Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. Kjy; கலக்கட்டும். கலக்கட்டும்.சிறிலங்கா சீனாவின்பக்கம்தான் நிற்கும். பிராந்திய வல்லரசுக்கு தமிழர்தாயகத்தின் அருமை புரியட்டும். காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது.
  3. டிரம்ப் வருகுன முன்பே, பைடன் மேலாண்மை கப்பிலே எடுத்தெகென் கிழிலுடேனென்று எழுதி வைத்த யுகக் கதை… அரசியல் அலைகள் அடங்காதே ஓட, அறிவின் அலை மட்டும் கரை சேர மறுத்ததோ என எண்ணினேன். “புலிட ல் வேண்டாம்” எனும் புலவர் சொல் காற்றில் பறந்தாலும், உறவினர் சொன்ன டகு டகி டகி டகு டங்கு டிங்கு முந்து முந்து மயிலோன் முந்து எனும் மந்திரம் மட்டும் மனதில் முளைத்தது வியப்பே! குந்தவைப் பிராட்டியார் குந்தவைத்த இடத்தில் சத்யா நாடெல்லா நின்றாராம், பார்தீபன் நாயுடு வாசிங்டன் சுந்தர் பிச்சை “நன்றே கற்கை புகினும்” என நூலோடு நெஞ்சோடு நின்றாராம். ஆனால்… அரசியல் புரியாதோர் உளறல் மட்டும் புராணம் போல வளர, உண்மை மட்டும் களமேகன் எழுதிய குறள் போல மறைமறை நின்றது. கதை சொல்லும் குரல் பெரிது, அறிவு சொல்லும் குரல் சிறிது — அதனால்தான் இவ்வுலகில் உளறல் தான் முதன்மை, உண்மை தான் துணை!
  4. நேற்று புளோரிடாவில் ரசியாவுடன் நடத்திய பேச்சும் தோல்வியாம். செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
  5. தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரதத்திற்கு, இப்போது 'பெட்ரோல்' போடக் கூடப் பணமில்லாமல் என்ஜின் முனகிக் கொண்டிருக்கிறது. “தளபதி வருவார்... மாற்றத்தைக் தருவார்" என்று காத்திருந்த நிர்வாகிகளுக்கோ, இப்போது "கடன் காரன் வருவான்... கழுத்தைப் பிடிப்பான்" என்ற பயமே மேலோங்கி நிற்கிறது. தவெக-வின் தற்போதைய நிலைமையை 'ஆக்‌ஷன்' படம் என்று நினைத்து உள்ளே வந்தவர்களுக்கு, இப்போது அது 'சோகப் படமாக' நீண்டு கொண்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியதோடு சரி, அடுத்தகட்ட நகர்வுகளில் தலைமை காட்டும் மந்தகதி அடிமட்டத் தொண்டர்களை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், இப்போது கையை விரித்து நிற்கிறார்கள். "கட்சிப் பணிக்காக ஏற்கெனவே கையில் இருந்ததைச் செலவு செய்துவிட்டு, இப்போது வட்டிக்குக் கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தலைமையோ எட்டிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை" என்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் குமுறலாக இருக்கிறது. நிதிய நெருக்கடி என்ற புயல், தவெக-வின் அடிமட்டக் கட்டுமானத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் களம் என்பது வெறும் ஆக்ரோஷமான பேச்சால் மட்டும் அமைவது அல்ல; அதற்கு 'பணபலம்' என்ற எரிபொருள் மிக அவசியம். ஆனால், தவெக-வின் கஜானாவோ 'ஈ' ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், கட்சியின் உச்சகட்டத் தலைமை (விஜய்) எடுக்கும் முடிவுகள் நிர்வாகிகளை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளன. "கட்சியைக் கொண்டு சேர்க்க நாங்கள் ரத்தம் சிந்துகிறோம், ஆனால் விஜய் அண்ணனோ வசதி படைத்தவர்களை (Rich background) மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்" என்ற பேச்சு அறிவாலயத்தின் சுவர்களைத் தாண்டி வெளியே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உள்ளூர் அளவில் செல்வாக்கு இருந்தும், கையில் காசில்லாத காரணத்தால் பல விசுவாசமான நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, "தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்ய விஜய் தயாராக இல்லை, மாறாக நிர்வாகிகளையே நிதியைத் திரட்டச் சொல்கிறார்" என்ற தகவலும் தீயாய்ப் பரவுகிறது. பல நிர்வாகிகள் மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கட்சியே வேண்டாம் என்ற விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளதாக 'சோர்ஸ்கள்' தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் குறித்து எந்தவொரு தெளிவான திட்டமிடலோ அல்லது நிதி ஒதுக்கீடோ தலைமையிடமிருந்து வராதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கடனோடு கட்சி பணிகளை நிறுத்திவிட்டு.. போதும்டா சாமி என்று கிளம்பும் சூழல் உள்ளது. 'வெற்றி நிச்சயம்' என்று முழங்கிய தவெக, இப்போது 'நிதி நெருக்கடி' என்ற சுழலில் சிக்கித் தவிக்கிறது. விஜய் தன் 'பர்ஸ்' கயிற்றைத் தளர்த்துவாரா அல்லது தொண்டர்களே தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.tamilmirror.lk/cinema/தமிழகத்தில்-தத்தளிக்கும்-த-வெ-க-அப்போ-விஜய்யின்-கதி/54-374319
  6. Today
  7. நிச்சயமாக இதில் சீனாவின் மறை கரம் உள்ளது. நீங்கள் சொன்னது போல் இன்னும் கொஞ்சம் புளிக்க விட்டு தைவானை அணைப்பார்களோ? எங்கள் பிராந்திய வாலரசுக்கு இப்ப வைத்த கலக்கி இருக்கும்.
  8. ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி? adminMarch 22, 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக ஜப்பானிய எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்க ஈரான் முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நீரிணையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும், ஜப்பானை ஈரான் ஒரு “எதிரி நாடாக” கருதவில்லை என்பதால், அந்நாட்டு கப்பல்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகளை அளிக்க முன்வந்துள்ளது. புதிய வரி விதிப்புத் திட்டம்: ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோமையே ரஃபி (Somayeh Rafiei) உள்ளிட்டோர், இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ மற்றும் ‘சுங்கக் கட்டணம்’ விதிக்கும் மசோதாவைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். https://globaltamilnews.net/2026/230837/
  9. ஈரான் கதை முடிஞ்சாச்சு அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு யுத்தத்தால் கனவு கண்ட யாழ் கள ஆய்வளர்கள், இப்போ மறை களட்டு திரிவதைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன், அதுக்குமேல் ரம்மை திட்டுறது? அடடா… அதுதான் இன்னும் நகைப்புக்குரிய காட்சி! கதை புரியல, நிலைமை புரியல, ஆனா திட்டுறதுக்கு மட்டும் full confidence!
  10. மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான பருவகாலப் பறவைகள். adminMarch 22, 2026 மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் மூன்று(3) வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளாகிய பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது.இந்த நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில் காற்றாலை மின் சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த விபத்து காரணமாக 2 வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்துள்ளதுடன்,ஒரு பறவை காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230806/
  11. படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக adminMarch 22, 2026 யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230812/
  12. 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி - வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் adminMarch 22, 2026 பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் தாதியர்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு ஆவணி மாதத்தில் சுமார் 3000 தாதியர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக, இவ்வாரம் அவர்கள் பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் உள்ள 16 தாதியர் பயிற்சி கல்லூரிகளில் இப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியும் வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றன. யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக்காக 100 பயிற்சியாளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சியை 2029 ஆம் ஆண்டில் நிறைவு செய்தவுடன், உடனடி நியமனம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது பணிபுரியும் தாதியர்களில் சுமார் 50% பேர் இலங்கையின் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் முதல் நியமனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி பின்னர் மாற்றம் பெறுகின்றனர். இதனால், பல வைத்தியசாலைகளில் அனுபவமிக்க (சிரேஷ்ட) தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வடக்கில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தாதியர் பயிற்சியைத் தேர்வு செய்து தொழிலில் நுழைவது மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமான ஒரு வாய்ப்பாகும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. தேவையானவர்களுக்கு இலவச இருப்பிட வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதனால், பல்கலைக்கழகப் படிப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த மூன்று ஆண்டுகளை பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக நிறைவு செய்ய முடிகின்றது.மேலும், பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது. இதேவேளை, பல பல்கலைக்கழகங்கள் BSc Nursing பட்டப்படிப்பையும் வழங்குகின்றன. அவற்றை முடித்தவர்கள் ஆறு மாத உள்ளகப் பயிற்சிக்குப் பிறகு வைத்தியசாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தாதியர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்ட பின்னரும் பல்வேறு கட்டங்களில் மேலதிக பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆதார வைத்தியசாலைகள், பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் நிபுண மருத்துவர்கள் பணியாற்றுவதால், விஷேட சேவைக்கு ஏற்ப தாதியர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. தாதியர் பயிற்சி கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் பயின்ற பின் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. பலர் பின்னர் பணியில் இருக்கும் போது BSc Nursing பட்டப்படிப்பையும் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர் MSc மற்றும் PhD போன்ற உயர் பட்டப்படிப்புகளையும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் தாதியர்கள் பேராசிரியர்களாக உயர்ந்து விளங்குகின்றனர். அதேபோன்று, இலங்கையிலும் இத்தகைய உயர்வுகளை அடையும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, தாதியர் தொழில் என்பது சேவை உணர்வுடன் கூடியதோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் கொண்ட ஒரு சிறந்த துறையாகும். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவர் தாதியராக இருந்தால், அந்தக் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் சுகாதார சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. அவர்களால் பிறரை சரியான சிகிச்சை சேவைகளுக்கு வழிநடத்தவும் முடிகிறது. பயிற்சி காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி பெறும் காலத்தில், வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அனுபவம் பெறுவதன் மூலம், பின்னாளில் எளிதாக கடமையாற்றும் திறனை அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர். தற்போது இலங்கையின் அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 42,000 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் 6000 பேர் பயிற்சியில் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தற்போது 725 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிக்காக 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த சில மாதங்களில் 2500 புதிய தாதியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2022, 2023, 2024 ஆண்டுகளில் பரீட்சை எழுதியவர்கள் சேர்க்கப்படுவார்கள். தாதியர் பயிற்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால், இப்பயிற்சியில் சேரும் மாணவர்கள் எதிர்காலத்தில் மும்மொழித் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர்.சில தாதியர்கள் மேல்படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இலங்கையில் வழங்கப்படும் தரமான பயிற்சி காரணமாக, வெளிநாடுகளில் தொழில் பெறுவதும் எளிதாக உள்ளது. எனவே, வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230821/
  13. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  14. மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லதுதானே! இஸ்ரேல் போரைத் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது.முதல்நாளே தலைவனைப் போட்டுதள்ளியதுடன் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தால் ஈரான் அதற்குப் பிறகுதான் உக்கிரம் அடைந்துள்ளது. பொருளாதாரத்தில் கடும் பிண்ணடைவில் இருக்கும் ஈரான் இப்படி எதிர்வினையாற்றும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈரானின் சக்திவாய்ந்த தலைவர்களைப் போட்டுத்தளிளிபின்பும் ஈரான் பேராடுகிறது. ஈரானுக்கு இது வாழ்வா சாவா என்ற நிலை.மேலும் ஷியா முஸ்லிம் மதம் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் மதம்.அதனால் அதன்தலைவர்கள் பதுங்குழியில்பதுங்கியிராது தங்கள் பாதுகாப்பில் அக்கறை காட்டாது இருக்கிறார்கள். தலைவர்கள் விழ விழ மக்கள் எழுச்சி கூடுவது வித்தியாசமான போக்கு.க யாராலும் அழிக்க முடியாது என்ற அமெரிக்காவின் விமானத்துக்கு அடிவிழுந்தது.ட்ரபுக்கு அடிச்சது மாதிரி. இந்தியா பாகிஸ்தான் போரில் சீனாவின் மறை கரங்கள் ஈடுபட்டது போல இங்கேயும் ஏன் நடந்திருகக்கூடாது?சீனாவின் படைக்கல சோதனையாக ஏன்பார்க்கக்கூடாது.
  15. ஆனால் செய்திகள் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகத்தான் சொல்கின்றன. இஸ்ரேலின் வேலையாகவும் இருக்கலாம். அல்லது ஈரானே ஏவிவிட்டு தான் ஏவவில்வை என்று மறுத்து சொல்வது தன்னிடம் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணை இருக்கறதா இல்லையா என்று எதிரிகளைக் குழப்பும் வேலையாகவும் இருக்கலாம்.பிரித்தானியா தனது தளங்களை அமெரிக்கா பாவிப்பதற்கு அனுமதியளிக்கப் போவதாகச் சொன்னதற்கு எதிர்வினையாகவும் இருக்கலாம்.
  16. விக்கியர் தீவிர அரசியலில் இருக்கும் போதே இதை சொன்னவர் - தேவநம்பியதீசன் தமிழன் என அவர் சொன்ன அதே பேட்டியில் மரபுரிமை வகையில் தமிழர்கள் சிங்களவர் ஒரே இனம், பின்னாளில் சிங்கள மொழி பின் சிங்கள-பெளத்த அடையாளம் உருவானது என்பதை சொன்னார் என நினைக்கிறேன்.
  17. தீவிர அரசியலில் இருக்கும் போது இவ்வாறான அறிவூட்டல்களை செய்திருக்கலாம். அப்போது தனது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் தராத வெற்று கோஷ அரசியலை செய்துவிட்டு அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னர் இவ்வாறான அறிவூட்டல்களை செய்வது தகுந்த பலன்களை கொடுக்காது. இருப்பினும் இவ்வாறான மக்கள் நலன் விரும்பும் அறிவூட்டல்களை கல்வியாளர்கள் செய்வது வரவேற்கத்தக்கது.
  18. 48 மணிக்குள் ஹோர்மூசை திறக்காவிடின் ஈரானின் அத்தனை மின் நிலையங்களும் நிர்மூலம் ஆக்கப்படும் என தம்பர் சொல்லி உள்ளார். கத்தார், யூ ஏ இ இப்பவே சுவிட்சை ஆப் பண்ணலாம்😂
  19. டிரம்ப் வருகுன முன்பே பைடன் நீண்டகால அமெரிக்க மேலாண்மைவாத கப்பில் எடுத்தெகென் க்ழிலுடேன் … எந்த புலிடல் வேண்டும். என்கு உறவினர் சொன்னதன் படி டகு டகி டகி டகு டங்கு டிங்கு முந்து முந்து மயிலோன் முந்து குந்தவை பிராட்டியார் குந்தவைத்த இடத்தில் தெலுங்கர் சத்யா நாடெல்லா பார்தீபன் நாயுடு வாசிங்டன் சுந்தர் பிச்சை நன்றே கற்கை புகினும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.