stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 / In English & Tamil அடுத்த வருடம் அவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கிறிஸ்துமஸ் சத்தமாக இருந்தது. பிரகாசமாக இருந்தது. மேலும் வணிக ரீதியாக இருந்தது. கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] நெருப்பிடம் [fireplace] அருகே தொங்கவிடப்பட்ட காலுரை [ஸ்டாக்கிங்ஸ் / Stockings] காணப்பட்டது. குழந்தைகள் சாண்டா கிளாஸ் [Santa Claus] புகைபோக்கியில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தனர். அடுத்த நாள் குழந்தைகள் எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தனர். அன்று இரவு, சாரா கேட்டாள், “சாண்டா [Santa Claus] பரிசுகளை கொண்டு வந்ததாக நீங்கள் எப்போதாவது நம்பினீர்களா?” சாமுவேல் சிரித்தான். “நான் குழந்தையாக இருந்தபோது, ஆம். ஆனால் நான் ஏன் என்று ஒருபோதும் கேட்டதில்லை.” அவன் கொஞ்சம் இடைநிறுத்தினான். அதன் பின், “நாங்கள் மரபுகளில் பிறந்தவர்கள். நாங்கள் அவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறோம். பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்புவதை ஏன் நம்புகிறார்கள் என்று கேட்பவர்கள் மிகக் குறைவு.” அப்பொழுது, தனது சாதாரண வகுப்பில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுத்த தனது பள்ளி ஆசிரியரை சாரா நினைவு கூர்ந்தார், ஏன் என்றால், அவர் கிரகணங்களின் போது உண்ணாவிரதம் இருந்தார். அதேவேளை, சாரா, அவனின் பதிலை சங்கடமாக உணர்ந்து, ஒரு பெருமூச்சு விட்டாள். ஏனென்றால் அவளும் அப்படியே, ஒன்றும் ஏன் என்று கேட்பதில்லை. அது சரி சாரா, கொஞ்சம் என்னைப் பார் என்றவன் நாம், "நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்றான். மூன்றாவது கிறிஸ்துமஸ் அமைதியாக வந்தது. இந்த முறை, பைபிளைத் திறந்தது சாரா தான். அவள் லூக்கா, அத்தியாயம் 2 ஐ [Luke 2 / The Birth of Jesus] சத்தமாக, "அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று வாசித்து விட்டு, அவள் சாமுவேலைப் பார்த்து, “குளிர்காலத்தில் மேய்ப்பர்கள் அதைச் செய்வார்களா?” என்று கேட்டாள். “இல்லை,” என்று சாமுவேல் மெதுவாக பதிலளித்தான். பின், “பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். ” என்றான். அவன் அவளுக்கு மற்ற வசனங்களைக் எடுத்துக் காட்டினான்: சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] வாசித்து முடிய அவன் அவளுக்கு சொன்னான்: “பைபிளே குளிர்காலம் கடுமையாக இருந்தது என்று காட்டுகிறது, எனவே இயேசு டிசம்பரில் பிறந்திருக்க முடியாது.” என்றான். சாரா கொஞ்சம் தயக்கத்துடன் மெதுவாக பைபிளை மூடினாள். கண்ணீர் அவள் கண்களை நிரப்பியது - கோபத்தால் அல்ல, விசுவாசம் எடுத்தவுடன் உடைவதில்லை என்பதால். “அப்படியானால் கிறிஸ்துமஸ் என்றால் என்ன?” என்று அவள் கேட்டாள். சாமுவேல் அவள் கையைப் பிடித்தான். “ஒரு தேதி இல்லை,” “ஒரு மரம் இல்லை. சாண்டா அல்ல.” “இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த கதை - வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரத்துடன் கலந்தது.” “ஆனால் இயேசு?” என்று அவள் கேட்டாள். “அவருடைய செய்தி நிலைத்திருக்கிறது,” என்று சாமுவேல் பதிலளித்தான். “உண்மை. இரக்கம். நீதி. மனிதநேயம்.” அவர்கள் அமைதியாக சாளரத்தின் ஊடாக அயலவர்கள் கொண்டாட்டத்தை பார்த்து ரசித்தனர். ஆண்டுகள் கடந்தன. அவர்களின் வீட்டில் இன்னும் மெழுகுவர்த்திகள் இருந்தன - ஆனால் குறைவான அலங்காரங்களுடன். அவர்களின் குழந்தைகளுக்கு சாண்டா கிளாஸ் கதை இல்லை. ஆனால் நேர்மை இருந்தது. ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், அவர்கள் மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்றனர். சாரா இன்னும் பிரார்த்தனை செய்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து கொண்டனர். அவர்கள் நம்பிக்கையை விட ஆழமான உண்மைகளைக் கற்றுக்கொண்டார்கள். ஒரு கிறிஸ்துமஸ் மாலையில், சாரா மெதுவாகச் சொன்னாள், "நான் இன்னும் நம்புகிறேன்." சாமுவேல் சிரித்தான். "நான் இன்னும் கேள்விகள் கேட்கிறேன்." அவள் அவன் மீது சாய்ந்தாள். "ஒருவேளை அது போதும்." என்றாள். சாமுவேல் தலையசைத்தான். ஏனென்றால் அவர்கள் அமைதியான உண்மையைக் கற்றுக்கொண்டார்கள்: நம்பிக்கை கேள்விகளுக்கு அஞ்சுவதில்லை. அன்பு உண்மைக்கு அஞ்சுவதில்லை. மாயையிலிருந்து விடுபட்ட கிறிஸ்துமஸ், பலவீனமாகாது—ஆனால் மனிதனாக மாறுகிறது. Brief of 'When the Candle Met the Question' / Part: 03 England and the Second Christmas They moved to England the following year. Christmas there was louder. Brighter. More commercial. Stockings hung by the fireplace. Children waited for Santa Claus to come down the chimney. One night, Sarah asked, “Did you ever believe Santa brought gifts?” Samuel smiled. “When I was a child, yes. But I never asked why.” He paused. “We are born into traditions. We accept them without questioning. Even as adults, very few people ask why they believe what they believe.” Sarah remembered her schoolteacher—who taught solar and lunar eclipses scientifically—yet fasted during eclipses. She felt uneasy. The Bible Opens The third Christmas arrived quietly. This time, it was Sarah who opened the Bible. Luke, Chapter 2. She read aloud about the shepherds guarding their flocks at night. She looked at Samuel. “Would shepherds do that in winter?” “No,” Samuel replied gently. “Historically, flocks were brought in before October 15 to protect them from cold and rain.” He showed her other verses: Song of Solomon 2:11 — “The winter is past.” Ezra 10:9,13 — People trembling in heavy winter rain, unable to stand outside. “The Bible itself shows winter was harsh,” he said. “So Jesus could not have been born in December.” Sarah closed the Bible slowly. Tears filled her eyes—not of anger, but of loss. Faith Does Not Break “Then what is Christmas?” she asked. Samuel took her hand. “Not a date,” he said. “Not a tree. "Not Santa.” “It is a story that grew over centuries—mixed with history, politics, and culture.” “But Jesus?” she asked. “His message remains,” Samuel replied. “Truth. Compassion. Justice. Humanity.” They sat silently. A Different Celebration Years passed. Their home still had candles—but fewer decorations. There was no Santa story for their children. But there was honesty. Every Christmas, they visited hospitals, orphanages, and old-age homes. Sarah still prayed. Samuel still questioned. But neither tried to convert the other. They had learned something deeper than belief. Ending One Christmas evening, Sarah said softly, “I still believe.” Samuel smiled. “And I still ask questions.” She leaned against him. “Maybe that is enough.” Samuel nodded. Because they had learned the quiet truth: Faith does not fear questions. Love does not fear truth. And Christmas, stripped of illusion, becomes not weaker—but human. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] முற்றிற்று / Ended துளி/DROP: 1954 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/32987342684247620/?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு… உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
- Today
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
Ancient Tamil/ Tissamaharama Potsherd with ship graffito - layer of 1st century BC. (H. J. Weisshaar - trench 1G, 23/27, layer 18.jpg
-
veppu vallam, Kerala | வெப்பு வள்ளம்
-
Thekkan Ody, Kerala | தெக்கனோடி
-
Rameshwaram vaththai வத்தை
-
Palliyodam with Chundan Vallam, Kerala | சுண்டன் வள்ளத்தின் கடையாருடன் பள்ளியோடம் ஒன்று
-
Iruttukutty, Odi vallam, Kerala| இருட்டுக்குத்தி அ ஓடி வள்ளம்
-
Churulan vallam, Kerala | சுருளன் வள்ளம்
-
Karamaadi vallam/ kamba vallam - kerala -- கரைமாடி வள்ளம்/ கம்ப வள்ளம்.jpg
-
Kerala - Tara vanchi, தரை வஞ்சி.jpg
-
kerala vallam - unknown type name.jpg
-
Kerala- Muri vallam முறி வள்ளம்.jpg
-
Valiya Vallam, Kerala | வலிய வள்ளம்.
-
kayal vallam, Kerala | காயல் வள்ளம்
-
Cuddalore Vaththal SV BARADHALASHMI CLR 97, Bombay, 1973.jpg
-
Cuddalore Vaththal SENBHAGAM CLR 42, Bombay, 1973.jpg
-
kanna boats. .. cuddalore.jpg
-
Kerala boats of backwater (3). | The big ones: These types of boats in cuddalore are called Kanna padaku
-
Kerala boats of backwater (2).webp
-
Kerala boats of backwater (4).jpg
-
Kerala boats of backwater (3).jpg
-
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
பழவெனி வேதிகாவே திபுண ராத்திரி தும்பிறிய தெங் காங்கசந்துறய பலாபிரத்துவே. இது எப்படி?
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி சோழமண்டல கடற்கரை
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி மலையாளக் கடற்கரை
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
இந்தச்சம்பவத்தை விமர்சித்து, சில அரசியல்வாதிகள் தாங்களே தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள் என உருவெடுக்க முயற்சிக்கின்றனர். நாளொரு வம்பில் மாட்டிக்கொண்டு, அதை மாற்ற தமிழர் போராட்டங்களையும் நிஞாயங்களையும் கேலி பண்ணி, எந்த அரசியல் கட்சியில் இணையலாமென தூண்டில் போடுகின்றனர். அதற்காக சிங்களம் செய்யுமெதையும் வேடிக்கை பார்க்கவேண்டுமென ஆலோசனையும் கூறுகின்றனர். இந்த அடாவடிகளை ஆமோதித்து மக்களை மூளைச்சலவை செய்கின்றனர். சிலரின் உணர்ச்சி பேச்சுகளுக்கு புலம்பெயர்ந்தோர் மயங்கி இவர்களுக்கு பணம் அனுப்பி இந்தக் கோமாளிகளை உசார் படுத்தக்கூடாது. நீதிமன்றத்தை நாடட்டாம். நீதிமன்றத்தை நாடாமலா மக்கள் போராடுகிறார்கள் இவ்வளவுகாலமும்? யார் நீதிமன்றத்தை மதிக்கிறார்கள்? ஒருவருக்கு சொந்தமான காணியை அடாத்தாக பிடித்து, அனுமதியில்லாமல் விகாரை கட்டி, சொந்தக்காரரை அதிகார, ஆயுத பலம் கொண்டு தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதிப்பதும் இவருக்கு தெரியாமல், தனக்கு பின்னால் இழுத்துக்கொண்டு திரியும் அந்த இளம் சட்டத்தரணியை பிரபல்யமாக்க ஏதோ நடவாத ஒன்றை இவர் அறிமுகப்படுத்துவதுபோலவும், தான் சொன்னால் போலீசார் கேட்டுவிடுவார்கள் போலவும் கதையளக்கிறார். அந்தப் பிரச்சனையின் வரலாறு தெரியாதவர், மக்களின் பிரச்சனைக்காக அவர்களின் பிரதிநிதிகள், அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்திற்காக அந்தத் துறையும் அமைதியான முறையில் போராடுகிறார்கள், அதை வன்முறையாக்குவது போலீசார். ஏதோ அவர்கள் பொலிஸாருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுகிறார்கள், ஏனென்றால் அசைலம் அடைவதற்காக என்று கேலி வேறு. ஏன் இந்தப்பெண் கோமாளிக்குப்பின்னால் அலைந்து, தனது எதிர்காலத்தையும் பெயரையும் வீணடிக்கிறது? நாளும் பொழுதும் சட்டத்தை மதிக்காமல், வீண் வம்பில் மாட்டுப்பட்டு போலீஸ், நீதிமன்றம், பிடியாணை, சரண் என்று அலையும் இவர், மக்களுக்கு ஆலோசனை. இவர் வாயால் வீராவேசம் பேசுவார், அவர் பேசுவது என்னவென்று இவருக்கே தெரிவதில்லை. மறுநாள் வேறொன்று பேசுவார். மக்கள் தங்கள் காணி தங்களுக்கு வேண்டுமென்று போராடுகிறார்கள். அவர்களிடம் உறுதியில்லை, வழக்கு போடவில்லை, நல்லூர் கோயில் எங்கே இருந்தது? இப்போ எங்கிருக்கிறது? என்கிற விசர்த்தனமான கேள்வி. இதுதான் மக்கள் பிரதிநிதியின் பொறுப்பா? எங்கிருந்தோ வந்து பிரச்சனையை உருவாக்கி, நாட்டில் வன்முறையை தூண்ட வருகிறார்கள். அதை கேள்வி கேட்க வக்கில்லை, மக்களை, போராடுபவர்களை குறை கூறிக்கொண்டு. மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் இல்லையேல் ஒதுங்கியிருந்த நடக்கிறதை பார்க்கவேண்டும். இதில சஜித் கேட்டாராம் இவரை கொழும்பில் தேர்தலில் போட்டியிடச்சொல்லி. அவர்களே, ஒரு பைத்தியத்தை வடக்குமக்கள் பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள் என்று கேலி செய்கிறார்கள், இதில யாழ்ப்பாணத்திற்கு கௌசல்யாவை நியமித்துவிட்டு கொழும்பில் கேட்கலாமாம். பாவம் அந்தப்பெண்ணின் விதி, அரசியல் ஆசையால் தன் தொழில் வளர்ச்சி, எதிர்காலத்தை விட்டு இவர் விடும் தவறுகளை சுட்டிக்காட்ட பயந்து, இவரின் அடாவடிகளை சகித்துக்கொண்டு திரிகிறார். அந்தப்பெண் பக்கத்திலிருக்கும்போதே சட்டத்தை மதிக்காமல், மீறுகிறார், இடையூறு செய்கிறார், அடாவடி செய்கிறார், அநாகரிகமான வார்த்தைப்பிரயோகம். அதை தடுக்க, தவறை சுட்டிக்காட்ட அந்த வக்கீலால் முடியவில்லை. இதில மக்களுக்காக வாதாடப்போகிறாராம்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஏராளன்…!
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி மலையாளக் கடற்கரை
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
இந்தமுறை தொடரூந்தில் போகவில்லை… ஆனால் 2024 இல்…கொழம்ப கொடுவ சிட்ட காங்கசந்துறே தக்வா யன தும்பிரிய வேதிகாவ துனேங் பிட்டத்வெய்… என்ற அதே அறிவுபுத்தான்… இப்போதும் திருமலை மட்டகளப்பு போகும் கிழக்கு ரயில் தடம் வடக்கு தடத்தின் மார்க்கத்தில் இருந்து-மஹோ-வில்தான் பிரிகிறது. முன்னர் போலவே கல்லோயாவில் கிழக்கு தடம், திருமலை, மட்டகளப்பு என மேலும் பிரிகிறது. ஒரே மாற்றம். முன்னர் கல்லோயாவில் மட்டகளப்பு போபவர்கள் அதே ரயிலில் இருக்க, திருமலை போவபர்கள் இறங்கி ரயில் மாற வேண்டும். இப்போ செய்தியின் படி திருமலை போபவர்கள் ரயிலில் இருக்க, மட்டகளப்பு போவபர்கள் இறங்கி மாற வேண்டும் போலுள்ளது. எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. நான் கேட்டபோது மாசகணக்கில் ஆகும் என சொன்னார் கோட்டையில் இருந்த டிக்கெட் விற்பவர். ஆனால் திணைக்கள வெப்சைட் 2 ரயில்களை மட்டுமே பட்டியல் இட்டுள்ளது. இரவு மெயிலை காணவில்லை. வெள்ளத்துக்கு முன் தினமும் 4 ஓடியது என நினைக்கிறேன்.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
இப்போ இருக்கா தெரியவில்லை. கொவிடுக்கு முன்பு போனேன். ஏசி பஸ் 250௹ அப்போ எடுத்தார்கள் என நியாபகம். விமான நிலையம் - கட்டுநாயக்க பஸ் நிலையம் இலவச பஸ், கட்டுநாயக்க பஸ்நிலையம்-கோட்டே விரைவுபாதையில் ஏசி பஸ் (ரோசா வான்).
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
உங்களுக்கு புரியவில்லையா? ஒரு காலத்தில் தம்பிள்ளைகளை போராட கொடுத்த சமூகத்தில் இப்போ தையிட்டி விகாரை போராட்டத்துக்கு வெறும் 17 பேர் மட்டுமே போகும் நிலை! இதை ஆதவன் பெரும் போராட்டம் என எழுதலாம்… பொலிசார் பிடித்து சென்றதை சித்திரவதை என நிரோசன் லூசு கூத்தாடலாம்… ஆனால் மக்கள் இதில் அந்நியபட்டு போய் பலகாலம் ஆகிவிட்டது. யாரும் கல் எல்லாம் எடுத்து கொடுக்க தேவையில்லை - விகாரைகளும், சிங்கள மயமாதலும் தவிர்க்கவே முடியாத புள்ளியை தாண்டி நகர்ந்து விட்டதாகவே எனக்கு படுகிறது. இதை இப்போது கூட புத்திசாலித்தனமாக, ஒற்றுமையாக எதிர்கொள்ள முடியாமல் சுமன் v ஶ்ரீ v கஜன் எனவும், புலம்பெயர் நாட்டில் மேலும் பல பிரிவுகளாகவும் தமக்குள் அடிபடும் இனத்தை - நையண்டியை தவிர வேறு எந்தவகையில் அணுக எனக்கு தோணவில்லை என்பதே என் எழுத்தின் பின்னால் உள்ள வெம்பாரம்.
-
தேசங்களின் குரல்கள்
தேசங்களின் குரல்கள் ---------------------------------- இலங்கையிலும், மும்பையிலும் இப்பொழுது ஒரே நேரம் தானே என்று அவர் கேட்கும் போது, ஆமாம் என்று தாமதிக்காமல் சொல்லிய பின் தான் அவரது கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் அப்படிக் கேட்டது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் மும்பையிலிருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு மும்பையில் ஒரு கிளை இருக்கின்றது. இப்பொழுது அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்வதை முடிந்த வரை குறைக்கும் அல்லது முற்றாகவே தவிர்க்கும் முயற்சிகளை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள். மும்பையில் அவர்களில் சிலர் தினமும் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வேலைக்காக பயணம் செய்கின்றோம் என்று மிகவும் அலுப்புடன் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அவர்கள களைத்து வீடு போய்ச் சேரும் நேரத்தில் அமெரிக்க மேற்கு கரையில் விடிந்து நாங்கள் வேலைகளை ஆரம்பிப்போம். மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பது போல அவர்கள் மீண்டும் எங்களுடன் சேர்ந்தும் ஆரம்பிக்கவேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றன, ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் இந்தியாவில் சமீபத்தில் உள்ளூர் விமான சேவை முற்றாக நிலைகுலைந்தது போலவே நிலவரம் ஆகக்கூடும். இலங்கை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டேன். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று அவர்களாக அடையாளம் கண்டு கொண்டது இதுவரை கிடையாது என்றே நினைக்கின்றேன். நீங்கள் இந்தியாவா என்றே வழமையாகக் கேட்பார்கள். ஒவ்வொரு பிரதேசங்களிலும் எங்களுக்குள் நாங்களே கண்டு கொள்ளும் சிறிய, பெரிய வித்தியாசங்கள் தோற்றங்களில், தொனிகளில் இருக்கின்றன, ஆனால் அவை பிறருக்கு தெரிவதில்லை போல. 140 கோடி இந்தியர்களும் ஒரே மாதிரியே இருக்கின்றீர்களே என்று ஆச்சரியப்படும் ஜப்பானியர்கள் இருக்கின்றார்கள். ஷாருக்கான், சல்மான்கான், கமல், அஜித், நாங்கள் இப்படி எல்லோரும் ஒன்றாக அவர்களுக்குத் தெரிவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. 140 கோடி சீன மக்களும் எங்களுக்கு ஒன்றாகவே தெரிகின்றார்கள். ஆனால் அவர்களோ தெற்கு சீனர், வடக்கு சீனர், மங்கோலிய சீனர் என்று தங்களுக்குள்ளே மிக இலகுவாக அடையாளப்படுத்தி கண்டு கொள்கின்றனர். தன்னுடைய மனைவி ஒரு மங்கோலிய சீனர், ஆகவே நான் தன்னுடைய வீட்டுக்கு வருவது அவ்வளவு உசிதமான ஒரு செயல் அல்ல என்று சிரித்துக் கொண்டே ஒரு தென் சீன நண்பன் ஒரு தடவை சொல்லியிருக்கின்றான். ஜெங்கிஸ்கான் மீது இன்னமும் அவர்களுக்கு ஒரு பயம் இருக்கின்றது போல. ஆட்களை அடித்து குழம்பு வைத்து விடுவார்கள் என்று ஒரு வரலாற்றை அவர்களே சொல்லிக் கொள்ளுகின்றார்கள். நான் அமெரிக்கா வந்த முதல் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் என்று அந்தப் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து சிலரும் அந்தப் பல்கலைக்கு வந்திருந்தார்கள். பங்களாதேசத்தை சேர்ந்தவர் ஆங்கிலத்தில் மேற்படிப்பு படிப்பதற்காக இங்கே வந்திருந்தார். ஆங்கில மேற்படிப்பு என்ற விசயமே அவரைப் பற்றிய பெரிய ஆச்சரியமாக இருக்கையில், அவர் இந்தியா மீது கொண்டிருந்த கடும் ஒவ்வாமை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்த அந்த வெறுப்புணர்வு மிகவும் அதிகமாக இருந்தது. முதல் வருடம் பனிக்காலம் ஆரம்பித்த பின் ஒரு நாள் நடந்த ஒரு விடயம். அந்தப் பிரதேசத்தில் பனி மலை மலையாகக் கொட்டும். காலை கண் விழித்துப் பார்த்தால் புது வெள்ளை மலை ஒன்று வீட்டின் முன் நிற்கும். ஐந்து ஆறு மாதங்களுக்கு அந்த மலைகள் அவைகளின் இடத்தில் உறுதியாக நிற்கும். ஏற்கனவே பிடரி அடிபட ஒரு தடவை பனியில் வழுக்கி விழுந்திருந்தேன். பிடரி பலமாக அடிபட்டாலும், எதுவும் ஆகவில்லை, தலை குழம்பவில்லை என்று தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கின்றேன். அன்று காலை வகுப்புக்கு மெது மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். தூரத்தில், வீதியின் ஓரங்களில் அள்ளிக் குவித்துப் போடப்பட்டிருந்த பனிமலைகளின் நடுவிற்குள் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் மிகவும் சத்தமாக கோபத்துடன் நின்று கொண்டிருந்தார், மற்றவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அருகில் போன பின் ஆங்கிலத்தில் சத்தம் போட்டவர் ஆங்கில மேற்படிப்பிற்காக வந்தவர் என்று தெரிந்தது. அமைதியாக நின்றவர் ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாடுகளில் அவர் ஏதோ ஒரு நாடு. அந்த ஆசிய நாட்டவர் நீங்கள் இந்தியாவா என்று பங்களாதேசத்தை சேர்ந்தவரிடம் கேட்டிருக்கின்றார். அங்கே இந்தியா தான் ஒரே ஒரு நாடா, இந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருவார்களா என்று ஆரம்பித்து விறைக்கும் பனிக் குளிரிலும் அங்கே அனல் பறந்து கொண்டிருந்தது. நான் எப்படி அவரை நீங்கள் இந்தியாவா என்று அவரைச் சந்தித்த முதல் நாள் கேட்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை கொட்டிக் குவிந்து கிடக்கும் பனிக்குள் ஒரு நாள் வரும் என்று காந்தி தாத்தா அன்று நினைத்திருக்கவேமாட்டார். தான் மிகவும் சமீபத்தில் இலங்கைக்கு விடுமுறைக்காக வந்திருந்தேன் என்றார் மும்பைக்காரர். இலங்கையின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு அவர் போய் வந்ததாகச் சொன்னார். நான் பேசும் ஆங்கிலத்தில் அவர் இலங்கையில் கேட்ட சிங்கள மொழியின் தொனியும், சாயலும் இருப்பதாகச் சொன்னார். அதனாலேயே நான் இலங்கையில் இருக்கின்றேன் என்று கண்டு பிடித்ததாகச் சொன்னார். ஆனால் என்னுடைய முழுப் பெயர் கேரளாவில் இருக்கும் பெயர்கள் போன்றும் இருப்பதால் ஒரு சந்தேகம் இருந்தது என்றார். இவ்வளவு விவரமும், நுண்ணுணர்வும் உள்ளவர்களை தொழில்நுட்பத் துறையில் காண்பது அரிது. கணினிக்கு எழுதப்படும் நிரல்கள் அல்லது புரோகிராம் போல சில குறிப்பிட்ட செயல்களை மட்டுமே திரும்ப திரும்ப பெரும்பாலும் செய்து கொண்டிருப்பவர்கள் நாங்கள். அக்கம் பக்கம் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. தான் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றார். ஹரியானாவில் யாரையாவது தெரியுமா என்று கேட்டார். கபில் தேவை மிகவும் பிடிக்கும் என்றேன். அவரை எப்படித் தெரியும் என்று ஆச்சரியம் காட்டினார். இருவருக்குமிடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது தெரிந்தது. கபிலுக்கு விளையாடும் நாட்களில் ஆங்கிலம் அவ்வளவாக வராது என்று சொல்வார்கள். அத்துடன் அந்த நாட்களில் இந்திய கிரிக்கெட் அணியில் பம்பாயைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். கவாஸ்கர், வெங்சர்க்கார் இன்னும் சிலர். கபிலிடம் மிகவும் அதிக திறமையும், அவருக்கு மாற்றீடாக அன்று வேறு ஒருவரும் இல்லாததாலும் அவரால் இந்திய அணியில் நிலைத்து நிற்க முடிந்தது. ஆனாலும் இவர்கள் எல்லோரும், கபில் உட்பட, ஒரே குரலில், ஒரே தொனியில் பேசினார்கள் என்றே எனக்கு ஞாபகம். கிழக்கு ஐரோப்பியர்கள் மற்றும் ரஷ்யர்களின் ஆங்கில உச்சரிப்பும் தனித்துவமானது. இவர்களில் நான் சந்தித்தவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால் அதற்கும் மேலே போய், தங்களை பெரிய விஞ்ஞானிகளாகவே அவர்களில் பலரும் தங்களை நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே மற்றவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இது இரட்டை வரி விதிப்பு போல. இதனால் வேலை இடங்களில் அவர்களுடன் முரண்படுபவர்களை நிறையவே பார்த்திருக்கின்றேன். ஆனால் வாக்குவாதத்தில் பேசப்படும் மொழியின் தொனி போலந்தா, ஹங்கேரியா, ருமேனியாவா, அந்த நாடுகளில் எந்த நாடு என்று தெரிவதில்லை. ருமேனியாவில் இருந்து வந்த ஒருவர் என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் தான் ஹங்கேரியன் என்றே சொல்லிக்கொண்டார். அங்கேயும் ஒரு இனப் பிரச்சனை இருந்தது. ஒரு தடவை இன்று பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று இவரிடம் ஏதோ கதையோடு கதையாக சொல்லி மாட்டுப்பட்டேன். அவர் பின்னர் சொன்னதை, விவாதித்ததை வைத்துப் பார்த்தால், இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவருடைய ஹங்கேரி மொழி தோன்றியிருக்க வேண்டும். எங்களைப் போலவே நிறைய ஆட்கள் இந்தப் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மொழியின் தொனி என்னிடம் இருப்பதாக மும்பைக்காரர் சொன்னது வியப்பாக இருந்தது. சிங்கள மக்கள் ஆங்கிலம் பேசும் போது அவர்களின் தாய் மொழி சிங்களம் என்று அறியக் கூடியதாக இருந்தது. அவர்களுக்கு என்று ஒரு தனியியல்பு இருக்கின்றது என்பதை அனுபவத்தில் நான் கண்டு கொண்டிருக்கின்றேன். ஆனால் கூட்டுக்குள் வாழும் ஒரு கோழி போல இருபது வருடங்கள் ஊரிலேயே தனித் தமிழுடன் வாழ்ந்த எனக்கும் அதே இயல்பு இருக்கின்றது என்பதை நம்புவது கஷ்டமாக இருந்தது. ஆனால் முமபைக்காரர் என்னை முன்னே பின்னே பார்த்ததில்லை, ஆகவே அவர் சொல்வது சரியாகவே இருக்கவேண்டும். இங்கு ஆட்டிறைச்சி வாங்குவதற்கு மெக்சிகோ அல்லது தென் அமெரிக்க மக்கள் நடத்தும் கடைகளுக்கே நாங்கள் போவோம். அங்கு பல பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களில் அநேகமாக ஒருவருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிந்திருக்கும். இன்னும் ஓரிருவருக்கு சில சொற்கள் - ஆடு, கால், சிறிய துண்டுகள் போன்றன - ஆங்கிலத்தில் தெரிந்திருக்கும். நடிகர் சிவாஜியைப் பார்த்து வளர்ந்த படியால், எதையும் நடித்துக் காட்டுவதும் எங்களுக்கு ஓரளவுக்கு இலகுவாக வருவதால், அன்று அங்கு ஆங்கிலம் பேசுபவர் இல்லையென்றாலும் சமாளித்துவிடலாம். இவர்களில் ஆங்கிலம் தெரிந்தவர் பேசும் போது சரியாக உற்றுக் கவனிக்கா விட்டால், தென் அமெரிக்க ஸ்பானிஷ் போன்றே இருக்கும். தென் அமெரிக்க ஸ்பானிஷ் மொழிக்கும், ஐரோப்பிய ஸ்பானிஷ் மொழிக்கும் இடைவெளி இருக்கின்றது என்கின்றார்கள். இந்தியத் தமிழுக்கும், இலங்கைத் தமிழுக்கும் இடையே இடைவெளி இருக்கின்றது தானே. மத்திய மற்றும் தென் அமெரிக்க மக்களில் எவரின் குரலும் ஒன்று போலவே காதில் விழுகின்றது. அவர்கள் பேசும் ஸ்பானிஷ் மொழியும், அவர்களின் ஆங்கிலமும் அவித்த மரவள்ளிக் கிழங்குகளை பிசைந்தது போல ஒன்றுடன் ஒன்று நன்றாக முயங்கி இருக்கின்றன. இன்றும் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த வேலை இரவு பத்து மணியாகியும் இன்னமும் முடியவில்லை, உங்களுடனான இந்தக் கலந்தாய்வை முடிவெடுத்து விட்டால், மிகுதியை நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை மீண்டும் ஆறு மணிக்கு சந்திப்புகள் இருக்கின்ற என்றார் மும்பைக்காரர். உங்களையும் இந்த இரவு வேளையில் சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும் என்றார். 'இல்லை................ அப்படி ஒரு சிரமமும் இல்லை.......... அத்துடன் எனக்கு இப்பொழுது காலை..............' 'என்ன........... காலையா........... நீங்கள் இலங்கையில் இல்லையா.............' 'நான் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கின்றேன்....................' 'ஓ................. பணி நிமித்தமாக அங்கு தற்காலிகமாக சென்றிருக்கிறீர்களா.................' இல்லை 30 வருடங்களுக்கும் மேலாக இங்கே அமெரிக்காவில் தான் இருக்கின்றேன் என்றேன். அப்படியே ஒரு கணம் அமைதியானவர், பின்னர் சுதாகரித்துக் கொண்டே உங்களின் தாய்மொழியின் தாக்கம் உங்களில் அப்படியே இன்னமும் இருக்கின்றது என்றார். ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த அவரை இன்னும் காக்க வைப்பது சரியல்ல என்று அதை அப்படியே விட்டுவிட்டேன்.
- Voices.jpg
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி மலையாளக் கடற்கரை
- Yesterday
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி இலட்சதீவு
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி மலையாளக் கடற்கரை
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
பொலிஸார் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் கடுமையாக சித்திரவதை எம் மீது செய்துள்ளனர் என்று சொல்லி போலிக்கு நடித்து வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்ற நிரோஷ்சனும் இவர் போன்றவர்களும் எதிர்காலத்தில் தமிழ் அரசியல்வாதியாக வர கூடாது .
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கடலூரில் பாவிக்கப்பட்ட கடற்கலம் இதற்கு தூம்புக்கட்டை (outrigger) ஒன்று உள்ளது. சோழமண்டல கடற்கரையில் தூம்புக்கட்டை பாவிக்கப்படுவதில்லை என்ற கருத்தை இப்படிமம் இல்லாமல் செய்கிறது.
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
போருக்கு பிந்திய கால(post - war) முன்னெடுப்புக்களை இலங்கை ஆட்சியாளர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை, மறுவளமாக நிலமையினை மோசமாக்கும் செயல்களையே முன்னெடுக்கிறார்கள். புலம் பெயர் உறவுகளும் போர்க்கால மனநிலையிலேயே தேங்கிவிட்டார்கள் (தனி நாடு), அரசுகள் தவறவிட்ட விடயங்களில் ஒன்றான பொருளாதார மீழ்கட்டமைப்பிற்கு புலம் பெயர் உறவுகள் உதவியிருக்கலாம். அங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கவில்லை, இது ஒரு இனப்பிரச்சினையாக மட்டும் பார்க்கின்ற நிலை நிலவுகிறது, இது சிறுபான்மையினரது பிரச்சினை, அது பல வடிவங்களில் உருவாகிறது, அனைவரும் சமம் எனும் எண்ணும் நிலையினை சமூகத்தில் உருவாக்க முடியாத ஒரு தோல்வி நிலை உள்ளது. தற்போது இலங்கை ஒரு கலைத்து போட்ட சீட்டு கட்டு போல உள்ளது சுயநலமிகள் தமக்குத்தேவையானவற்றை அதிலிருந்து உருவுகிறார்கள். இது இவ்வாறு தொடர்ந்தால் மீண்டும் ஒரு உள்நாட்டு போர் உருவாகலாம் (40% உள்நாட்டு போர்கள் ஒரு தசாபத்தில் மீண்டும் ஆரம்பித்ததாக கூறுகிறார்கள்), அது மீண்டும் தேவையற்ற அழிவுகளையே கொண்டுவரும், மக்கள் வாழ்கை நிலை மேலும் மோசமாகும். தற்போதய உலக ஒழுங்கு மாற்றம் ஒரு அமைதியற்ற சூழலை இலங்கையில் தோற்றுவிக்க ஏதுவான நிலைகளை உருவாக்கிவிடும், இலங்கைக்கு தேவையான ஒரு தேசிய அரசாங்கம் இந்த காலத்தின் அவசியம் (அதிகார பரவலாக்கத்தினை பெரும்பான்மை எப்போதும் ஒரு சந்தேக கண்ணுடன் பார்க்கின்றது) இறுக்கமான சட்டத்திற்கான அதிகாரம், சமூக சமத்துவம், சமூக பொருளாதார அபிவிருத்தி என்பன அவசியமாகிறது. இலங்கை, இந்த நூற்றாண்டின் ஒரு தோற்று போன தேசம், அதற்கு அனைவரும் காரணம்.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
ஆம், இது எனக்கு நினைவில் கொண்டுவருவது அந்த தொடரூந்து நிலையங்களின் அறிவுப்பும், அதன் தொனியும். அந்த அறிவுப்பு எல்லோரையும் அறிவுப்பு முடியும் வரை கட்டி வைத்து இருக்கும். இப்போதும் அப்படியா அறிவுப்பு? முன்பு மகோவில் புகையிரத சந்தியில் இருந்தே மட்டக்கிளப்புக்கு, இப்பொது புதிய பாதை?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி ஏராளனுக்கு வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மன்னார் வளைகுடாவில் ஓடிய ஓர் வகை பெயர் தெரியா கடற்கலம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பாம்பன் பாலத்திற்கு அண்டிய பகுதிகளில் (இராமேஸ்வரம் கடற்பரப்பு) ஓடிய கடற்கலம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வள்ளம் 1900கள்