stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது. ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும். இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும். அதன் பின் என்னவானதோ அறியேன். பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன்.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இதனை பின்ட் செய்து விட்டால் இலகுவாக இருக்கும்..அவ்வப்போது வந்து பார்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முடியும்.
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
அண்ணை சம்பந்தமில்லாதை எல்லாம் கலர் கலரா எழுதுவதை பார்த்தால்… போதை பொருளுடன் மாட்டுப்பட்டவர் பார் சிறி குருப் எண்ட சந்தேகம் வலுக்கிறது😂
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி தம்பி. குசா அண்ணை, வாத்தியார் அண்ணை, நீங்கள், நான் ஒரு குழுவாக செயல்படுவோம். அனைத்து தகவல்களையும் இதே திரியில் பகிர்வோம். முடியுமானளவு. முதல் இலக்கு - காரைநகரில் 5, மூளாய், பொன்னாலை, சுழிபுரம் பகுதியில் 5 என 10 பயனாளர்களை இனம் காணல்.
- Today
-
2026 புத்தாண்டு நிகழ்வுகள்
கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது Dec 31, 2025 - 04:11 PM உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி, 32 தீவுகளையும் ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது. நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது. அவுஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இலங்கைக்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன. https://adaderanatamil.lk/news/cmjtvzin303cgo29n86esvuya
-
ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடும் பொலிஸார்! 31 Dec, 2025 | 11:54 AM லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியுள்ள இடம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடித்து கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (30) கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்ட ஜொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/234824
-
உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை
உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை Dec 31, 2025 - 01:30 PM 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளார். மிகச் சிறு வயதிலேயே உலகத் தரவரிசையில் உச்சத்தைத் தொட்டுள்ள தாவி சமரவீர, இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjtq7vgx03c4o29njm0t4hqo
-
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது - ஜனாதிபதி
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது - ஜனாதிபதி 31 Dec, 2025 | 10:45 AM அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் மதுவரித் திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதுவரித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்கான 227.4 பில்லியன் ரூபாவைத் தாண்டி 231.3 பில்லியன் ரூபா வருமான இலக்கை மதுவரித் திணைக்களம் எட்டவுள்ளதுடன், இது வரலாற்றில் முதல் முறையாக 102% வருமான இலக்காக அமைகின்றது. அரச வருமானம் எவ்வளவு ஈட்டப்படுகிறது என்பதிலே நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வருமானம் குறைந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், 2020-2021 ஆம் ஆண்டில் அரச வருமானம் பெருமளவில் குறைந்ததன் விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார். வாகனங்கள் மற்றும் கட்டிட வசதிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், குறிப்பாக நிறைவேற்றுப் பதவிகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை உள்ளக இணக்கப்பாட்டுடன், விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், மதுவரி கட்டளைச் சட்டத்தின் திருத்தம் மற்றும் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகியவை பற்றியும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன. தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.பீ.என்.ஏ. பேமரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234814
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா Dec 31, 2025 - 11:10 AM இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் அது 7.3 டிரில்லியன் டொலராக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகளின்படி, இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரதான பொருளாதார நாடாகவும் இந்தியா கணிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2023 ஆம் ஆண்டில் அண்டை நாடான சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாகவும் இந்தியா மாறியமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjtl7y7t03bqo29njt778hz5
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
திருத்தணி: மருத்துவமனையில் இருந்து ஒடிசா இளைஞர் வெளியேறியது ஏன்? - நடந்தது என்ன?
திருத்தணி: மருத்துவமனையில் இருந்து ஒடிசா இளைஞர் வெளியேறியது ஏன்? - நடந்தது என்ன? படக்குறிப்பு,'வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 30 டிசம்பர் 2025 "அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை" என்கிறார், திருத்தணி காவல்நிலைய ஆய்வாளர் மதியரசன். திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள், ஆயுதங்களால் தாக்கி ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கைதான சிறுவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது. ஒரு சிறுவனுக்கு சிறார் நீதிக்குழுமம் பிணை வழங்கியுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் காவல்துறை அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே டிசம்பர் 27 ஆம் தேதியன்று இளைஞர் ஒருவர் ரத்த காயத்துடன் விழுந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைக்கு கலரிங் அடித்த சில சிறுவர்கள் தன்னை ஆயுதங்களால் தாக்கியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்கிறது காவல்துறை. அதேநாளில் ரயிலில் பயணிக்கும் இளைஞர் ஒருவரை அரிவாளால் சில சிறுவர்கள் மிரட்டுவது போன்ற ரீல் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தென்பட்ட நபரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒடிசா இளைஞரும் ஒன்று எனத் தெரியவந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் முகவரியில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வந்தனர். மறுநாள் (டிசம்பர் 28) திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் வசிக்கும் ஒரு சிறுவனை கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின்படி மேலும் மூன்று பேரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை கூறுவது என்ன? தாக்குதலுக்கு ஆளான சூரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன் நான்கு சிறார்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் 30 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "வடஇந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒடிசா இளைஞர் அளித்துள்ள புகாரில், 'எங்களை முறைத்துப் பார்க்கிறாயா?' எனக் கேட்டு அடித்துள்ளதாகக் கூறியுள்ளார்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு பட்டா கத்தியை சிறுவர்கள் வைத்திருந்தனர். சிலருடன் முன்விரோதம் உள்ளதால் வைத்திருந்ததாகக் கூறினர். இவர்கள் மீது சிறிய புகார் தவிர வேறு புகார்கள் எதுவும் வரவில்லை. அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகளும் இரண்டு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனக் கூறினார். வழக்கில் பிடிபட்ட நான்கு சிறார்களும் சிறார் நீதிக்குழுமம் முன்பு டிசம்பர் 28 அன்று ஆஜர்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ள காவல்துறை, 'அதில் மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சிறாருக்கு சிறார் நீதிக்குழுமத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,Facebook படக்குறிப்பு,திருத்தணி ரயில் நிலையம் சிறுவர்கள் போதையில் இருந்தார்களா? இந்தநிலையில், போதை காரணமாக இதுபோன்ற சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 'தாக்குதல் தொடர்பான காணொளி காட்சியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது' எனக் கூறியுள்ளார். 'கைதான சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தையும் அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்' எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "நான்கு பேரும் போதையில் இருந்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். அவர்களைத் தாமதமாக கைது செய்தோம். அதனால் அவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை" என்கிறார் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன். இதே தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "அவர்கள் போதையில் இருந்தார்களா என்பது குறித்து தற்போதைய நிலையில் கூற முடியாது. அது விசாரணையில் உள்ளது" எனக் கூறினார். ஒடிசா இளைஞரின் பின்னணி என்ன? சிறுவர்களால் தாக்கப்பட்ட இளைஞர் குறித்துக் கேட்டபோது, "அவர் எங்கும் வேலை பார்க்கவில்லை. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்" என்கிறார் மதியரசன். "இளைஞருக்கு தங்குவதற்கு வீடு என எதுவும் இல்லை. இரவு நேரங்களில் புறநகர் ரயில்கள் கடைசி நிறுத்தத்தில் நிறுத்தப்படும். அதில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ரயில் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்" எனவும் காவல் ஆய்வாளர் மதியரசன் தெரிவித்தார். "இந்த வழக்கில் கைதான நான்கு பேரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி" எனவும் அவர் குறிப்பிட்டார். 'கண்காணிப்பு இல்லாத சிறுவர்கள்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் "கைதான சிறார்கள் யாரும் படிப்பதற்கு செல்லவில்லை. வெறுமனே ஊர் சுற்றி வந்துள்ளனர். பெற்றோரின் கண்காணிப்பு என்பதே இல்லாத நிலையில் வளர்கின்றனர்" என்கிறார் மதியரசன் . "அடிதடி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தன்னை கதாநாயகனைப் போல பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சிறுவர்கள் இறங்குகின்றனர். இது பெரியவர்களிடம் இருந்து தான் அவர்களுக்கு வருகிறது" என்கிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு. இதே கருத்தை முன்வைக்கும் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் மலையப்பன், "கதாநாயகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் சில சிறுவர்கள் மனதில் இருக்கும். அதை உள்வாங்கிக் கொண்டு இதுபோன்று ரீல்ஸ் வெளியிடுவதாகவே பார்க்க வேண்டும்" என்கிறார். "சினிமாவில் கதாநாயகனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்களோ, அதை அப்படியே பெரும்பாலான சிறுவர்களும் கடைபிடிக்கின்றனர். இதை சமூகத்தின் குறையாகவே பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார், மருத்துவர் மலையப்பன். 'ஒடிசா இளைஞர் எங்கே?' இதற்கிடையில், இந்த தாக்குதலை கண்டித்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பிற மாநில நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகள், பணியாற்றும் இடங்களில் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. 'தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒடிசா இளைஞர் தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவின. இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "மருத்துவரிடம் கூறிவிட்டு சொந்த மாநிலம் சென்றுவிட்டார். அதனை கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அரசுத் தரப்பில் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன" எனக் கூறினார். 'சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் சாந்தாராமனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஒடிசா இளைஞருக்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்" என்கிறார் அவர். தொடர்ந்து பேசிய மருத்துவர் சாந்தாராமன், "திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவருடைய காயத்துக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அதைப் பிரிப்பதற்கு கூட முதலில் அவர் எங்களை அனுமதிக்கவில்லை" என்கிறார். "ஒருகட்டத்தில், அவரது காயங்களை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு மீண்டும் கட்டு போட்டுவிட்டனர். அவர் பிடிவாதமாக இருந்ததால் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினோம். 'அவரும் சிகிச்சை பெறுவதற்கு விருப்பமில்லை' என எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்" என மருத்துவர் சாந்தாராமன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20k0x443x1o
-
அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது..! சவால் விடுக்கும் தையிட்டி காணி உரிமையாளர்கள்
தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிரூபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. நீங்கள் தென் இலங்கையை நோக்கி நகரப் போகிறீர்கள். தையிட்டி மக்களின் காணிகள் பற்றி தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். எத்தனை பரப்பு ஒரு ஏக்கர் என்று தெரியாத ஒரு வழக்கறிஞரும், எல்லோரையும் எத்தனையாம் தரம் படித்தார்கள் என்று கேட்கிற நாடாளுமன்ற உறுப்பினரும் தையிட்டிக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள். அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. செயலாளர் என்ற பெண்ணை தொடர்பு கொண்டு விளங்கப்படுத்தினேன். போராட்டத்தின் நிமித்தம் பிக்கு இறங்கி வந்திருக்கிறார். கொஞ்சம் காணியை விட்டு ஏமாற்றி விட நிற்கிறார்கள் இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு போய் பேசுகிறார். ஆதாரங்களை கொண்டு வழக்கை போடுங்கள் 24 மணி நேரமும் நேரலை போட்டு செல்கிறார்கள். நாம் எந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களை சந்திப்பது? நாங்கள் போராடுவதாகவும் கத்துவதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் போராடியே அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். வைத்தியர் கேதீஸ்வரனுக்கும் வைத்தியர் பிரணவனுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்திக்கும் எதிராக ஆதாரங்கள் இருக்கிறது என்று சொல்லி பல விடயங்களை சொன்னார். அந்த ஆதாரங்களை கொண்டு முதலில் வழக்கை போடட்டும். அந்த வழக்கை நடத்தி விட்டு இங்கு வாருங்கள். நேரம் ஒரு நேரம் உளறாமல் செயல்படுங்கள். நீங்கள் தகுந்த வைத்தியராக இருந்தால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு போகவில்லை என்று சொன்னால் எங்கள் பிரச்சினையில் இருந்து விலகுங்கள். கதைக்கும் போது நிதானமாக கதைக்க வேண்டும். உங்கள் வார்த்தை தடுமாறுகிறது. தமிழர் மரபை மீறி கதைக்கின்றீர்கள். கலாசாரத்தை மீறி கதைக்கின்றீர்கள். தேசிய தலைவரை பற்றி பேசுகிறீர்கள். அனைவரையும் எத்தனையாம் வகுப்பு படித்தது என கூறுகிறீர்கள். முன்னர் இந்த மண்ணை ஆண்டவர்கள் எத்தனையாம் தரம் படித்திருந்தார்கள் என்பதை தெரிந்திருந்தால் அது பற்றி கேட்க மாட்டீர்கள். வாகனத்துடன் கதைத்துக் கொண்டு நேரலை போட்டால் பொலிஸ் என்ன தண்டம் கொடுக்கும் என்று உங்கள் சகோதரை கேளுங்கள். ஆட்களை தனிப்பட்ட ரீதியாக தாக்க வேண்டாம். உங்கள் மீது மதிப்பு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கத்துவதற்கு ஆள் தேவை. சரியான விடயத்திற்கு அதை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். https://tamilwin.com/
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
சுத்து மாத்து சுமந்திரனின்... வளர்ப்பு எப்பிடி இருக்கு என்று பாருங்கோவன். தமிழரசு கட்சியை... சல்லியாய் நொருக்க, ஆபிரகாம் சுமந்திரன் படுகிறபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. சுத்துமாத்து சுமந்திரன் ஏற்கெனவே... நொருக்கி, பாடையில் ஏத்தி வைத்திருக்கிறதை, இந்த வருஷ கடைசி "டார்கெட்" ஆக "4 கிலோ கஞ்சா அசைன்மென்ட்" கொடுத்துள்ளார் சுத்துமாத்து. சென்ற கிழமை சுமந்திரனின் "அல்லக்கை" ஒன்று... கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இருந்த நிலையில்.. அது, ஆளும் கட்சி ஊத்திக் கொடுத்த சாராயத்தில் "நிறை வெறியில்" குப்புற கவுண்டு, ஆளும் கட்சிக்கு வாக்களித்த கேவலத்த்தால், தமிழரசு கட்சி தனது தவிசாளர் பதவியை ஆளும் கட்சியிடம் இழந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. இப்போ.... கஞ்சா கேசில், சுமந்திரனின் இன்னுமொரு தமிழரசு கட்சி அல்லக்கை உறுப்பினர் கைது. சுமந்திரன்... தொட்டதெல்லாம், சர்வகுலநாசம். சிங்களத்துக்கு செம்பு அடிக்கத்தத்தான் சுமந்திரன் லாயக்கு. வக்கீல் தொழிலும் தெரியாது, அரசியலும் தெரியாது.... என்ன இழவுக்கு கோட்டு, சூட்டுடன்... தான் ஒரு ஆள் என்று திரியுது தெரியவில்லை. இதற்குள் மாகாண சபை முதல்வர் கனவு வேறை.
-
ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்
இவர்களில் தவறு இல்லையென்றால் ஏன் ஓடி ஒளிகிறார்கள்?
-
செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம்
புடுங்கவேண்டிய ஆணிகளைவிட்டுப் புதிய ஆணிகளைத் தாமாகத் தேடிப்பித்து தமது தலையிலேயே அடித்துக்கொள்வதில் எங்கள் அரசியல்வியாதிகளை மிஞ்சிவிட இந்த உலகில் யாருமிலர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
மேல் உள்ள செய்திகள் தமிழ் பிபிசியில் போடமாட்டர்கள் .
-
செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம்
நல்லூர் பிரதேச சபையை நடத்துபவர்கள் ஆர். எஸ். எஸ் அமைப்பின் வழிநடத்தலில் உள்ளனரா?
-
கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!
கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்! ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று குற்றாம் சாட்டியுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் நிறைவேற்றப்பட்ட 2019 ஈரானிய சட்டம், வொஷிங்டனின் வழியைப் பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளிக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒட்டாவாவின் ரோயல் கனடிய கடற்படையை இந்தச் சட்டத்தின் எல்லைக்குள் வருவதாகக் தெஹ்ரான் கருதுவதாகவும், இதன் விளைவாக, அதை ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. Athavan Newsகனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறி
-
டிரம்பிற்கும் 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பத்திர சந்தைக்கும் இடையிலான மெல்லிய அமைதி
இந்த நிகழ்வு 2008 பின்னர் அதிகளவான வெளிநாடுகள் தமது அமெரிக்க இருப்பை குறைத்த முயற்சியாக கூறப்படுகிறது, அப்போதிருந்த பொருளாதார சிக்கல் போல் தற்போது இல்லை; ஆனால் அமெரிக்க இருப்பினை பேணுவதில் உள்ள ஆபாயம் தொடர்பான ஒரு அச்ச நிலை நாடுகளிடையே உருவாகியிருக்கிறது என கூறலாம். பொருளாதாரத்தினை ஆயுதமாக்கிய நிலை ஒரு முட்டு சந்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என கருதுகிறேன். வெளிநாடுகள் தமது இருப்புக்களை மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக குறைக்கின்ற நிலை அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல அதன் எதிர்காலத்தினையும் கேள்விக்குள்ளாக்கும் என கருதுகிறேன், தற்போது மத்திய வங்கி ஒரு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே தலியீடு செய்கிறது, ஆனால் இதனால் பக்கவிளைவுகள் உள்ளதால் பெருமளவில் மத்திய வங்கியால் எதுவும் செய்யமுடியாது (பணமுறிகளை வாங்குதல்). சில முக்கிய அமெரிக்க இருப்புக்களை குறைக்கும் நாடுகளிடம் உத்தியோக பற்றற்ற கோரிக்கையினை அமெரிக்கா கோரலாம், ஆனால் தற்போதய உலக நடப்பு நாடுகள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றன (இரஸ்சிய மத்திய வங்கியின் பணத்தினை ஐரோப்பிய ஒன்றியம் அபகரிக்க முயன்ற சம்பவங்கள்).
-
டிரம்பிற்கும் 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பத்திர சந்தைக்கும் இடையிலான மெல்லிய அமைதி
டிரம்பிற்கும் 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பத்திர சந்தைக்கும் இடையிலான மெல்லிய அமைதி 12/29/2025 அன்று இரவு 07:02 மணிக்கு AEDT வெளியிடப்பட்டது - 12/29/2025 அன்று இரவு 08:48 மணிக்கு AEDT திருத்தப்பட்டது. ராய்ட்டர்ஸ் பகிர் பிட்காயின் (BTC/USD) -0.09% US 10Y பணம் -0.235 என்பது யூரோ / அமெரிக்க டாலர் (EUR/USD) -0.15% பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் -0.13% நியூயார்க், டிசம்பர் 29 (ராய்ட்டர்ஸ்) - ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'விடுதலை தின' கட்டணங்கள் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க பத்திர சந்தையை கிளர்ச்சியில் தள்ளியதிலிருந்து, அவரது நிர்வாகம் மற்றொரு வெடிப்பைத் தடுக்க அதன் கொள்கைகளையும் செய்திகளையும் கவனமாக வடிவமைத்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் பலவீனமாகவே உள்ளது என்று சில முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். நவம்பர் 5 ஆம் தேதி, கருவூலத் துறை நீண்ட கால கடனை அதிகமாக விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டபோது, அந்த பலவீனத்தின் நினைவூட்டல் வந்தது. அதே நாளில், டிரம்பின் கடுமையான வர்த்தக கட்டணங்களின் சட்டபூர்வமான தன்மை குறித்த வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்கத் தொடங்கியது. இந்த ஆண்டு கடுமையாகக் குறைந்துள்ள 10 ஆண்டு பத்திர வருவாய், 6 அடிப்படைப் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது - இது சமீபத்திய மாதங்களில் மிகப்பெரிய தாவல்களில் ஒன்றாகும். அமெரிக்க கூட்டாட்சி பற்றாக்குறையின் அளவு குறித்து சந்தை ஏற்கனவே கவலையடைந்துள்ள நிலையில், கருவூலத் திட்டம் சில முதலீட்டாளர்களிடையே நீண்டகால பத்திர விளைச்சலில் மேல்நோக்கிய அழுத்தம் குறித்த அச்சத்தைத் தூண்டியது. இதற்கிடையில், உச்ச நீதிமன்ற வழக்கு, சந்தை வைத்திருக்கும் $30 டிரில்லியன் அரசாங்கக் கடனைச் சமாளிக்க ஒரு முக்கிய வருவாய் ஆதாரம் குறித்த சந்தேகங்களை எழுப்பியது. சிட்டிகுரூப் ஆய்வாளர் எட்வர்ட் ஆக்டன் நவம்பர் 6 அன்று வெளியிட்ட தினசரி அறிக்கையில் இந்த தருணத்தை "ஒரு யதார்த்த சோதனை" என்று அழைத்தார். டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துக்களை மேற்பார்வையிடும் வங்கிகளின் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் சொத்து மேலாளர்களுடன் ராய்ட்டர்ஸ் பேசியது. சமீபத்திய மாதங்களில் பத்திரச் சந்தைகளின் ஒப்பீட்டளவில் அமைதியான சூழலுக்குக் கீழே, நிர்வாகத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே தொடர்ந்து உயர்ந்த அமெரிக்க பற்றாக்குறை மற்றும் கடன் அளவுகள் குறித்து கவலை கொண்ட ஒரு விருப்பப் போர் நடந்து வருவதாக அவர்கள் கூறினர். அந்தக் கவலைகளைப் பிரதிபலிக்கும் விதமாக, "கால பிரீமியம்" என்று அழைக்கப்படுவது - கூடுதல் மகசூல் முதலீட்டாளர்கள் அமெரிக்கக் கடனை 10 ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை - சமீபத்திய வாரங்களில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. "அரசாங்கங்களையும் அரசியல்வாதிகளையும் பயமுறுத்தும் பத்திரச் சந்தைகளின் திறன் எதற்கும் இரண்டாவதல்ல, இந்த ஆண்டு அமெரிக்காவில் நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள்," என்று மெக்குவாரி சொத்து மேலாண்மையின் ஆராய்ச்சித் தலைவர் டேனியல் மெக்கார்மேக் கூறினார், ஏப்ரல் மாத பத்திர வீழ்ச்சியைக் குறிப்பிடுகையில், நிர்வாகம் அதன் கட்டண உயர்வுத் திட்டங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீண்ட காலமாக, பொது நிதியில் ஏற்படும் நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறுவது அரசியல் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும், ஏனெனில் வாக்காளர்கள் "அரசாங்க விநியோகத்தில் தொடர்ந்து ஏமாற்றமடைகிறார்கள்" என்று மெக்கார்மேக் கூறினார். முன்னாள் ஹெட்ஜ் நிதி மேலாளரான கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், மகசூலைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாக பலமுறை கூறியுள்ளார், குறிப்பாக 10 ஆண்டு பத்திரத்தில், இது மத்திய அரசின் பற்றாக்குறை முதல் வீட்டு மற்றும் பெருநிறுவன கடன் வரை அனைத்தின் விலையையும் பாதிக்கிறது. "கருவூலச் செயலாளராக, நாட்டின் சிறந்த பத்திர விற்பனையாளராக இருப்பது எனது பணி. மேலும் இந்த முயற்சியில் வெற்றியை அளவிடுவதற்கு கருவூல மகசூல் ஒரு வலுவான காற்றழுத்தமானியாகும்," என்று பெசென்ட் நவம்பர் 12 அன்று தனது உரையில் கூறினார், கடன் வாங்கும் செலவுகள் வளைவில் குறைந்துவிட்டன என்று குறிப்பிட்டார். இந்தக் கதைக்கான கருத்துக்கான கோரிக்கைக்கு கருவூலம் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற பொதுச் செய்திகளும், முதலீட்டாளர்களுடனான திரைக்குப் பின்னால் நடக்கும் தொடர்புகளும், டிரம்ப் நிர்வாகம் விளைச்சலைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் தீவிரமாக உள்ளது என்பதை சந்தையில் பலரை நம்ப வைத்துள்ளது. சந்தை செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக, கருவூலம் தொடர்ச்சியான திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் கொள்முதல்களை அதிகரிக்க முன்மொழிந்த பிறகு, பத்திர விலைகள் குறையும் என்று கோடையில் சில கட்டுக்கடங்காத பந்தயங்கள் இருந்ததாக தரவு காட்டுகிறது. முக்கிய முடிவுகள் குறித்து முதலீட்டாளர்களின் கருத்துக்களை கருவூலம் புத்திசாலித்தனமாக கேட்டுள்ளது, இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர் அவற்றை "முன்னேற்றம் கொண்டவை" என்று விவரித்தார். சமீபத்திய வாரங்களில், கருவூலம், பெடரல் ரிசர்வ் தலைவர் பதவிக்கான ஐந்து வேட்பாளர்கள் குறித்து பத்திர முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், சந்தை அவர்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்றும் கேட்டதாகவும் அந்த நபர் கூறினார். தேசிய பொருளாதார கவுன்சிலின் இயக்குனர் கெவின் ஹாசெட்டுக்கு அது எதிர்மறையாக எதிர்வினையாற்றும் என்று அவர்களிடம் கூறப்பட்டது, ஏனெனில் அவர் டிரம்பிலிருந்து போதுமான அளவு சுதந்திரமாக கருதப்படவில்லை. டிரம்ப் நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளால் தனக்காக நேரத்தை வாங்கிக் கொண்டதாகவும், அமெரிக்கா இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 சதவீத வருடாந்திர பற்றாக்குறையை நிதியளிக்க வேண்டியிருப்பதால், பத்திரச் சந்தையில் அமைதிக்கு அபாயங்கள் இருப்பதாகவும் பல முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்தின் லாபத்தை அதிகரிப்பதன் மூலம் ஊதாரித்தனத்தைத் தண்டிக்கும் முதலீட்டாளர்களை - பத்திரக் கண்காணிப்பாளர்களை நிர்வாகம் விலக்கி வைத்துள்ளது, ஆனால் அது நியாயமாக மட்டுமே என்று இந்த சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். வரிகளிலிருந்து வரும் விலை அழுத்தங்கள், செயற்கை நுண்ணறிவு தலைமையிலான சந்தை குமிழி வெடித்தல் மற்றும் ஃபெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை அதிகமாகத் தள்ளும் வாய்ப்பு ஆகியவை சமநிலையை சீர்குலைக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். "பத்திரக் கண்காணிப்பாளர்கள் ஒருபோதும் மறைந்துவிட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் இருப்பார்கள்; அவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியம்," என்று BNY வெல்த் மேனேஜ்மென்ட்டின் தலைமை முதலீட்டு அதிகாரி சினேட் கோல்டன் கிராண்ட் கூறினார். விஜிலண்டுகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான நிதிச் சந்தைகளை உறுதி செய்வதில் நிர்வாகம் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். "விரயம், மோசடி மற்றும் அரசு செலவினங்களில் துஷ்பிரயோகத்தைக் குறைத்தல் மற்றும் பணவீக்கத்தைக் குறைத்தல் ஆகியவை இந்த நிர்வாகத்தின் பல நடவடிக்கைகளில் சில, அவை அமெரிக்க அரசாங்கத்தின் நிதிகளில் நம்பிக்கையை அதிகரித்துள்ளன மற்றும் கடந்த ஆண்டில் 10 ஆண்டு கருவூல மகசூலை கிட்டத்தட்ட 40 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளன," என்று அவர் கூறினார். நிதி ரீதியாக பொறுப்பற்ற அரசாங்கங்களைத் தண்டிக்கும் வரலாற்றை பத்திரச் சந்தை கொண்டுள்ளது, சில சமயங்களில் அரசியல்வாதிகளின் வேலைகளை இழக்கச் செய்கிறது. மிக சமீபத்தில், ஜப்பானில், பிரதமர் சானே தகைச்சி தனது நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்த முயற்சிக்கும்போது பத்திர முதலீட்டாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் போராடி வருகிறார். டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கியபோது, பத்திர வர்த்தகர்களால் கவனிக்கப்பட்ட பல குறிகாட்டிகள் சிவப்பு நிறத்தில் மின்னின: மொத்த அமெரிக்க அரசாங்கக் கடன் ஆண்டு பொருளாதார உற்பத்தியில் 120% க்கும் அதிகமாக இருந்தது. ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் டஜன் கணக்கான நாடுகள் மீது பாரிய வரிகளை விதித்த பிறகு அந்த கவலைகள் மேலும் அதிகரித்தன. பத்திர வருமானம் - விலைகளுக்கு நேர்மாறாக நகரும் - 2001 க்குப் பிறகு வாராந்திர மிக உயர்ந்த உயர்வைக் கண்டது, ஏனெனில் பத்திரங்கள் டாலர் மற்றும் அமெரிக்க பங்குகளுடன் விற்கப்பட்டன. டிரம்ப் பின்வாங்கி, கட்டணங்களை தாமதப்படுத்தி, இறுதியில் அவர் ஆரம்பத்தில் முன்மொழிந்ததை விடக் குறைவான விகிதங்களில் அவற்றை விதித்தார். ஒரு சங்கடமான தருணம் என்று அவர் விவரித்ததிலிருந்து மகசூல் பின்வாங்கியதால், பத்திர சந்தையை "அழகானது" என்று அவர் பாராட்டினார். அப்போதிருந்து, 10 ஆண்டு கருவூல மகசூல் 30 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது, மேலும் பத்திர சந்தை ஏற்ற இறக்கத்தின் அளவீடு சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால், பத்திரக் கண்காணிப்பாளர்கள் அமைதியாகிவிட்டதாகத் தெரிகிறது. பத்திர சந்தைக்கான சமிக்ஞைகள் இந்த மௌனத்திற்கு ஒரு காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீள்தன்மை என்றும், AI தலைமையிலான பாரிய செலவினங்கள் சுங்கவரிகளால் ஏற்படும் வளர்ச்சியின் இழுபறியை ஈடுகட்டுகின்றன என்றும், வேலை சந்தை மந்தமாக இருப்பதால் பெடரல் ரிசர்வ் தளர்வு முறையில் உள்ளது என்றும் முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்; மற்றொரு காரணம், டிரம்ப் நிர்வாகம் மிதமிஞ்சிய விளைச்சலை விரும்பவில்லை என்ற சமிக்ஞையை சந்தைக்கு எடுத்துச் சென்ற நடவடிக்கைகள் என்றும் அவர்கள் கூறினர். ஜூலை 30 அன்று, கருவூலம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, பணமாக்க முடியாத கடனின் அளவைக் குறைக்கும் ஒரு திரும்பப் பெறும் திட்டத்தை விரிவுபடுத்துவதாகக் கூறியது. பத்திரங்களை வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்காக இந்த வாங்குதல்கள் செய்யப்படுகின்றன, ஆனால் விரிவாக்கம் 10-, 20- மற்றும் 30-ஆண்டு பத்திரங்களில் கவனம் செலுத்தியதால், சில சந்தை பங்கேற்பாளர்கள் அந்த மகசூலைக் கட்டுப்படுத்தும் முயற்சியா என்று யோசித்தனர். கடன் தொடர்பாக நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் வர்த்தகர்களின் குழுவான கருவூல கடன் ஆலோசனைக் குழு, நிலுவையில் உள்ள அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களின் சராசரி முதிர்ச்சியைக் குறைப்பதற்கான ஒரு வழியாக "தவறாகப் புரிந்து கொள்ளப்படலாமா" என்பது குறித்து அதன் உறுப்பினர்களிடையே "சில விவாதங்கள்" இருப்பதாகக் கூறியது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த நபர், மகசூலைக் கட்டுப்படுத்த கருவூலம் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை எடுப்பது, அதாவது ஒரு தீவிரமான திரும்பப் பெறுதல் திட்டம் அல்லது நீண்ட கால பத்திரங்களின் விநியோகத்தைக் குறைப்பது குறித்து சில முதலீட்டாளர்கள் கவலைப்படுவதாகக் கூறினார். கோடைகாலத்தில் இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, குறுகிய நிலைகள் - நீண்ட கால கருவூலப் பத்திர விலைகள் குறையும் மற்றும் மகசூல் அதிகரிக்கும் என்ற பந்தயம் - குறைந்ததாக தரவு காட்டுகிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் முதிர்வு காலம் மீதமுள்ள பத்திரங்களுக்கு எதிரான குறுகிய பந்தயம் ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாகக் குறைந்தது. கடந்த சில வாரங்களாக அவை மீண்டும் அதிகரித்து வருகின்றன. "நிதி அடக்குமுறையின் இந்த யுகத்தில் நாம் இருக்கிறோம், அரசாங்கங்கள் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி பத்திர விளைச்சலை செயற்கையாக மூடி வைக்கின்றன," என்று 193 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் ராக்ஃபெல்லர் கேபிடல் மேனேஜ்மென்ட்டின் ஒரு பகுதியான ராக்ஃபெல்லர் குளோபல் ஃபேமிலி அலுவலகத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜிம்மி சாங் கூறினார், இது "ஒரு சங்கடமான சமநிலை" என்று கூறினார். நீண்ட காலப் பத்திரங்களின் விநியோகத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கருவூலச் சீட்டுகள் மூலம் குறுகிய காலக் கடன் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவது போன்ற சந்தையை ஆதரிக்க கருவூலத் துறை பிற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. வங்கிகள் கருவூலப் பத்திரங்களை வாங்குவதை எளிதாக்க வங்கி ஒழுங்குமுறை அதிகாரிகளையும் அது கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை தோராயமாக மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஒரு வருடத்திற்கும் மேலான முதிர்ச்சியுடன் தனியார் துறைக்கு வழங்கப்படும் அமெரிக்க அரசாங்கக் கடனின் விநியோகம் 2025 உடன் ஒப்பிடும்போது அடுத்த ஆண்டு குறையும் என்று JPMorgan ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். டி-பில்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெடரல் அதன் இருப்புநிலைக் குறிப்பை முடித்துக்கொண்டுள்ளது, அதாவது அது மீண்டும் பத்திரங்களை, குறிப்பாக குறுகிய காலக்கெடு கடனை தீவிரமாக வாங்குபவராக மாறும். மேலும் டிரம்ப் நிர்வாகம் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக்கொண்டது, அத்தகைய கடனை வாங்கும் ஒரு புதிய குறிப்பிடத்தக்க வாங்குபவரை உருவாக்கியுள்ளது - ஸ்டேபிள்காயின் வழங்குநர்கள். சுமார் $300 பில்லியன் மதிப்புள்ள ஸ்டேபிள்காயின் சந்தை, தசாப்தத்தின் இறுதிக்குள் பத்து மடங்கு வளரக்கூடும் என்றும், கருவூல பில்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் பெசென்ட் நவம்பரில் கூறினார். "பத்திரச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை குறைவாக இருப்பதாக நான் உணர்கிறேன்; விநியோகம் மற்றும் தேவை அடிப்படையில் அதிக சமநிலை உள்ளது," என்று வெல்த் என்ஹான்ஸ்மென்ட் குழுமத்தின் போர்ட்ஃபோலியோ ஆலோசனை இயக்குனர் அயாகோ யோஷியோகா கூறினார். "இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது, ஆனால் இதுவரை அது வேலை செய்துள்ளது." இருப்பினும், பல சந்தை பங்கேற்பாளர்களின் கேள்வி என்னவென்றால், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதுதான். BofA இன் மூத்த அமெரிக்க விகித மூலோபாய நிபுணர் மேகன் ஸ்வைபர், பத்திரச் சந்தையின் தற்போதைய நிலைத்தன்மை, குறைந்த பணவீக்க எதிர்பார்ப்புகளின் "மெதுவான சமநிலையை" நம்பியுள்ளது மற்றும் கருவூலம் குறுகிய முதிர்வு வெளியீட்டை நம்பியிருப்பது, விநியோக கவலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியுள்ளது என்றார். பணவீக்கம் அதிகரித்து, மத்திய வங்கி முரட்டுத்தனமாக மாறினால், கருவூலங்கள் தங்கள் பல்வகைப்படுத்தல் முறையீட்டை இழக்க நேரிடும், இது தேவை கவலைகளை மீண்டும் தூண்டிவிடும் என்று அவர் கூறினார். பற்றாக்குறையை ஈடுகட்ட டி-பில்களை நம்பியிருப்பதும் அபாயங்களைக் கொண்டுள்ளது, மேலும் ஸ்டேபிள்காயின்கள் போன்ற சில தேவை ஆதாரங்கள் நிலையற்றவை. தற்போது பெடரல் ஆளுநராகப் பணியாற்றி வரும் வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தலைவரான ஸ்டீபன் மிரான், கடந்த ஆண்டு பைடன் நிர்வாகத்தை பெசென்ட் இப்போது எடுக்கும் அதே அணுகுமுறைக்காக விமர்சித்தார்: பற்றாக்குறையை நிதியளிக்க டி-பில்களை நம்பியிருந்தார். வட்டி விகிதங்கள் திடீரென அதிகரித்தால், அரசாங்கம் குறுகிய கால கடனை குவித்து வருவதாகவும், அதிக செலவில் மறுநிதியளிப்பு செய்ய வேண்டியிருக்கும் என்றும் மீரான் அப்போது வாதிட்டார். கருத்து கேட்க முயன்றபோது, ஃபெட் ஆளுநராக மத்திய வங்கி விகிதங்களை தீவிரமாகக் குறைக்க வாக்களித்து வரும் மீரான், செப்டம்பர் மாதம் ராய்ட்டர்ஸ் உரையில் தேசிய கடன் குறையும் என்று கணித்ததைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஏப்ரல் மாதத்தில் டிரம்பின் வரி அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் விளைச்சலில் ஏற்பட்ட அதிகரிப்பு, பொதுவாக வளர்ந்து வரும் சந்தைகளில் மட்டுமே காணப்படும் ஒன்று என்றும், இது நிர்வாகத்தை பயமுறுத்தியது என்றும் NISA முதலீட்டு ஆலோசகர்களின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஸ்டீபன் டக்ளஸ் கூறினார். "இது ஒரு அர்த்தமுள்ள தடையாக இருந்து வருகிறது," என்று டக்ளஸ் கூறினார். (செய்தியாளர்: டேவிட் பார்பூசியா; கூடுதல் அறிக்கை: வித்யா ரங்கநாதன்; எடிட்டிங்: பரிதோஷ் பன்சால் மற்றும் டேனியல் ஃப்ளின்) https://au.marketscreener.com/news/the-tenuous-peace-between-trump-and-the-30-trillion-us-bond-market-ce7e59dbdb80f322
-
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும் December 29, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதுடன் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன. கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்கிழமை வந்திருந்தார். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் “இந்தியா இல்லத்தில்” ஜெய்சங்கரை கூட்டாகச் சந்தித்துப் பேசினர். அவரிடம் கூறவேண்டிய விடயங்கள் குறித்து இந்த தலைவர்கள் முன்கூட்டியே தங்களுக்குள் வேறு ஒரு இடத்தில் கலந்தாலோசனை நடத்தியது இந்த தடவை வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக அமைந்திருந்தது. தங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும்போது தங்களுக்குள் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வாவது இருப்பது அவசியம் என்று இப்போது தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள் போலும். இயற்கை அனர்த்தத்தினால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேசிய இந்த தலைவர்கள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே பிதானமாக முன்வைத்தனர். அத்துடன் பிரதமர் மோடிக்கான கடிதம் ஒன்றையும் அவரிடம் இவர்கள் கையளித்தனர். மாகாணசபைகளை பற்றி வழமையாக அக்கறை காட்டாமல் இருந்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டியது அவசியம் என்று ஏனைய தலைவர்களுடன் சேர்ந்து ஜெய்சங்கரிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்களை இடைநடுவில் நிறுத்திவிட்டு ஜெய்சங்கருடனான சந்திப்புக்காக அவர் அவசரமாக கொழும்பு திரும்பினார். மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியத்தை மற்றைய தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கூறிய அதேவேளை, கஜேந்திரகுமார் இலங்கையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கலை உருப்படியாகச் செய்வது சாத்தியமில்லை என்றும் அதனால் கூட்டாட்சி (Federal system) அடிப்படையிலான ஏற்பாடு மாத்திரமே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும் என்றும் சுட்டிக்காட்டியதன் மூலமாக தன்னை மற்றையவர்களிடம் இருந்து வேறுபடுத்துவதில் அக்கறை காட்டினார். ஆனால், தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உடனடியாகவே தாங்களும் இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வாக கூட்டாட்சி முறையே இருக்கமுடியும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் தங்களைப் பொறுத்தவரை கூட்டாட்சி என்ற அடையாளப் பெயரில் அல்ல, அதிகாரங்களின் உள்ளடக்கத்திலேயே அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறினார். ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு பிறகு கஜேந்திரகுமார் கடந்த வாரம் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மற்றைய தமிழ்க்கட்சிகளுக்கும் தனது கட்சிக்கும் இடையிலான கொள்கை வேறுபாட்டை விளக்கும் நோக்கில் அமைந்திருந்தன. தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் மாகாணசபை தேர்தல்களிலும் 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலிலும் அக்கறை செலுத்திய அதேவேளை, கூட்டாட்சி முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவருவதற்கு இந்தியா ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுறுத்துவதில் மாத்திரமே கவனம் செலுத்தியதாக கூறினார். பிரதமர் மோடிக்கான கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது என்றைக்குமே தெரிய வராமலும் போகலாம் என்றும் கூட கஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறினார். அந்த கடிதத்தில் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கியிருக்கிறதே தவிர, கூட்டாட்சிமுறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று நம்பகமாகத் தெரியவருகிறது. மாகாணசபை தேர்தல் தொர்பிலான தமிழ்க் கட்சிகளின் வலியுறுத்தலோ அல்லது கூட்டாட்சி முறை பற்றிய நிலைப்பாடோ ஜெய்சங்கருக்கு புதியவை அல்ல. வெளியுறவு அமைச்சராக மாத்திரமல்ல, அதற்கு முன்னர் வெளியுறவு செயலாளராக பதவி வகித்த நாட்களிலும் அவர் இலங்கை தமிழ்க் கட்சிளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். அவர் வெளியுறவு செயலாளராக இருந்தபோது கொழும்பில் தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பு ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கவனத்துக்கு கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு பெருமளவு நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன என்றும் மீண்டும் இரு மாகாணங்களின் இணைப்பு குறித்து கொழும்புடன் பேசக்கூடிய நிலையில் இந்தியா இல்லை என்றும் கூறியிருந்தார். வெளியுறவு அமைச்சராக வந்த பிறகு கொழும்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை தானும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறைப்படுத்தாமல் இருந்துவரும் இலங்கை அரசாங்கங்களிடம் கூட்டாட்சி கோரிக்கையை எவ்வாறு முன்வைக்க முடியும் என்று ஜெய்சங்கர் கேள்வியெழுப்பினார். கஜேந்திரகுமாரும் கலந்துகொண்ட அந்த சந்திப்பில் கூட்டாட்சி முறை குறித்து வாழ்நாள் பூராவும் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த வாரத்தைய சந்திப்பில் அவர் கூட்டாட்சி முறையைப் பற்றி முன்னரைப் போன்று எதையும் கூறியதாக தெரிய வரவில்லை. மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு கொழும்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளுக்கு கூட நேரடியான பதில் எதையும் அவர் கூறவில்லை என்று அதில் கலந்துகொண்ட தலைவர் ஒருவர் தெரிவித்த தகவல்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. பதிலாக, இயற்கை அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் மாகாணசபை தேர்தல்களை எவ்வாறு நடத்தச் செய்வது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடமே ஜெய்சங்கர் ஆலோசனை கேட்கும் தொனியில் பேசியதாகவும் தெரியவருகிறது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு வரும்போது மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவது குறித்தும் மாகாணசபைகள் முறைமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவரிடம் வலியுறுத்திக்கூறுமாறு தமிழ் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் ஜெய்சங்கர் பதில் எதையும் கூறாமல் சகலவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு தலைவர் கூறினார். சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதற்கு பின்னரான 38 வருட காலத்தில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கையை வழிக்குக் கொண்டுவர இந்தியாவினால் முடியவில்லை. பெருமளவுக்கு மாறிவிட்ட புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் அரசாங்கத்தின் மீது இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்தவிதமான நெருக்குதலையும் கொடுப்பதற்கு மோடி அரசாங்கம் நாட்டம் காட்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கும் என்பதை மாத்திரம் எதிர்பார்க்கலாம். அதுவும் குறிப்பாக, இயற்கை அனர்த்தத்தின் அழிவுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் தீவிர கவனத்தை செலுத்துகின்ற ஒரு அரசாங்கத்திடம் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உடனடியாக கேட்பதற்கு மோடி அரசாங்கம் முன்வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்தைக் கோரும் அரசியல் போராட்ட இயக்கம் ஒன்றை ஜனவரி முதல் முன்னெடுக்கப் போவதாக தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சூறாவளிக்கு முன்னர் கூறியிருந்தார். மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை மேலும் பின்போடுவதற்கு சூறாவளியின் வடிவில் வசதியான சாட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. இந்தியாவிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர, தமிழ்க் கட்சிகளுக்கு வேறு மார்க்கமே இல்லை. ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை முடக்காமல் கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியாவைக் கொண்டு நெருக்குதல் கொடுப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் உதவியை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவை நாடியிருக்கிறது. தமிழகத்தில் இன்னமும் நான்கு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பிரசாரங்களில் மீண்டும் இலங்கை தமிழர் பிரச்சினையை முக்கியத்துவம் பெறச் செய்வதற்கான ஒரு முயற்சியாகவும் இதை சில அவதானிகள் கருதுகிறார்கள். மாகாணசபை தேர்தல் தொடக்கம் கூட்டாட்சிக் கோரிக்கை வரை இலங்கை தமிழர்களின் கதியை இந்தியாவின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு நிற்கின்றன தமிழ்க் கட்சிகள். இலங்கை அரசாங்கத்தை அசைப்பதற்காக இந்திய அரசாங்கத்தை முதலில் அசைப்பதே தற்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப் பகுதியில் இந்தியாவைக் கையாளுவதில் தமிழர் தரப்பு இழைத்த மாபெரும் தவறையும் அதற்கு காரணமான முக்கிய சக்திகளையும் பற்றிய தெளிவான விளக்கப்பாட்டை தமிழ்க் கட்சிகள் கொண்டிருப்பது அவசியம். மாகாணசபை முறைமையின் இன்றைய சீரழிவுக்கு தமிழர் தரப்பும் கணிசமானளவுக்கு காரணம் என்பதும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். https://arangamnews.com/?p=12559
-
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா?
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா? Photo, Anura Kumara Dissanayake fb page வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது. ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட வேண்டும்; மக்கள் பங்கேற்பின் மூலம் இணக்கப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். அத்துடன், காலாவதியான அடக்குமுறை நடவடிக்கைகளை விட, பரஸ்பர செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் பலவந்தமான நடவடிக்கைகள் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் அதேவேளை, மக்கள் இணக்கப்பாடும் பொறுப்புக்கூறலும் மாத்திரமே ஸ்திரத்தன்மையை பெற்றுத்தரும். 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA – 1979) நீக்குவதாக உறுதியளித்தது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் “A Thriving Nation, A Beautiful Life” என்ற ஆங்கிலப் பிரதியின் 129ஆம் பக்கத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துதல்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த குறிப்பிட்ட வாக்குறுதியை சிங்களப் பிரதியில் காண முடியவில்லை. இது தேசிய மக்கள் சக்தியும் அதன் சட்டக் குழுவும் விளக்கமளிக்க வேண்டிய ஒரு முரண்பாடாகும். இருப்பினும், இரண்டு பிரதிகளுமே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி குறிப்பிடுகின்றன. கடந்த 45 ஆண்டுகளாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பல இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. இது பொதுமக்களின் எதிர்ப்பு, அரசியல் இடையூறுகள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை ‘அறிவிக்கப்படாத பயங்கரவாதச் செயல்களாக்க்’ கருதுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமலேயே, முந்தைய அரசாங்கங்கள் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பரந்த பயங்கரவாத எதிர்ப்பு விதிகள் சிவில் சமூகத்தின் கண்காணிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, அதிகாரப்பூர்வ ஊழலுக்கு வழிவகுக்கின்றன என்பதை அங்கீகரித்து, சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி (JVP), தனது ஆரம்பகால கொள்கை பிரகடனத்தின் ‘அரசின் கட்டமைப்பு’ எனும் 14ஆவது பிரிவின் கீழ், அடக்குமுறை சட்டங்களை முழுமையாக ஒழிப்பதாக உறுதியளித்தது. இந்த அருவருப்பான சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அபாயகரமான சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எளிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு முற்போக்கான அரசாங்கம், போர் மற்றும் ஆயுத மோதல்களின் வடுக்களைக் கையாண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவே ஒரே வழியாகும். வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குதல் “தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தற்போது தனது தேர்தல் நேர்மை குறித்த ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்கிறது. NPP அளித்த பொருளாதார வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியால் இயற்றப்பட்ட சட்டங்கள், எதிர்கால அரசாங்கங்களை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைக் கட்டமைப்பிற்குள் பிணைத்துள்ளமை இதற்கு ஒரு காரணமாகும் (கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக NPP அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற போதிலும்). மேலும், பல்வேறு அரசியல் அபிலாஷைகள் மற்றும் ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் சில வாக்குறுதிகளின் முன்னுரிமைகள் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழல்களால் அல்லது வேறு காரணங்களால், நீண்ட காத்திருப்போ அல்லது பெரும் வளங்களோ தேவைப்படாத சில முக்கியமான விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியது போல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) தொடர்வதற்கோ அல்லது அதற்குப் பதிலாக வேறொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கோ எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து ஆட்சிக்கு வந்த பின்னர், அரச அடக்குமுறையின் தொடர்ச்சியான கருவியாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வேறு வடிவத்தில் வைத்திருப்பதற்குத் தேவையான புதிதாக எதையாவது NPP கண்டறிந்துள்ளதா? எதுவாக இருந்தாலும், இது தேர்தல் வாக்குறுதி அல்ல. PTA வை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்பதே தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்த தெளிவான புரிதலாகும். பயங்கரவாதத் தாக்குதல்களைக் கையாளுவதற்குப் பதிலாக, சமூக – பொருளாதார அல்லது தேசிய ரீதியான குறைகளுக்குத் தீர்வு தேடுபவர்களுக்கு எதிராக பாரிய அளவில் அரச பயங்கரவாதத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இச்சட்டம் பங்களிப்பு செய்துள்ளதாக இதனை ஒழிப்பதற்காகக் குரல் கொடுத்தவர்கள் நம்பியிருந்தனர். காரணம் எதுவாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தான் ஒரு காலத்தில் எதிர்ப்புத் தெரிவித்த, முந்தைய அனைத்து அரசாங்கங்களின் பாதையையே பின்பற்றி, தற்போது தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது போல் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்குப் பதிலாக, சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளைப் பின்பற்றி, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சட்டக் கட்டமைப்பைப் பரிந்துரைக்க அரசாங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இருக்கும் நிலையில், அரசாங்கம் இந்தச் சட்டத்தை நேரடியாக ரத்து செய்திருக்க வேண்டும். சர்வதேச சூழல் சர்வதேச அளவில், பயங்கரவாதத்திலிருந்து அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், பெரும்பாலும் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு, அதே உரிமைகளை மீறுவதோடு அவற்றைச் சீர்குலைக்கவும் செய்கின்றன. காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை இதற்குச் சிறந்த சமகால உதாரணமாகும். பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு, தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் மற்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். ஆனால், நெதன்யாகுவின் பயங்கரவாதப் பிரச்சாரங்களை ஆதரிப்பவர்கள் எவ்வித விளைவுகளையும் எதிர்கொள்வதில்லை. ஆஸ்திரேலியாவில், ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது யூதர்கள் மீது நடாத்தப்பட்ட போண்டி பீச் (Bondi Beach) தாக்குதலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் மற்றும் மறைமுக சியோனிச சக்திகளின் அழுத்தத்தினால், சியோனிசம் மற்றும் நெதன்யாகுவின் பயங்கரவாத ஆட்சியை விமர்சிப்பவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அடக்குமுறை நடவடிக்கைகளை விட ஆலோசனை மற்றும் உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவது, அமைதியான முறையில் மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய தூணாகக் கருதப்படுகிறது. இதுவே நிலையான உறுதிப்பாட்டை வளர்ப்பதோடு, அடிப்படை சமூக – பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. அடக்குமுறைச் சட்டங்களை இயற்றுவதும் செயல்படுத்துவதும், இன்னும் கடுமையான சட்டங்களுக்கான தேவையையே உருவாக்குகின்றன. இது இறுதியில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போன்ற வெடிப்புச் சூழல்களுக்கே வழிவகுக்கின்றன. ஏனெனில், இத்தகைய சட்டங்கள் எப்போதும் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாடு ஆகிய நோக்கங்களுடனேயே உருவாக்கப்படுகின்றன. சமூகச் சுமைகளைக் களைவதும், வடுக்களைக் குணப்படுத்துவதும், பாலங்களை உருவாக்குவதுமே முற்போக்கான சமூகங்களுக்கான சிறந்த மாற்றாக எப்போதும் இருந்து வந்துள்ளன. அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA) இந்தச் சூழலில்தான், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமான ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை’ (PSTA) நாம் பரிசீலிக்க வேண்டும். தற்போது பரிசீலனையில் உள்ள மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள இந்த PSTA, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாக முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், PTA-வில் உள்ள மிகவும் கவலைக்குரிய அம்சங்களையும், முந்தைய அரசாங்கங்கள் 2018 இல் வர்த்தமானியில் வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) மற்றும் 2023 மார்ச் மற்றும் செப்டெம்பரில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) ஆகியவற்றின் கீழ் கொண்டுவர விரும்பிய விதிகளையும் இது அப்படியே கொண்டுள்ளது. CTA மற்றும் ATA ஆகிய இரண்டு சட்டமூலங்களுமே பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானதுடன், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய PSTA சட்டமூலமானது தேசிய மக்கள் சக்தி (NPP) மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதிபலிக்கவில்லை. பரந்த வரைவிலக்கணம் ஒரு பயங்கரவாதச் சூழலை உருவாக்குதல், பொதுமக்களை அச்சுறுத்துதல், இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்குமாறு வற்புறுத்துதல் அல்லது போரை பிரசாரம் செய்தல் அல்லது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை மீறுதல் போன்ற நோக்கங்களுடன் திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களைப் ‘பயங்கரவாதக் குற்றம்’ என PSTA சட்டமூலம் வரைவிலக்கணப்படுத்துகிறது. முன்னரைப் போலவே, இந்த வரைவிலக்கணம் இப்போதும் ஆபத்தான முறையில் மிகப்பரந்ததாகவே உள்ளது. தற்போதைய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கமும், நியாயமான பொது மக்கள் போராட்டங்கள், சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகளைப் ‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்த இதைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, ‘அரசாங்கத்தை வற்புறுத்தும்’ நோக்கம் ஒரு பயங்கரவாதக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பயங்கரவாதமாகக் கருதப்படாது என்று ஒரு விலக்கு நிபந்தனை இருந்தபோதிலும், இந்த அரசாங்கமோ அல்லது எதிர்கால அரசாங்கங்களோ பொதுப் போராட்டங்களைப் பயங்கரவாதச் செயல்களாக முத்திரை குத்தக்கூடிய அபாயம் இன்னும் நீடிக்கவே செய்கிறது. விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைத்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதன் மூலம், பொலிஸ் மா அதிபர் எவரையும் தடுத்து வைக்க முடியும். ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு, பின்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு வரை இதை நீடிக்க முடியும். இது நீதித்துறை மேற்பார்வை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இத்தகைய உத்தரவு அமுலில் இருக்கும்போது, ஒரு நீதவானால் பிணை வழங்கவோ அல்லது சந்தேக நபரை விடுதலை செய்யவோ முடியாது. மேலும், ‘நியாயமான சந்தேகத்தின்’ அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் பொருட்களைக் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு இந்த சட்டமூலம் அதிகாரத்தை வழங்குகிறது. 1971 மற்றும் 1988-89 காலப்பகுதிகளில் இத்தகைய சட்டம் இருந்திருந்தால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும். நீதித்துறை மேற்பார்வை, மனிதாபிமான முறையிலான தடுப்புக்காவல் நிபந்தனைகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுதல், தனிமனித ரகசியங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் வந்து பார்ப்பதற்கான உரிமைகள் போன்ற சில ஏற்பாடுகள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகின்றன. ஆனால் யதார்த்தத்தில், இத்தகைய பாதுகாப்புகளைப் பெற்றுக்கொள்வது கடினமானதாகும். அதிகார துஷ்பிரயோகம் குறித்து மீளாய்வு செய்ய உயர் நீதிமன்றத்தை நாடுவது என்பது எளிதான அல்லது மலிவான காரியம் அல்ல. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி அதிகாரங்கள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தாமல், வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை உத்தரவுகள் மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவொரு இடத்தையும் “தடைசெய்யப்பட்ட பகுதி” என அறிவிக்க முடியும். அவ்வாறான இடத்தில் புகைப்படம் எடுப்பது அல்லது காணொளி எடுப்பது கூட மூன்று வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக மாறும். ‘வழக்குத் தொடர்வதைத் தள்ளிவைத்தல்’ எனும் விதியின் கீழ், ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் ‘புனர்வாழ்வு’ அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கும் ஏற்பாடுகள் ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன; இது அடக்குமுறையை நுட்பமான முறையில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு சந்தேக நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்று ஒப்புக்கொண்டு, அவரை ஒரு ‘புனர்வாழ்வு’ திட்டத்திற்கு அனுப்ப சட்டமா அதிபரால் முடியும். கடுமையான தண்டனைகளும் கண்காணிப்பும் அரசாங்கம் வரைவிலக்கணப்படுத்துவது போன்ற ஒரு “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புகளைப் பேணுதல் அல்லது அரசாங்கம் அர்த்தப்படுத்துவது போன்ற “பயங்கரவாதப் பிரசுரங்களைப் பரப்புதல்” ஆகியவற்றுக்காக, ஒரு நபருக்கு மேல் நீதிமன்ற விசாரணையின் பின்னர் இருபது ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் 15 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நேரடி அல்லது மறைமுக நோக்கத்துடன் ‘கவனக்குறைவாக’ ஒரு அறிக்கையை விநியோகிப்பது உட்பட, எந்தவொரு பிரசுரத்தையும் விநியோகிப்பது, விற்பனை செய்வது அல்லது வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் சுதந்திரத்திற்கும் தனிமனித இரகசியத்திற்கும் (Privacy) கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. 11ஆவது சரத்து சில விதிவிலக்குகளை வழங்கிய போதிலும், கைதுகளை மேற்கொள்ளும் போது பொலிஸார் இத்தகைய விதிவிலக்குகளைப் புறக்கணிக்கும் விதத்தைக் கருத்தில் கொண்டால், இது நடைமுறையில் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியும். இந்தச் சட்டமூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. Encrypted செய்யப்பட்ட டிஜிட்டல் தொடர்புகள் உட்பட எந்தவொரு தொடர்பாடலையும் இடையில் மறித்து அதன் குறியீடுகளை நீக்க (Decryption) முடியும். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பலவீனமான தன்மையை நன்கு அறிந்த நிலையில், கைது செய்யப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்து அறிவிப்பதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தை எவ்வாறு தடுக்க முடியும் என்பது ஒரு நியாயமான கேள்வியாகவே உள்ளது. சிவில் நடவடிக்கைகளைக் குற்றமாக்குதல் கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்திருந்தால், தற்போது ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினரால் ஏப்ரல் அல்லது நவம்பர் மாதங்களில் நினைவுகூரப்படும் “வீரர்களை” கொண்டாடும் எவரும் இந்த ஏற்பாடுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். பரந்த வரைவிலக்கணங்கள் மூலம் தற்செயலாகவே சட்டபூர்வமான சிவில் நடவடிக்கைகள், ஊடகவியல் மற்றும் பொதுக் கலந்துரையாடல்கள் குற்றமாக்கப்படலாம் என்பதே பிரதான கவலையாக உள்ளது. புதிய சட்டமூலத்தின் கீழ், போராட்டத்தில் ஈடுபடும் நபர்களின் புகைப்படத்தைப் பிரசுரிக்கும் ஒருவர் கூட பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படலாம். 78ஆவது சரத்தானது மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணமாக உள்ளது. அதன்படி, “நம்பகமான தகவல்” என்பது ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சாதாரண செயற்பாடுகளைக் கூடக் குறிக்கலாம். அத்தகைய நடவடிக்கைகள் பாரிய குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படலாம். கட்டாயத் தகவல் வழங்கலும் நாட்டின் எல்லைக்கு அப்பாலான விரிவாக்கமும் சட்டமூலத்தின் 15ஆவது சரத்தானது, பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் அளிப்பதைக் கட்டாயமாக்குகிறது; இதனை மீறுபவர்கள் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். நீதியை எதிர்பார்க்கும் மக்கள் மீது, குறிப்பாகப் பெரும்பான்மையினத்தைச் சேராத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்த ஏற்பாடுகள் கொடூரமான முறையில் பயன்படுத்தப்படுமா? தகவல் பெறுபவர்களைக் கூட அரசாங்கத்தின் உளவாளிகளாக மாறும்படி இது வற்புறுத்தக்கூடும். அதுமட்டுமன்றி, இந்தச் சட்டமூலமானது இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைகிறது. பிரிவு 2(c)-இன் படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்பது தெளிவாகிறது. தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புலம்பெயர் சமூகங்களுக்கு எதிராக PSTA ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, வெளிநாட்டில் இருந்து சமூக ஊடகங்களில் இலங்கையின் நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது கூட சட்டவிரோதமான செயலாக மாறக்கூடும். முடிவுரை மக்களை அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களைத் துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி துல்லியமாக வரையறுக்கத் தவறியதன் மூலம், PTA, CTA மற்றும் ATA ஆகியவற்றில் இருந்த அதே சிக்கல்களையும் குறைபாடுகளையும் PSTA-வும் கொண்டுள்ளது. இதில் உள்ள விதிவிலக்கு சரத்துகள், ஏனைய வரையறைகளுடன் (அரசாங்கத்தை வற்புறுத்துதல் போன்றவை) முரண்படுவதோடு, நடைமுறைச் செயல்பாட்டின் போது அவை வலுவிழந்து போகும் அபாயத்தையும் கொண்டுள்ளன. இந்தச் சட்டமூலத்தின் தலைப்பு அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதன் நோக்கம் அரசாங்கத்தையும் அதன் மூலம் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியையும் பாதுகாப்பதாகும். சிவிலியன்களுக்கு எதிரான வன்முறைகளைப் பிரயோகித்தல் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு இதில் இல்லை. பல ஏற்பாடுகள் இந்த நோக்கங்களைச் சிதைக்கின்றன. அந்த ஏற்பாடுகள் நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலில் இருந்து சுதந்திரம் பெறுதல் உள்ளிட்ட அரசியலமைப்பிலும் சர்வதேச மனித உரிமை ஆவணங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது. PTA சட்டத்தைப் போலவே, PSTA சட்டமும் ஜனாதிபதி, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு போதிய ஆதாரங்கள் இன்றி நபர்களைத் தடுத்து வைக்கவும், தெளிவற்ற முறையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட பேச்சுகளைக் குற்றமாக்கவும், முறையான நீதித்துறை மேற்பார்வையின்றி கூட்டங்கள் மற்றும் அமைப்புகளைத் தன்னிச்சையாகத் தடை செய்யவும் விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. இது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துகிறது; அத்துடன், பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமையைக் கட்டுப்படுத்துவதோடு, பிடியாணை இன்றி எவரையும் நிறுத்தவும், விசாரணை செய்யவும், சோதனையிடவும் மற்றும் கைதுசெய்யவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அனுமதி அளிக்கிறது. மேலும், எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாத நபர்கள் மீது ‘சுயவிருப்பின் பேரில்’ மேற்கொள்ளப்படும் ‘புனர்வாழ்வை’ திணிக்க சட்டமா அதிபருக்கு இது அதிகாரம் அளிக்கிறது. இந்தத் திட்டமிடப்பட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், NPP அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்வதாக வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளது அல்லது அது வழிதவறிச் சென்றுள்ளது. முன்னைய PTA சட்டத்தைப் போலவே, இந்தப் புதிய சட்டமூலமும் சிவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம். NPP கட்சியானது, எதிர்க்கட்சியில் இருந்த பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரச அடக்குமுறையின் ஒரு தொடர்ச்சியான கருவியாக வேறு வடிவில் வைத்திருப்பதை நியாயப்படுத்தும் வகையில் புதிதாக எதனையாவது கண்டறிந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தமக்குக் கிடைத்த தேர்தல் ஆதரவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் PTA சட்டத்தைத் திருத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஒரு குழுவை நியமிப்பதற்குப் பதிலாக, அதனை முழுமையாக ரத்துச் செய்திருக்க வேண்டும். மக்கள் விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்த்தனர். காலம் கடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக NPP கொண்டுள்ள அர்ப்பணிப்பு இப்போது சோதனைக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தமது பாதையிலிருந்து வழிதவறிச் சென்றுள்ளனரா என்பதற்கான விடை, அவர்கள் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளின் மூலமே தீர்மானிக்கப்படும். லயனல் போபகே https://maatram.org/articles/12519
-
சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன்
சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன் December 31, 2025 2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில் பதிவாகியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது அதிகாரத்தை பேரனர்த்த நிவாரணங்களை பயன்படுத்தியேனும் அடிமட்டம் வரை கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் மூன்றாந்தர அரசியல் கலாசாரம் அரங்கேறிவருகின்ற அதே வேளை, தமிழ் மக்களின் நீண்டகால அபிலா ஷைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் இவ்வருடம் முழுவதும் கனவுகளாக நாட்கள் கடந்தோடும் காலமாகவே தான் அமைந்துள்ளன. அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில், மே 6, 2025 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 43.26சதவீதமான வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 339 உள்ளுரா ட்சி சபைகளில் 265 சபைகளைக் கைப்பற்றி தனது பலத்தை நிலைநிறுத்தியது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் நிலவிய பிளவுகளுக்கு மத்தியிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன. குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 35 சபைகளைக் கைப்பற்றி தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது பங்கிற்கு வெற்றி களைத் தக்க வைத்துக்கொண்டது. இருப்பினும் ஆட்சியமைப்பதில் தமிழர சுக் கட்சி யின் விட்டுக்கொடுக்காத தன்மையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஜன நாயக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டிணைவு பத்து உள்ளுராட்சி மன்றங்கள் வரையில் தமதாக்கிக் கொண்டன. இந்தக் கூட்டிணைவ கொள்கை அடிப்படையில் அமை வதாகவே காண்பிக்கப்பட்டு உடன்பாடும் செய்யப்பட்டது. குறித்த கொள்கைக் கூட்டில் சந்திரகுமார் தலைமையிலான சமவத்துக் கட்சியும் இணைந்து கொண்டிருந்தது. எனினும் சொற்ப காலத்தில் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியானது 13ஆவது திருத் தச்சட்டத்தினை வலியுறுத்தி செயற்பாடுகளை ஆரம்பித்தமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன் னணி முரண்பட்டது. ஈற்றில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழரசுக்கட்சியுடன் மீண்டும் கைகோர்க்கும் நிலையை அடைந்துள்ளது. இதற் குப் பின்னால் சுமந்திரனின் முதலமைச்சர் கனவும் காணப்படுகின்றது என்பது தனிக்கதை. அதேநேரம், மலையக அரசியலில், பாரம் பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான பின்ன டைவைச் சந்தித்த நிலையில், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஓரளவு தம்மை தக்க வைக்கும் நிலைக்குச் சென் றிருந்தன. குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 1,700 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளம், ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் கிடைத்த சமூக நீதியாகவும், அரசாங்கத்தின் முக்கிய தீர்மானத்தின் பிராகரம் எடுக்கப்பட்ட செயற் பாடாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் கறுப்பு அத்தி யாயமாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, குழந்தைகள் உள்ளிட்ட 240 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை சர்வதேச அளவில் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், போர்க்கால மீறல்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் உலக அரங்கிற்கு கொண்டு வந்திருந்ததோடு பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் வெகுவாகவே வலியுறுத்தியுள் ளது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 6, 2025 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் 60ஃ1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இத்தீர்மானம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் சர்வதேச பொறிமுறையை 2027வரை நீட்டித்துள்ளது. அரசாங்கம் இந்தத் தீர்மானத்தினை ‘வெளிநாட்டுத் தலையீடு’ என்று ஆரம்பத்தில் விமர்சித்தாலும், சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிய வேண்டிய கட்டாயத்தில், நவம்பர் மாதம் வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப் பாட்டிலிருந்த சுமார் 5,000 ஏக்கர் பொதுமக்களின் காணி விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் 2025ஆம் ஆண்டு ‘அனைத்து நாடுகளுடனும் நட்பு’ என்ற கொள்கையின் கீழ் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயங்களைக் கண்டது. குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான காலப்பகுதியிலர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் முக்கியமானது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே மன்னார் முதல் தமிழ்நாடு வரையிலான கடல்வழி மின்சார இணைப்பு, திருகோணமலை எரிசக்தி மையம் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க ‘UPI’ பணப்பரிமாற்ற முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. அத்துடன் மலையகத்தில் மேலும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மே மாதம் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மியும், ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும் மற்றும் நவம்பர் மாதம் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவும் இலங்கைக்கு வருகை தந்து, நாட்டின் மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025இல் சீனா (ஜனவரி), வியட்நாம் (மே), ஜேர்மனி (ஜூன்) மற்றும் ஜப்பான் (செப்டெம்பர்) நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார். செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக் கமளித்தார். ஆனால் குறித்த சந்தித்து உத்தியோக பூர்வ இருதரப்பு சந்திப்பாக நடைபெற்றிருக்க வில்லை. பொருளாதார ரீதியாக, செப்டெம்பரில் ஜப்பான் மற்றும் சீனாவின் நிதியுதவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ் சாலைப் பணிகள் (கடவத்தை – மீரிகம) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு கெடுபிடிகள், கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் போன்றவை நிர்வாக ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக ‘மிஸ்டர் கிளீன்’ என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுப் பயண மொன்றுக்காக பயன்படுத்திய நிதி தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது கொழும்பு வாழ் மேல்தட்டு வர்க்கத்துக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆண்டின் இறுதியில், நவம்பர் 28 அன்று இலங்கையின் கிழக்குக் கரையைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா’ சூறாவளி ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை உள்நட்டில் உருவாக்கியுள்ளது. இச்சூறாவளியால் நாடு முழுவதும் சுமார் 640க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1.6மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கிராமங் களையே துடைத்தெறிந்திருக்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியாவின் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். புயலின் பாதிப்புகள் தணியாத நிலையில், டிசம்பர் 23, 2025 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாரிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாக வெளிப்படையில் காணப்படுகின்றது. ஆனால் இதற்கான பின்னணியைப் பார்க்கின்றபோது இந்தியா இலங்கையில் எந்த வொரு தரப்பினரையும் காலூன்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை அப்பட்ட மாகவே வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆகவே குறித்த விடயத்தில் தீவிரமான கவனம் அவசியமானின்றது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2025 ஆம் ஆண்டு என்பது இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டு ஊழல் ஒழிப்பு கெடுபிடிகளுக்கும், சர்வதேச இராஜதந்திர விட்டுக்கொடுப்புகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண முயற்சித்த ஆண்டாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் முன் னேற்றங்கள் ஏற்படுவது போன்று தென்பட்டாலும் நிலையான அரசியல் தீர்வு மற்றும் நீதிக்கான பயணம் இன்னமும் நீண்டதாகவே உள்ளது. பொருளாதார மீட்சி மற்றும் பேரிடர் மேலாண்மையில் சர்வதேச ஆதரவுடன் இலங்கை நடைபோட்டாலும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான பெரும் சவால்களாக எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்விதமான சூழலில் புதிய ஆண்டை முகங்கொடுப்பது மிகவும் அவதானத்துக்கு உட்பட்டதாகும். https://www.ilakku.org/சோதனைகளும்-வேதனைகளும்-நி/
-
கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது
கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது 31 December 2025 கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு கடும் இழுபறிக்கு மத்தியில் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் முடிவில், இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2 வாக்குகள் வித்தியாசத்தில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 22 ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு தோல்வியடைந்திருந்தது. அதன்போது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் பாதீடு முன்வைக்கப்பட்டு மறு வாக்கெடுப்பு இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்திக்கு சபையில் தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், ஏனைய சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் கொழும்பு மாநகர சபையின் ஆளுமையை ஆளும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/438471/colombo-municipal-council-budget-passed