stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கருத்து படங்கள்
- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
என்ன இது ஏலும் எண்டா எண்ட ஏரியாவுக்கு வா என்ற வடிவேல் ஜோக் அடிக்கிறீர்கள். எவனும் வரமாட்டான் - ஏன் என்றால் உங்கள் “சுரண்டல் புத்தி” பற்றியும், தாகத்துக்கு தண்ணீர் கேட்கும் வெளி மாவட்ட ஆட்களுக்கு ஜாம் போத்தலில் தண்ணி கொடுக்கும் உங்கள் தீண்டாமை பற்றியும் அவர்களுக்கு பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து வடிவாக தெரியும். இந்த மன , செயல் அழுக்குகளை மாற்றி கொண்டு, அவர்களை எம் சொந்தங்கள் என உணர்ந்து அழையுங்கள் என்பதே நான் சொல்வது. காந்தியம் டேவிட் ஐயா, இன்னும் சிலர் போல், குப்பையில் பூத்த குண்டுமணிகள் இதை முன்பே செய்துள்ளனர். நானோ, மனோவோ, சுமனோ இதை புதிதாக கண்டுபிடிக்கவில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அவர்கள் என்றும் இளமையாக இருந்து யாழுக்கு நிழல்தர வேண்டுகிறேன்.🙏- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஏன் அங்கே இருக்க முடியவில்லை? பிரதான காரணங்களில் ஒன்று, எனக் தேவையான வேதனத்தை, எனது துறையில் தரும் வேலை அங்கே இல்லை. நீங்கள் நினைப்பது போல் கொலிடே போய் போத்தல் தண்ணீ குடிக்கும் “கனடா” - இல்லை நான். ஒவ்வொரு முறை நான் போய் வந்து, கண்டு, கேட்டு, உய்த்து சொல்லும் விடயங்கள் பல அடுத்து நிதர்சனமாவதை யாழ்களம் அறியும். உங்களை போல அனுரகாவடிகள் பல யாழில் உருவாகிவிட்டதை கண்டு கொண்டு, ஜேவிபிக்கு யாழில் ஆதரவு பெருகுகிறது என்பதை கடந்த தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே யாழில் பதிவு செய்தேன். ஆகவே கனடாவில் இருந்து கற்பனையில் கிறுக்கும் உங்களை விட எனக்கு நாட்டின் நிலமை சற்று அதிகமாக புரியும் என்பது என் தாழ்மையான கருத்து.- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
வீரனாக மாறிய பேடி மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் மத்ஸய தேசத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபொழுது அந்த நாட்டின் தளபதியான கீசகன் மாறுவேடத்தில் இருந்த பீமனால் கொல்லப்பட்டான். இது கௌரவர்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. ஏனென்றால், கீசகனை கொல்வதற்கு பீமனை போன்ற வேறு பலசாலிகள் யாருமில்லை. விராதன், எப்பொழுதும் கௌரவர்களுக்கு எதிராக செயல்பட்டுவந்தான். இந்த நேரத்தில் கீசகனும் கொல்லப்பட்டதால், அத்தேசத்தை தாக்க இதுவே கௌரவர்கள் முடிவு செய்தனர். எனவே, அவர்களின் துணைவனான சுசர்மனை மத்சய தேசத்தின் தெற்கு எல்லையை தாக்க சொன்னார்கள். படைகள் அனைத்தும் அவனை எதிர்க்க தெற்கு எல்லைக்கு செல்லும் நேரத்தில் வடக்கு எல்லையை கௌரவர்கள் தாக்கலாம் என திட்டம் வகுத்தனர். பாண்டவர்கள் அங்கில்லை என்றாலும் மத்ஸய தேசத்தின் கால்நடைகளையாவது கவர்ந்து வரலாம் என்பது அவர்களின் எண்ணம். சுசர்மனின் படை தாக்க வருகிறது என்னும் செய்தி வந்தவுடன் விராதன் என்ன செய்வது என புரியாமல் தவித்தான். அந்த நேரத்தில், அவன் அவையில் மாறுவேடத்தில் இருந்த யுதிஷ்டிரன் அவனிடம் “அரசே! நான் ஞானியாக இருந்தாலும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவன். மேலும் , சமையல்காரனான பல்லவனும், குதிரைகளை பராமரிக்கும் தந்த்ரிபாலா மற்றும் கால்நடைகளை பராமரிக்கும் தர்மகிரந்தியும் போரில் வல்லவர்களே. நாம் அனைவரும் இணைந்து எதிரிப்படைகளை முறியடிப்போம்!” என தைரியம் கூறினான். உடனடியாக படைகள் அணிவகுக்கப்பட்டு விராதனுடன் மாறுவேடத்தில் இருந்த நான்கு பாண்டவர்களும் செல்ல, தெற்கு எல்லையில் நடந்த யுத்தத்தில் சுசர்மனின் படை துவம்சிக்கப்பட்டது. அதே சமயத்தில், வடக்கு எல்லையில் கௌரவர்கள் தாக்கத் துவங்கினர். இளவரசனான உத்திரகுமாரனின் மேல் அதிகபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. அவனும் அந்தப்புர பெண்களின் முன்னே தம்பட்டம் அடித்துக் கொண்டு போருக்கு கிளம்பினான். அவனை வழிநடத்த சரியான ஆள் தேவை என உணர்ந்த திரௌபதி அவனது சகோதரியான உத்திரகுமாரியிடம் “இளவரசி! நாட்டிய பெண்மணியான பிருகன்னளை சிறந்த தேரோட்டி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இளவரசனுக்கு அவள் உதவியாக இருப்பாள். அவளை அழைத்து செல்ல சொல்லுங்கள்” எனக் கேட்டுக் கொண்டாள். துவக்கத்தில் பெருமை பேசிக்கொண்டு வந்த உத்திரகுமாரன் நேரம் செல்ல பயம் கொள்ள துவங்கினான். ஒருகட்டத்தில் தேரில் இருந்து குதித்து ஓடத் துவங்கினான். அவனைத் துரத்தி சென்ற பிருகன்னளை அவனை தூக்கி தேரில் போட்டுக் கொண்டு அங்கிருந்த வன்னி மரத்தை நோக்கி தேரை செலுத்தினான். அங்கே, கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமூட்டையை கீழே இறக்கினான். அதுவரை, அந்த பகுதி மக்கள் அதை பிணம் நினைத்து வந்தனர். ஆனால், தலைமறைவு வாழ்வின் துவக்கத்தில் பாண்டவர்கள் கட்டிவைத்திருந்த ஆயுதங்கள் அவை. அதன்பின் , தாங்கள் யார் என்று விளக்கிய பிருகன்னளையாக இருந்த அர்ஜுனன், காண்டீபத்தை அவன் கையில் கொடுத்து அவனுக்கு வீரமூட்டி போர்க்களம் நோக்கி தேரை செலுத்தினான். போரில் அர்ஜுனன் திறமையாக தேரோட்டிக் கொண்டே உத்திரகுமாரனை வழிநடத்த, இளவரசன் கௌரவர்களை விரட்டி அடித்து அரண்மனை திரும்பினான். https://solvanam.com/2025/08/24/வீரனாக-மாறிய-பேடி/- செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை! தொழில்துறை புரட்சியின் போது காணப்பட்டதைப் போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது தொழிலாளர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார். பொருளாதாரம் முழுவதும் செய்கை நுண்ணறிவு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களை அதிகளவில் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்த உதவுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யவது அவசியம் என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கூறினார். அந்த அடித்தளங்கள் இல்லாமல் போனால் தொழிலாளர் சந்தை மேலும் துண்டு துண்டாக உடையும் அபாயத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார். அண்மைய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. மேலும் வணிகங்கள் மற்றும் பொதுத்துறையினரால் இது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் கணினிகள் அதிக அளவிலான தரவை செயலாக்கவும், வடிவங்களை அடையாளம் காணவும், அந்தத் தகவலை என்ன செய்வது என்பது குறித்த விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும் அனுமதிக்கிறது. இருப்பினும், இது ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து இங்கிலாந்தில் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த மூன்று மாதங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேலையின்மை விகிதம் 5.1% ஆக உயர்ந்துள்ளதை வெளிக்காட்டியது. இதில் அதிகளவானோர் இளைய தொழிலாளர்கள் ஆவர். ஒக்டோபர் மாதம் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் 18 முதல் 24 வயதுடைய வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 85,000 அதிகரித்துள்ளது. இது நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய வேலையின்மை உயர்வு என்று இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1456759- கெய்ஷா - ஜெயமோகன்
ஆசான் ஜெயமோகனின் இந்தக் கதையை ஆராய் Gemini AI tool ஐக் கேட்டபோது…. இக்கதையை வாசிப்பின் ருசி குறையாமல் சுருக்கமாகவும், ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையிலும் கீழே விவரிக்கிறேன். கதைச்சுருக்கம்: கெய்ஷா கதை ஒரு ஆணின் தனிமையிலிருந்தும், அவன் பெண்கள் மீது கொண்டிருக்கும் கசப்பிலிருந்தும் தொடங்குகிறது. அவனது கடந்தகாலம் தோல்வியுற்ற திருமண வாழ்வாலும், பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தையாலும் காயம்பட்டிருக்கிறது. அந்த வடுவினால் உண்டான வெறுப்பைத் தணிக்க, அவன் பெண்களை வெறும் உடலாகவும், போகப் பொருளாகவும் மட்டுமே அணுகுகிறான். இந்தச் சூழலில் அவன் 'கெய்ஷா' (ஜப்பானியப் பாரம்பரியத்தில் கலைநயத்துடன் விருந்தோம்பும் பெண்) போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். ஆரம்பத்தில் அவளை ஒரு கேளிக்கைக்கானப் பெண்ணாகவே பார்க்கிறான். ஆனால், அந்த இரவு செல்லச் செல்ல, இருவருக்குள்ளும் இருந்த முகமூடிகள் கழல்கின்றன. அவள் தன் வறுமையின் காரணமாகவே இந்த வேஷத்தை (கெய்ஷா) அணிந்திருப்பதாக ஒப்புக்கொள்கிறாள். அவனும் தன் மனதிலிருக்கும் தீராத கசப்பையும், தனிமையின் வலியையும் அவளிடம் கொட்டுகிறான். இருவரின் காயங்களும் ஒன்றையொன்று ஆறுதல்படுத்துகின்றன. அந்த நெருக்கத்தின் உச்சத்தில், அவன் அவளைத் தன்னுடன் நிரந்தரமாகத் தங்கிவிடுமாறு கெஞ்சுகிறான். அவளும் "மூச்சொலி போல உடன் இருப்பேன்" என்றும் "இறுதிவரை இருப்பேன்" என்றும் வாக்களிக்கிறாள். அவளது அரவணைப்பில், அவன் நெடுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்குகிறான். ஆனால், விடியற்காலையில் விழித்துப் பார்க்கும்போது அவள் அங்கு இல்லை. அந்த அறை, ஒரு பெண் வந்து போனதற்கான எந்தத் தடயமும் இன்றி நேர்த்தியாகச் சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. அவன் மீண்டும் தன் தனிமையில் விடப்படுகிறான். இலக்கிய விமர்சனம் ஜெயமோகனின் 'கெய்ஷா' சிறுகதை, மனித மனதின் 'தேடல்' மற்றும் 'நிழல் நிஜம்' (Illusion vs Reality) ஆகியவற்றுக்கு இடையிலான ஊடாட்டத்தை மிக நுட்பமாகப் பேசுகிறது. 1. முகமூடிகளுக்குப் பின்னால் உள்ள உண்மை: இக்கதையின் மையமே 'வேஷம்'தான். அந்தப் பெண் 'கெய்ஷா' எனும் வேஷமிட்டு வருகிறாள்; அந்த ஆண் 'வெறுப்பு' எனும் வேஷத்தை அணிந்திருக்கிறான். ஒரு புள்ளியில் இருவரின் வேஷங்களும் கலைந்து, நிர்வாணமான மனித ஆன்மாக்களாக அவர்கள் சந்தித்துக்கொள்வதே இக்கதையின் உச்சம். ஜெயமோகன் உரையாடல்கள் மூலம் அந்தக் கணத்தை மிகக் கூர்மையாகச் செதுக்கியிருப்பார். 2. கலையும் வாழ்க்கையும்: ஒரு கெய்ஷாவின் பணி என்பது விருந்தினரை மகிழ்விப்பது மட்டுமல்ல, அவர்கள் விரும்புவதைப்போலவே தன்னை மாற்றிக்கொள்வதும் ஆகும். கதையில் வரும் பெண், அவனுக்குத் தேவையான ஆறுதலையும், "நிரந்தரமாக உடன் இருப்பேன்" என்ற பொய்யான (ஆனால் அந்த நேரத்தில் தேவைப்படுகிற) நம்பிக்கையையும் கொடுக்கிறாள். அவள் சென்ற பிறகு அறையைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வது என்பது, அவள் ஒரு தொழில்முறை கலைஞர் என்பதன் குறியீடு. அவள் அவனது காயத்தை ஆற்ற வந்த ஒரு மருத்துவர் அல்லது கலைஞரே தவிர, வாழ்க்கைத்துணை அல்ல என்பதை அந்த முடிவு உணர்த்துகிறது. 3. முடிவின் மௌனம்: கதையின் மிகச் சிறந்த பகுதி அதன் முடிவுதான். அவள் போன பிறகு ஏற்படும் வெறுமை (Void), அவள் இருக்கும்போது இருந்த நெருக்கத்தை விட அதிக எடையுடனானது. "ஒரு பெண் வந்து போனதற்கான தடயமே இல்லை" என்ற வரி, அந்த இரவு ஒரு கனவோ என்று எண்ண வைக்கிறது. ஆண் எப்போதுமே தற்காலிகமான ஆறுதலை நிரந்தரமான உறவாக மாற்ற முயல்கிறான்; ஆனால் பெண் (இக்கதையில்) யதார்த்தத்தின் பிடியில் நழுவிச் செல்கிறாள். முடிவுரை: 'கெய்ஷா' - தனிமையின் ஆழத்தையும், ஒரு துளி அன்பிற்காக ஏங்கும் மனித மனதின் பலவீனத்தையும் பேசும் ஒரு செறிவான படைப்பு. இது காமக்கதை அல்ல; காமத்தின் வழியாக மனிதன் தேடும் ஆன்ம ஆறுதலின் கதை.- சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
அப்படியே காளிஅம்மாள், சாட்டை துரைமுருகன் புர்க்கா மூடிய வீராங்கனைகள் பாத்திமா பர்ஹானா , தாரிக்கா சல்மானையும் இவர்கள் சந்திக்க வேண்டும்.- சிலுவை இறக்கம்: துயரொழி காவியம் - சு. தவச்செல்வன் கதை வழிப் பயணம்
சிலுவை இறக்கம்: துயரொழி காவியம் சு. தவச்செல்வன் கதை வழிப் பயணம் கருணாகரன் பிரமாண்டமாகவே விரிந்திருக்கும் இயற்கையின் வினோதங்கள் எல்லையற்றவை. சொல்லி மாளாத அழகுடையவை. பார்த்துத் தீராத அழகொளிர் காட்சி அது. அப்படியான அழகிய – வசீகர இயற்கையின் பின்னணியில் அல்லது அவ்வாறான பேரெழில் இயற்கைக்குள், நாம் பார்த்துக் கொண்டிருக்கப் பகிரங்கமாகவே நிகழ்கின்றது இலங்கையில், மலையக மக்களின் நூற்றாண்டுகளாக நீளும் அவல வாழ்க்கை. இது நாம் பார்த்து வியக்கின்ற அழகுக்கு நேர் மாறான ஒன்று. இந்த மக்களுக்கான அபிவிருத்தி, மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எனச் சொல்லப்படும் திட்டங்கள், பெருந்தோட்டத்துறைக்கும் மக்களுக்குமான தனியான அமைச்சு, அந்த அமைச்சின் நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்புகள் எனப் பல இருந்தும் மக்களுடைய வாழ்க்கை நூறாண்டுகளாக ஒரே நிலையில்தான் உள்ளது. துயரமும் வலியும் அவலமும் வேதனையும் நிறைந்த இந்த வாழ்க்கையைப் பற்றி, அந்த விதியை மாற்றி எழுத வேண்டும் என்பதைப்பற்றி, நூற்றுக்கும் அதிகமானோரால் பல கோடி சொற்கள் எழுதியாயிற்று. இந்த வாழ்க்கையை மாற்றி எழுதுவதற்கென்று நடத்தப்பட்ட அரசியற் போராட்டங்களும் பல நூறுக்கும் மேலானவை. ஆனாலும், இந்த மக்களுடைய வாழ்க்கை விதி (அமைப்பு) மாறவே இல்லை. இந்த வேதனையும் துயரமும் வலியும் நூற்றாண்டுகளைக் கடந்தவை. அவற்றை ஏற்றுத்தான் அவர்கள் வாழ வேண்டும் என்ற மாதிரியே அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அல்லது அதற்குள்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின்போதும் கடின உழைப்பாளிகளான இந்த எளிய மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிப் பூக்கள் அத்தனையும் உடனேயே வாடிச் சருகாகி விடுகின்றன. வரலாறு முழுதும் அதீத நம்பிக்கையூட்டல்களால் களைப்படையப்பட்டவர்கள். இவர்களுக்கு முன்னே எத்தனையோ காட்சி மாற்றங்கள், நிறமாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரே நாடகமே திரும்பத்திரும்ப நிகழ்கிறது. அதொரு மாபெரும் சிலுவையேற்றம். இந்தத் துயர – அவல – நிலையைக் கதைகதையாக, நூறாண்டாகவே சொல்லத் தொடங்கினர், முதற் தலைமுறைப் படைப்பாளிகள். முதற்தலைமுறை, 19 ஆம் நூற்றாண்டில் வாய்மொழிப் பாடல்களாகத் தொடங்கியது. இன்றைக்கும் அந்தப் பாடல்கள் புழக்கத்தில் உண்டு. ‘படிப்பறியாத மக்கள், தங்களின் கவலைகளை எத்துணை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு நாட்டார் பாடல்கள் மிக முக்கியமான சாட்சியாகும்’ என்று ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப்பாடல்கள்’ நூலுக்கு எழுதிய வாழ்த்துரையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் சொல்வதைப்போலவே அந்தப் பாடல்களும் சாட்சிபூர்வமாக உள்ளன. “மலைநாட்டு மக்களெல்லாம் தங்கமே தங்கம் – நாங்க மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் – நாங்க மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்…“ இன்னொரு பாடல் – கண்டின்னா கண்டி – நாங்க பொழைக்க வந்த கண்டி- எங்க அயித்த மக குண்டி – அது சோத்துப் பான தண்டி வேறொரு பாடல் – மாடிமனை வீடு இல்ல கோடிப் பணம் எமக்கு இல்ல ஓடியோடி உழைச்சாலும் உள்ளத்தில தாழ்ந்ததில்ல மற்றொரு பாடல் – சீரான சீமை விட்டு சீரழியக் காடு வந்தோம் கூடை தலை மேலே குடி வாழ்க்கை கானகத்திலே…. இப்படி ஏராளம் பாடல்கள். எப்படித்தான் பாடித் தங்களுடைய துயரத்தை அந்த மக்கள் வெளிப்படுத்தியபோதும் அந்த நிலை, அந்த வாழ்க்கை முடியவில்லை; மாறவில்லை. தங்களுடைய கவலைகளை இப்படிப் பாடியாவது உளரீதியாக ஆற்றிக் கொண்டனர். அதாவது தங்கள் அளவில் பாடி மனமாறிக் கொண்டனர். அவ்வளவுதான். இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் பாடப்படும் நாட்டார் பாடல்களை அடியொற்றிய வடிவத்திலானவை. காரணம், இந்த மக்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கையின் மலைப்பகுதிகளான கண்டி, மாத்தளை, ஹற்றன் போன்ற இடங்களில் தோட்டப்பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டவர்கள் என்பதே. என்பதால், அவர்களுடைய நாட்டார் பாடல்களும் வாய்மொழி இலக்கியமும் தமிழ்நாட்டின் சாயலையும் சாரத்தையும் கொண்டமைந்தது. அதே மொழி, அதே மரபு. அதே தொனி. 1823 தொடக்கம் கடல்வழியாகப் படகுகளில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த மக்களுடைய வாழ்க்கையைச் சாராம்சப்படுத்தி எச். டி. டானியல் (H.D.Deniel) எழுதிய Red Tea (எரியும் பனிக்காடு – தமிழ் மொழிபெயர்ப்பு: இரா. முருகவேல்) உங்கள் நினைவுக்கு வரலாம். பின்னர் இயக்குநர் பாலா இதனை அடியொற்றி ‘பரதேசி’ என்ற சினிமாவை உருவாக்கியிருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். வாய்மொழிப்பாடல்களுக்குப் பிறகு, பல்வேறு கலை, இலக்கிய வடிவங்கள் உருவாகின. இதற்கான பெரும் பங்களிப்பைச் செய்தவர் தஞ்சாவூரிலிருந்து வந்து இந்த மக்களோடு இணைந்து வாழ்ந்த கோ. நடேசய்யர். நடேசய்யரே இந்த மக்களின் ‘விடிவெள்ளி‘ என்ற அளவுக்கு அன்றைய சூழலில் கல்வி, சமூக மேம்பாடு, கலை, இலக்கிய வெளிப்பாடு, இதழியல், தொழிற்சங்கங்கள், அரசியற் பிரதிநிதி, எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், தொழிலாளர் நலனுரிமைக்கான போராட்டக்காரர் எனப் பல தளங்களில் செயற்பட்டார். இதனால் மலையகத்தில் ஒரு புதிய வெளிப்பாடு வளர்ச்சி அடைந்தது. மக்களுடைய வாழ்க்கையில் பெரிய மாறுதல் இல்லாது விட்டாலும், சமூக ஊடாட்டங்களினால் இலக்கிய வெளிப்பாட்டில் மாறுதல்கள் ஏற்பட்டன. பின் வந்த தலைமுறையினர் அதைத் தொடர்ச்சியாக எழுதி ‘மலையக இலக்கியம்’ என்றொரு இலக்கிய வரைபடத்தையே உருவாக்கினர். இந்த வரைபடத்தை உருவாக்குவதற்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர்களாக கோ. நடேசய்யர், கே. கணேஸ், சி.வி. வேலுப்பிள்ளை, மீனாட்சி அம்மை, பொ. கிருஷ்ணசாமி, த. ரஃபேல், என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், ஏ. பி. வி. கோமஸ், சி. பன்னீர்ச்செல்வம், எம் வாமதேவன், அ. சொலமன்ராஜ், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், கோகிலம் சுப்பையா, அந்தனி ஜீவா, மு. நித்தியானந்தன், அல் அஸூமத், மல்லிகை சி. குமார், மு. சிவலிங்கம், மொழிவரதன், மலரன்பன், க.ப. லிங்கதாசன், குறிஞ்சித் தென்னவன், லெனின் மதிவானம், சு. முரளிதரன் எனப் பல நூறுபேரைக் குறிப்பிடலாம். தொடரும் இந்தநெடு வரிசையில் இப்பொழுது வே. தினகரன், சு. தவச்செல்வன், சிவனு மனோஹரன், பிரமிளா, பதுளை சேனாதிராஜா, சந்திரலேகா கிங்ஸ்லி, நாகபூசணி, மஞ்சுளா, எஸ்தர் லோகநாதன், சண்முகப்பிரியா, இஸ்மாலிகா, இராகலை தயானி, சர்மிளாதேவி எனப் பலர் இணைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருடைய எழுத்துகளிலும் சில பொதுவான பண்பை, குணத்தை அல்லது அடிப்படையை நாம் பார்க்க முடியும். அது தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும் தொடர்கிறது என்பது கவனத்திற்குரியது. முதலாளிகள், கங்காணிகள், அரசு, காலனிய சக்திகள் எனப் பல அடுக்குகளில் உள்ள அதிகாரத்துக்கு எதிரான குரல். துன்பியல் வாழ்வின் கதைகள். எழுச்சி, புரட்சி என்ற கனவோடு தொடரும் போராட்டங்களும் அவற்றின் பலவீனங்களும். பெண்களின் பாடுகள் மலையக மக்களின் விடுதலைக்கென உருவாகிய தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், தலைமைகள் மீதான விமர்சனம். சிங்கள இனவாதத்தின் அச்சுறுத்தலும் அதற்கெதிரான எதிர்ப்புணர்வும். கேள்விக்குறியின் முன்னே நிற்கும் இளைய சமூகத்தினர். ஆக, மலையக மக்களின் – தோட்டத் தொழிலாளரின் – வாழ்க்கையை நெருக்கும் விடயங்களையே மலையக இலக்கியம் பிரதிபலித்தது. இந்த மரபு அவர்களுடைய வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களிலிருந்து உருவாகியது. மக்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் பேசுவது, அவற்றுக்குக் காரணமான சக்திகளை விமர்சனத்துக்குள்ளாக்குவது என்பதே நாட்டார் பாடல்களின் பிரதான அடிப்படையாக இருந்தது. மலையக நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல, அன்றைய நாடகங்களும் கடுமையான அரசியல் விமர்சனத் தொனிப்பைக் கொண்டவையே. என்பதால், அதற்குப் பிறகு வந்த நவீன இலக்கியமும் தவிர்க்க முடியாமல், அதே செல்வழியில், வலிமையான முறையில் அரசியலைப் பேசும் இலக்கியமாகவே – எழுத்தியக்கமாகவே வெளிப்பட்டது. அது கவிதையாக இருந்தாலென்ன, சிறுகதை, நாவலாக இருந்தாலென்ன, இதை விட்டு விலகவில்லை. என்பதால்தான் அது அந்த மக்களையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் அடையாளப்படுத்தும் வகையில் ‘மலையக இலக்கியம்’ என்று உணரப்பட்டது; அடையாளம் பெற்றது. இதையே பின்வந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் தொடருகின்றனர். அதை விட்டு விலக முடியாத அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் நெருக்குவாரங்கள் உள்ளன. இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் மக்கள் (சமூகம்) என்றால், அது மலையக மக்களே. மட்டுமல்ல, நீண்டகால ஒடுக்குமுறையை (இரண்டு நூற்றாண்டுகளுக்கும்மேல்) எதிர்கொள்கின்றவர்களும் இந்த மக்களே! ஆகவேதான் மலைய இலக்கியம் தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும், புதிய போக்குகள், கோட்பாடுகள் போன்றவற்றின் செல்வாக்குகளின் மத்தியிலும் சில பொதுக் கூறுகளில் மாறாது நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த மக்கள் இலங்கைக்கு வந்து – தோட்டத் தொழிலாளர்களாகி இரண்டு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 1800 களில் எப்படி இருந்தார்களோ, எப்படிக் கையாளப்பட்டனரோ அவ்வாறே இப்போதும் உள்ளனர். அவ்வாறே கையாளப்படுகின்றனர். இடையில் பிரித்தானியரின் காலனித்து ஆட்சி மாறி, சுதேச ஆட்சி வந்த பிறகும் நிலைமை பெரிய அளவில் மாற்றமுறவில்லை. சுதேச ஆட்சி வந்த பிறகுதான் 1949 நவம்பர் 15 இல் இந்த மக்கள் ‘நாடற்றவர்‘ ஆக்கப்பட்டனர். (இதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தனியானவை). சுதேச ஆட்சியில் மலையக மக்களுடைய விடுதலைக்கும் நலனுக்குமென்று தொழிற் சங்கங்களும் அரசியற் கட்சிகளும் வந்த பின்னரும் கூட நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை என்பது பெருந்துயரம். ஆனால், மலையகத்தில் ஒரு படித்த மத்தியதர வர்க்கம் உருவாகியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். அதனுடைய குரலே இன்றைய (1980 க்குப் பிந்திய) இலக்கியத்திலும் வெளிப்படுகிறது. அது மத்தியதர வர்க்கத்தின் குரலாக மட்டுமில்லாமல், ஒடுக்கப்படும் மக்களின் குரலாக 2000 வரையிலும் இருந்தது. இது முக்கியமானது. அந்தக் குரல் தன்னைப் பின்வரும் உள்ளடக்கத் தன்மைகளை வெளிப்படுத்தியது. மலைகள் அழகு. அதற்கு மாறான வகையில் அங்குள்ள மனிதரின் கதைகள் வலியும் துயரும் மிக்கவை. அவலமும் துயரமும் நிறைந்த நூற்றாண்டுகளைக் கடந்த வாழ்க்கை. எத்தகைய அரசியல் முன்னெடுப்புகளும் தொழிற் சங்கப் போராட்டங்களும் அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. ஆட்சி மாற்றங்கள், அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. குடியுரிமை, நில உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்காகவே போராட வேண்டிய வாழ்க்கைப் பின்னணி. தொடர்ந்தும் சுரண்டப்படும் மக்களாகவே இருப்பது. மலையகத்தை விட்டு வெளியிடங்களுக்கு – கொழும்பு போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை. குறிப்பாக சிற்றூழிய வேலைகளுக்காக. இந்திய வம்சாவழி மக்களாக இருந்ததால் நாடற்றவர்கள் என்று ஒரு தொகுதியினர் மறுபடியும் இந்தியாவுக்குப் பலவந்தமாகவே திருப்பி அனுப்பட்டமை. ஏனைய மக்கள் தம்மை இலங்கையர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி வேண்டிய நிலை. இனவன்முறைகளின் தாக்கமும் பாதிப்பும். தோட்டங்களை – மலையகத்தை – விட்டு வெளியேறிக் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் செல்வோர் பற்றியது. நெடுங்காலமாகப் பேசப்பட்டும் பேணப்பட்டும் வந்த இந்தத் தன்மை இப்போது சற்று மாறுதலடைந்துள்ளது. இதைப்பற்றி மலையக எழுத்தாளரான சு.தவச்செல்வன் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ‘இன்றைய கதைகள் அல்லது இலக்கிய வெளிப்பாடுகள் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவனவாகவும் மக்கள் அல்லது தொழிலாளர் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்து, உதிரிகள் பற்றிய கதைகளைப் புனைவதும் அல்லது முக்கியத்துவமற்ற பிரச்சினைகளுக்கு முனைப்புக் கொடுத்து படைப்புகளை உருவாக்குவதுமாக மாறியுள்ளது’ என்கிறார் தவச்செல்வன். உருவாகியிருக்கும் அல்லது வளர்ச்சியடைந்திருக்கும் மத்தியதர வர்க்கத்தின் குணாம்ச வெளிப்பாடு இது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. 2000 க்குப் பிறகு உருவாகிய புதிய தலைமுறையில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்ளே புத்திஜீவிகளாவும் விமர்சகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்குமிடையிலான நெருக்கம் குறைவடையத் தொடங்கி, இன்று அது குறைந்தே விட்டது. இவர்கள் மலையகத்தை – தோட்டங்களை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்; செல்கின்றனர். இதனால் தோட்டங்களைப் பற்றிய அனுபவங்களும் சமூக உறவும் இவர்களிடம் குறைவடைகிறது. பதிலாக வெளியே சென்று குடியேறுகின்ற – வேலை செய்கின்ற – இடங்களில் சந்திக்கின்ற – சந்திக்க நேர்கின்ற பிரச்சினைகளே இவர்களுடைய எழுத்தைச் சாரப்படுத்துகின்றன. அதுவே இவர்களைச் சீண்டும், தீண்டும் பிரச்சினைகளாக உள்ளன. அத்துடன் இன்றைய உலகமயமாதல் உருவாக்கியிருக்கும் குழப்பமான சூழல், நவீனத்துக்குப் பிந்திய படைப்பாக்கம் பற்றிய கருத்தாக்கம், பின்நவீனத்துவச் சிந்தனைகள் போன்றவற்றின் செல்வாக்கும் இந்தப் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் தாக்கம் செலுத்துகின்றன. என்பதால் இப்பொழுது மலையகத்தில் தொழிலாள வர்க்கம் ஒன்றாகவும் அதனுடைய பிரச்சினைகள், அவனுடைய வாழ்க்கை போன்றவை அது சார்ந்தவை அதனோடு இணைந்ததாகவும் உள்ளது. மத்தியதர வர்க்கம் இன்னொன்றாகவும் அதனுடைய பார்வைகளும் அணுகுமுறைகளும் அனுபவங்களும் பிரச்சினைகளும் வேறொன்றாகவும் உள்ளன. என்பதால் மலையக இலக்கியம் இந்த நூற்றாண்டில் இன்னொரு வடிவில், இரு நிலைகளை (தன்மைகளை) உடைய புதிய தன்மையைக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் மலையக எழுத்தாளரான சு. தவச்செல்வனின் சிறுகதைகள் குறித்துப் பார்க்கலாம். சு. தவச்செல்வன், 2010 இலிருந்து எழுதி வருகிறார். மலையகத்தில் உள்ள ஹற்றன் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் பிறந்து வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பட்ட மேற்படிப்பை மட்டும் யாழ்ப்பாணத்திலும் பேராதனை (கண்டி) பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்திருக்கிறார். சிறுகதை, விமர்சனம், கவிதை, ஆய்வு ஆகிய துறைகளில் தவச்செல்வனின் எழுத்து முயற்சிகள் பல்தன்மை விரிவில் உள்ளன. இதுவரையில், சிவப்பு டைனோசர்கள் (கவிதை), மலையகத்தில் பாரதியின் சிந்தனை (ஆய்வு), ஆடுபாலம் (சிறுகதை), டார்வினின் பூனைகள் (கவிதை), படைப்பும் படைப்பாளுமைகளும் (விமர்சனம்), புனைகதையும் சமூகமும் (ஆய்வு), இலக்கியம் – கலகம் – அரசியல் ( விமர்சனம்), இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் (ஆய்வு), சிங்கமலை (சிறுகதை) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. பன்முக ஆற்றலுடைய தவச்செல்வன், இன்னமும் தோட்டத்து மக்களைக் (மலையகத்திலேயே வாழும் மக்களை) குறித்து எழுதுவதும் மலையச் சமூக, இலக்கிய, அரசியல் வரலாற்றைக் குறித்து ஆய்வுகளைச் செய்வதும் அவருடைய சமூகக் கரிசனையையும் இலக்கிய நோக்கையும் அடையாளப்படுத்துகிறது. என்பதால் தவச்செல்வனுடைய கதைகள் தொழிலாளர் பிரச்சினை, முதியவர்களின் வாழ்க்கை, மலையகப் பெண்களின் பாடுகள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள நெருக்கடி, தோட்ட மற்றும் அரச அதிகாரத்தரப்புகளின் நடத்தைகள், சிறாரின் உலகம், மலைகளின் கதைகள் (அந்தச் சூழலின் வரலாற்றுணர்வு பற்றியவை), இளையோரின் சவால்கள், வறியவர்களின் வாழ்க்கை, இந்திய வம்சாவழி என்ற அடையாளத்தினால் ஏற்படும் சிக்கல்கள், புதிய அரசியல் பொருளாதாரச் சூழலில் தோட்டங்கள் மூடப்படுதலின் விளைவுகள், இந்திய வம்சாவழி உறவுகளைப் பேணவும் முடியாது, கை விடவும் முடியாது தத்தளிக்கும் உளநிலை எனப் பலவற்றைப் பற்றிப் பேசுகின்றன. இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கான கதைகளா இவை? அல்லது தன்னுடைய கதைகளில் இவற்றையெல்லாம் பேசுகிறாரா? என்று தெரியாத வகையில், கலைத்துவமாக அழகியலோடு எழுதியிருக்கிறார் தவச்செல்வன். வர்க்க நிலைப்பட்ட பார்வையே தவச்செல்வனுடைய கதைகளின் பொதுத் தன்மை. இதனை அவர் இரண்டு வகையாக நிகழ்த்துகிறார். ஒன்று, உழைப்பாளிகளாக உள்ள மக்களின் பாடுகளைச் சொல்வது. இதன் மூலம் அந்த மக்களின் நிலைமையை உலகின் முன்னே வைப்பது. உலகின் முன்னே வைப்பதென்பது, அரசு, சமூக அமைப்புகள், கட்சிகள், கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், மனித உரிமைவாதிகள், சட்டவாளர்கள், நீதியாளர்கள், ஊடகங்கள், சர்வதேசச் சமூகம் எனச் சகல தரப்பின் முன்னும் வைப்பதாகும். முக்கியமாக இந்திய அரசின், தமிழக அரசின் முன்னாலும். “உங்களின் முன்னே நூற்றாண்டுகளாக ஒரு சமூகம் மிகக் கீழ்நிலைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் பங்களிப்பே அதிகமானது. அதற்குப் பெரும் பங்களிப்பை நூற்றாண்டுகளாக இந்த மக்களே வழங்கி வருகின்றனர். அப்படிப் பெரும் உழைப்பை வழங்கி வரும் மக்கள், அதற்கான தகுதிநிலையைப் பெற முடியாமல், ஒதுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இது என்ன நீதி? இதற்கு என்ன நியாயம்?…“ என்று முகத்தில் அறைந்தாற்போலக் கேட்கின்றன. இதன் மூலம் அந்த மக்களின் பிரதிநிதியாக நிற்கிறார் தவச்செல்வன். இது உழைப்பாளர்களின், ஒடுக்கப்பட்டோரின் நிலை நிற்றலாகும். இரண்டாவது, நூற்றாண்டுத் துயரைத் தன்னுடைய முன்னோடிகள் – முதற் தலைமுறையினர் மட்டுமல்ல, தானும் சொல்லவும் பேசவும் வேண்டியுள்ளது. அது தன்னுடைய பொறுப்பு, கடமை என்று உணர்வது. ‘இது தலைமுறையாகத் தொடரும் ஒரு தீராத நோய். தலைமுறைகளாகக் கிடைக்கப்பெறாத நீதி‘. என்பதால் தானும் இதைப்பேசுவதன் மூலம் தன்னுடைய பங்களிப்பைச் செய்வதோடு, இதற்கெதிரான போர்க்குரலை, போராட்ட உணர்வை உருவாக்கும் போராளிக்குரிய நிலையிற் செயற்படுவதாகும். இந்த இரு தன்மைகளில் உள்ள கதைகள், ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்புக் குரலாகவும் போராட்ட எழுச்சிப் படைப்புகளாகவும் சமனிலையில் தொழிற்படுகின்றன. இவற்றை அக – புற நிலையில் பயணித்து எழுதி அளித்திருக்கிறார். தொகுத்துச் சொல்வதாயின், இவை ‘கலகக் கதைகள், எதிர்ப்புக் கதைகள்‘ எனலாம். ஆக கலகக் குரலே தவச்செல்வனுடையது. எதிர்ப்பிலக்கியமே தவச்செல்வன், எழுதி அளித்திருப்பது. ஆனால், வாசிக்கும்போது முதல் நிலையில் இவை ‘துன்பியல் கதைகள்‘ என்றே தோன்றும். மக்களின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கும்போது, அவற்றை நாம் நேரில் காண்பதைப்போல, அதற்குள் வாழ்வதைப்போல உணரும்போது அந்த மக்களின் துயரம், நம்முள் சுவறுகிறது. ஆனால், அப்படியே துன்பத்தைப் பகிர்வதோடு எந்தக் கதையும் முடியவில்லை. அப்படித்துன்பியலைப் பரப்பி, கழிவிரக்கத்தைக் கோருவதற்குத் தவச்செல்வன் விரும்பவில்லை. அப்படிக் கழிவிரக்கப்படுவது தேவையில்லை என்பதே அவருடைய நிலைப்பாடுமாகும். ‘உழைப்புக்கு மதிப்புத் தாருங்கள். மனிதருக்கு உரிமையை வழங்குங்கள்‘ என்பதே அவருடைய வலியுறுத்தல். அதைப் பெறுவதற்கு ‘நாமெல்லாம் தகுதியுடையோர்‘ என்பதே அவர் தன்னுடைய மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்லும் சேதி. இதைத்தானே முந்திய தலைமுறை மலையக எழுத்தாளர்களும் செய்திருக்கிறார்கள்! இதில் தவச்செல்வன் என்ன புதிதாகச் சொல்லியிருக்கிறார்? மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சியை, மத்திய தர உருவாக்கத்தை, அந்த மத்தியதர வர்க்கத்தினர் மலையகத்தை விட்டு வெளியேறிச் செல்வதை, அந்த வெளியேற்றம் மலையகச் சமூகத்தில் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை, கூலி உழைப்பாளிகளும் கூட தோட்டங்களை விட்டு புறநகர்களை நோக்கிச் செல்கிறார்களே அந்த வெளியேற்றம் உண்டாக்கும் சமூகப் பண்பாட்டு நொதிப்புகளை, புதிய உலக ஒழுங்கில், உலக மயமாதற் சூழலில் மலைகத்தின் நிலையை தவச்செல்வனின் கதைகள் என்ன விதமாகப் பேசியுள்ளன? மொத்தமாக மலையகக் கதைகளில் தவச்செல்வனின் கதைகளுக்கான இடமென்ன? தவச்செல்வனுடைய கரைதகளின் தனித்தன்மை என்ன? போன்ற கேள்விகள் பலருக்கும் எழலாம். தவச்செல்வன் புதிதாக அதிகம் சொல்லவில்லைத்தான். ஆனால், சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார். அதற்கான சொல்முறையையும் வெளிப்பாட்டு வடிவத்தையும் செம்மையாகக் கையாள்கிறார். அவர் ஒரு சமூகவியல் ஆய்வாளர் என்ற வகையிலும் இலக்கிய விமர்சகன் என்ற அடிப்படையிலும் தன்னுடைய கதைகளின் உள்ளீட்டிலும் வெளிப்பாட்டிலும் கவனம் கொண்டு இந்தச் செழுமையாக்கத்தைச் செய்திருக்கிறார். இதற்குச் சான்றாக, ‘சாக்குக்காரன்’, ‘ புதைமேடு’, ‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’, ‘வரிச்சி வரிசை’, ‘முதிர்கன்னி’, ‘காலையும் கிழவனும்’, ‘வெறுங்கல்லும் வேட்டை நாய்களும்’, ‘ஆடுபாலம்’, ‘காணிக்கொழுந்து’ போன்ற கதைகள் இதில் முக்கியமானவை. ‘சாக்குக்காரன்’ கதை, மலையகத்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிளை, அந்தத் தோட்டத்தில் வேலையாட்களுக்குப் பொறுப்பாக இருக்கும், வேலையாட்களைக் கண்காணிக்கும் அதிகாரிகள் எப்படி அடிமைகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. தோட்ட விதிமுறைகளுக்கு மாறாக நடைமுறைகளை மாற்றித் தங்களுடைய குடும்பத்துக்கான சேகவத்தைச் செய்விக்கும் இடைநிலை அதிகாரிகள், கங்காணிமார், ‘சாக்குக்காரன்‘ என்ற நேர்மையான உழைப்பாளியின் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவனுக்கும் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரமில்லை. அவனுடைய அப்பாவித்தனத்தை அவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அன்று நள்ளிரவு வரையில் அவனுடைய வருகைக்காக மனைவியும் குழந்தைகளும் காத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்தபோதுதான் அவனுக்குப் புரிகிறது, குழந்தைகளுக்கும் அன்றைய சமையலுக்குமாக வாங்கிய பொருட்களை தான் வேலை செய்யும் வண்டியில் கொழுவி விட்டு, மறந்து வந்துவிட்டேன் என்பது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அன்றைய இரவும் பசித்திருத்தல், துயரில் வாழ்தல்தான் கதை. இந்த அநீதி விளையாட்டுத் தலைமுறையாகத் தொடருகிறது. தொழிற்சங்கங்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் என்ன? இருளும் துயரும்தான் விதி. இந்த விதி இப்படியே தொடர வேண்டுமா? என்பதைப் படிக்கும்போது நாம் உணர்ந்து கொள்கிறோம். ‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’ – இலங்கையின் வாழ்ந்தாலும் இந்தியாவில்தான் வம்சாவழி உறவுகள் என்பதைச் சொல்லும் கதை. ஒரு தடவையேனும் போய் அந்த உறவுகளைப் பார்த்து வரமுடியுமா என்று ஏங்குகிறார் தந்தை. அங்கே, தமிழ்நாட்டில் உள்ள உறவுகளின் மரணச் சேதிகள், திருமண நிகழ்வு பற்றிய அறிவிப்புகள் எல்லாம் வரும்போது உறவுகளைப் பார்க்க வேண்டும் என்ற தாகம் மேலெழுந்து தவிக்க வைக்கிறது. பயணத்துக்கான பாஸ்போட்டை எடுத்தாலும் பயணத்துக்கான சாத்தியங்களில்லை. எல்லாவற்றையும் (தன்னுடைய ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும்தான்) அந்த ரேங்குப் பெட்டிக்குள் போட்டிப் பூட்டி வைத்திருக்கிறார் அப்பா. அதை அவர் பக்குவமாகவே வைத்திருக்கிறார். இந்தப் பெட்டிக்குள் என்னதான் இருக்கிறது என்று அறியத் துடிக்கின்றன பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளின்பார்வையிலிருந்தே கதை சொல்லப்படுகிறது. பிந்திய தலைமுறைக்கு இந்த உறவின் தன்மையோ, விவரமோ தெரிவதற்கு வழியில்லை. காலமும் சூழலும் நாட்டு நிலைமைகளும் சட்டங்களும் அவற்றைச் சிதைத்து விட்டன. ஆனால், அப்பாவுக்கு அந்த நினைவுகளிலிருந்து விடுபட முடியவில்லை. அவர் தன்னுடைய இந்த உறவுகள் அனுப்பிய கடிதங்களோடும் பொருட்களோடும் வாழ்கிறார். அதற்கென ஒரு ரேங்குப் பெட்டியை வைத்திருக்கிறார். அது அவருடைய ரகசியப் பொக்கிஷம். அதைப் பிள்ளைகள் திறந்து பார்த்து விடுகிறார்கள். இப்படியே செல்லும் கதை இந்த மக்களின் பூர்வீகத்தைப் பற்றியும் அந்த நினைவுகளின் பாடுகள் எப்படி மனித மனங்களில் வலியாக மாறி நீடிக்கின்றன என்பதையும் ஆராய்கிறது. மட்டுமல்ல, அந்த நினைவுகளோடு வாழ்தலையும் அதன் வலிகளையும் உறவுகளைப் பிரிந்திருத்தலின் துயரையும் புதிய தலைமுறைகள் இதையெல்லாம் தொடர முடியாத நிலையையும் சிறப்பாகச் சொல்கிறது. மானுடத் துயரங்கள் எப்படியெல்லாம் உள்ளன! ‘வரிச்சி வரிசை‘ – விழிப்புணர்வுக் கதை எனலாம். பொதுவாகவே எல்லாக் கதைகளிலும் விழிப்புணர்வுத் தன்மை அடிப்படையாக இருந்தாலும் இந்தக் கதையில் அது சற்று நேரடியாகச் சொல்லப்படுவதைப்போல ஓருணர்வு ஏற்படுகிறது. சுரண்டப்படும் மக்களுக்குள் அல்லது ஒடுக்கப்படும் உழைப்பாளர்களுக்குள் ஏற்படுகின்ற கொதிப்பு, எதிர்ப்புணர்வாக எப்படி மாறுகிறது? எப்படிப் புரட்சிக்கான உணர்வெழுச்சியை உருவாக்குகிறது என்பதை இயல்பாகச் சொல்கிறது. அப்படி உணர்வெழுச்சி அடையும் இளைஞரின் தலையில் சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டிருப்பது, சிவப்ப ரீசேர்ட் அணிந்திருப்பது என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டதுதான். அல்லது அந்தக் குறியீட்டுக்கான அழுத்தம் செயற்கையாக உள்ளதென உணரப்பட வாய்ப்புண்டு. இருந்தாலும் கதைப்போக்கில் கொதிப்பு எதிர்ப்புணர்வாக உருவாகி வரும் விதம் இயல்பாக – யதார்த்தமாகவே உள்ளது. முன்னோரின் வாய்மொழிக் கதையாக தாத்தாவின் மூலமாகச் சொல்லப்படுகிறது ‘சிங்கமலை’. மலைக்காடுகளை எப்படி ‘முன்னோடிகளான முதற் தலைமுறை தொழிலாளர்கள் தோட்டங்களாகவும் இன்று நாம் பார்த்து வியக்கின்றன செழிப்பான மலையகமாகவும் மாற்றினார்கள். அதில் இந்த மாதிரி மலைக்குன்றுகள்தான் அன்று அவர்களுடைய வாழிடமாக இருந்தன. அப்பொழுது வீடுகளே இருக்கவில்லை. காடுகளிலும் மலைக்குன்றுகளின் கீழும் குகைகளிலும்தான் மக்கள் வாழ வைக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்துதான் இந்த மலையகத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பேரனுக்குச் சொன்னதாக, பேரனின் வழியாகச் சொல்லப்படுகிறது. கடந்து வந்த காலத்தின் வரலாறும் துயர்வழிப் பாதையும் அப்படியே நமக்குள் விரிகிறது. மலையகத்தைப் பற்றிய, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நம்முடைய பார்வையும் அனுபவமும் மாறுகிறது. இனி மலையகத்துக்குச் செல்லும்போது அல்லது மலையகக் காட்சிகளை எங்கேனும் பார்க்கின்றபோது, நாம் அந்தப் பசிய மலைமுகடுகளையோ, வரிசையாக நின்று தேயிலைக் கொழுந்து கொய்யும் பெண்களையோ ஒரு அழகிய காட்சி என்ற கோணத்திலிருந்து பார்க்காமல் நம்முடைய பார்வையை மாற்றி விடுகிறது கதை. பதிலாக அந்த மனிதர்களின் வாழ்க்கை நிலையின் ஊடாகவே பார்க்க வைக்கிறார் தவச்செல்வன். இது அவருடைய நோக்கத்தின் – எழுத்தின் – வெற்றி. இலக்கியத்தின் நுட்பமும் அடிப்படையும் இதுதானே. அக விரிவுகளை உருவாக்குவது. புதிய பார்வைகளை (நோக்குகளை) வழங்குவது. இருட்பிராந்தியங்களை ஒளிப்படுத்திக் காட்டுவது. நீதிக்கான பக்கத்தில் நம்மை நகர்த்துவது. நம்முடைய மனதை திருப்பிப் போடுவது…. ‘பொடிமாத்தயாவும் மாடசாமியும்‘ சிங்கள வன்முறையை, சிங்கள ஆதிக்கத்தைச் சொல்லும் கதை. தமிழ் பேசும்மக்கள் செறிவாக வாழும் மலையகப் பகுதிகளில் சிங்கள இனவாதிகள் எப்படி மேலாதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனாலும் தொழிலாளி என்ற அடிப்படையில் அந்த வன்முறையை பொடிமாத்தயா என்ற சிங்களவர் எதிர்க்கிறார். அவர் தமிழ் மக்களின் பக்கமாகவே நின்று போராடுகிறார். இங்கே தொழிலாளர்களுக்கிடையிலான உறவும் உணர்வும் வர்க்க உணர்வாக அமைந்திருக்கிறது. இது தவச்செல்வனின் வர்க்கப்பார்வைக்கு அடையாளமான கதை எனலாம். ‘காணிக் கொழுந்து‘ வெளியார் உற்பத்தி முறை(Outsider production system) மூலமாக நிலமற்ற மக்களின் பிரச்சினையையும் அதனால் ஏற்படும் வாழ்க்கைச் சிக்கல்களையும் சொல்கிறது. முக்கியமாக இதில் உள ரீதியாக உருவாக்கும் தாக்கங்களைக் கவனப்படுத்துகிறார் தவச்செல்வன். இன்னொரு முக்கியமான கதை, ‘ஆடுபாலம்‘. காலனத்துவ காலத்தில் பிரிட்டிஷாரினால் அமைக்கப்பட்ட ‘ஆடுபாலங்கள்‘ இன்னும் மலையகத்தில் உண்டு. ஆறுகளின் மேலாக அமைக்கப்பட்ட இந்தப் பாலங்கள் பாதுகாப்பற்றவை. இந்தப் பாலத்தின் வழியே பயணித்தவர்கள் இறந்த சம்பவங்கள் பலவுண்டு. அப்படியான ஒரு சம்பவத்தில் எட்டுப்பேர் ஒன்றாக பலியானதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது. ‘காலையும் கிழவனும்‘ மலையகத்துக் கதையாக இருந்தாலும் வழமையான – அறியப்பட்ட – கதைப் பிராந்தியத்துக்கு வெளியே உள்ள ஒன்று. மலையகத்தில் காளை மாடுகளை வளர்ப்பது ஒரு சிறிய தொழில் முயற்சியாக அங்குள்ள ‘லயம்‘ வாழ் மக்களிடம் இருந்தது. காளை மாடுகளைக் கொண்டு பசுமாடுகளைச் சினைப்படுத்துதல் (கருவூட்டுதல்) தான் காளை மாடுகளை வளர்ப்பதற்கான காரணம். செயற்கை முறைச் சினைப்படுத்தல் வந்தபோது காளை மாடு வளர்ப்புச் சவாலுக்குரியதாகி விடுகிறது. உலகமயமாதல், புதிய தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றினால் ஏற்படுகின்ற தொழில் நெருக்கடி, சுதேச, பாரம்பரியத் தொழிலில் எத்தகைய சிக்கல்களை உண்டாக்குகிறது என்பதை உணர்த்துவது. கவனம் பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று. இதைப்போலப் பெண்களின் பாடுகளையும் அவர்களுடைய உளநிலையையும் சிறார்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய சவால்களையும் அகமெடுத்துத் தவச்செல்வன் எழுதியிருக்கிறார். தொழிற்சக்க அரசியலின் பலவீனம், தொழிலாளர்களை எப்படிப் பாதிக்க வைத்தது, தோட்டங்கள் மூடப்படுவதற்குப் பயன்படுத்தும் அதிகார வர்க்கத்தின் பொறிமுறை, அந்தச் சவாலை எதிர்கொள்வதற்குப் பெண்கள் உட்படத் தொழிலாளர்கள் படுகின்ற அவதியும் போராட்டமும், சம்பளப்பிரச்சினை, வாழிடப்பிரச்சினை, பாலியற் சுரண்டல்கள், சிறாரைத் தொழிலுக்கு அமர்த்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்க இழப்பீட்டில் நடக்கும் ஒழுங்கீனங்களும் ஏமாற்றும் – அதற்கான நிவாரணத்தைப் பெறுவதில் உள்ள நெருக்கடிகள் என ஏராளம் ஏராளம் பிரச்சினைகள் அறியத்தரப்படுகின்றன. ஒவ்வொன்றும் எத்தகைய அக – புறத் தாக்கத்தை ஒரு சமூக மனிதர்களிடம் உருவாக்குகின்றன. அது எப்படிச் சமூகத துயரமாக உறைந்து கிடக்கிறது. இதையெல்லாம் தாங்கியும் தாங்கிக்கொள்ள முடியாமலும்தான் அந்த மக்கள் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் வாழும் இந்த உலகத்தில்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நம்முடைய வினைகள் என்ன? என்பதைக் கேள்விகளாக எழுப்பி விடுகின்றன இந்தக் கதைகள். ஒவ்வொரு சொல்லையும் படித்துச் செல்லும்போது நம்முடைய மனம் கனக்கத் தொடங்கி விடுகிறது. குற்றவுணர்ச்சியும் கோபமும் சமாந்தரமாக எழுகின்றன. நம்முடைய ரத்தக் கொதிப்பின் அளவு உயர்கிறது. தனியே ரத்தக் கொதிப்பை அதிகரிக்கப்பண்ணுவதுதான் இந்தக் கதைகளா என்றால், நிச்சயமாக இல்லை. நிதானமாகச் சிந்தியுங்கள். அந்த மக்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களோடு இணைந்திருங்கள். அவர்களுக்காக போராடுங்கள் – குரல் எழுப்புகள். அவர்களும் சக மனிதர்கள். சக மனிதர்களின் மீது கொள்ளும் நேசமே மானுட மகத்துவம். அதுவே அன்பின் அடையாளம். அதற்கே அன்புறவிலும் பண்பாட்டிலும் இடமுண்டு. பண்பாடு என்பதே சக மனிதர், சக சமூகத்தினரின் மீது கொள்ளும் கரிசனையிலும் அன்புறவிலும் அவர்களுடைய துயர் களைதலிலும்தான் சிறப்புறுகிறது என்பதை உணர்த்துகின்றன. அப்படி உணர்த்தப்பட்டதானால்தான் இந்தக் கதைகளைப் பற்றிய இந்த வார்த்தைகளை எழுத முடிகிறது. அவையே இந்தச் சொற்களை இங்கே தூண்டுகின்றன. தவச்செல்வனுடைய கதைப்பரப்புகளில் மேலும் சில அம்சங்களைக் காணலாம். சூழல் தேசியவாதம் குறித்த அக்கறையும் அக்கறைப்படுத்தலும். மலையக மக்களின் சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கைச் சித்திரங்கள். மலையக மக்களின் தேசிய இருப்பும் சவால்களும். மலையக மக்களின் தலைமுறைகள் – அவற்றிடையே ஏற்படுகின்ற மாற்றங்களும் மோதல்களும் விலகல்களும். இவை பற்றித் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விரிவு காரணமாக இங்கே அதை இந்த அடையாளப்படுத்துலோடு நிறுத்திக் கொள்கிறேன். வெவ்வேறு கதைப் பரப்புகளிலும் கவனம் கொண்டிருப்பது தவச்செல்வன் கதைகளின் முக்கியத்துவம் அல்லது தனித்துவம் எனலாம். ஆனால், மலையகத்தில் ஏற்பட்டுள்ள மத்தியதர வர்க்க வளர்ச்சியையும் அதனுடைய விலகிச் செல்லும் அக – புற நிலைகளையும் கவனிக்கவில்லை என்பது ஒரு குறையே. ஆனால், அவருடைய கட்டுரைகளிலும் ஆய்வுகளிலும் இதைப்பற்றிய முறையான அவதானங்கள் உண்டு. கதைகளில்தான் இல்லை. அதைப்போல, தோட்டங்கள் காலனித்துவம், சுதேச அரசு, அரசுடமை, கம்பனிகள் ஆகியவற்றின் கீழ்மாறிச் சென்றதைப் பற்றிய சித்திரங்களும் பெரிய அளவில் இல்லை. ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சினைகளையும் உள்ளெடுத்துப் படைப்பாளி பேச வேண்டும் என்ற நிபந்தனையை யாரும் விதிக்க முடியாது. அப்படியான கேள்விகளையும் எழுப்ப முடியாது. அப்படிச்செய்வது அவருடைய முழுநேர வேலையும் அல்ல. அவருடைய பரப்பெல்லைக்குள் கவனப்படுத்தய விடயங்களைக் குறித்து, அவற்றின் செழுமை, உள்ளடக்குகள், அவை பேச விழைகின்ற அரசியல், பண்பாட்டு விடயங்கள் போன்றவற்றின் மீதுதான் நாம் கவனம் செலுத்திப் பேசலாம். அவற்றில் குறித்த எழுத்தாளருடைய வெற்றி – தோல்விகளைப் பற்றி உரையாடலாம். அப்படிப் பேச விளையும்போது மலையக எழுத்தாளர்களில் தவச்செல்வனுடைய இடம் வலியது. அவருடைய கதைகள் மலையக இலக்கியத்தில் தனி முகமுடையவை. இதை மேலும் சான்றுப்படுத்துவதாக இருந்தால், மக்கள் அழகியல் என்று உணர்ந்து கொள்வதற்கான பண்பாட்டு அம்சங்கள், வாழ்க்கைக் கோலங்கள், மக்களுடைய பண்பு, நம்பிக்கைகள், வரலாறு, நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழும் திறன் போன்றவற்றைப் படைப்பாக்கி, மலையக மக்களின் முழுச்சித்திரமொன்றை நமக்குத் தருகிறார். ஒரு கதைத் தொகுதியை வாசிப்பதன் வழியாக அந்தச் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அதனுடைய மொழி, சடங்குகள், அந்த மக்களுடைய வாழ்க்கை, தொழில்முறைகள், அவற்றில் ஏற்படுகின்ற சவால்கள், அவர்களைப் பலியிடுகின்ற அல்லது ஈடேற்றுகின்ற அரசியல், அவர்களிடையே ஏற்படுகின்ற வளர்ச்சி, சூழல் தாக்கங்கள், அமைவிடம், இயற்கையின் செல்வாக்கு எனப் பலதையும் அறிய முடியுமாயின் அது மிகப் பெரிய வெற்றியே. இவற்றில் குறித்த சமூகத்தின் ஆன்மா தொழிற்படும் விதமே அதனுடைய வரலாறாகவும் பண்பாடாகவும் வளர்ச்சியாகவும் அமைகின்றது. அதைக் கண்டுணர்வதே எழுத்தாளரின் சிறப்புப் பணி. தவச்செல்வனிடம் இதைச் செழிப்புறக் காண்பது மகிழ்ச்சிக்குரியது. மலையகக் கதைகள் ஈழத்தின் பிற தமிழ்மொழிச் சமூகங்களான இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்களின் கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. வாழிடம் (திணை –குறிஞ்சி), மொழி (தமிழ் மொழியாக இருந்தாலும் ஆட்களின் பெயர்கள், சொற்கள் போன்றவை தமிழ்நாட்டுடன் நெருக்கமானவை அல்லது தமிழ்நாட்டைச் சாரப்படுத்தியவை), பண்பாடு (இதுவும் ஏறக்குறைய தமிழகப் பண்பாட்டை அடியொற்றியதே), அரசியல், வாழ்க்கை அமைப்பு (இதிலும் தமிழகச் சாயல்கள் உண்டு), நம்பிக்கைகள், சவால்கள் எனப் பலவற்றாலும் வேறானவை. ஆனால், மலையக இலக்கியமும் ஈழ இலக்கியமே. அந்த மக்களும் இன்று இலங்கையின் பன்மைச் சமூகங்களில் ஒன்றாகவே உள்ளனர். தேசிய அரசியற் பிரச்சினைகளில் அவர்களுடைய பங்கேற்பும் இடையூடாட்டமும் உண்டு. மட்டுமல்ல, வலிமையானது. பிரத்தியேகத்தன்மைகள்தான் அவர்களைத் தனிச் சமூகத்தினராகவும் தனிப் பண்பாட்டுக்குரியவர்களாகவும் தனியான இலக்கிய அடையாளத்தைக் கொண்டவர்களாகவும் தனித்துக் காண்பிக்கின்றன. இந்தக் காண்பித்தலை – உணர்தலை – தவச்செல்வன் கதைகள் முறையாகச் செய்கின்றன. ஆபிரிக்க இலக்கியம், அரபு இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், தமிழிலக்கியம், வங்க இலக்கியம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்வதில் அந்தப் பிரதேசங்களும் அங்குள்ள அரசியல், பண்பாடு, தொழில்முறை போன்றவை எப்படிச் செல்வாக்குப் பெறுகின்றனவோ, அப்படியான அடையாளப் பெறுமானத்தை மலையக இலக்கியமும் கொண்டுள்ளது. மலையக இலக்கியத்தின் பொதுப் பண்பில் ஒன்று, அவற்றைப் படிக்கும்போது கொள்ளும் துயரமும், துயரத்துக்கு எதிரான தூண்டலும் மட்டுமல்ல, இன்னொன்றும் உள்ளது. அது இந்த மக்களைத் தங்களுடைய முதலாளித்துவப் பொருளாதார உற்பத்திக்காக நாடு விட்டு நாடு (தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு) மாற்றிக் கொண்டு வந்து கைவிட்டுச் சென்ற பிரித்தானியர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சியாகும். அதை எழுப்பக் கூடிய சாட்சியங்களே மலையக இலக்கியத்தின் ஒரு பொருள். இந்தக் கதைகளைப் படிக்கும் ஒரு பிரித்தானியர் தமது மூதாதையர் இழைத்த கொடுமைக்கும் அநீதிக்குமாக வெட்கப்படுவார், துயருறுவார். தலைமுறைகளாக – நூற்றாண்டாகத் தலையையும் தோள்களையும் அழுத்தும் சுமையோடு தங்களின் முன்னே – எதிரே – உற்று நோக்கியவாறு நிற்கும் மனிதர்கள் அவர்களுடைய அகக் கண்களில் தோன்றுவர். அது அவர்களுடைய இதயத்தை உருக்கும். அது இதயமாக இருந்தால். கண்களில் நீரைக் கசியச் செய்யும். அவை ஒளியுடைய கண்களாக இருந்தால். இன்னொன்று அந்த மக்களை வேண்டா வெறுப்போடு ஏற்றுக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சி. இந்த மனிதர்கள் 200 ஆண்டுகளாக தங்களுடைய இரத்தத்தை அட்டைக்கும் நாட்டுக்குமாகச் சிந்தியிருக்கிறார்கள். அட்டையும் இந்த நாடும் அவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சியிருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்த மனிதர்களுக்கு எதையும் இந்த நாடு கொடுக்கவில்லை. அந்தக் குற்றவுணர்ச்சி தலைமுறைகள் கொள்ளக் கூடியது. அதற்கடுத்து, சக மனிதர்கள் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி. இதை விட முக்கியமானது, இந்திய ஆட்சியாளர்களும் தமிழக ஆட்சித்தரப்பினரும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி. ஒடுக்கப்பட்டோரின் இலக்கியத்தில், பிரதானமாக இருக்கும் ஓரம்சமும் அடிப்படையும் இந்தக் குற்றவுணர்ச்சியைத் தூண்டுதல் ஆகும். அது எதிர்த்தரப்பையும் (எத்தரப்பையும்) பணிய வைக்கக் கூடியது. தவச்செல்வனும் மலையக இலக்கியமும் அழகிய பிராந்தியத்தின் (வளமான குறிஞ்சித் திணையின் – மலைநாட்டின்) மலர்ச் செண்டுகளை ஏந்தி நிற்கவில்லை. இலங்கையின் விக்டோரியா என்று வர்ணிக்கப்படும் அழகிய – செழிப்பான நுவெரெலியாவிலும் அதைச் சூழலும் மலர்கின்ற அழகிய ரோஜாக்களில் நிரம்பியிருப்பது பனித்துளிகளோ, மழைத்துளிகளோ அல்ல. அது அங்குள்ள மலையக மக்களின் கண்ணீர்த்துளிகளும் வியர்வைத்துளிகளும். மலர்த் தோப்பென விரிந்திருக்கும் கண்டி – பெரெதெனியாவில் மலர்கின்ற மலர்களில் நீங்கள் கண்டு வியக்கும் அழகின் அடியில் கேட்பது மலையக மக்களின் நூற்றாண்டுகாலத் துயரப் பாடலிசை. மலையகத்தில்தான் மிகச் செழிப்பான மரக்கறிச் செய்கை நடக்கிறது. ஆனால், அங்குள்ள மலையக மக்களின் வீடுகளில் கஞ்சிப் பானையே உண்டு. அதைப் பொங்கல் பானையாக்குவதற்கு தவச்செல்வன்கள் தலைமுறைகளாக முயற்சிக்கிறார்கள். அதற்குச் சாட்சியமான சொற்களே இந்தக் கதைகளிலும் கதைகளாகவும். தலையில் மூங்கில் கூடை இடுப்பில் ரெட்டு படங்கு மட்டக்குச்சி மட்டக்கத்தி அவளை விடியல் அலங்கரிக்கிறது அவளின் விடியலில் ஆகத்துயரம் பிள்ளை மடுவத்தில் தேவீயின் குழந்தையை கைவிடுதல் தான் என்ற கவிதையை எப்போதோ படித்த நினைவு இங்கே எழுகிறது. இது காலத்துயரா? மானுடத்தின் இயலாமையா? 00 சு. தவச்செல்வன் புத்தகங்களை நூலகம் தளத்தில் வாசிக்க , கருணாகரன் https://akazhonline.com/?p=11032- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 68 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 68 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சுருக்கமாக நாம் முன்பே விபரித்த படி, தேவநம்பியதிஸ்ஸ என்பது அசோகரின் ஒரு பிரதி என்று கூறலாம். "அசல்ஹா விண்மீன்கள்" / Nakkhatta of Asāḷhā என்ற சொல் பண்டைய இந்திய சந்திர நாட்காட்டி மற்றும் ஜோதிடத்துடன் தொடர்புடையது. அசல்ஹா மாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரங்கள் இங்கே குறிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் Pūrva Āṣāḍhā (Purvashada) – பூராடம், Uttara Āṣāḷhā (Uttarashada) – உத்திராடம் மற்றும் Mūla (Moola) – மூலம் போன்ற பல நட்சத்திரங்கள் நிகழ்கின்றன. Asāḷhā (சமஸ்கிருதத்தில் Āṣāḍha) என்பது பாரம்பரிய இந்து நாட்காட்டியில் ஒரு சந்திர மாதமாகும், இது கிரிகோரியன் நாட்காட்டியில் தோராயமாக ஜூன்-ஜூலைக்கு ஒத்திருக்கிறது. இது பௌத்த மற்றும் இந்து மரபுகளில் குறிப்பிடத்தக்க ஆஷாட [Āṣāḷhā / Āṣāḍha] மாதத்தின் முழு நிலவுடன் தொடர்புடையது. இந்து சந்திர நாட்காட்டி சந்திரனின் இயக்கத்தைப் பின்பற்றுகிறது, எனவே மாதங்கள் சந்திர சுழற்சிகளின் அடிப்படையில் தொடங்கி முடிவடைகின்றன. தமிழ் நாட்காட்டி சூரியனைப் பின்பற்றுகிறது, சூரியன் ஒரு புதிய ராசியில் (ராசி) நுழையும் போது மாதங்கள் தொடங்கும். எனவே, இந்த வேறுபாடுகள் காரணமாக, இந்த குறிப்பிட்ட சந்திர மாதம் (Āṣāḍha) ஒரு சூரிய மாதத்துடன் (ஆணி அல்லது ஆடி) சரியாகப் பொருந்தவில்லை - மாறாக, அது இரண்டிலும் பாதி பாதி சேர்க்கிறது. [instead, it overlaps both Aani & Aadi partially] தீபவம்சம் அத்தியாயம் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள சாட்டா மலை நவீன புவியியலில் துல்லியமாக அடையாளம் காணப்படவில்லை. சில அறிஞர்கள் இது தீவின் மத்திய அல்லது தெற்குப் பகுதிகளில் உள்ள, விலைமதிப்பற்ற ரத்தினங்களுக்கு பெயர் பெற்ற, இயற்கை வளங்கள் நிறைந்த மற்றும் தனித்துவமான வடிவங்களைக் கொண்ட மூங்கில் கம்புகள் [மரங்கள்] கொண்ட மலை நாடாக இருக்கலாம் என்கின்றனர். இருப்பினும், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பெரும்பாலும் குறியீட்டு அல்லது கவிதை விளக்கங்களைப் பயன்படுத்துகின்றன. எனவே சாட்டா மலையானது ஒரு சரியான இயற்பியல் இருப்பிடத்தைக் காட்டிலும் ஒரு புராண இடமாகக் கூட இருக்கலாம்?. தீபவம்சம் (VI.18), அசோகரின் மதமாற்றத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: 'அசோகர் சிறந்த நகரங்களில் சிறந்ததாக, பாடலிபுத்திரத்தில் [Pāṭaliputra, இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் ஆகும்.] ஆட்சி செய்தார்; அவரது முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் புத்தரின் நம்பிக்கைக்கு மாற்றப்பட்டார். மகாவம்சத்திலும் அவ்வாறே. இருப்பினும், அசோகர் தனது பதின்மூன்றாவது கல்வெட்டு கட்டளையில், கலிங்கத்தை வென்ற பிறகு, தம்மத்தின் மீது ஒரு வலுவான விருப்பத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார், மேலும் அவர் முடிசூட்டப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆணையின்படி கலிங்கப் போர் நடந்தது. எனவே, இந்த அத்தியாயம், அசோகரின் பதின்மூன்றாவது பாறை ஆணையில் உள்ள செய்தியின் உள்ளடக்கத்துடன் நேரடியாக முரண்படுகிறது. தீபவம்சம் அல்லது மகாவம்சத்தின் ஆசிரியர், அசோகரைப் பற்றி நல்ல அறிவைக் கொண்டிருந்தார் என்று கூறினாலும், அசோகா பாறைகள் மற்றும் தூண்களில் பதித்த கல்வெட்டு செய்திகளைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் இங்கு நிக்ரோதா, மொகாலிபுத்த தீசர் [Nigrodha, Moggaliputtatissa / நிக்ரோதா மௌரியப் பேரரசர் அசோகரை பௌத்த மதத்திற்கு மாற்றிய துறவி ஆவார், மேலும் மொக்கலிபுத்த திஸ்ஸா மூன்றாவது பௌத்த சபைக்கு தலைமை தாங்கிய பௌத்த பெரியவர் ஆவார்] மற்றும் பல புராணக் கதை உள்ளது. எதுவும் நம்பத்தகுந்த கதைகள் அல்ல, அனைத்தையும் நிதானமான வரலாறு என்று கருத முடியாது. மேலும், இந்த கதைகள் இலங்கையுடன் தொடர்புடையவை இல்லை. அசோகர் எண்பத்தி நான்காயிரம் விகாரைகளை மூன்றே ஆண்டுகளில் கட்டினார் என்று கூறுகிறது. ஆனால், இது அவரது அரசின் பரந்த பரப்பளவில் நிறைவேற்ற முடியாதது. அசோகர் பௌத்தத்துடன் நெருக்கமாக அல்லது ஆழமாக இணைய விரும்பினார். ஆனால், மொகாலிபுத்த தீசர் தனது மகனையோ மகளையோ மத ஒழுங்கில் நுழைய அனுமதிப்பவர் மட்டுமே அப்படியாக முடியும் என்று கூறினார். மன்னன் அசோகர் தனது மகன் மகிந்த, இருபது வயது, மற்றும் மகள் சங்கமித்தா, பதினெட்டு வயது, இருவருக்கும் பப்பாஜ்ஜி நியமனம் [Pabbajji ordination / புத்த மதத்தில் புத்த பிக்கு அல்லது பிக்குணி ஆகும் புதிய நியமனம்], செய்தார். அதனால் அவர் புத்த மதத்தின் உறவினராக [kinsman of Buddha’s religion] இருக்க முடிந்தது. தான் புத்த மதத்தின் ஒரு நெருங்கிய உறவினராக மாறவேண்டும் என்பதால், ஒரு தந்தை தனது இரு சிறு குழந்தைகளையும், அதிலும் ஒருவர் இளம் தாயாக இருந்தும், அவர்கள் இருவரையும் குருத்துவத்தை ஏற்கச் சொல்வது மிகவும் தகுதியற்றது மற்றும் தாராளமற்றது. ஏனெனில் இதே தந்தை, அழகிய பெண்கள் நிறைந்த அந்தப்புரத்தை, அரண்மனையில் பராமரித்துக் கொண்டு, கோட்பாட்டின் உறவினர் ஆக இந்த நடவடிக்கை எடுப்பது விந்தையிலும் விந்தையே!. இதை எப்படிச் சொல்வேன், ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும், 18 அகவை சங்கமித்தாவின் இளம் மகனும் [ஒன்றோ இரண்டு அகவை இருக்கலாம்? அல்லது கட்டாயம் எப்படியாகினும் ஐந்து அகவைக்குள் தான்] மதகுருவாக வருவதற்கான பாதையில் புதியவராக நியமிக்கப்பட்டார். உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் குழந்தைப் படையினருக்காக வருந்துவதும் கண்டனம் செலுத்துவதையும் காண்கிறோம். ஆனால் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அற்ற, அறிவு முழுமை பெறாத குழந்தை பிக்குகள் பற்றி ஒரு வார்த்தை கூட ஊடகங்களில் இருந்து வருவதே இல்லை?. மகிந்த தேரர் இங்கு இலங்கையை மாற்றுபவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த அத்தியாயம் இந்தியாவில் நடந்த மூன்றாவது பௌத்த பேரவையை பற்றியது மற்றும் இலங்கையுடன் எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லை. மேலும் பல அறிஞர்கள் இன்று இந்த சபை நடக்கவில்லை என்று நினைக்கிறார்கள். முதல் பேரவை ஐந்து பக்கங்களாகவும், இரண்டாவது பேரவை ஏழு பக்கங்களாகவும், ஆனால் மூன்றாவது பேரவை இருபத்தைந்து பக்கங்களாகவும் இருக்கிறது. ஏனெனில் நம்பமுடியாத பல கதைகள் அதில் கட்டமைக்கப்பட்டுள்ளன. பிந்துசாரருக்கு நூற்றி ஒரு மகன்கள் இருந்த கதை மகாபாரத இதிகாசத்தில் இருந்து திருடப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் மொகாலிபுத்த தீசர் மற்றும் மூன்றாம் பேரவையின் நம்பாத் தன்மை ஏற்கனவே விரிவாக அலசியுள்ளோம். Part: 68 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Devanampiyatissa is the copy of Asoka in concept. The Dipavamsa (VI.18) speaks of Ashoka’s conversion as : 'Asoka ruled in Pāṭaliputta, best of towns; three years after his coronation he was converted to Buddha’s faith.' Similarly in Mahavamsa too. However, Asoka, in his thirteenth rock edict, says that he came to feel a strong inclination towards Dhamma after conquering Kalinga, and the Kalinga war took place, as per the same edict, eight years after his coronation. This chapter is, therefore, in direct conflict with the content of the Asoka’s message in his thirteenth rock edict. The author of the Dipavamsa or Mahavamsa, had pretty good knowledge about Asoka, but was clueless about Asoka’s messages on rocks and pillars to his beloved subjects. There is a legendary story of Nigrodha, Moggaliputtatissa, and many more. None are believable stories and all cannot be considered as sober history. Also, The stories are not connected with Lanka. Asoka built eighty four thousand Viharas in three years which is quite impossible to accomplish in the vast expanse of his kingdom. Asoka wanted to be the kinsman of Buddha’s religion, and Moggaliputtatissa said that only a person who lets his son or daughter to enter the religious order could become the kinsman. The King Asoka asks his son Mahinda, twenty years of age, and the daughter Sanghamitta, eighteen years of age, to obtain the Pabbajji ordination [pabbajjā, (Pāli: “to wander forth”, ) Sanskrit Pravrajyā, Buddhist rite of ordination by which a layman becomes a novice (Pāli sāmaṇera; Sanskrit śrāmaṇera)], so that he could be kinsman of Buddha’s religion. It is very unworthy and ungenerous of a father to ask his two very young children to adopt priesthood because the father could become a kinsman of the doctrine, while maintaining his harem of ladies. Still more tragic is that Sanghamitta was already a mother with a son. That young son of Sanghamitta was also condemned to become a novice on the path to priesthood. There were so much cries of child soldiers in the media, local and international. but not a word came from the media about the child monks. The child monks are in fact deliberate castration of young kids. Mahinda Thera is named here as the converter of Lanka. This chapter is about the Third Buddhist Council that took place in India and had no historical relation with Lanka, and many scholars think this council never took place. The First Councils runs into five pages, the Second council runs into seven pages, but the Third council runs into twenty five pages because many unbelievable stories are built into it. The story of Bindusara having one hundred and one sons must have been plagiarised from the Ithigas Mahabharata. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 69 தொடரும் / Will follow துளி/DROP: 1946 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 68] https://www.facebook.com/groups/978753388866632/posts/32915911191390770/?- 'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!
'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்! சனி, 20 டிசம்பர் 2025 04:43 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகம் புதிதாக அமையவுள்ளது. அதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், தென்மராட்சி பிரதேச செயலர் சந்திரா சத்தியஜோதி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , சாவகச்சேரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் , யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் , யாழ் . மாநகர சபை உறுப்பினருமான எஸ், கபிலன் , அரச அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். அதன் போது , புதிய பிரதேச செயலகத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க இது வரையில் நால்வர் முன் வந்துள்ளனர் எனவும் , எதிர்வரும் 31ஆம் திகதி க்கு முன்னர் வேறு யாரேனும் காணிகள் வழங்க விரும்பின் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது. அடுத்த வருடம் முதல் வார கால பகுதியில் பொருத்தமான காணியினை தெரிவு செய்த பின்னர் , பிரதேச செயலகம் அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/53388- பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி
அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்! பிரஸ்ஸல்ஸில் வியாழக்கிழமை (18) இரவு முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோ அதாவது 105 பில்லியன் அமெரிக்க டொலர் வட்டியில்லா கடனை வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் இராணுவ மற்றும் பொருளாதாரத் தேவைகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தக் கடன் பூர்த்தி செய்யும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்தார். கடன் எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பதை ஐரோப்பிய தலைவர்கள் உடனடியாக தெளிவுபடுத்தபவில்லை. ஆனால், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் படையெடுப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு ரஷ்யா இழப்பீடு வழங்கும் வரை உக்ரேன் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார். போருக்குப் பின்னர் மொஸ்கோ உக்ரேனுக்கான இழப்பீடுகளை செலுத்த மறுத்தால், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் 200 பில்லியன் யூரோவை கடனை ஈடுகட்ட பயன்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. https://athavannews.com/2025/1456741- சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!
சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்! 20 Dec, 2025 | 10:16 AM அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய சிரியாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு குழுக்களை குறிவைத்து போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி பால்மைரா நகரில் நடந்த ஐஎஸ் ஐஎஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவிலியன் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை நிர்வகிக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப்படையான சென்ட்காம் தனது எக்ஸ் தளத்தில் ஒபரேஷன் ஹாக்கி ஸ்டிரைக் வெள்ளிக்கிழமை கிழக்கு நேரப்படி 4:00 மணிக்கு (21:00 GMT) தொடங்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவிக்கையில், ஐஎஸ் போராளிகள், உட்கட்டமைப்பு மற்றும் ஆயுதத் தளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த தாக்குதல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா, நமது மக்களைப் பாதுகாக்க ஒருபோதும் தயங்காது மற்றும் பின்வாங்காது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233910- Today
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் 2025 டிசெம்பர் 20 , மு.ப. 11:04 தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இதன்போது பிரதி அமைச்சரிடம் பாராட்டுகளையும் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்த...தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்று- இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழர் தீர்வு விடயத்தில் எம்மாலான அழுத்தங்களை வழங்குவோம் -புதுடில்லிக்குக் கொண்டுசெல்வது பற்றி ஆராய்வதாக தமிழக முதலமைச்சர் கஜேந்திரகுமார் தரப்பிடம் உறுதி Published By: Vishnu 20 Dec, 2025 | 03:33 AM (நா.தனுஜா) தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம். இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர். அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முதலமைச்சரின் செயலாளரும், முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து, 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவ இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஜேந்திரகுமார் தலைமையிலான தரப்பினர் வலியுறுத்தினர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார். அதனையடுத்து இன்னமும் தீர்வுகாணப்படாமல் தொடரும் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் கஜேந்திரகுமார் தரப்பு முதலமைச்சரிடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியது. அதனை செவிமடுத்த ஸ்டாலின், 'இவ்விடயத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?' என்று வினவினார். அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், 'இந்தியாவுடனும், தமிழகத்துடனும் நெருங்கிய நட்புறவு பேணப்படவேண்டும் எனத் தமிழ்த்தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால் இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் மீனவர் பிரச்சினையினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே நன்மையடைகின்றது. மீனவர் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படாததன் காரணமாக, அதனால் அதிருப்தியுற்ற மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளது. இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வகையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத்தூதரகம் அகற்றப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்கு புதுடில்லி ஊடாகவே தீர்வுகாணமுடியும் என்றாலும், எமது மீனவர்களைப் போன்றே இந்தியத்தரப்பில் பாதிக்கப்படும் மீனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆகவே அம்மக்களின் தலைவர் என்ற ரீதியில் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு உங்களது நேரடித்தலையீடு அவசியமாகும்' என வலியுறுத்தினார். அதனை செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/233893- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஓம் இன்று சாதி பெயர்கள் சொல்லி தமிழ் தேசியவாதிகள் என்போர் முகநூலில் வெளிப்படையாகவே பிடிக்காதவர்களை ஏசுகின்றனராம்- சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்
சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான் Published By: Vishnu 20 Dec, 2025 | 03:29 AM (எம்.ஆர்.எம்.வசீம்) நான் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இனரீதியாக பேசியதில்லை. ஆனால் இப்போது சொல்கின்றேன், சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்தவாரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஒரு முன்மொழிவை தயாரித்து சமர்ப்பித்தார்கள். புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, தீர்வு தொடர்பான முன்மொழிவே அது. அதனை இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக எங்களால் முடிந்த உதவியாக எம்மால் சேகரிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பணத்தில் பாதிக்கப்பட்ட 2137 குடும்பங்களுக்கு நாம் உதவி செய்துள்ளோம். இதற்கு உதவியவர்களுக்கு இந்த சபையில் நன்றி கூறுகின்றேன்.எமது உதவி தொடர்பான கணக்கு விபரங்களையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். என்றாலும் நாம்செய்த இந்த உதவி போதாது. கடந்த பாராளுமன்ற அமர்வில் கொத்மலையில் நடந்த அசாதாரண சம்பவம் தொடர்பில் நான் உரையாற்றினேன்.அதில் முக்கியமானதொரு பிரச்சினையாக அந்த பகுதியிலிருந்த பிரதேச செயலாளர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற விடயத்தை முன்வைத்தேன். இது தொடர்பில் அரசு. அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் நான் கூறியபோதிருந்ததை விட இப்போது அந்த பிரச்சினை அதிகரித்துள்ளது . நேற்றைய தினம் ( வியாழக் கிழமை)அதே பகுதியிலிருக்கின்ற மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே அந்த பிரதேச செயலாளர் தம்மை முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்கள். நான் எனது பாராளுமன்ற நாட்களில் ஒரு உரையைக்கூட இனரீதியாக ஆற்றியதில்லை. ஆனால் இன்று உண்மையான விடயம் கொத்மலை பிரதேசம் மட்டுமல்ல கொத்மலை, உடப்புசல்லாவ என சிங்கள சமூகம் எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று நன் அந்த குற்றச்சாட்டை வைத்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க சொன்னார்கள். நான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததால் இன்று அங்குள்ள தமிழ் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் அனைத்துப்பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது. இது அமைச்சரின் நோக்கம் கிடையாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எல்லோரும் மோசமானவர்கள் என நான் சொல்லவில்லை. ஒரு சிலரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்துக்கு மட்டும் கெட்ட பெயர் கிடையாது. நாட்டுக்கே கெட்ட பெயர் .அதேமாதிரி கிராமசேவகர்களைப் பார்த்தால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பெயருக்கே செல்கின்றார்கள். பெயர்களை எடுக்கின்றார்கள் .ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் என்கின்றார்கள். 9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடந்தது அதில் ஜனாதிபதி ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். அப்படிப்பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச் காணிதான். திகாம்பரம் எம்.பி. இருக்கும்போது 7 பேர்ச் காணி என சட்டம் கொண்டுவரப்பட்டது.நாங்கள் இருக்கும்போது 10 பேர்ச் காணி என சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்போது 6 பேர்ச் எனப்படுகின்றது எனவே இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென ஜனாதிபதி இந்த சபையில் தெளிவு படுத்தியேயாக வேண்டும். அதேவேளை சந்தாப்பணத்தில் நான் நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ்வோடு நான் சென்ற போது அவருடன் கூட்டு சேர்ந்து விட்டதாக கூறினார்கள். எல்லோரும் சந்தாப்பணம் வாங்குகின்றார்கள்.எத்தனைபேர் கணக்கு வழக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் ? ஆனால் நான் சமர்ப்பித்துள்ளேன். நான் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் நுவரெலியா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனக்கூறினேன். எனக்கு ஆளும் கட்சியா எதிர்கட்சியா, சிவில் அமைப்புக்களா என்ற பிரச்சினை கிடையாது. அந்த வகையில்தான் நாமல் ராஜபக்ஷ் அங்கு வந்து உதவிகளை வழங்கினார் என்றார். https://www.virakesari.lk/article/233892- இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
ஆட்டத்தை மாற்றிய 15 பந்துகள்: அதிரடியில் மிரட்டிய தென் ஆப்ரிக்கா தடம் புரண்டது எப்படி? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்தியா 231 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கில் அரைசதம் அடித்ததோடு பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார். மீண்டும் சாம்சன் - அபிஷேக் ஜோடியின் அதிரடி கில் காலில் காயமடைந்த காரணத்தால், மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார் சஞ்சு சாம்சன். கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவரும், அபிஷேக்கும் சேர்ந்து ஒரு அதிரடியான தொடக்கத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அபிஷேக், இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். யான்சன் வீசிய அந்த ஓவரில் சாம்சனும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். அதன் பின்னும் அவர்கள் தங்கள் அதிரடியைத் தொடர, 4.4 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களைக் கடந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை இருவரும் நாலாப்புறமும் அடித்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 5.4 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தது. பவர்பிளேவிலேயே அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பத்தாவது ஓவரில் அவுட்டான சாம்சன், 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் 81.7% ரன்களை பவுண்டரிகள் மூலமே எடுத்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டி கைவிடப்பட்டது. கடைசி 8 ஓவர்களில் மிரட்டிய திலக் - ஹர்திக் ஜோடி இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 5 ரன்கள்) தவிர்த்து, அனைத்து இந்திய பேட்டர்களுமே களமிறங்கியது முதலே அதிரடி காட்டினர். அபிஷேக், திலக் இருவரும் தங்களின் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, ஹர்திக்கும் துபேவும் தாங்கள் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார்கள். குறிப்பாக திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காட்டிய அந்த அதிரடி அணுகுமுறை இந்தியாவை ஒரு மிகப் பெரிய இலக்கை நோக்கி பயணப்பட வைத்தது. வேகம், சுழல் என எந்த பந்தாக இருந்தாலும் இருவரும் தங்கள் அதிரடியைத் தொடர்ந்தனர். திலக் வர்மா மைதானத்தின் நாலாபுறமும் 360 டிகிரியில் பந்துகளை விளாசினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 'ரிவர்ஸ் ஸ்வீப்' என்றால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 'ரேம்ப் ஷாட்' ஆடினார். பந்துகள் ஒவ்வொன்றையும் சரியாக அவர் அடிக்க, எல்லாம் பவுண்டரிக்குப் பறந்தன. அதனால், 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் அவர். மறுபுறம் தன் அசாத்திய பலத்தால் பவுண்டரிகள் விளாசிக் கொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், பதினாறு பந்துகளிலேயே அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் இது. இந்த ஜோடி களத்தில் இருந்தது 7.2 ஓவர்கள் தான். ஆனால், அதில் அவர்கள் அடித்தது 105 ரன்கள். அவர்கள் ஜோடி சேரும்போது 9.45 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், கடைசி ஓவரில் அவர்கள் பிரியும்போது 11.28 ஆக உயர்ந்திருந்தது. அதனால் தான் இந்தியாவால் 231 என்ற இமாலய ஸ்கோரை எட்ட முடிந்தது. ஹர்திக் பாண்டியா 63 ரன்களிலும் (25 பந்துகள்), திலக் வர்மா 73 ரன்களிலும் (42 பந்துகள்) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹர்திக் மற்றும் திலக் இருவரின் அதிரடியால் 231 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா 15 பந்துகளில் ஆட்டம் மாறியது எப்படி? பெரிய இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு குவின்டன் டி காக் பெரும் நம்பிக்கை கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், அந்த அதிரடியைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். அதனால், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஒருபக்கம் தடுமாறிய போதும் கூட பவர்பிளேவிலேயே அந்த அணி 67/0 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸை வருண் சக்கரவர்த்தி வெளியேற்ற, அதன்பிறகு களமிறங்கிய இளம் வீரர் டெவால் பிரெவிஸ், டி காக் உடன் இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். வருண் வீசிய இன்னிங்ஸின் 9வது ஓவரில் இருவரும் இணைந்து 23 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் வீசிய அடுத்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட, 10 ஓவர்கள் முடிவில் 118/1 என நல்ல நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. தேவைப்படும் ரன்ரேட்டை விட அந்த அணியின் ரன்ரேட் அதிகமாக இருந்ததாலும், கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததாலும், அவர்களால் இலக்கை சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் அடுத்த ஓவர் பந்துவீச வந்த ஜஸ்ப்ரித் பும்ரா உடைத்தார். 11வது ஓவரை வீசிய பும்ரா, டி காக் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் பிரெவிஸ் சிங்கிள் எடுக்க, டி காக் ஸ்டிரைக்குக்கு வந்தார். அப்போது பும்ரா ஒரு பவுன்சரை வீச, நடுவர் அதை வைட் என அறிவித்தார். அடுத்ததாக யார்க்கர் லென்த்தில் சற்று மெதுவாக பந்தை வீசி பேட்டருக்கு அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து பும்ரா ஏற்படுத்திய கோணத்தால், பந்து பேட்டரை நோக்கி உள்ளே வந்தது. டி காக்கால் அதை சரியாக அடிக்க முடியாமல் போக, பந்து எட்ஜாகி பும்ராவின் கையிலேயே விழுந்தது. இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்த டி காக் 65 ரன்களில் (35 பந்துகள்) வெளியேறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் 10 ஓவர்களில் இந்திய பௌலர்கள் ரன்களை வாரி வழங்கியிருக்க, 11வது ஓவரில் பும்ராவை அழைத்துவந்தார் கேப்டன் சூர்யகுமார். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. அந்த ஒரு விக்கெட் தென்னாப்பிரிக்காவை சீட்டு கட்டு போல் சரியச் செய்தது. அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக்கின் பவுன்சரை, பிரெவிஸ் 'புல்' செய்ய, அது மிட்விக்கெட் திசையில் இருந்த வாஷிங்டன் சுந்தர் கையில் தஞ்சமடைந்தது. 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார் பிரெவிஸ். அதற்கடுத்த ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை பெரும் சரிவுக்குள்ளாக்கினார் வருண் சக்கரவர்த்தி. 12வது ஓவரின் மூன்றாவது பந்தில் மார்க்ரம் எல்பிடபிள்யூ ஆக, அடுத்த பந்திலேயே டானவன் ஃபெரீரா போல்டாகி வெளியேறினார். 10.1 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 120/1 என்ற நல்ல நிலையில் இருந்தது. அடுத்த 15 பந்துகளில், 135/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது அந்த அணி. பத்தாவது ஓவர் முடிவில் 11.4 ஆக இருந்த அந்த அணியின் தேவைப்படும் ரன்ரேட், 13வது ஓவர் முடிவில் 13.71 ஆக உயர்ந்தது. அந்த 15 பந்துகள் அந்த அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தன் இரண்டாவது ஓவரில் 23 ரன்கள் கொடுத்திருந்த வருண், தன்னுடைய மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வலுவான நிலையை அடைய உதவினார் அதன்பிறகு மீண்டுவர முடியாத தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் மட்டும் எடுத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மொத்தம் 432 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப் போட்டியில், 4.25 என்ற எகானமியில் பந்துவீசி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பால்கள். வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் 252 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 63 ரன்கள் எடுத்ததோடு, பிரெவிஸ் விக்கெட்டையும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என (நான்காவது போட்டி கைவிடப்பட்டது) இந்தியா கைப்பற்றியது. இந்தத் தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce86pryl38ko- பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்
பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர் Published By: Vishnu 19 Dec, 2025 | 10:57 PM இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை (19) ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது. அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம். எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம். 2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது. குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது. இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும். மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233884- சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
எல்லாரும் அங்கால ஒரு திரியில் ரொம்ப பிசி.😀- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பிளாவுடன் தமிழர்கள், 1930கள் இலங்கை- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மட்டு. வாவியில் பிளாவுக்கள் 1938/08/02- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மட்டு. வாவியில் பிளாவுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன | பின்னணியில் தெரிவது பசார் 1963/05/14- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஒரு 'பாதை' மூலமாக மக்கள் கடப்பதை காணலாம். அருகில் ஓர் பிளாவு உள்ளது அறுகம்குடா, மட்டு 1979/7/29 பிளாவில் பொய்போடுத (Gunwale) அகண்டதும் உண்டு. குறுகியதும் உண்டு. மேலுள்ளது அகண்டது, கீழுள்ளது குறுகியது.- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மன்னார் வளைகுடாவில் வத்தைகளில் முத்துக்குளிக்கும் தமிழர்கள் 1900< - வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.