Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 138 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 138 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' என்ற மேஜர் ஃபோர்ப்ஸ் எழுதிய நூலின் பக்கம் 176 இன் படி, ஆதாமின் சிகரத்தில் / ஸ்ரீ பாதத்தில் உள்ள புத்தரின் இடது பாதத்தின் அளவு ஐந்து அடி ஏழு அங்குல நீளமும் இரண்டு அடி ஏழு அங்குல அகலமும் கொண்டது ஆகும் [five feet seven inches in length and two feet seven inches in breadth]. புத்தர் ஒரு மனிதர், அவரது பாதங்கள் இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. இது புத்தரின் இடது பாதத்தின் அளவை ஆதாமின் சிகரத்தில் உள்ள பள்ளமான பகுதியின் முழு அளவையும் கருத்தில் எடுத்தது போல் தெரிகிறது? 'நயன்ஜோத் லஹிரி எழுதிய 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' என்ற நூலின் 44 முதல் 45 பக்கங்கள் வரை பார்க்கவும். அதில்: பின்னர் புத்தர் நடந்து சென்ற ஒரு கல் இருந்தது [பாடலிபுத்திரத்தில் உள்ள ஒரு கல்லில் புத்தரின் கால்தடத்தை சுவான்சாங் இங்கு பதிவு செய்கிறார்.], அதில் அவரது இரண்டு கால்களின் அடையாளமும் இருந்தது. இது ஒரு புனித அம்சம் என்பதால், மன்னன் அதை ஒரு அடைப்புக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார். நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீனப் பயணி சுவான்சாங்கின் (யுவான் சுவாங் / Xuanzang) இந்த விவரங்களைப் பற்றிய விளக்கத்தை ஒப்புதலுடன் படித்தனர். தொல்பொருளியல் துறையின் முக்கியத்துவமான துல்லியமான அளவீட்டுத் திறன்களை சுவான்சாங் அங்கு காட்டினார். அதாவது அவர் அந்த புனித பாதச் சுவடுகளின் பரிமாணங்களைக் "18 அங்குல நீளம் மற்றும் 6 அங்குல அகலம்" என்று பதிவிடுகிறார். இது கூட ஒரு மனிதனுக்கு ஒப்பீட்டளவில் பெரியது. வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் போல் தெரிகிறது. ஆனால் மேஜர் ஃபோர்ப்ஸின் 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ளபடி, அதில் ஒருவர் அதன் மீது தூங்கலாம். உண்மையில் அது தூங்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்? சமண மதமும் புத்த மதமும் தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ் நாடுகளுக்கு, பொது சகாப்தம் தொடங்குவதற்கு முன்பே வந்தன. கிமு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமண மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது, சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது. மன்னர்களும் மற்றும் அங்கு வாழும் பணக்காரர்களும் சமண துறவிகளுக்கு உறங்குவதற்காக பாறை மேற்பரப்புகளை தயார் செய்து வந்தனர். மகாவம்சம், 10-97 மற்றும் தீபவம்சம், 7-35 இல் சமணர்கள் நிகந்தர்கள் அல்லது நிகண்டர்கள் - பற்றற்றவர்கள் [Niganthas] என்று குறிப்பிடப்படுகிறார்கள். "Jain" (சைனர்) தமிழில் சமணர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். பௌத்த இதிகாசமான மணிமேகலையின் நாயகியான மணிமேகலை, இந்த சமண மலைக்கு [Sammana Malai] வருகை தந்தார் என்று குறிக்கப்பட்டுள்ளது. சமண மலை என்றால் இந்த மலை சமணர்களுக்குச் சொந்தமானது என்பதாகும். இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்பு, யாரோ ஒருவர் சமணர்களுக்கு, மலையின் உச்சியில் ஒரு படுக்கையை அமைத்தார் போலும்? அதனால்தான் சமணக் குட்டை [Sammana kutta] என்று பெயர் வந்தது என்று எண்ணுகிறேன். உதாரணமாக, 'பூலாவுடையார் சமணர் படுகை' என்று அழைக்கப்படும் சமணர் படுகை ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியிலுள்ளது. இப்படுகையில் சமண முனிவர்கள் படுப்பதற்கேற்ப கல்லில் படுக்கை செய்யப்பட்டுளது. மேலும் இதில் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அதில் 'வெண் காசிபன் கொடுபித கல் கஞ்சனம்' என்று தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுளது. இதன் எழுத்துக்களைக் கொண்டு இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. புத்தரின் பாதங்களை வணங்குவதற்காக மணிமேகலை கூட சமண மலைக்கு வந்தார் என்று காவியம் கூறுகிறது. சமணர்கள் அவமானம் உட்பட, எல்லாவற்றையும் துறந்தவர்கள். எதையும் அணிய மாட்டார்கள். குளிக்க மாட்டார்கள், பல் துலக்க மாட்டார்கள். வேறு எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் வாழும் இடங்களிலிருந்து விலகி வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற கல் படுக்கைகள் பல உள்ளன. சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்கு நிறைய பங்களித்தனர். இருப்பினும், கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஒரு அற்பமான விவாதத்தில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திருஞானசம்பந்தமூர்த்தி துறவி ஒரு இளம் பிராமணர். அவர் சுத்தமாகவும் நன்றாகவும் உடையணிந்தவராகவும் இருந்திருக்க வேண்டும்; சைவ மதத்தின் சிறப்புகள் மற்றும் சமண மதத்தின் தீமைகள் குறித்து அவர் சமணர்களுடன் விவாதித்தார். அங்கு மன்னனே நடுவராக இருந்திருக்க வேண்டும். நிர்வாணமாக துர்நாற்றம் வீசும் வயதான சமண துறவிகளுக்கு எதிராக, அவர்களின் விவாதத்தின் தகுதி அல்லது தீமையைப் பொருட்படுத்தாமல், நல்ல மனநிலையில் இருந்த இளம் திருஞானசம்பந்தமூர்த்திக்கு ஆதரவாக மன்னன் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். விவாதத்தில் தோல்வியடைந்ததால், சமணர்கள், சுமார் எட்டாயிரம் பேர் உயிருடன் கழுவேற்றப் பட்டனர் என்பது வரலாறாகும். Part: 138 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" As per the page 176 of the Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' , the size of the Buddha’s left foot on Adam’s Peak / Sri Pada is five feet seven inches in length and two feet seven inches in breadth. The Buddha was a human, and his footsteps cannot be this big. From the pages 44 to 45 of the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' says: Quote “Then there was a stone on which the Buddha had apparently walked, marked by the impression of both his feet, a sacred feature which the king had surrounded within an enclosure. Modern archaeologists read the Chinese traveller’s description of these details with approval, Xuanzang having shown the sorts of precise measuring skills that are staple of the discipline of archaeology: he mentions the dimensions of the sacred foot prints (18 inches long and 6 inches broad” Unquote. Even this is a comparatively big for a human being. Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' gives the size of the Buddha’s left foot as on the Adam’s Peak. Even the size mentioned in the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' is somewhat excessive; almost double the usual size, but the size of the Buddha’s foot print as given on the Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' is ridiculously excessive; one can sleep on it. In fact it must have been prepared for the sleeping purpose. Jainism and Buddhism came to southern India, especially to Tamil countries, before the dawn of the Common Era. Jainism came to Tamil countries about three hundred year B.C., and Buddhism came to Tamil countries about one hundred years after. Kings and rich people used to prepare rock surfaces for Jain monks. Jains are referred as Niganthas in the Mahavamsa, 10-97, and the Dipavamsa, 7-35. Jains are referred to as Samannar in Tamil. Mannimeghalai, the heroine of the Tamil Epic Mannimeghalai which is a Buddhist epic, visited this Sammana Malai. Sammana Malai means the hill belongs to Sammanars; to Jains. Someone prepared a bed on top of the hill to Sammannars, to Jains, prior to the advent of Buddhism in Lanka. That is why the name Sammana kutta. Even Mannimeghalai came to Sammana Malai to worship Buddha’s feet. Jains forsook everything, even shame, and do not wear anything. Do not bathe, do not brush teeth etc. They do not do anything which may harm any other living being. They used to live away from the living quarters. There are many such stone beds in Tamil Nadu. Samannar contributed a lot to Tamil literature. They were, however, massacred in the seventh century A.D. on a frivolous debate. Thirugnanasampanthamoorthy Saint was a young Brahmin. He must have been clean and well dressed; He debated Jains on the merits of Saivism and the demerits of Jainism. The king must have been the sole arbitrator. The king must have given the verdict in favour of the well poised pleasing young Thirugnanasampanthamoorthy against the naked foul smelling old jain monks irrespective of the merit or demerit of their debate. Jains were impaled alive because they failed in the debate, about eight thousand in numbers. This is very sad and shameful on the part of Saiva Saint Thirugnanasampanthamoorthy. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 139 தொடரும் / Will follow துளி/DROP: 2104 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 138 https://www.facebook.com/groups/978753388866632/posts/34406209025694305/?
  3. கருத்து எழுதும் போதுதான் புதிய மொழியில் எழுதுகிறீர்கள் … அட்லீஸ்ட்…திட்டும் போதாவது தமிழில் திட்ட கூடாதா? மேலே தமிழ் சொற்களை இடியப்ப கொத்து போல் பிச்சு போட்டிருக்கிறிர்கள் என்பது புரிகிறது. ஆனால் வசனமா வாசித்தால் இது தமிழ் அல்ல என்றே படுகிறது. இது 6 வது தென்னிந்திய மொழி அல்லது அந்தமானில் பேசும் மொழி வகை ஏதேனுமா?
  4. என்ன அரைத்த மாவை .... அறிந்தது காலத்துக்கு, நிலைமைக்கு பொருந்துகிறதா என்பதை கூட சிந்திக்காது ஒப்புவித்தது. இதுக்கு விடய விபரங்களில் பரீட்சயம் தேவை இல்லை. அப்படி விடய விபர அறிவு தேவை அற்றதுக்கே பிறழும் போது ... வேறு ஏதும் ஒப்புவிக்க கிடைக்கமல், மொத்தத்தில் வெளிக்காட்டிய அரைகுறையும் இல்லை என்று முக்குவது.
  5. யாழில். விரிவுரையாளர் படுகொலை - தீவிர விசாரணைகளில் தடயவியல் பொலிஸார் சனி, 21 மார்ச் 2026 11:12 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட பகுதி சாவகச்சேரி நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளரின் மகன், விரிவுரையாளரான தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன யுவதியும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் விரிவுரையாளரின் மகளின் காதலன் என கூறப்படும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விரிவுரையாளரை கொலை செய்து , சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். https://jaffnazone.com/news/55737
  6. Today
  7. அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்! கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்.. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி ஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்! ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀 அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர, ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான். அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை! சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன். முதலில் AI tools களைப் பார்ப்போம். பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools: Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம் Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன. பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools: Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம். படங்களை உருவாக்க: Gemini AI pro, Copilot படங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம். பாடல்வரிகளை உருவாக்குதல்: நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்! கொடுத்த Prompt: Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை. Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா? அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன. மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல் Gemini AI தந்த பாடல்வரிகள். சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு.. [Intro] [Seductive Flute with Deep Bass] [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 1] நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ... வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...! மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...! என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..! [Build Up] என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை! [Pre-Chorus] செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே... ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள... தழல் உடலோடு அவள் என்னை நோக்க... பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 2] மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க… மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…! மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….! வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…! [Verse 3] இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….! நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…! செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென… செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….! [Bridge] அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…! என் ஆண்மை சிறகு விரித்தது…! காம நெருப்பின் கலசமே…! என் தாகம் தீர்க்கும் நதியே…! உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Outro] தழல் உடலே...! ஆஹா...! பனித்துளியே...! ம்ம்ம்...! வைரம் தகிக்கும் கனலே...! என் உயிரே...! உன் விரிந்த விழிகளில்.. நான் வீழ்ந்தேனே...! [Fade out: Sensuous flute and echoing vocals] Styles: Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyrics பாடலை உருவாக்குதல்: Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன. Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும். சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்: - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க , காற்புள்ளி - இடைவெளி விட ! ஆச்சரியக்குறி - நிறுத்த … (ellipses) - நீட்டிப் பாட பாவித்திருந்தேன். இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம். Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும். பின்னர் Advanced Options இல்: Style Influence: 100 80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் Weirdness: 0 10க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும் எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல. பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம். இரண்டு பாடல்களை உருவாக்கினேன். அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர், Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை உருவாக்கினேன். படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁 Prompt: Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன். கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊 ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள் Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8b இரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள் Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc
  8. எனது கருத்தில் நான் தெரிவித்திருந்தது யுத்தம் நிறுத்தப்பட்டதால் தொடர்சசியான மக்கள் அழிவு நிறுத்தப்பட்டது எனக்கு மகிழ்சியே என்பதையே. யுத்தத்தை உரிய வேளையில் எமது தரப்பில் இருந்து நிறுத்ததப்பட்டிருந்தால் எமது மக்களின் அரசியல் பலமும் மனோபலமும் காப்பாற்றப்பட்டிருக்கும். அவர்களால் யுத்தத்தை நிறுத்த வைத்தது எமது நிலையை அடி மட்டத்திற்கு தள்ளியது. இந்த விடயத்தில் அன்றைய பிழை இன்று சரி என்று நீங்கள் கூறுவது வெறும் நொண்டி சாட்டு மட்டுமே. அன்றைய பிழையை அன்றே அது பிழை என்று உணர்ந்து அதை எடுத்துரைத்தோர் எச்சரித்தோர் பலர் உண்டு. அவர்களெல்லாம் வன்முறைமூலம் மௌனிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் அன்றே கூறியது சரி என்பது அவர்களை மௌனிக்க வைத்தவர்கள் முட்டு சந்திக்கு மக்களை அழைத்து சென்றுவிட்டு வேறு வழியின்றி மௌனித்தபோது தான் மிக தெரிந்து கொண்டனர். அதை வெளிப்படையாக சொல்ல இன்றும் ஈகோ பலரை அனுமதிப்பதில்லை .
  9. ‘சர்வதேச சந்தைக்கு வழங்க உபரி கச்சா எண்ணெய் இல்லை’ - கையை விரித்த ஈரான்; கலக்கத்தில் அமெரிக்கா! தெஹ்ரான்: 'தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள கச்சா எண்ணெயோ அல்லது உபரி எண்ணெய் கையிருப்போ இல்லை' என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, மார்ச் 20 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை, ஈரானின் எண்ணெய் அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில், கப்பலில் ஏற்றப்பட்ட நிலையில் உள்ள கச்சா எண்ணெய் அல்லது உபரி கையிருப்பு ஏதும் ஈரானிடம் இல்லை. தடைகளை தளர்த்தும் அமெரிக்காவின் கருத்துக்கள், எண்ணெய் வாங்குவோருக்கு நம்பிக்கையூட்டுவதையும், சந்தையின் மனநிலையைச் சீர்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதல் நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, சர்வதேச எண்ணெய் எரிவாயு சந்தை ஏற்கனவே பெரும் நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தரப்பிலிருந்து வந்துள்ள இந்த மறுப்புச் செய்தி, நிலையற்ற சந்தையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். முன்னதாக, ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான தடைகளை, இந்த ஆண்டு ஏப்ரல் 19 வரை தற்காலிகமாகத் தளர்த்துவதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்தத் தளர்வின் கீழ், ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்காவிற்குள் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, மார்ச் 20 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை உலக நாடுகளுக்கு விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எண்ணெய் எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இது உலகளாவிய எண்ணெய், எரிசக்தி விநியோகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. ‘சர்வதேச சந்தைக்கு வழங்க உபரி கச்சா எண்ணெய் இல்லை’ - கையை விரித்த ஈரான்
  10. புளித்த மாவு இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறைக்கு முழுக்க முழுக்க எரிச்சல்தான் காரணம் என்பதை இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது. இதற்குள் அதிபர், அன்பான சர்வாதிகாரியும் அவரின் தூசண தம்பிகளும் வேறு குறுக்க மறுக்க ஓடுகிறார்கள்😂 ஊசி நுழைய முடியாத இடத்தில் கூட பழத்தட்டு நுழைந்து விடும். -பவுடர் டப்பா- இவர் ஒரு அற்பன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ஐயா. கண்ணதாசன் என்ற கான மையிலை விட தான் ஒரு படி மேல் என நினைத்து பேரரசு பட்டம் கட்டி கொண்ட வான்கோழி இவர். கவிஞர்கள் என்றால், கல்யாணசுந்தரம், அப்துல் ரஹ்மான், கண்ணதாசன், வாலி, மேத்தா, வைரமுத்து என்பதே என் வரிசை.
  11. ஈரான் எச்சரிக்கை : “உலகின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது” 21 Mar, 2026 | 01:10 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் 21 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. இந்த சூழலில், போரை நிறுத்தும் நோக்கில் தந்திரோபாய அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், மத்திய கிழக்கைத் தாண்டியும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என ஈரான் தரப்பில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் இராணுவத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிரிகளின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு முழுமையான தகவல்கள் உள்ளன. அதன்படி, பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட உலகின் எந்த இடமும் இனி அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது” என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச சமூகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் திரளும் இடங்கள் குறிவைக்கப்படலாம் என்ற சாத்தியம் குறித்து பல நாடுகள் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனிடையே, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கான சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. பல நாடுகள் உடனடி போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. தற்போதைய நிலைமை உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், அடுத்தடுத்த முன்னேற்றங்கள் மீது சர்வதேச கவனம் திரும்பியுள்ளது. https://www.virakesari.lk/article/241557
  12. "அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்தோம்" - இலங்கை அதிபரின் கருத்தால் எழும் விவாதம் என்ன? பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் அமெரிக்க போர் விமானங்களை தரையிறக்க இலங்கை அனுமதி மறுத்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (மார்ச் 20) வெளியிட்ட கருத்து, தற்போது சர்வதேச ரீதியில் பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களில், இலங்கை நடுநிலைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதை வெளிகொணரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இரானுக்கு சொந்தமான 3 கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருகைத் தர அனுமதி கோரிய நிலையில், அந்த விடயம் குறித்து ஆராய்ந்துக் கொண்டிருந்த தருணத்திலேயே அமெரிக்கா தமது போர் விமானங்களை இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரண்டு நாடுகளினாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். இரானிய கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என சிலர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். இரானிய கப்பலுக்கு அனுமதி வழங்கியிருந்தால், தமது நாட்டின் ஒட்டு மொத்த நடுநிலைத் தன்மையும் சீர்குலைந்திருக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,AP படக்குறிப்பு,இலங்கையை அண்மித்த கடல் பரப்பில் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற இரானிய கப்பல் தாக்குதலுக்கு இலக்காகியது. (கோப்புப் படம்) இந்த மோதல்கள் விவகாரத்தில் தமது நாடு நடுநிலைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். ''இந்தப் பிரச்னையில் எமது தொடர்ச்சியான நிலைப்பாடு நடுநிலைத்தன்மை என்பதாகும். எமது தாய் நாட்டின் கௌரவம், நீதி தொடர்பான பிரச்னை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே நாம் வென்றெடுக்க முடியும். எனவே, எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நடுநிலைத்தன்மை கை நழுவிப் போக நாம் இடமளிக்க மாட்டோம்." என்றார். ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில தரப்பினரும் இலங்கை குறிப்பிட்ட ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறும் குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்ட அவர், "அவை முற்றிலும் உண்மையற்றவை.'' எனவும் கூறினார். இரானின் கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (மார்ச் 20) கருத்து வெளியிட்டிருந்தார். "ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக 03 இரான் கடற்படைக் கப்பல்கள் மார்ச் 09 மற்றும் 13 ஆம் தேதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே வேளை, அன்றைய தினம் மாலையில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. எமது நாட்டின் நடுநிலைத்தன்மை குறித்து நாம் மிகத் தெளிவான முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் மோதல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்தன. எனவே, நாம் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை." என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறினார். "இரானியக் கப்பல்களுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர். அப்படி அனுமதி வழங்கியிருந்தால், எமது ஒட்டுமொத்த நடுநிலைத்தன்மையும் சீர்குலைந்திருக்கும். அத்துடன், எமது பிராந்தியத்திற்கு அப்பால் இருந்த ஒரு போர் மோதல், மத்தளை மற்றும் கொழும்பு துறைமுகத்தை எட்டியிருக்கும். எத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாம் நாட்டைப் பாதுகாத்தோம்.'' எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பட மூலாதாரம்,PMD SRI LANKA அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளமையினால், இந்த போரில் ஒரு தரப்பிற்கு சாதகமாக செயற்படுவதாக வெளியிடப்படும் கருத்து முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். "அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் இம்மாதம் 04 மற்றும் 08 ஆம் திகதிகளில் மத்தள விமான நிலையத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி கோரியிருந்தன. அந்த விமானங்களின் இறக்கைகளில் 8 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது." என கூறிய அதிபர், "நாம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்தப் போரில் ஒரு தரப்பாக மாறுவதைத் தவிர்க்க முடியாது எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். அது முற்றிலும் பொய்யானது" என்று அநுர குமார திஸாநாயக்க கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "அந்த ஒப்பந்தத்தில், இவ்வாறானதொரு யுத்தத்தின் போது எமக்கிடையிலான உடன்பாடு குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. அதில் வான்வழிப் போக்குவரத்து சார்ந்த நடவடிக்கைகள், பராமரிப்பு சேவைகள் தொடர்பான பயிற்சித் திட்டங்கள், கடல்சார் எல்லைகள் குறித்த விழிப்புணர்வு, சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த அவசரகால பதில் நடவடிக்கைகள் போன்ற விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.'' என குறிப்பிடுகின்றார். அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் இரான் மோதலில் இலங்கையின் தொடர்பு இந்தியாவில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைளுக்கான வருகைத் தந்திருந்த இரானுக்கு சொந்தமான கப்பல் ஒன்று, மீண்டும் இரான் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த 4ம் தேதி தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இலங்கையின் தென் பகுதியை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இரானின் கப்பல் மீது அமெரிக்காவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடாத்தியிருந்தது. இந்த கப்பலில் 180 பேர் பயணித்திருந்ததாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதன்படி, கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோர் இணைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியிருந்தனர். இதன் பிரகாரம், குறித்த கப்பலில் இருந்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 32 இரான் கடற்படை வீரர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றி, காலி தேசிய மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அதேவேளை, இந்த கடல் பிராந்தியத்திலிருந்து சுமார் 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் கண்டெடுத்து, காலி தேசிய மருத்துவமனையின் பிரேத அறைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த சடலங்கள் மீதான மரண பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து, விசேட விமானத்தின் ஊடாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 84 சடலங்களும் இரானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அத்துடன், தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்டு காலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேரும் குணமடைந்த நிலையில், அவர்கள் கொக்கல விமானப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரான் கப்பலில் இருந்த 206 பேருக்கு அடைக்கலம் பட மூலாதாரம்,SL NAVY படக்குறிப்பு,புஷெர் கப்பல் அதேவேளை, இரானுக்கு சொந்தமான மற்றுமொரு கப்பல் பழுதடைந்த நிலையில், இலங்கை அந்த கப்பலை பொறுப்பேற்று, அந்த கப்பலில் இருந்த 206 பேருக்கும் அடைகலம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். "இரானின் மற்றுமொரு கப்பலின் எஞ்சின் பழுதடைந்துள்ளதால் கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதி கோரப்பட்டது. 11 மணி நேரங்களுக்கு முன்பே அனுமதி வழங்கியிருக்கலாம் எனச் சிலர் கூறுவதைக் கண்டேன். அங்கு 11 மணி நேரங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. முதல் கப்பல் தாக்குதலுக்கு உள்ளான பின்னரே, இரண்டாவது கப்பலில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது." என்று அவர் தெரிவிக்கின்றார். மேலும், "அவர்கள் போர் மோதலின் ஒரு தரப்பினர். அவர்கள் எமது கடற்பரப்பிற்குள் நுழையும்போது, சர்வதேசச் சட்டங்களின்படி 24 மணி நேரங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும். 24 மணி நேரங்களுக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது எமது பொறுப்பின் கீழ் வர வேண்டும். அப்போதுதான் எமது நடுநிலைத்தன்மை பாதுகாக்கப்படும். அவர்கள் எமது பொறுப்பின் கீழ் வந்த பிறகு, முழு குழுவினரும் தங்கியிருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய, 206 கடற்படை வீரர்களை எமது கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தோம்." என்றார். "நாம் இந்த 206 பேரையும் ஒன்றாகக் வைத்திருக்கவில்லை. அவர்கள் படையினர், மன அழுத்தத்தில் இருப்பார்கள், என்ன மாதிரியான நிலைமை உருவாகும் என்பதை நாம் அறிவோம். எனவே, மிகுந்த அவதானத்துடன் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் சிகிச்சைகளை வழங்கினோம். நாம் அவர்களை மிகுந்த மனிதாபிமானத்துடன் கவனித்து வருகிறோம். இதன் மூலமே இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தையும் கீர்த்தியையும் பெறுகின்றது.' எனவும் அவர் குறிப்பிடுகின்றார். 'ஐநா தீர்மானத்தை ஏற்கவில்லை' - ஜனாதிபதி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு வழங்கவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். இந்த தீர்மானத்தில் குறைபாடுகள் காணப்பட்ட பின்னணியிலேயே, தாம் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் கூறுகின்றார். "கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தத் தாக்குதல்கள் குறித்த தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பல நாடுகள் அந்தத் தீர்மானத்திற்கு உடன்பட்டன. தமது ஒத்துழைப்பை வழங்கின. ஆனால், நாம் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானம் குறைபாடுகள் கொண்டிருந்தன." என்று கூறியுள்ளார் அநுர குமார திஸாநாயக்க. அதற்கான காரணம், "சர்வதேச அரங்கில் நாம் எப்போதும் 'நீதி மற்றும் நியாயம்' என்ற சுலோகத்தையே முன்வைக்கிறோம். அதன் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டுள்ளோம். அதனால்தான் எமது செயற்பாடுகள், கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் இணக்கப்பாடுகள் என அனைத்திலும் நாம் எமது நடுநிலைமையைப் பேணி வருகிறோம் என்று நான் எப்போதும் கூறுகிறேன். இவ்வாறானதொரு போர் காலத்தில், தாய்நாட்டின் தனித்துவம், கௌரவம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறை இதுவேயாகும்" என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். அரசியல் ஆய்வாளர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்? அமெரிக்காவின் போர் விமானங்கள் தரையிறக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை மறுத்ததை பொது வெளியில் சொல்வதானது, எந்தளவு சரியானது என்பது கேள்விக்குறியானது என இலங்கையின் அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். "மத்திய கிழக்கு பிரச்னையில் இலங்கை நடுநிலையை பேணுகின்றோம் என்று சொல்ல வேண்டியதில்லை என்றே நான் நினைக்கின்றேன். இந்த மோதலில் நாங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. நடுநிலை வகிக்கின்றோம் என்பது எங்களின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால் ராஜதந்திர ரீதியில் பொதுவெளியில் சொல்வது எந்த வகையில் சரியானது என்பது கேள்வி" என அவர் குறிப்பிடுகின்றார். "அமெரிக்காவின் நலன்களுக்கு முரணாக போகாத வகையில் செயற்பட்டால், இலங்கைக்கு பாதிப்பு இல்லை. ஆனால், இப்போது இருக்கின்ற அமெரிக்காவின் நிர்வாகம் இதனை எவ்வாறு பார்க்கும் என்பது ஒரு கேள்வி" என்கிறார். 'இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் நடுநிலையாக இருக்கின்றோம் என்பதை அமெரிக்கா ஆரோக்கியமாக பார்க்காது என்று தான் நான் நினைக்கின்றேன்' என குறிப்பிடும் அவர், "நீண்ட கால அடிப்படையில் இது இலங்கைக்கு நன்மையானது இல்லை." என கூறுகின்றார். அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய அமைதியற்ற சூழ்நிலை தொடர்பில், இந்தியாவின் அணுகுமுறைகளை பின்பற்றி செயற்படுவது, இலங்கை போன்றதொரு சிறிய நாட்டிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் எனவும் அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா குறிப்பிடுகின்றார். "இந்தியாவும் மனிநேய அடிப்படையில் அவர்களுடைய துறைமுகத்திற்குள் ஒரு கப்பலை அனுமதித்தது. இந்த விடயத்தில் இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை பயணிப்பது ஒரு சாதகமான விடயத்தை ஏற்படுத்தும். இதுவொரு புதிய அனுபவம். ராஜதந்திர ரீதியில் இதனை அணுக வேண்டும்" என்கிறார் அவர். "குறிப்பாக டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இதனை எவ்வாறு அவதானித்துக்கொண்டிருக்கின்றது என்பது எமக்கு தெரியாது. இது தமக்கு விரோதமான செயற்பாடு என அவர்கள் கருதினால், அது இலங்கையை பாதிக்கும். இலங்கைக்கு சில தீர்மானங்களை எடுக்கும் அளவுக்கான ஆற்றல் இந்த விடயத்தில் இல்லை. ஆனால், பிராந்தியத்தில் ஒரு அங்கம் என்ற விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறையோடு ஒத்து போகக்கூடிய வகையிலான ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் மாத்திரமே இலங்கைக்கு சாதகமானது'' என அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg4367zj91o
  13. உண்மைநான் ரசோதரன். வைரமுத்து தன்னைத் தானே கவிப்பேரரசு என அடையாளப்படுத்திக் கொண்டவர். எனது பார்வையில் அவர் ஒரு சினிமா பாடலாசிரியர் மற்றும் திமுக அபிமானி. (முற் குறிப்பு) கோசான் ஜி, நீங்கள் பச்சைக் கொடி காட்டியதாலேயே இதை எழுதுகிறேன். “கவிஞர் கண்ணதாசன் இலக்கியங்களில் இருந்தும், சித்தர் பாடல்கள், தேவாரப் பாடல்கள் போன்ற பல்வேறு இடங்களில் தான் வாசித்து அதிலே கவரப்பட்டு சினிமா பாடல்களில் அவற்றை புகுத்தியவர் என்பது உண்மை. ஆனால் அதைப் பற்றி அவர் ஒருபோதும் மறைத்ததில்லை, அதுமட்டுமல்ல, எங்கேயிருந்து எடுத்தார் என்பதையும் அவர் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார். அந்த நேர்மைதான் கண்ணதாசன். உதாரணத்திற்கு, பட்டினத்தார் சொல்வது: “மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே…”என்ற பாடல் புரிவதற்கு நேரம் எடுக்கும். அதையே கண்ணதாசன், பாமரனுக்கும் புரியும் வகையில், “வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ…” என்று எழுதியபோது பலரால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் கவிப்பேரரசு அப்படியா என்றால்… கொஞ்சம் சிக்கல்தான். எங்கேயிருந்து வந்தது என்று சொல்லாமல், “இது எல்லாம் என் தலையில்தான் உதித்தது!” என்பார். அதிலும் கர்வம் சேர்ந்திருக்கும். சரி அவரது கவிதையை ரசிக்கலாம் என்று பார்த்தால், அதில் உள்ள உவமைகளையும் “இது எனது கண்டுபிடிப்பு” என்று முத்திரையும் குத்தி விடுவார். சில நேரங்களில் “தமிழ் என்னால்தான் வாழ்கிறது” என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு தன்மேல் நம்பிக்கையிருக்கிறது. எங்களுக்கு எரிச்சல் அதிகரிக்கிறது. ‘பொன்மாலை’ என்ற சொல் கூட தனது கண்டுபிடிப்பு என்றார். ஆனால் அதற்கு முன்பே கவிஞர் வாலி,“பொன்மாலை மயக்கம்…”என்று அன்பேவா படத்தில் எழுதி விட்டார். அப்படியென்றால் இது கண்டுபிடிப்பு இல்லை, கவிப்பேரரசின் மீள்பதிவு. மருதகாசி எழுதிய“கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே…” என்ற பாடல் வரி கவிப்பேரரசுவினால்“விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்று மாறுகிறது. அதேபோல், “ஆண்டவன் உலகத்தின் முதலாளி…”என்று ஆலங்குடி சோமு எழுதியிருக்க, பின்னர் “ஒருவன் ஒருவன் முதலாளி…”என்று வருகிறது. கவிப்பேரரசு பற்றி இப்படி எடுத்துக்காட்டுகள் நிறைய சொல்லலாம். ஆனால் அது வீணான நேரமாகிவிடும். இதற்கிடையில், கண்ணதாசன் சினிமாவைத் தாண்டி ‘யேசு காவியம்’, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ போன்ற பல அருமையான படைப்புகளைத் தந்தவர். வாலியும் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களை கவிதை வடிவில் படைத்தார். கவிப்பேரரசுக்கு கல்லிக்காட்டு இதிகாசத்துக்கு ஞானபீட விருது தந்திருக்கிறார்கள். ஒரு பேட்டியில் ரங்கராஜ் பாண்டி குறிப்பிட்டார், “ பா.இரஞ்சித்துக்கு தமிழ்நாடு அரசு பரிசு தரவில்லை. ஆனால் வைரமுத்துவுக்கு ஒன்றிய அரசு ஞானபீட விருது தந்திருக்கின்றது” என்று. தேர்தல் நேரம். எல்லாம் அரசியல் நோக்கம்தான். அதுசரி கவிப்பேரரசுவின் ஈழகாவியம் என்னாச்சு? அவர் மட்டும் அதை எழுதினால் புலம் பெயர் தமிழர்களது விருது நிச்சயம்.
  14. குழிக்குள் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற தாய் யானை நடத்திய போராட்டம் : சோகத்தில் முடிந்த சம்பவம் Published By: Digital Desk 1 21 Mar, 2026 | 12:03 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கெக்கிராவை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஹொரிவில பகுதியில், ரயில் சமிக்ஞை வடங்களுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து இரண்டு மாதமேயான குட்டி யானையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சுமார் 30 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டமொன்று ரயில் பாதையைக் கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. ரயில்வே ஊழியர்களால் சமிக்ஞை வடங்களை இடுவதற்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான, குறுகிய குழிக்குள் எதிர்பாராத விதமாக குட்டி யானை விழுந்துள்ளது. குட்டி யானையை மீட்பதற்கு யானைக்கூட்டம் பெரும் முயற்சி எடுத்தபோதிலும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஏனைய யானைகள் அங்கிருந்து சென்ற போதிலும், தாய் யானை மட்டும் தனது குட்டியை மீட்பதற்காக அங்கேயே தங்கிப் போராடியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னரே குட்டி யானை உயிரிழந்துள்ளது. https://www.virakesari.lk/article/241548
  15. 'இரான் போரை முடிக்க பரிசீலனை' - ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு பற்றி டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கவில்லை. 21 மார்ச் 2026, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் உடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் மற்றொரு புறம், தரைப்படை வீரர்களை இறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "இரானில் உள்ள பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் நாங்கள் மேற்கொண்டு வரும் எங்களது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். ஏனெனில் எங்களது இலக்குகளை அடைவதற்கு மிக நெருக்கமாக நாங்கள் இருக்கிறோம்," என்று போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அவர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். போர் தொடங்கிய நாள் முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப், "அதைக் (ஹோர்முஸ் நீரிணை) கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான பொறுப்பை அதனைப் பயன்படுத்தும் நாடுகளே ஏற்க வேண்டும்," என்று கூறியுள்ளார். ஒரு மதிப்பீட்டின்படி, உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. "உதவி கேட்கப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான இந்த நாடுகளின் முயற்சிகளுக்கு நாங்கள் உதவுவோம்" என்று கூறிய டிரம்ப், "ஆனால் இரானிய அச்சுறுத்தல் நீக்கப்பட்ட பிறகு இது தேவையாக இருக்காது. முக்கியமாக, இது அந்த நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும்," என்றும் தெரிவித்தார். மேலும், இரானுக்கு எதிரான போரில் இதுவரை எட்டியுள்ள இலக்குகள் குறித்தும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இரானின் ஏவுகணைத் திறன் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் ராணுவத் தொழில் கட்டமைப்பு பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலையை நெருங்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர, மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளான இஸ்ரேல், சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகளுக்கு அமெரிக்கா மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறினார். டிரம்பின் செய்தி அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு பிடிக்காமல் போகலாம் பட மூலாதாரம்,Trump/Truth Social படக்குறிப்பு,இரானுக்கு எதிரான போரில் இதுவரை அடைந்துள்ள சாதனைகள் குறித்தும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிபிசி செய்தியாளர் அந்தோணி சுர்ச்சரின் கூற்றுப்படி, அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் பாம் பீச் நோக்கி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த செய்தியாளர்களுக்கு டிரம்ப்பின் சமீபத்திய 'ட்ரூத் சோஷியல்' பதிவின் அச்சுப்பிரதிகள் வழங்கப்பட்டன. அதில் இரானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை "படிப்படியாகக் குறைத்துக்கொள்ள" அவர் அழைப்பு விடுத்துள்ளார். தான் குறிப்பாக விளம்பரப்படுத்த விரும்பும் சமூக ஊடகச் செய்திகளுக்கு அதிபர் இதே முறையைத்தான் பயன்படுத்துகிறார். கடந்த அக்டோபர் மாதம், தென் கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்த போதும் அவர் இதே போல செய்திருந்தார். இரான் குறித்த இன்றைய செய்தி மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதில் இரானுடனான போரில் அமெரிக்காவின் ராணுவ நோக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் புளோரிடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், தனது வார்த்தைகளைத் ராஜ்ஜீய எச்சரிக்கையுடனேயே தேர்ந்தெடுத்துள்ளார் என்று தோன்றுகிறது. இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா தலைமை தாங்காது என்ற செய்தி, அமெரிக்காவின் நட்பு நாடுகளிடையே வரவேற்பைப் பெறாமல் போகக்கூடும். ஹோர்முஸ் நீரிணை குறித்து டிரம்ப் கூறியது என்ன? இந்த மோதல் முழுவதிலும் ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க அதிபரின் தொடர்ச்சியான கவனத்தைப் பெற்றுள்ளது. கப்பல் போக்குவரத்திற்காக இதனை மீண்டும் திறக்க வலுவான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். நேட்டோ நட்பு நாடுகளிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 3 அன்று, இந்த முக்கியமான கடல்வழிப் பாதை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலுக்கும் "தீ வைப்போம்" என்று இரான் அச்சுறுத்திய போது, "தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லும்" என்று அமெரிக்க அதிபர் கூறினார். மார்ச் 10 அன்று, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் செல்வதைத் தடுக்க இரான் "ஏதேனும் செய்தால்", ஏற்கனவே தாக்கியதை விட இருபது மடங்கு பலமாக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். இருப்பினும், இந்த குறுகிய கடல் பாதையைத் திறக்க நட்பு நாடுகளின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் கூறினார். மார்ச் 14 அன்று, "பல நாடுகள், குறிப்பாக இதனால் பாதிக்கப்படும் நாடுகள், தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்" என்றார். மார்ச் 18 அன்று, அமெரிக்கா இரானிய ஆட்சியை "அழித்துவிட்டால்" ஹோர்முஸ் நீரிணையின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பிய டிரம்ப் , "அதனைப் பயன்படுத்தும் நாடுகளே அதன் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று பரிந்துரைத்தார். இன்று, அவர் நேட்டோ நாடுகளை விமர்சித்துப் பேசுகையில், அந்த நாடுகள் "அதிகரித்து வரும் எண்ணெய் விலையைப் பற்றிப் புகார் கூறுகின்றன, ஆனால் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது போன்ற எளிமையான ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ முன்வருவதில்லை" என்று கூறினார். தரைப்படைகளை களமிறக்க ஆயத்தம் பட மூலாதாரம்,Contributor/Getty Images படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் மார்ச் 2 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இரானின் தலைநகரான தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட ஒரு மாபெரும் வெடிப்புக்குப் பிறகு, புகை மற்றும் தூசிக் குவியல் காணப்பட்டது. இரானில் ராணுவ நடவடிக்கையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று டிரம்ப் கூறிவரும் நிலையில், பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் செய்தியின் படி, இரானில் தரைப்படை வீரர்களை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் விரிவான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த ஆலோசனைகள் குறித்து அறிந்த பல அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனின் மூத்த அதிகாரிகள், இத்தகைய நடவடிக்கையைத் திட்டமிடுமாறு சிறப்பு வேண்டுகோள் விடுத்து வருவதாக அந்த செய்தி கூறுகிறது. சிபிஎஸ் செய்தியின் படி, அமெரிக்கப் படைகள் இரானில் நிலைநிறுத்தப்பட்டால், இரானிய வீரர்களைச் சிறைபிடிக்கும் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் பேசுகையில், இரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை "படிப்படியாகக் குறைத்துக்கொள்வது" குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகக் கூறினார். இதற்கு முன்பு, தனக்கு போர்நிறுத்தத்தில் விருப்பமில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். தரைப்படை வீரர்களை "எங்கும்" அனுப்பும் திட்டம் தன்னிடம் இல்லை என்று அதிபர் டிரம்ப் முன்னதாகச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். மேலும் அவர், "நான் அப்படிச் செய்தாலும், அதை நிச்சயமாக உங்களிடம் சொல்லமாட்டேன்," என்றும் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை, படையினரை நிலைநிறுத்துவது தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை பதிலளிக்கவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க மத்திய கட்டளை மையமும், சாத்தியமான படை நிலைநிறுத்த இடங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg54661qeqpo
  16. கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து! வட கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை காதும் காதும் வைத்த மாதிரி ஆளுங்கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்துள்ளது. அந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் கிம் ஜோங் உன்-க்கு ஆதரவாக 99.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 687 இடங்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியின் தலைவராக கிம் ஜோங் உன்னை தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் கிம் வேட்பாளரே இல்லை என்பது கூடுதல் ருசிகரத் தகவல். வட கொரியாவில் ஆளும் கொரிய தொழிலாளர்கள் கட்சிதான் அங்கு சர்வாதிகாரம் பொருந்திய கட்சி. சில குட்டிக் குட்டி அரசியல் கட்சிகள் பெயரளவில் இயங்குகின்றன. அவர்களும் ஆளும் கூட்டணியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குவார்களே தவிர, அவர்களுக்கென்று எந்த சுயமான அரசியல் அதிகாரமும் இல்லை. அதனால் தேர்தல் களத்தில் அவர்கள் போட்டியாளர்கள் இல்லை. தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் யார் போட்டி என்பதை கட்சித் தலைமை முடிவு செய்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் தான் வாக்காளர்கள் முன்னால் இருக்கும் சாய்ஸ். அதனால் வட கொரிய தேர்தலில் வாக்காளர்கள் எஜமானர்கள் அல்ல. வாக்கை செலுத்த ஒரு கருவிதான் அவர்கள். தேர்தல் மட்டுமல்ல ஊடகமும், தேர்தல் தொடர்பான மக்கள் கருத்துகளும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. தேர்தல் நடைமுறையும் கூட ஜனநாயக நாடுகளைப் போல் ரகசிய வாக்கெடுப்பில் நடப்பதில்லை. ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை அங்கீகரிக்கும் வகையிலும் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. வட கொரிய தேர்தல் நடைமுறையையும், அங்கே எதிர்க்கட்சியே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டதால், அங்கு 99.93% வாக்குகள் மட்டுமே பதிவானது எப்படி? 0.07% எங்கே போயின என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம். வாக்காளர்கள் தங்கள் முன்னால் இருக்கும் ஒற்றை வேட்பாளருக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும் கூட, அதில் ரகசியத் தன்மை ஏதும் இல்லாததால் அப்படி வாக்களித்தால் அரசு துரோக நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இதனால், இந்த 0.07% நெகடிவ் வாக்கு என்பது வெறும் அடையாளம். போலிக் கணக்கு என்று எளிமையாகச் சொல்லலாம். வட கொரியாவில் ஜனநாயகம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக செய்யப்படும் சால்ஜாப்பு இது. வட கொரிய தேர்தல் என்பது கிம் ஜோங் உன்னின் கட்டுப்பாட்டில் நிகழும் தலைமையை கட்டளைப்படி ஒருமனதாக, முழுமையாக ஆதரிக்கும் நடைமுறையே தவிர, அரசியல் போட்டிகளின் ஊடே நடக்கும் ஜனநாயகத் தேர்தல் அல்ல. இதனால் தன் உலகம் முழுவதுமான ஊடகங்கள் வட கொரிய தேர்தலை ‘ரப்பர் ஸ்டாம்ப் தேர்தல்’ என்றழைக்கின்றன. கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!
  17. “யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல் 21 Mar, 2026 | 11:47 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர், இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயல்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். “நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வரும் சூழலில், சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கைகளை மிகுந்த கவனத்துடன் முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கை, பாரம்பரியமாக பல்துறை வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி, பல நாடுகளுடன் நடுநிலையான உறவுகளை பேணிவருகின்றது. எனினும், தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை அந்த அணுகுமுறைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசாரின் கருத்து தொடர்பாக இலங்கை அரசாங்கத்திலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241545
  18. இரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடைகள் தளர்வால் இந்தியாவுக்கு என்ன லாபம்? பட மூலாதாரம்,LightRocket via Getty Images படக்குறிப்பு,இந்தியா தான் நுகரும் எண்ணெய் பொருள்களில் 90% வரை இறக்குமதி செய்கிறது, இது உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்தியாவை அதிகம் ஆட்படுத்தக்கூடியதாக மாற்றுகிறது. கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் இந்தியா செய்தியாளர் 21 மார்ச் 2026, 06:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் நெருக்கடியில் இருக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் அழுத்தத்தைக் குறைக்க அமெரிக்கா பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வரும் வேளையில், இரானிய எண்ணெய் குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள தற்காலிக தடை நீக்கத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒருவராக இந்தியா இருக்கலாம். தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும். உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சர்வதேச சந்தையில் கிடைக்க வழிவகுக்கும்" என்று கூறினார். இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் "பெறுவது கடினமாக இருக்கும்" என்று பெசன்ட் கூறினார். இத்தகைய நடவடிக்கை, கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய, பல கோடி பேரல் எண்ணெயை உலகச் சந்தைகளில் வெளியிடக்கூடும். தனது எண்ணெய்த் தேவையில் 90%-ஐ இறக்குமதி செய்யும் மற்றும் தள்ளுபடி விலையிலான விநியோகத்தைப் பெறுவதில் சாதனை படைத்துள்ள இந்தியாவுக்கு, ஒரு சிறிய தளர்வு கூட நிம்மதியையும் வாய்ப்பையும் வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், இறுக்கமான உலகளாவிய விநியோகத்தைத் தளர்த்துவதற்கான ஒரு வழியாக பெசன்ட் இந்த நடவடிக்கையை முன்வைத்தார். இது, நீண்டகால அமெரிக்கக் கொள்கையில் ஒரு வியக்கத்தக்க மற்றும் நிச்சயமற்ற மாற்றத்தைக் குறிக்கும். பட மூலாதாரம்,Bloomberg via Getty Images படக்குறிப்பு,தடைகளுக்கு முன்பாக, 2018-இல் இரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல ஒரு எண்ணெய் டேங்கர் தயாராகிறது. தற்போது கடலில் உள்ள இரானிய சரக்குகளை (அதன் அளவு சுமார் 140 மில்லியன் பேரல்கள் என்று அவர் குறிப்பிட்டார்) வாங்குபவர்களைச் சென்றடைய அனுமதிப்பதன் மூலம், 10 முதல் 14 நாட்களுக்கு மட்டுமே என்றாலும் சப்ளை பற்றாக்குறையைக் குறைக்கவும் விலையைக் கட்டுப்படுத்தவும் முடியும் என அமெரிக்கா நம்புகிறது, இந்த நடவடிக்கை சீனாவை விட்டு இரானிய எண்ணெய் விநியோகத்தைத் திசைதிருப்பக் கூடும், இதனால் சீனா சந்தை விலைக்கு நெருக்கமான விலையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும், அதே நேரத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா உள்ளிட்ட பிற ஆசிய நுகர்வோருக்கு கச்சா எண்ணெய் கிடைக்கச் செய்யும் என்று பெசன்ட் கூறினார். (இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாகச் சீனா உள்ளது.) இந்த மறுசீரமைப்பின் மையத்தில் இந்தியா இருக்கக்கூடும். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60%-க்கும் அதிகமாக வளைகுடா நாடுகளிலிருந்து - முதன்மையாக இராக், செளதி, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன. இந்த இறக்குமதிகளில் பாதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பயணிக்கின்றன, இது தற்போது மோதலால் மூடப்பட்டுள்ள ஒரு குறுகிய வளைகுடாப் பாதையாகும். "சீன நுகர்வோர் (அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள்) மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் சேர்ந்து, கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியத் தேவை மையமாக இந்தியா உருவெடுக்கக்கூடும்," என்று கடல்சார் உளவுத் துறை நிறுவனமான கெப்லரின் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் சந்தை ஆய்வாளர் சுமித் ரிடோலியா கூறுகிறார். வரலாற்று ரீதியாக, இந்தியா இரானிய கச்சா எண்ணெயை வாங்கும் ஒரு முக்கிய நாடாக இருந்தது, 2018-இல் தடைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்பு அதன் மொத்த நுகர்வில் இரானிய இறக்குமதி சுமார் 11.5% ஆக உயர்ந்தது. இரானிய 'லைட்' மற்றும் 'ஹெவி' ரக கச்சா எண்ணெய்கள் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் பெரும்பாலும் சாதகமான விலை மற்றும் பணம் செலுத்தும் விதிமுறைகளுடன் வந்தன. அந்த வரத்து 2019-இல் நின்றது, முதலில் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெயாலும், பின்னர் யுக்ரேன் போர் உலகளாவிய வர்த்தகத்தை மாற்றியமைத்த பிறகு பெருமளவு தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய பேரல்களாலும் மாற்றப்பட்டது. பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த பல மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளன. ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி விலையில் கிடைத்தபோது, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் களத்தில் இறங்கி, குறைந்தபட்ச இடையூறுகளுடன் இறக்குமதியை அதிகரித்தன. இரானிய பேரல்கள் மீண்டும் சந்தைக்கு வந்தால் இதே போன்ற ஒரு நிலை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் இப்போது வாதிடுகின்றனர். தற்போது சேமிப்பு மற்றும் போக்குவரத்தில் உள்ள சரக்குகள் உட்பட சுமார் 170 மில்லியன் பேரல் இரானிய கச்சா எண்ணெய் கடலில் இருப்பதாக கெப்லர் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் விற்கப்படாதவை அல்ல, ஆனால் ஒரு பகுதி இன்னும் விற்கப்படாமல் உள்ளது, "இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள், முந்தைய அனுபவம் மற்றும் நிறுவப்பட்ட வர்த்தக அமைப்புகளின் ஆதரவுடன், குறைந்தபட்ச செயல்பாட்டு மாற்றங்களுடன் இந்த பேரல்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் திறனைப் பெற்றுள்ளன," என்று ரிடோலியா கூறுகிறார். உலகின் நான்காவது மிகப்பெரிய சுத்திகரிப்பு நாடான இந்தியா, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது - ஆனால் சீனாவைப் போலல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் ஏற்றுமதியைக் குறைக்க அது முனையவில்லை. இருப்பினும், கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. இரானிய எண்ணெய் சந்தைக்கு திரும்புதல் என்பது சுத்திகரிப்புத் திறனை விட வணிகம் மற்றும் புவிசார் அரசியலைச் சார்ந்தே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,LightRocket via Getty Images படக்குறிப்பு,இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகும். தடைகள் விற்பனையை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை; அவை கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றைச் சிக்கலாக்குகின்றன. "தடைத் தளர்வின் நோக்கம் மற்றும் நீடித்திருக்கும் தன்மை (கப்பல் போக்குவரத்து உட்பட), விலையமைப்பு மற்றும் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் தளவாட வழிமுறைகள் கிடைப்பது ஆகியவை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை," என்று ரிடோலியா கூறுகிறார். இந்த வழிமுறைகள் தெளிவுபடுத்தப்படாவிட்டால் அல்லது தளர்த்தப்படாவிட்டால், பரிவர்த்தனைகள் சவாலானதாகவே இருக்கும். இத்தகைய விலக்கு எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது வருமானம் மீண்டும் தெஹ்ரானுக்குச் செல்வதைத் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்படுமா என்பது குறித்து பெசன்ட் விரிவான தகவல்களை அளிக்கவில்லை. கருவூலத் துறை இது குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டது. இந்த யோசனையை ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியான பதில் அளிக்காமல், "விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான எதையும் நாங்கள் செய்வோம்" என்று கூறி முடித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy41lwlmyywo
  19. மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்! வௌியான புதிய தகவல் Mar 21, 2026 - 03:15 PM மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று (20) அப்பகுதிவாசி ஒருவருக்கு கிணற்றுக்குள் இருந்து கேட்ட முனகல் சத்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 26 வயதுடைய அந்தப் பெண்ணை கடந்த 19ஆம் திகதி ஒரு குழுவினர் கடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடத்தலின் போது தப்பிச் சென்றிருந்த அவரது மகள், கொதியபுலை வயல் பகுதியில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த பெண்ணை மீட்டபோது அதே கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு பெண்ணின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmn056hek000d356prvjwkto4
  20. அமெரிக்காவின் கூற்றை ஈரான் மறுப்பு – “உளவியல் போர்” என கடும் குற்றச்சாட்டு 21 Mar, 2026 | 11:41 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் கருத்துக்கள் உண்மையற்றவை மட்டுமல்லாது, உலக சந்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் “உளவியல் போர்” என ஈரான் கடுமையாக சாடியுள்ளது. ஈரானிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகமான சி.என்.என். க்கு வழங்கிய தகவலின் படி, பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதாக எந்தவிதமான உறுதியான மாற்றங்களும் காணப்படவில்லை. “எதிரியின் இராணுவ நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், பங்குச் சந்தையில் நிலவும் பதற்றத்தை சமாளிக்கவும் டிரம்ப் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20 சதவீதத்தை கட்டுப்படுத்தும் முக்கியப் பகுதி ஆகும். இந்நிலையில், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதன் விளைவாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு 112 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. மேலும், Goldman Sachs வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்த விலை உயர்வு 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரானிய அதிகாரி ஒருவர், “டிரம்பிற்கு ஒரு தற்காலிக பதில் அளிப்பதற்குப் பதிலாக, அவருக்கு ஒரு வரலாற்றுப் பாடம் கற்பிக்க வேண்டும் என தெஹ்ரான் முடிவு செய்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலைமைகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பொருளாதாரத்திலும் அதிர்வுகளை உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/241549
  21. நீங்கள் எவ்வளவு நீட்டி முழக்கினாலும்; நீங்கள் யார் என்பதே (உங்கள் பெயர், விபரம்) யாருக்கும் தெரியாது. ஆகவே உங்கள் உறவினர் யார் என்பதோ, அவர் என்ன வேலை செய்தார் என்பதோ கூட யாருக்கும் தெரியாது. எனவே நீங்கள் என் உறவினர் அப்படி சொன்னார், இப்படி சொன்னார் என்பது ஆதாரம் ஏதும் அற்ற கூற்று. இது வரலாற்றில் பிரபலமான வாக்கியம். இந்த வாக்கியத்தை ஒரு அரசியல்வாதி கூறுவதன் பாதக தன்மை கிட்டதட்ட அரசியலில் கொஞ்சூண்டு ஞானம் உள்ளோருக்கே தெரியும். அதுவும் அதே போல் பாண், கேக் என்று இலங்கையில் வாழும் சிறிமா கூறி இருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே இது ஒரு பச்சை பொய் என்பது வெள்ளிடைமலை. ஏன் நீங்கள் இந்த பொய்யை சொல்லுகிறீர்கள்? மேலே சொன்ன படி குறைபுரிதல். உவமான உவமேயத்தை, அசொட்டா நடந்த்து என புரிந்துகொண்டுள்ளீர்கள்.
  22. வேலியில் போன ஓணானை பிடித்து தம்பர் தன்ர ரவுசருக்குள் விட்டுவிட்டு படும் அவதி சொல்லிவேலையில்லை🤣
  23. சட்டத்துறைக்கு பரீட்சியம் என்று சொல்லி கொண்டு, இதை இங்கு சொல்வது மொ... தனமாக படவில்லை? எல்லாம் ஆதாரத்தை கொண்டா தீர்மானிப்பது? நான் சொன்னதை உங்களால் கற்பனை பண்ணி கூட (நான் சொல்வதற்கு முதல்) இருக்க முடியாது என்பதே யதார்த்தம். இதில்வேறு ஒருவர் கொச்சையான இரு அர்த்தத சொல்லவாகையை பாவித்து சொல்ல வந்த முக்கிய விடயத்தில் மூக்கு உடைபட்ட நிலை, வடகொரியாவின் யாப்பு தன்மை தெரியாது, அவரின் சொந்தம் வடகொரிய அரசாங்கத்தில் வேலை, அதன் வழியாக அறிந்ததாக. ஏன் நீங்கள் செய்வதை மற்றவர்கள் மீது சுமத்துகிறீர்கள்? நான் (அறிந்ததை) சொல்லியது 2-3 வரிகளில் எந்த மொழி, யாதார்த்தம் , மற்றும் விடயம் முரண்பாடு இல்லலாமல். சொன்ன பின்பும், விளக்கத்துக்கு முக்கியும், மொழி, விடய உள்ளடக்க முரண்பாடுகளே சொல்கிறது, தவிர்க்க முடியவில்லை, வெளிப்படையாக இருந்தும் புரியாமலே பதிந்தது. 1) அமைச்சரவை கூட்டம் எனபதை அரசியல் (கூட்டம்) என்று விடயம் தெரியாத பிறழ்வு அடிப்படை எடுகோளாக எடுத்து. (அல்லது கற்பனையா?). (அமைச்சரவை (சர்ச்சையான) உரையாட ல் எங்கும் பிற்காலத்தில் வாசிக்கப்பட முடியாது என்பதும் அறியாது, ஏனெனில் பதியப்படுவது இல்லை. அதனால் வாய்வழியாக கூட்டத்தில் இந்தவர்கள் வழியாக கேள்விப்பட்டால் ஒழிய வேறு வழியாக அறியப்பட முடியாது.) (இதனால் தான் UK முதன்மை பத்திரிகைகள், அமைச்சரவை (கூட்ட) கசமுசா போன்றவற்றை அனாமதேயம் என்பது. UK இல் இருந்து கொண்டு இந்த விளக்கம் சொல்லும் கால்வாசியிலும் விளக்கம் குறைந்த தன்மை ) 2) பின் மொழியில் அரைகுறையாக விளக்கம் என்பதை முன்னுக்கு பின் முரணாக சொல்லி 3) அதுவும் போதாது என்று கிரிபாத் என்றால் நம்பகூடியது எனறு முன்னுக்கு பின் முரணாக பின்னூட்டமும் கொடுத்து. (இதில் சிறிமா போன்றோரின் கிட்டத்தட்ட 2 வாழ்கை தெரியாமல் சொல்வது -கிரிபத் அவர்களுக்கு புனிதமான / தெய்வ கடாட்ஷம் / சிங்கள பௌத்த அரசியல் முக்கியதுத்துவம் உள்ள உணவு, குறிப்பாக பகிரங்கமாக அப்படி காட்டி கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு , ஒழுங்கான உணவு அல்ல) இவை எல்லாவற்றையும் விடுவோம் ஒன்றும் வேண்டாம் சாத்திய கூறுகள் என்ன? இல்லை என்பதே உங்களின் அரைகுறை மொழி, விடயம் புரிவு அடிப்படையில் முன்னுக்கு பின் முரணான பதில். (ஆம், நான் காண்பது எந்த வித சிந்தனை இல்லாத ஒப்புவிக்கும் பதில், ) வரலாற்றில் இது மன்னர் ஆட்சியில் சொன்னது என்ற காலத்திலே பாணே குடிகளுக்கு மிகவும் தள்ளி, கேக் உச்ச ஆடம்பரதுக்கு அப்பால், - அப்படியான நிலையில் தான் எந்த இளவரசியோ சொன்னது என்று. சிறிமா காலத்தில் (ஆட்சிக்கு வரும் போது) - பாண் சமூகத்தின் அன்றாட உணவு, கேக் பொதுவாக அவ்வப்போது, பெரிய முயற்சியுடன் எட்ட கூடிய தூரத்தில். சிறிமா வுக்கு , அவரின் பார்வையில், நாளாந்த வாழ்க்கையில் - கேக் ஒரு ஒழுங்கான உணவு, பாணை போல. ஆகவே, (சிறிமா) கேட்டு இருக்க கூடிய சாத்திய கூறுகள் இளவரசியை விட மிகவும் கூட. அந்த நேரத்தில் political correctness என்பதே என்ன என்று கேட்கும் காலம். சிறுமை பகிரங்கமாக சொல்லி இருந்தால் கூட அது புறம் தள்ளப்படும் காலம். அனால் கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் சிரிமாவுக்கு பா, கேக் இன் அருமை தன்மை, சராசரியாக மக்கள் பெறக்கூடிய நிலையை சொல்லி அந்த விடயத்தை மூடியதாக. அனால், சிங்கள பௌத்த அரசியலுக்கு எது சரி என்பதில் மிகவம் கவனம் ( ஏனெனில், அவர்களை பொறுத்வசரை , சிங்கள பௌத்த சமுகத்தை பொறுத்தவரைஅவர்கள் பௌத்தர்கள் இல்லை. கிறிஸ்தவத்தில் இருந்த்துமாறி , மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட பௌத்த பகிரங்க தோற்றம் / வாழ்க்கை. உள்ளே கிருஸ்தவ / மேற்கத்திய போக்கு வாழ்கை. இப்படியாக மாற விரும்பாத uk வந்த சிங்கள குடும்பங்கள் இருக்கிறது.) இதை புலம் பெயர் தமிழரிலும் காணலாம் - அங்கு வசதி குறைவான நிலையில் இருந்து, இங்கு வந்து நெடுங்காலம் இருந்த பின் - WASHING MACHINE, hoover (vacuum cleaner), microwave, வாசனை திரவிய பாவனை போன்றவை அங்குள்ளவர்களிடம் சராசரியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று எதிர்பார்பது. இது ஏனைய சமூகங்களிலும் இருக்கிறது. அதுவும் இந்த காலத்தில். தர்க அடிப்படையில் கூட (அதுக்கு நிதர்சனம் சமூக நடத்தை) நீங்கள் சொல்லுவது நில்லாது, எந்த அரைகுறை பிறழ்வை தவிர்த்தாலும். (அனால், இதை சொல்லும் போது இவை எல்லாவற்றையும் கருத்தில் எடுத்த அச்சொட்டாக பொருந்த கூடியவாறு கற்பனை கதை சொல்லி உள்ளேன் என்றால், எதிலும் நான் அரைகுறை இல்லை) முற்று முழுதாதாக தெரியாத விடயமும், அரைகுறை, முரண்பாடு மொழியம் எல்லாம் உங்களிடம்.
  24. மிசைல் கையிருப்பு தீரும் என பலரும் கருதிய நிலையில் டியாகோ கார்சியா நோக்கி இரு மிசைல்கள் பாய்ந்துள்ளன. இது ஐரோப்பாவின் பல நகர்களை வீச்சு எல்லைக்குள் கொண்டு வரும். தம்பர் இன்று சொல்வதை பார்த்தால் தரையிறக்கம் வராது போலவே படுகிறது. ஆனால் போரை இவர்கள் நிறுத்தினாலும், நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தும் எனில் - அதன் விலை அமெரிக்காவை அரபுநாடுகளில் இருந்து அகற்றுவது அல்லது குறைப்பதாக இருக்கலாம்.
  25. சிவாஜி வெற்றிவேல் ·ptedonroSs2 hs10l6à7:L27gga8gf1m41 g853e3c1r3c0 tt5mitf0m6 2 · நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1953 இல் யாழ்ப்பாணத்தில் .. மருத்துவ மனைக்கு நிதி உதவி. .. என்தங்கை நாடகம் .. :நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் ஒரு பாரம்பரிய தொடர்பு இருக்கிறது . சிவாஜியின் பராசக்தி கொழும்பு மைலன் தியேட்டரில் சுமார் 350 நாட்களுக்கும் மேலாக ஓடியது .இது பலரும் அறிந்தது .ஆனால் அவர் செய்த நிதி உதவி பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்க மாட்டாரகள். 30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, யாழ்ப்பாணம் மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார். உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். யாழ்ப்பாணம் மூளாய் மருத்துவமனை .. நடுவில் இருப்பவர் சிவாஜி கணேசன் சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார். சங்கர பிள்ளை . தகவல்கள் தந்த திரு ரவி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி . Voir la traduction......!
  26. · Suivre oteprSdonst32ac42ia5tsu9 :1ctLl802r10aà a3c4 u6e1cm206af1a l · பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். “அதோ பாருங்கள் குருதேவா... கிருஷ்ண பரமாத்மா வருகிறார்” என்று குதித்தான் மட்டி. “ஆமாம் குருவே.. கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்” என்றான் மடையன். பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்.. உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார். “சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர். “புதுத் துணிகளைக் கிழிப்பதா? ஏன் குருவே?” என்று கேட்டான், முட்டாள். “புத்தி கெட்டவனே.. ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி... அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்” என ஆணையிட்டார் பரமார்த்த குரு. சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்.. உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார். “பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா.. அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார் பரமார்த்தர். “குருவே.. நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு. “அதானே? நமக்கு வேட்டி அல்லவா தேவை” என்றான் மூடன். “கார்மேகக் கண்ணா.. இந்தா, பொரி உன் இஷ்டம் போல் கொரி..” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான் மட்டி. கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை.. எனக்கு நேரமாகிறது, என்னைப் போகவிடுங்கள்” என்றார். “கண்ண பெருமானே எங்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள். “கண்ணா.. அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு. “கோபாலா கோவிந்தா.. தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன். “பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர். “பொரி கொடுத்ததற்கு நன்றி.. நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர். “என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர். “வரமா?” அதென்ன?” “ஆமாம்.. குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்” என்றான். “எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள். “வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்” என்றான் மடையன். “சரி.. நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது..” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர். “ஆஹா.. பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா.. உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார். “அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம், அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்” என்றார் பரமார்த்தர். “குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்லாம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்.. அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது” என்றான் மட்டி. “எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன். போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு.. இதையே விலைக்கு வாங்கி விடலாம்” என்றான் மடையன். பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான். “இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன். “நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.. இது பல்லக்கே தான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன். சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன். பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர். சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள். ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது. திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது. அவ்வளவுதான்.. பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே” என அலறினார்கள். “அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்” என்றான் முட்டாள். “நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே” என்று துக்கப்பட்டான் மண்டு. அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே” எனத் திட்டினார். “குருநாதா..” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்.. அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள். பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்.. Voir la traduction.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.