stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
தரமான Tik Tok இணைப்பு. நன்றி
-
வசந்தம் வருகிறது
அதையேன் கேக்கிறியள்… பெப்ரவரி கடைசியில் ஆரம்பித்தால்… ஏப்ரலில் கடைசி ரெண்டு வாரம் விட்டு..மே மாசம் முழுவதும், யூன் 3ம் கிழமை வரைக்கும் எனக்கு உதுதான் அலுப்பு. மூன்று வகை மரங்களின் மகரந்தம் எனக்கு வைக்கோல் காய்ச்சல் hay fever ஐ தருகிறது. மருந்து எடுத்தால் குறையும்…. ஆனால்…. நாள் பூராவும் நோய் வந்த கோழி அல்லது சொம்பி போல் சோர்வாக திரிய வேண்டும். எல்லாவற்றையும் பாவித்தாயிற்று😂. ஜாமீன் கடலிலேயே இல்லையாம் எண்ட நிலை இப்போது. Non drowsy மருந்தை போட்டாலும்…நித்திரை மட்டும்தான் வராது, ஆனால் சோர்வு அப்படியே உள்ளது என்பது என் அனுபவம்.
-
புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல் !
புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல் ! 27 Mar, 2026 | 05:12 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம், பெற்றோரது தொழில் தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி மற்றும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். இந்திய உயர் ஸ்தானிகராலயம், ( 36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம், (இல. 42, ஹில்பஹந்துர மாவத்தை, அம்பிட்டிய வீதி, கண்டி), இலங்கை ஆகிய முகவரிகளிலும் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ.இலக்கம்-882, காலி வீதி, கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2026 ஏப்ரல் 28ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும். https://www.virakesari.lk/article/242105
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
3 பகுதி கட்டுரையும் வாசித்து விட்டேன். கட கடவென்று நடந்ததை எழுதி இருக்கிறீர்கள். சிறப்பு!! 👌 உங்களை தங்களோடு கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறேன் என்ற அந்த குடும்பத்துக்கு, நீங்கள் எனக்கு இன்னும் ஒருவர் கூட்டி செல்கிறார் என்று சொல்லி இருக்கலாமே என்று தோன்றுகின்றது. இன்னும் ஒன்று... விமானநிலையத்தில் சந்தித்த பணிப்பெண் வேலைக்கு போகும் அந்த பெண்ணிடம் நிறையவே அவரின் குடும்ப விவகாரங்கள் பேசிவிட்டீர்களோ என்றும் தோன்றியது. ஹோட்டல் கட்டில் விரிப்பில் பொட்டு பொட்டு ரத்தம்... வாசிக்கும் பொது கொஞ்சம் வில்லங்கமான சிந்தனை வந்து தொலைத்துவிட்டது. 🤭 சிக்கலான கால கட்டத்தில் தனி ஆளாக Expired ஆனா கிரெடிட் கார்ட்டுடன் "2 x 23kg அரிசிமாவு, பலகாரம், பாறை கருவாடு" சகிதம் சேதாரம் இல்லாமல் லண்டன் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். அது புலம்பெயர்ந்த தமிழருக்கேயான கெத்து. 😁
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
பெண்களின் உடை-வரலாற்றுக்கு வயது 5000…. 5000 வருடத்தில் மாறாத ஒரே விடயம்…. பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை…. 35+ வருட புலம்பெயர் வாழ்வை கொண்ட தமிழர்கள் பலரும் இங்கே ஈரான் நல்லம், ஆப்கானிஸ்தான் அப்படி ஒண்டும் மோசமில்லை என எழுதும் போது…. ஜனநாயகத்தை விட இப்படியான நாடுகள் உசத்தி என்றே எழுதும் போது, தள்ளாத வயதில் டெக்சஸ் போன ஜேசுதாஸ் மாறி இருக்க வாய்புகள் குறைவு.
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
“சுத்தமான இலங்கை” முயற்சிக்கு ஜப்பான் ஆதரவு – 112 மில்லியன் ரூபா திட்டத்தில் 8 தாழ்வான தளம் கொண்ட பேருந்துகளை வழங்கியது ! 27 Mar, 2026 | 05:00 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்திற்காக எட்டு (8) தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்களை வழங்குவதற்காக நன்கொடை உடன்படிக்கை ஒன்றில் ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா இன்று வெள்ளிக்கிழமை (27) கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திக்கான அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேராவுடன் கைச்சாத்திடப்பட்டது. ஜப்பான் அரசு இந்தத் திட்டத்திற்கு 362,476 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 112 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் பெப்ரவரி 2025-ல் இலங்கைக்கு விஜயம் செய்த அப்போதைய ஜப்பானின் வெளிநாட்டு பிரது அமைச்சர் திருமதி. அகிகோ இகுய்னாவுடனான ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் சந்திப்பில், அவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்த சந்திப்பில் ஜனாதிபதி, ஜப்பானில் இருந்து தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “இந்தத் திட்டம் மூலம் வழங்கப்படவுள்ள பேருந்துகள், பயன்பாட்டின் பின் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட வாகனங்களாகும். அவை யூரோ 4 வெளியீட்டுத் தரநிலைகளுக்கு உட்பட்ட, சூழலுக்கு மிகவும் உகந்த வாகனங்களாகும். இந்த திட்டம் தற்போதைய நிர்வாக அமைப்பில் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றான “சுத்தமான இலங்கை” முன்னெடுப்பை நேரடியாக ஆதரிக்கிறது. இந்த உயர் தர வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொருளாதார செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பொருளாதார இழப்பைக் குறைப்பது போன்ற முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகக்கூடியவையாக இருப்பதால், இந்தத் திட்டம் ஜப்பான் அரசின் ராஜதந்திர கொள்கைகளில் முக்கியமான “மனித பாதுகாப்பு” என்ற கொள்கையின் கீழ் உள்ளடங்கும். இது நலிவுற்ற நபர்கள் மரியாதையுடன் வாழவும் வலிமை பெறவும் உதவும். இந்த பேருந்துகள் பணியாளர்களின் போக்குவரத்தை சீராக்குவதன் மூலம், இலங்கையர்களின் மொத்த வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதாக நான் நம்புகிறேன்.” என்றார். இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திக்கான அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேரா, இவ்வாறு கூறினார். “இந்த மதிப்புமிக்க நன்கொடை, இலங்கையர்களின் வாழ்க்கையில் அத்தியாவசிய பங்காற்றும் பொது போக்குவரத்துக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் திறனை மேம்படுத்துவதிலும் முக்கியமான ஒரு முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. மேலும் அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நேரடி மற்றும் நீண்டகால நன்மைகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை மக்களின் ‘ஒரு வளமையான நாடு – அழகான வாழ்க்கை என்ற தேசிய கண்ணோட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நீண்டகால நிகழ்ச்சியில் பங்களித்திருக்கும் ஜப்பான் அரசு மற்றும் ஜப்பானிய மக்களுக்கு, நாங்கள் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது இரு நாடுகளுக்கிடையிலான நிலையான மற்றும் நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை தரும் எதிர்காலத்தை உருவாக்கவும் ஊக்குவிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார். 1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/242101
-
வசந்தம் வருகிறது
ஒவ்வாமையுடனும் ஆஸ்மாவுடனும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். ஓட்டப் பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஆஸ்மா முற்றாக மறைந்து விட்டது. ஒவ்வாமை ஓரளவு உள்ளது. பூத்திருக்கும் வயல் ஓரங்களில் மும்மாமல் ஓட முடிகிறது. விஞ்ஞான ரீதியில் ஒவ்வாமைக்கும் ஓட்டத்துக்கும் தொடர்பு இருக்குமோ அல்லது வேறு காரணங்களாலோ தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தடவை ஊசி போட்டிருந்தேன். தொடர்ந்து ஊசி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். நான் பாவிப்பது levocetrizine. 5 கிராம் குளிசையில் பாதியை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எடுப்பதுண்டு. மார்ச் - ஏப்ரல் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பாதிக் குளிசை எடுப்பேன்.
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வு!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வு! 27 Mar, 2026 | 03:19 PM யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 09:00 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் வரவேற்புரையாற்றுகையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியினை உச்சளவில் பயன்படுத்தி, மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும் ஆக்கபூர்வமான கருத்துகளுடன் மாவட்டத்தின் சமூகப் பொருளாதார வாழ்வியலை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் சர்வதேச ரீதியாகப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அத்தியாவசியச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளதால் இக்கூட்டம் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். இக்கூட்டத்தின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன: மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ள காணி விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தற்போதைய எரிபொருள் விநியோக நடைமுறைகள் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள். நகர அபிவிருத்தித் திட்டம், 'சமூக சக்தி' நிகழ்ச்சித் திட்டம் மற்றும் 'தூய இலங்கை' (Clean Sri Lanka) வேலைத்திட்டங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடந்த காலத் தீர்மானங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வட மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/242088
-
அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு
அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு Mar 27, 2026 - 11:10 AM ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான அமைச்சர் குமார ஜயக்கொடி நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார். குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன், அவரது விரல் அடையாளங்களைப் பெற்று அது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முன் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படவுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டின்படி, 2016 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, கொள்முதல் செயல்முறை ஒன்றின் ஊடாகத் தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn8h2h8k000f356p1tglksu1
-
மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது
மட்டக்களப்பில் கடத்தல், கொள்ளை : மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது! 27 Mar, 2026 | 04:07 PM மட்டக்களப்பு பகுதியில் பெண்களைக் கடத்தி, அவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவம் தொடர்பில் மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர்கள் உட்பட அறுவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கடத்தி, அவர்களுக்குச் சத்திர சிகிச்சைகளின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளைத் தெளித்து மயக்கமடையச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்தக் கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மயக்க மருந்தைத் தெளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து தெளிக்கும் கருவி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 19ஆம் திகதி வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்ற இளம் தாய் ஒருவரும் அவரது இரண்டரை வயது குழந்தையும் காணாமல் போயிருந்தனர். மறுநாள் குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். அவரது குழந்தை அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதுடன், இதன்போது, அதே கிணற்றுக்குள் இருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டதன் பின்னர், சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய இரண்டு நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 முச்சக்கரவண்டிகள், 1 கார், கோடரி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆறாவதாக மேற்குறிப்பிட்ட முச்சக்கரவண்டி சாரதியும் கைதாகியிருக்கிறார். இந்நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/242093
-
அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை
வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரும் Mar 27, 2026 - 12:42 PM தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் என அவர் தெரிவித்தார். தற்போது முதலாவது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட திசையிலிருந்து காற்று வீசாது என்பதுடன், காற்றின் வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். இக்காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேர் உச்சியில் காணப்படுவதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் கடல் மற்றும் நிலப்பரப்பு வெப்பமடைந்து வெப்ப அலைகளை வெளியிடுகின்றன. இதன் மூலம் வளிமண்டலம் மேலும் வெப்பமடைகிறது. தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும், அடிக்கடி நீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmn8k8pm9000h356pq8c69s6b
-
சிகாடா வைரஸ்; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா; அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
சிகாடா வைரஸ் ; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா ; அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? 27 Mar, 2026 | 04:41 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada) என அழைக்கப்படும் புதிய கொவிட் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்படும் இந்த வைரஸ் வகையை உலக சுகாதார நிறுவனம் (WHO) “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” (Variant Under Monitoring) என வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வைரஸ் தற்போது உலகளவில் 23க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் பதிவான கொவிட் பாதிப்புகளில் சுமார் 30% வரை “சிகாடா” வகையைச் சேர்ந்தவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியா, புளோரிடா, நியூயோர்க், டெக்சாஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரிசோதனைகள் மற்றும் பயணிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மூலம் இந்த மாற்றம் அடையாளம் காணப்பட்டுள்ளது. “சிகாடா” வைரஸ் முந்தைய ஒமைக்ரோன் வகைகளை விட 70க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சில அறிகுறிகள் தீவிரமாக வெளிப்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வைரஸ் தாக்கத்தின்போது காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு: கடுமையான தொண்டை வலி மூச்சுத்திணறல் மற்றும் சுவாச சிரமம் அதிக சோர்வு மற்றும் தசை வலி குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகள் காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம் தொடர் இருமல் தலைவலி சுவை அல்லது வாசனை இழப்பு இந்த புதிய கொவிட் மாற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கைகளை அடிக்கடி சவர்க்காரம் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் மூடிய இடங்களில் அதிக நேரம் தங்குவதைத் தவிர்த்தல் வீட்டிலும் அலுவலகங்களிலும் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்தல் மருத்துவ ஆலோசனைப்படி தடுப்பூசிகளைப் பெறுதல் “சிகாடா” வைரஸ் தற்போது கண்காணிப்பு நிலையில் இருந்தாலும், அதன் பரவல் வேகம் மற்றும் மரபணு மாற்றங்கள் காரணமாக உலக சுகாதார அமைப்புகள் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சமின்றி, ஆனால் விழிப்புணர்வுடன் இருந்து சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும் என அறிவுறுத்தப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/242098
-
75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!
75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு Mar 27, 2026 - 12:45 PM 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது. https://adaderanatamil.lk/news/cmn8kgig0000i356poaagrmbb
-
ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு Mar 27, 2026 - 06:41 PM ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 'வெரிட்டே ரிசர்ச்' (Verité Research) நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரச பிணையங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்த தகவல்களை கோரியிருந்தது. குறித்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற திகதிகள், அவற்றின் செயல்திறன், விலைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்த விரிவான பதிவுகள் உள்ளிட்ட விபரங்களை அது கோரியிருந்தது. இது தொடர்பாக மத்திய வங்கி சில பொதுவான தகவல்களை வெளியிட்ட போதிலும், இவை வணிக ரீதியாக உணர்திறன் மிக்கவை என்பதாலும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1) பிரிவின் கீழ் உள்ள விதிவிலக்குகளுக்குள் வருவதாலும், விரிவான தகவல்களை வழங்க மறுப்புத் தெரிவித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(d) பிரிவின் கீழ், மூன்றாம் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வணிக ரீதியான இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான விதிவிலக்கிற்குள் இந்தத் தகவல்கள் அடங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிதியத்தின் மூலோபாயங்கள் பகிரங்கப்படும் என நீதிமன்றம் அவதானித்துள்ளது. இதன் மூலம் அரச பிணையங்கள் ஏலத்தில் சந்தையிலுள்ள ஏனைய தரப்பினர் முன்கூட்டியே எதிர்வுகூறல்களை மேற்கொண்டு தந்திரோபாய ரீதியில் ஏலங்களை சமர்ப்பிக்க முடியும். இது இறுதியாக மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிதியத்தின் போட்டித்தன்மை மற்றும் இலாபமீட்டலைக் குறைக்கும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நிதியத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மத்திய வங்கிக்குள்ள பொறுப்பை வலியுறுத்திய நீதிமன்றம், இவ்வாறான உணர்திறன் மிக்க நிதித் தகவல்களை வெளியிடுவது நிதியத்தின் சந்தை ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. நிதியத்தின் வெளிப்படைத்தன்மையானது வருடாந்த அறிக்கைகள், கணக்காய்வாளர் நாயகத்தின் தணிக்கை மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை போன்ற சட்டரீதியான பொறிமுறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொது நலன் சார்ந்த விடயத்தில், இந்தத் தகவல்களை வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள், ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விடவும் அதிகம் என்பதை நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் முடிவெடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn8x6xuo0000356p9xf3491g https://epf.lk/ https://etfb.lk/ta/home/
- Today
-
"சர்வதேச விதிகளைப் பெரிய நாடுகள் மீறி வரும் வேளையில், சுதந்திரமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்" - பெலாரஸ் ஜனாதிபதி
புரின் உக்ரைனை ஆக்கிரமிக்க முனைவதை உள்குத்தாகச் சொல்லியிருக்கிறார் லூக்கா😊
-
"சர்வதேச விதிகளைப் பெரிய நாடுகள் மீறி வரும் வேளையில், சுதந்திரமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்" - பெலாரஸ் ஜனாதிபதி
வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு துப்பாக்கியைப் பரிசளித்தார் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ Published By: Digital Desk 3 27 Mar, 2026 | 10:00 AM வடகொரியாவிற்கு முதன்முறையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கிம் ஜாங் உன்னுக்கு நவீன ரகத் துப்பாக்கி ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை (26) பியொங்யாங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பெலாரஸில் தயாரிக்கப்பட்ட நவீன தானியங்கி துப்பாக்கி ஒன்றை கிம் ஜாங் உன்னுக்கு லுகாஷென்கோ வழங்கியுள்ளார். "எதிரிகள் யாராவது தோன்றினால் இதைப் பயன்படுத்துங்கள்" என அவர் கிண்டலாகக் கூறியபோது, கிம் ஜாங் உன் அதனைச் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டுள்ளார். பதிலுக்கு, கிம் ஜாங் உன் லுகாஷென்கோவிற்கு ஒரு வாள் மற்றும் லுகாஷென்கோவின் உருவம் பொறிக்கப்பட்ட பெரிய பூச்சாடி ஒன்றையும் பரிசளித்துள்ளார். வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகியவற்றுக்கிடையே புதிய 'நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு' ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த 'அடிப்படை நட்பு ஒப்பந்தம்' உறவுகளை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. "சர்வதேச விதிகளைப் பெரிய நாடுகள் மீறி வரும் வேளையில், சுதந்திரமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்" என லுகாஷென்கோ இதன்போது வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242046
-
அதிக காற்று மாசுபாடு கொண்ட நாடாக பாகிஸ்தான்
அதிக காற்று மாசுபாடு கொண்ட நாடாக பாகிஸ்தான் Mar 27, 2026 - 08:18 AM 2025 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாகக் காணப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அங்குள்ள நுண்துகள்களின் செறிவு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த அளவை விட 13 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தரக் கண்காணிப்பு நிறுவனமான IQAir இந்த வாரம் வெளியிட்ட அதன் வருடாந்த அறிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்குக் குறைவாக சராசரி நுண்துகள் அளவைப் பேண முடிந்தவை வெறும் 13 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் காணப்பட்ட 7 நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. IQAir நிறுவனம் 143 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்களிலுள்ள 9,446 நகரங்களிலிருந்து தரவுகளைத் திரட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, கண்காணிக்கப்பட்ட 143 நாடுகளில் 130 நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத் தரநிலையை எட்டுவதற்குத் தவறியுள்ளன. இந்தப்பட்டியலில் இலங்கை 42 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையில் 2024 ஆம் ஆண்டை காட்டிலும் 2025 இல் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளது குறித்தப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும் பங்களாதேஷ் இரண்டாம் இடத்திலும் தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn8ax39a0005356paxykmt1d
-
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
இரானுக்கு மேலும் 10 நாள் கால அவகாசம் - பாகிஸ்தான் பற்றி டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரான் விவகாரத்தில் ஒரு புதிய 'கால அவகாசத்தை' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இரவு அறிவித்தார். "இரானின் எரிசக்தி நிலையங்கள் மீது அடுத்த 10 நாட்களுக்கு எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக திங்களன்று, இது தொடர்பாக அவர் ஐந்து நாட்கள் கொண்ட ஒரு 'காலக்கெடுவை' அறிவித்திருந்தார்; அந்தக் காலக்கெடு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. "இரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அதன் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளோம். இந்த அவகாசம் ஏப்ரல் 6, 2026 அன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும்," என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் கூறினார். "போலிச் செய்தி ஊடகங்களின் (Fake News Media) கூற்றுகளுக்கு மாறாக, எங்களது பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன," என்று டிரம்ப் எழுதியிருந்தார். முன்னதாக திங்களன்றும், இரானுடனான தனது பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் பயணித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். இரான் இந்தக் கூற்றை மறுத்ததுடன், பேச்சுவார்த்தைகள் தங்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் கூறியது. இரானின் 'பரிசு' பட மூலாதாரம்,Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2025 முன்னதாக வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி), வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இரானிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு 'பரிசு' குறித்து டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார். "இரானில் உள்ள சரியான நபர்களுடன் நாங்கள் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு ஒரு பரிசை அளித்தனர். 'உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில், 8 பெரிய கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதிக்கிறோம்' என்று இரான் எங்களிடம் கூறியது," என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் கொடிகளைப் பறக்கவிட்ட 8 கப்பல்கள் உண்மையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றன என்ற தகவல் தனக்குப் பின்னர் கிடைத்ததாக டிரம்ப் கூறினார். மேலும் இரண்டு கப்பல்களைச் செல்ல அனுமதிக்கப் போவதாக இரான் பின்னர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். முன்னதாக புதன்கிழமை, நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதி அளித்து வருவதாக இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருந்தார். "சீனா, ரஷ்யா, இந்தியா, இராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதி வழங்குகிறோம்," என்று அராக்சி தெரிவித்தார். அராக்சியின் இந்தக் கூற்று குறித்த தகவலை, மும்பையில் உள்ள இரானியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒரு சாத்தியமான இடமாகப் பாகிஸ்தானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதை இங்கு நினைவுகூரலாம். "மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் முழு ஆதரவை அளிக்கிறது," என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை மாலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த அறிக்கையை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்திருந்தார். இதிலிருந்து, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் தயாராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. எண்ணெய் விலையில் லேசான சரிவு பட மூலாதாரம்,Agoes Rudianto/Anadolu via Getty Images பிபிசி நியூயார்க் பிசினஸ் செய்தியாளர் நடாலி ஷெர்மனின் கூற்றுப்படி, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பது குறித்த டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு எண்ணெய் விலைகள் சரிந்தன. அமெரிக்கப் பங்குச் சந்தை மூடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் கூறினார். போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக் கூடிய பற்றாக்குறை குறித்த கவலைகளால் வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்திருந்தன, ஆனால் டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு விலைகள் மீண்டும் சரிந்தன. பிரென்ட் கச்சா எண்ணெயின் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய் சுமார் $108-ல் முடிவடைந்தன, ஆனால் டிரம்பின் அறிவிப்பிற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுமார் $1 சரிந்தன. தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரும் பங்கைக் கொண்ட நாஸ்டாக் குறியீடு, சுமார் 2.4% சரிந்தது. இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அமெரிக்காவில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான சரிவு ஆகும். சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான ஒரு வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஜூரி மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்களை குற்றவாளிகளாக அறிவித்து, மனுதாரருக்கு ரூ. 56.5 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டது. அமெரிக்க சந்தைகள் அக்டோபரில் இருந்த சமீபத்திய உச்சத்திலிருந்து 11% சரிந்துள்ள. அவை அதிகாரப்பூர்வமாக சரிவு நிலைக்குள் நுழைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வியாழக்கிழமை வர்த்தக அமர்வில் எஸ்&பி 500 குறியீடு 1.7% சரிந்தது, அதே நேரத்தில் டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியிடு 1% சரிவுடன் முடிவடைந்தது. https://www.bbc.com/tamil/articles/ce3dnxprg73o
-
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 4] [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] பஞ்சம் திடீரென ஒரு பெருவெடிப்பைப் போல வந்ததாகத் தோன்றினாலும், அது ஒரே நாளில் உருவானது அல்ல. கி.மு. முதலாம் நூற்றாண்டில் (கி.மு. 103 - 89), அனுராதபுரத்தின் வலகம்பாகு மன்னன் ஆட்சிக்காலத்தில், நாட்டின் அரசியல் அஸ்திவாரம் ஏற்கனவே பலவீனப்பட்டிருந்தது. தென்னிந்தியப் படையெடுப்புகள், ஏழு தமிழ் மன்னர்களின் குறுக்கீடு மற்றும் உள்நாட்டு அதிகாரப் போட்டிகளால் நீர் மேலாண்மை சிதைந்தது. பல ஆண்டுகளாக நீர்த்தேக்கங்கள் தூர்வாரப்படாமல் விடப்பட்டதும், பருவமழை தொடர்ந்து பொய்த்ததும் நிலத்தை மெல்ல மெல்ல மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளியது. முதலில் கிழக்குக் கடற்கரையின் திருகோணமலை அருகே கருகத் தொடங்கிய நிலம், பின்னர் ரஜரட்டையின் இதயப்பகுதியான அனுராதபுரத்தை நோக்கி நகர்ந்தது. பிரம்மாண்டமான குளங்களின் அடித்தளம் பிளந்து, நிலம் தாகத்தால் வெடித்தது. நீர் இல்லையெனில் பயிர் இல்லை; பயிர் இல்லையெனில் உயிர் இல்லை. 12 ஆண்டுகள் நீடித்த இந்தப் பஞ்சம் "பெமினிட்டிய சேய" (Beminitiya Seya) அல்லது பிராமண தீய பஞ்சமென அழைக்கப்பட்டது. களஞ்சியங்கள் காலியானதும், மக்கள் பசியால் நிலைகுலைந்தனர். வரலாற்றுக் குறிப்புகளின்படி, பசியின் கொடுமையால் மனிதர்களே மனிதர்களை உண்ணும் அவலமும் நேர்ந்தது. இது வெறும் வறட்சி மட்டுமல்ல; ஆட்சி மாற்றம், நிர்வாகக் குழப்பம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு என ஒரு நாகரிகத்தின் இருண்ட காலமாக மாறியது. மடங்களில் இருந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் உணவின்றி மடிந்தனர்; எஞ்சியவர்கள் உயிர் பிழைக்க இந்தியாவுக்கும், மலையகத்திற்கும் ஓடினர். அழியும் நிலையில் இருந்த தர்மத்தைப் பாதுகாக்க, அதுவரை வாய்மொழியாக இருந்த ‘திரிபிடகம்’ மாத்தளை அலுவிஹாரையில் முதல்முறையாக ஓலைச்சுவடிகளில் ஆவணப்படுத்தப்பட்டது. இந்த நெருக்கடி காலத்தைப் பழைய குடிகளான நாகர்கள், கடலோரத் தமிழர்கள் மற்றும் வேட்டுவ இனக்குழுக்கள் எதிர்கொண்ட விதம் வேறுபட்டது. அவர்கள் நிலத்தின் ரகசியங்களை அறிந்தவர்கள். ஆனால் இம்முறை இயற்கை மட்டும் சவால் விடவில்லை; புதிய அதிகார வர்க்கமும் சேர்ந்தே அழுத்தியது. நீர் எங்கு எஞ்சியிருந்ததோ, அங்கெல்லாம் மன்னரின் ஆணை புகுந்தது. நீர்நிலைகளின் உரிமை தனிநபர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பழைய நடுகற்களிலும், பாறைகளிலும் இருந்த தமிழ்-பிராமி எழுத்துக்களும், நாக வம்சத்தின் பாம்புச் சின்னங்களும், பழங்குடி இனக்குழுக்களின் குறியீடுகளும் மெல்ல அழிக்கப்பட்டன. அவற்றின் மேல், "இந்த நிலமும் நீரும் மன்னரின் கட்டளைப்படி வழங்கப்படுகிறது" என்ற புதிய அதிகாரத்துவ எழுத்துக்கள் செதுக்கப்பட்டன. பழைய வரலாற்றின் மேல் புதிய கதைகள் எழுதப்பட்டன. நிலத்தின் உண்மையான உரிமையாளர்களின் பெயர்கள் பாசி படிந்த கற்களில் மறைக்கப்பட, நீர் யாரிடம் இருந்ததோ அவர்கள் புதிய எஜமானர்களாக உருவெடுத்தனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மழை பெய்தபோது, நிலம் குளிர்ந்தது; ஆனால் அதன் பழைய அடையாளம் மீட்க முடியாதபடி மாறியிருந்தது. நீர் வற்றிய காலத்தில், ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளும், உரிமைகளும் சேர்த்தே வற்றச் செய்யப்பட்டன. பசி ஆறிய பின் எஞ்சியது, புதிய அதிகாரத்தால் மாற்றி எழுதப்பட்ட ஒரு தேசத்தின் வரலாறு மட்டுமே. அந்த நேரத்தில் அமைதியான எதிர்ப்பு உருவானது. வெளியில் பசி. உள்ளே கோபம். மன்னார் மீனவர்கள் இரவில் வலைகளில் செய்திகளை மறைத்து எடுத்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் பெண்கள் தங்களின் ஆடைகளில், குறிப்பாகப் புடவைகளில் நுணுக்கமான தையல் வேலைப்பாடுகள் (Embroidery) மூலம் செய்திகளையும், நில வரைபடக் குறிகளையும் ரகசியமாகப் பொறித்தனர். வவுனியா காடுகளில் வேட்டைக்காரர்கள் மறைவுப் பாதைகளை மனப்பாடம் செய்தனர். கலினி ஒருபோதும் தன்னை ஒரு கிளர்ச்சியாளர் என்று பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அவள் அந்த ரகசிய வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்டாள். பகலில் அவள் ஒரு குடியேற்ற அதிகாரியின் மனைவியாக, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தாள். வெளியில் பார்த்தால் கீழ்ப்படியும் மனைவி போலத் தோன்றினாள். ஆனால் இரவில் அவள் வேறு. தன் கணவனுக்கு எழுத்தாளராக பணிபுரிந்த போர்வையில், தன் கணவனின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களில் அவள் செய்த மாற்றங்கள் நுட்பமானவை. அவள் சில பதிவுகளை திட்டமிட்டு “தவறவிட்டாள்.” சில ஆவணங்கள் இடம் மாறின. சில பெயர்கள் நீக்கப்பட்டன. சில உத்தரவுகள் தாமதமானது. அவள் குழந்தைகளிடம் பழைய ஊர் பெயர்களைச் சொன்னாள். “இந்த நிலத்திற்கு முன்பு வேறு பெயர் இருந்தது,” என்று நினைவூட்டினாள். அவள் தாலாட்டு பாடல்கள் பாடினாள். அவை சாதாரண பாடல்கள் போல இருந்தது. ஆனால் அவற்றில் மறைந்த பாதைகள், கிணறுகள், ஆறுகள் பற்றிய தகவல்கள் இருந்தது. அவளின் எதிர்ப்பு ஆயுதமில்லாதது. அவள் வாள் எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தீ வைத்துக் கொள்ளவில்லை. அவள் நினைவைக் காத்தாள். அவள் புரிந்துகொண்டிருந்தாள்: நிலம் பறிக்கப்படலாம். நீர் தடுக்கப்படலாம். ஆனால் நினைவு உயிரோடு இருந்தால், மீண்டும் எழுந்து நிற்க முடியும். கிமு 2-ஆம் நூற்றாண்டு. இலங்கையில் புதிய குடியேற்றங்களும், மதம் சார்ந்த அதிகார மாற்றங்களும் நிகழத் தொடங்கிய காலம். வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பால் ஈ. பீரிஸ் (Dr. Paul E. Pieris) 1917-ஆம் ஆண்டு அரச ஆசியக் கழகத்தில் (Royal Asiatic Society) குறிப்பிட்டது போல, விஜயன் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பாரத தேசமே போற்றும் வண்ணம் பஞ்ச ஈஸ்வரங்கள் (ஐந்து சிவத்தலங்கள்) இலங்கையில் செழித்திருந்தன. சிவா இந்தத் தொன்மையான மரபின் காவலனாக இருந்தான். அவன் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்களிடையே இந்த இரகசிய வலைப்பின்னலை உருவாக்கியிருந்தான். பஞ்சம் வருவதற்கு முன்பே அவன் இதை அமைத்திருந்தாலும், புதிய குடியேற்ற அதிகாரிகளின் வருகைக்குப் பின் இது உயிர்-மரணம் பிரச்சினையாக மாறியது. சிவா ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தது. பலர் ஏற்கனவே கடல் கடந்து தமிழகம் நோக்கிச் சென்றுவிட்டனர். அங்கு மொழி மாறவில்லை, பூர்வீகப் பெயர்கள் சிதைக்கப்படவில்லை. ஆனால் ஓடுவது உயிரைக் காப்பாற்றலாம்; நம் நிலத்தையும் நினைவையும் காப்பாற்றுமா? “உயிர் மட்டும் போதுமா? நாம் யார் என்ற அடையாளத்தை காக்க வேண்டாமா?” – இதுவே அவனின் போராக மாறியது. ஒரு நீர்க்கால்வாய் அருகே மோதல் வெடித்தது. மூன்று பேர் இறந்தனர் – இரண்டு குடியேற்றக்காரர்கள், ஒரு பூர்வீக மனிதன். பின்னர் அங்கு எழுப்பப்பட்ட கல்வெட்டில், புதிய மதத்தைத் தழுவிய குடியேற்றக்காரர்களின் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. அந்த இரவு, சிவாவும் கலினியும் ஒரு பழைய நாகர் கோயில் இடிபாடுகளில் சந்தித்தனர். “நாம் போய்விட்டால், இந்த இடத்தை அவர்கள் காலி நிலம் என்பார்கள்,” என்றான் சிவா. “நாம் போராடினால், நம்மை தர்மத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகள் என்பார்கள்,” என்றாள் கலினி. அனுராதபுரத்தில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது: பஞ்சத்தால் கைவிடப்பட்ட நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் மறுவினியோகம் செய்யப்படும். பௌத்த மதம் பரப்பப்பட்ட அதே வேகத்தில், பூர்வீக நாகர் மற்றும் தமிழ் மக்களின் நிலங்கள் 'புனித தானம்' என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டன. அப்போது சிவாவுக்கு ஒன்று புரிந்தது: இது நிலத்துக்கான போர் மட்டும் அல்ல. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் எனத் தீவைச் சுற்றி அரணாக நின்ற பஞ்ச ஈஸ்வரங்களின் நினைவுகளை அழித்துவிட்டு, புதிய வரலாற்றை எழுதும் முயற்சி இது. அவர்களுக்கிடையே ஒரு கனமான மௌனம் நிலவியது. அப்போது அவர்களுக்குப் புரிந்தது: மொழி மாற்றம்: பழைய பெயர்கள் மெல்ல பாளி மற்றும் ஆரம்பகால சிங்கள மொழி [எலு மொழி] வடிவங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. நில அபகரிப்பு: ‘தர்ம தானம்’ என்ற பெயரில் பூர்வீக மக்களின் விளைநிலங்கள் புதிய விகாரைகளுக்கு வழங்கப்பட்டன. அடையாளப் போர்: இது வெறும் மண்ணுக்கான சண்டை அல்ல; யார் இந்த நாட்டின் முதல் குடிமக்கள் என்ற வரலாற்று நினைவிற்கான போர். சிவா தன் கையில் இருந்த பழைய ஓலைச்சுவடிகளை இறுகப் பற்றினான். அதில் அந்த நிலத்தின் உண்மையான எல்லைகளும், நாகர்களின் பரம்பரை பெயர்களும் இருந்தன. வாளை விட வலிமையானது நினைவு என்பதை அவன் உணர்ந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 5 தொடரும் துளி/DROP: 2117 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/34545175638464309/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 145 பகுதி: 145 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" பண்டைய இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார சூழல் இந்த மரபுகளுக்கு இடையில் கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள ஏதுவாக இருந்துள்ளது. பௌத்தத்தில் காணப்படும் தியானம், துறவு மற்றும் நெறிமுறைக் கொள்கைகள் [Concepts such as meditation, renunciation, and ethical principles] போன்ற கருத்துக்கள் இந்து மதத்தின் ஆன்மீக மரபுகளுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. கௌதம புத்தருக்கும் இந்து மதத்திற்கும் இடையிலான உறவு சிக்கலானது மற்றும் ஒரு குறுகிய விவாதத்தில் முழுமையாக அதை தர முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவது அவசியம். பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டும் காலப்போக்கில் பரிணமித்துள்ளதுடன் அவற்றின் சமகால வடிவங்கள் அவற்றின் பண்டைய தோற்றத்திலிருந்து இன்று வேறுபட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம புத்தர், தன்னை ஒரு கடவுளாக வழிபடவேண்டாம் என்று கூறினார். அவர் சொல்லியது — மனிதர்கள் தங்களால் உண்மையைத் தேடவேண்டும், தானே சிந்திக்க வேண்டும், அறம், ஞானம், தியானம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும். ஆனால், புத்தரின் மறைவுக்குப் பிறகு, சில புத்த துறவிகள், அவரது போதனைகளை ஒரு மதமாக மாற்றினர். இதனால் இன்று புத்தர் ஒரு தெய்வமாக காட்சியளிக்கப் பெற்றார். மடாதிபதிகள் அல்லது புத்த தேரர்கள் போன்றோர் அவரது தூதுவர்கள் (messengers) என இன்று எண்ணப்பட்டு அவர்களையும் வழிபட வேண்டும் என்று நம்பிக்கை உருவானது. இது புத்தர் சொன்னதுக்கே முற்றிலும் எதிராகும். உதாரணமாக புத்தர் சொன்னது: “தாங்களே ஒளியாக இருங்கள்” — மற்றவர்களைச் சாராமல், தாங்களே உண்மை அறிய வேண்டும் ஆகும் [“Be a light unto yourself” – meaning, find your own truth.]. ஆனால் இன்று, பல இடங்களில் புத்தருக்கு பூஜை, படிம வழிபாடு, புத்த தேரர்களுக்கு கீழ்ப்படிதல் போன்றவை நடக்கின்றன. இவை இன்று சர்வசாதாரணமாக அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை நாம் இலங்கையில் காண்கிறோம். சுருக்கமாகச் சொல்லுவது என்றால், புத்தர் மக்கள் தாங்களே சிந்திக்க வேண்டும் என்றார் [to be free thinkers]. ஆனால் சிலர், அவரை தெய்வமாக மாற்றி, புத்த தேரர்களை பரமராய் மாற்றிவிட்டனர் — இது அவரின் உண்மைப் போதனைகளுக்குப் முற்றிலும் புறம்பானது. அபத்தமானது ஆகும் [But many later turned him into a god, and monks into mediators, which goes against his true message.]. உதாரணமாக, ஒரு மரியாதையின் பொருட்டு பல தலைமுறைகளாகவும், வெவ்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்தாலும், மரபுகளின் நம்பிக்கையில் எதையும் நம்ப வேண்டாம். பலர் அதைப் பற்றி பேசுகிறார்கள், என்பதால் அந்த விடயத்தை நம்ப வேண்டாம். கடந்த கால முனிவர்களின் அல்லது ஆசாரியர்களின் மேல் உள்ள விசுவாசத்தால் எதையும் நம்ப வேண்டாம். கடவுள் உத்வேகம் தந்தார் என்று உன்னை இணங்கவைத்து, நீ உன் கற்பனையின் பிரகாரம், எதையும் நம்ப வேண்டாம். உங்கள் எஜமானர்கள் மற்றும் ஆசாரியர்களின் அதிகாரத்தில் மட்டும் எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் பாட்டில் ஆராய்ந்து அல்லது சோதித்து, நியாயமானதாகக் நீங்கள் கண்டறிந்தவற்றை மட்டும் நம்புங்கள், அதற்குத் தக்க உங்கள் நடத்தையை இணங்க வையுங்கள் என்கிறார் கௌதம புத்தர். இவ்வாறு இலங்கையில் நடக்குமாயின், தமிழ் பேசும் எந்த மக்களுக்கும் எந்த அவலநிலையும் ஏற்பட்டு இருக்காது ! இலங்கையில் பௌத்தம் முதலில் சிங்கள இன மதமாக இருக்கவில்லை என்று பல அறிஞர்களும் சிந்தனையாளர்களும் வாதிடுகின்றனர். புத்தரின் முக்கிய போதனைகள் உள் அமைதி, இரக்கம் மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பற்றியவை மட்டுமே ஆகும். - அவை உலகளாவியவை என்பதுடன் அது எந்த இனம், சாதி அல்லது தேசத்துடன் என்றும் பிணைக்கப்படவில்லை. Part: 145 / APPENDIX – "The Buddha and His teachings" It's important to note that the relationship between Gautama Buddha and Hinduism is complex and cannot be fully encapsulated in a brief discussion. Both Buddhism and Hinduism have evolved over time, and their contemporary forms may differ from their ancient origins. Whatever Gautama Buddha preached and practiced , Buddhist monks, By converting the philosophy into a religion, also converted the Buddha, into a ‘God’, and themselves, as his ‘Messengers’, who must be revered and worshiped; totally disregarding the Buddha’s words as given below. “Believe nothing, in the faith of traditions, even though, they have been held in honor, for many generations, and in diverse places. Do not believe, a thing, because many people speak of it. Do not believe, in the faith, of the sages of the past. Do not believe, what you yourself have imagined, persuading yourself, that a God inspires you. Believe nothing, on the sole authority, of your masters and priests. After examination, believe what you yourself, have tested and found, to be reasonable, and conform your conduct thereto.” [The Buddha] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 146 தொடரும் / Will follow துளி/DROP: 2118 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 145 https://www.facebook.com/groups/978753388866632/posts/34545240858457787/?
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
🫣................... இப்படியான பிரபலங்களுடன் தான் ஒரு சாதாரண மனிதன் மல்லுக்கட்டி வாழ்ந்து, முன்னோக்கிப் போக வேண்டிய நிலை. பிரபலங்கள் சொல்வதால் அதை சரியென்று அப்படியே மேற்கோள் காட்டும் அறியாமையும், அவசரமும் வேறு எங்களின் சமூகத்தில் ஊறி நிற்கின்றது. பல வருடங்களின் முன்னர், கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுவது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டுகின்றது என்று சொன்னார். அன்று கேரளாவில் அவரின் கூற்றுக்கு எதிராக ஒரு போராட்டமே நடந்தது. ஜெயமோகன் கூட ஜேசுதாஸ் ஒரு பெரியவர், அவரை மன்னித்து விடலாம் என்று ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகம். இப்பொழுது ஜேசுதாஸ் டெக்சாஸில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். இப்பொழுதாவது அவர் மாறியிருப்பார் என்று நம்புவோம்.
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
மிக்க நன்றி அல்வாயன். நீங்கள் சொல்லும் விடயம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் அங்கு இருந்ததில்லை, ஆதலால் அவர்கள் எவரையும் எனக்குத் தெரியாது. கோவில் கதைகள் போன்று இவை தெரிந்தாலும், இவை மனிதர்களின் கதைகளே...............🤣.
-
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் - போட்டோ 51 - DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பை படம் பிடித்தவர்!
https://www.nature.com/articles/d41586-023-01313-5 👆 இந்தக் கட்டுரை 2023 இல் வெளிவந்தது. இதில் இருக்கும் தவல்களின் படி பார்த்தால், லோகமகாதேவியின் கட்டுரையில் இருப்பது போல எதுவும் எளிதாக, நேரடியாக நடக்கவில்லை. ஒரு படம் மட்டுமே டி.என்.ஏ அமைப்பின் கண்டு பிடிப்பை நிகழ்த்தி விடவில்லை. தனது ஆய்வுக்கு, றோசலின்ட் "B" வடிவத்தை தவிர்த்து விட்டு, "A" வடிவத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் அவர் நோபல் பரிசுக் குழுவில் உள்ளடக்கப் படாமைக்கான காரணம். இது அவரிடமிருந்து, அவரது அனுமதியின்றித் திருடப் பட்டது என்பது சென்ஷேனல் கதை எழுதுவோரின் வாதமாகவே தெரிகிறது.
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் இந்த தடவை பெட்டியை திமுகவிடம் வாங்கி கொண்டு அவர்களை முன்பு போல் விமர்சிப்பதில்லை என மக்கள் மத்தியில் ஒரு நிரூபிக்க முடியாத கதை அடிபடுவது தெரிந்ததே. இதற்கு வலு சேர்க்கும் படி, சீமானும் திமுகவை விமர்சிக்கிறேன் என ஆரம்பித்து பல நிமிடங்கள் திமுகவின் திட்டங்களை பாசிட்டிவாக பேசி விட்டு, கடைசி அரை நிமிடம் மட்டும் அதை விமர்சிக்கிறார். இதனால் இவர் திமுகவின் நல்லதுகளை மக்களிடம் எடுத்து சொல்லவா வந்தார் என தம்பிகள் குழம்பி போயுள்ளனராம்😂. அண்ணன் சபரீசனிடம் வாங்கிய பெட்டிக்கு விசுவாசமாக நடக்கிறார் என்பதே என் கருத்து. அண்ணன் திமுகவை பற்றி பேசியதை எடிட் பண்ணிய தொகுப்பு👇. - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.