Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 31 மே 2025 அன்று பெங்களூரு மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  3. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 வணக்கம், 19வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2026 சீசன் மார்ச் மாதம் 28 இல் தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி பெங்களூருவில் மே 31 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது! போட்டிகளின் அட்டவணைகள் இந்திய மாநிலத் தேர்தல்கள் காரணமாக முன்னர் முழுமையாக வெளியிடப்படாமையால், யாழ் களப் போட்டி தாமதமாக ஆரம்பித்துள்ளது. எனவே முதல் 20 போட்டிகளுக்கு (ஏப்ரல் 12 வரையானவை) பங்குபெற்றும் அனைவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். அதன் பின்னரே (ஏப்ரல் 13 இல் இருந்து) போட்டிகளின் முடிவுகளின்படி புள்ளிகள் வழங்கப்படும். குறிப்பு: போட்டிகளில் வெல்லும் அணிகளின் நிலைகளைக் கணிக்க வசதியாக அனைத்துப் போட்டிகளும் கேள்விக்கொத்தில் தரப்படும். ஆனால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings Ruturaj Gaikwad (captain), Ayush Mhatre, Sarfaraz Khan, Sanju Samson, MS Dhoni, Urvil Patel, Kartik Sharma, Shivam Dube, Ramakrishna Ghosh, Shreyas Gopal, Aman Khan, Prashant Veer, Rahul Chahar, Khaleel Ahmed, Gurjapneet Singh, Anshul Kamboj, Mukesh Choudhary, Jamie Overton*, Dewald Brevis*, Matt Short*, Spencer Johnson*, Zak Foulkes*, Matt Henry*, Noor Ahmad*, Akeal Hosein* 2. Delhi Capitals Axar Patel (captain), Prithvi Shaw, Karun Nair, Nitish Rana, Ashutosh Sharma, Sameer Rizvi, Sahil Parakh, KL Rahul, Abishek Porel, Vipraj Nigam, Auqib Nabi, Madhav Tiwari, T Vijay, Ajay Mandal, Kuldeep Yadav, Mukesh Kumar, T Natarajan, Mitchell Starc*, Pathum Nissanka*, Dushmantha Chameera*, Lungi Ngidi*, David Miller*, Tristan Stubbs*, Kyle Jamieson* 3. Gujarat Titans Shubman Gill (captain), Sai Sudharsan, Shahrukh Khan, Anuj Rawat, Kumar Kushagra, Washington Sundar, Manav Suthar, Rahul Tewatia, Nishant Sindhu, Jayant Yadav, Arshad Khan, Sai Kishore, Mohammed Siraj, Prasidh Krishna, Gurnoor Brar, Ishant Sharma, Ashok Sharma, Kulwant Khejroliya, Jos Buttler*, Tom Banton*, Luke Wood*, Glenn Phillips*, Jason Holder*, Rashid Khan*, Kagiso Rabada* 4. Kolkata Knight Riders Ajinkya Rahane (captain), Angkrish Raghuvanshi, Manish Pandey, Rahul Tripathi, Rinku Singh, Tejasvi Dahiya, Anukul Roy, Daksh Kamra, Ramandeep Singh, Sarthak Ranjan, Prashant Solanki, Varun Chakravarthy, Kartik Tyagi, Umran Malik, Vaibhav Arora, Saurabh Dubey, Navdeep Saini, Cameron Green*, Rovman Powell*, Sunil Narine*, Finn Allen*, Rachin Ravindra*, Tim Seifert*, Matheesha Pathirana*, Blessing Muzarabani* 5. Lucknow Super Giants Rishabh Pant (captain), Abdul Samad, Ayush Badoni, Himmat Singh, Akshat Raghuwanshi, Mukul Choudhary, Arshin Kulkarni, Shahbaz Ahmed, Digvesh Rathi, M Siddharth, Akash Singh, Avesh Khan, Mohammed Shami, Mohsin Khan, Prince Yadav, Arjun Tendulkar, Mayank Yadav, Naman Tiwari, Matthew Breetzke*, Aiden Markram*, Anrich Nortje*, Nicholas Pooran*, Josh Inglis*, Mitchell Marsh*, Wanindu Hasaranga* 6. Mumbai Indians Hardik Pandya (captain), Rohit Sharma, Suryakumar Yadav, Danish Malewar, Robin Minz, Shardul Thakur, Naman Dhir, Raj Bawa, Tilak Varma, Mayank Markande, Raghu Sharma, Ashwani Kumar, Deepak Chahar, Jasprit Bumrah, Mohammed Izhar, Mayank Rawat, Will Jacks*, Ryan Rickelton*, Quinton de Kock*, Corbin Bosch* Sherfane Rutherford*, Mitchell Santner*, Trent Boult* AM Ghazanfar* 7. Punjab Kings Shreyas Iyer (captain), Harnoor Singh, Nehal Wadhera, Priyansh Arya, Pyla Avinash, Prabhsimran Singh, Vishnu Vinod, Harpreet Brar, Musheer Khan, Shashank Singh, Suryansh Shedge, Praveen Dubey, Yuzvendra Chahal, Arshdeep Singh, Vijaykumar Vyshak, Vishal Nishad, Yash Thakur, Azmatullah Omarzai*, Ben Dwarshuis*, Cooper Connolly*, Marcus Stoinis*, Mitchell Owen*, Xavier Bartlett*, Marco Jansen*, Lockie Ferguson* 8. Rajasthan Royals Riyan Parag (captain), Shubham Dubey, Vaibhav Suryavanshi, Yashasvi Jaiswal, Aman Rao, Dhruv Jurel, Ravi Singh, Ravindra Jadeja, Yudhvir Singh, Ravi Bishnoi, Yash Raj Punja, Vignesh Puthur, Sandeep Sharma, Tushar Deshpande, Sushant Mishra, Kuldeep Sen, Brijesh Sharma, Jofra Archer*, Lhuan-dre Pretorius*, Donovan Ferreira*, Kwena Maphaka*, Nandre Burger*, Adam Milne*, Shimron Hetmyer*, Dasun Shanaka* 9. Royal Challengers Bengaluru Rajat Patidar (captain), Virat Kohli, Devdutt Padikkal, Jitesh Sharma, Venkatesh Iyer, Krunal Pandya, Swapnil Singh, Satwik Deswal, Kanish Chouhan, Vihaan Malhotra, Vicky Ostwal, Suyash Sharma, Bhuvneshwar Kumar, Rasikh Salam, Mangesh Yadav, Abhinandan Singh, Jacob Bethell*, Phil Salt*, Jordan Cox*, Josh Hazlewood*, Tim David*, Romario Shepherd*, Jacob Duffy*, Nuwan Thushara* 10. Sunrisers Hyderabad Pat Cummins* (captain), Ishan Kishan (stand-in captain), Aniket Verma, R Smaran, Salil Arora, Abhishek Sharma, Nitish Kumar Reddy, Harshal Patel, Harsh Dubey, Shivang Kumar, Krains Fuletra, Zeeshan Ansari, Amit Kumar, Jaydev Unadkat, Shivam Mavi, Onkar Tarmale, Sakib Hussain, Praful Hinge, Liam Livingstone*, Brydon Carse*, David Payne*, Travis Head*, Heinrich Klaasen*, Kamindu Mendis*, Eshan Malinga* போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே. Points table Pos Grp Team Pld W L NR Pts NRR Qualification 1 A Punjab Kings (R) 14 9 4 1 19 0.372 Advanced to Qualifier 1 2 A Royal Challengers Bengaluru (C) 14 9 4 1 19 0.301 3 B Gujarat Titans (4th) 14 9 5 0 18 0.254 Advanced to Eliminator 4 B Mumbai Indians (3rd) 14 8 6 0 16 1.142 5 B Delhi Capitals 14 7 6 1 15 0.011 Eliminated 6 B Sunrisers Hyderabad 14 6 7 1 13 −0.241 7 B Lucknow Super Giants 14 6 8 0 12 −0.376 8 A Kolkata Knight Riders 14 5 7 2 12 −0.305 9 A Rajasthan Royals 14 4 10 0 8 −0.549 10 A Chennai Super Kings 14 4 10 0 8 −0.647 Most runs Runs Player Team 759 Sai Sudharsan Gujarat Titans 717 Suryakumar Yadav Mumbai Indians 657 Virat Kohli Royal Challengers Bengaluru 650 Shubman Gill Gujarat Titans 627 Mitchell Marsh Lucknow Super Giants Most wickets Wickets Player Team 25 Prasidh Krishna Gujarat Titans 24 Noor Ahmad Chennai Super Kings 22 Josh Hazlewood Royal Challengers Bengaluru 22 Trent Boult Mumbai Indians 21 Arshdeep Singh Punjab Kings Most valuable player Points Player Team 320.5 Suryakumar Yadav Mumbai Indians 311.0 Sai Sudharsan Gujarat Titans 273.0 Yashasvi Jaiswal Rajasthan Royals 272.5 Nicholas Pooran Lucknow Super Giants 272.0 Mitchell Marsh End of season awards Award Prize Player Team Fantasy player of the season ₹10 lakh (US$12,000) and trophy Sai Sudharsan Gujarat Titans Most Valuable Player ₹10 lakh (US$12,000) and trophy Suryakumar Yadav Mumbai Indians Orange Cap (most runs) ₹10 lakh (US$12,000) Sai Sudharsan Gujarat Titans Purple Cap (most wickets) ₹10 lakh (US$12,000) Prasidh Krishna Gujarat Titans Emerging player of the season ₹10 lakh (US$12,000) Sai Sudharsan Gujarat Titans Most fours ₹10 lakh (US$12,000) and trophy Sai Sudharsan Gujarat Titans Most sixes ₹10 lakh (US$12,000) and trophy Nicholas Pooran Lucknow Super Giants Most dot balls ₹10 lakh (US$12,000) and trophy Mohammed Siraj Gujarat Titans Highest batting strike rate ₹10 lakh (US$12,000), trophy and a car Vaibhav Sooryavanshi Rajasthan Royals Catch of the season ₹10 lakh (US$12,000) and trophy Kamindu Mendis Sunrisers Hyderabad Best pitch ₹50 lakh (US$59,000) Arun Jaitley Cricket Stadium, Delhi —N/a Team fairplay award ₹10 lakh (US$12,000) —N/a Chennai Super Kings Runners-up ₹12.5 crore (US$1.5 million) —N/a Punjab Kings Champions ₹20 crore (US$2.4 million) and IPL trophy —N/a Royal Challengers Bengaluru
  4. Today
  5. இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல் --- --- --- *ஈரான் பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு பதிலடியா என பிரித்தானிய ஊடகம் கேள்வி! --- --- --- ஈரானுடன் இணைந்து செயற்படும் யெமன் (Yemen) நாட்டின் ஹூதி (Houthis) போராளிகள், இன்று சனிக்கிழமை இஸ்ரேல் மீது முதன் முதலாக ஏவுகணைத் தாக்குதல நடத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் ஆரம்பித்து நான்காவது வாரம் நிறைவடைந்து, ஐந்தாவது வாரம் ஆரம்பித்த போது, நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என ரொய்டர்ஸ் நிறுவனம் விமர்சிக்கிறது. சில வாரங்களுக்குள் இராணுவ நடவடிக்கைகளை முடிக்க எதிர்பார்ப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறிய நிலையில், இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொய்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே, ஐந்தாவது வாரத்தில் நுழைந்துள்ள போரை ஹூதிகள், விரிவுபடுத்தி நீடிக்கும் அபாயம் தெரிகிறது. ஏனெனில் அனைத்து முனைகளிலும் "ஆக்கிரமிப்பு" முடியும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என ஹூதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, இஸ்ரேல் மீதான ஹூதிகளின் தாக்குதல், ஈரான் பாடசாலை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இருக்கலாமோ என த கார்டியன் (theguardian) என்ற பிரித்தானிய ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. யேமன் கடற்கரையில் உள்ள பாப் அல்-நீரிணை (Bab al-Mandab Strait ) சூயஸ் கால்வாயை (Suez Canal) நோக்கிய பிரதான கடல் போக்குவரத்து பாதையாகும். ஹார்மூஸ் நீரிணைப் பகுதியை ஈரான் பலமாக வைத்திருப்பதற்கு பாப் அல்-நீரிணை பிரதான பங்கு வகிக்கிறது. ஹர்மூஸ் நீரிணை பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டும் என்றும் பிரான்சில் நடைபெற்ற ஜீ -7 நாடுகள் கூட்டத்தில், அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக, இந்த நீரிணை உலகளாவிய எண்ணெய் - இயற்கை எரிவாயு விநியோகத்தில், ஐந்தில் ஒரு பங்கிற்கு இலவச பாதையாக மாற்ற வேண்டும் என்ற தொனியில் அவர் கருதிட்டிருந்தார். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid013bcybpAeZ7cSqPCE6CP9XZHa8bcHmfY36W3FNiwibPH6yqeLdCMUM4TSCN6LzhFl&id=1457391262&mibextid=wwXIfr இவ்வளவு காலமும் இல்லாமல் புதிதாக இந்த தாக்குதல் தொடங்கியிருப்பது அமெரிக்க இஸ்ரேலுக்கு பெரும் தலையிடியாக அமையலாம்.
  6. திருப்பதி மட்டும் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருந்தால் திமுக ஆட்டையைப் போட்டு திருப்பதியானுக்கு மொட்டையடித்து பழனியாக்கியிருப்பார்கள். இங்குள்ள (யேர்மனியில்) கோயில்களில், தட்டில் விழுவது ஐயருக்கு, மற்றவை நிர்வாகத்துக்கு.கோயிலில் எங்கே சாமி இருக்கிறார்? ஆசாமிகள்தான் கோயிலை ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.
  7. ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே இராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவோம்: மார்கோ ரூபியோ 28 Mar, 2026 | 12:37 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வோக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைப் பற்றி விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோர்ர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இணைந்து பணியாற்ற நெருங்கிய ஒருங்கிணைப்பை தொடரும் விதமாக உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்தன. இதற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரானின் அனைத்து இராணுவ திறன்களையும், அவற்றில் உள்ள கடற்படை, விமானப்படை, ஏவுகணைகள் மற்றும் ஏவுகலன்களை நாங்கள் அழித்து விடுவோம். எந்தவித தரை படை தாக்குதல் இல்லாமலேயே இதைச் சாதிப்போம்,” என்று தெரிவித்துள்ளார். மேற்காசியாவில், மோதலை முன்னிட்டு, 82-வது விமான படை பிரிவின் ஆயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா குவிக்க தயாராகி வருகிறது. சில மாதங்கள் அல்ல, இன்னும் சில வாரங்களிலேயே மோதல் முடிவுக்கு வரும் என ரூபியோ குறிப்பிட்டார். வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் செய்தியின் படி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழ்நிலையில் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அனுப்பப்படும் படை தொகுதியில் கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் போன்ற இராணுவ உபகரணங்களும் இடம்பெறும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறுவதால் ஏப்ரல் 6-ஆம் திகதி வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொள்ளாது என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்தக் காலத்தில் ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவித இராணுவ தாக்குதல்களும் நடைபெறாது. https://www.virakesari.lk/article/242146
  8. 'அப்பா, ரொம்ப கஷ்டப்படுத்தறேனா': திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் (எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்) செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த மாணவி தேவதர்ஷினிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பிளஸ்டூ படிப்பை அவர் நிறைவு செய்துவிட்டார். ஆனால், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மூன்று முறை எழுதியும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தற்கொலையால் உயிரிழந்தார். அவரது பெற்றோரான செல்வராஜ்-தேவி தம்பதியினர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சிறிய அளவில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகின்றனர். பேக்கரி பெயரளவுக்கு இருந்தாலும் சமோசா தயாரித்து கடைகளுக்கு விற்கும் தொழிலில் செல்வராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த தம்பதியின் இரண்டு பெண் குழந்தைகளில் மூத்த மகள் தேவதர்ஷினி. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சிறுவயது கனவாக இருந்து வந்ததாக கூறுகிறார் செல்வராஜ். "பிளஸ் 2 பொதுத்தேர்வில் என் மகள் 600க்கு 526 மதிப்பெண் வாங்கினார். முதல் ஆண்டு நீட் தேர்வில் சுமார் 200 மதிப்பெண்ணும் இரண்டாம் ஆண்டில் சுமார் 300 மதிப்பெண்ணும் வாங்கினார். மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதியபோது 476 மதிப்பெண்ணை தேவதர்ஷினி வாங்கினார். மூன்று முறையும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. குடும்ப சூழல் காரணமாக அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் மருத்துவம் படிப்பது தான் அவரது நோக்கமாக இருந்தது" என்றார் செல்வராஜ். 'இப்படியொரு முடிவை எதிர்பார்க்கவில்லை' படக்குறிப்பு,நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த தேவதர்ஷினி மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கி தனியார் நீட் பயிற்சி வகுப்பில் அவரை செல்வராஜ் சேர்த்துள்ளார். "முதல் முறையாக நீட் பயிற்சி வகுப்பில் சேர்ப்பதற்காக 2 லட்ச ரூபாயைக் கட்டணமாக செலுத்தினேன். சமோசா விற்ற பணத்தில் குருவி சேர்ப்பதுபோல பணத்தைச் சேர்த்துக் கட்டினேன்" என்கிறார் அவர். "நான்காவது முறை நல்ல மதிப்பெண் வந்துவிடும் என உறுதியாக இருந்தார். அவரே லோன் செயலி மூலமாக கடன் வாங்கினார். இதற்கு மாதம் ஐந்தாயிரம் செலுத்தி வந்தேன்" என்கிறார் செல்வராஜ். கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு ஏறக்குறைய ஒரு மாதகாலம் இருந்தபோது மார்ச் 28 அன்று மாலை தற்கொலையால் உயிரிழந்தார். "அன்று வகுப்பில் இருந்து வந்ததில் இருந்தே சோகமாக இருந்தார். சமோசா தயாரித்துக் கொண்டிருந்த என்னிடம் 'அப்பா, உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தறேனா?' எனக் கேட்டார். 'அப்படியெல்லாம் இல்லை. நீ நிச்சயம் ஜெயிப்பாய்' என்றேன்" எனக் கூறுகிறார். படக்குறிப்பு,தேவதர்ஷினியின் தந்தை செல்வராஜ் "ஆனால் இப்படியொரு முடிவை என் மகள் எடுப்பாள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" எனக் கூறி கதறியழுத செல்வராஜ், "நாங்கள் அடைந்த துன்பத்தை யாரும் அடையக் கூடாது. இதைவிட பெற்றோருக்கு வேறு என்ன கஷ்டம் வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார். "நீட் தேர்வு தொடர்பாக எந்தச் செய்தியை பார்த்தாலும் என் மகள்தான் நினைவுக்கு வருகிறார். நீட் தேர்வுக்காக எத்தனையோ பேர் உயிரிழந்துவிட்டனர். அரசுகள் கொண்டு வரும் சட்டங்களால் ஏழைக் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் கூறுகிறார். '5 ஆண்டுகளில் 19 மரணங்கள்' பட மூலாதாரம்,X/EDAPPADI PALANISAMY படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்) தேவதர்ஷினியைப் போலவே நீட் தேர்வு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் 19 மாணவ, மாணவிகள் உயிரிழந்ததாக, பெயர்களை தனது எக்ஸ் தள பதிவில் பட்டியலிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லப் போகும் பதில் என்ன?' என கேள்வி எழுப்பியிருந்தார். மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இருந்த போதே நீட் தேர்வு முன்னெடுக்கப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2017 ஆம் ஆண்டுதான் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு அரியலூரில் மாணவி அனிதா உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், 'ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவோம்' என, தி.மு.க பிரசாரம் செய்தது. தி.மு.க அரசு செய்தது என்ன? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை தி.மு.க அரசு அமைத்தது. அந்தக் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நிராகரித்தார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தி.மு.க அரசு அனுப்பியது. இந்த முறை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பினார். இந்த மசோதாவும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 'பா.ஜ.க தான் காரணம்' படக்குறிப்பு,தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காமல் இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க உள்ளதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மத்திய அரசு இயற்றும் சட்டத்துக்கு மாநில அரசுகளால் விலக்கு பெற முடியும். அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு வழிவகைகள் உள்ளன" என்கிறார். "பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் மாநில அரசுகள் விலக்கு கேட்கலாம். அவ்வாறு நீட் தேர்வுக்கு விலக்கு கொடுக்கப்பட்டால் தி.மு.க அரசுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நோக்கில் திட்டமிட்டு பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துகிறது" என்கிறார் அவர். தொடர்ந்து பேசிய சரவணன் அண்ணாதுரை, "நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது என்பது தி.மு.கவின் விருப்பம் அல்ல. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக அது உள்ளது. அதனை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை" என்கிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. 'தி.மு.க அரசுக்கு ஏற்பட்ட சரிவு' படக்குறிப்பு,தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். தி.மு.க அரசு நிறைவேற்றிய மசோதா சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை" என்கிறார் அவர். நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகளில் பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறும் நாராயணன் திருப்பதி, "இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்" எனக் கூறுகிறார். "தேர்தல் பிரசாரத்தில், 'ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம்' என தி.மு.க தலைவர் கூறினார். ஆனால், அவ்வாறு நிறைவேற்ற முடியாததை அக்கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக பார்க்கிறேன்" என்கிறார் நாராயணன் திருப்பதி. நீட் தேர்வுக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவுகள் இருந்ததாகக் கூறும் நாராயணன் திருப்பதி, "நீட் விலக்கு தொடர்பாக தி.மு.க அரசு முன்வைத்த வாதங்களை உச்ச நீதிமன்றம் புறம்தள்ளிவிட்டது." என்கிறார். நீட் - கள நிலவரம் 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய1,35,715 மாணவர்களில் 76,181 (56.13 சதவீதம்) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதுவே 2024 ஆம் ஆண்டில் 1,52,919 பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 89,198 பேர் (58.33 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். "காலம் செல்லச்செல்ல நீட் மிகச் சிறந்த நிலையை எட்டும்" எனக் கூறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைத்தனர். அவை சரிசெய்யப்பட்டுவிட்டன" என்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய நாராயணன் திருப்பதி, " அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் படிப்பதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது. நீட் தேர்வை ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் திட்டமிட்ட ரீதியில் தி.மு.க பிரசாரம் செய்தது" என்கிறார். "மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் நீட் தேர்வு ரத்தாகிவிடும் எனக் கூறவில்லை. ஆனால், போலியான நம்பிக்கையை மக்கள் மத்தியில் தி.மு.க விதைத்தது" எனவும் அவர் விமர்சித்தார். இதனை மறுக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் அண்ணாதுரை, "நீட் விலக்கு தொடர்பாக தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார். "நீட் விலக்கு கேட்பது என்பது சமூகநீதிப் போராட்டம். இதை தி.மு.க அரசு ஒருபோதும் கைவிடாது. இந்த தேர்தலிலும் நீட் விலக்கு பிரசாரத்தை முன்னெடுப்போம்" எனவும் அவர் தெரிவித்தார். 'மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல' படக்குறிப்பு,சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் சாந்தி "நீட் தேர்வில் விலக்கு கேட்பதை மாநிலத்தில் ஒரு கட்சியின் பிரச்னையாக பார்க்கக் கூடாது" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் சாந்தி. "மாநில அரசின் செலவில் இயங்கும் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான உரிமையாக இதைப் பார்க்க வேண்டும்" என்கிறார் அவர். "அதேநேரம், கல்வி, வேலைவாய்ப்பில் போட்டித் தேர்வுகளைத் தவிர்க்க முடியாது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் சாந்தி. "பெற்றோர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போது தான் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்படும் தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்" எனவும் அவர் தெரிவித்தார். மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnv8qpr6637o
  9. நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது – அரசியல் அதிர்ச்சி ! 28 Mar, 2026 | 09:47 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. அந்த போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக முன்னாள் பிரதமர் ஒலி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே வழக்கில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லேக்காக் (Ramesh Lekhak ) காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளின் பக்தாபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்த சர்மா ஒலி அதிகாலை 5 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் திடீரென இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பாலன் ஷா பிரதமராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நேபாள அரசியலில் பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. நேபாள தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது நடவடிக்கை நேபாள அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242135
  10. அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான தொழிற்சாலைகளை உடனடியாக காலி செய்யுங்கள்: ஈரானின் புரட்சிகர காவலர்களின் எச்சரிக்கை Published By: Vishnu 28 Mar, 2026 | 04:28 AM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள ஒரு கனநீர் ஆலை மற்றும் 'மஞ்சள் கேக்' உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிராந்தியத்தில் உள்ள கனரக தொழிற்சாலைகள் மீது தங்கள் போராளிகள் பதிலடி கொடுப்பார்கள் என்று IRGC எச்சரித்துள்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல்கள் முடியும் வரை, குறிவைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் (1 கி.மீ) சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/242129
  11. நிலவும் வெப்பமான வானிலை : பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 28 Mar, 2026 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கையின் பல பகுதிகளில் சனிக்கிழமை (28) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது 'எச்சரிக்கை மட்டத்தில்' (Caution Level) நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.South Asians & Diaspora மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை காணப்படலாம் என திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பநிலையை 39 - 45°C 'எச்சரிக்கை' (Caution) நிலை , 46 - 52°C: 'தீவிர எச்சரிக்கை' (Extreme Caution) நிலை , 52°C க்கும் மேல் 'அபாயம்' (Danger) நிலை என வகைப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (27) பதிவான அதிகபட்ச வெப்பநிலை குருணாகல் மாவட்டத்தில் 37.8°C பதிவாகியுள்ளது. தற்போதைய வெப்பமான காலநிலை சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளார். அதிக வெப்பத்தினால் உடல் நீர்ச்சத்து குறைதல், வெப்பத்தினால் ஏற்படும் தளர்ச்சி , வெப்பத்தாக்கம் அல்லது மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது தொப்பி, வெயில் கண்ணாடி அணிவதோடு, வெப்பத்தை உறிஞ்சாத வெளிர் நிறத்திலான தளர்வான ஆடைகளை அணியவும். தாகம் எடுக்காவிட்டாலும், சீரான இடைவெளியில் அதிகளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும். மயக்கம், அதிகப்படியான வேர்வை அல்லது கடும் சோர்வு ஏற்பட்டால், உடனடியாக குளிர்ந்த இடத்திற்குச் செல்லவும். நிலைமை தொடர்ந்தால் மருத்துவ உதவியை நாடவும். https://www.virakesari.lk/article/242149
  12. தபால் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி : பொதுமக்களுக்கு எச்சரிக்கை 28 Mar, 2026 | 12:33 PM ( இணையத்தள செய்தி பிரிவு) தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு ஒரு பொதி (Parcel) வந்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறி மோசடியாளர்கள் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். அந்தச் செய்தியில் உள்ள போலி இணையதள இணைப்பை (Link) கிளிக் செய்யுமாறும் கோரப்படுகின்றனர். இணைப்பை கிளிக் செய்ததும், வங்கி அட்டைகளின் விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது. அவ்வாறு விபரங்களை வழங்கியதும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கித் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதோடு, இது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தபால் திணைக்களம் இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளது. சந்தேகத்திற்கிடமான எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தெரியாத நபர்களுக்கோ அல்லது இணையதளங்களுக்கோ உங்களது வங்கி அட்டை விபரங்கள் அல்லது OTP குறியீடுகளை வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இலங்கைத் தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242145
  13. ஆமைக்கு ஏதிராக ஈரானுடன் பலர் புகுந்துவிளையாடுகின்றார்கள், ஆமை இதில் வென்றால்தான் நல்லது, பேச்சுவார்த்தையில் போய்யென்றாலும்
  14. வியட்நாம் சண்டை பற்றிய படங்களைப் பார்த்தால் அமெரிக்கா தோற்றதாக சொல்லமாட்டார்கள்.
  15. அமெரிக்கா வியாட்னமில் சந்தித்தைவிட பல மடங்கு தோல்வியை இந்த போரினால் சந்திக்க போகின்றது😇, அதனை விலையை நாமும் செலுத்த வேண்டியுள்ளது , ஒரு மூளை பிசகின ஒருவரால் ஆமையை முதல் ஆண்டவர் நடக்கமுடியாமல் தடுக்கி விழுந்தார், இப்ப இருக்கின்றா ஆமையின் தலைவார் வாயால் வழுக்கி விழுகின்றார், ஓவ்வொரு சட்டியருக்கும் சேடம் இழுக்கும் போது ஞானம் வரும் இந்த ஆமை தலைவருக்கு இன்னும் அந்த ஞானம் வரவில்லையே
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  17. நேற்றுவரை பாஜகவுடன் கூட்டணிவைத்திருந்த தேதிமுகவுக்கு கடந்த தேர்தலில் அதுவும் அமமுகவுடன் கூட்டணிவைத்து 0.43 வீத வாக்குகள்தான் அதற்கு 10+1 ராஜ்ய சபா கொடுத்த திமுகவினர்.பாஜக கூட்டணியில் சேரமாட்டாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இரு கம்னியூஸ்ட்டுகள்>விசிக>மநீம> தவாகவுக்கு குநறந்த இடங்களைக் கொடுத்திருப்பது. தெலுங்கு பாசத்தைத்தவிர வேறு எதைச் சொல்வது. 2.8 வீத வாக்குகளை கொண்ட மநீமய்யத்துக்கு உதய~ரியனில் நிற்க வற்புறுத்தியதால் மனமுடைந்து தேர்தலில் நிற்பதையே புறக்கணித்து விட்டார். தமிழர்களைப்புறக்கணித்து தெலுங்கர்களை அரவணைத்திருக்கிறது திமுக.
  18. தத்தை நெஞ்சம் .......சர்வர் சுந்தரம் . ......கே.ஆர் விஜயா......! 😍
  19. வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே….. மேகங்களே தரும் ராகங்களே…… எந்நாளும் வாழ்க ஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள் பனிமேடை போடும் பால் வண்ண மேனி பனிமேடை போடும் பால் வண்ண மேனி கொண்டாடுதே சுகம் சுகம்……. பருவங்கள் வாழ்க பெண் : வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் சொர்க்கங்களே வரும் தரும்… சொந்தங்கள் வாழ்க ஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும் பெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும் ஆண் : கன்னங்களே இதம் பதம்…….. காலங்கள் வாழ்க .........! ...... தேன் சிந்துதே வானம் ……..
  20. ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, ] 👆 இவர் உண்மையில் தெரிந்து தான் சொல்கின்றாரா 🙄 நிபந்தனைகளில் ஒன்று ஹோர்முஸ் கால்வாயை ஈரானிடம் நிரந்தரமாகவே கொள்ளையடித்து கப்பம் பெற்று கொள்ள ஒப்படைக்க வேண்டும் அடுத்தது ஈரானால் உருவாக்கபட்டு வழிநடத்தபடும் முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்புக்களாள ஹிஸ்புல்லா ஹமாஸ் ஹவுதி இவர்களை யாரும் இனி தாக்ககூடாது
  21. ஈரான் போர் - நிம்மதி கிடைக்குமா? - பா.ரவீந்திரன் sudumanal image:VictorStock அமெரிக்காவின் இன்னொரு தவறான கணிப்பு ஈரான் மீதான போரை முன்னெடுத்திருப்பது ஆகும். ஏற்கனவே ஜேர்மன் எல்லையிலிருந்து ஒரு அங்குலம்கூட நேட்டோ நகராது என 1990 இல் கோர்பச்சேவுக்கு உறுதியளித்துவிட்டு, ரசிய எல்லைவரை நேட்டோவை நகர்த்தினார்கள். பிறகு ரசியாவால் ஐரோப்பாவுக்கு “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என கதையாடலை உருவாக்கினார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் ரசியாவை பலவீனப்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரல் ஆகும். இதை பின்னாளில் வெளிப்படையாகவே பொதுவெளியில் ஐரோப்பிய தலைவர்கள் பேசும் நிலைக்கு வந்தார்கள். இந்த நோக்கத்தை ஏதோ மாதக் கணக்கினுள் செய்து முடித்துவிடலாம் என நேட்டோ உக்ரைனை வைத்து திரைமறைவில் களமடியது. ஆனால் ரசியா நீண்டகாலப் போருக்கு தயார் பண்ணிவிட்டே இறங்கியது. அதன் விளைவாக உக்ரைன்-ரசியா போர் தொடர்கிறது. சென்ற ஆண்டு பொருளாதாரப் போரை அமெரிக்கா இதே வகைப்பட்ட தவறான மதிப்பீட்டோடு தொடங்கியது. “எல்லோரும் சமனற்ற வரி விதிப்பால் அமெரிக்காவை இதுவரை ஏமாற்றிவிட்டார்கள். எமது முன்னைய தலைவர்கள் முட்டாள்களாக இருந்துவிட்டார்கள். நான் அப்படி அல்ல. இனியும் அமெரிக்காவை மற்றைய நாடுகள் ஏமாற்ற முடியாது” என ட்றம்ப் ஒரு கதையாடலை உருவாக்கினார். ஆனால் அதன் உள்நோக்கம் அமெரிக்காவை மேவும் விதத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் சீனாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவது என்பதே. அதனால் மற்ற நாடுகளை விட சீனாவுக்கு வரம்பு மீறிய வரியை விதித்து அந்தப் போரை நடத்தினார். இன்னும் முடியவில்லை. சீனாவோ இந்தப் போரை நீண்டகாலத்துக்கு உரியதாக மாற்றி அமெரிக்க பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இப்போ ஈரானிடம் வந்திருக்கிறது அமெரிக்கா. “அணுவாயுதம் செய்யும் நிலைக்கு ஈரான் வந்துவிட்டது. உலகுக்கு ஆபத்து” என கதையாடலை முன்வைத்தது. ஆனால் அதன் உள்நோக்கம் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் பிராந்திய வல்லரசுக் கனவுக்கு சவாலாக வேகமாக வளரும் ஈரானை அடித்து வீழ்த்துவது என்பதே. அத்தோடு G7 க்கு சவாலாக மேவி வரும் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் ஒரு முக்கிய தூணாக இருப்பதால், அமெரிக்க நலன் அடிப்படையில் ஈரானை ஒரு வழி பார்த்துவிட வேண்டும் என்ற இரண்டாவது கள்ள நோக்கத்தையும் அமெரிக்கா கொண்டிருந்தது. இந்த இரு கள்ள நோக்கங்களையும் மனதில் வைத்து ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை செய்ய இறங்கியது. ஆனால் ஈரான் ஒரு நீண்டகாலப் போருக்கான தயாரிப்பை கடந்த 40 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது என்பதையும், தலைமைகள் வீழ்ந்தால் உடனுக்குடன் பிரதியிடக் கூடிய அரச மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பை பலமாக நிறுவி வைத்திருந்தது என்பதையும் அமெரிக்கா அறியாமலிருந்தது. மறுபுறத்தில் தனது 40 ஆண்டுகால கனவை ட்றம்ப் சாத்தியப்படுத்த வந்திருப்பதாக நெத்தன்யாகு புகழாரம் சூட்டினார். ஏதோ ஓரிரு வாரங்களில் ஈரானை மண்டியிடச் செய்யலாம் என நினைத்த அமெரிக்கா ஆழமறியாமல் இன்னொரு சேற்றுள் கால்வைத்திருக்கிறது. நிலைமை எதிர்பார்த்ததுபோல் சுலபமாக அமையவில்லை. மாட்டிக்கொண்டிருக்கிறது. இப்போ தனது உலக மேலாதிக்க பவுசுக்கு பங்கம் ஏற்படாதபடி இந்தப் போரிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தத்தளிக்கிறது. அமெரிக்க மக்களில் 70 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போருக்கு எதிராக நிற்பதாக தரவுகள் சொல்கின்றன. இஸ்ரேலில் 80 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போரை ஆதரிக்கிறார்கள் என்பது மற்றொரு தரவு. இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவு சரியானது என சொல்ல முடியாவிட்டாலும், அதிகமான அமெரிக்க மக்கள் போரை விரும்பவில்லை என்பதும் அதிகமான இஸ்ரேலிய மக்கள் போரை விரும்புகிறார்கள் என்பதும் இதற்குள்ளால் பெறப்படுகிற முடிவு ஆகும். “இந்தப் போர் எமது போரல்ல. இஸ்ரேலின் போர். எதற்கான எமது இராணுவம் பலியாக வேண்டும்” என அமெரிக்க மக்கள் கேட்கிறார்கள். அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் வீதிக்கு வந்து குரல்கொடுக்கிறார்கள். “அமெரிக்கா ஒரு சரியான திட்டமிடலுடன் இந்தப் போரை தொடங்கவுமில்லை. எவ்வாறு இதிலிருந்து வெளியேறுவது என திட்மிடவுமில்லை” என இராணுவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். காரணம் “இது அமெரிக்காவினது போர் அல்ல” என்கிறார்கள் அவர்கள். ஆப்கான் போரையும் ஈராக் போரையும் தவறானது, தேவையில்லாமல் எமது இராணுவத்தை பலிகொள்ள வைத்த முட்டாள்தனம் வாய்ந்தது என்றும், பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தின என்றும் ட்றம்ப் இந்தப் போர் தொடங்கும் வரை விமர்சித்துக் கொண்டிருந்தவர். இப்போ தவிர்க்க முடியாமல் அதே வழிமுறையில் ஈரானை அணுக விழைகிறாரா என்ற கேள்வி எழும்புகிறது. ஈரான் க்குள் அல்லது அதன் எரிசக்தி இதயமான கார்க் தீவுக்குள் அமெரிக்க இராணுவம் கால்வைக்கப் போகிறதான சாத்தியப்பாடுகள் பற்றி பலமாக விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில் மத்திய கிழக்கு அடிவருடி நாடுகளுடன் சேர்ந்து ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலலாம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. எது எப்படியோ இந்த அணுகுமுறை எல்லாமே ஈரானுள் காலடி வைப்பதாகவே அர்த்தப்படும். அப்படி கால்வைத்தால் நீண்ட காலத்துக்கு மீள முடியாத சேற்றுள் அமெரிக்கா அகப்பட்டதாகவே அமையும். ஏற்கனவே பொருளாதார ரீதியில் சவாலை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் பலமான அடியை சந்திக்க நேரும். 2003 ஈராக் போரில் மட்டும் அமெரிக்கா 4 திரில்லியன் டொலரை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஈராக்கைவிட பல மடங்கு பலம் பொருந்திய ஈரானின் இராணுவக் கட்டைப்பும், ஏவுகணை மற்றும் ட்றோண் தொழில் நுட்பமும், பெருநிலப் பரப்பும், மலைகள் கொண்ட நில அமைவும் அமெரிக்க இராணுவத்துக்கு இன்னும் கடினமான காலங்களையும் இழப்பையும் பரிசளிக்கும். அதேநேரம் பலம்பொருந்திய அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலுக்கு ஈரான் மக்கள் பெருமளவு விலைகொடுக்கவும் நேரும். அழிவுகள்தான் எஞ்சும். உலகப் பொருளாதார கட்டமைவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் பொறுத்தளவில் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கான், லிபியா, உக்ரைன் போர்களைப் போலல்ல ஈரான் போர். உலக இயக்கத்தின் இதயமான எண்ணெய் மற்றும் எரிசக்தி வளத்தை மோசமாக பாதிக்கக் கூடிய போர் இது. இந்த 26 நாட்களுக்குள்ளேயே அந்த நெருக்கடி பல்வேறு வடிவில் உலக மக்களின் வாசல்படிவரை வந்துள்ளது. எனவே இந்தப் போரை நீண்ட நாட்கள் இழுத்தடிக்க முடியுமா என்ற கேள்வி பலமானதாக உள்ளது. அமெரிக்கா ஈரானுக்குள் கால் பதித்தால் இந்த கால முரணுக்குள் அகப்பட்டு நசிபடும். எதிர்காலத்தில் தோல்வியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வெளியேற நேரும். அதையும்விட இப்போது “நாம் போரில் வென்றுவிட்டோம்” என அமெரிக்கா ஒரு கதையாடலை உருவாக்கி வெளியேறுவது சுலபம். “எல்லா தலைவர்களையும் கொன்றுவிட்டோம், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு நிலையங்களை அழித்தொழித்து விட்டோம், யூரேனியம் செறிவூட்டும் அணுசக்தி நிலைகளை இயங்கமுடியாதபடி புதைத்துவிட்டோம், எமது எரிசக்தி தேவைக்கு ஹோமோஸ் நீரிணை முக்கியமானதல்ல. அதற்குரியவர்கள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்றவாறான கதையாடலை உருவாக்கிவிட்டு தப்பிச் செல்வது எல்லோருக்கும் நல்லது. இவையெல்லாவற்றையும் ட்றம்ப் ஏற்கனவே பேசிப் பேசி மறந்து மறந்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். நெத்தன்யாகுவோ தனது கனவு மெய்ய்பட கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் ட்றம்ப் இந்தப் போரிலிருந்து வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாகவே இருக்கிறார். மறுபுறத்தில், தற்காலிக போர் நிறுத்தம் என்பது மீண்டும் தமக்கெதிரான தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்காது எனவும், அதனால் நிரந்தரமாக ஈரான் மீது போர் தொடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா தர வேண்டும், அன்றேல் பேசிப் பயனில்லை என்கிறது ஈரான். தனது இருப்புக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பது அதன் அர்த்தம். இந்தப் போரில் ஐரோப்பியர்கள் மற்றும் நேச பாச நாடுகளான யப்பான், அவுஸ்திரேலியா என்பன இதுவரை பங்குபெற மறுத்துள்ள நிலைதான் உள்ளது. ஸ்பானியாவைத் தவிர, இவர்களை நம்ப முடியாது. இவர்கள் ஏற்கனவே நேட்டோ பெயர்ப்பலகையின் கீழ் நிகழ்த்திக் காட்டிய போர் வரலாறுகளிலிருந்து பெறப்படக்கூடிய பாடம் இதுவாகும். யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அவர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் அந்த நாடுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியது. அவை முன்பிருந்த நிலையைவிட மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டன. ஏற்கனவே ட்றம்ப் ஐரோப்பாவை கைவிட்டது போன்ற தோற்றம் என்பது அவர்களுக்கு இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமான நிரந்தர விரிசலாக இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் இரு தரப்புக்கும் நேட்டோ என்ற இராணுவ வல்லாதிக்க கருவியாக செயற்படுபவை. அடிப்படையிலேயே இந்தப் போர்களுக்கான மனநிலையை பேணிவைத்திருப்பது காலனிய மனோபாவமும், வெள்ளை மேலாதிக்கமும்தான். அதை காக்கும் கருவி நேட்டோ அமைப்பு. அவைகளுக்கு வெளியில் எந்த நாடும் வல்லரசாக வருவதையோ, பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் மேவுவதையோ, வேறு எந்த வடிவிலும் ஆதிக்கம் செலுத்துவதையோ அந்த மனநிலை சகிப்பதில்லை. எனவே ஐரோப்பா இந்தப் போருக்கு எதிராக நிற்கிறது என்பதற்கோ, தேவைப்படும்போது அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானை சேறாட மாட்டார்கள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. உயர் நாகரிகம் அடைந்தவர்கள் தாம் என்ற கதையாடலை உருவாக்கி இப்போதுவரை அதைப் பேணும் காலனிய மனநிலை அவர்களிடம் இன்றும் தொடர்கிறது. மனிதநீக்கம் (dehumanisation) செய்கிற கதையாடல்களை உக்ரைன் போரின் போதும் கேட்டோம். காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா கொடுமைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கமாஸ் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றதை முன்தள்ளிய கதையாடலின் போதும் அதைக் கேட்டோம். ஆனால் ஈரானில் 168 பள்ளிச் சிறுவர்கள் மீது அமெரிக்கா வேண்டுமென்றே குண்டுவீசிக் கொன்றபோதும், இருபதினாயிரம் சிறுவர்கள் உட்பட 70000 க்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சியோனிச அரசால் கொல்லப்பட்டபோதும் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ யாரும் ‘மனிதநீக்கம்’ செய்து பேசுவதில்லை. இந்தப் போரில் இதுவரை ஈடுபடாத ஐரோப்பிய நாடுகளும் அப்படிப் பேசுவதில்லை. குறைந்தபட்சம் கண்டனங்கள் கூட தெரிவிப்பதில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களை குற்றப்படுத்துவதையே தொடர்ந்து செய்கிறார்கள். இஸ்ரேல் அணுவாயுதம் வைத்திருப்பதையோ, அதை IAEA பரிசோதிக்க அனுமதிக்காமல் இருப்பதையோ பேசாத நாடுகள் மேடைக்கு வந்து “ஈரான் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது” என பேச என்ன அறம் இருக்கிறது. அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் அதைப் பேசுவது இன்னும் நகைச்சுவையாக இருக்கிறது. இப்போது அணுவாயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கேட்டா செய்தன. அல்லது ஐநாவைத் தன்னும் கேட்டா செய்தன. அணுவாயுதம் செய்யக் கூடிய எல்லா வளத்தையும் தொழில்நுட்பத்தையும் எட்டிய ஈரான் இதுவரை அதை செய்யாமலிருந்தது. இந்தப் போரும் அதன் பின்னான கெடுபிடிகளும் ஈரானின் இருப்பு மீது தொடர்ந்து அச்சுறுத்தலலாக மாறினால், எதிர்காலத்தில் ஈரான் அணுவாயுத தயாரிப்பை நோக்கி தள்ளப்பட சாத்தியம் உண்டு. “பலமற்ற நாடுகளின் பலம்” அணுவாயுதம் என வடகொரிய அதிபர் சொல்வது ஒன்றும் பயமுறுத்தல் அல்ல. பாதுகாப்பு! கடந்த வருடம் 2025 ஆனி மாதமும் மற்றும் இவ் வருடம் பெப்ரவரி கடைசியிலும் நடந்த இரு வெவ்வேறு பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படும் நிலை கனிந்து வரும்போது, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா -இரண்டு சந்தர்ப்பங்களிலும்- ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது. முதுகில் குத்திய சம்பவங்கள் இவை என ஈரான் வெளிநாட்டமைச்சர் இதை விபரித்திருந்தார். பெப்ரவரி கடைசி பேச்சுவார்த்தையில் எல்லாம் பேசி ஒரு தீர்வுக்கு அருகில் வந்துவிட்டதான திருப்தியில் இருந்தபோது, மறுநாள் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என -பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்து நடத்திய- ஓமான் வெளிநாட்டமைச்சர் வெளிப்படையாகவே கூறினார். ஆக அமெரிக்கா விரும்பியது தீர்வை அல்ல. இஸ்ரேலின் நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்தவே என்பதுதான் அதன் அர்த்தம். அதனால் “சீனா, ரசியா, இந்தியா போன்ற பலம்பொருந்திய நாடுகள் ட்றம்ப் உடன் நேரடியாகவே தொடர்பு கொண்டு கறாராக ஒன்றைத் தெரிவித்துவிட வேண்டும்” என்கிறார் உலகின் முன்னணி அரசியல் விமர்சகர் ஜெப்ரி ஸாக்ஸ். “இந்தப் போர் உலகத்தில் எல்லோரையும் பாதிக்கிற விடயம். அதைச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அது எம்மையும் பாதிக்கிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பாதிக்கிறது. இன்னொரு உலகப் போரில் போய் முடிவடையக் கூடிய ஆபத்தும் கொண்டது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அழுத்திச் சொல்ல வேண்டும் என்கிறார் அவர். இது அவர்களின் கடமை. மவுனமாக இருக்கக் கூடாது என்கிறார். பதவியேற்ற நாளிலிருந்து ஈரான் போர் வரை மாத்தி மாத்தி கதைக்கும் ட்றம்ப் இன் கோமாளித்தனம் உலகம் அறிந்தது. அவரது நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் ஆதாரமாக கொண்டு, அவை டிமென்ஸியா நோயின் அறிகுறிகள் என உளவியல் நிபுணர்கள் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெப்ரி ஸக்ஸ் இத் தகவலை சில பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். கோமாளித்தனமோ டிமென்ஸியாவோ என்ன கோதாரியோ அவையாவது இந்தப் போரை நிறுத்தச் சொல்லி ட்றம்ப்பின் மண்டைக்குள் சொல்லிவிட்டால் பெரும் உதவியாக இருக்கும். உலகம் நிம்மதியாக இருக்கும்! https://sudumanal.com/2026/03/27/நிம்மதி-கிடைக்குமா/
  22. மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும் March 28, 2026 11:59 am ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது. இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில், இனங்களைக் கடந்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் உண்டென்றால் அவர் நடராஜா ரவிராஜ். 2006 நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பின் இதயப்பகுதியில் கேட்கப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சத்தங்கள், ஒரு தனிமனிதனை மட்டும் வீழ்த்தவில்லை; மாறாக, இனங்களுக்கு இடையே பாலமாக இருந்த ஒரு பலமான ஜனநாயகக் குரலையே மௌனிக்கச் செய்தன. 1962 இல் சாவகச்சேரியில் பிறந்த ரவிராஜ், ஒரு சிறந்த சட்டத்தரணியாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். 1987 இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், வெறும் வருமானத்திற்காக வாதிடுபவராக இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். மனித உரிமைகள் ஊடாக அவர் ஆற்றிய பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு ‘நீதியின் காவலன்’ என்ற பிம்பத்தை உருவாக்கியது. யாழ். மாநகர முதல்வராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் உயர்ந்தபோது, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாக வாதிட்டார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பேசுவதோடு நிறுத்திவிடாமல், முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஓங்கி ஒலித்த அவரது குரல், அவரை ஒரு தேசியத் தலைவராக மாற்றியது. சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வலிகளை அவர்களின் மொழியிலேயே புரியவைத்த ஆற்றல் ரவிராஜுக்கு மட்டுமே இருந்தது. கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள தனது இல்லத்திலிருந்து ஊடக நேர்காணல் ஒன்றை முடித்துவிட்டுப் புறப்பட்ட அந்தச் காலை வேளை (காலை 8.15), மரணம் மோட்டார் சைக்கிள் வடிவில் வந்தது. நாரஹேன்பிட்டி மார்தா வீதி வழியாகத் தனது வாகனத்தில் எல்விட்டிகல மாவத்தைக்குள் அவர் பிரவேசித்தபோது, இனந்தெரியாத நபர்களால் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். சரமாரியாகப் பாய்ந்த தோட்டாக்கள் 44 வயதேயான அந்த இளம் தலைவரையும், அவரது மெய்ப்பாதுகாவலர் லக்ஷ்மனையும் சிதைத்தன. தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு நாடே அதிர்ந்தது. படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் கூட, வாகரையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கொழும்பில் ஐநா அலுவலகம் முன் நின்றுகொண்டு, “எங்கள் மக்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆவேசமாக முழங்கியவர் அவர். இந்தக் கொலையின் பின்னணியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருந்ததாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. உளவுப்பிரிவு அதிகாரி Liyanarachchige Abayaratne அளித்த சாட்சியத்தில், இந்தக் கொலைக்காக ‘கருணா குழு’ சார்ந்த பிரிவினருக்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். கங்காராம கடற்படை புலனாய்வு முகாமில் இருந்த அதிகாரிகளே இதற்கான திட்டத்தைத் தீட்டியதாகச் சாட்சியங்கள் தெரிவித்தன. பத்து ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், 2016 டிசம்பர் 23 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, நள்ளிரவு 12:25 மணிக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிரதிவாதிகளின் கோரிக்கைப்படி, ஏழு பேர் கொண்ட சிங்களம் பேசும் ‘சிறப்பு ஜுரர் சபை’ இந்த வழக்கை விசாரித்தது. சாட்சிகள் அடையாளம் காட்டிய போதிலும், மூன்று கடற்படை அதிகாரிகள் மற்றும் கருணா குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேரையும் ஜுரர் சபை ஏகமனதாக விடுதலை செய்தது. “தமிழர் குரலை நசுக்க இராணுவத்துடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களின் முயற்சி இது” என அப்போது சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகச் சாடினர். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட அந்த நள்ளிரவு நேரம், இலங்கையின் நீதித்துறையில் ஒரு கறுப்புப் பக்கமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. நீண்ட 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 2026 மார்ச் 26 அன்று இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஐந்து பேரையும் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நள்ளிரவில் தீர்ப்பு வழங்கப்பட்ட முறையை “அசாதாரணமானது” என நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா சுட்டிக்காட்டினர். குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. ரவிராஜ் மறைந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த இந்த வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ள நிலையில், இலங்கை நீதித்துறை தனது கடமையைச் சரிவரச் செய்து உண்மையான நீதியை நிலைநாட்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். https://oruvan.com/the-great-man-nataraja-raviraj-the-fall-of-a-democratic-voice-and-the-long-journey-to-justice/
  23. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது; விசாரணைகளுக்கு பருத்தித்துறை நீதிமன்று அனுமதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் நூலகமொன்றை அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவரின் பூர்வீக காணியில் நூலகம் ஒன்றினை நிர்மாணிக்க , அவரது சகோதரி வல்வெட்டித்துறையை சேர்ந்த அனந்தராஜ் என்பவருக்கு அற்றோணி தத்துவம் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் காணியில் கட்டுமானங்களை மேற்கொள்ள வல்வெட்டித்துறை நகர சபையில் அதற்கான அனுமதிகளை பெறும் நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உருவங்கள் , ஓவியங்கள் , பதாகைகள் , வரலாற்று சின்னங்கள் , புலிகளின் தலைவரின் சிலை உள்ளிட்டவை காட்சிப்படுத்த உள்ளனர் எனவும் அதனூடாக விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். அத்துடன் இத் திட்டத்தை இலங்கையில் அனந்தராஜ் என்பவர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , அதற்காக அவருக்கு முதல் கட்டமாக 16 இலட்ச ரூபா நிதி வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பண பரிமாற்றம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரிய நிலையில் , அதற்கான அனுமதியினை மன்று வழங்கியுள்ளது. https://akkinikkunchu.com/365852/
  24. ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா? March 28, 2026 ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளதைக் காணமுடிகிறது. இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடியதெனினும், போர்க்காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்களை ஈரானுக்குத் திருப்பியனுப்ப மறுப்பதனை, அதன் விளைவுகளின் அடிப்படையில் நோக்குகையில் எவ்வகையிலும் நடுநிலையான நகர்வாகக் கருதமுடியாது என இந்தியாவின் பிரபல பூகோள அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் பிரம்மா செல்லனே சுட்டிக்காட்டியுள்ளார். https://www.ilakku.org/sri-lanka-refuses-to-return-iranian-sailors-did-it-bow-to-us-pressure/
  25. சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம் 28 Mar, 2026 | 11:24 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) சவுதி அரேபியாவில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் (Prince Sultan Air Base) மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில், குறைந்தது 10 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக த வொசிங்டன் போஸ்ட் ( The Washington Post ) செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் இருவர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் விளைவாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதல் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன என்பதற்கான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/242142
  26. தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி adminMarch 28, 2026 தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே.. ” என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231152/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.