stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இல்லை , அடுத்த கட்டத்துக்கு நகரக் கூடாது. அப்படியே அ கூட தெரியாத கட்டதுக்கு பின் நோக்கி நகர்ந்தல் தான் எல்லா தப்புமே சரி போல் தெரியுமாம். பெரியவங்க கூறியிருகிறாங்க. 😂- அதிசயக்குதிரை
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பார்ப்பதற்கு ஏதாவது Link இருந்தால் போட்டு விடுங்கப்பா!- சிரிக்க மட்டும் வாங்க
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Aroquiadasse Pierre ·Ssonedotprii 428e4vli1:6c1i4ur085rtt,0a1uf7éci0525mahaa4gug · சகோதரிகளே காதலர் தினம் வருது ஆகவே வீண் கோபம் வேண்டாம்.புரிஞ்சா சரி🤣"- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் போட்டியே பயங்கர விறுவிறுப்பு.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பயத்தை காட்டிட்டான் பரமா :)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் வெல்லுது. 19 வது ஓவரில் 24 ரண்ஸ்!- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
தமிழ் அரசியல்வாதிகள் எப்பதான்... தமது வேலைகளை ஒழுங்காக செய்திருக்கின்றார்கள். எல்லாம்.... "அணில் ஏற விட்ட நாய்" மாதிரி, "போன பஸ்சுக்கு, கை காட்டுகின்ற" ஆட்கள் தானே.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
114-7 பாகிஸ்தான் 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் அடிக்கவேண்டும்- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இன்றைய உலகில் மக்களை வழிநடத்துவது செய்திகள்தான் அனுபவங்கள் அல்ல! “அ” பின் “ஆ” அறிஞ்சதுதான் அனுபவம் அல்ல.🤔- Today
- விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!
தகவலுக்கு நன்றி சிறியர் . .........!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் ஈசியா வெல்ல போகுது.................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் இலகுவா வெல்லப் போகுது. அவர்களுக்கு ஓட்ட விகிதம் முக்கியம்.- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
"வல்லவனுக்கு வல்லவன்" எப்ஸ்டீன். 😜 "முற்பகல் செய்யின்... பிற் பகல் விளையும்." 😂 ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣 கருத்தோவியம்... வேறை லெவல்.- கருத்து படங்கள்
- பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், இரு பொலிஸார் இடையில் கத்திக்குத்து.
பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், இரு பொலிஸார் இடையில் கத்திக்குத்து. பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளதாகவும், காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு , கத்திகுத்தினை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1463602- விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்! இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை. 2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் இந்த அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை UAPA தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 ஆம் ஆண்டு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை ஒத்திவைக்கக் கோரினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய வைகோ பின்வருமாறு கூறினார், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நானே நேரில் முன்னிலையாகி இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தேன். மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு: “புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பது. இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன். தலைவர் பிரபாகரனின் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை. ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம். மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது. ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன். ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது. மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது. ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide). அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது – என்றார். https://athavannews.com/2026/1463517- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை. பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”. ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன? பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது முதல், அமெரிக்காவின் முன்னாள், இன்னாள் அதிபர்கள் வரை பலரது பெயர்களைப் பதற வைத்துக் கொண்டிருக்கும் அந்த 30 லட்சம் பக்கங்கள் சொல்லும் ரகசியங்கள் என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திப் பிஞ்சுயிர்களைச் சிதைத்த அந்தப் ‘பீடோபைல் தீவு’ (Pedophile Island) கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்த அநீதிகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது ஆதவன் செய்திப் பிரிவின் இந்தச் சிறப்புப் பதிவு தவறு யார் செய்தாலும் தண்டிக்கும் பிரித்தானியா! நூற்றாண்டு காலப் பாரம்பரியமும், கண்ணியமும் கொண்ட பிரித்தானிய அரச குடும்பத்தில், ஒரு தனி நபர் செய்த தவறால் இன்று அந்தப் பெயருக்கே ஒரு கறை படிந்திருக்கிறது! அந்த வம்சத்தின் ஒரு வாரிசு, ஒரு தகாத ஒருவரோடு நட்பு வைத்ததால், இன்று அந்தப் பரம்பரையின் கௌரவமான பொறுப்புகளில் இருந்தே அவர் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இதற்கு ஒரே ஒரு பெயர்தான் காரணம்… அது ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் சர்ச்சைக்குரிய நபர்! டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் இந்த கொடூரன் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உலகையே அதிர வைத்தது. 2019-ல் பிபிசி நேர்காணலில், ‘அந்த நட்பை முறிக்கத்தான் நான் அங்கு சென்றேன்’ என்று ஆண்ட்ரூ தெரிவித்த போதிலும், 2011-ன் ரகசிய மின்னஞ்சல்கள் அவர் சொன்னது பொய் என்பதை நிரூபித்தன! விளைவு? தவறு செய்தவர் இளவரசராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்தது! 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் கிரீடத்தையே குழிதோண்டிப் புதைத்தது இந்த எப்ஸ்டீன் சிஸ்டம்!” ஆசிரியர் முதல் கோடீஸ்வரன் வரை: அந்த மர்ம வளர்ச்சி “இன்று நாம் பார்க்கப்போவது ஒரு தனிமனிதனைப் பற்றிய கதையல்ல… அதிகாரத்தின் இருண்ட பக்கம், செல்வம் இருந்தால் எதையும் மறைக்கலாம் என்று நினைத்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்த ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ பற்றிய ஒரு அலசல்! 1970-களில் ஒரு சாதாரணக் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், தனது தந்திரத்தால் வால் ஸ்ட்ரீட் வங்கியாளர்களை வளைத்துப் போட்டார். ஒரு மாணவனின் தந்தை மூலம் ‘பியர் ஸ்டியர்ன்ஸ்’ வங்கிக்குள் நுழைந்த எப்ஸ்டீன், நான்கே ஆண்டுகளில் பங்குதாரராக உயர்ந்தான்! 1982-ல் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, 1 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அதன் பிறகு அவர் சேர்த்த செல்வம், அவனது காமவெறிக்கும் அதிகார ஆட்டத்திற்கும் எரிபொருளானது! 30 லட்சம் பக்கங்கள்… நடுங்கும் உலகத் தலைவர்கள்! “ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆவணங்கள் உலகையே உலுக்கி வருகின்றன. சுமார் 30 லட்சம் பக்கங்கள், 2,000 வீடியோக்கள், 1.8 லட்சம் படங்கள்! இதில் பில் கிளிண்டன் முதல் டொனால்ட் டிரம்ப் வரை, பில் கேட்ஸ் முதல் எலான் மஸ்க் வரை எனப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகின்றன. எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் டிரம்ப் பெயர் இருப்பதைப் பதிவிட்டு விட்டு பின் அதை நீக்கியது பெரும் சர்ச்சையானது. 2002-லேயே டிரம்ப், ‘ஜெப் ஒரு அருமையான மனிதர், என்னைப் போலவே அவருக்கும் இளம் பெண்களைப் பிடிக்கும்’ என்று புகழ்ந்து தள்ளினார். ஆனால், விவகாரம் முற்றியவுடன், ‘அவர் என் கிளப் பெண்களிடம் தவறாக நடந்ததால் விரட்டிவிட்டேன்’ என்று மாற்றி பேசினார். இதற்கிடையே, இந்தியப் பிரதமர் மோடி, அம்பானி போன்றோரின் பெயர்களும் மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கசிந்த செய்தியை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எது எப்படியோ, இந்த ஆவணங்கள் அதிகார வர்க்கத்தின் உறக்கத்தைக் கலைத்துள்ளன என்பதுதான் நிதர்சனம்!” இதனிடையே, ‘இலங்கை’ என்ற பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. அதிகாரத்தின் பலமும்… ‘வசதியான’ சிறைவாசமும் “2003-லேயே பத்திரிகையாளர் விக்கி வார்டு இவனது மர்மங்களைக் கண்டுபிடித்தார். 1996-ல் மரியா ஃபார்மர் என்ற பெண்ணும் அவரது 14 வயது தங்கையும் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், எப்ஸ்டீன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் செய்தியையே நசுக்கியுள்ளார்! 2005-ல் 14 வயது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்தும், ‘நூற்றாண்டின் மிகப்பெரிய ரகசிய ஒப்பந்தம்’ மூலம் இவருக்கு வெறும் 13 மாதங்கள் மட்டும் சிறைத் தண்டனை கிடைத்தது. அதுவும் எப்படி? வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர ‘பணி நிமித்தமான விடுப்பு’ வழங்கப்பட்டது! இதுதான் அதிகாரத்தின் பலம்! இதுதான் அநீதியின் உச்சம் மர்மமான மரணம்: தற்கொலையா? கொலையா? “பாதிக்கப்பட்ட வர்ஜீனியா ஜூஃப்ரேயின் நீண்ட சட்டப் போராட்டத்தால், நீதிபதி லோரெட்டா பிரெஸ்கா இந்த ரகசியங்களை வெளியிட உத்தரவிட்டார். ஆனால், 2019-ல் மீண்டும் கைதான எப்ஸ்டீன், உண்மைகளைச் சொல்லப்போகும் நேரத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். கேமராக்கள் திடீரென வேலை செய்யவில்லை! காவலர்கள் தூங்கிவிட்டார்கள்! இது தற்கொலையா? இல்லை உண்மைகளைத் மறைக்க பெரிய இடத்து ஆட்கள் செய்த கொலையா? இன்றும் மர்மம் நீடிக்கிறது. அதனால்தான், இந்த வழக்கின் விசாரணையும் ஆதாரங்களும் இப்போது வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருகின்றன!” கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல்: கொடுரனின் ஏஜென்ட்! “இந்தக் காமப் கொடுரனின் வலது கையாக இருந்தவள் அவனது காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல். உலகத் தலைவர்களையும் கோடீஸ்வரர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காகக் கடத்திய குற்றத்திற்காக இன்று இவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். 17 வயதில் இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய வர்ஜீனியா ஜூஃப்ரேயுடன், ஆண்ட்ரூ பல மில்லியன் டாலர்கள் கொடுத்து சமரசம் செய்து கொண்டது எதை உணர்த்துகிறது? இறுதி எச்சரிக்கை: சிஸ்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது! இவர்களெல்லாம் அந்த ‘பீடோபைல் தீவுக்கு’ (Pedophile Island) ஏன் சென்றார்கள்? அங்கு நடந்த அசிங்கங்களில் இவர்களுக்குப் பங்கு என்ன? அதிகாரம் என்பது ஏழை மக்களைக் காக்கவா? அல்லது இதுபோல பிஞ்சுயிர்களைச் சிதைக்கும் காமவெறிக்குக் கேடயமாக இருக்கவா? எப்ஸ்டீன் செத்துவிட்டார். ஆனால் அவர் உருவாக்கிய அந்த ‘எப்ஸ்டீன் சிஸ்டம்’ இன்றும் உயிரோடுதான் இருக்கிறது. அதிகாரமும் பணமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற அந்தத் தைரியத்தை இந்த சிஸ்டம் இன்னும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இது ஏதோ அமெரிக்காவில் நடந்த கதை என்று கடந்து போகாதீர்கள். நமது சமூகத்திலும் அதிகார மிரட்டலுக்குப் பயந்து எத்தனை பிஞ்சுயிர்கள் மௌனமாக அழுகின்றனவோ? ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ வெறும் காகிதங்கள் அல்ல; அவை அதிகார வர்க்கத்தின் முகத்தில் பூசப்பட்ட கரி! நீதியைத் தற்காலிகமாகப் புதைக்கலாம், ஆனால் அது ஒருநாள் எரிமலையாக வெடிக்கும் என்பதற்கு எப்ஸ்டீன் கோப்புகளே சாட்சி! எப்ஸ்டீன் செத்துட்டார்… ஆனா எப்ஸ்டீன் சிஸ்டம் இன்னும் உயிரோட இருக்கு. அதை வேரோடு அழிக்க நாம் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!” – D. Rasmila https://athavannews.com/2026/1463499- பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்றைய (வெள்ளிக்கிழமை ) தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஷியா வழிபாட்டாளர்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்குக் காரணமான பாகிஸ்தான் தலிபான் அல்லது ஐஎஸ் போன்ற தீவிரவாதக் குழுக்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இஸ்லாமாபாத்தில் இவ்வாறான தாக்குதல்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன என்றாலும், சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தானில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதேவேளை, இவை முக்கியமாக பலூச் பிரிவினைவாதக் குழுக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பினால் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. அத்துடன் ஐஎஸ் அமைப்பின் பிராந்தியக் கிளையொன்றும் நாட்டில் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1463557- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக மின்னஞ்சல்கள் தெரிவிப்பு. மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும் ஒரு பெண்ணை இளவரசர் ஆண்ட்ரூ இரவு உணவிற்கு அழைக்கலாம் என ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இடைத்தரகராக அரச குடும்பத்துடன் தொடர்புடைய டேவிட் ஸ்டெர்ன் செயற்பட்டதாக கூறப்படுகிறது. இளவரசர் ஆண்ட்ரூ, 2010 ஆம் ஆண்டிலேயே ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தாம் உறவை துண்டித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய மின்னஞ்சல்கள் அதன் பின்னரும் எப்ஸ்டீன், அரச குடும்ப வட்டாரத்துடன் தொடர்பில் இருந்ததை வெளிப்படுத்துகின்றன. மேலும், 2017 ஆம் ஆண்டு விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற இரவு உணவு விருந்துபசாரமொன்றுக்கு, இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய உதவியாளரான டேவிட் ஸ்டெர்ன், ஜெஃப்ரி எப்ஸ்டீனை அழைக்க முயற்சி செய்ததாக மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்கள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தை பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இளவரசர் ஆண்ட்ரூ எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் எப்ஸ்டீனின் அழகான நண்பருடனான ஆண்ட்ரூவின் சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த புதிய தகவல்கள், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1463589- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாபர் அருமையான பிடியொன்றை எடுப்பதற்கு உதவினார். எல்லைக் கோட்டில் வைத்து பிடித்த பந்தை மேலே எறிய பின்னால் வந்த ஸகீன் அதைப்பிடித்தார். அருமையான களத்தடுப்பு.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதுதான் இந்த வகையான போட்டியில் உள்ள மகிமை. முதல் பந்திலிருந்தே அடித்தாட வேண்டியதுதான்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நெதர்லாந்து 7 பந்துகளில் 13 ஓட்டங்கள் (3 fours)- நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
அரசியல் கட்சிகளுக்கு பின்னால் திரிந்து, அவர்களின் சிபாரிசில்… ஆசிரியர் வேலை, தாதியர் வேலை, மற்றும் அரச வேலைகளை பெறுபவர்களிடம்… அந்தப் பதவிக்கு உரிய நற்பண்பும், கண்ணியமும், பொறுப்புணர்வும் அறவே இருக்காது. தமது காவாலித்தனத்தை காட்டவே செய்வார்கள். இப்படி.. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் போன்றவர்களின் சிபாரிசில் வந்தவர்களால் வடமாகாணத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. - இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.