All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஐரோப்பாவில் வாழும் உங்களுக்கு நன்றாக தெரியும், இங்கு மத வெறி, மத அடிப்படைவாதம் இல்லை என்பது. அப்படி இருந்தால் அது ஆசிய/ ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வாழும் மக்களிடையே தான் அது வீரியத்துடன் இருக்கிறது என்பது. உங்களுக்கு தெரியும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பாவில் இனவெறி மிக குறைவான அளவில் உள்ளதென்பது. உங்களுக்கு தெரியும், இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் இனவெறியை விடவே ஐரோப்பியர்களுக்குள் இனவெறி மிக குறைவு என்பது . உங்களுக்கு தெரியும் வரட்டு கெளரவம், வெற்று பழமைவாதம் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு குறைவு என்பது. உங்களுக்கு அது நன்றாக தெரிந்ததால் தான் அப்படியான பிற்போக்குத்தனம் உள்ள நாட்டில் இருந்து இவ்வாறான தாராளமயமான நாடுகளில் குடியேறி அவர்களின் நாட்டு முன்னேற்றத்தால் பலன் பெற்று மகிழ்சசியாக வாழ்கின்றீர்கள். இவ்வாறாக, அனைத்தும் உங்கள் அறிவுக்கு தெரிந்த நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். காரணம் அதே வரட்டு கௌரவம், போலி பெருமை பேசுவதற்காக என்பதும் என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும். இப்படி அனைத்தும் தெரிந்த உங்களுக்கு எனது அறிவுரை தேவையில்லை என்பது எனக்கு தெரியும்.
-
நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை!
நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை! 04 Mar, 2026 | 03:56 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் சட்டமியற்றாது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் நிபுணராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கம் கலக்கமடையவில்லை. எதிர்க்கட்சிகள் இன்று கலக்கமடைந்து மக்களை குழப்பமடையச் செய்கின்றன.போலியான விடயங்களை குறிப்பிட்டு மக்களை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அல்லது மக்களுக்கு எதிரான வகையில் சட்டமியற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கம். மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போது கட்டம் கட்டமாக திருத்தம் செய்யப்படுகின்றன. மக்களுக்கு இணக்கமான வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.இதன் ஒரு அங்கமாகவே நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. வறுமை நிலையில் உள்ள நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டே இந்த நுண்கடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இந்தத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். நுண்கடன் திட்டம் குறித்து கடந்தகால அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள். நுண்கடன் திட்டங்களை முறையாக கண்காணிக்கும் வகையில் தான் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் இருந்து எதிர்க்கட்சியினர் விடுபட வேண்டும். மக்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட போவதில்லை என்றார். நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை!
-
-
காணாமல் போன ஊரணி மீனவர்கள்!
காணாமல் போன ஊரணி மீனவர்கள்! Mar 4, 2026 - 03:21 PM யாழ்ப்பாணம், வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் எமது மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் தேடி கடலுக்குள் சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கும், கடற்கரையினருக்கும் மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் தகவல் தெரிவித்தோம் ஆனால் ஆறு நாட்களாகியும் இதுவரை எமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. கடந்த திங்கட்கிழமை கச்சதீவுக்கு அருகாமையில் இந்திய எல்லைக்கு அருகில் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாகவும் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கியதாக இந்தியா மீனவர்கள் எமது மீனவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள் என தெரிவித்தனர். -யாழ். நிருபர் பிரதீபன்- காணாமல் போன ஊரணி மீனவர்கள்!
-
அமெரிக்காவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் உறுதி
அமெரிக்காவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் உறுதி Published By: Vishnu 05 Mar, 2026 | 05:35 AM ஈரான் அரசு அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளாது என, மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கொமெய்னியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல நாடுகள் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய அழைப்புகளுக்கு பதிலளித்த முகமது மொக்பெர், அமெரிக்கர்களை நாங்கள் நம்பவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எந்த அடிப்படையும் இல்லை. எங்களுக்கு இந்த போரை நாங்கள் விரும்பும் வரையில் தொடர முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் உறுதி
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
குவைத்தில் உயிரிழந்த 5வது மற்றும் 6வது அமெரிக்க வீரர்களின் விபரங்கள் வெளியீடு! Mar 5, 2026 - 09:19 AM யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் குவைத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது அமெரிக்க வீரர்களின் அடையாளத்தை பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஐந்தாவது வீரராக அயோவாவின் வோகியைச் சேர்ந்த மேஜர் ஜெப்ரி ஓ'பிரையன் (Major Jeffrey O'Brien) அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு சிக்னல் கோர்ப்ஸ் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்துள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு குவைத்தில் பணியில் அமர்த்தப்பட்டதாக பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, குவைத் தாக்குதலில் உயிரிழந்த ஆறாவது வீரர் கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவைச் சேர்ந்த பிரதம வாரண்ட் அதிகாரியான 54 வயதுடைய ரொபர்ட் எம். மர்சான் (Robert M. Marzan) எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) குவைத்தின் 'போர்ட் ஷுஐபா' பகுதியில் அமைந்துள்ள கட்டளை மையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்த ஆறு வீரர்களும் உயிரிழந்திருந்தனர். குவைத்தில் உயிரிழந்த 5வது மற்றும் 6வது அமெரிக்க வீரர்களின் விபரங்கள் வெளியீடு!
-
2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சம்: இருவர் கைது
2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சம்: இருவர் கைது Mar 5, 2026 - 08:38 AM இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து சுகாதார அமைச்சுக்குக் கட்டடமொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதன் பின்னர், அதற்கான வாடகைப் பணத்தைக் காசோலைகள் மூலம் செலுத்துவதில் எவ்வித தாமதமும் இன்றிச் செயற்படுவதற்காகவே சந்தேகநபர் இவ்வாறு இலஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, 50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான உதவியை வழங்குவதற்கும், அவரது குடும்ப உறவினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உதவியை வழங்குவதற்கும் குறித்த வர்த்தகர் இவ்வாறு இலஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபரும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சம்: இருவர் கைது
- Today
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை Mar 5, 2026 - 07:15 AM சைப்பிரஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானம், ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி,, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. இருப்பினும், குறித்த ட்ரோன் யாரால் ஏவப்பட்டது என்பது குறித்த தகவல்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இதுவரை வெளியிடவில்லை. கடந்த 2ஆம் திகதி, "ஷாஹெட்" வகையைச் சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று, அக்ரோட்டிரி பகுதியில் அமைந்துள்ள பிரித்தானிய இராணுவத் தளத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தினால் சொத்துக்களுக்குச் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சைப்பிரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தப் போர்ச் சூழலில் சைப்பிரஸ் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் பங்காளியாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்ரோட்டிரி தளத்தில் தங்கியுள்ள இராணுவத்தினரைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து படைத்தளத்தைப் பாதுகாப்பதற்காக ரோயல் கடற்படையின் வைல்ட்கேட் ஹெலிகாப்டர் வரும் நாட்களில் சைப்பிரஸிற்கு வருகை தரும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சைப்பிரஸ் மீதான ட்ரோன் தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்படவில்லை
-
ஹோர்மஸ் நீரிணை: சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி
ஹோர்மஸ் நீரிணை: சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி Published By: Vishnu 05 Mar, 2026 | 05:23 AM அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில், ஹோர்மஸ் நீரிணையை மூடியுள்ள ஈரான், சீனாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. போர்நிலையில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்ததற்கும், பொருளாதாரத் தடைகளை ஏற்க மறுத்ததற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகளவில் கடத்தப்படும் மசகு எண்ணெயின் சுமார் 20% இந்த நீரிணை வழியாகச் செல்கின்ற நிலையில், இந்த மார்க்கத் தடைகள் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹோர்மஸ் நீரிணை: சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 09:27 AM இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க யுத்த விவகார செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததை உறுதிப்படுத்தினார். "சர்வதேச கடல் பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் அழித்துள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார். சுமார் 180 பணியாளர்களுடன் பயணித்த "ஐஆர்ஐஎஸ் டெனா" கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இதுவரை பின்வரும் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் மிதந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவை மேலதிக பரிசோதனைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 32 பேர் கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கப்பலில் இருந்த ஏனைய சுமார் 64 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. 1979 ஆம் ஆண்டின் சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மாநாட்டின் உடன்படிக்கையின்படி, இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணிகளை முன்னெடுக்கும் சர்வதேச கடப்பாடு இலங்கைக்கு உண்டு. Beaches & Islands நேற்று புதன்கிழமை (04) அதிகாலை 5.08 மணியளவில் கிடைத்த அபாய சமிக்ஞையைத் தொடர்ந்து, கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தலைமையிலான குழுவினர் விமானப்படையின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இச்சம்பவம் பிராந்தியத்தில் ஒரு நேரடி யுத்தச் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/240189
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா இங்கிலாந்திற்கிடையே நடைபெறும் இரண்ட்டாவது அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெறுகிறது 200 ஓட்டங்களுக்கு மேல் எதிர்பார்க்கப்படும் ஆடுகளம், சிகப்பு மண் கொண்ட ஆடுகளம், 1-6 களில் அதிகமாக வேக பந்து வீச்சிற்கு சாதகமாகவும் கடினமான காலப்பகுதியாகவும் இருக்கும், விக்கெட்டுக்களை இழக்காமல் விளையாடும் அணி 7-20 ஓவர்களில் தனது 200 ஓட்ட இலக்கினை எடுக்க முற்படலாம். பெரிய ஓட்டங்கள் கொண்ட மைதானம் ஆகையால் முதலில் துடுப்பாடலை தெரிவு செய்ய அணிகள் விரும்ப கூடும், மும்பை மைதானங்கள் மைதான ஈரலிப்பு பொதுவாக ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது அதனால் பெரும்பாலும் முதல் துடுப்பாட்டத்தினை அணிகள் விரும்பலாம். சிகப்பு ஆடுகளம் என்பதால் சுழல் பந்து மற்றும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், ரேகானிற்கு பதிலாக ஓவர்டன் இங்கிலாந்து அணிக்காக விளையாடவுள்ளார் என கூறப்படுகிறது. இந்தியணி மேற்கிந்தியணிக்கெதிராக ஒரு நம்பிக்கையான வெற்றியுடன் களமிறங்குகிறது, அதே வேளை இந்திலாது அணி சிரமமான ஆடுகளத்தில் பல வெற்றிகளுடன் களமிறங்குகிறது, இலங்கைஆடுகளத்தின் கடுமையான சூழ்நிலையில் விளையாடிய நியுசிலாந்து அணி நேற்றைய போட்டியில் காட்டாறு போல எதிரணியினை துவைத்தெடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போடிகளில் சோபை இழந்து காணப்படும் வெவண் இன்று இந்தியணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வாரா அல்லது அனைத்து போட்டிகளிலும் சொதப்பும் பட்லர் இன்றைய போட்டியில் மிளிர்கிறாரா?
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
மேலும் ஒரு தகவல். ஈரான் தன்னிடம் உள்ள சூப்பர் சோனிக் மிசைல்களை இன்னும் பாவிக்கவில்லை. முதலில் தரமற்ற மிசைல், டிரோன்களை அனுப்பி அமெரிக்கா இஸ்ரேலின் எதிர் ஏவுகணைகளை விரயம் செய்கிறது. நமக்கு எதிர் ஏவுகணை தட்டுப்பாடு வரலாம் என அமெரிக்க அதிகாரிகள் காங்கிரஸ் உறுபினருக்கான ரகசிய விளக்கமளிப்பில் சொல்லி உள்ளனராம். எனபேதாம் ஏவும் தளங்களை விரைந்து அழிக்கிறோம் என்றார்களாம்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
- ` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
இங்கே வெறும் பழகுவதற்காக மட்டும் கொடுக்கும் கார் லைன்சன்ஸ் எடுக்கும் போதே உறுப்புதானம் செய்ய விரும்புகிறீகளா என கேட்பார்கள். முன்பு விரும்ப்பம் என்றால் டிக் அடிக்க வேண்டும். இப்போ விருப்பம் இல்லாட்டில் டிக் அடிக்க வேண்டும். இப்படியான முறை மருத்துவ படிப்புக்கு உடலை கொடுக்கும் முறைக்கு இல்லை. ஆனால் அதற்கும் 18 வயதாயிருந்தால் போதும். இந்தியாவிலும் 60 வயதாகவேண்டும் என்ற நியதி இல்லை என்பதை செய்தியே சொல்கிறது.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நீங்கள் மஹாபாரத காலத்தில் சூர்ய அஸ்தமனத்தின் பின் போர் செய்ய கூடாது, பென் உருவில் வருபவர்ரை கொல்ல கூடாது என்று ஏதேனும் பண்டைய போர் விதிகளை பின் பற்றுகிறீர்களா? இதில் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட எந்த யுத்த விதியும் மீறப்படவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் நாலு நாளைக்கு முன்பே ஈரானின் அத்தனை அரச சார்புடைய அமைபுகள் மீதும் தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு போர் கப்பல், இந்தியாவில் இருந்து யுத்த முனை நோக்கி நகர்கிறது. இதை யுத்த முனைக்குள் நுழைந்த பின் தான் தாக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. 2ம் உலக போரில் ஜேர்மனியின் யூபோர்ர்டுகள் பலவும், பிரித்தானியாவின் மேர்ச்ண்ட் நேவி மற்றும் நேவி கப்பல்களும் நடு அத்லாந்திக்கில் வைத்து இரு தரப்பாலும் மூழ்கடிக்கப்பட்டன. அது போலவே இதுவும். ஆனால் இந்தியாவை தேவையில்லாமல் டென்சன் ஆக்க கூடாது என்பதால் - அதன் territorial waters மட்டும் அல்ல exclusive economic zone ஐயும் தாண்டிய பின் இலங்கை EEA க்குள் வைத்து அடித்துள்ளார்கள். இது கூட முடிந்தளவு உயிரிழப்பை தவிர்க்க என்றே நினைக்கிறேன. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே அல்லது மாலைதீவுக்கும் Horn of Africa வுக்கும் இடையில் வைத்து போட்டிருப்பின் - காப்பாற்ற எவரும் இன்றி அத்தனை பேரும் செத்திருப்பார்கள்.- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
@Kadancha , நீங்கள் சமீபத்திய நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் போல தெரிகின்றது. ஏதாவது சில வகைகளில் ஆறுதல் அடைய முயற்சி செய்யுங்கள். இந்த தலைவர்கள் எவருமே நாங்கள் எங்கள் வாழ்க்கைகளை தொலைத்து இவர்களுக்காக துக்கம் அனுசரிக்கும் அளவுக்கு புனிதர்களோ அல்லது நல்ல மனிதர்களோ கிடையாது. நீங்கள் தொடர்ந்தும் தமிழில் எழுத முயற்சி செய்வது பாராட்டுக்குரிய ஒரு விடயம்............👍.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன ஆனாலும் 3 புள்ளி முக்கியம் குமாரு- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.- ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
இலங்கையில் தங்கள் கொலை, கொள்ளை, ஊழல்களை மறைக்க இல்லாத புலிகளையும் புலம்பெயர் தமிழரையும் குற்றம்சாட்டி தம்மை மறைத்துக்கொள்வதுபோல், வளம் நிறைந்த நாடுகளை கொள்ளையடிக்க, அடிமைப்படுத்த அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று அவர்கள்மேல் போர் தொடுப்பது அமெரிக்காவின் வழமை. சரி, அவர்கள் அணு ஆயுதம் தயாரித்தவர்களாகவே இருக்கட்டும் அதனால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்சனை? அமெரிக்கா தயாரிக்கவில்லையா அணுஆயுதம்? அமெரிக்கா தயாரித்தால், அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து இருந்து தம்மை பாதுகாக்க மற்றைய நாடுகளும் தயாரிக்க உரிமை இல்லையா அவர்களுக்கு? மத்திய கிழக்கு நாடுகளை குழப்பி, அவர்களை அவர்கள் உலகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு இழுத்து விட்டதே அமெரிக்கா தான். ஆதன் பலனை பல நாடுகள் அனுபவித்து வருகின்றன. ரஷ்யா தயாரிக்கிறது, சீனா தயாரிக்கிறது அணு ஆயுதங்களை, அவர்களை தாக்கட்டும் பார்ப்போம்! அமெரிக்கா இடங்கண்ட நாடுகளைத்தான் தாக்குவார்களாம். எனக்கென்னவோ ஈரானால்த்தான் டிரம்புக்கு அழிவுபோல்தெரிகிறது. அமெரிக்கா அநிஞாயமாக பழி சுமத்தி அழித்த வளங்களை, கொள்ளையடித்த நாடுகள் தங்கள் சுயத்தை இழந்து பழிவாங்க துடிக்கின்றன, வாங்குகின்றன. அதற்கு பலியாகுபவர்கள் எந்த விதத்திலும் இதனோடு சம்பந்தப்படாத அப்பாவிமக்களே. அமெரிக்காவின் இந்த அடாத்தான செயல்களுக்கு நட்பு நாடுகள் துணை போகக்கூடாது அமெரிக்காவை தனிமைப்படுத்தி விடவேண்டும். ஐக்கியநாடுகள் சபை பாதுகாப்பு போர்படையை அனுப்பி தாக்கப்படும் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும், அல்லது ட்ரம்பை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஹாமெனி ஓடி ஒளித்து கொல்லப்படவில்லை. சாத்தான்சாகு ஓடி ஒளித்தது போல. அவரின் அலுவலகத்திலேயே / உத்தியோக பூர்வ வசிப்பிடத்திலேயே கொல்லப்பட்ட்டார். வேறு இடத்தில் (ஒளிழித்து) இருந்தால் ஏன் ஹாமெனி தனது அலுவலகத்துக்கு வர வேண்டும்? வேறு இடம் என்றால், ஹாமெனி என்ன குடும்பத்தையும் கூட்டி கொண்டா அரச ஒன்று கூடல், அதுவும் இப்படியான ஒன்று கூடலுக்கு திரிகிறார்? விவிலிய பிரளயக் பயங்கரவாத கிருமிகள் எதோ பெரிதாக செய்து விட்டனர் என்று கதை விட, இதை ஏன் ஒருவராலும் இங்கு சிந்திக்க முடியாவில்லை? மொசாட்டுக்கு கூட cia ஏ முதலில் தகவல் கொடுத்தது. ( கூட்டம் நடக்கப்போகிறது என்ற 10 மணி நேரத்துக்கு முதல் தகவலே உள்ளிருந்து துரோகம். ஆனால், இப்படியான ஓர் நிகழ்வு நடக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லி இருந்தேன். ) மருவளமாக, இரான் அரசு பலம் பெற்றுக் கொண்டு இருக்கிறது, மிகவம் நெருக்கடியான, இருப்புக்கு போராடும் நேரத்தில் தலைமையை இழந்தாலும், அந்த தலைமை கட்டி எழுப்பிய அமைப்பும், போட்ட திட்டமும் தலைமை இல்லாமல் இரான் அரசை இயக்குகிறது. ( இது இங்கே சிலர் நான் சொல்வது கேலியாக இருக்கலாம். அனால் இது உண்மை. ஏனெனில். அரசு என்பதை ஆங்கிலத்தில் அழைப்பது state. அப்படி அந்த சொல் வந்ததன் காரணம் அரசு என்பது, அதன் இருப்புக்கு எதிரான பல்வேறு உள்(நாட்டு), வெளி(நாட்டு ) அச்சுறுத்தல்கள், சவால்கள், யுத்தங்கள், சூழ்ச்சிகள் போன்றவற்றை எதிர்கொண்டு, அவற்றை சமாளித்து, வெற்றி கொண்டு, (அழித்து) மதி,மனம் நிலை தடுமாறாது அதன் (நலன்களை காக்கும்) நிலையை கொண்ட state (of mind). மறுவளமாக, அமெரிக்கா, இஸ்ரேல் மேட்ற்கு விவிலிய பிரளய கிருமிகள் இரானில் குழப்பப் முயல்வது இதை தான், அதாவது அந்த ஓர்மமான நிலையை, state (of mind) ) அதாவது, இரான் தலைமை இறந்து, மறுதலித்து உள்ளது. அப்போது எவர் முல்லாக்(ட்டாள்) என்ற கேள்வியும் எழுகிறது.- Yesterday
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் களத்தில் கேக்கேலை போல. ஆந்தை பூனை எல்லாம் கேக்கத் தெரிஞ்சனீங்கள், இங்க களத்தில கேக்கத் தோனலையோ. இங்க கன சில பேர் இந்தியா தேக்கவேணும் என்டினம். ஆனா மூன்று புள்ளியும் வேணுமாம். இது எப்பிடி சரியா வரும். எப்பிடி கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும், கணக்கு உதைக்குதே 🤣- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?புலவர் started following ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
உங்கடை கதையைப்பார்த்தால் ...அடியானையும் ...துரையையும் இசுரேலில் பார்க்கலாம் போலயிருக்கு- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உப்புடி வெருட்டாதையுங்கோ...நான் இன்றுமுழுக்க டிக்-ரொக்..சாத்திரங்களை பார்த்தமட்டில்...மயில் ,ஆந்தை ...பூனை ...எல்லாமே இந்தியாதான் வெல்லும் என்று சொல்லுது..- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
கப்பலை அடிச்சவன் சொல்கிறான் ...நான் அடிச்சது என்று....உதவிக்கு போனாக்கள்..கப்பலையே காணாமல்...அப்படியில்லை என்று மறுக்கினம்...என்னையா அங்கை நடக்குது...லங்காவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2015 உலக கண்ணம். முதலாவது அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து தென் அமெரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்குச் சென்றது. அன்றைக்கு கிரான்ட் எலியட் அடிச்ச 84. இன்றைக்கு பிஃன் அலன். இப்பிடி யாரோ ஒருவர் ஒவ்வொருமுறையும். - ` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.