Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. 20ம் நூற்றாண்டின் தொடக்கம் அன்னபூரணி தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்
  3. Today
  4. சுமத்திரன் என்பவர் கபட வேட தாரி அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது .
  5. இந்தப்பேச்சு வார்த்தைகளால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. சிலவேளைகளில் சீமான் மட்டும் ஒரு சில கருத்துக்களைச் சொல்லக்கூடும். கடந்த 16 ஆண்டுகளாக அறிவு ஜீவிகள் சொல்லி வந்த கருத்தையும் புறக்கணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்தச்சந்திப்புக்கள் சொல்ல வரும் செய்தி. இந்தியாவை எமக்குத் தெரியும். இந்தியா ஒரு போதுமே தமிழ்ர்நலன்பற்றிச் சிந்தித்தது கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கு விரோதமான போக்கை ஒரு போதும் எடுக்க மாட்டார்கள். உண்மையான தமிழ்த்தேசியவாதிகளின் கைகளில் தமிழக ஆட்சி மலர்ந்தால் அவர்கள் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் நெருக்கடி கொடுப்பார்கள்.தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு மத்திய ஆட்சிக்கு முண்டு கொடுத்த திராவிடக்கட்சிகளைப்போல் இருக்க மாட்டார்கள். ஆகவே புத்தியீவிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுப் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.
  6. இந்தப்பேச்சு வார்ததைகளால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. சிலவேளைகளில் சீமான் மட்டும் ஒரு சில கருத்துக்களைச் சொல்லக்கூடும். கடந்த 16 ஆண்டுகளாக அறிவு ஜீவிகள் சொல்லி வந்த கருத்தையும் புறக்கணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்தச்சந்திப்புக்கள் சொல்ல வரும் செய்தி. இந்தியாவை எமக்குத் தெரியும். இந்தியா ஒரு போதுமே தமிழ்ர்நலன்பற்றிச் சிந்தித்தது கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கு விரோதமான போக்கை ஒரு போதும் எடுக்க மாட்டார்கள். உண்மையான தமிழ்த்தேசியவாதிகளின் கைகளில் தமிழக ஆட்சி மலர்ந்தால் அவர்கள் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் நெருக்கடி கொடுப்பார்கள்.தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு மத்திய ஆட்சிக்கு முண்டு கொடுத்த திராவிடக்கட்சிகளைப்போல் இருக்க மாட்டார்கள். ஆகவே புத்தியீவிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுப் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.
  7. வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12 உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? - வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12 Listen to Vikatan stories on our AI-assisted audio player எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி சோபிக்காது என்றே பலரும் நினைத்தனர். ‘அ.தி.மு.க-வின் பலம் ஒரு தனிமனிதனின் கவர்ச்சிதான். மூன்று, நான்கு மாதங்களில் அந்தக் கட்சி கரைந்துவிடும்’ என்றார் நெடுஞ்செழியன். அ.தி.மு.க-வை இப்படிக் குறைத்து மதிப்பிட்டவர்களையெல்லாம் திகைக்க வைத்துவிட்டது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்! கருணாநிதி கையிலெடுத்த ஆயுதம்! 1973, மே மாதம். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருந்த தி.மு.க-வின் ராஜாங்கம் மரணமடைந்ததால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாயத்தேவரை அ.தி.மு.க-வின் வேட்பாளராக எம்.ஜி.ஆர் அறிவித்தார். தி.மு.க வேட்பாளராக பொன்.முத்துராமலிங்கம், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராக என்.எஸ்.வி.சித்தன், இந்திரா காங்கிரஸ் வேட்பாளராக கரு.சீமைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) வேட்பாளராக என்.சங்கரய்யா ஆகியோர் நிறுத்தப்பட்டனர். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. ஆனாலும், இவை மட்டுமே வெற்றிக்குப் போதாது என்று எம்.ஜி.ஆர் கருதினார். ஆகவே, சி.பி.எம் தலைவர் பி.ராமமூர்த்தியைச் சந்தித்து ஆதரவு கோரினார் எம்.ஜி.ஆர். இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும், தி.மு.க-வையும் தோற்கடிக்க வேண்டும் என்பது சி.பி.எம் கட்சியின் நோக்கம். எனவே, அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பது என்று சி.பி.எம் முடிவெடுத்தது. போட்டியிலிருந்து விலகினார் என்.சங்கரய்யா. கருணாநிதி திண்டுக்கல் தொகுதியில் வேலை செய்ய ஒட்டுமொத்த தி.மு.க-வும் களமிறங்கியது. அத்தனை அமைச்சர்களும் முகாமிட்டார்கள். ‘தி.மு.க வெற்றிபெற வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார் பெரியார். பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி, ‘உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா?’ என்ற கேள்வியை முன்வைத்தார். எம்.ஜி.ஆர் பிறப்பால் மலையாளி. அந்த இன அடையாளத்தைத் தேர்தல் வெற்றிக்கான ஓர் ஆயுதமாகக் கையிலெடுத்தார் கருணாநிதி. யுத்த பூமியான திண்டுக்கல்! தேர்தல் நெருங்க நெருங்க யுத்த பூமியாக மாறியது திண்டுக்கல். அ.தி.மு.க-வினரும், தி.மு.க-வினரும் பயங்கர ஆயுதங்களுடன் நாகல்நகரில் மோதிக்கொண்டனர். சிலருக்குக் கத்திக்குத்து விழுந்தது. அதில் ஒருவர் பலியானார். வன்முறையை அடக்குவதற்காகத் தடியடி நடத்தப்பட்டது, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. வத்தலக்குண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய பி.ராமமூர்த்தி, ‘மக்கள் ஆதரவைப் பெற முடியாத தி.மு.க., அதிகாரத்தின் மூலம் குண்டர்களைவைத்து உருட்டி, மிரட்டித் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று பார்க்கிறது. தி.மு.க குண்டர்களின் ரௌடித்தனத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்’ என்றார். நிலக்கோட்டையில் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதுதான் என் முதல் வேலை’ என்றார். அந்த நேரத்தில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இன்னொரு புறம், திண்டுக்கல் இடைத்தேர்தலில் வாக்குகளை அ.தி.மு.க அள்ளிக்குவித்தது. 2,60,824 வாக்குகளைப் (52 சதவிகிதம்) பெற்று மாயத்தேவர் ஜெயித்தார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடம்பிடிக்க, தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இருவரும் இந்திரா பக்கம்! அ.தி.மு.க வளர்ந்துகொண்டிருந்தது. எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற தி.மு.க-வின் முக்கியத் தலைகள் அ.தி.மு.க-வுக்குத் தாவிக்கொண்டிருந்தனர். அந்தக் கோபத்தில் முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தார். அவரது தாக்குதல் இனரீதியில் போனது. திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது, ‘உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா?’ என்று கேட்ட கருணாநிதி, அந்த ஆயுதத்தை மீண்டும் கையிலெடுத்தார். அதற்கு பதிலடியாக, ‘கருணாநிதியின் சமூகம் குறித்து’ எம்.ஜி.ஆர் பேசியதாக ஒரு புரளி கிளம்பியது. ‘எம்.ஜி.ஆர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்கினர். திடீரென சென்னை வாழ் மலையாளிகள்மீது தாக்குதல் நடந்தது. மலையாளிகளின் வீடுகளும் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. மலையாளப் படங்கள் ஓடிய திரையரங்குகள் சூறையாடப்பட்டன. இதன் எதிரொலியாக, திருவனந்தபுரத்தில் தமிழர்கள்மீது தாக்குதல் நடந்தது. அதையடுத்து, சி.பி.எம் தலைவர் ஏ.கே.கோபாலன் முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதினார். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த கருணாநிதி, `இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார். அந்தப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அடுத்ததாக, கச்சத்தீவு விவகாரம் பெரிதாக எழுந்தது. 1974-ம் ஆண்டு, ஜூன் மாதம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது இந்திரா காந்தி அரசு. அந்த விவகாரத்தில், இந்திரா காங்கிரஸ் அரசை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் எதிர்த்தன. ஆனால், அடுத்து வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு கட்சிகளும் பல்டி அடித்தன. இந்திரா காந்தியால் நிறுத்தப்பட்ட பக்ருதீன் அலி அகமதுவை தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்தன. அப்போது, அரிசி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்று சொன்ன தி.மு.க-வின் ஆட்சியில், கிலோ அரிசி 5 ரூபாய்க்கும், 6 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மாநில அரசால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரிசி விலையைக் குறைப்பதற்கு எந்த உதவியையும் இந்திரா காங்கிரஸ் அரசு செய்யவில்லை. ஆனால், அந்த இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு, அரிசி விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார் எம்.ஜி.ஆர். அதேபோல, அப்போது தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவியது. அதைத் தீர்ப்பதற்கு இந்திரா காங்கிரஸ் அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை; புதிய மின் திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை. ஆனால், அதே இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு மின்வெட்டுக்கு எதிராகப் பேரணி நடத்தினார் எம்.ஜி.ஆர். இந்திராகாந்தி இருள் கவ்வியது! 1975-ம் ஆண்டு, ஜூன் 25-ம் தேதி. இந்திய தேசத்தை ‘எமர்ஜென்சி’ என்ற இருள் கவ்வியது. ‘நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமலுக்கு வருகிறது’ என்று அறிவித்தது இந்திரா காந்தி அரசு. காவல்துறை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொல்லி, ஆண்டுக்கணக்கில் சிறையில் வைக்கலாம். ஜூன் 25 அன்று இரவே கைது வேட்டை தொடங்கியது. நாடு முழுவதும் விடிய விடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சரண் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, அருண் ஜெட்லி, சந்திரசேகர், சரத் யாதவ், கர்பூரி தாக்கூர் உட்பட ஏராளமான அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டனர். குல்தீப் நய்யார் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் எனச் சுமார் ஒரு லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், ‘மிசா’வில் (Maintenance of Internal Security Act) சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இந்திரா காந்தி என்றாலும், அவருடைய புதல்வர் சஞ்சய் காந்திதான் இந்தியாவின் அதிகார மையமாக இருந்தார். மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும், மாநில முதல்வர்களும் சஞ்சய் காந்தியின் ஆணைக்கிணங்க செயல்பட்டனர். சஞ்சய் காந்தி அறிமுகப்படுத்திய முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘குடும்பக் கட்டுப்பாடு திட்டம்’. டாக்ஸி ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஏழைகள்தான் இந்தத் திட்டத்தின் இலக்கு. அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று ‘வாசெக்டமி’ எனும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார்கள். கிராமங்களில் போலீஸார் சுற்றிவளைத்து, அங்கிருக்கும் ஆண்களைப் பிடித்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டார்கள். சுகாதாரமற்ற முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ததால், பலர் மரணமடைந்தனர். ‘நகரை அழகுபடுத்துதல்’ என்பது சஞ்சய் காந்தியின் இன்னொரு திட்டம். டெல்லியில் ‘துர்க்மேன் கேட்’ என்ற குடிசைப் பகுதியில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்துவந்தன. அவர்களில் பெரும்பாலானோர் ஏழை முஸ்லிம்கள். திடீரென்று புல்டோசர்களைக் கொண்டு சென்று அங்கிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார்கள். அதில், பலர் உயிரிழந்தனர். பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அரசின் அனுமதியில்லாமல் எந்தச் செய்தியையும் வெளியிட முடியாது. அதனால், ‘துர்க்மேன் கேட்’ கொடுமைகள் போன்ற பல செய்திகள், எமர்ஜென்சி முடிவுக்கு வந்த பிறகுதான் வெளியுலகுக்கே தெரியவந்தன. சஞ்சய் காந்தி `உங்கள் மகன் ஸ்டாலினை..!’ 1976, ஜனவரி 31-ம் தேதி. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்துவந்தது. தனியார் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி, ‘அநேகமாக, முதல்வர் என்ற முறையில் நான் கலந்துகொள்ளும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்’ என்று பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார். `தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது’ என்ற தகவல் வருகிறது. நண்பர்களிடம் பேசுவதற்காகத் தொலைபேசியை எடுக்கிறார். சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள். இரவு 8 மணிக்குக் காவல்துறையினர் வருகிறார்கள். ‘என்னைக் கைதுசெய்ய வேண்டுமா?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்களை அல்ல...’ என்று பதில் வருகிறது. ‘பிறகு, யாரைக் கைதுசெய்ய வந்திருக்கிறீர்கள்?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்கள் மகன் ஸ்டாலினை...’ என்கிறார் காவல்துறை அதிகாரி!
  8. இரண்டு வாரங்களுக்கு முன்னால் ‘ஹெய்சா’, இப்போ ‘வீழ்ச்சி’. எங்கே தேடி எடுக்கிறீங்கள் இப்படியான கதைகளை? “எதையாவது வாசிச்சு தொலைக்கட்டும்” என்று வீட்டிலே விட்டுட்டாங்களா? சும்மா சொல்லக் கூடாது கதைகள் இரண்டும் அழகாக சொல்லப்பட்டிருந்தன. வீழ்ச்சியின் முடிவை ஓரளவு ஊகிக்க முடிந்திருந்தது. இவர் இப்படித்தான் என்று முத்திரை குத்தாமல் இருக்க, ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை’யும், ‘சித்தாந்த வினாவிடை’யும் தேவைப்படுகிறது. பிழைக்கத் தெரிந்த ஆள்.
  9. தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வத்தல் 1900கள் வத்தல்/ பாய் வத்தல் என்பது வத்தையை விடப் பெரியது ஆகும். நிறை அதிகமாகக் கொள்ளக்கூடியது
  10. முஸ்லிம்களை வெளியேற்றியது இன சுத்திகரிப்பு என்றவரின் தற்போதைய அமைதி பற்றிதான் சுட்டிகாட்டபட்டது .
  11. பெருமாள்... ஒரு கருத்தில் நின்று பேசலாமே. வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை தேசிய தலைவர் காலத்திலேயே அவர்களை மீள வந்து குடியிருக்கும் செயல்பாடுகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்தாயிற்றே. இனி புதிதாக ஒரு அறிக்கை விட நீங்களோ, நானோ யார்? அது தவிர ஓரளவுக்கு விருப்பமும், ஆர்வமும் கொண்ட முஸ்லீம் மக்கள் மீளவும் வடக்கில் வந்து தமது வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள் தானே? வினயமாக கேட்கிறேன், இது உண்மையில் சுமந்திரன் சொன்னார் என்பதற்காக இப்படி 6, 7 பக்கம் கடந்து இந்த திரி ஓடுகிறதா?
  12. டெல்லி இன்னும் கனவு கண்டு கொண்டு இருக்கிறது புலி மீளுருவாக்கம் நடைபெறும் என்றும் தனது அரசியல் பிழைக்காது எனவும் நம்பிக்கொண்டு உள்ளது .
  13. இந்தக் கொடுப்பனவு ஏற்கனவே பல்கலைக்கழங்களுக்கு போனவர்களுக்கும் கிடைக்குமா ஏராளன்.ஏன் எனில் உதவி திட்டங்களில் படிப்பவர்கள் இப்படியான கொடுப்பனவுகள் பற்றி சொல்ல மாட்டார்கள்.உதவி திட்டங்களை பெற்றுக் கொண்டு, கொடுப்பனவுகளையும் எடுத்து செலவு செய்து கொண்டு திரிவார்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே தான் கேட்கிறேன்.🖐
  14. இந்தியாவை இப்பொழுதும் நம்பவில்லை.புட்டின் இந்தியா போன அடுத்த நாளே அமெரிக்க அதன் மிகப்பெரிய விமானத்தை அதுவும் புயலால் பெரிதும் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத்தில் தரையிறக்குகிறது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியதூதரகம் அகற்றப்படவேண்டும் என போராட்டங்கள் நடக்கிறது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைந்து தமிழரசுக்கட்சியும் உடைந்து என்பிபி வடமாகாணத்தில் வலுவாக காலூன்ற அடித்தளம் போடுகிறது. தனக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து ஒற்றையாட்சிக்குள்ளே அரசியலைமப்பு மாற்றத்தை நிறைவேற்ற ஆயத்தமாகிறது. இது ஒரு ஆபத்தான நிலை தமிழர்களுக்கு அதே வேளை இந்தியாவுக்குப் பிடிக்காத சார்பு நிலைகளை அனுரஅரசு எடுக்கிறது.இந்தப் புறச்சூழலில் தான் அதுவும் தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் அடிக்கும் நேரத்தில் இப்ப தும்முனாத்தான் அது தேர்தல் மேடைகளில் ஊறுகாயாக அவது பயன்படுத்தப்படலாம். மற்றும்படி தமிழக அரசியல் கட்சிகளில் நாம்தமிழர் பாமக தவிர யாரும் ஈழத்தமிழர் விகாரததைக் கையில் எடுக்கப் போவதில்லை. அன்பு மணி பாமக தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பாமகவும் இந்த விவகாரத்தை கவனத்தில் பெரிதாக எடுக்காது.சீமானை மட்டும் சந்திப்பது தமிழக மக்களை உதாசீனம் செய்வதாகும்.
  15. முஸ்லிம்களை வடகிழக்கை விட்டு புலிகள் அனுப்பியது இன சுத்திகரிப்பு என்று சொல்லியவர் தற்போது அவர்களை மீள் குடியேற அழைப்பு விடலாமே ? புயலால் அவர்களும் பாதிக்க பட்டு உள்ளார்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதுபவர்கள் எங்கு போனார்கள் ? இங்கு இதய சுத்தியுடன் கருத்துக்கள் வருவதில்லை முஸ்லிம் ஆதரவாளர் போன்று நடிப்பவர்களுக்கு குழம்பிய குட்டையை மேலும் மேலும் குழப்புவதே நோக்கம் அன்றி வேறொன்றும் இல்லை . தற்போதைய நிலையில் பலபக்கமும் அடிவாங்கிய அரசியல்வாதி சுமத்திரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாய் இந்த நேரம் அறிக்கை விட்டு பார்க்கட்டுமே பார்க்கலாம் . தனது சுயநல அரசியலுக்காக சுமத்திரன் பிச்சைகாரனை விட கேவலமாய் நடந்து கொள்ள கூடியவர் நடந்து கொள்பவர் . பசிக்கு யாசகம் பெறுபவர்களை கூட அனுதாபம் காட்டலாம் சுமத்திரன் போன்றவர்கள் திருட்டு யாசகம் பெறுபவர்களில் ஒருத்தர் .
  16. கலியாண புரோக்கருக்கு கொடுக்கிற காசை விட, இந்த விளம்பரச் செலவு குறைவு. 😂
  17. முதலில் புரையோடி போன சிங்கள புத்த சிலைகளை வடகிழக்கில் வைப்பதை நிறுத்தனும் அதன் பின் ஆலய வழிபாடுகள் மேற்கொள்ளும் நடிப்பை தொடர்வது நல்லது .
  18. ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு Published By: Vishnu 21 Dec, 2025 | 07:39 PM க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது. அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது. நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் தொடங்கியது. இன்று, இந்த நிகழ்ச்சித்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இறுதி நிகழ்வு, யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியமாகும். தற்போதைய அரசாங்கம் இந்த நிதியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து, அவ்வாறே இங்கும் செயல்படுங்கள். நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான், வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் தங்கள் கருத்துக்களை இதன்போது தெரிவித்தனர். கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்ட செயலாளர்கள், வட மாகாண அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234041

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.