Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. nepodStros87hul80129f94c 4i3a138616c9lfmta50c3mai741c56uf755 · கேள்வியும் பதிலும் தமிழரைப் பொறுத்தவரை மனித வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை என்ன? பெற்றோலும், டீசலும். யாழ். குடாநாட்டில் இப்போது அதிகம் காணக்கூடிய வாகனங்கள் எவை? பெற்றோல் பௌசர்கள் குடாநாட்டு மக்களின் பிரதான தொழில் என்ன? எரிபொருள் பதுக்குதல் அவரகளது பொழுதுபோக்கு....? பெற்றோல் செற் கியூவில் நிற்றல் இலங்கையில் அதிகம் எரிபொருள் பாவனையாளர்கள் யார்? குடாநாட்டு மக்கள்தான். யாழ்ப்பாணத்தின் வளம் என்ன? எரிபொருள் சேகரிப்பு இவ்வளவு யுத்தக் கலக்கத்திலும் நமது ஜனாதிபதி மனம் தளராமலிருப்பது எதனால்? குடாநாட்டிலுள்ள பெற்றோலை வைத்து இன்னும் பல ஆண்டுகள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கைதான்......!
  3. pSroosnedtgfHtg01u2àut5g328ig66ll6r03:16i89g9uu03et 9 i050,i · ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள். கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார். அங்கிள்... அங்கிள்.... என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்.... அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள் prescription கொண்டுவந்தாயா குழந்தை???? அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா???? எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள். "காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது. சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன????? குழந்தை மென்று விழுங்கி சொன்னது " மெரிக்கள்" கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார். நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு????? மெரிக்கள் அங்கிள்... அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது????? குழந்தை கண்ணீருடன் சொன்னது.... டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது. அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார். அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார். வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார். அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்..... டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற அதற்க்கு மருத்துவர் இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம். எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்........!
  4. அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!
  5. முதலில் இந்தியாவின் பெயர் இல்லை. இப்போது சேர்த்து விட்டார்களா? விருந்தாளி விசாகப் பட்டணத்தில் நிற்கும் போதே சண்டை தொடங்கியதால் இந்தியா இவர்களை பத்திரமாக கையாண்டு இருக்கலாம்.
  6. ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ் Published By: Vishnu 07 Mar, 2026 | 06:40 AM இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்ததை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வெள்ளிக்கிழமை (06) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரானுக்கு எதிரான அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் "நேரடியாகப் பங்கெடுக்கவில்லை" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 'IRIS Dena' கப்பலைத் தாக்கும் நடவடிக்கை தொடங்கியபோது, அதில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் அந்தச் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக பிரதமர் தெரிவித்தார். "அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை" என்று அவர் ஸ்கை நியூஸ் தளத்திற்குத் தெரிவித்தார். தாக்குதலை நடத்திய நீர்மூழ்கியின் பெயரை அமெரிக்கா வெளியிடவில்லை என்றாலும், அது 'USS Minnesota' என்ற வெர்ஜீனியா ரக நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் என இராணுவ இணையதளங்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, சுமார் 50-க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவுஸ்திரேலிய அரசின் இந்த நிலைப்பாட்டை பசுமைக் கட்சி செனட்டர் டேவிட் ஷுப்ரிட்ஜ் கடுமையாகச் சாடியுள்ளார். "இந்தத் போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியா இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்று தொழிலாளர் கட்சி கூறிவருவது ஒரு பொய். டொனால்ட் டிரம்ப்பின் சட்டவிரோதப் போரில் அவுஸ்திரேலியா இப்போது உடந்தையாகியுள்ளது," என அவர் குற்றம் சாட்டினார். இராணுவ ஆய்வாளர் மால்கம் டேவிஸ் கருத்துப்படி, நீர்மூழ்கியின் கப்டன் தாக்குதலுக்கான முடிவை எடுத்தவுடன், பயிற்சியில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் தார்மீக மற்றும் சட்ட ரீதியான காரணங்களுக்காகத் தங்களது அறைகளுக்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க கடற்படை ஒரு போர்க்கப்பலை டார்பிடோ மூலம் அழித்தது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ்
  7. Today
  8. வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் 06 Mar, 2026 | 02:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்ததன் பின்னரே காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தித்வா புயல் தாக்கம் ஏற்பட்டவுடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேரிடரை முகாமைத்துவம் செய்வதற்கும் 2025.11.28 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைகளின் பிரகாரம் அவசரகால சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது. சட்டத்தின் உறுப்புரையின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்ட அவசரகால காலம் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பதற்ற நிலைமையை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.இதற்கமைவாகவே இம்முறையும் அவசரகால சட்டத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவில்லை. மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள். யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும் என்றார். வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும்
  9. இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு! இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் (548.1 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் 180.9 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது சுமார் 33 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பதிவாகியிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் பணப்பரிமாற்றத்தில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்பட்டாலும், வருடாந்த அடிப்படையில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஜனவரி மற்றும் பெப்ரவரி) மொத்தமாக 1.48 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 32 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதுகெலும்பாக விளங்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இவ்வாண்டு ஆரம்பத்திலேயே பில்லியன் கணக்கில் அதிகரித்திருப்பது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. https://athavannews.com/2026/1467446
  10. அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க 06 Mar, 2026 | 05:17 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஆளும் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்கா தாக்கப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீதும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கத்திடம் பலமுறை கேட்டும் இதுவரையில் அந்த ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இலங்கை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தும் போது இலங்கை அமைதியாக இருக்க வேண்டும், தாக்குதலுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அதேபோல் இந்தியாவுடன் 08 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களும் இதுவரையில் பகிரங்கப்டுத்தப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தங்களின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதன் பின்னணி என்ன? என்று கேள்வியெழுப்பினார். அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க
  11. சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்! Mar 2, 2026 - 09:51 AM இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ரமேஷ்புரம், கணபதி நகர், ஐயன்கேணி ஆகிய அறநெறி பாடசாலைகளில் கல்வி கற்கும் 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01) நடைபெற்றது. ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று நகரசபை உறுப்பினர் ரகு உட்பட ஆலய நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்க, மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது மேலும் கருத்துதெரிவித்த அவர், உத்தியோகபூர்வமாக அவர்களுடன் சேர கூறி எங்களுடைய கட்சியிடம் பேசியதாக நான் அறியவில்லை. அவ்வாறான ஒரு அழைப்புகள் வந்தால் அது கட்சியினுடைய உயர்மட்ட குழுக்கள் மத்திய செயற்குழுக்கள் தான் அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். இருந்த போதும் என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பு இருக்கும் என நான் நம்பவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால் இது தொடர்பாக கட்சியினுடைய உயர்மட்டம்தான் முடிவு எடுக்க வேண்டும். அரசாங்கத்தை பொருத்தவரையில் இந்த சுரேஷ் சலேனுடைய கைது சம்பந்தமாக உண்மையில் நான் 2023 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பல விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம். சர்வதேச விசாரணை வந்தால் தான் எங்களுடைய சாட்சியங்களை சர்வதேச விசாரணை இடம்பெற்றால் ஒப்படைக்கலாம் என்று இன்றும் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட இன்றும் சாட்சிகள் வழங்குவதற்கு பலர் இருக்கின்றார்கள். சுரேஷ் சலே கைதுக்கு பின்னர் இலங்கை வரலாற்றில் நடக்காதவாறு நடந்திருக்கின்றது. அரசாங்கத்தில் இந்த நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், நல்ல விடயங்களை நாங்கள் மறுப்பது அல்ல அந்த வகையில் சுரேஷ் சலே போன்று உயர்மட்ட ராணுவ புலனாய்வுத்துறை ராணுவ அதிகாரிகளை கைது செய்வது இந்த அரசாங்கம் செய்துள்ள பெரியதொரு விடயம். ஆனால் இன்னமும் பலர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் நினைக்கின்றேன் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதோடு அதனை தொடர்ந்து ராணுவ புலனாய்வுத்துறை செய்த பல விடயங்கள் தொடர்பாக பலர் கருத்துக்கள் முன் வைத்திருக்கின்றார்கள். நாங்களும் பாராளுமன்றத்தில் இந்த விடயங்களையும் கூறி இருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச மேற்பார்வையுடன் ஒரு விசாரணையை இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அரசுக்கு ஒரு நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அது ஒரு புறம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஒரு விசாரணையை நடத்தினால். அந்த வகையில் இவ்வாறான ஒரு பின்னணியில் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் சுரேஷ் சலே இராணுவ வீரர் தமிழ் மக்களை அழித்ததில் அவருக்கும் பங்கு இருக்கின்றது என்கின்ற போது தமிழரசு கட்சி இவ்வாறான ஒரு கூட்டணியில் சேருமா என்ற கேள்வி கேட்பது பிழை என்பதை சொல்லுவதற்காகதான் கூறுகின்றேன் என தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!
  12. யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது! யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள் சீனிப்பாணியே காணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8, 1/4 போத்தல் நெய் போத்தல்களும் கலப்படம் நிறைந்தது என அவற்றையும் கைப்பற்றியுள்ளார். கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி கரைசல் மற்றும் கலப்பட நெய் என்பவற்றை விற்பனைக்கு வைத்திருந்தமை தொடர்பில் விற்பனையாளரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய பொது சுகாதார பரிசோதகர் , விற்பனையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். https://athavannews.com/2026/1467474
  13. சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதி ஒருவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் (GAS COOKER) விற்பனைக்கு உள்ளதாக முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதன்போது, காஸ் குக்கரை (GAS COOKER)பெறுவதற்காக பணத்தை தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும், மேலதிக தகவல்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, காஸ் குக்கரின் விலை எனக் கூறப்பட்ட 32 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட நபர் அவர்கள் வழங்கிய வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்டு, அதற்கான தகவலை வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு அறிவித்துள்ளார். பின்னர் காஸ் குக்கரை அனுப்பி வைப்பதாக கூறிய அந்த நபர்கள், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பல்வேறு காரணங்களை கூறி அவரை ஏமாற்றியுள்ளனர். அதன் பின்னர், பொருளை அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், காஸ் குக்கர் (GAS COOKER)அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அவர்கள் பயன்படுத்தியிருந்த வாட்ஸ்அப் இலக்கத்தை உடனடியாக அழித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட நபர் அந்த முகநூல் கணக்கில் பயன்படுத்தப்பட்டிருந்த முகப்பு புகைப்படத்தை ஆராய்ந்துள்ளார். அப்போது அந்த புகைப்படம் ஒரு புகைப்படக்காரர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்த தம்பதியினரின் படம் என்பதும், மோசடிக்காரர்கள் அதனை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது. இதன் பின்னரே தாம் மோசடிக்குள்ளானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1467461
  14. பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக் கோப்பு நிறைவு - அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு! 06 Mar, 2026 | 03:08 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பதவிய வடக்கு காட்டுப்பகுதியில் வன்னி பாதுகாப்பு படையினர் 2014.04.11 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின் போது மூவர் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்கள். படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட பிரதி தாக்குதலால் இந்த மூவரும் உயிரிழந்தார்கள் என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான கோப்பு நிறைவுப்படுத்தப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 2014.04.11 ஆம் திகதியன்று அதிகாலை பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 05 ஆம் இலக்க புங்கல கிராம சேவகர் பிரிவு கம்பிலிவெல வடக்கு காட்டுப் பகுதியில் வன்னி பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக எதிர்தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள். இதன்போது மூவர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அன்றைய தினமே பதவிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அணிந்திருந்த உடைகள், அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் அவர்களின் இரத்த மாதிரிகள் வழக்கு பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அநுராதபுரம் நீதிமன்ற சட்ட வைத்தியர் ஊடாக உடற்கூறு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட பிரதி தாக்குதலால் இந்த மூவரும் உயிரிழந்தார்கள் என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான கோப்பு நிறைவுப்படுத்தப்பட்டது என்றார். பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக் கோப்பு நிறைவு - அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
  15. ஆம், கிருமி தன்மை வழமையானது - ஒப்பீட்டளவில் அதிகாரம் கூட இருக்கும் போது எந்த சக்தியும் அப்படியான தன்மையை எடுக்கும் என்பதும் - சோழர் கூட அப்படியே பார்க்கப்பட்டனர் என்பதும். ஆனால், இரானில், விவிலிய பிரளையத்தை நம்பி - ஆக குறைந்தது cognitive dissonance ஆக. கவனமாக தான் சொல்லின் பிரயோகம் - முழு மேற்கையும், us, இஸ்ரேல் ஐ (இதுவரையில்) குறிக்கவில்லை. இதன் ஆபத்து தன்மை ஒருவருக்கும் புரியவில்லை. வெனிசுவேலாவில் நடந்தது நலன்கள் / வளங்களை / மேற்கு கோளத்தில் ஏகபோகம் போன்றவற்றுக்காக கைப்பற்றுவது (வழமையான கிருமி தன்மை) ஈரானில் விவிலிய பிரளய நம்பிக்கையை அதனுடன் சேர்த்து. இரான் சரி வந்தால், மத்திய கிழக்கை கட்டுடப்படுத்தும் சக்தி உலகை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையயையும், அனுபவமும் இருப்பதால், அதை தந்தது விவிலிய பிரளய நம்பிக்கையில் இரானை கைப்பற்றியது என்ற யதார்ததமே என்பது செய்தவர்களுக்கு மீளுறுதிப்படுத்தப்படும். அதே விவிலிய பிரளய நம்பிக்கையோடு மிகுதி உலகத்துக்கும் இப்படி செய்யலாம் , செய்வது சாத்தியமாகும் என்ற அதீத நம்பிக்கை பிறக்கும். அண்மையில் அமெரிக்கா ராஜாங்க செயலாளர் (Munich security conference) காலனித்துவதை மீண்டும் நாடவேண்டி இருப்பதாக சொல்லியது. அதில் அவர் பிரயோகித்த மொழி, கிட்டத்தட்ட ஹிட்லர் / நாசிகள் (கேபெல்ஸ்) பாவித்த மொழி (எமது நாகரிகம். கலாசாரம் மனித வரலாற்றில் இதுவரை இல்லாத உன்னதமானது .... we are the defenders of western civilisation ...) இதுக்கு, ஐரோப்பிய நாடுகள் (பிரதிநிதிகள்) செய்தது, கைதட்டி வரவேற்றது (standing ovation). ஈரான் (அழிந்தாலும்), சமாளித்தால் , உலகமே நன்மை அடையும் (மற்ற திரியில் இரான் அதிகாரி சொல்லி இருப்பது, இதை முன்பே நான் இங்கு சொல்லி இருக்கிறேன்). வேடிக்கை, இங்கே (சட்டம், ஒழுங்கில் இயங்கும்) இரானை பற்றி தெரியாமல், அல்லது தெரிந்து, குறிப்பிட்ட சிலரின் குறிப்பிட்ட நாட்டுக்கான வாஞ்சையில். கரிச்சு கொட்டப்படும் இரானின் ஆட்சி, கரிச்சு கொட்டுபவர்களின் சந்ததி நன்மைக்கு (மறைமுகமாக) போராடுகிறது. அவர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் (விவிலிய பிரளயக் கிருமிகள் இயக்கும்) அரசாங்கங்கள் , அவர்களின் சந்ததியை புதைக்க பாரிய சண்டை செய்கிறது ஈரானுடன் . ஈரானில் விவிலிய பிரளய நம்பிக்கை: 1) அமெரிக்கா இஸ்ரேல் தூதுவர் - அகன்ற இஸ்ரேல், முழு மத்திய கிழக்கும் இஸ்ரேல் விவிலியத்த்தின் அடிப்படையில் உரிமை உள்ளது. - tucker carlson உடனான பேட்டியை பார்க்கவும். 2) டிரம்ப் ஓ, ராஜாங்க செயலாளரோ எந்த கண்டிப்பும் இல்லை , இரண்டு கட்சிகளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை 3) இரான் மீது யுத்தம் முழு பொய்யின் அடிப்படையில் ( அதன் காரணத்தை ... இரானின் முழு சமூகத்தை அழிப்பது ... என்ற விளக்கத்தை பல இடங்களில் சொல்ல்லிவிட்டேன்). அதுக்கு முன்னுதாரணம் இருக்கிறது, 4) ஓமான் வசதிப்படுத்தனர் / மத்தியஸ்தர், steve விட்கொப் , jarred ஐ நம்பாது (இதுக்கு வேறு முக்கிய நிகழ்வும் இருக்கிறது), தொலைக்காட்சியில் பகிரங்காக இணக்கம் எட்டப்பட்டு விட்டது என்று அறிவித்து, அதை ஒப்பந்த வடிவில் ஆக்குவதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கேட்டு இருந்தார். 5) steve witkoff அவரின் வாயாலேயே சொன்னது, இவ்வளவு இராணுவ பலத்தை காட்டி கட்டி எழுப்பியும், ஏன் இரான் காலில் விழவில்லை என்பது டிரம்ப் க்கு புதிராக இருப்பதாக. பேரம் என்றுபேச்சுவார்த்தை தொடங்கி இரான் காலில் விழவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இரான் காலி விழுவதே நான் சொல்லிய சமூகத்தை அழித்து ... என்ற அதே விளைவு , இரானுவ பலத்தை பாவிக்காது பெறுவது. 6) ஆனால், அதை விட பெரியது, டிரம்ப் எந்த காரணமும் சொல்ல முடியாது இருப்பது. 7) அமெரிக்கா படை துறை தலைமை மத்தியில் விவிலிய பிரளய நம்பிக்கை, படைகளை உசுபேற்றுவதில், கட்டளை பிறப்பிப்பு சங்கிலியில் 8) இஸ்ரேல் சொல்வது அடுத்த இலக்கு, துருக்கி, பாகிஸ்தான், அதுவும் ஈரானை போன்றே என்றும். அதன் அர்த்தம் என்ன ? அமரிக்காவும் இஸ்ரேல் உடன் சேரும். 9) Lindsey Graham (இங்குள்ள குறிப்பிட்ட ஒருவர் அதை நீட்டி , அகட்டி விளக்கம் கொடுத்தாலும்) வெளிப்படையாக சொல்லி இருப்பது, புனித யுத்தம் 10) இதை நான் மட்டும் நம்பவில்லை https://www.thenation.com/article/politics/trump-iran-religious-war-crusades/
  16. இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்! 06 Mar, 2026 | 03:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்தக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு நாங்கள் முயற்சிப்பதில்லை. ஆனால் அரசாங்கம் இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம், போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்தியாவுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த விடயங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சபையில் இருக்கும் அதிகமானவர்கள் இந்தியாவுக்கு எதிராக கதைக்கமாட்டார்கள். ஆனால் நான் அப்படியல்ல. கடற்படை பயிற்சி முகாம் எமது நாட்டில் நடத்தவில்லை. கடந்த மாதம் 18ஆம் திகதி இந்திய விசாலாப்பட்டினத்திலே இடம்பெற்றது. ஆனால் ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விடயத்தில் இந்தியா லாவகமாக எமது நாட்டுக்கு அதனை திசை திருப்பி இருக்கிறது. இந்தியாவுடன் உங்களது ஜனாதிபதிக்கு தோல்மேல் கை போட்டுக்கொண்டு இருக்கக் சொல்லுங்கள். ஆனால் முதுகில் குத்தும்வரை தெரியாமல் இருக்கும். ஈரானின் இரண்டாவது கப்பலை இந்தியா எடுப்பதாக நீங்கள் இந்த சபையில் தெரிவித்து வந்தீர்கள். ஆனால் இரண்டாவது கப்பலையும் இந்தியா எமக்கு தள்ளிவிட்டார்கள். கடற்படையின் பயிற்சி எமது நாட்டிலா இடம்பெற்றது என கேட்கிறேன். இந்தியாவில் தானே இடம்பெற்றது. இந்தியா லாவகமாக இரண்டு கப்பல்களையும் எமது பக்கம் தள்ளிவிட்டார்கள். ஈரான் தூதரகத்துக்கு நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) சென்றோம். அப்போது தூதுவர் எங்களிடம் தெரித்த விடயம்தான், கடற்படை தளபதி இந்தியாவில் இடம்பெற்ற பயிற்சியில் இருந்துள்ளார். அப்போது, இலங்கைக்கு வருமாறு ஈரான் கடற்படைக்கு வாய்ப்பேச்சாக தெரிவித்திருக்கிறார்.,இதுதொடர்பாக கடற்படை தளபதி பொறுப்புடனா தெரிவித்தார் என்பது தொடர்பில் விசாரித்து, பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியா என்பது எம்மை போன்று சிறிய நாடு அல்ல. உலகில் இருக்கும் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்று. அப்படியான நாடு, இந்த விடயத்தில் மெளனம் காத்து, பந்தை எமது பக்கம் எறிந்துவிட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.என்றாலும் ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது. அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என பலர் தெரிவிக்கப்பட்டனர். முன்னாள் சட்டமா அதிபர் தப்புலலிவேராவின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்து தருமாறு கோட்டாபய ராஜபக்ஷ்விடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதனை கோட்டாபய ராஜபக்ஷ் நிராகரித்ததாலே, தப்புலலிவேரா ஓய்வு பெற்றுச்செல்லும்போது, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருக்கிறார் என தெரிவித்தார். ஆனால் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருமாறு தெரிவித்தபோது, அவர் செல்லாமல் மறைந்திருந்தார் என்றார். இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!
  17. டி20 உலகக்கோப்பை 2026: இறுதிப் போட்டி மைதானத்தின் அவலம் By ஆர். அபிலாஷ் March 05, 2026 இறுதிப் போட்டியையும் மும்பை வான்கேடில் நடத்தினால் செமையாக இருந்திருக்கும். ஆனால் குஜராத்தின் அழுது வடியும் ஆடுதளத்தில்தான் ஆடப்போகிறார்கள். பாஜக ஆள்வதால் எல்லா இறுதிப் போட்டிகளையும் அங்குதான் நடத்த வேண்டும் எனப் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. அந்த மைதானத்தின் ஆடுதளம், அங்குள்ள விளக்குகளின் அமைப்பு, தொலைவான எல்லைக்கோடுகள் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு ஏற்றவை அல்ல. பந்து மட்டையாளருக்கு வராது, விளாசினாலும் சிக்ஸர் வராது, விளக்குகளின் அமைப்பினால் களத்தடுப்பின்போது கேட்ச் பிடிப்பது சிரமம். கோழிக்கோடு கெட்டி அல்வாவில் ஈ சிக்கிக் கொண்டதைப் போலத்தான் அங்கு பந்தும். அது மைதானத்தை விட்டு வெளியே சுலபத்தில் போகாது. எல்லாம் தலையெழுத்து! டி20 உலகக்கோப்பை 2026: இறுதிப் போட்டி மைதானத்தின் அவலம்
  18. பையன் வருகை இன்மையால் நொந்து போயிருக்கும் இந்த விளையாட்டு திரிக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் முயற்சியாக நடுவரின் தீர்ப்பே இறுதியானது என உங்கள் உயரதிகாரத்தினை பயன்படுத்தி போட்டி தொடங்கும் வரை சுவாரசியமாக கொண்டு செல்ல ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம், எப்படியும் போட்டி முடிவுகளில் மாற்றம் இல்லைதானே!(இந்தியா வெல்வது உறுதி என கூறுகிறார்கள்)🤣
  19. உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்! Mar 1, 2026 - 08:24 AM மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானது. நேற்று (1) இடம்பெற்ற இந்தவிபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பழுதான நிலையில் இருந்துள்ளது. அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இழுத்து வரப்பட்ட டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளது. டிப்பர் வாகனம் தனது இயந்திரத்தின் மீது ஏறுவதைக் கண்ட உழவு இயந்திர சாரதி, சாமர்த்தியமாக கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார். இதனால் அவர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார். எனினும், இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனங்களை இழுத்துச் செல்லும்போது போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்!
  20. அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர 06 Mar, 2026 | 06:37 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அவசரகால சட்டத்தின் அமுலாக்க காலத்தை நீட்டிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வர்த்தமானிக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனை பற்றி கேட்பதற்காகவே காலையில் உரையாற்றுவதற்கு அனுமதி கேட்டேன்.ஆனால் நாங்கள் பேசினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெளிவருமோ என்ற அச்சத்தில் சபாநாயகர் எமக்கு பேசுவதற்கு இடமளிப்பதில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னிலைப்படுத்தியா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு செயற்படுகிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் வழமைக்கு மாறாக துரிதமாக செயற்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.ஆகவே ஆணைக்குழு குமார ஜயகொடிக்கு ஒரு வகையிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிறிதொரு வகையிலும் செயற்படுகிறது. அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டமும் மீறப்பட்டுள்ளது.தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பார்க்க வருபவர்கள் பொலிஸ் அறிக்கை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவுடன் சட்டத்தரணி உரையாடும் போது அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளார்கள்.இதுவொரு புதுமையான சட்டம். ஈரான் கப்பலை ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் பாதுகாத்தார், அந்த கப்பலில் இருந்தவர்களை மீட்டார் என்று குறிப்பிடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இலங்கை கடற்பரப்பில் மார்ச் 02 ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த உளவு தகவல்களுக்கு அமைவாகவே ஈரான் கப்பல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்காவுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். கடந்த கால ஒப்பந்தங்களை முழுமையாக செயற்படுத்துகிறார்கள் என்றார். அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர
  21. போட்டி நடாத்துபவரின் விதிகளுக்கமைய போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பு நடாத்தும் உரிமை கிடையாது! அத்தோடு விதி 240, துணை விதி 3034, உபவிதி 1003 இன்படி போட்டி நடாத்துபவரின் அதிகாரங்களுக்கு அமைய ஏற்கனவே குறிக்கப்பட்ட வகையிலேயே புள்ளிகள் வழங்கப்படும்🤪
  22. சிகப்பு + கறுப்பு 75:25 விகிதத்தில் உள்ளதாக கூறுகிறார்கள் (தெளிவாக தெரியவில்லை 3 ஆம் இலக்க ஆடுகளம் மூடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்), மும்பை ஆடுக்ளம் போலவே உள்ளதாக கூறுகிறார்கள். இரண்டு அரையிறுதி போட்டிகளும் முழுமையாக பார்க்கமுடியவில்லை, இந்தியாவுடனான இங்கிலாந்து போட்டியில் மிக குறுகிய இங்கிலாந்து பந்து வீச்சு பார்க்க முடிந்தது. சுழலலுக்கு பந்து பெரிதாக திரும்பவில்லை போலவே இருந்தது ஆனால் பந்து தரையில் இருந்து எதிர்பார்த்ததினை விட அதிகமாக எழுந்தது என நினைக்கிறேன், ரசீட்டின் ஓவரில் இசான் கிசனுக்கு ஒரு பாக் ஸ்பின் (ஸ்லைடர்) போட்டு அவுட்டாக்கினார், பந்து தரையில் படும்போது நின்று தாழ்வாக உள்ளே வரும், கிசானுக்கு ஓப் ஸ்டம்பிற்கு வெளியே போட்ட பந்து பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு பிடி கொடுத்து அவுட்டாகினார், பிட்சில் பந்து நன்றாக நின்று வந்ததா (கிசான் டைமிங்கில் பிழை விட்டாரா) அல்லது எதிர்பார்த்தனனை விட பிட்சில் பவுன்ஸ் அதிகமா என சரியான காரணம் தெரியவில்லை ஆனால் இவ்வாறான ஆடுகளத்தில் ஓவர் ஸ்பின் பொதுவாகவே சரியான தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன். பொதுவாக சிகப்பு மண் அதிகம் இருந்தால் பந்து திரும்பும் (Bounce & Turn), ஏன் திரும்பவில்லை என தெரியவில்லை. பந்து திரும்பவில்லை எனில் விக்கெட்டு விக்கெட்டாக பந்து வீசும் வருணின் நிலை கடினமாகிவிடும், நியுசிலாந்து அதிரடி துடுப்பாட்டக்காரர்கள் இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள் என்பதால் அக்சரினை ஆரம்ப ஓவரினை அஸ்ரிப் சிங்குடன் தொடங்க விடுவது நல்ல தெரிவாக இருக்கும்என நினைக்கிறேன்(டீப் போர்வேர்ட் ஸ்குயார் லெக் + டீப் மிட்விக்கெட்). இந்த மைதானம் மும்பாயினை விட பெரிய மைதானம், 240 ஓட்டங்களுக்கு மேல் செல்லாது என நினைக்கிறேன், இந்தியாவின் பந்து வீச்சிற்கு 200 ஓட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி உள்ளது. நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நியுசிலாந்து வெல்வதற்கு வாய்ப்பில்லை என பெரிதும் கூறுகிறார்கள், ஆனால் நியுசிலாந்து திட்டமிடலில் சிறப்பான அணி! இந்தியாவினை 200 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களுக்கு தடுத்து நிறுத்துவது பற்றிய திட்டத்துடன் வருவார்கள், கடந்த போட்டியிலும் நீசம் அதிகளவான ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார், இந்த சிகப்பு மண்ணில் உயரமான கைல் ஜெமிசனை நீசத்திற்கு பதிலாக எடுத்துவர கூடும். சுழல் பந்து வீச்சாளர்கள் ஒவர் ஸ்பின்னில் ஆட்டக்காரர்களின் உடலின் கோட்டில் பந்து வீசுவார்கள் வீரர்கள் விக்கெட்டிலிருந்து விலகினால் வைடான கோட்டில் வீசுவார்கள், ஆனால் நெருக்கடி மட்டும் விக்கெட்டினை கொடுக்காது விக்கெட்டினை எடுப்பதே இந்தியாவினை கட்டுப்படுத்தும். இந்தியாவிற்கு இலகுவான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள், ஆனால் நியுசிலாந்து அவ்வாறில்லாமல் ஒரு சிறந்த போட்டியினை வழங்கும் என விரும்புகிறேன் (உலக கிண்ணத்திற்கு முன்னதாக நடைபெற்ற இரு நாடுகளும் பங்கு பற்றிய ரி20 போட்டியில் இந்தியா நியுசிலாந்தினை போட்டு மிதி மிதி என மிதித்திருந்தது). இந்தியா நியுசிலாந்து அணிகள் இந்த உலக கிண்ணத்திற்கு முன்னர் மோதிய போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட டரல் மிச்சல் நியுசிலாந்து அணிக்கு நல்ல ஒரு முடிவினை வழங்குவாரா? நியுசிலாந்து வெற்றியோ தோல்வியோ நிச்சயமாக அவர்கள் பெருமைப்பட கூடிய வகையில் விளையாடி உள்ளார்கள் (மோசமாக தோற்றாலும் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை)
  23. இது என்ன வம்பாய் போச்சுது. அமெரிக்காவின் சொல்லை கேட்கிறதா, இல்லை… ஈரானின் சொல்லை கேட்கிறதா. எப்படியும் ஆரோ ஒருத்தன் கோவிக்கப் போகிறான் என்பது நிச்சயம். இலங்கையின் உள் விவகாரத்தில்… அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று…. விமல் வீரவன்சவையும், அஸ்கிரிய தேரரையும், காத்தான்குடி போராளிகளையும் திரட்டி ஒரு போராட்டம் பண்ண வேண்டியதுதான். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.