stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Today
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
அன்று தொடக்கம் தேன் கூடுகளில் கை வைக்காத்தால் என்ன நடக்கும் என கூறி வந்தோம்.😎 அதன் ஒட்டுமொத்த பலனும் இன்று கண்ணெதிரிலேயே தெரிகின்றது.🌟 முதல் படியாக அந்த தேன் கூடுகளை கலைத்ததின் விளைவாக ஐரோப்பா அகதிகளால் நிரம்பி வழிகிறது. இரண்டாம் படியாக தேவையில்லாமல் எரிசக்தி விண்ணைத்தொடும் அளவிற்கு எகிறிவிட்டது. இயற்கை அழிவுகளை விட மனித அழிப்புகள் மிக கொடுமையாக இருக்கின்றது. அதிலும் மேற்கத்தையவர்களின் போர் மூர்க்க குணம் நியாயமற்றது. செய்தியின் பிரகாரம் ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தில் உள்ளன. ரஷ்ய அதிபர் திருவாளர் புட்டின் அவர்கள் கொடுப்புக்குள் சிரிக்கிறார். 😋 ரஷ்யாவை உடைத்த பின்னர் அதனுடன் நட்புடன் இருந்திருந்தால்.....இந்த உலகும் ஐரோப்பிய ஒன்றியமும் அவல நிலைக்கு வந்திருக்காது.
-
மறவோம்
நாங்கள் இருக்கிறோம். பணம் பார்க்கிறோம். புகழ் சேர்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எங்களால் தான் வாழ்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறோம்.
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நானும் கண்டேன். காட்சியில் அவள் நடந்து வர, ஆடை சற்று நகர, காட்சி மீண்டும் ஆரம்பத்துக்கு வரும் அந்த நொடியில் அவள் முகம் ஆடை நகர்ந்த இடத்தில் தோன்றுவது அருமை. பாடகர் சிறீநிவாசனை நினைவுட்டும் குரல். நன்றாக வந்திருக்கிறது. இந்த இடத்தில் கொஞ்சம் சறுக்கிறது. ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை அரங்கராசன் என்பவர் வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் இருந்ததுதான் இந்தக் கவிதை “பிரம்மனை கஞ்சன் என்றுதான் நினைத்தேன் உன் இடையைப் பார்த்தபோது சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது அவன் வள்ளலாகவும் இருக்கிறான்?…” கவிப்பேரரசு சுட்டதுதான் ஜீன்ஸ் படத்தில் வந்தது. எல்லாப் புகழும் வைரமுத்துவுக்கே. இப்படியான விளக்கங்கள் நல்ல உதவியாக இருக்கும். பலர் இந்த வழியில் ஈடுபட தூண்டுதலாக இருக்கும். நன்றி! உங்கள் காலத்துப் பாடல். அதுதான் உங்களுக்குப் மிடித்திருக்கிறது. என் காலத்துப் பாடல் என்பதால், “மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின் திறமையெல்லாம் முழுமை பெற்ற அழகி…”😜
-
மறவோம்
எப்போதும் மூலவர் கற்பகிரகத்துக்குள்தான் இருப்பார் வெளியே வருவதில்லை . .......உற்சவ மூர்த்திகள்தான் உலா வருவார்கள் .......! அப்படியே எமக்கு முன் எவ்வளவு அறிஞர்கள் வாழ்ந்து மறைந்து விட்டார்கள்......... நீங்கள் குறிப்பிட்ட இந்த எட்டு , பத்து அறிஞர்களைப் பற்றிய செய்திகளே இதயத்தை என்னவோ செய்கிறது என்றால் ........ ஏனையவர்களிடம் நாம் அறிந்து கொள்வதற்கு எவ்வளவு விடயங்கள் இருந்திருக்கும் . ........ தொகுத்திருந்தால் எல்லாமே ஒரு பொக்கிஷம் அல்லவா .......ம் . ... நெஞ்சம் கனக்கின்றது .........! மறவோம் என்பதில் மறந்ததுதான் அதிகம் ..........நன்றி ரசோதரன் . .......!
-
மறவோம்
இது 'அகழ்' இணைய இதழில் செல்வேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. மறவோம்: செல்வேந்திரன் செல்வேந்திரன் திரு.வி.க முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், திரு.வி. கல்யாணசுந்தரம் அவர்களை அவருடைய இறுதிக்காலத்தில் சந்திப்பதற்காகச் செல்கிறார். அப்போது திரு.வி.க மிகச்சிறிய இல்லமொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை கவனித்துக்கொள்வதற்கு ஆட்கள் யாருமில்லை. திரு.வி.க-வை தன்னுடைய ஆசிரியராகக் கருதியதால், டாக்டர் மு. வரதராசனார் தினந்தோறும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறார். ஒருநாள் கி.ஆ.பெ. அவரைப் பார்ப்பதற்காகச் செல்லும்போது, கட்டிலில் இருந்து கீழே விழுந்து, கூனிக் குறுகிச் சுருங்கிய நிலையில் கிடக்கிறார் திரு.வி.க. இவர் எங்கே இந்த வீட்டில் அனாதையாக இறந்து போய்விடுவாரோ என்று அஞ்சிய அந்த வீட்டின் உரிமையாளர், ‘நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்’ என்று திரு.வி.க.விற்கு வழக்கறிஞர் மூலம் அறிக்கை கொடுத்து அவரை துன்புறுத்தத் துவங்குகிறார். இதைப் பார்த்து கி.ஆ.பெ மனம் கொந்தளித்து, “வாழ்நாளெல்லாம் தமிழைத் தூக்கிச் சுமந்த இந்தத் தமிழ் அறிஞருக்கு ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாதா? இவருக்கு நாம் நிதி திரட்ட வேண்டும்” என்று தமிழ்நாட்டினுடைய முக்கியமான புரவலர்களுக்கு, அவரும் மு.வ.வும் இணைந்து கடிதங்கள் எழுதுகிறார்கள். அதற்கு, உடனடியாக மதுரையில் உள்ள தொழிலதிபரான கருமுத்து தியாகராஜன் செட்டியாரிடமிருந்து ஒரு பதில் கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்துடன் மற்றொரு உறையும் உள்ளது. அந்த உறையைத் திறந்தால், ஒரு பெரிய தொகைக்குக் கருமுத்து தியாகராஜன் அவர்கள், திரு.வி.க அவர்களுக்கு அனுப்பிய காசோலை. அனுப்பிய சில நாட்களிலேயே மீண்டும் தியாகராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் வருகிறது, கூடவே ஒரு குறிப்பும் உள்ளது. அதில், “நான் வாழ்நாளெல்லாம் கௌரவமாக வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் நான் எதைச் செய்யவில்லையோ, அந்த ஒரு காரியத்தை என்னுடைய மரணத் தருவாயில் செய்யும்படி என்னைப் பணித்துவிடாதீர்கள்” என்கின்ற குறிப்போடு, தியாகராஜன் செட்டியார் அனுப்பிய அந்தக் காசோலையை அவருக்கே திரு.வி.க. திருப்பி அனுப்பிவிட்டார். இது ஒரு நிகழ்வு. மற்றொன்று, பாரதியாருடைய நண்பரும், அதே எட்டயபுரத்தில் பிறந்தவருமான நாவலர் சோமசுந்தர பாரதியார், கந்தசாமிக் கவிராயரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்கிறார். அவர் வீட்டுத் திண்ணையில், அழுக்கடைந்த வேட்டி ஒன்றை உடுத்திக்கொண்டு, பரட்டைத் தலையோடு, சட்டை இல்லாமல் பார்ப்பதற்குப் பிச்சைக்காரரைப் போல ஒருவர் படுத்திருக்கிறார். சோமசுந்தர பாரதியாரும் கந்தசாமிக் கவிராயரும் தொல்காப்பியத்தின் மிகச் சிக்கலான ஒரு பகுதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, திண்ணையில் பிச்சைக்காரரைப் போல படுத்திருந்த அந்த நபர் எழுந்து அமர்ந்து, தர்க்க ரீதியாக ஒரு விளக்கத்தைச் சொல்கிறார். உயர்தரமானதொரு ஆய்வாளர் மட்டுமே சொல்லக்கூடிய விளக்கம் அது. அதைக் கேட்கும்போது அதிர்ந்துபோன நாவலர், “யார் இவர்?” என்று கேட்கிறார். இவர்தாம் தொல்காப்பியப் பேரறிஞர் என்றும், இலக்கணக் கடல் என்றும் போற்றப்படக்கூடிய ‘அரசன் சண்முகனார்’ என்று அறிமுகப்படுத்துகிறார்கள். அரசன் சண்முகனாரை ஒருமுறை தூத்துக்குடி சைவ சித்தாந்தக் கழகம் சிறப்புரையாற்றுவதற்காக அழைக்கிறது. அவரைத் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அழைத்து வருவதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் செல்கிறார்கள். அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. “யாரோ ஒரு பிச்சைக்காரன் இறங்கிப் போகிறான்” என்று அவரைப் பார்க்கிறார்கள். தன்னுடைய வாழ்நாளில், தமிழ் அறிஞர்களால் மிக மிக இழிவு செய்யப்பட்ட, மிக மிக அவமானப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் இந்த மண்ணிலே வாழ்ந்திருந்தார் என்றால், அவர் சோழவந்தானில் வாழ்ந்த அரசன் சண்முகனார்தான். அப்படி அவர் என்ன குற்றம் செய்தார்? அவருடைய தொல்காப்பியப் பாயிர விருத்தி, திருக்குறள் ஆராய்ச்சி போன்ற நூல்களை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் அன்று வாழ்ந்த புலவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர் செய்த குற்றம் என்னவென்றால், நமக்கு முந்தைய உரையாசிரியர்கள் செய்த உரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய சொந்த அறிவை, தன்னுடைய சொந்த வாசிப்பை, தன்னுடைய சொந்த ஆய்வுகளின் வழியாக அதற்கான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டின் புலவர் கூட்டம் அவரை வேட்டையாடியது. பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு 46 வயதில் அரசன் சண்முகனார் இறந்து போனார். சி.வை. தாமோதரம் பிள்ளையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்ப் பதிப்புத்துறையினுடைய தந்தை என்று அறியப்படக்கூடியவர். கலித்தொகையிலிருந்து, சூளாமணியிலிருந்து, நீதிநெறி விளக்கத்திலிருந்து, வீரசோழியம் வரை எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்தவர். உ.வே.சா.விற்குப் பல விதங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவருக்குப் பத்து புதல்வர்கள். எட்டுப் பிள்ளைகள் இறந்துவிட்டார்கள். எஞ்சி இருந்த இரண்டு பிள்ளைகளில் ஒரு மகன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு ஒரே மகள்தான். சி.வை தாமோதரம் அவர்கள் தன்னுடைய மரணப் படுக்கையில், “என்னுடைய சொந்த சேகரிப்பிலுள்ள புத்தகங்களையும், என்னுடைய தனிப்பட்ட சேகரிப்புகளையும் விற்று என் மகளுடைய கல்விக்கு உதவுங்கள்” என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். சி.வை தாமோதரப்பிள்ளை இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் கலைக்களஞ்சியம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோதே, ஒவ்வொரு புத்தகமும் 750 பக்கங்கள் என பத்து புத்தகங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவிநாசிலிங்கம் செட்டியார் ஒரு குழுவை அமைக்கிறார். அந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்றவர் ‘பெரியசாமித் தூரன்’. அந்த கலைக்களஞ்சியத்திற்காகப் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு அறிஞருக்குமே அரைச் சம்பளம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. உலக சாதனை என்று கருதத்தக்க அளவுக்கு அந்த கலைக்களஞ்சியத்தைத் தனி மனிதராகப் பெரியசாமித் தூரன் உருவாக்குகிறார். தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் ஏற்றிக் கேட்பதற்குக்கூட முடியவில்லையே என்று, அன்றைக்குத் தமிழில் வந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஆய்விதழ்களிலும் அவர் வருமானத்துக்காகக் கட்டுரைகள் எழுதுகிறார். அவருடைய நாட்குறிப்பில், “சற்று கூடுதல் சம்பளம் கொடுத்தால் இன்னும் நன்றாக வேலை பார்த்திருப்போமே” என்கிற ஆதங்கம் காணக்கிடைக்கிறது. பெரும்பாலான துறை சார்ந்த அறிஞர்கள் நம்முடைய தமிழ் கலைக்களஞ்சியத்துக்கு எழுதிய கட்டுரைகளுக்கு எந்தச் சன்மானமும் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பெரியசாமித் தூரனுக்கு, அவருடைய குடும்பத்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு விழா ஏற்பாடு செய்தார்கள். குறைந்தபட்சம் ஐநூறு பேர் வருவார்கள் என்று இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் வெறும் முப்பத்திரண்டு பேர். மீதமான அந்த உணவை என்ன செய்வது என்று தெரியாமல் தூரன் குடும்பத்தார் திகைத்து நின்றார்கள். அவரை இந்தப் பொதுச்சமூகத்தில் மீண்டும் நினைவுறுத்தும் பொருட்டு, எழுத்தாளர் ஜெயமோகனும் அவருடைய நண்பர்களும் ‘தமிழ் விக்கி தூரன் விருது’ என்றொரு விருதைத் தோற்றுவித்து, பண்பாட்டு ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழக்கூடிய ஆய்வாளர்களுக்கு ஈரோட்டில் வைத்து விருது வழங்குகிறார்கள். பெரியசாமித் தூரன் இதுவரை ஐந்து ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்குகிற நிகழ்வுகளுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தி, வலியுறுத்தி அழைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒரு பத்திரிக்கையாளர் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. ஒரு பத்திரிக்கைகூட தூரன் விருதைப் பற்றியோ, அந்த விருது பெறும் ஆய்வாளர்களைப் பற்றியோ ஒரு வரிகூட எழுதியதில்லை. இன்னொரு ஆளுமையை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஜி.யு. போப்; இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் இந்திய மொழிகளுக்கான, அதிலும் குறிப்பாகத் தமிழ், தெலுங்குக்கான துறைத் தலைவராக இருக்கும்போது ஜி.யு. போப் அவர்களுக்கும், உ.வே. சாமிநாத ஐயர் அவர்களுக்கும் இடையே நட்பு உருவாகிறது. இத்தனைக்கும் உ.வே. சாமிநாத ஐயரை விட 35 ஆண்டுகள் வயதில் மூத்தவர் ஜி.யு. போப். உ.வே.சா எழுதிய கடிதங்களும், அவருக்கு வந்த கடிதங்களும் தொகுக்கப்பட்டுத் தனி நூலாக வந்துள்ளது. தமிழ் இணைய நூலகத்தில் (Tamil Digital Library) இலவசமாகவே அதை நீங்கள் வாசிக்கலாம். அதில் ஜி.யு. போப் அவர்கள் உ.வே.சா.விற்கு எழுதிய முதல் கடிதத்தில் “மதிப்பிற்குரிய ஐயா” என்று தொடங்குகிறார். மூன்றாவது கடிதத்திலேயே “என் அன்பிற்கினிய நண்பா” என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்குள்ளான உறவு மிகவும் வலுப்படுகிறது. ஜி.யு. போப் லண்டனில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை அவருக்கு அனுப்புகிறார். “என் புகைப்படம் அனுப்பினேனே உங்களுக்குக் கிடைத்ததா?” என்று கேட்கிறார். இருவரும் கடிதங்களில் அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கள். முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்த எண்ணற்ற விஷயங்கள் அந்தக் கடிதங்களில் உரையாடப்படுகின்றன. அதில் ஒரு கடிதத்தில், “அருமையும் பெருமையும் உடைய நம் தமிழ் மொழிக்கு, ஒரு முறையான தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பை உருவாக்க வேண்டும்” என்று உ.வே. சாமிநாத ஐயருக்கு ஜி.யு. போப் ஒரு கோரிக்கை வைக்கிறார். அடுத்த கடிதத்தில், “உலகத் தாய்மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தமிழ் மொழிக்குத் தகுதி வாய்ந்த ஒரு இடத்தை உருவாக்குவதற்கு நான் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்” என்று எழுதுகிறார் ஜி.யு. போப். இதைச் சொல்லக்கூடிய ஜி.யு. போப் கனடாவில் பிறந்தவர், ஆக்ஸ்போர்டில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் எந்தத் தமிழச்சியின் முலைப்பாலும் குடித்து வளரவில்லை. ஆனால் நிச்சயம் ஜி.யு. போப் மறைந்த அன்று இரவு அந்தக் கல்லறையில், தமிழ்த்தாய் விழுந்து புரண்டு, அழுதிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஜி.யு.போப் அவர் இன்னோர் கடிதத்தில், “திருவாசகத்தில் 28 இடத்தில் தளை தட்டுகிறது” என்கிறார். மற்றொரு கடிதத்தில், “குறள் வெண்பா என்கின்ற இந்த இரண்டடி வெண்பா வடிவத்தை உருவாக்கியது வள்ளுவர்தான். வள்ளுவருடைய காலத்திற்கு முன்பு யாருமே அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போது சந்தையில் கிடைக்கிற இந்த இரண்டடி வெண்பாக்கள் எல்லாமே போலி. ஏனென்றால், திருக்குறளின் வைர வரிகளுக்கு இந்த போலி வரிகளை இணை வைக்கவே முடியாது” என்று சொல்கிறார். வைணவ இலக்கியங்களைப் படித்துவிட்டு “திருவாய்மொழியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது ஒரு பெருங்கடலைப் போன்றிருக்கிறது” என்று தன்னுடைய பிரமிப்பைச் சொல்கிறார். இந்தக் கடிதங்களைப் பார்க்கும்போது மிக நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால், 85 வயதில் ஜி.யு. போப் இந்த மொழி சார்ந்து கொண்டிருந்த கனவுகள் இருக்கிறதே, ஒவ்வொரு கடிதத்திலும் அவருடைய கனவுகள் அனைத்தும் இமாலயப் பணிகள். அவர் பழந்தமிழ் இலக்கியத்துக்கான ஒரு அகரவரிசையை உருவாக்க வேண்டும், அத்தனையும் ஆக்ஸ்போர்டில் சேகரிக்க வேண்டும், அத்தனையும் மீண்டும் மறுபதிப்பு செய்ய வேண்டும், அத்தனையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவர் தன்னுடைய ஒவ்வொரு கனவையும் சொல்கிறார். கண்ணில் நீர் வராமல் அந்தக் கடிதங்களைப் படிக்க முடியாது. ஆனால், மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு ஆளுநர், மரியாதைக்குரிய ஆர்.என். ரவி என்ன சொல்கிறார்? கால்டுவெல்லும், ஜி.யு. போப்பும் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டாத அறிவிலிகளாம், அரைகுறைகளாம். மதம் மாற்றுகிற ஒரு நோக்கம் மட்டும்தான் அவர்களுக்கு இருந்தது என்கிறார். இதற்கெல்லாம் மேலே சென்று, திருக்குறளை ஜி.யு. போப் ஆன்மீக நீக்கம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் “நம் தாய்மொழி” என்று ஜி.யு. போப் எழுதுகிறார். ஒவ்வொன்றிலும் வைர வரிகள் என்கிறார், கம்பனைக் கொண்டாடுகிறார், திருவாசகத்தை மொழிபெயர்க்கிறார், திருக்குறளை மொழிபெயர்க்கிறார். இன்று உலக அறிஞர்களால் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதற்கு ஒரே காரணம் ஜி.யு. போப். சரி, அவரைப் பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர் என்று சொல்லக்கூடிய ஆளுநர் மாளிகை எப்படி இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும் அல்லவா? ஆளுநர் மாளிகையில் நடந்த, மருத்துவர்களுக்குப் பரிசளிக்கப்பட்ட கேடயத்தில் போலியான திருக்குறள் பதிப்பிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (ChatGPT) கொடுத்த, அதுவரை இல்லாத ஒரு திருக்குறளைப் பதிப்பித்துக் கையில் நினைவுப் பரிசாகக் கொடுக்கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், மற்றொரு அறிஞர், ‘எஸ்.டி.சாமிக்கண்ணு’. அவர் வானியல் சாஸ்திரத்தினுடைய அடிப்படையில், ஜோதிட நூல்களினுடைய அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிப்பு செய்தவர். நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா கல்வெட்டுகளையும் படித்து, இந்தக் கல்வெட்டில் இருக்கக்கூடிய செய்திகள் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஆண்டுகளை மிக மிகத் துல்லியமாக வகுத்துக் கொடுத்தவர். ஆங்கில அரசால் ‘ராவ் பகதூர்’ பட்டமும், ‘திவான் பகதூர்’ பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவையினுடைய செயலராக இருந்தவர். அவருடைய ஆய்வுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், “இந்த எஸ்.டி. சாமிக்கண்ணு, பஞ்சாங்கத்தைத் தொகுக்கத்தான் லாயக்கு” என்று விமர்சிக்கிறார் தீரர் சத்தியமூர்த்தி. அதாவது ஆக்ஸ்போர்டு அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, உள்ளூரில் இருக்கக்கூடிய தலைவர்கள் அவரை அவ்வளவு இழிவாக நடத்தினார்கள். அரசன் சண்முகனார் ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை’ மற்றும் ‘நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்’ பற்றி நாம் நன்று அறிவோம். அவர்கள் சிறைப்பட்டிருந்தபோது, சிறையில் அவர்களுக்கான சரியான உணவுக்காக தமிழ்நாட்டுப் புரவலர்கள் அவர்களுக்கு அனுப்பிய அந்தப் பணத்தைக் கொண்டு காகிதமும், புத்தகமும், பேனாவும் வாங்கி, சிறையில் பட்டினி கிடந்து இலக்கியங்கள் படைத்தவர்கள். திருக்குறள் நாமக்கல்லாருடைய உரை சிறைச்சாலையில் எழுதப்பட்டது. நம்முடைய தமிழ்நாட்டில் உருவான மூன்று அறிவு இயக்கங்களில் ஒன்று தனித்தமிழ் இயக்கம், இன்னொன்று திராவிட இயக்கம், மூன்றாவது தலித் சிந்தனை இயக்கம். இந்த திராவிட இயக்கத்திற்கும் தலித் சிந்தனை இயக்கத்திற்கும் இன்று வலுவான அரசியல் பின்புலம் இருக்கிற காரணத்தால், அதற்குப் பங்களிப்பாற்றிய அறிஞர்கள் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும் அடையாளத்தையும் பெறுகிறார்கள். ஆனால் இந்த 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்கள் ஒரு சாபக்கேடான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அதற்கு முந்தைய தமிழ் அறிஞர்களை ஆதரிப்பதற்கு மன்னர்கள் இருந்தார்கள், நிலவுடைமைச் சமூகம் இருந்தது. ஆனால், இவர்கள் முழுக்க முழுக்கக் கைக்காசைப் போட்டு ஆய்வு செய்ய வேண்டும், அல்லது மடங்களினுடைய உதவி தேவை. அப்படி இல்லையென்றால் கல்வி நிறுவனங்களுடைய உதவி வேண்டும். அன்றைய சூழல் அப்படித்தான் இருந்தது. ஆகவே, தமிழுக்கு அரும்பணியாற்றிய 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்களில் 99 சதவிகிதம் பேர் ரத்தம் கக்கிச் செத்திருக்கிறார்கள். வாழ்ந்தபோது அவர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது, எந்த அங்கீகாரமும் கிடையாது. வாழ்ந்து மறைந்த பிறகும் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது. ஓர் ஆய்வுக்காக ‘அ.கா. பெருமாள்’ ஐயா அவர்கள் தோவாளைக்குப் பக்கத்தில் இருக்கிற பீமநகரி என்கிற ஊருக்குச் செல்கிறார். அங்கே ஒரு முப்பது வீடுகளே உள்ள சின்ன கிராமம் இருக்கிறது என்பதை கண்டறிகிறார். அந்த ஊர், நாடகக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய ‘ஆண்டி சுப்பிரமணியம்’, மகா வித்வான் ‘கே.என். சிவராஜப் பிள்ளை’, பண்டிதர் ‘சண்முகம் பிள்ளை’ ஆகிய மூன்று தமிழ் அறிஞர்கள் அந்த முப்பது வீடுகளிலிருந்து உருவாகி வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது தோவாளை சென்றபோது பார்க்கிறேன், அந்த பீமநகரியில் எல்லாத் திசையிலும், ‘ஒரு சென்ட் நிலம் விலை இவ்வளவுதான்’ என்று வீட்டுமனை விற்பனைப் பலகைகள் இருக்கின்றன. அந்த ஊர் முழுக்க அலைந்து திரிந்தாலும், மூன்று மகத்தான தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த ஊர் என்பதற்கான எந்த ஒரு சிறிய அடையாளமும் அங்கே கிடையாது. கே.என்.சிவராஜ பிள்ளை ‘வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்’, தென்காசியில் பிறந்தவர், கால்நடை மருத்துவர். அவரை ஆங்கில அரசாங்கம் வெளிநாட்டுக்கு அனுப்பி கல்வி பயில வைத்தார்கள். கால்நடை மருத்துவம் குறித்து ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு ராவ் பகதூர் பட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய அகலிகை வெண்பா, அவருடைய கம்பராமாயண சாரம்… அதை, “அவருடைய கம்பராமாயண சாரத்தைப் படிக்காத யாருமே கம்பன் கழகத்தில் உரையாற்றியதில்லை” என்று வேடிக்கையாகக் கூடச் சொல்வார்கள், தமிழ்நாட்டு அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களாக இருந்தால் கண்டிப்பாக வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாருடைய புத்தகங்களை வாசித்திருப்பார்கள். மில்ட்டனைத் தமிழில் மொழிபெயர்த்தவர், கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். எண்ணற்ற நூல்கள் எழுதியிருக்கிறார். நான் இந்த மேடையில் குறிப்பிட்ட தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் முப்பது நாற்பது புத்தகங்களை எழுதியவர்கள். தொண்ணூறு வயது வரை பாளையங்கோட்டையில் வாழ்ந்தவர். இந்த நகரத்தின் வளர்ச்சிக்குப் பல விதங்களில் பங்களித்தவர். பல்வேறு அமைப்புகளின் வழியே ஈடுபட்டிருக்கிறார். நம் ஊரில் எங்கேயாவது இந்த வெள்ளக்கால் முதலியாருக்கு ஒரு பெயர் இருக்குமா? நம் ஊர் நூலகத்தில் இந்த வெள்ளக்கால் முதலியாருடைய ஒரு படம் வைக்கப்பட்டிருக்குமா? மற்றொன்று, என்னுடைய ஊர் சாத்தான்குளம். ‘சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர்’ என்று அழைக்கப்பட்ட அ. ராகவன். சாத்தான்குளத்தில் பிறந்தவர், பாளையங்கோட்டையில் வளர்ந்தவர். தன் வாழ்வின் கடைசி மூச்சு வரை தமிழ் பேசிக்கொண்டிருந்தவர். ஒரு மேடையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து மரணமடைந்தவர். ஆதிச்சநல்லூரைப் பற்றியும், பொருநை நாகரிகத்தைப் பற்றியும் புத்தகம் எழுதியிருக்கிறார். ‘கோநகர் கொற்கை’, ‘தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்’, ‘தமிழர் பண்பாட்டில் தாமரை’, தமிழர்களுடைய ஆடைகள், தமிழர்களுடைய வாழ்க்கை முறை பற்றி எண்ணற்ற பண்பாட்டு நூல்களை எழுதியவர். எங்கள் ஊரில் அவருக்கு ஒரு பெயர்ப்பலகை கூட கிடையாது. அவர் வாழ்ந்து மறைந்த இந்தப் பாளையங்கோட்டையிலும் ஒரு பெயர்ப்பலகை கிடையாது. அவருடைய புகைப்படத்தைக்கூட இன்றைக்கு நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், புதுமைப்பித்தன் வாழ்ந்த தெருவிற்கு, அவருடைய பெயர் வைப்பதற்கே நமக்கு அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவர் வாழ்ந்த வீதிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுப்பப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அங்கே ‘புதுமைப்பித்தன் தெரு’ பெயர் வைக்கப்படுகிறது. 1900-இல் ‘பரிதிமாற் கலைஞர்’, நச்சினார்க்கினியருக்கு மதுரையிலே ஒரு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைக்கிறார். நூற்றி இருபத்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன நண்பர்களே, இன்னமும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இங்கே திருநெல்வேலி மாநகராட்சியில் புதுமைப்பித்தனுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி எவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று? இது எல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டுமா? ஒரு ஊரில் எத்தனை அரிமா சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை ரோட்டரி சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன? அவர்கள் நினைத்தால் அந்த ஊருடைய எல்லையில் ஒரு பலகை வைக்க முடியாதா?சமீபத்தில் நெல்லைக்கு வரும்போது காருக்குறிச்சி வழியாக வந்தேன். அப்போது, என் மகளிடம், “காருகுறிச்சி அருணாசலம் என்கின்ற ஒரு மேதை இருந்தார். திருவாவடுதுறை ‘ராஜரத்தினம் பிள்ளை’ திருநெல்வேலிக்குக் கச்சேரி செய்ய வரும்போது, ஒத்து ஊதுவதற்கு ஆள் இல்லாமல் காருகுறிச்சியைக் கொண்டு வந்து விட்டார்கள். இருபத்திரண்டு வருடம் அந்த ஆசிரியரைப் பின்தொடர்ந்தார். உலகம் போற்றுகின்ற ஒப்பற்ற மாமேதையான காருக்குறிச்சியின் ஊரை நாம் தாண்டிப் போகிறோம்” என்று சொன்னேன். அந்த ஊர் எல்லையில் ஓர் ஐநூறு ரூபாய் செலவில் ஒரு பலகை வைக்க முடியாதா? நம்ம ஊர் நூலகங்களில் இந்த அறிஞர்களுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் இருக்கக்கூடிய நூலகங்களில் ஒரு புகைப்படத்தை மாட்டி வைக்க முடியாதா நம்மால்? அந்த அறிஞர்கள் பெயரில் ஒரு சிறிய போட்டியை நடத்தி இந்தப் பிள்ளைகளுக்கு நான்கு திருக்குறள் புத்தகம் கூட நம்மால் வாங்கிக் கொடுக்க முடியாதா? இதை எது செய்யவிடாமல் தடுக்கிறது? புத்தகக் கண்காட்சிக்கு ஈரோடு மகேஷ் வந்தால் நூறு பேர் அவரோடு செல்ஃபி எடுப்பார்கள். அது தவறு கிடையாது. ஏனென்றால் ஒரு பிரபலத்தைப் பார்த்தால் அவரோடு போய்ப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பொதுச்சமூகம் விரும்புவது இயல்பு. ஆனால், 80 நூல்களுக்கு மேல் எழுதிய அ.கா. பெருமாள் அதே சபைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய, ‘ஆலயக் கலையின் ரகசியங்கள்’ அனைத்தையும் தமிழ்ச்சமூகத்துக்கு வகுப்பெடுத்த ‘குடவாயில் பாலசுப்பிரமணியம்’ அதே அவைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய பண்பாட்டு ஆய்வாளர் ‘பக்தவத்சல பாரதி’ வந்தால், தமிழ் இலக்கியத்தினுடைய இருள் மண்டிய பக்கங்களில் தன்னுடைய ஆய்வுகளால் ஒளிப்பாய்ச்சிய ‘ஆ.இரா. வேங்கடாசலபதி’ இந்தச் சபைக்கு வந்தால், ஒருவருக்குக்கூட அவர்களை யாரென்றே நமக்குத் தெரியாது. அவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுகூட இல்லை. ‘ஐயா நலமாக இருக்கீங்களா?’ என்று நாம் கேட்கக்கூட மாட்டோம். ஏன் இப்படி நிகழ்கிறது என்றால், நம்முடைய அறியாமை. நமக்கு அவர்களைத் தெரியாது. நாம் இங்கே வந்தால் கதைப் புத்தகம் வாங்குவோம், கவிதைப் புத்தகம் வாங்குவோம். புனைவிலக்கிய எழுத்தாளர்களுக்கு, குறைந்தபட்சம் அவர்களின் வாசகர்களாவது கொஞ்சம் நன்றியோடு இருப்பார்கள். ஆனால் இந்தத் தமிழ் அறிஞர்களுக்கு? அவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது, அவர்கள் செய்த ஆய்வு நூல்களை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றி நமக்குத் தெரியவும் தெரியாது. இது ஒரு காரணம்தான். ஆனால் இது முழுக் காரணம் அல்ல. இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், அந்த அமைப்பிடம் போய் “இவர் நம் ஊரில் பிறந்து வளர்ந்தவர், நம் ஊருக்குப் பெருமை சேர்த்தவர், தமிழ்ப் பண்பாட்டில் தமிழ் என்னும் தேரின் வடம் பிடித்து இழுத்தவர், ரத்தம் கக்கிச் செத்தவர், இவருக்கு நம் ஊரில் ஒரு பலகை வைக்க வேண்டும், அல்லது இவருடைய படத்தை நம் ஊர் நூலகத்தில் திறக்க வேண்டும்” என்று சொன்னீர்களென்றால், “அவர் என்ன ஆளு?” என்ற கேள்விதான் முதலில் எழும். அவர் ஜாதி தெரியாமல் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காது. அது ஓர் உண்மையான காரணம், இல்லையா? முன்னோர்கள் மரணிக்கையில் அவர்களுடைய வாழ்க்கையின் செய்தியாக ஒன்றைக் கேட்போம் அல்லவா? அதுபோல், திரு.வி.க மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரிடம், “ஐயா! நம் மொழிக்கு, நம் நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கி.ஆ.பெ. விசுவநாதம் கேட்கிறார். அதற்கு கி.ஆ.பெ.வின் கையைப் பிடித்து, தன்னுடைய முகத்துக்கு அருகில் கொண்டு வந்து, தனது இறுதி மூச்சின் எஞ்சிய ஆற்றலைத் திரட்டி திரு.வி.க சொல்கிறார்: “நாடு இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள், மொழி இருக்கிறது, நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துக்கொள்வீர்கள்”. இதுதான் திரு.வி.க.வுடைய இறுதி வாசகம். “நாம் பார்த்துக்கொண்டோமா?” https://akazhonline.com/?p=11664
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சிறிய மரத்தில் பழுத்த முதல் பழம் ........! 😂
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகள் நீங்கள் சொன்னவை போன்று மாறி, இப்பொழுது ஏறக்குறைய முற்றாகவே மாறிவிட்டன என்று நினைக்கின்றேன். அப்படியே மேலே வந்தால் உடப்பு.............. இன்றைய சனத்தொகையையும், இனப் பரம்பலையும் பார்த்தால், ஒரு ஐம்பது வருடங்களில் இந்திய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கே இப்படியான ஒரு நோக்கத்திற்காக வர வேண்டும் போல.......................
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
அகப்பட்ட ஆள் வேற என்னைப் போலவே இருக்கின்றார்...................🤣. சில மாதங்களின் முன்னர் என்று நினைக்கின்றேன். தமிழ்நாட்டில் ஒருவர் தீ/பூ மிதிக்கும் போது, அப்படியே நெருப்பில் கால் தடுக்கி விழுந்துவிட்டார்............... அவசரமாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.....................
-
சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்!]
சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்!] பிப்ரவரி 01, 2026 ஒரு நாள், ஆறு அகவை, 'கலை'. தன் பாடசாலை நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் பல்லுத் தேவதைப் பற்றி பேசி கொண்டிருந்தார்கள். ஒருவன் கேட்டான், அவங்க என்ன பண்ணுவாங்கடா.. இன்னொருவன் ' உனக்கு அவங்கள பத்தி தெரியாதடா' அவங்கதான் நம்ம பல்லு விழும் போது அதுக்கு பதிலா காசு குடுக்கக் கூடியவங்க.. அதெப்படி , 'கலை' இடை மறித்தான். அந்த பையன் எடுத்து கூறினான், அதாவது இப்போ உனக்கு பல்லு விழுதுன்னு என்று வச்சிப்போம், நீ அதை எடுத்து உன்னோட தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் தேவதை வருவாங்க. அவங்க உன்னோட பல்லை எடுத்துக்கிட்டு உனக்கு காசு கொடுத்திட்டு போய்டுவாங்க. கலை ஆர்வமானான். அந்த காச வச்சி நமக்கு என்ன தேவையோ அந்த பொருட்களை வாங்கிக்கலாம் என்றான் அந்தப் பையன். அதன் பிறகு கலை, அவனது அம்மாவை விடவில்லை. அம்மா எனக்கு எப்போ பல்லு விழும் என்று சொல்லுங்க என தினமும் நச்சரித்தான். அதே சமயத்தில் அவன் வகுப்பு நண்பர்கள் அந்த காசுகளை வைத்து பொருட்களை வாங்கி வந்தனர். ஒருவழியாக முதல் முறை கலைக்கு பல் விழுந்தது. அவன் குஷியில் துள்ளிக் குதித்தான். பிப்ரவரி 28, 2026 - இரவு 11:45 பல்லொன்று விழுந்ததடா - நம் கலைக்கு பக்குவமாய் பையினில் வைத்தானடா! மெத்தைக்கு அடியினில் ஒழித்து வைத்தான் - அங்கே தேவதை வருமெனக் காத்திருந்தான்! அக்கா 'ஜெயா' ஜொலிக்கும் ஜனவரி மகள் தம்பி 'இசை' மார்ச்சில் மலர்ந்த பூ! மே மாதம் பிறந்த அழகன் 'கலை' இன்று தேவதை ஆசிபெறத் தூங்குகிறான்! தாத்தாவும் பேரனும் ஒரே அறையில் - இன்று இருவரும் உறங்கினர் மகிழ்ச்சிக் கடலில்! ஒட்டாவா மண்ணில் அழகிய இரவு - என்றும் ஒப்பற்ற காவியமாய் இனி நிலைத்திருக்குமே! கனடாவின் ஒட்டாவா நகரில் இன்று கடும் குளிர். ஜன்னலுக்கு வெளியே பனித்துளிகள் வெண் சர்க்கரைப் பொடி போலத் தூவிக்கிடந்தன. உள்ளே, மென்மையான போர்வைகளுக்கு நடுவே 'கலை' ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது மேல் வரிசைப் பல் இரண்டு அன்று காலை விழுந்திருந்தது. "தேவதை வருவாள்" என்ற நம்பிக்கையில், அந்தப் பல்லை ஒரு சிறிய பட்டுப் பையில் போட்டு மெத்தைக்கு அடியிலே ஒளித்து வைத்திருந்தான். பக்கத்து கட்டிலில், அத்தியடியிலிருந்து பேரப் பிள்ளைகளைப் பார்க்க வந்திருந்த தாத்தா 'கந்தையா தில்லை' அவர்கள், "யாழ்ப்பாணத்து பனைமரம் போல நிமிர்ந்து நிக்க வேண்டியவன், இந்த 'பல் தேவதை' மேல வைச்சிருக்கும் நம்பிக்கையைப் பாரு" என வியந்தபடி கண்ணயர்ந்தார். சரியாக நள்ளிரவு 12 மணி. ஜன்னல் வழியாக ஒரு மின்னல் போன்ற வெளிச்சம்! ஒரு ஒற்றைக் கொம்புடன் இளஞ்சிவப்பு நிறச் சிறகுகளை அசைத்துக் கொண்டு ஒரு குட்டிக் குதிரை பறந்து வந்தது. அதன் மேல் வண்ண மலர்களைச் சூடிய 'மேப்பிள் இலை' வடிவிலான தேவதை தேவதை ஒன்று அமர்ந்திருந்தது. அதன் பற்களில் இருந்து பளீரிடும் ஒளி வெளிப்பட்டது. அது, அவர்கள் படுத்து இருந்த அறையின் காற்றோட்ட துவாரத்தினூடாக, தன்னை மாயாஜாலத்தால் சிறிதாக்கி உள்ளே நுழைந்தது. கலையின் பல்லுப் பையை எடுக்க அது குனிந்தபோது, தாத்தாவின் 'அத்தியடி ஸ்பெஷல்' குறட்டை சத்தம் (அது ஒரு லாரி ஹார்ன் போல இருந்தது!) தேவதையை அதிர வைத்தது. பயந்துபோன தேவதை நிலைதடுமாறி மந்திரக்கோலைத் தட்ட, அடுத்த நொடி... தாத்தாவும் கலையும் சுருங்கி ஒரு 'ஐஸ் ஹாக்கி பந்து' அளவில் அந்தப் பைக்குள்ளேயே இழுக்கப்பட்டனர்! பனிப்புகை போல அதே துவாரத்தின் வழியாக அவர்கள் விண்வெளிக்கு ஏவப்பட்டனர். அவர்கள் கண்ணைத் திறந்தபோது ஒரு பெரிய மேகக் கூட்டத்தில் நின்றனர். அங்கே சித்திரகுப்தன் ஒரு 'கனடா கூஸ்' ஜாக்கெட் (Canada Goose Jacket) அணிந்து, கையில் ஐபேடுடன் (iPad) நின்று கொண்டிருந்தார். சித்திரகுப்தன்: "நிறுத்துங்க! இது 'பல்லு' வர்ற கோட்டா (Quota). இதுல எதுக்கு ஒரு வெள்ளை வேட்டி கட்டின தாத்தாவும், ஒரு ஒட்டாவா பையனும் வந்திருக்கீங்க? உங்க விசா எங்கே?" என்று அதட்டினார். தாத்தா கந்தையா தில்லை: (கண்ணாடியைத் துடைத்தபடி) "தம்பி சித்திரகுப்தா, நான் விசிட்டர் விசால கனடா வந்தவன். என் பொண்ணு - அதாவது கலை மகனோட அம்மா - பையனைப் பத்திரமா பாத்துக்கச் சொன்னா. அவனோட பல்லுக்கு முறையான ரசீது தராம பல்லை எடுத்து செல்ல விட முடியாது!" என்றார் கடும் கோபத்தில். கலை: "ஆமா சார்! ஜனவரில என் அக்கா ஜெயா பர்த்டே [Birthday] கொண்டாடிட்டா. மார்ச் 13, என் தம்பி இசைக்கு அகவை நாள். மே மாசம் பொறந்த எனக்கு, இந்தத் தேவதை ஆசி கிடைச்சாதான் நான் கீழ போவேன்!" என்றான் பிடிவாதமாக. தேவர்கள் அனைவரும் கலையின் பல்லை ஒரு மைக்ரோஸ்கோப்பில் பார்த்தனர். பிரம்மா: "இந்தப்பல்லு ஏன் இவ்வளவு ஒட்டாவா மேப்பிள் சிரப் (Maple syrup) வாசனை அடிக்குது?" என்று முறைத்துப் பார்த்து கலையைக் கேட்டார். எமதர்மன்: "சார், 'இன்டெக்ரிட்டி' (Integrity) அல்காரிதம் (Algorithm) செக் [check] பண்ணிட்டேன். இந்தப் பையன் கலை ரொம்ப சமத்து. ஜனவரி மாசம் ஜெயா அக்காவை ரொம்ப வம்புக்கு இழுக்கல, தம்பி இசை கூட விளையாட்டுக் சாமான்களைப் பகிர்ந்துக்கிட்டான். அதனால இவனுக்கு 'ஸ்பெஷல் பிளெஸ்ஸிங்' ("Special Blessing) உண்டு!" என்றான். விடியற்காலை 5:30 மணி. மார்ச் 1-ஆம் தேதியின் முதல் சூரிய ஒளி கனடா பாராளுமன்றக் கட்டிடத்தைத் தொடுவதற்கு முன், தேவதை இவர்களை மீண்டும் ஒட்டாவா வீட்டுக்குக் கூட்டி வந்து, ஒரு ரகசிய லேண்டிங் [secret landing] செய்தது. "தாத்தா, சீக்கிரம் இறங்குங்க! அம்மா முழிச்சா நம்மளக் கண்டுபிடிச்சுடுவா!" என்று கலை பதறினான். அவர்கள் கட்டிலில் வந்து விழுந்த அடுத்த நிமிடம், தாத்தாவின் மகள் (கலையின் தாய்) தேநீருடன் உள்ளே நுழைந்தாள். மகள்: "என்னப்பா... இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா முழிச்சிட்டீங்க? உங்க தலை ஏன் 'நெபுலா'வுல ( விண்மீன் படலம் / Nebula) சுத்திட்டு வந்த மாதிரி தலையிருக்கு? ஒட்டாவா குளிர் உங்க மண்டைக்கு ஏறிடுச்சா?" என்று கேட்டாள். தாத்தா கந்தையா தில்லை: (தேநீரைப் பருகியபடி நிதானமாக) "இல்லம்மா... அது வந்து... ஹீட்டர் (Heater) வேலை செய்யுதான்னு செக் பண்ணினேன். கனடா குளிர் மனுஷனை என்னவெல்லாம் செய்யுது பாரு!" எனச் சமாளித்தார். கனடா விடியலில் மார்ச் முதல் நாள் - நம் கலைக்குக் கிடைத்ததே மெத்தைக்குள் பொன்னாள்! அக்கா ஜெயாவும் தம்பி இசையும் - தூக்கத்தில் அறியாரே தாத்தாவின் விந்தைப் பயணம்! மகளிடம் சொல்லாதே மேலோக ரகசியம் - சொன்னால் மனநல மருத்துவமனைக்கே நடக்கும் ஊர்வலம்! கந்தையா தில்லை - தன் புன்னகையால் சமாளித்து மகளிடம் இருந்து மறைத்தே தேநீரைப் பருகினார்! தலையணைக்கு கீழே இரண்டு 'டூனி' (Toonie) - கலை பார்த்துச் சிரித்தான் மார்ச் காலையில்! கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் கலை கையில் காசு துள்ளிக் குதித்தது! [டூனி என்பது கனடாவின் இரண்டு டொலர் நாணயத்தை குறிக்கும்.] தாத்தாவின் ரகசியக் குறிப்பு: பரிசு: மகள் வெளியே சென்றதும் மெத்தைக்கு அடியில் பார்த்தார். பல்லுக்குப் பதில் ஒரு பளபளப்பான கனடிய நாணயம் (Toonie) அங்கே ஜாஸ்மின் (Jasmine) வாசனை அடித்துக்கொண்டிருந்தது! முக்கிய எச்சரிக்கை: மேலோகத்தில் எமதர்மனுடன் 'பல்லு மாற்று விகிதம்' (Exchange rate) பற்றி விவாதித்ததை மட்டும் மகளிடம் சொல்லவே கூடாது! சொன்னால், தாத்தாவுக்கு குளிர் ஏறிடுச்சுன்னு அத்தியடிக்கே பார்சல் பண்ணிடுவா! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2105 [சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்! https://www.facebook.com/groups/978753388866632/posts/34427841220197752/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 139 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 139 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத்தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, பக். 18 இல்: ‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக’ என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச் சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டுவித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.' என்று பதியப்பட்டுள்ளது. ‘திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப்பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச் சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.' என்று மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் 68 இல் கூறுவதையும் கவனிக்க. 'மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் "துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற' எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது. மேலும் மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இன்னும் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. புனல் வாதம் / திருவிளையாடல் பாடல் 3220 இல்: 'ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் அஃது அறிந்து சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத் தொகுவித்துக் காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப்' எனும் அடியால், ஊழ் வலியால் சமணர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் தச்சர்கள் சூல வடிவில் கழுமரங்கள் செய்துகொண்டு வந்து நிறுத்தினர் என்றும் அறிகிறோம். என்றாலும் கழுவேற்றமா அல்லது கழுவேறலா? என்பது ஒரு பிரச்சனை அல்ல. நடந்தது, நடத்தியது முற்றிலும் தவறான செயல் அல்லது எடுத்துக்காட்டு என்பது மட்டும் உண்மை! எனவே, சைவ துறவி திருஞானசம்பந்தமூர்த்தியின் தரப்பில் இது மிகவும் துக்கமான மற்றும் வெட்கப்பட வேண்டிய செயலாகும். ஆதி சங்கரர் [Aadi Sangarar] கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளாவிலிருந்து தனது மதக் கருத்து எண்ணங்களுடன் தமிழகம் வருகிறார். மேலும் அந்தக் காலகட்டத்தில், கி.பி 600 முதல் 700 வரை பௌத்தர்கள் மீது வெறுப்பு இருந்தது. உதாரணமாக சம்பந்த நாயனார், ஈழத்தின் மன்னாரில் உள்ள மாதோட்டத்தின் பாலாவி ஆற்றங்கரையில் அமைந்த திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடும் பொழுது, "புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர்" என ஆலோசனை அல்லது அறிவுரை கூறினார். "புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச் சமண் ஆதர், எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின்! மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர், மாதோட்டத்து அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடைமி(ன்)னே!" எனவே அப்போது பௌத்தர்கள் கூடுதலான எண்ணிக்கையில் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்? புத்தளம் முதல் திருக்கோவில் வரையிலான கடற்கரைப் பகுதியை தமிழர்கள் ஏற்கனவே அக்காலத்தில் ஆக்கிரமித்திருந்தனர் [Tamils were already occupying the coastal area from Puttalam to Thirukovil in the East.]. எனவே, புலம்பெயர்ந்த பௌத்தர்கள் உள்நாட்டிற்குள் ஊடுருவினர். இதனால் பௌத்தம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவில் வந்து இருக்கலாம்? அதுமட்டும் அல்ல, சிங்களவர்களும் தமிழர்களும் கூட, கூடுதலாக பெரும்பாலோர், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களே!. கி.பி 600 க்குப் பிறகு மோதல் வெடிக்கும் வரை, சைவம், பௌத்தம் மற்றும் சமண மதங்கள் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இணைந்து வாழ்ந்தன என்பதும் வரலாறாகும். Part: 139 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" Aadi Sangarar is coming from Kerala with his form of religious concept almost during the same period. There was hatred against the Buddhist too during that period, about 600 to 700 A. D. The Buddhists must have then migrated to Ceylon in numbers. Tamils were already occupying the coastal area from Puttalam to Thirukovil in the East. The migrant Buddhists penetrated inland. The Buddhism thus came to Lanka from Tamil Nadu. Sinhalese and Tamils too came from Tamil Nadu to Lanka. Saivism, Buddhism, and Jainism co-existed in Tamil Nadu for a long time, till the eruption of the conflict after 600 A. D. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 140 தொடரும் / Will follow துளி/DROP: 2106 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 139 https://www.facebook.com/groups/978753388866632/posts/34427897846858756/?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே…. நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்ததேன் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே… ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் ஆண் : காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ… ஆண் : கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ…. ஆண் : மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ ......! --- அவள் செந்தமிழ் தேன் மொழியாள் ---
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
'தனிச்சின்னம் தான்.. உதயசூரியன் வேண்டாம்' : திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்ன? பட மூலாதாரம்,MNM/Facebook கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பத்து தொகுதிகளில் போட்டியிட்டோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் நெருக்கடி இருந்ததால் ஆறு இடங்களைப் பெற்றோம். இந்தமுறை வலிமைக்கேற்ப ஒதுக்க வேண்டும் எனக் கூறிவிட்டோம்" என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. 'தி.மு.க கூட்டணியில் ஒதுக்க உள்ள இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுகின்றனர். இதனைக் கட்சித் தலைமை ஏற்கவில்லை' என, மக்கள் நீதி மய்யம் கூறுகிறது. 'ஆறு தொகுதிகளுக்குக் குறைவாகப் பெற மாட்டோம்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக, த.வா.க அறிவித்துள்ளது. அந்தவகையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறதா? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருமாத காலம் அவகாசம் இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தி.மு.க தலைமை கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'அதே எண்ணிக்கை வேண்டாம்' - மார்க்சிஸ்ட் பட மூலாதாரம்,CPM/Facebook படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- தி.மு.க இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடையாமல் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அதே இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்குவதற்கு தி.மு.க முன்வந்தது. இதனை அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஏற்பதற்கு மறுத்துவிட்டார். "கடந்தமுறை போட்டியிட்டதை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. தி.மு.க தலைவரிடம் பேசிவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளனர்" என செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். "நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சி அல்ல" எனக் கூறிய பெ.சண்முகம், "அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனக் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு இடங்களை ஒதுக்குவதற்கு தி.மு.க தலைமை முன்வராததால் நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளுடன் இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடையாமல் உள்ளது. 'பேரம் பேச வேண்டாம்' - திருமாவளவன் தற்போது வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டு முறை தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டன. முன்னதாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பத்து இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. இதனை முன்னிறுத்தியே அதிக தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டு வருகிறது. இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, "தொகுதி எண்ணிக்கை குறித்து தி.மு.கவிடம் கூறவில்லை. பல கட்சிகள் வந்துள்ளதை உணர்ந்துள்ளோம். அதேநேரம், எங்கள் கட்சியின் வலிமைக்கேற்ப ஒதுக்குமாறு கூறியுள்ளோம்" என்கிறார். "இடங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு தி.மு.க கூறவில்லை" எனக் கூறும் ரவிக்குமார், "பேரம் பேச வேண்டாம் என வி.சி.க தலைவர் கூறிவிட்டார். முதலமைச்சரிடம் பேசிவிட்டு தொடர்பு கொள்ள உள்ளதாக தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூறியுள்ளனர்" எனத் தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு வி.சி.க தரப்பில் நெருக்கடியைக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் கொடுத்து முடித்துவிட்டு எங்களுக்குக் கொடுக்குமாறு கூறினோம். எங்கள் வளர்ச்சியை அவர்களும் உணர்ந்துள்ளனர்" என அவர் தெரிவித்தார். "அதேநேரம், தி.மு.க கூட்டணியில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்க முடியாது. மக்கள் நீதிமய்யம், தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்பட பல்வேறு கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது" என்கிறார், ரவிக்குமார் எம்.பி. இதே தகவலை சனிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், "கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிடக் கூடாது. பெரியளவில் தொகுதிகளை பெற முடியாத சூழலில் உள்ளோம்" எனக் கூறினார். "கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்" எனக் கூறிய திருமாவளவன், "கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ அதற்கு மேல் கூட்டணியின் நலன்கள் முக்கியமானவை" என்கிறார். இன்றைய அரசியல் சூழல்களை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். வெளியேறும் வேல்முருகன்? பட மூலாதாரம்,Velmurugan.T/Facebook தி.மு.க கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்தமுறை கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் முடிவில் உள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், "பத்து முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தி.மு.க தலைமையிடம் மனு கொடுத்தேன். அதை நிறைவேற்றுவது குறித்து எந்தப் பதிலும் வரவில்லை. கூடுதல் இடங்களையும் தரவில்லை" எனக் கூறினார். கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக வேல்முருகன் குறிப்பிட்டார். முன்னதாக, வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீடு, சுங்கச்சாவடிகளை அகற்றுதல், மாநில மக்களுக்கே 90 சதவீத வேலைவாய்ப்பு உள்பட பத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேல்முருகன் மனு கொடுத்திருந்தார். தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஓரிரு நாள்களில் வேல்முருகன் அறிவிக்க உள்ளதாக அக்கட்சித் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. 'நின்றால் டார்ச்லைட்.. இல்லாவிட்டால்' பட மூலாதாரம்,MNM/Facebook கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. தேர்தலில் அக்கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்படவில்லையென்றாலும் ராஜ்யசபா இடத்தை ஒதுக்க உள்ளதாக தி.மு.க அறிவித்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்க உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இவ்விரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க வலியுறுத்துவதாகத் தகவல் வெளியானது. வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விவாதித்துள்ளார். "தி.மு.க கூட்டணியில் கோவை தெற்கு, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுகின்றனர். இதைப் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்கிறார், ம.நீ.மவின் மாநில நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அவ்வாறு போட்டியிட விரும்பினால் ம.நீ.ம.வில் இருந்து விலகி தி.மு.க உறுப்பினராக வேண்டும். அப்போது தான் போட்டியிட முடியும்" எனக் கூறுகிறார். "இதனால் கட்சியின் அடையாளம் தொலைந்துவிடும்" எனக் கூறிய அவர், "கடைசியில் ஒரு தொகுதியிலாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தி.மு.க தரப்பில் கூறுகின்றனர்" என அவர் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசும்போது, "இந்த தேர்தலில் மதவாத சக்திக்கு இடம் கொடுக்கக் கூடாது. டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம் அல்லது தேர்தலில் நிற்காமல் இருப்போம்" எனப் பேசியதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கமல் பேசும்போது "இந்தக் கூட்டணி நாட்டுக்குத் தேவை. அதனால் தான் கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்" எனப் பதில் அளித்தார். சின்னம் தொடர்பான பிரச்னை குறித்து, மக்கள் நீதிமய்யத்தின் செய்தி தொடர்பு மாநில செயலாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, "கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தமா? பட மூலாதாரம்,Stalin/Facebook மக்கள் நீதி மய்யம் வரிசையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சிறிய கட்சிகளை தி.மு.க தலைமை வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட உள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகளை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. இவற்றில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இதேபோன்ற பிரச்னை உள்ளதா?" என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் எங்கள் சின்னத்தில் போட்டியிடுவோம்" எனக் கூறிய அவர், "தே.மு.தி.கவுக்கு முரசு சின்னம் பறிபோய்விட்டது. அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா எனத் தெரியவில்லை" என்கிறார். தே.மு.தி.க நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பு இன்னமும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதியிடம் பிபிசி தமிழ் பேசியது. "நாங்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த விவரங்களை இன்னும் பேசவில்லை. இரண்டொரு நாளில் இதுதொடர்பாக பேசுவோம்" என்று மட்டும் பதில் அளித்தார். 'அடையாளம் போய்விடும்... ஆனால்?' ஆனால், உதயசூரியன் சின்னத்தில் சிறிய கட்சிகளை போட்டியிட வைப்பதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார், மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தலுக்குப் பிறகான சூழல்களை மாற்றியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க தரப்பில் ஈடுபட்டால் அதனைத் தவிர்க்கவே அதிக இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது" என்கிறார். ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளைவிட கூடுதல் தொகுதிகளைக் கேட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். "இதனால் சிறிய கட்சிகளுக்கான அடையாளம் போய்விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" எனக் கூறும் ஜென்ராம், "தேர்தல் களத்தில் உதயசூரியன், இரட்டை இலை ஆகிய சின்னங்கள் பிரபலமாக உள்ளன. அடுத்ததாக, கை சின்னமும் தாமரை சின்னமும் உள்ளது" என்கிறார். மாம்பழம், பானை சின்னம் போன்றவை சில மாவட்டங்களில் பிரபலமாக உள்ளதாகக் கூறும் அவர், "இவற்றைத் தாண்டி சிறிய கட்சிகளின் புதிய சின்னங்களுக்கு வாய்ப்பளிப்பதில் சிக்கல்கள் உள்ளன" எனக் கூறுகிறார். தேர்தல் முடிவில் பெரும்பான்மை கிடைக்காமல் போவதைத் தவிர்க்கும் வகையில் இப்படியொரு நடைமுறையை தி.மு.க மேற்கொள்வதாகக் கூறும் ஜென்ராம், தேர்தலில் போட்டியிடுவது என்று இல்லாமல் உறுதியாக வெற்றி பெறுவது என்ற மனநிலையில் தி.முக. உள்ளது" என்கிறார். 'அழுத்தங்கள் உள்ளன' - ஆர்.எஸ்.பாரதி தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. அதற்கேற்ற வகையில் அழுத்தங்களும் உள்ளன" எனக் கூறினார். ஒரு சில கட்சிகளுக்கு மட்டும் இடங்களை ஒதுக்க வேண்டியுள்ளதாகக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, "அதுவும் விரைவில் முடிந்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசி முடிவெடுக்கப்படும். வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறித்து நான் பதில் அளிக்க முடியாது" என்கிறார். "வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டுவிடும். தொகுதிப் பங்கீட்டை நாங்கள் மட்டுமே தொடங்கியுள்ளோம். அதற்கான பணிகளை எதிர்க்கட்சிகள் தொடங்கவில்லை. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை" எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy01gd3kp4ko
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செந்தமிழ் தேன் மொழியாள் .......! 😍
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
பூ மிதி அண்ணை!
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
🤣................... 'அம்மா திரௌபதி அம்மனே, அவரைக் கூட்டி வந்து தீ மிதிக்க வைக்கின்றேன்..............' என்று ஒரு நேர்த்தி வைக்கவில்லையே என்று சந்தோசப்பட வேண்டும், அண்ணா........... நாங்கள் அங்கு போவதற்கு சில நாட்கள் முன்னரேயே தீ மிதிக்கும் விழா நடந்திருந்தது..................🤣.
-
ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்
‘பேர்ல் ஹார்பர்’ குறிப்பு : ஜப்பான் பிரதமரை சங்கடப்படுத்திய ட்ரம்ப் 21 Mar, 2026 | 12:10 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பேர்ல் ஹார்பர் தாக்குதல் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டது, ஜப்பான் பிரதமரை சங்கடமான நிலைக்கு தள்ளியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு, முக்கிய கனிம வளங்கள் மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பு நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பின் ஆரம்பத்தில், ஜப்பான் பிரதமரின் ஆங்கிலத் திறனைப் பாராட்டிய டிரம்ப், மொழிபெயர்ப்பின்றி உரையாடுவது குறித்து நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார். “நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை என்பது மிகவும் நன்றாக உள்ளது,” என டிரம்ப் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, “அடுத்த முறை உங்கள் மொழியில் பேச முயற்சிப்பேன்” என்ற விளையாட்டுத்தனமான குறிப்பும் இடம்பெற்றது. இந்த கட்டத்தில், சந்திப்பு இயல்பான மற்றும் நட்பான சூழலில் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்பாக நட்பு நாடுகளுக்கு ஏன் முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, டிரம்ப் உரையின் திசையை மாற்றினார். “நாங்கள் யாருக்கும் முன்னதாகச் சொல்லவில்லை, ஏனெனில் எங்களுக்கு திடீர் தாக்குதல் தேவைப்பட்டது. திடீர் தாக்குதல் பற்றி ஜப்பானை விட வேறு யாருக்குத் தெரியும்?” எனக் கூறிய அவர், பின்னர் ஜப்பான் பிரதமரை நோக்கி “நீங்கள் ஏன் பேர்ல் ஹார்பர் குறித்து எங்களிடம் சொல்லவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். இந்தக் கருத்து, அங்கு இருந்தவர்களிடையே சங்கடமான அமைதியை ஏற்படுத்தியதுடன், ஜப்பான் பிரதமர் அதற்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. வரலாற்று உணர்வுகள் தொடர்பான விஷயங்களில் தலைவர்கள் பயன்படுத்தும் மொழி மற்றும் அணுகுமுறை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 1941 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி, ஜப்பான் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள பேர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தை திடீரெனத் தாக்கியது. இந்த தாக்குதலில் 2,400-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நேரடியாக இணைந்ததுடன், 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டதன் பின்னர் ஜப்பான் சரணடைந்தது. இந்நிலையில், தற்போதைய உலக அரசியல் பதற்றங்களின் மத்தியில், இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவது சர்வதேச உறவுகளில் நுணுக்கமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இந்த சம்பவம் அமெரிக்கா – ஜப்பான் உறவுகளின் நுட்பமான தன்மையையும், உலக அரசியல் மேடையில் உரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241551
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உண்மை தான் சகோ. சுயநலத்துடன் தன் தன் வேலைகளை செய்தவர்கள் கேள்வி கேட்க தம்மால் முடிந்ததற்கும் மேலாக செய்து நின்றவர்கள் அடிக்கடி தீக்குளித்து நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருப்பதும் போற்றுதற்குரியது தான். கருத்து களத்தில் உங்கள் கருத்தை ஏற்க வைக்க நீங்கள் இந்த ஆயுதத்தை கையில் எடுப்பது புதிதல்ல. தொடருங்கள்.
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
மிகவும் சிறப்பான முயற்சி ........ கவிதையும் நன்றாக இருக்கு...... அதை நீங்கள் திருத்திய 2 வது கவிதை சிறப்பு.....! 👍 நான் "வீதியோரம்" கதைக்கு AI யால் படங்கள் போட முயற்சி செய்தேன். அது நன்றாக வந்தது. ஆனால் பலமுறை முயற்சித்தும் யாழில் ஓட்ட முடியவில்லை....... பின்பு தான் கூகுள் படங்களை எடுத்து ஓட்டினேன் .......!
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
எரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு – கியூ. ஆர். முறையில் புதிய அளவுகள் அறிவிப்பு 21 Mar, 2026 | 08:34 PM நாட்டில் அமுலில் உள்ள கியூ. ஆர். முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த புதிய மாற்றங்கள் இன்று சனிக்கிழமை (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புதிய எரிபொருள் வழங்கல் அளவுகள்: * கார்கள்: 25 லீற்றர் * முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ): 20 லீற்றர் * வேன்கள்: 50 லீற்றர் * லொறிகள்: 200 லீற்றர் (மாற்றமில்லை) * மோட்டார் சைக்கிள்கள்: 08 லீற்றர் * பஸ்கள்: 100 லீற்றர் * விவசாய வாகனங்கள்: 40 லீற்றர் * Quadricycle வாகனங்கள்: 08 லீற்றர் இந்த அதிகரிப்பு நடவடிக்கை மூலம் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, கியூ. ஆர். முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும், அதன்மூலம் ஒழுங்குமுறைப்பட்ட விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் எரிபொருள் விநியோக நிலையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப எதிர்காலத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். கள்ளிக்காட்டு இதிகாசமும் மற்றும் இவரின் ஒரு சிறுகதை தொகுப்பும் இருக்கின்றது. இரண்டுமே மிகச் சாதாரணமானவை. அதிலும் அந்த சிறுகதை தொகுப்பு..................... கடவுளே....... யாழ் களத்தில் கள உறவுகள் எழுதும் சிறுகதைகள் பலவுமே அதைவிட மேலானவை. கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா (கி. ராஜநாராயணன் அவர்கள்). வைரமுத்து அவரை நெருங்கவே முடியாது. பாவிகள்...... தங்கள் செல்வாக்கால் அவருக்கு கிடைக்க வேண்டியதை மறுத்துவிட்டார்கள். இதுவே தான் அசோகமித்திரனுக்கும் நடந்தது. ஏழைகளின் சொற்கள், அவை எவ்வளவு மேம்பட்டது என்றாலும், அம்பலம் ஏறாத, ஏற விடாத அற்ப மனிதர்கள் நிறைந்த தேசம் இந்தியாவும், தமிழ் நாடும். இப்படி நடந்து கொண்டிருக்க, தன்னை ஒரு இலக்கியவாதி, தமிழ் செழிக்க உழைக்கும் ஒரு தலைவன் என்றிருந்த கருணாநிதி கண்டும் காணாது இருந்தார். இதனால் அவரும் இந்த இழிநிலைக்கு ஒரு பிரதான காரணம். தன்னை ஒரு இலக்கியவாதியாக முன்னிறுத்துவதிலேயே அவர் முனைப்பாக இருந்தார். ஆனால் ஒரு சிறு குளம் போல தேங்கி விட்ட அவருக்கு ஜீவநதிகளையும், பரந்த கடல்களையும் பார்க்க துணிவு வரவில்லை. கருணாநிதி அவர்களின் எந்த ஆக்கம் இன்று பொருட்படுத்தப்படுகின்றது, எது ஒரு இலக்கிய வழிகாட்டியாக சொல்லப்படுகின்றது..................... இதுவே தான் தகுதிக்கு மேல் விளம்பரப்படுத்தப்படும் படைப்பாளிகளுக்கும், படைப்புகளுக்கும் காலம் கொடுக்கும் தண்டனை.................
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல் நடன்ஸ் அணுசக்தி நிலையம் |கோப்புப் படம் மோகன் கணபதி Updated on: 21 Mar 2026, 4:54 pm 2 min read தெஹ்ரான்: ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்து தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்த தாக்குதல் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கதிரியக்கக் கசிவு குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் எதிரிகளுக்கு தலைசுற்ற வகை்கும் அடியை கொடுத்ததாக ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கூறிய நிலையில், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புதிய அலையை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மிதும் ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இது ஈரானின் 70-வது தொடர் தாக்குதல் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அச்சுறுத்தல்: ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பில் இருந்து மேலும் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் ராஸ் அல் கைமா துறைமுக நகரை நொறுக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. பஹ்ரைன் மீது தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்பட்ட மேலும் இரண்டு ஏவுகணைகளை பஹ்ரைனின் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளன. பிப்.28 முதல் இதுவரை மொத்தம் 143 ஏவுகணைகளையும், 242 ஆளில்லா விமானங்களையும் அழித்துள்ளதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா: தங்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏவப்பட்ட அதிக அளவிலான ஆளில்லா விமானத் தாக்குதல்களை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மூன்று மணி நேரத்துக்குள் 38 ஆளில்லா விமானங்களைக் கொண்ட ஒரு வலுவான தாக்குதல் உட்பட 47 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபிய படைகள் தெரிவித்துள்ளன. குவைத் ஆலை மீது தாக்குதல்: குவைத்தின் மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், நாள் ஒன்றுக்கு சுமார் 7,30,000 பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கெண்ட மிகப் பெரிய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் போர் இன்று 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த போர் காரணமாக ஈரானில் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 204 குழந்தைகள் உட்பட 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல்
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
எதிரிகள் நினைத்ததை விட அதிக தூரம் பாயும் ஈரானிய ஏவுகணைகள்! Mar 21, 2026 - 07:30 PM சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின் அரை-அரசு செய்தி நிறுவனமான 'மெஹர்' இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளது. "இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்குதல்... ஈரானிய ஏவுகணைகளின் எல்லை எதிரி முன்னதாகக் கணித்ததை விட அதிகமானது என்பதை இது குறிக்கிறது" என்று அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாக டியாகோ கார்சியா தளம் கருதப்படுகிறது. இந்தத் தளத்தின் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், எனினும் இதனால் தமது தளத்திற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்காவினால் 'ஐரிஸ் டெனா' (Iris Dena) போர்க்கப்பல் மீது டார்பிடோ தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல், இந்தத் தீவிலிருந்தே வந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn0e3zp2000s356pvato46ti
-
‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு
‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு ‘அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க தயார்’ ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி மயிலோன் Updated on: 21 Mar 2026, 4:32 pm 2 min read தெஹ்ரான்: “நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார். நவ்ரூஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று வெளியிட்ட தனது செய்தியில், “இந்தப் பகுதியில் அமைதியின்மையை நாங்கள் விரும்பவில்லை என்பதை உலகுக்கு அறிவிக்கிறோம். எந்தவொரு நாடும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் குவித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, தங்கள் எல்லைகள் தாக்கப்படுமோ, இல்லையோ என்று எப்போதும் அச்சத்துடன் காத்திருக்கும் நிலையை நாங்கள் விரும்பவில்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது குறித்து நாங்கள் எந்த வகையிலும் சிந்திக்கவில்லை. இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை நாங்கள் துளியும் விரும்பவில்லை. இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கைகோத்துச் செயல்படுவதன் மூலம் நாமே தீர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும். இந்தப் பிராந்திய நாடுகளுக்கான செய்தி இது: இந்தப் பகுதியில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கு ஈரானே காரணம் என்ற ஒரு கதையை உங்கள் சொந்த மக்களிடம் பரப்ப ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்தப் பகுதியில் நிலவும் அமைதியின்மை, உறுதியற்ற தன்மை, இனப்படுகொலைச் செயல்கள், பயங்கரவாதம் மற்றும் நாசவேலைகளுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்பதை நீங்கள் உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். முதலில், நமது நாட்டின் உன்னத மக்களுக்கு, நமது உன்னத தலைவரின் வீரமரணத்துக்காகவும், இந்த தேசத்தின் அர்ப்பணிப்புள்ள சேவகர்களுக்காகவும் எனது இரங்கலைத் தெரிவிப்பது அவசியமாகக் கருதுகிறேன். நாங்கள் அண்டை முஸ்லிம் நாடுகளுடன் மோதலை நாடுவதில்லை. நாங்கள் இஸ்லாமிய நாடுகளுடன் போரைத் விரும்பவில்லை; அவர்கள் எங்கள் சகோதரர்கள். நமக்குள் உருவாகியுள்ள பிளவுகள், முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் ஒரு துரோக எதிரியின் செயல். நாம் அனைத்து மனக்கசப்புகளையும், வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து பாடுபட வேண்டும். ஈரானைச் சூழ்ந்துள்ள எங்கள் அன்பான அண்டை நாடுகளே, நீங்கள் எங்கள் சகோதரர்கள். நமது உறவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு தவறான புரிதல்களுக்கும் அல்லது பாதிப்புகளுக்கும், இந்த வேறுபாடுகளை நீக்க இறைவன் உதவ வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அன்பானவர்களே, உங்களுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளிடையே ஓர் இஸ்லாமியப் பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். அது பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். பிராந்தியத்தில் வெளிநாட்டு தலையீடு தேவையில்லை. நம் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உறவுகளை ஒருங்கிணைக்க, நாம் ஒன்றிணைந்து 'மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை' ஒன்றை உருவாக்கலாம். ஒருவருக்கொருவர் சண்டையிட நமக்கு உரிமை இல்லை. எந்தவொரு காரணத்தைக் கொண்டும், நமது எதிரிகள் நமக்காக அமைத்துள்ள கண்ணிகளில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது" என்று அவர் கூறினார். ‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு
-
இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
அத தெரண நேற்று வந்த தகவல்களையே வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி அப்படியே போட்டுவிட்டு, புதிய தகவல் வெளியானதாக செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. இலங்ககை தமிழ் / முஸ்லிம் ஊடகங்கள் எல்லாம், பொலிஸார் தரும் அறிக்கைகளையே செய்திகளாக தருபவை. கொஞ்சம் கூட நிருபர்களை சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைத்தோ, ஆராய்ந்தோ செய்திகளை வெளியிடுபவை அல்ல. கடும் சோம்பேறிக் கூட்டங்கள் இவர்கள். இவர்களை விட சிங்கள ஊடகவியலாளர்கள் பல மடங்கு மேல்.
-
ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்!
ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்! Published By: Digital Desk 1 21 Mar, 2026 | 02:37 PM நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள், கொழும்பை மையமாகக் கொண்டே செயற்படுவது நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/241567