stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Today
-
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
சிறுநீர் கழித்தபின் ஆறுதலாக நின்று 4-5தரம் ஆட்டிவிட்டால் போச்சு😂
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்
யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்! யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27 ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். நிம்மதியாக இருந்து கல்வி கற்பதற்கே ஒரு சீரான வீடு இல்லாத நிலையிலும் குறித்த மாணவி சாதித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnfvqn920000356pwrdjudu4
-
777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த ஈழத்துப் பெண்!
777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்! 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (02) இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார். இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னஸில் இடம் பிடித்திருந்தார். குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இன்று பதிவு செய்தார். கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார். தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார். குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை ஈழத்தில் நிகழ்த்தும் நோக்குடன் நேற்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார். முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகழ்வும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnh0azbl0001356p7v76gqav
-
இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா?
டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmngxywp00000356pohbpbtd6
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம் 2 ஏப்ரல் 2026, 00:49 GMT Reuters நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது. இந்திய நேரப்படி, வியாழன் அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது. இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது. ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். NASA நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் பத்திரிகையாளர் சந்திப்பை தொடங்கி, திட்டத்தின் செயல்பாட்டு நிலை குறித்து தகவல் வழங்கினார். முன்னதாக ஏற்பட்ட தொடர்பு சிக்கலை அவர் சுருக்கமாக குறிப்பிட்டார். தரையில் இருந்த குழுவினர் விண்கலத்தில் உள்ள குழுவினரை கேட்க முடியவில்லை. இந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என்றும், குழுவினர் "பாதுகாப்பாகவும், நிலையாகவும், உற்சாகமாகவும் உள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் பேசினார். "54 ஆண்டுகளாக இருந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு, நாசா மீண்டும் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது," என்று அவர் கூறினார். "இந்த திட்டம் குழுவினருக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் சொந்தமானது," என்று அவர் நாசா பணியாளர்களிடம் தெரிவித்தார். குழு முன்நிலையில் உள்ள சவால்களை அறிந்துள்ளது என்றும், திட்டம் முடிந்து விண்வெளி வீரர்கள் திரும்பிய பின்னரே கொண்டாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். Reuters அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படும் தருணம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக, பிபிசியின் அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே குறிப்பிட்டார். ராக்கெட்டின் கீழ் தீப்பொறிகள் பீறிட்டு, பெரும் முழக்கத்துடன் அது நீல வானில் உயர்ந்தது. அதன் பின்னால் புகை தடம் தென்பட்டது. இந்த காட்சியை நேரில் கண்ட மக்கள் உற்சாகக் குரலில் ஆரவாரம் செய்தனர். அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே, "இது பார்க்கவும் கேட்கவும் மட்டுமல்ல, அதன் சக்தியை உடலிலேயே உணர முடிகிறது" என்று கூறினார். நாசா இதுவரை உருவாக்கியதிலேயே மிக சக்திவாய்ந்த ராக்கெட் இதுவாகும்; விண்வெளி வீரர்களை சுமார் 400,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சந்திரனை நோக்கி அனுப்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. Getty Images புறப்பட்ட சில நிமிடங்களில், மொத்த உந்து விசையில் சுமார் 80 சதவிகிதத்தை வழங்கும் இரு துணை ராக்கெட்டுகள் தங்களது பணியை நிறைவேற்றி பிரிந்தன. அவை அட்லாண்டிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. புறப்படுவதற்கு முன் லாஞ்ச் அபார்ட் சிஸ்டம் (Launch Abort System) தொடர்பான சிக்கல் ஒன்று எழுந்தது. அவசரநிலையில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் இந்த அமைப்பு முக்கியமானதாகும். எனினும், பொறியாளர்கள் அந்த பிரச்னையை விரைவாக சரிசெய்தனர். இறுதியாக, "ஆர்டெமிஸ் II, நீங்கள் ஏவுதலுக்குத் தயாராக உள்ளீர்கள்" என்று குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன், "நாங்கள் முழு மனிதகுலத்துக்காகவும் செல்கிறோம்" என்று பதிலளித்தார். Reuters 80 சதவிகித உந்துவிசையை வழங்கும் அந்த இரண்டு திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்களும், விண்கலனை மணிக்கு 10,000 மைல்களுக்கும் அதிகமான வேகத்துக்கு எடுத்துச் செல்லும் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தன. கென்னடி மையத்திலிருந்து தகவல்களைத் தரும் அறிவியல் செய்தியாளர் பல்லப் கோஷ், "கென்னடி விண்வெளி மையத்தில் பெரும் உற்சாகம் நிலவியது. பல ஆண்டுகளாக காத்திருந்த இந்த தருணத்தை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்" என்று தெரிவித்தார். இருந்தாலும், பயணம் முழுமையாக நிறைவடையும் வரை இன்னும் பணிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் பூமியின் மேல் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது அரிய காட்சிகளை கண்டனர். அறிவியல் செய்தியாளர் எஸ்மே ஸ்டல்லார்ட், கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன் "அருமையான காட்சி... நமக்கு ஒரு அற்புதமான நிலவு உதயத்தை பார்க்க முடிந்தது." என்று கூறியதாக தெரிவித்தார். விண்கலத்திலிருந்து பூமியின் நீல நிறம் தொலைவில் தென்பட்டது. இந்த பயணம், மனிதர்களுக்கு மிகக் குறைவானோர் மட்டுமே அனுபவித்துள்ள விண்வெளி காட்சிகளை காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில், சந்திரனை நோக்கிய மனித பயணங்களை மீண்டும் தொடங்கும் நாசாவின் முக்கியமான முன்னேற்றமாகவும் இது பார்க்கப்படுகிறது. NASA ஆர்டெமிஸ் 2 விண்கலனிலிருந்து பூமியின் காட்சி ஏவுதலுக்கு முன் நடைபெற்ற சோதனைகளில் termination system எனப்படும் அவசர அழிப்பு அமைப்பு தொடர்பாக ஒரு சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இது ராக்கெட், பாதையிலிருந்து விலகினால், அது பூமியில் யாருக்கும் சேதம் ஏற்படாமல் இருக்க, வானில் இருந்தபடியே அதை அழிக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். சிறிது நேரத்திலேயே மற்றொரு பிரச்னை கண்டறியப்பட்டது. விண்வெளி வீரர்களை அவசரநிலையில் பாதுகாப்பாக ராக்கெட்டிலிருந்து பிரித்தெடுக்கும் Launch Abort System-இல் உள்ள ஒரு பேட்டரியில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கவுண்டவுனுக்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வை கண்டு ரசித்தனர். Reuters ஆர்டெமிஸின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன? ரெபெக்கா மோரெல், அறிவியில் ஆசிரியர் ஆர்டெமிஸ் 1 திட்டம் 2022-இல் நிகழ்ந்தது. அதில் நாசாவின் பிரமாண்ட ராக்கெட்டும் ஓரியன் விண்கலமும் முதல்முறையான நிலவுக்கு அருகே 25 நாள் பயணத்தில் சென்றது. ஆனால் அதில் மனிதர்கள் இடம்பெறவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர். நாசாவின் ஸ்பேஸ் லான்ச் திட்டம் ஓரியன் விண்கலத்தில் பயணிக்கும் முதல் குழுவாக இவர்கள் உள்ளனர். இவர்களின் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். இந்தச் சூழலில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தை நாசா முழுவதும் மாற்றியமைத்துள்ளது. 2028-இல் திட்டமிடப்பட்டிருந்த ஆர்டெமிஸ் 3 திட்டத்தின்படி நிலவின் நிலப்பரப்பில் விண்வெளி வீரர்கள் தரை இறங்குவதாக இருந்தது. தற்போது அந்தக் குழு 2027-இல் தாழ் விண்வெளி பாதைக்குச் சென்று நிலவில் தரையிறங்குவது பரிசோதிக்கப்பட உள்ளது. Getty Images அதனைத் தொடர்ந்து, ஆர்டெமிஸ் 4 மற்றும் 5 நிலவில் தரையிறங்கும் திட்டமாக உள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் 2028-இல் நிகழ்த்த நாசா திட்டமிட்டுள்ளது. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனங்களில் நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர்களை உருவாக்கி வருகின்றன. இதில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தில் தரையிறங்கும் பரிசோதனைக்கும் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கும் எந்த லேண்டர்கள் பயன்படுத்தப்படும் என்பதில் தெளிவில்லை. நிலவில் ஒரு நிலையம் கட்டுவது நாசாவின் தொலைநோக்கு திட்டமாக உள்ளது. ஆனால் நிலவைச் சுற்றி வரும் கேட் வே என்கிற விண்வெளி நிலையத்தை கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவுக்குத் திரும்ப 50 ஆண்டுகளுக்கும் மேலானது ஏன்? Getty Images நிலவில் தரையிறங்கும் நாசாவின் அபோல்லோ திட்டம் 1972-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. செலவினங்கள் அதிகரித்து, முக்கியத்துவம் மாறிவிட்டது. எனவே தான் செலவு குறைவான தாழ் விண்வெளி பாதையின்மீது கவனம் திரும்பியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஸ்கை லாப் தொடங்கி சர்வதேச விண்வெளி நிலைய திட்டம் வரை இதன் மீது தான் நாசாவின் கவனம் உள்ளது. 2005-ஆம் ஆண்டு கான்ஸ்டலேஷன் என்கிற திட்டத்தின் மூலம் நிலவு பற்றிய ஆராய்ச்சியை நாசா மீண்டும் தொடங்கியது. ஆனால், காலதாமதம் மற்றும் அதிகரித்த செலவு போன்ற காரணங்களால் 201-இல் இந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கான்ஸ்டலேஷன் திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமான ஓரியன் விண்கலம் அந்த ராக்கெட்டின் பாகங்கள் ஆர்டெமிஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டன. இந்த திட்டம் 2017-இல் தொடங்கியது. 2024-இல் நிலவில் தரையிறங்குவது திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த தாமதங்களால் 2028-இல் நிலவில் தரையிறங்க திட்டமிடுவதாக நாசா தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9wqg2wx489o
-
இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா?
இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா? Reuters தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் இருப்பதாக டிரம்ப் கூறினார். வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்கா இரான் மீது குண்டுவீசித் தாக்கி, அந்நாட்டை மீண்டும் 'கற்காலத்திற்கே' தள்ளிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வாரத்தின் தொடக்கத்திலும் டிரம்ப் இரான் மீது இதேபோன்றதொரு மிரட்டலை விடுத்திருந்தார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலையில் வெள்ளை மாளிகையில் இரான் போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் விமானப்படை பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்" என்று கூறினார். இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமானது என்றும் டிரம்ப் கூறினார். தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், "அவர்கள் (இரான்) மீது அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நாங்கள் ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்கவுள்ளோம். அவர்களை மீண்டும் கற்காலத்திற்கே தள்ளிவிடுவோம்; அதுதான் அவர்களுக்குரிய இடமும் கூட," என்று கூறினார். டிரம்பின் உரைக்குப் பிறகு உடனடியாக எண்ணெய் விலைகள் உயர்ந்தன மற்றும் ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. "இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எங்களது பிற மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார். டிரம்பின் கூற்றுப்படி, எந்தத் தூண்டுதலும் இன்றி இரான் இந்த நாடுகளைத் தாக்கியது, இது அந்தப் பிராந்தியத்துக்கு இரான் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்புக்கு "எபிக் ஃபியூரி" (அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை) ஏன் அவசியம் என்பதை விளக்குவதற்காக இந்த உரையை வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். இரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா "எபிக் ஃபியூரி" என்று பெயரிட்டுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில், இரான் அல்லது அதன் ஆதரவு குழுக்கள் ஏராளமான பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார். இரானிய ஆட்சியை "கொலைகார ஆட்சி" என்று டிரம்ப் விவரித்தார். இரானில் சமீபத்தில் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதையும், அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய தலைவர்கள் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க முடியாது என்று கூறிய டிரம்ப், "அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்றார். இந்தப் போர் ஒரு முதலீடு அமெரிக்கா ஒரு தோற்கடிக்க முடியாத ராணுவ சக்தி என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தப் போரை அமெரிக்காவின் எதிர்கால சந்ததியினருக்கான ஒரு "முதலீடு" என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் போர்களின் கால அளவைக் குறிப்பிட்ட அவர், அவை பல ஆண்டுகள் நீடித்தன என்றும், ஆனால் இந்த மோதல் இதுவரை 32 நாட்களாக மட்டுமே நடந்து வருவதாகவும் கூறினார். இரானிய ஆக்கிரமிப்பு மற்றும் "அணுசக்தி மிரட்டல்" ஆகியவற்றால் அமெரிக்க குடிமக்களுக்கு இனி ஆபத்து இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்கா இப்போது முன்னெப்போதையும் விட பாதுகாப்பாகவும், வலிமையாகவும், செழிப்பாகவும் இருக்கும். எண்ணெய் விலை உயர்வு பிபிசி வணிகச் செய்தியாளர் பீட்டர் ஹோஸ்கின்ஸின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் நீரிணை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து டிரம்பின் உரை சர்வதேச எண்ணெய் சந்தைக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. அதிபர் பேசத் தொடங்குவதற்கு முன்பு, ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் சுமார் 100 டாலராக இருந்தது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன, ஆனால் இப்போது விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 4% உயர்ந்து 105.38 டாலரை எட்டியுள்ளது. உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20% பொதுவாக இந்த குறுகிய கடல் பாதை வழியாகச் செல்வதால், ஹோர்மூஸ் நீரிணை உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து இந்த வழித்தடம் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் கப்பல்களைத் தாக்குவோம் என்று இரான் அச்சுறுத்தியிருந்தது. டிரம்பின் உரைக்குப் பிறகு, முன்னதாக ஏற்றம் கண்டிருந்த ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. ஜப்பானின் நிக்கி சுமார் 1.5% சரிந்துள்ளது, அதே சமயம் தென் கொரியாவின் கோஸ்பி 2.6% சரிந்துள்ளது மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1% சரிவுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. இரான் போர் முடிவுக்கு வருவதற்கான எந்தவொரு தெளிவான அறிகுறியையும் டிரம்பின் உரை வழங்காததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். பிப்ரவரி மாத இறுதியில் இரான் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சில நேரங்களில் கடும் உயர்வுக்கு வழிவகுத்தது, அதே சமயம் போர் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் பங்குகளை பெரும் விற்பனை சரிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளன. இந்த மோதலின் தாக்கத்தால் ஆசியா குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. ஏனெனில் இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற இப்பிராந்தியத்தின் பல முக்கிய நாடுகள் எரிசக்தி விநியோகத்துக்காக மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளன. எனவே, போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது எண்ணெய் விநியோகத் தடைகள் சந்தைகளில் நேரடியாக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 'டிரம்பின் திட்டத்தில் எதுவும் தெளிவாக இல்லை' முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் மூத்த ஆலோசகராக இருந்த மெலிசா டூஃபெனியன் பிபிசியிடம் கூறுகையில், டிரம்பின் உரைக்குப் பிறகு அமெரிக்க மக்கள் இரான் போர் குறித்து இன்னும் அதிக குழப்பமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். "இன்று அந்த உரையைப் பார்க்கும் எந்தவொரு அமெரிக்கரும் ஒரு தெளிவான திட்டம் இருக்கிறது என்றோ, ஒரு தெளிவான காலக்கெடு இருக்கிறது என்றோ அல்லது நாம் முன்பை விட பாதுகாப்பாக இருக்கிறோம் என்றோ உணர்வார்கள் என நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். இதற்கிடையில், நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஐவோ டால்டர் கூறுகையில், டிரம்பின் உரை பல முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். அவற்றில் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இரானின் அணுசக்தி திறன், கடற்படை மற்றும் ஏவுகணை அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் உரிமை கோரினால், அமெரிக்கா ஏன் இன்னும் இரானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதுதான். "இது நம்மை எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளது என்று நான் நினைக்கவில்லை... அமெரிக்க பொதுமக்களுக்கும் இதே போன்ற சந்தேகங்கள் இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் பிபிசி செய்தியாளர் சுமி சோமஸ்கந்தாவிடம் கூறினார். இந்த உரையில் டிரம்ப் நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை அல்லது கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த அச்சுறுத்தல்களை மீண்டும் கூறவில்லை, ஆனால் பின்னர் சமூக ஊடகங்களில் அவர் மீண்டும் அத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது என்று டால்டர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmewggw3d0o
-
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் Lenin Raj / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 11:46 முன்னாள் அமைச்சரான மஹிந்த விஜேசேகர தனது 81 ஆவது வயதில் காலமானார். கடற்றொழில் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர், முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி, அக்குரஸ்ஸ - கொடபிட்டிய பகுதியில் இடம்பெற்ற எல்.ரி.ரி.ஈ (LTTE) தற்கொலை குண்டுத் தாக்குதலில் மஹிந்த விஜேசேகர அவர்கள் கடுமையாக காயமடைந்தார். அவர் உயிரிழக்கும் வரை அந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-மஹிந்த-விஜேசேகர-காலமானார்/175-374966
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் மிளகாயும் இல்லை மிளகும் இல்லை மிளகாயாக தன்னை காட்டி சிறப்பாக நடிப்பவர் சில வருடங்களுக்கு முன்பு தான் இவரை பற்றி தெரிந்து கொண்டேன் ரஜினி காந்த் நடிகர் இலங்கைக்கு போக கூடது என்று இவர் கேட்டபோதே விளங்கிவிட்டது ஆனால் கடந்த வருடம் இவர் இலங்கை போனார்
-
ஈரானுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை போர் தொடரும் - ஈரான்
🔴LIVE :Iran | Donald Trump | Mojtaba Khamenei | ``ஈரான் போர் நெருங்கியது கிளைமாக்ஸ்''">LIVE :Iran | Donald Trump | Mojtaba Khamenei | ``ஈரான் போர் நெருங்கியது கிளைமாக்ஸ்'' உலக முழுக்க நாறிப்போச்சு அமெ கிளி😂
-
அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
Amazon மீது ஈரான் அதிரடி தாக்குதல்..US நிறுவனம் மீது முதல் நேரடி அட்டாக்..|
-
பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்!
அட, இதுவா செய்தி? நான் ஏதோ அவசரத்தில், போலீசாரை துரத்தி துரத்தி வெட்டிய கிழவிகள் என்று வாசித்துப்போட்டேன். கசிப்பு உற்பத்தியாளர்களின் பாதுகாப்பு படைபோலுள்ளது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சு. வெங்கடேசனை ஒரு இலக்கியவாதியாகவே நான் முதலில் அறிந்திருந்தேன். அவருக்கு 'காவல் கோட்டம்' என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பின்னர் அந்த நாவலின் சில பகுதிகளே வசந்தபாலனின் இயக்கத்தில் 'அரவான்' என்ற திரைப்படமாக வந்தது. அந்த நாவலில், திரைப்படத்தில் வரும் சில நிகழ்வுகளும், மனிதர்களும் ஏதோ சில வகைகளில் இலங்கையிலும் சில ஊர்களில் நடந்ததாகவும், இருந்ததாகவும் எனக்கு அன்று தெரிந்தது. பின்னர் தான் அவர் ஒரு மார்க்சிஸ்ட் என்று தெரியவந்தது. நீங்கள் சொன்னது போலவே இரண்டாவது உதாரணம் அவர்.................. என்னுடைய சில மதுரைக்கார நண்பர்களுக்கே அவரைத் தெரியாது. மற்ற மாவட்டக்காரர்களுக்கு சுத்தம்............... பல வருடங்களின் முன் பாஜக அரசு மொழிவாரி ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக் குறைவாகவும், சமஸ்கிருதத்துக்கு மிக அதிகமாகவும் ஒதுக்கியிருந்தது. அதை எதிர்த்தும் இந்திய பாராளுமன்றில் பேசியிருந்தார். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் ஓரளவு ஓடித் திரிந்தது. இப்போதைக்கு எடப்பாடியார் சாத்தியங்கள் உள்ள ஒரு மாற்றாகத் தெரிகின்றார். அவருக்கு தனிப்பட்ட ஆளுமையோ அல்லது பிரபலமான பின்புலமோ அல்லது பெரும் கவர்ச்சியோ கிடையாது. ஆதலால் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு முயற்சியாக அவரது நிர்வாகம் அமையக்கூடும். ஆனால் அவர் சேர்ந்திருக்கும் இடமும், அதிமுகவின் பிளவுகளும் பயத்தை உண்டாக்குக்கின்றன. சசிகலாவுக்கு தங்கள் ஊரிலேயே ஒரு இரண்டாயிரம் வாக்குகள் இருப்பதாக திண்டுக்கல் நண்பன் ஒருவன் சொன்னான். இந்தக் கொடுமை வேறு இருக்கின்றது.......... ஜி கே வாசனின் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐந்து இடங்களையும் பார்த்தீர்களா................. இதுக்கு அவருக்கு ஒரு இடமும் கொடுக்காமலேயே விட்டிருக்கலாம்............. இதில் வேற அவர் தாமரைச் சின்னத்தில் நிற்கின்றார்.................🫣.
- Yesterday
-
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
இந்த கேள்வி எனக்கும் இருந்தது அண்ணா.பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு மாற்று உடை வாங்கிக் கொண்டு போய் குடுக்க முடியாமலா இருந்தவர்கள்..இந்த இசாராவின்ட கொண்டாட்டத்தாலா..யாழில் அனைவருமே ஒராளின்ட பிறந்த நாளை மறந்துட்டீனம்.ஒண்டும் பிரச்சனை இல்லை.🤭
-
வளைகுடாவில் எண்ணெயை விட அதிமுக்கிய வளத்திற்கு குறியா? இரான் போரில் எச்சரிக்கை சமிக்ஞை
எல்லாமே இயற்கை தந்த வளங்களுக்கான போராகவே மாறிக்கொண்டிருக்கின்றது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
1970 க்கு பின் இப்படி இருவரைத்தான் காட்ட முடிகிறது இல்லையா அண்ணா? உண்மையை சொல்கிறேன். தமிழக அரசியலை ஒரு obsession போல் அணுகுபவன் நான், எனக்கே சு வெங்கடேசன் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லை. இப்படியானவர்கள் இருந்தாலும் அவர்களை ஒற்றை விதிவிலக்குகளாக, போற்ற படகூடியவர்களாக ஒரு வணக்கத்துக்குரிய இடத்தில் வைத்து போற்றி விட்டு, அடுத்து எவனுக்கு எதை கொடுத்து எதை அடையலாம் என தீர்மானிக்கும் இடத்தில்தான் அறுதி பெரும்பான்மையான தமிழக வாக்காளர் உளர். ஐயா நல்லகண்ணு, ஒரு தனி இயக்கம் கண்டிருந்தால், அல்லது கம்யூனிச பேனரிலேயே அத்தனை தொகுதியிலும் போட்டி போட்டிருந்தால், நோட்டா, சீமான் எல்லோருக்கும் பின்னால் வந்திருப்பார். இதுதான் வாக்கரசியலின் யதார்த்தம். ஆகவே இதற்குள்தான் உள்ள சொத்தையில் ஒரு நல்ல சொத்தையை தேர்ந்தாக வேண்டும். திருமா இந்தளவு புனிதர் என நான் நம்பவில்லை. பட்டியலின மக்களின் விடுதலை - சுயமரியாதையில் தங்கி உள்ளது என்பதுதான் தலித் அரசியலின் அடிப்படை….ஆனால் எத்தனை அவமானங்களை தாங்கி கொண்டு திருமா இந்த கூட்டணியில் தொங்குகிறார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஏன் இப்படி தொங்குகிறார்? திமுகவை விட்டால் இப்போ சாதிப்பதை கூட செய்ய முடியாது. விஜையோடு போயிருக்கலாம், திருமாவும் அதை யோசித்த்தார் ஆனால் ரிஸ்க் எடுக்க பயம். முடிவாக: மாற்று என்பது நல்லகண்ணு போல் வரும் என எதிர் பார்திருந்தால் காலம் பூராவும் அப்படியே இருக்க வேண்டியதே. சீமான் போல் மிளகுக்கு மிளகாயை மாற்றுவதிலும் அர்த்தம் இல்லை. ஆனால் திமுக போன்ற மிளகாய்க்கு மாற்றாக வெங்கயமே ஆனாலும் விஜை அல்லது எடப்பாடி போன்ற ஒருவர் வருவதே சாத்தியம். Politics is the art of the possible -Otto von Bismarck-
-
மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோமென உத்தரவாதம் அளித்தால் போரை நிறுத்தத் தயார் - ஈரான் ஜனாதிபதி
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் எண்டதுக்கு ஈரான் நல்ல சம்பவம் செய்திருக்கு.😎 பழமைவாதம் என்று பார்த்தால் இஸ்ரேலிடம் அதிகம் இருக்கின்றது. அந்த வகையில் ஈரானிலும் இருக்கின்றது போல் தெரிகின்றது. என்றாலும் முல்லாக்கள் அகற்றப்பட வேண்டும் என்பது ஈரான் மக்களுக்கு உகந்த விடயம் என இங்குள்ள ஈரானியர்கள் சொல்கின்றார்கள்.
-
"ஹோர்மூஸ் நீரிணை திறக்கும், ஆனால் டிரம்புக்கு அல்ல" - இரான் எம்பி பேசியது என்ன?
ஐயோ, நோபல் பரிசு கனவு போய்ச்சா? "ஆடாதடா ஆடாதடா மனிதா, ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவாய் முழுசா."
-
அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
அண்மைக் காலமாக அமெரிக்கா எதை வைத்து சண்டித்தனம் காட்டிச்சோ.......அதன் அடி மடியிலேயே கை வைக்கிறான் சீனாக்காரன்......சாரி ஈரான்காரன் 😂
-
ஈரானுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை போர் தொடரும் - ஈரான்
அப்போ, இந்தப்போர் முடிய வாய்ப்பேயில்லை எண்டுறியள். தெரியாத்தனமாக காலை விட்டு அதை எப்படி வெளியே எடுப்பது என்று தத்தளிக்கிறார்கள் அவர்கள். உங்களை சேதப்படுத்தி, நிம்மதியாக இருக்கலாமென கனவு கண்டவர்களுக்கு அதி சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவர்களிடம் ஆயுதமே முடிந்து விட்டதாம், இப்போ பதவியும் அந்தரத்தில், எங்கிருந்து யார் இழப்பீடு வழங்குவது? யாரை யார் தண்டிப்பது? அப்படி ஒரு நிலைப்பாடு இருந்திருந்தால்; இப்படி தான்தோன்றித்தனமாக எந்த ஆலோசனையும் அறிவுறுத்தலுமில்லாமல் போரை தொடங்கியிருப்பார்களா என்ன? அவர்கள் உங்களுக்கு எதை செய்ய நினைத்தார்களோ, அதை அவர்களுக்கு செய்து அந்த வலியை, இழப்பை அவர்கள் உள்ளளவும் மறக்காதபடி நினைத்து வருந்த செய்யுங்கள். மற்றபடி அவர்களது மக்களும் நீதித்துறையும் வரலாறும் அவர்களை தண்டிக்கும். தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு நாடுகளை மிரட்டியதும் அக்கிரமித்ததும் தனக்கு நோபல் பரிசு தரவேண்டுமென்று அடம் பிடித்ததும் இப்படியான அழிவிற்குத்தான்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இந்திய,தமிழ்நாட்டு அரசியலில் இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகின்றேன். இருந்தாலும் சீமானை மட்டும் தேர்ந்தெடுத்து அரசியல் வக்கிரம் செய்யும் கருத்தாளர் நீங்கள். தமிழ் நாட்டை பொறுத்தவரை ஈழ அரசியலையும் ஊறுகாய் போல் தொட்டு சுவைக்காத கட்சி ஏதும் இருக்கின்றதா என பார்த்தால் எந்த கட்சியுமே சிக்கவில்லை.
-
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை
டொனால்ட் ரம்ப் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஈரான் மீதான தாக்குதலும், நேட்டோ அமைப்பில் இருந்து விலகுதலும் இருந்துள்ளது என நினைக்கின்றேன்.பல தடவைகள் நேட்டோ செலவீனம் தொடர்பாக ஜேர்மனியுடன் முரண்பட்டுள்ளார். என்னைப்பொறுத்த வரைக்கும் நேட்டோ அமைப்பு அழிவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த நற்செயல்களும் கடுகளவிற்கும் இல்லை. நிற்க..... பல ஊடகங்களில் அமெரிக்க வரலாற்றில் டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்கு முன் உலகில் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருந்தது போல் எழுதி பினாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.ஏதோ ரம்ப் வந்த பின்னர்தான் உலக அழிவு நடக்கின்றது போல் பதறி கதறுகின்றார்கள். அடியே! அமெரிக்க வரலாற்றில் மற்ற நாடுகள் மீது அதிகாரம் செலுத்தியும்,ஆக்கிரமிப்பு செய்தும்,அழிவுகளை செய்தும்,கடக கணக்கில் குண்டுகளை போட்டதுதானே வரலாறு.👈 அதை பார்த்து போகத்திற்கு போகம் திட்டுவதுதானே நம்மவர் வழக்கமான செயல்.😎
-
மதமாற்றம்
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ரியூசனில் ஆங்கிலம் படிப்பித்த கந்தையா மாஸ்ரர் அழகு சுப்பிரமணியத்தை சிறந்த சிறுகதை ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அவரது கதைகள் இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை! ஆங்கிலத்தில் ஒரு தமிழர் சிறப்பாக எழுதுவது பெருமையாக இருந்ததால் அழகு சுப்பிரமணியத்தின் பெயர் மறக்காமல் மனதில் ஒட்டிவிட்டது. கந்தையா மாஸ்ரர் ஆங்கிலம் படிப்பிப்பதை விட அதிகம் சுவாரசியமான “கதைகள்” சொல்லிக்கொண்டிருப்பார். அவர் சொன்ன கதையில் ஒன்று. ஒருவர் தனது நண்பரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். உணவு உண்டபின் தனது பிரமாண்டமான படிப்பறையைப் பெருமையாகக் காண்பித்தாராம். அங்கு பல அரிய நூல்கள் நிரம்பியிருந்தன. நண்பர் நூல்களைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு வந்தபோது அவர் கனகாலமாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம் ஒன்றைக் கண்டு, அதை இரவலாக படிக்க எடுத்துப்போகலாமா என்று கேட்டாராம். ஆனால் மற்றவரோ, அதை மறுத்து படிப்பறையில் இருக்கும் நூல்கள் எல்லாம் இரவல் வாங்கிச் சேர்த்தவையே என்றும் அதனால் அவர் நூல்கள் எதையும் பிறருக்கு இரவல் கொடுப்பதில்லை என்றும் சொன்னாராம்! நானும் எனது புத்தகங்களை (இரவல் வாங்கிச் சேர்த்தவை அல்ல, பணம்கொடுத்து வாங்கியவை!) பிறருக்கு இரவலாகக் கொடுக்க விரும்புவதில்லை. தவிர்க்கமுடியாமல் கொடுக்கவேண்டி வந்தாலும் ஒரு புத்தகம் மட்டும் கொடுப்பேன். அது திரும்ப வந்தபின்னர்தான் அடுத்ததைக் கொடுப்பேன்😇 குறிப்பு: தமிழாக்கம் செய்த எழுத்துக்கினியவனின் பெயர் அசோகன். அவரும் நானும் ஒரு காலத்தில் Nokia Research Center (NRC) இல் வேலை செய்திருக்கின்றோம். ஆனால் வேறு வேறு “ஆராய்ச்சிகள்” என்பதால் அவரை நான் நேரே சந்தித்திருக்கவில்லை. எனினும் தமிழருக்கு ஏன் தனிப்பெயர் என்ற அவருடைய குறிப்பை Nokia Bulletin Board இல் படித்திருந்தேன். https://asokan.org/asokan/name.php நானும் யாழில் எமது பெயர் வைக்கும்முறைகளைப் பற்றி ஒரு ஆக்கம் எழுதியிருந்தேன்!
-
மதமாற்றம்
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம் தமிழில்: எழுத்துக்கினியவன் 1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம். தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/). இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான். இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள். “வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள். ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின. இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே இருந்ததில்லை. ஆனால் ஒரு நாள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த ஒரு சந்தைத் திடலில் நடந்த திறந்த வெளிக் கூட்டத்துக்குப் பிறகு கந்தல் உடையிலிருந்த ஒரு சிறு பையன் கேட்ட சாதுரியமான கேள்விகளால் பிரமித்துப் போன மிஷன் பாடசாலை முகாமையாளர், அந்தப் பையனுக்குப் புலமைப் பரிசிலோடு பாடசாலை அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்தப் பையன்தான் ரங்கு. அந்தச் செய்தியைக் கேட்டதும் அவனுடைய பெற்றோருக்கு நல்ல மகிழ்ச்சி. இந்தக் கொல்லர் பட்டறையிலே மாய்வதை விட அவன் நன்றாக ஆங்கிலம் கற்றால் எப்போதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். விரைவிலேயே ரங்குவுக்குப் படிப்பில் ஆர்வம் பிறந்ததும் வேகமாக முன்னேறினான். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முதல் ரங்கு கொல்லர் பட்டறையில் எடுபிடி வேலைகள் செய்தபடியால் அவனது உடல் திடகாத்திரமாகத் திரண்டு வளர்ந்திருந்தது. அது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு மிகவும் உதவியது. இந்தப் புதிய மாணவன் வெகு விரைவில் வகுப்பாசிரியருக்கும் விளையாட்டு ஆசிரியருக்கும் மிகவும் பிடித்தமான மாணவன் ஆகி விட்டான். வகுப்பாசிரியர் தானே மதமாற்றம் செய்து கொண்டவர். அவரை மதமாற்றம் செய்தவர்களை விடத் தீவிரமான மதப்பற்று கொண்டவராகத் திகழ்ந்தார். ரங்குவில் ஒரு வருங்கால மதமாற்ற வாய்ப்பை இனங்கண்டு கொண்டார். பாடசாலையில் முதலாவது பாடம், “சமய அறிவு.” மாணவர்களுக்கு முதலில் பழைய ஏற்பாட்டு விவிலிய நூலும் அதற்குப் பிறகு சுவிசேஷங்களும் புகட்டப்பட்டன. ரங்கு இவற்றை ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் கற்றுக் கொண்டான். இதைக் கண்டு மகிழ்ந்த மறைப்பணியாளர்கள் ரங்குவுக்குச் சிறுவருக்கேற்ற மொழியில் எழுதப்பட்ட அழகான மதக் கதைப் புத்தகங்களை அன்போடு கொடுத்தார்கள். பலவண்ணச் சால்வைகளையும் வெள்ளை வேட்டிகளையும் அன்பளித்தார்கள். ரங்கு தன் ஆசிரியரின் வழிகாட்டலில் செழித்து வளர்ந்தான். எட்டாம் வகுப்பை அடைந்தபோது அவனுக்குப் பொதுவான பாடங்களின் அடிப்படை அறிவு நன்றாக இருந்தது மட்டுமல்லாது, விவிலிய நூலில் உள்ள வார்த்தைகளை மனப்பாடமாக்கி ஓதுவதற்கும் முடிந்தது. பாடசாலையின் வருடாந்தரப் பரிசளிப்பு விழாவில் சமய அறிவுக்கான பரிசு அவனுக்கே கிடைத்தது. கிறீத்தவனல்லாத ஒரு மாணவன் இந்தப் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது என்று பாராட்டிய பாடசாலை அதிபர் ஆசிரியர்களைத் தங்கள் வேலையைச் சீராகச் செய்ததற்கும் ரங்குவை அவன் கெட்டித்தனத்திற்கும் மெச்சினார். தனக்கிருந்த இந்த அறிவைப் பற்றி ரங்குவுக்கு மிகுந்த பெருமை. தனது அறிவைத் தன் பெற்றோருக்கும் முக்கியமாகச் சகோதரர், மைத்துனர்களுக்கும் காட்டிக் கொள்ள விரும்பினான். அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாததால் அவர்களோடு கணிதத்தைப் பற்றியோ சரித்திரத்தைப் பற்றியோ அளவளாவ முடியாது. ஆகவே, படிப்பறிவு இல்லாதவர்களுக்குக் கூட கதை கேட்பது சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்து அவர்களுக்கு விவிலியக் கதைகளைச் சொல்ல விழைந்தான். ஆனால் அந்த நடவடிக்கை அவனது உறவினர்களுக்குச் சந்தேகத்தையே கிளப்பியது. தங்களுடைய அன்பு மகன் பிழையான வழியில் போய் ஒரு நாள் கிறீத்தவ மதத்துக்கு மாறியே விடுவான் என்று பயந்தார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவன் ஓரளவு படித்தால் ஏதாவது மதிப்புக்குரிய வேலை கிடைக்கும் என்பது மட்டும்தான். அவனது ஆசிரியர்களின் மதத்தை உதாசீனம் செய்யும்படி உறவினர்கள் அடிக்கடி அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள். இப்போது ஒரு இடியாப்பச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டான் எனப் பயந்தார்கள். ஒரு நல்ல மாதச் சம்பளம் தரும் வேலையில் உள்ள கிறீத்தவனாக இருப்பதை விடப் படியாதவனாகக் கொல்லர் பட்டறையில் மாய்வது நன்று என்று நினைத்தார்கள். ஒரு நாள் தான் பாதிரிமாருடன் தேவாலயத்துக்குச் சென்றதாக ரங்கு சொன்ன போது அவனது அப்பா “விசுவாசமில்லாத முட்டாள்!” என்று ஏசினார். “மதம் மாறிப் போடாதையடா,” என்று அவனது அம்மா கெஞ்சினார். “இந்தப் பறங்கிப் பாதிரியளை நம்பாத. அவங்கள் உன்னை எங்களிட்டையிருந்து பிரிச்சுக் கொண்டு போகப் பாக்கினம். ஐயோ! நீ என்னை விட்டுட்டுப் போனா நான் என்ன செய்வனோ?” என்று புலம்பினார். “நான் ஒரு நாளுமே உங்களை விட்டுட்டுப் போக மாட்டன், அம்மா,” என்றான் ரங்கு, “நான் மதம் மாறினாலும் எப்பவுமே உங்கடை சொந்த மகனாத் தானே இருப்பன்.” “ஐயோ, மோனை, மதம் மாறப் போறன் எண்டு சொல்லாத. உன்ர சொந்த பந்தங்களின்ர மதத்தை, முக்கியமா உன்ர அம்மான்ர மதத்தை விட்டு மாறுவியா? ரங்கு, என்ர மூத்த பிள்ளை, நான் சாகேக்க எனக்கு என்ன நடக்கப் போகுதோ?” “என்னம்மா சொல்லுறீங்கள்?” “ஆர் எனக்குக் கொள்ளி வைக்கப் போகினம், பிள்ளை? கொள்ளி வைக்கிறது மூத்த மகனின்ர கடமை. இந்தத் தொந்தி வச்ச ஐயர்மார் ஒரு வேதக் காரனை அந்தப் புனித வேலையைச் செய்ய ஒரு நாளுமே விட மாட்டாங்கள்.” “அம்மா! சாவைப் பற்றிக் கதையாதையணை. நீ என்னைப் பயப்பிடுத்துறாய்.” “நீ மதம் மாற மாட்டன் எண்டு சத்தியம் பண்ணித் தந்தால் நான் உன்னைப் பயப்பிடுத்தேல்லை.” அம்மாவின் சொற்கள் ரங்குவின் மனத்தைத் தொட்டன. அவன் ஆணிவைத்து அடித்தாற் போல இருந்த இடத்திலேயே அசைய முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றான். “சரி ரங்கு,” என்று தொடர்ந்தாள் அம்மா, “நீ போய்ப் படி. அடுத்த கிழமை உனக்குப் பள்ளிக்கூடச் சோதினை இருக்கு.” ரங்கு பாடசாலைப் பரீட்சையில் வெற்றிகரமாகச் சித்தியடைந்தான். எட்டாம் வகுப்பு என்பதால் அவனுக்கு ஆங்கிலப் பள்ளி விடுகைச் சான்றிதழ் கிடைத்தது. ஒரு அடித்தர வேலை எடுக்க அது போதுமானது. அவனது இலட்சியங்கள் குறைவாகவே இருந்ததால் அவன் மேற்கொண்டு படிப்பதை விரும்பவில்லை. அந்த நாளிலிருந்து அவன் பழைய மாணவனாகவும் கீழ்மட்ட ஊழியர்களின் நண்பனாகவும் பாடசாலைக்குப் போய்வந்தான். இடைக்கிடை யாராவது ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பள்ளிக்கூடத்துக்கு வர முடியவில்லை என்றால் அவர்களது வகுப்புகளுக்குப் போய் பிரதி ஆசிரியராகவும் பள்ளிக்கூட நிர்வாக வேலைகளுக்கு உதவியாளனாகவும் பணி செய்தான். கரடுமுரனான பாறை போல இருந்த படிப்பறிவில்லாத ஒரு கொல்லனைத் தாங்கள் செம்மை செய்து ஒரு சீரான சிற்பம் போலச் செதுக்கியதையிட்டுப் பள்ளிக்கூட நிர்வாகிகள் மிகவும் பெருமிதம் அடைந்தார்கள். பள்ளிக்கூடத்தின் எழுதுவினைஞர் குழாமில் ஒரு வெற்றிடம் வந்தபோது ரங்குவை உதவி எழுதுவினைஞனாக நியமனம் செய்தார்கள். ரங்குவுக்கோ நிரந்தரமான ஆசிரியனாக வருவதுதான் இலக்கு. ரங்கு அதுவரைச் செய்தது உண்மையாகவே ஒரு அற்புதமான சாதனை. அவனது நியமனத்துக்கு முன் ஒரு கொல்லன் எழுதுவினைஞனாக வருவான் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத எட்டாக் கனியாக இருந்தது. படிப்பறிவில்லாதவர்கள் அவனை ஒரு மரியாதையுடன் பார்த்தார்கள். ஆனால் அவன் ஒரு ஆசிரியனாகினால் அதற்குக் கிடைக்கக்கூடிய மரியாதை இன்னும் பல மடங்கு அதிகம். அவர்கள் அறிவைத் தலைதாழ்த்தி வணங்கி மதிப்பவர்கள். அவன் ஆசிரியனானால் மரியாதையுடன், ‘பண்டிதர்’ என்று அழைப்பார்கள். ஒருநாள் ரங்கு மதம் மாறுவது என்ற முடிவைச் சடுதியாக எடுத்தான். உடனே அவனுக்கு ஞானஸ்நானம் செய்து தேவாலயத்தின் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்கள். அவனது அப்பாவின் கோபம் அனல் தெறித்துப் பறந்தது. அவனது அம்மா கவலையால் மனமுடைந்து போனாள். அவனது எதிரிகள் அவனை, “பாதிரிகளின் அடிமை,” என்று இகழ்ந்தார்கள். அவன் ஏன் மதம் மாறினான் என்பதற்குப் பலதும் பத்துமாகப் பல்வேறு கதைகள் உலாவின. “அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்க வேணுமெண்ட பேராசை. ஆனவடியா பாதிரிகளுக்கு வால் பிடிக்கப் பாக்கிறான். மதம் மாறாமலே பதவி உயர்வு எடுத்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு அலுவலக வேலை எடுத்திருக்கலாம். உதவாக்கரைப் பயல்!” என்று சிலர் அபாண்டமாகப் பழி சுமத்தினார்கள். “அவன் தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்தவன். அப்படியானவன் எப்பவும் தன்ர குணத்தைக் காட்டுவான். அவன் ஒரு கொல்லன் தானே. அவனுக்கு அடிமையா இருக்கிறதுதான் விருப்பம்,” என்றனர் வேறு சிலர். “அவன் நேர்மையானவன். உண்மையான கடவுளைச் சேர வேணுமெண்ட உந்துதல் அவனுக்கு வந்திருக்கு,” என்றனர் பள்ளிக்கூடத்திலுள்ள அவனது சக ஊழியர்கள். அவனது எதிரிகள் பொறாமையால் வாடினர். அவனையும் அவனது வெற்றிகளையும் வெறுத்தனர். பள்ளிக்கூடத்தில் அவனது பதவியைப் பற்றியோ அவனுக்குள்ள மரியாதையைப் பற்றியோ கேள்விப்படும் போதெல்லாம் கத்தியால் குத்தினது போல அவர்களின் பொறாமை அவர்களை வாட்டி வருத்தியது. ஒரு மாலை நேரம் அவர்கள் எல்லோரும் எப்படி ரங்குவை வீழ்த்துவது என்று சதித்திட்டம் போடுவதற்காக ஒன்று கூடினார்கள். ரங்குவை அறவே வெறுக்கும் ஒருவன் முதலில் பேசினான். ரங்கு ஒரு நேர்மையற்ற நயவஞ்சகன் என்றும் அவன் உண்மையிலேயே இந்துவாக இன்னும் இருந்து கொண்டாலும் கிறீத்தவன் போலத் தன் எசமானர்களுக்குக் காட்டிக் கொள்கிறான் என்றும் ஒரு முறைப்பாட்டைப் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தான். இதற்கு அத்தாட்சியாக ரங்குவின் வாழ்க்கையின் பல சம்பவங்களை அவர்கள் இலகுவில் முன் வைக்கலாம். “இதை வலு கவனமாச் செய்ய வேணும்,” என்று இன்னொருவன் எச்சரித்தான், “இப்பிடி முறையீடு அனுப்பினால் அதால பெரிய விளைவொண்டும் வராமல் விடலாம். ரங்கு மதம் மாற முதலே அவனைக் கிளாக்கரா நியமிச்சவை எண்டதை மறந்திடாதேங்கோ. நாங்க நினைக்கிற மாதிரி அவன் மதம் மாறினது அவ்வளவு பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். யோசிச்சுப் பாருங்கோ தம்பிமார், எங்கட சமயத்தவரைப் பற்றி யோசிச்சுப் பாருங்கோ. பள்ளிக்கூடத்தில அவையள் கொஞ்சப் பேர் தான் இருந்தாலும் நல்ல பதவியளில இருக்கினம். ஆனபடியா அந்தரப் பட்டு மொக்குத் தனமா ஒண்டும் செய்யாமல் கவனமா யோசிச்சுச் செய்வம்.” “நீங்கள் ரெண்டு பேரும் சொல்லுறது சரிதான்,” என்றான் இன்னுமொருவன், “இப்ப ரங்கு வேதக்காரன் ஆகிவிட்ட படியா, ‘அவன் உண்மையான வேதக்காரன் இல்லை, அவன் ஒரு கள்ளன், நயவஞ்சகன்,’ எண்டு சொல்லி ஒரு முறைப்பாடு அனுப்பினால், அது கட்டாயம் வேலை செய்யும். நயவஞ்சகம், நடிப்பு, பொய், இதுகளெல்லாம் வேதக்காரருக்குக் கொஞ்சமும் பிடியாத விஷயங்கள் எண்டதை மறந்துடாதேங்கோ. முறைப்பாடு கட்டாயம் வேலை செய்யும். அந்தக் கேடுகெட்ட படவான்ர வேலை பறிபோகும் எண்டதுக்கு நான் என்ன பந்தயமும் வைக்கத் தயார். சிவசிவா! அவன்ர வேலை பறிபோகும்!” “சரியாச் சொன்னீங்கள் அண்ணை, சரியாச் சொன்னீங்கள்,” என்று இரண்டாவதாகப் பேசியவனைத் தவிர மற்ற எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமோதித்தார்கள். முறையீடு அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். முறையீட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக அடுத்த முறை கூடுவதற்கு நாளும் குறித்தார்கள். அவர்கள் கலையத் தொடங்கும் போது ஒருவன், “முறைப்பாட்டுக் கடிதத்தில கையெழுத்து வைக்கக் கூடாது. மொட்டைக் கடிதமாத்தான் அனுப்ப வேணும்,” என்றான். “ஓமோம்!” என்று மற்றவர்கள் ஆமோதித்தார்கள். அவர்களின் கண்களில் ஏதோ ஒரு இனங்கண்டு கொள்ள முடியாத பீதி படர்ந்தது. பாடசாலை அதிபர் முதலில் அந்த முறையீட்டுக் கடிதத்தை உதாசீனம் செய்தார். இரண்டு காரணங்களுக்காக. முதலாவது அது ஒரு மொட்டைக் கடிதம். அவர் எப்போதுமே மொட்டைக் கடிதங்களைச் சந்தேகக் கண்களுடன் பார்ப்பவர். இரண்டாவது, அந்தக் கடிதத்திலிருந்த குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. யார் மேலும் அப்படியான குற்றச்சாட்டுகள் திணிக்கப் படலாம். அவற்றை நிரூபித்துத் தண்டனை வழங்குவது முடியாத காரியம். இவையெல்லாம் தனித்தனி ஆட்களின் நேர்மைக்கே என்று விடப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் மொட்டைக்கடிதங்கள் இடைவிடாது வந்த வண்ணமே இருந்தன. ஒரு நாள் அலுப்புத் தாங்க முடியாமல் உதவி எழுதுவினைஞனைத் தன்னைச் சந்திக்க வருமாறு பணித்தார். ரங்கு எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தான். அடுத்த ஞாயிறு தேவாலயத்தில் திருப்பலி பூசை முடிந்ததும் சபையிலிருந்த ஒரு தேவாலய உறுப்பினர் யாரையாவது பிரார்த்தனை செய்யும்படி பாதிரியார் வரவழைத்த போது ரங்குவே தன்னார்வத்துடன் எழும்பிப் போய்ப் பிரார்த்தனை செய்தான். கொஞ்ச நாள் பள்ளிக்கூடத்தில் எல்லாம் சுமுகமாக நடந்தது. ரங்குவின் எதிரிகள் இன்னுமொரு முறை அவனைக் குற்றம் சாட்ட முனைந்தார்கள். அவன் அடிக்கடி ‘சிவசிவா’ என்று சொல்கிறான் என்று முறையிட்டார்கள். “அவன் உதடுகளில் எப்பொழுதும் இருப்பது சிவபெருமானின் பெயர்தான், யேசுநாதரின் பெயரல்ல.” மீண்டும் அதிபரின் அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதங்கள் சரமாரியாகப் பொழியத் தொடங்கின. இந்தப் பிரச்சனை ஏதோ விதமாக மறைந்து போய் விட்டது என்று நினைத்திருந்த அதிபருக்கு இது மிகவும் எரிச்சல் ஊட்டியது. அவர் மொட்டைக் கடிதங்களைக் கவனமாகப் படிக்காமல் மேலோட்டமாகத் தான் பார்த்தார். பாடசாலைத் தலைவர் என்பதால் அவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது. ஒரு சனிக்கிழமை ஒரு மொட்டைக் கடிதம் அவரது கையைப் போய்ச் சேர்ந்தது. சனிக்கிழமைகள் தமிழ் இலக்கியத்துக்காக என்று அவர் ஒதுக்கிய நாட்கள். அந்த நாட்களில் அவர் திருக்குறளைத்தான் படிக்க விரும்பினார், மொட்டைக் கடிதம் எழுதுபவர்களின் கிறுக்கலான கையெழுத்துகளையல்ல! அவர் உதவி அதிபரை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார். உதவி அதிபவர் இந்த நாட்டுக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. ரங்குவின் மேற் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை என்றுதான் அவருக்குப் பட்டது. இதை உடனேயே விசாரித்தறிய வேண்டும் என்று தீர்மானித்தார். அடுத்த நாள் அவர் ரங்குவின் வீட்டுக்குப் போனார். “வணக்கம், சேர்,” என்றான் ரங்கு. “வணக்கம், ரங்கு.” “கொஞ்சம் நிண்டு கொள்ளுங்கோ சேர், நான் ஒரு கதிரை கொண்டு வாறன்,” என்ற ரங்கு தன் குடிசைக்குள் போய் ஒரு நாற்காலியைக் கொண்டு வருவதற்காகத் திரும்பினான். “கதிரையை விடு. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. இங்க ஒரு முக்கியமான விஷயம் இருக்குது,” என்றபடி தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை உப அதிபர் எடுத்து அதை ரங்குவின் கையில் கொடுத்து விட்டு, “இது உண்மையா?” என்று கேட்டார். ரங்கு கலக்கத்துடன் கடிதத்தை வாங்கிப் படிக்கும் போது அவனது உடல் நடுங்கத் தொடங்கியது. “இது முழுப் பொய் சேர்! முழுப் பொய்!” “பொய் எண்டா ஏன் இப்பிடி எழுதிறாங்கள்?” என்று உறுமினார் உப அதிபர். “அவங்களுக்கு என்னில பொறாமை சேர். நான் இங்கை நல்ல வேலையில இருக்கிறதால என்னை வெறுக்கிறாங்கள். எனக்கு வேலை தந்ததுக்காக அதிபர் ஐயாவிலையும் அவங்களுக்குக் கோவம். சேர், தயவு செய்து அவங்களை நம்பாதேங்கோ. அவங்கள் நான் கொல்லன் பட்டறையில மட்டும்தான் வேலை செய்யலாம் எண்டு நினைக்கிறாங்கள்,” ரங்கு கொஞ்சம் மௌனமாக இருந்து விட்டுத் திரும்பவும் அழுதான். “இவங்கள் கெட்ட மனசுள்ள மனிசர், சேர். இந்த ராஸ்கல்களை ஒரு நாளும் நம்பாதேங்கோ.” கையை முட்டியாக்கிக் குலுக்கியபடி, “எனக்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கிடைச்சா… அவங்களுக்கு நல்ல பாடம் படிப்பிச்சுத் தருவன்,” என்றான். பிறகு கைகள் இரண்டையும் மேலே தூக்கி, “சிவசிவா, நான் எப்பிடி யேசுநாதரை மறக்க முடியும்!” என்றான். இதைக் கேட்டதும் உப அதிபருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரது முகம் உடனே நெருப்பாகச் சிவந்தது. ரங்கு மேற்கொண்டும் விளக்க எத்தனிக்க, “இவ்வளவும் போதும். நான் கேக்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு.” என்று சொல்லிவிட்டுக் கொல்லன் பட்டறையை விட்டு வெளியேறி நடந்தார். ரங்கு உப அதிபருக்குப் பின்னால் ஓடிப் போய் அவரது கையைப் பற்றி இரந்தான், “கோவிக்காதேங்கோ சேர். நான் என்னவோ பிழையாச் சொல்லீட்டனா? திருப்பிப் பட்டறைக்கு வாங்கோ, நான் எல்லாம் விளங்கப் படுத்திறன்.” “எனக்கு உன்னட்டை இருந்து இதுக்கு மேல எதையும் கேக்கிற தேவை இல்லை,” என்று உப அதிபர் கத்தினார். பிறகு தன் கையைப் பலவந்தமாக விடுவித்துக் கொண்டு நடந்து போய் விட்டார். ரங்கு குழப்பத்துடன் ஸ்தம்பித்துப் போய் நின்றான். பிறகு, கைகளைப் பிசைந்தபடி, “சிவசிவா, நான் அழிஞ்சன்!” என்ற சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உப அதிபர் நேரடியாக அதிபரிடம் சென்று என்ன நடந்தது என்பதை விவரித்தார். ஆனால் அதிபர் ரங்குவின் நடத்தையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அது உப அதிபரை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏன் அதிபர் ஏதோ பெரிய நகைச்சுவை கேட்ட மாதிரி இப்படி வாய்விட்டுச் சிரித்தார் என்பது அவருக்குப் புரியவேயில்லை. “உமக்கு இந்த இடம் புதுசு,” என்றார் அதிபர், “நான் சிரிச்சதைத் தயவு செய்து கண்டு கொள்ள வேண்டாம். உமக்குக் காலம் போகப் போக ஏன் சிரிச்சன் எண்டு விளங்கும். இப்ப உமக்குக் களைப்பா இருக்கும். போய் ஓய்வு எடும்.” ரங்கு அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து, அடுத்த நாள் விடிகாலையிலேயே வேலைக்குப் போய்க் கடுமையாக வேலை செய்தான். தன் வருங்காலத்தைப் பற்றி அவனுக்குப் பெருத்த யோசனையாக இருந்தது. ஏதோ தவறு செய்து விட்டது போன்ற உணர்வு அவனுக்கு மங்கலாக இருந்தாலும், அது என்ன தவறு என்பதை அவனால் இனங்கண்டு கொள்ளவே முடியவில்லை. அதிபரும் உப அதிபரும் வழமை போல் சரியாக நேரத்துக்கு வேலைக்கு வந்தார்கள். ரங்குவின் கை நடுங்கத் தொடங்க அவன் கையெழுத்துக் கோணிப் போனது. அதிபர் தனது இருக்கையிலிருந்தபடி இதைக் கவனித்தார். பிறகு அவர் எழும்பி உதவி எழுதுவினைஞன் இருந்த இடத்துக்குப் போய் ஒரு கடிதத்தை அவனிடம் கையளித்தார். ரங்கு அதிர்ந்து போனான். இப்படி இதற்கு முன் ஒரு போதும் நடந்ததில்லை. நடுங்கும் கைகளால் கடிதத்தைத் திறந்து படித்தான். கண்களை ஒரு முறை மூடித் திறந்து விட்டு, இன்னொரு முறை கடிதத்தைத் படித்தான். அது உண்மைதான்! அவன் கடிதத்தில் படித்தது உண்மைதான். அவன் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆசிரியராகப் பதவி உயர்த்தப் பட்டிருக்கிறான். அவன் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. “ஓ! இப்பேர்ப்பட்ட நல்ல சேதி,” என்றான் அவன், “நன்றி சேர், மிக்க நன்றி.” கைகளைத் தூக்கிக் கடிதத்தைத் தலைக்கு மேல் உயர்த்தி, உரத்த குரலில், “சிவசிவா. நான் ஒருநாளுமே யேசுநாதரை மறக்க மாட்டேன்!” என்று கத்தினான். உப அதிபர் தன் காதுகளை நம்ப முடியாமல் அவனை வெறித்துப் பார்த்தார். பிறகு அதிபரைத் திரும்பிப் பார்த்தார். அதிபர் தன் மகிழ்ச்சியை மறைப்பதற்காகத் தலையைத் திருப்பிக் கொண்டார். அழகு சுப்பிரமணியம் — ஒரு வாழ்க்கைக் குறிப்பு பிரேமிளா துரைரட்ணம் (தமிழாக்கம்: எழுத்துக்கினியவன்) 1947ஆம் ஆண்டு 37 வயதில் இலங்கை திரும்பிய போது எடுத்த படம். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அழகு சுப்பிரமணியம் (1910-1971) வழக்கறிஞராகவும் (barrister-at-law), சிறுகதை, வானொலி நாடக எழுத்தாளராகவும், நாடகக் கதாசிரியராகவும் திகழ்ந்தார். அவரது தந்தையார் பிரித்தானிய காலனித்துவ இலங்கையில் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவரது பாட்டனார் ஒரு இலக்கிய கர்த்தா. இந்த இரண்டு தொழில்முறைகளையும் வெற்றிகரமாக ஒருமிக்க வைத்த அழகு சுப்பிரமணியம், தலை சிறந்த வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். 1933 ஆம் ஆண்டில் 23 வயதிலேயே இங்கிலாந்தின் லிங்கன் நீதிமன்ற அகத்தின் கௌரவக் கழகத்தில் (Honourable Society of Lincoln’s Inn) அனுமதிக்கப்பட்டார். 1941இல் இங்கிலாந்தில் வழக்கறிஞராகத் தொழில் புரியும் அனுமதி பெற்றார் (called to the bar). இலண்டன் மாநகரின் ப்ளூம்ஸ்பெரி இலக்கிய வட்டங்களில் ஏற்கெனவே நன்றாக அறியப்பட்டிருந்தவர், இலண்டன் எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும் ஒன்றுகூடல்களில் ஒரு பெரிய ஆளுமையாக வரவேற்கப்பட்டார். Indian Writing என்ற இலக்கியச் சஞ்சிகையை நிறுவிய பத்திரிகாசிரியர்களில் ஒருவராக அழகு சுப்பிரமணியம் கடமையாற்றினார். இந்தச் சஞ்சிகையில் இரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளியிடப்பட்டன. விரைவிலேயே இந்தச் சஞ்சிகை இலண்டனில் இருந்த தெற்காசியாவைச் சேர்ந்த தீவிரமான காலனித்துவ எதிர்ப்புவாதிகளின் இயங்கு தளமாக உருவெடுத்தது. இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலண்டன் கிளையின் செயலாளர் என்ற முறையில் அழகு சுப்பிரமணியம் இலண்டனைச் சேர்ந்த உள்ளாட்சி இல்லம் (Swaraj House) என்ற காலனித்துவ எதிர்ப்பு அமைப்பில் ஈடுபட்டிருந்தார். 1935ஆம் ஆண்டின் பனிக்கால மாதங்களில் Bibliophile என்ற புத்தகக் கடையைத் திறந்த சசதர் சின்ஹாவின் உதவியாளராகவும் பணியாற்றினார். 1947இல், இலங்கை சுதந்திரமடைவதற்குச் சற்று முன்னர், இலங்கை திரும்பினார். அழகு சுப்பிரமணியத்தின் கதைகள் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசியின் உள்ளக மற்றும் வெளிநாட்டுச் சேவைகளில் ஒலிபரப்பப் பட்டன. அவரது ஆக்கங்கள் தமிழுக்கும் மற்றும் ரஷ்ய, போலிய, இடாய்ச்சு (யேர்மன்), கன்னட மொழிகளுக்கும் மொழியாக்கப் பட்டன. நகைச்சுவை ததும்பும் ‘The Mathematician’ என்ற சிறுகதை உலகளாவிய ஆளுமையான அன்டன் செகோவின் எழுத்துக்கு நிகரானது எனக் கருதப்படுகிறது. இதன் இடாய்ச்சு மொழியாக்கம், ஹைடல்பேர்க் நகரத்தில் வெளியிடப்பட்ட Briefly Told: The Finest Stories, in World Literature என்ற தொகுப்பில் உள்ளடக்கப் பட்டது. ‘Lovely Day’ என்ற கதை Best Indian Short Stories என்ற தொகுப்பில் இடம்பெற்றது. இன்றும் இவரது ஆக்கங்கள் இலங்கையில் ஆங்கில இலக்கிய மாணவர்கள் பலரை, பல்கலைக்கழக இளமானி மாணவர்கள் உட்பட, உவக்க வைக்கின்றன. அழகு சுப்பிரமணியத்தின் சில சிறுகதைகள் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களால் மொழிபெயர்ககப்பட்டு “நீதிபதியின் மகன்” என்ற தலைப்புள்ள சிறுகதைத் தொகுப்பாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது. இவை கொழும்பில் இலங்கை தேசிய நூலகத்திலும் இலண்டனில் பிரித்தானிய நூலகத்திலும் உள்ளன. இதுவரை தமிழாக்கப்படாத சிறுகதைகளை எழுத்துக்கினியவனும் அனுஜா பிரகாஷும் தமிழாக்கி வருகிறார்கள். இந்த இதழில் வெளியாகும் “மதமாறி” என்பது அப்படியான ஒரு கதையே. Art : Слава எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-convert-shorts-story/ அழகு சுப்பிரமணியம்- https://thuppahis.com/2022/03/07/the-extraordinary-alagu-subramaniam/
-
பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு
மனித இனத்தில் தப்பிப் பிறந்த மிருகங்களின் செயல்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுகவினரே உள்ளவர்களில் மிகப் பெரும் கொள்ளையர்கள் என்பதே என் அபிப்பிராயம். இதை நான் மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன். திமுகவின் குடும்ப ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். ஆனால் மாற்றீடாக முன்னிறுத்தப்படுபவர்கள் சமூகத்தை ஒரு சிறு அளவேனும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இருப்பதை விட இன்னும் கீழ் நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு நிகழ்வாக புதிய வரவு அமையக் கூடாது. விஜய்க்கு முன்னேயே கமல் இன்றைய திமுகவை எதிர்க்க வந்தார். ஒழுங்காக வரி கட்டவில்லை என்னும் குற்றம் கூட அவரிடம் காணமுடியாது. தனிப்பட்ட ரீதியில் தனக்கு திருமண பந்தத்தில், இந்த குடும்ப அமைப்பில் நம்பிக்கை கிடையாது என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை ஒரு சர்ச்சையாகவோ அல்லது விளம்பரமாகவோ ஆக்கவில்லை. அது ஒரு பேசுபொருளாகவே ஆகவில்லை. ஓரளவுக்கு மக்களிடையே பயணிக்க முற்பட்டார். ஆனால் அவருக்கு சுயநினைவு இருக்கும் வரை அறிவுஜீவி என்னும் முகமூடியை அவர் கழட்டப் போவதில்லை. அவர் ஒரு துறையில் மிகவும் சிறந்தவர், வல்லுனர் என்பதை ஏற்றுக் கொள்ளும் நேரத்தில், அவர் எந்த வகையிலும் ஒரு அறிவுஜீவி கிடையாது என்பதும் உறுதி. அர்னாப் வழி நடத்திய கமல் - ஸ்மிருதி இரானி இடையேயான விவாதத்தை பார்த்தீர்கள் என்றால் நான் சொல்வது புரியும். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்ட அவரால் மக்களுடன் இறங்கி வரவே முடியவில்லை. தமிழ்நாட்டின் பிரச்சனைகளைக் கூட அவர் புரிந்து கொள்ளவில்லை. நான் கதையாக எழுதிய என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் பற்றிய நிகழ்வு கமலின் அரைகுறை புரிதலுக்கு, அதனால் வரும் ஆபத்துக்கு நல்லதொரு உதாரணம். கமலின் அரசியல் முயற்சி பற்றி இன்னும் பலதை எழுதலாம். ஆதலால், நான் ஆரம்பத்தில் இருந்தே கமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், இன்னும் சில அழியாப் படங்களை அவரால் கொடுக்க முடியும், கமலின் அரசியல் ஒரு ஆக்கபூர்வமான அரசியலே அல்ல என்று எழுதியிருக்கின்றேன். கமலை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ரஜனிக்கும் அதிகம் தான். அஜித்துக்கும் அதிகமே. தமிழ்நாட்டு ரசிகர்களின் பின்புலங்களை ஆராய்ந்தால், கமல் - ரஜனி - விஜய் - அஜித் ரசிகர்களின் இடையே ஒரு தெளிவான கோடு இருப்பது தெரியும். ரஜனியினதும் விஜய்யினதும் பெரும்பாலான ரசிகர்கள் ஒரு வகையினராகவும், கமலினதும் அஜித்தினதும் பெரும்பாலான ரசிகர்கள் இன்னொரு வகையினராகவும் இருக்கின்றார்கள். தங்கள் குரல்கள் கேட்கப்படவில்லை, தாங்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றோம் என்னும் ஒரு சாரார் எங்கும், என்றும் இருக்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கின்றார்கள் - அதிபர் ட்ரம்ப் பின்னால் சென்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள் - அர்ச்சுனாவின் பின் சென்றார்கள். வட இந்தியாவில் இருக்கின்றார்கள் - பாஜகவின் பின் செல்கின்றார்கள். இனவாதம், மதவாதம், ஒரு தற்காலிக கவர்ச்சி என்று ஒன்றைப் பற்றிக் கொள்ளுகின்றார்கள். அதை ஒரு புரட்சி என்று நினைத்தும் கொள்ளுகின்றார்கள். விஜய்யின் பெரும்பாலான ரசிகர்களும் இந்த வகையினரே. இவர்கள் பொதுவான இளைஞர்கள் கிடையாது, இவர்களின் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமே. 'சங்கீதா போகட்டும்.............. நானே மனைவியாக வருகின்றேன்.....................' என்று பொதுவெளியில் முழக்கம் இடுபவர்கள். இதற்கு விஜய் அவருடைய ரசிகர்களுக்கு சொல்லிய பதில் என்ன.................... திமுகவின் குடும்ப ஆட்சியை ஒழிக்க இவர்களையா தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மேடையில் விஜய் தோன்றி மறைவதும், ஒரு பொருள் விற்பனைக்கான சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லும் ஒரு நடிகரின் தொலைக்காட்சி விளம்பரத்துக்கும் ஒரு வித்தியாசமும் இதுவரை தெரியவில்லை. இதில் என்ன தமிழ்நாட்டு நலன் சார்ந்த அரசியல் இருக்கின்றது? விஜய் இதுவரை எங்கு மக்களுடன் மக்களாக போய் இருந்திருக்கின்றார்? எந்த பிரச்சனையில் முன் நின்று போராடியிருக்கின்றார்? எவருடன் உரையாடியிருக்கின்றார்? கூட்டம் அடங்காமல் போய் விடும் என்று சொல்லுவார்கள். அது அடங்கவே கூடாது என்பது போலவே தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றீர்கள். அடங்காத இந்தக் கூட்டத்துடன் அவரது ரசிகர்களைத் தவிர வேறு எவரும் இணையப் போவதில்லை. விஜய் திருச்சி கிழக்கில் ஏன் நிற்கின்றார்? கிறிஸ்தவர் என்பதால் தானே............... தாரளமாக அங்கே அவர் நிற்கட்டும். திராவிடக் கட்சிகளும் இதையே தானே செய்கின்றன. இதில் இவர் என்ன மாற்று? விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு தப்பும் தவறும் ஆகவே தெரிகின்றது. இவரால் ஒரு மாற்று அரசியலை கொடுக்க முடியும் என்றோ, இவர் பின்னால் போகும் இளைஞர்களை இவர் சரியான பாதையில் வழிநடத்துவார் என்றோ, இவரால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றோ நான் நினைப்பதற்கு எந்த விதமான செயல்களும் விஜய்யாலோ அல்லது தவெக கட்சியினராலோ இதுவரை நடக்கவில்லை. மாறாக, விஜய்க்கு பின் த்ரிஷா என்னும் இன்னொரு வாரிசு அரசியல் தான் என் கண்களுக்குத் தெரிகின்றது. விஜய்யின் மாற்று அரசியல் தோற்று விட்டால், விஜய் காணாமல் போய் விடுவார். விஜய்க்கு வெறுமனே அதிகாரமும், விளம்பரமும் இல்லாமல் அடுத்த ஐந்து வருடங்கள் அரசியலில் இருந்து, அவரது கட்சியை வளர்க்கும் பக்குவம் கிடையாது. அவரது ரசிகர்களுக்கும் கிடையாது. அதன் பின் திமுகவை அசைப்பதற்கு திமுக சரி பாதியாக உடைவது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தெரிவாக இருக்கப் போகின்றது. நல்ல அரசியல்வாதிகளும், சில இயக்கங்களும் இன்னும் இருக்கின்றன. நல்லகண்ணு ஐயா போய்விட்டார். ஆனால் அவரின் இடத்தை சு . வெங்கடேசன் பல வருடங்களாகவே நிரப்பிக் கொண்டிருக்கின்றார். சைக்கிளில் தான் மதுரை எங்கும் போய் வருகின்றார். மக்களுக்காக, மண்ணுக்காக வாழ்கின்றார். தொல். திருமாவும், விடுதலைச் சிறுத்தைகளும் பட்டியலின மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அரசியல் பணம், புகழ் தேடும் அரசியல் இல்லை.