Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்! January 15, 2026 கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தினார். இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்விடயத்தில் குறுக்கிட்டு பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் , மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம். அது முன்னைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம். துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிட்டவேண்டும். இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து குறுக்கிட்ட தவிசாளர் 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அது நடக்கும் என்றார். இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என்றார். https://www.ilakku.org/demand-to-release-the-kopayi-maveerar-thuyum-illam-from-the-military/
  3. ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.! Vhg ஜனவரி 15, 2026 இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்' (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (15.01.2026)வியாழக்கிழமை மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது. ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி பிரதி அமைச்சர் முஹமது இலியாஸ் முஹமது அஹ்ரம் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டமானது, நாட்டின் தேசிய மின்வழங்கலுக்குத் தூய எரிசக்தியைச் சேர்ப்பதோடு, சூழலுக்கு உகந்த மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.battinatham.com/2026/01/blog-post_542.html
  4. புதிய வற் வரி விலைப்பட்டியல் முறை: நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல் 15 Jan, 2026 | 12:52 PM புதிய VAT வரி விலைப்பட்டியல் (VAT Tax Invoice) வடிவம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தேவைகள் குறித்து சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் (ICCSL) வரிக்குழு அண்மையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. எமதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்களுக்குக் கொள்கை வகுப்பாளர்கள், வரி வல்லுநர்கள் மற்றும் வணிக சமூகம் எவ்வளவு தூரம் தயாராக உள்ளது என்பதை ஆராய்வதே இதன் பிரதான நோக்கமாகும். இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களாக, புதிய VAT விலைப்பட்டியல் முறைக்கு வணிகங்களின் தயார்நிலையை மதிப்பீடு செய்தல், நடைமுறை இடைவெளிகள் மற்றும் தெளிவற்ற தன்மைகளைக் கண்டறிதல் என்பன அமைந்திருந்தன. இதன் மூலம், புதிய முறையை வணிகங்களுக்கு உகந்த வகையில் சுமூகமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு (IRD) வழங்க ICCSL திட்டமிட்டுள்ளது. முக்கிய உரை மற்றும் கொள்கை விளக்கங்கள் நிகழ்வின் ஆரம்ப உரையை ஆற்றிய சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் தலைவர் திரு. ஜொனி பெர்னாண்டோ, இந்த சீர்திருத்தம் ஒரு சாதாரண நிர்வாக மாற்றம் மட்டுமல்ல, இது வணிகங்கள் பரிவர்த்தனைகளை ஆவணப்படுத்தும் மற்றும் வரி வரவுகளைக் கோரும் முறையில் ஏற்படும் ஒரு கட்டமைப்பு மாற்றமாகும் என வலியுறுத்தினார். வருவாய் இலக்குகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்குத் தெளிவான நடைமுறைகளும், போதிய கால அவகாசமும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். KPMG நிறுவனத்தின் வரி மற்றும் ஒழுங்குமுறை சேவைகளின் முதல்வர் செல்வி. ரிஃப்கா ஸியாத் (Ms. Rifka Ziyard), புதிய விலைப்பட்டியல் வடிவத்தின் பின்னணியில் உள்ள கொள்கை ரீதியான காரணங்களை விளக்கினார். போலி விலைப்பட்டியல்களைத் தடுத்தல், டிஜிட்டல் முறைக்கு மாறுதல் மற்றும் உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) முறைகேடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்தார். நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சவால்கள் ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) நிறுவனத்தின் வரித்துறை முதல்வர் திரு. வேலாயுதபிள்ளை சக்திவேல், நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசுகையில் பின்வரும் முக்கிய சவால்களைப் பட்டியலிட்டார்: * மென்பொருள் மற்றும் முறைமைகளைத் தயார்படுத்துவதில் உள்ள சிக்கல்கள். * சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) ஏற்படும் மேலதிக சுமை. * சிறிய பிழைகளுக்காக விலைப்பட்டியல்கள் நிராகரிக்கப்படும் அபாயம் மற்றும் வரி வரவுகள் மறுக்கப்படுதல். * அதிகரித்த இணக்கப்பாட்டுச் செலவுகள் வணிக சமூகத்தின் கோரிக்கைகள் 2026 ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் நிலவும் தெளிவற்ற தன்மைகளைத் தீர்க்காவிட்டால், அது பொருளாதார ரீதியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பங்கேற்பாளர்கள் எச்சரித்தனர். குறிப்பாக, அதிக பரிவர்த்தனைகள் நடைபெறும் மற்றும் சேவை சார்ந்த துறைகளில் இந்த சிக்கலான நடைமுறை தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைச் சீர்செய்யப் பங்கேற்பாளர்கள் முன்வைத்த பரிந்துரைகள்: * முறைமைகளை மாற்றியமைக்க மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப் போதிய கால அவகாசத்தை IRD வழங்க வேண்டும். * தெளிவான வழிகாட்டிக் குறிப்புகள் மற்றும் உதாரணங்களை வழங்க வேண்டும். * ஆரம்பக் கட்டத்தில் கடுமையான தண்டனைகளைத் தவிர்த்து, கல்வி மற்றும் வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் துணைத் தலைவர் திரு. ஹேமக்குமார குணசேகர மற்றும் முன்னாள் தலைவர் திரு. ஷனில் பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கில் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச வர்த்தக சபை இலங்கை உறுதி அளித்தது. வரிச் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்தது. https://www.virakesari.lk/article/236088
  5. ’கோல்டன் டோம்’ திட்டத்துக்கு கிரீன்லாந்து அவசியம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிகவும் இன்றியமையாதது என்றும், தான் உருவாக்கி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்புத் திட்டத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தாம் கட்டி எழுப்பி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்பு அமைப்பிற்கு கிரீன்லாந்து நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டள்ளார். மேலும், நாம் கிரீன்லாந்தை எடுக்காவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதனைக் கைப்பற்றிவிடும். அது ஒருபோதும் நடக்காது என அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பெரும் இராணுவ பலம் இன்றி நேட்டோ ஒரு பயனுள்ள சக்தியாக இருக்க முடியாது என்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் கைகளில் இருக்கும்போது நேட்டோ இன்னும் வலிமையானதாக மாறும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதனை விடக் குறைவான எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாதுஎனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் கட்டியெழுப்பிய இராணுவ பலத்தை இப்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கோல்டன்-டோம்-திட்டத்துக்கு-கிரீன்லாந்து-அவசியம்/50-371046
  6. இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ‘எக்ஸ்‘ தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்படுகின்றன. புதிய குடியேற்றவர்கள் அமெரிக்க மக்களின் செல்வத்தை சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும்” என்று தெரிவித்துள்ளது. அதேபோல், வெள்ளை மாளிகை வெளியிட்ட பதிவில், “புதிய குடியேற்றவர்கள் பொதுச் சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வரை விசா செயலாக்கம் நிறுத்தப்படுகிறது. அமெரிக்க நாட்டுக்கே முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கை-உள்ளிட்ட-75-நாடுகளுக்கு-அமெரிக்கா-விடுத்த-அறிவிப்பு/50-371077
  7. போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்! adminJanuary 15, 2026 போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் ஒன்றாக – தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து செயற்படவுள்ளனர். இதனூடாக போதைப்பொருட்களை இல்லாது செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் இல்லாதொழிப்பதே நோக்கம் அந்த வகையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்டெடுக்க அமைக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்தவித அச்சமும் இன்றி, நம்பிக்கையுடன் தகவல்களை வழங்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/226564/
  8. மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுக்கின்றோம்.
  9. Today
  10. ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி! வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1459972
  11. கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம். கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று இடம்பெற்றது இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர் https://athavannews.com/2026/1460010
  12. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (14) உறுதிபடுத்தியுள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நாடு தழுவிய போராட்டங்களை அடக்குவதற்கு மதகுருமார்கள் முயற்சித்து வரும் நிலையில், ஈரானின் அமைதியின்மையால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 ஆக உயர்ந்துள்ளதாக ஒரு உரிமைக் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மதிப்பீட்டின்படி, இநத் விடயத்தில் ட்ரம்ப் தலையிட முடிவு செய்துள்ளார், ஆனால் இந்த நடவடிக்கையின் நோக்கம் மற்றும் நேரம் தெளிவாக இல்லை என்று டெல் அவிவ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நிலையில் வொஷிங்டன் ஈரானை தாக்குவதைத் தடுக்க” பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை தெஹ்ரான் கேட்டுக் கொண்டதாகக் பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஈரானை குறிவைத்தால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் துருக்கி வரையிலான பிராந்திய நாடுகளுக்கு, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்றும் தெஹ்ரான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சிக்கும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான நேரடி தொடர்புகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது அதிகரித்து வரும் பதட்டங்களை பிரதிபலிக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். https://athavannews.com/2026/1459954
  13. திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்! 14 Jan, 2026 | 07:02 PM திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு போன்ற பொருளொன்று இன்று புதன்கிழமை (14) காலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. இந்த மிதப்பு படகு மியன்மார் அகதிகள் வந்திருக்கக்கூடிய படகாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த படகில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதுடன், பல்வேறு சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, குறித்த இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து இந்த மரத்தாலான அமைப்பினை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236051
  14. 2026இல் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 14 Jan, 2026 | 06:52 PM இலங்கை மின்சார சபையானது உரிய நேரத்தில் முறையான கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த போவதில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த காலத்திற்குள் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியமை, முதன்மை முன்மொழிவின் குறைபாடு காரணமாக இந்த காலாண்டிற்கு மின்சாரசபை ஒரு புதிய முன்மொழிவை முன்வைத்திருப்பினும், காலாண்டின் மீதமுள்ள குறுகிய காலத்திற்கு ஒரு திருத்தத்தை செயல்படுத்துவதன் மூலம் அதிக சதவீதத்தில் கட்டணங்களை மாற்றுவதன் தீமைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை கடந்த 2025 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆணைக்குழு மின்சார சபைக்கு தெரிவித்திருந்தது. இருப்பினும், மின்சார சபை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதியன்று 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்தது. குறித்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது. திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதங்கள் ஏற்படும் என்று மின்சாரசபை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைகுழுவிற்கு தெரிவித்தது. இன்றுவரை ஆணைகுழுவிற்கு திருத்தப்பட்ட கட்டண திருத்த முன்மொழி திட்டம் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் கட்டண திருத்த முன்மொழி திட்டம் பெறப்பட்டவுடன், மதிப்பாய்வு மற்றும் பொது ஆலோசனைக்குப் பின்னர் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடையும் காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். காலாண்டில் குறுகிய காலத்திற்கு வருமானம் மற்றும் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்வதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாறக்கூடும் என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பொருளாதாரத்தில் அதிக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சரியான காலப்பகுதியில் செல்லுபடியாகும் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்காததாலும், காலாண்டின் குறுகிய காலத்திற்கு கட்டண திருத்தத்தை செயல்படுத்துவதாலும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம் செய்தது. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/236050
  15. யாழ். போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் ஒருவர் அட்டகாசம் - பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் கத்திக்குத்து! 14 Jan, 2026 | 05:13 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அதிகாலை 1.40 மணியளவில் போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 24ஆம் இலக்க விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இதன்போது குறித்த நபர் தாதிய உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாடு, பொருத்தமற்ற வார்த்தைகளை பேசி, விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார். அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அச்சுறுத்தியுள்ளார். அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகத்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், தாக்குதலை நடாத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236045
  16. "இவங்க மட்டும்தான் Jallikattu-ல் பங்கேற்க முடியும்" - 2026 Rules என்னென்ன? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உள்ள விதிகள் என்னென்ன என்பதை விழா ஏற்பாட்டாளர் விளக்குகிறார். #Jallikattu2026 #AlanganallurJallikattu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 10-ஆம் வகுப்பு மாணவியிடம் அடங்கும் 'சின்ன Style'… Jallikattu-ல் தோல்வியே காணாத காளை மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அழகுபேச்சி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக 2 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் இவர், காளைகளை போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகிறார். இவருக்கும் காளைகளுக்கும் இடையிலான பிணைப்பு பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு. #AvaniyapuramJallikattu #Madurai #Jallikattu Producer - Vijayanand Arumugam Shoot Edit - Sam Daniel இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  17. திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலையை வைத்த தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்! 14 Jan, 2026 | 04:02 PM திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு தேரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 தேரர்கள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/236031
  18. அத தெரண கருத்துப்படங்கள்.
  19. மனைவியின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும் அம்மாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்கும் ஏனைய உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
  20. நீங்கள் இங்கே சொன்னவற்றில் இருந்து தான் தமிழீழ மீட்பாளர் சீமான் கோடீஸ்வரர் சிறிதரன் மற்றும் விஜய் எல்லாம் கிழட்டு கிழவர்கள் என்பதையும் விளங்கி கொள்ள முடிந்தது.
  21. யாழ்பாணத்தில் தமிழர்களின் தலைவராக அர்ச்சுனா அல்லது அநுரகுமார திசாநாயக்க தான் வருவார்கள் என்றும் சொல்கின்றார்கள்
  22. மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.