stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை
ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை Mar 26, 2026 - 09:03 PM 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு இணங்க, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை செய்யும் புதிய தகுதிக் கொள்கையை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இப்புதிய கொள்கையின்படி, எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவுகளில் பங்கேற்கும் தகுதியானது, உயிரியல் ரீதியான பெண்கள் (Biological females) என்ற அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப்படும். இதனை உறுதிப்படுத்த, ஆண் உயிரியல் பாலினத்தைக் கண்டறியும் மரபணுச் சோதனை போன்ற வைத்திய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். திருநங்கை தடகள வீரர்களின் பங்கேற்பு குறித்து இதற்கு முன்னர் உலகளாவிய தரம் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அணுகுமுறையில் இது ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் தற்போதைய நிறைவேற்று வழிகாட்டல்களுடன் தொடர்புடைய இக்கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், சர்வதேச அளவிலான மகளிர் போட்டிகளுக்கு ஒரு நிலையான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க சர்வதேச ஒலிம்பிக் குழு இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmn7msp3k0003356p6z0q1gyl
-
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு Mar 26, 2026 - 07:51 PM பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) ரத்து செய்துள்ளது. அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn7k8hgf0000356p9amhajf6
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது பெண் : இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது ஆண் : இது ஒரு தொடர்கதை பெண் : தினம் தினம் வளர்பிறை ஆண் : நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே பெண் : வானம் காற்று பூமி இவை சாட்சியானதே ஆண் : நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் பெண் : நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் ஆண் : நான் இனி நீ… பெண் : நீ இனி நான் ஆண் : வாழ்வோம் வா கண்ணே ஆண் : கீதை போலக் காதல் மிகப் புனிதமானது பெண் : கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் ஆண் : வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும் பெண் : ஏன் மயக்கம் ஆண் : ஏன் தயக்கம் பெண் : கண்ணா வா இங்கே......! ..... நிலவு தூங்கும் நேரம் ......!
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!
'பின்வாங்க வழியே இருக்காது' - இரானுக்கு டிரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை என்ன? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் அமெரிக்கா இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் மறுபுறம், இரான் அமெரிக்காவின் அமைதி திட்ட முன்மொழிவை நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 'இரான் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும், இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும், பின்வாங்குவதற்கு வழியே இருக்காது' என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மறுபுறம், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி டிரம்ப் கூறியது என்ன? 'மிகவும் தாமதமாகிவிடுவதற்கு முன்பே இதை விரைவாகவும் தீவிரமாகவும் அணுகுங்கள்' என்று பேச்சுவார்த்தைகள் குறித்து இரானியத் தலைவர்களுக்கு டிரம்ப் எச்சரித்துள்ளார். ஒரு சமூக ஊடகப் பதிவில், டிரம்ப் இரானின் பேச்சுவார்த்தையாளர்களை 'மிகவும் விசித்திரமானவர்கள்' என்று விவரித்துள்ளார். அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காக அமெரிக்காவிடம் 'கெஞ்சுகிறார்கள்' என்று அவர் கூறுகிறார், மேலும் இரானின் ராணுவம் 'நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது' என்றும் 'மீண்டு வருவதற்கு பூஜ்ய வாய்ப்புகளே உள்ளன' என்றும் அவர் கூறுகிறார். "இருந்தபோதிலும், அவர்கள் எங்கள் 'முன்மொழிவை பரிசீலிக்க மட்டுமே செய்கிறோம்' என பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்கள். அது தவறு" என்று அவர் ட்ரூத் சோஷியலில் தெரிவித்துள்ளார். "இரான் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும், இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும், பின்வாங்குவதற்கு வழியே இருக்காது, அது நன்றாகவும் இருக்காது" என்று டிரம்ப் கூறுகிறார். புதன்கிழமை (மார்ச் 25) அன்று, இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "இரானிற்கு தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை" என்றார். "செய்திகள் நட்பு நாடுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த தகவல் பரிமாற்றங்கள் உரையாடலோ அல்லது பேச்சுவார்த்தையோ இல்லை'' என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Tasnim படக்குறிப்பு,இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி இரானின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல் இதற்கிடையே இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "ஹோர்மூஸ் நீரிணையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் நீரிணையைத் தடுத்தது போன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு டங்சிரி நேரடியாகப் பொறுப்பானவர்" என்றும், "டங்சிரி, குண்டு வீசி கொல்லப்பட்டார்" என்றும் தெரிவித்தார். மேலும், இரானின் பல மூத்த கடற்படைத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறினார். இரான் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அலிரேசா டங்சிரி 2018- ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் 2010 முதல் ஐஆர்ஜிசி கடற்படையின் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். அவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு எக்ஸ் தள கணக்கு இந்த ஆண்டு மார்ச் 10 முதல் செயல்பாட்டில் உள்ளது, அதில் உள்ள பதிவுகளை இரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டி வருகின்றன. அந்தப் பதிவுகளில், அவர் ஹோர்மூஸ் நீரிணை பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளார். "இரானுக்கு எதிராக போர் புரியும் நாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலுக்கும் இதைக் கடந்து செல்ல உரிமை இல்லை" என்று அந்த எக்ஸ் தள கணக்கின் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டங்சிரி, வெளிப்படையாகப் பேசக்கூடிய ஓர் இரானிய தளபதி ஆவார். கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில், இரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால் ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0kr55n86n1o
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ருசிப்பது ........ கமல் & ஜெயசுதா .........! 😍
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
மேற்கு ஆசியாவுக்கு மேலும் 2,000 வீரர்கள் அனுப்பும் அமெரிக்கா வாஷிங்டன்: மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரிட்டு வருகின்றன. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்கா தனது கடற்படையை வளைகுடா நோக்கி அனுப்பியுள்ளது. இதில் சுமார் 4,500 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் ஈரானுடன் புதிய ராஜதந்திர முயற்சியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிசீலித்து வரும் நிலையில், அவருக்குக் கூடுதல் ராணுவ வாய்ப்புகளை வழங்கும் விதமாக, அமெரிக்க ராணுவத்தின் 82-வது விமானப் படையை சேர்ந்த சுமார் 2,000 வீரர்களை மேற்கு ஆசியா செல்லுமாறு பென்டகன் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 18 மணி நேரத்துக்குள் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்லக்கூடிய திறன் கொண்ட, சுமார் 3,000 வீரர்களை கொண்ட ஒரு படைப்பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆவர். https://www.hindutamil.in/news/world/us-to-send-2000-more-troops-to-west-asia
-
‘கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும்’ - லாரி ஃபிங்க் எச்சரிக்கை
‘கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும்’ - லாரி ஃபிங்க் எச்சரிக்கை புதுடெல்லி: சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 150 டாலரை தொடுமானால் அது உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிளாக்ராக் தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 110 டாலரை தாண்டியபோது, உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே வர்த்தகதினத்தில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் ஏப்ரல் மாதம் வரை நீடித்தால், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலரைத் தாண்டும் என்று 'கெப்ளர்' ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிலையில், பிளாக்ராக் முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிலாரி ஃபிங்க் கூறியுள்ளதாவது: ஈரான் விவகாரத்தில் அச்சுறுத்தல் நீடித்து, எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தால் அது உலகப் பொருளாதாரத்தில் ஆழமான மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இது ஒரு கடுமையான பொருளாதாரப் பின்னடைவுக்கு வழிவகுக்கும். உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக எரிசக்தி திகழ்கிறது. போக்குவரத்து, தொழிற்சாலை உற்பத்தி மட்டுமின்றி உணவுப் பொருட்களின் விலையையும் கச்சா எண்ணெய் விலையே மறைமுகமாகத் தீர்மானிக்கிறது. எண்ணெய் விலை 150 டாலரை எட்டும்போது, அது ஒரு மிதமான மாற்றமாக இருக்காது; மாறாக அது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியாக அமையும். பணவீக்க பாதிப்பு எண்ணெய் விலை உயர்வால் எரிபொருட்கள் விலை உடனடியாக அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக: * போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகளின் விலை உயரும். * வாடகைக் கார் கட்டணங்கள் மற்றும் டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்கும். * சில பகுதிகளில் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயமும் உள்ளது. இந்தியா போன்ற கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, இது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மீதான ‘கூடுதல் வரி' சுமையாக மாறும். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். வட்டி குறைய வாய்ப்பில்லை பணவீக்கம் உயரும்போது ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்களைக் குறைக்க முடியாது. * வட்டி விகிதக் குறைப்பு தள்ளிப்போகும். * கடன் வாங்குவது செலவுமிக்கதாக மாறும். * வீட்டுக் கடன் மற்றும் இதர கடன் தவணைகள் உச்சத்தில் நீடிக்கும். இதனால் மக்கள் செலவு செய்வதைக் குறைப்பார்கள். இதனால் நிறுவனங்களின் முதலீடுகளும் முடங்கி வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் சுணக்கமடையும். உலகளாவிய வளர்ச்சி பாதிப்பு * வரலாற்று ரீதியாக, கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டபோதெல் லாம் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பேரல் விலை 150 டாலர் என்ற நிலையில் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளைக் குறைக்கும் அல்லது கட்டணத்தை உயர்த்தும். * எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களுக்கான தேவை குறையும். * சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் லாப வரம்பு சரியும். இவ்வாறு தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும்
-
570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்
ஒப்பந்தம் போடப்பட்டு பிடிபணம் எல்லாம் பிடித்தே வேலை நடக்கும் அண்ணா, ஆனால் ஒப்பந்தகாறரே பினாமி/வேண்டப்பட்டவர் என்றால் எதையும் அமுல்படுத்தமாட்டார்கள் தானே?! வீதிக்கு என பறிக்கும் கற்கள், தார், எத்தனை தடவை றோலர் அடிக்கவேணும் என்பதெல்லாம் தெளிவாக ஒப்பந்தத்தில் இருக்கும். நடைமுறைப்படுத்தினால் லாபம் குறையுமே!
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்உங்களைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அண்ணா.
-
இலவச முதியோர் இல்லம்
எம் நாட்டு முதியவர்களுக்கு அருமையான சேவை ........... பாராட்டுகள் ..........! 🙏 இணைப்புக்கு நன்றி வசீ ........!
-
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் - போட்டோ 51 - DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பை படம் பிடித்தவர்!
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51 லோகமாதேவி மார்ச் 22, 2026 No Comments ரோஸலிண்ட் தனது ஸ்கர்ட் ஜிப்பை இன்றும் முழுமையாக போட முடியாததை ஆச்சரியத்துடன் பார்த்தாள். போன மாதம் அமெரிக்கா புறப்படுகையிலும் அப்படியேதான் இருந்தது. வயிறு கொஞ்சம் பெருத்திருக்கிறதோ என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. அமெரிக்காவில் இருந்த 3 வாரங்களுமே அடிவயிற்றில் அவ்வப்போது வலியும் இருந்தது. ஆனால் அங்கே சிறப்பு அழைப்பாளராகப் பல பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வலியைப் பொருட்படுத்தக் கூட அவளுக்கு நேரமில்லை. 1956-ம் ஆண்டின் கோடைக்காலம் தொடங்கியபோது அமெரிக்கா சென்ற ரோஸலிண்ட், கோடை முடியப் போகும் போது தான் லண்டனுக்கு திரும்பி இருந்தாள். ரோஸலிண்ட் TMV என்னும் புகையிலை மொசைக் நோயை உருவாக்கும் வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வின் உச்சகட்டத்தில் இருந்தார். அதன்பொருட்டு தான் அவர் அமெரிக்காவுக்கும் அழைக்கப்பட்டிருந்தார். ரோஸலிண்ட் பணியாற்றிய லண்டன் பல்கலைக்கழக ஆய்வு நிறுவனத்தில் அவரது ஆய்வு ஏறக்குறைய இறுதியை எட்டி இருந்தது. அப்போதுதான் உயிரியல் ஆய்வில் மிக முக்கியமானதான DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பைக் கண்டறிந்திருந்த ரோஸலிண்ட் அடுத்து TMV வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது TMV கண்டுபிடிக்கப்பட்டு அது RNA மற்றும் புரதங்களால் ஆனது என்று மட்டும் அறியப்பட்டிருந்தது. ரோஸலிண்ட் புரதமும் RNA-வும் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று, தான் நிபுணத்துவம் கொண்டிருந்த X-ray Crystallography மூலம் கண்டறிந்து துல்லியமாக அதன் வடிவமைப்பைக் காட்டும் சில படங்களையும் எடுத்திருந்தார். TMV-யின் நடுவில் இருந்த RNA உள்ளீடற்ற ஒரு குழாய் என்றும், அதைச் சுற்றிலும் தனித்தனியே புரதங்கள் ஒரு உறை போலச் சூழ்ந்திருக்கின்றன என்பதையும், அனைத்து TMV வைரஸ்களும் ஒரே அளவில் இருந்ததையும் ரோஸலிண்ட் கண்டறிந்தார். அப்போதுதான் உருவாகியிருந்த Structural Virology துறையின் மிக அடிப்படையான பல உண்மைகளை வெளிப்படுத்தும் கண்டுபிடிப்பாக ரோஸலிண்டின் அந்தத் துல்லியமான தெளிவான புகையிலை வைரஸின் வடிவமைப்பு இருந்தது. அதைக் கொண்டே பிற வைரஸ்களின் வடிவமைப்பையும் மற்ற விஞ்ஞானிகள் அறிய முயன்றார்கள். இந்தக் கண்டுபிடிப்பின் பொருட்டு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்ட ரோஸலிண்ட் உலகளவில் இந்தத் துறையின் முன்னணி விஞ்ஞானியாகப் போற்றப்பட்டார். அமெரிக்காவில் ஆய்வகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் தொடர் உரையாற்றிய ரோஸலிண்டின் எக்ஸ்-ரே கிரிஸ்டலோகிராபி படங்களின் துல்லியத்தைப் பார்த்துப் பிற அமெரிக்க விஞ்ஞானிகள் வாயடைத்துப் போனார்கள். ரோஸலிண்டிற்கு அது ஒரு சுற்றுப்பயணம் மட்டுமல்ல, அந்த பயணத்தின் மூலம் உலகளாவிய ஒரு வைரஸ் வலைத்தொடர்பை விஞ்ஞானிகளிடையே அவர் உருவாக்க நினைத்திருந்தார். அமெரிக்காவின் முக்கிய விஞ்ஞானிகளான ரோம்லே வில்லியம்ஸ் மற்றும் பேரி கமோனர் ஆகியோருடன் நல்ல தொழில்ரீதியான தொடர்பை உருவாக்கிய பின்னரே ரோஸலிண்ட் லண்டன் திரும்பினார். இந்த வயிற்று வலி அவரைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்ற விடாமல் செய்தது. ஆய்வகத்திலும் சில தோழர்கள் “அமெரிக்கா போய் குண்டாயிட்டியே இத்தனை சீக்கிரமா” என கிண்டல் பண்ணக்கூட தொடங்கிவிட்டார்கள். அடிவயிற்றின் அந்த வலி ரோஸலிண்டை அவள் ஆய்விலிருந்து தொடர்ந்து தொல்லை செய்தது. என்னவானாலும் இன்று மாலை தன் சிநேகிதியும் மருத்துவருமான மேர் (Mair Livingstone) என்கிற மேரியைப் பார்க்க முடிவு செய்தாள் ரோஸலிண்ட். டாக்டர் மேரியின் அறையில் விஷயத்தைச் சொன்ன ரோஸலிண்டைக் கிண்டலாகப் மேலும் கீழுமாகப் பார்த்த மேரி, “என்ன இது வயிறு மேடிட்டு இருக்கிறது? கர்ப்பமாக இருக்கிறாய் போலிருக்கிறதே?” என்றார். ரோஸலிண்ட் புன்னகைத்தபடியே, “கர்ப்பமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இல்லை, நீ என்னவென்று சரியாகப் பார்” என்றார். திரைக்குப் பின்னே ரோஸலிண்டை அழைத்துச்சென்று சோதித்த மேரியின் முகம் இறுகிக் கருத்துப்போனது. ரோஸலிண்டின் இரு சினைப்பைகளிலும் புற்றுநோய் உண்டாகி முற்றிப் பிற பாகங்களுக்கும் பரவி இருந்தது. ரோஸலிண்ட் அந்தச் செய்தியைத் திடமாகக் கேட்டுக்கொண்டார். ரோஸலிண்ட் டி.என்.ஏ-வின் கட்டமைப்பைக் கண்டறிய ஆயிரக்கணக்கான மணி நேரம் எக்ஸ்-ரே கதிர்வீச்சுகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அவ்வளவாக இல்லாத காலத்தில் மிக அதிகமாகப் பணியாற்றினார். நீண்ட கால கதிர்வீச்சு பாதிப்பு அவருக்கு புற்றுநோயை உருவாக்கி இருக்கலாம் என்றும், அவரது குடும்பத்தில் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், பரம்பரையாகத் தொடரும் மரபணு மாற்றங்களாலும் புற்று நோய் உருவாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது. நோய் கண்டறியப்பட்டது செப்டம்பர் 1956-ல். அதன் பிறகான 18 மாதங்களுமே ரோஸலிண்டின் வாழ்க்கையில் பெரும் போராட்டக் காலமாகவே இருந்தது. அந்த மாதமே ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து சினைப்பைகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்ததுமே லண்டனில் இருந்த ஆய்வகத்துக்குச் சென்று தனது ஆய்வைத் தொடர்ந்தார் ரோஸலிண்ட். பின்னர் மீண்டும் பல சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகளும் அப்போதுதான் அறிமுகமாகி இருந்த சோதனை கீமோ தெரப்பிகளும் கதிர்வீச்சு சிகிச்சைகளும் அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டன. என்ன உடல்நிலையாக இருந்தாலும் ஆய்வகத்துக்குச் சென்று கொண்டே இருந்தார் ரோஸலிண்ட். ஒரு சில சமயங்களில் நண்பர்கள் அவரை தூக்கிக்கொண்டு போய்க்கூட ஆய்வகத்தில் சேர்த்தார்கள். அரிதாக நடமாட முடியாமல் போகும்போது மட்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் நேரம் செலவழித்தார். அப்போதும் அவரைச் சுற்றிலும் ஆய்வுக் குறிப்புகளும் வைரஸின் புகைப்படங்களுமே இருந்தன. 1957-ம் ஆண்டு ரோஸலிண்ட் உடல்நிலை மிக மோசமானது. ஆனால் அந்த ஆண்டுதான் அவர் மிக முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அமெரிக்காவிலிருந்து அப்போது நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த தனது லண்டன் ஆய்வகத்திற்கு 10,000 டாலர் நிதித்தொகையும் வாங்கியிருந்தார். ரோஸலிண்டுடன் ஆரோன் க்ளக் ( Aaron Klug) மற்றும் ஜான் ஃபின்ச் (John Finch) ஆகியோரும் வைரஸ் வடிவமைப்பு ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். புகையிலை வைரஸுடன், போலியோ வைரஸ் ஆய்வையும் கையிலெடுத்துக்கொண்ட ரோஸலிண்ட், 1958-ல் ஐரோப்பாவில் Brussels-ல் நிகழவிருந்த உலகளாவிய அறிவியல் கண்காட்சியில் புகையிலை வைரஸின் ஐந்து அடி உயர மாதிரி உருவத்தை உருவாக்கி, பொதுமக்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி என்று மட்டும் அறிவியலாளர்களால் சொல்லப்பட்ட வைரஸின் அழகிய வடிவமைப்பைக் காட்ட மிகவும் முயன்று கொண்டிருந்தார். ஆனால் 1958-ல் ஆரம்பத்தில் அவரது நோய் மிகத் தீவிரமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஸலிண்ட் படுக்கையில் இருந்தபடியே ஆய்வுக்கான நிதி விண்ணப்பங்களையும் ஆய்வறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தார். அத்தனை தீவிரமான ஈடுபாட்டுடன் பணியாற்றிய ரோஸலிண்டின் அறிவியல் சாதனைகள்தான் வரலாற்றில் வடிகட்டப்பட்டன. 1920 ஜூலை 25 அன்று லண்டன் நாட்டிங் ஹில் பகுதியில் , அரசியல் பலமும் செல்வச் செழிப்பும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார் ரோஸலிண்ட். தந்தை எல்லிஸ் (Ellis Franklin) ஒரு வங்கியில் பங்குதாரராகவும், ஆண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். மக்களுக்குச் சேவை செய்வதைத் தன் முதல் கடமையாகக் கொண்டவர் எல்லிஸ். ரோஸலிண்டின் அம்மா மூரியலும் (Muriel Waley) மிகச் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரும் சேவை மனப்பான்மை மிகுந்தவர். அவர்களது வீட்டில் போர் அகதிகளான இரண்டு யூதச்சிறுமிகள் ரோஸலிண்டுடனேயே வளர்ந்தார்கள் மிகச் சிறிய குழந்தையாக இருக்கும் போதே ரோஸலிண்டடின் சிந்தனைத் திறன் மிக அதிகமாக இருப்பதை குடும்பத்தினர் கவனித்தார்கள். பொம்மைகளை வைத்து விளையாடுவது, கதைகள் கேட்பது ஆகியவற்றில் ரோஸலிண்ட் எந்த ஆர்வமும் காட்டவில்லை. புதிர்களை விடுவிப்பது மிகச் சிக்கலான கணித சூத்திரங்களை பல வடிவங்களில் எழுதி விடையைக் கொண்டுவருவது போன்றவற்றில்தான் ரோஸலிண்ட் ஆழ்ந்திருந்தாள். மேலும் கடவுள், மதம் ஆகிவற்றில் நம்பிக்கையற்றவராக இருந்தார். அவரது தாய் He என்று கடவுளைக் குறிப்பிடுகையில் எல்லாம் ’’..ஏன் she இல்லையா கடவுள்? எப்படி He என்று முடிவுக்கு வந்தாய்?…’’ என்று கேட்பாள். ரோஸலிண்டிற்கு 6 வயதாக இருக்கையில் அவரது அத்தை, “உனக்கு பொம்மைகள் வேண்டாம், கதைகளும் வேண்டாம், பிறகு என்னதான் வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்குத் தேவை உண்மைகள்”(i need facts) என்றாள். அவர் தனது கணவரிடம் ரோஸலிண்டை ’alarmingly clever’ என்று ஒரு முறை குறிப்பிட்டார். தன்னை யாரும் ரோஸி என அழைப்பதை அனுமதிக்காமல், ரோஸலிண்ட் என்றே முழுமையாக தான் அழைக்கப்படவேண்டும் என்று கண்டிப்பாக கூறுவாள். நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட மரச்சாமான்கள் செய்யும் தச்சுவேலை, தையல்கலை மற்றும் கயிற்றில் மிகச் சிக்கலான முடிச்சுகள் போட்டு அவிழ்ப்பது ஆகிய கைவேலைகளையே மிகவும் விரும்பிச் செய்தாள் ரோஸலிண்ட். அவரது பள்ளிக்காலம் லண்டனின் St Paul’s Girls பள்ளியில் கழிந்தது. அங்கு மட்டும்தான் அக்காலத்தில் அறிவியலும் கணிதமும் ஆண்களின் பள்ளிக்கு இணையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன. வேதியியல், இயற்பியல் மற்றும் லத்தீன மொழிப்பாடங்களில் யாரும் அருகே கூட வர முடியாத முன்னிலையில் இருந்த, 6 டிஸ்டிங்ஷன்களுடன் பள்ளிப்படிப்பை முடித்த ரோஸலிண்ட் தனது 15 வயதில் தான் ஒரு விஞ்ஞானி ஆகப்போவதாக முடிவெடுத்தாள் .ஃபிராங்க்ளின் குடும்பத்தினர் எல்லா விடுமுறைக்காலங்களிலும் ஆல்ப்ஸ் மற்றும் நார்வீஜிய மலைகளில் மலையேறுதலில் ஈடுபட்டார்கள். மலையேற்றத்தை மிகவும் விரும்பினார் ரோஸலிண்ட். 1938-ல் ரோஸலிண்ட் கேம்பிரிட்ஜின் நியூஹாம் கல்லூரியில் முழு நிதி உதவியுடன் சிறப்புப் பாடமாக வேதியியலைக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் சமயம் அது. அங்கிருந்து ரோஸலிண்ட் வீட்டிற்கு எழுதிய கடிதங்களில் தான் கேஸ் மாஸ்க் (Gas mask) அணிந்துகொண்டு வகுப்புகளுக்குச் செல்வதைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அவரது ஆசிரியர்கள் அவளின் அதீத புத்திசாலித்தனத்தையும், கற்பித்தலில் சிறு தவறு இருந்தால் கூட அதைக் கண்டுபிடித்து வாதிட்டுச் சரி செய்பவள் என்பதையும் நினைவு கூர்கின்றனர். 1941-ல் மிகச்சிறப்பாக ரோஸலிண்ட் பட்டப்படிப்பை முடித்தார். ஆனாலும் கேம்பிரிட்ஜ் 1948 வரை பெண்களுக்குப் பட்டம் அளிப்பதில்லை என்னும் விதியில் இயங்கிக்கொண்டிருந்ததால் ரோஸலிண்ட் பட்டம் வாங்கவில்லை. . ஆண்களுக்கு ஒரு மாபெரும் விழாவில் சான்றிதழ் அளித்த பல்கலைக்கழகம் அதே வகுப்பில் அமர்ந்து அதே காலத்தை படிப்பில் கழித்து ஆண்கள் எழுதிய அதே தேர்வை எழுதிய பெண்களுக்கு ஒரு காகிதத்தில் ’இவர்கள் இந்தப்படிப்பை முடித்தார்கள்’ என்று எழுதி முத்திரை வைத்து வீட்டுக்கு தபாலில் அனுப்புவார்கள். பட்டம் பெற்ற சான்றிதழ் இல்லாமலேயே அதே கேம்பிரிட்ஜில் ரோஸலிண்ட் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார். நிலக்கரி மற்றும் கார்பனின் நுண் வடிவமைப்பில் முனைவர் பட்ட ஆய்வை 1945-ல் முடித்தார். அவரது ஆய்வு முடிவுகள் போர்ச் சூழலில் gas mask உருவாக்குவதில் பெரும் பங்களிப்பாற்றின. முனைவர் என்னும் தகுதியுடன் ரோஸலிண்ட் 1947-ல் போர் ஓய்ந்த பின்னர் பாரிஸின் புகழ்பெற்ற “Labo” ஆய்வகத்தில் கிரிஸ்டலோகிராபியில் நிபுணரான ழாக் மெரிங்கிடம் (Jacques Mering) பணியாற்றினார். ழாக் மெரிங் ரோசலிண்டுக்கு X ray crystallography-ல் பயிற்சியளித்து பின்னாட்களில் அவர் DNA-வையும் வைரஸ்களையும் ‘பார்க்க’ உதவினார். ரோஸலிண்டுக்கு பாரிஸ் நாட்கள் பிடித்தமானவையாக இருந்தன. அந்த ஆய்வகத்தில் ஆண் பெண் வேறுபாடு இல்லாத சமத்துவம் நிலவியது. நீண்ட மதிய உணவு இடைவேளை, அவ்வப்போது நிகழ்ந்த மிக அறிவார்ந்த உரையாடல்கள் மற்றும் பிரெஞ்சு கலாச்சாரம் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வெகு சீக்கிரமே சரளமாகப் பிரெஞ்சு பேசக் கற்றுக்கொண்ட ரோஸலிண்ட், கூடவே சமையற்கலையிலும் நிபுணரானார். உணவுச் சுவையாளர் என்றே அறியப்படும் அளவுக்குப் பல்வேறு உணவுகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தாவரவியலிலும் ஆர்வம் கொண்டிருந்த ரோஸலிண்ட் தாவரங்களின் வடிவங்களை ஆர்வமுடன் கவனித்து பல விதமான தாவரங்களையும் அவரது பயணங்களில் சேகரித்தார். புகைப்படக்கலையிலும் சங்கீதத்திலும் அவர் மிகுந்த ஆர்வமும் நிபுணத்துவமும் கொண்டிருந்தார். பாரிஸில் இருந்த ஆய்வகத்தை அவர் தனது சொந்த வீடாகவே கருதினார். மெரிங்கை ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல், தனது மிக நெருங்கிய நண்பராகவும் கருதினார். அவர் மீது ரோஸலிண்டிற்கு வழிகாட்டி எனும் அபிமானத்தைக் காட்டிலும் கூடுதல் அன்பு இருந்தது. எனினும் அவரிடம் அவர் அதை வெளிக்காட்டவே இல்லை. பாரீஸிலிருந்து வீட்டுக்கு எழுதிய பல கடிதங்களில் ’’மெரிங் ஒரு மேதை, சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் கொண்டவர்” என்று ரோஸலிண்ட் வியந்து எழுதியுள்ளார். மெரிங்குடன் சேர்ந்து பாரிஸின் தெருக்களில் நடப்பதும், நீண்ட மதிய உணவு இடைவேளைகளில் அறிவியலைப் பற்றி விவாதிப்பதும் அவருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஆனால் மெரிங் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் உறவில் இருந்தார். மெரிங்கின் இந்தத் தன்மையைக் கண்டு தான் மிகவும் வருத்தப்படுவதாக மற்றுமொரு கடிதத்தில் ரோஸலிண்ட் குறிப்பிட்டுள்ளார். அவர் மெரிங்கை நேசித்தார், ஆனால் அந்த அன்பு ஒருதலைக்காதலாகவே இருந்தது. ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் 1951-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரான்சில் இருந்த மிகச்சிறந்த ஆய்வகத்தை விட்டுவிட்டு, தனது சொந்த நாடான இங்கிலாந்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காக லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜில் சேர்ந்தார். ஆண்கள் மட்டுமே அறிவியல் உலகில் கால்பதிக்கவும், சாதிக்கவும் முடியும் என்னும் அடிப்படையில் இயங்கிய அந்த ஆய்வகச்சூழல் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அங்கு அவருக்கு மெரிங் போன்ற ஒரு துணையும் கிடைக்கவில்லை, பாரிஸில் இருந்த அந்தச் சுதந்திரமும் இல்லை. அவர் லண்டனில் இருந்து மெரிங்கிற்குப் பல கடிதங்களை எழுதினார். அதில் அறிவியலைப் பற்றிப் பேசினாலும், அவற்றுக்கிடையே பழைய நாட்களின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். ரோஸலிண்ட் இறந்த செய்தி கேட்டபோது, மெரிங் மிகவும் உடைந்து போனார். “ரோஸலிண்ட் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, என் வாழ்வின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார். அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், அமெரிக்க விஞ்ஞானியான டொனால்ட் காஸ்பருடன் அவருக்கு ஒரு நெருக்கமான நட்பு இருந்தது. தனது புற்றுநோய் சிகிச்சைகளின் போது காஸ்பருடன்தான் ரோஸலிண்ட் அதிக நேரத்தைச் செலவிட்டார். இவர்களுக்கிடையேயான உறவு காதலாக மாறியிருக்கலாம் ஆனால், அது முதிர்ச்சியடைவதற்குள் ரோஸலிண்டின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் கிங்ஸ் ஆய்வகத்தில் சேர்ந்தபோது, லண்டன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அவருக்கு எக்ஸ்-ரே விளிம்பு விலகல் (X-ray diffraction) முறையைப் பயன்படுத்தி டி.என்.ஏ (DNA) இழைகளின் அமைப்பை ஆய்வு செய்யும் ஆய்வை மேற்கொள்ளச் சொல்லியது. அந்த ஆய்வகத்தின் துணை இயக்குநர் ஜான் ராண்டால், டி.என்.ஏ ஆராய்ச்சியை முழுமையாக ரோஸலிண்டிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால்,ரோஸலிண்ட் அங்கு பணியில் இணைந்த போது அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த மாரிஸ் வில்கின்ஸ் (Maurice Wilkins), விடுமுறையில் சென்றிருந்தார். பாரீஸைப் போலல்லாமல் லண்டன் ஆய்வகம் ஆணகள் கோலோச்சும் இடமாக இருந்தது. பிற்பாடு மாரிஸ் பணியில் சேர்ந்த போது, புதிதாக வந்திருந்த ரோஸலிண்ட் தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு உதவியாளர் மட்டுமே என்று தவறாக நினைத்தார். ஏனெனில் அக்காலத்தில் தனித்து அப்படியான ஒரு முக்கியமான ஆய்வில் பெண்கள் யாரும் ஈடுபட்டிருக்கவில்லை. இதுவே பிற்பாடு அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. பாரிஸில் ரோஸலிண்டுக்குக் கிடைத்த அந்த சுதந்திரமும், மதிப்பும் லண்டனில் கிடைக்கவில்லை. ரோஸலிண்ட் அங்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே (1951-1953) பணியாற்றினார். ஆனால் அந்த குறுகிய காலத்தில் அவர் செய்த ஆய்வுகள்தான் உயிரியல் வரலாற்றையே மாற்றியமைத்தன. ரோஸலிண்ட் தனது DNA ஆய்வில் டி.என்.ஏ இழைகள் உலர்ந்த நிலையில் ஒரு மாதிரியாகவும், ஈரப்பதமான நிலையில் வேறு மாதிரியாகவும் இரண்டு வகைகளில் இருப்பதை கண்டறிந்தார் (A மற்றும் B). ‘A’ வடிவம்: உலர்ந்த நிலை (Dry form). ‘B’ வடிவம்: ஈரப்பதமான நிலை (Wet/Hydrated form). இதை அவர் கண்டறிந்த பிறகுதான், டி.என்.ஏ-வின் உண்மையான அமைப்பைத் அவரால் துல்லியமாகப் படம்பிடிக்க முடிந்தது டி.என்.ஏ இழையை எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் 100 மணி நேரம் ஊடுருவச் செய்து இந்த இரு இழைகளின் அமைப்பை. 1952-ம் ஆண்டு மே மாதம், ரோஸலிண்ட் புகைப்படம் எடுத்து போட்டோ 51 என்று பெயரிட்டார். அந்தப் படத்தில் இருந்த ‘X’ வடிவம், டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் (Double Helix) என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது. பாஸ்பேட் முதுகெலும்புகள் (Phosphate backbones) இழையின் வெளிப்புறத்தில் இருப்பதையும் அவர் அந்தப்புகைப்படத்தின் மூலம் உறுதி செய்தார். ரோஸலிண்ட் DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார். 1953-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரோஸ்லிண்ட் தனது முடிவுகளை ஆய்வுக்கட்டுரையாக வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தபோது ஒருநாள் விடுமுறையில் இருந்தார். அன்று அவரிடம் மாணவராக இருந்த ரேமண்ட் கோஸ்லிங், தாங்கள் எடுத்த மிகத் தெளிவான Photo 51 புகைப்படத்தை மாரிஸ் வில்கின்ஸிடம் ரோஸலிண்டின் அனுமதியின்றி காட்டினார். மாரிஸ் வில்கின்ஸ் அந்த ‘Photo 51’-ஐ அருகில் இருந்த ஆய்வகத்தில் அதே டி என் ஏ அமைப்பை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் வாட்சனிடம் காட்டினார். அந்தப் படத்தை ஒரு வினாடி பார்த்த உடனேயே, “என் இதயம் படபடத்தது” என்று வாட்சன் பின்னாளில் தனது புத்தகத்தில் எழுதினார். வாட்சன் ஒரு எக்ஸ்-ரே நிபுணர் அல்ல, ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே அதில் இருந்த ‘X’ வடிவம் டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் என்பதை அவருக்கு உறுதிப்படுத்தியது. ஆனால் புகைப்படம் மட்டும் போதாது, அதை மாதிரியாக (Model) மாற்ற துல்லியமான அளவீடுகள் தேவை. இங்குதான் இரண்டாவது அறிவுத்திருட்டு நடந்தது. ரோசாலிண்ட் தனது ஆய்வு முடிவுகளை ஒரு ரகசிய அறிக்கையாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் சமர்ப்பித்திருந்தார்.அந்த அறிக்கையில் டி.என்.ஏ இழைகளுக்கு இடையே உள்ள தூரம், அதன் வேதியியல் சமநிலை போன்ற ரோஸலிண்டின் இரண்டு ஆண்டு உழைப்பின் மொத்தத் தரவுகளும் இருந்தன. அந்த மருத்துவ கவுன்சில் கமிட்டியில் இருந்த மேக்ஸ் பெரூட்ஸ் (Max Perutz), அந்த அறிக்கையை வாட்சன் மற்றும் கிரிக் கேட்டுக்கொண்டதற்காக அவர்களிடம் ரகசியமாக வழங்கினார். இதைப் பயன்படுத்தித்தான் வாட்சன் மற்றும் கிரிக் தங்களது டி.என்.ஏ மாதிரியை உருவாக்கினர். டின என் ஏ வின் வடிவமைப்புக் குறித்து 1953, ஏப்ரல் 25 அன்று ‘நேச்சர்’ (Nature) இதழில் மூன்று கட்டுரைகள் அடுத்தடுத்து வெளியாகின: முதலாவதாக, வாட்சன் மற்றும் கிரிக்கின் கட்டுரை (டி.என்.ஏ மாதிரியைக் கண்டறிந்ததாக). இரண்டாவதாக, வில்கின்ஸின் கட்டுரை. மூன்றாவதாக, ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மற்றும் கோஸ்லிங்கின் “Molecular Configuration in Sodium Thymonucleate” என்னும் கட்டுரை. இந்தக்கட்டுரையில் தான் ரோஸலிண்டின் போட்டோ 51 பிரசுரமானது. வாட்சன் மற்றும் கிரிக் தங்கள் கட்டுரையில், ரோஸலிண்டின் தரவுகளைத் தாங்கள் பயன்படுத்தியதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. மாறாக, “வில்கின்ஸ் மற்றும் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் ஆகியோரின் பிரசுரிக்கப்படாத ஆய்வுமுடிவுகள் மூலம் தெரியவந்த பொதுவான அறிவுச் செய்திகளுக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்று மட்டும் கட்டுரையின் அடிக்குறிப்பில் எழுதினார்கள், இந்த அடிக்குறிப்பில் மிகக்கவனமாக பிரசுரிக்கப்படாத மற்றும் பொதுவான என்னும் இரு சொற்கள் பயனபடுத்தப்பட்டிருந்தன “We are also indebted to Dr. R. E. Franklin and Dr. R. G. Gosling, for the knowledge of the general nature of the unpublished experimental results and ideas of the researchers at King’s College, London.” இந்தக்கட்டுரைகளுக்குப்பிறகு உலகம் முழுவதும் டி என் ஏ வின் இரட்டைச்சுழல் அமைப்பை “வாட்சன் மற்றும் கிரிக் கண்டுபிடித்தனர், என்ற தவறான பிம்பம் உருவானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, “The Double Helix” என்ற புத்தகத்தில் ரோஸலிண்டை மிகவும் ஏளனமாகச் சித்தரித்த ஜேம்ஸ் வாட்சன் அதே புத்தகத்தில் “அவருடைய தரவுகள் இல்லாமல் எங்களால் மாதிரியை உருவாக்கியிருக்க முடியாது” என்பதையும் ஒப்புக்கொண்டார். டி என் ஏ இரட்டைச்சுழல் அமைபை கண்டுபிடித்தற்காக நாட்சன் மற்றும் க்ரிக்குக்கு 1962-ல்நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ரோஸலிண்ட் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தது.. இந்த அறிவுத்திருட்டை ரோஸலிண்ட் பெரிதாக எடுதுக்கொள்லவே இல்ல டி என் ஏவின் அமைப்பை கூட்டாக கண்டுபிடித்தோம் என்றே அவர் எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் சொல்லப்போனால் அதன்பிற்கும் கூட க்ரிக்குடனும் அவரது மனைவி ஓடிலியுடனும் அவர் கொண்டிருந்த நட்பை தொடர்ந்தார் விடுமுறைக்கு அவர்களுடன் பயணம்கூட மேற்கொண்டார். நேச்சர் இதழில் கட்டுரை பிரசுரமான பின்னர் டி என் ஏ சர்ச்சையைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, 1958-ல் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் நடைபெறவிருந்த உலகஅறிவியல் கண்காட்சிக்காக புகையிலை மொசைக் வைரஸின் (TMV) பிரம்மாண்டமான 5 அடி உயர மாதிரியை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார். மக்கள் வைரஸின் அமைப்பை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ரோஸலிண்ட் ஆர்வமாக இருந்தார். 1958-ம் ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் அவரது உடல் முழுவதும் பரவியது. ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலும் ஆராய்ச்சி: மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது கூட, அவர் தனது ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்திக்கொண்டும், தனது குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டும் இருந்தார். 1958, ஏப்ரல் 16 அன்று, தனது 37-வது வயதில் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் உயிரிழந்தார். அவர் இறந்த அடுத்த நாள், அவர் உருவாக்கிய வைரஸ் மாதிரி உலகக் கண்காட்சியில் திறந்து வைக்கப்பட்டது. அவர் இறக்கும் போது, டி.என்.ஏ கண்டுபிடிப்பில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைப் பற்றி யாரிடமும் புகார் கூறவில்லை. அவரது உடல் வடமேற்கு லண்டனின் வில்லஸ்டன் யூத கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறையில்: IN MEMORY OF ROSALIND ELSIE FRANKLIN [Hebrew name] DEARLY LOVED ELDER DAUGHTER OF ELLIS AND MURIEL FRANKLIN 25TH JULY 1920 – 16TH APRIL 1958 SCIENTIST HER RESEARCH AND DISCOVERIES ON VIRUSES REMAIN OF LASTING BENEFIT TO MANKIND ரோஸலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் நினைவாக! எல்லிஸ் மற்றும் முரியல் ஃபிராங்க்ளின் அவர்களின் அன்பிற்குரிய மூத்த மகள் 25 ஜூலை 1920 – 16 ஏப்ரல் 1958 அறிவியலாளர் வைரஸ்கள் குறித்த அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு நீடித்த நன்மைகளை வழங்கக்கூடியவை. என்று பொறிக்கப்பட்டது. கல்லறையில் அறிவியலாளர் என்று குறிப்பிடப்பட்டது, அந்தகாலத்தில் பெரும் கெளரவம் என்றாலும் வைரஸ்கள் குறித்த அவரது ஆய்வு குறிப்பிடப்பட்டிருக்கையில் ஏன் டி என் ஏ குறித்த எந்தத் தகவலும் அதில் இல்லை என்பது புதிராக இருக்கிறது. ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் டி.என்.ஏ ஆய்வுக்குப் பிறகு பிர்க்பெக் (Birkbeck) கல்லூரியில் மேற்கொண்ட வைரஸ் ஆய்வுகள், அவரை உலகளாவிய புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அங்கு அவருக்கு உதவியாளராகவும், மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர் ஆரோன் கிளக் (Aaron Klug). தனது இறுதி நாட்களில், ரோஸலிண்ட் போலியோ வைரஸின் கட்டமைப்பை ஆராயத் தொடங்கினார். இதுவே பிற்காலத்தில் அந்த வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை மேம்படுத்த உதவியது. ஆரோன் கிளக், ரோஸலிண்டின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர். ரோஸலிண்டின் மறைவிற்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை அவர் பெற்றுத்தந்த அமெரிக்க நிதியுதவியுடன் தொடர்ந்து முன்னெடுத்தார். 1982-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஆரோன் கிளக்கிற்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது நோபல் பரிசு உரையில், “ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், இன்று அவர் தான் இந்த இடத்தில் நின்றிருப்பார்” என்று கூறினார். வரலாறு சத்தமாகப் பேசுபவர்களையே கொண்டாடுகிறது; அதனால்தான் டி.என்.ஏ என்றாலே வாட்சன்-கிரிக் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், அந்த இரட்டைச் சுருள் ஏணியின் ஒவ்வொரு படியையும் கண்டு பிடித்தவர் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின். வாட்சனும் கிரிக்கும் ‘Photo 51’ அளித்த அளவீடுகளின் அடிப்படையில் ஒரு மாதிரியை (Model) மட்டும்தான் உருவாக்கினார்கள். பிற்பாடு உண்மை தெரிந்ததும் ரோஸலிண்டிற்கு “wronged heroine”, the “dark lady of DNA” the “forgotten heroine” a “feminist icon” the “Sylvia Plath ofindf molecular biology என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது, எனவே, டி.என்.ஏ-வைக் கண்டறிந்தவர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் என்று பள்ளிப் பாடங்களிலிருந்தே ஆவணப்படுத்த வேண்டும். அப்படிச்செய்தால் மட்டுமே வருங்கால சந்ததியினருக்கு உண்மை தெரியும். இதுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி. ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51
- Today
-
570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்
அணியும் உடை, ஓடும் வாகனம், பாவிக்கும் தொலைபேசி, இவற்றிலெல்லாம் மேற்கு நாடுகளைப் பின்பற்றும் தாயக மக்கள், ஒப்பந்தம் போடுவதில் மேற்கு நாடுகளைப் பின்பற்ற மாட்டார்களா? "இத்தனை நாட்களுக்குள் 50% வேலை முடிய வேண்டும், இன்ன காலத்திற்குள் மிகுதி வேலை முடிய வேண்டும், இல்லா விட்டால் ஒப்பந்தம் ரத்து, பணமும் செலுத்த முடியாது" என்று ஒரு பந்தி இல்லாமல் என்ன தான் ஒப்பந்தம் போடுகிறார்கள்? இத்தகைய பாதுகாப்புகள் இல்லாத வேலை ஒப்பந்தங்களால் என்ன பயன்?
-
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம்
ஜனாதிபதி - ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் சந்திப்பு Mar 26, 2026 - 05:09 PM உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷ, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்று (26) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான எரிசக்தி துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. குறிப்பாக, எரிபொருள் விநியோகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மைக்கான புதிய வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. விமான நிலையத்தில் வரவேற்பு: இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய பிரதி அமைச்சரை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல மற்றும் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன ஆகியோர் வரவேற்றனர். உலகளாவிய சந்தை நிலைமைகள் மாறிவரும் சூழலில், இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை, குறிப்பாக எரிசக்தி துறையில் மேம்படுத்துவதற்கான இரு நாடுகளினதும் முயற்சியை இந்த விஜயம் பிரதிபலிக்கிறது. https://adaderanatamil.lk/news/cmn7eb78n001r356ppx1bonpd
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. அதனால்தான் வெளியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழர்களை ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மற்றைய மாநிலங்களைப் போல தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பது மட்டமான சிந்தனையாகும்.இது தொடக்கம்தான் காலப் போக்கில் இது நடந்துதான் தீரும்.அதனைக் குழப்ப காலத்திற்குக்காலம் நடிக்க கோமாளிகளை இறக்கி விட்டு திராவிடம் சூழ்ச்சி செய்வது தொடர்கதையானாலும். அந்த அரிதார வேடம் வெகு சீக்கிரமாகவே கலைந்து வெளிச்சத்துக்கு வருவதை கண்கூடாகவே பார்த்து வருகிறோம்.
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
@alvayan அண்ணை, ஏன் ஆச்சி ஐபோன் பாவிக்கக் கூடாதே?! அங்கால ஒரு ஆச்சி ரம்பை கலாயச்சத பாக்கேலயே?! அட ஆச்சி உழைப்புக்குத் தான் கேக்கிறா!
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
பள்ளிக்கூடத்தில் ரீச்சர் இவன் நுள்ளிப் போட்டான் என்று முறையிடுகிற மாதிரி இருக்கிறது. நடைபெறுவது போர். அதுவும் போரைத் தொடங்கியது இஸ்ரேலும் அமெரிக்காவும். எடுத்த எடுப்பிலேயே ஈரானில் பாடசாலையில் குண்டுகள் விழுந்து 150 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாக இறந்து போனார்கள். குண்டுகளுக்கு குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று வேறுபடுத்திப்பார்க்கத் தெரியாது.காசாவில், பாலஸ்தீனத்தில், லெபனாலில் எத்தனை குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதல்களில் இறந்து போயிருக்கிறார்கள்.அதற்கெல்லாம் யாரிடம் முறையிடுவது. போர் நடக்கின்றது. போரைத் தெடங்கியவர்கள்தான் போரை நிறுத்த வேண்டும். தோல்வியை ஒப்புக் கொண்டு போரை நிறுத்தினால் இருபக்கமும் அழிவுகளைத்தடுக்கலாம்.
-
எதிர்கால சுகாதார தேவைக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் போதுமானதாக இல்லை – வைத்தியர்கள் எச்சரிக்கை
இது நீண்டகால பிரச்சனை. பல காலமாக பாயிலேயே நோயாளிகள் உறங்குகிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@வீரப் பையன்26 ஓடி வாங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் 20 போட்டிகளை விட்டுவிட்டு ஏப்ரல் 13 இலிருந்து கேள்விக்கொத்தில் போடலாம். எல்லாருக்கும் 40 புள்ளிகள் இனாமாகக் கொடுக்கலாம்😀
-
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம்
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம் 26 Mar, 2026 | 07:40 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஷ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத் தந்துள்ள ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உட்பட தூதுக்குழுவினர் நேற்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும்இ இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல்இகுறிப்பாக எரிபொருள் விநியோகம் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படப்பட்டது. இதற்கமைய இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஸ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்த காரணத்தால் நாட்டுக்கு வருகைத்தரவிருந்த எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்ததால் கடந்த வாரங்களில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக ரஸ்யாவிடமிருந்து 'அரசாங்கம் -அரசாங்கம்| என்ற அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இதற்கமைவாகவே ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். https://www.virakesari.lk/article/242022
-
AI எழுதிய கவிதை -நானும் கிளோடும்
சுந்தரரின் பாணியையும் எதிர்பார்க்கிறோம்.
-
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பாலின் கோலா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது என அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடாத ஒரு "மூத்த அரசியல்-பாதுகாப்பு அதிகாரி" ஒருவரை மேற்கோள் காட்டி, சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது உட்பட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரானின் ஐந்து நிபந்தனைகளை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது. அதன் பிறகு வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளைக் குறிவைத்து இரான் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 24) பேசிய டிரம்ப், பேச்சுவார்த்தைக்காக இரான் "ஏங்குவதாகவும்", இரானிய பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவிற்கு ஒரு "மிகவும் குறிப்பிடத்தக்க பரிசை" வழங்கியுள்ளதாகவும் கூறினார். அந்த "பரிசு" எண்ணெய், எரிவாயு மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்பானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அவர் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஆனால் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் பேச்சுவார்த்தை குறித்த எந்தவொரு கருத்தையும் முற்றிலும் நிராகரித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானிய அரசு நடத்தும் பிரஸ் டிவி தகவலின்படி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது. டிரம்பின் திட்டத்தில் என்னென்ன அடங்கியுள்ளன? இஸ்ரேலின் சேனல் 12 செய்திகளின்படி, போர் முடிவுக்கு வர இரான் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அமெரிக்க அதிகாரிகள் இந்தப் போரைத் தொடங்கியதற்குக் கூறிய முக்கியக் காரணங்களையே இந்தக் கோரிக்கைகள் மையமாகக் கொண்டுள்ளன. அதாவது இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுப்பது. இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை, அதேபோல் இரானும் இதனை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. மேலும், அதன் ஏவுகணைத் திட்டத்தினால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றுவது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகள், இரான் "ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும்", அணுசக்தி நிலையங்களை அகற்றுவதாக உறுதியளிக்க வேண்டும் மற்றும் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றன. இந்த முன்மொழிவுகளின்படி, இரான் தனது ஏவுகணைத் திட்டத்தின் வரம்பு மற்றும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொள்ள வேண்டும். கூடுதலாக, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா, காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற பிராந்திய ஆயுத குழுக்களுக்கு நிதி வழங்குவதை இரான் நிறுத்த வேண்டும். இரான் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதும் முன்மொழிவில் உள்ளது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணையின் வழியாக செல்கிறது. இந்த நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மேலும் உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும், இரான் மீதான அனைத்து சர்வதேசத் தடைகளும் நீக்கப்படும் என்றும் அமெரிக்காவின் இந்த திட்டம் கூறுகிறது. பல அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து, இரான் தனது அணுசக்தி நிலையங்களின் ஆய்வுகளை நிறுத்தியதால், கடந்த நவம்பரில் மீண்டும் முழுமையான தடைகள் விதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images இரானின் நிபந்தனைகள் என்ன கூறுகின்றன? பிரஸ் டிவி தகவலின்படி, போரை முடிவுக்குக் கொண்டுவர இரான் ஐந்து நிபந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதில் "எதிரியின் போர் மற்றும் படுகொலைகளை" முற்றிலும் நிறுத்துவதும் அடங்கும். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அதிகாரிகள் "ஆக்டோபஸின் தலையைத் துண்டிப்பதே" தங்களின் நோக்கம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளனர். போரின் முதல் நாளில் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதில் இருந்து, பல உயர்நிலை இரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இரானின் மற்ற நிபந்தனைகளில், "இஸ்லாமிய குடியரசின் மீது மீண்டும் போர் திணிக்கப்படாது என்பதை உறுதி செய்வதற்கான உறுதியான வழிமுறைகள்" என்பதும் அடங்கும். போர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளையும், ஹோர்மூஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உரிமையையும் இரான் கோருகிறது. முக்கியமாக, பிராந்தியத்தில் உள்ள இரானின் கூட்டாளிகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று இரான் விரும்புகிறது. ஹெஸ்பொலாவிற்கு எதிரான தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. போர் தொடங்குவதற்கு சற்று முன்பு பிப்ரவரி மாதம் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரான் முன்வைத்த கோரிக்கைகளுடன் இவை கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று பெயர் குறிப்பிடப்படாத ஓர் அதிகாரி கூறியதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images போரின் முடிவு தென்படுகிறதா? இறுதியில் பேச்சுவார்த்தைகள் நடந்தால், டிரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் (டிரம்பின் மருமகன்) ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அமைதி முன்மொழிவுகள், காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தத் தூதர்கள் பின்பற்றிய மாதிரியைப் போலவே இருப்பதாகத் தெரிகிறது. அதே நடைமுறை இங்கும் பின்பற்றப்பட வேண்டுமானால், அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்தின் அம்சங்களை பேச்சுவார்த்தையாளர்கள் இறுதி செய்வதற்கு ஏதுவாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இரான் மீதான தங்கள் தாக்குதல்களை நிறுத்துவதில் இஸ்ரேலியத் தலைவர்கள் அதிக மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்று இஸ்ரேலின் சேனல் 12 தெரிவித்துள்ளது. காஸா பேச்சுவார்த்தைகளின் போது போர் நிறுத்தம் குறித்து நெதன்யாகு இதேபோன்ற தயக்கங்களைக் கொண்டிருந்தார். இரான் டிரம்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்று இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் நிர் பர்கட் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த சுற்றின் முடிவில், ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சரி, ஏற்படாவிட்டாலும் சரி, நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம் என்று நான் நம்புகிறேன்" என்று பர்கட் கூறினார். பட மூலாதாரம்,Getty Images இரான் தரப்பில் யார் இதில் ஈடுபடுவார்கள் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்காவுடன் யார் பேசுகிறார்கள் என்பதை டிரம்ப் கூறவில்லை. "நாங்கள் சரியான நபர்களுடன் பேசி வருகிறோம்" என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 28 அன்று தனது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் காயமடைந்த பிறகு இதுவரை வெளியே காணப்படாத இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி இதில் இடம்பெறவில்லை என்று நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இரானின் வெளியுறவு அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, தற்போதைய இரானிய தலைமை அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையாக உள்ளது. பட மூலாதாரம்,Getty Images ஏனென்றால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில்தான் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அந்தப் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் இரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் அமைதிக்கான இந்த முன்மொழிவுகள் வந்துள்ளன. அவர்களின் நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கோ அல்லது இரானின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதற்கோ பயன்படுத்தப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பிபிசி தமிழின் 'பிரச்னைகளைப் பேசுவோம்' உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா? இது தொடர்பாக உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பிபிசியுடன் பகிருங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czexne0p5jno
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
இந்த அமைப்புகளைத் தானே இஸ்ரேல் கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது ஏன் அலறுது? அடி அமோகமோ?
-
எதிர்கால சுகாதார தேவைக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் போதுமானதாக இல்லை – வைத்தியர்கள் எச்சரிக்கை
எதிர்கால சுகாதார தேவைக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் போதுமானதாக இல்லை – வைத்தியர்கள் எச்சரிக்கை 26 Mar, 2026 | 01:29 PM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது சுமார் 85,000 படுக்கைகள் இருந்தாலும், எதிர்கால சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்காது என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12% ஆக இருந்த வயோதிபர் தொகை, 2024 ஆம் ஆண்டில் சுமார் 18% ஆக அதிகரித்துள்ளதுடன், 2040 ஆம் ஆண்டளவில் அது 25% ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் மொத்த மக்கள் தொகை 2024 ஆம் ஆண்டில் 21,763,170 ஆக பதிவாகியுள்ளது. சனத்தொகை அதிகரிக்கும் வேகத்திற்கு ஏற்ப வைத்தியசாலைக் கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சுகாதார அமைப்பு பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே சுகாதார அமைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாள 10,000 நோயாளிகள் இதய அறுவை சிகிச்சைக்காகவும், மேலும் 10,000 பேர் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருக்கின்றனர். அதேபோல், சுமார் 40,000 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இந்த தேவைகளை சமாளிக்க, தேசிய மருத்துவமனைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய அடிப்படை வைத்தியசாலைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/241968
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 144 பகுதி: 144 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" [3] கர்மா மற்றும் மறுபிறவி [Karma and Reincarnation]: பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டும் கர்மா மற்றும் மறுபிறவி பற்றிய கருத்துக்களில் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த நம்பிக்கைகளின் படி, இந்த வாழ்க்கையில் ஒரு நபரின் செயல்கள் (கர்மா) அவர்களின் எதிர்கால இருப்பை (மறுபிறவி) தீர்மானிக்கின்றன. இருப்பினும், ஒவ்வொரு மரபிலும் இந்த கருத்துகளின் விளக்கம் மற்றும் புரிதலில் வேறுபாடுகள் உள்ளன. அதாவது, இந்துமதத்தில் கர்மா என்பது சாதி சார்ந்த தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. புத்தமதத்தில், அது தனிப்பட்ட செயல் மற்றும் மனநிலையைக் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு இந்துவின் நம்பிக்கையில், தன் தர்மத்தைச் சரியாகச் செய்தால் நல்ல கர்மா கிடைக்கும். ஒரு புத்தன் நம்பிக்கையில், நல்ல எண்ணங்களும் செயல்களும் நல்ல மறுபிறவிக்கு வழிவகுக்கும். [4] விடுதலைக்கான பாதை [Path to Liberation]: இந்து மதம் விடுதலையை (மோட்சம்) அடைவதற்கு அறிவு (ஞானம்), பக்தி (பக்தி) மற்றும் செயல் (கர்மா) உள்ளிட்ட பல பாதைகளை (யோகங்கள்) வழங்குகிறது. பௌத்தம், குறிப்பாக தேரவாத பாரம்பரியம், உன்னதமான எட்டு மடங்கு பாதையை வலியுறுத்துகிறது, இதில் சரியான புரிதல், சரியான சிந்தனை, சரியான பேச்சு, சரியான செயல் போன்ற கொள்கைகள் அடங்கும். பௌத்தத்தின் குறிக்கோள் ஞானம் (நிர்வாணம்) அடைவதும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை உடைப்பதும் ஆகும். இங்கு நிர்வாணம் (nirvāṇa;) (சமசுகிருதம்: निर्वाण,; பாளி: nibbāna) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துன்பங்களை "வெளியேற்றுவது" அல்லது "தணிப்பது" என்பதாகும். அதாவது, இரண்டிலும் பிறவி சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவது முக்கிய இலக்காகும். இந்துமதத்தில் வீடுபேறு, அல்லது மோட்சம் (Moksha; சமஸ்கிருதம்: मोक्ष) என்பது ஆத்மாவுடன் ஒன்றாதல் அல்லது பரம்பொருளை அடைதல் என விளக்கப்படுகிறது. புத்தமதத்தில் நிர்வாணம் என்பது, நித்திய ஆன்மா அல்லது அல்லது கடவுளையோ குறிப்பிடாமல், ஆசை, அறியாமை, துக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைவது ஆகும் [cessation of craving, ignorance, and suffering, without reference to an eternal self or god]. இங்கே நித்திய ஆன்மா [இந்து மதத்தில்] என்பது ஒரு தனிநபரின் மாறாத சாரத்தைக் குறிக்கிறது, இது உடல் வடிவங்களிலிருந்து வேறுபட்டது, உண்மையான அறிவு மற்றும் துன்பத்திலிருந்து விடுதலையை உள்ளடக்கியது. இது உலக அனுபவங்களைக் கடந்து, இறுதி யதார்த்தமான பிரம்மத்துடன் ஒத்துப்போகிறது. [5] சடங்குகள் மற்றும் வழிபாடு [Rituals and Worship]: இந்து மதம் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ செய்யப்படும் சடங்குகள், கொண்டாட்டங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளின் [has a rich tradition of rituals, ceremonies, and worship practices] வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக, பௌத்தம் விரிவான சடங்குகள் அல்லது தெய்வ வழிபாட்டை வலியுறுத்துவதில்லை. இருப்பினும், சில புத்த மரபுகள் இன்று வேறுபடுகின்றன. அவை, பக்தி நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு கோயில்களைக் கட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுவது மட்டும் அல்ல, அத்துமீறியும் கட்டுகிறார்கள். அத்துமீறியும் வன்செயல்களில் ஈடுபடுகிறார்கள்! அதாவது, இந்துமதம் யாகங்கள், பூஜைகள், கோவில் வழிபாடுகள் போன்ற சடங்குகளை முக்கியமாகக் கொண்டுள்ளது. ஆனால் புத்தமதம், குறிப்பாக அதன் தொடக்ககாலத்தில், சடங்குகளை குறைத்து, தியானம், ஒழுக்கம் மற்றும் மனகவனம் [meditation, ethical living, and mindfulness] என்பவற்றை முக்கியமாக எடுத்துரைத்தது. உதாரணமாக, கலாம சூத்திரத்தில் புத்தர் குருட்டு சடங்குகளை வெளிப்படையாக நிராகரித்ததுடன் அனுபவத்தின் மூலம் உண்மை எதென்று கண்டறிய வேண்டுமென வலியுறுத்துகிறார் என்பதைக் கவனிக்க [The Buddha explicitly discouraged blind ritualism in the Kalama Sutta, advising seekers to test teachings through experience.]. இதைத் தான் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்! மேலே சுட்டிக்காட்டிய வாறு வேறுபாடுகள் இருந்தபோதிலும், கௌதம புத்தருக்கும் இந்து மதத்திற்கும் இடையே பரஸ்பர செல்வாக்கும் மற்றும் தொடர்புக்கான நிகழ்வுகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. அது என்ன தொடர்பு என்று யோசிக்க முடியாமல் தவிக்கிறார்கள், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் சமூகம்! Part: 144 / APPENDIX – "The Buddha and His teachings" Karma and Reincarnation: Both Buddhism and Hinduism share a belief in the concepts of karma and reincarnation. According to these beliefs, a person's actions (karma) in this life determine their future existence (reincarnation). However, there are differences in the interpretation and understanding of these concepts within each tradition. Path to Liberation: Hinduism offers multiple paths (yogas) for attaining liberation (moksha), including the paths of knowledge (jnana), devotion (bhakti), and action (karma). Buddhism, particularly the Theravada tradition, emphasizes the Noble Eightfold Path, which includes principles such as right understanding, right thought, right speech, right action, and so on. The goal in Buddhism is to attain enlightenment (nirvana) and break the cycle of birth and death. Rituals and Worship: Hinduism has a rich tradition of rituals, ceremonies, and worship practices performed in temples or homes. Buddhism, in general, does not emphasize elaborate rituals or deity worship. However, Buddhist traditions vary, and some sects have adopted devotional practices and built temples. Despite these differences, there are also instances of mutual influence and interaction between Gautama Buddha and Hinduism. The historical and cultural context of ancient India facilitated the exchange of ideas and practices between these traditions. Concepts such as meditation, renunciation, and ethical principles found in Buddhism have similarities with Hinduism's spiritual traditions. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 145 தொடரும் / Will follow துளி/DROP: 2116 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 144 https://www.facebook.com/groups/978753388866632/posts/34526384683676738/?