Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பிஸ்கெட் போட்டவரை எந்நாளும் மறக்காது😂. சந்தித்து விட்டு, பத்திரிகையாளர் முன் வாசலில் நிற்பதால் பின் கதவால் தப்பி ஓடினவர். சீமானின் முதல் பெரிய வியாபாரம் ஜெக்கு #இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிரச்சாரம் செய்ததுதான். அதை ஏற்பாடு செய்தவர் சசி.
  3. மேற்கின் கதை முடிந்தது. எல்லாரும் பெட்டி படுக்கையோடு ஈரான், ரஸ்யா பக்கம் போங்கோ😂. #வெளிக்கிடடி விளாடிவாஸ்டொக்குக்கு😂
  4. அமெரிக்கா / மேற்றுகின் ஆயுத உற்த்தி / கொள்வனவு மற்றும் அதன் செலவு / பொருளாதார model ஐயே புதைகுழியாக மாற்ற்றும் வியூகத்தை இரான் பாவிக்கிறது.
  5. பயிற்சியாளரை போலவே அதிகமாய் கூறப்படும் விலைக்கு விற்கப்படும் போதே பயிற்சியின் சீத்துவம் புரிகிறது😂 என்னது தென்ந்தோப்பு சின்னமா? கங்கை அமரன் வீட்டை ஆட்டயப்போட்டது போல் அடுத்த முறை யாரின் தோப்போ😂
  6. தனக்கு தீ மூட்ட முடிவு எடுத்த இவர் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ அல்லது றோட்டிலியோ தனக்கு தானே தீ மூட்டிக்கொள்ள வேண்டியது தானே சாக்குகளை தன்னுடன் தூக்கி கொண்டு பஸ்சில் ஏறினாராம்
  7. காளியம்மாள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய இந்த எடப்பாடி பழனிசாமி முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்த சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எள்று ஒரு புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். Daily Thanthiபுதிய கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்தார் சசிகலாமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயல
  8. Today
  9. கட்சியில் ஏற்கெனவே உள்ளவர்களை பின்னுக்கு தள்ளி முக்கிய பதவிகளை இவர்கள் பெறும் போதே பயிற்சியின் பெறுமதி தெரிகிறது அல்லவா.
  10. வீதியோரம். மலர் .......... 6. மாலைப்பொழுதில் இருள் கூடிவரும் நேரம், வீதியின் எதிர்பக்கத்தில் சொகுசுக் கார் ஒன்று வந்து நிக்கின்றது. அதில் இருந்து தம்பதிகள் இருவர் வீதியைக் கடந்து கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக் காரின் முன்னால் பேரூந்து ஒன்றும் வந்து நிக்க அதில் இருந்து பிரயாணிகளும் தட தடவென்று இறங்கி வருகின்றனர். முன்னாள் வந்த பெண் கடைக்குள் வந்து மலசல கூடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளைத் தொடர்ந்து அவனும் போகிறான். சிறிது நேரத்தில் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இருவரும் கடைக்குள் வருகிறார்கள்.கடை ஆட்களால் நிறைந்து இருக்க இரவு வியாபாரம் களைகட்டுகிறது. அவர்கள் இருவரும் தேவையானதை வாங்கி சாவகாசமாய் சாப்பிடுகிறார்கள். பஸ்ஸில் வந்தவர்களும் உணவருந்திவிட்டுப் போக அதுவும் புறப்பட்டுப் போகின்றது. அந்த இடத்தில் வேறொரு மினிவான் வந்து நிக்கின்றது. அந்தப் பெண்ணும் கணவனிடம் நீங்கள் இங்கு இருங்கள், நான் காருக்கு சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வருகிறேன். அவன் இன்னும் எழும்பி இருக்க மாட்டான் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். சற்று நேரத்தில் எதிர்ப் பக்கத்தில் ஒரே பரபரப்பு.அந்தப் பெண் குழறிக் கொண்டு கடைக்கு ஓடி வருகிறாள். “கடவுளே நான் இனி என்ன செய்வேன் காருக்குள் இருந்த என்ர பிள்ளையைக் காணவில்லையே. தன் மனைவியின் குரல் கேட்டு எழுந்தவன் வெளியே வந்து பார்க்க அவள் காலில் பாட்டா தடுக்க தோளில் துப்பட்டா பறக்க தடுமாறி ஓடி வருகிறாள். — என்னடி என்ன ஆச்சு . — என்னங்க, நம்ம குழந்தையை காரில் காணவில்லை. கதவெல்லாம் திறந்திருக்கு. நீங்கள் காரை சரியாகப் பூட்டினீர்களா என்று கேட்க, அவனும் தான் அவசரத்தில் பூட்டவில்லையோ என யோசித்துக் கொண்டு காருக்கு ஓடுகின்றான். காரின் பின் கதவு திறந்திருக்க பிள்ளை படுத்திருந்த கூடை கீழே கிடக்கு. அதனுடன் இருந்த பையும் அதில் இருந்த மா, பிஸ்கட் எல்லாம் நிலத்தில் சிதறிக் கிடக்கு. சில பொருட்கள் காட்டினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்துபோய் கிடக்கு. இருட்டாகி விட்டதால் சிலர் டோர்ச் லைட் அடித்துப் பார்க்க சிலர் வண்டியின் லைட்டை காட்டுப்பக்கமாய் திருப்புகிறார்கள்.ஆங்காங்க்கே விலங்குகளின் காலடித் தடங்கள் தென்படுகின்றன. அவர்கள் எல்லோரும் நரியோ ஓநாயோதான் பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடியிருக்கும் என்று கதைத்து கொள்கிறார்கள்.அதற்குள் யாரோ போலீசுக்கு அறிவித்து அவர்களும் வந்திருந்தார்கள். அவனும் அருகில் இருந்த இராணுவத்துக்கு தன்னை அறிமுகப்படுத்தி கடிதம் ஒன்று ஒரு வண்டியில் குடுத்து விட சற்று நேரத்தில் அவர்களும் தகுந்த ஆயத்தங்களுடனும், மோப்ப நாய்களுடனும் இரு ட்ரக்குகளில் வந்து இறங்குகிறார்கள்.எல்லோருமாய் டார்ச் லைட்டுகளுடன் காட்டுக்குள் பல பக்கங்களுக்கும் தடம் பார்த்து பிரிந்து தேடித் போகிறார்கள். அவள் அந்த வீதியோரத்தில் தன் தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். கடவுளே ஏழு வருடங்களின் பின் தவமிருந்து பெற்ற பிள்ளை. இன்னும் இருமாதங்களில் அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது.நான் இனி என்ன செய்வேன். “கடவுள் இன்பத்தை தரும்போது ஒன்றுக்குப் பத்தாகத் தருவார் . துன்பத்தைத் தரும்போது பத்துக்கு பதினொன்றாய் தருவதுதான் வாடிக்கை போலும்” கதறி அழுகிறாள். சில மணி நேரங்களின் பின் காட்டுக்குள் சென்றவர்கள் எல்லாம் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றார்கள்.ஒரு போலீஸ்காரர் அவர்கள் இருவரிடமும் நடந்த சம்பவங்களையும், அவர்கள் பெயர் விலாசங்களையும் விசாரித்து பதிவு செய்து கொண்டிருக்கிறார். அவன் மனைவி குழந்தையுடன் நாட்டுக்குள் சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் சிரமபரிகாரம் செய்ய இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறான். காரில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கின்றார்கள். கார் டாஸ்போர்ட்டில் இருக்கும் பணம் முதலான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன, அவளது கைப்பையில் இருக்கும் பணம், சிறு நகைகள்,அவசியமான மேக்கப் பொருட்கள் மற்றும் காண்டம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. — என்னடி இது, இது எப்படி இங்கே என்று காண்டத்தைக் காட்டி அவன் கேட்க ….. — போதும் நீ முடிட்டு போய் பிள்ளையைத் தேடு…. பிறகு இருக்கு உனக்கு என்று அவள் சொல்ல ….. — என்ன சொல்கிறாய் நீ ….. — உன் வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்…… பாக்கிறவளோடெல்லாம் படுக்கிற உனக்குதான் இதுகள் தேவை ……எனக்கு இல்லை……என்று சொல்ல இவள் என்ன சொல்ல வருகிறாள்…… யோசிச்சவன் அட …… ஒருவேளை நான் கழுவப் போட்ட களுசான் பொக்கட்டுக்குள் இருந்து எடுத்திருப்பாளோ என்று நினைக்கும் போது ……. நாய்களின் இரைச்சல்களுடன் மற்றவர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள் ….. அதனால் அவர்கள் அங்கிருந்த தடயங்களை வைத்து பிள்ளையை ஏதோ விலங்குகள்தான் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது.இரவின் நிசப்பத்தில் காட்டு விலங்குகள் ஊளையிடுவதும் ஆந்தைகள், வௌவால்கள்,சில்வண்டுகள் போன்ற இரவாடிகளின் அலறல்களும் பயங்கரமாய் இருக்கின்றது.இதுவரை இது போன்ற ஒரு இரவு இங்கு இருந்ததில்லை. கடையிலும் கூட்டங்கள் எல்லாம் குறைந்து போய் ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவ்வளவு களேபரத்திலும் அந்த விலைமாதுக்களின் தொழில் மட்டும் காட்டுக்குள் ஜோராய் போய் வந்து கொண்டிருக்கு. பின்பு பிள்ளையைத் தொலைத்த தம்பதிகளும் கூட போலீசுக்குப் பின்னால் போய் விட்டார்கள். விநோதனுக்கும் மணிமேகலைக்கும் கூட அந்தசம்பவம் மனசைப் பாதித்த படியால் இருந்தவர்களுக்கு தேவையான உணவுகளைப் பரிமாறிவிட்டு விளக்குகளை அணைத்து கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு போகிறார்கள். …………………………. 6. மலர் .......... 🌼 6.
  11. தமிழக கட்சிப் பிரமுகர்களில் எனக்கு விளங்காத விடயம்: கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களுக்கு தவறாமல் இணை/துணை கொ.ப.செ பதவி கொடுத்து விடுகிறார்கள்! உடுப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருவர் "மொடலாக" வருவது போல இதுவும் ஒரு மெக்கானிசம் போல😂!
  12. நீதிபதி சதீஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர், என்னை விட இரு ஆண்டுகள் இளையவர் என நினைக்கிறேன். பெயரைத் தவறாக எழுதியிருக்கிறார்கள்.
  13. நாதகவில் இருந்து காளியம்மாளுக்கு நாலு வருடம் முன்பே அதிமுகவில் சேர்ந்தாலும் கல்யாண சுந்தரத்தை இன்று சேர்ந்த காளியம்மாள் ஓவர் டேக் செய்து விட்டார். அவருக்கென ஒரு கூட்டத்தை சேர்க்க தவறிய நாவலர் நெடுஞ்செழியன் போல் ஆகி, நமது அம்மா இதழின் எடிட்டர் என்ற அளவில் இருக்கிறார் க.சு. பிகு ரஜீவ், க.சு, தூசண துரைமுருகன் மூவரும் இணைந்து அண்மையில் ஒரு மேடையில் அரசியல் பேசினர். இப்போ தூசண துரை விஜையை போட்டு வெளுப்பதால் நாதக தம்பிகளை விட உபிக்கள் தான் அவருக்கு பரம ரசிகர்கள் ஆகி விட்டனர். விஜையை வெளுக்க எண்டே தூசண துரைக்கு திமுக தனியாக சில பெட்டிகளை தட்டி விட்டது என்கிறார்கள். போதிய அளவு விலை படிந்தால் தூ. துரையும் பயிற்சியை முடித்து வெளியேறலாம்😂.
  14. அண்ணன் அடிக்கடி சொல்லுவார்… வென்றால் மகிழ்ச்சி…. தோற்றால் பயிற்சி… (அவருக்கு வென்றாலும் தோற்றாலும் பெட்டி என்பது வேறு விடயம்) அண்ணனோடு இருந்தால் பெட்டியை தான் எடுத்து கொண்டு பயிற்சியை மட்டுமே தமக்கு தருவார் என உணர்ந்து வெளியே போனோர் பலர். அதில் முக்கியமானவர்கள், கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி, காளியம்மாள். இவ்வாறு அண்ணனிடம் பயிற்சிசை முடித்து, வெளியே வெற்றியை தேடி போனோரில் ஒருவரான ராஜீவ் காந்திக்கு நேற்று திமுகவில் இணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிட்டியுள்ளது. கோவை தெற்கில் போட்டியிட வாய்ப்பும் கிட்டகூடுமாம். காளியம்மாளுக்கும் அதிமுகவில் இதே இணை கொ ப சே பதவி மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு என பேசி கொள்கிறார்கள்.
  15. இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் சுபர்ணன் 6 விக்கெட் குவியல்; முதல் நாளன்று 22 விக்கெட்கள் சரிந்தன Published By: Vishnu 13 Mar, 2026 | 09:06 PM (நெவில் அன்தனி) கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் யாழ். இந்து கல்லூரி அணிக்கும் இந்து கல்லூரி கொழும்பு அணிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 15ஆவது இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாளன்று பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாக 22 விக்கெட்களை வீழ்த்தினர். யாழ். இந்து கல்லூரி அணித் தலைவரும் கடந்த வருடம் இந்துக்களின் சமரில் ஆட்டநாயகனுமான சுதர்சன் சுபர்ணன் 6 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். இதன் மூலம் இந்துக்களின் சமர் வரலாற்றில் அடுத்தடுத்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் 6 விக்கெட் குவியல்களை பதிவுசெய்த வீரர் என்ற மைல்கல் சாதனையை சுபர்னன் நிலைநாட்டி பலத்த பாராட்டைப் பெற்றார். இந்து கல்லூரி கொழும்பு சார்பாக விஷ்வநாதன் யுவராஜ் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். இந்தப் போட்டியில் இரண்டு அணிகளினதும் பந்துவீச்சும் களத்தடுப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. களத்தடுப்பில் வீரர்கள் எடுத்த பல பிடிகள் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி புற்தரை ஆடுகளத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. யாழ். இந்துவின் கடைசி 5 விக்கெட்கள் வெறும் 14 ஓட்டங்களுக்கு சரிந்தன. துடுப்பாட்டத்தில் நான்கு வீரர்கள் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ரவிந்திரன் ஆதித்தியன் (31), நேசரூபன் நிரூஜன் (14) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 47 ஓட்டங்களே போட்டியில் இதுவரை சிறந்த இணைப்பாட்டமாக பதிவாகி உள்ளது. அவர்களை விட தினேஸ்ராமன் சகோதரர்களான பிரேமிகன் 26 ஓட்டங்களையும் பிரீதிகன் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஷ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அணித் தலைவர் இராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பின்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதுடன் ஐவர் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் புற்தரை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தனர். இந்து கொழும்பு அணி துடுப்பாட்டத்தில் சுரேஷ் சர்விஷ் 32 ஓட்டங்களையும் வெல்லாந்துரை அபினேஷ் 24 ஓட்டங்களையும் முத்துகுமார் அபிஷேக் 22 ஓட்டங்களையும் ஹர்ஷ மிதுமின 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுதர்சன் சுபர்னன் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நேசரூபன் நிரூஜன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். யாழ். இந்து கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக மத்தியஸ்தர்களினால் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் நாள ஆட்டம நாளை தொடரும். https://www.virakesari.lk/article/240906
  16. சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர் டினுலக்சன் அரைச் சதம் குவித்து கைகொடுத்தார் Published By: Vishnu 13 Mar, 2026 | 09:00 PM (நெவில் அன்தனி) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமரில் சென். பட்றிக்ஸ் கடைநிலை வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் அரைச் சதம் குவித்து அணியை சிறப்பான நிலையில் இட்டார். கடைசி நாளான மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் போது எதுவும் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் கல்லூரி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க யாழ்ப்பாணம் கல்லூரி 50 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. சசிகரன் அஷ்மின் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் கேதீஸ்வரன் ஹெரிஷன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கடைசி நாள் ஆட்டத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தேநீர் இடைவேளைக்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்லூரி 200 ஓட்டங்கள் முன்னிலை அடைந்து டிக்ளயா செய்தால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்து சென். பட்றிக்ஸ் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. சிவநானதன் ஷெஹான் (45), நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் (42) ஆகிய இருவரும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் 6 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. (129 - 6 விக்.) இந் நிலையில் களம் புகுந்த 9ஆம் இலக்க வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் மிகவும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு கைகொடுத்தார். அத்துடன் அடுத்த 3 விக்கெட்களில் அவர் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். டைட்டஸ் ஜோசப் 34 ஓட்டங்களையும் செல்வகுமார் ஸெனாரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வாசுதேவன் விஷ்னுகோபன் 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹாமிஷ் ஹாமிஷன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/240907
  17. கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின் சமர் கிரிக்கெட் பெருவிழா 13 Mar, 2026 | 03:07 PM இந்து கல்லூரி கொழும்பு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகிய வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை வெகு விமரிசையாக ஆரம்பமானது. இந்து கல்லூரி கொழும்புவின் 75ஆவது ஆண்டு வைர விழாவை சிறப்பிக்கும் வகையில் இம்முறை போட்டி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து கல்லூரி கொழும்புவின் அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபர் ரத்தினம் செந்தில்மாறன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் பிரதம விருந்தினராகவும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர். காலை 08:30 மணி அளவில் ஆரம்பமான இந் நிகழ்வில், பாடசாலை வாத்திய இசைக் குழுக்களின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந் நிகழ்வின்போது தேசியக் கொடி, இரண்டு பாடசாலைகளின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசியக் கீதம் மற்றும் பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்பட்டு போட்டிகள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் இந்துக்களின் சமர் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. பொட்டி தொடங்குவதற்கு முன்னர் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, இரண்டு அணிகளினது வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. ரவிந்திரன் ஆதித்தியன் 31 ஓட்டங்களையும் தினேஸ்ரேமன் பிரீத்திகன் 26 ஓட்ங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியைக் கண்டுகளிக்க இரண்டு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டு தமது அணிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/240879
  18. மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம் Published By: Vishnu 13 Mar, 2026 | 07:16 PM புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/240904
  19. தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள் 13 Mar, 2026 | 05:26 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்காக, 2022ஆம் ஆண்டு அணியிலிருந்து, தகுதிகளின் அடிப்படையில் சுமார் 2,918 விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நியமனக் கடிதங்களே இதன்போது வழங்கி வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/240903
  20. அருமையான இந்த சந்தர்ப்பத்தை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எமது அவா .......! 👍
  21. பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் ஏன் விவாதிக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் 'தி ஹண்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது, ஆனால் அதன்பிறகு சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை டிரோல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டி பிரிட்டனில் நடைபெறுகிறது, இதில் இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் அடங்கும். பிப்ரவரி மாதத்தில், 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதை இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் பரிசீலிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் இதற்கு காரணமாக இருந்தது. இதையடுத்து, வீரர்களை வாங்கும் போது எந்தவிதமான பாகுபாடும் காட்ட வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) எட்டு அணிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை வாங்கியதற்கு ஈசிபி-யின் இந்தக் கோரிக்கையே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. சன் குழுமம் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வைத்துள்ளது. 'தி ஹண்ட்ரட்' லீக்கில் உள்ள சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியும் இந்த குழுமத்திற்குச் சொந்தமானது. பட மூலாதாரம்,ADEL SENNA/AFP via Getty Images படக்குறிப்பு,அப்ரார் அகமது சுமார் 2.3 கோடி ரூபாய்க்குச் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அப்ரார் மார்ச் 12 அன்று நடைபெற்ற ஏலத்தில் வாங்கப்பட்டார் வியாழக்கிழமை, மார்ச் 12 அன்று நடைபெற்ற 'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆகியோர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்தனர். சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு (சுமார் 2.30 கோடி ரூபாய்) வாங்கியது. இதற்குப் பிறகு, இந்திய சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு வருகிறார். சர்ச்சை முற்றியதை அடுத்து, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. அப்ராரைத் தவிர, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பும் 'தி ஹண்ட்ரட்' ஏலத்திற்காகத் தனது பெயரைப் பதிவு செய்திருந்தார், ஆனால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக 2009 முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவில்லை. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,காவ்யா மாறனின் 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' அணியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள்? "தி ஸ்கின் டாக்டர்" என்ற பெயரிலான எக்ஸ் பயனர் ஒருவர், இந்தியருக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் அதன் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்கிற்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இது இந்தியாவை பகிரங்கமாக எள்ளி நகையாடியுள்ளது என்று எழுதியுள்ளார். ''இந்தியாவில் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் பாகிஸ்தானியர்களை எடுப்பதில்லை. தடை நீக்கப்பட்ட கணமே, யோசிக்காமல் அவர்களை எடுப்பார்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்ரார் அகமது இந்திய ராணுவத்தை அவமதித்ததாகவும் அதையெல்லாம் மீறி காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் அணி அவரை 'தி ஹண்ட்ரட் லீக்கில்' வாங்கியுள்ளனர் எனவும் பயனர்கள் கூறி வருகின்றனர். ஆனந்த் கிருஷ்ணா என்ற பயனர், காவ்யா மாறன் அப்ரார் அகமதுவை வாங்கியதை விட அவமானகரமானது எதுவும் இருக்க முடியாது என்று எழுதியுள்ளார். சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சொன்னது என்ன? பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images படக்குறிப்பு,மார்ச் 12 அன்று லண்டனில் நடைபெற்ற 'தி ஹண்டிரட்' ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி. சன்ரைசர்ஸ் லீட்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பிபிசி ஸ்போர்ட்ஸிடம், "அப்ராரின் பந்துவீச்சில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன, மேலும் பல உள்ளூர் வீரர்கள் அவரை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை," என தெரிவித்தார். பாகிஸ்தான் வீரர்கள் தொடர்பான ஊகங்கள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறிய வெட்டோரி, ஆனால் ஏலத்தில் எந்த வீரரையும் கண்டு கொள்ளவேண்டாம் என தமக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றார். "கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வீரரையும் கருத்தில் கொண்டே நாங்கள் ஏலத்திற்கு வந்தோம். சர்வதேச அணிகளிலிருந்து பல சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பில் இருந்தனர், ஆனால் அப்ரார் தான் எங்களின் முன்னுரிமையாக இருந்தார்," என அவர் தெரிவித்தார். சர்ச்சை எப்போது தொடங்கியது? பிப்ரவரி 21 அன்று, இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதில்லை என்ற முடிவை பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின்(ஈசிபி) தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கடந்த ஆண்டு கூறுகையில், 'தி ஹண்ட்ரட்' போட்டியில் "அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள்" தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், "பாகுபாடு எதிர்ப்பு கொள்கைகள்" நடைமுறையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஈசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர்,''தி ஹண்ட்ரட் உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்கிறது, மேலும் எட்டு அணிகளும் இதைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார். இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்காது என்ற செய்திகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் எதிர்வினையாற்றியிருந்தார். இந்த விவகாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது போன்ற ஒரு விஷயம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றார். மைக்கேல் வாகன் தனது சமூக வலைதள தளமான எக்ஸ்-இல், "நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டில் இது போன்ற விஷயங்களை அனுமதிக்க முடியாது" என்று எழுதியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjen8kg9evxo
  22. சொக்குதே மனம் சுத்துதே ஜெகம் .......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.