stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களின் அரசியலை கடந்து போய்விட்டார்கள். ஒரு மாற்று அரசியல் செய்கின்றோம் என்று முன்நிற்கும் ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் இவை பற்றி அங்கே ஒரு பொருட்டாக பேசுவது கூடக் கிடையாது. மாற்று அரசியல் செய்பவர்களும் தங்களின் சுயலாபம் கருதியே ஈழ அரசியலை பேசுகின்றார்களோ ஒழிய, திராவிடத்தை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக கையில் எடுக்கின்றார்களே ஒழிய, ஈழ மக்களுக்கான ஒரு தீர்வாக அவர்கள் எதையும் முன்னெடுப்பதில்லை. இவர்களில் எவருக்கும் சரியான புரிதல் கூட இவர்களுக்கு கிடையாது என்பதை மீனவர்களின் பிரச்சனையிலேயே காண்கின்றோம். அங்கே தேர்தல் விஞ்ஞாபனங்களில் பத்தோடு ஒன்றாக ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எழுதி வைத்துக் கொள்வார்கள். அவர்களின் விஞ்ஞாபனத்தை கனமாக்குவதற்கு மட்டுமே இது உபயோகமாக இருக்கும். எங்கள் நாட்டில் முதல் பாராளுமன்றப் பேச்சில் வடக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, மலையக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்குமாக நான் குரல் கொடுப்பேன் என்று பேசி விட்டு, பாராளுமன்ற உணவு விடுதியில் சோறும், சொதியும் மட்டுமே உள்ளது என்று அதற்காகப் போராடும் எங்கள் அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் ஒன்றே தான். இவர்களின் பேச்சுகளை கேட்டு நாங்கள் அவசரப்பட்டு ஆனந்தப்படுகின்றோம், பின்னர் வசதியாக மறந்து விடுகின்றோம். இவர்களின் இந்த பேச்சுகள் விடிந்தால் போச்சு.............. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் மத்திய அரசின் ஒரு நீட் பரீட்சையை கூட அசைக்க முடியாது என்பதே உண்மை. இதில் எங்களுக்கு இவர்கள் சமஷ்டி பெற்றுத் தருவார்களா. ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளினதும் இன்றைய பிரச்சனை பாஜகவிடம் இருந்து எப்படித் தப்பி, அவர்களின் வாரிசு அரசியலைக் கொண்டு நடத்துவது என்பதே. தமிழ்நாட்டின் நலனும் அங்கே இல்லை, ஈழத்தின் நலனும் அங்கே இல்லை. மாற்று என்று வந்திருப்பவர்கள் அதைவிடக் கீழே. 'யார் அந்த ஏழு பேர்கள்..................' என்று ரஜனி கேட்டதை விட விஜய்யின் நிலை மோசம். யாரோ எழுதிக் கொடுக்க, அதை விஜய் பாடமாக்கிய பின் இவர்களுடன் பேச வேண்டும். இதற்கு ஒரு வாரமாவது எடுக்காதா................. தமிழ்நாட்டில் இன்னமும் அகதிகளாக இருக்கும் எம் மக்களை பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேசலாம். அங்கே எம் மக்கள் மூன்றாவது தலைமுறையாக முடங்கிக் கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டு அரச வேலைகளில் ஒரு சிறிய பகுதியை சில வருடங்களுக்காகவது அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு ஒதுக்குங்கள் என்று கேட்கலாம். இந்தியக் குடியுரிமை கொடுங்கள் என்று கேட்கலாம். கியூ பிராஞ்சின் கெடுபிடிகளை அகற்றுங்கள் என்று கேட்கலாம். இப்படியான விடயங்கள் தான் நடைமுறையில் ஓரளவு சாத்தியமானதும், பலன் தருவதும் ஆகும்.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு Dec 20, 2025 - 06:11 PM தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு இன்று (20) நடைபெற்றது. சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான 'கமலாலயத்தில்' இச்சந்திப்பு இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்தது. இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தி, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வலியுறுத்துமாறு இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjeaf38c02yeo29n29ppjn6w
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
T20 World cup 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு - சுப்மன் கில் நீக்கம் Dec 20, 2025 - 03:17 PM எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவர் சுப்மன் கில் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, அக்ஷர் படேலுக்கு உப தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழாத்தில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2026 T20 உலகக்கிண்ணத்திற்கான இந்தியக் குழாம் பின்வருமாறு, சூர்யகுமார் யாதவ் (தலைவர்) அக்ஷர் படேல் (உப தலைவர்) அபிஷேக் சர்மா சஞ்சு சம்சன் (விக்கெட் காப்பாளர்) திலக் வர்மா ஹர்திக் பாண்டியா சிவம் டுபே ரிங்கு சிங் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷித் ரானா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் வருண் சக்ரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்) https://adaderanatamil.lk/news/cmje46uix02y7o29nu7984w56
-
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:57 PM நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233942
- Today
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
"முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது! Published By: Digital Desk 1 20 Dec, 2025 | 11:06 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 428 கிராம் ஹெரோயின், 536 கிராம் ஐஸ், 03 கிராம் கொக்கெய்ன், 527 கிராம் கஞ்சா, 14,502 கஞ்சா செடிகள், 02 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 56 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 348 போதை மாத்திரைகள், 146 கிராம் 300 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 517 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 846 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 896 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 16 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233918
-
பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம்
பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம் 20 Dec, 2025 | 11:05 AM யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றினால் உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/233917
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:27 PM ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபிக் ஆகிய இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு நிதியில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன.அதில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சவுதி மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான 2வது ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233939
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ண முன்னோடி குழாத்தில் யாழ். மைந்தன் வியாஸ்காந்த் Published By: Vishnu 19 Dec, 2025 | 08:01 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இறுதி குழாத்தை தெரிவுசெய்யும் பொருட்டு பெயரிடப்பட்டுள்ள 25 வீரர்களைக் கொண்ட முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரும் தமிழ் யூனியன் வீரருமான விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். தமிழ் யூனியன் கழகத்திற்காக அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் வியாஸ்காந்த் 60 ரி20 போட்டிகளில் 67 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த முன்னோடி குழாத்தில் அனுபசாலிகளுடன் இளம் வீரர்கள் பலரும் இடம்பெறுகின்றனர். முன்னோடி குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் வருமாறு:- தசுன் ஷானக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், காமில் மிஷார, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ஜனித் லியனகே, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மிலன் ரத்நாயக்க, நுவன் துஷார, ஏஷான் மாலிங்க, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுஷான், மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமன்த, விஜயகாந்த் வியாஸ்காந்த், ட்ரவீன் மெத்யூ. https://www.virakesari.lk/article/233876
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை 20 Dec, 2025 | 02:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உதவிகளாக நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, பிரதேச அபிவிருத்தி வங்கி, 25 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்கியது. இதற்கான காசோலையை பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார். பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அசந்த தென்னகோனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/233938
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு இப்படி தரவுகளை தலைகீழாக வியாக்கியானம் செய்வது பெயருக்கு அழகல்ல. ஒரு காலத்தில் - புத்தளம் முதல் - நீர்கொழும்பு வரை தமிழர் நிலம். இப்போதும் ரயில் நிலைய பெயர்களை பார்த்தால் விளங்கும். சிங்கள ஏடுகள் கூட தெமல பற்றுவ, தமிழர் பற்று என சொன்ன இடம். இன்று? பெர்ணாந்து பிள்ளை, பெர்ணாண்டோ புள்ளேயாகி நிற்கும் அவலம். இரெண்டு தலைமுறைக்குள் இனமும், இடமும் மாற்றப்பட்டுள்ளது. நாளைக்கு இதே நிலைதான் காரதீப வுக்கும் 😂. சுதாகரிச்சு கொண்டு இப்போதே தமிழர் எண்ணிகையை சிந்தாமல், சிதறாமல் எமது தாயகத்தில் சேர்க்க வேண்டும். இல்லை எண்டால் “ஈழத்து புத்தன்” கோவில் அமைவதை தடுக்க முடியாது.
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா! குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இன்றைய இயற்கை அனர்த்தம் இதை பேறு பொருளாக்கி உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகான தேவை கல்லோயா குடியேற்றத்திட்டம், சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை, பின்னர் வந்த தொடர் கலவரங்களின் போதே ஏற்பட்டு விட்டது. 1983 இல் சீனியர் தொண்டா ஒவ்வொரு தோட்டமாக போய் வடக்கு போய்விடாதீர்கள் என மக்களை தடுத்தார். அப்போதே மஹோ, கெக்கிராவ என தோட்டங்களை விட்டு வெளியேறி சிங்கள பகுதியில் கூலி வேலை செய்த பலர் வன்னிக்கு வந்தனர். ஆகவே இது 80 ஆண்டுகளாக நடக்காமல் இருக்கின்ற, நடக்க வேண்டிய விடயம். அங்கே வெற்றிடம் ஏற்பட்டால் அதை நாம் ஏன் நிரவ வேண்டும்? அது சிங்களவரின் பாரம்பரிய தாயகம். அங்கே இந்த மக்கள் அடிமைகளாக அதாவது வெறும் வாக்கு, தொழில் செய்யும் இயந்திரங்களாக இருக்காமல் எம்மோடு வந்து விட்டால். அங்கே வேறு தமிழரை கொண்டு நிரவ வேண்டிய தேவை இல்லை.
-
வீழ்ச்சி - லஷ்மி சரவணகுமார்
வீழ்ச்சி லஷ்மி சரவணகுமார் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தப் பெண் ஒரு வாரமாகத் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கவனித்த மூர்த்தி பதற்றமடையத் துவங்கினான். திருச்சி நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவன் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடையில் ஒதுங்கியபோதுதான் முதல் தடவையாக எதிர்ப்பட்டாள். அவளை அடையாளம் தெரியாததால் அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்தநாள் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் பிஷப் ஹீபர் காலேஜ் சிக்னலில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த இடைவெளியில் தனக்குப் பின்னால் பழைய இரு சக்கரவாகனத்தில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தான். கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொலை ஆயுதம் ஒன்றின் முனையிலிருக்கும் கூர்மைமிக்கப் பார்வையது. நரம்புகள் அதிர்ந்ததுபோல உடலை உதறிக் கொண்டவன் அவளிடமிருந்து பார்வையை விலக்கி அவசரமாக சிக்னலைக் கடந்து சென்றான். இரவு உறக்கம் பிடிக்கவில்லை. அவளது பார்வையிலிருந்த ரெளத்ரம் அச்சமூட்டுவதாக இருக்க, யாராக இருக்குமெனச் சிந்தனைவயப்பட்டான். அறையில் மிக மெல்லிய நீல வெளிச்சம் படர்ந்திருக்க, அவனது பூனை தனது முகத்தால் கதவை முட்டித் திறந்துகொண்டு வந்தது. ம்யாவ்.. என நான்கைந்து முறை ஒலியெழுப்பியபின் தலையைத் தூக்கிப் பூனையைப் பார்த்தான். அந்த மென் வெளிச்சத்தில் பூனையின் கண்கள் ஒளிரும் உருண்டைகளாய் மின்னியது. ‘அப்பா கிட்ட வா….’ என அழைத்தவனை நோக்கி உடலை நோக்கி நெட்டி முறித்தபின் ஒரே தாவலில் கட்டிலுக்கு வந்தது. அவனது வயிற்றில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி உறங்கத் துவங்கிய பூனையை வருடிக் கொடுத்தான். அதன் உடலிலிருந்து மூச்சுவிடும் பர்ர்ர் சத்தம் மெல்லிய ஒலியில் கேட்டுக் கொண்டிருக்க, அடிபட்ட மிருகம் போலிருந்த அந்தப் பெண்ணின் நினைவு மின்னலைப் போல் தலைக்குள் தோன்றி மறைந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அந்தச் செய்தியை மூர்த்திதான் முதலில் தனது பத்திரிகையில் எழுதினான். வயலூருக்கு அருகே சிறிய கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு அதே ஊரைச் சேர்ந்த ஆளுடன் கள்ள உறவு இருந்ததாகவும் அதனைத் தட்டிக் கேட்ட கணவனைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் அவனே தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணை அதிகாரி சொல்லியிருந்தார். தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றம் அவளுடையது. அன்றைக்கு வேறு பெரிய செய்திகள் எதுவும் கிடைக்காததால் மூர்த்தி மாவட்டப் பகுதியில் இந்தச் செய்திக்குச் சிறப்புக் கவனம் கொடுத்துக் கால் பக்கத்திற்கு எழுதியிருந்தான். கள்ளக்காதல்களுக்காக இன்னும் எத்தனை மரணங்கள்? எனத் தலைப்பு, அதன் இரு பக்கத்திலும் அரிவாள் படம் போடப்பட்டு அதற்கு நாடகத்தன்மையும் சேர்ந்திருந்தது. அதன்பிறகு தொலைக்காட்சிச் செய்திகள், யூட்யூபர்களென ஒவ்வொருவரும் தங்களக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் தேடித் திரட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லோரையும் போலவே மூர்த்தியும் அந்தச் செய்தியையும் பெண்ணையும் மறந்திருந்தான். ஆனால் எதற்காக அவள் தன்னைப் பின்தொடர வேண்டுமெனக் குழப்பமாக இருந்தது. அடுத்தநாள் ஒரு வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக சென்ட்ரல் மார்க்கெட் அருகில் ஒரு கட்டிடத்தில் காத்திருந்தான். வழக்கத்தை விடவும் அதிகமான வெக்கையில் உடல் வறண்டுபோயிருந்தது. ‘ஸார் வந்தா சொல்லுங்க… நான் பக்கத்துல கட வர போயிட்டு வரேன்.. எனக் கிளம்பி வெளியே வந்தான். கண்ணைப் பறிக்கும் ஒளியில் சாலை தகித்துக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிடத்திற்கு அடுத்தாற்போலிருந்த பிரியாணி கடையிலிருந்து இறைச்சி வேகும் மணம் அடர்த்தியாய்ப் பரவியது. நெரிசலான சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே நுழைந்து சென்றவன் நான்கு கடைகள் தள்ளி உள்நோக்கி அமைந்திருந்த பழக்கடைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் அவனது நிழலும் கடையின் சுவர்களில் பரவி வந்தது. சில நிமிடங்களிலேயே சட்டை வியர்த்திருந்தது. ‘அண்ணே ஒரு ஆரஞ்ச் ஜூஸ் குடுங்க… சக்கர இல்லாம…’ என்றவன் காற்றாடிக்குக் கீழ் அமர்ந்தான். ‘ஏன் சக்கர வியாதியா உங்களுக்கு..’ வசீகரமான ஒரு பெண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அவனுக்குப் பின்னால் அந்தப் பெண் கையில் ஒரு கோப்பையோடு இவனைப் பார்த்துச் சிரித்தாள். திருத்தமான முகம். புகைப்படங்களில் தெரிந்த முதுமை நேரில் பார்த்தபோது இல்லை. முப்பத்தைந்து வயதிற்கு மேலிருக்க வாய்ப்பில்லை என்பதைப் போல் தோற்றம். கண்களுக்குக் கீழிருந்த சுருக்கத்தில் அவள் பூசியிருந்த டால்கம் பவுடர் வியர்வையில் வழிந்து ஓடியிருந்தது. ‘என்ன ஸார் அப்பிடிப் பாக்கறீங்க? என்னயத் தெரியலையா? எனச் சாதாரணமாகக் கேட்டாள். அவனுக்கு அடையாளம் தெரிந்தது, பெயர் நினைவில்லை. தெரிந்தது போல் சிரித்தவனை நெருங்கி வந்தாள். ‘தீபா… வயலூர்… ரெண்டு மாசத்துக்கு முன்ன என்னயப் பத்தி ஒரு ஸ்டோரி எழுதியிருந்தீங்களே…’ எனச் சிரித்தாள். ‘ஸ்டோரி இல்லங்க… நியூஸ்…’ என அவசரமாகச் சொன்னான். ‘சரி சரி.. நியூஸ்தான்…’ எனச் சிரித்தவள் தனது கோப்பையிலிருந்து கொஞ்சம் பழச்சாறு அருந்தினாள். ‘நீங்க எப்பிடி? எனச் சந்தேகத்தோடு அவன் கேட்க, ‘ஜாமீன் ல வந்துட்டேன்… சூசைட் கேஸ் இல்லயா… அதனால எனக்கு ஈசியா ஜாமீன் கெடச்சிருச்சு…’ என அவள் சொல்ல மேற்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் மூர்த்தி தடுமாறினான். அந்த இடைவெளியில் அவனுக்கு ஜூஸ் வர, அவன் அவசரமாகக் குடித்தான். தயக்கமோ அச்சமோ இல்லாமல் அவனைப் பார்த்தவளிடம் குறுகுறுப்பு அதிகமானதால் ‘நா ரெண்டு மூணு நாளாவே கவனிக்கிறேன். நீங்க என்னய ஃபாலோ பன்ற மாதிரி தோணுது… எதாச்சும் சொல்லணுமா?…’ எனத் தயங்கியபடியே கேட்டான். ‘ஆமாங்க… கொஞ்சம் பேசணும்… உங்களுக்கு எப்ப வசதின்னு சொல்லுங்க பேசலாம்…’ என்றாள். ‘எதப் பத்தி…?’ ‘என்னோட கேஸ் தாங்க… நீங்க அதப் பத்திரிகை ல எழுதணும்னு இல்ல… ஆனா எனக்கு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சு… உங்களுக்கு ஆட்சேபன இல்லன்னா உங்க நம்பர் குடுங்க…’ எனக் கேட்டாள். அவன் தயங்கியபடியே பழச்சாறைக் குடித்துவிட்டு, குவளையைக் கீழே வைத்தான். தனது பழச்சாறுக்கான பணத்தைக் கொடுக்கச் சென்றவனிடம் ‘நான் குடுத்துடறேன் நீங்க போங்க…’ எனச் சிரித்தாள். சங்கடத்தோடு பார்த்தவன் ‘9790125671 என தனது எண்ணைப் பகிருந்து கொண்டான். தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டவள் ‘நன்றிங்க… நாம அப்பறம் பேசலாம்.’ என்றபடியே பழச்சாறுக்கான பணத்தைக் கட்டிவிட்டுக் கிளம்பிவிட்டாள். வந்த வேலையின் மீது ஆர்வமில்லாமல் போக, அவன் அந்த அலுவலகத்தின் வாசலில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் சென்றான். வெயிலின் உக்கிரத்தில் கண் கூசியதால் திரைப்படம் பார்க்க முடிவெடுத்து ஒரு திரையரங்கினுள் நுழைந்தான். வெக்கையிலிருந்து மீண்டு ஏசியின் குளிருக்குள் வந்ததும் அசதியில் கண்கள் செருகின. காதல், ரவுடியிசம், அரசியல் என எல்லாம் கலந்த ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நாயகனை விட நாயகி முதுமையாகத் தெரிந்தாள். திரையில் மனம் ஒன்றாமல் இன்ஸ்டாக்ராமில் நடிகைகளை வைத்துப் போடப்பட்ட ஆபாச மீம்களைப் பார்க்கத் துவங்கினான். எதன் மீதும் கவனம் செலுத்தமுடியாத இந்த இடைவெளியைக் காமத்தால் நிரப்பிக் கொள்ள முடிவுசெய்து பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே குறி விறைத்து உடல் சூடானது. திரையரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததால் சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தான்… அவனது வரிசையில் அவனைத் தவிர ஒருவருமில்லை. தனது இடது கையால் மெதுவாகக் குறியைத் தடவத் துவங்கியபோது ‘ஹாய்’ என ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸப்பில் செய்தி வந்தது. சட்டெனக் கையை விலக்கிக் கொண்டவன் யாரெனத் தெரியாமல் செய்தியைத் திறந்தான். புகைப்படத்திற்குப் பதிலாக ஒரு செம்பருத்தி பூ படம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்குறியை மட்டும் பதிலாக அனுப்பினான். அடுத்த நொடியே ஒரு கேலியான சிரிக்கும் ஸ்மைலியும் ‘தியேட்டர் ல மாஸ்டர்பேட் பன்றது தப்பில்லயா? எனக் கேட்டு ஒரு செய்தி வரவும் பதறிப்போனவன் நாலாப் புறமும் தலையைத் திருப்பிப் பார்த்தான். அவனுக்கு முன் வரிசையில் தன்னை நோக்கிப் பார்க்கும் இரண்டு கண்களை அந்த இருளினூடாகக் கண்டு அதிர்ந்தான். அவசரமாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட நினைத்து எழுந்தபோது ‘எதுக்கு பயந்து ஓட்றீங்க… நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க கன்டினியூ பண்ணுங்க…’ எனப் பதில் வந்தது. அந்தச் செய்திக்குப் பதில் அனுப்பாமலேயே அவன் அவசரமாகத் திரையரங்கிலிருந்து வெளியேறினான். வீடு திரும்பும் வரை அவனுக்குப் பதற்றம் குறையவில்லை. தனது அறைக்குள் நுழைந்து உடைமாற்றும் போது மீண்டும் அவளிடமிருந்து செய்தி வந்தது. ‘ஏன் ஓடிட்டீங்க… நான் ஒன்னும் உங்கள பயமுறுத்தலையே…’ என்று இருந்த செய்தியை வாசித்தவன் இவளுக்கு என்ன வேண்டும்? எதற்காக தன்னை இத்தனை தீவிரமாகக் கண்காணிக்கிறாள் எனக் குழம்பியபடியே படுக்கையில் அமர்ந்தான். ஒருவேளை தன் மீது ஈர்ப்பிருக்குமோ? என நினைத்தபோதே ஆர்வத்தில் அவனுக்கு மீண்டும் குறி விறைத்தது. தன்னைக் கண்ணாடியில் பார்த்தான். தன் மீது அவளுக்கு ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்ததுமே அவளோடு பேச வேண்டுமெனத் தூண்டுதல் உருவானது. ஆனால் தயங்கினான். அவளனுப்பிய செய்தியைப் பார்ப்பதற்காகத் திறந்தபோது செம்பருத்திப் பூவிற்குப் பதிலாக அவள் தனது புகைப்படத்தை வைத்திருந்தாள். திரட்சியான உடலைப் பார்த்து அவனுக்குச் சிலிர்த்தது. ஆனால் எச்சரிக்கை உணர்வோடு பதில் அனுப்புவதைத் தவிர்த்தான். பிறகு அவளும் செய்தி அனுப்பவில்லை. கிறீச் ஒலியுடன் சுற்றும் காற்றாடியைப் பார்த்தபடியே கிடந்தவனின் கண்கள் சிவந்துபோயின. அசதியில் அப்படியே உறங்கிப் போனவன் கண் விழித்ததும் அவசரமாக அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அவளிடமிருந்து எந்தச் செய்திகளும் இல்லை. தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றவன் அடிக்கொரு முறை அலைபேசியை எடுத்துப் பார்க்கத் துவங்கினான். அவளிடமிருந்து எப்போது செய்தி வருமென்கிற குறுகுறுப்பு அதிகரித்தது. இரவு வரையிலும் காத்திருந்து பொறுமையற்றுப் போனவன் பதினோறுக்கு மேல் எச்சரிக்கை உணர்வையும் மீறி அவளுக்குச் செய்தி அனுப்பினான். ஹாய்..’ சில நொடிகளிலேயே அவளிடமிருந்து பதில் வந்தது. ‘சொல்லுங்க…’ ‘ஏதோ பேசனும்னு சொன்னீங்களே?..’ ‘ம்ம். ஆமா…’ ‘என்ன பேசனும்…’ ‘ஒன்னுமில்ல… என்னப் பத்தி… எங்க வீட்டுக்காரரப் பத்தி…’ அவனுக்கு இந்த உரையாடலில் ஆர்வமில்லை… ‘ஓ..’ எனப் பதிலளித்து விட்டு அமைதிகாத்தான்… ‘ஏன் நீங்க என்ன நெனச்சீங்க…?’ அவளாகவே அடுத்த கேள்வியைக் கேட்க தான் நினைத்தது சரிதானென அவனது உள்மனம் சொன்னது. ‘நான் எதும் நெனைக்கலீங்க… உங்க வீட்டுக்காரர் சம்பவம் முடிஞ்சிருச்சு. இனி அதப் பத்தி என்ன சொல்லப் போறீங்க. கேஸ் கோர்ட்ல இருக்கு. அதனால அதுல நான் கமெண்ட் பண்ணவும் முடியாது…’ அவன் அனுப்பிய செய்திக்கு அவள் பதில் அளிக்கவில்லை… ‘ஹலோ…’ என மீண்டும் அனுப்பினான்… ‘ம்ம்… எனப் பதில் அனுப்பியவள். சரிங்க… குட்நைட்.’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டாள். அவனுக்குச் சப்பென்றானது. இந்த விளையாட்டு இத்தனை சீக்கிரமாக முடிந்திருக்க வேண்டாமென ஏமாற்றமடைந்தான். எதாவது பேசி அந்த உரையாடலை வளர்க்க வேண்டுமெனக் கைகள் பரபரத்தன. அவன் தட்டச்சு செய்யத் துவங்கும் முன்பாகவே அவள் டைப் செய்வதாகக் காட்டியது. பொறுமை காத்தான். ‘தியேட்டர் ல யார நெனச்சு மாஸ்ட்ரூபேட் பண்ணீங்க…’ அவள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டாள். இவன் வெறும் சிரிக்கும் ஸ்மைலி மட்டும் அனுப்பினான். ‘சும்மா சொல்லுங்க…’ என அவள் வற்புறுத்த ‘அந்தப் படத்துல நடிச்ச நடிகையப் பாத்துதான்…’ எனப் பதில் அனுப்பினான். ‘பொய்…’ அவள் மீண்டும் கேலியான ஸ்மைலி அனுப்பினாள். ‘நிஜமாத்தான்… தீபா…’ என அப்பாவியாகச் சொன்னான். அவளிடமிருந்து அதன்பிறகு பதில் இல்லை. ‘ஹலோ… எனக் கேட்டு நிறைய கேள்விக் குறிகளையும் அனுப்பினான். அவளும் பதிலுக்குக் கேள்விக் குறிகளை அனுப்பினாள். ‘கால் பண்ணவா?’ இந்த முறை அவனது காமம் அவனதுக் கட்டுப்பாட்டை வென்றது. எல்லா ஒழுக்கசீலனுக்குமான எல்லை வாய்ப்பு கிடைக்கும் வரைதான். வாய்ப்புகள் உருவாகும் சிறிய சாத்தியங்கள் தென்பட்டால் கூட ஆண்கள் காமத்தில் திளைக்கவே விரும்புகிறார்கள். பெண்கள் விஷயத்தில் ஆண்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாமே தற்காலிகமானவை. ‘எதுக்கு எனக் கேட்டு உடன் ஆங்க்ரி ஸ்மைலியும் அனுப்பினாள். ‘சும்மா பாக்கதான்…’ எனப் பதில் அனுப்பிவிட்டுப் படபடப்போடு காத்திருந்தான். அவள் ஒரு பேய்ப் படத்தை அனுப்பினாள். ‘பேய் நிறையப் பாத்திருக்கேன். உங்களப் பாக்கணும்.’ என எவன் கேட்க, தனது இன்னொரு புகைப்படத்தை அனுப்பினாள். நைட்டியில் அவளது மார்புகள் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டிருக்க, இவனுக்கு நரம்புகள் முறுக்கேறின. ‘தியேட்டர் ல விட்டத இப்ப முடிச்சுட்டுப் பேசாமப் படுங்க…’ என்றவள் கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள். அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அவளை வீடியோ காலில் அழைத்தான். உடனடியாக இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆத்திரத்தோடு தனது அலைபேசியை முறைத்தான். ‘இப்ப பேசமுடியாது… ஸாரி..’ எனப் பதில் அனுப்பியவள் அதன்பிறகு உரையாடலைத் தொடரவில்லை. வெறுமையிலும் ஏமாற்றத்திலும் புரண்டு படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் அவளது புகைப்படத்தைப் பார்க்கலாமென அலைபேசியை எடுத்தபோது அந்தப் படம் அழிக்கப்பட்டிருந்தது. அவன் அலைபேசியைத் தலையணைக்குள் எறிந்துவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்துகொண்டான். ஜன்னலுக்கு வெளியே இருள் அடர்த்தியாக வீதியை ஆக்கிரமித்திருந்தது. அதிகாலை கண் விழித்தபோது கை தானாக அலைபேசியைத் தேடி எடுத்தபோது ‘ஸாரி’ என அவளிடமிருந்து செய்தி வந்திருந்தது. அதற்குப் பதில் அளிக்கவே கூடாதென்கிற உறுதியோடு தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றான். ஒரு மணி நேரத்திற்குப் பின் ‘கோவமா?’ என அடுத்த செய்தி வந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் அவன் செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கும் பின் காவல் நிலையத்திற்கும் சென்றான். அவளிடமிருந்து வெவ்வேறு உடைகளில் புகைப்படங்கள் வந்திருந்தன. அவன் எதற்கும் பதிலளிக்கவில்லை. மதிய உணவிற்காக வீடு திரும்பியபோது உள்ளாடை மட்டுமே அணிந்து புகைப்படமொன்றை அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்ததும் பரவசமானவன் கட்டுப்படுத்த முடியாமல் அவசரமாக அறைக்குள் சென்று கதவைச் சாத்தினான். அந்தப் புகைப்படத்திற்கு ஆட்டின் போட்ட அடுத்த நொடி மீண்டும் அது அழிக்கப்பட்டது… அவன் எரிச்சலில் ‘ங்கோத்தா உனக்கு வெளயாட்டா இருக்கா?’ என டைப் செய்து அனுப்ப, அவளிடமிருந்து கால் வந்தது. அவசரமாக எடுத்தான். குறைவான வெளிச்சத்திற்கு நடுவே உடல் முழுக்கப் போர்வையால் மூடியிருந்தவள் இவனைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். அவன் அவசரமாக தனது உடைகளைக் களைந்தான். உள்ளாடையோடு நின்றவனைப் பார்த்து வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டாள். ‘கண்ண வேணா மூடிக்கோடி மத்தத எல்லாம் தொறந்து காட்டு..’ எனச் சிரித்தான். ‘ச்சீ என்ன இவ்ளோ அசிங்கமா பேசறீங்க..?’ எனப் பொய்யாகக் கோபப்பட்டாள். ‘ஓ அசிங்கமா…? ஏன் நல்லா இல்லயா? இண்ட்ரஸ்ட் இல்லாமயா எங்கிட்ட பேசிட்டு இருக்க…?’ என அவளைச் சீண்டினான். ’அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஒங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு. அவ்ளோதான். இதெல்லாம் நீங்க தூண்டி விட்டதால நடந்துடுச்சு…’ என அப்பாவியாகச் சொன்னாள். ‘ஆமாடி ஒனக்கு ஒன்னும் தெரியாது பாரு… சரி பெட்ஷீட்ட கொஞ்சம் ரிமூவ் பன்றியா…’ என வழிந்தான். ‘ச்சீ ச்சீ.. நான் பண்ணமாட்டேன்..’ என அடம் பிடித்தாள். அவன் பொய்யான கோபத்தோடு அவளை முறைத்தான். ‘பெரிய ரிப்போர்ட்டர் உங்களுக்கு ஆள் இல்லாம இருக்குமா? எங்கிட்ட வழிஞ்சுட்டு இருக்கீங்க…’ எனச் சீண்டினாள். ‘என்னதான் வீட்டு மாங்கா இருந்தாலும் திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் இல்லயா… அதான்…’ எனச் சிரித்தான். ‘நீங்க எந்த மாங்காவச் சொல்றீங்க…?’ எனக் கேலியாகக் கேட்டாள். ‘அதான் தெரியுதுல்ல.. அப்பறம் என்ன கேக்கற… என்னய டென்ஷன் பண்ணாத… சீக்ரமா..’ என அவசரப்படுத்தினான்… மின்னல் வேகத்தில் போர்வையை விலக்கிவிட்டு மீண்டும் மூடிக் கொண்டாள். ஒரு நொடிக்கும் குறைவான அவகாசத்தில் பார்த்த அந்த உடலின் நிர்வாணம் அவனைப் பித்து கொள்ளச் செய்தது. ‘ஏய் இன்னும் ஒரு தடவ நல்லாக் காட்டுடி… ப்ளீஸ் ப்ளீஸ்…’ என மன்றாடினான்.. ‘நோ… என்னால முடியாது… வேணும்னா நேர்ல பாத்துக்கங்க..’ எனச் சொல்லிவிட்டு அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள். கையிலிருந்த அலைபேசி நடுங்கியது. சமநிலை குலைந்தவனாய் உடல் முழுக்க மயிர் கூச்செரிந்து நின்றான். அந்த உடலைக் கட்டியாள வேண்டும். ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகவேண்டுமெனத் தாபமெடுத்தபோது அவளது முகம் தெரியாத காதலனின் மீது காழ்ப்பும் வெறுப்பும் வந்தது. வெக்கையில் உடல் வியர்த்துக் கொட்ட, அவளது மற்ற புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். அவளைச் சந்திப்பதையும் அவளோடு உறவுகொள்வதையும் தன்னால் தள்ளிப்போட முடியாதென உணர்ந்தவன் ‘எப்போ மீட் பண்ணலாம்?’ என அவளிடம் கேட்டான். ‘உங்க விருப்பம்….’ என அவளிடமிருந்து பதில் வந்தது. அவசரமாகச் செய்து முடிக்கும் காரியமில்லை. அவளோடு முழுமையாக நேரம் செலவிட வேண்டுமென நினைத்தவன் அலுவலகத்தில் பேசி இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டான். வீட்டில் பெற்றோர்களிடம் ஒரு செய்தி சேகரிக்க வேண்டி நாளை காலை வெளியூர் செல்கிறேன் என்று சொல்லிவிட்டான். ‘நாளைக்கு மீட் பண்ணுவமா?’ என அவளிடம் கேட்க, அவள் மறுக்காமல் சம்மதித்தாள். வெளியூர் அழைத்துச் செல்லும் முடிவில் இருந்தவனிடம் ‘எங்கயும் போ வேணாம் என் வீட்டுக்கே வாங்க. நான் மட்டுந்தான் இருக்கேன்.’ எனச் சிரித்தபடி பதிலளித்தாள். வீட்டுக்கா? எனத் தயக்கத்தோடு அவன் கேட்க, ‘பயப்படாதிங்க… இங்க நான் மட்டுந்தான் இருக்கேன். எங்கூட வேற யாருமில்ல.’ என்றாள். ‘இல்ல… வேற யாருக்காச்சும் தெரிஞ்சா தப்பாயிருமே…’ ஆசையும் குழப்பமும் அவனை அலைக்கழித்தன. ‘ரிஸ்க் எடுக்காம எஞ்சாய் பண்ணணும்னா எப்பிடி ஸார்…? இஷ்டம்னா வாங்க… இல்லன்னா விடுங்க… என்னால வெளிய எங்கயும் வர முடியாது…’ எனக் கறாராகச் சொல்லிவிட்டாள். இதில் யோசிக்க ஒன்றுமில்லையென முடிவெடுத்தவன் வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டான். இரண்டு நாட்களுக்குத் தேவையான மது போத்தல்களை வாங்கிச் சேமித்துக் கொண்டவனுக்கு இரவு உறக்கம் பிடிக்கவில்லை. இந்த இரண்டு நாட்களில் நடந்த எதையும் அவனால் நம்பமுடியவில்லை. யாரிவள்? திடீரென இவ்வளவு நடந்துவிட்டதே… பெண்ணுடலுக்காக எத்தனையோ நாட்கள் ஏங்கித் தவித்தபோது இப்படி ஒருத்தி கிடைக்கவில்லையே எனத் தன் மீது கழிவிறக்கம் கொண்டான். இன்னொரு புறம் பெண்கள் இத்தனை எளிதில் சோரம் போகக் கூடியவர்களா என வியப்பாகவும் இருந்தது. தனக்கு வேண்டுமானால் இது முதல் முறையாக இருக்கலாம். அவள் கையாளுவதைப் பார்க்கையில் அப்படி இருக்க வாய்ப்பில்லையெனச் சமாதானம் சொல்லிக் கொண்டான். உறங்க நினைத்துக் கண் மூடிய போதெல்லாம் அந்தத் திரண்ட மார்புகள் முன்னால் வந்து தொந்தரவு செய்தன. உடல் சூடு குறையாமல் கட்டிலில் புரண்டவன் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அவள் அனுப்பியிருந்த முகவரி அவனது வீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத் தூரத்திலிருந்தது. திருச்சியிலிருந்து குளித்தலை செல்லும் முக்கியச் சாலையிலிருந்து பிரிந்து குளுமணி செல்லும் சிறிய கிராமத்துச் சாலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். இந்தப் புதிய முகவரிக்கு வந்து சில நாட்கள்தான் ஆனதென்றாள். ஊருக்கு வெளியே இருந்த புதிய வீடு. தனித்திருக்கும் அச்சம் இல்லாமல் உற்சாகமாக இருந்தாள். நன்கு அறிமுகமானவனை வரவேற்பது போல் வரவேற்றவள் அவனுக்குத் தேநீர் கொடுத்தாள். நிதானமாக வீட்டைக் கவனித்தான். திருத்தமான வீடு. தனது கணவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். குழந்தைகளோடு இருந்த புகைப்படங்களைப் பார்த்தபோதுதான் அந்த வீட்டில் குழந்தைகள் இருப்பதற்கான தடயங்களே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டான். ‘உன்னோட பசங்க எங்க போயிட்டாங்க…?’ தயக்கத்தோடு கேட்டான். ‘மாமனார் மாமியார் வீட்டுல…’ எனச் சிரித்துவிட்டு, ‘ஒழுக்கம் கெட்ட பொம்பளகிட்ட புள்ளைங்க வளந்தா அதுங்களும் கெட்டுப் போயிருமாம்.’ என ஏமாற்றத்தோடு சொன்னவளை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துகொண்டான். ‘நீங்க ரெஸ்ட் எடுங்க… இட்லியும் குடல் குழம்பும் செஞ்சுட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல சாப்புடலாம்…’ எனச் சொல்லிவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவசரமாகப் பின்னால் சென்று அவளை அணைத்தான். கழுத்தில் கடித்தவனை விலக்கியவள் ‘எதுக்கு இவ்ளோ அவசரம்?… இங்கதான இருக்கப் போற… பொறுமையா இரு…’ எனச் சிரித்தாள். மீண்டும் அவளது கழுத்தில் கடித்துவிட்டுக் கண்களில் காமம் மிளிர அவன் வெளியே வந்தான். உடை மாற்றிக் கொண்டு வந்தபோது அந்த வீடு அவனுக்குப் பழகியிருந்தது. தனது பையிலிருந்து மதுக்குப்பியை எடுத்தவன் அவளைத் தேடி வந்தான். ‘ நீ குடிப்பியா?’ எனக் கேட்டான்… ‘இல்ல நீங்க குடிங்க..’ எனச் சொல்லிவிட்டு தம்ளரை எடுத்துக் கொடுத்தாள். அவன் சமயலறை மேசையில் ஏறி அமர்ந்து கொண்டு மதுவை ஊற்றி நிதானமாகக் குடித்தான். கொதிக்கும் குடல் கறியின் வாசனையும் அவளது வியர்வை வாசனையும் அவனை அதீதமாய்க் கிளர்த்த அவளுடலைச் சீண்டியும் வருடியும் விளையாடினான். அவளது இதழ்களை வருடினான். அவள் பொய்யாகக் கோபப்பட்டாள். வெட்கப்பட்டாள். அந்த விளையாட்டுப் பிடித்துப் போக அவளுடலை உரசியபடியே முத்தமிட்டான்… ‘கொஞ்ச நேரம் சும்மா இரேன்…’ என்றவளை மேற்கொண்டு பேசவிடாமல் இறுக்கி அணைத்து ஆழமாய் முத்தமிட்டான். அவள் தன்னை முழுமையாக அவனிடம் ஒப்புக் கொடுத்தாள். நீண்ட காத்திருப்பில் அவளுடலை நெருங்கிய சில நிமிடங்களிலேயே உச்சம் பெற்று அவனது லுங்கி ஈரமானது. ஏமாற்றத்தோடு அவன் விலக அவள் சத்தமாகச் சிரித்தாள். ‘போதுமா. போ … போயி வாஷ் பண்ணிட்டு உக்காரு. சாப்டலாம்…’ என அன்பாகச் சொன்னாள். அவன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு மீண்டும் மதுவருந்தினான். வெக்கை குறைந்ததில் உடல் லேசாகியிருந்தது. உணவைப் பரிமாறியவளிடம் உரையாட விரும்பினான். மதுவின் அடர்த்தி உடல் முழுக்கப் பரவியிருந்ததால் உணவின் காரம் இதமாக இருந்தது. எங்கிட்ட ஏதோ பேசணும் பேசணும்னு சொன்னியே… என்ன பேசணும்..’ சாப்பிட்டபடியே கேட்டான். ‘ம்க்கும் நீ எங்க என்னய பேச விட்ட… சாப்டு அப்றம் பேசிக்கலாம்..’ என வெட்கப்பட்டாள். அவனும் சிரித்தபடியே மதுவையும் உணவையும் ஒருசேர எடுத்துக் கொண்டான். அந்தக் காலை நேரம் வசீகரமானதாக மாறியிருந்தது. தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை ரசித்தபடியே படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அவள் உடைமாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வந்தாள். ஜன்னல்களின் வழியாய் வந்த மெல்லிய வெளிச்சம் அறையில் நிரம்பியிருக்க, அவனருகில் அமர்ந்தாள். இந்தமுறை அவளை நிதானமாகக் கையாண்டான். மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துழைத்தவள் அவனது உடைகளைக் களைந்து தூண்டினாள். அவள் வேகத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவனின் குறியை இறுகப் பற்றித் திருகினாள். அவன் வலியில் ‘ஏய் என்னடி செய்ற… வலிக்கிது.. விடு…’ எனக் கத்தினான்.. ‘நான் கள்ளக் காதல் பண்ணேன்னு உனக்கு யார்ரா சொன்னது தாயோலி…’ எனக் கத்தியவள் அவனது குறியை முன்னைவிடவும் இறுக்கமாகத் திருகினாள். ‘அய்யோ வலிக்கிது… வலிக்கிது விட்று.. என்னய… போலிஸ்காரந்தான் சொன்னான்…’ எனக் கதறினான். ஓங்கி அவனது முகத்தில் குத்தினாள். ‘போலிஸ்காரன் சொன்னா நீ எழுதுவியா? ஒங்கொம்மாள ஒருத்தன் தேவ்டியான்னு சொன்னா நீ என்ன ஏதுன்னு விசாரிக்காம எழுதுவியாடா தேவ்டியா பயலே…’ மீண்டும் மீண்டும் அவள் தாக்கியதில் அவன் நிலைகுலைந்து போனான். போதையில் உடல் தடுமாற தனது உடைகளைத் தேடினான். அவள் அடிப்பதை நிறுத்தவில்லை. ‘அய்யோ என்னய மன்னிசிரு.. மன்னிச்சிரு…’ என கைகளை உயர்த்திக் கெஞ்சினான். ‘பத்திரிகக்காரன் ஒரு செய்திப் போடறதுக்கு முன்ன எது நெசம் எது பொய்யின்னு நாலு பேருகிட்ட விசாரிக்கணும். ஒருத்தன் சொல்ற பொய்ய விட அரகுறையா தெரிஞ்சிக்கிட்ட உண்ம எவ்ளோ ஆபத்துன்னு தெரியுமாடா ஒனக்கு. சொல்லுடா…’ அவனுக்கு வலியிலும் ஆற்றாமையிலும் கோபம் வந்தது. ‘யேய் நான் மட்டுமாடி செய்தி போட்டேன்.. எல்லாருந்தான் போட்டானுக… போயி அவனுகள நொட்டு… எனக் கத்தினான். மீண்டும் ஓங்கி அறைந்தவள் ‘நீதாண்டா ஆரம்பிச்சு வெச்ச… இது நியூஸா மாறி அதிகமா பரவுனதுக்கு நீதான் காரணம். உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியறதுக்கு முன்னயே கள்ளக்காதல்னு எழுதுனவன் நீதான்… நீ சொன்னத வெச்சுதான் எல்லாரும் கத சொல்லிட்டானுக… என்னயத் தேவ்டியாவா ஆக்குனது இந்தக் கை தான… எனக் கேட்டபடியே அதனைக் கட்டிலில் வைத்து மிதித்தாள். அவன் வேதனையில் அலறினான். ‘என்னய மன்னிச்சுரு… மன்னிச்சிரு.. வலிக்கிது தீபா விட்று…’ எனக் கெஞ்சியவனை முறைத்தாள். ‘ங்கோத்தா நான் என்ன உன் பொண்டாட்டியா தீபான்னு பேரச் சொல்ற.. அக்கான்னு சொல்ற…’ எனக் கத்தினாள். அவன் பேச்சற்று இறுகிப்போனான். வலியில் கண்ணீர் வழிந்தது. ஆத்திரத்தில் மூச்சு வாங்கியபடியே முகத்திலும் கழுத்திலுமிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டவளுக்கு அழுகை வந்தது. ‘என் பேரக் கெடுத்து ஜெயிலுக்குப் போக வெச்சு என் பிள்ளைகளும் என்னய விட்டுப் போயிருச்சுங்க… ஒரு நாளைக்கு எத்தன பேரு ஃபோன் பண்ணி என்னய படுக்கக் கூப்டறானுக தெரியுமா? எல்லாம் ஒன்னால…. முன்னப் பின்ன தெரியாத ஒருத்தரப் பத்தி எழுதறமேன்னு பயம் இல்லாமப் போச்சுல்லா ஒங்களுக்கெல்லாம்… நான் ஒங்களுக்கு என்னடா பாவம் பண்ணேன்…’ திரும்பி அவனை முறைத்தாள். அவன் இன்னும் அச்சம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என் புருஷன் கேம் அடிக்ட்… ஆன் லைன் கேம்ல நிறைய காச விட்டு கடன் ஆகிட்டான். என் தாலி முதக்கொண்டு எல்லாத்தையும் வித்துக் குடுத்தேன். நாளைக்குத் திருந்திருவேன்னு சொல்லி திரும்பப் போயி விளையாடி தோத்துட்டு வருவான்… இருந்த வீட்டையும் கடன்காரனுக்கு வித்த அப்பறம் யாருக்கும் பதில் சொல்ல முடியாதேன்னு பயந்து செத்துப் போனான் அந்த நாயி…. இந்த உண்மைய நான் வெளிய சொல்றதுக்குள்ள நீ என்னய தேவ்டியாவா ஆக்கிட்ட… ம்ம்…’ எனக் கத்தியவள் மீண்டும் அவனை அடித்தாள். அவசரமாகக் கையெடுத்துக் கும்பிட்டவன் ‘நான் வேணா மறுப்புச் செய்தி போட்டுடறேன்…’என மன்றாடினான். ‘போடா மயிரே… தெனம் எவன் குடி கெடும்… எந்தப் பொம்பள எவனக் கூட்டிட்டு ஓடினா, எவன் தாலிய எவன் அறுத்தான்னு தெரிஞ்சுக்க வெறி புடிச்சு அலையிற கூட்டம் நீ சொல்ற மன்னிப்பக் கவனிக்கும்னு நெனைக்கிறியா? ம்ஹூம்… எல்லாருக்கும் அன்னிக்கி ஜாலி பண்ண ஒரு கிசு கிசு வேணும்… ஊரான் வீட்டுப் பிரச்சனைன்னா ஓநாய்க்கு எச்சில் வடியற மாதிரி வந்துடறீங்கள் ல….’ எனக் கேட்டபடியே அவனது உடைகளைத் தூக்கி முகத்தில் அடித்தாள். அவன் பதற்றத்தோடு அவளைப் பார்த்தான். ‘போ… நீ செஞ்ச சில்றத்தனத்தையும் வெக்கமே இல்லாம எங்கூட அத்துமீறிப் பேசுனதையும் இப்ப ஊரு உலகமே பாத்திருச்சு…’ என்று சிரித்தவளை அதிர்ச்சியோடு பார்த்தான்… ‘என்னடா பாக்கற… நீ இந்த வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து இவ்ளோ நேரம் நடந்த அவ்வளவையும் ஃபேஸ்புக் ல லைவ் போட்றுக்கேன்… இன்னும் ஓடிட்டுதான் இருக்கு. தெனம் ஒரு ஹாட் நியூஸுக்காக நாய் மாதிரி அலையிவ ல… இன்னிக்கி நீதான் ஹாட் நீயூஸ்… போ உன் கம்பெனில உனக்கு மெடல் குடுப்பாங்க… வெளிய போடா மயிரே… சத்திய மூர்த்தி… **** மூர்த்தின்னு… பேரப் பாரு…’ எனக் கத்தியவளை எதிர்கொள்ளத் திராணியின்றி அவசரமாக உடை மாற்றியவன் தனது அலைபேசியைத் தேடி எடுத்தான். அவனுக்குத் தெரிந்தவர்களும் நண்பர்களுமாய் நிறைய அழைப்புகள் வந்திருந்தன. ஆத்திரத்தில் அவளை ஏதாவது செய்ய வேண்டுமென வெறி வந்தது. வேகமாக நெருங்கியவனை ஓங்கி மிதித்தாள். அவன் கதவுக்கு வெளியே தடுமாறி விழுந்தான். காலைப் பிடித்து இழுத்து வந்தவள் வீட்டிற்கு வெளியே போட்டாள். வெயில் உக்கிரமாய் இருந்தது. தடுமாறியபடியே எழுந்து தனது இரு சக்கர வாகனத்தை உதைத்தான். அவனுக்குப் பின்னால் அவள் கதவை அடித்துச் சாத்தும் சத்தம் மூர்க்கமாய் எதிரொலித்தது. https://thadari.com/fall-short-story-lakshmi-saravanakumar/
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இயற்கை அனர்த்தத்தை காரணமாக்கி ஒரு இடத்தில் இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களை வெளியேற்றி பின்னர் அங்கே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இங்கேயிருந்து அங்கே மக்களைக் குடியேற்றி எல்லா மக்களின் மனதுகளையும் குழப்பி சலுகைகளைக் கொடுத்து மனதுகளை மாற்றி இங்கே பார்..... அங்கே பார்..... தெரிகின்றதா ஒளி வட்டம்..... என்று ஆர்ப்பரித்து......... சாமிப்பிள்ளையை சமி பிலே.... ஆக்கி மயில்வாகனத்தை மல்லி வானே.... யாக்கி இது புத்தன் இயேசு பிறந்த பூமி என்று மகாவம்சத்தையே மாற்றி..... இப்படியே மாற்றத்தையே வேண்டும் வேண்டும் என..... மக்களை ஏய்ப்பதே இந்த அரசியல்வாதிகளின் தொழில் . அதற்கு வக்காலத்து வேறை....... 😂
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
அன்றைய ஜெ. வி. பி. நீதிமன்றம் சென்று சாதித்தது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சில்வா கூறியிருந்தார், நீதிமன்றம் சென்று இதற்கு எதிராக வாதாடி தீர்ப்பை மாற்றலாமென்று.ஆனால் நம்மவர் யாரும் முன்வரவில்லை. வேண்டுமென்றே இருபகுதியும் நடந்து கொண்டன. சட்ட மேதையும் தூங்கிவிட்டார் பாருங்கோ. நாம்தான் பேரம் பேசும் சக்தி, ஏகோபித்த கட்சி என்று கூறி வாக்கு மட்டும் சேகரித்தார்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ் நாடு அரசால் இந்த விடயத்தில் எந்த அழுத்தத்தையும் கொடுக்கும் அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை என்பதும், அதற்கான அரசியல் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை என்பதும், அவ்வாறு அழுத்தம் கொடுப்பது இருக்கும் பிரச்சனைகளை இன்னும் சிக்கலாக்குமே தவிர உதவப் போவதில்லை என்பதும் பட்டறிவின் மூலம் ஸடாலினுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த லூசுகள் வந்து கேட்பதால் ஏதோ லூசுகளை திருப்திப்படுத்த அப்படி கூறியிருப்பார் என்று நினைகிறேன். நிச்சயமாக அப்படி அழுத்தம் கொடுக்கும் மகா முட்டாள்தனத்தை அவர் செய்ய மாட்டார் என்பது தெரிந்த விடயம். அரை லூசுகள் மட்டுமே அவர் அப்படி அழுத்தம் கொடுப்பார் என்பதை நம்புவார்கள்.
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
சந்திச்சதோட மான் ஊறுகாய் ஏற்றுமதிக்கு ஒரு ஒப்பந்தம் செய்திட்டு வந்தால் நல்ல காசு சம்பாதிக்கலாம். நாலு பேருக்கு வேலைவாய்ப்பு குடுத்தாயும் இருக்கும்.😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
குடும்பத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு, தராதரம் பார்ப்பவர்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். இதற்குள்தான் நானும் பிறந்து வளர்ந்தேன். குறியேறிகளுக்கு தேனீர் கொடுக்கவும் சிரட்டையை நாடுதே என்மனம்.🧐
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
இத்தனை காலம் இந்தியாவை புறக்கணிப்பதாக சொல்லி விட்டு… எடுத்த எடுப்பில் பிஜேபியை சந்திக்க முடியாது… ஆகவே இப்போதைக்கு பிஜேபி பி டீமை சந்தித்துள்ளார்கள். தமிழ் நாட்டினூடாக அமித்ஷாவை நெருங்க மிக பொருத்தமான ஆள்தான் சீமான்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஒரு காலத்தில் சிங்களவன் ஒட்டுமொத்தமாக ஆளில்லா காணிகள் எல்லாம் “புனித பூமி” என அறிவிப்பான்…அப்ப குய்யோ, முறையோ என கத்துவார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இருந்தாலும் வேறுபாடு உள்ளது சுமந்திரன் இலங்கையில் இருப்பவர் மலையக தமிழர்களை யாழ்பாணம் வந்து குடியேறுங்கோ என்று சொன்னார். இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்பாணத்து காணிகளின் புனிதம் கெட்டுவிடும் என்று அதை விரும்பவில்லை .
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
சந்தர்ப்பம் கூறுக: இதன் மிக முக்கிய ஏற்பாடொன்று இலங்கை நீதிமன்றத்தில் யாரால், எச்சந்தர்பத்தில் காயடிக்கப்பட்டது? (புள்ளிகள் யாரால் - 1 புல்டோ எச்சந்தர்பத்தில் - 1 போண்டா).
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
உண்மை தான், வெளிநாட்டு ராஜதந்திரிகள் அனைவருக்கும் செருப்படி கொடுத்தால் தான் ஈழத்தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.😂😂😂 இது தெரியாமல் 75 வருடத்தை வீணாக்கி விட்டோம். சித்திரமாக வரைந்து தமிழ் மக்கள் அனைவரையும் சென்றடைய வைக்க வேண்டிய அற்புதமான கருத்து.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
முக்கியமான விடயம் ஒன்று… 2009 முதல் 16 வருடமாக இந்தியாவை “செத்தாலும் வரமாட்டேன், செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்” என சொல்லி புறக்கணித்தவர் பொன்னர். இப்ப “இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டில் என்ன” என்ற நிலைக்கு தமிழ் தேசிய அரசியல் வந்த பின், திடீர் நிலைமாற்றம். ஏன் நிலைமாற்றம் என்பதற்கோ, முந்திய நிலைப்பாட்டுக்கு மன்னிப்போ எதுவும் இல்லை. பாராட்டகூடிய விடயம் - அனைவரையும் சந்தித்தது. பனையூர் ஜமீனை சந்திக்க இவர்கள் விரும்பவில்லையா? அவர் விரும்பவில்லையா தெரியவில்லை.