All Activity
- Past hour
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
சே சே அதெல்லாம் உறுதியாய் சொல்ல முடியாது .......நாமிருவர் அங்கேதான் இருக்கிறோம் . ....... ஏற்கனவே அந்த வீட்டில் வாழ்ந்த அனுபவம் நமக்கு உண்டு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது நன்று . .....! 😂 அது இருவரையும் நேரில் பார்த்தால்தான் சொல்ல முடியும் . .......முடியை சிலுப்புபவர் டீ .ஆர் . .......... அதை ஹங்கரில் மாட்டுபவர் கமல் . .......! 😂- கறையான் புற்று
எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கின்றார்கள் ....... அவர்களை வணங்குவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் . .......! தகவல்களுக்கு நன்றி கவி . அருணாசலம் அவர்களே .......!- அன்பு ௐ
௮௨ம் ஓம் ௐ.- களைத்த மனசு களிப்புற ......!
tdnSpsooer1659413 u40lf5337683agcmal3iu238h5gc0uth0ac05ca0i2 · போர்ச்சுகல் நாட்டின் சிறிய நகரம் ஒன்றில் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தான் அந்தச் சிறுவன். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள். நான்காவதாக ஒரு குழந்தையை வளர்க்க முடியுமா என்ற கவலையில் கருவிலேயே கலைத்துவிட நினைத்த அம்மா, கடைசி நிமிடத்தில் மனம் மாறியதால் அவன் உயிராக வந்து பிறந்தான். தகரக்கூரை வேய்ந்த சிறிய வீடு. அம்மா சமையல் வேலை செய்தும், அப்பா நகராட்சிப் பூங்காவில் வேலைசெய்தும் அவர்களை வளர்த்தனர். கிறிஸ்துமஸ் போன்ற விசேஷ தினங்களில்கூடப் பிள்ளைகளுக்குப் புத்தாடை வாங்கித் தர முடியாத வறுமை. படிக்க இயலாத அந்தச் சிறுவன், கால்பந்து மீது வெறிகொண்டு அலைந்தான். சில ஆண்டுகளிலேயே போர்ச்சுகல் தேசமே போற்றும் வீரனாக உருவெடுத்தான். கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற மகத்தான வீரரின் கதை இது. கால்பந்து உலக ஜாம்பவான்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். தான் விளையாடிய கிளப்களுக்கும் தன் தேசத்துக்கும் அதிக கோப்பைகளை வென்று கொடுத்த வீரர். ஐரோப்பாவில் அதிக கோல் அடித்த வீரர், அதிக விருதுகள் வாங்கிய வீரர் என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களைப் பட்டியல் எடுத்தால், முதல் ஐந்து இடங்களுக்குள் வருவார். இவ்வளவு சம்பாதித்தாலும் அவரிடம் பணிவு இருக்கிறது. ரொனால்டோவின் தந்தை குடிபோதைக்கு அடிமையாகி இறந்துபோனார். அதனால் அவர் மதுவைத் தொடுவதில்லை. நாடு முழுக்க குழந்தைகளின் கல்வி மற்றும் கால்பந்து அகாடமிகளுக்குத் தன் அறக்கட்டளை மூலம் உதவி செய்கிறார். விளையாட்டு வீரர்கள் பலர் உடலில் டாட்டு குத்திக்கொள்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியாக ரத்த தானம் செய்துவரும் ரொனால்டோ, அந்தக் காரணத்துக்காகவே டாட்டூ குத்திக்கொள்ளவில்லை. அரிதான முன்மாதிரி ரொனால்டோ! யானை ......!- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
எப்பிடியும்நான் தான் உங்களை வெல்லபோறன் கடைசி இடத்துக்கு (எப்பிடியும் வீட்டை ஆட்டையைப்போடுறது போடுறது தான்)- Today
- கறையான் புற்று
2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
ப்பா…சான்சே இல்லை… அருமையான கவிதை. ——— பிரிந்ததும் பிரியாமல் இருந்தோர் கூடினால் செற்றிக்கு விடுமுறை.- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
அது சரி இதில யார் கமல் யார் டீ ஆர்😂- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
இரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறது தாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும் தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில் முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்ம ரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான் ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளை அள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடி அப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம் அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன் காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான் நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணி ஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும் கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்கு கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல் பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும் நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிட பூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயின நம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயின ஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமது பிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன " இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் " பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில் அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம் இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பல அறைக்குள் வந்து அருகில் நெருங்கி ஆசையை மறைத்து மீசையை முறுக்கி "என்ன" என்று மிடுக்காய் வினவ மோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள் இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சு கையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணி பரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுது எனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளா பல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும் அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்தது பயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன் பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான் சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும் கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டு வாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......! யாழ் இணையம் 28 க்காக ஆக்கம் சுவி .......!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம்- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
@அல்வாயன் இப்ப புரியுதா உங்களுக்கு ......... இதுதான் கமலும் T . ராஜேந்திரரும் கதைப்பது . ........! 😂- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
அருமையான பதிவு விசுகர் . ....... கடந்த காலங்களை நினைப்பூட்டும் சில விடயங்கள் சிலர் வாழ்வில் நடப்பது அபூர்வம் .......உங்களுக்கு நடக்கிறது நீங்கள் குடுத்து வைத்தவர் . .......! எனக்கு மறுபிறவி, சில சகுனங்கள் , பூர்வஜென்மங்களில் நம்பிக்கை உண்டு .........!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த t20 உலககோப்பைக்கு முதல் நடந்த தொடர்களில் இலங்கையை இங்கிலாந்து இலங்கை மண்ணில் 3-0 கணக்கில் வீழத்தியது. பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் பல முக்கிய அவுஸ்திரேலியா வீரர்கள் விளையாடவில்லை இந்தியா மண்ணில் நியூசிலாந்து இந்தியாவிடம் 4-1 கணக்கில் தோற்றது. இதனால் இந்த சூப்பர் 8 குழு 2 இல் முதலிடம் இங்கிலாந்தும் இரண்டாம் இடம் பாகிஸ்தானும் தெரிவு செய்து விடைகளை எழுதினேன். நியூசிலாந்து இலங்கையை விட பலமான நாடாக இருந்தும் இலங்கையில் போட்டி நடப்பதினால் இலங்கையை 3 வது நாடாக தெரிவு செய்தேன். இதே போல ஆரம்ப சுற்று போட்டிகளிலும் ஒவ்வொரு குழுக்களில் அணிகளை வரிசைப்படுத்தினேன்.- உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை!
உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை! ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. "உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 51 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை, இந்தியா ஆகியவற்றுக்கு மேலதிகமாக பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நாடுகளுள் அடங்குகின்றன. இந்தத் தீர்மானத்தில், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய நீதியான, முழுமையான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், போருடன் தொடர்புடைய அனைத்துப் போர்க் கைதிகளையும் முழுமையாகப் பரிமாற்றம் செய்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்தல் ஆகியன ஒரு முக்கியமான படியாக இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் உட்பட உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான வலுவான அர்ப்பணிப்பும் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmm1dw0z90019356p6o2v3azf- புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 இல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014 இல் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீர்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி, “இலங்கையில் பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கொத்து கொத்தாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள கோயில்கள் இடிக்கப்பட்டு, இனப்படுகொலை தொடர்கிறது. இதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சூழலில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்.” என்று வாதிட்டார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடசாமி பாபு ஆகியோர், “விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 2024 ஆம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வைகோ 2014 இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த உத்தரவே காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த வழக்கும் செல்லத்தக்கதல்ல. மேலும், வைகோ பாதிக்கப்பட்ட நபரும் அல்ல. டில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வைகோவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்துள்ளது.” என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/புலிகள்-மீதான-தடையினை-நீக்குமாறு-வைகோ-தொடர்ந்த-வழக்கு-தள்ளுபடி/175-372975- மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் adminFebruary 25, 2026 மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எருவிட்டான் கிராமத்தில் 1.5 கிலோ மீட்டர் நீளமான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று செவ்வாய் (24) மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பு பணிகளுக்காக 57.82 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/229713/- ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு 25 Feb, 2026 | 12:35 PM கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில் செவ்வாய்க்கிழமை (24) இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உட்பட 107 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. மேலும், கியூபா, ஈரான், மாலி, ப்ருண்டி, பெலாரஸ், ரஷ்யா , சூடான், நைஜர் உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. அதேவேளை, இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ் முதலான 51 நாடுகள் பங்கேற்கவில்லை. ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தொடர்ச்சியாக நிலவி வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இடப்பெயர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் அதிகமான உடல், உளப் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உலக நாடுகளின் ஆதரவை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திரட்டி வருகிறார். இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில், அந்த நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் நாட்டு மக்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன் கூடிய எங்களின் தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இவை சரியான நடவடிக்கை. அமைதியை ஏற்படுத்த எங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/239535ஏராளன் started following சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றார்! , ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு and மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் : 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அச்சுப்பணியை நிறுத்தியது 'தி பொஸ்டன் க்ளோப்' நாளிதழ் 25 Feb, 2026 | 11:19 AM அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக 153 ஆண்டுகால வரலாறு கொண்ட பொஸ்டன் க்ளோப் பத்திரிகை முதல் முறையாக தனது தினசரி செய்தித்தாள் வெளியீட்டுப் பணியை நிறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பொஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்புயல் அனர்த்த நிலைமை மோசமாகி வருகிறது. குறிப்பாக, பொஸ்டன் க்ளோப் பத்திரிகை நிறுவனம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டலில் 2 அடி உயரத்துக்கு பனி மூடியுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (23) இரவு வரை 81 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி குவிந்துள்ளதாக அங்குள்ள தேசிய வானிலை சேவை நிலையம் குறிப்பிடுகிறது. இந்த பனிப்புயலால் குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளிதழை அச்சிட்டு வெளியிடுவதில் கடினமான சூழ்நிலையை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருவதால் நாளிதழை அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் வெளியிடப்படும் பிரபலமான தி பொஸ்டன் க்ளோப் நாளிதழ் 1872இல் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இணையத்தின் வளர்ச்சி காரணமாக செய்தித்தாள்களை வாசகர்கள் வாசிப்பது குறைந்துவிட்ட நிலைமை அமெரிக்காவிலும் அதிகரித்துக் காணப்படுகிறது. Pew ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) 2025ஆம் ஆண்டு கணிப்பின்படி, அமெரிக்காவில் வளர்ந்தவர்களில் 7 வீதமானோர் மட்டுமே செய்தித்தாளை வாங்கி செய்திகளை அறிபவர்களாகவும் 56 வீதமானோர் ஸ்மார்ட்போன், கணினி, டெப்லெட் முதலிய சாதனங்களின் ஊடாக செய்திகளை அறிந்துகொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/239525- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஹெரி ப்றூக் அபார சதம்; அரை இறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தானின் வாய்ப்பு கேள்விக்குறி 25 Feb, 2026 | 09:48 AM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. மிகவும் இக்கட்டான நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக் 50 பந்துகளில் குவித்த அபார சதம் இங்கிலாந்துக்கு வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் ஈட்டிக்கொடுத்தது. ஏற்கனவே நியூஸிலாந்துடனான போட்டி கைவிடப்பட்ட நிலையில் இங்கிலாந்திடம் இன்று அடைந்த தோல்வியால் பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 165 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஷஹீன் ஷா அப்றிடி அபாரமாக பந்துவீசி முதல் 3 விக்கெட்களை வீழ்த்த இங்கிலாந்து 35 ஓட்டங்களைப் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது நான்காவது விக்கெட் சரிந்தது. இந் நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக், சாம் கரன் (16) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நம்பிக்கையை ஊட்டினர். அதனைத் தொடர்ந்து ஹெரி ப்றூக், வில் ஜெக்ஸ் (28) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 155 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால் ஹெரி ப்றூக், வில் ஜெக்ஸ், ஜெமி ஓவர்ட்டன் ஆகிய மூவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜொவ்ரா ஆச்சர் பவுண்டறி அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார். ஹெரி ப்றூக் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஹெரி ப்றூக் குவித்த முதலாவது சதம் இதுவாகும். பந்துவிச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் நவாஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உஸ்மான் தாரிக் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்ற்றினர். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. போட்டியின் நான்காவது ஓவரில் பாகிஸ்தான் 2ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 27 ஓட்டங்களாக இருந்தது. எனினும் மிகத் திறமையாகவும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் 3ஆவது விக்கெட்ல் பாபர் அஸாமுடன் 46 ஓட்டங்களையும் பக்கார் ஸமானுடன் 49 ஓட்டங்களையும் பகிர்ந்து பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டார். சாஹிப்ஸதா பர்ஹான் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 63 ஒடடங்களையும் பாபர் அஸாம் 25 ஓட்டங்கiயும் பக்கார் ஸாமான் 25 ஓட்டங்களையும் பெற்றனர். கடைசி பந்தில ஆட்டம் இழந்த ஷதாப் கான் 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் லியாம் டோசன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஹெரி ப்றூக் https://www.virakesari.lk/article/239502- பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி: பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை
பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் முன்னெடுக்கப்படும் பாரிய மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 25 Feb, 2026 | 10:33 AM உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்களுக்குத் தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் மோசடிக்காரர்கள், தாம் உயர் பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். பல்வேறு வைபவங்களுக்காக உணவுப் பொருட்கள் மற்றும் பணம் தேவைப்படுவதாகக் கூறி, நிறுவனங்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் குழுவொன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான மோசடி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் நிறுவனங்களையும் பொதுமக்களையும் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பின்வரும் இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (கொழும்பு மத்திய பிரிவு): 071-8591551 https://www.virakesari.lk/article/239519- மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு
மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 09:49 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட லங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர் இரங்கநாதனுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன்,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது எல்லை நிர்ணய சபையினால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, இன்று (24.02.2026) நான் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் அவர்களை சந்திக்க பிரதேச செயலகத்திற்குச் சென்றேன். இச்சந்திப்பில் போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன், பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவ அ. பிறேமாகரன், கௌரவ ம. கோபிநாத், கௌரவ கா. யோகராசா மற்றும் கௌரவ தே. ஜேனுகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக எந்தவித தகவலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்தார். எல்லை நிர்ணயம் தொடர்பாக சில இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், குறிப்பிட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பிரிவுகளுடன் இணைப்பதற்கான கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதில் சில முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தின் சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25ஆம் கொலணி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட குமாரிகம கிராமத்தையும் இணைத்து, “சமகிபுர” என்ற புதிய கிராமத்தை உருவாக்கி அம்பாறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராணமடு கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட சுகதகம கிராமத்துடன் இணைத்தல் ,மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட கோணகல கிராமத்துடன் இணைத்தல் போன்ற திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/239514- பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை
கருத்துச்சுதந்திரம் பற்றிய நாமலின் கருத்து: ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி சுட்டிக்காட்டி சர்வதேச மன்னிப்புச்சபை விமர்சனம் 25 Feb, 2026 | 09:10 AM (நா.தனுஜா) ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஆற்றவிருந்த உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீதான முடக்கம் என்ற ரீதியில் வர்ணித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கருத்தை விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாதிருந்தால் இந்த வாதம் செல்லுபடியாகியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய புகழ்பெற்ற இரு பல்கலைக்கழகங்களின் மாணவ சங்கங்களில் உரையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவ்வழைப்பு தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் மத்தியிலிருந்து வலுத்த எதிர்ப்பை அடுத்து, பல்கலைக்கழக சங்க ஒருங்கிணைப்புக்குழுக்களால் அவ்விரு உரைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனையடுத்து சமூகவலைத்தளங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுவரும் அதேவேளை, இவ்வுரைகள் இரத்துச்செய்யப்பட்டமையானது தெற்கில் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக ஒருசாரார் வெளியிட்டு வருகின்றனர். அதேவேளை தனது உரைகள் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருளக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தர்க்க ரீதியில் கருத்துக்களை முன்வைப்பதற்கும், கடினமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குமான வாய்ப்பை வழங்கக்கூடிய இந்த உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையானது ஒருபோதும் கருத்துச்சுதந்திரத்தையோ அல்லது ஜனநாயகத்தையோ வலுப்படுத்தும் வகையில் அமையாது எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, 'ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாமல் இருந்திருந்தால், தற்போது நாமல் ராஜபக்ஷ முன்வைக்கின்ற கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் எனும் வாதம் செல்லுபடியாகியிருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/239506- சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றார்!
சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு புதிய தமிழ் பொறுப்பதிகாரி | Chunnakam Tamil Police | Nitharsan யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சன் நேற்றைய தினம் 23.02.2026 தனது பதவியை உத்தியோகபூர்வமாக கடமையேற்றுள்ளார். அவர் ஆரம்பத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களை வழங்கி அவரை கௌரவித்தனர்.- 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
4 மாதங்களில் 102,900 சந்தேக நபர்கள் கைது ; 15 இலட்சத்துக்கும் அதிக தனிநபர் சோதனைகள் - பொலிஸ் பேச்சாளர் 24 Feb, 2026 | 07:04 PM (எம்.மனோசித்ரா) முழு நாடும் ஒன்றாக - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையில் 5000 கிலோ கிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 102 900 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையில் 526 கிலோ 603 கிராம் ஹெரோயின் மற்றும் அதனுடைய தொடர்புடைய 34 360 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1419 கிலோ 121 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 38 423 சந்தேகநபர்களும், 3548 கிலோ கிராம் கஞ்சாவுடன் 24 244 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 இலட்சம் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்களில் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 900 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர்களிடமுள்ள சட்ட விரோத சொத்துக்கள் குறித்த 144 விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2018 தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1036 சந்தேகநபர்களும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 24 813 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 21 736 சாரதிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் சுமார் 3500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த 29 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்தோடு சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் அற்ற மேலும் 13 சந்தேகநபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மேலும் 89 சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2024இல் 1400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்ட விரோத சொத்துக்களும், 2025இல் 1549 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்ட விரோத சொத்துக்களும், இவ்வாண்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் 50 மில்லியன் பெறுமதியான சட்ட விரோத சொத்துக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 2025இல் ஜனவரி - டிசம்பர் வரை 74 டி-56 ரக துப்பாக்கிகளும், 90 பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், 63 ரிவோல்வர் ரக துப்பாக்கிகளும் உள்ளடங்களாக 2414 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவ்வாண்டில் 3 டி-56 ரக துப்பாக்கிகளும், 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், 10 ரிவோல்வர் ரக துப்பாக்கிகளும் உள்ளடங்களாக 237 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/239496 - மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
Important Information
By using this site, you agree to our Terms of Use.