Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இந்த ஆண்டில் இதுவரை 676 மரண விபத்துக்கள் பதிவு Apr 7, 2026 - 10:14 AM வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, "மரண விபத்துக்கள் ஒரு பேரழிவாக மாறியுள்ளன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒப்பிட்டுப் பார்த்தால், மரண விபத்துக்கள் 74 ஆல் அதிகரித்துள்ளன; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆல் அதிகரித்துள்ளது. வீதிகளின் தரம், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாகும். உயிரிழப்பவர்களில் அதிகமானோர் பாதசாரிகளாவர். ஏப்ரல் 5 ஆம் திகதி வரை 230 பாதசாரிகளும், 247 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளனர்." என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக, வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே எனச் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmno4xc2f0009356p2t9kv56i
  3. 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியில் இலங்கை வம்சாவளி வினாலி வீனஸ் 07 Apr, 2026 | 04:52 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து அணியில் இலங்கை வம்சாவளி வீராங்கனை வினாலி வீனஸ் வீரப்புலி இடம்பெற்றுள்ளார். இவர் கோல்ட்ஸ் கரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக் கழகம், நொண்டஸ்க்ரிப்ட்ஸ் கழகம் ஆகியவற்றின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் துஷார அஜன்த வீரப்பலியின் மகள் ஆவார். துஷார அஜன்த வீரப்புலி தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். வினாலி வீனஸ் 2009ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி வெஸ்ட் மிட்ல்செக்ஸ் வைத்தியசாலையில் பிறந்தார். இங்கிலாந்தின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் என வருணிக்கப்படும் வினாலி வீனஸ், ப்றட்பர்ட் க்றம்மர் ஸ்கூலில் கல்வி பயின்று வருகிறார். 16 வயதுக்குட்பட்ட அதிசிறந்த பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைக்கான சார்லட் எட்வேர்ட்ஸ் விருதை வென்றெடுத்த சில தினங்களில் வினாலி வீனஸ், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். லன்காஷயர் மற்றும் தண்டர் அக்கடமி (பயிற்சியகம்) ஆகிய அணிகளின் சுழல்பந்துவீச்சாளரான 16 வயதுடைய வினாலி வீனஸ், பயிற்சியக மற்றும் கழக மட்டப் போட்டிகளில் கடந்த கிரிக்கெட் பருவகாலத்தில் 124 விக்டெக்களைக் கைப்பற்றி இருந்தார். பயிற்சியக கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் 33 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். தந்தை துஷார அஜன்த வீரப்புலியின் வழிகாட்டலில் MCC Foundation’s Cricket Beyond Boundaries இல் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த வினாலி வீனஸ், இங்கிலாந்து லன்காஷயர் கிரிக்கெட் ஆற்றல் கட்டமைப்பில் இணைக்கப்பட்டார். வினாலி வீனஸுக்கு கடந்த நவம்பர் 6ஆம் திகதி சார்லட் எட்வேர்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற சில தினங்களில் அவர் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 'கடந்த கிரிக்கெட் பருவகாலம் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த விருதை பெறுவதென்பது பெருமை தரும் விடயமாகும். அதனைத் தொடர்ந்து 19 வயதுக்குட்ட இங்கிலாந்து ஆயத்த கட்ட அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது அதனை விட பெரிய விடயமாகும். அங்குள்ள பயிற்றுநர்களிடம் நான் கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்' என அப்போது வினாலி வீனாஸ் கூறியிருந்தார். 15 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்குட்பட்ட மற்றும் சிரேஷ்ட லன்காஷயர் அணிகளுக்காக ஏற்கனவே விளையாடியுள்ள வினாலி வீனஸ் வீரப்புலி, தற்போது தண்டர் பயிற்சியக அணியில் இடம்பெறுகின்றார். இந் நிலையில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசித்த வினாலி வீனஸ், தற்போது 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பெறுகிறார். அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் இயன் ஹீலி விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட மும்முனை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வினாலி வீனஸ், 8 ஓவர்கள் பந்துவிசி 35 ஓட்டங்களைக் கொடுத்தார். துடுப்பாட்டத்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்றார். https://www.virakesari.lk/article/242982
  4. ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை: உலக வரலாற்றின் மிக முக்கிய இரவு இதுவா? Apr 7, 2026 - 06:21 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்கள் ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த பதிவில், அமெரிக்க நேரப்படி இன்றைய இரவு ஒரு முழு நாகரிகத்தினதும் முடிவாக அமையக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நடப்பதை தான் விரும்பவில்லை என்றாலும், அது பெரும்பாலும் நிகழ வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், தீவிரத்தன்மை குறைந்த மற்றும் புத்திசாலித்தனமான மனப்பாங்கு இருக்கும் பட்சத்தில், ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இன்றைய இரவு அமையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Truth SocialDonald J. Trump (@realDonaldTrump)A whole civilization will die tonight, never to be brought back again. I don’t want that to happen, but it probably will. However, now that we have Complete and Total Regime Change, where different, shttps://adaderanatamil.lk/news/cmnom8yj1000l356pphvb6jxq
  5. அததெரண கருத்துப்படம்.
  6. Today
  7. துணிகரமான முயற்சி பலனளித்துள்ளது ......பையனுக்கு பாராட்டுகள் .......! 👍
  8. 07 Apr, 2026 | 10:19 AM சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரடி தரிசன அருளாசி வழங்குவதற்காக யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். "சிவாகம கலாநிதி "சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் (தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.) தலைமயிலான குருமார்கள், சமய சமூக பெரியார்கள் என அனைவரும் இணைந்து வரவேற்றனர். சுவாமிகளின் அனைத்து நிகழ்வுகளிலும் "சிவாகம கலாநிதி" குருக்கள் இணைந்து நல்லாதரவுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து யாழ் சைவ பரிபாலன சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. இதன் போது இலங்கை நாட்டின் பிரதிநிதியாக சைவப்புலவர் சிவப்பிரியா ராஜ்குமார், தருமை ஆதீனப்புலவரும் இயக்குநருமான சித்தாந்த சரபம் அருணைவடிவேல் முதலியார் பாலறாவாயனால் தருமை ஆதீன நட்சத்திரக் குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். மண்ணில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம் | Virakesari.lk
  9. 07 Apr, 2026 | 12:11 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன் என்ற சிறுவன், ஒரு பாரிய விபத்திலிருந்து தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கடந்த 02 ஆம் திகதி குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் வெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தென்ன நோக்கி நள்ளிரவில் வேனில் பயணித்த போது, ரம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். மற்றுமொருவர் அருகில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்துள்ளார். காயங்களுக்கு மத்தியிலும் மனத்திடம் குறையாத ஹிரந்த, மற்றுமொருவருடன் இணைந்து மரங்கள், பாறைகள் மற்றும் கொடிகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு அந்த ஆழமான பள்ளத்திலிருந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் வீதிக்கு மேலே ஏறி வந்துள்ளார். வீதியில் சென்ற வாகனங்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் பெரும் முயற்சி செய்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்ட ஒரு லொறி ஊழியர்களின் உதவியுடன் கொத்மலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பின்னர் காயமடைந்தவர்கள் லொறி மூலம் கொத்மலை வைத்தியசாலைக்கும், அங்கிருந்து நுவரெலியா பொது வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தமது உயிரைப் பொருட்படுத்தாது, நள்ளிரவு வேளையில் துரிதமாகச் செயற்பட்டு தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிய சிறுவன் ஹிரந்தவின் வீரத்தைப் பாராட்டி கொத்மலை பொலிஸார், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் தமது கௌரவத்தைத் தெரிவித்துள்ளனர். சிறுவன் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளான். கொத்மலை வேன் விபத்து; சிறுவனின் துணிச்சலால் உயிர் தப்பியது குடும்பம் | Virakesari.lk
  10. 07 Apr, 2026 | 12:25 PM நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக நுவரெலியா மாகாண சபையின் முதல்வர் உப்பாளி வனிகசேகர தெரிவித்தார். இந்நிலையில் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை இக்கொண்டாட்ட நாட்களில் ஹெலிக்கொப்டர் சவாரி, படகு சவாரி, மலர் கண்காட்சி போன்ற களியாட்ட நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள்! | Virakesari.lk
  11. Published By: Digital Desk 3 07 Apr, 2026 | 04:52 PM யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காணொளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பவத்தில் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட பிரதான சந்தேகநபரான 58 வயதுடைய பெண், நேற்று மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நான்காவது பங்குனித் திங்கள் உற்சவத்தின் போது கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கிளிநொச்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி மீட்கப்பட்டதுடன், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான பெண் உட்பட மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். யாழில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது! | Virakesari.lk
  12. Published By: Digital Desk 3 07 Apr, 2026 | 05:41 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணிநேரக் கால அவகாசம் நிறைவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, ஈரானின் மிக முக்கியமான கார்க் தீவு மீது பாரிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்கைக் கொண்டுள்ள கார்க் தீவின் எண்ணெய் ஏற்றுமதி மையத்தை இலக்கு வைத்து அமெரிக்க - இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இன்றையதினம் காலை கார்க் தீவுப் பகுதியில் பல பாரிய வெடிப்புகள் நிகழ்ந்ததை ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம், உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலினால் பிராந்தியத்திற்கான மசகு எண்ணெய் விநியோகம் முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் புனித நகரமான கோம் நகருக்கு வெளியில் உள்ள ஒரு முக்கிய தரைவழிப் பாலம் அமெரிக்க - இஸ்ரேலிய ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள ஏனைய முக்கிய பாலங்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கார்க் தீவு மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் புரட்சிகர இராணுவம் (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் பொறுமை முடிந்துவிட்டதாகவும், இனி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் (சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம் போன்றவை) உட்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பல ஆண்டுகளுக்கு முடக்கும் வகையில் பாரிய பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. கார்க் தீவு மீது பாரிய தாக்குதல் ; ஈரானிய ஊடகம் தெரிவிப்பு | Virakesari.lk
  13. வெள்ளைப் புறாவே… விசர் தம்பா… அங்கிள்மாரின் ஆதர்ச புருசா… விசர் தம்பா… ஆப்பிழுத்த குரங்கு… நீ மட்டும் இல்லை…. விசர் தம்பா…. ஆதரித்த அங்கிள்களும்தான்😂
  14. போய் விட்டு திரும்பி வரும் போது நோபல் பரிசு பரிந்துரையோடு வருவார்.அல்லது யாருக்கும் குடுப்பதை தட்டிப் பறிப்பார்..🤭
  15. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு! செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஏற்கனவே யாழ்ப்பாண திறந்த நீதிமன்றத்தில் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது. இதன்படி வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1471212
  16. ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை! ஒரே இரவில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இன்று (07) ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 110 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான விலையில் வர்த்தகமானது. அதன்படி, சர்வதேச எண்ணெய் விலை அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு, ஒரு சதவீதம் உயர்ந்து 111 டொலராக வர்த்தகமானது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 2.6 சதவீதம் உயர்ந்து 115.3 டொலர்களாக வர்த்தகமானது. போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் எண்ணெய் விலை தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தொஹ்ரான் வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை காலக்கெடு விதித்தார். இல்லையெனில் ஈரானின், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட குடிமை உள்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையில் அவர், ஒரே இரவில் முழு நாட்டையும் தம்மால் செயலிழக்கச் செய்ய முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் என்றும் கூறினார். இந்த அறிவிப்புடன் செவ்வாயன்று ஆசியாவின் பங்குச் சந்தைகள் கலவையாகக் காணப்பட்டன. ஜப்பானின் நிக்கெய் குறியீடு மாற்றமின்றியும், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 1.1% உயர்ந்தும் இருந்தன, ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 0.7% சரிந்தது. பெப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து சந்தைகள் நிலையற்றதாக இருந்து வரும் நிலையில், இந்தப் போர் அதிக பணவீக்கத்திற்கும் மெதுவான உலகளாவிய வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா திங்கட்கிழமை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1471209
  17. பொதுவாழ்வில் குறிப்பாக அரசியலுக்கு வருவோரின் தனிப்பட்ட வாழ்க்கை பேசு பொருளாவது தேவையானது என்பதே என் நிலை. மனிதர்களை அவர்களின் personality ஐ எடை போடுவது வாக்காளருக்கு முக்கியம். தனி வாழ்வில் அவர்கள் moral compass எப்படி செயல்பட்டது என்பதை வைத்து ஓரளவுக்கு அவர்கள் பொது வாழ்வில் எப்படி இருப்பார்கள் என்பதை ஊகிக்கலாம். விசர் தம்பர், சீமான் ஆகியோர் அண்மைய உதாரணங்கள். Integrity is doing the right thing, even when no one is watching. யாரும் பார்க்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை. இதன் அர்த்தம் அவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்க வேண்டும் என்பதல்ல. ஆனால் விஜி அண்ணியை சீமான் நடத்திய விதம், அவருக்கு தம்பிகள் யாழ் உட்பட்ட தளங்களில் கொடுத்த “பட்டம்” சீமானும் அவரது தம்பிகளும் எப்படி பட்ட ஆட்கள் என்பதை துல்லியமாக காட்டி நின்றது. இன்றைக்கு சீமான் தமிழக பெண் வாக்காளரை பார்த்து…. இலவசமா எல்லாம் தருவான்… பிள்ளையும் தருவான்… வாங்கிகொள்வாயா… என அருவருக்க தக்கவையில் பேசுவது… சீமானை விஜி விடயத்தில் எடை போட்ட என் போன்றோருக்கு அதிர்ச்சியே இல்லை. ஏன் என்றால் அவரின் தனி வாழ்க்கையில் பெண்களை நடத்திய விதம்… யானை வரும் முன்னே கேட்ட மணியோசை.
  18. ஆமாம்..நாளை முதல் இந்த நடை முறை ரத்தாகி விட்டது என்று ஊரிலிருந்து எழுதுபவர்களுடைய பக்கங்களில் பார்க்க முடிகிறது.என்னைப் பொறுத்த மட்டில் நல்ல தீர்மானம்.
  19. நாறிப்போன கிளியை நம்பி மோசம் போவதைவிட அயலவன் மேல், Hong Kong இன்னும் பழைய மாதிரி நன்றாக இருக்கு.
  20. குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் GT 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் DC 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அணி? RCB அணி? RR அணி? MI அணி? KKR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) RCB #2 - ? (3 புள்ளிகள்) MI #3 - ? (2 புள்ளிகள்) RR #4 - ? (1 புள்ளி) KKR 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! அணி? RR 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team அணி? RCB 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team அணி? RR 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator அணி? KKR 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 அணி? RCB 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? GT 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? TIM DAVID. 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? RCB. 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? NOOR AHMAD. 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? RR. 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? VIRAT KOHLI. 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? LSG. 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? ARSHDEEP SINGH. 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK. 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? SAI SUDHARSAN. 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK. 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? KKR. வெற்றியை நாளை போட்டிகள் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் . ......! 💥
  21. ரசோதரன், சினிமா, அரசியல், போன்றவற்றில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் அவர்களது தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. பொதுவெளியில் பிரபலமானவர்களை உலகம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்தப் பிரபலங்களில் எத்தனை பேர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளி உலகுக்குத் தெரியாமல், ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்பது நமக்குத் சரியாகத் தெரியாது. பல சமயங்களில், அவர்கள் நேரடியாக பதிலளிக்காமல், வார்த்தை விளையாட்டுகளின் மூலம் கேள்விகளைத் கடந்து போய் விடுகிறார்கள். உதாரணமாக, அறிஞர் அண்ணாவிடம் ஒரு நிருபர், “உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?” என்று கேட்டபோது, அவர் “பானுமதியும் படிதண்டா பத்தினியில்லை. நானும் முற்றிலும் துறந்த முனிவனுமில்லை” என்று சொல்லியிருந்தார். இந்தப் பதிலில் அவரது நகைச்சுவைத் திறமை, வார்த்தை ஜாலங்கள் இருந்தாலும், ஒரு குடும்பப் பெண்ணைக் குறிக்கும் விதத்தில் பேசப்பட்டுள்ள ஆணாதிக்கத்தையும் பார்க்கலாம். ஒரு குடும்பப் பெண்ணின் மரியாதை பாதிக்கப்படுவது போன்ற விளைவுகள் பற்றிய உணர்வு அவரது பதிலில் நான் காணவில்லை. இதே போன்ற பாணியைத்தான் அண்ணாவின் தம்பியும் சொன்னார் “எனக்கு துணைவி இருப்பது ஊருக்கெல்லாம் தெரியும். என் மனைவிக்கு மட்டும் தெரியாது” என்று. அரங்கமே ரசித்துச் சிரித்தது. சொன்னவரும் சிரித்தார். ஆக, இதுவும், நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், அது சமூகப் பார்வையில் பெரிய கேள்வியாக எழவில்லை. நடிகர் விஜயின் நிலையைப் பார்க்கும்போது, அவர் மேற்கண்டவர்களைப் போல சிக்கலான கேள்விகளை திறமையாகத் தவிர்க்கும் அரசியல் அனுபவம் இன்னும் பெறவில்லை என்ற உண்மையை நான் ஒத்துக்கொள்கிறேன். சினிமாவில் ஒரு காட்சி சரியாக வரும்வரை பல முறை ‘ரீடேக்’ எடுக்கலாம். ஆனால் அரசியல் மேடை அப்படியல்ல. ஒருமுறை தவறாகச் சொன்ன வார்த்தை, தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒலிக்கும். அது மீம்ஸாகவும், அரசியல் எதிரிகளின் ஆயுதமாகவும் மாறிவிடும்.அரசியல் தளம் விஜய்க்குப் புதுசு. எனவே, அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. எனது பார்வையில், அவர் தனது குடும்ப விஷயங்களைத் தனிப்பட்ட விசயமாகக் கருதி, “இது என் தனிப்பட்ட பிரச்சினை,அதை பெரிதுபடுத்த வேண்டாம். நான் பார்ததுக் கொள்கிறேன்” என்று எளிமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாகப் போய்விட்டது. இன்னும் ஒன்றை குறிப்பிட வேண்டும். நடிகர் சிவகுமார், “நான் சினிமா நடிகன் என்பதால் யாரும் எனக்குப் பெண் தர முன்வரவில்லை. எனக்கு திருமணம் நடக்குமா என்றே சந்தேகப்பட்டேன்” என்று கூறியிருக்கிறார். ஒழுக்க சீலனாக அறியப்பட்டவருக்கே அந்த நிலை என்றால், சினிமா நடிகனுக்குப் பெண் கொடுக்கும் போதே யோசிக்கவும் வேண்டும். விஜயின் குடும்ப நிலைமைகள் பற்றிய முழுமையான உண்மை எங்களுக்குத் தெரியாது, ஆகவே அவரைப் பற்றிய நல்லது கெட்டது என்ற தீர்ப்புகளை கூற முடியாது. மேலும், தேர்தல் நேரத்தையொட்டி இப்படிப்பட்ட விவகாரங்கள் பொதுவெளியில் கொண்டு வரப்படுவது, அரசியல் நோக்கத்துடனான பழிவாங்கலாக இருக்கக்கூடும் என்பதையும் மறக்கக் கூடாது. முடிவாக, நல்லவர்கள் என்று கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை என்றால், கோசான் சொன்னது போல், சொத்தைகளில் நல்லதை தெரிந்து எடுக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.