Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இன்று (28 / 02/ 2026) UK நேர அதிகாலையில் காகுத்தல் தொடங்கி நடந்து கொண்டு இருக்கும் போதே பாய்ந்து தரவேற்ற (வேறு வேலையும் இருணஹட்டால்) மறந்த்து விட்டேன் (அதில் சொல்லியது அடுத்து வரும் 24 - 48 மணி நேரத்தில் தாக்குதல் தொடடங்கும் சத்திய கூறுகள் மிக அதிகம் என்று. அப்படி தொடங்கா விட்டால் பங்குனி 14- 15 அளவிலேயே தாக்குதல் நடப்பதற்கு அதிக சந்தர்ப்பம் என்று ) இரானின் மீது தாக்குதல் அணுத்துறையால் அல்ல. இரான் இறமை கொண்ட தனியரசாக இருப்பதை அழிப்பதற்கும், இப்பொது ஈரானின் நிலைப்புலத்தை 2-3 பொம்மை அரசுகளாக உடைப்பதற்கும். உண்மையில் இரானே அதன் சுதந்திரத்தை பாதுகாக்க, அதன் காலில் நின்னு போராடுகிறது. மேற்கின், அமெரிக்காவின், இஸ்ரேல் நீண்ட காலா எண்ணமும் திட்டமுமமான அகன்ற இஸ்ரேல் இப்பொது வெளியில் வந்து இருக்கிறடது, அமெரிக்காவின் இஸ்ரேல் தூதுவரால் 1) அகன்ற இஸ்ரேல் ஐ தாபிப்பது - இதில் இரானி முட்டுக்கட்டை. 2) இஸ்ரேல் எந்த நாட்டின் மீதும் விரும்பியவாறு, விரும்பிய வேளை தாக்க கூடிய நிலையில் இருப்பதும்,அப்பை தாக்கினால் மற்ற நாடுகள் ஹிரியூபி தாக்கும் திறன், வ\சாதிகள் அற்று இருப்பது. 3) இவ்வ்வளவு பொறுளார த்தார்கள் இருந்தும் இரான் விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில்முன்னேறி இருப்பது, அமெரிக்காவின் இராணுவ பலத்தின் சிறிய பிம்பமாக இருக்கும் இஸ்ரேல், 2025 இல் இரான் கொடுத்த அடியாலேயே சனை நிறுத்தத்தை முதலில் கேட்டது 4) சீனாவுக்கான என்னை, சக்தி விநியோகத்தை அமெரிக்கா / மேற்றுகின் கட்டுப்பாட்டில் கொன்டு வருவது. 5) BRICS மற்றும் BRI வழங்கல் பாதை மற்றும் அபிவிருத்தி திடத்தை குழப்புவது. அத்துடன் 6) அத்துடன் மத்தியகிழக்கை கட்டுப்படுத்த கூடிய அதிகார பீடத்துக்கு , உலக கட்டுப்படுத்துவக்கு மிகவும் எதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையும், அனுபவமும் 7) இதுக்கு எல்லாம் இரானில் பொம்மை ஆட்சியில் இருக்க வேண்டும் முன்பு சொல்லி இருந்தேன் சீன, ரசிய அமெரிக்கா உள்நுழைந்து சிக்கிய பின்பே, ஈரானுக்கு பின்புலத்தில் நேரடியாக இறங்காத எல்லாவற்றையும் செய்யும். அதில் முக்கியமாக அவரின் நம்பிக்கை, ஒவ்வொரு நாடும் அவற்றின் பலத்தில் நிற்கவேண்டும். (உள்ளே இறங்குவது என்பது இறங்குவது தரைப்படை அல்ல. பதிலுக்கு பதில் தாக்குதலில் இருந்து மெரிக்கா விலத்த முடியாத நிலை ) 40 வருடங்களுக்கு மேல் பொருளாதார தடைக்குள் இருக்கும் இரான் , அமெரிக்காவின் வெற்று வேட்டு வாய்சவாலத்தை (bluff) வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. ராஜதந்திரத்தில். அமெரிக்கா / மேற்கை இரான் பச்சடி போடு உள்ளது. ஆனால், மறுவளமாக, எந்த விதமாக பாத்தாலும் , அமெரிக்கா / மேற்கு பொறியின் விளிம்பில், ஒரு கால் பொறிக்குள் சரிந்து நிற்கிறது. (அமெரிக்காவிடம் எஞ்சி இருப்பது பூரணம் இல்லாத இராணுவ பலம், அதை கூட ஈரான் சமாளிக்கும், சாமாளிப்போம் என்ற நம்பிக்கை, போய் வேறு எவரிடமும் ஒழிய விரும்பாத தன்னம்பிக்கை) எந்தா விதமாக பார்த்தாலும், அமெரிக்கா தாக்கினாலும், யுத்தத்தை வென்று விட்டே இரான் சண்டையை ஆரம்பிக்கும், சீன இராணுவ கேந்திர தளபதி / சிந்தனையாளர் Sun Tzu வகுத்தது போல. ஆனாலும். அமெரிக்கா தாக்கும் வ்வாய்ப்புகளே அதிகம் கரணம், இங்கே சொல்லப்படும் டிரம்ப் இன் அந்தரங்க எஸ்பெட்டின் படங்கள் (அபய் இருந்தால்), இஸ்ரேல் இடம் இருக்கும் வாய்ப்புகளே அதிகம். புடின் கூட டிரம்ப் இவ்வளவுக்கு இரங்கி போகவில்லை. இங்கே சிலர் சொலவது போல, எவர் முல்லா(ட்டா)கள்? அமெரிக்கா. மேட்ற்கு வாலுகள் எதை செய்ய சாத்திய கூறுகள் இருக்கிறது என்பதை சொல்லும் பேட்டி. ( இருந்து கொல்லும் துரோகமே. வெனிசுலாவிக்காவிலும் நாந்ததுஅதுவே) யதார்த்தை சொல்லும் பேட்டி.
  3. Today
  4. 2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி! இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஜனவரியில் 437.07 மில்லியனாக இருந்த நிலையில், 2026 ஜனவரியில் 2.66 சதவீதம் சரிந்து 425.44 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக ஒரு தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இது நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரதிபலிக்கிறது. அதன்படி, ஜனவரி செயல்திறன் சீரற்ற உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதுடன், பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகிறது என்று கூட்டு ஆடை சங்க மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி 2.73 சதவீதம் குறைந்து 165.11 மில்லியன் டொலர்களாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி (இங்கிலாந்து தவிர்த்து) 1.93 சதவீதம் குறைந்து 126.99 மில்லியன் டொலர்களாக உள்ளது. இங்கிலாந்துக்கான ஏற்றுமதி நிலையாக இருந்தது, 0.23 சதவீதம் அதிகரித்து 61.71 மில்லியன் டொலர்களாக இருந்தது. அதே நேரத்தில் ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 6.07 சதவீதம் குறைந்து 71.63 மில்லியன் டொலர்களாக இருந்தது என்று JAAF தெரிவித்துள்ளது. ஜனவரி மாத முடிவுகள் சீரற்ற உலகளாவிய தேவையைக் குறிக்கின்றன என்றும், நாட்டின் ஆடைத்துறையின் பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் JAAF கூறியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஓரளவு வளர்ச்சி, 2026 ஜனவரி 1, முதல் அமுலுக்கு வந்த திருத்தப்பட்ட வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ் வர்த்தக சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகிறது. இந்த மாற்றங்கள் மூலத் தேவைகளுக்கான விதிகளைத் தளர்த்தியுள்ளன, இப்போது இலங்கை உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகளவில் மூலப்பொருட்களை வாங்கும்போது கூட, வரியின்றி ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. மேலதிகமாக, சீரான 10% தற்காலிக அமெரிக்க வரியை அறிமுகப்படுத்துவது, முன்னர் இருந்த அதிக நாடு சார்ந்த விகிதங்களை மாற்றியுள்ளது மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக குறுகிய கால விலை நிர்ணய உறுதிப்பாட்டை வழங்குகிறது என்றும் JAAF தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1466585
  5. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக வான்வழித் தாக்குதல் சைரன்களை ஒலித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் முழுவதும் அரசு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னர் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையத்தில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து அடர்ந்த புகை எழுந்தது. ஈரானிய அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை ஒப்புக்கொண்டது, எனினும் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஏற்கனவே அதிகமாக இருந்த ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள், கடந்த ஆண்டு இறுதியில் நாடு தழுவிய போராட்டங்களை ஈரான் ஒடுக்கத் தொடங்கியதிலிருந்து அதிகரித்து வருகின்றன. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார், ஆனால் அந்த நாடு அதை மறுத்துள்ளது. மாறாக அமைதியான நோக்கங்களுக்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாக வலியுறுத்துகிறது. அமெரிக்கா பல வாரங்களாக இப்பகுதியில் ஏராளமான விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் அச்சுறுத்தல் அதிகரித்ததால், இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியது. ஈரானும் அமெரிக்காவும் இந்த வாரம் ஜெனீவாவில் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல மணி நேரம் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தின, ஆனால் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466607
  6. அனேகமாக…. இரண்டு, மூன்று நாட்களுக்குள் சண்டை தொடங்கும் போலுள்ளது. யார்… நல்லாய் அடிக்கிறான் என்று, “பொப்கோர்ன்” சாப்பிட்டுக்கொண்டு பார்ப்போம்.
  7. பிரான்ஸ் பாண் தயாரிப்பில்… முதலிடம் பெற்ற ஜெகதீபனுக்கு வாழ்த்துக்கள். முன்பும் ஒரு தமிழர் பாண் தயாரிப்பில் முதல் இடம் பெற்று இருந்தவர். தமிழர்கள் வெளிநாடுகளில்… சிறந்த பாண்களை தயாரித்து பரிசு வாங்க…. உள்ளூரில் நமக்கு சிங்களவன் பேக்கரி நடத்தி பாண் விற்கிறான். இதே… திறமையை, ஊரில் உள்ள தமிழர்களால் ஏன், செய்ய முடியாது உள்ளது. அங்கு பேக்கரி நடத்தினால்…. சனம் “புறணி” கதைக்கும் என்ற பயத்தில், பலரும் பாண் தயாரிக்க பஞ்சிப் படுகிறார்கள் போலுள்ளது.
  8. ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம் Published By: Vishnu 28 Feb, 2026 | 05:27 AM ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் குடிமக்களை பிராந்தியத்திலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளன. ஈரானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரிட்டன் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசரகாலம் அல்லாத பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சீனா, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பாதுகாப்பு காரணங்களால் ஈரானில் வசிக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு அறிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம்
  9. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் Feb 27, 2026 - 10:19 PM இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தில், புனித அந்தோனியாரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கலந்துகொண்டு, திருவிழாக் கொடியினை ஏற்றிவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு விசேட கூட்டுப் பிரார்த்தனைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடல் கடந்த பக்தர்களை ஒன்றிணைக்கும் இந்தத் திருவிழா, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவின் அடையாளமாக இன்றும் போற்றப்படுகிறது. -யாழ். நிருபர் பிரதீபன்- கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
  10. ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ‘மகிழ்ச்சி அளிக்கவில்லை’ – ட்ரம்ப் கருத்து February 28, 2026 ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். “நாங்கள் பெற வேண்டியதை அவர்கள் எங்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனவே எனக்கு இதில் ஆர்வமும் இல்லை,” என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஒப்பந்தம் ஏதுமின்றி முறிந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் குறித்த தனது கருத்தை டிரம்ப் கூறினார். ஈரானுக்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்த தான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார், ஆனால் “சில சமயங்களில் நான் அதைச் செய்ய வேண்டிய நிலை வரும்” என்று கூறினார். ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்த கவலை, வெள்ளிக்கிழமை அன்று பல நாடுகள் இப்பகுதியில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கைகளை வழங்க வழிவகுத்தது. பிரிட்டன் தற்காலிகமாக தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து பணியாளர்களைத் திரும்பப் பெற்றது மற்றும் இஸ்ரேலுக்கு “அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்தையும்” தவிர்க்குமாறு பயண வழிகாட்டுதலை வெளியிட்டது. சீனா, இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள், நிலைமை மோசமடையக்கூடும் என்பதால் தங்கள் குடிமக்களை ஈரானை விட்டு விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தின. ஜெர்மனி இஸ்ரேலுக்கான பயணத்திற்கு எதிரான அறிவுறுத்தல்களை அவசரமாக வழங்கியது. இதற்கிடையில், ஈரானில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகமும், அதன் அவசரகால பணியாளர்கள் தவிர்த்து சில பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறியது. இரான் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். www.ilakku.orgஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை 'மகிழ்ச்சி அளிக்கவில்லை' -...ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப்
  11. சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் Feb 27, 2026 - 11:08 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் சலே கடந்த புதன்கிழமை (25) முற்பகல் பேலியகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
  12. பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை 28 Feb, 2026 | 10:03 AM பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்பிள்ளை ஜெகதீபன், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்ற அவர், 142 போட்டியாளர்கள் மத்தியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். பாரிஸ் துணை மேயர் நிக்கோலஸ் பொன்னட் ஓலால்ட்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 143 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14th arrondissement), 103 ரூ டிடோ (103 Rue Didot) என்ற முகவரியில் அமைந்துள்ள இவரது 'ஃபூர்னில் டிடோ' (Fournil Didot) பேக்கரிக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக அவருக்கு €4,000 (சுமார் 13 இலட்சம் இலங்கை ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன், அடுத்த ஓராண்டிற்கு பிரான்ஸ் ஜனாதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனைக்கு (Élysée Palace) பேக்கட் ரொட்டிகளை வழங்கும் கௌரவமான ஒப்பந்தமும் அவருக்கு கிடைத்துள்ளது. வெற்றிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜெகதீபனின் கடைக்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கடின உழைப்பு, பாரிஸின் பாரம்பரிய அடையாளத்தில் ஒரு காவியமாக மாறியுள்ளதாகப் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு முன்னதாக, 2023-ஆம் ஆண்டில், இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இந்தப் புகழ்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கைத் தமிழர் என்ற வரலாற்றைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸின் சிறந்த பேக்கர் 2026
  13. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா Feb 28, 2026 - 08:01 AM கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவில் இன்று (28) நடைபெறுகிறது. இந்தத் திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் ஒன்றிணைவுடன் நடத்தப்படுகிறது. புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு பொதுவாக 3500-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கச்சத்தீவுக்கு வருகை தருகின்றனர். இக்கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்தினாதன் கலந்துகொண்டதுடன், அவராலேயே திருவிழாக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து யாழ் ஆயர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்களிப்புடன் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்காக சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறிய தீவான கச்சத்தீவு, இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து வெகு தொலைவிலும் இந்தியாவுக்கு மிக அருகிலும் அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் உரிமையை முன்னிறுத்தி கடந்த காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் ரீதியான முரண்பாடுகள் கூட ஏற்பட்டிருந்தன. எவ்வாறாயினும், 1974 ஆம் ஆண்டில் இரு நாட்டு மீனவர்களும் அதனைப் பயன்படுத்துவது தொடர்பான நிபந்தனைகளுடன் கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது. இவ்வாறான பின்னணியிலும் கூட, வருடாந்தம் இரண்டு நாட்கள் அத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களின் பங்களிப்புடன் கொண்டாடப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmm5pffg20006356pewqn4cwu
  14. பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு - என்ன செய்ய வேண்டும். இலங்கையை 64 ஓட்டங்களால் வெல்ல வேண்டும், அல்லது 13.1 பந்துப் பரிமாற்றங்களில் துரத்திப் பிடிக்க வேண்டும். எனக்கென்றால், இது நடக்கும் போல் தெரியவில்லை.
  15. பெரும்பாலும் அரை இறுதி போட்டி முடிவில் நான் பின்னுக்கு போவேன். பின்னுக்கு போவதற்கு,அவுஸ்திரேலியா பாகிஸ்தானில் படுதோல்வி அடைந்தது தெரிந்தும் தென்னாபிரிக்காவை தெரிவு செய்யாமல் அவுஸ்திரேலியாவை தெரிவு செய்ததும், இங்கிலாந்திடம் 3-0 க்கு என்ற கணக்கில் இலங்கை தோல்வி அடைந்தது என்பது தெரிந்தும் இலங்கை நியூசிலாந்து போட்டியில் இலங்கையை தெரிவு செய்ததும் முக்கிய காரணங்கள்
  16. இளம் காதலியால் சரிந்த பேரரசு லத்தீன் அமெரிக்கப் பிராந்தியம் உலகின் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் முக்கிய மையமாக உள்ளது என்பது ரகசியமல்ல. உலகின் பெரும்பாலான கொக்கைன் உற்பத்தி கொலம்பியா, பெரு மற்றும் பொலிவியாவை மையமாகக் கொண்டு நடக்கிறது. மெக்சிகோவை மையமாகக் கொண்டு ஹெரோயின் மற்றும் செயற்கைப் போதைப்பொருட்களான 'ஐஸ்' (Ice) மற்றும் ஃபெண்டானில் உற்பத்தி அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வன்முறை கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றன. இவை 'கார்டெல்' (Cartel) என்று அழைக்கப்படுகின்றன. மெக்சிகோவில் இத்தகைய கும்பல்கள் சட்டத்திற்கு அஞ்சுவதில்லை. பொலிஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்களைப் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் அவர்கள் கொன்று குவிக்கின்றனர். கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் ஆள் கடத்தல் ஆகியவற்றிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். சில நகரங்கள் மட்டுமல்ல, முழு மாகாணங்களே இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மெக்சிகோவில் 'சினலோவா கார்டெல்' மற்றும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) ஆகிய இரண்டு முக்கிய கும்பல்கள் உள்ளன. மெக்சிகோவில் பரவிய பீதி கடந்த சில நாட்களாக மெக்சிகோ போர்க்களமாக மாறியுள்ளது. பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல மாகாணங்களில் பயங்கரவாதம் பரவியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது, இந்தியாவும் மெக்சிகோவில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியது. இதற்குக் காரணம், ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் அமைப்பின் ஆயுதமேந்திய தலைவர் நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் அல்லது 'எல் மென்ச்சோ'வை மெக்சிகோ இராணுவம் சுட்டுக் கொன்றதாகும். பல தசாப்தங்களாகச் சட்டத்திலிருந்து தப்பித் தலைமறைவாக இருந்து, கொடூரமான குற்றங்களைச் செய்து வந்த 'எல் மென்ச்சோ' இறுதியில் ஒரு பெண்ணால் சிக்கினான். யார் இந்த இளம்பெண்? ஜாலிஸ்கோ மலைப்பகுதியில் மறைந்திருந்த 'எல் மென்ச்சோ'வைத் தேடும் பணியில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருந்தன. அவன் இருக்கும் இடத்தை அறிய அவனது நெருக்கமானவர்களைப் புலனாய்வுத் துறையினர் கண்காணித்தனர். அப்போதுதான் அவனது இளம் காதலி குறித்த விபரங்கள் கிடைத்தன. அரசாங்கம் அந்தப் பெண்ணின் பெயரைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றாலும், ஊடகத் தகவல்களின்படி அவர் மரியா ஜூலிசா (Maria Julissa) எனத் தெரியவந்துள்ளது. 25 வயதான இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு மாடல் அழகி. அவருக்கு 35 இலட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். கடந்த வார இறுதியில் அவர் 'எல் மென்ச்சோ'வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மூலமாகவே 'எல் மென்ச்சோ' இருக்கும் இடத்தை இராணுவம் துல்லியமாகக் கண்டறிந்தது. தற்போது ஜூலிசாவுக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன. தனக்கும் 'எல் மென்ச்சோ'வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் மறுத்தாலும், அவர் மூலமே இரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இறுதி வேட்டை பிப்ரவரி 22-ஆம் தேதி, மெக்சிகோ இராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி 'எல் மென்ச்சோ' மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டது. கார்டெல் உறுப்பினர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 22 பாதுகாப்புப் படை வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட கும்பல் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். சண்டையின்போது பலத்த காயமடைந்த 'எல் மென்ச்சோ', மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். அவனது மரணச் செய்தி கேட்டதும் அவனது கும்பல் ஆவேசமடைந்து நகரங்களில் வன்முறையில் ஈடுபட்டது. மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அடுத்த தலைவர் யார்? 'எல் மென்ச்சோ'வின் மரணத்திற்குப் பிறகு அந்த கும்பலுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவனது மகள் ஜெசிகா ஜோனா ஒசெகுவேரா (குற்ற உலகின் ராணி என அழைக்கப்படுபவர்) அடுத்த தலைவராக வரக்கூடும் எனப் பேசப்படுகிறது. அதே நேரத்தில், எதிரி கும்பலான 'சினலோவா கார்டெல்' இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இடங்களைக் கைப்பற்ற முயல்கிறது. யார் இந்த எல் மென்ச்சோ? 1966-இல் பிறந்த இவன், சிறுவயதில் வறுமை காரணமாக போதைப்பொருள் தோட்டங்களில் வேலை செய்தான். ஒரு காலத்தில் மெக்சிகோவில் பொலிஸ் அதிகாரியாகவும் பணியாற்றினான். பின்னர் போதைப்பொருள் உலகிற்குள் நுழைந்து தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அவனது தலைக்கு அமெரிக்கா 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இளம்-காதலியால்-சரிந்த-பேரரசு/50-373063
  17. 30 வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்தபோது எவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வார்கள் என நான் நினைத்ததுண்டு. திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நாயகர்களின் ஓழுக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை.
  18. தஞ்சை பெரிய கோயில் - தத்ரூபமான யானை போர்கள காட்சி (கிராபிக்ஸ் உதவியுடன்)
  19. யாரெல்லாம் இந்த மாதிரி படகு உந்துருளியில் பயண அனுபவம் உள்ளவர்கள் ரெல் மீ..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.