stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை….. ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂. எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம். பிகு மனமுண்டானால் மார்க்கபந்து.
- Today
-
கருத்து படங்கள்
- "மூன்று கவிதைகள் / 17"
"மூன்று கவிதைகள் / 17" 'புகைப்படக் கவிதை' குறள் தந்த வள்ளுவருடன் நான் குரல் அடக்க எரித்த நூலகத்தில்! குமிழி வாழ்வின் விளிம்பில் இவன் குமுறும் தமிழனின் தாய் நிலத்தில்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... மின்னலாய் ஒரு பின்னல் [படைத்தல், காத்தல், அழித்தல் & அருளல்] படைத்தல் தொழில் கடினம் என்றாலும் காத்தல் அதனிலும் மேல்! அழித்தல் செய்தவன் ஒருநாள் அருளல் புரிந்து அணைத்தாலும் ஏற்காதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .......................................................................... 'மகளா மருமகளா' மகளா மருமகளா கேட்பவன் யாரடா குலப்பெருமை காக்க மணாட்டி ஆனவளே விளக்கேற்ற வந்த மற்றைய மகளே! திருமணம் முடிந்தது மனையாட்டி ஆகி இருஉடல் சேர்ந்ததும் தாயாய் மாறி சந்ததி பெருக தன்னையே தந்தவளே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. துளி/DROP: 1961 ["மூன்று கவிதைகள் / 17" https://www.facebook.com/groups/978753388866632/posts/33041205765527978/?- தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர். கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12 வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளது. https://akkinikkunchu.com/?p=354091- பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி 29 December 2025 மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாத்தல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/438053/various-services-declared-as-essential-services-president-takes-action- நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம்
நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியதுடன் இந்திய வெளியுறவு நாங்கள் அதனை வலியுறுத்தினேன் என தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக சி.வீ.கே.சிவஞானம் நேற்று (28) நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரை கையேற்பதில்லை என்ற இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவுத்தலுக்கமைய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கம், தேவையற்ற கால தமாதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே ஆகும். மாகாண சபை தேர்தலை நடத்த நானும் ஏனையவர்களும் வலியுறுத்தினோம். சமஷ்டியை பற்றி நாங்கள் பேசவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்து ஆச்சரியமளிக்கிறது. கலந்துரையாடலை ஆரம்பித்து நானே. கலந்துரையாடலின் இறுதியில் சமஸ்டியை பற்றி பேசினோம். பல விடயங்களை பேசினோம். சந்திப்பு முடியுற தருணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நாம் முன்வைத்த கடிதத்தின் நோக்கத்தை மீண்டும் ஜெய்சங்கருக்கு தெளிவுபடுத்தினோம். மாகாண சபையை பொறுத்தவரை இந்தியா இலங்கையுடன் செய்த ஒப்பந்தம் மூலமே அது உருவானது. வயிற்றில் பிறந்த பிள்ளை என சொல்லவில்லை. இந்தியாவின் சிந்தனையில் வந்த பிள்ளை என்றேன். அதை வலியுறுத்தவே மகஜரும் கையளித்தோம். அதேபோல குறித்த சந்திப்பில் எமது இறுதி இலக்கும் நோக்கும் கூட்டாட்சி சமஷ்டி தான் என்பதை தெரிவித்தோம். மகஜரில் இந்த விடயம் இருக்கிறது. நாங்கள் பொய் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். நான் உண்மையை தான் கூறுகிறேன். சந்திப்பில் பங்கேற்ற ஏனைய கட்சித்தலைவர்கள் இதை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். சர்வதேச ரீதியில் எமது இலக்கை அடைவதற்கான ஆதரவு தேவை. இந்தியா இதற்கு உதவ வேண்டும் என சந்திப்பில் சொன்னோம். நான் சொன்னது பொய் என்றால் இந்தியா மறுதலிக்கும். இராஜதந்திரிகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். செயலிலேயே அதை செய்வார்கள். நாங்கள் சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? நாங்கள் சந்திப்பின் பின்பகுதியில் அதனை வலியுறுத்தினேன். 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கி போடும் என சொல்லிப்போட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக சொல்கிறார். இது சுய முரண்பாடு. மாகாண சபை முறைமை தீர்வு என்றோ முழுமையாக ஏற்கிறோம் என்றோ ஒரு காலத்திலும் தமிழ் அரசுக் கட்சி சொன்னதில்லை. உண்மைக்கு புறம்பான முறையில் பேசுவது அரசியல் ஜனநாயகத்துக்கு முரண். மன்னாரில் இருக்க கூடிய சூரிய சக்தி அமைப்பதில் பாகிஸ்தானை சேர்ந்த 40 பேர் பணியில் ஈடுபடுவது என்பதையும் நாங்கள் சந்திப்பின் போது தெரிவித்தோம் என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjqnqcyt0384o29nw0ca1xjh- சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை!
சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை! அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஜப்பானின் புஜி மலை முதலிடத்தில் உள்ளதுடன், அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் பலவான், டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் உள்ளன. அணுகுவதற்கான வசதி, உள்ளூர் விலைகள், சுற்றுலாத் தலங்கள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் ஆகிய காரணிகளைக் கருத்திற்கொண்டு தரவு பகுப்பாய்வு மூலம் இந்தத் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் உள்ள மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் பண்டைய இடிபாடுகள், பல பிரபலமான ஆசிய சுற்றுலாத் தலங்களில் காணப்படும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் இன்றி இருப்பது இங்கு சிறப்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. “இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கை, ஆசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள், மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் 26 தேசிய பூங்காக்கள் உள்ளன, அவற்றில் பல யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகளைப் பார்ப்பதற்கான சபாரி பயணங்களுக்குப் பொருத்தமானவை. இதற்கிடையில், 600 அடி உயரக் கோட்டையான சிகிரியா மற்றும் பொலன்னறுவையின் விகாரைகள், கோயில்கள் போன்ற பண்டைய இடங்கள் அதன் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கின்றன. தென்னை மரங்களால் சூழப்பட்ட பொன்னிறக் கடற்கரைகள், அமைதியான விடுமுறையைத் தேடுபவர்களுக்கு வெகு தொலைவில் இல்லை” என அந்த அறிக்கையில் இலங்கை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த 20 இடங்கள் இதோ: புஜி மலை, ஜப்பான் டோக்கியோ, ஜப்பான் பலவான், பிலிப்பைன்ஸ் சியோல், தென் கொரியா இலங்கை சியாங் மாய், தாய்லாந்து பூட்டான் ஹனோய், வியட்நாம் பாலி, இந்தோனேசியா புக்கெட், தாய்லாந்து கியோட்டோ, ஜப்பான் சீயாம் ரீப் ஒசாகா, ஜப்பான் கோலாலம்பூர், மலேசியா ஹொங்கொங் மாலைத்தீவு சிங்கப்பூர் ஜெய்ப்பூர், இந்தியா லென்காவி, மலேசியா ஆக்ரா, இந்தியா https://www.samakalam.com/சிறந்த-சுற்றுலா-இடங்களில/- அமரசிறி : கருணாகரன்
ஆம். AI எல்லாவற்றையும் சரியாகச் சொல்லாது!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தாரளமாக வரலாம். கடைசித் திகதி பெப் 06. ஆனால் பதில்கள் பக்காவாக இருக்கவேண்டும்😁 அஞ்சு பவுண் காசோலையை தபால்காரன் தூக்கிட்டான் போலிருக்கு🤣- மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது
மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது 29 Dec, 2025 | 09:15 AM மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (28) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில உள்ள ஒரு விடுதியில் ஒரு கைக்குண்டுடன் மறைந்திருந்த மேற்படி குற்றத்தைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபரும், அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234639- இந்தியா இலங்கை மகளிர் சர்வதேச ரி20 தொடர்
10,000 சர்வதேச ஓட்டங்கள் குவித்த நான்காவது வீராங்கனை மந்தனா; 4ஆவது ரி20இலும் இலங்கையை வீழ்த்தியது இந்தியா Published By: Vishnu 28 Dec, 2025 | 11:52 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரம் க்றீன்பீல்ட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற நான்காவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ம்ரித்தி மந்தனா மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்ட இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிககெட் தொடரை ஏற்கனவே தனதாக்கிக்கொண்டிருந்த இந்தியா, இந்த வெற்றியுடன் 4 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இந்த தொடரில் ஷபாலி வர்மா தொடர்ச்சியான 3ஆவது அரைச் சதத்தைக் குவித்ததுடன் ஸ்மிரித்தி மந்தனா அரைச் சதம் விளாசினார். அவர்கள் இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 92 பந்துகளில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையை பெற உதவினர். ஷபாலி வர்மா 46 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 79 ஓட்டங்களையும் ஸ்ம்ரித்தி மந்தனா 48 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் பெற்றனர். இதனிடையே இந்தப் போட்டியில் ஸ்மிரித்தி மந்தனா 27ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868 ஓட்டங்கள்), நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸ் (10,652 ஓட்டங்கள்), சார்லட் எட்வேர்ட்ஸ் (10,273 ஓட்டங்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 10,000 சர்வதேச ஓட்டங்களைக் குவித்த வீராங்கனைகள் வரிசையில் நான்காவது இடத்தை மந்தானா பெற்றுக்கொண்டுள்ளார். ஷபாலி வர்மாவும் ஸ்ம்ரித்தி மந்தனாவும் ஆட்டம் இழந்த பின்னர் ரிச்சா கோஷ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை மேலும் பலப்படுத்தினர். ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 40 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத் கோர் 10 பந்துகளில் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவி சமரி அத்தபத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் முதலாவது விக்கெட்டில் ஹசினி பெரேராவுடன் 59 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் இமேஷா துலானியுடன் 57 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ஆனால், இலங்கையின் ஓட்டவேகம் போதுமானதாக அமையவில்லை. சமரி அத்தபத்து 37 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 33 ஓட்டங்களையும் இமேஷா துலானி 29 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஹர்ஷித்தா சமரவிக்ரம 20 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களையும் நிலக்ஷிக்கா சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா. https://www.virakesari.lk/article/234619- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதுக்குள்ள அந்த எறும்பை கண்டுபிடித்துவிடுவீர்களா அண்ணை?!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- அமரசிறி : கருணாகரன்
யாழ்ப்பாணத்திலுள்ள தனது சக ஆசிரியரை சந்திக்க வந்த சிங்கள இந ஆசிரியர் அமரசிறி, அவர் சிங்களச்சிப்பாயல்ல.- Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:-
They did enjoy the crossing the line 'Shellback' ceremony in the Pacific . . Sterling as Neptune..jpg
-
Jaffna Schooner - annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (5).jpg
-
Jaffna Schooner - annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (4).jpg
-
Jaffna Schooner - annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (3).jpg
-
annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (6).jpg
-
annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (5).jpg
-
annapurani, Florence C.Robinson-The Gloucester Times, Boston, 1938 (2).jpg
-
jaffna thoni, Suez canal, James Hornell.jpg
-
Jaffna Thoni, James Hornell.jpg
-
சலங்கு - Jaffna Barque - Parvathapaththini.jpg
-
Vallams | June 25, 1984, Mutraveli Beach, Trincomalee (3).jpg
-
Vallams | June 25, 1984, Mutraveli Beach, Trincomalee (2).jpg
-
Vallams | June 25, 1984, Mutraveli Beach, Trincomalee (Current Sinhala colonization name: Samudragama) | Across the bay is Frederick Fort's wall and the Gokanna Rajamaha Viharaya Buddhist Temple (insert).
-
Ancient Tamil/ Tissamaharama Potsherd with ship graffito - layer of 1st century BC. (H. J. Weisshaar - trench 1G, 23/27, layer 18.jpg
-
veppu vallam, Kerala | வெப்பு வள்ளம்
-
Thekkan Ody, Kerala | தெக்கனோடி
-
Rameshwaram vaththai வத்தை
-
Palliyodam with Chundan Vallam, Kerala | சுண்டன் வள்ளத்தின் கடையாருடன் பள்ளியோடம் ஒன்று
-
Iruttukutty, Odi vallam, Kerala| இருட்டுக்குத்தி அ ஓடி வள்ளம்
-
Churulan vallam, Kerala | சுருளன் வள்ளம்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்த ஜந்து பவுண் வரவில்லையா.....நீங்கள் போட்ட போடு அப்பிடி இருந்துதே. ஜயகோ 😀- விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
இந்த திரியில் கூட கதறல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது😂. பிகு கதறலை கேட்க என்றே இந்த செய்தி இணைக்கப்பட்டது என நினைப்பவர்கள் - கெட்ட எண்ணம் உடையோர் 😂- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இப்படிதான் எங்கள் ஊரில் ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி விட்டார். ஆனால் சேர்ச்சுக்கு போவதில்லை. ஒரு தரம் வழியில் கண்ட பாதிரியார் “ என்ன இப்ப சேர்சுக்கே வாறேல்லா யேசுவை மறந்துட்டியளோ” என கேட்க, எங்கட ஆள் சொன்னாராம்.. “சிவ, சிவா…நானாவது யேசுவை மறப்பதாவது” எண்டு 😂. அப்படித்தான் பலரது கிறிஸ்தவ நம்பிக்கையும். சாதி, தீண்டாமை, பெண்ணடிமைதனம், கர்மா, …. இப்படி சர்மாக்கள் சொல்லி கொடுத்த எதையும் கைவிடவில்லை. இங்கே பலர் அனுர காதலில் அனுங்குவதால் அவர்களுக்கு இலங்கை அரசு பற்றிய புரிதல் மங்கி விட்டது. 2009 க்கு முன் டக்கா செய்தவற்றுக்கு ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போக தேவையில்லை. அம்னெஸ்டி, HRW, US State dept அறிக்கைகளே போதும். ஆனால் இவற்றை அனுரா கனவிலும் தொடார். மேலே ஈழப்பிரியன் அண்ணா பதிந்துள்ளார். ஒரு உறுப்பினர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை சீண்டுவார் இல்லை. சும்மா கண்துடைப்புக்கு ஒரு கைது. அதை கண்டவுடன் காவடிக்காரருக்கு ஒரு சோடா குடித்த சிலிர்ப்பு.- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஐயோ, இவர் இன்னும் செயல் வீரர் என பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் என்ன ஜனநாயக வழியிலா செயற்பட்டு கொண்டிருந்தார் இவரை முடக்குவதற்கு? வைத்திருந்த கைதுப்பாக்கியையும் இரவல் கொடுத்து மாட்டுப்பட்டிருக்கிறார். இவர் செய்த எத்தனையோ தீவினைகள் இருக்க இப்படி மாட்டுப்படுவேன் என்று கனவிற்கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். அவரது துணைக்கரங்களும் மடங்கி விட்டன. செய்த அநிஞாயம், அக்கிரமம், அதர்மம், வினை மட்டுமே இப்போது இவருடன் கூட இருக்கின்றன. அவரை கேள்வி கேட்டு கஸ்ரப்பட்டு விசாரிக்கத்தேவையில்லை, அவருடன் சேர்ந்தியங்கியவர்கள் அங்கே காத்திருக்கிறார்கள் இவரைக்காண, அவர்களை கண்டதும் இவர் உளறத்தொடங்கி விடுவார். ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாமல் ஒன்பது உளறுவது இவரின் வழக்கம்.- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நீங்கள் சொல்வது பிரபல தொழிற்சங்கவாதியான கேசி நித்யானந்தா என நினைக்கிறேன். நான் அறிந்த வகையில் டக்கா சில காலம் இவரின் சீடர்களில் ஒருவர் போல இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் பெரியப்பா, சுவீகார தந்தை என பல கதைகள் உலாவுகிறன. இந்த கதைகளை தனக்கு கீர்த்தி ஏற்படும் வகையில் டக்காவே பரப்பினார் என்பதே நித்யாநப்தாவுடன் அருகில் இருந்து வேலை பார்த்தோர் என்னிடம் நேரடியாக கூறியது. கிறிஸ்மசுக்கு கேக் அடிப்பவர் எல்லாம் கிறீஸ்தவர் அல்ல 😂- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
மலையக மக்களை குடியமர்த்தி வாழ்வளிக்க முன், தம் தேர்தல் தொகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன். சுகாதார சுற்றுச்சூழல் கெடுதல் இதை முதல் கவனியுங்கள் சம்பந்தப்பட்டவர்களே!- Yesterday
- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
யாழ் மத்திய கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார் என விக்கியில் உள்ளது. 1977ம் ஆண்டு இவரது நெருங்கிய உறவினர் ஜே ஆர் ஜெயவர்த்தனவினால் தொழிற்சங்கம் ஒன்றில் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவரின் உதவியாளராக டக்லசார் செயற்பட்டார் எனவும் தகவல் உள்ளது. இத்தகைய அனுபவங்கள் டக்லஸ் அந்த காலத்திலேயே கொழும்பை பிரித்து மேய்வதற்கு உதவ போதுமானது. நடப்பு அரசாங்கம் டக்லசை எவ்வளவு தூரம் முடக்கும் என கூறுவது கடினமானது.- பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!
நான் இருக்கும் இடம் என்றும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் சினோவால் நிறைந்திருக்கும் பூமி. ஆனால் இன்றைய காலங்கள் அதாவது பத்து வருடங்களாக சினோ கொட்டவேயில்லை.அப்படி கொட்டினாலும் ஒரு நாள் இரண்டு நாட்களுடன் கரைந்தோடி விடும். உள்ளூர்வாசிகளின் வியாபாரங்களும் முடங்கிக்கொண்டு போகின்றது. காலநிலை மாநாடுகளில் தேவையில்லாத குண்டு வீசல்களையும், தேவையில்லாத ஏவுகணை வீசல்களையும்,தேவையில்லாத விண்வெளி ஆய்வுகளுக்கான செய்மதி கோள்களை ஏவுவதை நிறுத்த கோரிக்கை வைக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் என்ற சட்டம் உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட வேண்டும். வீட்டுக்கு முன்னாலை மூண்டு கார்...வீட்டுக்கு பின்னாலை மூண்டு கார் வைச்சிருக்கிற புலம்பெயர் சிறிலங்கன் டமில்ஸ் கவனிக்க.😛- அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்
நல்லதொரு திட்டமும் செயற்பாடுகளும்..... வியாபாரமும் விளம்பரமும் ஊர் முன்னேற்றமும் நிறைந்தது. ஊருக்கு ஊர் இப்படியான நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும். - "மூன்று கவிதைகள் / 17"
Important Information
By using this site, you agree to our Terms of Use.