Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. South Africa vs New Zealand, 1st Semi-Final at Kolkata, T20 World Cup, Mar 04 2026 - Live Cricket Score Innings break 1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup PrevNext South Africa (20 ov) 169/8 New Zealand New Zealand chose to field.Stats view Current RR: 8.45 • Last 5 ov (RR): 61/3 (12.20)
  3. இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு 04 Mar, 2026 | 04:33 PM இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாகாண கூட்டுறவு ஆணையாளர் செல்வி அகல்யா ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர் உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் . குறித்த அரைக்கும் ஆலை யில் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குரிய வசதிகளுடன் கூடிய வகையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு
  4. யாழில் 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விற்று தீர்ந்தது 04 Mar, 2026 | 04:36 PM யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெற்றோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெற்றோலை பெற்று சென்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெற்றோலை பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீற்றர் பெற்றோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு செய்யப்படுவதனால், 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீற்றர் பெற்றோல் நுகரப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் கொலன்னவளையில் இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இன்றைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. யாழில் 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விற்று தீர்ந்தது
  5. "ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துகிறோம்" - டிரம்பின் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டேனியல் கேய் வணிக செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்காவுக்கு தடை செய்ததை அடுத்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இதனிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், டிரம்பின் அச்சுறுத்தல் "சர்வதேச சட்டத்தை முறிப்பதாகும்" என்று தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் இது குறித்து தெரிவிக்கையில், ஸ்பெயின் "மிகவும் மோசமாக" இருந்தது என்றும் "நாங்கள் ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்கப் போகிறோம்" என்றும் கூறினார். "ஸ்பெயினுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த அச்சுறுத்தலை டிரம்ப் நிர்வாகம் பின்பற்றுமா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்தைத் தடுக்க அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான செலவினங்களை உயர்த்த வேண்டும் என்ற டிரம்பின் வலியுறுத்தலுக்கு ஸ்பெயின் அரசு எதிர்ப்பு தெரிவிப்பது உட்பட, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றங்களை டிரம்பின் கருத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன. "இன்று அல்லது நாளை, ஸ்பெயினுடனான அனைத்து வணிகங்களையும் எங்களால் நிறுத்த முடியும்" என்று டிரம்ப் செவ்வாய்கிழமை ( பிப்ரவரி 3) கூறினார். ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா சட்டப்பூர்வமாக தடை விதிக்க முடியும் என்று டிரம்ப் மற்றும் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் இருவரும் கூறினர். ஆனால் இந்தத் திட்டம் குறித்து அதிபர் கருத்து கேட்டபோது, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உறுதியான பதிலை வழங்கவில்லை. "நாங்கள் அதைப் பற்றி உங்களுடன் (டிரம்பிடம்) பேசுகிறோம்," என்று கூறினார். "உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய வலுவான அதிகாரம் உங்களிடம் உள்ளது. நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும், தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், நாங்கள் அதைச் செய்வோம்." என்றார் அவர். வர்த்தக அச்சுறுத்தல் குறித்து கருத்து கேட்டபோது வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,La Moncloa Handout படக்குறிப்பு,ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செவ்வாய்கிழமையன்று , ஸ்பெயின் அரசாங்கம் தனது பாதுகாப்பு செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்க மறுத்ததற்காக, டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பல ஐரோப்பிய நாடுகள் மேல் விதிக்கப்பட்ட வரி போல இல்லாமல், ஸ்பெயின் பொருளாதார தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், பொருளாதாரக் குழுவில் உள்ள 27 நாடுகளுக்கு இடையே பொருட்களை சுதந்திரமாக நகர்த்த அனுமதிக்கிறது, இது ஒரு தனி உறுப்பு நாட்டின் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்தவொரு முயற்சியையும் சிக்கலாக்கும். அமெரிக்க நிர்வாகம் ஸ்பெயினுடனான அதன் வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், அது தனியார் நிறுவனங்களின் சுயாட்சி, சர்வதேச சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கூறியது. செவ்வாய்கிழமை (பிப்ரவரி 03) டிரம்பைச் சந்தித்த ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், ஸ்பெயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி என்றும், அந்த ஒன்றியத்துடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலும் ஸ்பெயினும் இருக்க வேண்டும் என்றும் அதிபரிடம் கூறியதாக தெரிவித்தார். 2025-ஆம் ஆண்டில், அமெரிக்கா ஸ்பெயினுக்கு சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது, மேலும் அந்த நாட்டிலிருந்து சுமார் 21 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கு ஸ்பெயினின் சிறந்த ஏற்றுமதிகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கும். ஐரோப்பாவின் இடதுசாரி சார்பு கொண்ட சில தலைவர்களில் ஒருவரான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஞாயிற்றுக்கிழமை, இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சட்டத்தை மீறும் "நியாயமற்ற, ஆபத்தான ராணுவத் தலையீடு" என்று விமர்சித்தார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தெற்கு ஸ்பெயினில் உள்ள ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதைத் தடுப்பதாக மாட்ரிட்டில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர், அவ்வாறு செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் என்று வாதிட்டனர். இரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதற்கான தனது முயற்சியில் பிரிட்டன் "ஒத்துழைக்கவில்லை" என்றும் டிரம்ப் விமர்சித்தார். ஆனால், அந்நாட்டின் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அவர் வெளிப்படையான அச்சுறுத்தலை விடுக்கவில்லை. ஸ்பெயின் பிரதமர் கூறியது என்ன? ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், 10 நிமிட தொலைக்காட்சி உரையில், யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இராக் போர் பற்றி பேசினார். மேலும் "போர் வேண்டாம்" என்பதுதான் ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று கூறினார். ஸ்பெயின் மக்கள் மீது டிரம்பின் அச்சுறுத்தல் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான பொருளாதார நடவடிக்கைகளை தன் அரசு ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். "நாம் ஆயதுல்லாக்களின் பக்கம் இருக்கிறோமா என்பது கேள்வி அல்ல. நாம் அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களை ஆதரிக்கிறோமா என்பதுதான் கேள்வி." அரசாங்கத்தின் நிலைப்பாடு யுக்ரேன் மற்றும் காஸா மீதான அதன் நிலைப்பாட்டுக்கு ஒப்பானது என்று அவர் விளக்கினார். 2023-இல் ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். காஸா விவகாரம் குறித்து ஐரோப்பாவில் மிகவும் வெளிப்படையாகப் பேசும் அரசாங்கங்களில் ஸ்பெயினும் ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகளை "இனப்படுகொலை" என்று வர்ணித்து, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செய்வதற்கு முன்பே பாலத்தீன அரசை ஸ்பெயின் அங்கீகரித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு "ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துகிறோம்" - டிரம்பின் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை என்ன?
  6. இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது Mar 4, 2026 - 04:24 PM எம்மைப் போன்ற ஒரு நாடு எக்காரணம் கொண்டும் இவ்வாறானதொரு போரில் ஒரு இடைத்தரகராகவோ அல்லது இரையாகவோ மாறக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், ஒரு நாடாகத் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், அதாவது ஒரு கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு, இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். "போரினால் உயிர்களை இழந்த அனைவருக்காகவும் நாங்கள் வருந்துகிறோம். அரச தலைவர்கள், இராஜதந்திரிகள், சாதாரண மக்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என எந்தத் தரப்பிலாவது பாதிக்கப்பட்டவர்களாக மாறி அவர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்காகவும் நாங்கள் கவலையைத் தெரிவிக்கிறோம். இந்த போர் மோதல்கள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்." "இரண்டாம் உலகப் போரின் பின்னர் இவ்வாறான போர் மோதல்களை நிறுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் அந்த சர்வதேச நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ளோம். அந்த நிறுவனங்களுக்கும் தங்களது அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கான பொறுப்பு உள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் இந்த அனைத்து விடயங்களுடனும், இது ஒரு புவியியல் எல்லைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது. அது எப்போது, எங்கு விரிவடையும் என்பதை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு நாடாக நாங்கள் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு இந்த மோதல்களை நிறுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்." பெருமளவான இலங்கையர்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர். உலகப் பொருளாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதை யார் ஆரம்பித்திருந்தாலும், இது இப்போது எந்தளவுக்கு விரிவடைந்திருந்தாலும், இது விரைவில் முடிவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கேள்வி: ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவைக் கண்டு பயமா? ஈரான் தூதுவரும் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரியிருந்தார்....? மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகள் மாறிவிட்டனவா? அமைச்சரின் பதில்: "போர் ஒருபோதும் உலகிற்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை. அரசியல் தேவைகளுக்கு மத்தியில் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டவர்களாக மாறினர். போரில் ஒரு பக்கத்தை ஆதரிக்க எவரும் முயற்சிக்கவில்லை. அது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாடு உங்களுடைய நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம், அதாவது எங்களைப் போன்ற ஒரு நாடு இந்தப் போரில் இடைத்தரகர்களாகவோ அல்லது போரின் இரையாகவோ மாறக்கூடாது. எனவே, இந்தப் போர் மோதல்களைத் தவிர்ப்பதற்காக எங்கள் தரப்பில் சொல்லாலும் செயலாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து வருகிறோம்." இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது
  7. போற போக்கில 160 அடிச்சாலே பெரிய விடயம் போல.
  8. அநியாயமான கொலை. FeTNA என்ற தமிழ் சங்கப் பேரவையில் சுறு சுறுப்பாக இயங்கும் ஒரு அருமையான குழந்தை. போன வருடம் வட கரோலினாவில் இவரைச் சந்தித்திருக்கக் கூடும் பெயர் அறியாமலே. ஆனால், ஈழத்தமிழ் பெண் அல்ல என நினைக்கிறேன். தமிழ் நாட்டவர். ஆனால், இவையெல்லாம் பொருட்டல்ல! அஞ்சலிகள்!
  9. எனக்கு இந்தப் போட்டியில் யார் இந்தியாவை வெல்வார்களோ அவர்கள் தான் வெல்ல வேண்டும்.மற்றும்படி இரண்டு அணிகளும் எனக்கு பிடித்தவை தான்.
  10. வெனிசுவெலாகாரனை தூக்கின மாதிரி, ஈரான்காரனுக்கு இருந்த இடத்திலேயே "டொட்" வைச்சமாதிரி ....... நம்ம ரஷ்யன்காரனுக்கும் ஏதாவது சம்பவங்கள் செய்ய சாத்தியம் உள்ளதா சார்? 🤭
  11. இன்று ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது போலிருக்கு🙂 SA (12.2/20 ov) 85/5 NZ New Zealand chose to field. CRR: 6.89 • Last 5 ov (RR): 32/3 (6.40)
  12. நியுசிலாந்து முட்டுக் கட்டையைப் போட்டுவிட்டார்கள்.
  13. Today
  14. "ஈரான் எந்தத் தலைவரை நியமித்தாலும் அவரும் எங்கள் இலக்கு" - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Published By: Vishnu 04 Mar, 2026 | 06:30 PM ஈரானால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் எந்த சந்தேகமும் இல்லாமல் அழிக்கப்பட வேண்டிய எமது இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் எந்தத் தலைவரை நியமித்தாலும் அவரும் எங்கள் இலக்கு
  15. நீங்கள் மேற்கூறிய அனைத்தும் எல்லா இனங்களிலும்,நாடுகளிலும் இருக்கின்றது.நீங்கள் கூறியதை வைத்துக்கொண்டு தான் இன்றைய உலகில் போர்களும், எல்லைச்சண்டைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.அதில் வெற்றி பெறுபவன் தான் வீரனாகவும் பலசாலியாகவும் மதிக்கப்படுகின்றான்.😎 மதவெறி, வரட்டு கௌரவம், வெட்டி வீரம், முட்டாள்தனமான பழமைவாதம் இவை இல்லாத சூழல் வேண்டுமாயின் பூமியை விட்டு அண்ட வெளியில் வேறு ஏதாவது கிரகத்தில் தேடிப்பாருங்கள். 😉
  16. 1954 - 2003 வரை இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்ட முஸ்லிம் ஊர்காவல்படை, காடையர்கள் மற்றும் ஜிகாத் ஆல் தென்தமிழீழம் வாழ் தமிழர்களுக்கு செய்யப்பட்ட அட்டூழியங்களின் வரலாறுகள்:
  17. 'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன? பட மூலாதாரம்,Mashregh News / File Photo படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் தினுக் ஹேவாவிதரனா பிபிசி சிங்கள மொழி சேவை 4 மார்ச் 2026, 11:43 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலே துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. இரானிய கப்பல் மூழ்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார். "அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது" என அவர் தெரிவித்தார். ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான இரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதே சமயம், இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் கப்பல் மூழ்கியதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாகவும், மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிகா சம்பத் முன்னர் தெரிவித்திருந்தார். இலங்கையின் பாதுகாப்பு துறை செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் இதனை உறுதி செய்தார். காயமடைந்த 32 பேர் காலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்த 140-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என, சம்பத் துய்யகொந்தா பிபிசியிடம் தெரிவித்தார். நீர்மூழ்கி தாக்குதல் என்பதை மறுத்த இலங்கை கடற்படை இரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி, இரானிய கப்பல் நீர்முழ்கி தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளதா என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கடற்படை தரப்பிலிருந்து இந்தக் கூற்றை முழுவதுமாக நிராகரிக்கிறோம்." என்றார். ''விபத்து நேர்ந்த விதம் தொடர்பில் பின்னரான காலத்தில் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாகவே உறுதிப்படுத்த முடியும். விசேட நிபுணத்துவத்துடனான விசாரணை குழு, தொழில்நுட்ப விசாரணைகள் குழுவின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக அதிகாரம் உள்ள நிறுவனங்கள் தொடர்புப்பட வேண்டும். வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலை நிராகரிக்கின்றோம்." என்று கூறினார். இரானிய கப்பலின் நிலை பற்றி பிபிசி சிங்களா விசாரித்தபோது, கடற்படை சென்ற சமயத்தில் கப்பல் முழுவதும் மூழ்கியதாக அவர் தெரிவித்தார். "அபயக் குரல்கள் எங்களுக்கு கிடைத்தபோது சம்பவம் நடந்த இடத்திற்கு கடற்படை கப்பல் சென்றடைந்தன, ஆனால் அங்கு எண்ணெய் படலங்கள், சில உயிர்காக்கும் படகுகளை மட்டுமே கண்டோம். அங்கு எந்த இரானிய கப்பலும் இல்லை. அது மூழ்கியிருந்தது." என்றும் தெரிவித்தார். கப்பல் மூழ்கியதற்கான காரணத்தை தற்போது வரை இலங்கை ராணுவத்தால் உறுதிசெய்ய முடியவில்லை. தொடர்ந்து பேசிய அவர், "விபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.32 பேரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளோம். தொடர்ந்தும் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன." என்றார். கப்பல் மூழ்கி வரும் இடத்திலிருந்து சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "'இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த கடலை அண்மித்த பகுதியிலிருந்து உயிரிழந்த சில மனித உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். இந்த சடலங்கள் கப்பலில் கடமையாற்றிய ஊழியர்களுடையதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். எனினும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஊடாகவே இந்த சடலங்கள் இந்த கப்பலில் பணியாற்றியவர்களுடையதா என்பது உறுதிப்படுத்தப்படும்.'' என அவர் குறிப்பிடுகின்றார். கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை - பாதுகாப்பு இணை அமைச்சர் இரானிய கப்பல் விபத்தில் சிக்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார். "கடற்படை இதனை விசாரித்து வருகிறது. காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதே நேரத்தில், உறுதியான காரணத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை," என்று அவர் கூறினார். கப்பலின் நிலை பற்றி தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்தவர்களின் நிலை என்ன? கப்பலில் இருந்தவர்களில் காயமடைந்த 32 பேர் காலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் எஸ்.டி.யு.எம் ரங்கா பிபிசியிடம் தெரிவித்தார். "32 நோயாளிகள் உள்ளனர். பலருக்கு வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரின் நிலை மோசமான நிலையில் உள்ளது. 7 பேருக்கு மிதமான அளவிலும் மற்றவர்களுக்கு சிறிய அளவிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயம் ஏற்பட்டதற்கான காரணத்தை உறுதியாக கூற முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார் அந்தக் கப்பல் குழுவினரை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக இணைந்து செயல்பட்டதாகவும் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார். இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அந்தக் கப்பல் ஆபத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கப்பலில் உள்ள குழுவினரை மீட்க இலங்கை கடற்படை கப்பல் ஒன்று அனுப்பப்பட்டதாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ள இலங்கை விமானப் படையின் விமானம் இன்று (மார்ச் 4) அனுப்பப்பட்டதாக, விமானப் படை செய்தித் தொடர்பாளர் நலின் வெவாகும்புரா தெரிவித்தார். காலை 5 மணிக்கு கிடைத்த தகவல் இரானிய கடற்படைக்குச் சொந்தமான ஐஆர்ஐஎஸ் டேனா "விபத்துக்கு உள்ளானதாக" இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று காலை 05:08 மணிக்கு கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கும் கடலோரக் காவல் படைக்கும் தகவல் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார். காலை 6 மணிக்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தலையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். "6 மணிக்கு முதல் கடற்படை கப்பல் சென்றது, 7 மணிக்கு இரண்டாவது கப்பல் சென்றது. இந்த மீட்புப் பணியில் விமானப்படையும் கடற்படையும் ஈடுபட்டது," என்றார் விஜிதா ஹெராத். கப்பலில் 180 பேர் வரை இருந்ததாகவும் 30 பேர் தீவிர ஆபத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் இரானிய கடற்படையின் 86 பிரிவைச் சேர்ந்தது. மிகவும் பேசப்பட்ட இந்தக் கப்பல் 2022-2023 ஆண்டுகளில் இரானிய கடற்படையின் பலத்தைக் காட்டுவதற்காக உலகம் முழுவதும் 65,000 கிமீ கடல் பயணத்தை மேற்கொண்டது. இந்தக் கப்பல் முழுவதும் இரானால் உருவாக்கப்பட்டது. இரானின் பண்டர் அப்பாஸில் உள்ள ஷாஹித் டார்விஷ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1,500 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 95 மீட்டர் நீளம் கொண்டது. இந்தக் கப்பலில் நூர் அல்லது காதர் என்று அழைக்கப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 76 மிமீ ஃபஜர்-27 கடற்படை துப்பாக்கி, 30மிமீ ஆயுத அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளத்திலிருந்து வான் நோக்கிச் செலுத்தும் ஏவுகணைகள் ஆகியவை உள்ளன. உலகளாவிய வர்த்தகத்தை காப்பதிலும் கடற்கொள்ளையை எதிர்கொள்வதிலும் மற்றும் நீண்ட தூர கடற்சார் திட்டங்களை நடத்துவதிலும் இரானின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது என இரான் கடற்படை தெரிவிக்கிறது. இந்தியா வந்திருந்த கப்பல் இந்தக் கப்பல் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இந்தியாவில் விசாகப்பட்டினம் வந்திருந்தது. இந்திய கடற்படையின் எக்ஸ் தளப் பதிவின் படி, இந்த கப்பல் கடற்படை பயிற்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?
  18. ஈரானிய கொடியை அணிந்த முஸ்லிம் ஒருவரால் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஈழத்தமிழ் பெண் ... இஸ்லாமிய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஈழத்தமிழ் பெண்ணிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.. இதெல்லாம் எங்கட ஆக்களுக்கு கண்ணுக்கு தெரியாது. தன்ர வீட்டுக்கு நடந்தால் மட்டும் தான் ரத்தம் .... (இதுக்கும் ஒரு -1 பார்சல் பிளீஸ்)
  19. இது விபத்துக்குள்ளாகவில்லை. அமெரிக்க நீர் மூழ்கி கப்பலில் இருந்து torpedo தாக்குதலின் மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
  20. காத்தான்குடி போராளிகளை ஈரானுக்கு ஏற்றிச் செல்ல வந்த ஈரான் போர்க்கப்பல் இலங்கைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளானது. 😂 Inuvaijur Mayuran
  21. இலங்கைக்கு அருகில் முல்லாக்களின் போர்க்கப்பல் ஒன்று நீர்மூழ்கி தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது... மொத்த கலக்குழு (crew) 180 பேரில் 150 பேர் வரை காணாமல் போயுள்ளனராம்... எங்கும் அடி எதிலும் அடி... 🤣🤣
  22. தற்போது ஈரான் போரை வழிநடாத்திக் கொண்டிருக்கும் முப்படை தளபதிகள். !! 😂 யாழ்ப்பாணம்.com
  23. ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை! இலங்கையில் ஒரே பாலினத்தவர் (LGBTQ+) சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த வழக்கில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எடுத்துள்ள முக்கிய கொள்கை முடிவு இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அல்லது மேம்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ‘தேச ஹிதைஷி தேசிய இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டாரவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இத்தகைய சுற்றுலாத் திட்டங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு முரணானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. அதிகாரசபை இத்தகைய திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை எனத் தற்போது கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதால், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பரிசீலித்து வருகிறது. https://athavannews.com/2026/1467161
  24. சுவைப்பிரியன் நீங்கள், விஜயை... மிக உன்னிப்பாக அவதானித்து இருக்கின்றீகள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.