stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
மிக்க நன்றி சுவி ஐயா...................❤️.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!
😂 🤣
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆரம்ப சுற்று 70 போட்டிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. @கிருபன் நீங்கள் போட்டிகளை தயார்படுத்தலாம். நாட்கள் குறைவு என்பதால் அதிக போட்டியாளர்கள் விடை எழுத கட்டாயம் முதல் போட்டியில் இருந்து நீங்கள் ஆரம்பிக்க தேவையில்லை. ஒருவாரம் முடிய அல்லது சிலநாட்களின் பிறகு நடக்கும் போட்டிகளில் இருந்து ஆரம்பிக்கலாம். The Times of IndiaIPL 2026 Schedule: BCCI reveals full second phase fixture...Cricket News: The BCCI has officially unveiled the schedule for the second phase of the Indian Premier League 2026, confirming fixtures from April 13 to May 24.The .- ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
- யாழ் - கிளிநொச்சியின் 'ஆட்டக்காரி' நெல்லினத்திற்கு அரச அங்கீகாரம்: பிராந்திய ரகமாகப் பரிந்துரை!
யாழ் - கிளிநொச்சியின் 'ஆட்டக்காரி' நெல்லினத்திற்கு அரச அங்கீகாரம்: பிராந்திய ரகமாகப் பரிந்துரை! 26 Mar, 2026 | 01:26 PM யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்துக்கு விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரை இல்லாத காரணத்தால், அதற்கான நியாயமான நிர்ணய விலையைத் தீர்மானிப்பதிலும், விவசாயக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதிலும் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஆட்டக்காரியை ஒரு 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாகப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார். அதேநேரம் வடக்கு மாகாணத்தின் ஊடான ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கும், நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மையப்படுத்திய 'தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்தை' முழுமையாக இயங்கச் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கொண்டுவரப்படும் வாழைக் கன்றுகள் ஊடாக 'பனாமா' போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கடுமையான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும், ஏற்றுமதியாளர்களுக்கு இலகுவாகச் சான்றிதழ்களை வழங்குவதற்குமான வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் , விதைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக வடக்கிலிருந்து தெற்குக்கு விதைகளை அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக, வடக்கு மாகாணத்துக்குள்ளேயே 'விதைப் பரிசோதனைச் சிறிய ஆய்வுகூடங்களை' விரைவாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், விவசாயத்தில் இளைஞர்களை ஈர்ப்பதற்காகப் பரந்தன் மற்றும் வவுனியா விவசாயக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கான 4 சதவீத குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களை இலகுபடுத்துதல் மற்றும் பயன்படுத்தப்படாத அரச காணிகளை இளைஞர்களின் விவசாய முயற்சிகளுக்கு வழங்குதல் தொடர்பிலும் கொள்கை ரீதியாக ஆராயப்பட்டது. அத்துடன், அனுமதியற்ற மற்றும் காலாவதியான விவசாய இரசாயனங்கள் சந்தையில் விற்கப்படுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு ஈடுபடும் வர்த்தக நிலையங்களின் பதிவுகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/241967- இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
எல்லாம் புரியும். சீமானை ஆதரிப்பதால் இது புரிந்தது என காட்டி கொள்ள முடியாது. தாம் அரசியலில் ஆதரிப்பவர் வெல்ல வேண்டும் என்பதற்காக உண்மையின் இடத்தில் பொய்யை பரப்புகிறார்கள். இந்த இனவாதம் இல்லை குடி தேசியம் பேசுகிறார் உருட்டுக்கெல்லாம் யாழில் பக்கம் பக்கமாக பதில் எழுதியாகி விட்டது. நீங்கள் என்னதான் தலைகீழாக நிண்டு தண்ணி குடித்தாலும், ஈழத்தமிழர் போல் மட்டமான சிந்தனை தமிழக மக்களிடம் இல்லை. அவர்கள் திமுக, அதிமுக, விஜை இதில் தமக்கு நன்மையானது என கருதும் ஒன்றை தேர்வார்கள். நாதகவுக்கு டெப்பாசிட்டை தக்க வைப்பதுதான் போட்டி.- AI எழுதிய கவிதை -நானும் கிளோடும்
நன்றி ஜி. முயற்சிக்கிறேன்.- சனிக்கிழமை விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள் சங்கம்
சனிக்கிழமை விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் 26 Mar, 2026 | 12:45 PM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களுக்கு கடுமையான சுமையாக மாறியுள்ள நிலையில், சனிக்கிழமையை அதிகாப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் விலைகள், குறிப்பாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் மருத்துவர்களை தீவிரமாக பாதித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல மருத்துவ நிபுணர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல தினசரி பலமுறை நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அது சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு சில பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைப் போல, மருத்துவ நிபுணர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்கான போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலைமை மருத்துவர்களிடையே அதிருப்தியை அதிகரித்து வருவதாகவும், இதன் விளைவாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வழங்கப்படும் நிபுணத்துவ மருத்துவ சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் சங்கம் சனிக்கிழமையை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்து, வாராந்திர பணிநாட்களை மாற்றியமைத்தல் வேண்டும் என்றும் போக்குவரத்து செலவுகளுக்கான நியாயமான இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் பணிகளுக்கான கொடுப்பனவுகளுக்கு நிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. தற்போதைய நெருக்கடியை சமாளித்து சுகாதார சேவைகள் இடையூறு இன்றி தொடர்வதை உறுதி செய்யும் வகையில், உடனடி தீர்வுகளை கண்டறிய அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241959- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி உயிரிழந்ததாக தகவல் ! Published By: Digital Desk 3 26 Mar, 2026 | 04:14 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தளபதி அலிரேசா தங்க்சிரி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த தகவல் தொடர்பில் இதுவரை ஈரான் அரசாங்கம் அல்லது இஸ்ரேல் இராணுவமோ எந்தவித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை. பந்தர் அப்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் பதற்றநிலையின் பின்னணியில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்களை குறிவைத்து “துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகள்” மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு முன்பும், லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ஹெஸ்புல்லா தளபதிகள், ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் மற்றும் ஈராக் ஆயுதக் குழு தலைவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் குறிவைத்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அலிரேசா தங்க்சிரி உயிரிழப்பு தொடர்பான தகவல் உண்மையா என்பதில் சர்வதேச கவனம் திரும்பியுள்ளது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகும் வரை இந்த தகவல் குறித்து தெளிவான நிலைப்பாடு எதுவும் வெளிவரவில்லை. https://www.virakesari.lk/article/241997- ஹோர்முஸ் நீரிணை : அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் ; ஈரான் புதிய சட்டமூலம் தயாரிப்பு
ஹோர்முஸ் நீரிணை : அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் ; ஈரான் புதிய சட்டமூலம் தயாரிப்பு 26 Mar, 2026 | 12:43 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் அறவிடுவதற்கான புதிய சட்டமூலத்தை ஈரான் அரசு தயாரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நீர்வழிப்பாதையை கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த வரைவுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்தத் தகவலை ஈரான் நாடாளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் கட்டணம் வசூலிக்கவேண்டும்” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அதிகாரி, “ஒரு நாட்டின் ஊடாக பொருட்கள் செல்லும்போது சுங்க வரி செலுத்தப்படுவது இயல்பானதே. ஹோர்முஸ் நீரிணையும் ஒரு வழித்தடம்தான். நாங்கள் அதன் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். இந்த நீர்வழிப் பாதையினூடாக செல்லும் கப்பல்களும் அதற்கான சுங்க வரியினைச் செலுத்தும் நடைமுறை இயல்பான ஒன்றே” என கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/241961- போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு!
நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிக்கோலஸ் மதுரோ! 26 Mar, 2026 | 10:56 AM வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தம்மீதான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை (26) நியூயோர்க் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகவுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணை தற்போது சூடுபிடித்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மதுரோவின் சட்டச் செலவுகளைச் செலுத்துவதற்காக வெனிசுலா அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தடுத்துள்ளது. இவ்வாறு நிதியை முடக்குவது மதுரோவின் அரசியலமைப்பு ரீதியான சட்ட உரிமைகளை மீறும் செயல் என அவரது சட்டத்தரணி வாதிடுகிறார். எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, "நான் நிரபராதி, நான் ஒரு கண்ணியமான மனிதன் மற்றும் எனது நாட்டின் அரசியலமைப்பு ரீதியான ஜனாதிபதி" என மதுரோ தெரிவித்திருந்தார். அவரது மனைவி சிலியா புளோரஸும் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தற்போது இருவரும் புரூக்ளினில் உள்ள தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்கள் பிணை கோரவில்லை. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கிற்கான விசாரணைத் திகதியை நீதிபதி அல்வின் ஹெல்லர்ஸ்டைன் அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241945- விலங்குகளுக்கும் வெப்ப அபாயம்: போதியளவு தண்ணீர் வழங்குவது அவசியமாகும் - கால்நடை வைத்தியர்
விலங்குகளுக்கும் வெப்ப அபாயம்: போதியளவு தண்ணீர் வழங்குவது அவசியமாகும் - கால்நடை வைத்தியர் Published By: Digital Desk 3 26 Mar, 2026 | 01:28 PM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் வெப்பபக்கவாதம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கால்நடை வைத்தியர் உதித்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். விலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பில் வைத்தியர் உதித்த விஜேசிங்க விடுத்துள்ள முக்கிய ஆலோசனைகள், செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 150 மில்லி லீற்றர் நீர் பருபுவதை உறுதிப்படுத்த வேண்டும். பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வீட்டில் விட்டுச் செல்பவர்கள், மின்விசிறிகளை இயங்கவிடுவதுடன் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும். பறவைகள் மற்றும் ஏனைய விலங்குகளுக்கு எப்போதும் சுத்தமான குடிநீர் மற்றும் வெப்பத்திலிருந்து தப்பிக்க நிழலான இடங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பிராணிகளின் உரோமங்களை நனைப்பது அல்லது அவற்றைக் குளிக்க அனுமதிப்பதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியும். கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் விலங்குகளைக் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகக் குட்டிகள், வயதான விலங்குகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வைத்தியர் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/241958- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலேவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு Mar 26, 2026 - 03:42 PM பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலேவை, ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது. தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இந்த உத்தரவைப் பிறப்பித்தார். https://adaderanatamil.lk/news/cmn7bcph4001o356p69uzpmxt- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சிகளின் சின்னங்கள் மக்களிடையே செலுத்தும் தாக்கம் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'மறவாதீர்கள், உங்கள் சின்னம் —-------', 'நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம்—-----'... இத்தகைய குரல்களை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக நாம் இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்து கேட்கப் போகிறோம். தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், சிறு கட்சிகள், அதன் சித்தாந்தங்கள், வேட்பாளர்கள், கடந்த கால வரலாறு என எல்லாவற்றையும் கடந்து, ஒரு கட்சியின் 'சின்னம்' என்பது ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்டளவு தாக்கம் செலுத்துகிறது, "குறிப்பாக பொது மக்களிடையே" என சில ஆய்வுகளும் கூறுகின்றன. சுவர்களில் ஓவியங்களாக, சுவரொட்டிகளாக, பேனர்களில், பரப்புரை வாகனங்களில் என கட்சிகளின் சின்னங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. ஒரு கட்சி பிரிந்தால், 'அதன் சின்னம் யாருக்கு?' என நடக்கும் போட்டிகளை, சட்ட வழக்குகளை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை நடைபெற்றது. அப்போது இந்தியாவின் கல்வியறிவு விகிதம் என்பது 18.32%, அதுவே 2011ஆம் ஆண்டின் தரவுப்படி கல்வியறிவு விகிதம் 72.98%. இந்த வித்தியாசமே தேர்தலில் கட்சிகளுக்கான சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. தேர்தல்களில் வாக்களிக்க கல்வியறிவற்ற வாக்காளர்களுக்கு உதவும் வகையில், வேட்பாளரின் பெயருக்கு அருகில் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னம் இடம் பெறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டபோது (1951- 1952) கல்வியறிவு விகிதம் 18.32% என இருந்தது. ஒரு வாக்காளர், கட்சியின் அல்லது வேட்பாளரின் பெயரைப் படிப்பதற்குப் பதிலாக, வாக்குச் சீட்டு/மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னத்தை நேரடியாகப் பார்ப்பது அவர்களுக்கு வாக்களிக்க உதவியாக இருக்கும். இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் இந்தச் சின்னங்கள், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களில் பிரதானமாக காட்டப்பட்டு, அவர்களின் அடையாளங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சின்னங்களின் தாக்கம் என்பது தமிழ்நாட்டின் தேர்தல்களில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உள்ளது என சில ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. அது குறித்து பார்ப்பதற்கு முன், சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி பார்க்கலாம். சின்னங்கள் ஒதுக்கப்படும் முறை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அஇஅதிமுகவின் தேர்தல் சின்னமான இட்டை இலை (கோப்புப்படம்) இந்திய தேர்தல் ஆணையம் இந்தச் சின்னங்களை இரு வகையாகப் பிரிக்கிறது. 1. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட சின்னங்கள். அந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல்களில் இதைப் பயன்படுத்த முடியும். 2. அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் சுயேச்சைகளும், இந்திய தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும் 'பொதுச் சின்னங்கள்' பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான சின்னங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதில் அங்கீகாரம் என்பது தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரு கட்சி மாநிலக் கட்சி என அங்கீகாரம் பெற பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு கட்சி பூர்த்தி செய்ய வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதத்தைப் பெறுவது மற்றும் குறைந்தது 2 சட்டமன்ற உறுப்பினர்கள். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதத்தைப் பெறுவது மற்றும் குறைந்தது 1 நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற இடங்களில் 3% அல்லது குறைந்தபட்சம் 3 இடங்கள். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு 25 மக்களவை இடங்களுக்கும் 1 நாடாளுமன்ற உறுப்பினர். ஒரு பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 8 சதவிகிதத்தைப் பெறுவது. அதுவே தேசிய கட்சிக்கான அங்கீகாரத்திற்கு, 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவிகிதத்தைப் பெறுவதோடு, குறைந்தபட்சம் 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மொத்த மக்களவை இடங்களில் குறைந்தது 2 சதவிகித இடங்களை வெல்ல வேண்டும். குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். பட மூலாதாரம்,Getty Images இப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி பெறும் சின்னம் அக்கட்சியின் நிரந்தர அடையாளமாகிறது. அக்கட்சி பிரிவுகளை எதிர்கொள்ளும்போது 'கட்சியின் சின்னம்' யாருக்கு என்பதே முதல் கேள்வியாக முன்வைக்கப்படும். அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை, அமைப்பு ரீதியான பெரும்பான்மை, கட்சியின் அரசியலமைப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் சின்னம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும். இதற்கு மிகப் பிரபலமான ஓர் உதாரணம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம். 1987 டிசம்பரில் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி ஜானகி ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கு இடையே பிளவுபட்டது. இந்திய தேர்தல் ஆணையம் 'இரட்டை இலை' சின்னத்தை முடக்கி, ஜானகியின் அணிக்கு 'இரண்டு புறாக்கள்' சின்னத்தையும், ஜெயலலிதாவின் அணிக்கு 'சேவல்' சின்னத்தையும் ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 1989 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவின் அணி 27 இடங்களிலும், ஜானகியின் அணி 1 இடத்திலும் வெற்றி பெற்றது. "அந்தத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி அவர் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுக் கொடுத்தது, அவரது அரசியல் வாழ்க்கைக்கும் அது குறிப்பிடத்தக்க வெற்றியாக இருந்தது" என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு. கடந்த 1989இல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, இவர் வெற்றி பெற்றார். "சின்னங்கள்தான் கட்சிகளின் அடையாளம் என்றாலும், மக்கள் அவற்றைப் பெரும்பாலும் தலைவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். தலைவர்கள் காட்டும் சின்னம்தான் மக்கள் மனதில் பதிகிறது" என்கிறார் அவர். சின்னங்களின் தாக்கம் பட மூலாதாரம்,Getty Images "கடந்த 1980களில் ஒரு தேர்தல் பிரசாரத்தில் எங்கள் தலைவரை நான் நேரில் பார்த்தேன், அப்போதிருந்து எங்கள் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் வேட்பாளர்களின் பெயர்களை நான் பார்ப்பதில்லை, சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களித்து விடுவேன்" என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த கமலா (82 வயது). ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் 'இதே முறையில்' தான் வாக்களிக்கப் போவதாக அவர் கூறுகிறார். "கட்சிகளின் சின்னங்கள் வெறும் சின்னங்கள் மட்டுமல்ல, சிலர் அவற்றை உணர்ச்சிகளுடனும் கடந்த காலத்தின் சிறந்த தருணங்களுடனும் பொருத்திப் பார்க்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அதனால்தான் மக்களிடையே அவை தாக்கம் செலுத்துகின்றன" என்கிறார் ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் அதிகாரி மற்றும் எழுத்தாளர் கண்ணன் ராஜரத்தினம். "கடந்த 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்களில் அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றபோது, 'நீங்கள் மக்களிடையே உதய சூரியனை ஒரு கடவுளைப் போல பிரபலப்படுத்தியுள்ளீர்கள்' என்று அண்ணாவிடம் ராஜாஜி கூறினார். சின்னங்கள் எப்போதுமே கட்சிகளுக்குப் பெரும் பலமாக இருந்துள்ளன, இருக்கின்றன" என்கிறார் அவர். அதேநேரம், சில சின்னங்கள் மிக வேகமாக மக்களிடையே பிரபலமடைந்து விடும் எனக் குறிப்பிடும் கண்ணன் ராஜரத்தினம், "உதாரணத்திற்கு 1996இல் தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னம் உடனடியாக மக்களிடையே பிரபலமடைந்தது" என்கிறார். பட மூலாதாரம்,ECI படக்குறிப்பு,அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் சுயேச்சைகளும், இந்திய தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும் 'பொதுச் சின்னங்கள்' பட்டியலில் இருந்து சின்னங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டின் தேர்தல்களில் சின்னங்கள் மக்களிடையே ஓரளவு தாக்கம் செலுத்துகின்றன என்றும், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் 'பொதுச் சின்னங்களை' தேர்ந்தெடுக்கும்போது, பிரபல அரசியல் கட்சிகளின் கடந்த கால சின்னங்களையோ அல்லது அவற்றின் தற்போதைய சின்னங்களைப் போன்ற தோற்றமுடைய சின்னங்களையோ விரும்புகிறார்கள் என அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை 2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எதிர்கொண்ட ஒரு சிக்கலுடன் நாம் பொருத்திப் பார்க்கலாம். "அந்தத் தேர்தலில் தேமுதிகவின் முரசு சின்னத்தை ஒத்திருக்கும் கூடை சின்னம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டது சில தொகுதிகளில் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது" என்கிறார் தேமுதிகவை சேர்ந்தவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பார்த்தசாரதி. 'சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கப் போவதில்லை' பட மூலாதாரம்,Getty Images ஆனால், இப்போது சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் மக்கள் குறைந்துவிட்டார்கள் என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு. "இப்போது ஒரு கட்சியின் சின்னத்தை பிரபலப்படுத்துவது என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது, எனவே பெரும்பான்மையான மக்கள் சின்னங்கள் குறித்த தெளிவுடன் இருக்கிறார்கள். அதேநேரம், சின்னங்கள் என்பதைத் தாண்டி தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கட்சிகளின் கடந்த கால செயல்பாடுகளுக்கே இளைய தலைமுறை முக்கியத்துவம் அளிக்கிறது" என்கிறார். திருநாவுக்கரசு கூறும் கருத்தை முதல் தலைமுறை வாக்காளர்களின் மனநிலையோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. "நிச்சயமாக நான் சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கப் போவதில்லை" என உறுதியாகக் கூறுகிறார், வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அம்ரிதா. "நண்பர்களிடையே அரசியல் தொடர்பான விவாதங்களின்போது அடையாளத்திற்காக சின்னங்களைக் குறிப்பிட்டு பேசுவோம். மற்றபடி வேட்பாளர்கள் யார், அவர்களின் தகுதி என்ன என்பதே எங்கள் விவாதத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. சின்னங்கள் என்பவை எங்களைப் பொறுத்தவரை இரண்டாம்பட்சம்தான்" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyw3r3x997o- Trump-ஐ கொடூரமாக வெறுப்பேற்றிய Iran | இந்தியாவில் Petrol விலை ஏறியது | சும்மா இருந்த Hormuz சங்கை...
அமெரிக்கா ஆடுன ஆட்டத்துக்கு ஈரான் விச்சான் பாரு ஆப்பு🙃- 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
'முழு நாடுமே ஒன்றாக': 5 மாதங்களில் 1,911 பேருக்கு மறுவாழ்வு Mar 26, 2026 - 12:21 PM 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையான 1,911 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். மேல் மாகாணத்தில் இடம்பெறும் அனைத்து ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்க 0777 128128 என்ற புதிய வட்ஸ்எப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், திட்டமிட்ட குற்றங்கள் குறித்து நாடு முழுவதுமுள்ள 608 பொலிஸ் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 1997 மற்றும் 119 ஆகிய இலக்கங்கள் ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தகவல் வழங்கிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸாரின் பங்களிப்பு: 2025 ஒக்டோபர் 30 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ், நேற்று (25) வரை 1,071 கிலோ ஹெரோயின், 1,938 கிலோ ஐஸ், 4,917 கிலோ கஞ்சா மற்றும் 99,454 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 114,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 215 பேரின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2026 ஜனவரி 1 முதல் இதுவரை 24 இலட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 1,479 பேர் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 36,815 பேரும், போதையில் வாகனம் செலுத்திய 28,270 சாரதிகளும் அடங்குவர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தேடப்பட்டு வந்த 29 சர்வதேச குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 89 பேருக்கு எதிராக 'சிவப்பு அறிவித்தல்' விடுக்கப்பட்டுள்ளது. 2024 முதல் இதுவரை சுமார் 3,313 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசால் முடக்கப்பட்டுள்ளன. முப்படைகளின் பங்களிப்பு: இராணுவம்: இராணுவத் தளபதியின் நேரடி மேற்பார்வையில் சுமார் 7,000 இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட சோதனைகளில் நேரடியாகப் பங்கேற்று 200 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார். விமானப்படை: சுமார் 250 மணிநேர வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்களைக் கண்டறிய உதவுவதாக குறூப் கெப்டன் நலின் வேவக்கும்புர குறிப்பிட்டார். கடற்படை: சர்வதேச கடல் எல்லைகளில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், 2025 இல் 71 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களையும், 2026 இல் இதுவரை 25 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். இலங்கை சுங்கம்: 'முழு நாடுமே ஒன்றாக' எனும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கையின் கீழ், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை சுங்கத் திணைக்களம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தானும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அக்கொள்கலன்களில் ஒரு தொகுதியில் எவ்வித சட்டவிரோத சிக்கல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார். 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு வகையான போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் 147 முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 435 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி 5.8 பில்லியன் ரூபா என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmn73t55h001i356pr2ku7mmo- எதிரிகள் கார்க் தீவைக் கைப்பற்றத் திட்டம் – ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு
எதிரிகள் கார்க் தீவைக் கைப்பற்றத் திட்டம் – ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு Published By: Digital Desk 3 26 Mar, 2026 | 10:29 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மொஹமட் பாகர் காலிபாப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிக பங்கு வகிக்கும் கார்க் தீவை ஆக்கிரமிக்க எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், “எதிரிகளின் ஒவ்வொரு நகர்வையும் நாங்கள் கவனித்து வருகிறோம். அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால்கூட, அவர்களுக்கு ஆதரவளிக்கும் பிராந்திய நாடுகளின் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உட்கட்டமைப்புகளும் இடைவிடாத தாக்குதல்களுக்கு உள்ளாகும்” என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/241944- ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
இந்த வீடியோவில், சமீபத்தில் இஸ்ரேல் வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம். 1980-களில் தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போரில் இஸ்ரேல் ஆற்றிய மறைமுகப் பங்கு என்ன என்பதை இந்த ஆவணங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு ரகசியமாக இஸ்ரேலின் உதவியை நாடியது. ரோந்துப் படகுகள், நவீன துப்பாக்கிகள் என 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் எப்படி இலங்கைக்கு விற்றது? "விவசாய ஆலோசகர்கள்" என்ற போர்வையில் இஸ்ரேலின் 'மொசாத்' (Mossad) உளவாளிகள் இலங்கையில் எப்படி செயல்பட்டார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து அமெரிக்கா எச்சரித்தும், அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அதிரடிப்படைக்கும் (STF), அதிபர் ஜெயவர்த்தனாவின் பாதுகாவலர்களுக்கும் இஸ்ரேல் ஏன் பயிற்சி அளித்தது? வரலாற்றை மாற்றிய இந்த மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள். (ஆதாரம்: இஸ்ரேலிய மனித உரிமை வழக்கறிஞர் ஈட்டாய் மேக் (Eitay Mack) 'The Wire' தளத்தில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில்).- உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
எது எப்படியோ, இந்த போர் தொடங்கப்பட்டு இருக்கக்கூடாது. அதுக்கு டொனால்ட் ரம்ப் சரிப்பட்டு வரமாட்டார். ஜோர்ஜ் புஷ் இந்த விசயத்திலை பழம் திண்டு கொட்டை போட்டவர்.😎 ஆயிரம் பொய்யை சொல்லியாவது சொன்னபடி இந்த யுத்தத்தை முடித்திருப்பார்.😂 இனி என்ன செய்தாவது இந்த போரில் அமெரிக்க தரப்பு வெற்றியீட்ட வேண்டும் என்பது என் பிரார்த்தனைகள். பேச்சுவார்த்தைக்கு போகவே கூடாது. ஹிரொசிமா நாஷசாக்கிக்கு குண்டு போட்டு ஜப்பானை அடக்கின மாதிரி ஈரானையும் அடக்க வேண்டும். அது நடக்காவிடின்......🙃 இனிவரும் காலங்களில் முஸ்லீம் அல்லாதோர் இந்த உலகில் வாழ்வது மிக மிக கடினம்.இப்பவே நாங்கள் தூணிலும் இருப்பம் தும்பிலும் இருப்பம் எண்ட அலப்பறைகள் ஓவராகிக்கொண்டு வருது.அதிலும் ஈரான் வெண்டால் சொல்லி வேலையில்லை.☹- ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
எத்தனை குழந்தைகளை காசாவில் கொன்று குவித்திருக்கிறார்கள்… அதைப் பார்த்தும் உலகம் அமைதியாக இருந்தது. இப்போ மட்டும் அவசரக் கடிதமா? உங்களால் நினைத்தது போல இந்தப் போர் நடக்கலையா? சமீபத்தில் ஈரான் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதும் உங்கள் கண்களுக்கு தெரியலையா? உலகமே ஒரு பெரிய மேடை… அதில் நடிப்பது மட்டும் தான் நிஜம் போல காட்டுறாங்க.- மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
சரியாக சொன்னீர்கள்...இவர்கள் அமெரிக்காவின் கைபாவை. இனி உலகம் இவர்கள் பேச்சை கேட்குமா? கை மீறிவிட்டது, இதைதான் சீனா, வட கொரியா, ரஸ்யா ஏதிர்பார்த்த து, ரம் அவரப்பட்டுவிட்டார் நெதனை நம்பி...☹️- மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
இந்தச்சபையையும் கலைக்க வேண்டும். இது வேடிக்கை பார்த்துவிட்டு அறிக்கை மட்டும் விடுவதற்கு எதற்கு இந்தச்சபை?- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
சுமேரியரா? மெசொப்பொத்தேமியா சுமேரியரா?? ஆச்சரியம்🤔. வருக! வருக!! யாழ்வருகை நல்வரவாகட்டும் சோதரி. 🙏 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.