Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. எங்களுக்கு சாத்திரம், ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் பிள்ளைகளின், சொந்தக்காரரின் சாதகத்தை ஊர் ஊராய் அனுப்புவம். வரன் தேட!
  3. Bharath Reddy (1978-1979), Hemang Badani (2001-2004), Lakshmipathy Balaji (2003-2005), Thangarasu Natarajan (2021), Washington Sundar (from 2020) இதில்Hemang Badani இன் பெற்றோர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால் Hemang Badani பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்!
  4. Today
  5. முன்பு சோதிடம் பற்றி ஒரு திரியில் விவாதித்துள்ளோம். கள விதிகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: சாத்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை ஊட்டும் பதிவுகளை யாழ் ஊக்குவிக்கவில்லை, அவை நீக்கப்படும்.
  6. இது ஒரு தனிநபர் மீதான வெறுப்பு தாக்குதல், இதற்கு எந்த நொண்டிச்சாட்டுகளாலும் நியாயப்படுத்த முடியாத செயல். இதற்காக நீங்கள் பெருமைப்படுபவராக இருந்தால் உங்களுக்காக வருந்துகிறேன்.
  7. இலங்கை அணி இருந்த குழுதான் மிகவும் பலவீனமான அணிகள் கொண்ட குழு, அதிர்ஸ்டவசமாக மோசமான அவுஸ்ரேலியாவும் அந்த குழுவில் இருந்து விட சிம்ப்பாவே இலங்கை அணிகள் அவுஸ்ரேலியாவினை வீழ்த்தி வென்றுவிட; இரசிகர்கள் மனதில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட அளவீடு உருவாகிவிட்டது. இதனை Anchoring bias என்பார்கள், சாம்பியன் அணி அவுஸ்ரேலியாவினை வீழ்த்தியமையால் இலங்கை அணியினையும் சிம்ப்பாவேயினையும் சாம்பியனாக இரசிகர்கள் பார்க்க தொடங்கினார்கள். ஒரு அணியினை வெறும் பெயரிற்காக இன்னொரு அணியுடன் ஒப்பீடு செய்யும் போது தவறான புரிதல்கள் ஏற்படுகின்றது, இறுதியில் சுப்பர் 8 போட்டிகள் அனைத்திலும் இலங்கை அணி தோற்கும் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத இரசிகர்கள் இவ்வாறான சாக்கு போக்குகளிற்கு வருகிறார்கள். ஒரு அணி நாட்டிற்கு வெற்றி தேடி பெருமை ஏற்படுத்தாத நிலையில், எதற்காக நாட்டின் பொருளாதாரத்தினை பற்றி யோசிக்கவேண்டும்? குறைந்த பட்சம் ஒரு நாகரிகமான தோல்வியின் மூலம் தமது பெயர்களையாவது காப்பாற்றவே விரும்புவார்கள் (அது அவர்களின் வேலையும் இல்லை), அதுவே நடந்தது. ஆனால் இது ஒரு மனவழுத்தம், சோர்வு, துக்கம், கோபம் என பல உளவியல் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும், இரசிகர்கள் தமக்குள் சண்டையிடுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற மற்றவர்களையும் பாதிக்கும் செயல்களிலிலும் ஈடுபடுவார்கள். விளையாட்டு மனதிற்கு ஒரு உற்சாக உணர்ச்சியினை கொடுப்பதற்கு பதிலாக எதிர்பாராத பக்கவிளைவுகளையும் சிலரில் ஏற்படுத்திவிடுகிறது, மனம் ஒரு விந்தையானது.
  8. இந்தியா அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
  9. எனக்குள்ளும் ஒரு அன்னியனா?????????? சாம்பியன் அணிகள் மோசமாக தொடங்கினாலும் போட்டியின் போக்கில் (தொடர்ந்து விளையாட) அவர்கள் மெருகேறுவார்கள், ஆனால் இந்தியணி நொக்கவுட் போட்டிகளில் சொதப்புகின்ற அணி (இந்தியர்கள் பயப்படும் அணி நியுசிலாந்து🤣).
  10. இவை இனவாதம் (racism) /இனவெறி ( race hatred) அல்ல. இவை கறுவியத்தீர்வு ( settling a grudge) ஆகும். ஐயனே, என்று தென் தமிழீழத்தில் முஸ்லீம் ஊர்காவல்படையும் காடையரும் செய்தவற்றை அறிந்தனோ அன்று தொடக்கம் இப்படித்தான் ... அதான் இந்த வடிவமைப்பில் இருக்கிறேன்: வாய்ப்பின் போது சோனகரை வெளுத்தல்😁 மற்றது, வட தமிழீழத்தவர் தென் தமிழீழ சோகமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்தாலும் (தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற இழி கொள்கையுடையோர்/ பிரதேசவாதிகள்) ஒற்றுமை வேண்டும் என்று கூறி இவற்றை மறைத்திடுவர்... இவரே சிங்களக் காடையரும் ஊர்காவல்படையினரும் வட தமிழீழத்தில் செய்தவற்றை கூறி ஒப்பாரி வைப்பர். கிஞ்சித்தும் தென் தமிழீழ படுகொலை பற்றி வாய் திறார். வாய் திறந்தால் - படுகொலைகளில் முஸ்லீம்கள் பங்காற்றியிருந்தாலும் / செய்திருந்தாலும் - சிங்களப்படை என்று செய்தியிடுவர்! ஏன் இந்தப் பாகுபாடு...? முஸ்லீம் என்டு போட வேண்டியது தானே?
  11. புதிய துணைவேந்தர் வேல்நம்பிக்கு வாழ்த்துக்கள்! இப்போதைய துணைவேந்தருக்கு வடமராட்சி ஆட்கள் என்றால்தான் மண்டைகாய்கள் என்று ஒரு பிடிப்பு உள்ளதாம். புதியவரும் எப்படியோ.
  12. லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் Published By: VISHNU 02 MAR, 2026 | 08:50 AM "லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரால் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை வீசியதாகக் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா குறித்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய போர் விமானங்கள் உடனடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலக்குகள் மீது தொடர்ச்சியான கடுமையான குண்டுவீச்சுகளைத் தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239935
  13. கொழும்பு போர்ட் சிட்டி கடலில் வல்வெட்டித்துறை இளைஞரின் சடலம் திங்கள், 02 மார்ச் 2026 07:45 AM கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் https://jaffnazone.com/news/55313
  14. வாழும் முறையால் வழிகாட்டிய தோழர் நல்லகண்ணு March 1, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — சென்னையில் கடந்த புதன்கிழமை தனது 101 வயதில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செய்து ‘தினமணி’ பத்திரிகை மறுநாள் எழுதிய ஆசிரிய தலையங்கத்துக்கு ‘இனி யாருண்டு இது போல…’ என்று தலைப்பிட்டிருந்தது. அவரின் மறைவுக்கு பிறகு பொதுவாழ்வில் நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் எடுத்துக்காட்டாக உலகில் உயிருடன் இருக்கும் எவரையாவது காட்டமுடியும் என்பது சந்தேகமே. நல்லகண்ணுவின் மறைவு தமிழ்நாட்டு அரசியலில் தனிப்பட்ட அர்ப்பணிப்பு, கொள்கைப்பற்று மற்றும் சமூகநீதி மீதான நீடித்த பற்றுறுதி ஆகியவற்றினால் வரையறை செய்யப்பட்ட பொதுவாழ்வைக் கொண்ட — தனித்துவமான அடையாளச் சின்னங்களாக விளங்கிய ஒரு தலைமுறைத் தலைவர்களினால் வடிவமைக்கப்பட்ட ஒரு யுகத்தின் முடிவைக் குறித்து நிற்கிறது. நல்லகண்ணு தமிழ்நாட்டில் தனது மார்க்சிய சமகாலத்தவரும் தோழருமான என். சங்கரையாவுக்கு பிறகு நூறு வருட வாழ்க்கையையும் பல தசாப்தகால அரசியல் வாழ்வையும் கொண்ட இரண்டாவது முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவராவார். சங்கரையா அவரது 101 வயதில் 2023 ஆம் ஆண்டு காலமானார். நல்லகண்ணுவின் எளிமை, நேர்மை மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கை தார்மீக வெற்றிடத்தைக் கொண்டதாக விளங்கும் நவீன அரசியல் பரப்பில் முற்றிலும் மாறுபட்டதாக விளங்கியது. பகட்டாரவாரமும் பணமும் அதிகார வேட்கையும் ஆக்கிரமித்து நிற்கும் ஒரு யுகத்தில் அவர் அரசியலில் எளிமை, ஔிவுமறைவற்ற தன்மை மற்றும் நேர்மையான அணுகுமுறையை நியாயப்படுத்திக் குரல்கொடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் நல்லகண்ணுவின் வாழ்வும் சமாந்தரமானவை. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நல்லகண்ணு பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தொண்டர்களினால் ‘தோழர் ஆர்.என்.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட நல்லகண்ணுவின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவாகவும் அமைந்தமை அவரின் வாழ்வும் கம்யூனிஸ்ட் இயக்கமும் இணை பிரிக்கமுடியாதவை என்பதை காட்டியது. பெரும்பாலும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் அனைவரையும் போன்று நல்லகண்ணுவின் அரசியல் வாழ்வும் சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் இயக்கத்திலும் தான் ஆரம்பித்தன. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பமும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் பண்பும் நல்லகண்ணுவிடம் வளரத் தொடங்கியது. அநீதிகளுக்கு எதிராகப் போராடும் இயல்புணர்ச்சி கொண்டவரான நல்லகண்ணுவினால் காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட நாட்கள் பயணம் செய்ய முடியவில்லை. தூத்துக்குடியில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட அவர், தனது பள்ளி ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலில் 1943 ஆம் ஆண்டில் தனது 19 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். தோழர் ஜீவாவின் உரைகளும் தொ.மு. சிதம்பர ரகுநாதனின் நட்பும் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில் ஜீவாவின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாழிதளான ‘ஜனசக்தி’ யில் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமும் நல்லகண்ணுவுக்கு இருந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், நேர்த்தியான பேச்சாளர். மக்களை உணர்ச்சிவசத்துக்கு உள்ளாக்காமல் முதிர்ச்சியை நோக்கி நகர்த்தும் வகையில் தான் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும். தொடக்க காலத்தில் மார்க்ஸ், லெனின் போன்ற கம்யூனிஸ்ட் பிதாமகர்களின் நூல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ஜவஹர்லால் நேருவின் நூல்களின் மூலமாகவே கம்யூனிஸட் இயக்கம் பற்றி அறிந்து கொண்டதாகவும் நல்லகண்ணு கூறியிருக்கிறார். அதே நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியை 1948 ஆம் ஆண்டில் தடை செய்தபோது நல்லகண்ணு தலைமறைவாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்த வேளையிலும் அவர் தலைமறைவாக இயங்கினார். தலைமறைவாக இருந்த வேளையில் கைது செய்ப்பட்ட நல்லகண்ணு பொலிசாரின் கொடூரமான சித்திரவதைக்கு ஆளானார். மற்றைய கம்யூனிஸ்ட் தோழர்கள் மறைந்திருந்த இடங்களை காட்டித் தருமாறு கேட்டு சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரி நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசையைச் சிகரெட்டினால் சுட்டுப் பொசுக்கியதனால் அன்று தொடக்கம் மீசைவைக்கும் வழக்கத்தை அவர் கைவிட்டுவிட்டார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக வந்தார்கள். அப்போது இந்தியா பூராவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட சதி வழக்குகளை இரத்துச் செய்யக்கோரிய போராட்டங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமடைந்தன. வேறு வழியின்றி பெரும்பாலான சதி வழக்குகளை காங்கிரஸ் அரசாங்கம் மீளப்பெற்றது. அதன் விளைவாக நெல்லை சதிவழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நல்லகண்ணு மற்றும் பாலதண்டாயுதம் உட்பட. கம்யூனிஸ்டுகள் பலர் விடுதலையாகினர். ஆனால், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கும் நல்லகண்ணு மீது இருந்ததால் அவர் மேலும் ஐந்து வருடங்கள் சிறையில் தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது. ஏழு வருடங்கள் சிறைவாழ்வுக்கு பின்னர் 1956 டிசம்பரில் மதுரை சிறையில் இருந்து விடுதலையான நல்லகண்ணு முன்னரை விடவும் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஒருவரின் மகளானா பள்ளி ஆசிரியர் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சாதிக்கலப்பு திருமணமாகும். இந்திய — சீனப்போர் மற்றும் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையிலான தத்துவார்த்தப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964 ஆம் ஆண்டில் பிளவுபட்டபோது பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தவர்களுடன் நல்லகண்ணு செல்லவில்லை. 1992 ஆம் ஆண்டில் இருந்து. மூன்று பதவிக் காலங்களுக்கு மொத்தமாக 13 வருடங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக நல்லகண்ணு பணியாற்றினார். அறுபது வருடங்களுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகள் இனிமேலும் பொருத்தமற்றவை என்று நம்பிய நல்லகண்ணு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைப்பதற்கு கடுமமையாகப் பாடுபட்டார்.ஆனால், அவரின் வாழ்நாளில் அது சாத்தியமாகவில்லை. சிக்கனத்துடன் கூட சீராக வாழமுடியும் என்று நிரூபித்துக் காட்டிய நல்லகண்ணு சமூகத்தின் நலன்களுக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் தான் முன்னுரிமை அளித்தார். தனது அரசியல் நடவடிக்கைகளினால் மனைவிக்கும் மகள்மாருக்கும் நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதற்காக குடும்பத்தில் இருந்து அவர் விலகியிருந்த நாட்களும் உண்டு. தனது கோட்பாட்டின் மீது வலிமையான பற்றுறுதி கொண்டவரான நல்லகண்ணு மிகவும் எளிமையான மனிதர். மென்மையான சுபாவம் கொண்டவர். அதிகாரத்துக்கும் சொத்துக்கும் அவர் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. தமிழ்நாடு அரசாங்கம் நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டில் ‘தகைசால் தமிழர் ‘ விருதை வழங்கிக் கௌரவித்த போது 15 இலட்சம் ரூபா பணப்பரிசும் கொடுக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கினாரே தவிர, வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் நல்லகண்ணுவுக்கு ஒரு கோடி ரூபாவையும் கார் ஒன்றையும் பரிசாக வழங்கிய போது அவற்றை அவர் கட்சிக்கே நன்கொடையாக வழங்கிவிட்டார். சென்னையில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட அளவான வீடு ஒன்றுக்கு 5,700. ரூபா வாடகை செலுத்தி வாழ்ந்துவந்த நல்லகண்ணுவின் குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு வழங்கிய 2,500 ரூபா சம்பளத்திலும் மனைவியின் 4,500 ரூபா ஓய்வூதியத்திலும் வாழ்க்கையை நடத்தியது. சிக்கனத்தை ஆதாரமாகக் கொண்ட கோட்பாடு ஒன்று இல்லாமல் சமூக மாற்றம் இடம்பெற முடியாது என்பதில் அவர் உறதியான நம்பிக்கை கொண்டவர். சமரசமற்ற நேர்மைக்கு பிரகாசமான உதாரணமாக அவர் விளங்கினார். சென்னை தியாகராஜ நகரில் நல்லகண்ணு வாடகைக்கு வசித்துவந்த வீட்டின் கட்டிடத் தொகுதியை இடித்து புதிதாக நிர்மாணம் செய்வதற்காக அங்கிருந்து வெளியேறுமாறு 2019 மே மாதம் மாநில அரசாங்கம் அவரைக் கேட்டுக் கொண்டது. அப்போது மனைவியை மூன்று வருடங்களுக்கு முன்னர் இழந்த அவர் அமைதியாக அங்கிருந்து வெளியேறி சென்னையில் வேறு பகுதியில் வாழ்ந்த ஒரு மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும் கடுமையான கண்டங்கள் கிளம்பின. அது குறித்து செய்தியாளர்கள் நல்லகண்ணுவிடம் கேட்டபோது வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது வேதனைக்குரியது என்ற போதிலும், இன்னொரு வீட்டை தனக்கு அரசாங்கம் ஒதுக்கித் தராததால் பிரச்சினை எதுவுமில்லை என்று பதிலளித்தார். ஆனால், தன்னைப் போன்று வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட காலஞ்சென்ற காங்கிரஸ் அமைச்சர் பி. கக்கனின் குடும்பத்தவர்களுக்கு மாற்று வீடு ஒன்றை வழங்குமாறு நல்லகண்ணு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். பொதுவாழ்வில் சுயநலமின்றி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அந்த விவகாரத்தை அவர் கையாண்ட முறை ஒரு சிறந்த உதாரணம். ஆனால், இத்தகைய அர்ப்பணிப்புச் சிந்தையுடைய — வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களின் நலன்களுக்காக பாடுபட்ட நல்லகண்ணுவை தமிழ்நாட்டு மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்துக்கோ அல்லது மாநில சட்டசபைக்கோ ஒருபோதும் தெரிவு செய்யவில்லை. அவரது உடலை குடும்பத்தினர் மருத்துவ ஆராய்ச்சிக்காக கையளித்தனர். உயிரோடிருந்தபோது மக்களுக்கு ஒரு பாடமாக விளங்கிய நல்லகண்ணு இறந்த பின்னரும் மருத்துவ மாணவர்களுக்கு பாடமாக அமையப் போகிறார். மகாத்மா காந்தி இறந்த போது அல்பேர்ட் அயன்ஸ்டீன் “எலும்புடனும் சதையுடனும் இவ்வாறு ஒரு உருவம் உலகில் நடமாடியது என்று சொன்னால் எதிர்காலச் சந்ததிகள் நம்ப மறுக்கும்” என்று சொன்னார். நல்லகண்ணு விடயத்திலும் அதுவே உண்மை. https://arangamnews.com/?p=12708
  15. ரிஸ்க் எடு கொண்டாடு - நிலாந்தன் கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வழமையாக சமூகவலைத்தளங்களில் பட்டம் பெற்றவர்களின் கொண்டாட்டப் படங்கள் பகிரப்படும். ஆனால் இம்முறை வேலையற்ற பட்டதாரிகளை முன்வைத்து ஒரு விவாதப் பரப்பு திறக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் ஆண்டு தோறும் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால் நாட்டில் இப்பொழுது 42000க்கும் குறையாத வேலையற்ற பட்டதாரிகள் உண்டு. நாட்டில் வேலையில்லாத 365,951 தனி நபர்களில், பட்டதாரிகள் அல்லது அதையொத்த கல்வித் தகமையுடையவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 42,254 என்று பிரதமர் ஹரிணி கடந்தநொவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார். அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைப்பதை விடவும் அரச வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் என்று அழைப்பது நல்லது என்று எனது நண்பர் ஒருவர் கூறுவார். கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களும் அந்த வகைப்பட்டவைதான். பட்டதாரிகள் பட்டம் பெற்ற பின் வேலை இன்றி தெருவில் நிற்கப் போகிறார்கள் அல்லது அரச வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்ற பொருளில் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இத்தகையதோர் பின்னணியில்,புதிய தொகுதி பட்டதாரிகள் வெளியேறுவது என்பது வெளியேற்றப் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய தொகுதி இணைவதைக் குறிக்கும் என்றும் அங்கு விமர்சிக்கப்பட்டது. பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்பொழுது வாழ்வின் முக்கிய பேறு ஒன்றை அடைந்து விட்டதாக ஒவ்வொரு பிள்ளையும் பெருமைப்படுகிறது. அது உண்மைதான். பொன்னிறக் கனவுகளோடு அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வருகிறார்கள். பட்டம் கிடைத்ததும் அவர்கள் அதைக் கொண்டாடும் விதத்தில், எடுக்கும் ஒளிப்படங்களில் அதை அவர்கள் எந்தளவு பெருமைக்குரியதாகக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் பட்டம் எடுத்த பின் வேலை தேடி அலையும் போதுதான் அவர்களுடைய பொன் நிறக் கனவுகள் நிறமிழக்கத் தொடங்குகின்றன. ஆனால் அதற்கு அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. பின்வரும் அடிப்படைக் காரணங்கள் உண்டு. முதலாவது,சந்தைப் பெறுமதி மிக்க, தொழில் வாய்ப்புகள் அதிகமுடைய பட்டதாரிகளை உருவாக்கும் விதத்தில் கல்விக் கொள்கை திட்டமிடப்படாமை. இரண்டாவது, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்தமை. மூன்றாவது, தொழில் தொடர்பாக சமூகத்திடம் இருக்கும் அளவுகோல்கள், பிரமைகள். நான்காவது,தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி முறை. இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசு அலுவலர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் கல்வி. அதாவது ரிஸ்க் எடுக்கக் கற்றுக் கொடுக்காத கல்வி. எனவே பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு தனிய அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. மேற்சொன்ன காரணங்களும் பொறுப்பு அது ஒரு கூட்டுத் தோல்வி. பட்டதாரிகளில் பெரும் பகுதியினர் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் ? அதற்குப் பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்யத் தேவையில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு. சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம்,தடை தாண்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதன் மூலம் பதவி உயர்வுகளையும் சம்பள உயர்வுகளையும் பெறலாம் என்று பட்டதாரிகள் நம்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு. இரண்டாவது காரணம்,ஓய்வூதியம் கிடைக்கும். எனவே முதிய வயதில் பாதுகாப்பு உண்டு. மூன்றாவது காரணம், அரசாங்கம் என்றால் பலமானது. மக்களைப் பாதுகாப்பது. அதிகாரம் மிக்கது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரச ஊழியராக இருப்பது அதாவது அரச அதிகாரத்தை சமூகத்தில் அமுல்படுத்துவோராக இருப்பது கௌரவமானது, உயர்வானது என்ற சமூக நம்பிக்கை. நான்காவது காரணம், அரசாங்கத்தை மட்டுமல்ல யாரையும் பார்த்துக் கொண்டிருக்காமல்,யாரிடமும் கையேந்தாமல் தன் திறமைகளை நம்பி, தான் கற்றவைவைகளை அடிப்படையாக வைத்து தொழில் முனைவோராக மேல் எழத் தேவையான துணிச்சலும் வைராக்கியமும் இல்லாமல் இருப்பது. இந்த நான்கு காரணங்களிலும் முக்கியமானது நாலாவது. பட்டதாரிகள் ஏன் தொழில் முனைவோராக மேலெழ முடியவில்லை? அல்லது மேலெழ விரும்பவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில், கல்வி முறையின் தோல்விக்குள் இருக்கிறது. நமது கல்வி முறைமை தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் படைப்புத்திறனையும் தெரிவுகளையும் பட்டதாரிகளுக்கு வழங்கத் தவறிவிட்டதா? அரச ஊழியத்துக்குள் கிடைக்கும் பாதுகாப்பு,அரசு ஊழியர் என்பதால் கிடைக்கும் மரியாதை இவை இரண்டையும் தவிர ஒரு தொழில் முனைவோர் அல்லது புதிதாகச் சிந்திக்கும் ஒரு பட்டதாரி அதிகம் சம்பாதிக்கலாம், அதிகம் சாதிக்கலாம், அதிகம் பிரபல்யமாகலாம் என்பதற்கு நமது சமூகத்துக்குள்ளேயே உதாரணங்கள் உண்டு. ஆனால் பட்டங்கள் தொடர்பாகவும் தொழில் தெரிவுகள் பொறுத்தும் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் இறுகிக் கட்டிபத்திய சிந்தனைகளை உடைத்துக் கொண்டு வெளிவர பெரும்பாலான பட்டதாரிகள் தயாராக இல்லை. ஒரே வசனத்தில் சொன்னால் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. ஒரு காலம் யுத்த களத்தில் அதி உச்ச ரிஸ்க் எடுத்த ஒரு சமூகம். அதைவிட முக்கியமாக அவ்வாறு ரிஸ்க் எடுக்கலாம் என்ற முன்னுதாரணத்தை காட்டிய பெரும்பாலானவர்கள் முறைசார் கல்விக்கூடாக வந்தவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டம் தமிழ் சமூகத்தில் பல வெடிப்புகளை ஏற்படுத்தியது. சமூகத்தின் பாரம்பரியக் கல்வி தொடர்பான நம்பிக்கைகளை அது தகர்த்தெறிந்தது. கல்வித் தகமைக்கும் துணிச்சலுக்கும், கல்வித் தகமைக்கும் சாதனைகளுக்கும் இடையே கண்டிப்பாகத் தொடர்பு இருக்கத் தேவையில்லை என்பதையும் அது நிரூபித்தது. பட்டப் படிப்புக்களை அடிப்படைத் தகைமைகளாகப் போற்றாத விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் தலைவிதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. சமூகத்தின் மூன்றில் ஒரு பகுதியை புலம்பெயர வைத்தன. உலகமே வியக்கும் தியாகங்களையும் வீரத்தையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது. ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “கல்வித் தகுமையற்ற போராளிகள் வெற்றிபெற மாட்டார்கள்” என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அரசற்ற தமிழ் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் நிலைத்திருந்த கருநிலை அரசானது மேற்படி நம்பிக்கைகளை விவாதத்துக்கு உள்ளாக்கியது. எனினும் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு பின் மீண்டும் படிப்பு,செல்வம்,செல்வாக்கு… போன்றவை தலைமையைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாக மேலெழுந்தன. அதிகம் பட்டப் படிப்புகள் இல்லாதவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது என்று கூறுவோர் இப்பொழுது உண்டு. ஆனால் அவர்கள் வசதியாக மறந்துவிடும் ஒரு விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான அப்புக்காத்துக்களின் அரசியல் தமிழ் மக்களை மட்டுமல்ல, அவர்களுடைய கட்சிகளையே எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? என்பதுதான். ஆங்கிலம் தெரிந்த, சிங்களம் தெரிந்த, கற்றறிந்த தமிழ்த் தலைவர்களும் இறுதி வெற்றியைப் பெறவில்லை. அவர்களை மீறி எழுந்த ஆயுதப் போராட்டமும் இறுதி வெற்றியைப் பெறவில்லை. இப்படிப்பட்டதோர் அரசியல், பொருளாதார,சமூக உளவியல் பின்னணிக்குள், கடந்த 16ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் இருந்து அடுத்து வந்த தலைமுறை கற்றுக்கொண்டவை எவை? என்று கேள்வி வலிமையாக மேல் எழுகிறது. ஆயுதப் போராட்டம் கற்றுக்கொடுத்த துணிச்சல், தியாக முன்னுதாரணம்,ரிஸ்க் எடுக்கும் மனோநிலை போன்றவற்றில் இருந்து பட்டதாரிகள் எந்தளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். பெரிய அளவில் அர்பணிக்கவும் வேண்டாம். தொழில் ரீதியாக ரிஸ்க் எடுத்தாலே, துணிகர தொழில் முயற்சிகளில் இறங்கினாலே போதும். செல்வந்தர்களாகலாம். புதிய முன்னுதாரணங்கள் ஆகலாம். ஆனால் ஏன் தங்களுடைய சௌகரிய வலையங்களை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார்கள்? “துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்பது கப்பலுக்குப் பாதுகாப்பானது. ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்படுவதில்லை” என்று ஆங்கில மேற்கோள் ஒன்று உண்டு. அது போலவே “அமைதியான கடல் சிறந்த படகோட்டிகளை உருவாக்குவதில்லை” என்றும் ஆங்கிலம் மேற்கோள் ஒன்று உண்டு. இந்த இரண்டு மேற்கோள்களில் இருந்தும் கற்றுக் கொண்டால் பட்டதாரிகளுக்கு அவர்களுடைய பட்டங்களே சிறைகளாக மாறாது. https://www.nillanthan.com/8161/
  16. அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன் தமிழ் நாடு,திருச்சியில், கடந்த வாரம் சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள். அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் விஜேயும் ஒருவர் மற்றவருக்கு எதிராகக் காணப்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த சீமானின் கூட்டத்தோடு அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் நம்பிக்கையோடு காணப்படுகிறார்கள். ஈழத் தமிழர்கள் தமிழகத்தைக் கையாள வேண்டும். ஈழத் தமிழ் ராஜிய நடவடிக்கைகளில் அது முதன்மையானது. ஆனால் அது எப்படி என்பதுதான் இங்குள்ள கோட்பாட்டு அடிப்படையிலான கேள்வி. தமிழகத்தில் பல கட்சிகள் உண்டு. அந்தக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது. அது தமிழ்நாட்டு வாக்காளர்களுடைய பிரச்சினை. அதில் ஈழத் தமிழர்கள் தலையிடத் தேவையில்லை. ஈழத்தமிழ் நோக்கு நிலையில் தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒன்றுதான், தமிழ் நாட்டவர்கள்தான். எனவே தமிழகத்தைக் கையாள்வது என்பது கட்சி பேதங்களைக் கடந்து தமிழக மக்களைக் கையாள்வதுதான். அங்கே காணப்படும் கட்சி முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது என்பது முக்கிய முன் நிபந்தனை. சீமானோ,விஜயோ,திமுகவோ,அதிமுகவோ,பாரதிய ஜனதாவோகாங்கிரசோ எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களை ஈழத் தமிழர்கள் அணுக வேண்டும். அது தமிழ்நாட்டு அரசு. தமிழ்நாட்டு மக்களின் தெரிவு. அதை ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். அதைக் கட்சியாகப் பார்க்கத் தேவையில்லை. அப்படித்தான் புதுடில்லியிலும் இந்திய மக்களால் யார் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படுகிறார்களோ அவர்களை அணுக வேண்டும். அதை பாரத அரசாக பார்க்க வேண்டுமே தவிர கட்சியாகப் பார்க்கக் கூடாது. இந்தியாவை, தமிழகத்தை கையாளும்போதும் அணுகும்போதும் இந்தத் தெளிவு மிக அவசியம். அரசுகளைக் கையாள்வது. அதுதான் அரச தந்திரம். சமூகவலைத்தளங்களில் ஆளுக்காள் மோதிக் கொள்ளும் ஈழத் தமிழர்களிடம் இந்தத் தெளிவு மிகக்குறைவாக இருப்பதை உணர முடிகிறது. அதுமட்டுமல்ல சீமான் திரட்டிய கூட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள், தாங்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் இருப்பதைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் ? இங்குள்ள பெரிய கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கிறது. ஒருவர் மற்றவரை எப்படித் துரோகி ஆக்குவது என்ற போட்டி.அதேசமயம் இரண்டாவது முக்கிய கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை அரசாங்கத்தின் புதிய யாப்புருவாக்க முயற்சியை நோக்கி குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து வருகிறது. ஒருபுறம் அவர்கள் தமிழகத்தை நோக்கியும் ஐரோப்பாவை நோக்கியும் சென்றார்கள். இன்னொருபுறம் தாயகத்தில் குடிமக்கள் சமூகங்களை நோக்கி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் முன்னெடுக்கும் எல்லா நகர்வுகளுக்கும் போட்டியாக புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்ச்சியாகக் காய்களை நகர்த்தி வருகிறார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள குறிப்பிட்டுச் செல்லக்கூடிய புத்திஜீவிகளில் அவர் ஒருவர். ஒரு காலம் ராஜதந்திரிகளால் ஆர்வத்தோடு பார்க்கப்பட்ட ஆங்கில இணையதளத்தை இயக்கியவர். அவருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு கோட்பாட்டு ரீதியிலானதா? ஈகோ சம்பந்தப்பட்டதா? என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த முரண்பாடு தமிழ்த் தேசிய ஆன்மாவின் இதயத்தைத் தாக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கோட்பாட்டு விளக்கமுடைய இரண்டு தரப்புகளுக்கும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு முன்னணி தாயகத்தில் உள்ள குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து கடிதம் ஒன்றை ஐநாவுக்கு அனுப்பியது. ஆனால் அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட சிறிது காலத்தில் மற்றொரு கடிதம் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் கையொப்பமிடப்பட்டு ஐநாவுக்கு அனுப்பப்பட்டது. இக்கடிதத்தின் பின்னணியில் மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளரே இருப்பதாக முன்னணி குற்றம் சாட்டியது. அதன் பின் தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்துக்குப் போனது. அங்கே மூத்த ஈழத் தமிழ் உணர்வாளர்களில் ஒரு பகுதியினர் அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார்கள். தமிழ்நாட்டு விஜயத்தின்போது,தமிழ்த் தேசியப் பேரவை முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக விமர்சித்து அங்குள்ள ஈழ உணர்வாளர்களில் ஒரு பகுதியினர் அறிக்கையும் விட்டார்கள். மேற்சொன்ன புலம் பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்தான் அதற்கும் பின்னணியில் இருந்ததாக முன்னணி குற்றம் சாட்டியது. அதன்பின் தமிழ்த் தேசியப் பேரவை, இரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றொரு நகர்வை முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் குடிமக்கள் சமூகங்களுடான ஒரு சந்திப்பு அது. அந்தச் சந்திப்புக்கு சரியாக ஒரு நாள் முன்னதாக திருமலையில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. அதுவும் குடிமக்கள் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளூடான சந்திப்பு. அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது திருமலையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர். அவரை பின்னிருந்து இயக்கியது மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளரே என்று முன்னணி குற்றம்சாட்டியது. திருமலையைச் சேர்ந்த அந்த அரசியல் செயற்பாட்டாளர் முன்பு முன்னணியின் உறுப்பினராக இருந்தவர். இப்பொழுது இல்லை. திருமலைச் சந்திப்பில் திருமலைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பான கோட்பாட்டு விவாதங்களை அது புதுப்பித்திருக்கிறது. திருமலைச் சந்திப்பைப்போல மற்றோரு சந்திப்பு அதன்பின் மட்டக்களப்பிலும் நடந்தது. அதில் முன்னணியின் செயலாளர்,கஜேந்திரன் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும் அதன் பின் வெளி வந்த காணொளிகள், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிப்பவை. மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயல்பாட்டாளர் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான அமைப்புகளை ஒரு மெய் நிகர் சந்திப்பில் ஒருங்கிணைந்திருக்கிறார். இதில் தாயகத்திலிருந்தும் சிலர் கலந்து கொண்டதாக ஒரு தகவல். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்த மெய்நிகர் சந்திப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதுதான். இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் நிகழும் வாதப் பிரதிவாதங்களின் சாராம்சம் எதுவென்றால், கோட்பாட்டு ரீதியாக யார் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தை தீவிரமாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் முன்னெடுக்கிறார்கள்? இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பொறுத்து யார் கோட்பாட்டு ரீதியாக மிகச் சரியான,பொருத்தமான தீர்வை முன்வைக்கின்றார்கள்? என்பதுதான். ஒருபுறம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் தூதரகங்களை அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திக்கு இழுக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது. கட்சிகள் தாங்களாக ஒற்றுமைப்படாத ஒரு பின்னணியில்,தூதரகங்கள் தலையிட்டு முன்முயற்சி எடுத்தாலும் அதையும் ஒரு கட்சி குழப்புகிறது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையே எக்கிய ராஜ்யவா? சமஸ்ரியா என்ற வாதப்பிரதிவாதம். இன்னொரு புறம் சமஸ்டி வேண்டாம் பொதுஜன வாக்கெடுப்புத்தான் வேண்டும் என்ற கோரிக்கை. சிறிய ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நாலில் ஒரு பகுதிக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். புலப்பெயர்ச்சி தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா ஈழத் தமிழ் கிராமங்களும் ஒரு பகுதி ஆளில்லா வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாறிவருகின்றன. இளைய தலைமுறையின் ஒரு பகுதி நாட்டில் வேர் கொண்டு பூத்துக் குலுங்குவதை விடவும் நாட்டை விட்டு எப்படித் தப்பியோடுவது என்றுதான் சிந்திக்கின்றது. அதாவது தாயகத்தில் சனத்தொகை தொடர்ச்சியாக மெலிந்து வருகிறது. ஒருபுறம் சனத்தொகை மெலிகிறது. இன்னொருபுறம் இருக்கின்ற ஜனத்தொகையைத் திரட்டுவதற்குக் கட்சிகளால் முடியவில்லை. கட்சிகள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,தேசிய மக்கள் சக்தி உற்சாகமாக, எதிர்பார்ப்போடு அனுர குமாரவை தமிழ்மக்கள் மத்தியில் கதா நாயகனாகக் கட்டியெழுப்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும். இந்த லட்சணத்தில் தீர்வை நோக்கி ஒருங்கிணைய வேண்டிய தமிழ்த் தரப்போ சிதறிக்கொண்டு போகிறது. பலஸ்தீனர்களுக்கிடையிலான அக முரண்பாடுகளை விமர்ச்சிப்பவர்கள் கூறுவார்கள்…”பாலஸ்தீனர்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்று விவாதித்துக் கொண்டிருக்க, யூதர்களோ அப்பத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? https://www.nillanthan.com/8159/
  17. யாழ்க்கள உறவுகளே,தமிழீழ மக்களின் தற்போதைய அரசியற்கையறுநிலைகுறித்த உரையாடலாக உள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. அரை இறுதிப் போட்டிகள் புதனும் வியாழனும். தேவைப்பட்டால், ஒவ்வொரு போட்டிக்கும் இன்னும் ஒரு நாளும் ஒதுக்கியிருக்கு. முதல் போட்டி - புதன் - தென்னாபிரிக்கா எதிர் நியுசிலாந்து - ஈடன் காடன் மைதானம் இரண்டாவது போட்டி - வியாழன் - இங்கிலாந்து எதிர் இந்தியா - வெங்கடே மைதானம்
  19. சாம்ஜு இன்றைக்கு ஆடினது, ஒரு தரமான ஆட்டம். அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர். சும்மா அடிச்சுத் தொங்க விடுற ஆள் இல்லை. அடிக்கவும் தெரியும், அடக்கமா ஆடவும் தெரியும். சர்வசாதரணமா நாலு அடிப்பார்.
  20. ஓமோம் ... நசரெல்லாவிற்குப் பிறகும் இதே முடிவு தான் இரண்டாம் கட்ட தலைவருக்கும். 🤣
  21. சீமானை கூட ஒரு காலத்தில் வரவேற்றேனே? களை என தெரிந்தால் புடிங்கி விடுவதே என் இயல்பு. உங்களை போல் தெரிந்து கொண்டே பாம்புக்கு பால்வாப்பவனல்ல நான்.
  22. இதென்ன ஈரான் இங்கிலாந்து டொப் ஓடர் மாதிரி ஆடுது😂. இதே போல் ஒரு வேலையை இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கும் செய்தது என நினைக்கிறேன்.
  23. அசார் கேப்டனாக தொடர அவர் நரசிம்மராவின் மாநிலம் என்பதும் காரணம். கபில் கடைசியில் ஹட்லியின் ரெக்கோர்ட்டை உடைக்க என்றே டீமில் தொத்தி கொண்டு இருந்தார். அப்போதே இப்படி ஒரு அவமானம் தேவையா என நினைப்பேன். 92/93 இலங்கை சுற்று பயணத்தில் எஸ் எஸ் சி 2ம் டெஸ்டில் ரெக்கோர்ட்டினை உடைத்தார் என நினைக்கிறேன். முதலாவது டெஸ்ட் அஸ்கிரியவில். மழை பெய்தும் இங்கையை இந்தியா ஊதி தள்ளியது. மனோஜ் பிரபாகர் வில்கெட்டுகளை அள்ளினார்.
  24. தமிழ் நாட்டில் இருந்து இதுவரை பிராமணர் அல்லாதோர் எவரும் டெஸ்ட் விளையாடவில்லை என நினைக்கிறேன். ரோபின் சிங். கரீபியன் வழி வந்த வட நாட்டவர். இலங்கையில் முரளி, ரவீந்திர புஷ்பகுமார (பாதி தமிழ்), ரசள் ஆர்னோல்ட், அங்ஜெலோ மத்யூஸ் (பாதி தமிழ்) ஆகியோர் ஆடியுள்ளனர். மரியோ வல்லவராயன் எனவும் ஒருவர் இருந்தார் ஒருநாள் போட்டிகள் சிலதில் ஆடி இருக்கலாம். டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின் ஆடியவர்கள் எனில் இவர்களோடு வினோதன் ஜோனையும் சேர்க்கலாம். அதற்கு முன் சதாசிவம், சரவணமுத்து நாட்டின் நம்பவர் 1 ஆட்டகாரராக இருந்துள்ளனர். இந்தியாவை இட இலங்கையில் பிராமணர் அல்லாத தமிழர் மீதான ஒடுக்கல் குறைவு. கபில்தேவ் ஆங்கிலம் பேச தெரியாத ஹரியானா நாட்டுப்புறத்த்தான் என மும்பை மேட்டுக்குடி அவரை ஏற்க கஸ்டப்பட்டது. இப்போதும் கபில் ஆங்கிலம் கதைக்கும் போது இலக்கண விதிகள் நொருங்கும். ஆனால் அவர் அதை சட்டை செய்வதில்லை. சனத் ஜயசூரியவும் இப்படித்தான் 95-97 வரை உடைந்த ஆங்கிலத்தில் கதைப்பார்…ஆனால் கிரிகெட்டை போலவே இதையும் கிரமாமா பயிற்சி செய்து இப்போ சரளமாக பேசுகிறார். ஆங்கிலேயர் கண்டுபிடித்த விளையாட்டு எனபதாலோ என்னவோ கிரிகெட் ஜமீன்களுக்கு ஆங்கிலம் பேச வராதவர் மீது கொஞ்சம் இளக்காரம். ஆனால் இம்சமாம் உல் ஹக் எல்லாம் வரும்போதே மொழிபெயர்பாளரோடு வருவார் - ஆனால் மைதானத்தில் ஆங்கிலம் நுனிநாக்கில் பேசுவோரை தோய்த்து தொங்க விடுவார்😂
  25. சோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை : அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு [சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க! சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்] *************************************** ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று யாரோ அவர்களை மேதாவிகள் என நம்ப வைத்திருக்கின்றனர். அதன் கொடும் விளைவாக, “யார் ஆண்டால் எனக்கென்ன? நான் சம்பாதிக்குறது எனக்கு!” என்று பினாற்றுபவர்களுக்கு, தமக்கான ஊதியம் மொத்தமாக அல்லது பகுதியாகக் கூட தமது கைக்கு வருவதே ஆட்சியாளர்களின் கைங்கர்யம்தான் என்ற தெருட்சியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே மடமை! ஒரு தனி நபரது அரசியல் சார்பு என்பது கருத்துகளால் மட்டும் ஆனவை அல்ல. கருத்தியல் சார்ந்தது. ஒருவரது விழுமியங்கள்(ஒழுக்கம், நேர்மை…), மதிப்பீடுகள், கண்ணோட்டம், மனிதம் என உள் உறைந்திருக்கும் பலவற்றையும் ஒன்றாகக் கட்டி அவரது ஆளுமையை எடுத்துரைப்பதே அவ்வரசியல் நிலைப்பாடுதான்! அரசியலில் அற நெறிமுறைகள் மற்றும் உய்யச் சிந்தனைகளின்(critical thinking) நுட்பமான பகுப்பாய்வில் உருவாகும் விருப்பு வெறுப்புகள்தாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். யாரை ஆதரிக்கிறோம் என்பதை விட முக்கியமானது யாரை எதிர்க்கிறோம் என்பது. நண்பனை வைத்து நம்மை எடை போடுவதை விட எதிரியை வைத்து நம்மைக் கணிப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவோ? இடப்பக்கம் நிற்பார்க்கு உய்வுண்டாம்; உய்வில்லை வலப்பக்கம் நிற்கும் மாக்களுக்கு. இக்கட்டுரையை நடுவில் நின்று எழுதும் அளவிற்கு நான் பக்குவப்படவில்லை. அவ்வளவு பக்குவப்பட(!) விரும்பவும் இல்லை. வலதுசாரிகளில் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள் பூசிக் கொள்ளும் அரிதாரமே ‘நடுநிலையாளர்’. Annoying agnostics! இந்த நடுநிலை நக்கிகள் ஏதோ பண்பட்டவர்களாகவும் அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் தங்களைத் தாங்களே புரிந்து வைத்திருப்பதுதான் அந்தோ பரிதாபம்! மனிதகுலத்திற்கு எதிரானது எனினும் ‘கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்ட வலது சாரிகள், “நீங்கள் தவறு” என்று நாம் வாதம் வைப்பதற்காகவாவது வழி வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் ‘கொள்கை அநாதை’களான நடுநிலையாளர்களிடம் என்னவென்று (அரசியல்) பேச முடியும்? இவ்வாறானவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “ஏதாவது ஒரு பக்கமா நில்லு பக்கி. நடுவால நின்னு வண்டி ஏறி செத்துராத மூதேவி” என்று வடிவேலுவின் தொனியில் இவ்வரிகள்தாம் மனதினுள் ஓடும். ஆராய்ந்து தெளிந்து ஒரு பக்கத்தைத் தேர்வு செய்ய ரொம்பவெல்லாம் மெனெக்கெட வேண்டியதில்லை. மனிதத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘இட’த்தைதான் ஆறாம் அறிவு மிக இயல்பாகத் தெரிவு செய்யும். எனவே கடைந்தெடுத்த கயமைத்தனத்தை மட்டுமே பின்பற்றும் வலப்பக்கத்தில் தற்காலத்திலும் கரை ஒதுங்கி, இடப்பக்கத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். மூளைச்சலவை என்பதெல்லாம் ரொம்ப பூசி மெழுகப்பட்ட மென்மையான சொல். சிலருள் இயல்பாகவே ஊறிப் போயிருக்கும் வன்மத்திற்கு ஏற்ற தளம் அமைத்துத் தருவதால்தான் வலப்புறத்தை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். எந்த மனிதனிடமும் சென்று ‘நீ அடக்கி ஆளவும் ஏறி அடிக்கவும் உனக்குக் கீழேயும் ஒரு அடுக்கு இருக்கிறது’ என அவனுக்கு அதிகார ருசியைக் காட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள அந்த வன்மத்திற்குப் பல முகங்கள் - சாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் எத்தனையோ. இந்த வெறிகளையெல்லாம் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்து நிற்பதற்கு ஒரு தனித்துவமான மானமின்மை வேண்டும். பெரியார், அண்ணல் அம்பேகர், கார்ல் மார்க்ஸ் – cliché என இவர்களை எப்படி புறந்தள்ள முடியும்? கருப்பு, நீலம், சிவப்பு – ஒரு மனிதனிடமிருந்து இம்மூன்று நிறங்களையும் அழித்துவிட்டால் என்னதான் மிஞ்சும்? வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதைப் போல் காவி வந்து குடியமர்ந்து கொள்ளும். இயற்கையாய் ஒரு மனிதனுள் பூசப்பட்டிருக்க வேண்டிய அம்மூன்று நிறங்களையும் அழித்தொழிக்கும் உயிரிகளிடம் ஒரே ஒரு கேள்வி - “ஏன்?” ************************************ தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகிய மாபெரும் ஆளுமைகளையெல்லாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து மெய்சிலிர்த்த காலம் போய் இப்போது அதல பாதாளத்தில் எவ்வளவு எட்டி எட்டிப் பார்த்தாலும் இன்னும் இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கின்ற அரசியல் அப்பிரசண்டிகளின் பின்னால் ஒரு தலைமுறையே போதமில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்வது தமிழ் நிலத்தின் சாபக்கேடு. ட்ரம்ப், பெஞ்சமின் நெதென்யாகு…. எனத் துவங்கி மோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவிலேயே அரசியல் தரங்கெட்டுப் போயிருக்கிறது எனினும் தமிழ்நாடு அதில் தற்போது கொஞ்சம் தப்பித்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் கொள்ளும் முன்னரே, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று திடீரென சிலர் எம்பிக் குதித்து அநாகரிக அரசியலின் ஆழத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னத்தப் போட்டு சூசகமா கொச கொசன்னு? தற்போதுள்ள அரசியல் சூழலில் பா.ஜ.க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தைரியமாக எல்லா வகைகளிலும் எதிர்க்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் மிகச் சில. அவ்வாறாக, தண்டு வடம் வாய்க்கப் பெற்ற கட்சிகளில் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் தி.மு.கவும் வி.சி.கவும். நிற்க! உடனே ‘காவடி எடுக்கிறேன்’, ‘கூஜா தூக்குகிறேன்’ என்றெல்லாம் பாசத்தோடு பாராட்டு மழை பொழியும் முன் இதையும் வாசித்து விடுங்கள். எல்லாவாற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதர் பட்டத்தை இவர்களுக்குச் சாற்றவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க மீதான கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது அவர்களை நிராகரித்தால் பேராபத்தான சக்திகளின் பிடியில் மாட்டி நமது அடையாளத்தையே இழந்து சின்னா பின்னமாகிவிடுவோம். மேலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. ஓரளவு வாசிப்பும் பேச்சுத் திறமையும் கொண்ட வல்லுநர்களை உடையது அக்கட்சி. தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இல்லாதவர்கள். மேலும், தலைமையிடம் ஒரு தவறு இழைக்கும் போது முதன்முதலில் இடித்துரைப்பது கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களுமாகத்தான் இருப்பர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணித் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையே எடுத்துக்காட்டுகள். தலைமையைக் கேள்வி கேட்பதற்கான வெளியும் கேள்விகளுக்குச் செவி மடுக்கும் தலைமைப் பண்பும் அக்கட்சிக்கு உண்டு. அப்புறம் அநியாயத்திற்கு நாகரிக அரசியலால் ஓர் உயரிய செந்தரத்தை இப்போது நிலைநாட்டி வருகிறார்கள். பிழையை இடித்துரைப்பது போலவே நல்லதைப் பாராட்டவும் செய்யலாம்தானே? அ.தி.மு.க பா.ஜ.க.விடம் என்றோ விலை போய் விட்டாயிற்று. ‘அந்தம்மா இருந்திருந்தா நடக்குறதே வேற’ என தயவு செய்து தூக்கிக் கொண்டு வராதீர்கள். அவரே ஒரு சர்வாதிகாரிதான். தே.மு.தி.க, பா.ம.க – பொட்டியைக் கண்டால் எங்கும் யாருக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதிலும் இரண்டாவது, கடைந்தெடுத்த சாதிக் கட்சி. நா.த.க – கட்டுக்கதைகளிலேயே கட்சியை வளர்த்த பெருமை இவர்களுடையது. தமிழ்த் தேசியம் வழியாக வந்தாலும் சமீபமாக பெரியாரை எதிர்த்ததன் மூலம் தங்களது கூட்டாளிகளை அம்பலப்படுத்தி விட்டார்கள். நிலைமை இப்போது இவ்வாறாக இருக்க பா.ஜ.க.வை விரட்ட இவர்களை எல்லாம் எதிர்க்கத்தான் வேண்டும். கணிசமான வாக்கு வங்கி உடைய கட்சிகளில் இக்கட்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.மு.க மட்டுமே மிஞ்சுகிறது. என்னுடைய இந்த நிலைப்பாடு என்றென்றைக்குமானது அல்ல. மாணவர்களுக்கு, பெண்களுக்கு எனப் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் தி.மு.க., நாளை மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுமாயின் நிச்சயம் என் நிலைப்பாடும் மாறுபடும். வேறு யாரேனும் மக்கள் பக்கம் நின்று நல்லது செய்வார்களாயின் அவர்களை ஆதரிப்பேன். எனவே இப்போது ‘தி.மு.க வேண்டாம்’, ‘திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்’ என்றெல்லாம் கொக்கரிப்பவர்கள் இன்றைய சூழலில் தி.மு.கவுக்கு யார் சரியான மாற்று என்று மட்டும் கூறிவிடுங்கள். சமரசமாகப் போய் விடலாம். ‘கொள்கை எதிரி; அரசியல் எதிரி’ என்றெல்லாம் பண்ணையார்த்தனமாக உருட்டக் கூடாது. தி.மு.க.வைத் தூற்றுபவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் காரணிகள் : வாரிசு அரசியல், ஊழல் – இவை அறவே இல்லாத கட்சிகளைக் கூறினால் அடியேன் அறிந்து புரிந்து தெளிந்து கொள்வேன். அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளை விடுத்து வேற வேற…?. தி.மு.க. ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தால் கூட ‘அது எந்த அளவிற்கு மக்களுக்குச் சென்றடைகிறது? வழியில் எவ்வளவு வழிப்பறி நடக்கிறது?’ என்று ஆராய்ச்சியில் இறங்குவது தவறல்ல. அதே ஆர்வ மிகுதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சோவார போயிற்றா? விமர்சனம் செய்யலாம். ஆனால் தி.மு.க. என்பதால் மட்டுமே தேவையற்ற காழ்ப்புணர்வுடனேயே எல்லா நல்லனவற்றையும் அணுகினால் இறுதியில் “இலவச காலை உணவு; நிரம்பி வழிகிறது கழிவறை”யில்தான் என்று 'தினமலம்' போல் வந்து நிற்பீர்கள். என் மனதிற்கு நெருக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் குறிப்பிடாததற்குக் காரணம் அவர்கள் இன்னும் மாநிலமயமாக்கப்படாததுதான். நான் அரசியலை கவனிக்கத் துவங்கிய காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை முழுவதுமாக ஆதரித்த அவர்களின் உறுதிப்பாடு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அது குறித்து இப்போது கூட தோழர்களின் மீது உரிமையுடனான கோபம் உண்டு எனக்கு. அது நிச்சயமாக அவர்களை விட்டுக் கொடுக்கும் தொனியில் அல்ல. “என்ன இது? நீங்களே இப்படி நிலைப்பாடு எடுக்கலாமா?’ என்று ஓர் ஆசானின் மீதான கதமாகவே வெளிப்படும். “பிற கட்சிகளும்தாம் ஆதரித்தன?” என கேட்பீர்களானால் எனது பதில் “ஒப்பற்றதும் அப்பழுக்கற்றதுமான செவ்விய ஓர் இடத்தைத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கருத்து வேறுபாட்டிற்கே வழியில்லை என்ற அதீத நம்பிக்கை சற்றே பிசகியதில் வெளிப்பட்ட திகைப்புதான் அது”. இவ்விடத்தில் என்னுள் எழும் இரண்டக மனநிலை(dilemma) பற்றியும் கூற விழைகிறேன். எனது ஊர் இலங்கையும் அல்ல, கூடங்குளமும் அல்ல. அவ்வூர்க்காரர்கள் இன்றைக்கும் முறையே தி.மு.க. மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் கோபத்தில் இருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இதுவும் தோன்றும் – “அப்போ உனக்கு அடி விழுந்தாதான் வலிக்குமா?”. இக்கேள்வி என்மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி நக்கலாகச் சிரிக்கும். ஆனால் நான் கூறியது போல், “கோபம்தான். ஆனால் இக்காரணங்களுக்காக மட்டும் இப்போது இவர்களைப் புறக்கணிப்பது விவேகமல்ல; பெருஞ்சேதத்திற்கு வழிவகுக்கும்”. திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் பிற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையாகக் காலூன்ற இயலாமல் போனதில் பெரு மகிழ்ச்சியே! எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமது ஏவல்களாகப் பல விளியறி ஞமலிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க அரசு. பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் யாரும் அரசியல் செய்யவே முடியாது. ஆகையால் இப்பெருந்தகைகளின் பதாகைகளை ஏந்திக் கொண்டே நமது புறவாசல், வடவாசல், மேற்கு வாசல், கிழக்கு வாசல் என எல்லா வழிகளிலும் நுழைய முற்படுகின்றன பா.ஜ.க.வின் ‘ஆ’, ‘இ’, ‘ஈ’, ‘உ’….. பிரிவுகள். ********************************************* அதிலும் சமீபமாக இறங்கியிருக்கும் அல்லது இறக்கி விடப்பட்டிருக்கும் பனையூர் பண்ணையாரெல்லாம்….. எழுதப் பெறும் தகுதி உடையவரல்லதான். இடி அமீன், முசோலினி, ராஜபக்க்ஷ,… போன்றோருக்கும்தான் அத்தகுதி இல்லை. ஆனால் இவர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லவா? ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்’ என்பது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை. அதையே தகுதியாகப் புரிந்து கொண்டால் எப்படி? சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் கரூரில் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு பிறன்பழி கூற இயலாது. ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது; அல்லது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதன் பிறகான அந்த ‘சொகுசு அரசியல்வாதி’யின் அணுகுமுறைதான் இன்னும் ஆத்திரமூட்டக் கூடியதாக இருந்தது. அரசாங்கம் மீது தவறே இல்லை என்று கூறவில்லை. ஆணைய விசாரணையில் தெரிய வரும். வரட்டும். ஆனால் தெள்ளிதின் விளங்கி நிற்கும் தனது பொறுப்பற்றதனத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட சதிக் கோட்பாடுகளை(conspiracy theories) சமூக வலைதளங்களின் உதவியுடன் கிளப்பி விட்ட வில்லத்தனம் எல்லாம் திரைப்படங்களில் கூட பார்த்திராதது. ‘இந்த அரசாங்கம் ஏன் சரியாகப் பணியாற்றவில்லை?’ என்பதிலிருந்து ‘இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு வேகமாகப் பணியாற்றுகிறது?’ என்னும் சாட்டையடி(!) கேள்விக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறது இந்த தவக்கா கட்சி. கொள்கை ரீதியாக ஒருவரை எதிரி எனக் கை காண்பித்து விட்டு அந்த எதிரியின் எதிரியும் எனக்கு எதிரியே என்பதெல்லாம் என்ன மாதிரியான பம்மாத்து அரசியல்? தி.மு.க எதிர்ப்பு/வெறுப்பு அரசியல் என அறிவித்துவிட்டுப் போவதுதானே? ஒரு தனி நபராக அந்நடிகர் என்ன வேண்டுமானாலும் பிதற்றிவிட்டுப் போகட்டும். யார் இழுப்புக்கும் போகட்டும். கருத்துச் சுதந்திரம், உரிமை என்று விட்டுத் தொலைக்கலாம். ஆனால் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒருவர் என்ற வகையில் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் இந்தப் பெரிய அணில். மற்ற எல்லா கட்சிகளும் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்ய, இவர்கள் மட்டும்தான் தனி நபர் வழிபாட்டில் கட்டுண்டு கிடக்கின்றனர். மேலும் அரசியல் மேடையின் தரத்தை வெகுவாகக் குறைத்து, பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்களைச் சொல்ல வைத்ததில் இவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளலாம். தன்பழி, ஊழ்வினையாக மாற்றம் அடையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வளவு நடத்தியது போதாது என்பது போல் ‘அதுக்கும் மேல…’ என்று அடுத்தடுத்து அசிங்கங்கள் அரங்கேறின. இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை தமிழ்நாடு. ‘குழந்தையை இழந்தவர்கள்’ என நாம் பாவப்பட்டு வருத்தப்பட, அவர்கள் அனைவரும் சில நாட்கள் கழித்து அதற்கு முக்கிய காரணமானவர் மீது தவறே இல்லை என்று ஒரே குரலில் ஓங்கிப் பேசினார்கள். ‘அவரைப் பார்க்கும் ஆசை நிறைவேறிவிட்டது. என்ன ஒன்று? அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று’ என்று சிரித்துக் கொண்டே ஒரு தாயால் பேச முடிந்ததை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ மீது உண்டான இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் இதுவரை எங்கும் காணாதது. தாமாகவே இப்படிப் பேசியிருந்தால் ரொம்ப குரூரம். பணம் பெற்றுக் கொண்டு பேசினார்களாயின் அது கேடு கெட்ட கேவலம். எப்படிப் பார்த்தாலும் சமூகம் போகிற போக்கைப் பார்த்தால் பதறுகிறது. பேச வைத்தவர்களுக்கும் பேசியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ‘இன்னும் ரெண்டு பிள்ளையையும் கூட்டிட்டுப் போகாம போய்ட்டேனே’, ‘இதுக்காகவாவது இன்னும் ரெண்டு புள்ளைய பெத்தேன் இல்லையே?” – நல்லவேளை இப்படியெல்லாம் ஆதங்கப்படவில்லை. ‘உங்கள் பரிதாபத்திற்கும் அனுதாபத்திற்கும் எங்களுக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது’ என பாதிக்கப்பட்டோர் நமது முகத்திலறைந்து சொன்ன விதம்; பேருந்து ஏறிச் சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ‘பண்ணையார் சவரம் செய்யவில்லை, ஷவர்மா சாப்பிடவில்லை, ஷாம்பூ போடவில்லை, ரொம்ப வருத்தத்தில் இருக்கார்’ என ஆறுதல் பெறச் சென்றவர்கள் ஆறுதல் அளித்து வந்தது….. தமிழ்நாட்டில் அரங்கேறிய இந்நாணக்கேடான நிகழ்வுகள் அழிக்க முடியாத கரும்புள்ளிகள். இது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. இப்போது அல்ல. சம்பவம் முடிந்த ஒரு மாதத்திலேயே ‘பிண நாயகன்’ திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கேட்டு அனத்த ஆரம்பித்துவிட்டன அணில்கள். மாநாடு என்னும் பெயரில் நடத்தப்படும் ஒவ்வொரு வைபவத்திலும் அவர் பேசுவதை…. மன்னிக்கவும்! வாசிப்பதைக் கேட்கும் போது “ச்சே! இப்படி நல்லா நடிப்பு வர ஆரம்பிக்குற நேரத்துல முழுக்கு போடுறாரே!” என்று மட்டும் கொஞ்சம் கவலை(!) மேலிடுகிறது. நம்மால் யாரோ ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது என்றாலே தூங்க முடியாமல் குற்றவுணர்வில் உழன்று கொண்டிருப்போம். கரூர் அட்டூழியத்திற்குப் பிறகும்… சரி, அந்த உத்தமர்ர்ர் மீது தவறே இல்லை என்றே கொள்வோம். தன்னைப் பார்க்க வந்துதானே மடிந்தார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் மூன்று மாதம் கழித்து மலேசியாவுக்குச் சென்று ஒருவனால் ஆட்டம் போட முடிகிறது எனில் இவ்வகை உயிரினத்தைப் புறந்தள்ளுதலே சாலச் சிறந்தது. போதாக்குறைக்கு அத்திரைப்படத்தின் வரவுக்காக வாலை ஆட்டியபடியே காத்திருப்பவர்களின் நடுவில்தான் நாமும் வாழ்கிறோம் என்று உணரும் கணம் உடல் கொஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது. அவரை வைத்துப் படம் என்ற பெயரில் என்ன கருமத்தைக் கிண்டி வைத்திருந்தாலும் விசில் பறக்கத்தான் போகிறது. வழக்கம் போல ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என வடை சுடத்தான் போகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர் கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. ‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள் என்று ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். மக்கள் சீக்கிரமே மறந்து விட்டுக் கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அரிய உண்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கின்றனர். நாம்தான் செப்டம்பரிலேயே தேங்கி விட்டோம் போல. இதில் “இவர்களைத் ‘தற்குறி’ என்றழைக்கக் கூடாது. இவர்களைச் சரியாக அரசியல் படுத்தத் தவறிவிட்டோம்” என்றெல்லாம் உண்மையான அக்கறையுடனும் குற்றவுணர்வுடனும் திராவிட கழகத்தினர் சிலர் பேசுவதைக் கேட்டால்….. மன்னிக்கவும்! சிரிப்புதான் வருகிறது. அணில்களைப் போன்ற தனி மனித ஒழுக்கமற்ற கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. உலகமே கையில் சுருங்கி விட்ட இந்த யுகத்தில் எல்லா செய்திகளையும் வாசிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். எது சரி எது தவறு என்று பிரித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளாதது அவரவர் குற்றம் மட்டுமே. அறியாப் பருவத்தில் இருக்கும் மழலையரைப் போல் இவர்களைக் கொஞ்ச வேண்டியதில்லை. அடிப்படை அறிவை அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கத் துப்பில்லாத இவர்கள் சமூக வலைத்தளங்களில் நான்கு கால் பாய்ச்சலில் ஒன்றிய அரசின் தவறுகளுக்குக் கூட வீறு கொண்டு மாநில அரசை மட்டுமே துவைத்து வெளுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்… “உங்களை எல்லாம் வச்சுகிட்டு இந்தியா ஏன் இன்னும் வல்லரசா ஆகாம இருக்கு?” உலக வரலாற்றில் முதன் முறையாக இவரைப் பேட்டி எடுக்க வந்தவர்கள் பேட்டி எடுத்ததைப் பேட்டியாகக் கொடுத்த கேலிக்கூத்துப் பெருமையும் இப்பெரிய அணிலையே சாரும். “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு மக்களையும் சந்திக்க மறுக்கிறார். பத்திரிக்கையையும் எதிர்கொள்ள மருள்கிறார். ஆனால் இவருக்கு முதலமைச்சர் நாற்காலியைத் தூக்கித் தந்திட வேண்டுமாம்” என்று இவரைப் பின் தொடரும் ஆச்சரியக் குறிகள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும். அவர்களை மட்டும் சொல்லித்தான் என்ன? படித்து மண்ணள்ளிப் போட்ட பலரும் கூட கரூர் சம்பவத்தைக் காணுற்ற பிறகும் “எப்போ பாரு… தி.மு.க., அ.தி.மு.கன்னே போய்ட்டுருக்கு. ஒரு மாற்றம் வரட்டும். இவருக்குத்தான் ஒரு வாய்ப்பு குடுத்துப் பார்க்கலாமே?” என்று, ‘இன்றைக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உணவகத்தில் சாப்பிட்டுப் பார்ப்போமா?’ என்ற தொனியில் பேசுவதைப் பார்த்தால் “நீங்கள்லாம் எப்படி இன்னும் வெளிய நடமாடிட்டு இருக்கீங்க? யாரு சங்கிலியைக் கழட்டி விட்டது? எப்போ தப்பிச்சீங்க?” எனக் கேட்கத் தோன்றுகிறது. ‘எது சரி?’ என்பதைப் புரிந்து கொள்ளவும் ‘யார் பக்கம் நிற்பது?’ என்று தேர்ந்து தெளியவுமாவது கொஞ்சம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் நலம். எதை வாசிக்கிறோம் என்பதும் இங்கு முக்கியம் அமைச்சரே! ***************************************** கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கண்றாவியையெல்லாம்தான் கேட்பது? அறத்தோடு கூடியவற்றைப் பேசுதல் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என வரையறையை மாற்றுங்கள் ஐயா! தம்மை அரசன் என்று சொல்லிக் கொள்(ல்)பவர்களால் அன்றே நிகழ்த்தப்படும் கொலைகள் யாவும் பிரிவினைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பறைசாற்றுவதற்காகவும் சுய ஆதாயத்திற்காகவும் அரங்கேறுகின்றன. தெய்வமோ தெண்டத்திற்கு நின்று கொண்டே இருக்கிறது. அநீதியையும் தீமையையும் கொல்வதற்கான நோக்கம் சற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்வதெல்லாம் கூட இருக்கட்டும்; உணர்ச்சி மேலீட்டில் கோபத்தில் பொங்குவது கூடக் கிடையாது. (supposed)அரசர்கள் மற்றும் (so called)தெய்வங்களின் (அவ)லட்சணம் இவ்வாறாக இருக்க யாரை அல்லது எதை நம்புவது? எவ்வகையான நம்பிக்கையில் பிடிப்புக் கொள்வது? நியாயத் தராசுகள் எல்லாம் பொருளற்றுப் போன தற்காலத்தில், “வாழ்க்கை அப்படித்தான்; நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அது அநீதி என்றாலும் கூட” என்ற எதார்த்தம் புரியாமல் இல்லை. மனதில் ‘ஊழ்’ என்றொரு பிரிவை உருவாக்கி எல்லா அநியாயங்களையும் அதில் இருத்தி வைக்க வெகு கடினமாக இருக்கிறது. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு வாழ்க்கைச் சக்கரத்திற்கான நம்பிக்கை அச்சாணியை எதில் தேடுவது? போகிற போக்கில் எல்லாவற்றையும் வெறுமனே கவனித்து மட்டும் கடந்து செல்வதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லையே! கடவுளே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். சமூக விடயங்களில் அறம் சார்ந்த கோபத்தை இல்லாத இறைகளின் மீது கொட்டி நேரத்தை வீணடிப்பதை விடுத்து, இருக்கும் தலைவர்கள்/தளபதிகள்/சிப்பாய்கள் ஆகியோரில் சரியானவர்கள் (அதாவது தவறானவர்கள்) மீது முறையாக வெளிப்படுத்துதல் மனதிற்கான ஒரு தற்காலிக வடிகால் மட்டுமே. ஒருமா அளவு மனிதத்தைத் தன்னுள் இடுக்கி வைத்திருக்கும் மனிதனுக்குக் கூட அத்துமீறிய அநீதிகளின் போதும் நீதி தேவதையின் கண்கள் இறுகக் கட்டப்பட்டு இருப்பது மனச்சோர்வைத் தந்து விரக்தியைப் படரச் செய்யும் அல்லவா? இக்கையறு நிலையில்தான் “அறம் கூற்றாகும்!” என்பதை நம்பச் சொல்லி ஆறுதல் அடைய முனைகிறது மனம். அதுவே “அறம் கூற்றாகட்டும்!” என ஆங்காரமாக மனதினுள் ஒலிக்கும்போது உத்வேகத்துடன் கூடிய ஏதோ ஒரு வகையான சமாதானத்தையும் அழைத்து வருகிறது. எனவே…. அறம் கூற்றாகட்டும்! ஆகியே தீர வேண்டும்! அப்படியே ஆகக் கடவதாக! ஆமென்!
  26. நீங்கள்தான் தளபதி விஜய் அண்ணாவின் ஆதரவளாராச்சே!? 🤣 இன்னும் நல்ல கருத்துக்கள் வளர்ந்து வரட்டும். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.