All Activity
- Past hour
-
யாழில் இந்திய குடியரசு தினம்!
வரலாறு அப்படி சொல்லவில்லையே உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல .... .
-
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம் Jan 27, 2026 - 04:32 PM பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக, இவ்வருடத்திற்குள் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்துவதற்குமாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்விடயங்கள் பின்வருமாறு: 01.சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை (Cyber crimes) கையாள்வதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல். 02.ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய, 'சிறுவர் உரிமைகள் சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 03.2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 04.வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்புக்காக புதிய சட்டத்தை உருவாக்குதல். 05.1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 06.1941 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சிறுவர் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 07.1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல். https://adaderanatamil.lk/news/cmkwhl9r204hro29nlda7zu5k
-
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
மிககுறைந்த உறைநிலைக்கு தொடர்ந்தும் இருப்பதால் பொழிந்த பனியெல்லாம் கொங்கிறீற் போல இறுகிப் போயுள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை உறைநிலையாகவே காலநிலை காட்டுகிறது.
-
'காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்' - உண்மையில் என்ன நடந்தது?
'காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்' - உண்மையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் துளசி பிரசாத் ரெட்டி பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்) ஆந்திராவில், தான் காதலித்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த நபரின் மனைவிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர். அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர், பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். கே.சி. கால்வாய் கரை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கீழே விழுந்த மருத்துவருக்கு உதவுவது போல நடித்த இருவர், அவருக்கு தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தியுள்ளனர். கர்நூல் டிஎஸ்பி பாபு பிரசாத் இந்த வழக்கு பற்றி பிபிசிக்கு விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் கைகளில் ஊசியுடன் இருக்கும் புகைப்படம். வழக்கு விவரம் குறித்து கர்னூல் டிஎஸ்பி பாபு பிரசாத் கூறுகையில், "கே.சி. கால்வாய் சாலையில் ஒரு பெண் மருத்துவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வாகனம் மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனே அங்கிருந்த இரு பெண்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆட்டோவில் ஏற்றினர். அந்த சமயத்தில், அவர்கள் தனக்கு ஏதோ ஒரு ஊசியைச் செலுத்துவதை அந்த மருத்துவர் உணர்ந்தார். இது குறித்து அவரது கணவர் புகார் அளித்தார்" என்று கூறினார். "குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செவிலியர். தான் காதலித்த நபர் , தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அந்தச் செவிலியர், அவருக்கு இந்த ஊசியைச் செலுத்தத் திட்டமிட்டிருந்தார்." Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம் பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல் இந்திய தங்கத்தை விட துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக தோன்றுவது ஏன்? இரண்டில் எது சிறந்தது? அபிஷேக் சர்மாவின் ஆட்டம் பார்த்து வியந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்ஐவி நோயாளிகளிடமிருந்து, மற்றொரு செவிலியரின் உதவியுடன் அவர் ஹெச்ஐவி வைரஸ் கலந்த ரத்தத்தைச் சேகரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். "தனது தோழி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளின் உதவியுடன் இந்த ஊசியைச் செலுத்திவிட்டு அவர் தப்பி ஓடினார். காவல்துறை விசாரணையில் அதுகுறித்துத் தெரியவந்த பிறகு, நாங்கள் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தோம். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அந்த ஊசியில் இருந்தது என்ன வகையான வைரஸ் என்பது குறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். இந்த வழக்கில் தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கியப் பங்கு வகித்தன. சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகளை நாங்கள் கவனமாகச் சேகரித்துள்ளோம்" என்று டிஎஸ்பி தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபருக்கு ஒரு நண்பர் மற்றும் அவரது குழந்தைகள் உதவி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 'காதலர் ஏமாற்றிய கோபத்தில் பெண் போட்ட திட்டம்' தனது முன்னாள் காதலர் மீதான கோபத்தில் அந்தப் பெண் இந்தச் செயலைச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். "படிக்கும் போது, அந்த மருத்துவர் தனது வகுப்புத் தோழியுடன் நட்பு கொண்டிருந்தார். இருவரும் காதலித்தனர். பின்னர், அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர் வேறொரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார். செவிலியராக இருந்த அந்தப் பெண் திருமணமாகாமல் இருந்தார்". "திருமணமான அந்த மருத்துவரின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்ட பெண் பொறாமை கொண்டிருந்தார். அவரைத் தன் காதலரிடமிருந்து பிரிக்கும் நோக்கில், அவருக்குத் தெரியாமலேயே ஊசி போட விரும்பினார். மருத்துவமனையில் தனக்கு இருந்த தொடர்புகள் மூலம் அவர் எச்.ஐ.வி வைரஸைச் சேகரித்தார். அன்றைய தினம் அவர் அந்த ரத்தத்தை மருத்துவரின் உடலில் ஊசி மூலம் செலுத்தியுள்ளார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது தோழி மற்றும் அவரது பிள்ளைகளின் உதவியைப் பெற்றுள்ளார். அவர்களும் இந்த குற்றத்திற்கு துணை போயுள்ளனர்" என்று டிஎஸ்பி தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த வழக்கை விசாரிப்பதில் தொழில்நுட்ப சான்றுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்? குற்றம் சாட்டப்பட்டவர் தனது தோழி மற்றும் அதோனியில் வசித்து வந்த அவர்களது பிள்ளைகள் மூலம் இதைத் திட்டமிட்டதாக கர்நூல் காவல்துறை அதிகாரி சேஷையா பிபிசியிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பரும் அவரது மகனும் அதோனியிலிருந்து வந்திருந்தனர். முதலில் பைக்கில் சென்று ஸ்கூட்டியில் மோதியதால், பெண் மருத்துவர் கீழே விழுந்ததாகவும், பின்னர் நண்பரின் மகளும் குற்றம் சாட்டப்பட்டவரும் பின்னால் வந்து ஊசி போட்டதாகவும் காவல்துறை அதிகாரி சேஷையா கூறினார். "அவர்கள் ஊசி போட்டது குறித்து மருத்துவர் சந்தேகித்தபோது, தன் செல்போனில் அவர்களின் முகங்கள் தெரியும் வகையில் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினோம். வாகன எண்ணை கண்டறிந்து, அது யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும் தெரிந்துகொண்டோம். அது குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரில் இருந்தது. ஆனால் எவ்வளவு விசாரித்தாலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை," என சேஷையா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் தனது குற்றத்தை எவ்வாறு ஒப்புக்கொண்டார் என்பதையும் சேஷையா விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், "அவரின் செல்போனில் அழைப்புப் பட்டியலை நாங்கள் சரிபார்த்தோம். அவர் பேசிய 17 பேரில் 15 பேர் எங்களின் தொடர்பில் வந்தனர். இருவர் மட்டும் தொடர்பில் வரவில்லை. தொடர்பில் வந்தவர்களில் அனைவரும் இயல்பாகப் பேசினர். ஆனால் ஒருவர் மட்டும் பொய் சொன்னார். நாங்கள் அவரை விசாரித்தோம். தொடர்பில் வராத மற்ற இருவரையும் பிடித்தோம்" என்றார் சேஷையா. குற்றம் சாட்டப்பட்டவர் தனது பைக்கை வேறு ஒருவரிடம் கொடுத்திருந்தார். அந்த பைக் யாரிடம் கொடுக்கப்பட்டது என்று விசாரித்தபோது, இன்னொரு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்தோம். அந்த எண்ணும் அவரின் அழைப்புப் பட்டியலில் இருந்தது. தொடர்பில் வராதவர்களின் எண்களுடன் அவரது எண்ணும் இருந்தது. அவர்கள் அனைவரும் குற்றம் நடந்த இடத்தில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். "அவர்களை அழைத்து வந்து குற்றம் சாட்டப்பட்டவரின் முன் நிற்க வைத்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,வழக்கின் விவரங்களை ஊடகங்களுக்கு கர்நூல் காவல்துறையினர் விளக்கினர். எச்.ஐ.வி மாதிரி எப்படி வெளியே வந்தது? குற்றம் சாட்டப்பட்ட செவிலியர், கர்நூல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு செவிலியரின் உதவியுடன் எச்.ஐ.வி மாதிரியைச் சேகரித்ததாக கர்நூல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வர்லு பிபிசியிடம் தெரிவித்தார். "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் மூலம் அந்த எச்.ஐ.வி மாதிரி சேகரிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் பயிற்சியின் போது சந்தித்துள்ளனர். அந்தச் செவிலியர் இரவுப் பணியில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடம் இந்த எச்.ஐ.வி மாதிரியைக் கொடுத்துள்ளார். அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்தச் செவிலியரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரும் எங்கள் மருத்துவமனையில் தான் பணிபுரிகிறார். அவர் தற்போது விடுப்பில் உள்ளார்," என்று கர்நூல் அரசு மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு மற்றொரு செவிலியர் (அவரது தோழி) எந்த அடிப்படையில் எச்.ஐ.வி மாதிரியை வழங்கினார் என்பது விசாரணைக்குப் பிறகு உறுதியாகும் என்றும், அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேஷய்யா தெரிவித்தார். "குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். அவர் தன்னைத் திருமணம் செய்யாமல் பெண் மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டதால் அவர் பொறாமைப்பட்டுளார். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அந்தப் பெண் நர்சிங்கில் முதுகலை முடித்துள்ளார். முன்பு செவிலியராகப் பணியாற்றிய அவர், தற்போது பணியில் இல்லை"என்று கூறிய அவர், "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் இவருக்கு ஏன் ஹெச்ஐவி ரத்த மாதிரிகளைக் கொடுத்தார் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும்," என்றும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் தொலைபேசி மூலம் பேச, பிபிசி பலமுறை முயற்சித்தது. ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதேபோல், குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களிடம் பேச முயன்றபோது, அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. (தனிப்பட்ட ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அவர்களின் பதவி குறித்த கூடுதல் விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp80pkjgl8po
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவிலிருந்து இறுதி பணயக் கைதியின் உடலும் மீட்பு - இஸ்ரேல் அறிவிப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 11:14 AM 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 251 பேரில் எஞ்சியிருந்த இறுதி பணயக் கைதியான ரான் கிவிலி (Ran Gvili) என்பவரது உடலை இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் உள்ள ஒரு மயானத்திலிருந்து மீட்டுள்ளன. 24 வயதான ரான் கிவிலி விசேட அதிரடிப்படை வீரர் (Yamam) ஆவார். ஒக்டோபர் மாதம் 07 தாக்குதலின் போது போரிட்டு உயிரிழந்த இவரது உடலை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு எடுத்துச் சென்றிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் இவரது உடல் மீட்கப்பட்டது. "நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்; இறுதி பணயக் கைதி வரை அனைவரையும் மீட்டுவிட்டோம்," என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள அமைதித் திட்டத்தின் மிக முக்கியமான இரண்டாம் கட்டம் அமுலுக்கு வரவுள்ளது. காசாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச பாதுகாப்புப் படை (International Stabilization Force) நிலைநிறுத்தப்படும். இந்தப் படைக்கு அமெரிக்க ஜெனரல் ஜஸ்பர் ஜெஃபர்ஸ் (Jasper Jeffers) தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலிய இராணுவம் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறும். இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான பிரதான எல்லையான ரஃபா (Rafah) எல்லைக் கடவை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது மனிதாபிமான உதவிகள் மற்றும் மக்களின் நடமாட்டத்திற்குப் பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237123
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
அமெரிக்காவில் பனிப்புயல் : 30 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 10:42 AM அமெரிக்காவின் தென் மாகாணங்கள் முதல் வடகிழக்கு மாகாணங்கள் வரை நீண்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நியூயோர்க் நகரில் மட்டும் குளிரில் உறைந்து 08 பேர் உயிரிழந்துள்ளனர். மாசசூசெட்ஸ் மற்றும் ஓஹியோவில் பனி அகற்றும் வாகனங்கள் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மிசிசிப்பி மற்றும் டென்னசி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 5,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. பனிப்புயல் காரணமாக இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வீதிகளில் பனி மலைபோல் குவிந்துள்ளதால் பல மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் போன்ற நகரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மிசிசிப்பி பல்கலைக்கழகம் இந்த வாரம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை -31°C (மைனஸ் 31 டிகிரி செல்சியஸ்) வரை குறைந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/237118
-
யாழில் இந்திய குடியரசு தினம்!
தானாக உருவாகியது, ஒவ்வொன்றாக பிரிந்து
-
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி - இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 பேருக்கு தொற்று உறுதி - இலங்கையில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு Published By: Digital Desk 3 27 Jan, 2026 | 05:05 PM இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் வைத்தியசாலைப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பழம் தின்னும் வௌவால்கள் (Fruit Bats) மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களிடையே பரவுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொற்றின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை காணப்படுகின்றன. நோய்த்தொற்று தீவிரமடைந்தால் மூளை அழற்சி (Encephalitis) ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும். நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. இதனால், இந்த வைரஸ் உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னுரிமை நோய்த்தொற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முன்னைய நிபா வைரஸ் பரவல்களின் போது, இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தொற்றை தொடர்ந்து, இலங்கையில் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “தற்போதைக்கு இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும், பிராந்திய நிலைமைகளை கவனமாக கண்காணித்து வருகிறோம். சர்வதேச சுகாதார அமைப்புகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, மலேசியா, நேபாளம், தைவான் உள்ளிட்ட பல நாடுகளின் விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பிராந்திய நாடுகள் அனைத்தும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/237167
-
அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்
அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில் Jan 27, 2026 - 03:17 PM அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்படவுள்ளது. அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmkwex3r604hjo29nu7p1uu8a
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
- Today
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குள் நுளைந்திருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை வெளியேற்றும் பாரிய போராட்டத்தை அக்கட்சி எப்போது நடத்தும்.?????🤔
-
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
என்ன நடந்தது என்பதை மறைத்து. மேற்கு ஊதுகுழல்கள் சொல்லுவதை ஒப்புவிப்பது (வீரகேசரி) செய்தி அல்ல. எல்லா மேட்ற்கு நானும் ஆதரவு அளிக்க, us, uk, பிரான்ஸ், இஸ்ரேல் இரானுக்குள் உளார்களுக்கு நாசகார சம்பங்களை செய்வதத்திற்கு பயிற்சியும் அளித்து, பணமும் கொடுத்து வைத்து இருந்தது. ஜூன் தாக்குதல் வெற்றி அடையவில்லை என்பதால். 2ம் கடா திட்டமான ஆர்ப்பாட்டத்தை தூண்டி, அந்த போர்வையில், அரச கட்டடங்கள், வசதிகள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டதை, மேட்ற்கு இரசித்து கொண்டு, உண்மையான ஆர்ப்பாட்டம் நடப்பதாக பிரச்சாரம் செய்தது. முதலில் இரான் என்ன நடக்கிறது என்பதை அரிவதத்திற்கு, அவனிப்பதத்திற்கு நேரம் எடுத்தது, அத்தத்துடன் இரும்பு கரஅதிகாரத்தை பாவிக்கவில்லை. இணையவழி வெளிதொடர்பாடல் நாசம்செஐயப்பாடும் இடங்களுக்கு வருவதை அவதானித்து, வெளிஇணையதொடர்பை துண்டித்தது, ஆனாலும், நாசம் செய்வது மேலும் கூடியது. அதன் பின்பு ஈரான் விளித்து கொண்டது ஸ்டார் லிங் தொடர்பாடல் பற்றி, அதுவே நாசம் செய்பவர்களுக்கு ஆப்பாகியது. starlink தொடர்பாடலை உளவறிந்து, எந்த இடத்தில், புள்ளியில் இருந்து தொடர்பு இருக்கிறது என்பதை நேரம் விட்டு, படம்போட்டு, நாசம் செய்பவர்களை குறிப்பாக பிடித்தது. (இரான் அறிவித்தும் உள்ளது 732 நாசக்காரர்கள் என்று , டிரம்ப் இதை மழுப்பலாக, பட்டும் படாமலும் சொல்லி இருந்தார் அவர்களை தூக்கில் இடக்கூடாது என்று. இரான் நீதி / சட்ட த்துறை மறுத்து விட்டது) (இதில் ஈரானுக்கு ருசியா உதையும் இருந்ததாக செய்திகள் உள்ளன) அதன் பின்பே இரும்புகர அதிகாரத்தை பாவித்து. நிசயாமாக அப்பாவிகள் இறந்து இருப்பார்கள். ஆனால் பெரும்பான்மை நாசகர்களின் தூண்டுதுதலுக்கு எ டுபட்டவர்கள். மறுவலமாக அரச சேவைகள், கட்டிடங்கள் போன்றவற்றை எரித்தால், எந்த மேட்ற்கு அரசு பார்த்து கொண்டு இருக்கும் ஈரானின் மேட்ற்கு, இஸ்ரேல் ஆட்சி கவிழ்ப்பு கனவு சுக்குநூறாகிவிட்டது. அதன் பின்பே இப்பொது பெரும் கடல் சார்ந்த படையை கொண்டு மிரட்டல் தொடங்கப்பட்டு உள்ளது.
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
மூஞ்சுத்துக்கு போக வழியில்லையாம் அடுப்புக்குள்ள விழுந்த கதையா போயிட்டுது . அங்கை இருக்கிற சனத்துக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க இந்த கோடாலி காம்பால் முடியலை ஆய்வு செய்கிரராம் விட்டால் செவ்வாய் கிரகத்தையும் ஆய்வு செய்வார் .
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
"சட்டச் சிக்கல்கள் உருவானால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது" உண்மை. அண்ணை, தகவல்களை வெளிப்படையாக பகிர்வதற்காகவும் வாசகர்களை சென்றடைவதற்காகவும், யாழ் இணையத்தை எம்மை ஒன்றுபடுத்தும் ஊடகமாக பாவிக்கிறோம். ஏனைய உறவுகளின் கருத்துகளையும் பெற்றபின் தீர்மானிப்போம். @Kavi arunasalam ஐயா நீங்கள் இலச்சினை ஒன்றை எமக்காக உருவாக்கி தாங்கோ. பனர் விரைவாக செய்தால் நல்லது, வேலைத்திட்டங்கள் முடிய அங்கு கொண்டுபோய் வைத்து சிறு காணொளி, படங்கள் எடுக்கலாம்.
-
தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு
தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு செவ்வாய், 27 ஜனவரி 2026 09:10 AM தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் , தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்திக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அந்நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , பருத்தித்துறை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://jaffnazone.com/news/54588
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.!
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.! Vhg ஜனவரி 26, 2026 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழாவானது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பட்டிப்பளை பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (25.01.2026) ஆம் திகதி திகதி நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம் ( ஜெயம்) பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழக இணைப்பாளருமான சந்திரமோகன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகளின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.battinatham.com/2026/01/blog-post_791.html
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இலச்சினையில் யாழை உள்ளடக்குவது அவசியமற்றது. இங்கு சிலர் குறிப்பிடதுபோல் யாழ் என்பது வேறான அர்த்தத்தைக் கொடுக்கலாம். அத்துடன் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதால் சட்டச் சிக்கல்கள் உருவானால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது. முன்பு யாழில் உருவாக்கப்பட்டு பின்னர் தனியாகச் செயற்பட்ட நேசக்கரம் அமைப்பு போலவே தாயக உதவித் திட்டத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்களின் தகவல் பரிமாற்றங்களுக்கான களமாக யாழ் உள்ளது. முன்னோடியும் எதிர்காலத்தில் வளர்ந்து தனியாகச் செயற்படலாம். தனிப்பட்ட முறையில் இலச்சினை தொடர்பான எனது கருத்து: இலங்கையைக் கை ஒன்று தாங்குவது போல் உள்ளது இலங்கை முழுவதுக்குமான உதவி செய்யும் அமைப்பு போல் காட்டியிருந்தாலும் இது வட கிழக்குக்கு மட்டுமானது. இலங்கை அவசியமானதா ? மலையகம் ஏன் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது ? செஞ்சிலுவையின் இலச்சினையை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியுமா (நிறம் மாற்றப்பட்டிருந்தாலும்) ? புறா அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. இது அவசியமா ? செஞ்சிலுவை சின்னத்தை எடுத்துவிட்டால் இலச்சினை சுகாதார உதவியைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று தோன்றுகிறது. மக்கள் - சுகாதாரம் - உதவி ஆகிய மூன்றையும் பிரதிபலிப்பதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
-
உக்ரைனுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த ஆவணம் கையொப்பமிடத் தயாராக உள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
2014 இல் கிரிமியால், பிரித்தானிய / அமெரிக்கா நீர்மூழ்கிகளை தரிக்க வைத்து, அந்த பகுதி ரஷ்யா கடல் இணைப்பை வெட்டுவோம் என்று எல்லோரும் உக்கிரன், us, uk, நேட்டோ, மேற்கு படம் காட்ட வெளிகிட்டு. (அதை பேச்சுவார்தையால் தீர்ப்போம் என்ற ரஷ்யாவின் முனைப்பை உதாசீனப்படுத்தி) இப்பொது ஒடேசா வை இழந்து தரையால் கட்டிடப்பட்ட நாடக உக்கிரைன் மாற இருக்கும் தருணத்தில், சேலன்ஸ்கிக்கு சுடலை ஞானம் பிறந்து இருக்கிறது. (அதை இந்கர் ராஜாதிகந்திரம் என்று சொல்வோர் சிலரும் உள்ளனர், சில கற்பனை கதைகளுடன்). ஒரு விதத்தில் வரலாறு மீட்கிறது, ஒட்டோமான் அரசை எப்படி ருசியா (அதுக்கு அந்த அச்சுறுத்தலை) மேவியது என்பதை பார்த்தல், இப்பொது நடப்பது மிகுந்த வேறுபாடு இல்லை. ஒட்டோமான் அரசுக்கு ஒப்பானது நேட்டோ.
-
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு 27 Jan, 2026 | 12:47 PM ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் பல இடங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் இந்த மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன. நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள், அதிகரித்த பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெற்ரோல் விலை மாற்றம் ஆகியவையே தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் ஈரானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல பகுதிகளில் இணைய சேவையையும் துண்டித்துள்ளது. இதனிடையே, ஈரானில் ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இதுவரை 6,126 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். நிலைமை சீரடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனம் செலுத்தி வருகின்றன. https://www.virakesari.lk/article/237133
-
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
இந்தியாவின் 77வது குடியரசு தின நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ உரை! 27 Jan, 2026 | 02:20 PM இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் (KIIT) நடைபெற்ற இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். இதன்போது, நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும், 'டிட்வா' சூறாவளி பாதிப்பின் போதும் இந்தியா வழங்கிய உதவிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இருந்து இந்தியாவின் முன்னேற்றங்களை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இதன்போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே நிலவும் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கலாசாரத் தொடர்புகளையும் நாமல் நினைவு கூர்ந்தார். விளையாட்டுத் துறையில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்கு இந்தியாவுக்கு பாராட்டையும் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது பதவி அல்ல; அது ஒரு பொறுப்பு. பொதுவான இலக்குகளை அடைவதற்காக மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறை என மாணவர்களிடையே நாமல் கூறினார். https://www.virakesari.lk/article/237145
-
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி! 27 Jan, 2026 | 02:49 PM கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237150#google_vignette
-
யாழில் இந்திய குடியரசு தினம்!
அவர்களை உருவாக்கியவர்கள் யார் ?
-
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு 27 January 2026 காசாவில், 843 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், 251 பணயக் கைதிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இறுதியாக, இஸ்ரேலிய இராணுவ வீரர் ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காசாவில் இருந்த 251 பணயக் கைதிகளும், உயிருடனும் உடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்தநிலையில், அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் சர்வதேச அமைதிகாக்கும் படை காசாவில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ட்ரம்பின் சர்வதேச அமைதி திட்டத்தின் மேற்பார்வையில் காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/443029/is-the-war-in-gaza-coming-to-an-end-251-hostages-rescued-israel-announces-action
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது. கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன்றும் தெளிவாகக் காணப்படும் நிலையில் உள்ளது. புத்தசாசன அமைச்சின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, கோட்டையின் உண்மையான எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முற்றவெளி விளையாட்டு மைதானம், முனீஸ்வரன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், உள்ளூராட்சி அல்லது பொதுமக்களுடன் ஆலோசனை செய்யாது எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. கோட்டையை வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க அரசு, முன்னாள் காலனிய நாடுகள், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோட்டை வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட வேண்டும் சுமந்திரன் அவர்களிடம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செலஸ்டின் அவர்கள் வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களில் கோட்டையின் வரலாற்றுச் சுவர்களிலிருந்து தூரமாக அமைக்கப்பட்டிருந்த Concrete தூண்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பல மத மற்றும் பல பண்பாட்டு மரபுகள் இணைந்துள்ள வரலாற்றுத் தளங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ள தொல்லியல் துறை நிர்வகிக்கக் கூடாது; சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இக்கருத்துகளை சுமந்திரன் அவர்கள் பொறுமையாகக் கேட்டு, கோட்டையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். https://adaderanatamil.lk/news/cmkw75asj04gto29n74r9shmn
-
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம் தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர். அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்