Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 09 Feb, 2026 | 12:28 AM (செ.சுபதர்ஷனி) நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்ய ஏற்கனவே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது. அதேநேரம், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மேலதிக வரப்பிரசாதங்களை ஏற்கனவே நீக்கியுள்ளோம். குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றம் சென்றிருந்தனர். எனினும், குறித்த ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையில்லை என்றும், சாதாரண பெரும்பான்மை வாக்களிப்பின் மூலமே அதனைச் செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. சபாநாயகரால் வெள்ளிக்கிழமை (6) பாராளுமன்றத்துக்க அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் பிரகாரம், எம்.பி களின் ஓய்வூதியத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும். மக்கள் பணத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்த்து அதனை மீண்டும் மக்களுக்கே சென்றடையச் செய்வதே எமது இலக்காகும். ஹொரண வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும், அதற்கான மனித வள வெற்றிடங்கள் இதுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்துடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அதற்கமைய, அத்தியாவசிய சுகாதார நிறுவனங்களுக்கான பணியாளர்களைத் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஹொரண வைத்தியசாலைக்குத் தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதம் முகாமைத்துவ திணைக்களத்தினால் விரைவில் வெளியிடப்படும். அத்துடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு எதிர்வரும் பத்தாண்டுகளுக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்து வருகின்றது. தேசியக் கொள்கையின் அடிப்படையில் சுகாதாரத் துறையின் சவால்களைக் கண்டறிந்து, அதனை மேலும் வலுப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். சுகாதாரப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும். மேலும், நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலையின் ஆறு மாடி கட்டடத் தொகுதியின் பணிகளை மீள ஆரம்பிக்க அமைச்சின் ஊடாக புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளோம். இதன் மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதளவில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடியும். இதற்காக இவ்வருடம் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238170
  3. இத்தாலி அணியின் அணித்தலைவர் Madsen காயம் காரணமாக இன்றையை போட்டியில் தொடர்ந்து விளையாடாத நிலையில் இருக்கிறார். 42 வயதுடைய இவருக்கும் இத்தாலி நாட்டுக்கும் இன்றைய போட்டிதான் முதலாவது உலக கிண்ண போட்டி. 18 ஓவர் முடிவில் 181-2
  4. புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை பட மூலாதாரம்,PCB கட்டுரை தகவல் மேத்யூ ஹென்றி பிபிசி செய்தியாளர் 9 பிப்ரவரி 2026, 02:35 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் பதில் தேடும் கேள்வி இதுதான். இதற்குக் காரணம், ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருப்பதுதான். லாகூரில் நேற்று (பிப்ரவரி 8, ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் சந்தித்தனர். டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது பற்றி விவாதிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்தேறியது. ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமும் உடனிருந்தார். இந்த சந்திப்பில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக, பாகிஸ்தான் வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி சல்மான் நசீர் வரவேற்றதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசிபி தெரிவித்திருந்தது. எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், "ஐசிசி துணை தலைவர் இம்ரான் கவாஜாவை லாகூர் விமான நிலையத்தில் பிசிபி தலைவரின் ஆலோசகர் அமீர் மிர் வரவேற்றார்." என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவிட்டிருந்தது. டி20 உலகக்கோப்பையில் தங்கள் அணியின் பாதுகாப்பு கருதி தாங்கள் விளையாடும் போட்டிகள் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. அவர்களின் கோரிக்கை ஐசிசியால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் என, பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாஃபாஸ் ஷெரீஃப், வங்கதேசத்தை "ஆதரிப்பதற்காக" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அணி அப்போட்டியை புறக்கணித்தால், அந்த அணி புள்ளிகளை இழக்க வேண்டியிருக்கும். அத்துடன், ஐசிசியின் தற்போதைய உரிம ஒப்பந்தங்கள் குறித்த சர்ச்சைக்கும் அது வழிவகுக்கும். தற்போதைய தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் 2027 உலகக் கோப்பைக்குப் பிறகு காலாவதியாவதால், தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை எதிர்கால ஒப்பந்தங்களைப் பாதிக்கலாம். பட மூலாதாரம்,X/PCB என்ன சர்ச்சை? டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக முடிவெடுத்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரித்திருந்தது. 'சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறிய வேண்டும் என எதிர்பார்ப்பதாக' ஐசிசி தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் முடிவு 'பெரும் விளைவுகளை' ஏற்படுத்தும் எனவும் ஐசிசி தெரிவித்திருந்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பை கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கியது. இந்த தொடர் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கால அட்டவணைப்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற வேண்டும். பிப்ரவரி ஒன்றாம் தேதி பாகிஸ்தான் அரசாங்கம் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,Screen Grab படக்குறிப்பு,இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற தனது முடிவு குறித்து விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும், இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்பதை பாகிஸ்தான் அரசு கூறவில்லை. டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது. இதையடுத்து, வங்கதேச அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை இத்தொடரில் ஐசிசி சேர்த்தது. இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தது. "பாதுகாப்பு காரணங்களுக்காக எந்தவொரு அணியும் எந்தவொரு நாட்டிலும் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என்றால், அந்த உரிமை வங்கதேசத்திற்கும் இருக்க வேண்டும்." என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. கடந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட்அணி மறுப்பு தெரிவித்தது, இதையடுத்து இந்திய அணியின் போட்டிகள் துபையில் நடைபெற்றன. இதைத்தான் பாகிஸ்தான் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது. ஐசிசி கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கதேசத்தின் கோரிக்கைகளை ஐசிசி ஏற்காததால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அதை விமர்சித்தனர் (ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் கோப்புப்படம்) பாகிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்ட சில மணிநேரத்திலேயே, ஐசிசி இதுதொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், பிசிபியிடமிருந்து தங்களுக்கு எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்றும், பாகிஸ்தானின் முடிவு உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில், "ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது தொடர்பாக தங்கள் அணிக்கு உத்தரவிட்டுள்ள பாகிஸ்தான் அரசின் முடிவை ஐசிசி கருத்தில் கொண்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "பிசிபியிடமிருந்து ஐசிசிக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்ற அணுகுமுறை உலகளாவிய நிகழ்வின் விளையாட்டு உணர்வுக்கு முரணானது, தகுதி பெறும் அனைத்து அணிகளும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. "விளையாட்டு ஒருமைப்பாடு, போட்டி, நிலைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஐசிசி கிரிக்கெட் தொடர்கள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்பது விளையாட்டு உணர்வு மற்றும் இத்தொடர்கள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக அமையும்." என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. "தேசிய கொள்கை தொடர்பான விவகாரங்களில் அரசாங்கங்களின் பங்கை ஐசிசி மதிக்கும் அதே வேளையில், இந்த முடிவு உலகளாவிய கிரிக்கெட் அல்லது பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் நலன்களுக்கு ஏற்றதாக இல்லை." "இந்த முடிவின் தீவிரமான மற்றும் நீண்டகால தாக்கங்களை பிசிபி பரிசீலிக்கும் என்று ஐசிசி எதிர்பார்க்கிறது, ஏனெனில், இது பிசிபி உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பை பாதிக்கலாம்." என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நியாயமான தீர்வு கண்டறியப்படும் என தெரிவித்துள்ள ஐசிசி, "ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசியின் முன்னுரிமை. இந்த பொறுப்பு பிசிபி உட்பட அனைத்து உறுப்பினர் வாரியங்களுக்கும் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறியும் என ஐசிசி நம்புகிறது." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8g2gepd2yo
  5. ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி! Published By: Digital Desk 3 09 Feb, 2026 | 11:31 AM ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தலில், பிரதமர் சானே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகாய்ச்சி, தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார். ஜப்பானிய பாராளுமன்றத்தின் சக்திவாய்ந்த கீழவையான 'டயட்'-ல் உள்ள மொத்தம் 465 இடங்களில் லிபரல் டெமோக்ரடிக் கட்சி 316 இடங்களை வென்று தனிப்பெரும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. இது 1955-ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது. தகாய்ச்சியின் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான 'ஜப்பான் இன்னோவேஷன் பார்ட்டி' (Ishin) இணைந்து மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை (Supermajority) தகாய்ச்சி பெற்றுள்ளதால், மேலவையின் அனுமதி இல்லாமலேயே முக்கிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை அவர் தற்போது பெற்றுள்ளார். பிரிட்டனின் 'இரும்புப் பெண்மணி' மார்கரெட் தாட்சரைத் தனது முன்மாதிரியாகக் கொண்ட சானே தகாய்ச்சி, இந்த வெற்றியின் மூலம் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்: பொருளாதாரத்தை ஊக்குவிக்க வரி குறைப்பு நடவடிக்கைகளை அவர் அறிவிக்கவுள்ளார். இது நிதிச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ஜப்பானின் பாதுகாப்பு மற்றும் இராணுவச் செலவினங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். பெரும்பான்மை கிடைத்துள்ளதால், ஜப்பானின் நீண்டகால அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரவும் அவர் முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான 'சென்ட்ரிஸ்ட் ரிஃபார்ம் அலையன்ஸ்' பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆளும் கூட்டணியின் அதிரடி செல்வாக்கிற்கு முன்னால் எதிர்க்கட்சிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/238190
  6. படம் : திருக்கல்யாணம் (1978) இசை: இளையராஜா பாடியோர்:ஜானகி &ஜெயசந்திரன்
  7. கமிந்து, குசல், தீக்ஷன, ஹசரங்க அசத்தலான ஆற்றல்கள், ரி20 உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை 09 Feb, 2026 | 12:26 AM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தில் தனது வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது. கமிந்து மெண்டிஸின் அதரிடி துடுப்பாட்டம், குசல் மெண்டிஸின் பொறுமையான அரைச் சதம், மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்துக்கு எதிராக இலங்கை ஈட்டிய நான்காவது நேரடியான வெற்றி இதுவாகும். உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் கடைசி நேரத்தில் அழைக்கப்பட்ட கமிந்து மெண்டிஸின் அதிரடி ஆட்டம் இலங்கை அணிக்கு உற்சாகத்தை கொடுத்ததுடன் வெற்றிக்கும் வித்திட்டது. 'உலகக் கிண்ணத்திற்கு நான் கடைசி நேரம் அழைக்கப்பட்டிருந்தாலும் தெரிவாளர்களே அந்தத் தீர்மானத்தை எடுத்தனர். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது முழுமையான பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வது எனது குறிக்கோள். இன்றையத் தினமும் அதனைத் தான் செய்தேன். அதேவேளை குசல் மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் தீக்ஷன, வனிந்து ஆகியோர் மிகவும் அவசியமான நேரத்தில் விக்கெட்களை சரித்தனர். எல்லா பாராட்டுகளும் அவர்களுக்கே' உரியது என போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கமிந்து மெண்டிஸ் தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் இலங்கை அணி 14ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களையே பெற்றிருந்தது. காமில் மிஷார (14), பெத்தும் நிஸ்ஸன்க (24), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவன் ரத்நாயக்க (5), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். அதனைத் தொடர்ந்து 6ஆம் இலக்க வீரராக கமிந்து மெண்டிஸ் களம் நுழைந்த பின்னரே இலங்கை அணியின் ஆக்ரோஷம் வெளிப்பட்டது. பவர் ப்ளேயின் கடைசிப் பந்தில் பவுண்டறி அடித்த இலங்கை அடுத்த 53ஆவது பந்திலேயே பவுண்டறி அடித்தது. அதுவரை பவுண்டறிகள் இலங்கைக்கு வராத நிலையில் அந்த பவுண்டறியை கமிந்து மெண்டிஸ் அடித்தார். தொடர்ந்து அதிரடியில் இறங்கிய கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார். அவரும் குசல் மெண்டிஸும் 5ஆவது விக்கெட்டில் 29 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குசல் மெண்டிஸ் 43 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜோர்ஜ் டொக்ரெல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மொத்த எண்ணிக்கை 24 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான போல் ஸ்டேர்லிங் (6) ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய மற்றைய ஆரம்ப வீரர் மார்க் அடயார் 34 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (58 - 2 விக்.) அடுத்து ஜோடி சேர்ந்த ஹெரி டெக்டர், லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் லோக்கன் டக்கர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹெரி டெக்டரின் விக்கெட்டை வனிந்து ஹசரங்க வீழ்த்தினார். ஹெரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 120 ஓட்டங்களாக இருந்தபோது பென் காலிட்ஸ் (1), கெரத் டிலேனி (0), ஆகிய இருவரின் விக்கெட்களை மஹீஷ் தீக்ஷன அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்து இலங்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். எட்டாவது ஓவரில் அடயாரின் விக்கெட்டைக் கைபற்றிய வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக சில ஓவர்கள் ஓய்வுபெற்றார். அவர் மீண்டும் களம் திரும்பி 2 ஒவர்களுக்கு பின்னர் 15ஆவது ஓவரில் முதல் பந்தில் மேலும் ஒரு விக்கெட்டையும் கடைசி ஓவரில் 3ஆவது விக்கெட்டை யும் கைபற்றினார். அதனைத் தொடர்ந்து எஞ்சிய 3 விக்கெட்களை துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண ஆகியோர் கைப்பற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (பட உதவி: எஸ். நாதன்) https://www.virakesari.lk/article/238174
  8. மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே. மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மற்றும் அது தொடர்பான அமைச்சின் நிலைப்பாட்டை கடற்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார். மீன்பிடி பெருவலை என்பது இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் நீண்டகாலமாகப் பிணைந்துள்ள ஒரு தொழில் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் கடல் வளங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் எனத் தெரிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களால், மீன்பிடி பெருவலைத் தொழிலில் டிராக்டர்கள் மற்றும் வின்ச்சுகளை (Winches) பயன்படுத்துவதற்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட அனுமதியே தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அந்தத் தற்காலிக அனுமதியை நிரந்தரமாக்கக் கோரியே மீனவர்கள் போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டார். குறிப்பாக, இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும்போது அது கடலின் அடிப்பகுதியைச் சுரண்டிச் செல்லும் ‘பாட்டம் ட்ராலிங்’ (Bottom Trawling) போன்ற பாதிப்புகளை உருவாக்குவதாகவும், இதனால் பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்க வாழ்விடங்கள் முற்றாக அழிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார். மேலும், கடற்கரை ஓரமாக டிராக்டர்கள் இயக்கப்படுவதால் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் சேதமடைவதோடு, கடற்கரையின் இயற்கை மணல் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகச் சுற்றாடல் அமைப்புகள் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் எச்சரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், வரும் 27ஆம் தேதி வரை இது குறித்து அமைச்சு எந்தவொரு இறுதி முடிவையும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கடந்த கால அமைச்சர்கள் மீனவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டிய பிரதி அமைச்சர், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த அறிவியல் பூர்வமற்ற முடிவுகளின் விளைவுகளையே இன்று மீனவர்கள் அனுபவித்து வருவதாகவும் சாடினார். கடலையும் கடற்கரைச் சூழலையும் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காக மீன் வளத்தை உறுதிப்படுத்துவதே தமது இலக்கு என்றும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் ஒரு நிலையான தீர்வைக் காணத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ரத்னகமகே மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1463777
  9. பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது. பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாரான சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றிவளைப்பின் போது, கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்து வகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதானவர் முன்னாள் வைத்திய அதிகாரி எனவும், அவர் ஒரு கருக்கலைப்புக்காக 45,000 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணத்தை அறவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதைத் தொடர்ந்து, குறித்த வைத்தியரின் உதவியாளர் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைதைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு தொகையையும் வழங்குவதாகக் கூறி, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். https://athavannews.com/2026/1463760
  10. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குடிநீர் போத்தல்கள்இபவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம். தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு, விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாகஇ இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள் என அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் விமர்சித்துள்ளார். விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கு விசிலுக்குத் தடை விதிப்பது என்பதுஇ மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2026/1463787
  11. குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது! கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் கனடாவின் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது. அத்துடன், டொராண்டோ காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். அதனால், தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் தெரியாத உதவிக்குறிப்புகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது. https://athavannews.com/2026/1463740
  12. ஸ்கொட்லாந்து நல்ல ஆரம்பத்தைக் குடுத்திருக்கிறது. 180க்கு மேல அடிப்பார்கள் போல
  13. யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது 09 Feb, 2026 | 10:10 AM யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/238192
  14. Today
  15. இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம் Feb 9, 2026 - 09:41 AM இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமில் இருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமில் இருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்ட 30 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையின் விலை 20 ரூபாயில் இருந்து 40 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், சாதாரண பொதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படாது என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmlenmjiq00062a6ewdxirgjn
  16. நேபாளம் அணியின் பயிற்சியாளர் struart law. அவுஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த இவர் திறமையிருந்தும் அதிஷ்டமில்லாதவர். ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடினார். அதிலும் இவர் ஆட்டமிழக்காமல் 50க்கு மேல் ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக பெற்றார். 1995 இல் நடைபெற்ற இந்த போட்டியில்தான் ரிக்கி பொண்டிங்கும் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். காயமடைந்த வீரர் ஒருவருக்கு பதிலாக விளையாடிய ஸ்டுவர்ட் law, பிறகு அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் அக்காலத்தில் அவுஸ்திரேலியா பலம் பொருந்திய அணி. ஸ்டீவ் வோ, மார்க் வோ இரட்டையர்கள், மார்க் டெய்லர் என பல புகழ்பெற்ற வீரர்கள் விளையாடினார்கள். ஸ்டுவர்ட் லா , இங்கிலாந்து கவுண்டி சாம்பியன் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார். அக்காலத்தில் இங்கிலாந்து நாசர் குசென் ஒரு பேட்டியின் போது ஸ்டுவர்ட் law இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றால் இங்கிலாந்து அணியில் அவரைத்தான் முதலில் அணியில் எடுத்திருப்பார்கள் என்று சொல்லியிருந்தார் .
  17. உலகம் முழுக்க பரந்து இருக்கிறோம். அவரவர் நேரத்திற்கேற்பதான் எல்லாமே. இதுக்காக எல்லாம் நித்திரை முழிச்சுப் போட்டியைப் பார்க்க முடியாதுதானே. இறுதிப் போட்டி என்றால் முயற்சிக்கலாம்.
  18. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  19. "ஆ" வன்னாவோட புத்தி மட்டு எண்டு சொல்லிப்போட்டன் தானே ,, அங்கால இ யும் , ஈ யுமோ இருக்கு ? நல்லது நல்லது :) 🙂
  20. நேரம் பிழையாகக் கிடக்கு...தினமும் நித்திரை முழிக்க முடியாதே...நீங்க பார்த்து அனுபவியுங்கள்
  21. இத்தாலியின் கன்னிப் போட்டி. எப்பிடி விளையாடுகிறார்கள் என்று பார்க்க தயாரா. உதை பந்தில் சாதிப்பவர்கள் கிரிக்கட்டிலும் நுழைவது நல்லதே.
  22. உண்மைதான். சில பிடிகளை எடுத்து இருந்தால், நிலைமை மாறி இருக்கலாம்.
  23. எனக்கொரு ஆசை.. படம் : எதிரிகள் ஜாக்கிரதை ( 1967 ) பாடியோர்: TMS & சுசீலா இசை: வேதா வரிகள் : கண்ணதாசன்
  24. அந்த காலத்திலேயே மனுசன் வாழ்ந்து ரசித்து சிலை வடிச்சிருக்கானப்பா.. இடம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.