All Activity
- Past hour
-
தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க 05 Feb, 2026 | 02:52 PM நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் பேருந்து உரிமையாளர்கள் தமது போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மற்றுமொருவருக்கு சட்டபூர்வமாக கைமாற்ற முடியும் என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில் 1991ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை சட்டபூர்வமாக வேறொருவருக்கு மாற்ற முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலவி வந்த சட்டதிட்டங்களின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட பேருந்து அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக வேறொருவருக்குப் பெயரிடவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது இருந்தது. இதனால் பேருந்து உரிமையாளர்கள் இத்தொழிலிலிருந்து விலகும்போதும் பேருந்தை விற்பனை செய்யும்போதும் அந்த அனுமதிப்பத்திரத்தை மாற்ற முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இதன் விளைவாக திரைமறைவில் பல்வேறு சட்டவிரோத முறைகள் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட்டு வந்தன. உண்மையான உரிமையாளர் ஒருவராகவும் தொழிலை நடத்துபவர் வேறொருவராகவும் இருந்தமையால் இத்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதில் பாரிய சவால்கள் காணப்பட்டன. பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் நாம் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களது பிரதான கோரிக்கையான அனுமதிப்பத்திர மாற்றத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2026 ஜூன் மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் உரிய நிபந்தனைகளின் கீழ் எவரும் தமது அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக மற்றுமொருவருக்குப் பெயரிட முடியும். இனிவரும் காலங்களில் இத்துறைக்குள் நுழைவதற்கு அரசியல் செல்வாக்குகளோ தனிப்பட்ட அறிமுகங்களோ அல்லது கடிதங்களோ அவசியமில்லை. எவரும் பகிரங்க கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றி இத்தொழிலுக்கு வர முடியும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற ஒரு போக்குவரத்து சேவையை உருவாக்குவதே எமது இலக்காகும். குறிப்பாக நவீன தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இத்துறைக்கு வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய சட்ட நடைமுறையானது இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன். என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237889
-
-
ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
கதையை கிளுகிளுப்புக் கதை என்று படிக்காமல் இருந்தால் சரி 🆗
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் நிதி நன்கொடை 05 Feb, 2026 | 12:27 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் 15 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை First Capital Holdings PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். First Capital Holdings PLC பணிப்பாளர்கள் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரந்தினித் மதநாயக்க மற்றும் திலுனி தனுஷிகா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237875
-
'தேனில் உருவாகும் நச்சு' - குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?
'தேனில் உருவாகும் நச்சு' - குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 25 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 30 ஜனவரி 2026 கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் பாலசேகர் என்கிற 4 வயது சிறுவனுக்கு வயிற்று வலிக்கு மருந்தாக தேன் கொடுக்கப்பட்ட போது மயக்கமடைந்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் சீனிவாசன் சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விளக்கினார். "தேனில் உருவாகும் பொட்டுலினம் என்கிற பொருள் நச்சுத்தன்மையை உருவாக்கி நேரடியாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். சுவாசமும் ரத்த ஓட்டமும் உடனடியாக பாதிக்கப்படும். " என்றார். தொடர்ந்து பேசிய அவர், "சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்யூனோகுளோபின் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது." என்றார். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா என்பது பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளன. குழந்தைகள் பிறந்த உடனே தேன் கொடுப்பது அல்லது தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் கொடுப்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்கின்றன. சௌதி அரேபியா போன்ற வளைகுடா நாட்டிலும் கூட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை மையமாக வைத்து இணைய வழியாக தாய்மார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 52% பேர் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் குடல் அசைவின்மையில் இருந்து சுவாசப் பிரச்னைகள் வரை ஏற்படலாம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது. குமட்டல், வாந்தி, சாப்பிடுவதில் சிக்கல் ஆகியவை இந்த நோயின் பிரதான அறிகுறிகளாக இருந்தாலும் கூடுதல் அறிகுறிகளையும் இந்த ஆய்வு பட்டியலிடுகிறது. அவை முக தசை சுருக்கம் மலச் சிக்கல் முக தசை பிடிப்பு மூளை பாதிப்பு வலிப்பு உடல் வெப்பநிலை குறைவது பட மூலாதாரம்,Getty Images ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பொட்டுலிசம் என்கிற தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (சிடிசி) தெரிவிக்கிறது. தேனை நேரடியாக மட்டுமல்லாமல் உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரவ உணவு ஆகியவற்றில் சேர்த்தும் கூட வழங்கக்கூடாது என அந்த மையம் குறிப்பிடுகிறது. "குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. சிலர் உணவு கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலும் அல்லது தாய்ப்பால் போதவில்லையோ என்கிற கவலையிலும் பால் மற்றும் தேன் ஆகியவற்றை கொடுக்கின்றனர். இது தான் பொட்டுலிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான வித்யா. இதற்கான காரணத்தை விளக்கிய அவர், "பச்சிளம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்காது. அதோடு உணவுகளை செரிமானம் செய்யும் சக்தியும் குறைவாக இருக்கும். மருத்துவமனைகளில் இவை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதோடு குழந்தைகளின் உணவு முறையும் கண்காணிக்கப்படுகிறது." என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Vidhya படக்குறிப்பு,மூத்த குழந்தைகள் நல ஆலோசகர் மருத்துவர் வி வித்யா தேனில் உள்ள கிளாஸ்டிரிடியம் பொட்டுலினம் ஸ்போர்கள் மூலம் உருவாகும் பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும் என்றும் இது மிகவும் தீவிரமான நோய் பாதிப்பான இன்ஃபேன்ட் பொட்டுலிசத்தை (ஐபி) ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்.ஹச்.எஸ்) கூறுகிறது. இன்ஃபேன்ட் பொட்டுலிசம் என்பது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோய் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது. இது தீவிரமான நரம்பியல் பிரச்னைகளுக்கும் வித்திடலாம் என அந்த ஆய்வு கூறுகிறது. இந்த பாதிப்பை உடனடியாக அடையாளம் காண்பது கடினம் எனக் கூறும் மருத்துவர் வித்யா, சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார், "குழந்தைகளின் குடலில் தான் தொற்று பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் சோர்வுற்று இருப்பது, தாய்ப்பால் குடிக்காமல் இருப்பது, வயிறு வீக்கமாக தெரிவது ஆகியவை இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள்," என்றார். குழந்தைகளின் குடல் மற்றும் செரிமான அமைப்பு முறையாக வளர 12 மாதங்கள் ஆகும். அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார். "பொட்டுலிசம் என்கிற பாதிப்பு அனைத்து வயதினருக்கும் வரும். ஆனால் குழந்தைகளிடம் அதன் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும். ஆரோக்கியமற்ற தேன் சாப்பிட்டால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும், ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தேன் சாப்பிட்டாலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். " என்றார் மருத்துவர் வித்யா. "ஒரு வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தேன் ஒரு ஆரோக்கியமான சர்க்கரை. பெற்றோர்கள் தெரிவித்தால் தான் எங்களுக்கு தேன் கொடுக்கப்பட்டதே தெரியவரும் என்றாலும் இது மிகவும் அரிதாகவே நிகழும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre203ey0yyo
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : மேகம் கருக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : மின்னல் சிாிக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : சாரல் அடிக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : இதயம் பறக்குது குழு : தக்குசிக்கு தக்குஜின் பெண் : மேகம் கருக்குது மின்னல் சிாிக்குது சாரல் அடிக்கிறதே என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே பெண் : நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் பெண் : மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு பெண் : நிலாவே வா வா வா நில்லாமல் வா வா வா என்னோடு குளிப்பது சுகம் அல்லவா உன் கரையை சலவை செய்து விடவா பெண் : புறாவே வா வா வா பூவோடு வா வா வா உன்னோட குளிருக்கு இடம் தர வா என் கூந்தலில் கூடு செய்து தர வா பெண் : காற்றை போல் எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது தடைமீறி செல்லும் போது சிறை செய்ய முடியாது பெண் : இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம் இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன் இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய் பெண் : நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் பெண் : கனாவே வா வா வா கண்ணோடு வா வா வா விண்வெளியை அளந்திட சிறகு கொடு விண்மீனில் எனக்கு படுக்கை போடு பெண் : மைனாவே வா வா வா மையோடு வா வா வா என் கண்கள் அழகின் ஒளி பரப்பு என் அழகை பறந்து பறந்து பரப்பு பெண் : பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது அதனால் தான் இரண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது பெண் : பூக்களில் தூங்கும் பனிதுளி அள்ளி காலையில் குளித்துக்கொள்வேன் விடிகிற போது விடிகிறபோது வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹோய் ........! --- மேகம் கருக்குது ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொன்னை விரும்பும் பூமியிலே .........! 😍
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
மின்னஞ்சல் போலியானது - எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கம் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 05:48 PM எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது என எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி வழங்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை அண்மையில் இலட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதியிட்ட மின்னஞ்சலில், “ரஷ்ய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பில் கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு தெரியாமல் அனுப்புமாறு பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மெலிண்டாவுக்கும் பால்வினை நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவருக்கு தெரியாமலேயே உணவில் மருந்தை கலக்க என்னிடம் உதவி கோரினார்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். பில் கேட்ஸ் குறித்த இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக பில் கேட்ஸ் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருத்திப்பதாவது, “எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால், அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை; பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை. எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/237932
-
இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!
இலங்கை, வியட்நாம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் : தென்கொரிய ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு! Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 03:34 PM தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை "இறக்குமதி" செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார். அப்போது அவர், "சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைமை மோசமானால், கிராமப்புறங்களில் உள்ள பிரம்மச்சாரிகள் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கை அல்லது வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து இளம் பெண்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். மக்கள் இல்லாதபோது தொழில்துறையை மீட்டெடுப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? எனக் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உரை யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. வெளிநாட்டுப் பெண்களை ஒரு பொருளாகக் கருதி "இறக்குமதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மனித கண்ணியத்திற்கு எதிரானது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பிட்ட நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியது அந்த நாட்டு மக்களையும், கொரியாவில் வசிக்கும் பல்லின சமூகத்தினரையும் அவமதிக்கும் செயல் எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்ட குவாங்ஜு மேயர் காங் கி-ஜங், "வெளிநாட்டுத் திருமணங்கள் மற்றும் மனிதர்களை இறக்குமதி செய்வது குறித்த கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை" என மேடையிலேயே அதிருப்தி வெளியிட்டார். தென்கொரியாவின் பல கிராமப்புற பகுதிகள் சனத்தொகை குறைவால் அழிவடையும் நிலையில் (Extinction risk) உள்ளன. இந்த வேதனையின் வெளிப்பாடாகவே ஆளுநர் அவ்வாறு பேசினார் என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், ஒரு பொது மேடையில் பெண்களை வெறும் உழைப்பாளர்களாகவும், திருமணக் கூட்டாளிகளாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மற்றும் இனவெறிப் பார்வை இதில் வெளிப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/237899
-
முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்
முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆரம்பக் கட்ட அனுமதி 2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது. இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். பாலின ரீதியாகப் பார்க்கும்போது, மாணவர்களின் விகிதம் 49.5% ஆகவும் மாணவிகளின் விகிதம் 50.5% ஆகவும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையாகக் காணப்படுகிறது. முதலாம் தர அனுமதி - ஒரு பெரும் சரிவு பாடசாலைகளின் ஆரம்பக் கட்ட அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. 2023 இல் 287,639 ஆக இருந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை, 2025 இல் 266,281 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 7.42 சதவீத பாரிய வீழ்ச்சியாகும். குறிப்பாக, மாகாணப் பாடசாலைகளில் முதலாம் தர அனுமதி 260,845 இலிருந்து 239,714 ஆகக் குறைந்துள்ளது. மாவட்ட ரீதியிலான மாணவர் அனுமதி மாற்றங்கள் அதிக மாணவர் சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. https://ibctamil.com/article/fall-in-first-year-student-admissions-moe-1770278171
-
ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
இங்கு எகிப்தில் மர்யம் என்னும் பெயர் பொதுவானது. எனக்கு இங்கு ஒரு மர்யம் இருகின்றாள்
- Today
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதில் இருப்பவை ஒரு 99% உண்மையான தகவல்கள் தானே? "மனித உரிமைகளை எப்போதுமே மதிக்கவில்லை" என்பதை மட்டும் மறுக்கலாம். மறுப்பதற்குரிய செயல்களைப் புலிகள் செய்திருக்கிறார்கள். மற்றபடி டித்த எழுத்தில் காட்டிய பந்தியில் சம்பந்தர் சொல்லியிருப்பதன் சாராம்சம் இப்படி இருக்கிறது: 1. புலிகளை வெளியே இருந்து யாரும் அழிக்கவில்லை, அவர்களாகவே ஜனநாயகமில்லாத தன்மையால் அழிந்தார்கள் (implosion). 2. பலர் புலிகளை அழித்த செயலுக்கு உரிமை கோருகின்றனர். ஆனால், கதிர்காமர் புலிகளைப் பலவீனமாக்கிய முக்கிய நபர், அவர் இன்று இருந்திருந்தால் இன்றைய நிலைமை குறித்து கிலேசம் அடைந்திருப்பார். 3. எங்களைப் புலிவால்கள் (proxies) என்கிறீர்கள். நான் உட்பட பல தமிழ் தலைவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்திருக்கிறோம். பிறகெப்படி எங்களைப் புலிவால்கள் என்கிறீர்கள்? இது போல candid ஆக உண்மையைப் பேசாமல், தற்போதைய சில பா. உக்கள் போல பேசாமல் இருந்தால் மக்கள் ஆதரவு சரியாமல் இருக்கும் போல😂!
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
கடலில் தத்தளித்த குடும்பம்: 2 மணி நேரம் நீந்தி உயிரைக் காப்பாற்றிய 13 வயது 'ஹீரோ' பட மூலாதாரம், ABC News/Briana Shepherd படக்குறிப்பு, 12 வயதான போ மற்றும் எட்டு வயதான கிரேஸ் ஆகியோருடன் ஜோன் மற்றும் ஆஸ்டின். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி 25 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனது தாயையும் இரண்டு உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற, மங்கலான வெளிச்சத்தில், கொந்தளிப்பான நீரில் நீந்திச் சென்ற 13 வயது சிறுவனின் மன உறுதி பாராட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கில் உள்ள ஜியோகிராஃப் விரிகுடாவில் ஒரு குடும்பத்தினர் துடுப்புப் படகு சவாரி மற்றும் கயாக்கிங் செய்து கொண்டிருந்தனர், அப்போது பலத்த காற்று அவர்களின் காற்று நிரப்பப்பட்ட படகுகளை திசைதிருப்பியதாக போலீசார் தெரிவித்தனர். ஆஸ்டின் அப்பெல்பீ என்ற அந்த பதின்ம வயது சிறுவன் உதவி கேட்க கரையை நோக்கி மீண்டும் துடுப்பு அடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது கயாக் படகில் தண்ணீர் புகுந்ததால் மீதமிருந்த 4 கிலோமீட்டர் (2 கடல் மைல்கள்) தூரத்தை நீந்தி கடந்தார். "இந்த குடும்பத்தினர் காட்டிய துணிச்சல், வலிமையும் அசாதாரணமானது, குறிப்பாக எச்சரிக்கையை எழுப்ப 4 கி.மீ நீந்திய அந்த சிறுவன்," என்று நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த சிறுவனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார். "அவர் முதல் இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட்டுடன் நீந்தினார்," என்று அவர் ஏபிசி நியூஸிடம் கூறினார். "அந்த துணிச்சலான சிறுவன் லைஃப் ஜாக்கெட்டுடன் சென்று சேரமுடியாது என்று நினைத்தார், அதனால் அதை கைவிட்டார், அடுத்த இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நீந்தினார்." வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 18:00 மணிக்கு சிறுவன் உதவிக் கோர முடிந்தது. இது கடற்கரையில் காணாமல் போன சிறுவனின் குடும்பத்தினரை தேடும் பணியைத் தூண்டியது என்று காவல்துறை திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 3 பேர் கண்டுபிடிப்பு சிறுவனின் 47 வயது தாய், அவரது மற்றொரு மகன் (12), மற்றும் எட்டு வயது மகள் ஆகியோர் 20:30 மணியளவில், கடற்கரையில் சுமார் 14 கி.மீ தொலைவில் ஒரு துடுப்புப் பலகையில் தொங்கிக் கொண்டிருந்ததை மீட்பு ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்தனர். "ஒரு தன்னார்வ கடல் மீட்புக் கப்பல் அவர்களின் இடத்திற்கு அனுப்பப்பட்டது, மேலும் மூவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு கரைக்குத் திரும்பினர்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடல் நிலைமைகள் எவ்வளவு விரைவாக மாறக்கூடும் என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்று ஆய்வாளர் ஜேம்ஸ் பிராட்லி கூறினார். "அதிர்ஷ்டவசமாக, மூன்று பேரும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர், இது அவர்களின் உயிர்வாழ்வுக்கு பங்களித்தது," என்று அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். "13 வயது சிறுவனின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது - அவனது உறுதியும் தைரியமும் இறுதியில் அவனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் உயிரைக் காப்பாற்றின." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அந்தக் குடும்பம் மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் பே-யில் ஒரு விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தனர். சிறுவன் கூறுவது என்ன? துணிச்சலோடு குடும்பத்தை காப்பாற்றிய சிறுவன் பிபிசியிடம் உரையாடியபோது… "நான் ஒரு ஹீரோ என்று நினைக்கவில்லை - நான் என்ன செய்யவேண்டுமே அதை செய்தேன்" என்றார். இரண்டு துடுப்புப் பலகைகளில் ஒட்டிக்கொண்டு தண்ணீரில் விட்டுச் சென்ற நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, ஆஸ்டின் அப்பெல்பீ இறுதியாக கரையை அடைந்தபோது, அவரது தாயார் ஜோன், சகோதரர் பியூ மற்றும் சகோதரி கிரேஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பது அவருக்குத் தெரியாது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையிலிருந்து பல மைல்கள் தூரத்தில் கடலுக்குள், அலைகள் மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தன, வெளிச்சம் மங்கத் தொடங்கின. அந்த நேரத்தில் தனது மகனுக்கு என்ன ஆனதோ என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜோன் இறுதியாக மீட்புப் படகைக் கண்ட பிறகு, தனது மகன் பாதுகாப்பாக இருப்பதை அவர் அறிந்தார். கடற்கரையில் ஒரு குடும்ப நாளாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, ஜோனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 10 மணி நேரக் கடினமான சோதனையாக முடிந்தது. "ஆஸ்டின் வெற்றி பெறவில்லை என்று நான் கருதினேன்," என்று 47 வயதான ஜோன் பிபிசியிடம் கூறினார். 'ஒரு கடினமான போர்' பின்னர் அந்தக் குடும்பம் பெர்த்தில் உள்ள வீட்டிற்கு திரும்பவிருந்தது. நீரில் இரண்டு துடுப்புப் பலகைகள் மற்றும் ஒரு கயாக் படகுடன் "கொஞ்சம் வேடிக்கையாக" இருந்ததாக ஜோன் நினைவு கூர்ந்தார்.. ''காற்று வேகமாக வீசத் தொடங்கியது. அங்கிருந்து எல்லாம் மாறிவிட்டது. நாங்கள் துடுப்புகளை இழந்தோம், மேலும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டோம்'' மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்டலப் கடற்கரையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்வதைக் கண்ட ஜோன், தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார் - ஆனால் அவரால் 12 வயது பியூவையும் எட்டு வயது கிரேஸையும் தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை. "நாங்கள் கடற்கரையிலிருந்து அவ்வளவு தொலைவில் இல்லை என்று தோன்றியதால், உதவி பெற முயற்சிப்பதற்காக ஆஸ்டினை அனுப்பினோம்," என்று அவர் கூறினார். ஆஸ்டின் கயாக்கை எடுத்துக் கொண்டார், ஆனால் அது மோசமாக சேதமடைந்து ஏற்கனவே தண்ணீரில் மூழ்கிவிட்டதை யாரும் உணரவில்லை. "அது கவிழ்ந்து போக ஆரம்பித்தது, பின்னர் நான் ஒரு துடுப்பை இழந்தேன், நான் சிக்கலில் இருப்பதை அறிந்தேன்," என்று ஆஸ்டின் நினைவு கூர்ந்தார். "நான் என் கையால் துடுப்பு போட ஆரம்பித்தேன்." கவிழ்ந்த கயாக்கைப் பிடித்துக் கொண்டு, "தண்ணீரில் ஏதோ ஒன்றைப் பார்த்தேன்" என்று கூறும் ஆஸ்டின், ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார். அவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னுடைய குடும்பத்தினரை இழந்திருந்தார், அவர்களும் அவரைப் பார்க்காமல் போய்விட்டனர். ஜோனும் குழந்தைகளும் கடலில் அடித்துச் செல்லப்பட்டபோது, அலைகள் அதிகமாக பெரிதாகிக் கொண்டே போனதால், போர்டுகளில் நிலைத்து நிற்பது மிகவும் கடினமானதாக மாறியது. அவர்கள் அனைவரும் உயிர்காப்பு ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் உணவும் நீரும் எதுவும் இல்லை. இதற்கிடையில், ஆஸ்டின் கரைக்கு செல்ல 4 கிமீ (2 கடல் மைல்கள்) நீந்தத் தொடங்கினார், சிறிது நேரத்திற்குப் பிறகு அது அவருக்கு உதவாததால் தனது சொந்த லைஃப் ஜாக்கெட்டைக் கைவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரம் முழுவதும், பிரார்த்தனை, கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் "மகிழ்ச்சியான எண்ணங்கள்" தான் "மிகவும் பயந்த" 13 வயது சிறுவனை தொடர்ந்து உற்சாகப்படுத்தியது. "நான் அம்மா, பியூ மற்றும் கிரேஸைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்கள் மற்றும் என் காதலியைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன் - எனக்கு உண்மையிலேயே நல்ல நண்பர்கள் கூட்டம் இருக்கிறது," என்று அவர் கூறினார். "நான் தரையில் விழுந்தபோது, நான் இப்போது எப்படி நிலத்தில் இருக்கிறேன் என்று நினைத்தேன் - இது ஒரு கனவா?" குடும்பத்தை பற்றி அவருக்கு தோன்றியது "இன்னும் அங்கே உயிருடன் இருக்கலாம் - நான் அவர்களைக் காப்பாற்றச் செல்ல வேண்டும்". உள்ளூர் நேரப்படி சுமார் 18:00 மணி (GMT 10:00) ஆகிவிட்டது, கடைசியாக அவர் கரையில் இருந்த தாயின் பையை எடுத்து உதவிக்கு அழைத்தார். இந்த அழைப்பு ஒரு பெரிய தேடலைத் தூண்டியது என்று போலீசார் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். அழைப்பு விடுத்த பிறகு மயங்கிப் போன ஆஸ்டின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தனது தந்தையை அழைத்தார். பின்னர், சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தனர். "அது என்னால் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்" என்று ஆஸ்டின் கூறினார். கடலின் நடுவே, ஜோன் தனது இளைய குழந்தைகளைப் பிடித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தனர், அதற்குள் இருட்டும் முழுமையாக சூழ்ந்துவிட்டது. ஆஸ்டினுக்கு ஏதோ மோசமானது நடந்திருக்கலாம் என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது. படகு நெருங்கி வருவதைக் கண்டதும் ஜோனால் நிம்மதியாக இருக்கக்கூட முடியவில்லை, குழந்தைகளை காப்பாற்ற தீவிரமாக போராடிக்கொண்டிருந்தார். ஆஸ்டின் பள்ளிக்குத் திரும்பி வந்திருக்கிறார் - அவர் கால்கள் மிகவும் வலித்திருந்ததால், ஊன்றுகோலில்தான் இருக்கிறார். மக்கள் தொடர்ந்து அவரை ஒரு ஹீரோ என்று கூறினாலும், அவர் தன்னை அப்படியாகக் கருதவில்லை. அது ஒரு "கடினமான போர்" என்று அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், மற்றவர்கள் ஆஸ்டினைப் புகழ்ந்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழுவின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த இளைஞனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dvzdnp345o
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
அநுர ஆட்சிக்கு முன்னரே நிலைமை மாறி விட்டது. ஒரு உதாரணம். கொத்தலாவல பாதுகாப்புத் துறைப் பல் கலைக்கு வடக்கு கிழக்கில் இருந்தும் இளையோர் கற்கச் செல்கிறார்கள். இது நடக்க முதல் இன்னொரு விடயம் செய்தார்கள். உயர்தர வகுப்பு மாணவர்களை "தலைமைத்துவப் பயிற்சி" என்று அழைத்துச் சென்று, பெரிதாக தேச பக்தி, சிங்கக் கொடி என்று தீத்தாமல், முறையான தலைமைத்துவப் பயிற்சி, நேரம் தவறாமை என்பவற்றைப் பயிற்றுவித்திருக்கிறார்கள். இலங்கை இராணுவமே நடந்தி வரும் ஒரு பயிற்சி இது, சென்று வந்த இளையோர் தங்கள் வாழ்க்கை மாறியிருக்கிறது என்கிறார்கள். இப்படி சிங்களத் தரப்பு கடந்த 16 வருடங்களில் அணுகுமுறையை மாற்றி வென்று வருகிறது. தமிழ் தரப்பு என்ன செய்கிறது? தமக்கு கருத்து ரீதியில் ஒத்து வராத ஒரிரு அரசியல் வாதிகளை அகற்றினால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற முட்டாள் தனமான கனவில் குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டு நிற்கும் காளைமாடுகள் போல நடந்து கொள்கிறது ஒரு தரப்பு. இந்தத் தரப்பிற்கு அருகிலேயே நிற்க விருப்பமில்லாமல் சாதாரண மக்கள் தம் வாழ்வும் என ஒதுங்கி விட்டார்கள். #மோட்டுச் சிங்களவன்#ஆளப் போறான் தமிழன்😇!
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
‘எனது திருமண வாழ்க்கையின் மிக வலிமிகுந்த காலங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது’ ; எப்ஸ்டீன் ஆவணங்களில் முன்னாள் கணவர் பெயர் இடம்பெற்றது குறித்து மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் Published By: Digital Desk 3 05 Feb, 2026 | 10:49 AM மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய அமெரிக்க நீதித்துறை ஆவணங்களில், தனது முன்னாள் கணவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவுநருமான பில் கேட்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது, தனது “திருமண வாழ்க்கையின் மிக வலிமிகுந்த காலங்களை மீண்டும் கிளறியுள்ளதாக” கோடீஸ்வர பரோபகாரரும் சமூக செயற்பாட்டாளருமான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் என்.பி.ஆர் (NPR) ஊடகத்தின் ‘Wild Card’ என்ற பொட்காஸ்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தாம் “நம்பமுடியாத சோகத்தை” உணர்வதாகவும், அந்த ஆவணங்களில் தனது முன்னாள் கணவருர் உட்பட, பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், தங்களது நிலைப்பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். “இந்தக் குழப்பங்கள் மற்றும் அசுத்தங்களிலிருந்து நான் விலகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்தார். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின்னர், பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அமெரிக்க நீதித்துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களில், ஜெப்ரி எப்ஸ்டீன், பில் கேட்ஸுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய் ஏற்பட்டதாக கூறியுள்ள குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூற்றுகள் குறித்து பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், “நிரூபிக்கப்பட்ட, நம்பகத்தன்மையற்ற பொய்யரிடமிருந்து வந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் முழுமையாகத பொய்யானவை” என்று தெரிவித்தார். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் எந்த நபராலும் பில் கேட்ஸ்மீது பாலியல் தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டு இதுவரை முன்வைக்கப்படவில்லை. மேலும், இந்த ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது எந்தவொரு குற்றச் செயலையும் குறிக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொட்காஸ்டில் தொடர்ந்து பேசிய மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், “அந்த விவரங்கள் வெளிவரும் போதெல்லாம் அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில், அது எனது திருமண வாழ்க்கையின் மிக மிக வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது” என்று கூறினார். “இன்னும் எஞ்சியிருக்கும் கேள்விகள் எவை இருந்தாலும், அவை அந்த நபர்களுக்கும், எனது முன்னாள் கணவருக்கும் உரியவை. அவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும்; நான் அல்ல” என்று தெரிவித்தார். அவர்களின் விவாகரத்திற்கு முன்னரே, எப்ஸ்டீனுடன் தனது கணவரின் தொடர்பு குறித்து மெலிண்டா அதிருப்தியடைந்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. விவாகரத்து அறிவிக்கப்பட்ட பின்னர், 2019 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவருடன் தனக்கு தொடர்பு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். 2013 ஜூலை 18 திகதியிட்ட இரண்டு மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை பில் கேட்ஸுக்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. குறித்த மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து அதே கணக்கிற்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் பில் கேட்ஸுடன் தொடர்புடைய எந்த மின்னஞ்சல் முகவரியும் காணப்படவில்லை. இந்த மின்னஞ்சல்களில் ஒன்றில், “ரஷ்யப் பெண்களுடன் ஏற்பட்ட உறவுகளின் விளைவுகளை சமாளிக்க” பில் கேட்ஸுக்கு மருந்துகள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளதுடன், மற்றொன்றில் அவரது நட்பு முறிந்தது குறித்த புலம்பல்களும் இடம்பெற்றுள்ளன. நீதித்துறையால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், பிரபலங்கள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் உலக அரசியல் தலைவர்களுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த பரந்த தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக தண்டனை பெற்ற பின்னரும், இந்த தொடர்புகள் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு பாலியல் கடத்தல் வழக்கில் விசாரணைக்காகக் காத்திருந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் நியூயோர்க் சிறையில் உயிரிழந்தார். https://www.virakesari.lk/article/237863
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
"தேர்தலைப் பெருமளவு தமிழ் மக்கள் புறக்கணித்தால், யாருக்கு வாக்கு ரீதியில் அனுகூலம்?" என்று உய்த்துணர இயலாத, சாதாரண எண் கணிதக் கணக்குப் பார்க்க இயலாத தலைமை தான் அந்த நேரம் தேர்தல் புறக்கணிப்பை ஊக்குவித்தது என்கிறீர்கள்? "சரி தான்" என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.😇 ரணிலும் புலிகளை அழித்திருப்பார், ஆனால் கருணா பிரிப்புப் போல மேலும் செய்து அழித்திருப்பார். ஆனால், மகிந்தவைத் தேர்வு செய்து புலிகள் எதிர்பார்த்தது, பெரும் போர் நிகழ்ந்து "உலக நாடுகள் தட்டிக் கேட்டு, ஈழம் பெற்றுத் தரும்" என்ற எதிர்பார்ப்பில். இந்த எதிர்ப் பார்ப்பிற்கு எதிராகத் தான் மேற்கு நாடுகளின் எச்சரிக்கை இருந்திருக்கிறது. பாலசிங்கத்தாரை ஓரங்கட்டாமல் இருந்திருந்தால் இது விளங்கியிருக்கும். எப்படியானாலும், கர்மா போல வந்து புலிகளின் வினோதமான "மகிந்த ஆதரவு" நிலையே அவர்களை அழித்து விட்டது. அநியாயமாக புலிகள் தங்களுடன் தடுத்து வைத்திருந்த வன்னி மக்களும் அழிந்தார்கள். உங்களைப் போன்ற புலத் தமிழர்களோ "மோட்டுச் சிங்களவனுக்கு புலிகள் டிமிக்கி கொடுத்தார்கள்" என்ற கஞ்சா மயக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை😂.
-
பாஜகவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தொழிலதிபர்கள்
பாஜகவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தொழிலதிபர்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ராகவேந்திர ராவ் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி பிபிசி செய்தியாளர்கள் 3 பிப்ரவரி 2026 உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது. இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது. இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%. இந்திய நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற எந்தவொரு நிறுவனமும் தேர்தல் அறக்கட்டளையை அமைக்க முடியும். இந்திய குடிமகன் எவரும் அல்லது இந்தியாவில் பதிவுபெற்ற எந்தவொரு நிறுவனமும் இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family - ஒரு மூதாதையரின் வழித்தோன்றல்களைக் கொண்ட குடும்பத்தைக் குறிக்கிறது.) அல்லது இந்தியாவில் வசிக்கும் நபர்களின் குழு ஆகியோர் இந்த தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க முடியும். பின்னர், இந்த தேர்தல் அறக்கட்டளைகள் அந்தப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கும். இதுதவிர, தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதற்கு பதிலாக எந்தவொரு குடிமகனும் தனிப்பட்ட முறையில் நேரடியாகவும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க முடியும். இந்த நன்கொடை ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால், அரசியல் கட்சிகள் அந்த தகவலை ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். மற்றொருபுறம் , காங்கிரஸ் 2024-25 நிதியாண்டில் 517 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்றதாக ஒரு செய்தி கூறுகிறது. அதில், 313 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக கிடைத்துள்ளன. மற்றொரு செய்தி காங்கிரசுக்கு ரூ. 522 கோடி கிடைத்துள்ளதாக கூறுகிறது. எனினும், இந்த தகவலை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அதே நிதியாண்டில் ரூ. 184.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது, இதில் 153.5 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கிடைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அதிகமான நன்கொடையை பாஜக பெற்றிருப்பதால், அக்கட்சிக்கு அதிகமாக நன்கொடையளித்த தனிநபர்கள் யார் என்பதை அறிவது சுவாரஸ்யமானது. கையாண்ட அணுகுமுறை என்ன? 2024-25ஆம் நிதியாண்டில் பெற்ற நன்கொடை குறித்து பாஜக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இது ஆராயப்பட்டது. 20,000 ரூபாய்க்கும் அதிகமாக அக்கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது. ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பலமுறை ஒரு கட்சிக்கு நன்கொடை அளித்திருந்தால், அந்த நிதியாண்டில் அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையை அறிவதற்காக, அவை ஒட்டுமொத்த தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது. கட்சிகளின் நிதிப் பங்களிப்பு அறிக்கைகள் பி.டி.எஃப். வடிவத்தில் வெளியிடப்பட்டன. அது நகலெடுக்கக் கூடியதாக இருந்தது, ஆனால் பெயர்களிலும் நன்கொடைத் தொகைகளிலும் பல பிழைகளும் முரண்பாடுகளும் இருந்தன. இதன் காரணமாக, தானியங்கி கருவிகள் துல்லியமான முடிவுகளைத் தராமல் போகலாம். எனவே, அனைத்துத் தரவுகளும் மூல ஆவணத்தின் பக்கங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளன. அதிகமாக நன்கொடை அளித்த தனிநபர்கள் 1. சுரேஷ் அம்ருதல் கோடக் இவர் பாஜகவுக்கு மிக அதிகமாக நன்கொடை அளித்த தனிநபராக உள்ளார். 2024-25 நிதியாண்டில் அவர் பாஜகவுக்கு ரூ. 30 கோடி நன்கொடை அளித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 7.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் இந்திய பருத்தி துறையில் நன்கு அறியப்பட்ட நபராவார். "இந்தியாவின் பருத்தி மனிதர்" என அவர் அறியப்படுகிறார். இந்திய பருத்தி சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். 2022-ஆம் ஆண்டு கோடக்கின் தலைமையில் இந்திய பருத்தி கழகத்தை மத்திய அரசு அறிவித்தது. 2. அல்லா தாக்ஷாயனி இவர் 2024-25 நிதியாண்டில் பாஜகவுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை செய்துள்ளார். இவர் ராம்கி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆவார். ராம்கி குழுவின் பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவு (CSR)தான் ராம்கி அறக்கட்டளை. இது 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, சமூக நலன் சார்ந்து முதன்மையாக செயல்படுகிறது. ராம்கி குழுவின் இணையதளத்தின்படி (https://ramky.com), இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 4.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். சாலைகள், சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை சார்ந்த திட்டங்களிலும் இந்நிறுவனம் பணியாற்றுகிறது. அரசு-தனியார் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவின் 55 நகரங்களில் இதற்கு அலுவலகங்கள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அலுவலகங்கள் உள்ளன. அல்லா தாக்ஷாயனியின் கணவர் அல்லா அயோத்யா ராமி ரெட்டி. இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, மாநிலங்களவை உறுப்பினர்களுள் இரண்டாவது பணக்கார நபர் அயோத்யா ராமி ரெட்டி. அந்த அறிக்கையின்படி, அச்சமயத்தில் அவருக்கு 2,577 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் இருந்தன. தேசிய அளவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மத்திய அரசின் சில மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளது, இது இரு கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை காட்டுகிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரசியல் சூழல் சற்று வித்தியாசமானது. ஒய்எஸ்ஆர் கட்சியை எதிர்க்க பாஜக தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி ஆந்திர பிரதேச தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதாவது, இரு கட்சிகளுக்கும் இடையே டெல்லியில் வியூக ரீதியிலான கூட்டணியும் ஆந்திராவில் கடுமையான போட்டியும் நிலவுகிறது. பட மூலாதாரம்,Getty Images 3. தினேஷ் சந்திர அகர்வால் தினேஷ் சந்திர அகர்வால் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் 21 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். டிஆர்ஏ இன்ஃப்ராகான் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இவர். இந்நிறுவனம் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும். 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் பாஜகவுக்கு 61.78 கோடி ரூபாயை நன்கொடை அளித்துள்ளது. பத்திரிகை தகவல் பணியகம் (PIB) கடந்தாண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தினேஷ்சந்திர ஆர் அகர்வால் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 121 கிமீ நீளமுள்ள குவாஹாட்டி ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 5,729 கோடி. 4. ஹர்திக் அகர்வால் ஹர்திக் அகர்வால் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் ரூ. 20 கோடி நன்கொடை அளித்துள்ளார். தினேஷ் சந்திர அகர்வாலின் மகனான ஹர்திக் அகர்வால் டிஆர்ஏ இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். 5. ரமேஷ் குன்ஹிகன்னன் இவர் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் 17 கோடி ரூபாயை நன்கொடை அளித்துள்ளார். இவர் நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் மற்றும் பணக்காரர். மைசூரை தளமாக கொண்டு செயல்படும் கென்ஸ் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனராவார். 2024-25ஆம் நிதியாண்டில் மட்டும் கென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 11 கோடி நன்கொடை அளித்துள்ளது. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பிஐபி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, குஜராத் மாநிலம் சனந்த் நகரத்தில் இந்நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தி அலகை அமைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது கென்ஸ் டெக்னாலஜியின் துணை நிறுவனமாகும். PIB கூற்றின்படி, இந்த அலகு, 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 60 லட்சம் சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் இந்த அலகு அமைக்கப்படுகிறது. செய்திகளின்படி, இந்த அலகின் மொத்த மதிப்பு ரூ. 3,307 கோடி. இதில், இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின்கீழ் மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு ரூ. 1,653.5 கோடி நிநதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் குஜராத் அரசு ரூ. 661.4 கோடி முதலீடு செய்துள்ளது. கென்ஸ் நிறுவனம் இத்திட்டத்தில் ரூ. 992.1 கோடி முதலீடு செய்துள்ளது. நன்கொடை அளித்துள்ள பாஜக தலைவர்கள் 2024-25ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ள தனிநபர்களுள் பாஜக தலைவர்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட நபர்களும் உள்ளனர். உத்தராகண்டை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பியும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திரிவேந்திர சிங் ராவத் அக்கட்சிக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 113 ரூபாயை நன்கொடை அளித்துள்ளார். ஒடிஷாவை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி பைஜெயந்த் ஜெய் பாண்டா ரூ. 6 லட்சத்தையும் மத்திய அமைச்சர் ஜுவால் ஒராம் ரூ. 5 லட்சத்தையும் நன்கொடையாக அளித்துள்ளனர். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பாஜகவுக்கு ரூ.3 லட்சத்தை பலமுறை 25,000 ரூபாயாக பிரித்து நன்கொடையாக அளித்துள்ளார். அசாமை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி பரிமல் ஷுக்லா பைத்யா ரூ 3 லட்சத்தையும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரூ 1 லட்சத்தையும் நன்கொடையாக அளித்துள்ளனர். ஒடிஷாவை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி நபா சரண் மஜ்ஹி ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி தபிர் கவோ 1,59,817 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். அசாமை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் மொத்தமாக ரூ. 27.25 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இவர்களுள் ஏழு பேர் அசாம் அரசில் அமைச்சர்களாக உள்ளனர். ஒடிஷாவை சேர்ந்த பாஜக எம்.பிக்களான சம்பிட் பத்ரா மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி இருவரும் தலா ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இதுதவிர, ஒடிஷாவை சேர்ந்த 49 எம்எல்ஏக்கள் மொத்தமாக சுமார் 55 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74w07kzvw0o
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 98 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 98 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 36: மகல்ல நாகனுடைய [Mahallaka Naga] மறைவுக்குப் பின்பு அவனுடைய மகன் பாதிக தீசன் [Bhatika Tissa] இலங்கையில் இருபத்திநான்கு வருடம் ஆட்சி செய்தான். பாதிக தீசன் இறந்த பிறகு அவனது தம்பி கனித தீசன் அல்லது கனித தீசகன் [Kanittha Tissa,also known as Kanitu Tis] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். நாகதீபத்தில் உள்ள ஆலயத்தைப் புனர்நிர்மாணம் செய்தான். இது நாகதீபத்தில் உள்ள ஒரு கோயில், ஒரு புத்த விகாரை அல்ல என்பதை நினைவில் கொள்க. இவைகளுக்கு அத்தியாயம் 36, வசனம் 6 இல் இருந்து 9 வரை பார்க்கவும், "பாதிக தீசனுடைய மறைவுக்குப் பின்பு அவனுடைய தம்பி கனித தீசகன் இலங்கைத் தீவில் பதினெட்டு வருட காலம் ஆட்சி செலுத்தினான். பூதாராமாவிலிருந்த மகாநாக தேரரிடம் [thera Mahanaga in the Bhutarama] பெருமதிப்புக் கொண்ட அவன் அவருக்காக அற்புதமான முறையில் அபயகிரியில் ரத்தின பாஸாதாவைக் [Ratanapasada in the Abhayagiri] கட்டினான். மேலும் அபயகிரியில் பெரிய மதிலையும் பரிவேனாவையும் [a wall and a great parivena] அமைத்தான். அதுபோல் மணிசோம [Manisoma] விகாரையையும் அமைத்தான். அந்த இடத்தில் சேதியத்துக்கு [cetiya] ஒரு ஆலயத்தைக் கட்டினன். அதேபோல் அம்பாதல தூபத்தையும் [Ambatthala-thupa] அமைத்தான். மேலும் நாகதீபத்திலுள்ள ஆலயத்தைப் புனர்நிர்மாணம் செய்தான்." பூதாராமா - பண்டைய இலங்கையில் கட்டப்பட்ட ஒரு மடாலயம் அல்லது கோயில், புத்த துறவிகளுக்கான ஒரு இடமாக கட்டப்பட்டிருக்கலாம்? அபயகிரியில் உள்ள ரத்தின பாஸாதா - அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி மடாலயத்திற்குள் உள்ள ஒரு அமைப்பு, துறவற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பல மாடி கட்டிடம் ஆகும். "ரத்தின பாஸாதா" என்றால் "நகை அரண்மனை" அல்லது "ரத்தின மாளிகை", அதாவது, இது ஒரு அற்புதமான அமைப்பு என்பதைக் குறிக்கிறது. பரிவேனா என்பது ஒரு துறவற கல்வி நிறுவனம் அல்லது துறவிகளுக்கான குடியிருப்பு வளாகம் ஆகும். ஆனால் அது ஒரு குறிப்பிடத்தக்க மடத்தையும் குறிக்கலாம். மணிசோம விகாரை - மணிசோம என்ற ஒரு நபரின் பெயரிடப்பட்ட ஒரு புத்த மடாலயம் (விகாரை). அவர் ஒரு முக்கியமான நன்கொடையாளர் அல்லது ஒரு மரியாதைக்குரிய துறவியாக இருக்கலாம்? அம்பாதல தூபம் அல்லது தூபி - மிஹிந்தலையில் இருப்பதாக நம்பப்படும் அம்பாதலத்தில் அமைந்துள்ள ஒரு தூபி (பௌத்த நினைவுச்சின்னம்). மிஹிந்தலை என்பது பேரரசர் அசோகரின் மகன் அருகதர் [Arhat or Arahant] மகிந்த முதன்முதலில் இலங்கைக்கு புத்த மதத்தை அறிமுகப்படுத்திய புனிதத் தலமாகும். சேதியம் - புத்தர் அல்லது மதிப்பிற்குரிய துறவிகளின் நினைவுச்சின்னங்களை வைப்பதற்காக கட்டப்பட்ட ஒரு தூபி அல்லது புனித நினைவுச் சின்னத்தைக் குறிக்கிறது. பொதுவாக, சேதியங்கள் பௌத்த மரபுகளில், குறிப்பாக இலங்கையில் குறிப்பிடத்தக்க வழிபாட்டுத் தலங்களாகும். மேலும் அவை வணக்கத்திற்குரிய பொருட்களாகவும் செயல்படுகின்றன. அருகதர் - ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy) அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு குறிப்பிடுகிறது. கனித தீசகனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன், குஜ நாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] ஒரு வருடம் ஆட்சி செய்தான். குஜ நாகனுடைய தம்பி குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuncanaga] என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு அரசனாகி இலங்கையை இரண்டு வருட காலம் ஆண்டான். குஞ்ச நாகனுடைய மனைவியின் தம்பி முதலாம் சிறிநாகன் [Sirinaga] என்பவன், முதல் படைத் தலைவனாக இருந்த பொழுது, அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினான். போதிய படை வீரர்களைத் திரட்டியதும் தலைநகரைத் தாக்கினான். அரசனுடைய படைகளுடன் போரிட்டு குஞ்ச நாகனைத் தோற்று ஓடும்படி செய்தான். இலங்கையின் ஆட்சியைத் தன் வசப்படுத்திக் கொண்டு அனுராதபுரத்தில் பத்தொன்பது வருட காலம் ஆண்டான். Part: 98 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 36: After the death of Mahalaka Naga his son, Bhatikatissaka reigned for twenty-four years. After the death of Bhatikatissaka, his younger brother Kanitthatissaka ruled for eighteen years. He ordered the restoration of the temple in Nagadipa. Note this is a temple in Nagadipa, and not a Vihara. After the death of Kanitthatissaka his Khujjanaga ruled for one year. His younger brother Kuncanaga killed the king and ruled two years. Commander of the troops was Sirinaga, and he was the brother of the consort of the king. He became the rebel and fought the king. The king ran away. Sirinaga ruled for nineteen years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 99 தொடரும் / Will follow துளி/DROP: 2018 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 98 https://www.facebook.com/groups/978753388866632/posts/33653107911004424/?
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
- கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 8 🌙 பாகம் 08 - துபாய் வணிக வளாகத்தில் [துபாய் மாலில்] மாயாஜால மாலை துபாயில் மாலை மலர்ந்தது, நட்சத்திரங்கள் பூமிக்கு வருவது போல நகர விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கின. தாத்தாவும் பேரன்களும் துபாய் மாலுக்கு [Dubai Mall] திரும்பவும் சென்றனர். ஆனால் இந்த முறை, சாகசம் வித்தியாசமாக இருந்தது - அது மாயாஜாலமாகவும், வண்ணமயமாகவும் [magical, colorful], குழந்தைகளை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. மீண்டும் மாலுக்குள் நுழைந்ததும் திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரினின் கண்கள் விரிந்தன. மின்னும் விளக்குகளால் அந்த இடம் பிரகாசித்தது, வானவில்லின் ஒவ்வொரு நிறத்திலும் நீரூற்றுகள் [fountains] பாய்ந்து கொண்டு மின்னின. பிரமாண்டமான உட்புற நீர்வீழ்ச்சி [indoor waterfall] சூடான விளக்குகளின் கீழ் பிரகாசித்து, பளிங்குத் தரைகளில் மின்னும் வடிவங்களைப் பிரதிபலித்தது. “தாத்தா... இது தானா பாட்டி சொல்லும் தேவலோகம்?” நிலன் தனது தம்பியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கிசுகிசுத்தான். முதல் முதலாக அவர்கள் துபாய் மீன் காட்சியகம் மற்றும் நீருக்கடியில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு [Aquarium and Underwater Zoo] சென்றார்கள். அங்கு கற்பனை செய்யக் கூடிய அனைத்து வண்ணங்களிலும் மீன்கள் வைக்கப்பட்டிருந்தன. நியான் மீன்களின் ["Neon fish" / அமேசான் படுகையில் இருந்து வரும் ஒரு சிறிய, பிரகாசமான வண்ண மீன், அதன் மாறுபட்ட நீலம் மற்றும் சிவப்பு வரிக்கு பெயர் பெற்றது.] கூட்டம் ஒரு சரியான ஒழுங்கில் நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டு மயங்கிய நிலன் கண்ணாடியில் தனது மூக்கை அழுத்தி அதை அருகில் பார்த்து ரசித்தான். தண்ணீரில் அமைதியாக சறுக்கிச் செல்லும் ஒரு சிறிய சுறாவை திரேன் சுட்டிக்காட்டி, அதை ஒரு நட்பு கடல் டிராகன் [sea dragon] என்று கற்பனை செய்தான். வண்ணமயமான கதிர்கள் நீரில் அழகாக தெறித்து சென்ற போது குழந்தை ஆரின் கைதட்டினான். தாத்தா அவனை கண்ணாடிக்கு அருகில் தூக்கி, கடல் உயிரினங்களைப் பற்றிய சுவாரஸ்யமான வேடிக்கையான கதைகளைக் கிசுகிசுத்தார். அடுத்து, அவர்கள் மெய்நிகர் சாகசங்கள் [virtual adventures] மெய்நிகர் உண்மை or தோற்ற மெய்ம்மை (virtual reality) மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்கள் [VR and entertainment zones] வழியாக அலைந்தனர். நிலன் ஒரு சிறிய VR ஹெட்செட்டை [headset] அணிந்து கொண்டு துபாயின் வானலையில் "பறந்து", மெய்நிகர் [மாய] ரோலர் கோஸ்டரில் சவாரி செய்த திரேனைப் பார்த்து கை அசைத்தான். குழந்தைகள், தாம் கடக்கும் வானளாவிய கட்டிடங்களையும் மணல் பாலைவனங்களையும் "பெரிதாக்கி" [“zoomed”], அவ்வற்றை ரசித்து சிரித்தனர், அவர்களின் கற்பனைகள் மெய்நிகர் உலகத்துடன் ஒன்றாகக் கலந்தன. குட்டி ஆரின் தாத்தாவின் கையில் இருந்து கொண்டு, ஒளிகளையும் ஒலிகளையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு மகிழ்வாக இருந்தான். துபாய் மாலுக்கு வெளியே உள்ள நீரூற்று நிகழ்ச்சி துபாய் நீரூற்று என்று அழைக்கப்படுகிறது, இது புர்ஜ் ஏரியில் [ Burj Lake] அமைந்துள்ள ஒரு பெரிய நடன நீர் [a large choreographed water], ஒளி மற்றும் இசை நிகழ்ச்சியாகும். பிற்பகல் நிகழ்ச்சிகள் தினமும் மதியம் 1:00 மணி மற்றும் 1:30 மணிக்கும், மாலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை நடைபெறும். எனவே, மெய்நிகர் வேடிக்கைக்குப் பிறகு, தாத்தா குடும்பத்தினர் மாலுக்கு [Mall] வெளியே நடந்த துபாய் ஃபவுண்டன் ஷோவிற்குச் [Dubai Fountain show] சென்றனர். சூரியன் மறைந்திருந்து, வானம் இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பிரகாசித்தது. தண்ணீர் இசைக்கு ஏற்ப நடனமாடி, வானவில் விளக்குகளுடன் பிரகாசித்தது. ஒரு பெரிய மின்னும் வாள் போல ஒரு நீர் ஜெட் [water jet] எழும்பும் ஒவ்வொரு முறையும் நிலன் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தான், அதே நேரத்தில் திரேன் நீரூற்றின் அசைவுகளுக்குத் தக்கவாறு பின்பற்றி சிரிப்புடன் சுழன்று சுழன்று துள்ளிக் குதித்தான். மின்னும் மற்றும் ஆடும் நீரால் [sparkling water] கவரப்பட்டு, குழந்தை ஆரின், கை அசைத்து பை பை [Bye Bye] என்று கத்தினான். பின்னர் தாத்தா அவர்களை ஒரு சிறப்பு வாய்ந்த இனிப்பு கஃபேக்கு [ special dessert café] அழைத்துச் சென்றார், அங்கு குழந்தைகள் தங்கள் சொந்த கப்கேக்குகளை [cupcakes] வண்ணமயமான ஐசிங் [icing], சிறிய இனிப்புத் துண்டுகளை தூவுதல் [ஸ்பிரிங்க்லிங்ஸ் / sprinkles] மற்றும் சிறிய சாக்லேட் அலங்காரங்களால் அலங்கரித்தனர். நிலன் அவர்கள் சமீபத்தில் பார்த்த நீரூற்றின் [fountain] ஒரு சிறிய வடிவத்தை உருவாக்கினான். திரேன் அவர்கள் பார்வையிட்ட கோபுரங்களால் ஈர்க்கப்பட்டு ஒரு வானளாவிய கோட்டை ["ஸ்கை கேஸில் / “sky castle”] வடிவத்தில் கப்கேக்கை உருவாக்கினான். மேலும் ஆரினுக்கு பொழுதுபோக்காக கடித்து, கைகளால் எடுத்து பிசைந்து விளையாட ஒரு சிறிய கப்கேக்கைக் தாத்தா கொடுத்தார். கடைசி மாயாஜால தருணம், குடும்பத்தினர் மாலுக்குள் [mall] இருந்த ஒரு சிறிய உட்புற பொழுது போக்கு மண்டலத்திற்கு [indoor amusement zone] அலைந்து திரிந்தபோது வந்தது. சுழலும் வட்ட வடிவ தளத்தில் அமர்ந்து சவாரி செய்யும் [carousel] ஒரு பொழுதுபோக்கு கேளிக்கைக் கூடம் விளக்குகளால் மின்னியது. நிலன் தங்க நிறத்தில் மின்னும் குதிரையின் மீது குதித்து அமர்ந்து இருந்து கொண்டு, டிராகன் வடிவ இருக்கையில் [dragon-shaped] அமர்ந்திருந்த திரேனை நோக்கி கை அசைத்தான். கேரசல் [carousel] சுழலும்போது மென்மையான இசை ஒலித்தது. அவர்களின் சிரிப்பு, விளக்குகளின் மின்னும் ஒலிகளுடனும் அவர்களைச் சுற்றியுள்ள இசைகளுடனும் கலந்தது. தாத்தாவின் கைகளில் பாதுகாப்பாக இருந்த குழந்தை ஆரின், மெல்லிசைக்கு ஏற்ப கூச்சலிட்டு ஆடினான். குழந்தைகளின் சிரிப்பு, அதன் ஒளிகள், இசை எல்லாம் ஒன்றாய்க் கலந்து காற்றில் மிதந்தது. இரவு வெகுநேரமாகி விட்டதால், தாத்தா குடும்பத்தினர் மாலுக்குள் இருந்த ஒரு வசதியான நீரூற்று [cozy fountain] அருகே ஒன்றாக அமர்ந்தனர். தாத்தா அவர்களை அருகில் இழுத்து, “சிறிய ஆய்வாளர்களே, ஒவ்வொரு நாளும் மாயவித்தை அல்லது மந்திரம் [magic] போல் இருந்தது. ஆனால் இன்றிரவு நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட சாகசங்கள் தான் உண்மையில் சிறந்த சாகசங்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்” என்றார். நேரம் போக போக தாத்தாவின் தோளில் நிலன் தலை சாய்ந்து கொண்டு, “தாத்தா... இன்று மிகவும் மாயாஜால நாள். இன்றிரவு இதை நாம் கனவு காண முடியுமா?” என்று கேட்டான். தாத்தா புன்னகைத்தார். “நிச்சயமாக, என் குட்டிகளே. கண்களை சற்று மூடுங்கள் — நீரூற்றுகளும், கோபுரங்களும், வான்கோட்டைகளும் உங்கள் கனவுகளில் நடனம் ஆடட்டும்.” என்றார் ஒருவரை ஒருவர் கைகளை இணைத்துக் கொண்டு அவர்கள் துபாய் மாலிலிருந்து வெளியே வந்தனர். நகரத்தின் விளக்குகள் அவர்களின் கண்களில் பிரதிபலித்தன. குழந்தைகளின் இதயங்கள் மகிழ்ச்சி, ஆர்வம், மற்றும் நாளை எதிர்கொள்ளும் புதிய சாகசங்களால் நிரம்பியிருந்தன. ✨ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 09 தொடரும் துளி/DROP: 2017 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/33652888391026376/?- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
2009-ஆம் ஆண்டு, மெக்சிகோவின் மாண்டெரி நகரில் 21 வயது மாடல் அழகி Gabriela Rico Jimenez ஒரு சொகுசு ஹோட்டலுக்கு வெளியே அரை நிர்வாண நிலையில் அலறிக் கொண்டிருந்தார். "அவர்கள் மனித மாமிசத்தைச் சாப்பிடுகிறார்கள்... அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள்... என்னை விட்டுவிடுங்கள்!" என்று அவர் கதறியது கேமராவில் பதிவானது. அதிகாரிகள் அவரை 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று முத்திரை குத்தி அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்ற விவரங்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளன. ஒரு மாபெரும் உண்மையைச் சொன்னதற்காக அவர் “மௌனமாக்கப்பட்டாரா” என்ற கேள்வி இன்றும் நீடிக்கிறது. பல ஆண்டுகள் கழித்து, அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டபோது, கேப்ரியலா சொன்ன வார்த்தைகளுக்கும் எப்ஸ்டீன் தீவில் நடந்தவைகளுக்கும் இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் ஒற்றுமை தென்பட்டது. எப்ஸ்டீனின் 'Little St James ' தீவில் ஒரு விசித்திரமான கோவில் போன்ற கட்டிடம் இருந்தது. அங்கு செல்வாக்கு மிக்க மனிதர்கள் ரகசிய வழிபாடுகளிலும், இருண்ட சடங்குகளிலும் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. எப்ஸ்டீன் மீதான FBI அறிக்கைகளில், சாட்சிகள் விவரித்த கொடுமைகள் , வன்முறை, நரமாமிசம் மற்றும் குழந்தைகளின் மீதான சித்திரவதை கேப்ரியலா 2009-ல் சொன்ன அதே வார்த்தைகளை எதிரொலித்தன. உலகை ஆளும் சில உயர்மட்ட அதிகார வர்க்கத்தினர், தங்களின் செல்வம், புகழ் மற்றும் அதிகாரம் அழியாமல் நிலைத்திருக்க, இத்தகைய இருண்ட சக்திகளை நாடுகிறார்களா? 'Ba’al' வழிபாட்டின் மூலம் குழந்தைகளை பலியிடுகையில் ஒருவித 'சக்தி மாற்றம்' (Energy Transfer) ஒன்றை இந்த ரகசியக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது. Ba’al' என்பது ஒரு குறிப்பிட்ட பெயரல்ல; பண்டைய செமிடிக் மொழிகளில் (Semitic languages) இதற்கு 'எஜமானன்', 'ஆளுபவர்' என்று பொருள். இது ஆரம்பத்தில் ஒரு கௌரவப் பெயராகவே இருந்தது. கி.மு. 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே, பண்டைய கானானியர்கள் (Canaanites) மற்றும் போனீசியர்கள் (Phoenicians) Ba’al-ஐ ஒரு முதன்மைத் தெய்வமாக வழிபட்டனர். Ba’al’ மழையின் கடவுளாகவும், இடி-மின்னல் மற்றும் விவசாயத்தின் தெய்வமாகவும் கருதப்பட்டார். நிலத்தின் செழிப்புக்கு அவரே காரணம் என நம்பப்பட்டது. Ba’al-ன் கோபத்தைத் தணிக்கவும், நிலம் செழிக்கவும் மக்கள் அவருக்குப் பல்வேறு சடங்குகளைச் செய்தனர். Ba’al-ன் வழிபாடு மிகவும் இருண்டதாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருந்த 'குழந்தை பலி' (Child Sacrifice) முறைதான். மர்மமான புராணங்களின்படி, ba’al-ன் ஆசீர்வாதத்தைப் பெறவும், பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவும் உயர்மட்டக் குடும்பத்தினர் தங்கள் முதல் குழந்தையை நெருப்பில் பலியிடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் (ப்ளூடார்க் போன்றவர்கள்) மற்றும் Bible குறிப்பிடுகின்றன. இதில் குழந்தைகள் எரியும் நெருப்பிற்குள் எறியப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. நவீன மர்மக் கோட்பாடுகளில், 'Baal' என்பது வெறும் பண்டைய தெய்வம் மட்டுமல்ல, அது இன்று உலகை மறைமுகமாக ஆளும் சில ரகசியக் குழுக்களின் (Secret Societies) அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் உலகின் பெரும் செல்வந்தர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள 'baal ' போன்ற இருண்ட சக்திகளுக்குப் பலி கொடுத்து வணங்குகின்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு உயிரைப் பலியிடுவதன் மூலம் ஒரு பெரும் சக்தியைப் பெற முடியும் என்ற ரகசியக் கோட்பாட்டை (Occultism) பின்பற்றுபவர்கள் தான் இன்று உலகை ஆளும் அதிகார வர்க்கம். எப்ஸ்டீன் வழக்குகளில் 'ba’al' என்ற பெயர் அடிபடுவதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் எப்ஸ்டீனின் நிதிப் பரிமாற்றங்களில் 'ba’al' என்ற குறியீட்டுப் பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது, அவர் ஒரு ரகசிய சாத்தானியக் குழுவின் (Cult) உறுப்பினராக இருந்திருக்கிறார் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. எப்ஸ்டீன் தீவில் இருந்த விசித்திரமான நீலக் கோடுகள் கொண்ட கோவில் போன்ற அமைப்பு, பண்டைய வழிபாட்டுத் தலங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அதிகாரப் பசி கொண்டவர்கள் குழந்தைகளை பலிகொடுத்து தங்களின் 'எஜமானனுக்கு' (Baal) செய்யும் அர்ப்பணிப்பாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள், தங்களைச் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளவும், தங்களின் ரகசியக் கூட்டமைப்பை (Elite Cult) வலுப்படுத்தவும் இத்தகைய 'Ba’al' காலத்து இருண்ட சடங்குகளை நடாத்துகின்றனர். பண்டைய கார்த்தேஜ் நகரில் செல்வந்தர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படி குழந்தைகளைப் பலி கொடுத்தார்களோ, அதையேதான் நவீன கால "நிழல் உலக மனிதர்களும்" (Shadow Elite) செய்கிறார்கள். Gabriela rico jimenez போன்றவர்கள் அலறியது இதைப் போன்ற ஒரு கொடூரமான சடங்கைக் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம் என்பதே பலரது வாதம். Gabriela rico jimenez ஒரு மனநோயாளி அல்ல, மாறாக ஒரு இருண்ட கதவைத் தவறுதலாகத் திறந்துவிட்ட சாட்சி என்பதை எப்ஸ்டீன் வழக்கு நமக்கு உணர்த்துகிறது. இந்த அதிகார வர்க்கத்தின் பின்னணியில் இருக்கும் சாத்தானிய சடங்குகளும், பண பலமும் எத்தனையோ உண்மைக் குரல்களை நசுக்கியுள்ளன. Gabriella rico jimenez இன்று எங்கே என்பது தெரியவில்லை, ஆனால் அவர் எழுப்பிய அந்த அலறல் சத்தம், இந்த உலகை ஆளும் நிழல் மனிதர்களின் முகத்திரையை ஒரு நாள் கிழித்து தொங்க விடும். Mukinthan Thurairajasingham- ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப்
இதையே வெனிசூலா விடயத்திலும் சொல்லி சிஐஎ யின் வேலை முடியுமட்டும் நேரடியாக பேசினார். இதனாலே வெனிசூலா தலைவர் கோட்டை விட்டிருப்பார். ஈரானிலும் தாக்குதல் இலக்குகளை துல்லியமாக கணிக்கும்வரை பேச்சுவார்த்தை தொடரலாம்.- 'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?
இதே காங்கிரஸோடு கூட்டணி வைத்துத்தானே திமுக இவ்வளவு காலமும் தமிழ்நாட்டை சூறையாடுகிறது? அப்போ இதே மக்கள் எங்கே போனார்கள்?- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
ஆபீசில் இருந்து, அறிக்கை விடுவதற்கு.... ஆதாரம் கேட்கப் படாது. கேட்டாலும்... அதை எல்லாம், கணக்கில் எடுக்க மாட்டார்கள். எல்லோரும்.... தங்கள் உத்தமன் என்று வேஷம் போட்டுக் கொண்டு திரிவார்கள். வாயாலை... ஜனநாயகம், அகிம்சை என்று சொந்த மக்களையே பேய்க்காட்டி வைத்துள்ளது இந்திய அரசியல்.- இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு!
கணக்காய்வாளருக்காக முத்துக் குளித்த அரசின் கண்ணில் கைகளில் ஒரு தமிழரும் தென்படவில்லை. ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழுவோம்.- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
எப்படி கண்டுபிடித்தார்கள்? - கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
Important Information
By using this site, you agree to our Terms of Use.