Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. துணைவியாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மோகன், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்🙏🏽
  3. அதிர்ச்சியான செய்தி. கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அவரின் பிரிவால் துயருற்று இருக்கும்.. மோகன் அண்ணாவிற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.
  4. மோகன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை எங்கள் கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்
  5. மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
  6. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 89 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 89 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எல்லாளனை வெல்லமுன், முப்பத்திரண்டு மன்னர்கள் அங்கு இருந்தனர். துட்டகாமினி அனைவரையும் தோற்கடித்து தனது இறுதி வெற்றியை அடைந்தான். எனினும் நடந்த பல கொலைகள் குறித்து துட்டகாமினி அதிருப்தி அடைந்தபோது, புத்த பிக்குகள் துட்டகாமினியை ஆறுதல்படுத்தினர், அவர் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றார் என்றும், மற்ற அனைவரும் புத்த மார்க்கத்தை நம்பாதவர்கள் - மிருகங்கள்! புத்தர் எப்படிப்பட்ட அசுர துறவிகளைப் படைத்தார்! நீங்களே தேரர்கள் சொல்வதைக் கேளுங்கள்! அதற்கு அத்தியாயம் 25-104 - 112 ஐப் முழுமையைப் பார்க்கவும். உயர்ந்த மஞ்சக்தில் சாய்ந்து கொண்டு மன்னன் அதை ரசித்தான். தன்னுடைய புகழ்மிக்க வெற்றியைப் பற்றி எண்ணமிட்ட அவன் அது மகத்தானதாயினும் மனதுக்கு மகிழ்வளிக்கவில்லே என்பதைக் கண்டான். அதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அழிய நேரிட்டது என்பதை அவன் மறக்கவில்லே. பியாங்கு தீபத்திலுள்ள [Piyahgudipa, இன்றைய புங்குடுதீவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.] தேரர்கள் இவனுடைய மனதில் உள்ளதை அறிந்ததும் அரசனைத் தேற்றுவதற்கு எட்டு தேரர்களே அனுப்பிவைத்தினர். நள்ளிரவில் வந்து சேர்ந்த அவர்கள் அரண்மனை வாசலில் இறங்கினர். தாங்கள் வந்திருப்பதை அறிவித்துவிட்டு ஆகாய மார்க்கமாகவே அரண்மனை மேன்மாடத்தை அடைந்தனர். அரசன் அவர்களே வரவேற்று உபசரித்தான். ஆசனங்களில் அமரச் செய்து பலவித மரியாதைகளேச் செய்த பின்பு அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டான். பியாங்கு தீபத்திலுள்ள பிக்குகளால் தங்களுக்கு ஆறுதல் கூற அனுப்பப் பட்டோம் என்று அவர்கள் கூறினர். அதன் பேரில் அரசன் மீண்டும் சொன்னான்; எனக்கு எப்படி ஆறுதல் ஏற்பட முடியும்? வணக்கத்துக்கு உரியவர்களே ! என்னால் அல்லவோ லட்சக்கணக்கானவர்கள் மடியும்படி நேரிட்டது ' என்றான். இந்தச் செய்கையின் காரணமாக நீ சுவர்க்கத்துக்குப் போகும் பாதையில் எவ்விதத்தடையும் ஏற்படாது. ஒன்றரை மனிதர்கள் மட்டுமே உன்னால் இங்கு கொல்லப்பட்டார்கள். ஒருவர் மும்மணிகளேச் சரணடைந்து விட்டார். மற்றவர் பஞ்சசீலங்களை மேற்கொண்டு விட்டார். மற்றவர்கள் எல்லாம் நமது மார்க்கத்தை நம்பாதவர்கள். தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் - மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள். "ஆனால் நீயோ புத்தருடைய போதனைகளுக்குப் பலவிதத்திலும் பெருமை தேடப் போகிறவன். எனவே உன் மனதிலிருந்து கவலேயை அகற்று அரசனே !" என்று அவர்கள் ஆறுதல் கூறினர். இவ்வாறு அவர்களால் கூறப்பட்ட அரசன் ஆறுதலடைந்தான். அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுப் படுக்கையில் சாய்ந்த அவன் மீண்டும் எண்ணத்தில் மூழ்கினான். சுவாரஸ்யமாக, அந்த ஆறுதல் கூற வந்த துறவிகள் புங்குடுதீவில் இருந்து காற்றின் வழியாக பறந்து வந்தனர். மீண்டும் ஒரு பெரிய பொய்! யானை கந்துலா [elephant Kandula] மிகவும் வலிமையானது, ஆனால் நந்திமித்ரன் [Nandhimithra or Nandhimitta] அதைத் தனது கையால் அடக்கினார். யாராவது அதை நம்ப முடியுமா? மகாநாமா, எல்லா வாசகர்ககளும் அதை நம்புவார்கள் என்று எதிர்பார்க்கிறார். கலிங்க மன்னருடனான போரில் நடந்த கொலை மற்றும் ஊனமுற்றதற்கு பேரரசர் அசோகர் உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அசோகரின் மூலம் புத்த மதம் இலங்கைக்கு பரவியதாகவும் தேவநம்பிய தீசனின் உற்ற நண்பன் அசோகன் என்று பெருமைப்படும் இலங்கையின் துறவிகள் அசோகர் மன்னர் செய்ததற்கு நேர்மாறாக இங்கு செயல்படுகின்றனர். இருப்பினும், நன்றியுள்ள சிங்கள மக்கள் கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மன்னன் எல்லாளனை வணங்கினர். மேலும் இந்த குறிப்பிட்ட அத்தியாயங்களில், மரிசவட்டி விகாரையின் [அல்லது மாரிசவதி விகாரை / Maricavatti Vihara] கட்டுமானம் மற்றும் அதன் பதிட்டை விழா [அபிஷேக விழா], அதாவது பிரதிஷ்டை - விதிமுறைகளுக்குட்பட்ட சடங்குகளோடு நிலைபெறச் செய்தல் அல்லது கட்டுமானம் முடிந்தபின் இறுதியாக நடைபெறும் புனிதப்படுத்தும் திறப்பு விழா பற்றி உள்ளது. இந்த மரிசவட்டி விகாரை அனுராதபுரத்தில் உள்ள ஒரு பெரிய புத்த மடாலய வளாகமான மகா விகாரைக்குள் உள்ள ஒரு கட்டிடம். இதை இன்று மிருசவேட்டையா தூபி [Mirisavetiya Stupa] என்று நம்புகிறார்கள். இது துட்டகாமினி, தனது ஈட்டியை, நட்ட இடத்தில் கட்டப்பட்டதாகவும் அந்த ஈட்டியில் புத்தரின் நினைவுச்சின்னம் [தாது / Relics] இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த அத்தியாயத்தில் லோகப்பாசாதத்தின் கட்டுமானம் [construction of the Lohapasada] மற்றும் அதன் பிரதிஷ்டை உள்ளது. இது புத்த பிக்குகளுக்காக கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமான ஒன்பது மாடி துறவி இல்லமாகும். இதன் கூரை செம்பு அல்லது வெண்கல ஓடுகளால் மூடப்பட்டிருந்ததால் இது "செம்பு மாளிகை" என்று அழைக்கப்பட்டது (Lohapasada / லோகப்பாசாதம் என்றால் "செம்பு கூரை கொண்ட மாளிகை" என்று பொருள்). இந்தக் கட்டமைப்பு இறுதியில் தீயினால் அழிக்கப்பட்டு வரலாற்றில் பல முறை மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இன்று, அனுராதபுரத்தில் கல் தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த லோகப்பாசாதத்தின் கட்டுமானத்திற்கான வரைபடங்களைக் கொண்டு வர எட்டு தேரர்கள் வான உலகத்திற்குச் [தேவலகம் / celestial world] சென்றனர். தீபவம்சம், 19 - 5 முதல் 7 வரை, லோகப்பாசாதத்தின் அடிக்கல் விழாவிற்கு [foundation ceremony] துட்டகாமினி இந்தியாவிலிருந்து பதினான்கு தேரர்களை அழைத்தார் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்களைப் பற்றி மகாவம்சத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த பெரிய தூபியின் கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளை துட்டகாமினி செய்தார். ஆனால் தமிழர்களுக்கு எதிரான போரின் போது அவர்களை ஒடுக்கியதால், அவர்களுக்கு வரி விதிக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. Part: 89 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 There were thirty-two kings and Duttha Gamni defeated all. When Duttha Gamni was unhappy about the many killings that took place, the Buddhist monks comforted Duttha Gamni that he killed only one and a half person, all others, Damilas, are beasts. What kind of monster monks the Buddha created! See 25-104 - 112. Curiously, those comforting monks came through the air. Again, it is a lie to have the capability of the gravity defying aerial flight. The elephant Kandula is very strong, but Nandhimitta subdued it with his hand. Could anyone believe it? Mahanama expects readers to believe it. The emperor Asoka expressed genuine remorse for the killing and maiming that took place in the war with the Kalinga king. The monster monks of Lanka acted opposite of what the king Asoka did. However, the grateful Sinhalese folks venerated the king Elara well into the nineteenth century A.D. There is about the construction of the Maricavatti Vihara and its consecration. Then there is the construction and consecration of the Lohapasada. Eight Theras went to the celestial world to bring drawings for the construction of the Lohapasada. As per Dipavamsa, 19 - 5 to 7, Dutthagamani invited fourteen Theras from India for the foundation ceremony of the Lohapasada. There is no mention of them here. The preparation for the construction of the Great Thupa was made by Dutthagamani but he did not want to levy tax as he oppressed them during the war against the Damilas. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 90 தொடரும் / Will follow துளி/DROP: 1994 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 89 https://www.facebook.com/groups/978753388866632/posts/33284955734486312/?
  7. யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் மோ. சுமதி (பூமா) இன்று (14-01-2026) காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  8. Today
  9. கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01 கண்மணி, தனது இளமைப் பருவத்தில், தன்னம்பிக்கை, ஆர்வம் உள்ளவராகவும், சக மாணவர்களாலும் குடும்பத்தினராலும் போற்றப்பட்டவராகவும் இருந்தாள். அவள் கல்வி, திருமணம், குழந்தைகள் மற்றும் மனநிறைவு [Education, marriage, children, contentment.] கொண்ட வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டில் நகரும் ஒன்றென்று அன்று நம்பி வளர்ந்தவள். இந்த வரிசை பெண்களுக்கு வேறுபடுவதாக யாரும் அவளுக்குச் சொல்லவில்லை. கண்மணி புத்திசாலி மற்றும் திறமைகள் பல தன்னகத்தே கொண்ட பெண்ணாக, மென்மையான தன்னம்பிக்கையுடன் தனது படிப்பை முடித்து, ஆசிரியராக தொழில் வாய்ப்பும் பெற்றாள். ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக, ஒழுக்கத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து மாணவர்களுக்கு முழுமையாக பாடம் விளங்கும் வண்ணம் கற்பித்தாள். அப்பொழுதும் காதல் — அது புரிதலால் வளரும் ஒன்று என்று நினைத்தாள். திருமணம் — அது உடன்பாட்டின் பிணைப்பு என்று கருதினாள். அவள் அதில் மாற்றம் அடையவில்லை. அப்போது அவள் இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று அகவை கொண்ட அழகான பெண். அன்பு, புரிதல் மற்றும் நெருக்கமான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும், தன் மேல் காதல் கொண்ட, கண்ணீரையும் வெற்றிகளையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் கணவரை அல்லது காதலனைக் அவள் கனவு கண்டு, வாழ்க்கையை நேசித்தாள். காதலை — உடலோடு மட்டுமல்ல, மனதோடும், பகிர்வோடும், பரஸ்பர புரிதலோடும் நேசித்தாள். அவள் கனவு கண்டது ஒரு கணவனை அல்ல— ஒரு இணையான மனிதனை. அங்கே, அவள் கனவு கண்ட நெருக்கம் - கட்டாயமில்லாத தொடுதல், பயமில்லாத உடல், மறைப்பில்லாத மனம். அவளை “விவேகமான பெண்” என்று அனைவரும் புகழ்ந்தனர். “விவேகமான பெண்களுக்கு நல்ல வாழ்வு அமையும்” என்றார்கள். கண்மணி அந்த வாக்கியத்தை நம்பினாள். ஆனால் நடந்ததோ வேறு. அவளுக்குத் தெரியாது — சில திருமணங்கள் இணைவு அல்ல; உரிமை அறிவிப்பென்று. கண்மணியின் திருமணம் வேறு விதமாக அமைந்து விட்டது. இது அவள் தேர்ந்து எடுத்த காதல் திருமணம் அல்ல, பெற்றோர் ஒழுங்கு படுத்திய திருமணம், என்றாலும் ஒரு நம்பிக்கையுடன் தன் கழுத்தை நீட்டினாள். திருமணமும் அழகாகவே நடந்தது. சடங்குகள். புன்னகைகள். புகைப்படங்கள். என்றாலும் அவளது கணவரின் போக்கு முதல் இரவே வித்தியாசமாக இருந்தது. முதல் இரவில் அவள் எதிர்பார்த்தது மென்மை. அவளுக்காகக் காத்திருக்கும் கரம். ஆனால் வந்தது உரிமை உணர்வு. அவள் உடல் — ஒரு கடமை போல. அவள் தயக்கம் — ஒரு குற்றம் போல. அன்று, அவன் செயலும் மௌனமும் அவளுக்குப் புதிராக இருந்தாலும், “ஆண்கள் இப்படித்தான்” என்று சமூகம் அவளுக்குப் பதில் சொன்னதால், அவள் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. போகப் போக சரிவரும் என்ற நம்பிக்கையில் இருந்தாள். அவன் அணைப்பு— காதலின் வெளிப்பாடு அல்ல; உடல் மீது வைத்த அதிகாரத்தின் அறிவிப்பாக மாறியது. அவள் விருப்பம் கேட்கப்பட வில்லை. அவள் தயக்கம் மதிக்கப்படவில்லை. “மனைவி” என்ற சொல்லே அவளது சுய விருப்பத்தை அழித்து விட்டது. அந்த இரவுகளில் அவள் அழவில்லை. அழுகை கூட அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது. கல்யாணத்துக்கு முன் கண்மணிக்குத் தன்னைப் பற்றிய முதல் நினைவு, ஒரு பெண்ணாக அல்ல; ஒரு முழுமையான மனிதையாக இருந்தது. அப்பொழுது அவளது சிரிப்பில் அச்சமில்லை. அவளது உடலில் குற்றவுணர்ச்சி இல்லை. அவளது கனவுகள் “அனுமதி” கேட்காது. ஆனால் இன்று ... நாட்கள் பழக்கமாக மாறின. அவன் காலையில் போவான். இரவில் வருவான். விளக்கம் இல்லை. கண்மணி தன் ஆசைகளை மடக்கிக் கொண்டாள். கேள்விகளை ஒத்திவைத்தாள். ஏக்கங்களை அமைதியாக மாற்றினாள். அவள் உடல் விருப்பத்தின் இடமாக இல்லை; எதிர்பார்ப்பின் இடமாக ஆனது. ஒரு சிறிய குறிப்பேட்டில் அவள் எழுதினாள்: 'பயன்படாத ஆடைகள் போல என்னை மடக்கி வைத்தேன், எப்போதும் பூட்டிய அலமாரியில்.' அவள் இன்னும் நம்பினாள் — பொறுத்துக் கொள்வதே காதல் என்று. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் பி கு: உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் துளி/DROP: 1993 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33271271955854690/?
  10. எப்ப தொடக்கம் என்ற கேள்வி வருகின்றது? பதில்கள் ஆண்டு வாரியாக வரும் என எதிர்பார்க்கின்றேன்.
  11. ஒரு நாடு முன்னேற போக்குவரத்து சட்டங்களும் மிக மிக முக்கியமானது. போக்குவரத்து சட்டங்கள் மீறப்படும்போது லஞ்சம் வழங்கப்படுவதால் இத்தகைய விபத்துகள் நிகழ மேலும் வாய்ப்பளிக்கின்றது. மேலைத்தேய நாடுகளைப்போல் சட்டங்கள் பாகுபாடின்றி இறுக்கமானதாக இருக்க வேண்டும்.
  12. ஆதரவு வேறு. எதிர்பார்ப்பு வேறு. இலங்கை தமிழர்கள் ஆதரவு நிலையில் இருந்து விலகி எதிர்பார்ப்பு அரசியலில் இறங்கியுள்ளார்கள் என நான் நினைக்கின்றேன். புதிதாக வருபவர்கள் ஏதாவது நல்லது செய்ய மாட்டார்களா என்ற நப்பாசையில் அவர்கள் பேச்சை கேட்டு வாக்களிக்கின்றார்களே ஒழிய கட்சி ஆதரவு அல்லது தனிமனித ஆதரவு வாக்குகள் இன்றைய நிலையில் அங்கில்லை. இதற்கு நல்ல உதாரணமாக..... சுமந்திரன்,அங்கஜன்,டக்ளஸ் போன்றோர் இன்னும் பலரின் தோல்விகளை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். அதை விட இரா.சம்பந்தனின் மரண நிகழ்வு நிகழ்ச்சிகள் இன்னும் பல நிசர்சனங்களை சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லியுள்ளது. அதே போல் இனவாதத்துடன் இயங்கும் சிங்கள பேரினவாத குழுக்களுக்கு... சிங்கள அனுர திசநாயக்கவையும் தமிழர்கள் ஆதரிப்பது தமிழர்களிடம் இனவாதம் இல்லை என்பதை எடுத்து சொல்லட்டும். இப்படிக்கு... இடம் கண்ட இடத்தில் மடம் கட்டியவன்🤣
  13. எல்லா இஸ்லாமிய நாடுகளும் வாயில் கொழுக்கடையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் போல கம்மியா முன்னெடுக்க முட்டுக்கொடுக்க வருகிறோம் என்ற அளவில் சகா முஸ்லீம்கள் மேல் அக்கறை
  14. நான் வசிக்கும் ஊரில் போராடும் அமெரிக்க மக்களை சுட்டு கொல்கிறார்கள் எதோ ஈரானில் சுதந்திரம் இல்லை என்று பீற்றி கொள்கிறார்கள்
  15. கொழும்பு விமானநிலையதியிலேயே 10-15 விமானம்தான் வந்து இறங்கும்போது ...... எங்கே என்ன வந்து இறங்கும் என்று எதிர்பார்த்து கட்டினார்கள்? இந்த காசுக்கு நீர்கொழும்பை கூட்டி கழுவி துப்பரவாக வைத்திருந்தாலே வரும் உல்லாச பிராயாணிகளுக்கு அருவெறுப்பு இல்லாமல் இருக்கும்
  16. இரண்டு கிலோ தங்கத்தை ஊழியர் திருடுமபடியாக கடையை வைத்திருப்பது என்பது இன்னும் திருட்டுக்கே வழி வகுக்கும்.
  17. இனியென்ன புத்தபிக்கு பயங்கரவாதிகள் இவர்கள் விடுதலை வேண்டி அஜாரகங்கள் உட்பட வீதி மறியல் செய்து போராட்டங்கள் செய்வார்கள். அரபு நாடுகளைப்போல் ஸ்ரீலங்காவும் இன/மதவாத தீவிர அரசியல் கொண்ட நாடு.
  18. இஸ்லாமிய ஆட்சிகளை எதிர்ப்பவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கும் இஸ்லாமிய கொள்கைகளை கையில் எடுப்பதுதான் கொஞ்சம் அல்ல பெரிய நெருடலாக இருக்கின்றது. நேரடியாக கண்காணும் நிகழ்வுகளின் அனுபவங்கள்.
  19. இந்த திரியை ஆரம்பத்தில் மேலோட்டமாக வாசித்து இருந்தேன். தேர் சில்லு உருள ஆரம்பித்து விட்டது. சிறிய அளவு என்றாலும் முடிந்த அளவு என்னுடைய பங்களிப்பும் இருக்கும். (உங்களை போலவே வேறு இரண்டு திட்டங்களில் இணைந்துள்ளேன்) **பனர், இலச்சினை இவற்றில் யாழ்க்களத்தின் சின்னம் கூட சிறப்பாக இருக்கும். அனைவருக்கும் பாராட்டுக்கள். ❤️🙏
  20. கொட்டகலையில் ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் 14 Jan, 2026 | 02:33 PM டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (13) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகில் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலையில் உள்ள லோகில் தோட்ட நுழைவாயிலுக்கு அருகில் குறித்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக தங்கள் தோட்ட வீடுகளில் 46 வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை உடனடி நிவாரணத்திற்காக அரசாங்கம் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ.25,000 தோட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு மாத்திரம் இன்னும் ஒரு சிலருக்கு இன்றுவரை கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்தால் வழங்கும் உதவித்தொகை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அது கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தனர். உடனடியாக போராட்டத்தின் மையப்பகுதிக்கு விஜயம் செய்த கொட்டகலை பிரதேச சபை (SP) உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனையும் நுவரெலியா பிரதேச செயலாளரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு டெவோன் நீர்வீழ்ச்சியில் பாயும் நீர் டெவோன் கால்வாய் பகுதிகளில் நிரம்பி வழிந்ததால், லோகில் தோட்டத்தில் உள்ள 46 வீடுகள் தரையில் இருந்து 8-9 அடி உயரத்தில் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இவர் அனைவருக்கும் மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை மறுவாழ்வு செய்வதற்கும் அரசாங்கம் வழங்கும் பணம் உரிய கிடைக்க வேண்டும். இவர்களின் சிலருக்கு மாத்திரம் குறித்த பயணம் கிடைத்துள்ளன. ஏனையவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உள்ளனர். இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு தொடர்ந்து பதில் அளித்த அரசாங்க அதிபர் பிரதேச கிராம உத்தியோகத்தர் மூலம் கிடைக்கும் பரிந்துரையின் பேரில் பணம் தற்போது வழங்கி வருவதாகவும் வரும் நாட்களில் பணம் தவணை முறையில் செலுத்தப்படுவதால், பணம் இது கிடைக்காதவர்களுக்கு எதிர் வரும் நாட்களில் உடனடியாக அது வழங்கப்படும் என்றும் மாவட்ட செயலாளர் கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். https://www.virakesari.lk/article/236014
  21. அண்ணை, என்னுடைய மனத்திருப்திக்கும் நான் போய் பார்க்கவேண்டும், முகந்தெரியாத உறவுகள் நம்பிக்கையில் தரும் நன்கொடை சரியானவர்களின் கைகளில் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் விரும்புகிறேன்.
  22. நன்றி, நீங்கள் சென்று மினெக்கெட வேண்டாம். மிக இறுக்கமான உங்கள் பரிவர்த்தனை முறையே நம்பிக்ககைக்குரியதும் போதுமானதும். நமது உடனடி வட்டத்துக்கு அப்பால் சென்று நிதி கோர -யாழில் படங்கள் கொஞ்சமேனும் போட்டால் -அந்த சுட்டியை பகிர்வது நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என நினைக்கிறேன். எல்லாம் நல்லபடி நடந்தால் முகப்பில் கூட இடம் தரலாம் என நிர்வாகம் சொல்லியுள்ளனர்.
  23. இந்தியாவின் புத்த கயாவிற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்! 14 Jan, 2026 | 03:26 PM நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடமான இந்தியாவின் புத்த கயாவிற்கு விஜயம் செய்து, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபோதி மகா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த விஜயத்தின் போது, புத்த கயா விகாரையின் செயலாளர் கலாநிதி மகாஸ்வேதா மகாரதி மற்றும் அதன் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த புத்த ரத்ன தேரர், தம்மிஸ்ஸர தேரர், கௌடின்ய தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, 1891 ஆம் ஆண்டு அநகாரிக தர்மபாலவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மகாபோதி சங்கத்திற்கும் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார். அங்கு புத்த கயா மத்திய நிலையத்தின் வணக்கத்திற்குரிய கடகந்துரே ஜினானந்த தேரர், முல்தெனியவல சுசீல தேரர், ஞானரத்ன தேரர் மற்றும் வாகீச தேரர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார். இந்த ஆன்மீகச் சுற்றுப்பயணத்தில் நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236010
  24. அண்ணை, 1) படங்கள் கிடைத்து வட்சப் குழுவில் பகிர்ந்து விட்டேன். 2) விபரங்களை கேட்டுப் பெறுவேன். 3) படம், காணொளி எடுத்து போடச் சொல்லி உள்ளேன். 4) இதற்கு முடிந்தால் நானே சென்று எடுப்பேன் 5) பற்றுச்சீட்டுகள் பெற்றுத்தர சொல்லி உள்ளேன். (கடைகளில் பெறும் பொருட்களுக்கு சீமந்து, மணல், கல்லு போன்றவற்றிற்கு பெறலாம். பெக்கோ மூலம் குழி தோண்டுபவர் கையால் எழுதிய துண்டு தான் தருவார். தொழிலாளர் சம்பளமும் அவ்வாறு தான் தருவார்கள்.) அரச தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்ய பணம் கேட்கிறார்கள், பிரதேச செயலரிடம் இலவசமாக செய்துதர கோரியுள்ளேன். மலசலக்குழிகள் வெட்டி கட்டுவதற்கான பிரதேச சபை அனுமதியையும் அவர்களே பெற்றுத்தர வேண்டும்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.