Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கல்லு நாட்டல் இதுக்கு தேவைப்படாதுங்க...இன்னும் மூன்று ..நாலு அமெரிக்கன் பிளேன் வத்து போக...கல்லில்லாமல் ரன்வே நீட்டப்படும்....
  3. Yesterday
  4. புட்டினால் உலகிற்கே கேடு என்பது தெரிந்தது தானே. இலங்கை தமிழர்கள் சாப்பிடுகின்ற புட்டு சாப்பாடு இரண்டு தடவைகள் அவிக்கின்றார்கள் 🙄 என்பதை கவனத்தில் கொண்டு வந்தீர்கள் நன்றி.
  5. இறங்க வேண்டிய இடம் .ஏரங்குடி ஏறங்கடி ஏறங்கடி ஏறங்கடி
  6. உக்ரைனுக்கு பக்கத்து வீட்டுகாரனாக ஐரோப்பிய யூனியன் உள்ளது. அது தான் உக்ரைன் மனதுக்கு பிடித்த பக்கத்து வீட்டுகாரன். அடுத்த பக்கத்து வீட்டு கொள்ளைகாரன் ரஷ்யா இல்லை. உக்ரைனியர்களோடு பேசிபார்க்கும் போது தெரியவரும் எவ்வளவுக்கு ரஷ்யாவை புடினை வெறுக்கிறார்கள். ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளே ரஷ்யா நிராகரித்து மேற்குலகில் வாழ்வை இனிதாக அனுபவித்து கொண்டிருக்கின்ற நிலையில் உக்ரைனை பார்த்து நீ ரஷ்யாவோடு தான் இரு மேற்குலத்தை நிராகரி என்று சொல்வது...
  7. பாகம் - 12 14-11-1990 மட்டக்களப்பு மாவட்ட எல்லை நாம் இருந்த இடத்திலிருந்து மிக அண்மையில் தான். மட்டக்களப்பையும் திருக்கோணமலையையும் பிரிக்கும் எல்லை ஓர் ஆறு. இது மகாவலி கங்கையின் கிளை நதி. இந்த ஆற்றில் முதலைகள் நிறைய உண்டு. ஓர் இ. போ. ச. சாரதியை இங்குள்ள முதலையொன்று இழுத்துச் சென்றதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். வருடா வருடம் யாராவது ஒருவர் முதலைக்குப்பலியாவது வழக்கம் என்று சொன்னார்கள். ஆற்றின் ஓர் எல்லையான திருகோணமலை மாவட்டப் பகுதிக்குள் புகழ் பெற்ற முருகன் ஆலயம் ஒன்று உண்டு. வெருகல கந்தசாமி கோயில் என்பது இதன்பெயர். இரு மாவட்டங்களின் எல்லையில் இருப்பதாலோ என்னவோ கிழக்கு மாகாணம் முழுவதும் இது புகழ்பெற்று விளங்குகின்றது. ஆற்றைக் கடக்க உதவும் ‘பாதை’ ஒன்றின் உதவியுடன் நாம் திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்திற்குள் வந்தோம். இந்த ஆறு 30 யார் தூரம் தான் இருக்கும் என்றாலும் நடந்து போக முடியாது. ஆழமான ஆறு முதலைகளின் அபாயம் கூடுதல் என்பதால் பெரும்பாலும் எவரும் நீந்திக் கடக்க முயற்சிப்பதில்லை. அப்போது திரு. துரைநாயகம் இந்த இடத்தில் தான் 'முதலை வள்ளியை' முதலை பிடித்தது என்றார். எப்போது அந்தச் சம்பவம் நடந்தது என்றேன், பலவருடங்களாகி விட்டன. இந்த ஆலயத்தின் திருவிழாவின் போது தீக்குளிப்பதாக வள்ளி வேண்டிக்கொண்டாள். நேர்த் திக்கடனை என்ன காரணத்தாலோ அவளால் அதை நிறைவேற்ற முடியவில்லை. திருவிழாவுக்கு வந்த அவள் முகம் கழுவ ஆற்றில் இறங்கிய போதுதான் முதலைபிடித்தது. எல்லோரும் சேர்ந்து அவளைக் காப்பாற்றினோம். முதலை பிடித்ததால் சில காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அந்தக் காயத்துடனேயே வள்ளி தீக்குளித்தார் என்றார். அது சரி முதலை பிடித்தால் தப்ப என்ன செய்ய வேண்டும்? என்றேன். அதன் வயிற்றுப் பக்கம் தடவினால் விட்டுவிடும் என்றார். ஏன் வயிற்றுப் பக்கம் தடவ வேண்டும்? என்றேன். அது மென்மையான பகுதி. வயிற்றில் தடவினால் அது கூச்சத்தினால் விட்டுவிடும் என்றார். முதலையைக் கண்டவுடனேயே பயம் வந்துவிடும். இதெல்லாம் சாத்தியமா? என்றேன். முதலை ஆபத்தானதுதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல் பயங்கரமானதல்ல. ஆற்றுக்குள் முதலை இருப்பது ஒரு பொந்து போன்ற இடத்தில். ஆழமான அந்தப் பகுதியை பாளி என்பர். அந்தப் பாளிக்குள் போய் தடியால் தட்டி மீன் பிடிப்பவர்களும் உண்டு என்றார். ஏன் பாளிக்குள் முதலை கடிக்காதா? என்றேன். பாளிக்குள் கடிக்காது என்றார். பாளி ஓர் சமாதானப் பிராந்தியமோ? என்றேன். சிரித்தார். தொடர்ந்து பாளிக்குள் என்ன மீன் கூடுதலாக இருக்கும்? என்று கேட்டேன். விரால் தான் கூடுதலாக இருக்கும். மீன்பிடிப்பதற்கு இன்னொரு சுலபமான வழி உண்டு என்றார். என்ன வழி? என்றேன். மீன் உள்ள பள்ளங்களில் ஒரு கொடியைப் போடவேண்டும் என்றார். என்ன கொடி? என்றேன். கருந்தெவுளங்கொடி என்பது அதன் பெயர். அந்தக் கொடியில் ஒரு துண்டைப் போட்டால் மீன்மயங்கி வரும், மீனைப் பிடித்து எடுக்கலாம் என்றார். இதற்கு ஏதாவது விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கும் என்றேன். அதைப் பற்றித் தெரியாது. ஆனால் எமது அனுபவ உண்மை என்றார். இப்படிக் கூடுதலாக மீன் பிடிபட்டால் என்ன செய்வது? என்றேன். சூட்டுக் கருவாடு போடுவார்கள். வெயிலில் காய வைக்காமல் நெருப்பில் காய வைப்பது தான் இந்தக் கருவாடு செய்யும் முறை என்றார். தொடர்ந்து இந்த பல மாதிரி மீன் பிடிக்கும் போது சில முறைகள் உண்டு என்றார். அது என்ன? என்று கேட்டேன். கத்தியோ வேறு எந்த உலோகமோ கொண்டு போகக் கூடாது; துப்பக் கூடாது என்றார். துப்பினால் என்ன நடக்கும்? என்றேன். துப்பினாலோ உலோகங்களைக்கொண்டு சென்றாலோ சித்திக்காது - மீன்கள் ஓடி விடும் என்றார். இந்தப் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக் குக் கிடைக்கவில்லை. ஆற்றங்கரைகளில் நின்ற மக்களுடன் மாத்தயா அளவளாவினார்? அனைவருமே திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து இந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைவரை வந்து குடிசை அமைத்து இருப்பவர்கள். சிலர் வெருகல் ஆலயமடத்தில் இருப்பவர்கள். தமக்கு உணவோ மருந்தோ கிடைப்பதில்லை எனவும் அடிக்கடி செஞ்சிலுவைச் சங்கத்தினர் வந்து பதிந்து போகின்றார்கள். எந்த விதமான பிரயோசனமும் ஏற்படவில்லை என் னர். அன்று 26-9-90 சண்டை தொடங்கி 3 மாதங்களாகி விட்டன. தமிழ் அகதிகள் என்றால் ஆமை வேகத்தில், ஆமை வேகம் என்பது கூடத் தவறு. நத்தை வேகத்தில் தான் காரியங்கள் நடைபெறுகின்றன. மக்களின் குறைகளை மாத்தயா கேட்டறிந்தார். அந்தப் பகுதி பிரதேசப் பொறுப்பாள ரிடம் இங்கு எவ்வளவு மக்கள் உள்ளனர்? என்றார். வாகரை, கதிர வெளி, வெருகல் எல்லா இடமும் சேர்த்து முப்பதினாயிரம் அகதிகள் என்றார் பிரதேசப் பொறுப்பாளர் எஸ்.பி. அங்கு ஒரு பத்து வயதுச்சிறுவன் சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் உனது பெயர் என்ன? என்று கேட் டேன். அவன் "பிரபாகரன்" என்றான். மாத்தயா அவர்கள் பொது மக்களோடு பேசிக் கொண்டு இருக்கும் போது எனது பார்வையைச் சுழலவிட்டேன். ஓலையால் வேய்ந்த கடை ஒன்று; அன்று திறக்கப்படவில்லை. தட்டியால் மூடியிருந்தது. அந்தக் கடைக்கு முன்னே ஒரு சிறுமியும் இரண்டு குழந்தைகளும் நின்றார்கள். ஆகச் சிறிய குழந்தை ஆண் குழந்தை. அந்தச் சிறுமியிடம் போய் மருமகள் உங்களது பெயர் என்ன என்றேன். ராஜசுலோசனா என்றாள் சிறுமி. உங்களுக்கு எத்தனை வயது? என்றேன். பத்து வயது என்றார். ஏன் இன்று கடை திறக்கவில்லை? என்றேன். 'இனிக் கடை திறக்க முடியாது. அப்பாவை முஸ்லிம் ஆட்களும் ராணுவமும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்’ என்றாள். எங்கே பிடித்தார்கள்? என்றேன். வாழைச் சேனையில் என்றாள். மட்டக்களப்பு மண்ணில் கால் வைத்தவுடனேயே முதன்முதல் கிடைக்கும் செய்தி இதுதானா? (தொடரும்)
  8. விமானம் மலேசியாவில் இருந்து புறப்பட்டாலும் இது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட விமானம் என ஆங்கில எழுத்து N குறிப்பிடுகின்றது. விமானத்தை ஓட்டியவரும் அமெரிக்காவில் விமான ஓட்டி அனுமதி பெற்றவராக விளங்க வேண்டும். நாங்கள் பலாலி விமானத்தளம் என கூறுகின்றோம். ஆனால், பல சர்வதேச விமானத்துறை தகவல் தளங்களில் காங்கேசன்துறை/யாழ்ப்பாணம் விமான தளம் VCCJ என குறிப்பிடப்படுகின்றது.
  9. இந்த பெருந்தோட்ட முதலாளிகளோ அல்லது அரசாங்கமோ மலையக மக்களின் சுபிட்சமான வாழ்வு குறித்து பெரிதாக சிந்திக்கப் போவதில்லை. காரணம் நாளைக்கு வாழ்க்கையில் அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டால் அந்த தேயிலை கூடையையும்... கவ்வாத்து கத்தியையும் அவர்கள் கையில் எடுக்கப் போவதில்லை. சிங்களவர்கள்; ஈழத் தமிழர்கள்; முஸ்லிம்கள்; யாரும் இந்த தேயிலை தோட்டத்து கூலி வேலையை செய்யப் போவதுமில்லை. ஆகவே இந்த மக்கள் கூட்டம் அவர்களுக்கு தேவை... அடிமைகளாகவே தேவை. இதுதான் யதார்த்தம். நம் விடுதலைப் போராட்ட வரலாறில் தம்மை இணைத்து கொண்ட அனைத்து இயக்கங்களும் சாதிய கட்டமைப்புகள்; சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே குரல் கொடுத்திருந்தார்கள். குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமான; செயற்பாடுகளை கூட மேற்கொண்டு இருந்தார்கள். இவ்வாறான உயரிய செயல்பாடுகளை பெருமையாக பேசியதும் நாங்கள் தான். இன்று அவர்கள் இல்லாமல் இருக்கலாம்... ஆனாலும் அந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகள்; கோட்பாடுகள்; தேவைகள் எமக்கு இன்றுமே இருக்கின்றன. இன்று சாதிய மேலாண்மை குறித்து ஆங்காங்கே தனி மனிதர்கள், சமூகங்கள் மத்தியில எழக்கூடிய வக்கிர புக்தியை பொது புத்தியாக பேசத் துணிந்து உள்ளோம். இதை அருண் சித்தார்த்தன் பேர்வழி தெற்கில் போய் பிரச்சாரம் செய்தால் அவனைத் துரோகி, அரச கைகூலி என்கின்றோம். இங்கே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதைப் போல் எனக்குப்படுகிறது. நீங்கள் இன்னும் மாறவில்லை என்பதை நீங்களே கூறிக் கொள்கிறீர்கள். அப்படித்தான் நான் பார்க்கிறேன். நாளைய அல்லது அடுத்து வரும் தலைமுறைகள் இப்படியே இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஈழத் தமிழரிடம் சென்று ஆங்காங்கே முகம் கொடுக்கக்கூடிய களைய வேண்டிய இந்த சமூகப் பிரச்சினையை விட; மலையக மக்களை சிங்களவன் காலடியில் கிடந்தது வாழ்நாள் முழுவதும் பரம்பரை பரம்பரையாக எல்லா வகையிலும் அடிமையாக வாழ்ந்து மடிவது சிறப்பு என்கிறீர்கள். என்னத்த சொல்ல!!!
  10. பாகம் - 11 13.11.1990 பதுமன் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில் அந்தப் பொதுமகன் தெருவால் சென்ற மாட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகில் “க” என்ற குறியுடன் போகும் அந்த மாட்டில் அப்படி என்னதான் விசேடம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. எனவே “என்னமாட்டையே வெறித்துப் பார்க்கிறீர்கள்” என்றேன். 'மாட்டுக்குக் குறி சுட்டிருக்கிறது. இதேபோலத்தான் மனிதருக்கும் குறிசுட்டார்கள். பழைய ஞாபகம் வந்தது' என்றார். மனிதருக்கா? என்றேன். ஆம், இந்திய ராணுவம் இருக்கும்போது கள்ளிமேட்டில் எமது இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவர் ஈ. பி. ஆர். எல். எப். இடம் பிடிபட்டபோது கையில் எல். ரி. ரி. ஈ என்று கம்பியால் காய்ச்சிக் குறி இழுத்தார்கள் என்றார். அப்படி சூடுவாங்கியவரின் பெயர் என்ன? என்றேன். பெயர் நவரட்ணம். குருகுல பூபாலசிங்கம் என்பவரின் மகன் என்றார். கள்ளிமேட்டில் ரின்னர் ஊற்றிக்கொழுத்தப்பட்டவரின் பெயரும் நவரட்ணம்தானே என்றேன். அவர்வேறு, இவர்வேறு. அவர் அவரது மைத்துனன் (மனைவியின் சகோதரன்) நவீனன் இயக்கத்தில் இருந்ததற்காகக் கொழுத்தப்பட்டவர் என்றார். தொடர்ந்து, யாருக்காக இப்படி வெறியாட்டம் ஆடினார்களோ, அவர்களே இன்று... என்று இழுத்தார். என்ன விடயம் என்றேன். ஈ பி. ஆர். எல். எப். இன் இராணுவப் பொறுப்பாளராக இருந்த ஜோர்ஜ் தம்பிராசா தவராஜா மனைவி சகுந்தலையையே இராணுவம் கடத்திக் கொண்டு போய்விட்டது. இனி தேடவேண்டிய அவசியம் இருக்காது. முன்பு நேவி கொண்டுபோய் தடுப்புக் காவலில் வைத்திருந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லாதபடியால் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான் என்றார். “திருமலை நகருக்குள் வேறு என்ன நடந்தது?” என்றேன். சண்டை தொடங்கிய ஒரு வாரமளவில் தனியார் பஸ் வைத்திருக்கும் கணேஷ் என்பவர் தனது மனைவியின் ஊரான நிலாவெளியை விட்டுப் புறப்பட்டார். திருமலையில் அவருக்கு அறிமுகமாயிருந்த வெளிநாட்டவரான ஆறு வெள்ளையர்களுடன் தனது குடும்பத்தைச் சேர்ந்த பதின்னான்கு பேருடன் புறப்பட்டார். வெள்ளைக்காரருடன் புறப்படுவதால் தனக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கை தான் அவருக்கு இருந்தது. கணேஷ் அவரது மனைவி, அவருக்கு அறிமுகமான பன்னிரண்டு வயதுப் பெண்பிள்ளை ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் பாலு, மகேஸ்வரி ஹாட்பெயர் ஸ்ரோர்ஸ் முதலாளியின் மகன் ஆகியவர்கள் இந்தப் பஸ்ஸில் போனவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள். பஸ் ஹொறவப்பொத்தானை போனபோது அங்கு பொஸிசாரால் இடைமறிக்கப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஓ .ஐ . சி யாக இருந்தவர் ஒரு சிங்களவர். அவருக்கும் கணேசுக்கும் பழக்கம் இருந்தது. ஆகையால் விசாணையில் பெரிய சிக்கல் இருக்கவில்லை. டொலர் ஏஜென்ஸியின் மைத்துனன் கொண்டு வந்த 35 இலட்சம் ரூபா காசும் நகையும் தான் பிரச்சினையாக இருந்தது என்றார். “ஏன் இவ்வளவு பணத்தைக் கொண்டு புறப்பட்டார்கள்"? என்றேன். பணம் வங்கியிலிடப்பட வேண்டியது. ஏழு நாட்களாக வங்கியில் பணம் வைப்பிளிடப்படாததால் தான் இவ்வளவு காசு சேரவேண்டி வந்தது. இந்தவிடயங்கள் எல்லாம் ஆவணங்களுடன் சரியாக நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பிறகு ஓ .ஐ . சி ஒரு கடிதம் கொடுத்திருந்தார் இவர்கள் பயணத்தைத் தொடர தடையில்லை என்று. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ்ஸை இராணுவம் மறித்தது என்றார். அப்படியானால் வெளிநாட்டவர்கள் நிலைமை என்ன மாதிரி?'' என்றேன். "அவர்களை சிறிலங்காப் படையினர் வேறு பஸ்ஸில் கொழும்புக்கு அனுப்பி விட்டார்கள்” என்றார். பணத்தையும் நகையையும் கண்ட இராணுவத்தினர் பஸ்ஸை இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் ஓலம் பெரிதாகக் கேட்டது. அப்போது வாகனங்களின் எஞ்சின் இயக்கப்பட்டு அவற்றின ஓசையால் அந்த ஓலம் மறைக்கப்பட்டது. அன்றிரவு அந்த முகாமில் தீ மூட்டப்பட்டு வெளிச்சம் எரிந்தது. இப்போது பஸ் சாலியபுர முகாமில் உள்ளது என்றார். பஸ்ஸின் இலக்கம் தெரியுமா? என்றேன். 29 ஸ்ரீ... இலக்கம் சரியாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள சேவ்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய பஸ்தான் அது என்றார். பின்பு என்ன நடந்தது என்றேன். டொலர் முதலாளி ஒரு வழக்கறிஞருடன் இராணுவ முகாமுக்குச் சென்றார். ஆனால் ஜே. வி. பி. தான் பஸ்ஸை மறித்தது என்று கேள்விப்பட்டோம். எமக்கு இதைப்பற்றி முழு விபரமும் கிடைக்கவில்லை என்று அனுப்பி விட்டனர் என்றார். இந்த விபரம் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? பஸ்ஸில் போன அனைவரும் தான் முடிந்து விட்டார்களே என்றேன். ஹொறவப்பொத்தாளையில் ரொட்ட வேவாவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இருந்தார். அவரை மௌலவி என்று அழைப்போம். அவர் மூலம் தான் இந்தத் தகவல் வெளிவந்தது. அதற்குப் பிறகுதான் டொலர் முதலாளி இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்தார் என்றார். தொடர்ந்து வாகனத்தில் பிரயாணம் செய்வது என்பது இனி நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் என்றார். (இதன் பின்னர் இ. போ. ச. பஸ்ஸில் வீரகேசரி நிருபர் வேலாயுதத்தின் மகள் லலிதா பணம், நகை போன்றவற்றுடன் திரு மலையிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டனர் என்றும், 92 ஆம் கட் டையில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், சிங்கள ஊர்காவல் படையினரும் அவர்களின் பணம், நகை போன்றவற்றைப் பறித்துவிட்டு அவர்களை வெட்டுவதற்காக இழுத்தபோது சிங்களவரான இ. போ. ச. சாரதி ஆட்களை விடாவிட்டால் பஸ்ஸை எடுக்கமாட்டேன் என்று மிரட்டியதாகவும் அதனால் லலிதாவும் குடும்பத்தினரும் தப்பினார்கள் என்றும் அறிந்தோம்.) எப்படியாவது நடந்து போகமுடியாதா? என்று கேட்டேன். அப்போது பதுமன் குறுக்கிட்டு அது மிகவும் சிரமம். நாங்கள் நடத்துவந்த பாதையின் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்தானே. தனி ஆட்களென்றால் பரவாயில்லை. ஒருநாள் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பம் வந்தது. அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது. குடும்பத் தலைவனுக்கு என்னை விட வயது குறைவுதான். எங்களை கண்டதும் ''அண்ணே எனது பிள்ளைக்கு ஏதாவது கொடுங்கள். நாங்கள் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. பசியால் குழந்தை கத்துகிறது. என்னால் இந்த நிலையைத் தாங்கமுடியாது என்று எனது காலில் விழுந்து அழுதான். அவர்களைப் பார்க்கவேதனையாக இருந்தது. முகாமில் நோயாளிகளுக்கென வைத்தி ருந்த பால்மாவை எடுத்துக் கரைத்து குழந்தைக்கு கொடுத்து விட்டு, அவர்களுக்கும் உணவும் மற்றும் யானவையும் கொடுத்து அனுப்பி வைத்தோம். அன்றைய காட்சியை நினைத்தால்... என்று கண்கலங்கினார் பதுமன். அப்போது “மட்டக்களப்புக்குச் செல்ல ஆயத்தம்”' என்றார்கள். (தொடரும்)
  11. மருதங்கேணியாரே, ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எல்லாம் ஏலவே தெரியும் என்கின்றீர்கள்.............. கொஞ்சம் கீழே வந்தால் சின்னப் புள்ளைக்கும் தெரியும் என்கின்றீர்கள்................ அப்படி என்ன தான் இவர்களுக்கு தெரியுது என்று எங்களுக்குத் தான் மூன்று வருடங்களாகத் தெரியவில்லை................🤣. கிரீமியா எல்லாம் எப்பவோ முடிந்த கதை............ இப்ப டான்பாஸ்............... ரஷ்ய பாஸ் நாங்கள் சொல்லியா கேட்கப் போகின்றார்.............. கெடு குடி சொற் கேளாது............ எப்படி இருந்த ரஷ்யா இப்படி ஆயிட்டுதே என்று போய்க் கொண்டிருக்க வேண்டியது தான்.................
  12. விசுகர் பழைய தலைமுறைதான் அப்படி இனம் காண்கின்றது. வவுனியாவில் நல்ல வசதியாக உள்ள 50 வயசு தாண்டியவர்கள் வாழும் பகுதியை வைத்து ஆட்களை முத்திரை குத்துவார்கள். தொழில் நிமித்தம் வன்னியில் பணியாற்றிய (அரசு உத்தியோகத்தர்) யாழ்ப்பாணத்தாரும் ஆட்களை வாழும் பகுதிகளின் அடிப்படையில் இனம் காண்பார்கள். ஆனால், அடிப்படையில் வவுனியா மாவட்டத்தை (வன்னி) பொறுத்தவரை பெரும்பாலானோர் குடியேறியவர்களே. இங்கு போர்ச்சூழலுடன் வன்னிக்கு சென்று நிரந்தரவதிவிடமாக்கியோர் பலர். 1970 வந்து குடியேறிய மலையகத்து மக்களின் ஒரு பகுதியை பார்த்தால் அவர்களின் நாலாம் தலைமுறை பாடசாலைக்கு செல்கின்றது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரை திருமணம் செய்துள்ளது. மூன்றாம் தலைமுறையிடம் தமது அடி மலையகம் எனும் இனங்காணல் இல்லை. பலர் மலையக பக்கம் சென்றதே இல்லை. சிறப்பாக வாழ்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி கூறுவதற்கு இல்லை என்றாலும் பொதுவாக வன்னியில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் இவர்களுக்கு உள்ளது. சிலர் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கும் சென்றுள்ளார்கள். இந்த வரலாறு - டொட் எல்லாம் எங்கள் காலத்துடன் மருகிவிடும்.
  13. தலை முழுவதும் வெற்றுப் பெருமிதத்தை நிரப்பிக் கொண்டு வாழும் ஒரு மனப்பிறழ்வே இது, வில்லவன்.............. தலைவர் இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிவார் என்று தான் இருந்தோம். அவர்களுக்கு இருந்த இமாலயப் பணிகளை முடித்துக் கொண்டு பின்னர் இதைப் பார்ப்போம் என்று இருந்திருப்பார் போல.................. இனி ஒவ்வொரு தலைமுறையும் இந்த விடயத்தில் சில அடிகளாவது முன்னோக்கி போனார்கள் என்றால் கூட பரவாயில்லை........................
  14. சிங்கள குடிநேற்றமும் பிடிக்காது , தமிழ் குடியேற்றமும் பிடிக்காது. தமிழ் தேசியர்கள் உலகில் ஒரு வினோதமான பிறவிகள் தான்.
  15. அதாவது ஏழைகள் எங்கும் எப்போதும் உங்கள் கருத்தின்படி குடியேறிகளாக வாழ முடியும் ஆனால் அவர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திற்கான விலை கிடைக்காது அல்லது கிடைக்கவும் தேவையில்லை அவர்களுக்கு அவர்களின் நிலத்திலேயே பாதுகாப்பான வீடு கிடைக்கக் கூடாது அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை,,,,,,, இன்னும் ஒரு 200 ஆண்டுகளுக்கு அகதிகளாக குடியமர்த்தி விட்டால் உங்களின் தலைவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் 😇
  16. கூட்டமைப்பு தனிநாடு தான் தமிழர்களுக்கு வேண்டும் என்ற போது அது அமெரிக்க ஏகாதிபத்திய மேற்கத்தியம் சொல்லி தான் இப்படி கேட்கின்றார்கள் என்றவர்கள் ரஷ்ய தமிழ் இரசிகர்கள்
  17. இது விடயத்தில் எனக்கும் சிலபல அனுபவங்கள் உண்டு ரசோதரன் அண்ணை. எமது பகுதி மக்களுடைய புறக்கணிப்பை ஒரு விதமான மனப் பிறழ்வாகவே பார்க்க முடிகிறது ஆழ்மனத்தில் புரையோடியுள்ள இவ்வாறான கருதுகோள்களிலிருந்து அவர்கள் வெளிப்படுவதற்கு சில தலைமுறைகளோ இல்லை தன்னலத்திலிருந்து வெளிப்பட்டு வாழ்க்கையை நோக்கக்கூடிய மன முதிர்ச்சியோ தேவை. எவ்வளவோ படித்தும் அனுபவமிக்கவர்களாகவும் உள்ளோருமே தம் மனம் எனும் வட்டம் சிறு கிணற்றளவேயாய்ச் சமைத்துக் கொண்டு அதனுள்ளே தாவும் தவளைகளாய் வாழ்தல் யாழ்ப்பாணத்தில் மிக அதிகம்.
  18. சிங்கள இன மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று ஆயுத ரீதியாகப் போராடிய தமிழ் மக்கள் வாழும் ஒரு நிலப்பகுதியில் ....... எங்களுக்கு எங்கள் உரிமை வேண்டும்... எங்களை இந்த நாட்டின் மக்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். எங்கள் நிலத்தில் எங்கள் சந்ததியினருக்கு கல்வி உரிமையைக் கொடுங்கள்.... நாங்கள் காடு அழித்து கடும் துயர் மத்தியிலும் நாட்டிற்காக எங்கள் வியர்வையைச் சிந்தி உருவாக்கிய இந்த நிலத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் .... என்று அகிம்சை வழியில் போராடும் மக்களை எப்படி அழைத்துச் சென்று வாழ வைக்க முடியும்? சரி அப்படி ஒரு நிலை வந்தால் 200 ஆண்டுகள் உழைப்பினாலும் கடும் துயரங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட அந்த நில புலன்களின் நன்மைகளை யார் அனுபவிக்கப் போகின்றார்கள்? (இதுக்கை வேறை மலையகம் சிங்களரின் தாயகமாம்)
  19. எனது முதலாவது பிரியமான உணவு புட்டுத்தான்.இனி நிழலி எடுத்த முடிவைத்தான் எடுக்க வேண்டிய நிலை. ஒரே இரத்தம்
  20. செலன்ஸ்கி இப்பொழுதுதான் தான் விட்ட அடிப்படைத் தவறை உணர்ந்துள்ளார்.மேற்கு நாடுகள் தங்கள் தளங்களை அமைப்பதற்கும் உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் காட்டியே ஆசையே உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்வது என்பது. தனது கோடிக்குள் நேட்டோவை ரஸ்யா அனுமதித்தால் அது ரஸயாவின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த நோக்கத்தை ரஸ்யா எந்த விலை கொடுத்தும் நிறைவேற்றும். ஆகவே 3 வருட கால உசுப்பேத்தல் போரினால் நேட்டோ நாடுகளின் ஆயுதங்களைப்பரிட்சித்துப் பார்க்கும் களமாக உக்ரைன் போர் அமைந்திருக்கிறது. இனி நேட்டோவில் இணையும் நோக்கத்தை உக்கரைன் கைவிட்டால் ஆப்கானிஸ்தானை திடீரென்று கைவிட்டதைப்போல உக்ரைனையும் கைவிட்டு விடுவார்கள்.தேவையில்லாமல் அடுத்தவன் பேச்சைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரனைப்பகைக்கப் போய் இனி உக்ரைனுக்கு அவல நிலைதான் ரஸ்யா உக்ரைனை ஒரு பரமஎதிரியாக பார்க்கும்.
  21. எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅 என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂
  22. சுமந்திரனை நம்பி யாரும் இந்த அழைப்பினைக் கருத்தில் எடுக்க வேண்டாம் என்பதே எமது கருத்து. அரசியலில் மட்டும் தான் இதனால் அவருக்கு ஆதாயம் என்று பலரும் நினைக்கலாம். ஆத்மீகம் என்றும் ஒன்று உள்ளதே அதுவும் இப்போது ஆதாயம் தேடும் மார்க்கமாக மாறிவிட்டதே
  23. மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? சொந்த அனுபவத்தில் கதவை தட்டி செய்யப்படும் எந்த உதவியிலும் உடன்பாடில்லை. அவை ஒன்றில் சுயநலத்திற்காக இருக்கும் அல்லது துஸ்பிரயோகம் செய்யப்படும்.
  24. வில்லவன், மலையக தமிழ் மக்களின் நன்மைக்கும், பாதுகாப்பிற்கும், எதிர்காலத்துக்குமாக, மலையக மக்களின் சுயவிருப்புடன் அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டு, கௌரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்றால், அதைவிட நல்லதொரு விடயம் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு எம் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எம் மக்களின் சில பிடிவாதங்கள், கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் என்பன மனிதர்களை அவர்களின் பிறப்புகளினால் வரும் அடையாளங்களை வைத்து வகைப்படுத்துகின்றன. ஒரு மனிதன் ஒடுக்கப்படுகின்றான் என்பது கண்ணீரை வரவழைக்கின்றது. மார்த்தாண்டம் என்னும் ஊர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியாது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் கறுப்பு என்றால் மார்த்தாண்டக் கறுப்பு என்று சொல்வார்கள். அங்கிருந்து ஒரு பையன் இங்கு வேலை செய்ய வந்தான். டாடா கன்சல்டிங். மிகப் பெரிய விசயம். அந்தச் சமூகத்திலிருந்து அப்படி ஒரு பையன் இங்கு வருவது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. அதுவும் டாடா கன்சல்டிங் போன்ற நிறுவனங்களில் இருந்து வருவது. ஆனாலும் அவனை இங்கிருந்த தமிழ்நாட்டவர்கள் முற்றாகவே, வெளிப்படையாகவே ஒதுக்கினார்கள். வேலையில் என்னை மீறி அந்தப் பையனை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள், ஆனால் நாங்கள் வேறு என்று நாங்கள் நினைக்கக்கூடும். இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே. இது தான் என்னுடைய பயம். என்னுடைய வேறு பல சொந்த அனுபவங்களும் உள்ளன. சிலவற்றை நான் எழுதினாலும், அப்படி நடந்திருக்கும் என்று பலர் நம்பப் போவதில்லை. ஆனாலும் இந்த விடயம் அடங்கிய பின், கதைகளாக எழுதுவதாக உள்ளேன். இவ்வகையான சமூக புறக்கணிப்புகள் இருக்காது என்றால், அந்த மக்கள் இந்தக் குடியேற்றத்தை விரும்புகின்றார்கள் என்றால், இதை வரவேற்கும் முதல் ஆட்களில் ஒருவனாக, உங்களைப் போலவே நானும் இருப்பேன். இது நான் இங்கு இணைந்தவுடன் எழுதிய ஆக்கங்களில் ஒன்று. சொந்த அனுபவமே.
  25. புங்குடுதீவில் எத்தனை சதவீதம் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டோர் வாழ்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?? வெளிநாடுகளில் வெளிஊர்களில் அதிலும் வன்னி நிலப்பரப்பில் எத்தனை கிராமங்கள் புங்குடுதீவு தீவுமக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? அது ஏன் என்றாவது உங்களுக்கு புரியுமா?? மலையக மக்களை குடியேற்ற கரம்பனில் வீடுகள் சும்மா கிடக்கிறது என்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ???
  26. தவறான புரிதல் தவறான புரிதல் தம்பி நம் சுயநலத்திற்காக அவர்களை அழைக்கிறோமே தவிர...? அதற்காக மட்டுமே அவ்வுதாரணம்.
  27. இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன். அதை மறுக்க திராணி இல்லைதானே? அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன். வாசிப்பு மங்குகிறதோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.