All Activity
- Past hour
-
தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ
தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாங்கள் துறைமுகங்களை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்தவர்கள் இப்போது அது நல்ல விடயம், அதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கூறுவது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம். இதேவேளை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும், போதைப்பொருள் இருந்த கொள்கலன்களும் வெளியில் அனுப்பப்பட்டுள்ளன. அவை தொடர்பில் உங்களிடம் விசாரணை இல்லை. எங்களைத் தான் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைக்கின்றீர்கள். நீங்கள் பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தை இணைத்து அரசியல் வழிவாங்கல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்தால் அதிகாரிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம். சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை இனவாதம் என்றாலும் அது அவ்வாறு இல்லை. நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் செய்தோம். இராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்லை. அத்துடன் மதத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர். இது தவறாகும். தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதத் தலைவர்களுக்கு செவி சாய்க்க அரசாங்கம் பழக வேண்டும். மகா சங்கத்தினரை சிறைகளில் போடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சியாளர்கள் அதனை காணாதது பேன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்டமாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர். பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களையும், வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது. சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப்களை வாங்க முடியும். எமது தேசிய பாதுகாப்பு பலத்தை உலகத்துக்கு காட்டுவதில் வெட்கப்படுகின்றனர் என்றார். https://athavannews.com/2026/1463495
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? சிறுவர் பாலியற் குற்றவாளி எப்ஸ்ரெயின்(Epstein) கோப்புகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்த கூல் சகோதரர்களும் எப்ஸ்ரெயினின் ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் முதியவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் மூலம் பெறப்படுவதாக நம்பப்படும் அமானுஸ்ய சக்திகள் குறித்த ஆராய்ச்சியின் பகுதிகளுக்கும் தான் இவர்களது அறிவு பயன்பட்டதா என்பதனை கூல் சகோதரர்கள் தான் ஊடகத்தின் முன்னே வந்து பேச வேண்டும். இதே கூல் குடும்பம் தான் மேற்குலகின் வழிகாட்டலில் போதிய அளவு நிதியைப் பெற்று இலங்கையில் University teachers human rights (UTHR) என்ற ஓர் நிறுவனத்தை உருவாக்கி இன அழிப்புக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் குறித்தும் நபர்கள் குறித்தும் தகவல் சேகரித்து அந்த ஆவணத்தில் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அந்த நாளில் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அத்தனை இளைஞர்கள் பற்றிய தகவலகளையும் சேகரித்து அதனை அவர்களுக்கு எதிரான அரசின், மேற்குலகின் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பயன்படுமாறு உருவாக்கியவர்கள். உலகின் மிக மோசமான குரூரமான சிறுவர் பாலியல் குற்றமாகச் சொல்லப்படும் எப்ஸ்ரெயின் ஆராய்ச்சிக்கு உடந்தையாக இருந்த இந்த உத்தமர்கள் தான் , நேற்றுவரை UTHR என்ற அமைப்பை வைத்து எமது விடுதலைப் போராட்டதிற்கு எதிராக உலகெங்கும் எம்மையும் எமது போராட்டத்தையும், பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள், இதே கூட்டம் தான் முறிந்தபனை என்ற நூலையும் எழுதியது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். உலகில் நடைபெறும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒருவர் தான் ரஜினி திரணகம, உலகில் எந்தவொரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடினாலும் அதனை மோசமாகச் சித்தரித்து அழித்துவிட மேற்குலகின் சக்திகள் இவர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது, சர்வதேச பல்கலைக் கழகங்களில் புலமைப்பரிசில் வழங்குகிறது, கற்பிக்க வாய்ப்பு வழங்குகிறது. ஆனால் காலம் ஒரு கட்டத்தில் இவர்களை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தி இருக்கிறது. இது ஒரு சாதாரணமாக கடந்து போகும் சம்பவம் அல்ல, 1. UTHR 2. கூல் சகோதரர்கள் 3. அங்கிலிக்கன் திருச்சபை - இதற்கு பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //அத்துடன் முக்கியமாக - முறையாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்த ஆவணத் தொகுப்பைப் பார்த்தபோது எப்ஸ்ரெயினின் குரூர வக்கிரத்திற்கு அங்குள்ள நம்மவர்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது. பரமேஸ்வரா பள்ளி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்…// நன்றி: Thiru Thirukumaran SANGU-சங்கு
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 99 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சிறிநாகன் இறந்த பிறகு அவனது மகன் ஒகாரிக திச்சன் [Voharika Tissa, also known as Vira Tissa, or Tissa the Lawgiver ], சட்டம் மற்றும் பாரம்பரியம் பற்றிய அறிவுடன், இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இங்கே வோஹாரிகா அல்லது ஒகாரிக [Vohārika] என்பது "முடிவெடுப்பவர்," ஒரு வழக்கு அல்லது சட்டத்துடன் தொடர்புடைய ஒருவர், நீதிபதி, சட்ட நீதிமன்றங்களில் ஒரு உயர் அதிகாரி போன்ற கருத்துக்களைக் குறிக்கிறது. இந்த நாட்டில் முதன்முதலில் (உடல்) காயத்தை ஏற்படுத்தும் தண்டனையை, தடை செய்யும் ஒரு சட்டத்தை அவன் இயற்றியதால், அவனுக்கு மன்னன் ஒகாரிக தீசன் என்ற பெயர் வந்தது. அபயநாகன் [Abhaya Naga] என்பவன் மன்னன் ஒகாரிக திச்சனின் தம்பி. அவன் தனது சகோதரனின் மனைவியான ராணியின் மீது காதல் கொண்டான். இது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவன் ஓடிவிட்டான். பின்னர் அபயநாகன் தன்னுடன் பல தமிழர்களை ஒன்று சேர்த்து தன் அண்ணன் மன்னனுடன் சண்டையிடச் சென்றான். மன்னன் தனது மனைவியை குதிரையில் ஏற்றி மலை நாட்டுக்கு ஓடிவிட்டான். அபயன் அல்லது அபயநாகன் அவனைப் பின்பற்றி தனது சகோதரனைக் கொன்றான். அபயன் ராணியுடன் திரும்பி வந்து, எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அபயனின் மரணத்திற்குப் பிறகு அவனது சகோதரன் ஒகாரிக தீசனின் மகன் இரண்டாம் சிறிநாகன் [Siri Naga II] இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தனது தந்தை இறந்த பிறகு ஒரு வருடம் ஆட்சி செய்தான். வசனம் 58 முதல் 62 வரை, வழமை போல, கற்பனைக் கதைகள் உள்ளன. இறுதியில் முதலாம் சங்க தீசன், சிறிசங்கபோதி மற்றும் கோதகாபயன் [Samghatissa, Samghabodhi and Gothakabhaya] என்ற மூன்று அரச குடும்பத்தில் பிறக்காத, இலம்பகர்ண வம்சத்தவர்களால் [Lambakannas, இலங்கை மன்னர்களை அடிக்கடி ஆதரித்து சேவை செய்த முக்கிய போர்வீரர் குலங்களில் ஒன்று.] கொல்லப்பட்டான். [மகாவம்சத்தின்படி, இலம்பகர்ணர் அரச உதவியாளர்கள் என்றும் கூறலாம் ] சம்க தீசன் அல்லது சங்க தீசன் முதலில் மற்ற இருவரால் அரசனாகப் முடிசூட்டப் பட்டான். அவன் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அரசன் அவ்வப்போது அரண்மனைப் பெண்களுடனும், மந்திரிகளுடனும் பாசீன தீபகத்துக்கு [Pacinadipaka, இதற்கு கிழக்குத் தீவு என்று பொருள். இலங்கையின் வட முனக்கும் இந்தியாவுக்கு மிடையேயுள்ள ஒரு தீவு இது என்று கருதப்படுகிறது] நாவல்பழத்தை அருந்தப் போவது வழக்கம். மன்னன் வருவதை விரும்பாத அங்கிருந்த மக்கள் அரசன் பழங்களைப் பறித்துண்ணும் நாவல் மரத்துக்கு விஷமுட்டி விட்டனர். இதனால் விஷம் உட்கொண்டு இறந்தான். எனவே, சிறிசங்கபோதி அல்லது சிறிசம்கபோதி மன்னராகப் முடிசூடப்பட்டான். கோதகாபயன் படைகளின் தளபதியானான். சிறிசம்கபோதி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மீண்டும் அத்தியாயம் 36 இல், 74 முதல் 90 வரையிலான வசனங்களில் இரண்டு கற்பனைக் கதைகள் உள்ளன. அரசனுடைய மந்திரியாக இருந்த கோதகாபயன் கிளர்ச்சிக்காரனாக மாறி வடக்கே இருந்து தலைநகர் நோக்கிப் படையெடுத்தான். தன்னுடைய நீர் வடிகட்டியை எடுத்துக் கொண்டு அரசன் தான் மட்டும் தனியாக மற்றவர்களுக்கு கஷ்டம் நேரக்கூடாது என்பதற்காக தென் வாயில் வழியே தப்பி ஓடினான். மேகவண்ணபயன் [Meghavannabhaya] என்றும் அழைக்கப்படும் கோதகாபயன், இவ்வாறு மன்னனாகி பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். தனது ஆட்சியின் பொழுது, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் அறுபது பிக்குகளை அவன் இன்றைய தமிழ்நாட்டின் கடற்கரை வரை துரத்தினார். பேயோட்டுவது போன்ற மந்திரங்களைக் கற்ற, சோழ நாட்டைச் சேர்ந்த சங்கமித்தா [Sanghamitta] என்ற ஒரு பிக்கு, நாடு கடத்தப்பட்ட தேரர் ஒருவருக்குச் சீடராக இருந்து, பின்னர் மகா விகாரை பிக்குகளிடம் வெறுப் படைந்தவராக, இங்கு வந்தார். தூபராமாவில் [Thuparama or Thuparama Dagaba என்பது இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால பௌத்த தூபியாகும். இது இலங்கையின் மிகப் பழமையான தூபியாகவும், நாட்டின் மிகவும் புனிதமான பௌத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது] கூடியிருந்த பிக்குகள் கூட்டத்தில் வலிய நுழைந்து அங்கு சங்கபால பரிவேனாவில் [parivena of Samghapala, சங்கபால பரிவேனா என்பது பண்டைய இலங்கையில் ஒரு துறவி கல்வி நிறுவனம் அல்லது புத்த துறவிகளுக்கான வசிப்பிடமாக இருந்தது.] வசித்த தேரர் சொன்ன வார்த்தைகளை மறுத்துப் பேசினார் அல்லது துப்பராம விகாரையின் பிக்குகளை தோற்கடித்தார். அந்த தூபராமா முதன்மை தேரருடைய பெயர் கோதாபயன் [thera Gothabhaya] என்பதாகும். இவர் அரசனுக்குத் தாய் மாமன் ஆவார். இவர் அரசனுடைய மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவரிடம் மிகவும் திருப்தியடைந்திருந்த மன்னன் தன்னுடைய மூத்த மகன் ஜேத தீசனையும் அல்லது சேட்டதிச்சனையும் [Jetthatissa], இளைய மகன் மகாசேனனையும் [Mahasena] பிக்குவின் பொறுப்பில் விட்டிருந்தான். பிக்கு இரண்டாவது மகனிடம் அதிக அன்பு பாராட்டி வந்ததால் ஜேததீசன் அவரிடம் விரோதம் கொண்டிருந்தான். தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஜேததீசன் அரசனானான். தந்தையின் ஈமச் சடங்கின் போது தன்னுடன் ஊர்வலத்தில் வராத மந்திரிகளை அவன் தண்டிக்க எண்ணினான். முதலில் தம்பியைப் போக விட்டு பின்னால் சடலத்தை எடுத்துச் செல்லச் செய்தான். அதற்குப் பின்னால் மந்திரிகளை வரச் செய்து ஊர்வலத்தின் கடைசியில், தான் அவன் வந்தான். தம்பியும் சடலமும் வாயிலைக் கடந்து வெளியேறியதும் சட்டென்று கதவை மூடச் செய்தான். பின்பு துரோகிகளான மந்திரிகளைக் கொன்று தந்தையின் சிதையைச் சுற்றி அவர்களின் உடல்களைக் கம்பத்தில் நட்டு வைக்கச் செய்தான். இவ்வாறு செய்ததன் காரணமாக ‘கொடிய' என்ற அடைமொழியால் அவன் பின் அழைக்கப் பட்டான். சேட்டதிச்சன் அல்லது முதலாம் சேட்டதிச்சன் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். Part: 99 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 After the death of Sirinaga his son, Tissa ruled for twenty-two years. He forbade bodily injury as punishment. Abhayanaga was the younger brother of the king Tissa. He fell in love with the queen, consort of his brother. He ran away when this was discovered. Later Abhaya collected many Damilas with him and went to fight the king. The king took flight to Malaya, hill country, with his consort on horseback. Abhaya followed suit and killed his brother. Abhaya returned with the queen and ruled eight years. After Abhaya’s death, the son of his brother Tissa, Sirinaga, ruled for two years. Sirinaga’s son Vijaya Kumaraka ruled for one year after the death of his father. There are fictitious tales from verse 58 to 62, and in the end the king was murdered by three Lambakannas: Samghatissa, Samghabodhi and Gothakabhaya. Samghatissa was first consecrated as the king by the other two. He ruled for four years. He was poisoned by the people of Pacinadipaka, and Samghabodhi was consecrated as the king and Gothakabhaya became the commander of the troops. Samghabodhi ruled two years. He was also known as SiriSamghabodhi. There are two fanciful stories in verses from 74 to 90. Gothakabhaya, the treasurer of the king, became a rebel and came to fight the king, SiriSamghabodhi. The king SiriSamghabodhi ran away as he did not want harm come to anyone. Gothakabhaya thus became the king and ruled for thirteen years. He chased about sixty bhikkhus of different sects to the further coast: to the coast of present day Tamil Nadu. A bhikkhu from Cola people came and defeated the bikkhus of Thuparama Vihara or something similar. The king died, and the elder son Jetthatissa ascended the throne. He killed many ministers and impaled them. He was known as the Cruel because of this act. His younger brother was Mahasena. Jetthatissa reigned for ten years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 99 B தொடரும் / Will follow துளி/DROP: 2020 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99A https://www.facebook.com/groups/978753388866632/posts/33671588222489726/?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எல்லாவற்றையும் பாக்கணும் எல்லாத்தையும் பாக்கணும். 😁
-
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
வந்த பின் காக்கும் சிஸ்டம் ************************************ அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஒரு சமூகம் அல்லது முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சமூகம் அல்லது நிர்வாக கட்டமைப்பு அல்லது அரசு ஒரு சம்பவம் நடந்த பின் என்ன செய்தீர்கள் என்று விசாரணை செய்யாது. மாறாக அச் சம்பவம் நடக்கும் முன் அதனை தடுத்து நிறுத்தவே முயற்சிக்கும் வருமுன் காப்பதனையே விரும்பும். சிறந்த திட்டமிடல் என்பது வரமுன் காப்பதே. வந்த பின் காப்பது தோல்வியின் அடையாளம். இன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியத்தில் 50 க்கு மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 39 மாணவர்கள் வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர் பிரதி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தின் போது மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளனர். பதற்றமடைந்துள்ளனர் தங்களது கற்றல் உபகரணங்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு குலைகளை முறித்தும் கையில் அகப்பட்ட பொருட்களை கொண்டும் குளவிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போராடியிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் விமானத்தாக்குதலின் பின் அச்சூழல் எப்படியிருக்குமோ அதையொத்த நிலைமை அங்கு காணப்பட்டது. பாடசாலையில் குளவி கூடு காணப்படுகிறது. இது மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம் எனவே இதனை உடனடியாக அகற்றி தருமாறு பாடசாலை நிர்வாகம் சம்மந்தப்பட்ட தரப்பினர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். ஆதாவது வருமுன் காப்பதற்கு பாடசாலை முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இன்று சம்பவம் இடம்பெறும் வரை சம்மந்தப்பட்டவர்கள் இக் கோரிக்கை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. சம்பவம் நடைப்பெற்ற பின்னரே விழுந்தடித்து ஒடிவந்து குளவி கூட்டை அகற்றுவது பற்றி ஆலோசிக்கின்றனர். இது கவலைக்குரியது. அதிஸ்டவசமாக ஆபத்தான நிகழ்வுகள் எதுவும் இன்று நடந்தேறியிருக்கவில்லை. ஏதேனும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக் கூறுவது? ஏன் இயலுமான விடயங்களில் வர முன் தடுக்க கூடிய திட்டமிடல்கள் இல்லை? போன்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உண்டு. சம்பவத்தின் பின் வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பாதுகாப்பு படையினர், கல்வி அதிகாரிகள், என பலர் வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர். குளவி கூட்டை அகற்றுவது பற்றி திட்டமிட்டனர். நோய் வந்த பின் மருத்துவமனை. பேரழிவு வந்த பின் நிவாரணம். அநியாயம் நடந்த பின் விசாரணை. என்பதனை விட இவற்றை வருமுன் தடுப்பதே புத்திசாலித்தனம். Murukaiya Thamilselvan
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜோஷ் ஹெசல்வூட் காயம் காரணமாக உலக கோப்பையில் விளையாட மாட்டாராம். ஆஸ்திரேலியா பாடு திண்டாட்டம்தான்!🤣
- Today
-
"மூன்று கவிதைகள் / 23"
"மூன்று கவிதைகள் / 23" 'பொங்குக பொங்கல்' கற்ற அறிஞர்கள் வரலாறு பாட கற்புக் கன்னிகள் கோலம் போட உற்றார் உறவினர் கதிரவனை வணங்க ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் புதுக் கலத்தில் வளர்த்த செந்தீயில் பொது வெளியில் தோரணம் ஆட பதுமை கூடி பொங்குக பொங்கல்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [ஏழ்மை, உழைப்பு, செல்வம் & தானம்] ஏழ்மை இருந்தாலும் கல்வியை விடாதே உழைப்பு கட்டாயம் நிறைவேற்றும்! செல்வம் பூட்டி வைப்பதல்ல தானம் கொடுத்து மகிழ்வு காண்பதே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .............................................................................. "மூவெழில் மூன்று" காற்றின் இசையில் கனவுகள் மலர, நினைவுகள் வான் உயர, அமைதியில் உறையும் ஆனந்தக் கற்பனை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ..................................................................... துளி/DROP: 2019 ["மூன்று கவிதைகள் / 23" https://www.facebook.com/groups/978753388866632/posts/33671173965864485/?
-
சிரிக்கலாம் வாங்க
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப் போன்றோரே வெளியிடும் போது தான், "குதிரைக்கு கடவுள் கொம்பு கொடுக்காதது அதன் குணம் அறிந்து தான்!" என்ற சொலவடை பொருத்தமாகத் தெரிகிறது😂!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பார்த்தேன் என்ன அடி ஜபிஎல் பந்து வீச்சாளர்களின் பந்துக்கே அந்த அடி என்றால் இந்த இளம் இங்லாந் பந்து வீச்சாளர்களின் பந்து பெடியனுக்கு தூசு மாதிரி.. என்னஇது கொதாரியாக கிடக்கு ஏனடாப்பா ஆட்டுக்குள்ள மாட்டைவிட நாம முழுசுறோம். போட்டி இன்றே தொடங்கி விட்டதா என்று நாலாபக்கமும் ஓடியாடி பார்த்தா இது வேற போட்டி. என்னா பெரிசு குதிரைக்கு காசு கட்டலையோ?- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்களுடைய எல்லாக் கருத்துகளுக்குமான பதில் இது: "சம்பந்தர் சொன்னதில் 99% தரவுத் தவறுகள் இல்லை" - என்பது தான் நான் எழுதியது. ஆனால், "கதிகாமர் 2012 நிலை கண்டு கிலேசம் கொண்டிருப்பார்" என்பது எனக்கு நம்பக் கஷ்டமான விடயம். அது சம்பந்தரின் வாய் வசனம், என் வாயில் நீங்கள் திணித்தால் தான் உங்கள் கருத்துக்குப் பலம் கிடைக்கும் என்றால், தாராளமாக "சம்பந்தரே ஜஸ்ரின் தான்" என்றும் எழுதி விடுங்கள்😂! இங்கே பேசப்படும் விடயங்கள் எல்லாம், சம்பந்தர் போன்றோர் ஏன் ஆயுதக் குழுக்களை நேசிக்கவில்லை? எப்படி புலிகளுக்கு ஆதரவாக வன்னி மக்களே முன்வந்து போராட முயலவில்லை (வலுக்கட்டாயமாக ஆட் சேர்க்க வேண்டியிருந்தமை), எவ்வாறு சர்வதேச அரங்கில் கதிர்காமர் சுட்டிக் காட்டக் கூடிய விடயங்களைப் புலிகள் செய்தனர்.. இவை பற்றியெல்லாம்பல பல வருடங்களாக cut and dry ஆக, சீரியசாக பலர் எழுதியாகி விட்டது. அந்த சீரியசான பதில்களை வாசிக்காமல் கடந்து போய் விட்டு மீண்டும் வந்து திரித்தல் அரைத்தல், பொரித்தல் என்று சிலர் ஆரம்பிக்கும் போது நிச்சயம் அவர்களுக்கு நக்கல் மூலம் தான் பதில் தர முடியும்! நக்கலுல் எள்ளலும் சுடுகிறதென்றால், தங்கள் கண் மூடித்தனமாக பக்தியில் திரிப்புகளை எழுதுவோரைத் தான் நீங்கள் கட்டுப் படுத்த வேண்டும்!- களைத்த மனசு களிப்புற ......!
பொடியன் பொல்லாதவன் ......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இதனை நிராகரிக்கிறேன். "நரி" ரணிலால் தங்கள் இருப்பிற்கே ஆபத்து என்று கண்டு கொண்ட பின்னர் புலிகள் எடுத்த முடிவு மகிந்தவைக் கொண்டு வருவது என்பது. அப்படிக் கொண்டு வந்த பின்னர் 2005 இல் "அவர் யதார்த்தமாக நடப்பவர் என்கிறார்கள்" என்று அது வரை எந்த சிங்களத் தலைவர் பற்றியும் சொல்லாத கருத்தை மாவீரர் தின உரையிலேயே பிரபாகரன் சொன்னார். இந்தப் பின்னணியில், "எவர் வந்தால் அதிக தீமை மக்களுக்கு?" என்று புலிகள் சீர்தூக்கிப் பார்த்ததாக எங்கேயும் பதிவுகள் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் இங்கே பகிருங்கள், பேசலாம். புலிகளின் இலக்கு, 2004/05 இல் தங்கள் அமைப்பிற்கு இருந்த existential threat இனை நீக்குவது மட்டும் தான். யுத்தம் ஆரம்பித்த பின்னர், வன்னியில் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்த போது, மக்கள் இழப்பைப் பற்றி புலிகள் பெரிதாகக் கரிசனை கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தனர். இதையெல்லாம் நான் உங்களுக்குப் பதிலாக எழுதுவது நீங்கள் வாசித்து, யோசிப்பீர்கள் என்பதால் அல்ல! உங்கள் போன்றவர்களுடைய பக்தியும், மயக்கங்களும் எதிர்கால சந்ததிக்கு வரலாறாக காவப் படும் ஆபத்து இருக்கிறது (ஏற்கனவே AI நாங்கள் செவி மடுக்க விரும்பும் வரலாற்றை எழுதும் படி கேள்வி கேட்கும் பணியை ரஞ்சித் ஆரம்பித்து விட்டார்!). இதைத் தடுப்பது மட்டுமே என் நோக்கம்!- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
கெட்டிக் காரன்! அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சியுங்கள்😎!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியைக் காண முடியலில்லை. இப்போதான் ஓட்டங்களைப் பார்த்தேன். என்னா அடி அடிச்சிருக்கான் பயபுள்ள. அதுவும் 25வது பரிமாற்றத்திலேயே, பையன் 175 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறான். நின்றிருந்தால்....... நினைச்சாலே புல்லரிக்குது.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாட்டுக்கு பாட்டெடுத்து .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ } (2) ஆண் : கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய் ஆண் : தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ பெண் : இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் பெண் : ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே பெண் : ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு ஆண் : மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு ஆண் : மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே ஆண் : மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே ஆண் : ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு பெண் : வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு பெண் : ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் பெண் : நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க ஆண் : தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ........! --- பாட்டுக்குப் பாட்டெடுத்து ---- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இறுதிப் போரை தடுத்து நிறுத்தி மக்களை காக்கும. செயலை செய்யக்கூடய வல்லமை புலிகளுக்கு மட்டுமே இருந்தது. அதை அவர்கள் உரிய நேரத்தில் செய்யவில்லை. 2009 ஜனவரிக்கு பிறகு சம்பந்தர் என்ன பாலசிங்கம் உயிரோடு இருந்திருந்தாலும் அது முடிந்து இருக்காது என்பது இயல்பான பொது அறிவு உடையவர்கள். அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் நவரத்தினம் என்ன புசத்தினாலும் வன்னி மைந்தன் என்ன புசத்தினலும் பொது அறிவு உள்ள மக்கள் இந்த புசத்தலை நம்பப் போவதில்லை. பொது அறிவு இல்லாதவர்களையே அவர்களால் ஏமாற்ற முடியும். புலிகளல் முடியாததை சம்பந்தர் தலைகீழாக நடந்தாலும் முடிந்திருக்காது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்லாந் படு தோல்வி அடைய போகுது...............இந்தியா வீரர்களின் பந்து வீச்சுக்கு அடிப்பது சிரமம்...............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
100 ரண்கள் ..கடந்தவுடன் ...இங்கிலாந்து பயிற்சியாளர்களும் ...பார்வையாளர்களும் பட்ட ரென்சன் ...கண்கொள்ளக்காட்சி....பவுண்டரி எல்லைவரை வந்து அறிவுறுத்தல் கொடுக்கத்தொடங்கி விட்டினம்...- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பார்த்தேன் என்ன அடி ஜபிஎல் பந்து வீச்சாளர்களின் பந்துக்கே அந்த அடி என்றால் இந்த இளம் இங்லாந் பந்து வீச்சாளர்களின் பந்து பெடியனுக்கு தூசு மாதிரி...........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்துக்கு இலக்காக 412 ஓட்டம்...நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது....பார்ப்போம் இந்த 19 வயது ரீமை இலங்கைக்கு அனுப்பி பாகிஸ்தான் விளையாடாத போட்டியன்றூ... காட்சிப் போட்டியில் விளையாட வைக்கலாம் ...இந்திய ஏ அணியே வாங்கிக்கட்டலாம் - “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.