Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஈரானில் போராட்டங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது 17 January 2026 ஈரானில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இதுவரை 3,090 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். இந்தநிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://hirunews.lk/tm/441082/death-toll-from-protests-in-iran-exceeds-3000
  3. 2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம் விக்னேஸ்வரன் கோபிகா, கல்வியில் சிறப்பு கற்கை இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்குவதாகவும், உலகளாவிய சவால்களுக்கு அவர்களை தயார்ப்படுத்தத் தவறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், 'தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு 2023-2033' (NEPF) இன் கீழ் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வி வரலாற்றில் இரண்டாவது பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன. சீர்திருத்தத்தின் பின்னணியும் நோக்கமும் 2048 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்ற தேசிய இலக்கை நோக்கியே இச்சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாது, ஒரு சமூக-பொருளாதார மறுசீரமைப்பாகும். 2026 ஜனவரி முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஐந்து பிரதான தூண்கள் புதிய மாற்றங்கள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன: 1. கலைத்திட்ட மறுசீரமைப்பு: பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 21ஆம் நூற்றாண்டின் திறன்களான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்குதல். 2. ஆசிரியர் பயிற்சி: புதிய கற்பித்தல் முறைகளுக்காக 10,000 முதன்மைப் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல். 3. உட்கட்டமைப்பு மேம்பாடு: பாடசாலைகளுக்கிடையிலான வள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைத்தல். 4. மதிப்பீட்டு முறைகள்: பரீட்சை மைய முறையிலிருந்து விலகி, 'தொடர்ச்சியான மதிப்பீடு' (Continuous Assessment) மற்றும் GPA முறையை அறிமுகப்படுத்துதல். 5. சமூக பங்களிப்பு: பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே புதிய முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பாடசாலை நேர மாற்றமும் சவால்களும் செயற்பாடு சார்ந்த கற்றலுக்காகப் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகப் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இறுதியில், மாணவர் நலன் கருதி பாடசாலை நேரம் 1.30 மணி வரை எனத் தீர்மானிக்கப்பட்டது. இது மாணவர்களின் சோர்வைக் குறைக்கும் அதேவேளை, மேலதிக செயற்பாடுகளுக்கான நேரத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மாற்றங்கள் ஆரம்பக் கல்வியில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக 'செயற்பாட்டுப் புத்தகங்கள்' அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு 'கடன்' (Credit) அடிப்படையிலான கற்றல் மற்றும் நிதிசார் கல்வியறிவு, தொழில்முனைவு போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு முக்கிய நகர்வாகும். தற்போதைய சாதாரண தரப் பரீட்சை முறையானது மாணவர்கள் ஒன்பது பாடங்களைக் கற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், பாடசாலை நேரத்திற்கு அப்பால் மேலதிக வகுப்புக்களை (Tuition) நாடிச் செல்லும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்திற் கொண்டு 2029 இல் முதன்முறையாக நடத்தப்படவுள்ள புதிய சாதாரண தரப் பரீட்சையில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு புதிய முறைமையின் கீழ், ஒரு மாணவர் தோற்ற வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 7 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பதோடு, அவர்கள் கற்கும் விடயங்களை ஆழமாகவும் செய்முறை ரீதியாகவும் உள்வாங்க வழிவகுக்கும். 2. பாடக் கட்டமைப்பு (Core & Electives) மாணவர்களின் அடிப்படை அறிவை உறுதி செய்யவும், அதேவேளை அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பாடங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: • கட்டாயப் பாடங்கள் (Common Core Curriculum - 5): 1. தாய்மொழி (சிங்களம் அல்லது தமிழ்) 2. ஆங்கில மொழி 3. கணிதம் 4. விஞ்ஞானம் 5. சமயமும் விழுமியக் கல்வியும் • விருப்பப் பாடங்கள் (Elective Subjects - 2): மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப பின்வரும் தொகுதிகளில் இருந்து இரண்டு பாடங்களைத் தெரிவு செய்யலாம்: * சமூக அறிவியல்: வரலாறு, புவியியல். * தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், உணவுத் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம். * கலை மற்றும் ஆரோக்கியம்: அழகியல் பாடங்கள் (சங்கீதம், நடனம், சித்திரம்), சுகாதாரம் மற்றும் உடற்கல்வி. 3. மதிப்பீட்டு முறையில் மாற்றம் (GPA அறிமுகம்) இதுவே இந்தப் புதிய சீர்திருத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இதுவரை நடைமுறையிலிருந்த ஏ (A), பி (B), சி (C), எஸ் (S), எஃப் (F) என்ற தரப்படுத்தல் முறை நீக்கப்பட்டு, தரப் புள்ளிச் சராசரி (GPA) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • தோல்வி (Fail) என்ற நிலை இல்லை: புதிய முறைமையின் கீழ் எந்தவொரு மாணவரும் 'தோல்வியடைந்தார்' எனக் கருதப்பட மாட்டார்கள். • தொடர்ச்சியான மதிப்பீடு (70:30 விகிதம்): இறுதிப் பரீட்சைக்கு மாத்திரம் 100% புள்ளிகளை வழங்காமல், 70% புள்ளிகள் இறுதிப் பரீட்சைக்கும், 30% புள்ளிகள் பாடசாலையில் நடத்தப்படும் 'தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கும்' (Assignments, Projects, Attendance) வழங்கப்படும். • மன அழுத்தக் குறைப்பு: ஒரு மாணவர் ஒரு பாடத்தில் குறைவான புள்ளிகளைப் பெற்றாலும், அது அவருடைய ஒட்டுமொத்த GPA புள்ளிகளைப் பாதிக்காது என்பதோடு, அவர் அடுத்த கட்டத்திற்கு (உயர்தரம் அல்லது தொழிற்கல்வி) செல்வதற்குத் தடையாக இருக்காது. உயர்தரம் மற்றும் திறனாய்வுத் தேர்வுகள் 2027 முதல் உயர்தரப் பிரிவில் 'இரட்டைப் பாதை' (Dual Pathway) முறை அறிமுகமாகிறது. பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு 'கல்விப் பாதை'யும், விரைவாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு 'திறன் பாதை'யும் (NVQ சான்றிதழுடன்) வழங்கப்படும். மேலும், தரம் 9 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'உளவியல் தேர்வு' (Psychometric Test), மாணவர்கள் தங்களின் இயல்பான திறமைகளைக் கண்டறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும். தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் ஆளுமையைச் செதுக்க 'ABCDE' (Attendance, Belongingness, Cleanliness, Discipline, English) என்ற புதிய கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது கல்வியுடன் ஒழுக்கத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். வரப்பிரசாதமா அல்லது சுமையா? இப்புதிய சீர்திருத்தம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில சவால்களையும் கொண்டுள்ளது: • வரப்பிரசாதங்கள்: பரீட்சை பயம் குறைதல், தொழில்சார் திறன்கள் மேம்படுதல், பாடச் சுமை குறைதல் மற்றும் நெகிழ்வான கற்றல் சூழல். • சுமைகள்: கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் இணைய வசதி குறைபாடுகள், ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி கால அவகாசம் இல்லாமை மற்றும் தொகுதி நூல்களில் (Modules) காணப்படும் தொழில்நுட்பத் தவறுகள். 2026 புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு மாற்றத்தின் ஆரம்பமே. இது வெற்றியடைய வேண்டுமாயின், வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தின் உண்மையான பங்காளிகளாக மாற்றப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் கருத்திற்கொண்டு இதை நடைமுறைப்படுத்தினால், இது இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் 'வரப்பிரசாதமாக' அமையும் என்பதில் ஐயமில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2048-இலக்கை-நோக்கிய-இலங்கையின்-கல்விப்-பயணம்/91-371129
  4. முடியவில்லை இவர்களுக்கு எத்தனை கடவுள்கள் தேவைபடுகின்றது இந்தியாவில் இருந்து இறக்குமதியான அனுமான் ஐயப்பரும் இராமர் சீதை போதவில்லை. மனிதனின் காலை தொட்டு கும்பிடும் இந்திய முறைறையை விரிவாக்கி கொண்டே வருகின்றார்கள். சிறுவர்கள் தொடக்கம் திரு நியாயம் அவர்களின் கண்டுபிடிப்பில் சொல்வதானால் கிழட்டு மூதாட்டிகள் வரை 😭 எமக்கு இறைவன் கொடுத்த அரும்பெரும் பொக்கிஷம் 🙄 யாழ்பாணத்து வீதியில் சாதாரணமாக நடந்து போகின்றதாம் காணொளிகள் வேறு அனுப்புகிறார்கள. அது நடை பயிற்சி
  5. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! adminJanuary 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். https://globaltamilnews.net/2026/226663/
  6. எவ்வளவு மோட்டுதனமாக அமெரிக்க வாக்காளர்கள் நடந்து இருக்கின்றார்கள் ☹️
  7. Today
  8. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 5 🌙 பாகம் 05 – மேகங்களைத் தொடும் கோபுரம் மறுநாள் காலையில், தாத்தா குடும்பத்தினர் குழந்தைகளின் இதயங்களை உற்சாகத்துடன் துடிக்க வைப்பதற்காக ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கினர் — மேகங்களைத் தொட்டது போல உயர்ந்து நிற்கும் உலகின் மிக உயர்ந்த கோபுரத்தை அருகில் இருந்து பார்ப்பதற்காக. புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (AMAR) நிறுவனத்தினராவர். கார் மெதுவாக நகரும்போது, தூரத்திலேயே அந்த கோபுரம் ஒளிர்ந்தது. அதன் கண்ணாடி சுவர்கள் சூரியனின் ஒளியைப் பிடித்து மின்னின. அதைக் கண்ட நிலனின் கண்கள் பெரிதாக, ஆச்சரியத்தால் விரிந்தன. “தாத்தா … இது … இது பெரியது இல்லை … இது பிரமாண்டமானது [gigantic]!” என்று அவன் மெல்ல கிசுகிசுத்தான். திரேன், தலையை மேலே உயர்த்தி, அதன் உச்சியைப் பார்க்க முயன்றான். ஒரு வயது ஆரின் கூட அந்த மின்னும் கம்பீரத்தை ரசிக்க, தனது சிறிய கழுத்தை வளைத்து, வானத்தை நோக்கிப் பார்த்தான். அந்த கோபுரம் சூரிய ஒளியில் வைரம் போல ஒளிர்ந்தது. அதன் கண்ணாடி முகப்பு, நகரத்தை கோடிக்கணக்கான சிறிய கண்ணாடிகள் போல பிரதிபலித்தது. உலகம் முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளாலும், கேமராக்கள் படபடப்பாலும் [cameras clicking], வானளாவிய கட்டிடத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக்காட்டும் சுற்றுலா வழிகாட்டிகளாலும் அதன் அடிப்பகுதி [தளம்] பரபரப்பாக, உற்சாகமாக இருந்தது. தாத்தா கந்தையா தில்லை மூன்று பேரன்களையும் மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றார். குழந்தைகள் லிஃப்ட்களை [elevators] நெருங்கும் போது தாத்தா அவர்களின் கைகளை இறுக்கமாகப் பிடித்தார். "நீங்கள் தரையை விட்டு நீங்காமலேயே பறக்கப் போகிறீர்கள்" என்று தாத்தா கண் சிமிட்டிக் கொண்டு நகைத்தார். குழந்தைகள் தாங்கள் ஒரு சூப்பர் ஹீரோக்களைப் போல மேல் நோக்கிச் செல்வதைக் கற்பனை செய்து கொண்டு சிரித்தனர். லிஃப்டின் [Both "elevator" and "lift" are used interchangeably to describe the vertical transport systems in the world's tallest tower, the Burj Khalifa] உள்ளே, சுவர்கள் தரையிலிருந்து மேல் நோக்கிய பயணத்தைக் காட்டும் டிஜிட்டல் திரைகளால் [digital screens] ஒளிர்ந்தன. நிலன் கண்ணாடி போன்ற காட்சிப் பெட்டியில் முகத்தை அழுத்தி, எண்கள் ஏறுவதைப் பார்த்தான்: 10… 50… 100… 400 மீட்டர்! லிஃப்ட் மென்மையான ஓசையுடன் மேல் நோக்கிச் சென்றது, கீழே உள்ள நகரம் சுருங்கத் தொடங்கியது, கார்களை சிறிய பொம்மைகளாகவும், மக்களை புள்ளிகளாகவும் அது மாற்றியது. "சின்னஞ்சிறு கார்களைப் பாருங்க தாத்தா!" என்று திரேன் கீழே இருந்த தெருக்களைக் சுட்டிக் காட்டி கத்தினான். "இது எறும்புகளின் நகரம் மாதிரி இப்ப இருக்கு தாத்தா!" என்று குரல் கொடுத்தான். அவை உயரமாகச் செல்லச் செல்ல, மேகங்கள் கோபுரத்தைச் சுற்றி வருவது போல் தோன்றியது. நிலன் ஜன்னலில் கையை அழுத்தி, பஞ்சுபோன்ற வெள்ளை மேகங்களைத் தான் தொடுவது போல் கற்பனை செய்து கொண்டான். தாத்தா அவனது ஆச்சரியத்தைப் பார்த்து சிரித்தார், "ஒரு நாள், நீங்கள் ஒரு விமானத்திலிருந்து உண்மையான மேகங்களைக் காண்பீர்கள், ஆனால் இது எங்கள் சிறிய வான சாகசம் மட்டுமே" என்று விளக்கினார். அவர்கள் இறுதியாக கண்காணிப்புத் தளத்தை (Observation Deck) அடைந்த போது, அந்தக் காட்சி அவர்களை மூச்சடைக்க வைத்தது. நகரம் கீழே ரத்தினக் கம்பளம் போல மின்னியது. வானளாவிய கட்டிடங்கள் [Skyscrapers] பெரிய பென்சில்கள் போல உயர்ந்திருந்தன. வளைந்து நெளியும் நதிகள் அல்லது நீர்வழிகள் [waterways] வெள்ளி நூல்கள் போல மின்னின. அப்பால் உள்ள பாலைவனம் கூட காலை சூரியனின் கீழ் தங்க நிறத்தில் மின்னியது. நிலனும் திரேனும் ஜன்னலுக்கு ஓடி, ஒவ்வொரு ஜன்னலாகச் சென்று பார்த்தனர். ஒரு சிறிய வட்டமான கிண்ணம் மாதிரி தெரிந்த ஒரு நீச்சல் தடாகத்தை [pool] நிலன் கண்டான். அதேவேளை, ஒரு பரபரப்பான சந்தையையும், கீழே சிறிய சிறிய கார்கள் ஓடுவது போல தெரிவதையும் திரேன் ஆர்வத்துடன் பார்த்தான். மேலும் குழந்தை ஆரின் கீழே உள்ள விளக்குகள் மற்றும் அசைவைப் பார்த்து உற்சாகமாகத் கைதட்டினான். தாத்தா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய தொலைநோக்கி [பைனாகுலரைக்] கொடுத்து, அவர்கள் தங்கள் நிர்வாணக் கண்ணால் பார்க்க முடியாத விவரங்களைக், அதன் மூலம் காட்டினார். “சிறுகலத் துறைமுகத்தில் [மெரினாவில் / marina] உள்ள சிறிய படகுகளை இப்ப பாருங்கள்?” என்று தாத்தா சொன்னார். .... “அந்தப் பாலமா? மக்கள் பாம் தீவுக்கு [Palm Island] காரில் செல்வது அதில் தான்.” ... என்று தாத்தா விளங்கப் படுத்தினார். இதேவேளை நிலனின் கற்பனை உச்சத்தை எட்டியது - அந்தச் சிறிய படகுகளில் சிறு கடற்கொள்ளையர்கள் பயணம் செய்து, தன்னை நோக்கி கையசைப்பதாக அவன் கற்பனை செய்துகொண்டான். சுற்றிப் பார்த்த பிறகு, அந்த டெக்கில் [deck] ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலையைக் [கஃபேயைக் / café] கண்டுபிடித்தனர், அதில் குக்கீகளும் பழச்சாறுகளும் காத்திருந்தன. அவர்கள் அவற்றை நுகர்ந்தபோது, குழந்தைகள் மேகங்களைக் கண்டு வியந்தனர், சில மேகங்கள் மிக அருகில் நகர்ந்து வந்ததால், அவற்றை கிட்டத்தட்ட தொட முடியும் போல் அவர்களுக்குத் தோன்றியது. கடந்து செல்லும் மேகத்திற்கு வணக்கம் சொல்வதாக கற்பனை செய்துகொண்டு, நிலன் கையசைத்தபடி “ஹலோ மேகமே!” என்று சிரித்தான். தாத்தா ஒரு வேடிக்கையான விளையாட்டை பரிந்துரைத்தார்: “மேக வடிவங்களை கண்டுபிடிப்போம்!” குழந்தைகள் கண்ணாடியின் மீது தங்கள் கைகளை அழுத்தி, யானைகள், டிராகன்கள் மற்றும் அரண்மனைகள் போல தோற்றமளிக்கும் மேகங்களைப் பெயரிட்டனர். குழந்தை ஆரின் கூட, கடந்து செல்லும் பஞ்சுபோன்ற வடிவங்களை சுட்டிக்காட்டி கூச்சலிட்டான். சூரியன் மறையத் தொடங்கியதும், வானம் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் மாறியது. கீழே உள்ள நகரம் ஆயிரம் மின்னும் நட்சத்திரங்களைப் போல மின்னி, மேலே உள்ள மாயாஜால வண்ணங்களைப் பிரதிபலித்தது. நிலன் தாத்தாவின் தோளில் சாய்ந்து, "தாத்தா... நாம் வானத்தைத் தொடுவது போல் உணர்கிறேன்" என்று கிசுகிசுத்தான். "ஆமாம், குட்டி," தாத்தா மெதுவாகச் சொன்னார், அவரது இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்தது. "நினைவில் கொள்ளுங்கள், வானம் ஒருபோதும் எல்லையல்ல - அது சாகசங்களின் ஆரம்பம் மட்டுமே." மேலே கழித்த ஒரு நாளின் நினைவை நெஞ்சிலில் சுமந்து கொண்டு, தயக்கத்துடன் அவர்கள் மேகங்களை விட்டு விட்டு, லிஃப்டில் கீழே இறங்கினார்கள் - அங்கு கட்டிடங்கள் சிறியதாகத் தெரிந்தன, நகரம் புதையல் போல மின்னியது, கற்பனை யதார்த்தத்துடன் உயர்ந்தது. அவர்கள் தங்கள் காரை நோக்கி நடந்து செல்லும் போது, நிலன் தாத்தாவின் கையை இறுக்கமாகப் பிடித்தான். “நாளைக்கு, இன்னும் சாகசங்கள் உண்டா?” என்று அவன் கேட்டான். “எப்போதும்,” தாத்தா புன்னகையுடன் பதிலளித்தார், உலகம் நிறைய ஆச்சரியங்களால் நிரம்பி இருக்கு — நம்ம பயணம் இப்போதுதான் ஆரம்பம்,” என்றார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 06 தொடரும் துளி/DROP: 1999 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 5 https://www.facebook.com/groups/978753388866632/posts/33325804077068144/?
  9. நான் செய்த பணிக்காக, மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். -தம்பர்.- 😂
  10. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல். கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://athavannews.com/2026/1460205
  11. ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி. நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக்கவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார். இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கோவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர். தை பொங்கல் தினமும் பருத்தி துறை சாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்திஇருந்தது. குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அவரால் எந்தவித நடப்படிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2026/1460210
  12. தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ! தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை விகாரதிபதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாக தீப மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதிகளிடம் ஆசி பெற்று , கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, தையிட்டி விகாரை , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டது. அவ்விகாரையை சூழ பெருமளவான தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தபட்டுள்ளன. அவற்றினை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். என விகாரதிபதிகள் இருவரும் தனித்தனியே ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி காணி விடுவிப்பு , தையிட்டி விகாரை விவகாரம் , பாதை விடுவிப்புக்கள் , தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்த போதிலும் , அவை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் கூறாது சென்றமை காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. https://athavannews.com/2026/1460244
  13. கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது புதிய வரி – டொனால்ட் டிரம்ப் எச்சரிகை! டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று டிரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். இதேவேளை, “தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை எனவும் கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்றும் டிரம்ப் நேற்று தெரிவித்தார். கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது இவ்வாறான காரணங்களால் டிரம்ப் க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460233
  14. 'சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை' - அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டின் போது ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்பு 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. "ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை" - தமிழ்நாடு முதல்வர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வழக்கம் போல் காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மூன்று சுற்றுகள் முடிவடைந்திருந்த நிலையில், 8 மாடுபிடி வீரர்கள், 4 மாடு உரிமையாளர்கள், 4 காவலர்கள் & தீயணைப்பு வீரர்கள், 4 பார்வையாளர்கள் (ஒரு பெண் உட்பட) என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். முதல் சுற்றில், களம் கண்ட 105 காளைகளில் 16 காளைகள் பிடிபட்டன. முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், திரைப்பட நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன. முதல் சுற்றில் தகுதி பெற்றவர்கள் விவரம்: அகத்தியன், கருவனூர் - 3 கோகுல்ராஜ், கள்ளந்திரி - 2 அஜித், அலங்காநல்லூர் - 2 பிரசாத், மதுரை - 2 சூர்யா, வாடிப்பட்டி - 2 ஜல்லிக்கட்டை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு வருகின்றனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களிக்கின்றனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர். Happy Pongal happy jallikattu" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். வாடி வாசலுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்குமான தொலைவு இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக இருப்பதால் தாங்கள் சிரமப்படுவதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பரிசுகள் விவரம் 10-லிருந்து 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் முதன்மை பெறும் வீரர்கள் அனைவரும் இறுதிச்சுற்றில் விளையாடுவார்கள். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பாக வழங்கப்படும் காரும், இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த மாடுபிடி வீரருக்கு இ-பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் டிராக்டரும், இரண்டாவது சிறந்த காளைக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளைக்கு இ-பைக்கும் வழங்கப்படுகிறது. இவை தவிர, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் ஏராளமான பரிசுகளை வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அறிவித்துள்ளனர். முதல்வர் வருகை காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வருகிறார். காலை 9.45 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வரும் முதல்வர், களத்தில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிப்பார். பிறகு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி அலங்காநல்லூர் முழுவதும் வளர்த்த போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,2026 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது பாதுகாப்பு ஏற்பாடுகள் 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
  15. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து வெற்றி; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் Published By: Vishnu 17 Jan, 2026 | 03:07 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்றுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (16) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்து ஆகியன இலகுவாக வெற்றியீட்டின. ஆனால், மற்றொரு முன்னாள் உலக சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. குழு ஏ - அவுஸ்திரேலியா வெற்றி அயர்லாந்துக்கு எதிராக விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளது. அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 39.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து அமோக வெற்றியீட்டியது. ஸ்டீவன் ஹோகன், இலங்கை வம்சாவளியான நிட்டேஷ் செமுவல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 186 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர். இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது சதத்தைக் குவித்த ஸ்டீவன் ஹோகன் 111 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். நிட்டேஷ் சமுவேல் 101 பந்துகளை எதிர்கொண்டு பவுண்டறிகள் இல்லாமலேயே 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். வில் மலாஜ்ஸுக்கு 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் இருவர் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ரொப் ஓ'ப்றயன் 79 ஓட்டங்களையும் ப்ரெடி ஓகில்பி 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெகமண்ட் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஹோகன். சி குழு - இங்கிலாந்து வெற்றி ஹராரே தக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் பாகிஸ்தானை 37 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. காலெப் பெல்கொனர் 66 ஓட்டங்களையும் பென் டௌக்கின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஹ்மத் ஹுசெய்ன் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பர்ஹான் யூசுப் மாத்திரம் திறமையாக துடுப்பெடுத்தாடி 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அலெக்ஸ் க்றீன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜேம்ஸ் மின்டோ, ரெல்ஃபி அல்பர்ட் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: காலெப் பெல்கொனர் டி குழு - தென் ஆபிரிக்காவுக்கு ஏமாற்றம் நமிபியா விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த முன்னாள் சம்பியன் தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் பெரும் ஏமாற்றம் அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட் 31 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. ஆனால், காலித் அஹமத்ஸாய், பைசால் ஷினோஸதா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். காலித் அஹ்மத்ஸாய் 74 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 81 ஓட்டங்களையும் பெற்று ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (183 - 3 விக்.) அதே மொத்த எண்ணிக்கையில் மேலும் ஒரு விக்கெட் சரிக்கப்பட்டது. உஸய்ருல்லா நியாஸாய் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோர்ன் போத்தா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பயண்டா மஜோலா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக போராடிய ஜேசன் ரோவ்ல்ஸ் 98 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட கோர்ன் போதா (25), லெத்தாபோ பாலாமோலாக்கா (22), டெனியல் பொஸ்மான் (20) ஆகிய மூவரும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கதிர் ஸ்டனிக்ஸாய் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: உஸெய்ருல்லா நியாஸாய். https://www.virakesari.lk/article/236231
  16. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkhxm4pq0416o29nqb7zl9k7
  17. நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு - படங்கள் இணைப்பு 17 Jan, 2026 | 11:49 AM இலங்கையில் "லிட்டில் இங்கிலாந்து" (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சனிக்கிழமை (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய வானிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து காணப்பட்டன. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன. இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந் தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் சுற்றுச்சூழல் முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன. அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது இதில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது. இதேவேளை காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருகிறது. மேலும், இப் பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236263
  18. 5ஆம் ஆண்டில் சாதா 50மீற்றர் ஓட்டத்தில் (மறுக்க மறுக்க ஆசிரியை கட்டாயப்படுத்தி ஓடவிட்டார்) கடைசியாக ஓடிய எனக்குத்தானா அப்ப முதல் பரிசு!! முன்னுக்கு ஓடிய நண்பர்கள் இவன் எப்படா ஓடி முடிப்பான் என எல்லைக் கோட்டில் ஏளனமாகப் பார்த்தது எல்லாவற்றையும் தம்பர் இறும்பூத வைத்துவிட்டார்!
  19. வடக்கு கடலில் அபூர்வமான குளிர் நிலை : காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது – நாகமுத்து பிரதீபராஜா 17 Jan, 2026 | 11:34 AM கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature – SST) அசாதாரணமாகக் குறைவாக, அதாவது வழக்கத்தை விட அதிக குளிராக காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த குளிர்ந்த கடல் நீர் வடக்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக தெற்கு பகுதியில் காணப்படும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார். உலகளாவிய ரீதியில் பல நாடுகளின் வானிலை மற்றும் காலநிலைப் பாங்குகளைத் தீர்மானிப்பதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக முக்கியமான காரணியாக விளங்குகிறது என்றும், அதனால் வடக்கு பிராந்தியக் கடற்பரப்பில் தற்போது காணப்படும் இந்த அசாதாரண குளிர் நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ‘டித்வா’ புயலுக்குப் பின்னரான நாட்களில் இலங்கையில் பதிவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் பொதுமக்களும், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளும் மிகுந்த கரிசனையுடன் அணுகுவது காலத்தின் அவசியமாகும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236259
  20. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் Published By: Vishnu 17 Jan, 2026 | 04:29 AM கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர்கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://www.virakesari.lk/article/236240
  21. இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் Jan 17, 2026 - 10:38 AM இன்று (17) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 பாகை செல்சியஸ் எனவும், பதுளை பிரதேசத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 பாகை செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, பொலன்னறுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 பாகை செல்சியஸ் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் துகள் உறைபனி ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அந்த முன்னறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkhujyq6040zo29n4kn8hm3t
  22. யாழ் பல்கலைக்கழக பொங்கு தமிழ் நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு Published By: Vishnu 17 Jan, 2026 | 03:14 AM ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்படுவது வழமை. அதன்படி நாளை மதியம் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் தூபியில், பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/236233
  23. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் டேனியல் புஷ் மற்றும் பவுலின் கோலா பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty கிரீன்லாந்தை இணைக்கும் தனது லட்சியங்களுக்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில் மற்ற நாடுகள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது வரிகளை விதிக்க முடியும் என்று டிரம்ப் கூறினார். எந்தெந்த நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படக்கூடும் என்றோ அல்லது தனது இலக்கை அடைய எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்குச் சொந்தமாக தனி அரசாங்கம் உள்ளது. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன், மற்ற நாடுகளும் அவரது திட்டத்தை எதிர்க்கின்றன, அமெரிக்காவில் உள்ள பலரும் இதுகுறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். டிரம்ப் இந்த கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், இரு கட்சிகளையும் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற தூதுக்குழு கிரீன்லாந்திற்குச் சென்றிருந்தது. அந்தத் தூதுக்குழு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோரைச் சந்தித்தது. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
  24. மிகவும் துன்பகரமான செய்தி எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அருகில் இருந்தவர் போய் விட்டால் அடி மனதின் வேதனையை யாரால் தேற்ற முடியும். எங்கள் ஆழ்த இரங்கல் மோகன். உங்கள் பெரும் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஓம் சாந்தி 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.