All Activity
- Past hour
-
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு
சிலாபத்தில் 240 அடி நீள பெய்லி பாலம் திறப்பு: டித்வா புயலுக்குப் பிறகு இந்தியாவின் மீள்நிர்மாண உதவி 19 Mar, 2026 | 05:35 PM (இணையத்தள செய்திப் பிரிவு) டித்வா புயலுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து தொடர்புகளை மீளமைக்கும் நோக்கில், சிலாபம் – தொடுவாவை வீதியில் அமைக்கப்பட்ட 240 அடி நீளமான பெய்லி பாலம் புதன்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது. கரையோரக் கிராமங்களான இரணைவில மற்றும் தொடுவாவை ஆகியவற்றை இணைக்கும் இந்த முக்கிய பாலம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ஜிஹான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த புதிய பாலம் சிலாபம் வழியாக புத்தளம் மற்றும் கொழும்புக்கு இடையிலான கரையோரப் போக்குவரத்து இணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகளின் வாழ்வாதாரத்திற்கும் இது முக்கிய ஆதரவாக அமைகிறது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் பிராந்திய பொருளாதாரச் செயல்பாடுகள் மீளச் செயல்படத் தொடங்கியுள்ளன. இது டித்வா புயலுக்குப் பிந்தைய இந்தியாவின் மீள்நிர்மாண உதவியின் கீழ் இலங்கையில் அமைக்கப்பட்ட பெய்லி பாலங்களில் அதிக நீளமும் அகலமும் கொண்டதாகும். 240 அடி நீளமும் 13 அடி அகலமும் கொண்ட இந்த பாலம், இடைத்தூண் ஆதரவுடன் இரட்டை வலுவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு உதவி பொதியின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, 30 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியின் கீழ் பெய்லி மற்றும் நிரந்தர பாலங்களை அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை மீள உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பாலம், இந்திய இராணுவ பொறியியல் அணியின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. டித்வா புயலால் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான உட்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டிருந்தன. கடந்த மாதங்களில், இந்திய இராணுவ பொறியியல் பிரிவு 40க்கும் மேற்பட்ட பாலங்களின் சேதங்களை மதிப்பீடு செய்ததுடன், வீதிகள், கால்வாய்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மீளமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா இலங்கைக்கு வழங்கிய நான்கு பெய்லி பாலங்களில் இரண்டு கிளிநொச்சி மாவட்டத்திலும், மற்ற இரண்டு கண்டி – இராகலை வீதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடினமான நிலப்பரப்புகளில் போக்குவரத்தை மீளமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்நிலையில், வரும் வாரங்களில் மேலும் சுமார் 15 பெய்லி பாலங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களின் போக்குவரத்து தொடர்புகள் முழுமையாக மீளமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241395
-
தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்?
தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்? By ஆர். அபிலாஷ் March 16, 2026 முதலில் தேசிய விருதுகள். இவை தொடர்ந்து அரசியல் சாய்வாலோ செல்வாக்காலோ மதிப்பிழந்து வந்தாலும் சாகித்ய அகாடெமி போன்றவற்றின் மதிப்பு அடிப்படையில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சில நல்ல படைப்பாளிகளுக்கு அது விருதளித்துள்ளது, அதை நமது தேசியம் அங்கீகரிக்கிறது என்பதாலே உருவாகிறது. ஒவ்வொருமுறை மோசமான படைப்பாளிகள் தேர்வு செய்யப்படும்போதும் அது மதிப்புக் குறைவதைக் காண்கிறோம். தேர்வு சரியானதும் மதிப்பும் கூடுகிறது. அகாடெமியின் தேர்வுகள் மீதுள்ள புகார்கள், பரிந்துரைகள் நியாயமானவை. அதையெல்லாம் நடைமுறைப்படுத்த நாம் சரியான நபர்களை அரசியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நபர்கள் அகாடெமிக்குள் சென்று நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும். இந்தியர்களின் முக்கியமான பிரச்சினை நாம் நேர்வழியை ஏனோ நம்புவதில்லை. தொடர்ந்து நாம் புறக்கணிப்பட்டதாக, நாம் அதிக மதிப்புக்குத் தகுதியானவர்கள் என நம்புகிறோம். நமது வாசகச் சூழலும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். இயல்பாகவே வாய்ப்புக் கிடைத்து உள்ளே போகும் சிலர் குறுக்குவழியில் தமக்கும் தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வாங்கிக் கொடுக்க விழைகிறார்கள். சிலநேரங்களில் கட்சிக் குறுக்கீடுகளும் சாதியச் சாய்வுகளும் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இப்படி, இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினையும்தான். இவ்வளவு போதாமைகளுக்கு மத்தியிலும் கூட, ஒட்டுமொத்தமாக பல்வேறு மொழிகளிலுள்ள தேர்வுகளைக் காண்கையில் அகாடெமியின் செயல்பாடுகள் நியாயமாகவே உள்ளது எனச் முடியும். ஒப்பீட்டுக்கு நாம் உள்ளூர் தனியார் விருதுகளைப் பார்ப்போம் - அவற்றில் தேர்வுக்குழு, தேர்வு முறைமை என ஒன்றுமே கிடையாது. யாராவது பரிந்துரைக்கிறார்கள், யாரோ முடிவெடுக்கிறார்கள், அறிவிக்கிறார்கள், கொடுக்கிறார்கள். இதனாலே இத்தகைய தனியார் விருதுகள் வாசகர்கள் மத்தியில் பொருட்படுத்தப்படுவதில்லை. விளைவாக நன்கு அறியப்பட்டவர்களுக்குக் கொடுப்பதன் வழியாக அம்மதிப்பைப் பெருக்க விருது அமைப்புகள் முயல்கின்றன. இந்த சுழற்சி மாறுவதில்லை. பரிந்துரைப்பவர்களுக்கு எந்த எழுத்தாளர்களிடத்து நட்பும் நன்மதிப்பும் உள்ளதோ அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கிறது. இதை ஒரு மறைமுக சமூக நீதித் திட்டம் எனலாம். ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்" விருதுதான் இருப்பதிலேயே விஷமத்தனமானது - அவர் எந்த முறைமையையும் பின்பற்றுவதில்லை என்பதுடன் எதையும் நம்புவதோ பொருட்படுத்துவதோ இல்லை. அவர் தன் சக-எழுத்தாளர்களின் மதிப்பீடுகளையும் ஏற்பதில்லை. அவர் மனத்தில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு விருதாளர்களின் வயதைப் பொறுத்து அறிவிப்பதாகச் சொல்கிறார். அவரது விருப்பவெறுப்புகளோ விருதைத் தீர்மானிக்கின்றன. இதையொட்டி அவர் எழுதும் விசயங்கள் இந்தப் படைப்பாளிகளைச் சமமாக மதித்துப் பாராட்டுவதாக இருக்காது. இந்த விருதோ அவர் தன் சக-எழுத்தாளர்களுக்குத் தரும் பரிசிலாகச் சித்தரிக்கப்படுகிறது. ரமேஷ் தான் சீக்கிரம் இறந்து விடுவதாகவும் தனக்கு அதற்கு முன் விருது தர வேண்டும் எனக் கோரியதாக ஜெயமோகன் எழுதியதை சான்றாகக் குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையில் ஒருவர் வேடிக்கையாகவோ அல்லது உணர்வுரீதியான வெளிப்பாடாகவோ கொள்ளாமல் அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்யக் கூடாது, அது அவரை அவமதிப்பதாகும் என்பதுகூட இவருக்குப் புரிவதில்ல. ஜெயமோகனின் குறுக்கீடும் விஷமத்தனமும் காரணமாகவே இவ்விருது மதிக்கத்தக்கதாக இல்லை. என்னதான் ஊடகங்களில் விளம்பரம் செய்தாலும், பிரபலங்களைப் பேச வைத்தாலும் இது ஒரு குழு விருதாக மாறிவிட்டது. அவர்களுக்குள்ளாகக் கொடுத்துக் கொண்டு பாராட்டிக் கொண்டு முடித்து விடுகிறார்கள். விருதாளர்கள் மற்றும் விருதுக் குழுவினர் விவகாரமும் இங்கு சுவாரஸ்யமானது - சாகித்ய அகாடெமியோ தனியார் விருதுகளோ ஒரு சரியான விருதாளரைத் தேர்வு செய்வது கடினமல்ல. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் பெயர்களைத் திரட்டுவது சுலபம். சிக்கல் சரியான புத்தகங்களைத் தேர்வு பண்ணுவது - அதற்கு நிறைய மெனெக்கெட்டு பரவலான விருதுக்குழு ஒன்றின் கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும். மாறாக, அறியப்பட்ட படைப்பாளிகளின் பங்களிப்புக்கு ஒட்டுமொத்தமாக விருதளிப்பது சுலபம். இதனால் இதுவே இன்று அதிகமாக நடக்கிறது. இதுவும் விருதுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை என்னால் இணையத்தில் தேடியே பெற முடியும் எனும்போது விருதின் பயன்தான் என்ன? விருதுக் குழுவினரும் தமக்குள் பேசி வைத்து award fixing செய்யும் அவலத்தை சிலர் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். இதைச் சரிசெய்யவே இரண்டு மூன்று நிலைகளில் பரிசீலிக்க விருதுக்குழுவினரை உருவாக்கிப் பார்க்கலாம். சரியான நபர்களை இக்குழுக்களில் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு சன்மானமும் கொடுக்கலாம். விருதளிப்பின் போது இறுதிக் குழுவினரைத் தம் விளக்கங்களைத் தரக் கோரலாம். அடுத்து, நாம் தேசிய விருதுகள், உள்ளூர் விருதுகளைத் தாண்டிச் சென்று ஒருசில சர்வதேச விருதுகளை எடுத்துக் கொள்வோம். முதலில் நோபல் பரிசு இதைக் குறித்து wired.in இல் ஒரு நல்ல கட்டுரை வந்துள்ளது (https://www.wired.com/2014/10/whats-nobel-prize-become-biggest-award-planet/). நோபல் பரிசு 1888இல் நடந்த ஒரு பெயர்க் குழப்பத்தாலே தோன்றுகிறது. ஆல்பிரட் நோபல் டயனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்த பெரும் தொழிலதிபர். இவரது சகோதரர் இறந்துவிட அதை இவரது மரணம் என நினைத்து ஒரு பிரஞ்சுப் பத்திரிகையில் "மரண வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்" என அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார்கள். நோபல் நம்மாட்களைப் போல் அல்லாது சொரணை மிக்கவர். ஆகையால் அவர் இதைப் படித்து நொந்து போகிறார். தன் காலத்திற்குப் பிறகு தான் மரண வியாபாரி என அறியப்படக் கூடாது என்று அவர் தன் மொத்தச் சொத்தில் கணிசமான பகுதியை ஒரு சர்வதேச விருதை உருவாக்கி தன் பெயரில் அளிக்கச் செலவிட வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டுப் போகிறார். இதற்காக ஒரு விருது நிர்வாகக் குழு உருவாக்கப்படுகிறது. 1897இல் இருந்தே அவர்கள் உலகில் சிறந்த விஞ்ஞானிகளைக் கண்டறிய உலகம் முழுவதிலும் இருந்து பரிந்துரைகளைப் பெற்று ஆய்வு செய்கிறார்கள். தம் ஆய்வு முடிவை, தேர்வை அவர்கள் Swedish Royal Society of Sciences (வேதியலுக்கும் இயல்பியலுக்கும்) மற்றும் the Karolinska Institute (மருத்துவத்துக்கு) ஆகிய நிறுவனங்களிடம் கொடுத்து அவர்களை இறுதி முடிவை எடுக்கக் கேட்கிறார்கள். தம் தேர்வு குறித்து தேர்வுக் குழுவினர் எழுதும் பரிந்துரைகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் விருதுப் பணமே உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுத் தந்தாலும் போகப் போகம் பணம் அல்ல நோபல் விருதுக் குழுவின் தேர்வு முறைமையும் அவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்து ஒருவரது பங்களிப்பின் தாக்கத்தை அவதானித்து அங்கீகரிக்கும் பாங்குமே அவ்விருதை உலக முக்கியத்துவம் கொண்டதாக்குகிறது. சில நேரங்களில் அவர்கள் அதிகமாக அறியப்படாத விஞ்ஞானிகளை, எழுத்தாளர்களைக் கண்டறிந்து அங்கீகரிக்கிறார்கள். இதுவும் அவர்கள் மீதான மதிப்பைப் பெருக்குகிறது. இந்த பாரம்பரியம்தான் நோபல் பரிசின் மதிப்பு, அதன் பணம் அல்ல என்று ஸக்கர்மேனும் கார்ல்ஸ்டெராண்டும் வைர்ட் கட்டுரையில் சொல்வது கவனிக்கத்தக்கது. (இந்த இடத்தில்தான் நம்மவர்கள் சொதப்புகிறார்கள் - நம்மிடம் நடுநிலையான, புறவயமான நடைமுறைகள், முறைமைகள் இல்லை. நாம் அனைவருக்குமானவர்களாக இருப்பதும் இல்லை. அதாவது தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ யாரையும் மதிப்பிட்டு அங்கீகரிப்பதில்லை.) அடுத்து புக்கர் பரிசு 1969இல் இவ்விருது புக்கர்-மெக்கோனெல் எனும் கயானாவில் உள்ள தொழிலதிபரின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய காமென்வெல்த் எனப்படும் காலனிகளில் உள்ள படைப்புகளைப் பிரதானப்படுத்தினாலும் அண்மையில் இது இங்கிலாந்திலும் ஐயர்லாந்திலும் பிரசுரிக்கப்பட்ட ஆங்கிலத்தில் கிடைக்கிற எல்லா நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்கிறது. சர்வதேச புக்கர் பரிசு எனும் பெயரில் மொழிபெயர்ப்புகளுக்கும் விருதளிக்கிறார்கள். இவ்விருதின் சிறப்பும் இதன் சர்வதேசியத்தன்மையும் விருதைத் தேர்வு செய்யும் கறாரான முறைமையும்தான். அடுத்து, இவ்விருதுக்குச் செய்யப்படும் விளம்பரம் இதற்கு ஒருவித தனி கவனத்தைப் பெற்றுத் தருகிறது. இவ்விருதின் முக்கியத்துவம் அடுத்து தேர்வாகும் படைப்புகள் அடுத்த சில பத்தாண்டுகளாவது கல்வித்துறையிலும் வாசகர்கள், விமர்சகர்கள் இடத்தும் பரவலான தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதே. ஒரு கூடுதல் தகவல்: இவ்விருது பெற்ற நாவல்களை ஆய்வு செய்த ஆடம் நவோமி பொதுவாக அரசியல் பகடி எழுதுகிற, 400 பக்கங்களுக்கு மேலாக உள்ள நாவல்களுக்கே இவ்விருது அதிகமாக அளிக்கப்படுகிறது என்கிறார் (Adam, Naomi. “How to win the Booker prize: is there a formula for ‘the finest in fiction?’” The Conversation, October 14, 2022.). பெண்களை விட ஆண்களே இவ்விருதை அதிகமாக வெல்கிறார்கள் என்பதும் இவரது அவதானிப்பு. இந்த சர்வதேச விருதுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்வது இவற்றைத்தாம் - 1) புத்தகங்களுக்கு விருதளிக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு அல்ல. 2) புறவயமான நடைமுறைகளை உருவாக்கி, எந்த சார்புநிலையுமற்றுச் செயல்பட வேண்டும். ஒரு நிதியாளரின் பெயரை விருதுடன் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அவர் விருதாளரைத் தேர்வு செய்யக் கூடாது. செல்வாக்கு என ஒன்று வந்தாலே விருது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்குகிறது. 3) விருதுக்குத் தேர்வாகும் ஒரு புத்தகத்தின் நீண்டகாலத் தாக்கம் என்னவென்று பரிசீலிக்க வேண்டும். 4) தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ பலரையும் இதே நடைமுறையைக் கொண்டு விருளித்து அங்கீகரித்தாலே அவர்களும் அவ்விருதைப் பொருட்படுத்துவார்கள். இதையெல்லாம் செய்யாத பட்சத்தில் விருதுகள் கெடாவெட்டு, காதுகுத்து, பூப்பெய்தல் விழா எனும் கணக்கில்தான் மதிக்கப்படும். அவற்றைப் பெறுவதில் எழுத்தாளர்களுக்கு தற்காலிக சந்தோஷம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை இருக்காது. https://www.writerabilash.in/2026/03/blog-post_16.html
-
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
கலை விருதுகள் மட்டும் இல்லை, கோஷான், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற துறைகளில் வழங்கப்படுபவையும் நீங்கள் சொல்லும் வகையானவையே. எடிசன், டெஸ்லா, ஐன்ஸ்டைன் இடையேயான போட்டிகள் பற்றிய கதைகளை வாசித்திருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. எடிசன் நோபல் விருதை வாங்குவதற்கு தலைகீழாக நின்றார். அவரால் ஒரு அவக்கொலை கூட நடந்தது. ஆனாலும் எடிசனுக்கும் டெஸ்லாவிற்கும் அது எப்போதும் வழங்கப்படவில்லை. தனிநபர் தெரிவு, பார்வை என்பதையும் தாண்டி, அடிப்படையான சில அளவு கோல்கள் எல்லா விருதுகளுக்கும் உண்டு. அந்த அளவு கோல்களையே நான் கேள்விக்கு உட்படுத்துகின்றேன். 'To Kill a Mockingbird' இங்கு மிடில் ஸ்கூலில் ஒரு பாடநூலாக இருக்கின்றது. Victor Hugo அவர்களின் 'Les Misérables' இங்கு ஹை ஸ்கூலில் ஒரு பாட நூலாக இருக்கின்றது. ஒன்று ஒரு புது முயற்சி, நவீனமானது. இன்னொன்று செவ்விலக்கியம், உலகத்திற்கு பிரான்சு தேசம் அளித்த கொடை. இரண்டுமே பாட நூல்களாகவும், விருதுகளுக்கும் மிகத் தகுதியானவை. தமிழில், செங்கை ஆழியான் போலவே, இன்று எழுதும் இரா.முருகன் மற்றும் எங்களின் அ. முத்துலிங்கம் இருவரின் கதைகளையும் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நீங்கள் சொல்லும் அதே வகையானவை. இவர்களின் ஒரு கதைகளையாவது வாசித்தவர்கள் என்று எத்தனை தமிழர்கள் இருப்பார்கள்................. இவர்களுக்காகவே இந்த விடயத்தில் நான் விட்டுக்கொடுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருக்கின்றேன்........... இது தமிழ் மொழிக்கு நான் செய்ய வேண்டிய ஒரு கடமையும் கூட.....................
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சீ இந்த உழைப்பு உழைக்கும் உங்களையே நான் ஒருபோதும் இப்படி சொன்னதில்லையே. அப்புறம் எப்படி???🤣 இதை முழுமையாக வாசித்து தான் இணைத்தீர்களா??- Today
- இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
இவர் மீது கடுமையான விசாரணை நடந்து இவரது வீடு கணனி என்று தேடுதல் படலம் நடத்து எவ்பிஐக்கு சொல்லுவார். வழமை போல போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்.- பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு
தமிழ்பகுதிகளிலும் புகையிரத நிலையங்கள் உள்ளன. Tooooo late. இதை முதலே சொல்லியிருந்தால் கவனத்தில் எடுத்திருப்பார்கள்.- வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்
அடபாவிகளா உங்களால தான் தமிழருக்கே பிரச்சனை. உங்களுக்கு நாட்டிலே என்ன பிரச்சனை? அதுவும் யாழ்ப்பாணத்தில். எழுதி வைத்திருக்கிறதை தமிழிலும் எழுதியிருக்கலாமே? வடக்கில் எந்தப் பகுதில் குடியேற விருப்பம் என்று அரசிடம் சொன்னால் பல குடியேற்றத் திட்டங்களுக்கு சிங்கள மக்களைத் திரட்டுபவர்களுக்கு வேலை சுலபமாக இருக்குமே. சிங்கிந்தியா என்று பெயரை வேறு வைத்து இது இந்தியாவின் வேலையோ என்று தமிழர்களின் மண்டையைக் காயவிடுகிறீர்களே.- 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்திருத்தால் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் குறைவாகவும் இப்படியான நினைவு சின்னங்கள் அதிகமாகவும் இருந்திருக்கும். நல்ல வேளை யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் தொகை வளர்சசியை அடைகிறது- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானை.... நொட்டிப் பார்த்ததில் இருந்து, நிம்மதி இழந்து... முத்தீட்டுது.- உங்களுக்கு தெரியாத வட கொரியா
செம்பவள வழித்தோன்றல் என் தலைவன். ஒரு தமிழன். எனவே அவர் பிழை விட மட்டார். வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், தமிழன் தப்பு செய்யமாட்டான் என்பதை செவ்வாய் கிரக அறிஞர் கூட ஏற்கிறார்கள்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
தம்பருக்கு முன்பே காரிய விசர்.. இப்ப முழு விசர் 😂- ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி
தான் போக வழியைக் காணேல்லையாம் மூஞ்சூறு விளக்குமாத்தையும் காவிக்கொண்டு வெளிக்கிடிச்சுதாம்!🤣- உங்களுக்கு தெரியாத வட கொரியா
ஓம், இதை நானும் கேள்விப் பட்டேன். சுவிசில் வாழ்ந்த எம் தலைவன் கிம் அந்த நாட்டுச் சொக்கலேற்றினால் அதிகம் கவரப் பட்டு, வட கொரியா வந்த பின்னரும் கூட விசேட வழிகளில் சுவிஸ் சொக்கலேற்றை வரவழைத்து அனுபவிப்பதாக அறிந்தேன்! கோவிட் காலத்தில் நாட்டை முற்றாகப் பூட்டிய வேளையில் கொரிய மக்கள் பட்டினியை எதிர் கொண்டதாக அறிந்த தலைவன் கிம் "No bread? why can't they eat chocolate?" என்று வினவியதாகவும் அறிந்தேன்😎!- களைத்த மனசு களிப்புற ......!
Ssonprtode7if7àeL2a 11ul4m1a:6ctfm59 g6u u905ii8999 8771sr50 · இந்த left ல இருக்க மனுஷன நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்ல ஒரு சின்ன கதை சொல்றேன் இவர பத்தி 💯" இவரு newzeland ஓப்பனர் ஒரு காலத்துல, அப்பறம் நம்ம MI க்கு talent scout பண்ண இவர appoint பண்ணாங்க. 2012-13 ல ஏதோ ஒரு உள்ளூர் மேட்ச்ல ஒரு பையன் வித்தியாசமான action ஓட பௌலிங் போட்டுட்டு இருந்தான். அந்த பையன் ரஞ்சி ஆடல எந்த வித ஸ்டேட் level matches உம் விளையாடல அப்போ. இவரு கண்ணுக்கு அவன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்குனு தெரிஞ்சுச்சு ⌛" MI squad ல 10 lakhs க்கு தூக்கி போட்டாரு, ஒரு மேட்ச் வாய்ப்பும் கிடைச்சது. ஏப்ரல் 4 RCB கூட மேட்ச் வந்தான் பையன் போட்றான் எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. அவனோட career ல முதல் விக்கெட் அப்போ உச்சத்துல இருந்த விராட் கோஹ்லி 🥵" அன்னைக்கு ஆரம்பிச்ச ஆட்டம் MI க்கு மட்டும் இல்லாம நம்ம நாட்டுக்கும் எத்தனையோ கஷ்டமான மேட்ச்கள அவனோட skill அ வச்சு முடிச்சு குடுத்தான் 💯" இப்போ உலகத்துலயே தவிர்க்க முடியாத ஒரு தலைசிறந்த பௌலரா வந்து நிக்கிற நம்ம பும்ரா தான் அந்த பையன் 💥" நமக்கு பும்ராவ குடுத்த தங்கமான மனுஷன் தான் இந்த John wright ❤️" #ipl #bumrah #JohnWright ✍️" Voir la traduction.....!- அதிசயக்குதிரை
optrsenSdoi06fmgmi0461lc7l8 mu619lum6g19016mm83t8aa2a1h5m528 · "நாங்க கிரவுண்டுலயே அழுதோம் , Hotel போயும் அழுதோம்.." 😭" 2016 உலகக்கோப்பை போட்டீல இந்தியா 146 அடிச்சாங்க. ஆனா Bangladesh ஜெயிக்கறமாரி இருந்தாங்க. முன்னாடி ஒவ்வொரு பாலும் ஜெயிச்சுட்டமேன்னு celebrate பண்ணவும் செஞ்சாங்க. 6 பாலுக்கு 11 வேணும். அப்றம் 4 பாலுக்கு 6. 3 பாலுக்கு 2. அங்கதான் விதி விளையாண்டது. 2 பால்ல 2 விக்கெட் காலி. கடைசி ball தலைவன் Gloveஐ கழட்டீட்டு அவங்க planஐ தெரிஞ்சுட்டு நின்னான். Ball byes ஆனாலும் ஓடலாம்னு ரெடியா இருந்தாங்க அவங்க. ஏத்தமாரியே Non striker வேகமா ஓடிவந்தான். தோணி அவனைவிட வேகமா ஓடி ஸ்டம்பை அடிச்சு செதறவிட்டுட்டார். அப்றம் நைட்டு பூரா ஒரே அழுகை. 😑" இதைத்தான் முதல் பத்தீல அழுதோம்னு சொல்லீருந்தார் அந்த டீம் Muhmadulla. விடுங்கடா.. விடுங்கடா.. விளையாட்டுல தோக்கறவன் ஜெயிக்கறதும், நீங்க எப்பவுமே தோக்கறதும் சகஜம்தானே. இதுக்கெல்லாம் கண்ண கசக்கீட்டு. 🥹" Voir la traduction.......!- ‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’
மிகவும் நல்ல விடயம் .........! 👍- Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?
10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது. Youth Rewiew | யூத் விமர்சனம் மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன். இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் 'யூத்' திரைப்படத்தின் கதை. பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், '3' காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி 'யூத்' நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்! பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்! மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார். மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார். சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம் சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ். 2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம். 'முட்ட கலக்கி', 'ஜில்பான்ஸோ', 'லவ்வ சொல்லிட்டாளே' ஆகிய பாடல்களில் காதலைக் கொண்டாட்டத்துடன் பரிமாறியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். அதேபோல, பின்னணி இசையிலும் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்துப் பாடங்களிலும் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ஜி.வி. படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ். பதின்வயதில் துளிர்விடும் காதல் ஆசைகள், அந்த வயது இளைஞர்களின் எண்ணவோட்டம், அப்போது முதிர்ச்சியற்ற தன்மையுடன் காதலை அணுகுவது எனப் பதின்வயது இளைஞனின் 360 டிகிரி வாழ்க்கையையும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சொல்லிவிடுகிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம் இரண்டு காதல்கள், அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நண்பர்களுடனான ஜாலி அரட்டைகள், அப்பாவி அம்மாவுடனான செல்லம் கொஞ்சல்கள், கறார் அப்பாவைக் கண்டால் ஏற்படும் ஜாலியான கோபம் என்பன போன்ற 'கலகல' பதில்களை எழுதி ரேங்க் ஹோல்டராக மேடை ஏறுகிறது திரைக்கதை. ஆனால், இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலை வைத்து கேலிகள் போன்றவை வகுப்பறையில் மாணவர்கள் செய்திருக்கும் க்ரைம் வேலைகள். அது அந்த வயதுக்குரிய இயல்பு என்றாலும், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் காட்சிகளோ, வசனங்களோ மிஸ்ஸிங்! இரண்டாம் பாதியில் காதலுடன் சேர்த்து எமோஷனல் க்ளாஸையும் சேர்த்து சொல்கிறது திரைக்கதை. அம்மா மீதான அளப்பரிய பாசம், காதலை விட குடும்பமே முக்கியம் என உணரும் கிளைமேக்ஸ் நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால் நம்மை உருக்க வைத்தாலும், அவற்றை வழக்கமான திருப்பத்தைக் கொண்டு திரைக்கதையில் எழுதியிருப்பது குறைவான மதிப்பெண்களையே பெற வைத்திருக்கிறது. தெளிவாகச் சொல்லப்படாத காதல் கதைகள், முதல் பாதிக்குப் பிறகு காணாமல் போன காதலிகள் ஆகியவை இரண்டாம் பாதி திரைக்கதையில் லாங் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றன. பெண்களின் பார்வையில் காதல்களை அணுகாமல், அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கதாநாயகன் கதாபாத்திரம் பெரும் குழப்பம். Youth Rewiew | யூத் விமர்சனம் பள்ளிகளில் இதெல்லாம் செய்ய முடியுமா, அங்கு இப்படியான சுதந்திரங்கள் கொடுக்கப்படுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில்களை எழுதாமல் விட்டிருப்பது ஏனோ?! சில குறைகள் இருப்பினும், பதின்வயது இளைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த 'யூத்', காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி டீசண்ட் மார்க் வாங்குகிறது. யூத் விமர்சனம்: கென் கருணாஸ் நடிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் வெளியான யூத் படம் எப்படி இருக்கு? | Youth Review: How is Youth movie starring Ken Karunas and featuring music by G.V. Prakash Kumar?- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி பைடனுக்கு உடல் நிலை பாதிக்கப் பட்ட மாதிரி, தம்பருக்கும்... மனநிலை பாதிப்பு சம்பந்தமாக ஏதாவது வியாதி இருக்குமோ. ஏனென்றால்... அண்மையில், பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பல இடங்களில் பேசுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.- உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்
இந்தத் தகவல்கள் "புதியவை" என்று சொல்வதை விட "விசித்திரமானவை" என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். தெற்காசியர்கள் - இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர் - வெள்ளையின மக்களையும், கிழக்காசிய மக்களையும் விட 4 மடங்கு இதய நோய் தாக்கும் ஆபத்துடையவர்கள் ! இதற்குக் காரணங்கள் அவர்களுடைய ஜீன்களிலேயே இருக்கின்றன. இரத்தம் இலகுவாகக் கட்டியாகும் நிலை (thrombosis). இரத்தக் கொழுப்பு ஆரோக்கியமற்ற நிலை (dyslipidemia). அழற்சி (inflammation) அதிகரிக்கும் நிலை ஆகிய 3 காரணிகள் இந்த 4 மடங்கு அதிகரித்த இதய நோய் வாய்ப்பின் காரணங்கள். இந்த 3 காரணிகளுள் முதலாவதைக் கட்டுப் படுத்த மாத்திரைகள் தேவைப் படலாம் (blood thinners). ஏனைய இரண்டையும் கட்டுப் படுத்த உணவும், உடற் பயிற்சியும் பயன்படுத்தலாம். 1. இரத்தக் கொழுப்பு நிலை: இதை நாம் உள்ளெடுக்கும் எண்ணையில் இருக்கும் கொழுப்பு பிரதானமாகத் தீர்மானிக்கும். தேங்காய் எண்ணை, பாம் எண்ணை என்பவற்றில் இருக்கும் நிரம்பிய கொழுப்பமிலம் இரத்தத்தின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் காரணி. இவர் குறிப்பிடும் பாமோலின் எண்ணை கூட 50% வரை நிரம்பிய கொழுப்புக் கொண்டது. அதைச் சாதாரணமாக "விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆலோசனை சொல்வது ஆபத்தானது. 2. PUFA இனைப் பொரிக்க/வதக்கப் பாவித்தால் அதில் இருந்து புற்று நோய் உருவாக்கும் காரணிகளும், அழற்சியைக் கூட்டும் பொருட்களும் உருவாகும் என்பது உண்மை. MUFA இனைச் சூடாக்கினால் இந்த ஆபத்துக்கள் குறைவு. இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவு செய்யும் எண்ணை வகை ஒலிவ் எண்ணை: அதில் இருக்கும் கொழுப்பமிலம் பெருமளவு MUFA வகை. நிரம்பிய கொழுப்பும் குறைவு. இதை விட்டு விட்டு பாமோலின் எண்ணையை எடுத்துக் கொள்ளும் படி சொல்லும் ஆலோசனைக்கு என்ன விஞ்ஞான அடிப்படை இருக்கிறதெனத் தெரியவில்லை.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்... களத்தைக் குழப்ப வெளியானதா கருத்துக் கணிப்பு? பாஜக கூட்டணியில் தவெக இணையப் போவதாகச் செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், அப்போதெல்லாம் அமைதி காத்த தவெக தரப்பு, “என்டிஏ கூட்டணி மற்றும் ராமதாஸ், சசிகலா தரப்பினருடன் தவெக கூட்டணி சேரப் போவதாகச் சொல்லப்படுவதில் துளியும் உண்மை இல்லை. யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. வாக்காளர்களை குழப்ப திமுக தரப்பில் இருந்தே இது மாதிரியான வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என இப்போது மறுப்புத் தெரிவித்திருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தவெக மாவட்டச் செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த் காணொலி வழியே அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ”தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாமா?” என அவர் கருத்துக் கேட்டதாகவும் அதற்கு மாவட்டச் செயலாளர்கள், கலவையான கருத்துகளைச் சொன்னதாகவும் முடிவில், “தலைவர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என உறுதி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. டெல்லிக்கு விஜய் விசாரணைக்குப் போகவிருக்கும் சமயத்தில் திடீரென இப்படி தவெக மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்ட விஷயம் குறித்து பலவாறாக தகவல்கள் வெளியாகின. விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்கக் காத்துக் கொண்டிருக்கும் பாஜக, டெல்லி விசாரணையை வைத்து அவர் மீதான விசாரணையில் ஏதாவது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம். அப்படி ஏதும் இல்லாமல் விசாரணையை எளிதாக சமாளிக்கும் ஒரு உத்தியாகவே, கூட்டணிப் பேச்சுவார்த்தை ‘ஸ்க்ரீன் பிளே’யை தவெக தரப்பில் அரங்கேற்றியதாகவும் ஒரு செய்தி சொல்லப்பட்டது. அதற்கேற்ப, டெல்லியில் ஏழு மணி நேர விசாரணையை முடித்துக் கொண்டு வழக்கத்துக்கு மாறான புன்னகையுடன் கையசைத்தபடியே வெளியே வந்தார் விஜய். இதனிடையே இன்னொரு காரியமும் நடந்தது. மாவட்டச் செயலாளர்களுடன் கருத்துக் கேட்டுவிட்டு விஜய் டெல்லிக்குப் பயணமானது பலருக்கும் விஜய் பாஜக கூட்டணிக்குப் போகப் போகிறார் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்த நிலையில் தான் அவசர அவசரமாக விஜய் விசாரணைக்கு ஆவதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு கருத்துக் கணிப்பும் வெளியானது. அதில், விஜய்க்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் அடுத்த முதல்வர் ரேஸில் அவர் முன்னணியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த விஷயத்தை எல்லாம் சுட்டிக்காட்டும் தவெக மேல்மட்ட நிர்வாகிகள் சிலர், “பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை குழப்புவதுதான் இவர்களது வேலையே. தேர்தல் பணிகளில் சில மாவட்டங்களில் தவெக-வினர் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று பரவலாக தகவல்கள் வந்ததால் அதை சரிசெய்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவே காணொலி கூட்டத்தை நடத்தினார் ஆனந்த். அந்தக் கூட்டத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி தொடர்பாகவும் தங்களது சந்தேகங்களையும் கருத்துகளையும் தெரிவித்தார்கள். அதையெல்லாம் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகச் சொல்லி கூட்டத்தை முடித்தார் ஆனந்த். இது தான் நடந்தது. ஆனால், கூட்டணி குறித்து கருத்துக் கேட்பதற்காகவே இந்தக் கூட்டத்தை அவர் கூட்டியதாக திட்டமிட்டு செய்திகளை பரப்பிவிட்டார்கள். உண்மையில் விஜய்க்கு அதிமுக அணியுடன் கூட்டணி சேர இஷ்டமில்லை. செல்வாக்கு சரிந்து வரும் பழனிசாமியுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு ஏன் நாம் உயிருண்டாக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதேசமயம், இந்தத் தேர்தலில் தனது பலம் என்னவென்பதை நிரூபித்துக் காட்டி அதன் மூலம் அடுத்த தேர்தல் களத்தை முழுமையாக வென்றெடுப்பதே விஜய்யின் தொலைநோக்குத் திட்டம். 2031 தேர்தல் சமயத்தில் இப்போது களத்தில் வாள் சுற்றிக் கொண்டிருக்கும் பலபேர் காணாமல் போயிருப்பார்கள். அப்போது விஜய்யும் உதயநிதியும் தான் களத்தில் இருப்பார்கள். அதில்லாமல் இப்போது பழனிசாமியுடன் கூட்டணி வைத்து அவர்களை அரியணை ஏற்றிவிட்டு அடுத்த தேர்தலில் அவரை எதிர்த்து அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. விஜய்யின் இந்த சிந்தனை எல்லாம் தெரியாமல், அவர் டெல்லிக்குப் போகிறார் என்றதுமே அவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்ற தொனியில் அவசர அவசரமாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட வைக்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால், டெல்லி செல்லும் விஜய் எக்காரணம் கொண்டும் பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிடக் கூடாது. அதற்கு முன்னதாக இப்படியொரு கருத்துக் கணிப்பு வெளியானால், நமக்கே இத்தனை செல்வாக்கு இருக்கையில் நாம் ஏன் பாஜக கூட்டணிக்குப் போக வேண்டும் என விஜய் யோசிப்பார். அதேபோல், இந்தக் கருத்துக் கணிப்பை வெளிட பாஜக தரப்பிலும் சிலர் உந்து சக்தியாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். காரணம், பழனிசாமி - பாஜக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் பாஜக தலைவர்கள் சிலர், என்டிஏ அணி வென்றுவிடக் கூடாது என்பதை தங்களின் ‘பிளான் பி’ ஆக வைத்திருக்கிறார்கள். அதனால், விஜய் பாஜக அணிக்கு வந்துவிட்டால் என்டிஏ அமோக வெற்றிபெற்றுவிடும் என உள்ளுக்குள் அவர்களுக்கு பதற்றம். அதனால், ‘விஜய் தனித்து நின்றாலே வெற்றி பெறுவார். அவர் என்டிஏ அணிக்குப் போவது தற்கொலைக்குச் சமம்’ என்று வெளியான கருத்துக் கணிப்பின் பின்னணியில் அவர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்று முடித்தார்கள். அடுத்த ஒரு மாத காலத்துக்கு கதாநாயகன் விஜய்யை வைத்து இன்னும் என்னென்ன கதை - வசனங்களை கட்டிவிடக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்... களத்தைக் குழப்ப வெளியானதா கருத்துக் கணிப்பு?- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல் Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 02:06 PM இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை ஏப்ரல் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டப் பிரதிநிதிகள் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஏர்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக 02 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த 12 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த சந்திரசேன, 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற சதி செய்ததாகவும், சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் 1.45 மில்லியன் யூரோ பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்திரசேன, தனது மனைவியின் பெயரில் உருவாக்கிய போலி நிறுவனம் மூலம், இலஞ்சம் பெற்ற பணத்தை தனது சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241364- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இதென்ன பிரமாதம்… நேற்று கலிபோர்னியா கவர்னரை…அமெரிக்க ஜனாதிபதி என விளித்தார் தம்பர் 😂- ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்: 5 கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
19 Mar, 2026 | 12:33 PM ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் முன்பதிவுகளும் நேற்று புதன்கிழமை (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்றையதினம் 05 எரிபொருள் கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். முன்னர் மார்ச் மாத இறுதி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தேவையான கப்பல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அடுத்த மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கியூ.ஆர் முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளன. ஒரு தொலைபேசி இலக்கம் மற்றும் ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்: 5 கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் | Virakesari.lk- வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்
19 Mar, 2026 | 01:45 PM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம் | Virakesari.lk - "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.