stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த
என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த Mar 12, 2026 - 03:42 PM - 0 மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா? கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது? பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வியே. கேள்வி: உங்கள் காலத்தில் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: அவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது. இது சிறையில் அடைக்கும் காலமல்ல. கேள்வி: தற்போது சர்வதேசப் போரொன்று நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கிறீர்கள்? பதில்: பிரச்சினை ஏற்படும் தானே. நாட்டிற்கு, நாட்டின் எதிர்காலத்திற்குப் பிரச்சினை ஏற்படும். கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்: அரசாங்கம் செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும். https://adaderanatamil.lk/news/cmmnb4386000l356p5a3lobgd
-
மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி
மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம்; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை 12 Mar, 2026 | 02:38 PM அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மில்லியன்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் "பேரழிவு" நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் எச்சரித்துள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரை 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்முறையினால் காயமடைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உள்ளடங்குபவை: ஈரான்: 200 சிறுவர்கள் உயிரிழப்பு. லெபனான்: 91 சிறுவர்கள் உயிரிழப்பு. இஸ்ரேல்: 4 சிறுவர்கள் உயிரிழப்பு. குவைத்: 01 சிறுவர் உயிரிழப்பு. வன்முறை மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக நூறாயிரக்கணக்கான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன், இந்தப் போர் நெருக்கடியினால் மில்லியன்கணக்கான சிறுவர்கள் தமது கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "சிறுவர்களைக் கொலை செய்வதையோ, அங்கவீனப்படுத்துவதையோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதையோ எதனாலும் நியாயப்படுத்த முடியாது. இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 200 மில்லியன் சிறுவர்கள், உலகம் விரைவாகச் செயற்படும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்" என யுனிசெஃப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/240787
-
தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!
நவீன ஆயுதங்களுடன் பிடிபட்ட படகுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டன Mar 12, 2026 - 01:33 PM இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. ( M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmn5w90x000g356picapg6si
-
109 ஆவது பொன் அணிகளின் சமர்
109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் சென். பட்றிக்ஸ் - யாழ்ப்பாணம் கல்லூரி பலப்பரீட்சை 12 Mar, 2026 | 01:10 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டி அருட்தந்தை ரி.எம்.எவ். லோங் அடிகளார் ஞாபகார்த்த சவால் கிண்ணத்துக்காக விளையாடப்படுகிறது. 1917இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டி, வட மாகாணத்தின் மிகவும் பழைமையான மற்றும் பெருமைக்குரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக விளங்குகிறது. 2025ஆம் ஆண்டுவரை நடைபெற்று முடிந்த 108 பொன் அணிகளின் போரில் சென். பட்றிக்ஸ் கல்லூரி 35 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்லூரி 17 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது. 1973ஆம் ஆண்டு ஈட்டிய வெற்றிக்குப் பின்னர் அடுத்த வெற்றிக்காக 52 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் கல்லூரி கடந்த வருடம் அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. சிதம்பரலிங்கம் மதுசன் தலைமையில் யாழ்ப்பாணம் கல்லூரி 59 ஓட்டங்களால் கடந்த வருடம் வெற்றியைப் பதிவு செய்தது. சென். பட்றிக்ஸ் கல்லூரி கடைசியாக 2023இல் சிவராசா கீர்த்தன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது. 2025இலிருந்து இப் போட்டி மூன்று நாள் போட்டியாக நடத்தப்படுவது விசேட அம்சமாகும். இந்த வருடம் சென். பட்றிக்ஸ அணிக்கு பிரேமநாயகம் மதுசன் தலைவராகவும் யாழ்ப்பாணம் கல்லூரிக்கு ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் தலைவராகவும் விளையாடுகின்றனர். இரண்டு அணிளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் இந்த வருடப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மேலும் இப் போட்டியைக் கண்டுகளிக்கவென கனடா, ஐக்கிய இராச்சியம். நோர்வே, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பழைய மாணவர்கள் பெருமளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தத்தமது அணிகளுக்கு உற்சாகமூட்டுவதால் இப் போட்டி ஒரு கொண்டாட்ட விழாவாகவும் அமைகின்றது. இது இவ்வாறிருக்க, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்துக்கான 32ஆவது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத் தொடரிலும் சென். பட்றிக்ஸ் கல்லூரி 24 - 7 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும். இதில் சென் பட்றிக்ஸ் 4 வெற்றிகளையும் யாழ்ப்பாணம் கல்லூரி ஒரு வெற்றியையும் ஈட்டியுள்ளன. இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்திலேயே நடைபெறும். பொன் அணிகளின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமம் அனுசரணை வழங்குவதுடன் வீரர்களுக்கான சீருடைகளை அந் நிறுவனம் வழங்கியுள்ளது. இப் போட்டிக்கு டோக்கியோ சிமென்ட் குழுமம் இணை அனுசரணை வழங்குகிறது. அணிகள் சென். பட்றிக்ஸ்: பிரேமநாயகம் மதுசன் (தலைவர்), சிவநாதன் ஷெகான் (உப தலைவர்), ரொபின்சன் பியர்லி டெனோவன், காம்டின் லிக்ஷன், விமலதாஸ் டெஃபானோ, செரெனஸ் நிஷாந்தன் ஹரின் ஏட்றியன், மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா, ஜெபின்சன் கெமிஷன், டைட்டஸ் ஜோயேஷ், செல்வகுமார் ஸ்மித் செனாரி, ஜெயராஜரூபன் டினுலக்சன், ஜீவராஜ் மேகவர்ஷிகன், மெரின் ஹில்மன் தனுஷன், ரொக்ஷான் வொட்சன் செர்வின், அருள்ராஜன் அஷோபின், பிரதீப் மெலோடியஸ் ரவின், சுரேஷ்குமார் ஜானுசன், தேவராசா சஜீன் ஜோபேர்ட், ரொபின்சன் தேவ்சன், ஹென்றிக் விகாயகுமார் கியூட்வெஸ்லன். யாழ்ப்பாணம் கல்லூரி: ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (தலைவர்), வாசுதேவன் விஷ்னுகோபால் (உப தலைவர்), திவாகரன் கார்த்திகன், சசிகரன் சங்கீத், அன்ரனி ரித்மன் அபிநாத், ஸ்டெலன் கருணைதாஸ் ஹமிஷ் ஹாமிஷன், கீதேஸ்வரன் ஹரிஷன், அனுஷாந்தன் ஹாமிஷன், சுரேஷ் கபிஷன், சுபீசன் தக்சிகன், கேதீஸ்வரன் திருக்குமரன், உதயராஜா கென்றிக்சன், பாலரூபன் கெவின், சசிகரன் அஷ்மின், சத்திவேல் சதுஜன், ரவிகுமார் சாருஜன், சசிகாந்த் கிரிஷான், ராசஜெயந்தன் அஷ்வின், தயாபரன் அக்சயன். https://www.virakesari.lk/article/240784
-
அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு
அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு Published By: Vishnu 12 Mar, 2026 | 08:28 PM அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது , உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைத்தனர். அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் , என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர். அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240827
-
எரிபொருள் விலை உயர்வில் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் - ட்ரம்ப்
எரிபொருள் விலை உயர்வில் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் - ட்ரம்ப் Mar 12, 2026 - 08:34 PM ஈரானின் அதி உயர் தலைவரின் உரை ஒளிபரப்பப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் மூலம் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ட்ரூத் சமூக தளத்தில் அவர் தெரிவிக்கையில், அமெரிக்கா உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. எனவே எண்ணெய் விலை உயரும்போது, நாங்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு மிக முக்கியமானது, ஈரான் என்ற தீய பேரரசு அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதும், மத்திய கிழக்கு மற்றும் உலகை அழிப்பதைத் தடுப்பதும்தான். அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmnlhxnr000x356p1wine47b வியாபாரி நாட்டிற்கு தலைமை தாங்கினால்.....
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
அருமையான வரலாற்று விளக்கம். தெற்காசியாவின் Temu முஸ்லிம்கள் இதை ஏற்க தயங்க காரணம் கண்மூடித்தனமாம மதப்பற்று. எம்மை போன்ற மக்கள் கூட்டம் கூட இந்த புரிதல் இல்லாமல் இருப்பதும், சொன்னாலும் ஏற்க மறுப்பதும் ஏன் என்பதுதான் எனக்கு விளங்காத விடயம். இங்கே முக்கியம் பெறுவது ஐநா அல்ல -மாறாக 135 அங்கத்துவ நாடுகளின் இணை அனுசரனை.
- நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
தான் யுத்தம் மூலம் கைப்பற்றிய, கோலான் குன்றுகள் தவிர மிகுதி பல இடங்களை சிரியாவிடம், ஜோர்தான் நதியை ஓட்டிய கிழக்கு கரையை ஜோர்தானிடம், சினாய் பாலை வெளியை எகிப்திடமும் இஸ்ரேல் ஒப்பந்தங்கள் மூலம் தானாகவே மீள கொடுத்துள்ளது. தெற்கு லெபனானை கூட சில தடவை பிடித்து மீளக்கொடுத்துள்ளது. அப்படி இருக்க இஸ்ரேல் அண்டை நாடுகளை பிடித்து அகண்ட இஸ்ரேல் அமைக்கும் என்பது சரியாக படவில்லை. மேற்குகரை, ஏனைய பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பது உண்மை. ஆனால் உலக யுத்த முடிவில் உருவான Palestinian Protectorate இன் எல்லைகளுக்குப்பால் இஸ்ரேல் காலை அகட்ட விரும்புகிறது என்பதற்கு அதிக ஆதாரம் இல்லை. சூப்ரீம் லீடரின் பேச்சு என ஒண்டை சில மணி நேரம் முன்பு ஈரான் வாசித்தது. அமெரிக்க படை தளங்கள் அகலும் வரை போர் தொடருமாம்😂. ஹர்மூஸ் மூடலும் தொடருமாம். பண்ணியில் பண்ணி பாருங்கோவன்😂. ஈரானிய பெசீஜ் எனப்படும் மக்களை துன்புறுத்தும் உள்ளூர் பொலிஸ் காவாலிகளின் வீதி தடைகள் மீது இஸ்ரேல் நேற்றிரவு முதல் டிரோன் தாக்குதல் நடத்துகிறது. இந்த யுத்தம், காலாட்படைகளுக்கு பதில் தானியங்கிகள் இறங்கிய முதல் யுத்தம் என பதிவாகும் என நினைக்கிறேன். இப்போதைக்கு எண்ணை விலைக்கு ஏறுமுகம் என்பதை ஏற்கிறேன்.
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஓ….கேணல் தமிழ் சிறியின் கணிப்பு 😂
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
"அகண்ட இஸ்ரேல் உருவாக்க அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும்" என்று அதி வலதுசாரி இஸ்ரேல் கட்சிகள் கூட அறிக்கை விடவில்லை. எங்கே இதை அறிந்தீர்கள் எனச் சொன்னால் நாமும் அறிந்து கொள்ளலாம். இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்கி, ஆக்கிரமித்து வரும் ஒரு பிரதேசம் பலஸ்தீனம். இஸ்ரேலின் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை, பலஸ்தீனம் ஒரு அண்டை நாடு அல்ல. எனவே, குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்கிறார்கள். இதை சர்வதேச நாடுகள் பல ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில் இது தவறான விடயம். அண்டை நாடுகளைப் பொறுத்த வரையில் இஸ்ரேலின் கொள்கை அது உருவானது முதல் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுத்தால், தற்போது ஈரானுக்கு நடப்பது போல சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தாக்குவார்கள். தமக்கு அச்சுறுத்தல் தராத அரபு நாடுகளை எதுவும் செய்ய மாட்டார்கள். 1967 இல் 6-நாள் யுத்தம் சிறந்த உதாரணம். எகிப்து, சிரியா, சவூதி (மறைமுகமாக) இணைந்து இஸ்ரேலைத் தாக்க, மீளத் தாக்கிய இஸ்ரேல் 6 நாட்களில் இஸ்ரேல் நாட்டின் பரப்பளவை விட 2 , 3 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றியது. கடைசியில் எகிப்து சமாதான உடன் படிக்கை செய்தது, அதன் சினாய் நிலப்பரப்பு எகிப்திற்குத் திரும்பக் கொடுக்கப் பட்டது. சிரியா சமாதானத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை, சிரியாவிடம் இருந்து கைப்பற்றிய கோலான் குன்றுகள் இன்னும் இஸ்ரேல் வசம் தான் இருக்கின்றன. இவ்வளவு ஏன்? இஸ்ரேல், பலஸ்தீன நாடுகள் உருவாக்கவென பிரிட்டனால் ஒதுக்கப் பட்ட நிலத்தில் இருந்து , யூத வெறுப்பாளரான சேர்ச்சில் ஒரு துண்டைப் பிரித்து ஜோர்தானை உருவாக்க உதவினார். இஸ்ரேல் உருவான போது பலஸ்தீனர்களுக்கு உதவிய ஜோர்தான், பின்னர் அவர்களுடைய குரங்குச் சேட்டைகள் பொறுக்காமல் இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டது. இன்று வரை மேற்குக் கரைக்கு அக்கரையில் இருக்கும் ஜோர்தானுக்கு இஸ்ரேலினால் ஒரு தொல்லையும் இல்லை!
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இராணுவ இரகசியங்களை வெளியே சொல்லக் கூடாது.
- Today
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இப்படி யார் கணித்தனர்?
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி அஞ்சலி செலுத்தினர் இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. IBC Tamilசுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதா...சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தக...#################### ################# சுவிற்சர்லாந்தின் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இணுவிலை பூர்வீகமாககொண்ட இளைஞர் தினேஸ் கனகரத்தினம் (தவராசா) சாவடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்! 😥 சுவிஸ் காவற்துறை தரப்பினால் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. இது உறவுகளினூடாக கிடைத்த தகவல். Inuvaijur Mayuran வாழ வேண்டிய இள வயது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
வீதியோரம்.
மலர் . ........... 4. இப்பொழுதெல்லாம் இந்தப் பிரச்சினைகளால் விநோத்துக்கும் மணிமேகலைக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்தபடி இருக்கு. இதெல்லாம் மணிமேகலைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை……அதனால் என்ன செய்வது என்று அவள் யோசிக்கிறாள் …….ஒருநாள் ஒரு ஓய்வான நேரத்தில் விநோத்திடம் விநோ நீ ஒன்றைக் கவனித்தாயா …..! என்ன சொல்லுங்கோ…..! — இப்பொழுதெல்லாம் சாதுக்கள் இவ்வழியே போனாலும் இங்கு பிக்ஷை ஏற்க வருவதில்லை தெரியுமா…..! — ஓமக்கா நானும் அதைக் கவனித்திருக்கிறேன்….. ஆனால் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை…….! — எனக்கும் விளங்குது விநோ ….. நீயும் நானும் வீணாக சண்டை பிடிப்பதில் அர்த்தமில்லை. “ குதித்தோடிவரும் ஆமைக்குஞ்சுகளை தாய்போல் தாவியோடி வந்து தன் அலைக்கரங்களால் அரவணைத்து அழைத்து செல்லும் கடல்போல்” நாங்கள் நினைத்ததை விட எம்மையும் மீறி இந்த “வீதியோரக்கடை” மக்களிடையே பிரபலமாகி விட்டது . அது தானாகவே பலதரப்பட்ட மனிதர்களையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டிருக்கு அதுதான்……. என்றாலும் விநோ, நாங்கள் இங்கு நடக்கும் தப்பான காரியங்களைத் தடுக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.புரியுதா…… — ஓம் மேகலை, இனிமேல் நானும் முயற்சி செய்கிறேன் …… நீங்களும் கணக்க யோசிக்காதையுங்கோ…….! அன்று மதியம் வரை கடையில் நல்ல வியாபாரம் நடந்து முடிந்து விநோதன் ,மணிமேகலை, சுஜிதா, யுகேந்திரன் மற்றும் அங்கு தொழில் செய்யும் விலைமாதர் இருவரும் ஓய்வாக வாங்குகளில் அமர்ந்திருக்கிறார்கள். மணிமேகலை எழுந்துபோய் எல்லோருக்கும் தேநீரும் வடையும் கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு அந்த இரு பெண்களையும் பார்த்து நீங்களும் எடுத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு தானும் தனது தேநீரை எடுத்துக் கொண்டு சென்று வானொலியின் சத்தத்தை கொஞ்சம் அதிகரித்து விட்டு வந்து அவர்களுடன் அமர்ந்து கொள்கிறாள். வெளியே ஓரிரு லொறிகள், பேரூந்துகள் நிக்கின்றன. வானொலியில் எஸ்.பி.பி “என்காதலே என்காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்” என்று உருகி உருகிப் பாடுகின்றார். எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று மேகலை சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். இது இளையராஜா என்று நினைக்கிறேன் என்று அவள் சொல்ல, இல்லையக்கா என்று அந்த இரு பெண்களில் ஒருத்தி சொல்லி விட்டு இது ஏ .ஆர். ஆர் என்று சொல்கிறாள். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். வைரமுத்து அப்படி எழுதியிருப்பார். “காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் இனி மீள்வதா, இல்லை வீழ்வதா உயிர் வாழ்வதா இல்லை போவதா அமுதென்பதா, விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா” இந்த வரிகளின் செறிவினில் யுகேந்திரனையும் சுஜிதாவையும் தவிர ஏனையோரின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. அங்கு ஒரு கனத்த மௌனம்……யாரு யாரையும் ஆற்றுப்படுத்தவில்லை. அவரவர்களுக்குள்ளும் ஏதேதோ நினைவுகள், வலிகள். பின் சற்று தெளிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிற்றூண்டியுடன் சினேகமாக உரையாடுகின்றார்கள். இவர்கள் நால்வரின் கடந்த காலங்களும் நால்வருக்கும் ஓரளவேனும் தெரிந்தே இருக்கின்றது. பின்னேர சமையலுக்கு மேகலை ஆயத்தம் செய்ய, யுகேந்திரனும் சுஜிதாவும் விறகு சேகரிக்க காட்டுக்குள் செல்கின்றனர். எல்லோரும் கலைந்து போக மேகலையும் எதோ யோசனையில் நாடியில் கை வைத்தபடி இருக்கிறாள்.விநோதன் தான் இருந்த வாங்கில் அப்படியே கால் நீட்டிப் படுத்திருக்கிறான். அவன் ஒரு காலுடன் மற்றகாலை உரசுவதைப் பார்த்த மேகலை என்னடா கால் வலிக்குதா ….. — ஓம் மேகலை, மலை ஏற்றத்தில் சைக்கிளை உழக்கிக் கொண்டு போனது. அதுதான். — சொன்னால் நீ கேட்பதில்லை. ஸ்கூட்டரை அல்லது வானை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் தானே. — ஸ்கூட்டரை சுஜியும் வானை யுகேந்திரனும் கொண்டு போய் விட்டார்கள் மேகலை. — ஓ …. அதுக்காகவா அப்போது யுகேந்திரனை நீ கண்டிச்சனி. — ஓம் மேகலை, அவன் வானை கொண்டு போனதுக்காக அல்ல. அவனிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை, இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் எடுத்திடலாம். அதற்கிடையில் விபத்து நடந்தாலோ அல்லது போலீசில் பிடிபட்டாலோ பிரச்சினைதானே. அதுதான் கொஞ்சம் பொறுமையாய் இருடா என்று சொன்னனான். — சரி சரி விடு அவன் சின்னப்பொடியன்தானே ….. — மேகலை நீங்கள் அவனுக்கு நிறைய செல்லம் குடுக்கிறீங்கள் …..! — உனக்கென்ன தெரியும், இந்நேரம் இவன் வயதில எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு எண்டு . (அவள் தனக்குள் நினைப்பதை வெளியில் சொல்லவில்லை). சரி இரு வாறன் என்று சொல்லி எழுந்து சென்று ஒரு சிறிய “நோ எண்ணெய்” போத்தலுடன் வந்து அவனது இரு கால்களிலும் தொடையில் இருந்து பாதம் வரை நன்றாகத் தேய்த்து விட்டு விரல்களையும் ஒவ்வொன்றாய் இழுத்து இழுத்து நெட்டி முறித்து விடுகிறாள். அது அவனுக்கு சுகமாக இதமாக இருக்கின்றது. அவன் பரிவுடன் அவளைப் பார்க்க நினைவுகள் சில வருடங்கள் பின்னே போகின்றது.......! அன்று அவனை இரண்டுபேர் அவன் கை கால்களைக் கட்டி வைத்து அடித்து அந்த ஹாலில் போட்டு விட்டுப் போகிறார்கள். அங்கு சுவரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ சமையல் நிகழ்ச்சி போய்கொண்டு இருக்கு. ஒருவர் விதம் விதமாய் உணவுகள் செய்து குடுக்க சிலர் ஒரு வட்ட மேசையை சுற்றி இருந்து சுவை பார்த்து உண்கின்றனர். சற்று நேரத்தில் இவர்களுடன் இன்னும் இருவர் ஒரு பெண்ணை தர தரவென்று தரையோடு இழுத்து கொண்டு வருகிறார்கள்.அவள் ஆடைகள் அலங்கோலமாய் இருக்க அவள் ஈனஸ்வரத்தில் என்னை விடுங்கோடா என்னால் முடியல்லையடா என்று அரற்றுவது இவனுக்கு கேட்கிறது.அவர்கள் இவன் இருப்பதை பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண்ணை இம்சை செய்கிறார்கள். அவளும் இடைக்கிடை கைகால் கட்டுடன் தரையில் இரத்தம் ஒழுகக் கிடக்கும் இவனையும் பரிதாபத்துடன் பார்க்கிறாள். அவன் அந்தக் காட்சியைப் பார்க்க விரும்பாமல் மேலே டீ .வீ யைப் பார்க்க அதில் அவர்கள் கோப்பை நீருக்குள் கிடக்கும் சிகப்பு வைனில் வெந்த சிப்பியை எடுத்து முள்ளுக்கரண்டியால் பிளந்து சதையை குத்தி சாப்பிடுகிறார்கள்..........! மலர் .........🪷 4.
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
நானும்.... சீனா, தனது ஆயுதங்களை இஸ்ரேலில் பரீட்சித்துப் பார்க்கிறது என்றே நினைக்கின்றேன். 48 மணித்தியாலத்தில் போர் முடியும் என்று கணித்து, களத்தில் குதித்தவர்களுக்கு... இரண்டு கிழமை ஆகியும், இழுபறியில் நிற்பது அதிர்ச்சியாக உள்ளது.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஒரு நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம் என்று சொல்வதற்கும், அதை நடைமுறையில் சாதிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. இங்கே ஈரான் செய்வது இரண்டாவது வகை, அதாவது இஸ்ரேலினை முழுவதுமாக அழித்தல். ஆகவே, தன்னை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் விரோத அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு நிச்சயம் தனது பாதுகாப்புக் குறித்து அதீத கவனம் செலுத்தும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்தும் உச்சத்தில் வைத்திருக்கும், தனது எல்லைகளுக்கு அப்பால் எதிரிகளை தடுத்து நிறுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யும். அதைத்தான் இஸ்ரேல் இன்று செய்கிறது. பலஸ்த்தீனம் என்பது இஸ்ரேல் எனும் நாட்டிற்குள் ஆக்கிரமிப்பின் மூலம் உட்பிரவேசித்த அரேபியர்களின் வழித்தோன்றல்களால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பகுதி. பலஸ்த்தீனர்களுக்கு இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டே வந்தன. இரு தேச யோசனை முதன்முதலாக 1947 ஆம் (1) ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் முன்வைக்கப்பட்டபோது பலஸ்த்தீனிய அரபுத் தலைமை அதனை முற்றாக நிராகரித்தது. பின்னர் 2000 ஆண்டில் (2) அமெரிக்காவின் காம்ப் டேவிட் பேச்சுக்களின்போது இஸ்ரேலின் பிரதமர் இகுட் பராக்கினால் பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் காஸா உட்பட்ட பகுதியைப் பலஸ்த்தீன தேசம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜெருசலேத்தை இரு தேசங்களும் பொதுவான பகுதியாகப் பயன்படுத்தலாம் என்றும் பிரகடனம் செய்தபோது அன்றைய பலஸ்த்தீனத் தலைவர் யாசீர் அரபாத் அதனை நிராகரித்தார். பின்னர் 2008 இல் (3) இஸ்ரேலியப் பிரதமர் இகுட் ஒல்மேர்ட் 75 வீதமான மேற்குக்கரையினையும், கிழக்கு ஜெருசலேத்தின் பல பகுதிகளையும், இதற்கு மேலதிகமாக பலஸ்த்தீனர்கள் இழக்கும் பகுதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மாற்று நிலப்பரப்பினைத் தருவதாகவும் அறிவித்தபோது அன்றைய பலஸ்த்தீன ஜனாதிபதி மகுமூட் அப்பாஸ் அதனை நிராகரித்தார். பலஸ்த்தீனர்கள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இரு தேசக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்று வெளியுலகில் அவ்வப்போது காட்டி வந்தாலும்கூட, இஸ்ரேல் அதனை வெளிப்படையாக தர முன்வந்தபோது அகதிகள், இறையாண்மை, எல்லைகள் என்று சாட்டுக்களைக் கூறி நிராகரித்தே வந்திருக்கின்றார்கள். ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளால் இஸ்ரேலின் அணுகுமுறையும் இறுக்கமடையத் தொடங்கியது. குறிப்பாக 2024 ஐப்பசி 7 ஆம் திகதியன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு தேசக் கொள்கையென்பதை இஸ்ரேல் முற்றாகக் கைவிட்டு விட்டது. இன்று தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல இஸ்ரேல் தயாராகியிருப்பதாகவே தெரிகிறது. இரு தேசக் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுடன் ஒரு நாட்டில் சமத்துவமாக வாழ்வதை விரும்பாது, ஆயுதம் மூலம் இஸ்ரேலினை அழித்து வெற்றி காணலாம் என்கிற மமதையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பலஸ்த்தீனர்களின் (இல்லாத) தேசம் அரிக்கப்பட்டு வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து நீக்காத வரை ஓயமாட்டோம் என்ற அறிவிக்க பட்ட கொள்கையில் இருந்து, ஈரான், அதன் அல்லகைகளான ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மாறினால் - சாத்தியம்.
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 10 பாகம் 10 / “வெற்றிக்குப் பிறகு அமைதி” உடப்பு பள்ளியில் காலை சூரியன் ஆரவாரமின்றி அமைதியாக உதயமானது. பள்ளி முற்றமும் எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக இருந்தது, அங்கு பதட்டமும் காணப்படவில்லை. மாணவர்கள் ஒரே நோக்கத்துடன் அங்கு நகர்ந்தனர். சீருடைகளை மாணவர்கள் ஒரு கவசமாக உணரவில்லை. அவர்கள் உண்மையில் கவசமாக உணர்ந்தது தங்கள் மொழி தமிழைத்தான். ஆதன் வகுப்பறைக்குள் நுழைந்தான். கரும்பலகை காலியாக காத்திருந்தது - ஆசிரியரை எதிர்பார்த்து. ஆனால், ஆதன் முதலில் பாடப் புத்தகத்தைத் திறக்கவில்லை. ஆதன் மாணவர்களின் முகங்களைப் பார்த்தான். அதேவேளை, மாணவர்கள் எல்லோரும் ஆதன் ஆசிரியரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் - ஆனால் பயத்தால் அல்ல. ஒரு ஆழ்ந்த மூச்சுவுடன் ஆதன், “காலை வணக்கம்,” என்று மாணவர்களுக்கு கூறினான். அன்று ஆதனுக்கு ஒரு தயக்கமும் இல்லை. தணிக்கை செய்ய அதிகாரியும் இல்லை. எந்த கோப்புகளும் பதிவதற்கு இல்லை. பாடம் நேரடியாகத் தொடங்கியது. புத்தகத்திலிருந்து மட்டும் அல்ல, நினைவிலிருந்தும் அது தொடங்கியது - உரையாடலில் இருந்து - புரிதலில் இருந்து. எனவே, ஆதனால் அளவிடப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் - உயிருடன் இருந்தது. மாணவர்கள் ஆதனின் கற்பித்தலை சரியாக கேட்க முன்னோக்கு சாய்ந்தனர். அதிகாரம் அதைக் கோரியதால் அல்ல, ஆனால் ஆதனின் கற்பித்தலில் உள்ள உண்மை அவர்களை அழைத்ததால். மதியம் அளவில், பாடசாலை நடைபாதை வழியே பெற்றோர்கள் வகுப்பறைகளைக் கடந்து மெதுவாக நடந்து சென்றனர், அவர்கள் போகும் பொழுது வகுப்பறைக்குள் எட்டிப்பார்த்து, அமைதியாக கிசுகிசுத்துக்கொண்டு சென்றனர். அப்பொழுது சில ஆசிரியர்கள் சிரித்தனர். சிலர் அவர்களின் கண்களைத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தனர். ஆனால் யாரும் ஆதனுக்கு எதாவது தண்டனை கிடைக்குமா என்பது பற்றிப் பேசவில்லை. காலை வெயிலில் மூடுபனி போல, பெற்றோர்களின் பயம் கரைந்து போனது. ஆதனும் அதன் பின் நடைபாதை வழியாகச் சென்றான். ஒரு சிறிய கை அவன் மீது விழுந்தது. ஒரு மாணவன் கிசுகிசுத்தான்: “சார் ... நீங்கள் உங்கள் கற்பித்தல் முறையை மற்றும் உண்மையை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்துவதை நிறுத்தாததற்கு நன்றி.” கூறினான். ஆசிரியர் ஆதன் மெதுவாகப் பின்னால் அவனை அழுத்தி, நன்றி. ஆனால் வெற்றி அல்ல என்றான். அதேவேளை, சிலப்பம் மருத்துவமனையில், நோயாளிகள் மத்தியில் சமந்தி [செந்தூரி] நடந்துகொண்டு இருந்தாள். பாடசாலை செய்தி அங்கு சில நோயாளிகள் மூலம் அனைவரையும் எட்டியது. அங்கு நின்ற சிலர், சமந்தியிடம் ஆசிரியர் ஆதன் பற்றியும் , பள்ளிக்கூடத்தில் நடக்கும் சம்பவம் பற்றியும், ஆதன் எடுத்து இருக்கும் அல்லது பின்தொடரும் நிலைப்பாடு பற்றியும் கேட்டார்கள். அவள் அவர்களிடம் எளிமையாக, ஆனால் உறுதியாகச் சொன்னாள்: "ஆசிரியர் ஆதன், ஒரு உண்மையுள்ள நேர்மையான அறிவுள்ள மனிதனாக, எதைச் செய்ய வேண்டுமோ, அதை கச்சிதமாகச் [துல்லியமாக] செய்தார். [“He did what he had to do.”]" சமந்தியின் இதயம் அமைதியாக இருந்தது. ஆபத்து நீங்கியதால் அல்ல, ஆனால் தைரியம் பெருகிவிட்டதால். நீர்த்தொட்டிக்கு [சிங்க் / sink] அருகில் கொஞ்சம் அவள் நின்றாள். தண்ணீர் அங்கு ஓடிக்கொண்டு இருந்தது, ஆனால், அதை நிற்பாட்டிட அவள் இம்முறை அவசரப்படவில்லை. முதல் முறையாக, அமைதியான வெற்றியின் தாக்கத்தை, அதன் எடையை அவள் உணர்ந்தாள். சத்தமாக அதைக் கொண்டாட வில்லை . ஆனால் அது அவளுக்கு சுவாசிக்க போதுமானதாக இருந்தது. பள்ளியில் நடந்த நிகழ்வுக்குப் பிறகு, வாழ்க்கை திடீரென எளிதாக மாறவில்லை. வகுப்புகள் தொடர்ந்தன. அதிகாரிகளின் கண்காணிப்பும் தொடர்ந்தது. பயம் முழுமையாக மறையவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மாறியது. மாணவர்கள் ஒருமுறை பேசிவிட்டார்கள் — அந்த குரலை அவர்கள் இனி மறக்க முடியாது. பெற்றோர்கள் ஒன்றாக, அமைதியாக நின்று - நிற்பதே சக்தி என்பதை அறிந்துகொண்டார்கள். இது இனி ஒரு தனி ஆசிரியரின் கதையல்ல என்றாலும், இப்போதைக்கு அதன் விளைவுகளை தான் இன்னும் சந்திக்க நேரிடும் என்பதை ஆதன் புரிந்துகொண்டான். அவன் பின்னர் இடமாற்றம் செய்யப்படலாம், புறக்கணிக்கப்படலாம் அல்லது அமைதியாக தண்டிக்கப்படலாம். ஆனால் மிகவும் ஆபத்தான போர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். மருத்துவமனையில் அதே மாற்றத்தை சமந்தி [செந்தூரி] உணர்ந்தாள். மருத்துவமனையில் மக்கள் மேலும் மேலும் நேர்மையாக பேச ஆரம்பித்தார்கள். அபாயம் நீங்கியதால் அல்ல — தைரியம் ஒருவரிடம் மட்டும் இல்லை, பலரிடையே பரவியதால். எதிர்காலம் கடினம் என்பதை அவள் அறிந்தாள். ஆனால் இனி தனியாக இல்லை. அன்று மாலை நேரம், தங்கள் உடைகளில் ஒரு மாற்றத்துடன், ஆதன் வேட்டி சால்வையுடனும், சமந்தி அழகான கவுனுடனும், கடற்கரையில் சந்தித்தனர். ஆனால் ஏதோ ஒன்று மாறியது. அலைகள் மென்மையாக இருந்தன. காற்று மென்மையாக இருந்தது. தாங்கள் இன்னும் கண்காணிக்கப்படுவதை அவர்கள் அறிந்திருந்தனர். தங்களுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், மிகக் கடினமான போராட்டத்தில் இருந்து - உண்மையாக இருக்க தங்களுக்குள் போராடியதிலிருந்து - தாங்கள் தப்பிப்பிழைத்ததையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களின் வெற்றி அமைதியாக இருந்தது, ஆனால் அது உண்மையானது. கடல் தங்க நிறத்தையும் வெள்ளி நிறத்தையும் பிரதிபலித்து, மெதுவாக நகர்ந்தது. அவர்கள் அதை ரசித்தபடி, அமைதியாக ஒன்றாக நின்றனர். - அவர்கள் எதுவும் தங்களுக்குள் சொல்லாததால் அல்ல - உலகம் இறுதியாகக் அவர்களது வாதத்தை, உண்மையை காது கொடுத்து கேட்கத் தொடங்கியதால் [Not because they had nothing to say, but because the world was finally listening.]. வீடு திரும்பியதும், மென்மையான விளக்கு வெளிச்சத்தில், அன்று இரவு, ஆதன் தனது நாட்குறிப்பில்: "அதிகாரிகளின் மறைமுகமான, ஆனால் அமைதியான நடவடிக்கைகள், கூச்சலிடுதல் அல்லது வன்முறையால் அல்ல, மாறாக தலைவணங்க மறுத்த மக்களால்தான் உடைக்கப்பட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். பயம் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை, ஆனால் தைரியம் வளர்ந்து பரவியுள்ளது. என்றாலும், எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக இருக்கிறது, ஆனால் இந்த நேரத்தில், நாம் மனிதர்களாக இருக்க போதுமான சுதந்திரம் பெற்றுவிட்டோம். அது மட்டும் அல்ல, நிர்வாகத்தை தற்காலிகமாவது செவிசாய்க்க வைத்த, உடப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அமைதியான ஒற்றுமையான போராட்டம், அவர்களின் தலைமுறைகளும் கற்றுக்கொண்டால், நான் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, என்னை, இந்த தனி மனிதனை, என்னவென்றாலும் செய்து விட்டு போகட்டும்" என்று எழுதி, ஆதன் டைரியை மூடினான். வெளியே, இரவு மெதுவாக முணுமுணுத்தது. அலைகள் கிசுகிசுத்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது துளி/DROP: 2087 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/34256984190616790/?
-
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
ஓம் இதை எழுத மறந்து விட்டேன். நன்றி. அதேபோல் சீனா வெளிவிவகார அமைச்சு ஈரானின் மத்திய கிழக்கு தாக்குதலை கண்டித்துள்ளது. எங்கள் ஊரில் ஒரு மனநிலை தவறியவர் இருந்தார். அவருக்கு யாரும் கல்லெறிந்தால் போறவை வாறவை எல்லாரையும் பிடித்து அடிப்பார். அதை போல அரபுநாடுகள், துருக்கி, அசர்பைஜான், சமாதானம் பேசி கொண்டிருந்த ஓமான் என கண்ணை மூடி கொண்டு முல்லாக்கள் கல் எறிந்தது… சீனா உட்பட பலரை, இவர்கள் கைக்கு அணு ஆயுதம் போனால் என்ன நிலை என யோசிக்க வைத்துள்ளது.
-
புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்!
- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 130 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" இலங்கை வரலாற்று நூல்கள் நாகர்களை மனித மற்றும் பாம்பு வடிவம் கலந்த உயிரினங்கள் என விவரிக்கின்றன. ஆனால், இது ஒரு புராண வர்ணனை அல்லது தவறான புரிதல் எனக் கருதுகிறேன். ஏனெனில் நாகர்கள் உண்மையில் காந்தாரதேசம் (Ghandhara / Northern Pakistan and Afghanistan) முதல் இலங்கை வரை பரந்த பரப்பில் வாழ்ந்த உயர்ந்த நாகரிகம் கொண்ட, நன்கு வளர்ந்த சமூகமாகம் ஆவார்கள். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு, நாகர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கும், காலப்போக்கில், அவர்கள் ஆரம்பகால தமிழ் மக்களுடன் இணைந்திருக்கலாம் என்பதற்கும் கணிசமான சான்றுகள் உள்ளன. இது வரலாற்று, தொல்பொருள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது அல்லது ஆதரிக்கப்படுகிறது. பழமையான தமிழ் காவியம் சிலப்பதிகாரம் நூலில், புகார் (அல்லது காவேரிப்பட்டினம்), சோழ நாட்டின் தலைநகரமாகக் கூறப்படுகிறது. அது கடல் வெள்ளத்தால் (சுனாமி) சேதமடைவதற்கு முன்பு அல்லது அழிவதற்கு முன்பு, தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரமாக இது இருந்தது. சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் / 1. மங்கல வாழ்த்துப் பாடலில், புகார் நகரம் நாக நாட்டின் நீண்ட நாக நகரத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது நாகர்கள் உயர்ந்த நாகரிகத்தினை கொண்டவர்கள் அல்லது நன்கு வளர்ந்த மக்கள் என்ற புரிதலை வெளிப்படுத்துகிறது. இது இலங்கை வரலாற்று நூல்களில் காணப்படும் 'பாதி மனிதர் பாதி பாம்பு உருவம் கொண்ட மனிதர் அல்லாத உயிரினம்' என்ற கருத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது. இதை கட்டாயம் ஒரு வகையான பண்டைய கால இனவெறியின் வெளிப்பாடு என்று கூறலாம் என்று உணர்கிறேன். "ஆங்கு, பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும், நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே. அதனால், நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்," [1. மங்கலவாழ்த்துப் பாடல்] இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை என்கிறது. அதாவது ‘நெடிய நாக நகரோடும் நாக நாட்டுடனும் வைத்து எண்ணத்தக்க நீண்ட போகமும் புகழும் பொருந்திய புகார் நகர்’ என்கிறது கீழே உள்ள பாடல் வரிகள் சிலப்பதிகார காவியத்தில் இந்திர விகாரை என்ற பெயரில் புத்த விகாரையைப் பற்றி குறிப்பிடுகின்றன. சீன சமயப்பயணர்கள் [யாத்ரீகர்கள்] இதை பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். கோவலனின் பெற்றோர் தங்கள் செல்வம் மற்றும் உடைமைகள் அனைத்தையும் நன்கொடையாக அளித்து விட்டு இந்த விகாரையில் ஓய்வு பெற்றனர். தமிழர்கள் அந்த நேரத்தில் பல மதங்களைப் பின்பற்றி இருந்தனர். உதாரணமாக, சமணம், புத்தம், சைவம் மற்றும் பல. எனினும் கி.பி ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் சைவ மதம் எழுச்சி கொண்டது. எனவே பௌத்தர்கள் பெருமளவில் இலங்கையில் முகாமிட்டிருக்க வேண்டும். சமணம் கிட்டத்தட்ட அதன் அடித்தளத்தை இழந்துவிட்டது. சைவமும் வைணவமும் மீண்டும் காலூன்றின. ஆனால், இவை இரண்டும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால், இந்து மதத்தின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டது அல்லது இணைக்கப்பட்டது, உண்மையில் அவர்களின் நிர்வாக, அரசியல் மற்றும் சமூக உத்திகளின் [administrative, political, and social strategies] காரணத்தால் ஆகும். இது துணைக் கண்டத்திற்குள்ளும் உலக அளவிலும் இந்திய மதங்கள் எவ்வாறு அன்று அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது. அதாவது, சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), சக்தி (தேவி வழிபாடு) மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான மரபுகளை ஒரே இந்து சமயம் என்ற குடையின் கீழ் தொகுப்பதன் மூலம், அவர்கள் மக்கள்தொகையை சிறப்பாக வகைப்படுத்தலாம், வரி விதிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம் என்பதால் இருக்கலாம்? சுருக்கமாக, இது அவர்களின் வசதிக்காகவோ அல்லது அவர்களின் அறியாமையினாலோ நடைபெற்றது என்று கருதலாம். "அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி" [10. நாடுகாண் காதை] பாம்பின்மீது பள்ளிகொண்டிருந்த மணிவண்ணன் கோயிலை வலப்புறமாகச் சுற்றி வந்தனர். ஐந்து முரசுகளுடன் பசுமையான இலைகளைக் கொண்ட அரச மரத்தடி நிழலில் இருந்து அறம் சொன்ன அறவோன் புத்தனின் மாணவர்கள் அறம் உரைக்கும் ஏழு இந்திர விகாரைகள் வழியாகச் சென்றனர் என்கிறது இந்த பாடல் வரிகள். Part: 130 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The Ceylon chronicles depicts Nagas as kind of semi human semi snake variety. Nagas must be people living in the East or to the east of India, and a well developed community known from Ghandhara (Afghanistan) to Ceylon. Ceylon can also be considered east of Tamil Nadu. The ancient city of Puhar was very famous in the olden days and it was then the capital of Chola country. It must have been damaged during a deluge, perhaps due to Tsunami. It was the grandest city in the southern India before it was damaged by the deluge. In the verses given below, in the Epic Silappathikaram, the city of Puhar is compared with the lengthy Naga city of the Naga country. The few verses below are the comparison of the City of Puhar with the Naga city. These verses are in the Canto 1 of the Tamil Epic Silappathikaram. Nagas are well developed people as per this Tamil epic, but they are half snake and half human in the Ceylon chronicles, kind of ancient day racism. அதனால், நாகநீள்நகரொடுநாகநாடு-அதனொடு போகம், நீள்புகழ்மன்னும்புகார்-நகர்அது-தன்னில் The above lines can be summarised as ‘The city of Puhar is comparable with the lengthy Naga city and the Naga country’. The verses below mention about a Buddhist Vihara with the name Indra Vihara in the Epic Silappathikaram. Chinese pilgrims mention this as built by Mahendra, the younger brother of the Emperor Asoka. Parents of Kovalan donated all their wealth and belongings and retired to this Vihara. The Tamils were following many religions; Jainism, Buddhism, Saivism and many more. There was Saiva upheaval in the sixth and seventh centuries A. D. and the Buddhists must have decamped to Ceylon en-mass. Jainism almost lost its footing. Saivism and Vainavam took foothold, both of which were bracketed into Hinduism by the eighteenth century British Colonial officers for their convenience or because of their ignorance. பணைஐந்துஓங்கியபாசிலைப்போதி அணிதிகழ்நீழல்அறவோன்திருமொழி அந்தர-சாரிகள்அறைந்தனர்சாற்றும் இந்திர-விகாரம்ஏழ்உடன்போகி- நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி / Part: 131 தொடரும் / Will follow துளி/DROP: 2088 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130 https://www.facebook.com/groups/978753388866632/posts/34257765697205306/?- வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
அபிவிருத்தி உத்தியோகத்தராம் ...அங்கு வேலையில்லைத்தானே- அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
"கிணறு" கிண்டிய பிறகு (அதுவும் தலையால் கிண்டிய பிறகு) வந்த தண்ணீர் "உப்புத் தண்ணீர்" என்றால் அவர்கள் என்ன தான் செய்வார்கள்😎? ஆனால், அந்த நேரமே "நீங்கள் கிண்டுவது கிணறல்ல, சாக்கடைக் குழி" என்று முன்னெச்சரிக்கை கொடுத்தவர்கள் மீது தான் இன்னும் கடுப்பு அவர்களுக்கு!- இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
இன்னொரு தீர்மானம் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யாவினால் கொண்டு வரப் பட்டது. எவரையும் குறிப்பிடாமல் "அனைவரும் தாக்குதலை நிறுத்தி பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும்" என்ற தீர்மானம். 4 வாக்குகள் மட்டும் கிடைத்தன (ரஷ்யா, சீனா, சோமாலியா, பாகிஸ்தான்). கிடைக்க வேண்டிய 9 வாக்குகள் கிடைக்காமையால் தீர்மானம் எழுதிய பேப்பரை மீள் சுழற்சிக்காக அனுப்பி விட்டார்களாம்😂! உலகம் தெளிவாகத் தான் இருக்கிறது! - "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
Important Information
By using this site, you agree to our Terms of Use.