stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பிந்திய செய்தி ஒன்று வாசித்தேன். யாழில் கடமையாற்றும் ஒரு இராணுவ அதிகாரியே இந்த திஸ்ஸவிகாரை பிரச்சனையை ஊக்கப்படுத்துவதாகவும், அவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்றும், அரசாங்கம் இதில் கவனமெடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இலங்கையில் எந்தத்துறை ஊழியர்களும் அரசியல்வாதிகளும் அனுராவுக்கு ஆதரவு தெரிவிப்பது கஸ்ரம். காரணம்; ஊழல், அதிகார துஸ்பிரயோகம், வேலைசெய்யாமல் ஊதியம், கையூட்டு பெறுவது, யுத்தக்குற்றம் புரிந்த இராணுவத்தினர், ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவர் என அறிவித்துள்ளார். இந்த குற்றங்கள் நேற்று முழைத்தவை அல்ல, கடந்த அரசியல்வாதிகள் வளர்த்து குளிர் காய்ந்தவை. இதனால் பலரும் வேலையிழப்பு, தண்டனை, சிறை, அரசியல் அஸ்தமனம் என எதிர்நோக்கவேண்டியுள்ளது. கடந்த அரசாங்கங்களில் தண்டனை, சோதனை, கேள்வியில்லை. அவர்களின் வாழ்வு வசந்தமாக இருந்தது. இப்போ இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. வன்முறையை தூண்டி, நாட்டை கொழுத்தி, அரசியலை பிடித்து அதில் குளிர் காய்ந்தவர்கள் எப்போதும் போல் ஒரு இனக்கலவரத்தை உருவாக்கி அரசியலை தட்டிப்பறிக்க புத்தரை பாவிக்கிறார்கள். என்னதான் கூத்தாடினாலும், நாமல் ஜனாதிபதியாகப்போவதில்லை. அனுராவை விரட்டவும் முடியாது, நன்றோ தீதோ அவருக்கு கொடுக்கப்பட்ட காலம்வரை அவர் ஜனாதிபதியாக தொடர்வார். பின்னர் அவர் செயற்படும் முறையைப்பொறுத்து மீண்டும் தொடர மக்கள் அனுமதிப்பர் அல்லது வீட்டுக்கு அனுப்பப்படுவார். வீணாக தேவையற்ற வன்முறைகளை தூண்டி, சிக்கலில் மாட்டுவர் யாராக இருந்தாலும். அனுரா இனியும் காலந்தாழ்த்தாமல் இந்தக் குற்றவாளிகளை பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும். இல்லையேல் இதுகள் சும்மா இருகாதுகள், நாட்டுக்கு நல்லது செய்யவும் விடாதுகள், இதன் பின்னால் இருப்பவர்கள் வெகு விரைவில் தாங்கள் விரித்த வலையில் விழுவர். தங்கள் விதியோடு விளையாடுகிறார்கள்.
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
kanna boats. .. cuddalore.jpg
-
Kerala boats of backwater (3). | The big ones: These types of boats in cuddalore are called Kanna padaku
-
Kerala boats of backwater (2).webp
-
Kerala boats of backwater (4).jpg
-
Kattu Vallam - Kerala boats of backwater (3).jpg
-
Kevu Vallam - Kerala boats of backwater (1).webp
-
Kerala boats of backwater (2).jpg
-
Sangkadam - Kerala boats of backwater (1).jpg
-
beypore.jpg
-
battelah beypore.jpg
-
stearn pattamar.jpg
-
pattamar.jpg
-
Pattamar, Bombay, 1973.jpg
-
Rowboat of the thoni MARY ISABEL, Calicut, 1973.jpg
-
Interior of thoni hold, Tuticorin, India, 1973.jpg
-
Thoni MARIA ANTORAJ 43, Bombay, 1973.jpg
-
mahe boats, 1920-1950.jpg
-
Kotiya.jpg
-
Masula.jpg
-
William Daniell, R.A. (1769-1837) A Patamar off Mahé, Malabar Coast titled 'A Patamar off Mahè April 12, 1793
-
- Today
-
12 இந்திய மீனவர்கள் கைது
படத்தில் உள்ள மீன் பிடி வள்ளம் வேறை உலகில் தடை செய்யப்பட்ட இழுவை படகு வேறை செய்தி போடுபவங்களுக்கே விளக்கம் கிடையாது .
-
12 இந்திய மீனவர்கள் கைது
வீரகேசரி இந்திய பத்திரிகை என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றது . பிடி பட்ட ரோலரை மறைத்து வியட்நாம் காரங்களின் மீன்பிடி வள்ளத்தை படம் காட்டுமளவுக்கு இந்திய பற்று . https://pixabay.com/photos/vietnam-phu-quoc-port-sea-boats-1262820/
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
உங்களுக்கு சரியாக விளங்கவில்லையென நினைக்கிறேன். கவி அருணாசலம் சொன்ன நீண்ட பதிலில் "சிறிதரன் பா.உ தள்ளி விழுத்தப் பட்டார்" என்பது பொய்த்தகவல் என்றிருக்கிறார். அதற்குத் தான் "தரவுகளுடனான பதில்" என்றிருக்கிறேன், நீங்கள் தெரிந்தெடுத்து மேற்கோள் காட்டிய பகுதி தரவு அல்ல - அபிப்பிராயம். உங்களுக்கு இரண்டிற்கும் வேறுபாடு கிடையாது என்பது இங்கே எல்லோருக்கும் புரியும்! உங்களிடம் சொறியவில்லை, இடையிடையே வந்து சும்மா "காற்றில் இருந்து நீங்கள் பிடுங்கிப் போடும்-plucked from thin air" பொன்மொழிகளுக்கு ஆதாரங்கள் மட்டுமே கேட்கிறேன். நீங்கள் ஏதோ பதில் எழுதுகிறீர்கள், மட்டுக்கள் யாரோ அகற்றுகிறார்கள் என்று உங்கள் பதிலில் இருந்து புரிந்து கொள்கிறேன். ஆனால், நான் விசில் ஊதி அவர்கள் வந்து உங்கள் பதில்களை அகற்றுவதில்லை என்பதைச் சொல்ல வேண்டியது என் கடமை. இப்பவெல்லாம் வாசகர்கள் பதிவோரின் விறுத்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எனக்கு😂!- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
சிலருக்கு ஊர் நினைப்பு அங்கு செய்த தொழில் போன்றவை மறந்து போகாது இங்கு வந்தும் பழைய தொழில் சம்பந்தபட்ட விடயங்களையே கதைக்க எழுத வருவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை .- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இப்படி பல தரவுகள் இலங்கை வாழ் மக்கள் எல்லோரிடமும் உண்டு என்னை சொறிவது இருக்கட்டும் முதலில் அறிவு இருந்தா திரி பற்றி எழுதவும் இப்படி திரிக்கு திரி பலடி அடிக்க தேவை இல்லை இனி போய் நிழலியை கூட்டிவாருங்கள் அப்படித்தான் வாழ முடியும் எங்களுக்கு அந்த வில்லங்கம் இல்லை- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
அப்ப பலர் சொன்னது போல, சுமந்திரன் பின் கதவால் வர ரணில் காரணம் இல்லையா? மகிந்த ரீம் தான் காரணமா? என்ன 15 வருடங்கள் முன்னர் நடந்தவற்றையே திரிக்கு ஒன்றாக மாற்றிச் சொல்கிறீர்கள்? இந்த இலட்ணத்தில் உங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவைப் பற்றிய அறிமுகம் எப்படித் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்😇??- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்நகரமே தப்பாகத்தான் இருக்கிறது ...... அதுக்காக இப்போ யாழ்நகரை அழிக்க வேண்டுமா? யாழ் நகரில் இருந்து வெறும் 4-5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே காணிகள் புல்லும் புதருமாக இருக்கிறது ஏன் மீண்டும் மீண்டும் அங்கேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று செருகுகிறார்கள் என்று புரியவில்லை. யாழ் வைத்தியசாலை சுற்று சூழல் ஒரு சாதாரண ஆஸ்பத்திரிக்கு உகந்த இடமாக கூட இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருகிறார்கள். ஆரிய குளத்தில் இருந்து வெறும் 2௦௦ மீட்டர் தூரத்தில் வைத்தியசாலை பின்புற வாசலுடன் ஓர் நீர்த்தேக்கம் தேங்கி நிற்கிறது அதன் துர்நாற்றம் அதை கடக்கும்போது தாங்க முடியவில்லை. ஆனா அருகிலேயே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நடக்கிறது. இவாறானா செயல்கள் இவற்றையெல்லாம் துப்பரவு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தும் செய்யாமல் ஏன் இவாறான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது யாழில் மட்டுமல்ல கொழும்பிலும் இதே நிலை இருக்கிறது கொம்பனித்தெரு அருகில் இப்படி இருக்கிறது. ஒரு தூர நோக்கு திடடம் இடல் என்பது அங்கே அறவே இல்லை. மிக நெரிசலான போக்குவரத்தை உருவாக்கியபின் அதுக்கு தீர்வு பல கோடி ரூபா அழிவாகத்தான் இருக்கும் ........ அதை கருத்தில் எடுத்தால் இப்போ எந்த செலவும் இல்லாமல் அதை சீர் செய்து கொள்ளலாம். பழைய பூங்கா மரங்கள் பற்றி அதை பற்றிய அறிவு உள்ளவர்கள்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் அவை என்ன மரங்கள்? எவ்வளவு வருடங்கள் வாழ்கின்றன? இன்னமும் எவ்வளவு வருடம் வாழும்? போன்ற எந்த அறிவும் இல்லாமல் ஏகாந்தம்தாம் தான் எழுத முடியும். வெறும் உணர்ச்சியால் பிரியோசனமானதை எழுத முடியாது. எனக்கு தனிப்பட ஒவ்வரு மரத்துடனும் ஒரு கதை இருக்கிறது நான் அந்த மரங்களுக்கு கீழே வாழ்ந்திருக்கிறேன் தூங்கி இருக்கிறேன் அது என்னுடைய தனிப்படட உணர்வு மட்டுமே. மேலே ஒரு ஐயா சுமந்திரன் தமிழ் ஈழம் தந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள் என்று ஒரு கருத்தோவியம் வரைந்து உள்ளார் அது உண்மைதான். ஆறுஅறிவும் சரியாக வேலை செய்யும் ஒவ்வரு தமிழனும் அதை அப்படிதான் சொல்வான். ஏனென்னில் சுமந்திரன் தமிழ் ஈழம் கொண்டுவந்தால் அதுக்கு கீழே எல்லா தமிழனுக்கும் அழிவு இருக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். இங்கு பலருக்கு சம்மந்தன் ஐயா தனது பதவியையும் கொழும்பில் உள்ள சொத்துக்களையும் கொத்தவிடம் இருந்து காப்பாற்ற பின்கதவால் கொண்டுவந்த பின்புதான் சுமந்திரனை தெரியும். எங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவையே தெரியும். எனவே நீங்கள் வர்ண வர்ண படங்கள் கீறியோ ........ அடுக்குமொழி வார்த்தைஜாலம் எழுதியோ நாங்கள் சுமந்திரனை பற்றி அறிந்துகொள்ள எதுவுமே இல்லை.- சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:38 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை இந்தோனேசிய வீரர் ஜீட் ப்ரியந்தனா நிலைநாட்டியுள்ளார். கம்போடியாவுக்கு எதிராக பாலி உதயனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலேயே இந்த வரலாற்றுச் சாதனையை ஜீட் ப்ரியந்தனா படைத்தார். கம்போடியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் 16ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா முதல் 3 பந்துகளில் ஹெட்-ட்ரிக்கைப் பதிவு செய்ததுடன் அதே ஓவரில் கடைசி 2 பந்துகளிலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார். கம்போடியாவின் ஆரம்ப வீரர் ஷா அப்ரார் ஹுசெய்ன் 6 பந்துவிச்சாளர்களை சமாளித்து 37 ஓட்டங்களுடன் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். ஆனால், 7ஆவது பந்துவீச்சாளராக பந்துவீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா தனது முதல் பந்திலேயே ஷா அப்ரார் ஹுசெய்னை ஆட்டம் இழக்கச் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளில் நிர்மல்ஜித் சிங், சந்தோயுன் ரதனாக் ஆகியோரையும் கடைசி இரண்டு பந்துகளில் மொங்தாரா சொக், பெல் வன்னாக் ஆகியோரையும் ஜீட் ப்ரியந்தனா ஆட்டம் இழக்கச் செய்து அரிய சாதனையை நிகழ்த்தினார். அப் போட்டியில் இந்தோனேசியா 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் தர்மா கேசுமா 68 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்து பின்னர் ஆட்டநாயகனாகத் தெரிவானார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கம்போடியா 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவரை வீசி ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதே தினத்தன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கம்போடியாவின் சவாலை முறிடியத்து 3 ஓட்டங்களால் இந்தோனேசியா வெற்றிபெற்றது. இந்தோனேசியா 20 ஓவர்களில் 141 - 5 விக்., கம்போடியா 20 ஓவர்களில் 138 - 7 விக். ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவர் வீசி 14 ஓட்டங்களைக் கொடுத்தார். இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்ந்தன. ஆனால் அவற்றில் இரண்டு ரன் அவுட்கள் அடங்கு இருந்தன. இங்கிலாந்தில் 2010இல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மொஹமத் ஆமிர் வீசிய கடைசி (20ஆவது) ஒவரில் ப்றட் ஹெடின், மிச்செல் ஜோன்சன் ஆகியோரை முதல் இரண்டு பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளில் மைக்கல் ஹசி, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனார்கள். மொஹமத் ஆமிரின் கடைசிப் பந்தில் ஷோன் டெய்ட் ஆட்டம் இழந்தார். இது இவ்வாறிருக்க, அயர்லாந்தில் இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான ரி20 போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட அயர்லாந்து வீரர் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். நோர்த் வெஸ்ட் வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்ஸ்டர் ரெட்ஸ் அணியின் தலைவராக விளையாடிய கேர்ட்டிஸ் கெம்ஃபர், 12ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளிலும் 14ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளிலும் விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சாதனையை நிலைநாட்டி இருந்தார். https://www.virakesari.lk/article/234245- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Damro 50 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 08:19 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகம், அமைப்புகள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாளாந்தம் நிதி நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, Damro நிறுவனத்தினால் திங்கட்கிழமை (22) 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை Damro நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசன்ன கொடிப்பிலி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் நாலக குணதிலக்க ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://www.virakesari.lk/article/234251- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:59 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது. Prime Land குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர் இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் திங்கட்கிழமை (22) கையளித்தனர். Prime Land குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய மற்றும் பணிப்பாளர் அநுர பத்திரகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234249 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Cargills (Ceylon) PLC 100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியது Published By: Vishnu 23 Dec, 2025 | 08:01 PM ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Cargills (Ceylon) PLC நிறுவனத்தினால்100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது. Cargills (Ceylon) PLC நிறுவனத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் இம்தியாஸ் அப்துல் வாஹித் (Imitiaz Abdul Wahid- Group Managing Director) திங்கட்கிழமை (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அதற்கான காசோலையை கையளித்தார். Cargills (Ceylon) PLC நிறுவனத்தின் திலந்த ஜயவர்தன மற்றும் சந்தன கெலேகம ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234250- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மேலும் 14.1 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:53 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ITOCHU Corporation, S & D Chemicals (Pvt) Ltd, Irrigation Engineering Diplomates Association, Sciences & information Technology City Campus இனால் சுமார் 14.1 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது. அதில், ITOCHU Corporation இன் பொது முகாமையாளர் Mikinga Hotta 02 மில்லியன் ரூபாவும், S & D Chemicals (Pvt) Ltd இன் G.G.A. Dayantha De Silva 10 மில்லியன் ரூபாவும், Irrigation Engineering Diplomates Association இன் W.J. Priyantha 1.1 மில்லியன் ரூபாவும், Sciences & information Technology City Campus இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Cader Rahmathulla ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டதுடன் அதற்கான காசோலைகள், நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/234247 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு NDB Finance Limited 50 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:56 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’, நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, NDB நிதி நிறுவனம் திங்கட்கிழமை (22) 50 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது. NDB நிதி நிறுவனத்தின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி K.V. Vinoj, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நன்கொடைக்கான காசோலையை கையளித்தார். NDB நிதி நிறுவனத்தின் Sanjaya Perera, C.L.B. Dasanayaka ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234248- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இது தடுக்கப்பட வேண்டும். வழக்கு போடும் தரப்பின் சட்ட / வழக்கு வியூகம் பற்றி தெரியாமல் கதைக்க ம்முடியாது சில வழக்குகள் தோற்கும் என்று தெரிந்தே போடுவது. ஏனெனில், இந்த வழக்கின் வழியாக பொது அமைப்புகள், வேறு அரச நிர்வாகங்கள் இதை கையில் எடுக்கும் கதவுகளை திறந்த்து விட்டு உள்ளது. வேறு நோக்கங்களும் இருக்கலாம். (சுமந்திரனுக்கு தெரிந்து இருக்கலாம் சட்ட அடிப்படையில் தடுக்க முடியாது அல்லது கடினம் என்று. ஏனெனில் சட்டமா அதிபரின் ஒப்புதல் முறையின்படி (procedural) தேவை என்கிறர் நீதிபதி. ஏன் சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்க வேண்டும் , அரசதரப்பு விளையாட்டு அரங்கை கட்ட முயலும் போது. இது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இது பொதுவான நிலையா, அதாவது வழக்கு போடும் தரப்பு பொது அமைப்பாக இருந்தாலும், அதாவது அரசு மீது வழக்கு போடும் போது, சட்டமா அதிபரின் ஒப்புதல் தேவை என்பது தெரியாது.) வழக்கின் நோக்கம், 2 ஆக இருக்கலாம். வென்றால் தடுக்கப்படும். தோற்றால் எதிர்க்கும் தரப்புகள் கூடும். எதுவும் இறுதி நோக்கத்துக்காக பூக்களில் விளையாட்டு அரங்கை தடுப்பதற்கு, அரசியலையும் சேர்த்து. இதில் பிரச்னை எதிர் தரப்புக சட்டத்தரணி கட்டணத்தை எவர் பொறுப்பேற்பது என்பது. இப்படியான தோற்கும் கணிசமான வியூக வழக்குகளை நேரடியாக இங்கே uk இல் கண்டு இருக்கிறேன்.- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Commercial Bank இனால் 110 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:45 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரர்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி,Commercial Bank இனால் 110 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. Commercial Bank இன் தலைவர் Sharhan Muhseen , இந்த நிதி நன்கொடைக்கான காசோலையை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் திங்கட்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார். Commercial Bank சார்பாக, அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் S.C.U. Manathunga, பிரதான செயல்திட்ட அதிகாரி S.Prabagar, மேலதிக பொது முகாமையாளர் Ashani Senevirathane ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234246- இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் Published By: Vishnu 23 Dec, 2025 | 07:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. “டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது. அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234241- ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது
‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது Published By: Vishnu 23 Dec, 2025 | 06:31 PM அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார். சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள Wang Junzheng, செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த Wang Junzheng, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டார். கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேச திணைக்கள தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர் நாயகம் Peng Xiubin பிராந்திய வெளியுறவு அலுவலக பணிப்பாளர் நாயகம் Bao Ting, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பிரதிப் பணிப்பாளர் Wang Siqi மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதிஅனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234237- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விளக்கேற்றி வைக்கிறேன்.. படம்: சூதாட்டம்(1971) பாடியோர்: சுசீலா- பாடசாலை விடுமுறை தினங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு அறிவிப்பு
பாடசாலை விடுமுறை தினங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு அறிவிப்பு 23 Dec, 2025 | 06:39 PM (எம்.மனோசித்ரா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025 கல்வி ஆண்டின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை நிறைவு செய்யும் தினங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை (23) புதிய சுற்று நிரூபமொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தன. அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றன. அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்துக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் 2026 ஜனவரி 5 திங்கட்கிழமை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2026 கல்வியாண்டின் முதலாம் தவணை 2025.12.09 கடிதத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு 2026 ஆண்டுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படுவதுடன், பரீட்சை திணைக்களத்தால் 2026 சுற்று நிரூபத்துக்கமைய பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்படும் தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234232 - பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.