட்கின்றனர். இதற்குப் பிறகு, உடல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். தேவைப்பட்டால், பிரோஸ்டேட் சுரப்பியையும் பரிசோதிக்கலாம். சிறுநீர் பரிசோதனை (சிறுநீரைச் சோதிக்க), யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் வெளியேறும் வேகத்தை அறிய), சிறுநீர் கழித்த பின் சிறுநீர்ப்பையில் எஞ்சியிருக்கும் சிறுநீரின் அளவை அளவிடுதல் (post-void residual measurement) போன்ற சில எளிய பரிசோதனைகளும் செய்யப்படலாம். ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவர்கள் சிஸ்டோஸ்கோபி (Cystoscopy) அல்லது இமேஜிங் ஸ்கேன்கள் போன்ற இன்னும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைக்கலாம். பி.எம்.டி நிலையாகத் தொடர்ந்தாலோ, தீவிரமடைந்தாலோ, அசௌகரியத்தை ஏற்படுத்தினாலோ, அல்லது எரிச்சல், வலி, சிறுநீரில் ரத்தம், அல்லது பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்பட்டாலோ, அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக இளம் ஆண்கள் இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. பெரும்பாலான நேரங்களில், லேசான அளவிலான பி.எம்.டி ஆபத்தானது அல்ல. ஆனால் இதுவொரு பெரிய உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்குமாயின், நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். பெரும்பாலும், பி.எம்.டி-யின் மிகப்பெரிய தாக்கம் மனநலத்தின் மீதே ஏற்படுகிறது. இது மன அழுத்தம் மற்றும் கூச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடும். பட மூலாதாரம்,Getty Images வீட்டிலேயே அவதானிப்பது எப்படி? சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டில் ஓர் எளிய "சிறுநீர்ப்பை நாட்குறிப்பை" வைத்திருக்கலாம். அதில், எப்போது சொட்டுசொட்டாக சிறுநீர் வடிதல் ஏற்படுகிறது, அது எவ்வளவு அதிகமாக நிகழ்கிறது, எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள், சிறுநீர் கழித்த பிறகு சிறிது நேரம் காத்திருப்பது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பனவற்றைக் குறித்து வைக்கலாம். ஆனால், இந்தக் குறிப்புகளை வைத்திருப்பதால் மருத்துவரை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று அர்த்தமல்ல. இந்தப் பிரச்னை மோசமடைந்தால், மருத்துவ உதவி நிச்சயமாக அவசியம். "இந்த நாட்குறிப்பு பயனுள்ளது. இந்தப் பிரச்னையின் போக்கு குறித்துத் தெளிவான புரிதலை ஏற்படுத்த இது உதவுகிறது. ஆனால் அறிகுறிகள் தொடர்ந்தால், சுய கவனிப்பு மட்டுமே போதாது, பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்," என்று மருத்துவர் ஷ்யாம் வர்மா விளக்குகிறார். மேலும் அவர், "சில சொட்டுகள் மட்டும் வடிந்தால், அதற்குப் பெரிய காரணம் இருந்தால் மட்டுமே மருந்து தேவைப்படும். தனிப்பட்ட அளவில் பி.எம்.டி மட்டும் இருந்தால் மருந்துகள் அரிதாகவே பரிந்துரைக்கப்படுகின்றன. இடுப்புத் தளப் பயிற்சி மற்றும் சிறுநீர்க் குழாய் மில்கிங் போன்ற பயிற்சிகள் பி.எம்.டி-க்கான மிகவும் பயனுள்ள, ஆதாரங்கள் அடிப்படையிலான பலனளிக்கும் நுட்பங்களாகும்," என்று கூறினார். மருத்துவர் வர்மா கெகல் பயிற்சிகள் பற்றிய சில முக்கியக் குறிப்புகளையும் விளக்கினார். "தவறான தசைகளை இறுக்குவது, வயிற்று, பிட்ட அல்லது தொடைத் தசைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, மூச்சை அடக்கி வைப்பது, ஒழுங்கற்ற முறையில் உடற்பயிற்சி செய்வது, சில நாட்களில் உடனடிப் பலன்களை எதிர்பார்ப்பது போன்றவை மிகப்பெரிய தவறுகளாகும். பல ஆண்கள் 'இறுக்குதல்' பயிற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் இடுப்புத் தளத்தை எவ்வாறு சரியாகச் சுருக்குவது என்று அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. உடற்பயிற்சியின் தீவிரத்தைவிட, அவர்கள் செய்யும் பயிற்சியின் நுட்பமே மிகவும் முக்கியமானது." பி.எம்.டி-யால் ஏற்படும் மனநல சிக்கல்கள் சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை ஒரு தீவிரமான மருத்துவ நோயல்ல என்றாலும், அது ஒருவரை உளவியல் ரீதியாகப் பாதிக்கக்கூடும். இதன் காரணமாகப் பல ஆண்கள் கூச்சம், பதற்றம், தன்னம்பிக்கை இழப்பு ஆகியவற்றை உணர்கின்றனர். தங்கள் ஆடை ஈரமாகிவிடுமோ அல்லது கறைபட்டுவிடுமோ என்ற கவலையில் சிலர் வெளியே செல்வதையோ அல்லது பிறரைச் சந்திப்பதையோகூட தவிர்க்கக்கூடும். இதுகுறித்துப் பேசிய மருத்துவர் ஷ்யாம் வர்மா, "பல நோயாளிகள், பி.எம்.டி பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் இதுவொரு பொதுவான, சிகிச்சை அளிக்கக்கூடிய குறைபாடு என்பதால், இதற்காக கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறுகிறார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... ஒருவர் தனது அன்றாட வாழ்வில் உணவுமுறையை மாற்றுவது அல்லது உடற்பயிற்சிகளைச் செய்வது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ஒரு மருத்துவர் மற்றும் தகுந்த பயிற்சி பெற்ற நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். முதலில் ஒரு மருத்துவரிடம் சென்று முறையான பரிசோதனைகளைச் செய்துகொள்வதே இதற்கான மிகச் சிறந்த வழிமுறை. அதன் மூலம் பிரச்னையைத் தெளிவாகப் புரிந்துகொள்வது, பின்னர் அவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதற்கு உதவும். சுருக்கமாகக் கூறினால், பி.எம்.டி என்பது உயிருக்கோ உடலுக்கோ ஆபத்தான பிரச்னையல்ல என்றாலும், அது ஒருவரின் தன்னம்பிக்கையையும் மன அமைதியையும் பாதிக்கக்கூடியது. இதற்கு சரியான மருத்துவ உதவியைப் பெறுவதன் மூலம், இந்த நிலையை வெகுவாக மேம்படுத்திக்கொள்ள முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20344lrly6o
-
கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டாம் - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை
கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை 29 Mar, 2026 | 09:27 AM வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள், சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டாம். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை கூட காவு வாங்கியுள்ளனர். இது ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்ச கதையாக பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை ஒழுங்கு படுத்தி அனுமதி பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக ஒரு கியூப் மண் 7500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர் மண் 23 ஆயிரத்திற்கு பெற முடியும். யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால், சுமார் 55 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரத்திற்கும் மண்ணை விநியோகிக்க முடியும். சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர் மண்ணை ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். அவ்வாறான மண் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள் சில பொலிஸார் உள்ளனர் என்பதும் எமக்கும் தெரியும் கடந்த கால அரசாங்கங்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் விளையாட்டு கட்டலாம் என நினைக்க வேண்டாம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறை செய்தால் 20 இலட்ச ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். அத்துடன் பொலிசாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக இருக்காது , மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம். மாஃபியாக்களுக்கு மக்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க பயப்படுகிறார்கள். அதனால் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க மிக விரைவில் தொலைபேசி இலக்கங்களை அறிவிப்போம். அதனூடாக அவர்கள் தகவல்களை தெரியப்படுத்த முடியும். இவ்வாறான செயற்பாடுகளை தனியே பொலிஸாரோ , அரசாங்கமோ கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/242184
-
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல் Mar 29, 2026 - 10:51 AM இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய 3 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு குறித்த வழக்கினூடாக இந்த டிஜிட்டல் முறைமை பரிசீலிக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கமான காகிதக் கோப்புகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் கோப்புகளை நீதியரசர்கள் கணினி மூலம் பரிசீலித்தனர். பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற பதிவாளர் மனோதி ஹேவாவசம் தெளிவுபடுத்தியதுடன், அதன் மீது டிஜிட்டல் கையொப்பமிட்டு மின்-முறைமையில் பதிவேற்றியதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026 மே 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் "E-court" திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உயர் நீதிமன்றத்தாலேயே இந்தச் செயலி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இந்த E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnbb5ai4000d356p2oaomw8t
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
3 விக்கெட், 3 கேட்ச், 3 அதிரடி இன்னிங்ஸ்: ஆர்சிபியின் சாதனை வெற்றிக்கு காரணமான 3 விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது. பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200+ இலக்கை ஒரு அணி செய்த அதிவிரைவான சேஸ் இதுதான். இந்தப் போட்டியில் ஆர்சிபி பௌலர் ஜேக்கப் டஃபியின் பவர்பிளே ஸ்பெல், ஃபில் சால்ட்டின் சிறப்பான ஃபீல்டிங் மற்றும் அந்த அணி பேட்டர்களின் அதிரடி பேட்டிங் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக விளங்கின. டஃபி 3 விக்கெட் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவதற்குத் தயாராக இருந்தார் டஃபி. அப்போது வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டஃபி பற்றி "டி20 உலகக் கோப்பையில் டஃபியைப் போன்ற எண்கள் கொண்டிருந்தால், மறுபடியும் இங்கு வந்து பந்துவீசுவது எளிதாக இருக்காது. அவர் இங்கு தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் யாருக்கு எதிராகப் பந்துவீசப் போகிறார் என்று பாருங்கள்… இது அவருக்கு மிகமிகக் கடினமாக இருக்கப்போகிறது." என்று கூறினார்: பட மூலாதாரம்,Getty Images பீட்டர்சன் அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருந்தது... சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜேக்கப் டஃபிக்கும் நியூசிலாந்தின் பிற பௌலர்களுக்கும் எதிர்பார்த்துபோல் செல்லவில்லை. அன்று ஆமதாபாத்தில் 3 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார் டஃபி. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் டஃபியின் பந்துவீச்சை பதம்பார்த்தார்கள். அந்த செயல்பாட்டுக்குப் பின் ஜேக்கப் டஃபி விளையாடிய போட்டி இது. மறுபடியும் இந்தியாவில்… மறுபடியும் அபிஷேக்கிற்கு எதிராக. ஆனால், இவை மட்டுமே அவர் மீதான நெருக்கடியாக இருக்கவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் டஃபி அறிமுகம் ஆனதற்கான காரணம், ஜாஷ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியோடு இல்லாதது. 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி கோப்பை வென்றதற்கான மிகமுக்கியக் காரணமாக விளங்கியவர் ஹேசில்வுட். அந்த சீசனில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் டாப் விக்கெட் டேக்கராக விளங்கினார். அப்படியொரு தாக்கம் ஏற்படுத்திய வீரரின் இடத்தில் விளையாடியதால், ஹேசில்வுட் கொடுத்தது போன்ற செயல்பாடு எதிர்பார்க்கப்படும் என்ற நெருக்கடியும் டஃபி மீது இருந்தது. ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அனைவருமே பீட்டர்சன் சொன்னது போலத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால், அப்படியொரு நிலையில் தான் டஃபியிடமிருந்து பெங்களூருவில் 'ஆட்ட நாயகன்' செயல்பாடு வந்தது. பவுன்ஸ் அதிகமாக இருந்த அந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டிகளில் வீசுவதைப்போல் ஷார்ட் மற்றும் குட் லென்த்களுக்கு இடைப்பட்ட லென்த்திலேயே அதிகம் பந்துவீசினார் டஃபி. அவருடைய உயரத்தின் காரணமாக அவரது பந்துகள் கூடுதல் பவுன்சாக காரணமாக அமைந்தன. அதனால் அவர் பந்துவீச்சில் அடித்து ஆடுவது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. பட மூலாதாரம்,Getty Images முதல் ஓவரிலேயே அபிஷேக்குக்கு எதிராக ஒரு வாய்ப்பை உருவாக்கியிருந்தார் டஃபி. ஆட்டத்தின் மூன்றாவது பந்தில், பந்து பேட்டை விட்டு சற்று தள்ளிச் சென்றதால் அவுட் ஆகாமல் தப்பித்தார் அபிஷேக் ஷர்மா. ஆனால், டஃபி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இம்முறை டஃபி வீசிய ஷார்ட் பாலை அவர் பலமாக அடிக்க நினைக்க, பந்து டாப் எட்ஜாகி கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா கைகளில் விழுந்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டஃபிக்கு எதிராக 9 பந்துகளை சந்தித்த அபிஷேக் அதில் 29 ரன்கள் விளாசினார். அந்த அளவுக்கு டஃபிக்கு எதிராக அதிரடி காட்டினார் இந்திய ஓப்பனர் அபிஷேக். ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் அபிஷேக்குக்கு எதிராக 5 பந்துகள் வீசி, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார் டஃபி. அதே ஓவரின் கடைசிப் பந்தில் அவர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் வீழ்த்தினார். 'பேக் ஆஃப் லென்த்' பந்தை ஹெட் தூக்கி அடிக்க, டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ஃபில் சால்ட் அதை கேட்ச் பிடித்தார். டஃபி வீசிய மூன்றாவது ஓவரில், இன்னொரு ஷார்ட் லென்த் பாலுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்தது - அவருடைய மூன்றாவது விக்கெட். மணிக்கு சுமார் 134 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தில் நித்திஷ் குமார் பெரிய ஷாட் அடிக்க முயற்சிக்க பந்து டாப் எட்ஜாகி மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த அபிநந்தன் சிங் கைகளில் தஞ்சமடைந்தது. தொடர்ந்து கடினமான அந்த டெஸ்ட் போட்டி லென்த்களில் வீசி பேட்டர்களுக்குக் கடுமையான சவால் கொடுத்தார் டஃபி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரிடமிருந்து எதிர்பார்த்தது இதைத்தான்: ஹேசில்வுட் செய்யும் அதே வேலை. பட மூலாதாரம்,Getty Images சில தினங்களுக்கு முன்பு, மினி ஏலத்துக்கு தாங்கள் தயாரானது பற்றிய வீடியோக்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்டது. அதில் ஜேக்கப் டஃபியை வாங்கும் முடிவுக்கு வந்த விவாதங்கள் பற்றியும் பார்க்க முடிந்தது. அதில், ஹேசில்வுட்டுக்கு மாற்றாக அவர்கள் வாங்க நினைத்த முதல் வீரர் ஜேக்கப் டஃபி. ஹேசில்வுட் போல் உயரமான வீரர் என்பதால், அவரைப் போலவே உயரத்திலிருந்து பந்தை ரிலீஸ் செய்வார் என்பதாலும், சமீபமாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பதாலும், அவரையே முதல் இலக்காக வைத்திருந்தார்கள். அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கும் வாங்கினார்கள். அறிமுக போட்டியில், ஹேசில்வுட் போன்ற தாக்கத்தையே டஃபி ஏற்படுத்திவிட்டார். டஃபியின் செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் வேகப்பந்துவீச்சாளருமான யோமஹேஷ், "ஹேசில்வுட் இந்தப் போட்டியை ஆடியிருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதையே டஃபி செய்தார். ஆனால், இது எளிதான விஷயம் இல்லை. ஆர்சிபி போன்ற ஒரு நடப்பு சாம்பியன் அணிக்கு வந்து, ஹேசில்வுட் போன்ற ஒரு உலகத்தர வீரரின் இடத்தை நிரப்பும்போது பெரும் நெருக்கடி ஏற்படும். அதை சமாளித்து டஃபி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்" என்றார். மேலும் பேசிய அவர், "அவர் தெளிவான ஒரு திட்டத்தோடு வந்திருந்தார். சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் பந்துவீசும்போது பவுன்ஸ் சற்று கூடுதலாகக் கிடைக்கும். சீம் மூவ்மென்ட் இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். மேலும், அபிஷேக் & ஹெட் இருவருக்கும் எதிராக அவர் ஒரேயொரு தவறான பந்தை மட்டுமே வீசினார். மற்றபடி பேட் (pad) லைனில் வீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார். ஒரு சரியான திட்டத்தைத் தீட்டி அதை சரியாக அரங்கேற்றவும் செய்தார்" என்றும் யோமஹேஷ் கூறினார். சால்ட் பிடித்த 3 கேட்ச்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு விக்கெட் கீப்பர் ஃபீல்டிங்கில் ஜொலிப்பது அதிகம் பார்த்திட முடியாத விஷயம். அரிதாகவே நடப்பது. கீப்பிங் கடினம் என்றாலும், அதற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. கிளவுஸ் போட்டுக்கொண்டு, அதிகம் நகராமல் களத்தில் செயல்படும் கீப்பர்கள், அந்த கிளவுஸ் இல்லாமல் மைதானத்தின் முழு பரப்பிலும் செயல்படுவது முற்றிலும் வேறுபட்டது. ஆனால், விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் ஃபீல்டிங் செய்வது கடினமே இல்லாத ஒரு விஷயம் என்பதைப் போல் காட்டியிருக்கிறார். சன்ரைசர்ஸுக்கு எதிராக அவர் பிடித்த 3 கேட்ச்கள் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. டிராவிஸ் ஹெட் அடித்த பந்து அவர் இடுப்பு உயரத்துக்கு வந்தது. விரைந்து வந்த பந்தின் வேகத்தை சரியாகக் கணித்து, தன் உயரத்தைக் குறைத்து 'ரிவர்ஸ் கப்' முறையில் சிறப்பாக அந்தப் பந்தைப் பிடித்தார் அவர். கிளாசன் கேட்சை சால்ட் பிடித்தது விவாதத்துக்கு உட்படக்கூடியதுதான். சிலர் அவர் பவுண்டரி எல்லையைத் தொடவில்லை என்றும், சிலர் அவர் தொட்டுவிட்டார் என்றும் கருதுகிறார்கள். அது எப்படியாக இருந்தாலும், சால்ட் அதைப் பிடித்த விதம் அசாத்தியமானது. அவர் முதலில் நின்றிருந்த இடத்துக்கும் பவுண்டரி எல்லைக்கும் பெரிய இடைவெளி இல்லை. அப்படியொரு நிலையில் அவர் பின்னால் தன் உடல் பாரத்தைத் தள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது அவரையும் பின்னுக்குத் தள்ளியது. பவுண்டரி எல்லையுடனான இடைவெளி குறைவாக இருக்கும்போது அதைத் தாண்டாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆனால், பின்னால் அப்படியே கரணம் அடித்து எல்லையைத் தாண்டாமல் மைதானத்துக்குள்ளேயே இருந்தார் சால்ட். பட மூலாதாரம்,Getty Images அவர் பிடித்த மூன்றாவது கேட்ச் அதையெல்லாம் விடக் கடினமானது. இஷான் கிஷன் அடித்த பந்தை டீப் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் நின்றிருந்த அவர் வலது புறம் ஓடி ஒற்றைக் கையை நீட்டி டைவ் அடித்துப் பிடித்தார் அவர். யாருமே அப்படியொரு கேட்ச் பிடிக்கப்படும் என்று நினைத்திருக்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாதும் ஆர்சிபி வீரர்களுமே கூட அதை ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனுமே பார்த்தார்கள். ஹெட், கிளாசன், கிஷன் என மூன்றுமே மிகப் பெரிய விக்கெட்டுகள். அதிலும் கிளாசன் மற்றும் கிஷன் இருவரும் நன்கு ஆடிக்கொண்டிருந்த வீரர்கள். அந்தத் தருணங்களில் அப்படியான கடினமான கேட்ச்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் சன்ரைசர்ஸின் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும். அதிரடியான 3 இன்னிங்ஸ்கள் 202 ரன்களை சேஸ் செய்த ஆர்சிபி அதை 15.4 ஓவர்களிலேயே எட்டி ஐபிஎல் சாதனை படைத்திருக்கிறது. அந்த அணியின் ரன்ரேட்டும் பெருமளவு (+ 2.907) அதிகமாகியிருக்கிறது. இந்தப் பெரும் வெற்றிக் காரணம் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் பட்டிதார் ஆடிய அதிரடி ஆட்டம். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய படிக்கல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத்தான் இன்னிங்ஸைத் தொடங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர் டேவிட் பெய்ன், ஹர்ஷல் பட்டேல், நித்திஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட் என அனைவரின் பந்துவீச்சையும் அடித்து ஆடினார். அவருடைய 'டைமிங்' மிகச் சிறப்பாக இருந்தது. 21 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஒருவகையில் படிக்கலை விடவும் வேகமாக ஆடினார். அவர் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அதீத அதிரடி காட்டும் பட்டிதார், இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதே மாதிரியான அதிரடியைக் காட்டினார். அவர் அடித்த 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே ஸ்பின்னுக்கு எதிராக வந்தது. பட மூலாதாரம்,Getty Images படிக்கல் 234.61 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிச் சென்றிருக்க, பட்டிதாரோ 258.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருந்தார். அவர் அவுட்டானபோதே தேவைப்படும் ரன்ரேட் 6 ரன்களுக்கும் குறைவாகிவிட்டிருந்தது. கடைசி கட்டத்தில் விராட் கோலியுமே அதே அதிரடியைக் கையில் எடுத்து வழக்கம்போல் போட்டியை ஆர்சிபி-க்கு முடித்துக் கொடுத்தார். ஆரம்ப கட்டத்தில் சற்று நிதானமாக விளையாடியவர் மெல்ல ரன் ஸ்கோரிங் ரேட்டைக் கூட்டி ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 64வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த 3 அதிரடி இன்னிங்ஸ்கள் ஆர்சிபி அணி இந்த அதிரடி சேஸை அரங்கேற்றி சிறந்த ரன்ரேட்டும் பெற உதவியது. தங்கள் அணியின் அதிரடி பேட்டிங் பற்றிப் பேசிய கேப்டன் பட்டிதார், "சரியான திட்டமிடல் என்று எதுவும் இல்லை. ஆடுகளத்தை கணித்தோம், அது நன்றாக இருந்தது, அதற்கேற்ப ஆடினோம். படிக்கல் மற்றும் கோலியின் இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c145jvz16ndo
- Today
-
அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்
அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம் Mar 29, 2026 - 11:30 AM அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmnbcna85000f356puzf7zq5a
-
ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார்
ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார் Mar 29, 2026 - 08:02 AM ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போர்த் திட்டங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாரசூட் படைவீரர்களும் இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnb4kgfl0007356pb4v79e4v
-
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது. ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470306
-
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை. வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன. இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கனிய வள திருட்டுக்கள் , சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம். எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1470309
-
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
மணல் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை. வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: ‘மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 6 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். இது ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த’ கதையாக, பொலிஸாரின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை முறைப்படுத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக, ஒரு கியூப் மணலை 7, 500 ரூபாவுக்கு வழங்க முடியும். அதன்படி ஒரு டிப்பர் மணலை 23, 000 ரூபாவுக்குப் பெறலாம். யாழ்ப்பாணத்திற்கு அதனைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செலவுகளைக் கணித்தால், சுமார் 55, 000 முதல் 65, 000 ரூபாவுக்குள் மணலை விநியோகிக்க முடியும். ஆனால் சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மாஃபியாக்கள், ஒரு டிப்பர் மணலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான மாஃபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் இருப்பதை நாம் அறிவோம். எமது அரசாங்கத்திடம் இத்தகைய விளையாட்டுகள் செல்லுபடியாகாது. அத்துடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது; அது மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அமைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470297
-
கருத்து படங்கள்
- உலக வணிகம் டாலரை விட்டு போகுமா?
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!
இவரின் வாயால் ஒருநாள் மாட்டுவார் என எதிர்பார்த்திருந்தேன். ஒரு வைத்தியராகவும் சரியாக பணியாற்ற முடியவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காக செயற்பட முடியவில்லை, மொத்தத்தில் ஒரு பண்பாளனாக பேசவும் தெரியவில்லை. அவர் மக்களுக்காக பாராளுமன்றம் போகவில்லை, வைத்தியர் சத்தியமூர்த்தியை பாழிவாங்கப்போய் தன்னை தாழ்த்திக்கொள்கிறார். எத்தனை தடவை போலீஸ் நிலையம் அழைக்கப்பட்டிருக்கிறார், நீதிமன்றம் சென்றிருக்கிறார்? அத்தனையும் அவரது பிழையான தனி நடத்தைக்காகவே. இவர் அடுத்த சிலோன் ட்ரம்ப். ஒருநாளைக்கு நாமலை புகழ்ந்து அடுத்த ஜனாதிபதி என்பார், இன்னொருநாள் சஜித்துக்கு பின்னால் ஓடுவார், சுயமாக தன் இருப்பை தக்க வைக்க முடியாத கோமாளி, இவருக்கு வாக்கு போட்ட மக்கள் வெட்க்கித் தலை குனிய வேண்டும். இதில, நடிகர் விஜய்க்கு வக்காலத்து வேறு.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
“நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது- தமிழனின் சிற்பக் கலை.
வரதராஜ பெருமாள் - காஞ்சிபுரம்- உணவு செய்முறையை ரசிப்போம் !
கார சாரமான நெல்லூர் (ஆந்திரா) வெங்காய சட்னி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓரிடம் உன்னிடம் ( அந்த கால கிளுகிளுப்பு பாடல்) படம் : வீட்டுக்கு வந்த மருமகள் (1973) இசை: சங்கர் கணேஷ் பாடியோர்: TMS & வாணி ஜெயராம் வரிகள்: கண்ணதாசன்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- உலக வணிகம் டாலரை விட்டு போகுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.