Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கொலிடே தேடி போகும் உங்களுக்கு வேண்டியதுதான் கண்ணுக்கு தெரியும். ஏன் அங்கே நிரந்தரமாக இருக்க முடியவில்லை உங்களால்? கொலிடே போகிறவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து தமது கொலிடேயை பாழாக்க விரும்பமாட்டார்கள். சரி, யாராவது வந்தால், வாழ வழியை காட்டுங்கள். எந்தத் தமிழனும் யாழ்ப்பாணம் வரமாட்டான் என்று நீங்களே சொல்லி விட்டு யாரை குடியேற்றப்போகிறீர்கள்?
  3. இராணுவத்தின் அடாவடிகளால் தமது நிலங்களை பறி கொடுத்தவர்கள், விகாரைக்கு பறித்து எடுக்கப்பட்ட காணிகள், பிள்ளைகளை கையால் கொடுத்துவிட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது கதிகலங்கி நிற்கும் உறவுகள், இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்டு தவிப்பவர்கள் அவரது தேர்தல் பகுதியில் இருக்கும்போது, அவர்களை கை விட்டு கண்டியில் போய் நின்று கூவி அழைத்து அரசியல் செய்தால் யார் இவரை அறிவாளி, சுய புத்தியுள்ளவன் என்று என்று நம்புவார்கள்? இது தெரியாமலா இவ்வளவு நேரம் பக்கம் பக்கமாய் பாடம் எடுத்தீர்கள்? கேலி பண்ணினீர்கள்? இதற்குத்தான் சொன்னேன் அவர்களுக்கு என்ன தேவை என கேளாமல், அறியாமல் மேதாவித்தனம் காட்டக்கூடாது, அது கோமாளித்தனம். இனி என்ன? சீசீ இந்தப்பழம் புளிக்கும். தானே சொந்த நிலத்தை விட்டு ஓடி விட்டு மற்றவர்களை குடியேற அழைக்கிறாராம். நீங்களே மீண்டும் வந்து குடியேறுங்கள்!
  4. இந்த திரி பத்து பதினைந்து பக்கங்கள் உருளும் என்று பார்த்தால் ஏமாற்றமாய் கிடக்கிது.
  5. Today
  6. அவர்களை ஏன் போராட சொல்லுவான். அவர்கள் வந்து நாம் கொடுக்கும் உதவிகளில் தம்பாட்டை பார்த்து கொள்வார்கள். நீங்கள் சொன்னது போல் அடிக்கடி கொலிடே போவதால் சொல்கிறேன். தாயகத்தில் அங்கே ஒன்றும் போராட்டங்கங்கள் கனன்று கொண்டு இல்லை. பலர் இராமன் ஆண்டால் என்ன இராவணம் ஆண்டால் என்ன நிலை. கணிசமானோர் உங்களை போல் அனுர காவடிகள். இந்த சூழ்நிலையில் மலையகத்தில் இருந்து வரும் மக்கள் அவர்கள் பாட்டை பார்த்தபடி வாழலாம். தண்ணீரூற்றில், புதுகுடியிருப்பில், சுன்னாகத்தில், சாவக்ச்சேரியில் இன்னும் பல இடங்களில் முஸ்லிம்கள் வந்து குடியேறி வாழ்வதை போல. நிச்சயம் இதுவும் மடை மச்தெர்ச். முன்பே குசா அண்ணை வெட்டியது. நீங்கள் புது மமபட்டியோடு வந்துள்ளீர்கள். அனால் கருத்து மடைமாற்றுத்தான்.
  7. கவலையே வேண்டாம், இலங்கையின் வேறு எந்த பகுதி தமிழனும் வடக்குக்கு, குறிப்பாக யாழ்பாணம் வர மாட்டான். மலையக மக்களுக்கும் ஏனையவருக்கும் சுமந்திரன் உட்பட்ட உங்கள் அனைவரையும் பற்றிய போதிய பட்டறிவு இருக்கிறது. ஆகவேதான் 2009க்கு பின் முஸ்லிம்கள், சிங்களவர் வந்த போதும் வேறு எந்த பகுதி தமிழனும் வரவில்லை. உங்கள் இடங்கள் பறிபோகும்… அதை என்ன செய்தாலும் தடுக்க முடியாது … காளி கோவில்கள், மாட்டிறைச்சி கடைகளாக… கந்தரோடை…கந்துறுகோட்டேயாக சம்பில்துறை ஜம்புகோளவாக… நயினாதீவு நாகதீபவாக.. இன்னும்… தையிட்டி…. வெடுக்கு நாறி… அலம்பில்… நாயாறு… ஒட்டு மொத்த மன்னார் மாவட்டம்… 20, 30 வருடத்தில் எதுவும் மிஞ்சாது. ஆனால் இங்கே எந்த வேறு மாவட்ட தமிழனும் இருக்க மாட்டன். உங்களுக்கு கொடுத்து வாழ தெரியாது… அடித்து பறித்த பின் அங்கலாய்க்க மட்டுமே தெரியும்.
  8. உங்களுக்கு தாயகத்தின் நிலை புரியவில்லை, அவர்கள் தமது சொந்தநிலம் இருந்தும் குடியிருக்க முடியாத நிலையில் போராட்டமே வாழ்வாக போய்க்கொண்டிருக்கிறது, மலையக மக்களையும் இழுத்து வந்து அவர்களது உரிமை அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்க நினைத்து சகட்டுமேனிக்கு கருத்தெழுதி வெறுப்பேற்றுகிறீர்கள். உண்மையை ஜதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மேட்டுக்கு கருத்தெழுதும் உங்களுக்கு மடைமாற்றம், காவடி தான் தெரியும். சரி, எங்களால் முடியவில்லை, தெரியவில்லை. நீங்கள் செய்து காட்டுங்கள், நீங்கள்தான் துணித்தவராயிற்றே! அதன்பின் ஏற்றுக்கொள்கிறோம். திருப்பியும் புளிச்சுப்போன மடைமாற்று என்று வராதீர்கள், திருப்பிக்காட்டுங்கள்.
  9. தன் இனம் என வந்தால் அவனுக்கு 100, உங்களுக்கு 10. அந்த பத்தும் புலிகளின் தியாகத்துக்காக மட்டுமே.
  10. ஆமா, கைச்சாத்திட்டார்கள். அதற்கு என்ன நடந்தது? முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கைச்சாத்திட்டவர்களும் உயிரோடு இல்லை, அவர்களும் தங்கள் காலத்திலேயே கிடப்பில் போட்டு மூடி விட்டார்கள். வடக்கும் கிழக்கும் உத்தியோகபூர்வமாக நீதிமன்றத்தினால் பிரித்தாயிற்று, ஒவ்வொரு தடவையும் இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வந்த போதெல்லாம் பேச்சுக்கு அதை நினைவூட்டி சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார்கள், வாய் வலித்து விட்டது சொல்வதையே நிறுத்தி ரொம்ப நாளாகிவிட்டது. இந்திய அரசும் சேர்ந்து உருவாக்கிய சட்டமூலம் செத்துப்போய்விட்டது, இனி இதை செய்யப்போகிறார்கள்? தமிழர் வகை தொகையின்றி கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போது, அதை தடுத்து நிறுத்த முடியாத உலக தமிழர்களின் தலைவர், அவரின் மைந்தர் செய்து போடுவார்? இனி அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய தயாராகுங்கள். இந்தியாவின் பிடி இலங்கையில் தளர்ந்து வருகிறது, இந்த நிலையில் இந்தியா சொல்லி இலங்கை கேக்குமாம். அதற்கு ஈமைக்கிரியை செய்யச்சென்றிருக்கிறார்கள்.
  11. இதுதான் battered women syndrome அதாவது நெடுகாலம் கொடுமை அனுபவிக்கும் பெண் ஒரு தருணத்தில் கையில் கிடைப்பாதல் எடுத்து ஒரே போடாய் போடுவது.
  12. மடைமாற்று - வாங்கி வீட்டீர்களா? இப்போ புதிய டிசைனில் கிடைக்கிறது. செப்பல் ஷாட்👏 என்னது மலையக தமிழர் “தாயகத்தில்” இதுவா நிலமை? # இந்திராகாந்தி செத்துட்டாவா? இங்கே பலரின் எழுத்தை வைத்து உண்மையில் இவர்கள் இதுகாறும் சக தமிழனின் நிலை பற்றி என்ன அறிந்து வைத்துள்ளார்கள் என்பது விளங்குகிறது. பலருக்கு மலையக நிலமையை விட, குருதிஸ், உக்ரேன், ரஸ்ய மக்களின் பிரச்சனை பற்றிய அறிவு கூட😂. அந்தளவுக்கு இவர்கள் இந்த மக்களை, அவர்களின் பிரச்சனைகளை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என்பதே உண்மை.
  13. வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது. வங்கதேசத்தில் தேர்தல் வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆட்சி கவிழ்ந்ததில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தலைமையில், ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலே இருந்து வருகிறார். வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு எதிராக கோஷம் வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 15 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, "இந்தியா பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும்" என பேசினார். இதனால் கவலையடைந்த இந்திய அரசு, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை இந்திய வெளியுறவுத் துறை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஹஸ்னத் அப்துல்லா, "ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருவதால், இந்திய உயர் ஆணையரை நமது நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்" என பேசினார். மேலும், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி சில அமைப்புகள் பேரணி நடத்த முயன்றது. இதனையடுத்து, வங்கதேசத்தில் உள்ள 3 விசா மையங்களை இந்தியா மூடியது. வங்கதேசத்தில் மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. ஷெரீப் உஸ்மான் ஹாதி உயிரிழப்பு கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான போராட்டத்தில் "இன்கிலாப் மோன்சோ"( Inqilab Moncho) அமைப்பு முக்கிய வகித்தது. இந்த அமைப்பின் தலைவரான 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாதி(sharif osman hadi), கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி, டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் அவர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரண செய்தி வெளியானதும் ஆதரவாளர்கள் டாக்காவில் உள்ள சதுக்கத்தில் போராட்டத்தில் இறங்கினர். ஹிந்து இளைஞர் அடித்து கொலை இதனையடுத்து, போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star), 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) ஆகிய அலுவலகங்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தினர். மேலும், சட்டகிராம் (Chattogram) நகரில் உள்ள இந்தியத் துணை உயர் ஆணையரின் இல்லம் மற்றும் இந்திய துணை தூதரகம் மீதும் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனாடியாக விரைந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, மைமென்சிங் மாவட்டத்தின் பல்லூகா உபஜிலா, துபாலியா பரா பகுதியில் ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றிய தீபு சந்திர தாஸ் என்பவர் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறி அடித்து கொல்லப்பட்டார். மேலும், அவரை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்துள்ளனர். Lankasri Newsஇந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை -...வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது. வங்கதேசத்தில் தேர்தல் வங்கதேசத்தில்...
  14. சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேயே தொலைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அணுசக்தி கருவி 1965 ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா அணுகுண்டு சோதனை ஒன்றை முன்னெடுத்தது. இதனையடுத்து சீனாவின் ஏவுகணை சோதனையைக் கண்காணிக்கும் பொருட்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்தது. அமெரிக்க மற்றும் இந்திய மலையேறுபவர்கள் தங்கள் சரக்குகளை தயார் செய்தனர். ஒரு ஆண்டெனா, கேபிள்கள் மற்றும் SNAP-19C எனப்படும் 13 கிலோ ஜெனரேட்டர். அதன் உள்ளே புளூட்டோனியம் இருந்தது. மலையேறுபவர்கள் தங்கள் இலக்கை நெருங்கவிருந்த நேரம், திடீரென்று ஒரு பனிப்புயல் மலையை மூடியது. கீழே முகாமில், அதிர்ச்சியில் உறைந்துபோன அதிகாரிகள் குழு அவர்களைத் தொடர்புகொண்டு, எடுத்துச்சென்ற பொருட்களை தொலைக்க வேண்டாம், பத்திரப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்த நிலையில், மொத்த கருவிகளையும் சிகரத்தின் ஒருபகுதியில் மறைத்துவிட்டு, உயிருடன் தப்பியுள்ளனர். நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொண்ட அணுசக்தி கருவி ஒன்றை அவர்கள் இமயமலையில் விட்டுச் சென்றனர். அதன் பின்னர் அந்த அணுசக்தி கருவிகளை எவரும் பார்த்ததில்லை. சீனாவை உளவு பார்க்க, அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்ததை அமெரிக்கா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை. அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA முதலில் அந்த அணுசக்தி கருவியை காஞ்சன்ஜங்கா சிகரத்தில் நிறுவவே திட்டம் தீட்டியுள்ளது. உலகின் மூன்றாவது உயரமான சிகரம் அது. பின்னர் இந்திய இராணுவம் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனாவை நிறுவ முடிவானது. மூடி மறைக்கப்பட்டது செப்டம்பர் மாதம் மலையேறத் தொடங்கிய குழு, அக்டோபர் 16 ஆம் திகதி பனிப்புயலில் சிக்கியுள்ளது. 1965ல் நடந்த இச்சம்பவத்தில், தொலைத்த அணு ஆயுத கருவிகளை மீட்க மீண்டும் அதே குழு, ஓராண்டுக்குப் பிறகு மலையேறியுள்ளது. ஆனால் அவை மாயமாகியிருந்தது. பனிக்கட்டி, பாறை, உபகரணங்கள் என அனைத்தும் அந்தப் பனிச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 1978 வரையில் அமெரிக்காவின் அந்த ரகசிய திட்டம் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் ஒரு பத்திரிகையாளர் மொத்தமாக அம்பலப்படுத்த, அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. சிஐஏ எங்கள் தண்ணீரை விஷமாக்குகிறது என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் ஒலித்தன. ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்ம் ரகசியமாக முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது வரையில், SNAP-19C எனப்படும் 13 கிலோ எடை கொண்ட புளூட்டோனியம் ஜெனரேட்டர் என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது. Lankasri Newsஇமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வரு...சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேய...
  15. மற்றொரு பழங்காலத்து வள்ளம். இது இது கடந்து வந்த பாதை நெடியது. தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வத்தல், 1900கள் பிளாவுடன் தமிழர்கள், 1930கள் இலங்கை நாகபட்டினத்திலிருந்து ஓடிய கட்டுத்தோணி மாதிரி, 1900கள் முத்துக்குளித்தலில் வத்தல் ஒன்று சிலோன் - மன்னார் வளைகுடா, 1904 மன்னார் வளைகுடாவில் முத்துக்குளிப்பு, 1926 வத்தைகள்
  16. மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது. இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, மாறிவரும் வானிலை காரணமாக அபுதாபி சிவில் பாதுகாப்பும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், சமூக ஊடக தளமான X இல், மழை மற்றும் மூடுபனி நகர வானலையை மூடியதால், சின்னமான புர்ஜ் கலீஃபா கிட்டத்தட்ட முற்றிலும் அடர்ந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tamilwinவெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை...மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கிய...
  17. யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்பட்ட வள்ளங்கள் இரண்டு இது போன்ற வள்ளங்களின் மேல் பாய் கட்டி ஓடுவதும் உண்டு. ஆதாரம்:
  18. சிறுத்தைப்படைக்கு கடைசி வரைக்கும் ஒரு பாடல்கூட அவங்கள் வெளியிடேல.😒😖
  19. This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
  20. ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள் சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும். புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும். அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரும்புலிகளின் மகிமை பற்றிய எத்தனை எத்தனை மாபெரும் என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது இடம்பெற்றுள்ளது. அலைகள் தழுவும் கரையில் நிமிர்ந்து என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி வீரர்களின் நினைவாய் பாடப்பெற்றதாகும். தாகம் என்ற இறுவட்டிலுள்ள "வெற்றி பெற்றோம் வீருடனே" என்ற பாடலானது வேவுப்புலிகள் வேவின் போது படும் இன்னல்களை எடுத்துரைக்கிறது. பூநகரி நாயகன் என்ற இறுவட்டிலுள்ள "மழை மேகம்" என்ற பாடலானது தவளை பாச்சல் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகள் மேல் பாடப்பட்டதாகும். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  21. Yesterday
  22. நில உயிர்கள் -------------------- ஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர் நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன் இப்படியே போனால் உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர் எத்தனை நாளைக்குத்தான் முடியும் மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர் மூன்று வாரங்கள் தாண்டி மூன்று வருடங்களும் வந்து போனது ஒரு மலையை உளியால் பிளப்பது போல என் வீட்டுக்குள் வரும் பலசாலியை என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன் அவர்களின் கணக்கு சரியே நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன் என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்து எதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால் ஒரு மூலையில் ஒதுங்கினால் உயிர் தப்பி பலசாலியுடன் வாழலாம் என்கின்றனர் சாய்ந்து நிற்பவர்கள் உயிர் விட்ட பின்னும் நிலமாகப் பரந்து நீராக ஓடி அங்கே புதிய உயிர்களாக நித்தியமாக வாழும் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..........? உங்கள் வீட்டுக்குள்ளும் ஒரு பலசாலி வரும் போது பணிந்து குனிந்து வழிவிடுவீர்களா...............?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.