stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 22 காளைகளை பிடித்தவருக்கு கார் பரிசு - முழு விவரம் 15 ஜனவரி 2026, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 57 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு, தமிழ்நாட்டின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 573 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 561 பேர் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் இறுதிச் சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்றன. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முதல் பரிசாக கார் படக்குறிப்பு,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளைப் பிடித்து, முதல் இடத்தைப் பிடித்த மதுரை மாவட்டம், வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தில், 17 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாடுகளுக்கான பரிசுகளில் முதல் இடத்தைப் பிடித்த விருமாண்டி சகோதரர்கள் காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளைக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பதினோராவது சுற்று நிலவரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11ஆம் சுற்று முடிவில், களம் கண்ட 870 மாடுகளில் 219 மாடுகள் பிடிபட்டன. இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மொத்த வீரர்கள் - 36 வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 கார்த்திக், திருப்பரங்குன்றம் - 10 11ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அமரன், சிவகங்கை - 4 ஒன்பதாம் சுற்று நிலவரம் ஒன்பதாம் சுற்றின் முடிவில், களம் கண்ட 764 மாடுகளில் 190 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 9ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 ராபின், செக்கானூரணி - 3 ராஜு, செக்கானூரணி - 2 https://www.bbc.com/tamil/articles/c5y5l9l2y31o
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
Kattumaram- chennai.png
-
Paathai type boat - 1955-05-10.jpg
-
lakshadweep Konthalam type boat in Ceylon/ 1940-10-07/ Rare image
-
In the sea are some of the bigger boats (Vallams with mast) that ferry pilgrims across from the mainland 10 miles away.jpg
-
1961-03-09 / Eelam Tamils using Pilaavu canoe type - satyagraha Blockade at (looks like Jaffna fort) - First known image of Red-Yellow- (another colour) flag usage / Tamil Eelam Freedom struggle
-
1957-02-02/ Vallams
-
Kokamaram - bigger version of Kaithumaram - Kanniyakumari
-
Kaiththumaram with sail - kanniyakumari
-
kevu vallam.jpg
-
kevu vallam, 1978.jpg
-
Kevu Vallam
-
Antique Print of the harbour of Negapatan by Renneville (1702).jpg
-
Kerala Cherai Beach Vanjchi/ வஞ்சி
-
வஞ்சி/ vanchi - sea going.jpg
-
ottakkori Vallam/ ஒட்டக்கோரி வள்ளம்
-
chavam, malabar caost, kerala
-
Pattamar - Thomas Cussans, Lt., Madras Artillery, dated July 30, 1817. .jpg
-
kanna thoni.jpg
-
padaku, kattu vallam - Poompuhar, Tamil Nadu | Same boat is in Pulicat lake
-
champathoni.jpg
-
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்; இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு 15 Jan, 2026 | 12:01 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த கிரிக்கெட் நட்சத்திர தலைமுறையினரின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், தைப்பொங்கல் தினமான இன்று ஆரம்பமாகிறது. ஸிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறும் 16ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயம் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இளையோர் அணிகளுக்கு இடையில் ஸிம்பாப்வே, புலாவாயோவில் இன்று நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகும். சி குழுவில் இடம்பெறும் ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டி ஹராரேயிலும் டி குழுவில் இடம்பெறும் அறிமுக அணி தன்ஸானியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி விண்ட்ஹோக்கிலும் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் யாவும் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும். ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானை விண்ட்ஹோக்கில் 18ஆம் திகதி சந்திக்கும். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 240 இளம் வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் முதன் முதலில் அவுஸ்திரேலியாவில் அந்நாட்டின் 200 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்டது. இதற்கு அமைய அங்குரார்ப்பண அத்தியாயம் 1988ஆம் ஆண்டு மெக்டொனல்ட்ஸ் பைசென்டினியல் இளையோர் உலகக் கிண்ணம் என பெயரிடப்பட்டிருந்தது. பத்து வருடங்கள் கழித்து ஐசிசி 19 வயதுக்குட்ட உலகக் கிண்ணம் (ஆண்கள்) என பெயரிடப்பட்டு 1998 இல் இருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அங்குரார்ப்பண அத்தியாயத்தில் விளையாடிய சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரண, சஞ்சீவ ரணதுங்க, சந்திக்க ஹத்துருசிங்க போன்றவர்கள் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றனர். அவர்களில் சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரன ஆகிய இருவரும் 1996 உலக சம்பியன் அணியில் இடம்பெற்றதுடன் உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது பெறுமதி வாய்ந்த வீரர் விருதை வென்ற பெருமை சனத் ஜயசூரியவை சாருகிறது. இந்த வருட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியனுமான அவுஸ்திரேலியா (1988, 2002, 2010, 2024), ஐந்து தடவைகள் சம்பியனான இந்தியா (2000, 2008, 2012, 2018, 2022), இரண்டு தடவைகள் சம்பியனான பாகிஸ்தான் (2004, 2006), தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து (1998), தென் ஆபிரிக்கா (2014), மேற்கிந்தியத் தீவுகள் (2016), பங்களாதேஷ் (2020) ஆகிய நாடுகளில் ஒன்று மீண்டும் சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏழு நாடுகள் உட்பட 16 நாடுகள் நான்கு குழுக்களில் மோதுகின்றன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் இலங்கை இடம்பெறுகிறது. பி குழுவில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகியன இடம்பெறுகின்றன. சி குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன பங்குபற்றுகின்றன. டி குழுவில் ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன போட்டியிடுகின்றன. இந்த நான்கு குழுக்களிலும் முதல் சுற்று போட்டிகள் இன்று ஜனவரி 15 முதல் 24 வரை லீக் அடிப்படையில் நடத்தப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 12 அணிகள் இரண்டு குழுக்களில் தலா 6 அணிகள் வீதம் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெறும். இந்த சுற்று ஜனவரி 25 முதல் பெப்ரவரி 1 வரை நடைபெறும். லீக் சுற்றில் கடைசி இடங்களைப் பெறும் 4 அணிகள் நிரல்படுத்தல் போட்டியில் விளையாடும். சுப்பர் 6 சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடுவதுடன் அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிப் போட்டிகள் பெப்ரவரி 3, 4ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியும் நடைபெறும். https://www.virakesari.lk/article/236080
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பயனாளியின் முகம் மறைக்கப்பட்ட படம். வங்கிப்பரிமாற்ற பிரதி.
- Today
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம் டி குழு: ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மெற்கிந்தியத் தீவுகள் Published By: Vishnu 14 Jan, 2026 | 08:49 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயத்தில் டி குழுவில் மீண்டும் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரண்டு முன்னாள் சம்பியன்களான தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் ஆப்கானிஸ்தான், அறிமுக அணி தான்சானியா ஆகியன போட்டியிடுகின்றன. தென் ஆபிரிக்கா 2014இல் சம்பியனானதுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரவேற்பு நாடாக அரை இறுதிவரை முன்னேறி இருந்தது. 2016இல் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் எட்டு வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கான முயற்சியில் இறங்கவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகக் குறுகிய வித்தியாசத்தில் அரை இறுதி வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் தவற விட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் இரண்டு தடவைகள் (2018, 2022) அரை இறுதிவரை வீறுநடை போட்டிருந்தது. ஆனால், 2024இல் முதல் சுற்றுடன் வெளியேறியது. தன்சானியா தனது அறிமுக உலகக் கிண்ணத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கவுள்ளது. ஆப்கானிஸ்தான் 2024 இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அடைந்த ஆப்கானிஸ்தான், அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறியது. இம் முறை அரை இறுதி அல்லது அதற்கும் அப்பால் முன்னேற ஆப்கானிஸ்தான் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவில் 2024இல் நடைபெற்ற உலகக் கிண்ண அத்தியாயத்தில் 3 நேரடி தோல்விகளுடன் முதல் சுற்றில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது. எதிர்நீச்சல் போடக்கூடிய தன்மை கொண்ட ஆப்கானிஸ்தான், இம் முறை எதிரணிகளுக்கு சவாலாக விளங்கி எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் 2010ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளையாடி வருகிறது. அத்துடன் நான்கு தடவைகள் நொக் - அவுட் சுற்று வரை முன்னேறி இருந்தது. உசைருல்லா நியாஸாய், பங்களாதேஷுக்கு எதிராக 103 ஓட்டங்களைப் பெற்ற பைசால் கான் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த போதிலும் குழு நிலை போட்டிகளுக்கு அப்பால் ஆப்கானிஸ்தான் முன்னேறவில்லை. 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணித் தலைவராக விக்கெட் காப்பாளர் மஹ்பூப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். நூரிஸ்தானி ஓமர்ஸாய் மற்றும் ஸய்த்துல்லா ஷஹீன் ஆகிய இருவரும் அணியில் இடம்பெறும் சிறந்த பந்துவீச்சாளர்களாவர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் விளையாடிய எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்கா இரண்டு வருடங்களுக்கு முன்னர் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்ட தென் ஆபிரிக்கா, இம்முறை அதனைவிட சிறப்பாக செயல்படும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளது. இந்த வருடப் போட்டி ஆபிரிக்க கண்டத்தில் நடைபெறுவதால் ஸிம்பாப்வே, நமிபியா ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்தவர்களாக தென் ஆபிரிக்க வீரர்கள் இலகு மனதுடன் ஆற்றல்களை வெளிப்படுத்தி தமது அணியை இரண்டாவது தடவையாக சம்பியனாக்க முயற்சிக்கவுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 2024இல் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது விளையாடிய வீரர்கள் எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்க அணியின் தலைவராக முஹம்மத் புல்புலியா நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புல்புலியா தலைமையிலான தென் ஆபிரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றது. அந்தத் தொடரில் விளையாடிய பெரும்பாலானவர்கள் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுவதுடன் ஜோரிச் வென் ஷோக்வைக், அத்னான் லகாடியென் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நிட்டண்டோயென்கோசி சோனி, பயண்டா மஜோலா முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர். தன்ஸானியா ஆபிரிக்க பிராந்தியத்தில் வளர்முக கிரிக்கெட் நாடுகளுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 13 நாடுகள் போட்டியிட்ட போதிலும் அவற்றை எல்லாம் பின்தள்ளி முதல் முறையாக ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தன்ஸானியா தகுதிபெற்றுள்ளது. முதலில் முன்னோடி தகுதிகாண் சுற்றில் விளையாடிய தன்ஸானியா அதில் வெற்றி பெற்று பிரதான ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. அங்கு ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தன்ஸானியா தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் வெற்றியீட்டி 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. தகுதிகாண் போட்டிகளில் ஈட்டிய வெற்றிகள் தன்ஸானியாவை உற்சாகம் அடையச் செய்துள்ளதுடன் முதல் தடவையாக ஆபிரிக்காவுக்கு வெளியே உள்ள அணிகளை எதிர்த்தாடவுள்ளது. ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய லக்ஷ் பக்ரானியா அணித் தலைவராக விளையாடுகிறார். சகலதுறை ஆட்டக்காரரான லக்ஷ் பக்ரானியா துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்ததுடன் பந்துவீச்சில் சிரான இடைவெளியில் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 18 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான பக்ரானியா, தன்ஸானியாவின் சிரேஷ்ட அணியில் இடம்பெற்றதுடன் நமிபியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஹம்சா அலி மற்றும் ரேமண்ட் பிரான்சிஸ் ஆகியோருடன் இணைந்து வேகப்பந்துவீச்சில் காலிதி அமிரி பந்துவீச்சை வழிநடத்துவார். அக்ரே பஸ்கல் மற்றும் அகஸ்டினோ மவாமெலே ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரதான பங்களிப்பு செய்யவுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அற்புதமான சாதனைகளைப் பதிவுசெய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் 2016இல் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 10 வருடங்களில் நொக் அவுட் சுற்றை மேற்கிந்தியத் தீவுகள் நெருங்கவில்லை. 2016இல் இந்தியாவை இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இம்முறை டி குழுவில் அதேபோன்ற ஆற்றல்களை வெளிப்படுத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் குறைந்த பட்சம் சுப்பர் 6 சிக்ஸ் விளையாடுவதை உறுதிசெய்துகொள்ளும். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 2024இல் விளையாடிய ஜோசுவா டோர்ன் இம்முறை அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இரண்டாவது உலகக் கிண்ணத்தில் ஜுவெல் அண்ட்றூ விளையாடவுள்ளார். இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் டோர்ன மிகத் திறமையாக செயல்பட்டிருந்தார். அந்தத் தொடரில் ஜக்கீன் பொல்லார்ட், ஷக்வான் பெலே ஆகிய இருவரும் பந்துவீச்சில் திறமையாக செயல்பட்டதுடன் உப அணித் தலைவர் ஜொநதன் வென் லங்கே அதிரடிக்கு பெயர் பெற்றவராவார். போட்டி விபரங்கள் ஜனவரி 15 – தன்ஸானியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 16 – ஆப்கானிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா ஜனவரி 18 – ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 19 – தென் ஆபிரிக்கா எதிர் தன்ஸானியா ஜனவரி 21 – ஆப்கானிஸ்தான் எதிர் தன்ஸானியா ஜனவரி 22 – தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் https://www.virakesari.lk/article/236055
-
வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு
வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு 14 Jan, 2026 | 04:35 PM வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. வெனிசுவெலா நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எண்ணற்ற அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது, வெனிசுவெலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவு என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெனிசுவெலாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான போரோ பீனல் வெளியிட்ட செய்தியறிக்கையில், அரசியல் காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்ட 56 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், வெனிசுவெலா அரசு 400 பேரை விடுவித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது. ஆனால், விடுவிப்புக்கான சான்றுகளையோ அல்லது எப்போது விடுவித்தது என்பது பற்றிய தகவலையோ வெளியிடவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களின் அடையாளமும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லது பிற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களா? என்ற விபரம் தெரியவில்லை. கடந்த ஜூலையில் வெனிசுவெலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 10 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. வெனிசுவெலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பின்னர், வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளின் விடுவிப்பு விடயங்கள் அதிக கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236040
-
சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம் 15 Jan, 2026 | 02:04 PM விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். உலகளாவிய பயண சுதந்திரத்தில் இது மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. 2-வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் குடிமக்கள் விசா இன்றி பெரும்பாலான உலக நாடுகளுக்குப் பயணிக்க முடியும். 3-வது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் டென்மார்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 186 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். அமெரிக்கா 10-வது இடத்திற்கு சரிவு ஒரு புள்ளி சரிவுடன், அமெரிக்கா இந்த ஆண்டு பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய இயலும் என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. இந்தியாவின் நிலை இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கே விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் நிலை இலங்கையின் பாஸ்போர்ட் உலகளாவிய ரீதியில் 93 ஆவது இடத்தில் உள்ளது. இது இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 39 நாடுகளுக்குக் விசா இல்லாமல் அல்லது விசா- ஒன் அரைவல் (visa-on-arrival) முறையிலேயும் பயணம் செய்யும் உரிமையை வழங்குகிறது. உலகளாவிய அரசியல், இராஜதந்திர உறவுகள் மற்றும் குடிவரவு கொள்கைகள் போன்றவை பாஸ்போர்ட் தரவரிசையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் இந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியல் வெளிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/236093
-
நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்
நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம் 15 Jan, 2026 | 12:59 PM நாடு தழுவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (15) தைப்பொங்கல் திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருவதோடு,இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நீர்கொழும்பு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று காலை நீர்கொழும்பு ஸ்ரீ சிங்க மகா காளியம்மன் கோயிலில் பரமேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட பூஜை நடைபெற்றது. அம்பாளுக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை, சூரிய பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்றதை அடுத்து அம்பாள் உள்வீதி வலம் வருதல் தொடர்ந்து இடம் பெற்றது. இந்த விஷேட பூஜையில் அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன. பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. திருகோணமலை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமான இன்று திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளிலும் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றன. குறிப்பாக ஆலயங்களிலும் ,வீடுகளிலும் விசேட வழிபாடுகள் தைப்பொங்கல் நாளான இன்று இடம் பெற்றன. சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் விசேடமாக பூஜை வழிபாட்டுடன் பொங்கல் இடம் பெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் குடும்பங்களாக சேர்ந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் போன்ற ஆலயங்கள் மற்றும் வீடுகளில்,பொது இடங்களிலும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா குருக்களினால் இப்பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு கைவிசேஷமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும். https://www.virakesari.lk/article/236087
-
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்.
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னரே அவரது பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும். ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் போது முதலில் பதிலளிக்கும் உரிமை போன்ற சலுகைகளை அவர் இழப்பார் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மணிநேர விவாதத்திற்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர் கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் அந்த ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சட்டவாக்க உறுப்பினர் ரயீஸா கான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணொருவரிடம் பொலிஸார் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதை தான் கண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததே இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பின்னர் அவர் தனது கூற்று உண்மையல்ல என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பான நாடாளுமன்ற குழுவின் விசாரணையில், சிங் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் இந்த பொய்யான தகவலை அறிந்திருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தியமை தெரியவந்தது. பின்னர் கான் கட்சியிலிருந்தும் நாடாளுமன்றத்திலிருந்தும் இராஜினாமா செய்ததுடன், பொய்யான தகவல்களைக் கூறியமை மற்றும் நாடாளுமன்றபாராளுமன்ற சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கானின் வழக்கை விசாரிக்கும் போது நாடாளுமன்ற குழுவின் முன் ஆஜராகி சத்தியப்பிரமாணம் செய்து பொய் கூறியமை தொடர்பில் சிங்கிற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவருக்கு பல்லாயிரக்கணக்கான டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைகள் முழுவதும் தான் நிரபராதி என்று கூறிய சிங், உணர்வுபூர்வமான விடயமொன்றைக் கையாள்வதற்கு கானுக்கு அவகாசம் வழங்கவே வேண்டும் என விரும்பியதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர், அத்தீர்ப்பிற்கு எதிராகச் செய்த மேன்முறையீடும் தோல்வியடைந்தது. https://athavannews.com/2026/1460081
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்களும், அனுதாபங்களும் மோகன் மற்றும் குடும்பத்தினருக்கு. மீள்வதற்கும் எனது பிரார்த்தனைகள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் வெடிக்கும் வன்முறைகள், போராட்டங்கள்! : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக அதிகரிப்பு 14 Jan, 2026 | 02:17 PM ஈரானில் அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 2403 பேர் போராட்டக்காரர்கள், 147 பேர் அரசு தரப்பினர், 12 பேர் சிறுவர்கள் கொல்லப்பட்டதோடு போராட்டங்களில் பங்கேற்காத பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தபோதும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக ஈரானில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமாக எந்த ஆயுதங்களுமின்றி நிற்கும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக போராட்டக்கார்கள் கூறுகின்றனர். கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்து நின்று படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இப்போராட்ட நிலை காரணமாக ஈரானில் கைப்பேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சில தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட எர்பான் என்ற 26 வயதுடைய இளைஞனுக்கு இன்று (14) ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக வெளியான அறிவிப்புகள் அந்நாட்டில் மேலும் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236016
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் கள நிலவரம் - நேரலை 15 ஜனவரி 2026, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது. திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் எட்டு சுற்றில் இருந்து 12 சுற்று வரை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஆறாம் மற்றும் ஏழாம் சுற்று நிலவரம் ஆறாம் சுற்றின் முடிவில், மாடுபிடி வீரர்கள் 23 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் என மொத்தம் 44 பேர் காயமடைந்தனர். அதன் பிறகு நடைபெற்ற ஏழாம் சுற்றில், களம் கண்ட 616 மாடுகளில், 149 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 7 விஜய், ஜெய்ஹிந்தபுரம் - 7 ஏழாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: ரஞ்சித்குமார், அவனியாபுரம் - 3 முத்துவன்னி, மதுரை - 3 நாகராஜ், மதுரை - 3 கோபி கிருஷ்ணன், திண்டுக்கல் - 3 மாயக்கண்ணன், சிவகங்கை - 2 ஹரிஹரன், மதுரை - 2 கண்ணன், மதுரை - 2 வேல்முருகன், திருப்பரங்குன்றம் - 2 பட மூலாதாரம்,X/pmoorthy21 ஐந்தாம் சுற்று நிலவரம் ஐந்தாம் சுற்று முடிவில், களம் சென்ற 464 மாடுகளில், 109 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 6 5ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: விஜயகுமார், அய்யனார்குளம் - 5 அரவிந்த், குன்னத்தூர் - 4 பொன்பாண்டி, கருப்பாயூரணி - 4 அருண்பாண்டி, கருப்பாயூரணி - 2 பட மூலாதாரம்,X/pmoorthy21 நான்காம் சுற்று நிலவரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் நான்காவது சுற்றின் முடிவில் மொத்தம் 376 மாடுகள் களம் சென்றன. அவற்றில் 89 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 6 4ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: ரஞ்சித், அவனியாபுரம் - 9 டேவிட் வில்சன், புகையிலைப்பட்டி - 4 பரணி, அய்யம்பாளையம் - 2 ராகுல், அவனியாபுரம் - 2 மொத்தம் 12 வீரர்கள் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். பட மூலாதாரம்,X/pmoorthy21 மூன்றாம் சுற்று நிலவரம் 10 மணி வரையிலான தரவுகளின்படி, பரிசோதனைக்கு சென்ற 356 காளைகளில், 332 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. 24 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மூன்றாவது சுற்று முடிவில் களம் சென்ற மொத்த மாடுகளின் எண்ணிக்கை 288. அதில் 61 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அதிக காளைகளைப் பிடித்து முன்னணியில் உள்ள வீரர்களின் பட்டியல் கார்த்தி, அவனியாபுரம் - 16 பிரகாஷ், சோழவந்தான் - 6 விக்னேஷ், சாப்டூர் - 3 முத்துப்பாண்டி, பேரையூர் - 3 ரிஷி, அவனியாபுரம் - 2 முரளி, மாடக்குளம் - 2 முதல் சுற்று காலை 8 மணி நிலவரப்படி, பரிசோதனைக்கு வந்த மொத்தம் 137 காளைகளில் 126 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, பரிசோதனையில் 11 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. முதல் சுற்று முடிவில் 11 மாடுகள் பிடிபட்டுள்ளன. இந்த சுற்றில் 11 வீரர்கள் தலா ஒரு மாடு மட்டுமே பிடித்துள்ளதால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இங்கு மொத்தம் 15 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, காயத்திற்கு உள்ளாகும் காளை மாடுகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வகையில் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பாக ஆங்காங்கே ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y5l9l2y31o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : குழு சி இல் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே Published By: Vishnu 13 Jan, 2026 | 09:35 PM (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கான சி குழுவில் முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன இடம்பெறுகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனான பாகிஸ்தான், மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது. 2024இலும் 2006இலும் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனான பாகிஸ்தான் 3ஆவது தடவையாக சம்பியானாகும் குறிக்கோளுடன் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளது. அதேவேளை, 38 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் சம்பியனான இங்கிலாந்து, இரண்டாவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து விளையாடவுள்ளது. அவுஸ்திரேலியாவில் 1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண அத்தியாத்தைத் தவிர்ந்த மற்றைய 14 அத்தியாயங்களிலும் ஸிம்பாப்வே பங்குபற்றியதுடன் ஸ்கொட்லாந்து 11ஆவது தடவையாக களம் இறங்குகிறது. இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் ஐந்து நாடுகளே இதுவரை சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றான இங்கிலாந்து, 1998இல் உவைஸ் ஷா தலைமையில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. சம்பியனான அந்த அணியில் தற்போதைய இங்கிலாந்து பணிப்பாளர்நாயகம் ரொப் கீ இடம்பெறுவதுடன் க்ரேம் ஸ்வோனும் விளையாடி இருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர் அன்டிகுவாவில் 2022இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை இங்கிலாந்து முன்னேறி இருந்தது. ஆனால், இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியன் பட்டத்துடன் திருப்தி அடைந்தது. இங்கிலாந்தில் நடத்தப்படும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பல வீரர்கள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுகின்றனர். அணித் தலைவர் தோமஸ் ரீவ் (சமர்செட்), பர்ஹான் அஹ்மத் (நொட்டிங்ஹாம்ஷயர் சகலதுறை வீரர்) ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர். கவுன்டி கிரிக்கெட் சம்பியன்ஷிப்பில் 8 போட்டிகளில் 13 விக்கெட்களைக் கைப்பற்றிய பர்ஹான் அஹ்மத், தனது அணி சம்பியனாவதில் பெரும் பங்காற்றி இருந்தார். அவர்கள் இருவரைவிட ஜேம்ஸ் மின்டோ (டேர்ஹாம்), ஈசாக் மொஹம்மத் (வூஸ்டர்ஷயர்) ஆகியோரும் கவுன்டி கிரிக்கெட் அனுபவத்துடன் அணியில் இடம்பிடித்துள்ளனர். எவ்வாறாயினும் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 5 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்திருந்தது. இது இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தாலும் இளையோர் உலகக் கிண்ணத்தில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பங்குபற்றவுள்ளது. பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஆசிய சம்பியனான சூட்டோடு பாகிஸ்தான் இந்த உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சமீர் மின்ஹாஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 172 ஓட்டங்களைக் குவித்ததுடன் அவர் மொத்தமாக 471 ஓட்டங்களைப் பெற்றார். இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஐந்து தடவைகள் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியுள்ளதுடன் 2004இலும் 2006இலும் சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது. 2006இல் தலைவராக விளையாடிய சப்ராஸ் அஹ்மத், 2017இல் அணித் தலைவராக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானை சம்பியன் ஸ்தானத்திற்கு உயர்த்தி இருந்தார். 2014க்குப் பின்னர் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறாத போதிலும் கடந்த 4 அத்தியாயங்களில் அரை இறுதிகளில் விளையாடி இருந்தது. ஸ்கொட்லாந்து தமது சொந்த மண்ணில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற ஸ்கொட்லாந்து தகுதிபெற்றது. அந்த சுற்றுப் போட்டியில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து, இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 20 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஐரோப்பிய தகுதிகாண் சம்பியன் என்ற அந்தஸ்துடன் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுகின்றது. கடைசி எட்டு உலகக் கிண்ண அத்தியாயங்களில் ஏழில் விளையாடியுள்ள ஸ்கொட்லாந்து, இதுவரை குழுநிலை போட்டிகளில் வெற்றியை சுவைத்ததில்லை. எனினும், இந்த வருடம் ஸ்கொட்லாந்து தலைகீழ் முடிவுகளை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸ்கொட்லாந்து அணிக்கு தோமஸ் நைட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை ஹராரேயில் எதிர்த்தாடும். ஸிம்பாப்வே சொந்த மண்ணில் விளையாடும் ஸிம்பாப்வே அணியினர் தமது நாட்டின் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர்களாக திறமையாக விளையாடி அடுத்து சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பர் என நம்பப்படுகின்றது. இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றை ஸிம்பாப்வே வெற்றிகொண்டால் அதன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால், அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது. முன்னாள் வீரர் எல்டன் சிக்கும்புரா பயிற்றுவிக்கும் ஸிம்பாப்வே அணிக்கு சிம்பராஷே மட்ஸெங்கெரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1999 முதல் 2010 வரை ஸிம்பாப்வே அணியில் விளையாடிய அண்டி ப்ளிக்நோட்டின் புதல்வர்களான கியான், மைக்கல் ஆகிய இரட்டையர்கள் இளையோர் அணியில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். அண்மையில் இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுடனும் பங்களாதேஷுடனும் விளையாடிய ஸிம்பாப்வேயினால் ஒரு வெற்றியையும் பெற முடியாமல் போனது. ஆனால், வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் மஸவிட்டேரெரா 25.00 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி தனது சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார். போட்டி விபரங்கள் ஜனவரி 15: ஸிம்பாப்வே எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 16: இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் ஜனவரி 18: ஸிம்பாப்வே எதிர் இங்கிலாந்து ஜனவரி 19: பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 21: இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 22: ஸிம்பாப்வே எதிர் பாகிஸ்தான் https://www.virakesari.lk/article/235964
-
2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்
2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல் Published By: Vishnu 15 Jan, 2026 | 03:12 AM 2026 ஜனவரி 21 முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், 1ஆம் தரத்திற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழான பாடத்திட்டக் கற்றல் செயல்பாடுகள் ஜனவரி 29 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் 6–13ஆம் தரங்களுக்கு தினசரி பாடவேளைகள் எட்டாகவும், ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்களாகவும் அமையும். மேலும், 2026 இலும் கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரப்படுவதுடன், மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களையே முதன்மையாக பயன்படுத்த வேண்டும் என்றும், புதிய சீர்திருத்தங்களுக்கு உரிய முன்னோடித் திட்டம் சில மாகாணங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/236061
-
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் Published By: Vishnu 14 Jan, 2026 | 10:17 PM கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் www.rebuildingsrilanka.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. MIT மற்றும் டயலாக் (Dialog) நிறுவனங்களின் முன்மொழிவுக்கு அமைய, அந்த நிறுவனங்களினால் அரசாங்கத்திற்காக www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகத்தை ஒரே மேடைக்குக் கொண்டு வந்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பகமான செயல்முறையை உருவாக்குவதே இந்த இணையத்தளத்தின் பிரதான நோக்கமாகும். இந்த இணையத்தளத்தின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு நிதி ரீதியாகவும் அத்துடன் பொருட்கள், காணி மற்றும் ஏனைய வளங்களை நன்கொடையாக வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நன்கொடையாளர்கள் தமது நன்கொடைகள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் அவதானிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். மேலும், மாவட்ட ரீதியாக ஏற்பட்ட சேதங்கள், தமது நிதியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஆகியவற்றை இந்த இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது இதன் முக்கிய அம்சமாகும். இந்த இணையத்தளமானது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நன்கொடை முகாமைத்துவம், சமூக நீதி, நிலையான அபிவிருத்தி மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கமைய, www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும். https://www.virakesari.lk/article/236057
-
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு Jan 15, 2026 - 01:17 PM யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkf5cyo003ybo29nf06wgdlk
-
பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி
பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு பொங்கல் தினம் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், 1940களில் இருந்து 2000களின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தோர் ஜனவரி 14ஆம் தேதியையே பொங்கல் தினமாகக் கொண்டாடியதாகக் கூறுகிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். நிபுணர்களின் கூற்றுப்படி பொங்கல், சங்கராந்தி ஆகியவை அனுசரிக்கப்படும் தேதி மாறிக் கொண்டே வந்துள்ளது. சமீபத்தில், ஜோதிட நிபுணரான வேதாஞ்சனம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 13ஆம் தேதியன்று வெளியிட்ட பதிவில், "மகர சங்கராந்தி அடுத்த 69 ஆண்டுகளுக்கு ஜனவரி 14இல் அன்றி 15ஆம் தேதியில் வரும்" என்று குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,Getty Images இதுகுறித்துப் பேசியபோது, இந்த மாற்றங்கள் புதியதல்ல என்று கூறினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். மேலும் அவர், "நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல், 1901இல் ஜனவரி 13ஆம் தேதியிலும், 1902, 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14இலும் கொண்டாடப்பட்டது. அதுவே, 2015, 2019, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 15ஆம் தேதியே பொங்கல் கொண்டாடப்பட்டது. அதுவே, 2016, 2017, 2018, 2020, 2021, 2022, 2025 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14ஆம் தேதியன்று வந்தது" என்று தெரிவித்தார். பொங்கல், சங்கராந்தி ஆகியவை இவ்வாறாக ஒரே குறிப்பிட்ட தேதியில் வராமல், மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன? பஞ்சாங்கக் கணக்கீடுகள் தவறாகின்றனவா? பூமி சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதோடு அது தனது அச்சிலும் தன்னைத் தானே சுழல்கிறது. பூமியின் சுழற்சி அச்சு, சூரியனை சுற்றியுள்ள அதன் சுற்றுப் பாதையில் 23.5 டிகிரி சாய்வாக உள்ளது. பட மூலாதாரம்,Getty Images பூமி சூரியனை சுற்றுவது மற்றும் தன்னைத் தானே சுற்றிக் கொள்வது போக, மூன்றாவது இயக்கம் ஒன்றும் உள்ளது. அது, 23.5 டிகிரி சாய்வாக இருக்கும் அச்சின் சுழற்சியாகும். இந்த இரண்டு இயக்கங்கள் தவிர, பூமிக்கு முன்னிசைவு எனப்படும் மூன்றாவது இயக்கமும் உள்ளது. "இந்த அம்சம் பஞ்சாங்கக் கணக்கீடுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதுவே பஞ்சாங்கத்தில் பிழை ஏற்பட்டு, தேதிகள் மாறுவதற்கு முக்கியக் காரணம்" என்கிறார் முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன். பூமி தனது அச்சில் சுழல்வதால் இரவு, பகல் ஏற்படுகிறது. சூரியனைச் சுற்றி வருவதை வைத்து ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவைபோகக் கூடுதலாக, "புவி அதன் அச்சில் சுழலும்போது மெதுவாக ஒரு வட்டத்தில் சாய்ந்து சுழல்கிறது. இந்தச் சாய்வு முன்னோக்கிய அசைவு என்று அழைக்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் மெதுவாக நிகழ்கிறது. மெதுவாகச் சுழலும் பூமியின் அச்சு அதன் முழு வட்டத்தைச் சுற்றி முடிக்க 26,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. எடுத்துக்காட்டாக, துருவ நட்சத்திரம் வட வானியல் துருவத்திற்கு அருகில் உள்ளது என வைத்துக் கொள்வோம். ஆனால், கி.பி.15,000இல் பூமியின் அச்சு லைரா விண்மீன் கூட்டத்தின் பிரகாசமான நட்சத்திரமான வேகாவை சுட்டிக்காட்டும். மேலும் வட வானியல் துருவத்திற்கு அருகில் அந்த நட்சத்திரமே இருந்திருக்கும், துருவ நட்சத்திரம் இருக்காது," என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,மிகவும் மெதுவாகச் சுழலும் பூமியின் அச்சு அதன் முழு வட்டத்தைச் சுற்றி முடிக்க சுமார் 26,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது சுழலும் பம்பரம் போலத் தள்ளாடும் புவி அச்சு பூமியைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வெற்றுப் பந்து இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். அனைத்து நட்சத்திரங்களும் இந்தப் பந்தின் உட்புறப் பரப்பில் பதிக்கப்பட்டு இருப்பது போலத் தெரிகின்றன. இந்தக் கற்பனையான பந்து வானக்கோளம் என்று அழைக்கப்படுகிறது. இப்போது, புவியின் நிலநடுக்கோட்டை வரைந்து, அதை வானம் வரை நீட்டிப்பதாகக் கற்பனை செய்தால், அது வானக் கோளத்தில் ஒரு பெரிய வட்டத்தை உருவாக்குகிறது. இந்த வட்டம் வான்நிலநடுக்கோடு என்றழைக்கப்படுகிறது. "பூமி சுமார் 23.5 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இந்தச் சாய்வின் காரணமாக, சூரியன் சரியாக வான்நிலநடுக்கோட்டின் ஊடாகப் பயணிப்பதில்லை. மாறாக, சூரியன் வானத்தில் சற்றே சாய்ந்த ஒரு பாதையில் பயணிக்கிறது. இந்தப் பாதை கிரகணப் பாதை என்றழைக்கப்படுகிறது. சூரியனின் பாதையும் வான்நிலநடுக்கோடும் இரண்டு புள்ளிகளில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்றன. பூமி இந்தப் புள்ளிகளை அடையும்போது, ஒரு சம இரவு நாள் ஏற்படுகிறது. சம இரவு நாட்களின்போது, பூமியில் உள்ள ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் இரவுபகல் ஏறக்குறைய சமமாக இருக்கும்." என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மேலும் விவரித்த அவர், "சரியாக ஓராண்டுக்குப் பிறகு பூமி அதே நாளில் சம இரவுபகல் புள்ளியை அடைய வேண்டும். ஆனால், புவியின் அச்சு பம்பரம் சுழல்வது போலத் தள்ளாடுகிறது. இந்த மெதுவான இயக்கம் முன்னிசைவு என்றழைக்கப்படுகிறது. இதன் காரணமாக பூமி, ஒவ்வோர் ஆண்டும் சம இரவுப் புள்ளியை சுமார் 20 நிமிடங்கள் முன்னதாகவே அடைகிறது. இப்படியே சிறிது சிறிதாகக் கூடி, 72 ஆண்டுகளில் அதுவொரு முழு நாளாகவே கூடிவிடுகிறது. ஆனால், பாரம்பரிய பஞ்சாங்கங்கள் இந்த மாற்றத்தைச் சரியாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை" என்றார். பஞ்சாங்கங்களில் பயன்படுத்தப்படும் எண்களிலும் தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுக்கும் உண்மையான நேரம், 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். ஆனால், பண்டைய கணக்கீடுகள் இதைவிடச் சற்று நீண்ட நேரத்தைக் காட்டின. "இந்தச் சிறிய தவறுகள் பல ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றன. அதனால் கணிப்புகளில் பிழைகள் ஏற்படுகின்றன." இவற்றின் காரணமாக, சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகளின் தேதிகளில் மெதுவாக மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக, முன்பு ஜனவரி 14ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட பொங்கல், இப்போது பொதுவாக 15ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், பூமி வானத்தில் அந்தக் குறிப்பிட்ட நிலையைச் சற்று முன்னதாகவே அடைவதால் இந்த மாற்றம் ஏற்படுவதாகக் கூறுகிறார் வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,Getty Images உத்தராயணம் குறித்த கணக்கீடு பஞ்சாங்கங்கள் தங்கள் கணக்கீடுகளில் புவி அச்சின் முன்னிசைவு இயக்கத்தைக் கருத்தில் கொள்வதில்லை என்பதால் அவற்றின் கணக்கீடுகள் தவறாவதாகக் குறிப்பிடும் வெங்கடேஸ்வரன், அதற்கான உதாரணங்களாக, பொங்கல் பண்டிகை மற்றும் உத்தராயணத்தை குறிப்பிடுகிறார். உத்தராயணம் நிகழ்வு பற்றி விளக்கிய அவர், "ஓர் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் சூரியன் துல்லியமாகக் கிழக்கில் உதிப்பதில்லை. புவியின் அச்சு 23.5 டிகிரி சாய்ந்திருப்பதால், சூரியன் உதிக்கும் புள்ளி வடக்கு-தெற்காக நகர்கிறது. உத்தராயண தினத்தன்று, சூரியன் உதயமாகும் புள்ளி கிழக்கு அடிவானத்தில் அதிகபட்ச தென்கிழக்கில் இருக்கும். அடுத்தடுத்த நாட்களில், சூரியன் உதிக்கும் புள்ளி முந்தைய நாளைவிட சற்றே வடக்கில் நகர்ந்திருக்கும். அடுத்த ஆறு மாதங்களில், சூரியன் உதிக்கும் புள்ளி கிழக்கு அடிவானத்தில் உச்சபட்ச வடகிழக்கை அடைகிறது. அந்த நாள் தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது. தட்சிணாயனத்திற்குப் பிறகு, சூரிய உதயப் புள்ளி முந்தைய நாளைவிட தெற்கே நகர்வது போலத் தோன்றும். இந்த இயக்கத்தின்போது, சூரியன் ஆண்டுக்கு இருமுறை சரியாகக் கிழக்கில் உதிப்பது போலத் தோன்றும்," என்று விளக்கினார். வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவற்றின்படி, உத்தராயணம் ஜனவரி 14, 15 தேதிகளில் வரவேண்டும். ஆனால், "உண்மையில் அது டிசம்பர் 20-21 அன்றே நிகழ்ந்துவிடுகிறது." இதுபோல, பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள கணக்கீடுகளில், வானியல் பொருட்களின் உண்மையான நிலைகளிலும் பல பிழைகள் இருப்பதாக த.வி.வெங்கடேஸ்வரன் விவரித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வானக் கோளத்தில் சூரியனின் தோற்றப் பாதையான கிரகணப் பாதை, ராசிகள் எனப்படும் 12 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொங்கல், சங்கராந்தி தேதி மாறுவது ஏன்? மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படும் பொங்கல் தினம் மாறிக் கொண்டிருப்பதன் பின்னணியை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக, சங்கராந்தி என்றால் என்னவென்பதைப் பார்ப்போம். "சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைக் குறிக்கும் நிகழ்வாகும். இது பஞ்சாங்கங்களில் சூரிய மாதங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வானக் கோளத்தில் சூரியனின் தோற்றப் பாதையான கிரகணப் பாதை, ராசிகள் எனப்படும் 12 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மகர சங்கராந்தி என்பதை சூரியன் தனுசு ராசியில் இருந்து தை முதல் தேதியன்று மகர ராசியில் புகுவதாக பஞ்சாங்கம் கூறுகிறது. எனவே, தை 1 மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆனால், உண்மையில் ஜனவரி 15 அன்று சூரியன் இன்னும் தனுசு ராசியில்தான் இருக்கிறது. சூரியன் டிசம்பர் 19 முதல் ஜனவரி 19 வரை தனுசு ராசியில் நிலைபெற்றிருக்கும். ஜனவரி 20ஆம் தேதிதான் மகர ராசிக்குள் நுழைகிறது. இதுவும் பஞ்சாங்கக் கணிப்புப்படி ஒரு பெரிய பிழை" என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதோடு, பஞ்சாங்கக் கணக்கீடுகளில் உள்ள குறைபாடுகள் மிகத் தெளிவாகத் தெரிவதாகவும், பஞ்சாங்கத்தால் கணக்கிடப்பட்ட பொங்கலின் வானியல் தொடர்பு முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டார் அவர். "சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல் திருநாள் உத்தராயணத் திருநாளாக இருந்தது. ஆனால் பூமி அச்சின் சுழற்சி இயக்கம் காரணமாக, பல ஆண்டுகளாக, பொங்கல் தினமும் உத்தராயணமும் 72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் வீதம் விலகிச் சென்றன. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், என் குழந்தைப் பருவத்தில், பொங்கல் பொதுவாக ஜனவரி 14ஆம் தேதி, அதாவது டிசம்பர் 21இல் உத்தராயணம் வந்து 25 நாட்கள் கழித்து வந்தது. காலப்போக்கில் இது ஒரு நாள் தள்ளிப்போய், ஜனவரி 15இல் பொங்கல் வரத் தொடங்கியது" என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். மேலும் அவர், "இதில் எந்தச் சீர்திருத்தமும் செய்யப்படாவிட்டால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ஜனவரி 16ஆம் தேதிக்கு மாறிவிடக்கூடும்" என்றும் குறிப்பிட்டார். பஞ்சாங்கத்தின் கணக்கீடுகளில் இத்தகைய குழப்பம் இருக்க, எப்படி அதில் கிரகணம் தொடங்கும், முடியும் நேரம் மட்டும் சரியாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது. அதுகுறித்து முன்பு ஒருமுறை பிபிசிக்கு விளக்கமளித்த அவர், "கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் அதன் மீதான நம்பகத்தன்மை அடிபடும். அதனால் பஞ்சாங்கத்தில் தங்கள் கணிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மையம் (Positional Astronomy Centre) கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களுடைய பதிப்பில் பிரசுரம் செய்துவிடுகிறார்கள். அதனால்தான் கிரகணம் போன்ற கண்களுக்குப் புலப்படக்கூடிய விஷயங்களில் சரியான கணக்கீடுகள் இருப்பது போலத் தெரிகின்றன" என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9rv4p9ly4o
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
வீணான கே.எல். ராகுல் சதம் – நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,Getty Images 14 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. 285 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குறிப்பாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 131 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இப்போது இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்த ஒருநாள் தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. டாஸ் வென்ற நியூசிலாந்து பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுப்மன் கில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்கள் இருவரும் மிகவும் பொறுமையாகவே ஆட்டத்தை தொடங்கினர். முதல் 5 ஓவர்களில், இந்த ஜோடி 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்து சற்றே நம்பிக்கை அளித்தனர். 12வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா. அவர் 38 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் பொறுமையாக ஆடி, அரைசதம் கடந்த கேப்டன் சுப்மன் கில், 16வது ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்ததாக, விராட் கோலி- ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் ஆடியது. இந்திய அணி 17 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஆனால், 21வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ். அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கே.எல்.ராகுல் 22 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, 117 ரன்களுடன் இந்திய அணி தடுமாறியபோது கே.எல்.ராகுல் களமிறங்கினார். விராட் கோலி 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள், நிதிஷ் ரெட்டி 20 ரன்கள், ஹர்ஷித் ராணா 2 ரன்கள் என இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதும், அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் முன்னணி வீரர்கள் மிக விரைவாக ஆட்டமிழந்த நேரத்தில் அவரது இந்த சதம் அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 112 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி வெற்றிபெற 285 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியின் கிறிஸ்டின் கிளார்க் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேரில் மிட்செலின் அதிரடி சதம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. 285 ரன்கள் என்ற இலக்குடன், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த கான்வே, 5வது ஓவரில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் வில் யங் களமிறங்கினார். நிதானமாக ஆடி, ரன்களை உயர்த்திய நிக்கோல்ஸ்- வில் யங் ஜோடி 12வது ஓவரில் பிரிந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில், நிக்கோல்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த டேரில் மிட்செல்- வில் யங் ஜோடி, சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணி 200 ரன்களைக் கடக்க உதவியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த கூட்டணியை உடைக்க பெரிதும் போராடினர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேரில் மிட்செல் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த வில் யங், 37வது ஓவரில் நிதிஷ் ரெட்டி வீசிய பந்தில், குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 98 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் 88 ரன்களுடன் மிட்செல் களத்தில் இருந்தார். அதன் பின்னர், க்ளென் பிலிப்ஸ் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் 96 பந்துகளில் சதமடித்தார். இறுதியாக 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும் க்ளென் பிலிப்ஸ் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gl865dkgko
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 4 🏖️ பாகம் 04 – அல் மர்ஜான் தீவிலுள்ள உல்லாச விடுதி மற்றும் ஸ்பா [அரோக்கிய நீரூற்று] வை தன்னகத்தைக் கொண்ட 'டபுள் ட்ரீ ஹோட்டல்' [DoubleTree by Hilton Resort & Spa, Marjan Island] கடலுக்குள் 4.5 கி.மீ நீளமுள்ள அல் மர்ஜன் தீவு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட தீவுக்கூட்டத்தில் உள்ள 4 பவள வடிவ தீவுகளின் குழுவாகும். அது மட்டும் அல்ல, இது ஒரு அருமையான சுற்றுலா தலங்கள் கொண்ட இடமாகும். இங்குதான் 'டபுள் ட்ரீ ஹோட்டல்' அமைந்துள்ளது. தாத்தாவும் மூன்று பேரன்களும் 'டபுள் ட்ரீ ஹோட்டல்' [DoubleTree by Hilton Resort & Spa, Marjan Island] என்ற அழகிய விடுதிக்குச் சென்ற தருணத்தில், குழந்தைகள் ஒரு கனவில் அடியெடுத்து வைத்தது போல் உணர்ந்தனர். தங்க மதிய வெயிலின் பொற்கதிரில், உல்லாச விடுதி மின்னியது, அதன் வெள்ளை கட்டிடங்கள் மின்னும் குளங்களால் சூழப்பட்டு இருந்தன. அங்கு சூழப்படிருந்த பசுமையான தோட்டங்கள் காற்றில் மெதுவாக ஆடின. இவைகளைக் கண்டு பரவசம் அடைந்த நிலனின் கண்கள் விரிந்தன. “தாத்தா ... தண்ணீர் எல்லாம் இருக்கு பாருங்க! கடற்கரையும் இருக்கு!” என்று கூறி, மணல் கரையில் மோதிய நீல நிற அலைகளை சுட்டிக் காட்டி அவன் கூச்சலிட்டான். திரேன், ஏற்கனவே தனது சிறிய துணிமணி பெட்டியை இழுத்துக் கொண்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தான், அதே நேரத்தில் குழந்தை ஆரின் அலைகளின் சத்தத்தால் கவரப்பட்டு மகிழ்ச்சியில் கதறினான். "வரவேற்கிறோம் , குட்டி சாகசக்காரர்களே!" ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். புதிதாக சுடப்பட்ட பிரபலமான டபுள் ட்ரீ சாக்லேட் சிப்ஸ் குக்கீகள் [DoubleTree chocolate chip cookies] ஒரு தட்டில் வைத்து பரிமாறினார்கள். குழந்தைகள் மூவரும் அவற்றை முதல் கடித்து உண்ணும் போது அவர்களின் கண்கள் மின்னின. "ம்ம்ம்... மாயாஜால மந்திரக் குக்கீகள்!" நிலன் சொன்னான். அப்பொழுது சிறு துண்டுகள் உடைந்து அவன் மேல் சட்டையில் விழுந்தன. தாத்தா அதைக் கண்டு சிரித்தார். கடற்கரை மற்றும் நீச்சல் தடாகம் போன்றவற்றை நோக்கிய பால்கனியுடன் [balcony] கூடிய விசாலமான அறையில் தங்கிய பிறகு, தாத்தா மற்றும் குழந்தைகள் ஜன்னல்களுக்கு விரைந்தனர். நிலன் தனது கைகளை கண்ணாடியின் மீது அழுத்தி, சிறிய நண்டுகள் மணலில் வேகமாக ஓடுவதைப் பார்த்தான், அதே நேரத்தில் திரேன் தண்ணீரை நோக்கி டைவிங் [குதித்து நீந்துவது / diving] செய்யும் இரண்டு கடற்பறவைகளைக் [seagulls] கண்டான். மென்மையான காற்று அவன் தலைமுடியை அசைக்கும் போது, குழந்தை ஆரின் கூட மகிழ்ச்சியுடன் கைதட்டினான். அடுத்த சாகசம் வெளியே கடற்கரையில்தான்: மணல் கோட்டை கட்டுதல். தாத்தா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய வாளி மற்றும் மண்வெட்டியைக் கொடுத்தார். "இன்று, அல் மர்ஜன் தீவில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய கோட்டையை நாங்கள் கட்டுகிறோம்," என்று தாத்தா உற்சாகமாகச் சொல்லி, குனிந்து மணலை அள்ளினார். குழந்தைகளின் கற்பனைகள் கட்டுக்கடங்காமல் ஓடியது. நிலன் உயரமான கோபுரங்களைச் செதுக்கி, அவற்றைச் சுற்றி அகழிகளைச் செதுக்கினான். கடல் சிப்பிகளை அலங்காரமாக வைத்தான். அதே நேரத்தில் திரேன் பாலங்கள் மற்றும் ரகசிய சுரங்கப்பாதைகளை செதுக்கினான். அதன் பின் தாத்தாவும் சேர்ந்து, சுவர்களை வடிவமைத்து, சிறிய ஜன்னல்களை செதுக்கினார், அதே நேரத்தில் ஆரினின் சிறிய கைகள் மணலை நசுக்கி, மகிழ்ச்சியான "ஸ்ப்ளோஷ்" "ஸ்ப்ளோஷ்" [“splosh”] ஒலிகளை எழுப்பினான். விரைவில், இலைகள் மற்றும் கடல் ஓடுகளால் [seashells] ஆன கொடிகளுடன் கூடிய ஒரு கம்பீரமான மணல் கோட்டை கடற்கரையின் ஓரத்தில் பெருமையுடன் நின்றது. மணல் கோட்டைகளுக்குப் பிறகு, நீச்சல் குளத்திற்குள் சென்று தண்ணீரில் விளையாடுவது, நீந்துவது அல்லது தண்ணீரைச் சிதறடித்து விளையாடுவது என்று தாத்தா முடிவெடுத்து, மூன்று பேரன்களுடனும் அங்கு சென்றார். நிலனும் திரேனும் ஆழமற்ற பகுதியைக் கடந்து கொஞ்சம் ஆழமான பகுதிக்கு பாய்ந்து நீந்த ஓடினர். ஒவ்வொரு முறையும் தண்ணீர் முகத்தில் தெறிக்கும்போது சிரித்தனர். மிதக்கும் வளையத்தில் [floating ring] பாதுகாப்பாக அமர்ந்திருந்த ஆரின், ஒவ்வொரு சிறிய அலையையும் பார்த்து சிரித்தான். தாத்தாவும் அவர்களுடன் சேர்ந்து, சிறிய நுரை பந்துகளை [foam balls] வீசி, விளையாட்டுத்தனமான நீர் சண்டைகளை உருவாக்கினார், இது குழந்தைகளை மகிழ்ச்சியுடன் சத்தம் போட்டு சிரிக்க வைத்தது. கதிரவன் கீழே இறங்க, உல்லாச விடுதி மீது தங்க நிற பிரதிபலிப்புகள் வீச, தாத்தாவும் மூன்று பேரன்களும் கடற்கரையில் நடந்து சென்றனர். தாத்தா சிறிய நட்சத்திர மீன்களையும், இதய வடிவிலான ஓடுகளையும், பக்கவாட்டில் சிதறிக் கிடந்த ஒரு நண்டையும் சுட்டிக்காட்டினார். இது நிலனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. "இது ஒரு புதையல் வேட்டை போன்றது!" என்று அவன் ஒரு பளபளப்பான கடல் ஓடு [seashell] ஒன்றை எடுத்துக் கொண்டு கூச்சலிட்டான். அன்று மாலை, உல்லாச விடுதி [resort] அவர்களுக்கு ஒரு சிறப்பு ஆச்சரியத்தை அளித்தது - அது ஒரு குக்கீ அலங்கார ஏற்பாடு [a cookie-decorating session]. குழந்தைகளுக்கு இன்னும் மென்மையாகவும் சூடாகவும் உள்ள, அடுப்பிலிருந்து உடன் வெளியே வந்த குக்கீகள் அவை. குக்கீகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பிரகாசமான வண்ணங்களில் (சிவப்பு, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற) அடர்த்தியான, இனிமையான ஐசிங் [colorful icing] மற்றும் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், ஊதா போன்ற, கற்பனை செய்யக்கூடிய சாத்தியமான அனைத்து வண்ணங்களிலும் சிறிய மிட்டாய் மேல்புறங்கள் அல்லது மேல் வண்ணமிடல் [tiny candy toppings] வழங்கப்பட்டன. நிலன் அவர்களின் முன்னைய மணல் கோட்டை மாதிரி ஒரு குக்கீ கோட்டையை உருவாக்கினான். அதை பாதுகாக்க திரேன் ஒரு குக்கீ டிராகனை [cookie dragon] உருவாக்கினான். மேலும் ஆரினின் சிறிய குக்கீ எளிய புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்டு, அங்கே ஒரு சிரிப்பின் தடயத்தை விட்டுச் சென்றது. இறுதியாக, இரவு வந்தபோது, தாத்தாவும் பேரன்களும் தங்கள் பால்கனிக்குத் திரும்பி, தண்ணீருக்கு மேல் நட்சத்திரங்கள் மின்னுவதைப் பார்த்தார்கள். அலைகளின் மென்மையான சத்தம் ஒரு தாலாட்டுப் பாடலைப் போல இருந்தது, குழந்தைகள் தாத்தாவை நெருங்கி அணைத்துக் கொண்டனர், அவர்களின் சிறிய இதயங்கள் மகிழ்ச்சியாலும் சாகசத்தாலும் நிறைந்திருந்தன. “தாத்தா... நாம் இங்கே என்றென்றும் தங்கலாமா?” நிலன் கொட்டாவி விட்டபடி கிசுகிசுத்தான். என்றாலும் அவன் இன்னும் உற்சாகமாக இருந்தான். தாத்தா அவனை நெருங்கி அணைத்துக் கொண்டு சிரித்தார். "நாளைக்கு, இன்னும் பல சாகசங்கள் காத்திருக்கின்றன. ஆனால் இன்றிரவு, அரண்மனைகள், குக்கீகள் மற்றும் அல் மர்ஜன் தீவின் மாயாஜாலத்தைக் கனவு காண்போம்." என்றார். அதனால், மின்னும் நட்சத்திரங்களின் கீழ், மூன்று சிறிய சாகச வீரர்கள், மர்ஜான் தீவின் மென்மையான அலைகளின் ஒலியிலும் நட்சத்திரங்களின் ஒளியிலும் - வானத்தை எட்டிய மணல் கோட்டைகள், ஒருபோதும் முடிவடையாத சாக்லேட் குக்கீகள் மற்றும் முடிவற்ற சாகசங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் அலைகள் பற்றிய கனவுகளில் - முடிவில்லா மகிழ்ச்சியுடனும் இனிய நினைவுகளுடனும் திளைத்தனர். ✨ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 05 தொடரும் துளி/DROP: 1995 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/33293662250282327/?
-
15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 84th Birthday, dear elder brother"
15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 84th Birthday, dear elder brother" 84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே! ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நகைச்சுவையும் ஆறுதல் தர எங்கள் இதயங்களில் பிரகாசமாக இருப்பவரே! எண்பத்தி நான்கு ஆண்டு அன்பும் மகிழ்ச்சியும் நேர்மையான ஆன்மாவின் நலமான வாழ்வே! உவகை மலர மகிழ்வு பெறுக கொண்டாடுகிறோம் ஒரு சகோதரர், ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கை! ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் என்றென்றும் இருக்கட்டும் அன்புள்ள அண்ணா அகவை திருநாள் வாழ்த்துக்கள்! அன்புடன் தம்பி 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம் & குடும்பம்' Happy 84th Birthday, dear brother of mine, Dr. Kandiah Sundarlingam, a star that shines. Born in Athiady, our cherished hometown, Your journey through life brings you renown. From Jaffna Central, your roots were laid, At Colombo’s halls, your brilliance displayed. Durham’s towers saw your wisdom grow, A scholar’s path, a radiant glow. A Physics lecturer of honor and grace, Guiding students to a brighter place. In Melbourne now, your well-earned rest, A life of wisdom, truly blessed. Your kindness and humor, a comforting light, In our family’s hearts, forever bright. Eighty-four years of love and cheer, A life well-lived, a soul sincere. So today we celebrate, with joy and delight, A brother, a mentor, a guiding light. May health and happiness forever stay, Happy Birthday, dear Anna, on this special day! With love and admiration, Thampi 'Kandiah Thillaivinayagalingam & family ' 15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid028uckL9HBVU3ULzV2wmRfr1iDJxzvftb7ZUcBWFwK3vswXhfDa3NpVNK86dQ2jGhdl?
-
சிரிக்கலாம் வாங்க
- "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!"
"தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!" கி மு 500 ஆம் ஆண்டு புறநானுறு / 500 BC old, Purananuru 172 Says: "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!''கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " "Set the pot on the stove!Cook the rice!Do not stint on toddy!Let the viralis[female artists] with gleaming jewels who are skilled in singing,wear garlands!" இருநூறாம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் / 200 AD old, Silappathikaram 5;68-69 Says: “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' On the day on which the moon approached the cittirai star in the month of cittirai (i.e. on the full-moon day) the sacrifice of boiled grains, sweetened sesame balls, meat mixed with rice, flowers, incense, and toddy was offered தொள்ளாயிரம் ஆண்டு சீவகசிந்தாமணி / And 900 AD old, Seevaga Chinthamani-1821 Says: “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' The sweet milky rice is boiling in the new mud pot over the red fireplace "முருகிற்கு அழகு சேர்த்த தையே பெருவிழா காண என்னை அழைத்தாயோ? தை பிறந்தால் வழிபிறக்கும் என்று தைரியம் காட்டி என்னைக் கூப்பிட்டாயோ? தைத்து புத்தாடை எல்லோரும் அணிய தையல் பொங்கும் பொங்கலோ பொங்கல்!” As the harvest moon shines bright, Thai Pongal arrives, filling hearts with pure delight. Fields adorned with sugarcane, turmeric, and rice, A festival of gratitude, a moment so nice. Sun's golden rays paint the morning sky, A symbol of prosperity, as the birds joyfully fly. Pongal pot overflows with abundance and cheer, May this auspicious day bring happiness near. (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் குடும்பம் அத்தியடி, யாழ்ப்பாணம்) (Kandiah Thillaivinayagalingam & family , Athiady, Jaffna) "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!" https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02mHLanWtXaHFk59SuikHzt9wFRCqNZi4iifwTU7ubHfKeSG19eUnUM2gpNHhGXednl?- பொங்கல் சிரிப்புகள்.
- "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!"
Important Information
By using this site, you agree to our Terms of Use.