stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல்: ட்ரம்ப் கடும் விமர்சனம் Mar 19, 2026 - 10:16 AM ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் இந்த நடவடிக்கையே முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது 'Truth Social' சமூக ஊடக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ட்ரம்ப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "மத்திய கிழக்கில் நடப்பவற்றால் கோபமடைந்துள்ள இஸ்ரேல், ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எனும் பிரம்மாண்ட எரிவாயு வயல் மீது வன்முறையான தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த முழு அமைப்பில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதிக்கு மாத்திரமே இதனால் சேதம் ஏற்பட்டுள்ளது." "இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அத்துடன் கட்டார் தேசம் எந்த வகையிலும் இதில் தொடர்புபடவில்லை என்பதுடன், இவ்வாறான ஒன்று நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஈரான் இந்த உண்மைகளை அறியாமல் அநியாயமாக கட்டாரின் எல்.என்.ஜி (LNG) மையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மிகவும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க 'தெற்கு பார்ஸ்' வயல் மீது இஸ்ரேல் இனிமேல் தாக்குதல்களை நடத்தாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmwzk1xn000b356pusl4qu5l
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிக்கலா? இதோ புதிய தீர்வு! Mar 19, 2026 - 09:33 AM வேறு கைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2026 மார்ச் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் QR குறியீட்டை மீளப் பெறும் போது, அந்தப் பதிவை மேற்கொண்ட கைபேசி இலக்கம் பயன்பாட்டில் இல்லாமை அல்லது வேறு ஒருவரிடம் இருப்பதனால் பொதுமக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய அம்சம் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வாகன இலக்கம் மற்றும் சேஸி இலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் மாத்திரமே இந்த புதிய வசதியைப் பயன்படுத்த முடியும். வாகனம் ஏற்கனவே வேறொரு இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (பதிவு 2026 மார்ச் 14க்கு முன்னதாக இருத்தல் வேண்டும்), உங்களிடமுள்ள சரியான தகவல்களை உள்ளிட்டு தற்போதுள்ள பதிவை ரத்து செய்து, உங்களது புதிய தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும். நீங்கள் 'Override' எனும் தெரிவைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு, உங்கள் தகவல்களுடனான புதிய கணக்கு உடனடியாகச் செயற்படுத்தப்படும். இந்தச் செயல்பாட்டின் மூலம் ஏற்கனவே இருந்த பதிவு ரத்து செய்யப்படுவதால், முந்தைய பயனருக்கு அந்த வாகனத்திற்காகக் கிடைத்த சலுகைகள் மற்றும் அணுகல் இல்லாது ஒழியும். இதன் மூலம் இதுவரை காலம் வேறு தரப்பினரிடமோ அல்லது பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி இலக்கங்களின் கீழே பதிவு செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தடையின்றித் தமது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். தமக்கு சட்டபூர்வமான உரிமை இல்லாத வேறொருவருக்குச் சொந்தமான வாகனத்தின் QR தரவுகளை நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmwx1p640009356pm3vad4g7
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை? - சவுதி வெளியுறவு அமைச்சர் Mar 19, 2026 - 08:16 AM சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு என சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான தாக்குதல்கள் மூலம் டெஹ்ரான் எவ்வித நன்மையையும் அடையப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஈரான் தனது அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட, அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பதாக இளவரசர் பைசல் மேலும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இந்த அணுகுமுறை ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதுடன், இது அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஈரானுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmwv90lx0007356pcx5mi5am
-
விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்!
விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்! Published By: Digital Desk 1 19 Mar, 2026 | 07:34 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பொலிஸாரால் அழைப்பு விடப்பட்ட மூன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இன்றையதினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் அலுவலகத்தில் ஆஜராகவுள்ளனர். இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று வியாழக்கிழமை (19) காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்புகளையும் கலந்து கொண்டு வலுசேர்க்குமாறு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/241324
-
RAW மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன?
ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்திய உளவுத்துறை (RAW - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே சமயம், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை குறித்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆர்எஸ்எஸ்-ன் டெல்லி தலைமையகமான கேசவ் குஞ்சின் ஊடகப் பிரிவு பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை" என்று கூறியது. இது தொடர்பான பிபிசியின் கேள்விக்கு ஆர்எஸ்எஸ்-ன் இந்திய விளம்பரப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் பதிலளிக்கவில்லை. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் மத சுதந்திரம் குறித்த அறிக்கைகளை அதன் நீண்டகால ஒருதலைப்பட்சமான போக்கைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு ஏற்கனவே நிராகரித்துள்ளது. தற்போதைய அறிக்கையையும் நீண்டகாலமாகத் தொடரும் ஒருதலைப்பட்சமான போக்கின் ஒரு பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளதுடன், கடந்த பல ஆண்டுகளாக இந்த கண்டுபிடிப்புகளை இந்திய அரசு நிராகரித்து வருவதாகவும் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-சை தடை செய்ய கோரிக்கை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (கோப்புப் படம்). தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு' (சிபிசி- கண்ட்ரி ஆப்ஃ பர்டிகுலர் கன்சன்) என்று வகைப்படுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத் துறையை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான 'ரா' மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆகியவற்றுக்கு எதிராக மத சுதந்திர மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் முன்வைத்துள்ளதுடன், இந்திய உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் மீது அமெரிக்கா இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மத சுதந்திர சீர்திருத்தங்களுடன் அமெரிக்கா இணைக்க வேண்டும் என்றும், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், இவை பரிந்துரைகள் மட்டுமே அன்றி, அமெரிக்க வெளியுறவுத் துறையால் இவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் 2025 அக்டோபரில் நைஜீரியாவை கண்ட்ரி ஆப்ஃ பர்டிகுலர் கன்சன் பட்டியலில் சேர்த்தார் (கோப்புப் படம்) சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அல்லது யூஎஸ்சிஐஆர்எப்ஃ என்பது அமெரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான ஆணையம் மற்றும் அரசு அமைப்பு ஆகும். சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் 1998-ஆம் ஆண்டில் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இது அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து தனித்து இயங்கும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும். ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது வருடாந்திர மத சுதந்திர அறிக்கையை வெளியிடுகிறது. சர்வதேச அளவில் மத சுதந்திரத்தை மேம்படுத்த அதிபர் , வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்றத்திற்குக் கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்குகிறது. மத சுதந்திரம் தொடர்பான மீறல்கள் தொடர்ச்சியாகவும், கடுமையாகவும், திட்டமிட்ட வகையிலும் நடைபெறும் நாடுகளை இந்த ஆணையம் கண்டறிகிறது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அத்தகைய நாடுகளை 'குறிப்பிட்ட கவலைக்குரிய நாடுகள்' (சிபிசி) மற்றும் 'சிறப்பு கண்காணிப்புப் பட்டியல்' (எஸ்டபுள்யூஎல்) என வகைப்படுத்துகிறது. இந்த அறிக்கையில் இந்தியா தவிர, மியான்மர், கியூபா, சீனா, எரித்ரியா, இரான், நிகரகுவா, நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சௌதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை சிபிசி பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் ஏற்கனவே டிசம்பர் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சிபிசி பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த அக்டோபரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மூலம் நைஜீரியா மீண்டும் சிபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த முறை இந்தியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க யுஎஸ்சிஐஆர்எஃப் பரிந்துரைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான இந்தப் பரிந்துரைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவைப் பற்றி அந்த அறிக்கை என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025-ஆம் ஆண்டில், "பல மாநிலங்களில் உள்ள இந்து தேசியவாதக் கும்பல்கள், தண்டனைக்கு அஞ்சாமல் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் துன்புறுத்தின" என்று அந்த அறிக்கை கூறியது. 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து சீர்குலைந்துள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, இந்தியாவை சிபிசி பட்டியலில் சேர்க்க அது பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் தேசிய மற்றும் மாநில அளவிலான சட்டங்கள் சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை இலக்கு வைத்து இயற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்திய அரசு அகதிகளை வெளியேற்றி வருவதாகவும், இந்துத்துவா மற்றும் தேசியவாத அமைப்புகளால் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள இந்துத்துவா குழுக்கள் சட்டத்திற்கு அஞ்சாமல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "ஆண்டு முழுவதும், பல மாநிலங்களில் இந்து தேசியவாத கும்பல்கள் தண்டனைக்கு அஞ்சாமல் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தல், தூண்டுதல் மற்றும் வன்முறையை நிகழ்த்தியுள்ளன" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "மார்ச் 2025-இல், 17-ஆம் நூற்றாண்டின் முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று தீவிர இந்து தேசியவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) கோரியதை அடுத்து மகாராஷ்டிராவில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று அறிக்கை கூறுகிறது. ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் குறிப்பிட்டு, "ஜூன் 2025-இல், ஒடிசாவில் இந்து மதத்திற்கு மாற மறுத்ததால் 20 கிறிஸ்தவ குடும்பங்களை இந்து தேசியவாத கும்பல் ஒன்று தாக்கியது. இந்தத் தாக்குதல்களின் போது காவல்துறை தலையிடவில்லை. எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. "அந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு தீவிரமடைந்தது" என்று அறிக்கை கூறுகிறது. "உத்தரபிரதேசத்தில், காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப் போவதாக சபதம் ஏற்ற இந்து தேசியவாத குழுவின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், இஸ்லாமிய உணவக ஊழியர் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது". "மே 2025-இல், இந்திய அதிகாரிகள் 15 கிறிஸ்தவர்கள் உட்பட 40 ரோஹிங்கியா அகதிகளைத் தடுத்து வைத்து, அவர்களை சர்வதேச கடற்பகுதிக்குக் கொண்டு சென்று, உயிர் காக்கும் அங்கிகளை மட்டுமே கொடுத்து பர்மா கடற்கரைக்கு நீந்திச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர்" என்று அறிக்கை கூறுகிறது. "ஜூலை 2025-இல், அசாமில் இருந்து வங்காள மொழி பேசும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்திய குடிமக்களாக இருந்தபோதிலும் அவர்களை இந்திய அதிகாரிகள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தினர்."என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறிப்பாக வக்ஃப் சட்டம் மற்றும் உத்தரகாண்டின் மாநில சிறுபான்மையினர் கல்வி அதிகாரச் சட்டம் (யூஎஸ்ஏஎம்ஈ) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. புதிய வக்ஃப் சட்டம், வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இதற்கிடையில், புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே உத்தரகாண்டில் உள்ள மதரஸா வாரியம் கலைக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் மூலம், இஸ்லாமியர்களின் மதரஸாக்களுடன், மாநிலத்தில் உள்ள சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளின் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும். இந்திய அரசின் பதில் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க ஆணையம், இந்தியா பற்றிய 'திரிபுபடுத்தப்பட்ட மற்றும் ஒருதலைப்பட்சமான' சித்திரத்தை முன்வைப்பதில் பிடிவாதமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார். இந்த அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளதுடன், இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பற்றிய ஒரு 'திரிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட' சித்திரத்தை முன்வைப்பதில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பிடிவாதமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த அறிக்கை உறுதியான உண்மைகளின் அடிப்படையில் அமையாமல், சந்தேகத்திற்குரிய ஆதாரங்கள் மற்றும் கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய தொடர்ச்சியான தவறுகள் அந்த ஆணையத்தின் நம்பகத்தன்மையின் மீதே கேள்விகளை எழுப்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவிற்குள் நடக்கும் தீவிரமான நிகழ்வுகளை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தனது பதிலில் இந்தியா கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து இந்திய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்தியாவைத் தேர்ந்தெடுத்து விமர்சிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது நடத்தப்படும் வன்முறை மற்றும் இந்திய சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்," என்றார். அரசியல் கட்சிகளின் எதிர்வினை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,"அரசியலமைப்புக்கு விரோதமான, மனு ஸ்மிருதியின்படி நாட்டை ஆள வேண்டும் என வாதிடும் ஆர்.எஸ்.எஸ், நாட்டின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷமாகும்" என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. "மக்களின் மத சுதந்திரத்திற்கு ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தலாக உள்ளது என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு அதிகரிப்பதற்கு இதுவே காரணமாகும்" என்று காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், "ஆர்எஸ்எஸ் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும்" என்று அப்பதிவு குறிப்பிட்டது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குத் தடை விதித்திருந்தார் என்பதையும் காங்கிரஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. "மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கக் கூடிய, அரசியலமைப்புக்கு எதிரான ஆர்எஸ்எஸ், நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு விஷம் போன்றது" என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸின் கருத்துக்குப் பதிலளித்த மத்திய அமைச்சரும், பிஹார் முன்னாள் முதலமைச்சருமான ஜித்தன் ராம் மாஞ்சி, "அவர்கள் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி அல்லது அதற்குப் பின்னராக இருந்தாலும் சரி, ஆர்எஸ்எஸ் தனக்கென தனி இடத்தைப் பெற்று நேர்மறையான பணிகளைச் செய்து வருகிறது. அமைப்பு கெட்டது அல்ல, சில நபர்களே கெட்டவர்கள். அந்த நபர் தான் தடை செய்யப்பட வேண்டும்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3090839e6jo
-
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
கடலில் செல்லும் ஒரு எண்ணை கப்பலில்… எண்ணை கசிவு ஏற்பட்டாலே, பூமி மாசு படுகின்றது என்று பதறும் உலகம்… மாறி, மாறி எண்ணை உற்பத்தி வயல்களை தாக்கும் போது ஏற்படும் கரும் புகை, முழு உலகத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்தப் பாதிப்புக்களை… இந்தப் போரில் எதுவித சம்பந்தமும் இல்லாத, உலகில் ஒவ்வொரு தனி மனிதனும், வருங்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டி வரும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுக - சிபிஎம் கூட்டணி இழுபறிக்கு காரணமான 'ஓர் இடம்' - அடுத்து என்ன? பட மூலாதாரம்,X/MK Stalin கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. "அதே ஆறு இடங்களைப் பெறுவதற்கு நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை. ஓர் இடத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சரே கூறியதால் ஏற்றுக் கொண்டோம்," என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். ஆனால், "ஆறு தொகுதிக்குக் குறைவாக கொடுத்தால் ஏற்க மாட்டோம்," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளால் தி.மு.க கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியிருந்தது. 'இந்தமுறை அதே எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க வேண்டும்,' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. இது தொடர்பாக, இரு தரப்பிலும் நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் ஐந்து இடங்களை மட்டுமே தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. புதன்கிழமையன்று தி.மு.க - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பட மூலாதாரம்,Veerapandiyan படக்குறிப்பு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். 'போராடினோம்... கிடைக்கவில்லை' "ஓர் இடம் குறைவதைப் பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏழை எளிய மக்களுக்கான போராட்டங்களில் உறுதியாக இருந்தால் போதும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அல்ல" என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்திருப்பதால் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட அவர், "அவரே கூறும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும்." என்கிறார். தொகுதிப் பங்கீட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, "6 + 1 என்ற கணக்கில் தொகுதிகளை ஒதுக்குமாறு கூறினோம். அதற்காக நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கதவுகள் திறக்கப்படவில்லை." எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin "தொகுதிகளைக் குறைப்பதற்கு தி.மு.க நிர்பந்தம் கொடுத்ததா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த மு.வீரபாண்டியன், "ஒருபோதும் திமுக நிர்பந்திக்கவில்லை. இதைப் பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தான் பேசினார்கள்." என்கிறார். "கட்டளையிடும் தொனியில் தி.மு.க நிர்வாகிகள் பேசவில்லை" எனக் கூறும் அவர், "சுயமரியாதை பாதிக்கப்பட்டிருந்தால் கடந்து சென்றிருப்போம்." எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே அளவு இடங்களை ஒதுக்கும் முடிவில் தி.மு.க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்குமுறை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க நடத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "சுமூகமான முறையில் தொகுதி உடன்பாடு எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்." எனக் கூறினார். "கடந்த முறையைவிட அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளோம். அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்" எனவும் பெ.சண்முகம் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/MK Stalin '5 தொகுதிகளை ஏற்க மாட்டோம்' - கனகராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து, "ஒவ்வொரு கட்சியும் அவர்களின் கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து செயல்படுகின்றனர். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை," என்கிறார் அவர். தொடர்ந்து பேசும்போது, "தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஓர் எண்ணைக் கூறுகின்றனர். நாங்கள் ஓர் எண்ணைக் கூறியுள்ளோம். கூடுதல் தொகுதி குறித்து எந்த விவரங்களையும் அவர்கள் கூறவில்லை." எனக் கூறுகிறார். கூட்டணியில் ஐந்து தொகுதிகளைக் கொடுப்பதாக தி.மு.க கூறுவதாகக் குறிப்பிடும் கனகராஜ், "அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் தரப்பில் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்ற முடிவை கூறிவிட்டோம். தி.மு.க தான் தெரிவிக்க வேண்டும்." என்கிறார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்துக் கேட்டபோது, "தி.மு.க தரப்பில் இருந்து அழைத்தால் பேசுவோம். எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்." என்கிறார் அவர். இதே கருத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "ஒவ்வொரு கட்சியும் அவரவர் பலத்துக்கேற்ப தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. எங்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு சொல்வதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்." எனக் கூறினார். பிரசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,Shyam படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் "இதுபோன்ற முரண்பாடுகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது. "தி.மு.கவிடம் முன்வைத்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகளிடையே சற்று வருத்தம் இருக்கும். ஆனால், வாக்குப்பதிவு நெருக்கத்தில் அவை மறைந்துவிடும்" எனக் கூறுகிறார். "கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு வழியும் இல்லை. தி.மு.க ஒதுக்கியுள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் கூட்டணிக் கட்சிகளுக்கான சவாலாக இருக்கும்." என அவர் குறிப்பிட்டார். திமுக கூறுவது என்ன? "தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளை குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருகிறது" என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன். "தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 170 இடங்களில் போட்டியிட வேண்டும்" எனக் கூறும் டி.கே.எஸ்.இளங்கோவன், "புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பது பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன," எனக் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0d0kqq8r5o
-
சர்வதேச சந்தையில் 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டொலராக உயர்வு Mar 19, 2026 - 07:54 AM உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவிய விலையை விட 5% க்கும் அதிகமாக உயர்ந்து, 109.91 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்தின் பின்னர் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை, பிரித்தானியாவின் இயற்கை எரிவாயு விலையும் 6% ஆல் அதிகரித்துள்ளது. ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எரிவாயு வயலுக்குச் சொந்தமான பெட்ரோ கெமிக்கல் வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இந்த விலை உயர்வு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டாரின் ராஸ் லாஃபான் தொழில் மண்டலமும் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இவ்வாறு திடீரென உயர்ந்த போதிலும், இந்த மோதல் காலத்தில் பதிவான உச்சகட்ட விலையை விட இவை இன்னும் குறைந்த மட்டத்திலேயே உள்ளன. இதற்கு முன்னர் மார்ச் 9 ஆம் திகதி மசகு எண்ணெய் விலை 116.78 டொலர்களாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmwuhbtg0004356pfttivv7z
-
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு 18 Mar, 2026 | 06:11 PM போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும், அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். இந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சட்டத் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை புதன்கிழமை (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். நாட்டில் அவ்வப்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் உருவான போதிலும், எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை வேகமாகவும் கைவிடாமலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைப் பேணி, இந்த தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்வதில் முக்கியமானதொரு காரணியாக அமைந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் அளவு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டினர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 4520 கிலோ கிராம் கஞ்சா, 1066 கிலோ 352 கிராம் ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1930 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அதிகளவில் கிடைத்து வருவதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில் 1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196 பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்று நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கை பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அது தொடர்பான நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடைமுறையை நிறுவுதல், மாகாண மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான தனி நீதிமன்றங்களை நிறுவுதல், போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸ் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார். போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 06 பிரதான உத்திகளின் ஊடாக அந்த வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார். அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாகவும், 'சமூக சக்தி' வேலைத்திட்டத்தின் பங்களிப்பையும் இதற்காகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை அண்டியதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் அதன் புதிய போக்குகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்களுக்குள் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்காகவே ஒதுக்கப்பட்ட மத ரீதியான நிகழ்ச்சிகளை வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் சார்ந்த கைதுகள் தொடர்பாக ஊடகங்களில் வழங்கப்படும் பிரசாரத்தைப் போன்றே அந்தப் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகச் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கும் பிரசாரம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது. ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மஹா நிகாயவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய வலேபொட குணசிறி அனுநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய குப்பியாவத்தே போடானந்த தேரர் மற்றும் அருட்தந்தை டிலான் பெர்னாண்டோ, அருட்தந்தை ஜூட் பேர்னார்ட் ரொட்ரிகோ, சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241318
-
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் Mar 19, 2026 - 07:11 AM ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த எரிவாயு வயலுக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அதன்படி, கத்தார் நாட்டின் ராஸ் லாஃபான் தொழில் நகரத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமொன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டார் மீது ஈரான் 5 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றில் 4 ஏவுகணைகளை கட்டார் முறியடித்த போதிலும், ஒரு ஏவுகணை ராஸ் லாஃபான் நகரில் விழுந்து வெடித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்டார், இது தனது தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், தனது இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ள கட்டார், அங்குள்ள ஈரான் இராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் பணியாளர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, சவுதி அரேபியாவின் ரியாத் நகர் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை முறியடிக்கப்பட்ட போது, அதன் சிதறல்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை தளம் மற்றும் அபுதாபி நகர் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. ஈரானின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலும் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதன்முறையாக வடக்கு ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானின் தாக்குதலில் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmwst1y30002356p13s3r9de
- Today
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
பெரும்பாலான தமிழ் யூடியூப்பர்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர்கள் தாம் பேசுவது தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது தமிழ்பேசும் இஸ்லாமியர்களைக் குளிர்விக்க இப்படிப் பிதற்றுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்ரேல் சுக்குநூறாகியது, மரண அடி, அழிந்தான் யூதன், அமெரிக்கா பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுகிறது, அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பல்களை ஈரானின் ட்ரோன்கள் நிர்மூலமாக்கின, இஸ்ரேல் பிரதமர் நெத்தென்யாகு ஈரானினால் துல்லியமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் விரும்பியவாறு தலைப்பிட்டு தமது மனம் போன போக்கில் எடுத்துவிடுகிறார்கள். இதிலும் சில ஈழத்தமிழர்கள் மதில்மேல் பூனைபோல இருந்துகொண்டு ஒரு நாள் அமெரிக்காவிற்குச் சார்பாகவும் மறுநாள் ஈரானுக்குச் சார்பாகவும் பேசுகிறார்கள். தமிழ் அடியான் என்கிற யூடியூப்பர் ஒருநாள் அமெரிக்காவை போர்க்களத்தில் இருந்து ஈரான் அகற்றிவிட்டது, அமெரிக்கப் படைகள் முற்றாக மத்திய கிழக்கில் இருந்து காணமலாக்கப்பட்டிருக்கின்றன என்று செய்தி வெளியிட்டார். மறுநாள் அமெரிக்காவின் பாரிய நெடுந்தூரக் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் பல நிலைகளைத் தாக்கியழித்தபோது, தான் முதல்நாள் கூறியதற்கு நேரெதிராகப் பேசியிருந்தார். நான் இதுகுறித்து அவரிடம் கேள்வவி எழுப்பியபோது சில மணிநேரத்தில் எனது பதிவு அவரால் நீக்கப்பட்டது. இப்படித்தான் தமிழ் யூடியூப்பர்களின் நிலை. இவர்கள் வெளியிடும் காணொளிகளை உண்மையென்று நம்பும் எம்மவர்கள் இதுகுறித்துச் சிந்திப்பது நலம். 😊
-
கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள குஞ்சுக்கால் வயல்வெளிகளை ஆக்கிரமித்து, தென் இலங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினால் உப்பளம் அமைக்கும் பணி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அப்பகுதி விவசாய நிலங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதைக் குறிப்பிட்டு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த முயற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு வரும் வயல்வெளிகள் உப்பளமாக மாற்றப்படுமானால், எதிர்காலத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் உவர்நிலங்களாக மாறும் அபாயம் இருப்பதாகக் கவலை வெளியிட்டனர். மேலும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். https://web.facebook.com/share/v/19Qg4Wn8oP/ விவசாய நிலத்தில் உப்பளம் அமைக்க அரசு எவ்வாறு அனுமதி கொடுத்தது?
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
"சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
-
IMRAN PANDIAN REGIMENT - with Vector SS-77
-
First Uruthiyin Uraividam symbol
-
Allaipitti Landing- Img date; 2006.08.10 evening .jpg
-
Allaipitti Landing- Img date; 2006.08.10 evening 2.jpg
-
செபஸ்தியார் கோவில், ananthapuram
-
maaveerar varam - suren karthikesu.jpg
-
posters.jpg
-
poster.jpg
-
hh.jpg
-
dwqdw.jpg
-
dwedw.jpg
-
dsadsa.jpg
-
img_2_1766157291474.jpg
-
புலிகளின் குரல் வானொலி.jpg
-
sadas.jpeg
-
scs.jpg
-
dw.jpg
-
adw.jpg
-
tamil eelam police.jpg
-
captian in.jpg
-
-
ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது.
ஆர்பாட்ட கூட்டத்தை நம்பி ஏமாந்து போனார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
சினிமா பாடல் இலக்கியமா அல்லது இலக்கியம் இல்லையா என்பதை கேட்பதைவிடுத்து யார் யாருக்கு ஞானபீடம் வேண்டும் என வினவுங்கள். அவர்களுக்கு வைரமுத்து ஞானபீடத்தை பெற்றதனால் ஏற்பட்ட கடி, சொறி, சிரங்கு உட்பட எல்லா உபாதைகளும் பறந்துவிடும்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இல்லை கோஷான். பாரதியின் எழுத்தும், இவருடைய எழுத்தும் ஒன்றில்லை. அருகில் கூட இல்லை. பாரதியின் ஆன்மாவிலேயே இசையும், தமிழும் இருந்தது. மிகவும் இலகுவான, எல்லோருக்கும் தெரிந்த காக்கைச் சிறகினிலே நந்தலாலா! - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா! என்ற வரிகளுக்கு எந்த இசையும் தேவையில்லை. இந்த வரிகளின் அர்த்தம் புரிவதே ஒரு கவிதையான தருணம். பாரதியாரோ, புதுமைப்பித்தனோ, அசோகமித்திரனோ கவனிக்கப்படாமல் போனதே வரலாற்றில் வந்து போன வைரமுத்துகள் போன்றவர்களாலேயே. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் இருந்த பிணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். அன்று புதுமைப்பித்தனை தமிழ் உலகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் காலத்தால் அழியாமல் நிற்பவர் அவரே. அவருடைய 'சாப விமோசனம்' சிறுகதைக்கு ஈடாக தமிழில் ஒன்று கிடையவே கிடையாது. அசோகமித்திரன் ஏழைப் பிராமணன் ஆகவே இறந்துபோனார். அவருடைய 'புலிக்கலைஞன்' உலக கிளாசிக். ஆனாலும் அவர் வாழும் காலத்தில் இயக்குனர் ஷங்கரும், பாக்யராஜும், ஏ ஆர் முருகதாஸுமே எழுத்தாளர்களாக தமிழ் மக்களுக்கு தெரிந்தார்கள். அதை தாண்டினால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார் போன்றோர். இதுவே தமிழ் சமுதாயம் அன்றும், இன்றும். வைரமுத்துவின் திகட்டும் வர்ணனைகளுடனான வானம்பாடிப் பாடல்கள் இன்னும் சில வருடங்களிலேயே மறைந்துவிடும். எம் ஜிஆரின் நடிப்பு போல, ரஜனியின் ஸ்டைல் போல, விஜய்யின் டான்ஸ் போல. இந்த உலகம் இருக்கும் வரை நவீன தமிழின் தலைமகனாக பாரதி இருப்பார். வைரமுத்துவோ அவருடைய பாடல்களோ இருக்காது. சரஸ்வதியே இறங்கி வந்து தான் இதை எழுதியிருக்க வேண்டும்: காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ கனலிலே சுடுவ தென்னே?கண்ண பெருமானே! சேற்றிலே குழம்ப லென்னே?கண்ண பெருமானே-நீ திக்கிலே தெளிந்த தென்னே?கண்ண பெருமானே! பாரதிக்கு ஈடு இணையே கிடையாது, கோஷான்...................
-
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
துவிச்சக்கர வண்டியில் மட்டும் அல்ல வீதி ஓரமாக நடந்து சென்ற வயோதிபர் ஒருவரை இருமுறை வேகமாக சென்ற இருசக்கர இயந்திர வாகனங்கள் இடித்ததை நண்பர் ஒருவர் சொல்ல கேள்விப்பட்டேன். வெளிநாட்டு பணம், என்னத்தை சொல்ல? வெள்ளி அல்லது திங்கள் விடுமுறை என்றால் கொழும்பில் வசதி வாய்ப்போடு இருப்பவர்கள் சிலவேளை 3 நாள் விடுமுறைக்கு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்ல முயல்வார்கள். இவர்களால் எரிபொருள் பயன்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும்.
-
ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது.
தம்பர் சமாதான விரும்பி என நம்மில் சிலர் தலைகுத்தனமாக கணித்தது போல்… ஈரான் அடித்தவுடன் அடங்கி விடும் என தம்பர் தப்பாக கணித்துள்ளார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஆம்…ஆனால் நோபல் கமிட்டி விருதை கொடுத்தது. சொல்லப்பட்ட காரணம் இசையை நீக்கி விட்டு பார்த்தாலும் ஒரு song writer ஆக அவரின் எழுத்துக்கள் இலக்கிய தரத்தை எட்டின என்பதே. எனக்கு பட்டுகோட்டையின் பாட்டு இந்த வகை. ஞானபீடத்துக்கு வைரமுத்துவின் பாடல்கள். இங்கே பொயிண்ட் என்னவென்றால் - 5 முட்டை, அரை கிலோ மா, 250 கிராம் சீனி போட்டு நன்றாக அடித்து, 20 நிமிடம், 175 பாகை போறணையில் வெந்து வருவது மட்டுமே உணவு (இலக்கியம்) என யாரும் சொல்ல முடியாது. வயிற்று பசி ஆற்றுவது எல்லாமும் உணவே. ஆன்மாவின் பசி ஆற்றுவது எல்லாமும் இலக்கியமே. பவுடர் டப்பாவை சின்மயி சர்ச்சை நேரம் நான் போட்டு தாக்கியதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இவர் ஒரு பழத்தட்டு மனிதர் என்பதை யாழில் இவர் முள்ளிவாய்க்கால் கவிதை எழுதியதற்கு பதிலாக நானே கவிதை போல ஒன்றை எழுதி சொல்லி இருந்தேன். இவர் இதை “பெரும்பாடு” பட்டு வாங்கி இருப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை. ஆனால் அதுதான் இந்தியா - எம் ஜி ஆருக்கு பாரத ரத்னா, ரஜனிக்கு தாதா சாகேப், இளையராஜாவுக்கு பதம் விருது, சொல்லி கொண்டே போகலாம். இல்லை டிலனுக்கு எழுத்துக்குத்தான் கிடைத்தது இசைக்கு அல்ல என நினைக்கிறேன். அவர் இறந்து பலகாலமாக பாரதி எழுதியதை கூட அன்றைய புளித்த மாவுகள் இலக்கியம் என ஏற்கவில்லை. பாரதி உண்மையில் ஒரு singer-song writer தான். அவரின் புத்தகத்தை, கைஎழுத்து பிரதியை பார்த்தால் தெரியும், ஒவ்வொரு கவிதைக்கும் அவரே தாளம் என்ன, ராகம் என்ன என மெட்டும் போட்டிருப்பார். பவுடர் டப்பாவுடன் பாரதியை ஒப்பிடவில்லை. ஆனால் எழுத்து வகை என பார்த்தால் இரண்டும் ஒன்றே. பாரதி இசையையும் தானே அமைத்தார். பவுடர் டப்பா - இன்னொருவர் இசைக்கு எழுதினார்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அடீன்னா அப்பிடி ஒரு மரண அடி!😁
- Yesterday
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இதை மேற்கோள் காட்டப் போகின்றவர் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்............🤣. சமீப காலங்களில் கொடுக்கப்பட்ட நோபல் இலக்கிய விருதுகளில் இரண்டு மிக விமர்சனத்திற்கு உட்பட்டன. ஒன்று இது, மற்றொன்று ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வந்த விமர்சனங்களின் சாரம் ஞாபகம் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக Bob Dylon நோபல் விருதை வாங்கப் போகக் கூடவில்லை.................. பழத்தட்டுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்................... Bob Dylon சமனாக தமிழில் ஒருவருக்கு அதி உயர் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றால் அது இளையராஜாவாகத்தான் இருக்கும்...................🫣............ இது கூட அடுத்ததாக நடக்கும்............... பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது பகவான் வந்து காத்தார்................. தமிழ்த்தாயை காக்க பாரதியும், புதுமைப்பித்தனும், சி சு செல்லப்பாவும், ப சிங்காரமும், அசோகமித்திரனும், இன்னும் சிலரும் மீண்டும் மீண்டும் பிறந்து, ஏழ்மையில் உழன்று, வாழும் நாட்களில் எவருக்கும் தெரியாமல் இருந்து, பின்னர் அப்படியே இறந்து போக வேண்டும்.........................😌.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
எங்கே ஐயா லிங்?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஐயோ அண்ணை - சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது என்பது இதை அல்ல. ஒரு தொகுதியில் இன்ன சாதி அதிகம் என தெரிந்து அந்த சாதி ஆளை நிறுத்துவது. சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள் Published:26th Oct, 2025 at 11:08 AM தமிழகம் Updated:26th Oct, 2025 at 11:08 AM தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன. இதுபற்றி நம்மிடம் பேசிய நாதக மூத்த நிர்வாகிகள் சிலர், “எந்தத் தொகுதியில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது மற்ற கட்சிகள் கடைபிடிக்கும் உத்தி. அதர பழசான இந்த ஃபார்முலாவை சீமானும் இப்போது கையில் எடுத்திருப்பது தான் வேதனையளிக்கிறது. உதாரணமாக, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோரை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாத ஐயர், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாப்பா உமாநாத், அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் ஆகியோர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களையும் திருவெறும்பூர் மக்கள் ஜெயிக்க வைத்த வரலாறு இருக்கிறது. ‘வரலாற்றைப் படியுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான், இந்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அவரை புரமோட் செய்யும் விதமாக திருவெறும்பூரில் மருது சகோதரர்களுக்கு விழா எடுக்கிறார். ஆக, ‘எங்களது நோக்கம் அரசியல் மாற்றம் அல்ல... அடிப்படை மாற்றம்’ என்று முழங்கி வரும் சீமான், இப்போது அதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்றனர். இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான். தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார். https://www.hindutamil.in/amp/story/story/news/tamilnadu/voters-cast-vote-by-presenting-any-of-12-documents-including-aadhaar இனி என்ன? இந்த பத்திரிகை திமுக விடம் காசு வாங்கி விட்டது - அதானே உங்கள் பதில்😂
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
சினிமா பாடல் இலக்கியம் அல்ல என்பதை தக்க ஆதாரத்தோடு (அவ்ஶ்ரீ சொன்னார், இவர் சொன்னார் அல்ல) நிறுவுமாறு @கிருபன் ஜி அழைக்கப்படுகிறார். Bob Dylon க்கு ஏன் 2016 க்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது எமது இலக்கிய மேட்டு குடி ஜமீன்களுக்கு தெரியுமா?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சீமான் இன்று திரள் நிதி கேட்டு ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராமே 😃