Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இவருக்கு பின்னால் உள்ள படத்தில் இருப்பவர் தானே காமராஜர் இவரின் காங்கிரஸ் தான் ஹிந்தி திணிப்பை தமிழ்நாட்டில் நடத்தியது. தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழர்கள் இவரை தேர்தலில் படு தோல்வி அடைய செய்ததோடு அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாமல் பார்த்து கொண்டனர் 👏
  3. பெயரைக் குறிப்பிடுங்கள் @வீரப் பையன்26 @வாதவூரான் , உங்கள் கணிப்புக்களின்படி இந்தியாவும் சிறிலங்காவும் இறுதிப் போட்டியில் விளையாடும். ஆனால் வெல்லுவது பாகிஸ்தான் என்று தந்துள்ளீர்கள். ஏதாவது மாற்ற விரும்பினால் சொல்லுங்கள் 😄
  4. நல்ல வேளை லோக்கலா சிந்திப்பது என்று தமிழ்தேசியம் பேசும் சீமானுடன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று போகலாமே என்று ஆசைபாடாமல் விட்டீர்களே 😃
  5. இறுதியில் கண் விழிக்கும் போது முன்னே நிற்கும் எருமை இருக்கிறதே? அது தான் cherry on the top! சான்சே இல்லை😂!
  6. Today
  7. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 95 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 95 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 35: மகாதாதிக மகாநாகனுடைய [Mahadathika Mahanaga] மரணத்துக்குப் பின்பு அவனுடைய மகன் அமந்தகாமினி அபயன் [ Amandagamani Abhaya] ஒன்பது வருடம், எட்டு மாத காலத்துக்கு ஆட்சி செய்தான். அவரது ஆட்சிக் காலத்தில் தீவு முழுவதும் உயிர்க் கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். எல்லா இடங்களிலும் திராட்சைக் கொடிகளைப் பயிரிட்டான். அவரது தம்பி கனிராசனு தீசன் [கனிராஜனு திஸ்ஸன் / Kanirajanu Tissa] அமந்தகாமினி அபயனைக் கொன்று மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அமந்தகாமினி அபயனின் மகன் சூலபாயன் [Chulabhaya] கனிராசனு தீசன் இறந்த பிறகு ஒரு வருடம் ஆட்சி செய்தான். சூலபாயனின் மரணத்திற்குப் பிறகு அவனது தங்கை சிவாலி [Sivali] நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள் . அமந்தகாமினி அபயனின் மருமகன் இளநாகன் [இளநாகன் என்பது ஒரு தமிழ்ப் பெயர் / Ilanaga, also known as Elunna] சிவாலியை அரியணையிலிருந்து இறக்கி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் மூன்று ஆண்டுகள் இடைக்கால ஆட்சி உள்ளது, ஆனால் தீபவம்சத்தில் இல்லை. ஏனெனில் முப்பத்தைந்தாவது அத்தியாயத்தின் 16 முதல் 44 வரையிலான வசனங்களில் ஒரு கற்பனையான நம்பமுடியாத கதை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இளநாகனின் மரணத்திற்குப் பிறகு, அவனது மகன் சந்தமுகன் சிவன் (Chandamukha Siva / ஒரு தமிழ்ப் பெயர்) எட்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தான். சந்தமுகன் சிவன் ஒரு விகாரை கட்டினான், மேலும் அவனது மனைவி தமிழாதேவி [தமிழ் தேவி / Damiladevi] கிராமத்திலிருந்து தனது சொந்த வருவாயை விகாரைக்கு வழங்கினார். அந்தக் காலத்தில் தமிழர்களும் பௌத்தர்களாகத்தான் இருந்தார்கள். இதில் நீங்கள் கவனிக்கக்கூடிய மற்றொன்று சந்தமுகன் சிவனின் மனைவியின் பெயர் கூட தமிழ்தேவி! கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப் பட்ட கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 – ஆகத்து 25, 79 கிபி) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன் சந்தமுகன் சிவனின் [சந்திரமுக சிவாவின்] ஆட்சியைப் பற்றி பதிந்துள்ளார். முழு விபரத்துடன் விரிவாக ஏற்கனவே தரப்பட்டுள்ளது. மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது என்பதையும் கவனிக்க. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததைக் காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது, மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. சந்தமுகன் சிவனின் தம்பி யசலாலக்க தீசன் [Yassalalaka Tissa] மன்னனைக் கொன்று ஏழு ஆண்டுகள் எட்டு மாதங்கள் ஆட்சி செய்தான். 51 முதல் 56 வரையிலான வசனங்களில் ஒரு வழக்கமான பழைய கதை ஒன்று சொல்லப்படுகிறது. இதன் விளைவாக தமிழர்களிடையே இப்போதும் பொதுவான புனைப்பெயரான 'சுபா' [Subha] என்ற பெயருடன் ஒரு வாயில் காவலாளி மன்னனானான். அவன் ராஜாவின் சாயலைக் கொண்டிருந்தான், அதையே ராஜாவைக் கொல்லவும் பயன்படுத்தினான். அவன் சுபகராஜன் அல்லது சுபா [Subharajah] என்ற பெயருடன் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் வள்ளி விகாரை [Valli Vihara] என்ற பெயருடன் ஒரு விகாரையைக் கட்டினான். 'வள்ளி' என்பது பண்டைய காலங்களிலும் இன்றும் ஒரு பொதுவான தமிழ் பெயர். இங்கே, தமிழ் மன்னர் தமிழ் பெயருடன் ஒரு விகாரையைக் கட்டினார். பின்னர் 59 முதல் 70 வரையிலான வசனங்களில் மற்றொரு கதை கூறப்பட்டுள்ளது. இந்த கதையின்படி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வாசபா அல்லது வசபன் [Vasabha] நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். வாசபா ஒரு தமிழராக இருக்க வேண்டும். இதை எல்லாளனுடைய [Elara] ஆட்சிக் காலத்தின் நீளத்துடன் ஒப்பிடுக. 71 முதல் 100 வரையிலான வசனங்களில், விதியால் மன்னர் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ வேண்டியிருந்தது என்றும், ஆனால் புத்தருக்கும் துறவிகளுக்கும் புண்ணியங்களைச் செய்ததன் மூலம் அதை நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நீட்டிக்க முடிந்தது என்றும் மற்றொரு கதையில் கூறப்பட்டுள்ளது. எனவே, இப்படியான இந்த கதையை வரலாறாகக் கருத வேண்டியதில்லை. வாசபா அல்லது வசபனின் அடையாளம்: வாசபா ஒரு தமிழர் என்று மகாவம்சம் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அவர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது நியாயமான ஊகங்களை எழுப்புகிறது. அனுராதபுரத்தின் பல ஆரம்பகால ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மேலும் இப்பகுதியில் தமிழ் செல்வாக்கு இருந்ததையும் நிராகரிக்க முடியாது. Part: 95 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 35: After Mahadathika’s death, his son Amandagamani reigned for nine years and eight months. Killing was prohibited during his reign. His younger brother Kanirajanutissa killed the king Amandagamani, and ruled for three years. Amandagamani’s son Culabhaya ruled for one year after the death of Kanirajanutissa. After the death of Culabhaya his younger sister Sivali ruled for four months. Amandagamani’s nephew Ilanaga (Ilanaga is a Tamil name) dethroned Sivali and ruled for six years. There is an interregnum of three years in the Mahavamsa, but not in the Dipavamsa. This is because an invented unbelievable storey spun in the verses 16 to 44 of the Chapter thirty-five. After the death of Ilanaga, his son Candamuga Siva (a Tamil name) reigned for eight years and seven months. Candamuga Siva built a Vihara and his wife, known as Damiladevi bestowed her own revenues from the village to the Vihara. Tamils must be Buddhists too in those days. Candamuga Siva’s younger brother Yasalakatissa killed the king and ruled seven years and eight months. A usual old storey is told in the verses 51 to 56, and in the process a gate watchman with the name Subha, quite a common nick name even now among the Tamils, became the king. He had the semblance of the king and used that to kill the king. He ruled six years with the name Subharajah. He built a Vihara with the name Valli Vihara. Valli is a common Tamil name in ancient times as well as now. Tamil king built a Vihara with the Tamil name. Then another storey is told in the verses from 59 to 70. As per this storey, Vasabha from the Northern Province ruled for forty-four years. Vasabha must be a Damila. Compare this with the Elara’s length of rule. Another storey is told in the verses from 71 to 100 that the king was to live only twelve more years by fate, but he was able to extend it to forty-four years by doing meritorious works to the Buddha and to monks. This storey need not be considered as history! நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 96 தொடரும் / Will follow துளி/DROP: 2008 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 95 https://www.facebook.com/groups/978753388866632/posts/33604232895891926/?
  8. இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ விக்வாஸ் மேல் ஓட்ட‌மாய் பார்த்தேன்...............நீங்க‌ள் சொல்லும் வீர‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் தான்...............
  9. அந்தக் கால காதல் கடிதங்களில் இந்த பாட்டு கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
  10. அவுஸ்ரேலிய பிபிஎல் பார்க்கின்றவர் நீங்கள், அவுஸ்ரேலியாவிலுள்ள மெனன்டி சகோதரர்களும் இத்தாலிக்காக ஆடுகிறார்கள் என கூறப்படுகின்றது, பல சர்வதேச வீரர்களை கொண்ட அணி.
  11. Sri Lanka: Dasun Shanaka (c), Pathum Nissanka, Kamil Mishara, Kusal Mendis, Kamindu Mendis, Kusal Janith Perera, Charith Asalanka, Janith Liyanage, Pavan Rathnayake, Wanindu Hasaranga, Dunith Wellalage, Maheesh Theekshana, Dushmantha Chameera, Matheesha Pathirana, Eshan Malinga தமிழர்கள் இல்லாத இலங்கை அணி. ஒருவேளை மண்டதீவு மைதானம் திறந்த பின்னர் ஏதாவது நடக்குமா?
  12. வணக்கம் வாத்தியார் . ......! இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் .......! --- கண்ணாளனே ---
  13. கொழும்பு மைதான‌த்தை த‌விற‌ ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள் இல‌ங்கை மைதான‌ங்க‌ள்...................
  14. அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் . .......! 😍
  15. பாக்கிஸ்தானின் சுழ‌ல் ப‌ந்து வீச்சு இப்போது ந‌ல்ல‌ நிலையில் இருக்கு..............சிறந்த‌ வீர‌ர்க‌ளை பாக்கிஸ்தான் தேர்வுக்குழு தெரிவு செய்து இருக்கின‌ம்................
  16. ஈவிரக்கமற்ற ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வேறெந்தப் போராட்டமும் இன்றைய உலகில் வெற்றி தராது.
  17. இது என்ன‌ கொடுமை லொள் நான் பாக்கிஸ்தான் கோப்பை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறேன்........... இந்த‌ முறை ஜ‌க்க‌ம்மாவை கைவிட்டு அல்லா அக்ப‌ட் சொல்ல‌ வேண்டிய‌து தான் ஹா ஹா😁........................
  18. அத விடுங்க ....... தப்பு நடப்பது சாதாரணம் கந்தப்பு ........ நீங்கள் சுட்டிக்காட்டியதால் தான் நானும் கவனித்தேன் அவ்வளவுதான் . .......இல்லையென்றால் கிருபன் ஏதோ தான்தான் கண்டுபிடித்ததுபோல் பெரிய பில்டப் குடுத்திருப்பார் .......! 😂
  19. இத்தாலி அணியில் தென் ஆபிரிக்கா வீர‌ர் ஒருவ‌ர் விளையாடுகிறார இங்லாந் நாட்டை சேர்ந்த‌ வீர‌ரும் இத்தாலி அணியில் விளையாடுகிறார்................ இத்தாலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் சாதிக்க‌க் கூடும்...................
  20. அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல பாடம். அவர்கள், அதிலிருந்து கற்று வருவார்கள். இந்த T20 போட்டிகளில் ஒருவரையும் முன்னணி அணி என்று கூறமுடியாது. யாரும் யாருக்கும் அடிக்கலாம். பாகிஸ்தானுக்கு எதிரி உள்ளேயே எப்போதும் இருப்பார். அவர்களுக்கே தெரியாது, எப்போ அடிப்பினம் எப்போ அடிக்கமாட்டினம் என்று 😁
  21. அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).
  22. இது புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் இல்லை என நினைக்கிறேன். எனது நண்பர் ஒருவர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் என நம்புகிறேன்), அவர் பேச்சுக்கள் அவரரது தோற்றத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும், அவர் 90 களின் பிற்பகுதிகளில் கூறினார் புலிகள் இல்லாவிட்டால் இலங்கை (அவர் கூறிய வார்த்தையினை அப்படியே கூற முடியாது) பாலியல் தொழில் செய்பவரது வீட்டில் இருக்கும் வெத்திலை பெட்டி போன்றது என்றார். அது தற்போது கண்முன்னால் நடைமுறையாகி நிற்கின்றததனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. 4 வகையான போர் விளைவுகளை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என கூறுகிறார்கள். அரசியல் ரீதியான வெற்றி போர் முடக்கம் வெற்றி மோசமான விளைவுகளுடன் அற்புதமான வெற்றி புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கை பெற்ற வெற்றி 3 ஆவது வகை அதன் பின்விளைவுகள் தற்போது புலிகள் இல்லாத நிலை ஏற்படுத்திய வெற்றிடம் இலங்கையில் பல சக்திகள் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது (இது ஒரு ஆச்சரியமான பலச்சமனிலையின் பண்பாக இருக்கின்றது). இலங்கை இதிலிருந்து என்றும் வெளியேற முடியாது (இலங்கை அரசியல் பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நிலையிலிருந்து). இந்த நிலையினை இலங்கை மாற்றமுடியுமா? முடியும்! ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிப்பளிக்கப்பட்டு உரிமைகள் வழங்கி சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு ஒரே சக்தியான நாடாக கட்டியமைத்தால் மட்டுமே சாத்தியம், மகா வம்ச சிங்கள மேலாதிக்க எண்ணத்தில் இருக்கும் இலங்கையால் அது சாத்தியமல்ல. இந்தியாவினை பொறுத்தவரை இலங்கை ஒரு நேர வெடிகுண்டு (உடைந்த அயல் தேசம்) எந்த ஒரு நாடும் தனது அயல் நாடு ஒரு உடைந்த தேசமாக இருக்க விரும்பாது அதனால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு இந்தியா கடும் அழுத்தத்தினை இலங்கை மேல் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையினை தவிர்க்கவே முடியாது. இங்கு மகாவம்ச சிங்கள மேலாதிக்கத்தின் தோல்வி (ஆனால் இலங்கையின் தோல்வி எப்போதோ நடந்து விட்டது அதன் பெறுபேறுகள்தான் தற்போது நிகழ்கிறது) உறுதிப்படுத்தாத முறையில் (சுய நிர்ணயம், கூட்டாட்சி போன்றவற்ற வாசகங்களை தவிர்த்து ஆனால் அதே உரிமைகளை) அதிகாரப்பகிர்வு எனும் பதத்திற்கு தமிழர்கள் வரவேண்டும், அதனால் தமிழ் தேசியம் என கூறுவதனை தவிர்ப்பதன் மூலம் (மகா வம்ச சிங்கள மேலாதிக்கத்தின் முகத்தினை காக்க) பிரச்சினையினை இலகுவாக தீர்க்கலாம் என கருதுகிறேன்.
  23. யாழ்கள சுமந்திரன் லவ்வர்ஸ்சின் இப்போதைய நிலை👇 (சு)மந்திரம் இது.. (சு)மந்திரம் தினம் தோறும்.. மனம் மோதும்ம்ம்ம்.. (பா)ஆவி நீ எமில்.. துரோகி நீ இதை... கேட்டு வர வேண்டும்ம்ம்ம்ம்.. (சு)மந்திரம் இது (சு)மந்திரம் தினம் தோறும்... மனம் மோதும்.. மந்திரம் இது.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பிகு எம்பி இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலில் சவுண்டு பார்ட்டியாக இன்னமும் சுமன் உள்ளார் என்பதை இந்த திரியே காட்டுகிறது.
  24. உலகக் கிண்ணம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் நிலைமைதான் திரிசங்கு நிலை. "புறக்கணிப்பது எங்கள் முடிவு அல்ல. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று அணித்தலைவர் சால்மன் ஆக்கா பேட்டியில் சொல்லியுள்ளார். கேட்கும் போது கவலையாக உள்ளது. இன்று முதல் பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன.
  25. கிவுல் ஓயா திட்டத்தினால் கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம் 02 Feb, 2026 | 07:02 PM கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சமூக, நில உரிமை மற்றும் பண்பாட்டு பாதிப்புகள் குறித்து நேற்றைய தினம் (01) இடம்பெற்ற சமூக மட்ட விழிப்புணர்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதிமொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம், மேற்கூறிய உறுதிமொழிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்லர். அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்கவேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளிப் பிரதேசங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாசார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். Politics மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின்படி, “கிவுல் ஓயா" நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்நீர்த்தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்பூவரசங்குளம், காஞ்சூரமோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. மேலும், 1921ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் "ஒதுக்குக் காடாக" அறிவிக்கப்பட்ட பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள் கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரினுள் மூழ்கப்போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலமே தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்புக் கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில் இந்நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதை "தொல்லியல் பாதுகாப்பு" என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்படவேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன், கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1.990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது. இப்பிரதேசங்களின் இனப்பரம்பல் அமைப்பையும் சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாகவே பார்க்கப்படுகிறது. எனவே. அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலமே சாத்தியமாகும் என்பதை அரசுக்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237645

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.