stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
விக்கியர் தீவிர அரசியலில் இருக்கும் போதே இதை சொன்னவர் - தேவநம்பியதீசன் தமிழன் என அவர் சொன்ன அதே பேட்டியில் மரபுரிமை வகையில் தமிழர்கள் சிங்களவர் ஒரே இனம், பின்னாளில் சிங்கள மொழி பின் சிங்கள-பெளத்த அடையாளம் உருவானது என்பதை சொன்னார் என நினைக்கிறேன்.
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
தீவிர அரசியலில் இருக்கும் போது இவ்வாறான அறிவூட்டல்களை செய்திருக்கலாம். அப்போது தனது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் தராத வெற்று கோஷ அரசியலை செய்துவிட்டு அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னர் இவ்வாறான அறிவூட்டல்களை செய்வது தகுந்த பலன்களை கொடுக்காது. இருப்பினும் இவ்வாறான மக்கள் நலன் விரும்பும் அறிவூட்டல்களை கல்வியாளர்கள் செய்வது வரவேற்கத்தக்கது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
48 மணிக்குள் ஹோர்மூசை திறக்காவிடின் ஈரானின் அத்தனை மின் நிலையங்களும் நிர்மூலம் ஆக்கப்படும் என தம்பர் சொல்லி உள்ளார். கத்தார், யூ ஏ இ இப்பவே சுவிட்சை ஆப் பண்ணலாம்😂
-
ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!
19?
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
டிரம்ப் வருகுன முன்பே பைடன் நீண்டகால அமெரிக்க மேலாண்மைவாத கப்பில் எடுத்தெகென் க்ழிலுடேன் … எந்த புலிடல் வேண்டும். என்கு உறவினர் சொன்னதன் படி டகு டகி டகி டகு டங்கு டிங்கு முந்து முந்து மயிலோன் முந்து குந்தவை பிராட்டியார் குந்தவைத்த இடத்தில் தெலுங்கர் சத்யா நாடெல்லா பார்தீபன் நாயுடு வாசிங்டன் சுந்தர் பிச்சை நன்றே கற்கை புகினும்.
- Today
-
கருத்து படங்கள்
- இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்! ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை ஈரானின் ‘நடான்ஸ்’ (Natanz) அணுசக்தி மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையமான டிமோனா (Dimona) மற்றும் அதன் அருகிலுள்ள அராத் (Arad) ஆகிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இப்போரில் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மிக ஆபத்தான கட்டமாக இது பார்க்கப்படுகிறது. அராத் (Arad)திலுள்ள நகர் மையத்தில் விழுந்த ஏவுகணையால் 88 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிமோனா (Dimona) அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இந்த நகரில் பல குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 10 வயது சிறுவன் உட்பட 39 பேர் காயமடைந்தனர். ஏவுகணைகள் நேரடியாகக் கட்டடங்களைத் தாக்கியதில் பல இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence) ஏவுகணைகளை இடைமறிக்க முயன்ற போதிலும், நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள போர்க்கப்பல்களைக் கொண்ட சில ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டன. இதனால் ஏவுகணைகள் நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), டிமோனாவில் உள்ள ஷிமோன் பெரெஸ் அணு ஆராய்ச்சி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு அளவில் மாற்றங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அணுசக்தி மையங்களுக்கு அருகே இராணுவத் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் என அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் குரோஸி வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முறியடிக்கத் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1469541- யாழில் நடைபெற்ற போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மாநாடு!
யாழில் நடைபெற்ற போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மாநாடு! 22 Mar, 2026 | 12:23 PM “சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் உள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (21) நடைபெற்றது. அந்நிகழ்வில் “வரலாற்றின் வேர்கள்” எனும் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் போராட்ட கால பகுதியில் புரட்சி பாடல்களை பாடிய பாடகர்களான மறைந்த பாடகர் எஸ்.ஜி சாந்தன், சுகுமார், நிரோஜன் பார்வதி சிவபாதம் உள்ளிட்ட பாடகர்கள், பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களான , இசைவாணர் கண்ணன் , அருணா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அத்துடன் விருது விழாவில் புலிகளின் குரல் செய்தி ஆசிரியரான மறைந்த ரி.தவபாலன் மற்றும் யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசுவாமி செல்வக்குமார் , முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் ஆகிய இரு மூத்த ஊடகவியலாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/241626- ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!
ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ! Published By: Digital Desk 1 22 Mar, 2026 | 11:18 AM (இணையத்தள செய்திப் பிரிவு) ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ஈடுகட்ட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச் சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலை கொடுத்து அரசாங்கம் தற்போது டீசலை இறக்குமதி செய்கிறது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எரிபொருள் பெறுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு எம்மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் தனது ஊழல்களை மறைக்க பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெற்று வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்பவர் 'மாலிமாவ'வின் கட்டளைக்கு இணங்கச் செயல்படுகிறாரா அல்லது நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த காலத்தில் எமது அரசாங்கம் கொண்டு வந்த காற்றாலை மற்றும் எல்.என்.ஜி மின் திட்டங்களை இவர்கள் எதிர்த்தார்கள். அன்று அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாட்டு மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. அமெரிக்காவின் USAID போன்ற நிறுவனங்கள் பிராந்தியத்தில் ஆட்சி மாற்றங்களுக்கு நிதி வழங்கியதாக டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இது ஒரு சர்வதேச இரகசியம். இவ்வாறான சக்திகளின் தேவையை நிறைவேற்றவே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் பயனை அரசாங்கம் உடனடியாகப் பெற வேண்டும். குறிப்பாக துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வங்கிச் சேவைகளுக்கான சிறந்த மாற்றாக கொழும்புத் துறைமுக நகரை மாற்ற இதுவே சரியான தருணம்.Travel Guides & Travelogues அரசாங்கத்தின் இயலாமையை மறைக்க தொடர்ந்தும் ராஜபக்ஷக்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/241620- வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
அதெண்டால் உண்மைதான். பாதிக்கப்படுவது... மத்திய கிழக்கும், ஆசியனும், ஆபிரிக்கனும்தான். 😢- இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு
அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை Mar 22, 2026 - 07:45 AM ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் அரசு தற்போது பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் ஈரான் இலக்கு வைக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn14g1m00014356pizfrzrbo- 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு ; ஆயிரக்கனக்கானோர் வெளியேற்றம்
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு ; ஆயிரக்கனக்கானோர் வெளியேற்றம் Published By: Digital Desk 3 22 Mar, 2026 | 12:56 PM (இணையத்தள செய்திப் பிரிவு) அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹவாய் தீவை தாக்கியுள்ள "கோனா லோ" எனப்படும் புயலால் கடந்த 10 நாட்களில் சில பகுதிகளில் 127 சென்றி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், ஓஹு (Oahu) மற்றும் மாவி (Maui) தீவுகளில் மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓஹு தீவிலுள்ள பிரதான அணைக்கட்டு ஒன்று உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அதனைச் சூழவுள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சடுதியாக அதிகரித்ததால் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதுவரை 230 க்கும் மேற்பட்டோர் அனர்த்த பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். "இந்தச் சூறாவளியைச் சாதாரணமானதாகக் கருத வேண்டாம்" என கவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் எச்சரித்கை விடுத்துள்ளார். ஏற்கனவே மண் அதிகளவு ஈரப்பதத்துடன் காணப்படுவதால், சிறிய மழை பெய்தாலும் அது பாரிய மண்சரிவை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் விமான நிலையங்கள் கடும் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள மொத்த சேத மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடக்கும் என ஹொனலுலு மேயர் ரிக் பிளாங்கியார்டி தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஹோட்டல்களில் தங்குவதற்கு விசேட விலைக் குறைப்புகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு லஹைனா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ அனர்த்தத்தின் வடுக்கள் மறைவதற்கு முன்னரே, இந்த இயற்கைச் சீற்றம் ஹவாய் மக்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241636- பெண்கள் விளையாட்டில் தேசிய சூழலுடன் முரண்படும் தமிழ்நாடு: பிபிசி ஆய்வு கூறும் சிக்கலான உண்மைகள்
பெண்கள் விளையாட்டில் தேசிய சூழலுடன் முரண்படும் தமிழ்நாடு: பிபிசி ஆய்வு கூறும் சிக்கலான உண்மைகள் பட மூலாதாரம்,Getty Images 21 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இந்திய பெண்கள் விளையாட்டைப் பார்க்கும் விதத்தில் ஓர் அமைதியான, ஆனால் முக்கியமான மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும், மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்போரின் எண்ணிக்கையும், அதை ஒரு தொழில்வாய்ப்பாகக் கருதும் மனப்போக்கும் அதிகரித்து வருவதாக பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்த முன்னேற்றக் கதையின் நடுவில் ஒரு சிக்கலான உண்மையும் பொதிந்துள்ளது. பெண்கள் விளையாட்டுத் துறைக்குள் வந்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் முழுமையான சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டார்களா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. இந்த முரண்பாடு மிகவும் தெளிவாகத் தெரியும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த ஆய்வு 2025 டிசம்பர் 26 முதல் 2026 ஜனவரி 30 வரை, 14 மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து 1,155 பேரின் பதில்கள் இந்த ஆய்வுக்காகப் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆய்வு, 'முழு இந்தியா'வையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மேற்கொள்ளப்படவில்லை. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங்கள் குறித்தான மனப்போக்குகள், பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இது நடத்தப்பட்டது. எனவே, இதை ஒரு தேசிய அளவிலான சூழலின் முடிவு எனக் கருதாமல், சமூக மாற்றத்திற்கான திசையைப் பற்றிச் சுட்டிக்காட்டும் வழிகாட்டியாகக் கருத வேண்டும். விளையாட்டில் பெண்கள்: தமிழ்நாட்டில் என்ன நிலைமை? இந்த ஆய்வில் கிடைத்த முதன்மையான கண்டுபிடிப்பு, கிரிக்கெட்டில் 2020இல் 5 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2026இல் 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது, ஆய்வில் பங்கேற்ற பெண்களில் இப்போது பத்தில் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதாகக் கூறுகிறார்கள். இளம் பெண்களிடையே இது இன்னும் வேகமாக உயர்ந்துள்ளது. 15-24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் ஆறு பேரில் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதாக ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆறு மாதங்களில் பெண்கள் விளையாட்டை ஏதேனுமொரு வடிவில் பார்த்துள்ளதாகக் கூறுவோரின் அளவும் 51 சதவிகிதமாக இருக்கிறது. 2020இல் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இது முக்கியமான மாற்றமாகும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய அளவிலான இந்த மாற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், முக்கியமான ஒரு வேறுபாடு தெரிகிறது. நாட்டின் பல பகுதிகளில் மகளிருக்கான விளையாட்டு வளர்ச்சி என்பது பெரும்பாலும் கிரிக்கெட்டின் எழுச்சியுடன் சேர்த்துப் பேசப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டின் கதை அது மட்டுமாக இல்லை. இங்கு மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்பவர்களின் உள்ளூர் கலாசாரம் பல்வேறு வடிவங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. குறிப்பாக, இந்தப் பார்வையில், கிரிக்கெட்டுக்கு இணையாக கபடியும் பிரபலமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தென்னிந்தியா முழுக்கவே மகளிர் விளையாட்டுக்கான பார்வையாளர்கள் அளவு அடிப்படையில் வலுவாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது கலாசாரத்துடனும் பிணைக்கப்பட்டு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல, ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் கிரிக்கெட் பிரபலமாக இருந்தாலும், கேரளாவில் கிரிக்கெட்டுக்கு நிகரான இடத்தை மகளிர் கால்பந்து விளையாட்டும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் விளையாட்டு அடையாளம் கிரிக்கெட் இந்திய அளவில் பெரும் வளர்ச்சியடைந்து இருந்தாலும், தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் கபடி இன்னும் முக்கியமான இடத்தில் இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆய்வில் பங்கெடுத்து பதிலளித்தவர்களில் 18% பேர் கபடி விளையாடுவதாகத் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற, ஊடக மைய வளர்ச்சியின் அடையாளமாக கிரிக்கெட் இருக்கிறது என்றால், கபடி இன்னமும் தெருக்கள், பள்ளிகள், உள்ளூர்ப் போட்டிகளில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இங்குதான் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பார்வை சுவாரஸ்யமாகிறது. இந்திய அளவில் மகளிர் கிரிக்கெட்டில் இரட்டிப்பு வளர்ச்சி என்பது தேசிய அளவிலான மாற்றத்தைப் பறைசாற்றினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விளையாட்டுத் துறையின் எதிர்காலம் என்பது கிரிக்கெட் மட்டுமாகச் சுருங்கிவிடவில்லை. மாறாக, ஒருபுறம் கிரிக்கெட் மீது ஆர்வம் உயரும்போது, மறுபுறம் கபடி போன்ற உள்ளூர் வேர்களைக் கொண்ட விளையாட்டுகளையும் மகளிரின் பங்களிப்பு தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம். ஏனெனில், மகளிர் விளையாட்டுத் துறையை விரிவுபடுத்த வேண்டுமெனில், தேசிய அளவில் புகழ் பெற்றுள்ள விளையாட்டுகளை மட்டுமே ஊக்கப்படுத்துவது போதாது, உள்ளூர் சமூகங்களுடன் ஏற்கெனவே பிணைந்திருக்கும் விளையாட்டுகளையும் வலுப்படுத்த வேண்டியிருக்கும். 'விளையாட வேண்டும்' என்ற ஆசையும் தடையும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள மற்றுமொரு முக்கியமான அம்சம், விளையாட்டுத் துறையில் ஈடுபடுவது குறித்துச் சிந்திக்கையில் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு கவலை. தற்போது எந்த விளையாட்டிலும் பங்கேற்காத பெண்களில் 13% பேர் பாதுகாப்பு குறித்தான கவலை காரணமாக விளையாட்டுகளில் சேரவில்லை என்று கூறியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் மொத்த அளவில் இது 32.7 மில்லியன் பெண்களுக்குச் சமம் என அறிக்கை மதிப்பிடுகிறது. பட மூலாதாரம்,Getty Images தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக நம்புவோரின் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது. இது ஆய்வில் மிகவும் அதிகமான அளவீடாகும். அதே நேரம், விளையாட்டில் பங்கேற்காத பெண்களில் 21% பேர் பாதுகாப்பு தங்களுக்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு தரவுகளையும் சேர்த்துப் பார்க்கையில், விளையாட்டு மேடைகள், பள்ளி மைதானங்கள், திடல்கள், கிளப் வசதிகள் ஆகியவை மட்டுமே மகளிர் விளையாட்டின் அடித்தளமல்ல, பெண்கள் அங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பதும் அதே அளவுக்கு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அறிக்கை நேரடியாக காரண-விளைவு உறவை நிரூபிப்பதில்லை. ஆனால், பாலின வன்முறை அதிகரித்து இருப்பதாக மக்கள் உணரும் மாநிலங்களில், பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலகுவதற்கான அபாயமும் அதிகமாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பள்ளியில் தொடங்கும் பயணம் பாதியில் நின்றுவிடுவது ஏன்? இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள மற்றொரு முக்கியமான விஷயம், குழந்தைப் பருவத்தில் அதிகமாக இருக்கும் விளையாட்டு மீதான ஆர்வம் வளர்ந்த பிறகும் நீடிக்கவில்லை என்பதாகும். ஆய்வில் பங்கேற்றவர்களில் 74% பேர் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது விளையாடியதாகக் கூறுகிறார்கள். பெண்களிடையே இந்த விகிதம் 70 சதவிகிதமாக உள்ளது. பெண்கள் சிறு வயதில் விளையாடிய இடங்களில் பள்ளி மிக முக்கியப் பங்கு வகிப்பதாக அறிக்கை கூறுகிறது. சிறுவயதில் விளையாடிய பெண்களில் 37% பேர் பள்ளியில்தான் அதிகமாக விளையாடியதாகக் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,Getty Images ஆண்களுக்கு அக்கம்பக்கம், தெரு, நண்பர்கள் வட்டம் போன்ற சமூக இடங்களும் விளையாட்டுத் தளங்களாக இருக்கும் நிலையில், பெண்களின் விளையாட்டு அனுபவம் அதிகம் 'கட்டமைக்கப்பட்ட', 'அனுமதி கிடைத்த' இடங்களுக்குள் மட்டுமே சுருக்கப்படுகிறது. பள்ளி அளவில் மாணவிகள் விளையாட்டில் ஈடுபடலாம். ஆனால், கல்லூரிக்குப் பிறகு? வேலையில் சேர்ந்த பிறகு? திருமணத்திற்குப் பிறகு? ஒரு நகரப் பகுதி அல்லது கிராமத்தில், ஒரு பெண் மாலை நேரத்தில் சுலபமாகச் சென்று விளையாடக்கூடிய திறந்தவெளி மற்றும் பாதுகாப்பான இடங்கள் எவ்வளவு உள்ளன? இந்த இடைவெளியே இந்தியா முழுவதும் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு இருக்கும் ஒரு பெரிய சவால் என்று அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டிலும் இதே கேள்வி தவிர்க்க முடியாததாக உள்ளது. நேரமின்மை: மறைந்து நிற்கும் பெரிய தடுப்புச் சுவர் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்குப் பெரிய தடையாக பாதுகாப்பின்மை சொல்லப்பட்டாலும், அதற்கு நிகராகச் சொல்லப்பட்ட மற்றுமொரு காரணம் நேரமின்மை. அறிக்கைப்படி, மொத்தமாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 41% இந்தியர்கள் தங்களுக்கு விளையாட நேரமில்லை எனக் கூறியுள்ளனர். இது சாதாரண பதில் போலத் தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் வேலை-வாழ்க்கை சமநிலை, நீண்ட வேலை நேரம், போக்குவரத்துப் பயணத்தால் ஏற்படும் சோர்வு, வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு ஆகிய பல விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, பெண்கள் வேலைக்கும் சென்று, வீட்டுப் பொறுப்புகளையும் அதிகமாகச் சுமக்கின்ற சூழலில், விளையாட்டு என்பது அவர்களுக்கான 'அதிகப்படியான நேரம் இருந்தால் செய்யக்கூடிய' செயலாகப் புறந்தள்ளப்படுகிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சென்னை போன்ற நகரங்களில் நீண்ட பயண நேரம், தனியார் வேலைப்பளு, தேர்வுக்குப் பிந்தைய கல்வி/வேலை அழுத்தம் ஆகியவை இருந்தாலும், மாவட்டங்கள், சிற்றூர்களில்கூட பெண்களுக்கு வீட்டு வேலை, பராமரிப்பு பொறுப்பு, சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவை நேரத்தைச் சுருக்கும். விளையாட்டு மீது ஆர்வம் இருந்தாலும், அதற்கு தினசரி வாழ்வில் இடம் கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதனால், "பெண்கள் விளையாட்டில் அதிகமாகத் தெரிகிறார்கள்" என்ற வெளிப்படையான முன்னேற்றத்திற்கும், "பெண்கள் சீராக விளையாட ஏதுவான வாழ்க்கையை வாழ்கிறார்களா?" என்ற அடிப்படைக் கேள்விக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது. பார்வையாளர்கள் அதிகரித்தாலும் மாறாத மனப்பான்மை மகளிர் விளையாட்டுகளை நேரலையிலும் நேரடியாகச் சென்றும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் 59% பேர் கடந்த ஆறு மாதங்களில் மகளிர் விளையாட்டு நிகழ்வுகளைப் பார்த்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதில், மகளிர் விளையாட்டுகளுக்கான பார்வையாளர்களை அதிகபட்சமாகக் கொண்டுள்ள மாநிலங்களில் 65% பேருடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் அதேவேளையில், பெண்களின் விளையாட்டைப் பற்றிய எதிர்மறையான சமூக மனப்பான்மைகள் பல இடங்களில் இன்னும் குறையாமல் இருப்பதாகவும் சில இடங்களில் அதிகரித்து இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,Getty Images உதாரணமாக அறிக்கைப்படி, 43% பேர் மகளிர் விளையாட்டுகள் ஆடவர் விளையாட்டுகளைவிடக் குறைவான பொழுதுபோக்கு அம்சம் கொண்டது என நம்புகிறார்கள். அதோடு, 46% பேர் விளையாட்டு வீராங்கனைகள் கவர்ச்சியாகத் தோன்ற வேண்டுமெனக் கருதுகிறார்கள். 38% பேர் ஆண்கள் அளவுக்கு வீராங்கனைகள் திறமையானவர்கள் இல்லையென்ற மனப்பான்மை தங்களுக்கு இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இது வெறும் ஆண்களின் கருத்து மட்டுமே இல்லையென்றும், பெண்கள் மத்தியிலும் இத்தகைய பார்வைக்கு ஆதரவு இருப்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, மகளிர் விளையாட்டுகள் பிரபலம் அடைந்துள்ளது, ஆனால் பரவலாகவும் முழுமையாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒரு மாநிலம், பெண்கள் விளையாட்டைப் பார்ப்பதில் ஆர்வமாக இருந்தாலும், பெண்கள் எப்படி உடையணிய வேண்டும், எப்படித் தோன்ற வேண்டும், எவ்வளவு 'பெண்மையானவர்களாக' இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் மனப்பான்மை அங்கு வலுவாக இருந்தால், அங்கு விளையாட்டின் வளர்ச்சி வெளித்தோற்றத்திற்குப் பாராட்டப்பட்டாலும், உள்ளிருந்து கட்டுப்படுத்தப்படும் சூழலை இது உருவாக்கும். விளையாட்டை தொழிலாக நினைக்கும் பெண்களில் தமிழ்நாடு முன்னிலை தமிழ்நாடு குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள முக்கியமான நேர்மறை கண்டுபிடிப்புகளில் ஒன்று, பெண்கள் விளையாட்டை ஒரு தொழிலாகக் கருதுவதன் விகிதம். மொத்தமாக பெண்களில் 17% பேர் விளையாட்டை ஒரு தொழில் வாய்ப்பாகக் கருதி சிந்தித்ததாகக் கூறியிருக்க, 25 வயதுக்கு உட்பட்ட பெண்களில் இந்த அளவு 26 சதவிகிதமாக இருக்கிறது. இதையே மாநில அளவில் பார்த்தால், மகளிர் விளையாட்டுகளை தொழில்வாய்ப்பாகக் கருதுவதில் தமிழ்நாடு 27 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இது, பெண்கள் வெறுமனே பார்வையாளர்களாக அல்லது ஆதரவாளர்களாக மட்டுமே இல்லாமல், 'நானும் இதை என் வாழ்க்கைப் பாதையாகத் தேர்வு செய்யக்கூடும்' என்று நினைக்கத் தொடங்கியுள்ளார்கள் என்பதற்கான வலுவான அறிகுறியாக உள்ளது. பிற தொழில் வாய்ப்புகளைப் போலவே விளையாட்டையும் ஒரு உண்மையான வாழ்க்கைப் பாதையாகப் பெண்கள் பார்க்கத் தொடங்குவது, மகளிர் விளையாட்டின் சமூக மதிப்பு உயர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறி. ஆனால், இந்தக் கனவு நனவாக வேண்டுமெனில் பள்ளி மற்றும் கல்லூரி மட்டத்தில் பயிற்சி அமைப்பு, மாவட்ட அளவிலான போட்டி வாய்ப்புகள், பெண்களுக்குப் பாதுகாப்பான பயிற்சி சூழல், தொடர்ந்து வருமானம் ஈட்டக்கூடிய விளையாட்டு அமைப்புகள் ஆகியவை தேவைப்படும். பட மூலாதாரம்,Getty Images தமிழ்நாடு குறித்து அறிக்கை கூறுவது என்ன? இந்த ஆய்வு தமிழ்நாட்டைப் பற்றி ஒருசேர இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. முதலாவதாக, பெண்கள் விளையாட்டில் சமூக ஆர்வம், பார்வையாளர் வளர்ச்சி, தொழில்முறை கனவு ஆகியவை உண்மையில் அதிகரித்துள்ளன. ஆனால் அதேவேளையில், பாதுகாப்பு, நேரமின்மை, பாலின பிம்பங்கள், பள்ளிப் பருவத்திற்குப் பிந்தைய இடைவெளி போன்ற அடிப்படை சமூகத் தடைகள் இன்னும் நீங்கவில்லை. தமிழகத்தில் கபடி போன்ற உள்ளூர் விளையாட்டு அடையாளங்கள், பெண்கள் தொழில்வாய்ப்பாக விளையாட்டை நினைக்கும் முன்னோக்குப் பார்வை ஆகிய இரண்டும் ஒருசேர இருப்பது ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொடுக்கிறது. இருப்பினும் அந்த வாய்ப்பு எளிதானதல்ல. விளையாட்டில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை உயர்வது மட்டுமே போதாது, அவர்கள் பாதுகாப்பாக விளையாட முடியுமா, பள்ளிப் பருவத்திற்குப் பிறகும் தொடர முடியுமா, குடும்பமும் சமூகமும் அதை ஏற்றுக்கொள்ளுமா, விளையாட்டைத் தொழிலாகத் தேர்வு செய்தால் அதில் நிலைத்திருந்து வாழ முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில்களை வடிவமைக்க வேண்டும். இல்லையெனில், மகளிர் விளையாட்டு மீதான தமிழகத்தின் ஆர்வம் பார்வையாளர் மட்டத்திலேயே தங்கி, பங்கேற்புப் புரட்சியாக மாறாமல் தணிந்துவிடும். அறிக்கையிலுள்ள தரவுகளின்படி தற்போதைய நிலையைப் பார்த்தால், தமிழ்நாட்டில் மகளிர் விளையாட்டு மாற்றமும் முரண்பாடும் இரண்டறக் கலந்த ஒரு கதையாகவே உள்ளது. பெண்கள் மைதானத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். இப்போது அந்த மைதானம் அவர்களுக்கான இடமாக மாறக்கூடிய சூழல் ஏற்படுமா என்பதே அடுத்த பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையிலான கணக்கெடுப்பு காந்தர் இந்தியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது, அவர்களே 2020ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வையும் நடத்தினர். இந்தத் திட்டத்தில், இந்தியாவின் பதினான்கு மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரை தனியார் இடங்களில் டேப்லெட் மூலம் நேருக்கு நேர் (CAPI) நேர்காணல் செய்யப்பட்டது. வயது, பாலினம், சமூக-பொருளாதார வகுப்பு (NCCS), கிராமப்புறம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்ட பதினான்கு மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இந்த மாதிரியின் நோக்கமாகும். இரண்டு ஆய்வுகளின் ஒப்பீட்டுத் தன்மையை உறுதி செய்வதற்காக, புதிதாகச் சேர்க்கப்பட்ட சில கேள்விகளைத் தவிர, கணக்கெடுப்புக்கான வினாப்பட்டியலும், கணக்கெடுப்பின் மாதிரி முறையும் மாறாமல் அப்படியே இருந்தன. இந்த ஆய்வு குறித்தும், இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட முறை குறித்தும் மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyj38w3e5vo- யுத்தகால மீறல்களில் முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்கவின் வகிபாகம் என்ன?
யுத்தகால மீறல்களில் முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்கவின் வகிபாகம் என்ன? ; சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் புதிய அறிக்கையில் தகவல் 22 Mar, 2026 | 09:48 AM (நா.தனுஜா) இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட மீறல் குற்றங்களில் முன்னாள் இராணுவத்தளபதி (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்கவின் வகிபாகம் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டமை மற்றும் யுத்தத்தின் பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு நிலையங்களுக்குள் பரவலாக நிகழ்ந்த மீறல்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்வறிக்கையில் தயா ரத்நாயக்க இராணுவத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் பொதுமக்கள் மீதான சட்டவிரோதப் படுகொலைகள், வலுகட்டாயமாகத் தடுப்புக்காவலில் வைத்தல், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், வலிந்து காணாமலாக்குதல் என்பன உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளின்போது பீரங்கிகள், வான்வழித்தாக்குதல் உபகரணங்கள் மற்றும் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள்மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும், அக்காலப்பகுதியில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த வாகரையில் உள்ள பாடசாலை ஒன்றின்மீது நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அக்காலப்பகுதியில் 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய தயா ரத்நாயக்க, இந்த மீறல்களில் முக்கிய பங்கு வகித்ததாக விபரிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்பட்ட கட்டமைப்புக்களுக்குள் அடித்துத் துன்புறுத்துதல், நீருக்குள் மூழ்கடித்தல், மூச்சுத்திணச்செய்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் உளவியல் சித்திரவதைகள் என்பன உள்ளிட்ட பரவலான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241606- தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு 22 Mar, 2026 | 09:41 AM (நா.தனுஜா) இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழர்களும் இன ரீதியாக ஒரு பொதுவான மூலத்தைக் கொண்டவர்கள் என்பதிலும், எமது இரு மொழிகளினால் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. இலங்கையர்களாகிய நாம் இன ரீதியில் எமது பொதுவான தன்மையை உணர்ந்து, 'ஒற்றையாட்சி' அரசியலமைப்புக்குப் பதிலாக 'ஒருமித்த' அரசியலமைப்பை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணம் இதுவாகும். 'ஒருமித்த' அரசியலமைப்பானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முதலாம் பிரிவின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான சுயாட்சி உரிமையை வழங்கும் என தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். 'சமீபத்திய மரபணு ஆய்வுகள், குறிப்பாக கடந்த ஆண்டு Current Biology எனும் இதழில் வெளியான மரபணு வரிசை முறை ஆய்வானது இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தென்னிந்திய மக்களுடன் வலுவான மரபணுத் தொடர்புகளைக் கொண்டிருப்பதைக் காண்பிக்கின்றனவா? அவ்வாறெனில், இன ரீதியாக சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே மரபணுத் தொடர்பைக் கொண்டவர்கள் என்பதும், அவர்கள் மொழியால் மட்டுமே வேறுபடுகிறார்கள் என்பதும் உண்மையா?' என எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஆம், நிச்சயமாக மரபணுத் தொடர்பு இருக்கிறது. சிங்கள வரலாற்று ஆசிரியர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக மகாவம்சம் மற்றும் ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் சிங்களவர்களுக்குப் பிரத்தியேகமான வட இந்திய ஆரிய மூலம் இருப்பதாகக் கூறிவந்தனர். ஆனால் நவீன மரபணுச் சான்றுகள் இதுவரை அவர்களால் முன்வைக்கப்பட்ட தவறான கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவில்லை. உண்மையில் விஜயனும் அவனது 700 தோழர்களும் அவனுடைய தந்தையால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதாகக் கூறப்படும் கதைக்கு இணையான குறிப்புகள் எவையும் வட இந்திய வரலாற்று நூல்களில் இல்லை. எனவே இந்தக் கதை மத நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு புனைவாகும். மகாவம்சம் என்பது ஒரு வரலாற்று ஆவணம் அல்ல. மாறாக அது பௌத்த மதத்தை மேன்மைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட ஒரு புனைவு என்று நாம் நீண்டகாலமாகக் கூறிவருகிறோம். மகாவம்சத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் முழு வரலாற்று விவரிப்பையும் பௌத்த வழிபாட்டின் பின்னணியில் சித்தரிக்கும் வகையில் முடிவடைகிறது. இலங்கையில் பௌத்த மதத்தை நிறுவுவதற்காகவும், அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவுமே மகாநாம தேரரினால் மகாவம்சம் இயற்றப்பட்டிருக்கிறது. எனவே அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை வேதவாக்காக எடுத்துக்கொள்ளாமல், அரசர்களின் வரலாறு உள்ளிட்ட புறம்பான சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தவேண்டும். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தில் சிங்கள மொழி இருக்கவில்லை. ஆகையினாலேயே அது பாலி மொழியில் எழுதப்பட்டது. அக்கால மக்களின் மொழியாகத் தமிழ் இருந்தது. தேவநம்பியதீசன், பண்டுகாபயன் மற்றும் துட்டகைமுனு ஆகிய மன்னர்களின் மொழி கூட தமிழ் தான். துட்டகைமுனு தமிழ் பேசும் பௌத்தராக இருந்தார். எல்லாளன் தமிழ் பேசும் சைவராக இருந்தார். அதேவேளை வட, கிழக்கு தமிழ் வம்சாவளியை 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கண்டறியமுடியும். ஆனால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் மதுரையிலிருந்து தமிழ் பிராமணர்கள் இங்கு வந்து, உள்ளுர் பெண்களைத் திருமணம் செய்து, தம்மை சிங்களவர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு குடியேறியது எத்தனை சிங்களவர்களுக்குத் தெரியும்? இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழர்களும் இன ரீதியாக ஒரு பொதுவான மூலத்தைக் கொண்டவர்கள் என்பதிலும், எமது இரு மொழிகளினால் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. நான் 1950 களின் ஆரம்பத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்ற வேளையில், கீழ்நாட்டு சிங்களவர்கள், மேல்நாட்டு சிங்களவர்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், ஏனைய இலங்கைத் தமிழர்கள், சோனகர், மலாயர்கள் மற்றும் ஏனைய முஸ்லிம்கள், பரங்கியர்கள் என சகல இனங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாகப் படித்தோம். நாம் ஆங்கில மொழியாலும், எமது பாடசாலையினாலும் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாக இருந்தோம். எனினும் 1956 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் எமது ஒற்றுமையை மிகமோசமாகப் பாதித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையர்களாகிய நாம் இன ரீதியில் எமது பொதுவான தன்மையை உணர்ந்து, 'ஒற்றையாட்சி' அரசியலமைப்புக்குப் பதிலாக 'ஒருமித்த' அரசியலமைப்பை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணம் இதுவாகும். 'ஒருமித்த' அரசியலமைப்பானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முதலாம் பிரிவின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான சுயாட்சி உரிமையை வழங்கும். அதேவேளை சுயாட்சி தேவைப்படும் இவ்விரு தரப்பினரைத் தவிர ஏனைய மக்களின் உரிமைகளும் அந்த அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241605- இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு
இஸ்ரேல் அணுசக்தி தளத்தை நோக்கி இரான் ஏவுகணை வீச்சு - ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் கெடு பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images 22 மார்ச் 2026, 06:04 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்குப் புதிய காலக்கெடு விதித்துள்ளார். இரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என்று அவர் கூறினார். டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அடுத்த 48 மணி நேரத்திற்குள் இரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், அமெரிக்கா இரானின் பல மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும்; இது அவர்களின் மிகப்பெரிய நிலையத்திலிருந்து தொடங்கும்," என்று பதிவிட்டுள்ளார். இஸ்ரேலின் அறிவிக்கப்படாத அணுசக்தி தளம் உட்பட தெற்கு இஸ்ரேலில் இரண்டு இரானிய ஏவுகணைகள் தாக்கிய சில மணிநேரத்திற்குப் பிறகு, சனிக்கிழமை (மார்ச் 21) டொனால்ட் டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. போர் தொடங்கிய பிறகு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. டிரம்ப் இந்த சமீபத்திய பதிவை இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அதிகாலை சுமார் 5 மணியளவில் வெளியிட்டார். உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் கடல் வழியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் இரான் மீது பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு உலகின் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய் விநியோகம் சிக்கலாகியுள்ளது. இந்த நீர்வழிப் பாதையின் வடக்கே இரானும், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளன. இது அதன் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சுமார் 50 கிலோமீட்டர் அகலமும், அதன் மிகக் குறுகிய புள்ளியில் சுமார் 33 கிலோமீட்டரும் அகலமும் கொண்டது. இது வளைகுடா நாடுகளை அரபிக் கடலுடன் இணைக்கிறது. உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG - எல்என்ஜி) இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதில் இரானின் எண்ணெய் மட்டுமல்லாமல், கத்தார், இராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற வளைகுடா நாடுகளின் எண்ணெயும் அடங்கும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 21 அன்று டிமோனா மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் ஏஎஃப்பிடிவி காட்சிகளின் ஸ்கிரீன்ஷாட். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கம் வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 கப்பல்கள் இந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கின்றன. ஆனால் சமீப நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது, ஏனெனில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது. ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, போர் தொடங்கியது முதல் மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 21 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன, குறிவைக்கப்பட்டுள்ளன அல்லது தாக்குதலுக்கு உள்ளானதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளன. போருக்குப் பிறகு உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய் விலை இப்போது ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. இரான் பற்றி டிரம்ப் வேறு என்ன சொன்னார்? கடந்த சில மணிநேரத்தில், டொனால்ட் டிரம்ப் இரான் குறித்து சில புதிய அறிக்கைகளை 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்துள்ளார். தி நியூயார்க் டைம்ஸ் செய்தியொன்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, "அமெரிக்கா இரானை வரைபடத்திலிருந்தே அழித்துவிட்டது," என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். டிரம்பின் போர் சாதனைகளைப் பகுப்பாய்வு செய்யும் அந்த அறிக்கை, "டிரம்ப் இரான் போர் குறித்த உண்மையை மறைக்கிறார்" என்ற தலைப்பில் வெளியானது. இரானில் தனது இலக்குகளை அடைவதில் "தோல்வி" அடைந்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். அவர் கூறுகையில், "ஆம், நான் சாதித்துவிட்டேன், அதுவும் திட்டமிட்ட நேரத்திற்குப் பல வாரங்களுக்கு முன்னதாகவே." என்று குறிப்பிட்டுள்ளார். "அவர்களின் தலைமை இல்லாமல் போய்விட்டது, அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டன, அவர்களிடம் தற்காப்புக்கு எதுவுமே இல்லை, இப்போது அவர்கள் சமரசம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை." என்று அவர் கூறியுள்ளார். இரான் பதில் பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளைத் தடுக்கும் திறன் இஸ்ரேலிடம் இல்லை என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகிறார் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, டிரம்ப் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளின் எரிசக்தி மையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களைத் தாக்கப்போவதாக இரானிய ராணுவம் மிரட்டியுள்ளது. முன்னதாக, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்ரி காலிபாஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்து ஏற்கெனவே எடுக்கப்பட்ட அடுத்தக்கட்ட உத்திகளைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது," என்று பதிவிட்டிருந்தார். "மிகவும் பாதுகாக்கப்பட்ட டிமோனா பகுதியில் கூட இஸ்ரேலால் ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை என்றால், இந்த மோதல் செயல்பாட்டு ரீதியாக ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். இஸ்ரேலின் வான்பரப்பு இப்போது பாதுகாப்பற்றதாக உள்ளது," என்று காலிபாஃப் கூறினார். இஸ்ரேலின் 'அணுஆயுத' கிடங்கிற்கு இரான் குறியா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் அராட் நகரில் இரான் தாக்குதலில் ஏற்பட்ட சேதம் இரானின் சமீபத்திய தாக்குதல்கள் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி, குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறங்களை கடுமையாக சேதப்படுத்தியதோடு, தரையில் பெரிய பள்ளங்களையும் ஏற்படுத்தியுள்ளன. மீட்புக் குழுவினரின் தகவல்படி, "அராட் நகரில் 88 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, அருகிலுள்ள டிமோனாவில் 33 பேர் காயமடைந்தனர்." ஏ.எஃப்.பி.டிவி காட்சிகள், தரையில் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளம், சிதறிக் கிடக்கும் இடிபாடுகள் மற்றும் பரவலான அழிவைக் காட்டின. மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு டிமோனாவில் இருப்பதாக நம்பப்படுகிறது; இருப்பினும் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதில்லை. டிமோனாவில் உள்ள ஒரு கட்டடம் "நேரடி ஏவுகணைத் தாக்குதலுக்கு" உள்ளானதாக இஸ்ரேலிய ராணுவம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இதில் ஏவுகணை சிதைவு தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறான். அராட் நகரில், கடுமையாக சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 'ஒவ்வொரு முனையிலும்' பதிலடி கொடுப்பது குறித்துப் பேசினார். இந்தத் தாக்குதலை "மிகவும் கடினமான மாலைப் பொழுது" என்று விவரித்த நெதன்யாகு, இரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என உறுதியளித்தார். சில மணிநேரத்திற்குப் பிறகு, தெஹ்ரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தது. இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே டிமோனா மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தெற்கு இஸ்ரேலில் உள்ள மற்ற நகரங்களையும், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராணுவத் தளங்களையும் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது. நடான்ஸ் தாக்குதலைத் தொடர்ந்து, அணுசக்தி விபத்து அபாயத்தைத் தவிர்க்க "ராணுவக் கட்டுப்பாட்டை" கடைபிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் கிராஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படும் இயந்திரங்கள் நடான்ஸ் நிலையத்தில் உள்ளன. இது ஜூன் 2025 போரிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz78jgjln1po- எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
இன்றிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு 21 Mar, 2026 | 11:59 PM நாட்டில் எரிபொருள் விலைகள் இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Geographic Reference ஐ.ஓ.சி. ஆகிய நிறுவனமும் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து முக்கிய எரிபொருள் வகைகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு: * ஒட்டோ டீசல் – ரூ. 79 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 382 * சூப்பர் டீசல் – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 443 * பெட்ரோல் ஒக்டேன் 92 – ரூ. 81 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 398 * பெட்ரோல் ஒக்டேன் 95 – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 455 * மண்ணெண்ணெய் – ரூ. 60 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 255 இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் இந்த திடீர் உயர்வு பொதுமக்களின் வாழ்வுச் செலவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பல துறைகளிலும் இதன் தாக்கம் காணப்படக்கூடும். https://www.virakesari.lk/article/241593- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானின் 17 மாகாணங்கள் மீது ஒரே நாளில் 640 தாக்குதல்கள் Mar 21, 2026 - 10:03 PM ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் சிறுவர்களா, பொதுமக்கள் அல்லது இராணுவத்தினரா என்பது குறித்த வகைப்படுத்தல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் ஆரம்பமாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை குறைந்தது 1,398 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 210 சிறுவர்களும் அடங்குவதாக மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானிய இராணுவ அதிகாரிகள் 1,165 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மேலும் 657 மரணங்கள் பதிவாகியுள்ள போதிலும், அவர்கள் பொதுமக்களா அல்லது இராணுவ அதிகாரிகளா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை என சர்வதேச ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmn0jphs3000w356p2ep8yoqb- இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
மட்டக்களப்பில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; 03 பேர் 24 மணித்தியாலத்தில் கைது Published By: Digital Desk 3 22 Mar, 2026 | 10:44 AM மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றின் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் சந்தேகநபர்கள் வவுணதீவு பகுதியில் சனிக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகரத்துக்கு 2½ வயதுடைய குழந்தையுடன் சென்ற இளம் தாய் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை, அவர் பாழடைந்த கிணற்றில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். அவருடைய குழந்தை வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதே கிணற்றில் அழுகிய நிலையில் மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பல பொலிஸ் நிலையங்களும், விசேட குற்ற விசாரணைப் பிரிவும், புலனாய்வு பிரிவும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டன. சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளம் தாயை ஏற்றி சென்ற முச்சக்கரவண்டி மற்றும் ஒரு பெண் தொடர்பாக தகவல்கள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து, வந்தாறுமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 26 வயதுடைய பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது கணவர் (34) மற்றும் கணவனின் தம்பி (22) ஆகியோரும் வவுணதீவில் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி சம்பவ தினமான வியாழக்கிழமை வந்தாறுமூலையில் உள்ள தங்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதிக்குச் சென்றுள்ளனர். பின்னர் ஆயித்தியமலை பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, வவுணதீவு பிரதேச செயலக அலுவலகம் முன்பு குழந்தையுடன் பஸ்ஸூக்கு காத்திருந்த இளம் தாயை கண்டுள்ளனர். அப்போது முச்சக்கர வண்டியை நிறுத்தி, எங்கு செல்லவுள்ளதாக கேட்டபோது, அவர் மட்டக்களப்பு நகரத்திற்குச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, “நாங்களும் அங்கு செல்கிறோம், வரலாம்” எனத் தெரிவித்துள்ளனர். அதற்கு இளம் தாய், முச்சக்கரவண்டியில் செல்ல பணம் இல்லை என தெரிவித்துள்ளார். அதற்கு “100 ரூபாய் கொடுத்தால் போதும்” என கூறி, இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கி பயணம் செய்துள்ளனர். பயணத்தின் போது, குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்டெடுக்க வேண்டும் இளம் தாய் என கூறிய நிலையில், நகரை வந்தடைந்ததும் இளம் தாய் குழந்தையுடன் இறங்கியுள்ளார். பின்னர், குறித்த பெண்ணும் தானும் பின்னால் வருவதாக கூறி அவரை பின்தொடர்ந்துள்ளனர். அங்கு குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துள்ளனர். அதன் பின்னர், “நாங்கள் மீண்டும் வவுணதீவுக்கு திரும்புகிறோம்; உங்களுடன் இன்னொருவரையும் ஏற்றி குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வோம்” என்று கூறி மீண்டும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டுள்ளனர். வலையிறவு பாலம் அருகே சென்றபோது, மயக்க மருந்து கலந்து பழச்சாறு கொண்ட ஜூஸ் போத்தலை குடிக்க வழங்கியுள்ளனர். அதை குடித்த இளம் தாய் மயக்கம் அடைய ஆரம்பித்துள்ளார். பின்னர், முச்சக்கர வண்டி வலையிறவு பாலத்தை கடந்து சென்று வண்டியை நிறுத்தியபோது, அதில் இருந்த பெண் இறங்கிய நிலையில், அங்கு காத்திருந்த 22 வயது இளைஞன் வண்டியில் ஏறியுள்ளார். மயக்க நிலையில் இருந்த இளம் தாய் தன்னை இறக்கிவிடுமாறு கோரியபோதும், பின்னர் முழுமையாக மயக்கமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த 05 பவுண் தாலிக் கொடி மற்றும் 1 பவுண் தங்கச் சங்கிலியை கழற்றி கொள்ளையடித்துள்ளனர். பின்னர், குழந்தையை கொத்தியவலை வயல்வெளியில் வீசி எறிந்து, மயக்கமடைந்த இளம் தாயை தாந்தாமலை பகுதியில் உள்ள நெல்லிகாடு வயல்வெளிக்குக் கொண்டு சென்று அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பி தங்களது வீட்டிற்குச் சென்றதுடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை ஈடு வைத்து பணம் பெற்றுள்ளனர். மேலும், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணையும் இதே முறையில் கொலை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/241615- டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
🤣 அல்லாஹு அக்பர் ஈரான் சிந்தாபாத் 🇮🇷 🇮🇷 🇮🇷 💪 💪 💪- உங்களுக்கு தெரியாத வட கொரியா
தம்பரை அதிகம் எதிர்பார்த்து உடைத்து போன உங்கள் மனநிலை அதிகம் பதிக்கப்பட்டு இப்படி கேவலமாக உளற வைத்துவிட்டதே😄- சட்டவிரோத கடலட்டைப் பண்ணையாளர்களுக்கு விசுவாசம் காட்டும் கடற்றொழில் அமைச்சர் ; கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு!
சட்டவிரோத கடலட்டைப் பண்ணையாளர்களுக்கு விசுவாசம் காட்டும் கடற்றொழில் அமைச்சர் ; கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு! 22 Mar, 2026 | 11:59 AM சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால் நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்யமுடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர்கள் மேலும் கூறுகையில், கிராஞ்சி கடற்பகுதியில் தற்போது கடற்றொழில் சமூகத்தினரை தவிர்ந்த ஏனையவர்களே பல நூறு ஏக்கர் கடற்பரப்பில் பண்ணைகளை வைத்துள்ளனர். இதில் சிலர் சட்டவிரோதமாக 30 முதல் 40ஏக்கர் வரை கபளீகரம் செய்து தமது பண்ணைகளை முன்னெடுக்கின்றனர். இதனால் எமது பொருளாதாரம் முற்றாக பறிக்கப்பட்டு விட்டது. நாம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனிடம் இது தொடர்பில் முறையிட்டும் ஏதும் நடக்கவில்லை. அவர் பண்ணையாளர்களுக்கே விசுவாசமாக செயற்படுகின்றார். நாம் எமது நிலையை சொன்னால் வருகிறார் பார்க்கிறார் தீர்வு மட்டும் தரார். ஏனெனில் அவருக்கு பண்ணைகளை செய்பவர்களுடன் முரண்பட விருப்பமில்லை. சட்ட நடவடிக்கை எடுப்போம் என எமக்கு சாக்குப்போக்கு சொல்லி காலத்தை ஓட்டுகின்றார். எனவே எமது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கு உரிய தீர்வை அனுர அரசு தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். https://www.virakesari.lk/article/241622- உத்தர பிரதேசம்: உருவ கேலிக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரி
உத்தர பிரதேசம்: உருவ கேலிக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரி பட மூலாதாரம்,Instagram mirzapur.police படக்குறிப்பு,மிர்சாபூர் எஸ்பி அபர்ணா ரஜத் கௌசிக் கட்டுரை தகவல் சையத் மௌஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 21 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா ரஜத் கௌஷிக் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். இந்த வீடியோவில், காவல் கண்காணிப்பாளர் விளக்கும் விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அவரின் உருவம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மிர்சாபூர் காவல்துறையினர் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா கௌஷிக்கின் செய்தியாளர் சந்திப்பு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர். ஐந்து நாட்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ 47 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 65,000 கமெண்டுகளை பெற்றுள்ளது. காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பதிலாக, பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் காவல் கண்காணிப்பாளரின் தோற்றம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். உருவக் கேலி தொடர்பான இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, காவல்துறை அந்தப் பதிவில் கமெண்ட் இடும் பகுதியை முடக்கியது. இந்த விவகாரம் குறித்து அபர்ணா ரஜத் கௌஷிக்கைத் தொடர்பு கொள்ள பிபிசி முயற்சித்தது, ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அலுவலகப் பணிகளில் மும்முரமாக இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, உடல் தோற்றத்தை இழிவுபடுத்துவது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. சமூகம் எந்த அளவுக்குப் பண்பாடற்றதாகிவிட்டது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பதிலாக, பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் காவல் கண்காணிப்பாளரின் உருவம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அமேதியில் உள்ள முன்னாள் காங்கிரஸ் மேலவை உறுப்பினர் தீபக் சிங், சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துகளைக் கண்டித்துள்ளார். மேலும், இது போன்று யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அபர்ணா ஜி அமேதியில் இருந்தபோது அவரைப் பலமுறை சந்தித்துள்ளோம். அவர் மிகவும் யதார்த்தமான பெண்மணி. ஓர் அதிகாரியைப் பற்றிய கருத்துகள் அவர்களின் வேலையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் இருக்கக்கூடாது. இப்போது பகிரப்படும் கருத்துகள் சரியானவை அல்ல," என்றார். இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சமூக ஆர்வலருமான ரூப் ரேகா வர்மா, "சமூகம் மிகவும் பண்பாடற்றதாக மாறிவிட்டது" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் மற்றும் பொதுமக்களில் ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு பெண், இது போன்ற அநாகரிகத்திற்கும் இழிவான மொழிக்கும் ஆளாக்கப்பட்டு, அவரது கண்ணியம் புண்படுத்தப்பட்டால், சமீப காலங்களில் நமது சமூகம் எவ்வளவு தூரம் வீழ்ந்துள்ளது என்பதையும், அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது," என்றார். "ஒருவர் மற்றொருவரை எப்படிப் பார்க்கிறார் என்பது அந்த நபரின் பார்வையைப் பொறுத்தது," என்றும் ரூப் ரேகா வர்மா கூறுகிறார். இந்தச் சிக்கல் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா ரஜத் கௌஷிக்கோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அதேபோல், பெண்கள் மட்டும் குறிவைக்கப்படுவதில்லை. நமது உயரம், நிறம் அல்லது உருவம் குறித்து சமூக ஊடகங்களிலோ அல்லது அன்றாட வாழ்விலோ நாம் அனைவரும் ஏதோ ஒன்றைக் கேட்டிருப்போம். அன்றாட சமூகத்தின் ஒரு பகுதி 2019-ஆம் ஆண்டு ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் மனநலம் மற்றும் நடத்தை அறிவியல் துறையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, உருவக் கேலி என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்பதை வெளிப்படுத்தியது. இந்தப் பிரச்னை சமூக ஊடகங்களில் மட்டும் காணப்படுவதில்லை, மாறாகப் பள்ளிகளிலும் பணி இடங்களிலும் பெரிய அளவில் காணப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின்படி கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் இந்த எதிர்மறையான கருத்துகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமிருந்தும் வருகின்றன. கணக்கெடுப்புத் தரவுகளின்படி, 47.5 சதவீதப் பெண்கள் பள்ளி அல்லது வேலை இடங்களில் உடல் உருவக் கேலியை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டிய இடங்கள், சில நேரங்களில் சங்கடமானதாகவும் மன ரீதியாகச் சவாலானதாகவும் மாறக்கூடும் என்பதை இது காட்டுகிறது. அதே நேரத்தில், 32.5 சதவீத வழக்குகளில் எதிர்மறையான கருத்துகள் அறிமுகமில்லாதவர்களால் அல்லாமல் நெருங்கிய நண்பர்களால் தெரிவிக்கப்பட்டன என்பது இந்தக் கணக்கெடுப்பின் மற்றொரு உண்மையாகும். உடல் உருவக் கேலி என்பது வெறும் வெளிப்புறச் சமூக நடத்தை மட்டுமல்ல, அது நமது அன்றாட உறவுகள் மற்றும் உரையாடல்களின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது என்பதை இந்தக் கணக்கெடுப்பு காட்டுகிறது. எடை, உடல் அமைப்பு, தோல் நிறம் மற்றும் முடியின் தரம் போன்ற அம்சங்கள் குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துகள் ஒரு நபரின் தன்னம்பிக்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். லக்னோவில் உள்ள யூனிட்டி பிஜி கல்லூரியின் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஷம்சி அக்பர் கூறுகையில், "உருவக் கேலி என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல, அது விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பான நடத்தை போன்றவை அவசரமாகத் தேவைப்படும் ஒரு பரவலான சமூகப் பிரச்னை" என்றார். ஷம்சி அக்பரின் கூற்றுப்படி, "உடலைப் பற்றிய இழிவான கருத்துகளைத் திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம், ஒரு நபரின் சுயமரியாதை படிப்படியாக உடையத் தொடங்குகிறது. அவர் தன்னை மற்றவர்களை விடத் தாழ்ந்தவராகக் கருதத் தொடங்குகிறார் மற்றும் அவருக்குள் தாழ்வு மனப்பான்மை வேரூன்றுகிறது." சட்டம் என்ன சொல்கிறது? அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழக்கறிஞர் சைமா கான் கூறுகையில், அபர்ணா ரஜத் கௌஷிக் போன்ற ஓர் அதிகாரி மீதே இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என்றால், சாதாரண பெண்களுக்கு ஆன்லைன் தளம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றார். அவர் மேலும் கூறுகையில், "ஒரு பெண்ணின் உடல் தோற்றம் குறித்து அநாகரிகமான, இழிவான அல்லது ஆபாசமான கருத்துகளைத் தெரிவிப்பது, கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ்வதற்கான அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது சட்டப்படி குற்றமாக கருதப்படலாம்." என்றார். சைமா கானின் கூற்றுப்படி, "இது போன்ற இணையக் கேலி மற்றும் உடல் உருவக் கேலிக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம், அப்போதுதான் ஒரு மூத்த பெண் போலீஸ் அதிகாரியின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்." உருவக் கேலி ஒரு நபரின் மீது நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பேராசிரியர் ஷம்சி அக்பர் கூறுகையில், "உருவக் கேலியை எதிர்கொள்பவர்களுக்குப் பதற்றம் , மனச்சோர்வு மற்றும் குறைந்த சுயமரியாதை போன்ற பிரச்னைகள் உருவாகலாம். பல சந்தர்ப்பங்களில், இந்த நிலை 'பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்' வடிவத்தை எடுக்கிறது, இதில் அந்த நபர் தனது உடலைப் பற்றி மிகவும் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார். இதன் காரணமாக, அவர் மீண்டும் மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறார், மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறார் மற்றும் ஒருபோதும் திருப்தியடைவதில்லை," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இது மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினை ஈட்டிங் டிஸார்டர் போன்ற ஆபத்தான நடத்தைகளுக்கும் வழிவகுக்கும், அங்கு ஒரு நபர் தனது உடலை மாற்றிக்கொள்ள ஆரோக்கியத்திற்குப் புறம்பான முறைகளைக் கையாளத் தொடங்குகிறார்"என்றும் விளக்கினார். அபர்ணா ரஜத் கௌஷிக்கின் பின்னணி பட மூலாதாரம்,Instagram mirzapur.police படக்குறிப்பு,உடல் உருவக் கேலி ஒரு நபரின் மீது நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த அபர்ணா ரஜத் கௌஷிக், 2015-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி . உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக அவர் எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர் அபர்ணா ரஜத் கௌஷிக். அவர் ஐபிஎஸ் அதிகாரியாவதற்கு முன்பு, குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐபிஎஸ் அதிகாரியான பிறகு, உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றினார். அதன் பிறகு அமேதியில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். கஸ்கஞ்ச் மற்றும் அவ்ரையா போன்ற மாவட்டங்களிலும் அவர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், லக்னோவில் துணைக் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். பிரயாக்ராஜ் என்ஐடி-யில் பி.டெக் முடித்துள்ளார் அபர்ணா ரஜத் கௌஷிக். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gl9pnrqlwo- அப்பிள்போன் வேணும் தம்பி….
சரி ஆச்சி 15-16-17 எதணை வேணும்? கதையோட கதையா எனக்கும் உந்த டிக்டொக்கை ஒருக்கா பழக்கி விடணை.- அப்பிள்போன் வேணும் தம்பி….
ஊர் நடப்பை நகைச்ச்வையாக சொன்ன உங்கள் ஆக்கத்துக்கு நன்றி😅 - இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.