Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : கன்னித் தீவு பொண்ணா… கட்டெறும்பு கண்ணா… கட்டுமர துடுப்பு போல… இடுப்பு ஆட்டுறா… இவ கள்ளுப்பான உதட்ட காட்டி… கடுப்பு ஏத்துறா… ஆண் : மத்தாப்பு போல… சிரிச்சிட்டு போனா… கித்தாப்பு எல்லாம்… மிதிச்சுட்டு போனா… ஆண் : இந்த வப்பாட்டிய பார்த்து… என் பொண்டாட்டிய மறந்தேன்… இவ முந்தானைய மோந்து… நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்… ஆண் : மஞ்ச சீலையோடு… ஒரு மாசிக் கருவாடு… வட்டம் போட்டு ஆடு… இது வானவில்லு ரோடு… குழு : தர்ப்பூசு பழத்துக்கே நீ… தண்ணி காட்டாதே… ஆண் : கடிச்சா கசக்காத… ஸ்வீட்டு பீடா நீ… குடிச்சா எப்போ வரும்… கோலி சோடா நீ… ஆண் : இடிச்சா உசிரு போகும்… தண்ணி லாரி நீ… அடிச்சா போதை வரும்… பன்னீர் செர்ரி நீ… ஆண் : உன் சம்மதத்த சொன்னா… என் சம்பளத்தை தருவேன்… நீ கைநழுவி போனா… நான் கண்ணகியா அழுவேன்… ஆண் : வெண்ணிலா கேக்கு… என விட்டுத்தரேன் நாக்கு… கொள்ளிக்கட்ட நாக்கு… என்ன கொப்பளமா ஆக்கு… குழு : தஞ்சாவூரு தட்ட ஏந்தி… பிச்ச கேட்காதே… ஆண் : உருட்டி விளையாடும்… தாயக்கட்ட நீ வழுக்கி விழவைக்கும்… வாழமட்ட நீ… ஆண் : மணக்கும் மலையாள… கொழா புட்டு நீ… திரும்பி பார்க்காத… தெனாவட்டு நீ… ஆண் : இவ கன்னக்குழியோடு… வந்து பல்லாங்குழி ஆடு… என்ன முத்தமிட்டு மூடு… கொஞ்சம் சத்துணவு போடு…....! --- கன்னித் தீவு பொண்ணா ---
  3. முழுநிலவின் திருமுகத்தில் .......! 😘
  4. பேசாம, நிசியின் பக்கத்து நாட்டுக்காரரை தெரிவு செய்த ஆக்களுக்கு புள்ளியக் குடுத்திடுவோமா. 😉
  5. இல்லை. இந்தியாவில் இருந்து புறப்பட்டு, அதன் கடல் எல்லையை தாண்டி, சர்வதேச கடற்பரப்பில், யுத்த முனை நோக்கி நகரும் போது தாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, இலங்கை எவருக்கும் கொடுக்க பட்ட எச்சரிக்கை அல்ல. அப்படி கொடுக்கவும் தேவையில்லை. ஏன் எண்டால் மோடி ஜி, பீபீயின் பொக்கெட்டுக்குள்😂 ஆனால் ஒரு விடயம், ரஸ்யா, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், என ஈரானின் நண்பர்கள் என சொல்லி கொண்ட பலரும் ஈரானை திரும்பி கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் ரஸ்யாவுக்கு டிரோன் கொடுத்து, அண்மைய முறுகலில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுத்து ஈரான் ரொம்ப நம்பிக்கையாய் நடந்து கொண்டது. அதே போல் இலங்கையின் இன்வழிப்பு போரில் வெல்ல, தேயிலைக்கு எண்ணை டீல் மூலம் போரின் எரிபொருள் வழங்குனராக ஈரான் இருந்தது. இலங்கையும் பெரிதாக அலட்டிகொள்ளவில்லை.
  6. Today
  7. அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?
  8. இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்ட... ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1465130008652693 👈
  9. கிந்தியாவின் அண்மைய விளையாட்டை பார்க்கும்போது இங்கிலாந்தை வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. இன்றுபோல் விளையாடினால் நியூசிலாந்து கோப்பையை தூக்கும் என எதிர்பார்க்கலாம். போட்டிகள் முடியும்வரை கிருபன் ஜீ கைதட்டி கூப்பிட்டு நமக்கு புள்ளிகள் ஏதும் இல்லை என தெரிவிக்க போகின்றார். திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டியதுதான்.
  10. வந்து கொண்டிருக்கும் செய்தி: சைப்பிரஸ்சில் உள்ள பிரித்தானிய தளத்தை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து ஏவப்படவில்லை என்பதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. பிகு தம்பி நீங்கள் மொசாட்டோ😂
  11. ஈரான் போருக்குப் போக, இப்படி... எல்லாரும் ஒளித்து திரிந்தால்... இனி இவர்களுக்கு... முஸ்லீம் நாடுகளிடம் இருந்து பண உதவி வராது போலுள்ளது. 😂
  12. இருக்கலாம். ஆனால் இது அவ்வளவு இலகுவானதல்ல. மேலதிக விபரங்கள் சில. ஈரான் நிலகீழ் மிசைல் ஏவுதளங்களை சற்று நேர்ந்த்துக்கு முன் பாவிக்க ஆரம்பித்துள்ளதாம். இது நில மேல் தளங்கள் அதிக பாதிப்பை சந்தித்தை உறுதி செய்கிறன. இவை தாக்குதலில் ஈடுபடுவதை இவற்றின் இருப்பிடங்களை காட்டி கொடுக்குமாம். ஆனால் நிலக் கீழ் தளங்கள் 500 மீட்டருக்கும் கீழாக உள்ளனவாம். இவை அமரிக்காவின் 90 மீட்டர் மட்டுமே செல்லும் பங்கர் பஸ்டர் குண்டுகளால் தாக்கபட இயலாதனவாம். அதேபோல் கெமிக்கல் தாக்குதலில் இருந்தும் தற்காக்க வல்லனவாம். ஆனால் விசேட படை இறங்கி தாக்குவது, வாயில்களை அடைக்கும் விதமாக தாக்குவது, மின், தண்ணீர் சப்ளையை தாக்குவது என இவற்றை தாக்க/ முடக்க வழி இருக்கும் என நினைக்கிறேன். இஸ்ரேல் காரன் இப்பவே என்ன செய்வது என ஸ்கெட்ச் போட்டு வைத்திருப்பான். அண்ணை கூல் டவுண் 😂 இது போர் ஒத்திகை அல்ல, பல நாடுகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்றும் வருவதாக இருந்து கடைசி நேரத்தில் பின் வாங்கியதாம்.
  13. ஏற்கனவே பெற்றோல் இல்லாம பிதுங்கி கிடக்குறம். இதுல இது வேறயா எனக்கென்னமோ கோர்த்து விட்டு கும்மியடிக்க போறாங்க போல இருக்கு எதுக்கும் ஒரு பங்கர வெட்டுவம் ட்ரம் அங்கிள் இங்கால திருப்பிடாதீங்க தெய்வமே🙄🙄 Jeyrajan Rajan
  14. காத்தான்குடி ஈச்சம்பழ இணையமைச்சரும் அதில் பயணம்செய்ய தீர்மானித்து பின் பின்வாங்கியிருந்தாராம்.
  15. @சுவைப்பிரியன் 💐 அநேகமாக இந்தியா தான் கப் தூக்கும் போல கிடக்கு. நான் 100 நாட் அவுட்தான் போல 😂
  16. அமெரிக்காவால் மூழ்கடிக்கப் பட்ட ஈரானிய கப்பல், இந்தியாவில் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய ஈரானிய வீரர்களின் கப்பலாம் அது. ஆக... இந்தியா, ஈரானுக்கு பயிற்சி வழங்கி வருவது அம்பலமாகி உள்ளது. இதற்குள்... ஈரானை போர் வேண்டாம் என்று கண்டிக்கின்றது இந்தியா. "டபிள் கேம்" விளையாடும் சகுனி இந்தியா.
  17. சவுதபிரிக்கா ஒரு ராசியில்லா ராசா...அவர்களுடைய கோச்சின் வாய் மட்டும் நீளம் ...நாளைமட்டும் பொறுப்போம் காம்பீரின் வண்டவாளத்தை..
  18. இன்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடாததால் ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களில் நின்றது. எனினும் மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் நிதானமான 34 (27 பந்துகள்) ஓட்டங்களுடன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தனர். ஃபின் அலென்னின் அபாரமான மரண அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த செஞ்சுரியான 100 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், டிம் செய்ஃபேர்ட்டின் புயல்வேக 58 (33 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் எவரும் நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வெல்லும் எனக் கணிக்காததால், ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! முதலாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):
  19. நான் அவர்கள் அதைக் கடந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், பிஃன் அடிச்ச அடிக்கு, 250ஐயே அடிச்சு முடிச்சிருப்பாங்கள். அதுவும் அந்தக் கடைசிப் பரிமாற்றத்தில், அடிச்சானே. அவனுக்கு தொடையில் பிடிப்பு வேற. நின்டால்த் தானே, ஓட வேணும். ஓடாம நின்று, முடிச்சுவிட்டான்.
  20. dpstSeoonr6ml u:r2360hs5 41t9i4m39l8a0t01637a5agthg,43642mil · மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்...... இன்று குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிறந்தநாள் இன்று ......!
  21. இளைஞர்களுக்கு.. காதலர் தினத்தில், ஒரு சொக்லேட் வாங்கக் கூட பணம் இல்லாத சூழ்நிலை. -சாணக்கியன் எம்.பி.-
  22. அலி கமேனியை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் : மொசாட்டின் துல்லிய வேவு தகவல்கள் அம்பலம் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை கண்காணிக்க, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரானின் போக்குவரத்து கமராக்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு படைகளின் தாக்குதலில் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அவருடன் இராணுவ உயரதிகாரிகள், அமைச்சர்கள் என, பலரும் உயிரிழந்தனர். இது சாத்தியமானது எப்படி என ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, 'பைனான்ஷியல் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து கண்காணிப்பு கமரா அமைப்புக்குள் ஊடுருவிய மொசாட் ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் செயல்படும் விரிவான போக்குவரத்து கண்காணிப்பு கமரா அமைப்புக்குள் இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட், சில ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்தது. அந்த அமைப்பை இஸ்ரேல் தன் உளவு நடவடிக்கைக்காக பயன்படுத்தியது. சமீபத்தில் அதில் ஒரு கமராவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு குழுவினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை தெளிவாக காட்டும் கோணத்தில் அமைந்திருந்தது. பணியாளர்களின் முகவரி, பணிச்சுழற்சி, அவர்கள் பாதுகாத்த நபர்கள், தினசரி இயக்கம் ஆகிய விபரங்கள் தொகுக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்கள் அடையாளம் காணப்பட்டன. கிடைத்த தகவல்மூலம் வரைபடமாக்கப்பட்ட கமேனியின் நகர்வுகள் இந்த தரவுகள் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் மென்பொருட்கள் மூலம் அலசப்பட்டன. கமேனியின் நகர்வுகள் வரைபடமாக்கப்பட்டு, அவர் கடந்த 28ம் திகதி தெஹ்ரானின் பாஸ்துார் வீதியில் ஒரு கூட்டத்தில் பங்கேற்பது தெரிந்தது. அதையே இறுதி இலக்காக வைத்து அவரைக் கொல்ல முடிவு செய்தனர். பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்கள் பரிமாறப்படாமல் தடுக்க, மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் படைகள் இணைந்து நடத்திய குண்டு வீச்சில் கமேனி கொல்லப் பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் இருந்து, 1,900 கி.மீ., துாரத்தில் உள்ள ஈரான் தலைநகர் தெஹ்ரானில், போக்குவரத்து கமராக்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. அலி கமேனியை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் : மொசாட்டின் துல்லிய வேவு தகவல்கள் அம்பலம்
  23. சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்து விட்டதாக இரு சந்தர்ப்பங்களில் மரபணு பரிசோதனை (DNA) செய்து சாரா ஜெஸ்மினின் மரபணுவுடன் ஒத்து போவதாக தெரியப்படுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க அதன் தலைவர் அஜித் தர்மபால இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, கொவிட் தொற்று ஏற்பாட்ட காலத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்கத்தை கொண்டு DNAவை மாற்ற முயற்சித்துள்ளார். 'சரத் வீரசேகரவால் எனக்கு கடும் அழுத்தமாக இருக்கிறது. DNAவை மாற்றுமாறு என்னை வதைக்கிறார்' என்று பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க என்னிடம் இவ்வாறு குறிப்பிட்டார். அதன் பின்னர் நான் சொன்னேன்,பயப்பட வேண்டாம்! 'இல்லை சீப்' நான் கொடுக்க மாட்டேன் என கூறினார்.ஆனால் சரத் வீரசேகர அவ்வளவு சொல்லியும் அவர் கொடுக்கவில்லை. அதன் பின்னர் வீரசிங்க மரணமடைந்து விட்டார்.அவர் ஏன் மரணமடைந்தார் என இன்று ஒன்றும் தேட முடியாது.அவர் கொவிட் காலத்தில் இறந்ததால் தகனம் செய்து விட்டார்கள். இன்று ஒன்றும் தேட முடியாது என குறிப்பிட்டுள்ளார். சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள்
  24. மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு - சுற்றுலாப் பிரதி அமைச்சர் 04 Mar, 2026 | 04:05 PM (செ. கவிஷனா) மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கை சுற்றுலாத் துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு வாரத்துக்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும் என்று சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவண் ரணசிங்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் 30 சதவீதமானோர் மத்திய கிழக்கு வான் பரப்புகள் வழியாகவே வருகை தருகின்றனர். தற்போது காணப்படும் பதற்ற நிலைமை காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், வாரத்துக்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும். ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு வழியாகவே பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் துபாய், கட்டார் மற்றும் அபுதாபி விமான சேவைகள் தடைப்பட்டிருப்பது இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும். மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் ஐரோப்பிய பயணிகளின் வருகையில் சிக்கல் ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அத்துடன் சீனா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வருகை தருகின்றனர். மேலும், ஐரோப்பாவுக்கு நேரடி விமான சேவைகளை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளதுடன் எதிஹாட், கட்டார் ஏர்வேஸ் போன்ற பிரதான விமான சேவைகள் இன்னும் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கவில்லை. தொடர்ந்தும், மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வெளிநாட்டு அமைச்சகம் உள்ளிட்ட தரப்புகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 89,000 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஐரோப்பா முழுவதிலும் இருந்து 236,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு - சுற்றுலாப் பிரதி அமைச்சர்
  25. "ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..." - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. "எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்..." என்கிறார் அற்புதம் அம்மாள். "அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்..." என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்! காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.