Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இதற்குத்தான் இவ்வளவு உருட்டல், மிரட்டல், சவால், கடைசியில் வெளியே வந்துவிட்டது, வாயாலேயே கேட்டு அமைச்சுப் பதவிகளை வாங்குவார்கள் போலுள்ளதே. இவர் ஒருபுறம் மோதுகிறார், வைத்தியர் மறுபுறம். இப்படி செய்தால், விமர்சித்தால் அனுரா இவர்களை தட்டு வைத்து அழைப்பார் என்கிற நினைப்போ? அனுரா எவ்வளவோ தூரம் சென்றுவிட்டார், அவர்களுக்கு வழி காட்டி, அழைத்துவந்து இடம் விட்டதே இந்த பதவியாசை பிடித்த சோம்பேறிக்கூட்டம்தான்.
  3. கொஞ்சம் பொறுங்கோ! அடுத்தது பாகிஸ்தானுக்கு பதிலா யார் வரப்போகிறார்களோ தெரியவில்லையே!!
  4. நானா ஏன் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறார்? எப்பத்தான் திரிசம்பந்தமாக கருத்தெழுதியிருக்கிறார்? என்ன செய்வது வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்!!🤣
  5. புதிதாக பதிய விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படும்😊
  6. Today
  7. தமிழ்த்தேசியம் என்றாலே புலிகளின் மீளுருவாக்கம், புலிகளுக்கான ஆதரவு என்று தட்டிக் கழித்துவிடுகின்ற மனநிலை ஒன்றினை மிகவும் திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள். தமிழர்களிடையே தேசியம் பேசுவோர் சமூக விரோதிகளாக, பழ‌மைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது புலிகளைத் தாண்டியதென்பதும், அது தமிழரின் அடையாளம், தாயகம், கலாசாரம் உட்பட்ட ஒட்டுமொத்த இருப்பிற்கான தேவையென்பதை தெரிந்தும் இச்சூட்சுமத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை முன்னின்று செய்வதுகூட தமிழர்களில் ஒரு பகுதியினர்தான். இத்தளத்திலேயே தமிழ்த் தேசியத்திற்குப் புலி முலாம் பூசுவதன் மூலம் அதனை நீர்த்துப்போகச் செய்ய எத்தனிப்போர் இருக்கின்றனர். சிலர் மிகவும் வெளிப்படையாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக இவர்களது கருத்துக்கள் வெளியில் தோற்றம்பெரினும், அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பது தமிழ்த் தேசியம் எனும் அடையாளத்தைத்தான் என்பது வெளிப்படை.
  8. நண்பர் ஒருவருடன் அண்மையில் பேசும்போது, மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அதனையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதன் மூலம் அதில் குறிக்கப்பட்டுள்ள சரத்துக்களை மாற்றும் எண்ணம் அநுரவிற்கு இருப்பதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்பில் மாற்றம் செய்யாது இதனை அவரால் செய்ய முடியுமா? அப்படிச் செய்வதென்றாலும் அதனை இப்போதுகூட அவரால் செய்ய முடியும்தானே? ஏன் மாகாணசபைத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆக, 2007 இல் பிரித்துப்போட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையினை மேலும் பலவீனமாக்கி, காணி பொலீஸ் அதிகாரங்களை உத்தியோகபூர்வமாகவே `13 ஆம் திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி, வெறும் உப்புச் சப்பற்ற மாகாணசபைகளையே அவர் தரவிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அவரை விமர்சித்தவுடன், அவரது தமிழ்க் காவடிகள் ஓடோடி வந்து, "அப்ப நாமலை வரச் சொல்லலாமா? ரணிலை வரச் சொல்லலாமா? கோத்தாவை வரச் சொல்லலாமா?" என்று புத்திசாதுரியத்துடன் கேட்கிறார்கள்.
  9. நீங்கள் இதனை வேடிக்கையாகச் சொல்லியிருந்தாலும், ஒருவருக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு, முண்டு கொடுப்பவர்களுக்கு, காவடி தூக்குபவர்களுக்கு என்று சிங்களவர்கள் ஒரு சொற்றொடரை வைத்திருக்கிறார்கள். "புக்க தெனவா" என்பதே அது. இதனை நான் தமிழாக்கம் செய்ய விரும்பவில்லை.
  10. ஏற்கனவே பதிந்தவர்களும் புதிதாக பதியலாமா சார்?
  11. ஆரம்பத்திலேயே கோசான், ரஞ்சித், விளங்கநினைப்பவன் போன்றோர் அனுர அரசினை கடுமையாக எதிர்த்தபோது அதன் தாற்பரியம் தெரியாமல் அனுரவிற்கு காவடி எடுத்தோம் தற்போது அவர் செய்யும் செயல்கல் வழமையான சிங்கள அரசியல்வாதிகள் செய்யும் செயலே அதனை நேட்டோவின் பாசையில் சொன்னால் தமிழர் மீதான Hybrid warfare.🤣 இதற்கு எமது இலஞ்ச அரசியல்வாதிகள்தான் காரணம் அத்துடன் ஒரு பெரிய பொதுவான தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்த தமிழரசு கட்சி முக்கிய அரசியல்வாதிகளும் காரணம். ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் அரசிற்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி செய்யும் வேலைகள் மாகாணசபையினை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் மாகாணசபை கிடைத்தால் அதன் பின்னர் சிறுபான்மையினரை திட்டமிட்ட முறையில் மேலும் அடக்குமுறைக்குள்ளாக்குவர்.
  12. அண்மையில் இதே போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே, இரஸ்சிய அதிபரினை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரஸ்சியாவினால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. fake it until you make it என்பதான கொள்கையினை அமெரிக்கா இரஸ்சியாவுடனான விவகாரத்தில் கடைப்பிடிக்கின்றது என கருதுகிறேன், மேற்கின் அடிப்படை திட்டம் மாறவில்லை, இந்த போர் ஆரம்பத்தில் இருந்ததனை போல ஒரு ஆட்சி மாற்றத்தினை இன்னமும் மேற்கு கொண்டுள்ளது என்பதனை இரஸ்சிய தரப்பிற்கு புரிய வைத்திருக்கும். இந்த பொதுவான உத்தி கடந்த காலத்தில் பல போராட்டங்களில் ஏன் இரஸ்சியாவிற்கெதிராகவேயே மேற்கினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உக்கிரேன் நிலவரத்தில் மேற்கிற்கு தேவையான காலத்தினை பெறுவதற்கு மேற்கின் முயற்சி ஒரு பேச்சுவார்த்தை வழியிலாக ஏற்படுத்த விரும்புகிறது.
  13. Yesterday
  14. சுவிச்சலாந்து சோதிட மாமணி சுதாகர் பிரதமர் ஹரணியை சந்தித்தாராம் 😂 தமிழ் தேசியர்களுக்கு தமிழ் துரோகி என்று சொல்வதற்கு ஒருவர் தேவை அப்போதான் காவடி ஆட்டம் களை கட்டும்
  15. இஸ்ரேல் அரசால் பலஸ்தீன மண்ணில் தினசரி நடத்தப்படும் அழிவுகளை கண்டும் காணாமல் இருப்போர் உக்ரேன் அழிவுகளுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். உக்ரேன் பிரச்சனையும் பலஸ்தீனிய பிரச்சனையும் ஒரே கோட்டில் உள்ள பிரச்சனை அல்ல என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
  16. தலைமையகம் இப்பவும் ஸ்ரீதர் தியேட்டரில் தானா? 😂 கட்சிக்கு என தனி அலுவலகம் வாங்கிற பிளான் இன்னும் இல்லை போல....😎
  17. எண்ணிமசாராக செம்மையாக்கிய படிமம் | Digitally Improved Image: செம்மைப்படுத்தியவர்: செயற்கை நுண்ணறிவு கொண்டு நன்னிச் சோழன் நேற்றையில இருந்து தேடி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அம்மாணை சொல்லுறன். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. திரும்பத் திரும்ப இந்த வரலாற்றை ஒரு 20 தடவை வாசித்துவிட்டேன். அவ்வளவு குதூகலம். 😍😍😍 வால் பகுதி கொஞ்சம் சரியாய் வரவில்லை. குறிப்பு: மரத்தாலை கட்டியிருக்கிறாங்கள். அந்த மாதிரி இருக்கு. வாயெல்லாம் முத்தாய் இருக்கு😀😁 முன்னையது போல செயற்கை நுண்ணறிவை பாவித்து நிறமூட்டிய படிமம்: முன்னுக்குத் தான் பொறியினை வைத்துள்ளார்கள் போலும். எனவே அங்கு தான் சுழலியும் இருந்திருக்க வேண்டும். மேலும் இதற்கு முன்பக்கத்தில் மட்டுமே சில்லுகள் உண்டு. பின்னால் சில் இல்லை, மாறாக தென்னுகட்டை/skid பாவித்துள்ளனர். ஏறத்தாழ முதலாம் உலகப்போர் வடிவ வானூர்திகள் போன்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
  18. வல்லமை பொருந்திய நாடுகள் அனைத்தும் தமது அண்டை நாடுகள் தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை உதவிகள் எனும் போர்வையில் கட்டளை இடுகின்றன. மீறினால் சங்குதான் என்பதை கடந்த 15,20 வருட உலக நிகழ்வுகளில் பார்த்து விட்டோம்.
  19. கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டவர் தான் இந்த சுத்துமாத்து சுமந்திரன். அது மட்டுமல்ல தேர்தலில் மக்களாலும் நிகாரிக்கப்பட்ட ஐ போவான் ஜாம்பவான் சுமந்திரன் என்றால் அது மிகையாகாது. இப்படி பூச்சிய நிலையில் உள்ள சுமந்திரனார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரனை நீக்க நினைப்பது ஈழத்தமிழ் அரசியலில் கேவலத்திலும் கேவலம். சுமந்திரன் ஆதரவாளர்களுக்கு ஒரு விண் அப்பம். உங்கடை சுமந்திரனோ இல்லை சம்பந்தனோ ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்திருந்தால் அல்லது செய்தால் ஏன் பொதுமக்கள் இவர்களை எதிர்க்கின்றார்கள் என்பதற்கான காரணத்தை சொல்லித் தொலையுங்கள். மீண்டுமொரு அமிர்தலிங்கம்-இராஜதுரை போன்ற அரசியல் நாடகம் இலங்கை தமிழர் பிரதேசங்களில் அழித்தொழிக்கப்பட வேண்டும்.
  20. 87இல் புலிகளின் விமானம் வாரமலர் தினமுரசு, நவம்பர் 26-திசம்பர் 2, 1995 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பாகம் 54 | அற்புதன் யாழ்-குடாநாட்டில் நீர்வேலியில் புலிகளது விமானத் தளம் ஒன்று பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1987 இல் புலிகளது விமானம் பற்றி அமெரிக்க ‘டைம்’ சஞ்சிகை படத்தோடு வெளியிட்ட செய்தி ஒன்று: “அரச இலக்குகளை தாக்குவதற்காக புலிகள் ஒரு சிறிய ரக விமானத்தைத் தயாரித்துப் பார்த்திருக்கிறார்கள். இரண்டு ஆசனங்களைக் கொண்ட அந்த மென்ரக விமானம் உலோகக் குழாய்களாலும், அலுமினியத் தகடுகளாலும் வடிவமைக்கப்பட்டது. ஜனவரி 1987 இல் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் விடப்பட்டது. பத்தடி உயரம் வரை எழுந்து விட்டுத் தரையில் விழுந்து மோதியது. அதனால் இறக்கைகளும், சக்கரங்களும் சேதமாகின. பின்னர் அவற்றை திருத்தி மீண்டும் பறக்கவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது இயங்க மறுத்துவிட்டது. எனினும் புலிகளால் விமான தயாரிப்பில் வெற்றி காணக்கூடிய சாத்தியம் இல்லாமல் இல்லை.” தொகுப்பாளர் குறிப்பு: மேலுள்ளதின் முதல் பறப்பு பற்றித்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னரும் (1984) புலிகள் ஓர் விமானத்தை உருவாக்கி (அது ஒரு இருக்கை கொண்டது. இதில் கூறப்பட்டுள்ளது இரு இருக்கைகள் கொண்டது) சோதித்துள்ளதை சாத்திரியாரின் கட்டுரை மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனவே ஒரு இருக்கை கொண்டது ஒன்றும் இரு இருக்கைகள் கொண்டது ஒன்றும் ஆக இரு விமானங்களை அவர்கள் சோதனை முயற்சியாக தயாரித்திருக்கிறார்கள். எழுதும் போதே பெருமையாக இருக்கிறது.
  21. யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன் யாழ்ப்பாணத்துக்கு வந்த அனுர குமார காலால் நடந்தார்; கைகளால் உணவை எடுத்தார்; வாயால் சாப்பிட்டார்; கண்களால் பார்த்தார்; வாயால் சிரித்தார்… என்று சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனப் பதிவுகள் உலாவுகின்றன. ஏன் இந்தப் பதிவுகள் என்றால், ஜனாதிபதியின் ஒவ்வொரு அசைவையும் அசாதாரணமானதாக, அபூர்வமானதாக, எளிமையானதாகச் சித்திரித்து, அவருடைய ஊடகப்பிரிவு குறிப்பாக டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக கவர்ச்சியான காணொளிகளாக வெளியிட்டு வருகிறது. ரிக்ரொக் தலைமுறையின் ஒருபகுதி அதனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் பார்க்கின்றது. அனுர பலாலியில் நடந்ததால் அவருக்குப் பிறஷர் குறைந்ததோ இல்லையோ, தமிழ் அரசியற் பரப்பில் ஓர் பகுதியினருக்குப் பிறஷர் ஏறுகிறது. அனுரவை கதாநாயகராக கட்டமைக்கும் காணொளிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பிரச்சார விளம்பரங்கள்தான். எல்லாரும் செய்வதைத்தான் அனுரவும் செய்கிறார். ஆனால் அவருடைய ஊடகப் பிரச்சார அணி அதனை ஒரு செயற்கரிய செயலாக சித்திரிக்கின்றது. அதைத்தான் மேற்கண்டவாறு தமிழ் தேசிய ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள். தமிழ்த் தேசிய தரப்புகள் குறிப்பாக மேற்கண்ட பதிவுகளைப் போடுபவர்களும் உட்பட பெரும்பாலானவர்கள், ஒருவர் மற்றவரை அல்லது ஒரு கட்சி மற்றக் கட்சியை வில்லன் ஆக்கி, துரோகி ஆக்கி ஒருவர் மற்றவர் மீது மலத்தை அள்ளி வீசும்போது. இரண்டு தரப்பிலும் மலம் படுகிறது. இரண்டு தரப்புமே நாறுகின்றன. இதனால் தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை. இந்த வெற்றிடத்திற்குள் அனுர ஒரு கதாநாயகராக இறக்கப்படுகிறார். தமிழ்த் திரை நாயகர்களின் எழுச்சியான பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். இது தமிழ்த் தேசியக் கட்சிகள் விட்ட வெற்றிடத்தை அரசாங்கம் திட்டமிட்டு நிரப்பும் ஒரு பிரச்சார உத்தி. ஆனால் இது தனிய ஒரு பிரச்சார உத்தி மட்டுமல்ல, அதைவிட ஆழமான ஆபத்தான ஓர் அரசியல் வியூகம் அங்கே உண்டு. அனுர கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் வைத்து பின்வருமாறு கூறினார் ”முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள்.. ஆனால் முதன் முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்.. அவர் பயன்படுத்திய சொற்களுக்கு அரசியல் பரிமாணம் உண்டு என்று எடுத்துக் கொண்டால், அவர் தமிழ் மக்களின் போராட்டத்தை வடக்குக்குள் மட்டும் சுருக்குகிறார். அது வடக்கின் பிரச்சினை என்று காட்டப் பார்க்கிறார். கிழக்கில் அந்தப் பிரச்சினை இல்லை என்றும் அங்கே பொருள் கொள்ளலாம். அவர் மட்டுமல்ல கோத்தபாய ராஜபக்சவும் இனப்பிரச்சினையை வடக்குக்கு மட்டுமான பிரச்சினையாக, ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கப் பார்த்தார். இது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல். கிழக்கில் பிரச்சினை இல்லை என்று காட்டுவது. அல்லது வடக்கை மட்டும் ஃபோக்கஸ் பண்ணுவதன்மூலம் வடக்கையும் கிழக்கையும் தெளிவாகப் பிரிப்பது. இங்கு மேலும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் உண்டு. ஒரு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் குறுகிய காலகட்டத்துள் வடக்கிற்கு அதிகம் வருகை தந்தவர் அனுரதான். அதுமட்டுமல்ல, அவருடைய வருகைகளின்போது அவரை நோக்கித் திட்டமிட்டு மக்கள் குவிக்கப்படுகிறார்கள். அது தானாகத் திரண்ட கூட்டம் என்று அவருடைய ஊடகப்பிரிவு சொல்லலாம். ஆனால் அரச பேருந்துகள் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது பொங்கல் விழாவின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால் இதேயளவு கவனக்குவிப்பு கிழக்கை நோக்கி இல்லை. வடக்கோடு ஒப்பிடுகையில் கிழக்கில் “செல்பி அரசியல்” பெரிய அளவில் இல்லை. கடந்த வாரம் பொங்கல் விழாவில் அனுர பின்வருமாறும் பேசினார்… ”பார்க்காத பழகாத எங்களை நம்பினீர்கள். உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அது எதிர்பாராமல் கிடைத்த வெற்றி. ஆனால் உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சி குறிப்பாக சுமந்திரன் கடுமையாக உழைத்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பருமனைக் குறைத்தார். ஆனால் மாகாண சபையில் மீண்டும் தன் மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கருதுகின்றது. அதை நோக்கி அவர்கள் ஏற்கனவே உழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஜனாதிபதியும் அமைச்சர்களும் வடக்கை நோக்கி அதிகமாக வருவது அந்த நோக்கத்தோடுதான். ஜனாதிபதியை தமிழ்மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகக் கட்டியெழுப்புவதும் அந்த நோக்கத்தோடுதான். தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையே காணப்படும் பிடுங்குப்பாடு அரசாங்கத்துக்கு அனுகூலமானது. தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளையும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் குழு மோதல்களையும் சுட்டிக்காட்டி அமைச்சர் சந்திரசேகரன் அண்மைக் காலங்களில் பேசி வருகிறார். அதற்கு சிவஞானம் பதில் சொல்லுகிறார். சிவஞானத்தின் பதில் ஒலிவாங்கிகளுக்கு முன்னுக்கு கூறப்படுவதாக இருக்கக் கூடாது. அது செயலில் காட்டப்பட வேண்டும். அடுத்த மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைப்பதை இந்தியா விரும்புகிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது. எனவே மாகாண சபைத் தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையாக உழைக்கின்றது. ஏற்கனவே கிராம மட்டங்களில் அவர்கள் உருவாக்கி வரும் “பிரஜா சக்தி” என்ற கட்டமைப்புக்கு அவர்கள் வறுமை ஒழிப்பு என்ற கவர்ச்சியான நிறத்தைப் பூசலாம். ஆனால் நடைமுறையில் அது பிரதேச சபைகளுக்குச் சமாந்தரமானது. பிரதேச அதிகாரங்களைக் கவரும் நோக்கிலானது. அதைவிட முக்கியமாக அரச கட்டமைப்பு ஒன்றுக்கூடாக, அரச வளங்களைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியின் அடிமட்ட வலையமைப்பைப் பலப்படுத்தும் கட்சி அரசியல் உள்நோக்கம் அங்கே உண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுதொடர்பாக அண்மையில் நல்லூர், திவ்வியஜீவன சங்க மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் ஐங்கரநேசசன் பேசினார், பிரஜா சக்திக்கு எதிராகத் தான் நீதிமன்றம் செல்லப்போவதாக சுமந்திரன் கூறியிருக்கிறார். அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடுத்த மாகாண சபையை இலக்கு வைத்து இயங்குகின்றது. ஆனால் வடக்கை அவர்கள் குறிவைப்பது அதற்காக மட்டும் அல்ல.அது அதைவிட ஆழமானது. வடக்கை வென்றெடுத்தால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வடக்குத்தான் பிரச்சனை. எனவே அங்கே அடிக்க வேண்டும். அங்கே வெல்ல வேண்டும். என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். இது ஒருவிதத்தில் முதலாம் கட்ட ஈழப்போரின் போது ஜெயவர்த்தன வகுத்த வியூகத்தின் மறுவளமான வடிவம் ஆகும். ஜெயவர்த்தனாவின் தளபதியாக இருந்த சிறில் ரணதூங்க ஒரு நேர்காணலில் கூறியதுபோல, வடக்குக் கிழக்கு இணைப்பைத் துண்டித்து விட்டால், அதாவது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசத்தை குடியேற்றங்களின் மூலம் துண்டித்து விட்டால், தாயகக் கோட்பாடு புவியியல் ரீதியாக சிதைக்கப்படும். அடுத்ததாக கிழக்கை படை நடவடிக்கைகள், திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் மூலமும் தமிழ் -முஸ்லீம் முரண்பாடுகளை, வடக்குக்-கிழக்கு முரண்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் தோற்கடித்து விட்டால்,தாயகம் நடைமுறையில் பலவீனமடைந்துவிடும். கிழக்கை வென்றெடுத்தால், வடக்கு மட்டும் தாயகமாக நின்று பிடிக்காது என்று ஜெயவர்த்தன கணக்குப் போட்டார். இப்பொழுது தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தின் அடுத்த கட்டத்தைப் பரிசோதிக்கின்றதா? வடக்கை வீழ்த்தினால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே ஒரு வழக்கின்மூலம் வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாகப் பிரித்தது ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே வடக்கு-கிழக்கு அதாவது தாயகத்தைத் துண்டாடும் வியூகம் இதில் உண்டு. இந்த வியூகத்தை எதிர்கொள்ள வேண்டும். பிரஜா சக்திக்கு எதிராக வழக்குப் போடுவதால் மட்டும் இந்த வியூகத்தைத் தோற்கடித்துவிட முடியாது. பலமான தமிழ்த் தேசியப் பதில் வியூகம் ஒன்று வேண்டும். https://www.nillanthan.com/8091/
  22. 2018 ல் தான் நான் யாழில் இணைந்தேன். அதற்கு முன் யாழ் இணையத்தை அறியாமல் போனதற்கு வருந்துகிறேன். 2014 ல் நீங்கள் எழுதிய இச்சிறிய (அளவில் சிறிய) கட்டுரைப் பதிவைத் தற்செயலாகக் கண்ணுற்றேன். கணியன் பூங்குன்றனார் பாடலுக்குச் சிறிய, சீரிய விளக்கவுரை வாசித்து அகமகிழ்ந்தேன். பாராட்டும் வாழ்த்தும், திரு.ஏராளன் !
  23. புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது: பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்! – அம்பிகா சுட்டிக்காட்டு! தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ( PTA) பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் (PSTA) தொடர்பாக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு துறையினர் தாங்கள் விரும்பிய அர்த்தத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்ற ஒரு சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரயோகிக்கப்பட்டாலும் கொழும்பில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் பலர் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அப்போதுதான் இந்தச் சட்டத்தின் ஆபத்து தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் உணரக்கூடியதாக சூழ்நிலை உருவாகியது. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தன்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் நீக்கப்படவில்லை. தற்போது சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் ஒரு வரவை தயாரித்து முடித்திருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களை அடக்கும் ஒரு சட்டமாக செயற்பட்டு வந்திருக்கின்ற நிலையில் தற்போது புதிய வரைவும் அதே செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டமை ஆபத்தான விடயம். தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பார்த்தால் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் அநேகமானவர்களிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் இலங்கைச் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன. உதாரணமாக கூறினால் 18 வருடங்கள் சிறையில் இருந்த சந்திர போஸ் என்ற நபர் தன்னை சிறையில் சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார்கள் என 2021 ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்த நிலையில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரின் உடல் பகுதிகளில் அனேகமான இடங்களில் தழும்புகள் காணப்பட்டமை, சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதை காட்டுவதாக அமைந்தது. 2018 ல் கொண்டுவரப்பட்ட வரைவில் நீதித்துறையை பலவீனப்படுத்தி பொலிசாரின் அதிகாரங்களை உயர்த்துவதான சட்ட வரைப்பு தயாரிக்கப்பட்டது. இந்த புதிய சட்ட விரைவில் ஒரு மனிதனுடைய நடமாடம் சுதந்திரத்தை பொலிசார் தீர்மானிப்பது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான ஒரு உத்தியாகும். அதேபோன்று பயங்கரவாதம் என்ற சொல் வரையறுக்கப்படாத நிலையில் குற்றம் ஒன்றை ஒருவர் செய்ய பார்க்கிறார் என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படுகிறது. கைது செய்யும் அதிகாரம் புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளிடம் காணப்படுகின்ற நிலையில் 24 மணித்தியாலங்கள் வரை அவருக்குரிய பாதுகாப்புகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவதாக அமைகிறது. ஏனெனில் ஆயுதப் படைகளால் கைது செய்யப்படும் நபர் ஒருவரை 24 மணித்தியாலத்திற்கு முன்னர் பொலிஸ் நிலையம் ஒன்றில் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. புதிய சட்ட வரைவில் ஏற்கனவே தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீதித்துறையில் இருந்து நிர்வாகத்துறை தீர்மானித்த நிலையில் சிறு திருத்தமாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் பிணையில் விடுவிக்கலாம் என்ற ஒரு விடயத்தை சேர்த்திருக்கிறார்கள். அதேபோன்று குற்றம் ஒப்புதல் வாக்குமூலத்தை பொலிசார் தாங்கள் நினைத்தவாறு எழுதி வாங்கும் நிலையை மாற்றி நீதிமன்றத்தின் முன் வரவேண்டும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இது எவ்வாறாக இருந்தாலும் புதிய சட்டத்தில் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே அல்லாமல் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அற்ற நீதித்துறையாகவே காணப்படுகிறது. ஆகவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் அடிப்படை உரிமை மீறல்களை புரிவதற்கான ஒரு வரைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=357390
  24. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு அமெரிக்கப் பிரஜையை சுட்டுக் கொன்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் - போராட்டம் வெடித்தது! 25 Jan, 2026 | 02:25 PM அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் அமெரிக்கப் பிரஜை ஒருவரை குடியேற்றத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, அங்கு பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒரே மாதத்தில் பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும். சுட்டுக் கொல்லப்பட்டவர் 37 வயதான அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் தாதியராகப் பணியாற்றி வந்தவர். அவர் தற்காப்புக்காகவே சுடப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் கையில் துப்பாக்கி இருந்ததாகவும், அதை பிடுங்க முயன்றபோது அவர் எதிர்த்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில் அலெக்ஸ் தனது கைபேசியில் அதிகாரிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் அவர் மீது மிளகுத் தூள் தெளித்து, கீழே தள்ளித் தாக்கிய பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அப்பகுதியில் குவிந்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகை மற்றும் 'பிளாஷ்பேங்' (flashbang) குண்டுகளைப் பயன்படுத்தினர். ஜனவரி மாதம் 07 ஆம் திகதி ஏற்கனவே ஒரு அமெரிக்கப் பிரஜை (ரெனே குட்) இவ்வாறே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த விசாரணைகளில் உள்ளூர் அதிகாரிகளை அனுமதிக்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருவது மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதலை உருவாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/236956
  25. சட்ட சிக்கல் தீர்வின் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவோம் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் 25 Jan, 2026 | 05:00 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணசபைத் தேர்தல் முறைமையில் ஆராய்வதற்கு பாராளுமன்றத்தால் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளை முன்வைக்க தயாராகவுள்ளோம். நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலினால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். தேர்தல் சட்டத்தில் உள்ள சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது. ஆகவே இந்த விடயத்தில் பாராளுமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையிலோ அல்லது புதிய தேர்தல் முறையிலோ நடத்த வேண்டும் என்று அரசியல் தரப்பில் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அதிக கரிசணை கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்கும் யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சிறந்ததொரு தீர்மானமாகும். பாராளுமன்ற உத்தேச தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமை தொடர்பிலும், மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்த யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். இந்த குழு ஊடாக ஒரு தீர்வு எட்டப்பட்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டசிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வோம். மாகாணசபைத் தேர்தலுக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236990

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.