stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
இந்த படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. தியேட்டரில் போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காது. எப்போதாவது OTTயில் வெளிவரும் போது பார்க்கலாம்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ரசோதரன், உங்களைப் போலத்தான் நானும் எந்த நடிகரின் ரசிகனும் இல்லை. ஒருகாலத்தில் வாத்தியாரை (எம்.ஜி.ஆர்.) ரசித்திருக்கிறேன். இப்போது நல்ல படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பேன். அதற்கப்பால் நடிகர்கள் மீது எந்தப் பற்றும் இல்லை. நீங்கள் சேரனைப் பற்றிக் குறிப்பிட்டதால், இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சினிமா என்ற தளமே இல்லையென்றால், அவர் கருத்துக்களுக்கு ஒரு வெளிச்சமும் கிடையாது. சேரன், விஜய் அளவுக்கு பிரபலமாக இருந்திருந்தால், அவர் பேசும் மொழியும், நிலையும் வேறாக இருந்திருக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமே இல்லை. ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களை ஆர்வமாக உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில், பாரிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கு சேரனுக்கு அழைப்பு சென்றது. தனக்கும் தனது மனேஜருக்கும் பிஸினஸ் கிளாஸ் விமான டிக்கெட், ஸ்டார் ஹொட்டல் தங்குமிடம் வேண்டும் என்றார். அது சாத்தியமில்லை என்று கூறியபோது, தனக்கு மட்டும் அந்த வசதிகள் வேண்டும். மனேஜருக்குப் பரவாயில்லை என்று கொஞ்சம் தளர்வு காட்டினார். ஒருகாலத்தில் தியேட்டரில் டிக்கெட் கிழித்தவர், புகழ் கிடைத்தவுடன் இவ்வளவு எதிர்பார்ப்புகளா? அதே நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருது வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு, அவருக்குக் கிடைத்த அன்பளிப்பையும் குறும்பட வளர்ச்சிக்காகத் திருப்பி வழங்கிவிட்டு சென்றார். இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சேரனின் நிலைப்பாடு எவ்வளவு வெறுமையாக இருக்கிறது என்பது என்னளவிலான தெளிவு. இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை. அதை ஏளனமாகக் கேள்வி கேட்பதற்கு முன்னால், பாரம்பரியக் கட்சிகள் ஆண்டாண்டுக்காலமாகச் செய்த ஊழல், சட்ட மீறல்கள் பற்றி திறந்தவெளியில் பேச சேரன் தயாராக இல்லை. ‘புதிய கட்சி வந்து என்ன சாதிக்கும்?’ என்று கேட்பது எளிது. அதே நேரத்தில், ‘பழைய கட்சிகள் தொடர்ந்து இதேபோலச் செயல்பட்டால் பரவாயில்லை’ என்று பொருள்படும் வகையில் பேசுவது பொறுப்பற்ற அணுகுமுறை. உண்மையில், நீங்கள் குறிப்பிடாவிட்டால் சேரன் என்ற பெயரே நினைவுக்கு வராத அளவுக்கு அவர் தாக்கம் குறைந்துவிட்டது என்பதே நிஜம். மேற்கு நாடுகளில் நாடுகளில் அரசியல்வாதிகளின் தகுதி, திறன், பின்னணி ஆகியவை ஆராயப்படும். ஆனால் தெற்காசிய அரசியலில் அது அவ்வளவாகப் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இன்னும் ஒன்று யேர்மனியில் கட்சிகள் தனித்துத்தான் போட்டியிடுகின்றன. தேர்தல் முடிந்தபின் ஆட்சியமைக்க போதிய பலம் இல்லையென்றால் மட்டும்தான் கூட்டு சேர்வார்கள். தமிழ்நாட்டுத் தேர்தலில் வெல்லுமட்டும் ஏதாவது சொல்வார்கள். சில புத்திசாலிகள் மௌனமாக இருப்பார்கள். வென்றபின் ஆளுயர மாலையோடு போய் நிற்பார்கள். “நீங்கள்தான் வெல்லுவீர்கள் என்று எனக்கு அப்பவே தெரியும் என்பார்கள்” எதுவானாலும் இறுதியில் தீர்மானிப்பது மக்கள்.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
தரமான அறிவுசார் விளகங்கள் @vasee 🙏. வரப்போகும் பதில்களுக்கு தயாராகவும்😂.
- Today
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
Khorramshahr-4 இது ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணை இல்லை என கூறப்பட்டுள்ளது
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
https://yarl.com/forum3/topic/309629-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-f-35-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/#findComment-1816788 இந்த திரியில் உள்ள கட்டுரையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
பிற ஊதா கதிரியக்க (IIR + EO) மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையே Passive System என அழைக்கிறார்கள். ரடாரின் மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Active system என அழைக்கிறார்கள், விமானத்திலிருந்து விமானத்திற்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை விமானத்திலிருந்து வெளியேறும் ராடர் சிக்னலை உள்வாங்கி செயல்படுவதனை semi active system என அழைக்கிறார்கள். ராடர் வழிநடாத்தப்படாத விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Passive System என அழைக்கிறார்கள். விமானங்களில் உள்ள பாதுகாப்பு பொறிமுறைகள் ராடர் இயக்கப்படுவதனை இனங்காணக்கூடியதாக காணப்படுவதால் நீண்ட குறுந்தூர ராடரில் இயங்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை செலுத்திகளை விமானங்கள் இலகுவாக இனங்காணுவதாக கூறுகிறார்கள், அத்துடன் F-35 போன்ற உரு மறைப்பு விமானங்கள் அதிக அதிர்வு கொண்ட ராடரிற்கு புலப்படாது ஆனால் VHF வகை ராடரிற்கு புலப்படும் அதிர்வு அலை அகலமாக இருப்பதால் தாக்குதல் துல்லியமாக இருக்காது என்பதால் இரஸ்ஸிய தரப்பு VHF + UHF + L band(microwave) போன்றவற்றின் மூலம் F-35 போன்ற உருமறைப்பு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழிநடத்துகிறார்கள். ஈரான் பாவிக்கும் IIR வகை குறுந்தூர (0.7KM - 8KM) விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விமானம் இனங்காண முன்னரே விமானம் தாக்கப்பட்டுவிடும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இதே போல் சீமானிற்கு திடீரென முளைத்த மகன் ஒருவர் இருக்கிறார்… அவர் யார் என்பதும், அவர் ஏன் பெற்றாரை விட்டு சீமானோடு வாழ்கிறார் என்பதுமே மர்மாக உள்ளது. அவரின் பெயரிலும் சீமானின் இயற்கையான மகன் மாவீரன் பெயரும் விடுபட்டுள்ளது. திமுக, நாதக இருவரும் ஒரே கள்ள கூட்டம்தான். பிள்ளைகள் பெயரில் கள்ள சொத்தை எழுதி வைப்பவனை விட, பிள்ளையிடம் கொடுத்த கடனை, கடன் என எழுதி வைப்பவன் பரவாயில்லை.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இராக் விமனநிலையத்தில் இரகசியமாக தரித்து இருந்த black hawk என்ற உலங்கு வானூர்தியின் வால் பகுதி காக்கப்பட்டு வால் பகுதி அழிக்கபட்டு இருப்பதாக தகவல். இந்த தாக்குதலின் நோக்கம் ஈராக் விமான நிலையத்தின் குறிப்பிட்ட மிகவும் பாதுகாப்பான பகுதியை தாக்கப்பட முடியும் என்று காட்டுவதற்கு. இது அமெரிக்காவின் ஈராக் green zone இல் தப்பி ஓடுவதற்கான , (வியட்நாம் இல் செய்து வைத்து இருந்தது போன்ற) ஓர் ஏற்பாடு என்றும் தகவல். ஒன்றும் உறுதிபடுத்தப்படவில்லை.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
என்ன அண்ணை மாய்மாலம் போடுறியள்😂. உங்கள் பெயர் செபஸ்டியன் சைமனா என்கிற சீமானா? இல்லைத்தானே? அல்லது சீமான் யாழ் கள உறுப்பினரா? நான் மேலே எழுதியது முழுக்க சீமானை பற்றி. எந்த யாழ்கள உறவையும் பற்றி அல்ல. ஏன் இந்த பொய் பித்தலாட்டம் பெரிய சகோ? புலவர், நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி சீமானின் 25 ஏக்கர் காணி பற்றிய ஆதாரம் எங்கே என்பது. நான் பதிந்த கபிலன் பதிவில் அதற்கான பத்திரத்தின் கொப்பி உட்பட்ட ஆதாரம் உள்ளது. கபிலன் கருத்துநிலை இங்கே தேவையில்லாதது. சீமான்+மனைவி 25 ஏக்கர் காணி வாங்கியதை நான் நிறுவி உள்ளேன். அதை அவர்களே அபிடேபிட்டில் போட்டுள்ளார்கள். அதை ஏற்க மனம் இல்லை, பதிவு போட்டவரை பற்றி எழுதுகிறீர்கள்😂.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : ஏ…..ஏஹேஹே…..ஓ…..ஓஹ்ஹோ…. ராராரா ராராரா ராராரா ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய் ஆண் : காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி இரு கண்களில் மை எழுதி கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி அவள் கோடியில் ஓர் அழகி ஆண் : தொட்டுத் தொட்டுக் கட்டுக் கதை இட்டுச் செல்லும் பட்டுக் கண்கள் ஓ….. குளு குளு குளு குளு குளு குளு குளு குளு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஆண் : நேற்றிரவு நல்ல பால் நிலவு எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு வந்தவள் யார் ஒரு தேவதையோ அவள் வார்த்தைகள் தேன் மழையோ ஆண் : செல்லக் கன்னம் வெல்லம் என்று மெல்ல மெல்ல கிள்ள கிள்ள ஓஹ் கிளுகிளு கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹேய் …….! ...... உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று .....
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல் டெஹ்ரான்: ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ஆதாரமாக, போர் விமானங்களின் உடைந்த பாகங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க ராணுவமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது ஒரு விமானி பாராாசூட் மூலம் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. அந்த விமானியை ஈரான் ராணுவம் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க விமானி பிடிபட்டது தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். தற்போது இரண்டாவது எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.hindutamil.in/news/world/iran-military-says-it-shot-down-us-f-35-and-f-15-jets
-
ரேபிஸ் : நாய் நகக்கீறலால் 2 மாதங்களுக்குப் பின் சிறுமி மரணம் - "தடுப்பூசி இன்றி பிழைத்த வரலாறே இல்லை"
ரேபிஸ் : "தடுப்பூசி இன்றி பிழைத்த வரலாறே இல்லை" - நாய் நகக்கீறலால் 2 மாதங்களுக்குப் பின் சிறுமி மரணம் படக்குறிப்பு,ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சிறுமி சுஹாசினி கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 57 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் கீறிய பின்னர், ரேபிஸ் தடுப்பூசி ஏதும் செலுத்திக் கொள்ளாத நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சிறுமி ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதால், அவரது உடல் இதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அரசு அதிகாரிகள் கண்காணிப்புடன் தகனம் செய்யப்பட்டது. ரேபிஸ் நோயின் தாக்கம் என்ன? சிறு அலட்சியம் கூட எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி 2 மாதம் கழித்து தீவிரமான ரேபிஸ் பாதிப்பு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆயத்த பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமி. இவர்களது மகள் செல்வசுஹாசினி (14 வயது). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி வீட்டில் வளர்த்த நாயுடன், செல்வசுஹாசினி விளையாடும்போது நாய் நகத்தால் கீறியுள்ளது. சிறுமிக்கு எந்த தடுப்பூசியும் கொடுக்கப்படவில்லை. பின்னர், கடந்த 28-ஆம் தேதி செல்வ சுஹாசினிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. "நல்லா பேசிட்டு இருந்த பொண்ணு திடீரென இறந்ததை எங்களால நம்ப முடியவில்லை," என்கிறார் உயிரிழந்த செல்வ சுஹாசினியின் உறவினரான முத்தமிழ் செல்வம் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "செல்வ சுஹாசினி கடந்த மார்ச் 27-ஆம் தேதி மாலை திடீரென உடல் வலி அதிகமாக இருப்பதாக அவரது தந்தையிடம் தெரிவித்தார். மறுநாள் சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதால் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்." என்கிறார். இரண்டு நாட்களாக உணவு எடுக்காமல் இருந்த சுஹாசினி தண்ணீர் குடிக்க மிகவும் பயந்ததால் ரேபிஸ் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் முத்தமிழ் செல்வம். "நாய் எதுவும் கடித்ததா" எனக் கேட்டதற்கு சுஹாசினி கடந்த ஜனவரி மாதம் வீட்டில் வளர்க்கும் நாய் நகத்தால் கீறியதில் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதற்காக எந்த தடுப்பூசியும் போட்டு கொள்வில்லை எனத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுஹாசினியின் ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடனடியாக "தூத்துக்குடி அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுஹாசினியை சனிக்கிழமை இரவு அனுமதித்தோம்." என்கிறார் செல்வம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படபடம் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் (Quarantine Ward) வைத்தருந்தனர். இருப்பினும் அவ்வப்போது, "எங்களுடன் இயல்பாக பேசி சிரித்து வந்தார் சுஹாசினி," என்கிறார் செல்வம். ஆனால் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சுஹாசினியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. "எங்களிடம் மோசமாக கத்தி கூச்சலிட்டு பேசி கடுமையாக நடந்து கொண்டார்" என நினைவு கூர்ந்தார் செல்வம். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சுஹாசினியை தனிமைப்படுத்தும் அறையை விட்டு வெளியே வராத அளவு அங்கேயே வைத்திருந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் சுஹாசினி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊர் மக்கள் "அவரது உடலைப் பெற்று மதுரையில் உள்ள ஒரு தகன மேடையில் உடலை தகனம் செய்து விட்டோம். எங்களால் சுஹாசினி இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பேசி சிரித்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை அவரது தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர்களும் வெளியே வர முடியவில்லை," என செல்வம் கூறுகிறார். சுஹாசினி ரேபிஸ் நோயால் உயிரிழந்ததால் அரசு மருத்துவமனையில் புதியம்புத்தூரைச் சேர்ந்த 75 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். "எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்." என கூறும் முத்தமிழ் செல்வம், "சுஹாசினியை நகத்தால் கீறிய நாயை கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். அது நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களில் ஒன்று. எந்த நாய் கடித்தாலும், கீறினாலும் உடனடியாக ஊசி போட்டுக் கொள்ளுங்கள் ஊசி போடுவதை தவிர்த்ததால் இன்று எங்கள் பிள்ளையை நாங்கள் இழந்து விட்டோம்." என்றார். பட மூலாதாரம்,Getty Images தடுப்பூசி செலுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் நாய் நகத்தால் கீறிய உடனே தடுப்பூசி செலுத்திருந்தால் சிறுமியின் உயிர் போயிருக்காது என்கிறார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் முரளிதரன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்," செல்வ சுஹாசினியை கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் காலில் கீறியுள்ளது. அதே நாள் அவரது அப்பாவையும் கடித்துள்ளது. அவரது அப்பா உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நகம் கீறலுக்காக எந்த மருத்துவ சிகிச்சை எடுக்காததால் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு பின் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது." என்றார். ரேபிஸ் நோயிக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று ஒன்றுமில்லை எனக் கூறும் மருத்துவர் முரளிதரன், "ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த உடனேயே அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்த நரம்பியல் மருத்துவர் ரேபிஸ் நோயால் சுஹாசினி பாதிக்கப்பட்டு இருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தார்." எனத் தெரிவித்தார் சிறுமி நாய் கீறிய உடனே தடுப்பூசி எடுத்திருந்தால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் ரேபிஸ் நோய் தொற்று பாதித்த நாய் நக்கினாலோ, கடித்தாலோ அல்லது நகத்தால் கீறினாலோ ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும். நாய் எச்சில் பட்ட உடனே சோப்பு போட்டு தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், "60 நாட்களுக்கு முன்பு சிறுமியை நாய் நகத்தால் சிறிய அளவு கீறியதால் நரம்பு மண்டலத்தை உடனடியாக பாதிக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல தடுப்பூசி போடாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது." "செல்வ சுஹாஷினி ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வரும்போது ஹைட்ரோபோபியா (hydrophobia) பாதிப்பு அதிகமாக இருந்தது. ஹைட்ரோபோபியா பாதிக்கப்பட்ட நபர் தண்ணீர் குடிக்கவோ அல்லது பார்க்கவோ பயப்படுவார், மேலும் தொண்டையில் கடுமையான வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும்." என்றார் அதன் அடிப்படையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கியதால் சிறுமி உயிரிழந்தாக கூறுகிறார் மருத்துவர் முரளிதரன். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... உடலை ஏன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை? மருத்துவர் முரளிதரன் கூறுகையில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட உடல்களைக் குடும்பத்தினரிடம் நேரடியாக ஒப்படைக்க கூடாது. எனவே மருத்துவமனை நிர்வாகம் உடலை உரிய மரியாதையுடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தோம். சுகாதார ஆய்வாளர் உடலை முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஒப்புதலின் படி அவர்களின் முறைகளை பின்பற்றி தகனம் செய்துள்ளனர். "ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட மாட்டாது. உடலில் இருந்து வெளியாகும் உமிழ்நீர் உள்ளிட்ட திரவங்கள் மற்றவர்கள் மீது படும்போது ரேபிஸ் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மருத்துவ நடைமுறைப்படி உடல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளிடம் ஒப்படைக்கப்பட்டது," என்கிறார் முரளிதரன். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form வீட்டு நாய்களை பராமரிப்பது எப்படி? வீட்டில் வளர்க்கும் நாய்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராமகிருஷ்ணன் விளக்குகிறார். "வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்துவது அவசியம். மூன்று மாதம் ஆனதிலிருந்து நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் இந்த தடுப்பூசி அருகே உள்ள அனைத்து அரசு கால்நடை மருத்துவமனையிலும் போடப்படும்." "வீட்டில் வளர்க்கும் நாய் தான் என அலட்சியமாக இருக்கக்கூடாது, கவனத்துடன் பழக வேண்டும். நாய் நகத்தால் கீறினாலோ கடித்தாலோ அல்லது நாய் எச்சில் பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுகி தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடித்ததாக சந்தேகம் ஏற்பட்டாலே உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது." "நாய் எந்த அளவு நம்மளை கடினமாக கடிக்கிறதோ அந்த அடிப்படையில் அதனுடைய பாதிப்பு ஏற்படும். மூளைக்கு அருகே உள்ள பகுதியில் கடித்தால் உடனடி பாதிப்பு ஏற்படும் கால் போன்ற இடங்களில் கடித்தால் அதனுடைய தாக்கம் சற்று குறைவாக இருக்கும் ஆனால் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்," என்கிறார் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராமகிருஷ்ணன். விலங்குகள் கடித்த உடனேயே தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ரேபிஸ் தொற்று உறுதியான ஒருவர் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கிறார் முன்னாள் பொது சுகாதார துறை இயக்குநரான குழந்தைசாமி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் பாதிப்பில் இருந்து ஒருவர் உயிர் பிழைத்ததாக எந்தவொரு ஆவணமும் இல்லை. கிருமியில் இருந்து வைரஸ் பரவுவதற்கு சராசரியாக 10 நாட்கள் ஆகும், கடி ஏற்பட்ட இடத்தைப் பொருத்து இது மாறுபடும். ரேபிஸ் தடுப்பூசி 7 நாட்களில் வேலை செய்ய துவங்கும். எனவே தாமதமின்று தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் இதற்கு ஒரே வழி," என்றும் தெரிவித்தார். ரேபிஸ் நாய்கள் மட்டுமின்றி பூனைகள், கால்நடைகள் வன விலங்குகள் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0wqyk542qo
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள் .........! 😍
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ருக்கலாம். எங்காவது nuclear power control electronics போன்ற உணர்த்திறன் உள்ள பகுதிகள் சேதம் அடைந்த்து / பாத்திக்கப்பட்டு இருந்தால்காலம் எடுக்கும். னெனில், அணுசக்தியாலேயே EMAL ( Electromagnetic Aircraft Launch System) எனப்படும் , அந்த போர்விமானதை உந்தி பறக்க ஏவும் பொறியமைப்பு வேலை செய்வது. வேறு எல்லா சக்தி, விமானம்தாங்கி அசைவு, வேகம் உட்பட, எல்லாம் அணுசக்தியால்.
-
காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி: ட்ரம்ப் உத்தரவு
காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி: ட்ரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு பாதிப்பா? புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற அல்லது பிராண்டட் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். மருந்துகள், மூலப்பொருட்களின் இறக்குமதியால் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கையாள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க அரசுடன் மிகவும் விருப்பமான நாடு என்ற அடிப்படையில் விலை நிர்ணய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மருந்து உற்பத்தியை அமெரிக்காவிலேயே மேற்கொள்ள ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு பூஜ்ஜியம் சதவீத வரி சலுகை அளிக்கப்படும். தற்போது ஆலைகளை அமைத்துக்கொண்டிருந்து, ஆனால் விலை நிர்ணய ஒப்பந்தம் செய்யாத நிறுவனங்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும். இது நான்கு ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர்த்தப்படும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய மருந்து நிறுவனங்கள் உலக அளவில் ‘ஜெனரிக்' எனப்படும் மருந்து உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இவற்றுக்கு தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், குறுகிய காலத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளுக்கு பாதிப்பு இருக்காது. ஜெனரிக் மருந்து இறக்குமதியையும் ஓராண்டுக்குப் பிறகு ஆய்வு செய்யப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதால், டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ், சன் பார்மா, பயோகான் போன்ற இந்திய நிறுவனங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி: ட்ரம்ப் உத்தரவால் இந்தியாவுக்கு பாதிப்பா?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
உதயநிதி சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி: வேட்பு மனுவில் தகவல் துணை முதல்வர் உதயநிதிக்கு ரூ.20.64 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: உதயநிதி தனது கையிருப்பில் ரூ.50,000, அவரது மனைவி கிருத்திகா கையிருப்பில் ரூ.75,000 இருப்பதாக தெரிவித்துள்ளார். மகள் தன்மயா வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.2,56,940 இருப்புள்ளது. அதேபோல், தனது பெயரில் ரூ.1 கோடி மதிப்பிலான டிபென்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்புடைய இன்னோவா கார் இருப்பதாகவும், தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏதுமில்லை என்றும், மனைவி கிருத்திகாவிடம் 1,600 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக, அசையும் சொத்துகளாக உதயநிதியிடம் ரூ.12.92 கோடியும், அவரது மனைவி யிடம் ரூ.13.25 கோடியும், மகளிடம் ரூ.2.56 லட்சமும் உள்ளன. இதுதவிர, உதயநிதி பெயரில் ரூ.7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் அசையா சொத்துகள் இல்லை. மொத்தமாக உதயநிதி பெயரில் மட்டும் ரூ.20.64 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளன. மேலும், அவர் பெயரில் தற்போது 10 குற்றவியல் வழக்குள் நிலுவையில் இருக்கின்றன. இதற்கிடையே, கடந்த 5 ஆண்டுகளில் வருமானவரி கணக்கில் காட்டப்பட்ட வருமானம் அடிப்படையில் உதயநிதியைவிட, கிருத்திகாவின் வருவாய் அதிகரித்துள்ளது. 2022–23-ம் ஆண்டில் ரூ.7.94 கோடியாக இருந்த உதயநிதியின் ஆண்டு வருமானம், 2024–25-ம் ஆண்டில், ரூ.10.40 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல், 2023–24-ம் ஆண்டில், ரூ.44.94 லட்சமாக இருந்த, கிருத்திகாவின் வருமானம், 2024–25-ல் ரூ.2.92 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2021-ம் ஆண்டு தேர்தலில் உதயநிதி காட்டியதைவிட, அவரின் சொத்து மதிப்பு தற்போது குறைந்துள்ளது. 2021-ல் உதயநிதிக்கு ரூ.21.13 கோடியும், கிருத்திகாவுக்கு ரூ.1.15 கோடியும் அசையும் சொத்துகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. விடுபட்ட இன்பநிதி துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்த சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில், அவரது மகன் இன்பநிதி பெயர் மற்றும் சொத்து விவரங்கள் இடம் பெறவில்லை. 2021-ம் ஆண்டு உதயநிதி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இன்பநிதி பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அவர் பெயரில்லை. மேலும், இன்பநிதி தற்போது ‘ரெட் ஜெயிண்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/udhayanidhi-net-worth-rs-2064-crore
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இந்தக் கபிலன் தவெக வின் ஆள் தன் தலைவைர் ஒரு படத்துக்கு 200 கோடி வாங்குபவர் மொத்தம் 550 கோடி பணம் இருப்பதாக கணக்குக் காட்டுகிறார். அவர் தனது தலைவனின் கணக்கு வழக்குகளை முதலில் கணக்குப் பார்க்கட்டம். வாங்கிய காருக்கு வரிகட்ட மறுத்ததும் கணக்கில் வராத சுறா படத்தின் வருமானத்தையும் கணக்கு காட்டச் சொல்லட்டும். மற்றும் காரே இல்லாத 10 ஆயிரம் ரோக்கப் பணத்தை வைத்திருக்கும் யோக்கியவான்களை புனிதர்களாக்குவதற்காக சீமானை வசைபாடும் திராவிடவாதிகள் கண்களுக்கு இதுவெல்லாம் தெரியாது போல் உள்ளது.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈராக்கால் தாக்கப்பட்ட அமெரிக்காவின் A-10 போர்விமானம் - 20 ஆண்டுகள் வரலாற்றில் ட்ரம்புக்கு ஆட்டம் காட்டிய ஈரான்! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப்படைகள், ஈரானின் மீது ஒரு மாதத்திற்கும் மேலாகத் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் இராணுவ வலிமை "முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டது" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவந்த போதிலும், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்கள் ஈரானின் தற்காப்புத் திறன் இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பதைக் காட்டுகின்றன. ஈரானால் அமெரிக்காவின் F-15E Strike Eagle மற்றும் A-10 Warthog ஆகிய இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இது அமெரிக்க இராணுவ வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வாகும். இதற்கு முன்னதாக, 2003ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பின் போதுதான் ஒரு அமெரிக்கப் போர் விமானம் (A-10) கடைசியாகப் போர்க்களத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2003இல் ஈராக் தாக்கிய விமானம் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்கா, பெரும்பாலும் வான் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கிளர்ச்சிக் குழுக்களுடன் போரிட்டு வந்ததே இந்த நீண்டகால இடைவெளிக்குக் காரணம் என்று ஓய்வுபெற்ற வான்படை பிரிகேடியர் ஜெனரல் ஹூஸ்டன் காண்ட்வெல் குறிப்பிடுகிறார். ஈரானின் பிரதான ரேடார் அமைப்புகள் அமெரிக்கத் தாக்குதல்களால் சேதமடைந்திருந்தாலும், அவை இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை. அமெரிக்க விமானங்கள் தற்போது தாழ்வான உயரத்தில் (Lower Altitudes) பறப்பது அவற்றை ஈரானின் ஏவுகணைகளுக்கு இலக்காக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நிபுணர்களின் கருத்துப்படி, இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தோள்பட்டையில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணைகள் (Shoulder-fired missiles/MANPADS) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவை ரேடார்களில் சிக்காமல் மிக இரகசியமாகச் செயல்படக்கூடியவை. மேலும், ஈரான், அகச்சிவப்பு (Infrared) மற்றும் மின்-ஒளி (Electro-Optical) உணணிகளைப் பயன்படுத்தி விமானங்களின் எஞ்சின் வெப்பத்தை வைத்து அவற்றைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. ஈரானிய போர் வியூகம் வீழ்த்தப்பட்ட F-15E விமானத்திலிருந்து ஒரு வீரர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய ஆபத்தான சூழலில், விமானிகள் தற்காப்பு உத்திகள் மற்றும் அவசரகால வெளியேற்றம் (Ejection) குறித்துப் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். எனினும், ஈரானியப் படைகள் அமெரிக்க வீரர்களின் இருப்பிடத் தகவல்களை இடைமறிக்கவோ அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ முயற்சிப்பதால் மீட்புப் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அமெரிக்கப் பொதுமக்கள், உயிரிழப்புகள் இல்லாத போர்களைக் கண்டு பழகிவிட்ட நிலையில், இத்தகைய இழப்புகள் உள்நாட்டில் போருக்கான ஆதரவைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அமெரிக்கா இதுவரை 13,000க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டு 12,300 இலக்குகளைத் தாக்கியுள்ளது, ஈரானின் இந்த பதில் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. "சிதைக்கப்பட்ட ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு என்பது அழிக்கப்பட்ட அமைப்பு என்று அர்த்தமல்ல" என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஈராக்கால் தாக்கப்பட்ட அமெரிக்காவின் A-10 போர்விமானம்- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இவ்வளவு விமான சேதம் / அழிவு நேற்று நடந்தகாக.- அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
கேலிச்சித்திரம்..... வேறை லெவல். 😂 படத்தில் Second Aid Box என்று எழுதியுள்ளமை... ஓவியரின் கற்பனையின் மணிமகுடம். 🤣- நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
வழக்கம்பரை முகாம் பொறுப்பாளாராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்மேகம் போன்ற விதிவிலக்கான ஓரிரு அதிகாரிகளும் பணியாற்றியிருந்தனர். சுழிபுரம் சந்தி முகாமிற்கு பொறுப்பாக இருந்த ராமையா என்ற அதிகாரி மிகமோசமாக நடந்துகொண்டார். போராளிகளின் தாக்குதலில் விக்ரோறியாக் கல்லூரி அருகில் கொல்லப்பட்டார், அந்த தாக்குதலை மேற்கொண்ட போராளியும் சாவடைய அவருடைய உடலை ஜீப்பில் கட்டி இழுத்து சென்றிருந்தனர். அத்தோடு வீடு வீடாக வந்து வளர்ந்த ஆண்கள் எல்லோருக்கும் மோசமான அடி விழுந்தது.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
உங்கள் கருத்துக்கள் எல்லாம் உங்கள் நெஞ்சிலுள்ள வெறும் வஞ்சமும் யாழில் கருத்தெழுதுபவர்களை துரத்தி துரத்தி பழி தீர்ப்பதும் மட்டும் தான் சகோ. கருத்தாடல் என்பது முதலில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதிலிருந்து தான் தொடங்குகிறது. நீங்கள் கேட்கப்போவதில்லை. எனவே டொட்.- ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?
இன்று இரவு 10 மணிக்கு... HORMUZ திறக்கப் படும். - ட்ரம்பு.-- 453 வைத்திய பட்டதாரிகளுக்கு நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்!
சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு Apr 4, 2026 - 07:11 PM சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (04) நண்பகலுடன் நிறைவடைந்தன. இந்த ஆண்டு பயிற்சியை முடித்த 453 வைத்தியர்களில் 435 பேர் அல்லது 96 சதவீதமானோர் நியமனங்களுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்திய அதிகாரிகள் நியமனங்களுக்கு அவர்கள் எவ்வாறு விண்ணப்பித்துள்ளனர் மற்றும் அவர்களின் திறமைப் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில், புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடனும் அறிவியல் பூர்வமான முறைமையின் கீழும் மேற்கொள்ளப்படும் இந்த நியமனங்கள் ஊடாக, நாடு முழுவதும் நிலவும் வைத்தியர்களுக்கான தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள சேவை நிலையங்கள் மற்றும் பணியில் இணைய வேண்டிய திகதி போன்ற விபரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmnkdrhog0000356pd8m4mvz5 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.