All Activity
- Past hour
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 132 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 132 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" கடைசி பனி யுகம் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. 40,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவும் இன்றைய இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. எனவே முதல் குழுவான கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் [Beach combers,], எந்த தீவையும் அப்பொழுது அங்கு காணவில்லை. ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பைத் தான் கண்டனர். வடக்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பனி மலைகளில் அதிக அளவு பூமியின் ஈரப்பதம் சிக்கியதால், கடந்த பனி யுகத்தின் போது கடல் மட்டம் சுமார் 120 மீட்டராகக் குறைந்தது. வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரிகள் அந்த பெரிய பனி மலைகளின் விளைவாகும். பனி மலைகளின் அதிக எடை பூமியை கீழே அழுத்தி வட அமெரிக்காவில் பெரிய ஏரிகளை உருவாக்கியது. ஆனால், ஆஸ்திரேலியா என்றென்றும் ஒரு தீவாகவே இருந்து வருகிறது. பனி யுகத்தின் போது கூட ஆஸ்திரேலியா அப்படியே ஒரு தீவாக இருந்துள்ளது. எனவே, கங்காரு போன்ற, அங்கு பரிணாமம் அடைந்த தனிப்பட்ட விலங்குகள், உலகின் வேறு எங்கும் காணப்படவில்லை. ஆனால், இலங்கைக்கு என ஒரு தனித்துவமான விலங்குகள் எதுவும் இல்லை. இலங்கையில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் இந்தியாவில் உள்ள விலங்குகளைப் போலவே உள்ளன. அதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விலங்குகளின் நடமாட்டம் குறுக்கும் நெடுக்குமாக இருந்துள்ளது. இலங்கையில் யானைகள் இருப்பதை எப்படி விளக்க முடியும்? அது படகு மூலம் கட்டாயம் வந்திருக்காது! இன்று இலங்கையில் இருக்கும் யானைகள் மலை மற்றும் கடல் கடந்து வந்து இருப்பது என்பது சாத்தியமல்ல. இது ஒரு காலத்தில் நிலப்பரப்புத் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது. தனபாக்கியம் குணபாலசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட "இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும்" / Archeology & Dravidian culture for Srilanka by Thanapakkiyam Gunabalasingam in Tamil ' என்ற நூல், விட்டிபொட் மற்றும் கடைம்பொட் [Vittipot and Kadaimpot] ஆகிய இரண்டு சிங்களப் புத்தகங்கள் பற்றி குறிப்பிடுகிறது. இவை சமீப காலம் வரை வாய் வழியாகப் பரப்பப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூல்களில், இராவணனின் தலைநகர், அவனது மரணத்துக்குப் பின் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இராசாவலிய என்ற சிங்கள வரலாற்று நூலும், இராவணனின் கோட்டையும், 25 அரண்மனைகளும், 400,000 வீதிகளும் மன்னார் மற்றும் துத்துக்குடிக்கும் இடையே கடலில் மூழ்கியதாக, 27 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. நாளாகமங்களை எழுதிய துறவி ஆசிரியர்கள், வங்கதேசத்திலிருந்து ஆண்கள் மட்டும் இலங்கை தீவுக்கு வந்ததாகவே குறிப்பிடுகின்றன. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிச் சொல்லவில்லை. இலங்கை நாளாகமங்கள் வழக்கம் போல், நாடு கடத்தப்பட்ட பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் முற்றிலுமாக புறக்கணித்தன. அது ஏன் என்று புரியவில்லை? மணிமேகலை: மற்றொரு தமிழ் காப்பியமான மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருப்பொருளின் தொடர்ச்சியாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். இன்று இலங்கையின் ஒரு பகுதியாக விளங்கும் ‘நயினா தீவு’ தான் மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத் தீவு என்று வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏழு தீவுகளில் இந்த தீவும் ஒன்று. இதை நாகத்தீவு என்றும் அழைத்தனராம் . இந்த தீவுக்கு புத்தர் வந்து தங்கி இருந்தார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. மேலும், மணிமேகலை சங்கமித்தாவுடன் ஒரு நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம். இருவரும் மிகவும் இளம் பௌத்த கன்னியாஸ்திரிகள் அல்லது பெண் புத்தத் துறவிகள் ஆகும். இருவரும் மிகவும் இளமையாக இலங்கைக்கு வந்தனர். Part: 132 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The glacial period must have aided the peopling of Lanka. The propagation of Homo sapiens from Africa to the rest of the world commenced about seventy thousands, 70,000, years back. The earliest human group, somehow, crossed the Red sea, probably near the present day port city of Eden, walked along the sea coast. There are many subterranean artesian fresh water streams day-lighting along the coasts might have helped them quench their thirst and they might have got their food from land and sea. These Beach Combers reached western coast of India, and walked along the coast to reach the southern end of India, might be around 40,000 to 50,000 years ago. They kept on walking and eventually reached Australia. There are many references for this journey. However, the References 30, 31, 32, 33, 34 and 35 are recommended for further details. The References 33 and 34 are by Tamils currently domiciled in England. The Reference 33 is by Dr. Siva Thiyagarajah and is a detailed one, while the Reference 34 is a brief sketch of Peopling of Ceylon. Men and women walked together, and they must have had language to communicate, however crude it might have been. There might have been childbirths, deaths, sickness, dangers, adversities, jealousies and internal squabbling. Their language must have been adequate to keep going, meeting and resolving the issues along the way, from the Eastern Africa to Australia, some of course stopped half-ways and part-ways. I never studied biology during my school days, and spent years to understand the concept of evolution and DNA. It convinced me that no one is superior to any other. DNA sequence convinced me that. The last ice age ended about 7,000 years ago, and the first group, the Beach combers, found no island, but a landmass 40,000 to 50,000 years ago, India and the present day Ceylon forming one land mass. The sea levels dropped to about 120m during the last ice age as huge amount of earth moisture is trapped in the Ice Mountains in the Northern and Sothern Europe and Northern America. The huge lakes in the North America are the result of those huge mountains of ice. The heavy weight of the Ice Mountains compressed the earth below forming the Great Lakes in the North America. Australia has been an island forever, even during the ice age, and the evolution created animals typical to Australia, like Kangaroo, which are not found anywhere else. There are no such animals unique to Ceylon indicate no evolutionary uniqueness. The animals and the birds in Ceylon are same as those in India. There had been cross flow of animals between India to Ceylon, but the monkish authors of the chronicles assumed that men, not females, have to come from Vanga to people the Island of Lanka. The Lanka Chroniclers completely ignored, as usual, the exiled females and their children. How could one explain the presence of elephants in Ceylon? It would not have come by boat! The author of the Reference 29 mentions two Sinhala books, Vittipot and Kadaimpot, which have been orally carried on until very recently. It is stated in these books that the Capital city of Ravana was engulfed by sea after his death. These are the lingering frightful memories of the people of Tamil Nadu and Lanka about a sea deluge which happened not in very ancient and not very recent times. I believed initially it was an exaggerated deluge due to a Tsunami occurred in the olden days. The Rajavaliya specifically stated, see page 27 of the Rajavaliya, that Ravana’s fortress, 25 palaces, and 400,000 streets situated between Mannar and Tuttukudiya were submerged. This is one of the occasions in which the area of submergence of land is partly identified. The Tamil Epic Sillappathikaram also identified the location as Kumari land in the earlier quoted three lines, verses 18 to 20 of Canto 11 of Silappathikaram. I brushed this aside when I was commenting on the Rajavalia. I was working out the additional land area which became available to act as land bridge between Lanka and Indian landmass during the glacial period due to the dropping down of the sea levels. I used the Bathymetric contours to identify the land area which would have been exposed. The Bathymetric contours to the south of an imaginary line running East-West, somewhat below Mannar, are entirely different from the contours to the north of the same imaginary East-West line. These contour maps are given below. The first map shows the Bathymetric contours to the north of that imaginary East-West line. The depth to the sea bottom is about 10 to 20m in the Palk Strait. The hatched area in the second map shows the additional land became exposed when the sea level dropped by 30m.The entire Palk Straight is dry now and people and animal had free passage. The third map shows the exposed land area when sea level dropped by 100m. The Beachcombers might have walked through these hatched areas. Some, of course, might have stay put around these areas. They must be the forefathers of Mr. Virumandi Andithevar of Jothimanicam village in Madurai. See the picture of him on the page 98 of Reference 33. His clans might have populated Ceylon too. The fourth map gives the Bathymetric contours to the south of the earlier mentioned East-West line. The Bathymetric levels rapidly descend to 3000 to 4000m. See the thick dotted line connecting the Cape Comorin (Kannyakumari) to southern part of Ceylon. The edge of the disappeared land mentioned in the Tamil epic and in the Sinhala ancient works might have had been that dotted line. It could be that the mountain ranges of the central and southern part of Lanka is the continuation of the Western Ghats mountain ranges running along the western coast of India from Mumbai to the Cape Comorin, with intermittent gaps through which roads connecting East and West run. This mountain range is the main reason for the rain fall during the Monsoonal winds. There must have existed mountains between the western coast of Lanka from Mannar to Galle and between the coastal lines from Rameswaram to Kannyakumari (Cape Comorin) through Tutthukudi. There must have been rivers running around these mountains. Something must have caused a slope stability failure, perhaps due to the erosion of those rivers running around it or due to the Tectonic Plate sliding nearby or both. Tectonic Plate movements cause Tsunami. The slope stability failure caused the mountain and the land to end up deep down to the bottom of about 3000 to 4000m. This must have happened about 4000 to 5000 years before present and the memory persisted. This time frame is very insignificant in the evolutionary and geological time scales. This is the reason for flora and fauna are similar on both sides. If some neutral agencies conduct random DNA sampling and analysis in sufficient numbers of people on both sides then it would confirm that the people of Tamil Nadu and Ceylon are closely related to each other than with others. The Bathymetric contour maps are given after the commentary on the Epic Mannimeghalai. The additional areas which became available due to the dropping of sea level are hatched. Mannimeghalai: The other Tamil Epic Mannimeghalai is the continuation of the theme set out in the Epic Silappathikaram. The aforementioned daughter of Madhavi, Mannimeghalai, became a young Buddhist nun. She was also taken to an island called Mannipallavam in Lanka by the sea goddess Mannimeghalai. We, the natives of the island Nainativu in the Jaffna District, fondly believe that the Mannipallavam was the former name for Nainativu. The Ceylon Government too believed so and, built two Buddhist Viharas there during the years of the State Council. The Burmese Government too partly funded the construction. These Buddhist Viharas became the policy arms of the chauvinistic Buddhists with the active help of the government. Strangely, then came the Navy and the Army detachments to protect the peace loving Buddha’s abode. The population of Nainativu in the 1961 census was well over five thousands, and it should have been now about, with a natural increase of about 3% per annum, thirty thousands. However, thanks to the Buddha and his guardian detachments of Navy and Army, the population now is not more than one thousand, only about one fifth of what it was sixty years ago. The Buddha is a coloniser in my native village. This Navy detachment played a major role in the massacre of the passengers of the Kumudini boat, on the name of Buddha. About seventy passengers were brutally massacred by the Sri Lankan Navy detachment based there. Mannimeghalai had close resemblance with Samghamitta; both are very young Buddhist nuns. Both came to Ceylon very young. The References 29. Illankayir(t) Tolliyalaivukalum Diradidak Kalaccaramum (In Tamil) by Thanapakkiyam Kunapalasingam, 2001, Mannimeghala Publication. (Archaeological Researches in Ceylon and the Dravidian Cultures) 30. The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English 31. The Journey of Man – A Genetic Odessy by Spencer Wells, 2001 32. Deep Ancestry by Spencer Wells, ISBN:0-7922-625-8 33. Peoples and Cultures of Early Sri Lanka by Dr. Siva Thiyagarajah, 2011, ISBN:1 85201 025 8 34. Peopling of Sri Lanka by Subramanian Visakan, 2010, ISBN: 1 85201 022 3 35. Mapping of Human History by Steve Olson, 2002 நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 133 தொடரும் / Will follow துளி/DROP: 2092 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 132 https://www.facebook.com/groups/978753388866632/posts/34292369700411572/?- சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும்
சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும் யாழின்பன் ஓய்வு பெற்ற நாளில், அவனது வீட்டில் எந்தக் கொண்டாட்டமும் நடைபெறவில்லை. வடக்கில் ஓய்வு என்பது ஓர் முடிவல்ல; அது எதோ ஒரு வழியில் தொடர்ந்து கொண்டு இருப்பதுடன், அது மெதுவாக அவரை அங்கு அமைதிக்குள் கரைத்துவிடும். காலை எழும் பழக்கம் அவனை விட்டு விலகவில்லை. கடிகாரம் இனி கட்டளையிடவில்லை; ஆனாலும் உடல் பழைய கட்டளைகளை மறக்கத் தயாராக இன்னும் இல்லை. அது அதைப் பழக்க சில பல மாதங்கள் எடுக்கலாம். யாழின்பன் எழுந்தபோது வலது தோள் முதலில் விழித்தது. பிறகு அவன். வலி ஒரு தாக்குதல் போல வரவில்லை; அது நீண்ட நாட்களாகப் பழகிய ஒருவனைப் போல அருகில் வந்து உட்கார்ந்தது. பக்கத்தில் படுத்து இருந்த அகல்விழி அவன் முகத்தைப் பார்த்தவுடனே புரிந்துகொண்டாள். அவள் கேட்கவில்லை; கேட்க வேண்டியதில்லை. சில உண்மைகள் வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படும் என்பதை அவள் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டாள். வேம்படி மகளிர் பள்ளியில் படித்த காலத்திலிருந்து அவள் கற்றிருந்தது — சத்தமில்லாமல் புரிந்து கொள்வது. அவன் வாழ்க்கையில் வலி புதிதல்ல; ஆனால் இப்போது அது நிரந்தரமாக உடனிருந்தது. சர்க்கரை நோய் அவனிடம் எந்த அனுமதியும் கேட்காமல், அறிவிப்பு இல்லாமல் வந்த சட்டம் போல, குடியேறியிருந்தது. காலை மாத்திரை, அளவான உணவு, நேரம் பார்த்து நடப்பது—அவை எல்லாம் அவன் நாளின் பகுதிகளாகிவிட்டன. வடக்கில் மக்கள் இப்படித்தான் வாழப் பழகியிருந்தார்கள். முழு சுதந்திரமில்லை; அதே நேரத்தில் வாழ்வை கைவிடவும் இல்லை. தடைப்பட்ட சூழலில் கூட உயிர் வாழ்வதற்கான ஒழுங்கை அவர்கள் கற்றிருந்தார்கள். ஒருகாலத்தில் மாணவர்களை நேரத்திற்கு வகுப்புக்குள் அனுப்பியவன், இப்போது தன் உடலை ஒழுங்குக்குள் வைத்திருக்க வேண்டிய நிலையில் இருந்தான். நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் எறியதில் மகிழ்ச்சி அடையுது! ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது வேலையில் இருந்து ஒய்வைக் கேட்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது! கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது தோள்மூட்டு வலி குந்தி இருக்குது பச்சைக் காய்கறி பழக் கலவையுடன் [சாலட்] விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது! யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில் படித்த காலத்தில், கல்வி என்பது ஒரு நம்பிக்கை. வளைந்த வரலாற்றை நேராக்கும் கருவி. சிதைந்த சமூகத்தை மீண்டும் நிமிர்த்தும் சக்தி என்று முழுமையாக உணர்ந்தான் . வரலாறு கூட புத்தகங்களில் சீராக எழுதப்பட்டால், இனப்பிரச்சனை கூட மாறிவிடும் என்று நினைத்தான். அவனுக்கு அங்கே அமைதியைப் பயிற்றுவித்த கல்வி, அவனுக்கு ஒழுக்கமும் கற்றுக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல, ஒழுக்கமும் அறிவும் போதுமானால் அநீதிக்கு ஒரு முடிவு உண்டு என்று அவனை நம்ப வைத்தது யாழ் மத்திய கல்லூரி. அப்போது அவன் நம்பினான்— படித்தால் போதும். அறிந்தால் மாற்றம் வரும். வரலாறு கூட தன் பிழைகளைச் சீர்செய்து கொள்ளும் என்று. ஆனால் பேராதனையில் பல்கலைக்கழகத்தில் அந்த நம்பிக்கை மெதுவாக உரசியெடுக்கப்பட்டது. அவன் வேறு ஒன்றைக் அங்கு கற்றான்— அறிவு மனதை கூர்மையாக்குகிறது. ஆனால் அதிகாரத்தை மென்மையாக்குவதில்லை. அறிவு கேள்வி எழுப்பச் சொல்லுகிறது. ஆனால் பதில் கிடைக்குமா என்பது அதிகாரத்தின் விருப்பம். அங்கே தான் அவன் உணர்ந்தான்— கல்வி ஒடுக்குமுறையை விளக்கக் கற்றுத் தருகிறது. அதை நிறுத்துவதில்லை. உண்மை சொல்லப்படலாம். ஆனால் அது கேட்கப்பட வேண்டியதில்லை அந்த வளாகத்தில்தான் அகல்விழி அவன் வாழ்க்கைக்குள் முழுமையாக நுழைந்தாள். பாடசாலை காலத்தில், அவர்களின் பாடசாலை அருகருகே இருந்ததாலும், அவள் அழகு யாரையும் திரும்பி பார்க்க வைத்ததாலும், அவன் ஒரு சிறப்பு வாய்ந்த கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர் என்பதாலும், ஒருவரை ஒருவர் தூரத்தில் ரசித்துள்ளார்கள். அந்த அறிமுகம் தான் அவர்களை பல்கலைக்கழகத்தில் ஒன்று சேர்த்தது. அவள் யாழ்ப்பாணத்தின் ஒரு அமைதியான மாலை போல அழகாக அமைதியாக இருந்தாள். அவளிடம் சத்தம் இல்லை. ஆனால் உள்ளே உறுதி இருந்தது. அவர்கள் இருவரும் கூடுதலான கவனம், படிப்பில் செலுத்தியதால், அவர்கள் காதல் தீவிரமாக இல்லை; அது அவசரமாகவும் இல்லை. அவன் பேசினான். அவள் கேட்டாள். அவன் கனவுகளைச் சொன்னான். அவள் அவற்றை நிலத்தில் பதிய வைத்தாள். அவர்களுடைய காதல் இன்றைய பாடல் போலவும் இல்லை. அன்றைய கவிதை போலவும் இல்லை. ஒரு நீண்ட நடைபாதை உரையாடல்கள் போல இருந்தது. மெதுவான சம்மதங்கள், ஒரே கனவின் இரு குரல்கள் மட்டுமே. பேராதனையில் தான் அவன் உடல் முதன்முறையாக அரசியலைச் சந்தித்தது. கூட்டங்கள், முழக்கங்கள், காவலர்கள், ஓட்டம், தடியடி —அந்த நாட்களில் அவன் தோள்கள் வலிக்கவில்லை. இருவரும் தங்கள் தங்கள் பட்டப்படிப்பு முடிந்ததும், இலங்கையின் மாற்றப்பகுதிகளில் வேலைக்குப் போகாமல், வடக்கிற்கு திரும்பியது நிலம் குணமடைந்ததால் அல்ல. அது இன்னும் காயமுற்றிருந்தது; மண் நிம்மதி அற்று உறங்க முடியாமல் இருந்தது. பல உத்தியோகத்தர்கள் வடக்கு மண்ணை விட்டு வெளியே போய்க்கொண்டு இருந்தார்கள். அங்கே அவர்களின் பணி [சேவை] தேவையாக இருந்தது; அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, அழிந்த வீடுகள். மாறாத முகாம்கள். சாதாரணமாக்கப்பட்ட அநீதிகள் எல்லாம் ஒன்றாக காணப்படும் அந்த நிலத்தில் அவர்கள் வேலை பார்த்தார்கள். ஆனால் நிம்மதி இல்லை. அடிக்கடி ஊரடங்கு, சோதனைகள், சந்தேகப் பார்வைகள்— அவை நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தன. அவன் உடல் அதையெல்லாம் தாங்கியது. அப்போது தோள் வலிக்கவில்லை. அவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள். அவர்கள் படித்தார்கள். திருமணம் ஆனது. பிள்ளைகள் பிறந்தார்கள். இப்போது பேரக்குழந்தைகள் அவனை “தாத்தா” என்று அழைக்கிறார்கள். அந்தச் சொல் அவனை வயதானவனாக்கவில்லை. மாறாக முழுமையாக்கியது. அவன் அவர்களை தூக்கினான். தோளில் அமர வைத்தான். அப்போது கூட அவன் தோள் சத்தமில்லாமல் அதை சகித்துக் கொண்டிருந்தது. வலது தோள்பட்டை வலி அவன் ஓய்வு பெற்ற பிறகுதான் தெளிவாகத் தோன்றியது. இப்போது மட்டும் ஏன் என்று அவன் கேட்டபோது, மருத்துவர் சிரித்தபடி சொன்னார்: “இதெல்லாம் இப்போ ஆரம்பிச்சது இல்லை. பல வருடங்களின் தேக்கம்.” - அவன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய பக்கம் தான் வலது பக்கம். கணினியில் தட்டச்சு செய்ய , தூக்க, சுமக்க, பந்து வீச, பந்து அடிக்க .... யாழின்பன் சிரித்தான். வடக்கில் இப்போது நடப்பவை எல்லாம் இப்போது ஆரம்பித்தது இல்லை. எல்லாமே பல தசாப்தங்களின் தேக்கம் தான். 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை அரசியல் சுதந்திரம் பெற்றதுடன், நாட்டின் அதிகார அமைப்புகள் புதிய வடிவம் பெற்றன. ஆனால் அந்த மாற்றம், தமிழர்களுக்குச் சம உரிமையும் பாதுகாப்பையும் வழங்கவில்லை. மாறாக, சிங்கள–பௌத்த ஆதிக்க அரசியல் கோட்பாடுகள் வலுப்பெற்று, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, குடியுரிமை, மண் உரிமை, சமய உரிமை, சம உரிமை ...... ஆகிய தளங்களில் எல்லாமே சேர்ந்து சேர்ந்துதான், தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட அடக்குமுறை உருவாகத் தொடங்கியது. அவரது எக்ஸ்-ரே “கிழிவும் தேய்வும்” உண்டு என்றது. ஆனால் “இடைவெளி இன்னும் உள்ளது.” மருத்துவர் சொன்னார்: “முழுமையான குணம் இல்லை. ஆனால் கையாளலாம்.” ஆனால், யாழின்பன் மருத்துவத் தீர்ப்பைத் தாண்டி ஒரு அர்த்தம் கண்டான். மண்ணுக்கும் கிழிவும் தேய்வும் உண்டு. பல தசாப்தங்களின் அழுத்தம். கண்காணிப்பு. சுரண்டல். ஆனால் அங்கேயும் இடைவெளி உண்டு— பயத்துக்கும் மரியாதைக்கும் இடையில், இழப்புக்கும் நினைவுக்கும் இடையில். “பின்னாளில் மூட்டு வாதம் வரலாம்,” மருத்துவர் எச்சரித்தார். அரசியல் சிதைவுபோல்— தவிர்க்க முடியாதது அல்ல; அலட்சியம் செய்தால் நிச்சயம். “வழக்கமான உடற்பயிற்சி அவசியம்,” மருத்துவர் சொன்னார். “இயக்கம் முக்கியம்.” யாழின்பன் உள்ளுக்குள் சிரித்தான். இயக்கம் எப்போதும் முக்கியம் தான். வேலி போட்டபோது மனம் நகர்ந்தது. வாய் மூடப்பட்டபோது உண்மை பாடல்களிலும் சடங்குகளிலும் மௌனங்களிலும் நகர்ந்தது. வலி அதிகமானால் ஊசி போடவேண்டும். இல்லாட்டி வலி நிவாரணி எடுக்கவேண்டும்.” யாழின்பன் மீண்டும் சிரித்தான். அவன் மனதில் ஒரே எண்ணம் ஓடியது— உடலுக்கும் நிலத்துக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை. குணமடையாதது. கட்டுப்படுத்துவது. வலியை பழக்குவது. வலி அவனை முன்கூட்டியே ஓய்வுக்கு தள்ளியது. வேலைக்கு செல்லும் திறன் இருந்தாலும், உடல் ஒத்துழைக்கவில்லை. நாள் முழுவதும் கணினி முன் உட்கார முடியவில்லை; தோள் எரிந்தது. சில நாட்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறியது. மருந்துகள் உதவின; ஆனால் முழுமையாகக் குணப்படுத்தவில்லை. அவன் மெதுவாக வாழ கற்றுக்கொண்டான். வேகமாக நடக்கவில்லை. கனமான பொருட்களைத் தூக்கவில்லை. ஆனால் வாழ்க்கையின் பாரத்தையும் தனது மனக்குமுறலையும் சேர்த்து அகல்விழியோடு சுமந்தான். விழியற்ற தராசு நீதி தராது அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது! வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது நலிவுற்ற மக்கள் கவலை புரியாது! ஈரமுள்ள மனையாள் கருணை காட்டிட பாரமான வலியும் மறைந்து போகுமே! நிறைவுள்ள நட்பு அன்பைக் கொட்டிட கறைபிடித்த அரசியலிலும் நிமிர்ந்து நிற்கலாமே! அவள் அவனை ஒருபோதும் பலவீனன் என்று நினைக்கவில்லை. “நீ எல்லாவற்றையும் ஒரே தோளில் சுமக்கிறாய்,” என்று ஒருநாள் மெதுவாகச் சொன்னாள். அது உடலைப் பற்றியதல்ல. குடும்பம், குழந்தைகள், நினைவுகள், ஒரு நிலத்தின் வலி—அவை எல்லாம் அவன் வலது தோளில் கூடிவிட்டதுபோல் இருந்தது. அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் இளமை இருந்தது; வலியும் இருந்தது. பேரக்குழந்தைகள் வந்தபோது வீடு உயிர் பெற்றது. அவர்கள் ஓடினார்கள், சிரித்தார்கள், அவன் மடியில் ஏறினார்கள். அவன் அவர்களைத் தூக்கினான்—இரு கைகளாலும், மெதுவாக. வலி வந்தது; ஆனால் அவன் முகத்தில் அது தெரியவில்லை. அவன் நினைத்தான்: இவர்களுக்கு நான் என்ன கொடுக்கிறேன்? ஒரு காயமுற்ற நிலத்தின் கதையா, அல்லது அதையும் தாண்டி நிற்கும் பாசத்தின் உதாரணமா? அகல்விழி அலுவலகத்திலிருந்து ஒரு மாலை தாமதமாக வந்தாள். யாழின்பன் வீட்டின் முன் தோட்டம் சுத்தம் செய்துகொண்டிருந்தான். “இன்னும் முன்போல் வேலை செய்யாதே,” என்று சொன்னாள். அவன் நின்று அவளை பார்த்தான். அந்த பார்வையில் இளம் வயது காதலும் முப்பத்தி மூன்று ஆண்டுகளின் உடன்பாடும் ஒன்றாக இருந்தது. “நம்ம வாழ்க்கையும் இந்த நிலம் மாதிரி தான்,” என்று அவன் சொன்னான். “காயமிருக்கு. ஆனா இன்னும் வாழுது.” அகல்விழி சிரித்தாள்.அவள் கை அவனது வலது தோளில் மெதுவாக அமர்ந்தது. ஒரு இரவு பேரக்குழந்தைகள் அவனிடம் கதை கேட்டார்கள். அவன் போரைக் கூறவில்லை. வலியைச் சொல்லவில்லை. அவன் சொன்னது— ஒரு பள்ளி. ஒரு பல்கலைக்கழகம். ஒரு பெண். ஒரு வாழ்க்கை. அவன் முடித்தபோது அவனது தோள் வலித்தது. ஆனால் அவனது மனம் அமைதியாக இருந்தது. அந்த இரவு யாழின்பன் அகல்விழியின் அருகில் அமைதியாக படுத்துக்கொண்டான். ஆனால் அவன் தோள் இன்னும் வலித்துக் கொண்டே இருந்தது. சில நேரம் மனமும் கூட. அகல்விழியின் கை அவன் வலது தோளில் மெதுவாக அமர்ந்தபோதும், அவன் வலி குறையவில்லை; ஆனால் அர்த்தம் மாறியது. அது இனி தனிப்பட்ட வலி அல்ல; பகிரப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி. யாழின்பன் புரிந்துகொண்டான்—சில காயங்கள் குணமடையாது. உடலில். நிலத்தில். ஆனால் காதல் இருந்தால் அவை மனிதனை முறிக்காது. மெதுவாக வாழவும், வலியோடு கூட நேசிக்கவும் கற்றுத்தரும். காயமுற்ற தோளோடும், குணமடையாத நிலத்தோடும், அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தான்— அகல்விழியுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2093 [சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும் https://www.facebook.com/groups/978753388866632/posts/34309069208741621/?- கருத்து படங்கள்
- "மூன்று கவிதைகள் / 30"
"மூன்று கவிதைகள் / 30" 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' அன்பு இதயத்தின் திறந்த வாசல் பண்பு காட்டும் உயரிய நேசம் தாழ் இன்றி தழுவும் பாசம் வாழ்வு செழிக்க ஊட்டும் நேயம் கண்ணீர் துளியும் கதவு திறக்கும் மண்ணில் அன்பே என்றும் நிலைக்கும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ......................................................... 'பக்கத்து வீட்டு பருவ நிலா' பக்கத்து வீட்டு பருவ நிலா வெட்கத்தை விட்டு ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து துடிப்பைத் தந்து ஏக்கத்தை கூட்டி மனதை வாட்டுது ஊக்கத்தை கெடுத்து கனவில் கிடத்துது! கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளிர்ந்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது ஒட்டி உடையில் அழகு காட்டி எட்டிப் பார்த்து இன்பம் பொழிந்தது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'புகைப்படக் கவிதை ' யாழ்ப்பாணக் கோட்டை நிமிர்ந்து நிற்குது பண்ணைக் கடலும் அலை வீசுது அன்புத் தோழன் அருகில் நின்றவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டான்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2091 ["மூன்று கவிதைகள் / 30" https://www.facebook.com/groups/978753388866632/posts/34292290643752811/?- ஈரான் நாட்டுப்புற சமையல்
- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
பனிப்போர் என்ற பதத்தின் பொருள் தெரியாமலா இத்தனை காலம் குப்பை கொட்டுறம்😂 ஆனால் அந்த பனிப்போருக்கு ஈடுபடும் இருதரப்புக்கும் உலகளாவிய ரீச் இருக்க வேண்டும். வலு சமநிலையும் இருக்க வேண்டும். இப்போ ஈரானில் நடப்பது சமச்சீர் அற்ற யுத்தம். Asymmetrical warfare. அதனால்தான் அமெரிக்கா முக்குகிறது. ஆனால் ஈரான் போன்ற ஒரு நாட்டால் பனிப்போர் வலுச்சமநிலையை அமெரிக்காவோடு ஏற்படுத்த முடியாது. அது செத்த கிளியாலும் இனி முடியாது. சீனாவால் மட்டுமே முயற்சிக்க கூடியது. ஆனால் சீனா தனக்கான நேரம் வந்ததாக கருதவில்லை போல் படுகிறது. இவை என்றும் ஈரானுடன் சண்டைக்கு போனதில்லை. ஒபாமா கொண்டு வந்த அணு சோதனை உடன்படிக்கையை கூட நிண்டு செய்தவர்கள் பிரான்ஸ். ஈராக்குக்கு கூட இவர்கள் போகவில்லை . ஐரோப்பாவின் முதன்மை ஆபத்து ரஸ்யா என்பதில் ஐரோப்பா தெளிவாக உள்ளது. ஆகவே அவர்கள் இந்தியா, சீனா போல் ஈரானை அணுக விரும்புகிறார்கள். இதை சாட்சிகாரன், சண்டை காரன் என பார்க்க முடியாது என நினைக்கிறேன். ஐரோப்பாவுக்கு சண்டைகாரன் செத்த கிளிதான். ஈரான் ஐரோப்பாவின் நிலங்களை விழுங்கபோவதில்லை.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
தேர்தலுக்கு காசு கொடுப்போர் ஒருவகை, தேர்தலுக்கு காசு வாங்குவோர் ஒருவகை, இரெண்டும் உலகில் சம நீதி😂 -பேராசான் செவத்தி-- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
உலக நாடுகள் அனைத்தும் - தம்பருக்கு கையை விரித்து விட்டன😂. நல்ல வேளையாக இங்கே கன்சேவேடிவ் கட்சி ஆட்சியில் இல்லை. இல்லாட்டில் எம்மையும் கொண்டுபோய் இதில் மாட்டி விட்டிருப்பார்கள்.- நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை! ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவ மறுத்தால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் முக்கிய கடல்சார் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்க முயற்சியை ஆதரிக்க ஐரோப்பாவை அவர் வலியுறுத்தினார். ஞாயிற்றுக்கிழமை பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப், வளைகுடா வழியாக எண்ணெய் ஏற்றுமதியால் பயனடையும் நாடுகள் நீர்வழியைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று கூறினார். கடந்த மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கின. இது தெஹ்ரானில் இருந்து பிராந்திய பழிவாங்கலைத் தூண்டியது. ஈரானிய ஆட்சி பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இது உலகம் முழுவதும் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது மற்றும் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது பாரிய பொருளாதார அழுத்தத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. https://athavannews.com/2026/1468667- Today
- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
வளைகுடா போரின் பின்னர் அமெரிக்க விமானப்படை அழித்த அறிக்கையினடிப்படையில், ஈராக்கின் மீதான யுத்தத்திற்கான யுக்தி கூறப்பட்டுள்ளது. Command, Control, Communication (C3), கட்டளைப்பீடத்திற்கும் படையினருக்கும் இடையேயான தொடர்பாடலை முறித்து ஒரு புலனற தாக்குதல் என்பதே அதன் சாராம்சம், அதில் நாலாவதாக கணனியினையும் இணைத்திருந்தார்கள். அந்த யுத்தத்தில் 300 இலக்குகள் அடையாளங்கண்டு தாக்கப்பட்டிருந்தது, ஈரான் யுத்தத்தில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் 2000 இலக்குகள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டது இருப்பினும் ஈரான் படையினர் தொடர்பாடல் முறிக்கப்படவேயில்லை, கட்டளைப்பீடமும் படையினரும் தொடர்பிலே காணப்படுகின்றனர், கமேனி கொல்லப்பட்ட பின்னரும் நடவடிக்கையில் தொய்வு ஏற்படவில்லை. ஈராக் போரின் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க உத்தி மற்றும் இஸ்ரேலின் உத்திகளிற்கு ஏற்ப தமது திட்டங்களை வடிவமைத்துள்ளார்கள். பாதுகாப்பான தொடர்பாடல், குறுக்கீடு செய்ய முடியாத சமிஞ்சைகளை பேணுதல், பல அடுக்கு கொண்ட கட்டளைப்பீடங்கள் தனித்தனியே இயங்க கூடியவாறான கட்டமைப்பு என, இதனை மொசைக் பாதுகாப்பு பொறிமுறை என அழைக்கிறார்கள். தலியினை வெட்டினால் முடிந்துவிடும் எனவும் ஒரே நாளில் 2000 மேலான செயற்கை நுண்ணறிவு துணை தொழில்னுட்ப தாக்குதல்கள் கூட கட்டமைப்பினை அசைக்க முடியவில்லை. பலமான எதிரிக்கெதிராக சம்ச்சீரற்ற தேய்மான போரினை தொடுத்தல், அதற்கு மாசே துங்கின் பலமான எதிரியினை வேகமாக அழிக்க தேவையில்லை அவனது பலத்தினை (Materials) சிறிது சிறிதாக சிதைத்து இறுதியில் தோற்கடித்தல் எனும் அடிப்படையில் யுத்தத்தினை தொடர முயலுகிறார்கள். இந்த போரினை நீண்ட காலத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது போல உள்ளது.- வீதியோரம்.
வீதியோரம் . மலர் . .......... 12. தேரர்களின் ஆசிகள் பெற்ற பின்பு அவர்கள் வெளியே வந்து திருமணத்துக்காக தயார் செய்திருந்த தனியான மண்டபத்துக்குள் செல்கின்றனர். வெளியே ஒரு இளைஞர் கூட்டம் மேளதாள வாத்தியங்கள் முழங்க அவர்களது கலாசார ஆடைகள் அணிந்து அவர்களுக்கே உரித்தான நடனங்கள் மற்றும் குத்துக்கரணம் அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் செய்கின்றனர். உள்ளே கால் வைக்கும் போதே சில சடங்குகள் செய்து அழைத்துப் போகின்றனர். அங்கு மேடையில் வெள்ளை விரிப்புகளின் மேல் பூக்கள், வெற்றிலை,தேங்காய்,கொடுவாகத்தி மற்றும் ஒரு சாடியில் தென்னம்பாளை எல்லாம் வைத்து பித்தளை லோட்டா செம்பும் இருக்கின்றது. ஒரு வெள்ளித்தட்டின் மேல் இருக்கும் வெள்ளைப் பீங்கான் மேல் இருவரும் புறங்கையால் ஒருவர் கை மீது ஒருவர் வைத்திருக்க ஒரு பெரியவர் வந்து அந்த லோட்டாவில் இருந்த நீரை இவர்களின் கைகளின்மேல் வார்க்கின்றார். பின் இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். அதன்பின் எல்லோருக்கும் பந்திவைத்து சாப்பாடு பரிமாறப்படுகின்றது. எல்லாம் முடிந்தபின் அதே மேளதாள வாத்திய வரவேற்புகளுடன் அவர்களுடைய “வீதியோரக்கடைக்கு”அழைத்து வரப்படுகின்றார்கள்.அப்பொழுது அந்த சோடனைகள், அலங்காரங்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பிரமித்துக் கொண்டே மணமக்கள் இருவரும் வருகிறார்கள். எல்லாம் ஒரு காரணகாரியத்துடன்தான் நடக்கின்றன போலும். இன்று காலை கண்முழிக்கும் போது கூட இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைக்கவேயில்லை. எதோ பிக்குமாரின் ஆசியுடன் மாலைமாற்றிவிட்டு கடைக்கு வந்து சிறிய கொண்டாட்டம் செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று நடந்ததோ எந்த ஜென்மத்திலும் மறக்கமுடியாத பெரிய நிகழ்ச்சி. இவற்றின் பெரும் பங்கு பிள்ளைகள் யுகேந்திரனையும் சுஜிதாவையும் சேரும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இவ்வளவுநாட்கள் பட்ட துன்பம் எல்லாவற்றையும் இந்நிகழ்ச்சி மறக்கடித்து விட்டது. இந்த நாளுக்காகத்தானோ இவ்வளவுநாளும் அத்துணை துன்பப் பட்டிருந்தோம் என்று மேகலை கண்ணீர் மல்க விநோத்திடம் சொல்கின்றாள். இருவரும் அங்கு வந்த பிள்ளைகளை அனைத்து உச்சி முகந்து முத்தமிடுகின்றனர். நள்ளிரவுவரை நடந்த கொண்டாட்டம் நிறைவடைகிறது. பின்பு அவர்கள் கடைக்குள் சென்று அந்த இருபெண்களுக்கும் அந்த வாலிபனுக்கும் நன்றி கூறிவிட்டு வீட்டுக்குள் செல்கின்றனர். சில மாதங்கள் வழமைபோல் போயின. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து ஓய்ந்து விட்டிருந்தது. இன்றுதான் வானம் கொஞ்சம் வெளிச்சிருக்கு. அன்று பின்னிரவு நேரம் ஜீப்புகளும் ட்ரக்குகளும் புழுதிபறக்க வேகமாய் வந்து கடைக்கு முன்னால் நிக்கின்றன.திபு திபுவென போலீசார் இறங்கி வீதிகளை மறித்து நிக்கின்றனர். சிலர் கடைக்குள்ளும் வேறு சிலர் வேகமாய் ஓடி அங்கு நெடுநாளாய் நிக்கின்ற லொறிக்குள் ஏறி உள்ளே செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்த பெண்களையும் அவர்களுடன் இருந்த ஆண்களையும் அவர்கள் இருந்த அதே கோலங்களுடன் அரைகுறை ஆடைகளுடன் இழுத்துவந்து வீதியோரத்தில் முட்டிகால் போட்டு இருத்திவிட்டு சிலர் அவர்களுக்கு காவல் இருக்கின்றார்கள்.இரு போலீசார் லாரியின் முன்பக்கத்தில் ஏறி அதனுள் இருந்து சாராயப் போத்தல்கள், சிகரெட்டுகள்,சுருட்டுக்கட்டுகள்,போதை வஸ்துக்கள், பொட்டலங்கள் பணக்கட்டுகள் என்று அள்ளிக் கொண்டு வந்து அங்கே துணியொன்று விரித்து அதில் போடுகிறார்கள்.அங்குதான் அந்தப் பையன் தனது சாமான்களை வைத்திருப்பதும் தங்கிறதுமாய் இருந்தவன்.இப்போது அவனையும் அங்கு காணவில்லை. ஒருவேளை காட்டுக்குள் ஓடியிருக்கலாம். அங்கிருந்து கிளம்பிய வாகனங்களையும் நன்றாக சோதனை செய்துவிட்டு அனுப்பிவிடுகின்றனர்.கடைக்குள் போனவர்களும் வெளியே வந்து அங்கு தப்பாக எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். அப்போதுதான் விநோதன் கவனிக்கிறான் அவர்களில் சிலர் பலநாட்களாக கடைக்கு வந்து சகாயமாக சாப்பிட்டு எல்லோருடனும் பழகி அளவுலாவி சென்றிருக்கின்றனர்.அவர்கள் ரகசியப்பொலிஸ் என்று இப்பதான் அவனுக்கு புரிந்தது. நல்லகாலம் நாங்கள் ஒரு தப்பான காரியமும் செய்யவில்லை என்று ஆறுதல் பெருமூச்சு விடுகிறான். கணநேரமாகிவிட்ட படியால் அவர்களில் ஒரு பெண் அதிகாரி கடைக்கு வந்து மணிமேகலையிடம் அங்கு பிடித்து வைத்திருப்பவர்களுக்கு தேநீரும் சிற்றூண்டியும் குடுக்கச் சொல்கிறாள். மேகலையும் யுகேந்திரனும் அவற்றை அங்கு எடுத்து செல்கிறார்கள்.அப்போது நடுவில் இருக்கும் அந்தப் பெண்களில் ஒருத்தி ரகசிமாய் மேகலையிடம் அந்தப்பையனை கவனமாய் பார்த்துக்கொள்.அவன் மிகவும் நல்லவன்.அவன் பிழைப்புக்காக அவற்றை விற்கிறான். ஆனால் அவன் அவை எதையும் பாவிப்பதில்லை. எங்களிடம் கூட ஒரு சகோதரனாகத்தான் பழகி வருகிறான். அவன் குடும்பம் மிவும் எளிமையானது.உன்னால் முடிந்தால் அவனை ஏதாவது ஒரு வேளையில் சேர்த்து விடு என்று துணியால் வாயை மூடிக்கொண்டு சொல்கிறாள்.மேகலையும் அது எனக்கும் தெரியும். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கு அவனைக் காணவில்லை எங்கு போனானோ வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று கேட்கிறாள். அதுக்கு அவள் அது தேவையில்லை, குற்றத்தை ஒப்புக்கொண்டால் எதாவது தண்டப்பணம் கட்டிவிட்டு போகச்சொல்வார்கள் அவ்வளவுதான். — அப்படியென்றால் உனக்கு திருந்தி வாழுற எண்ணமே இல்லையா....... — சின்ன சிரிப்பு சிரித்தவள், இனி திருந்தி என்ன செய்வது, இது உடம்புக்கும் தேவையாய் இருக்கு அவ்வளவு பழகி விட்டது கூடவே என்னை நம்பி இருக்கிற மூன்று சீவன்களுடைய பசியையும் போக்குது என்கிறாள். யுகேந்திரன் பேணி தட்டுகள் எல்லாம் எடுத்துக் கொண்டு வர இருவரும் கடைக்கு வருகின்றனர்.சிறிது நேரத்தில் அவர்கள் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்கின்றன. ஒரு ட்ரக் அந்த பழுதடைந்த லொறியையும் கட்டி இழுத்துக் கொண்டு போகிறது.அதன் பின் அந்தப் பெண் அதிகாரி கடைக்கு வந்து சிற்றூண்டிக்கான பணத்தை செலுத்திவிட்டுப் போகிறாள்.................! மலர் . ......... 🫵 12.- ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
மொஜ்தபா கமேனியை, அலி கமேனியே விரும்பவில்லை? Mar 16, 2026 - 09:35 AM ஈரானின் முன்னாள் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் தனக்குப் பதிலாகப் பதவியேற்பது குறித்துத் தயக்கங்களைக் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புதிய உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி இதனைத் தெரிவித்துள்ளது. தனது மகன் மொஜ்தபா கமேனி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து கமேனி கவலை கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. மொஜ்தபா அதிக புத்திசாலி இல்லை என்றும், தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் கருதப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மறைந்த அதி உயர் தலைவர் தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பதை அறிந்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரைச் சார்ந்த ஒரு சிறிய வட்டத்திற்கு பகிரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 56 வயதான அயதுல்லா மொஜ்தபா கமேனி, கடந்த வார இறுதியில் ஈரானின் புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmsnor2s0007356p630vuguu- இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
கியூ.ஆர் குறியீடு முறையில் எரிபொருள் விநியோகம் : பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல் 16 Mar, 2026 | 09:07 AM நாடு முழுவதும் கியூ.ஆர் குறியீடு முறையிலான எரிபொருள் விநியோக முறையை பொதுமக்கள் பயன்படுத்தும் போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எவ். யூ வூட்லர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கியூ.ஆர் குறியீடு முறையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள், அதில் மோசடி செய்பவர்கள் அல்லது அதன் நடைமுறைப்படுத்தலுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள். எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் போது பொதுமக்கள் பொறுமையுடனும், பொலிஸாருக்கு ஒத்துழைப்புடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நடமாடும் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒழுங்கைப் பராமரிக்கவும் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கவும் மேலதிக உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/241067- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப் Mar 16, 2026 - 07:36 AM ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சீனா, ஈரானின் எண்ணெய் தயாரிப்புகளில் சுமார் 90 சதவீதத்தை கொள்வனவு செய்கிறது. ஆனால், இது சீனாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் சுமார் 12 சதவீதம் மட்டுமே ஆகும். வொஷிங்டனைச் சேர்ந்த உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம், சீனாவின் எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 40% மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmsjl9s00004356pkmuensmc- 109 ஆவது பொன் அணிகளின் சமர்
பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு 15 Mar, 2026 | 01:32 AM (மானிப்பாய் நிருபர்) யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் யாழ். சென் பட்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பெருஞ்சமர் 3 நாள் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி நேற்று முடிவடைந்தது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கல்லூரி முதல் நாள் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென் பட்றிக்ஸ் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சென் பட்றிக்ஸ் கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. மூன்றாம் நாளான நேற்றைய தினம் (14) தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த யாழ்ப்பாணம் கல்லூரி 9 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. 198 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென் பெட்றிக்ஸ் கல்லூரி 4 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. எண்ணிக்கை சுருக்கம் யாழ்ப்பாணம் கல்லூரி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 176 (எஸ்.கே. ஹமிஷ் ஹாமிஷன் 61, உதயகுமார் ஜோன்சன் 41, உதயராஜா கென்றிக்சன் 31, மதியழகன் ஸ்டீவ் ஆதித்யா 25 - 4 விக்., ஜெபிசன் கெமிஷன் 29 - 3 விக்.) சென். பட்றிக்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 225 (ஜெயராஜரூபன் டினுல்சன் (50), சிவனாதன் ஷெஹான் 45, நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 42, வாசுதேவன் விஷ்ணுகோபன் 82 - 5 விக்.), ஹாமிஷ் ஹாமிஷன் 51 - 3 விக்.) யாழ்ப்பாணம் கல்லூரி 2ஆவது இன்: 246 - 9 விக். டிக்ளயார்ட் (ஹாமிஷ் ஹாமிஷன் 82, சசிகரன் அஷ்மின் 49. கேதீஸ்வரன் ஹரிஷன் 34, பிரேமநாயகம் மதுசன் 46 - 3 விக்., ஜெபின்சன் கெமிஷன் 66 - 3 விக்.),Travel Guides & Travelogues சென். பட்றிக்ஸ் 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 198 ஓட்டங்கள் - ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 106 - 4 விக். (நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 40, சிவநாதன் ஷெஹான் 23, ஹாமிஷ் ஹாமிஷன் 32 - 3 விக்.) சிறப்பு விருதுகள் சிறந்த சகலதுறை வீரர்: ஹமிஷ் ஹாமிஷன் (யா.க.) சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்: ஹமிஷ் ஹாமிஷன் (யா.க.), ஹரீன் ஏட்றியன் (செ.ப.) சிறந்த பந்து வீச்சாளர்கள்: ஏ. விஷ்ணுகோபன் (செ.ப.), ஜெபிசன் கெமிஷன் (யா.க.) சிறந்த களத்தடுப்பாளர்கள்: அன்ரனி ரித்மன் அபினாஷ் (யா.க.), பிரேமநாயகம் மதுசன் (செ.ப.0) சிறந்த இணைப்பாட்ட ஜோடி: ஹரீன் ஏட்றியன் - சிவநாதன் ஷெஹான் )செ.ப.) ஆட்டநாயகன்: ளு.மு ஹமிஷ் ஹர்மிஷன். (யா.க.) சிறந்த விக்கெட் காப்பாளர்: மு.ஹரிஷன் (யா.க.) ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய வீரர்: டினு லக்ஷன் விசேட விருதுகள்: எஸ். சங்கீத் (யா.க.), ஸ்ரீவ் ஆதித்தியா (செ.ப.) https://www.virakesari.lk/article/240975- மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது
உரத்திற்கும் QR குறியீடு அறிமுகமாகும் அச்சம் - சஜித் குற்றச்சாட்டு Mar 15, 2026 - 09:13 PM எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படும் அச்சம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார். நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் நிலவும் நிலையில் அரசாங்கம் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளது. நேற்றைய தினம்கூட உற்பத்தி செய்யப்பட வேண்டிய மின்சாரம் 135 மெகாவோட்டால் குறைந்து காணப்படுகின்றன. மின் நிலையத்தின் தரவுகளின்படி அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி அனைத்தும் தரமற்றவையாக காணப்படுகின்றன. அரசாங்கத்திற்கு இவை பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும், நிலக்கரி மின் நிலையத்தால் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதனால், எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. இந்த நிலக்கரி மோசடியால் இறுதியில் மின்சாரப் பயனாளர்களே அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுமட்டுமின்றி தரமற்ற மருந்துகளும் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு போகும் போக்கைப் பார்த்தால், விவசாயிகளின் உரங்களுக்கும் QR குறியீடு வைக்கப்படுமோ என்று அச்சம் காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற, திறனற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தியது உண்மையை உணர்த்துவதற்காகவே என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmrx9rzz001r356pcgdq8xwz- மத்திய கிழக்குப் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்
மத்திய கிழக்குப் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் வேண்டுகோள் விடுத்துள்ளார் Published By: Vishnu 15 Mar, 2026 | 09:30 PM மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வாராந்திர திருப்பலியின் போது போப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார், போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்ததால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் "போரின் பயங்கர வன்முறையால்" இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார். "கடந்த இரண்டு வாரங்களாக, மத்திய கிழக்கு மக்கள் போரின் கொடூரமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று போப் கூறினார், மோதலுக்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "கிறிஸ்தவர்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நல்லெண்ண மக்களின் சார்பாக, இந்த மோதலுக்குப் பொறுப்பான தரப்பினரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: தயவுசெய்து போரை நிறுத்துங்கள்!" என்று அவர் கடுமையாக வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/241056- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
இஸ்ரேலிய தாக்குதலினால் லெபனானில் 850 பேர் பலி Mar 15, 2026 - 08:25 PM இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தி வரும் நிலையிலேயே குறித்த அறிக்கை வௌியாகியுள்ளது. குறித்த தாக்குல்கள் காரணமாக இதுவரை அங்கு 2,105 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmrvji2k001p356p26apa47e- அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை
14 மாவட்டங்களுக்கு அதிகளவில் வெப்பம்! Mar 15, 2026 - 06:22 PM நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளை (16) வெப்பச் சுட்டியானது மனித உடலுக்கு உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் அதிக நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmrr3nqp001m356py8h4issr- எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை
எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை Published By: Vishnu 16 Mar, 2026 | 04:49 AM இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படக்கூடியதால், அதற்கான பொருத்தமான பரிந்துரைகளையும் முன்வைக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241061- பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - பிரதமர்
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - பிரதமர் Published By: Vishnu 15 Mar, 2026 | 10:33 PM பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். தற்போது 6ஆம் தரத்தில் உள்ள மாணவர்களை இப்புதிய பாடத்திட்டத்திற்குள் உள்வாங்குவது குறித்து ஆராய ஒரு குழுவினை நியமித்துள்ளோம். அக்குழுவின் அறிக்கையின்படி எதிர்கால நடவடிக்கைகள் அமையும். வகுப்பறைகளின் அடிப்படை வசதிகள், வகுப்பறைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆரம்பப் பிரிவு வகுப்பறையில் 25-30 மாணவர்களும், இரண்டாம் நிலைப்பிரிவில் 35 மாணவர்கள் வரையும் உள்வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களைப் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளக் கூடாது. வகுப்பறைகளை அபிவிருத்தி செய்யும்போது, அவை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் அமைவதை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களைப் பொறியியல் பிரிவினர் தற்போது தயாரித்து வருகின்றனர். பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகளை மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ளக் கூடியவையாகும். சுகாதார வசதிகளை மேம்படுத்துவது முதல் அனைத்துப் புனரமைப்புப் பணிகளையும் தரமான முறையில் முன்னெடுக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளின் அபிவிருத்திக்கான நிதியினை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவே, கட்டமைப்புக் குழுக்களின் ஊடாக முறையான திட்டங்களைத் தயாரித்து, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் அவற்றைச் சமர்ப்பியுங்கள். ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். 2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் Smart Board மற்றும் இணைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பெற்றோரிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடசாலைக்கும் அனுமதிக்கப்பட்ட வருடாந்த நிதி ஒதுக்கீடு இருக்கின்றது. அதற்கு மேலதிகமாகப் பெற்றோர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். குறிப்பாகப் பாடசாலை வைபவங்களின் சுமையைப் பெற்றோர் மீது சுமத்தாத விதத்தில் அவற்றை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். பல வருடங்களாக ஆசிரியர், அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவாகப் பெருமளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விசாரணையில் இருந்த வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நாம் 23,000 ஆசிரியர்களை முறையாகச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறவுள்ளன. அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நாம் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விண்ணப்பித்துள்ளார்கள். சம்பளப் பிரச்சினை ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகளை முன்வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எனினும், பதவி நியமனம் வேண்டிப் போராட்டம் நடத்துபவர்கள், நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது அவற்றைப் பொறுப்பேற்கத் தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதை நாம் அறிவோம்; ஆயினும் பதவியை ஏற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தாம் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியும் என்ற ஒரு கருத்து நிலவி வருகின்றது. இதனால் ஒட்டுமொத்தக் கல்வித்துறையிலும் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. சிலர் அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காது, ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகவே தொடர்ந்தும் கடமையாற்றும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும் அதற்கு இடமளிக்க இயலாது. இது ஒரு கௌரவமான சேவையாகும். ஆகையினால், அதிபர் சேவையின் தொழில்சார் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை பாராளுமன்றக் கல்விச் சபையூடாகத் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கத் தயார்படுத்தப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்போது, அந்தந்தப் பிரிவுகளில் நிலவும் நிலைமைகளை எதிர்வு கூறி, கட்டமைப்புக் குழுக்கள் ஊடாக அத்திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நாம் முன்மொழிந்துள்ளோம். அத்துடன், மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது தீர்மானங்கள் அறிவிக்கப்படும் வரை காத்திராது, கோட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் துரித தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பிரதமர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, அதுல வெலந்தகொட மற்றும் மாகாண, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241057- 98வது ஒஸ்கார் விருதுகள்!
98வது ஒஸ்கார் விருதுகள்! Mar 16, 2026 - 06:37 AM சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற திரைப்பட விருது விழாவாகும். திரைத்துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதினை பெறுவது உலகெங்கும் திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 98-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹொலிவுட்டில் உள்ள டொல்பி தியேட்டரில் இலங்கை நேரப்படி, அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக ஆரம்பமானது. இந்த விழாவை கெனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குகிறார். போர் சூழலுக்கு மத்தியில் ஒஸ்கார் விருதுகள் விழா நடைபெறும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விருந்தினர்கள் பல கட்ட சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஒஸ்கார் விழாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விழாவின் முதல் விருதாக சிறந்த துணை நடிகைக்கான ஒஸ்கார் விருது, வெப்பன்ஸ் (Weapons) படத்தில் நடித்த ஏமி மெடிகனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது கே-பெப் டிமன் ஹண்டர் படத்திற்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ் குறும்படத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் விருது சீன் பென் Sean penn) க்கு வழங்கப்பட்டுள்ளது. மைக்கல் பீ. ஜோர்தன் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை சின்னர்ஸ் படத்திற்காக பெற்றுள்ளார். சின்னர்ஸ்' படத்தின் இசைக்காக லுட்விக் கோர்டன்சன் மீண்டும் ஒரு ஒஸ்கார் விருதை வென்று தமது சாதனையை தொடர்கின்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் துரால்ட் அர்காபா பெற்றுள்ளார். 'சின்னர்ஸ்' திரைப்படத்தில் படத்தின் ஒளிப்பதிவிற்காக அவருக்கு இந்த ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது. அதேநேரம் போல் தோமஸ் அன்டர்ஸன் வன் பெட்டல் ஆப்டர் எனத படத்திற்காக சிறந்த இயக்குனராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் அந்த படம் சிறந்த படத்திற்கான ஒஸ்கார் விருதையும் வென்றுள்ளது. இதுதவிர ஜெஷி பக்லே சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை ஹம்நட் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmsher800001356px5718gxw- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
செய்தியில் மாற்றிவிட்டேன் அண்ணை.- ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸும் இத்தாலியும் ஈரானுடன் எரிபொருளிற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள், சாட்சிக்காரனின் காலில் விழுவதா அல்லது சண்டைக்காரனின் காலில் விழுவதா எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இது உக்கிரேன் இரஸ்சிய போரில் ஒரு திருப்பு முனையாக அமையலாம். துவிச்சக்கரவண்டி இல்லை. மின்சார கார் வாங்குவதனை பற்றி சிந்திக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......, நீங்கள் துவிச்சக்கரவண்டியா? - "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.